ஜாம்பியா: உள்ளூர் கல்வி முறையை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து குழு குழுவாக கிராமங்கள் விழிப்புறுகின்றன


கத்துயோலா, ஸாம்பியா, 4 டிசம்பர் 2022, (BWNS) — உள்ளூர் பஹாய் கல்வித் திட்டங்களின் வளர்ச்சியைப் பற்றி சிந்திக்க–வடமேற்கு மாகாணமான ஸாம்பியாவில் உள்ள குழுக்களான அண்டை கிராமங்கள்– கத்துயோலாவில் வசிப்பவர்களின் ஒன்றுகூடலாகத் தொடங்கிய ஒன்று அவர்களின் சமூகங்களுக்கு ஒரு தீர்க்கமான தருணமாக இருக்கும்.

சுமார் 200 பேர் கலந்து கொண்ட கலந்துரையாடல்கள் ஆன்மீக மற்றும் தார்மீக சக்தியூட்டல், கல்வியல் கல்வி மற்றும் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு தொடர்பான திட்டங்களுக்கான பல தசாப்த அனுபவங்களுக்குப் பிறகு, குழந்தை பருவத்தில் இருந்து முதிர்வயது வரை தடையற்ற கல்வி அனுபவத்தை வழங்குவதற்கான திறன் அதிகரித்துள்ளது என்பதை உணர வழிவகுத்தன.

ஆப்பிரிக்காவில் உள்ள ஆலோசகர்களின் கண்ட வாரிய உறுப்பினரான முசோண்டா கபூசா-லின்செல், ஸாம்பியாவில் உள்ள பஹாய் கல்வி முகவாண்மைகளின் முக்கிய தேசிய ஒன்றுகூடலிலிருந்து இந்தத் தொலைநோக்கு முதலில் தோன்றியது என கூறுகிறார்.

திருமதி. கபூசா-லின்செல் விளக்குவதாவது: “கத்துயோலாவில் பெருகிவரும் மக்கள், பாரம்பரியத் தலைவர்கள் மற்றும் ஆளும் ஸ்தாபனங்களின் மத்தியில் கல்வி என்பது சமூக முன்னேற்றத்திற்கு மையமானது என்னும் நம்பிக்கையே இந்தத் தொலைநோக்கை இயக்குகின்றது.”

அவர்களின் சொந்த வளர்ச்சியின் போக்கை வழிநடத்துதல்

ஸாம்பியாவைச் சேர்ந்த மற்றோர் ஆலோசகரான ஹமெட் ஜவாஹெரி இந்தக் கலந்துரையாடலானது கத்துயோலாவில் வசிப்பவர்கள், அதன் தலைவர்கள் மற்றும் ஸ்தாபனங்கள் உட்பட தங்களின் எதிர்காலத்தைப் பற்றிய பொதுவான தொலைநோக்கை அடைய பஹாய் சமூகம் அல்லது பரந்த சமுதாயத்தால் வழங்கப்படும் முழு அளவிலான கல்வி முயற்சிகளின் வலிமையைப் பற்றி சிந்திக்க உதவுகிறது..

திரு. ஜவாஹெரி, கூட்டத்தின் ஒருங்கிணைக்கும் விளைவை எடுத்துரைத்தார்: “கத்துயோலாவில் வசிப்பவர்களின் பல்வேறு பிரிவுகள், பஹாய் முவாண்மைகளுடன் இணைந்து, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முயற்சிகளை ஒட்டுமொத்தக் கல்வி முறையின் பகுதிகளாக எப்படிக் கருதலாம் என்பதைப் பற்றி அறிந்துகொள்கின்றனர்.”

இந்தக் கலந்துரையாடல்களின் விளைவாக, சம்பந்தப்பட்ட கல்வி முகவாண்மைகள் ஏற்கனவே மிகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளன. மேலும், கத்துயோலாவில் உள்ள அனைத்து கல்வி முயற்சிகளுக்கும் இடையிலான ஆற்றல் ஒருங்கிணைப்பைப் பேணுவதற்குப் பொறுப்புடைய ‘கிராமக் கல்விக் குழுவை’ உருவாக்கியுள்ளனர்.

செய்திச் சேவையுடன் பகிர்ந்து கொண்ட கருத்துகளில், அப்பகுதியின் பாரம்பரிய தலைவர்களில் ஒருவரான பேட்ரிக் ன்ஷிண்டி, கத்துயோலாவில் மலர்ச்சியுற்று வரும் இந்தக் கல்வி முறையானது சமூகம் அதன் சொந்த முன்னேற்றத்திற்கான பாதையை பட்டியலிட உதவுகிறது என விளக்குகிறார். “இந்தத் திட்டங்கள் அவற்றின் அணுகுமுறையில் வேறுபட்டவை. ஏனென்றால், அவை நம் குழந்தைகளுக்கு லௌகீக மற்றும் ஆன்மீக கல்வியை வழங்குகின்றன. எல்லாவற்றின் நடுமையத்திலும் வீற்றிருப்பது சமூகத்திற்கான சேவையே,” என அவர் கூறுகிறார்.

திரு. ன்ஷிண்டி மேலும் கூறுவதாவது: “இந்த முயற்சிகள் சமூக மாற்றத்தில் கல்வியின் குறிப்பிடத்தக்கப் பங்கை மேலும் சிறப்பாக மதித்துணர்வதற்கும், இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் எதிர்மறை சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கு அவர்களைத் தயார்படுத்துவதற்கும் அனைவருக்கும் உதவுகின்றன.”

கத்துயோலாவைச் சேர்ந்த வாஹிட் என்னும் இளைஞன் இந்தக் கருத்தை வலியுறுத்தி, பஹாய் கல்வித் திட்டங்கள் இளைஞர்களுக்கு வாழ்க்கையின் சிக்கலான சூழ்நிலைகளை வழிநடத்த உதவுகின்றன என்பதை விளக்கினார்.

“இந்த திட்டங்களில் உள்ள இளைஞர்கள் தங்களைச் சுற்றியுள்ள சமூக அழுத்தங்களுக்கு அடிபணிய வாய்ப்பில்லை. ஏனென்றால், அவர்கள் தங்கள் சமூகங்களின் தேவைகளின்பால் கவனம் செலுத்துவதன் மூலம் ஆன்மீகக் குணங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்,” என அவர் கூறுகிறார்.

கத்துயோலாவைச் சேர்ந்த மற்றோர் இளைஞரான வயலட், குழந்தைகளுக்கான தார்மீகக் கல்வி வகுப்புகளின் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம், எதிர்காலத்தைப் பற்றிய தனது சிந்தனையை எவ்வாறு ஆழமாக வடிவமைத்துள்ளது என்பதை விளக்குகிறார். “ஓர் ஆசிரியராகப் பணியாற்றுவது எனது சமூகத்திற்குத் தொடர்ந்து சேவை செய்ய அனுமதிக்கும் வகையில் எனது வாழ்க்கைப் பாதையைப் பற்றிச் சிந்திக்க தூண்டியது.”

மற்றொரு பாரம்பரியத் தலைவரான–முண்டுண்டுவின் மூத்த பாரம்பரியத் தலைவரான– மில்டன் ககோலு கூறுவதாவது: “இந்தத் தார்மீகக் கல்வித் திட்டங்கள் கத்துயோலாவில் உள்ள பல மக்களை மேலும் மேம்பாடு காண உதவும். குற்றங்களின் விகிதத்தைக் குறைக்கவும் மற்ற சவால்களை எதிர்கொள்ளவும் அவை ஏற்கனவே எங்கள் சமூகங்களுக்கு உதவியுள்ளன.

பெண்கள் கல்வியில் கவனம் செலுத்துதல்

கத்துயோலாவில் நடைபெற்ற உள்ளூர் ஒன்றுகூடலானது சமூகம் தழுவிய கலந்துரையாடல்களை–மிகச் சமீபத்தில் சமுதாய தன்மைமாற்றத்திற்கு பங்களிப்பதில் பெண்களின் பங்கை–மேலும் தூண்டியுள்ளது;.

திருமதி. கபூசா-லின்செல் விளக்குவதாவது: ஒரு கல்வி முறையை உருவாக்குவதில் உள்ள சிக்கல்களை ஆராய்வதில், கத்துயோலாவில் வசிப்பவர்கள் பெண்களுக்கான முறையான கல்விக்குத் தடையாக செயல்படும் கலாச்சார அணுகுமுறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியத்தையும் உணர்கிறார்கள்.

இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த 120 பெண்களால் இந்த விஷயமும், குறிப்பாக, பலர் முறையான கல்வியைப் பெறாத நிலையில், தங்கள் குழந்தைகளின் கல்விக்கு அவர்கள் எவ்வாறு உதவுவது என்பது உட்பட, பிற பிரச்சினைகளும் ஆராயப்பட்டன;.

கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஒரு தாயான ஐரீன் கூறியதாவது: “நாம் கல்வி கற்காததால், கல்வியின் முக்கியத்துவத்தை பெண்களான நம்மில் சிலர் பார்ப்பது கடினம். இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பள்ளி குறித்து விளைவுத்திறத்துடன் உதவுவதைத் தடுக்கிறது.

அவர் மேலும் கூறியதாவது: “இதுபோன்ற கலந்துரையாடலில் நான் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. பிள்ளைகளின் கல்வியை முழுமையாக ஆதரிப்பதில் பெற்றோர்கள் ஆற்றக்கூடிய பங்கைக் காண இது எனக்கு உதவியது.

மற்றொரு தாயான ஜூலியட் மேலும் கூறுகையில், பெற்றோர்கள் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் போது கூட, கலந்துரையாடல்கள் தங்கள் குழந்தைகளின் கல்வித் தேவைகளை ஆதரிக்கும் வழிகளை எடுத்துரைத்துள்ளன.

“ஒரு தாயாக எனது பங்கு என் குழந்தைகளின் முன்னேற்றத்தில் ஈடுபடுவதாகும். கல்வியின் முக்கியத்துவம் குறித்து அவர்களுடன் உரையாடுவேன், அவர்களின் ஆசிரியர்களுக்கு விஜயம் செய்வேன், அதனால் அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை நான் அறிந்துகொள்வேன்,” என அவர் கூறினார்.

சமீபத்திய கூட்டங்களில் நடைபெற்ற கலந்தாலோசனைகளின் பலன்கள்

பெண்களின் ஒன்றுகூடலைத் தொடர்ந்து, பங்கேற்பாளர்கள் எழுத்தறிவு வகுப்புகளை உருவாக்க முடிவு செய்தனர். இது, சமுதாய நடவடிக்கைக்கான தயாரிப்பு (PSA) எனப்படும் பஹாய் உத்வேகக் கல்வித் திட்டத்தின் பட்டதாரிகளால் நடத்தப்படும்.

வீட்டுத் தோட்டங்களைப் பேணுவதன் மூலம் பெண்கள் வருமானம் ஈட்டுவதற்கான ஒரு புதிய முயற்சி அந்தச் சந்திப்பின் மற்றொரு விளைவாகும். விவசாயத்தில் நிபுணத்துவம் பெற்ற PSA குழுவால் ஆதரிக்கப்படும் இந்த முயற்சி, பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்வித் தேவைகளை சிறப்பாக ஆதரிப்பதற்காக சமூக சேமிப்பு வங்கியைத் தொடங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சமீபத்திய உள்ளூர் ஒன்றுகூடல்களைப் பற்றி சிந்திக்கையில், கத்துயோலாவின் பஹாய் உள்ளூர் ஆன்மீக சபையின் உறுப்பினரான ஃபிரைடே பிண்டலு கூறுவதாவது: “கடந்தகாலத்தில் நாங்கள் தனிமையில் வேலை செய்து வந்தோம் என்பதை எங்களால் காண முடிந்தது. ஆனால், இந்தச் சந்திப்புகளுக்குப் பிறகு, இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கத்துயோலாவின் லௌகீக மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்குப் பங்களிக்கும் அதே நோக்கத்திற்காகச் சேவை செய்ய வேண்டும் என்பதை நாங்கள் காண்கிறோம்..”

மேல்நிலைப் பள்ளியில் உள்ளவர்களுக்கான கல்விப் பயிற்சிகள் உட்பட அனைத்து வயதினருக்குமான பல வகுப்புகள் மற்றும் நடவடிக்கைகள் நடைபெறக்கூடிய ஒரு கற்றல் மையத்தை கிராமத்தில் நிறுவுவது என கூடியிருந்தோர் முடிவு செய்தனர். அருகிலுள்ள முண்டுண்டு கிராமத்தில் உள்ள பஹாய் நிலையம், கத்துயோலாவில் வேறோர் இடத்தில் நிரந்தர தளம் கிடைக்கும் வரை இந்த நோக்கத்திற்காகச் சேவை செய்யும்.

கத்துயோலாவில் வளர்ந்து வரும் கல்வி இயக்கத்திற்கு உதவுவதற்கு, உதாரணமாக உள்ளூர் இடைநிலைப் பள்ளியை வளர்ப்பதற்கான ஆதாரங்களை வழங்குவதன் மூலம், கிராமத் தலைவர்களை உத்வேகப்படுத்தியதாக திரு. ன்ஷிண்டி கூறுகிறார்,.

“ஒரு மேல்நிலைப் பள்ளி கட்டக்கூடிய நிலத்தை வழங்க நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். மேலும், ஒரு சமூகமாக அதை ஆதரிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்,” என அவர் கூறுகிறார்.

இது சில இளைஞர்கள் இல்லத்தை விடுத்து தூரமாக இடைநிலைப் பள்ளிக்குச் செல்வதற்கான தேவையைத் தணிக்கும். அவர்கள், தங்கள் சமூகங்களில், தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து இருப்பதையும் அவர்கள் சமூகத்தின் தேவைகளை நிவர்த்தி செய்ய தங்கள் ஆற்றலைச் செலுத்த அனுமதிக்கும் ஓர் ஆதரவு கட்டமைப்பு இருப்பதையும் இது உறுதிசெய்யும். கத்தோயோலா மக்களின் பல்வேறு கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த கலந்துரையாடல்கள் எதிர்வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் தீவிரமடையும்.

மேலும் இக்கூட்டம் குறித்த படங்களைக் காண https://news.bahai.org/story/1628/ செல்லவும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1628/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: