BIC பிரஸ்சல்ஸ்: இன தப்பெண்ணத்தை அகற்றுவதற்கு கொள்களை மட்டுமே போதாது


21 பிப்ரவரி 2023

BIC பிரஸ்ஸல்ஸ் – பஹாய் சர்வதேச சமூகத்தின் (பி.ஐ.சி) பிரஸ்சல்ஸ் அலுவலகத்தின் ஒரு புதிய அறிக்கை இன்று ஐரோப்பா எதிர்கொள்ளும் மிக முக்கியமான கேள்விகளில் ஒன்றை ஆராய்கிறது– இன மற்றும் பிற வகையான தப்பெண்ணங்களை எவ்வாறு சமாளிப்பது.

“இனவெறிக்கு எதிரான செயல் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான பிரதிபலிப்புகள்: அடிமட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை வளர்த்தல” என்னும் தலைப்பிலான இந்த அறிக்கை, இனவெறிக்கு எதிரான உறுப்பு நாடுகளின் செயல் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் கடந்த வாரம் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய (EU) மாநாட்டுடன் இணைவாக நடைபெற்றது. இந்தத் திட்டங்கள் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் இன நீதிக்கு அழைப்பு விடுக்கும் 2020 ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய இனவெறி எதிர்ப்பு செயல் திட்டம் 2020-2025-ஐ ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து வருகின்றன.

தப்பெண்ணத்தை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்திற்கு ஒப்புதலளிக்கும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் தேசிய செயல் திட்டங்களை ஏற்றுக்கொள்வது ஒரு சாதகமான நடவடிக்கை என்பதை பிஐசி அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. எவ்வாறாயினும், “இனவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் மட்டுமே தனிநபர்களின் இதயங்களிலிருந்தும் மனங்களிலிருந்தும் ஆழமாக வேரூன்றிய தப்பெண்ணங்களை வேரறுக்க முடியாது.” அவ்வாறிருக்க, சமூகத்திற்கும் அதற்குச் சேவை செய்யும் அமைப்புகளுக்கும் அடித்தளமாக இருக்கும் கட்டமைப்புகளிருந்து அதை அகற்றுதல் எங்ஙனம்? என அவ்வறிக்கைக் குறிப்பிடுகின்றது.

இது குறித்து பிரஸ்ஸல்ஸ் அலுவலகத்தின் ரேச்சல் பயானி விவரிக்கையில், ஐரோப்பாவின் அதிகரித்து வரும் பல்வகை நகரங்கள் மற்றும் கிராமங்களில் சமத்துவமின்மை மற்றும் இனவாதத்தை நிவர்த்தி செய்ய உள்ளூர் மட்டத்தில் சமூக வாழ்க்கையின் இயக்கவியலை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

“சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் இனவாதத்தை வெல்ல அடித்தட்டுகளில் நல்லிணக்கத்தை அடைவது முக்கியம்” என அவர் கூறுகிறார். ஒற்றுமைக்கும், ஒத்திசைவிற்கும் பாடுபடாமல், மக்கள் அருகருகே வாழ விரும்பினால், தீய மனப்பான்மை நீடிக்கவே செய்யும்.

பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரஸ்சல்ஸ் அலுவலகத்தால் புதிதாக வெளியிடப்பட்ட அறிக்கை, தேசிய மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் தாங்கள் சேவை செய்யும் மக்களைத் “திறன் கொண்டவர்களாகவும் மாற்றத்தின் முன்னணியாளர்களாகவும்” கருதும்போது, அதனால் வெளிப்படக்கூடிய சாத்தியக்கூறுகளை அவ்வறிக்கை ஆராய்கிறது.

பி.ஐ.சி அறிக்கை ஐரோப்பா முழுவதும் பஹாய் சமூக-நிர்மாணிப்பு நடவடிக்கை அனுபவங்களிலிருந்து நுண்ணறிவுகளை ஈர்க்கிறது; பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் அண்டைப்புறங்களின் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் முன்முயற்சிகளில் கூட்டாக வேலை செய்யும்போது, அவர்கள் தங்களிலிருந்து வேறுபட்ட முன்னோக்குகளைச் சந்திக்கின்றனர், நட்பின் நெருக்கமான பிணைப்புகளை உருவாக்குகின்றனர், மேலும் தங்கள் அண்டையர்கள் எதிர்நோக்கும் பாகுபாடு குறித்து அதிக விழிப்புணர்வு பெறுகின்றனர்.

தேசிய மற்றும் ஐரோப்பிய ஸ்தாபனங்கள் தாங்கள் சேவை செய்யும் மக்களைத் “திறன்மிக்கவர்களாகவும் மாற்றத்தின் முன்னணியாளர்களாவும்” கருதும்போது, இனரீதியான தப்பெண்ணத்தை நிவர்த்தி செய்வதற்கு வெளிப்படக்கூடிய புதிய சாத்தியக்கூறுகளை பிஐசி அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தக் கண்ணோட்டத்தின் மூலம், உள்ளூர் மக்கள் ஒரு சமூகத்திற்கு வலிமைக்கான ஆதாரமாகப் பார்க்கப்படுவார்கள். சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் கொள்கை வகுப்பதில் பங்களிப்பதற்கும் அதிகாரிகளும் குடியிருப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய கலந்தாலோசனைத் தளங்களை உருவாக்குவதன் மூலம் இந்தப் பயன்படுத்தப்படாத திறனை உணர முடியும் என பிஐசி தெரிவிக்கிறது.

சமூக நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய நிர்வாகம் குறித்த உரையாடலுக்குப் பங்களிப்பதற்கான பிரஸ்ஸல்ஸ் அலுவலகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக பிஐசி அறிக்கையை இங்கே காணலாம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1644/