பஹாய் நாள்காட்டியில் புதிய பகுதி தளத்தில் சேர்க்கப்பட்டது


20 மார்ச் 2023

பஹாய் உலக மையம் — படீ’ நாட்காட்டி எனவும் அழைக்கப்படும் பஹாய் நாள்காட்டிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய பகுதி, உலகளாவிய பஹாய் சமூகத்தின் இணையதளத்தில் http://www.bahai.org/calendar/ இல் கிடைக்கின்றது.

புதிய பகுதியானது பஹாய் காலண்டர், அதன் தோற்றம், முக்கியத்துவம், அமைப்பு ஆகியவற்றின் ஒரு மேலோட்டக் காட்சியை வழங்குகிறது. இது புனித நாள்கள் மற்றும் பத்தொன்பது நாள் விருந்துகளுக்கான பஹாய் தேதிகளை 2064-ஆம் ஆண்டு வரையிலான அவற்றின் தொடர்புடைய கிரிகோரியன் தேதிகளுடன் வழங்குகிறது, அத்துடன் நடப்பு ஆண்டிற்கான தரவிறக்கம் செய்யப்படக்கூடிய காலெண்டரையும் வழங்குகிறது.

Bahai.org இல் உள்ள புதிய பிரிவில் பஹாய் நாடள்காட்டியின் கண்ணோட்டம் மற்றும் அவற்றின் தொடர்புடைய கிரிகோரியன் தேதிகளுடன் குறிப்பிடத்தக்க பஹாய் தேதிகளின் பட்டியலையும் அதுகொண்டுள்ளது.

பஹாய் நாள்காட்டி பாப் பெருமானாரால் அறிமுகப்படுத்தப்பட்டது, பின்னர் பஹாவுல்லாவினால் உறுதிப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாள்காட்டியின் உலகளாவிய அமலாக்கம் தொடர்பான செய்தியில், உலக நீதிமன்றம் கூறியது: “ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புதிய நாள்காட்டியை ஏற்றுக்கொள்வது, லௌகீக, சமூகம் மற்றும் ஆன்மீக உண்மை பற்றிய மனித உணர்தலை மறுவடிவமைக்கும் தெய்வீக வெளிப்பாட்டின் சக்தியின் அடையாளமாகும். அதன் மூலம், புனிதமான தருணங்கள் வேறுபடுத்தப்படுகின்றன, காலத்திலும் இடத்திலும் மனிதகுலத்தின் இடம் மறுகற்பனை செய்யப்படுகிறது, மேலும் வாழ்க்கையின் லயம் மறுவார்ப்பு செய்யப்படுகிறது.

Bahai.org இணையதளம் பஹாய் சமயத்தின் நம்பிக்கைகள் மற்றும் திருவாக்குகளை ஆராய்வதுடன் பஹாவுல்லாவின் தொலைநோக்கினால் ஈர்க்கப்பட்டு, சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கப் பாடுபடும் உலகம் முழுவதும் உள்ளவர்களின் அனுபவங்களை வழங்குகிறது. பஹாய்கள் என்ன நம்புகின்றனர் மற்றும் பஹாய்கள் என்ன செய்கின்றனர் என்பது பற்றிய விரிவான பகுதிகள் மற்றும் ஒரு விரிவான பஹாய் குறிப்பு நூலகத்தை வழங்குகிறது. இந்த நூலகம் பஹாய் சமயம் பற்றிய தகவல்களைத் தேடுபவர்களுக்கு ஒரு மதிப்புமிக்க ஆதாரமாக அமைகிறது.

பதிவிறக்கம் செய்யப்படக்கூடிய 2023 கிரிகோரியன் காலண்டர் பஹாய் தேதிகளுடன் இப்போது Bahai.org இன் பஹாய் காலண்டர் பக்கத்தில் கிடைக்கிறது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1648/

(பஹாய்) நவ்-ரூஸ் தினம்


நவ்-ரூஸ் என்பது பஹாய் நாள்காட்டி வருடத்தின் முதல் நாளாகும், மற்றும் இந்நாள் பஹாய் சமயத்தவர்களின் 11 (இவற்றுள் 9 பணிவிடுப்புக்கான நாள்கள்) புனித நாள்களில் ஒன்றும் ஆகும். அது மார்ச் மாதம் 21-இல் அல்லது அதற்கு அருகில் மகாவிசுவத்தில் (மஹாவிஷுவம்/vernal equinox) நிகழும். இந்த நாள் பாரம்பரிய ஈரானிய புத்தாண்டும் கூட.

பாரம்பரிய நவ்-ரூஸ் கொண்டாட்டம்

பஹாய் புனிதநாளின் தோற்றுவாயான பாரம்பரிய நவ்ரூஸ் புனிதநாள், ஈரானில் பண்டைய காலத்திலிருந்தே கொண்டாடப்படுவதுடன், கலாச்சார ரீதியில் அண்டைநாடுகளான அஸர்பைஜான், துருக்கி, ஈராக், ஆர்மீனியா, ஜோர்ஜியா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள மக்களால் அனுசரிக்கப்படுகிறது. பாப்-யி சமயத்தை ஸ்தாபித்த பாப் பெருமானார்  மற்றும் பின்னர் பஹாய் சமயத்தை ஸ்தாபித்த பஹாவுல்லா இருவரும் இந்த நாளை ஒரு புனித நாளாக ஏற்றுக்கொண்டு கடவுளின் ‘அதிபெரும் நாமத்துடன்’ அந்நாளை இணைத்தனர். இப்போது கணக்கிடப்பட்டுள்ளபடி பஹாய் விடுமுறை எப்போதும் பாரம்பரிய பண்டிகையின் அதே நாளில் வராது என்பதுடன் (அது ஒரு நாள் வித்தியாசத்தில் வரலாம்), பாரம்பரிய நவ்-ரூஸ் தினத்துடன் தொடர்புடைய பல பாரசீக கலாச்சார நடைமுறைகளையும் பஹாய் நவ்-ரூஸ் கொண்டிருக்கவில்லை. மாறாக, பஹாய் நவ்-ரூஸ் பஹாய் திருவாக்குகளிலிருந்து வாசிப்புகளைக் கொண்ட ஒரு மதம் சார்ந்த நிகழ்வாகும்.

இரான் நாட்டில் முளைப்யிர் பாரம்பரிய நவ்-ரூஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும். அந்நாட்டில் உள்ள பஹாய்களும் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

முக்கியத்துவம்

பாப்-யி மதத்தை ஸ்தாபித்த பாப் பெருமானார், ஒவ்வொன்றும் 19 நாள்கள் கொண்டதும் 19 மாதங்களைக் கொண்டதுமான படீ’ நாள்காட்டியை நிறுவினார். முதல் பஹாய் மாதமும், ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் ‘பஹா’ என பெயரிடப்பட்டுள்ளன. இது பேரொளி அல்லது தேஜஸ் என பொருள்படும் அரபு வார்த்தையாகும். இவ்வாறாக, வருடத்தின் முதல் நாளான நவ்-ரூஸ், பஹா மாதத்தில் பஹா நாளாகும். இந்த நாள் பாப் பெருமானாரால் கடவுளின் நாள் என அழைக்கப்பட்டது, மற்றும் பாப் பெருமானாரின் எழுத்துக்களில் ஒரு மேசியானிய (Messianic) திருவுருவான, ‘கடவுள் வெளிப்படுத்தவிருக்கும் அவருடன்’  இந்த நாள் இணைக்கப்பட்டது.

பஹாய் இளைஞர்கள் நவ்-ரூஸைக் கொண்டாடுகின்றனர்.

பாப் பெருமானார் எதிர்பார்த்திருந்த மெசியானிய நபராக அங்கீகரிக்கப்பட்ட பஹாய் சமயத்தின் ஸ்தாபகர் பஹாவுல்லா, புதிய நாள்காட்டியை ஏற்றுக்கொண்டார், நவ்-ரூஸை ஒரு புனித நாளாகவும் அங்கீகரித்தார். இந்த நாள் பஹாய் நோன்பு மாதத்தின் பஹா மாதத்தைத் தொடர்ந்து வருகிறது. மேலும், நவ்-ரூஸ் கடவுளின் அதிபெரும் நாமத்துடன் தொடர்புடையது எனவும் அவர் விளக்கினார், மற்றும் நோன்பைக் கடைப்பிடிப்பவர்களுக்கான ஒரு திருவிழாவாக அந்நாள் ஸ்தாபிக்கப்பட்டது.

ஒவ்வொரு மத திருவெளிப்பாட்டிலும் காலம் புதுப்பிக்கப்படுகின்றது என்பதற்கான குறியீட்டுக் கருத்து பாப் மற்றும் பஹாவுல்லா இருவரின் எழுத்துகளால் தெளிவாக்கப்பட்டது. மற்றும், நாள்காட்டியும் புத்தாண்டும் இந்த ஆன்மீக உருவகத்தை மேலும் உறுதியானதாக ஆக்கின. பஹாவுல்லாவின் மகனாரும், அவரது வாரிசுமான அப்துல்-பஹா, வசந்தகாலம் மற்றும் அது தோற்றுவிக்கும் புதிய வாழ்க்கையின் அடிப்படையில் நவ்-ரூஸின் முக்கியத்துவத்திற்கு விளக்கமளித்தார். விசுவம் (equinox, சம பகல் சம இரவு) என்பது இயேசு, முஹம்மது, பாப் மற்றும் பஹாவுல்லா உள்ளிட்ட கடவுள் அவதாரங்களின் சின்னமாகும் எனவும், அவர்கள் அறிவிக்கும் செய்தி ஓர் ஆன்மீக வசந்த காலத்தைப் போன்றது எனவும், அதை நினைவுகூர நவ்-ரூஸ் பயன்படுத்தப்படுகிறது எனவும் அவர் விளக்கினார்.

பஹாய் புனித நிலத்தில் நவ்-ரூஸ் தின

தேதி

தமது கித்தாப்-இ-அக்டாஸ் திருநூலில், நவ்-ரூஸ் என்பது மகாவிசுவம் நிகழும் நாள் என வரையறுத்தார். உலகெங்கிலும் உள்ள பஹாய்களுக்கான நவ்-ரூஸின் சரியான நேரம் பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்தது மற்றும் அவ்விடத்தை முடிவு செய்வது பஹாய்களின் நிர்வாக அமைப்பான உலக நீதிமன்றத்திடம் விடப்பட்டது. உலக நீதிமன்றம் 2014-கில் அக்குறிப்பிட்ட இடமாக தெஹரான் நகரைத் தேர்வு செய்தது. பஹாய் தினங்கள் சூரிய அஸ்தமனத்தில் நிகழ்வதனால், விசுவம் சூரிய அஸ்தமனத்திற்கு சிறிது முன்பாக நிகழ்ந்தால், முந்தைய சூரிய அஸ்தமனத்தில் தொடங்கிய நாள் நவ்-ரூஸ் ஆகும். ஆதலால், நவ்-ரூஸ் தினம் கிரிகோரியன் நாள்காட்டியின்படி மார்ச் 20, 21 அல்லது 22 ஆகிய தேதிகளில் வரலாம். இந்த நாள்கள் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்கூட்டியே கணிக்கப்பட்டுவிட்டன. பஹாய் நாள்காட்டியில் உள்ள அனைத்துத் தேதிகளும் நவ்-ரூஸ் தினத்தின் தொடர்பாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆதலால், கிரிகோரியன் நாட்காட்டியில் மகாவிசுவ நேரத்தைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அவை மாறி மாறி வரக்கூடும்.

பஹாய் வருடம்நவ்-ரூஸுடன் இணைவாக வரும் கிரிகோரிய தேதி
17420 மார்ச் 2017
17521 மார்ச் 2018
17621 மார்ச் 2019
17720 மார்ச் 2020
17820 மார்ச் 2021
17921 மார்ச் 2022
18021 மார்ச் 2023
18120 மார்ச் 2024
18220 மார்ச் 2025
18321 மார்ச் 2026
18421 March 2027

கொண்டாட்டங்கள்

வேலை மற்றும் பள்ளி இடைநிறுத்தப்பட வேண்டிய ஒன்பது பஹாய் புனித நாட்களில் நவ்-ரூஸ் தினமும் ஒன்றாகும்; பாப் பெருமானார் அல்லது பஹாவுல்லா இருவரின் வாழ்க்கையில் ஒரு நிகழ்வுடன் தொடர்புபடுத்தப்படாத ஒரே நாள் நவ்-ரூஸ் தினமாகும். இது பொதுவாக பிரார்த்தனை, இசை, நடனம் ஆகியன கூடிய கூட்டங்களுடன் அனுசரிக்கப்படும் ஒரு திருவிழா ஆகும். புத்தாண்டு பஹாய் உண்ணாவிரத மாதத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதால், இந்தக் கொண்டாட்டம் பெரும்பாலும் இரவு உணவோடு இணைக்கப்படுகிறது. இருப்பினும் சூழலைப் பொறுத்து இந்த நாள் வேறு தினங்களிலும் கொண்டாடப்படும் அனைத்து பஹாய் புனித நாள்களையும் போலவே, நவ்-ரூஸ் தினத்தைக் கடைப்பிடிக்கச் சில நிலையான விதிகள் உள்ளன. உலகெங்கிலும் உள்ள பஹாய்கள் உள்ளூர் வழக்கப்படி இதை ஒரு பண்டிகை நாளாகக் கொண்டாடுகின்றனர். பாரசீக பஹாய்கள் ஹஃப்ட் சின் (Haft Sin) போன்ற நவ்ரூஸுடன் தொடர்புடைய பல ஈரானிய பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றனர், உலகைச் சூற்றியுள்ள பிற பஹாய் சமூகங்கள் விசேஷ நவ்-ரூஸ் பிரார்த்தனை, மற்றும் வேறு பிரார்த்தனைகள் மற்றும் வாசிப்புகளுடன் ஒரு விருந்தோம்பலுடன் கொண்டாடக்கூடும்.

கூடுதல் தகவலுக்கு: https://prsamy.com/2022/03/18/naw-ruz/

உரையாடல் மற்றும் அமைதியை மேம்படுத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு 30 ஆண்டு நிறைவு


பார்க் கல்லூரி, மேரிலாந்து, ஐக்கிய அமெரிக்கா – 1980 களில் லெபனானில் நடந்த பேரழிவை ஏற்படுத்திய மோதல்களுக்கு மத்தியில், மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பல்கலைக்கழகத்தின் சர்வதேச வளர்ச்சி மற்றும் முரண் மேலாண்மை மையத்தின் (CIDCM) இயக்குநருமான எட்வர்ட் அசார் போருக்கான தீர்வாக, யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தார். 

பேராசிரியர் அசார் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தபோது, உலக அமைதிக்கான உறுதிமொழி என்ற தலைப்பிலான உலக நீதிமன்றத்தின் கூற்றுரை (statement) அவர் கண்ணில்பட்டது—அது அமைதிக்கான முன்நிபந்தனைகள் மற்றும் அதை நிறைவேற்றுவதற்கான சவால்கள் பற்றிய மிக முக்கிய ஆய்வாக்கும்.

மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் உலக அமைதிக்கான பஹாய் இருக்கையின் (Bahá’í Chair ) தோற்றம் பற்றிய இந்த விபரம், அதன் உரிமையாளரான ஹோடா மஹ்மூதி அவர்களால் அந்த 30ம் ஆண்டு நிறைவு விழாவில் வருகையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

பேராசிரியர் மஹ்மூதி, “அதன் உள்ளடக்கங்களால் அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார்,” என்றார். அவர் பஹாய் இருக்கை ஒன்றை நிறுவ வேண்டுமென முன்மொழிந்து, உலக நீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதினார்.

பேராசிரியர் அசாருடைய கடிதத்தின் ஒரு பகுதி.

நானும் எனது சகாக்களும்… “உலக அமைதிக்கான வாக்குறுதி” எனும் அறிக்கையைப்பற்றிப் படித்து சிந்தித்தோம். இந்தக் கடிதத்தின் மூலம், CIDCM மற்றும் மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் சார்பாக நான் பதிலளிக்கிறேன்: “மனித இனத்தின் ஒற்றுமையில் நம்பிக்கையை வலுப்படுத்த பஹாய் அனுபவம், எந்த அளவிலும் பங்களிக்க முடியும் என்பதால், ஆய்வுக்காக அதை ஒரு முன்மாதிரியாக வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”

எங்கள் மையத்தின் நோக்கம், உலக அமைதி பற்றிய உங்கள் யோசனைகள் மற்றும் பஹாய்களின் பார்வையை அறிவார்ந்த மற்றும் புறநிலை முறையில் ஆராய்ந்து விவாதிக்க பஹாய்களைப் பெருமையுடன் அழைக்கும் பல்கலைக்கழகத்தினுடைய விருப்பத்தின் அடிப்படையில்… நான் ஒரு தலைவரை நிறுவ முன்மொழிகிறேன். 

இந்த மையத்தில் பஹாய் ஆய்வுகள் பற்றிய ஒரு திட்டம்.

மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் மூத்த துணைத் தலைவரும் பேராசிரியருமான ஜெனிஃபர் கிங் ரைஸ், ஆண்டுவிழா கூட்டத்தில் அந்த அடிப்படை நிகழ்வுகளை சுருக்கமாக விவரித்தார்: “முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, மேரிலாந்து பல்கலைக்கழகம்,  ‘அக்கறை மற்றும் தீர்வுகள் தேவைப்படும் உலகின் மிகப்பெரிய பிரச்னைகளில் ஈடுபடுவதற்கு அத்தியாவசியமான மனிதக் கொள்கைகளைப் பயன்படுத்துவதில் நாம் ஒன்றாக இணைந்தால் என்ன?” என்ற ஒரு யோசனையுடன் பஹாய் சமூகத்தை அணுகியது.

ஆண்டுவிழாவை நினைவுகூரும் நிகழ்வில் பேசியவர்களில் சிலர் (இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக): ஆஷ்லி டெய்லர், மேரிலாந்து பல்கலைக்கழகம் மற்றும் வெர்மான்ட் சட்டப் பள்ளியின் பட்டதாரி; Sein M. Chew, Unity Asset Management இன் தலைவர் மற்றும் CEO; சூசன் ரிவேரா, மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் நடத்தை மற்றும் சமூக அறிவியல் கல்லூரியின் டீன்; ஜெனிபர் கிங் ரைஸ், மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் பேராசிரியர்; ரஷான் ரே, மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்; மற்றும் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் உலக அமைதிக்கான பஹாய் தலைவரான பேராசிரியர் மற்றும் ஹோடா மஹ்மூதி.

“மனிதகுலத்தின் நலன்கள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் அறிவின் பரந்த அளவில் விளைந்த ஒரு குறிப்பிடத்தக்க கூட்டாண்மையின் தொடக்கமாக அந்த எளிய ஆய்வு இருந்தது,” என்று ப்ரோவோஸ்ட் ரைஸ் மேலும் கூறினார்.

1993ல் பஹாய் இருக்கை நிறுவப்பட்ட பெய்ரூட் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற அறிஞர் சுஹெய்ல் புஷ்ரூய் அதன் முதல் பொறுப்பாளரானார், 2005 இல் ஓய்வு பெறும்வரை அதன் பணியை அதாவது, அமைதி மற்றும் கல்வியை மேம்படுத்தும் பணியைத் தொடர்ந்தார். 2006ல் அதன் இரண்டாம் பொறுப்பாளரான ஜோன் கிரேஜெல், அமைதியை நிர்மாணித்தல் மற்றும் மேம்படுத்துதல் பற்றிய திட்டங்களுடன் இருக்கையின் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

அது நிறுவப்பட்டதிலிருந்து, அறிவியல் மற்றும் மதத்திலிருந்து நுண்ணறிவுகளை(insights) ஈர்க்கும் ஒரு பலதுறை ஒருங்கிணைவு சூழலில், ஆராய்ச்சி நடத்துதல் மற்றும் வெளியிடுதல், பயிற்சிகளை வடிவமைத்தல் மற்றும் உலக அமைதி குறித்த கருத்தரங்குகளை வழங்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் இருக்கை ஈடுபட்டுள்ளது.

உரையாடல் மற்றும் புரிதலை மேம்படுத்த பலதுறை ஒருங்கிணைவு 

உரையாடல் மற்றும் புரிதலை ஊக்குவிப்பதற்கு இருக்கை,  பலதுறை ஒருங்கிணைவு அணுகுமுறையை மேற்கொள்கிறது. இது அமைதியைப் பற்றிய சிந்தனையை மீம்படுத்துவதற்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது. பேராசிரியர் மஹ்மூதி கூறுகையில், “நவீன வாழ்க்கையைப் பல கோணங்களில் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்பதால், நாம் பலதரப்பட்டவர்களாக இருக்கிறோம்.”

எவ்வாறாயினும், இந்த அணுகுமுறை மட்டும்தான் என்பதல்ல, மாறாக “மனித அறிவு… மற்றும் சாத்தியக்கூறுகளின் களஞ்சியத்தை” உருவாக்குவதற்கான வழிமுறையாகுமென்று ஜெனிஃபர் கிங் ரைஸ் குறிப்பிட்டார். இதற்கு உண்மையைத் தேடும் தோரணை மற்றும் ஆர்வமின்மையைத் தவிர்க்கும் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறதென கூறும் பேராசிரியர் மஹ்மூதி, “அவற்றின் தோற்றுவாய் எதுவாக இருப்பினும், ஒரு பெரிய காரியத்தைத் தொடர முயல்வதால், தனிப்பட்ட மனப்பற்றுகளையும் பாரபட்சத்தினையும் புறந்தள்ளிட வேண்டும்,” என்று வரையறுக்கின்றார்..

கடந்த முப்பது ஆண்டுகளாக, அமைதி தொடர்பான பிரச்னைகளைச் சமாளிக்க பலதரப்பட்ட அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் ஒத்துழைத்து 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் கட்டுரைகளையும் இருக்கை வெளியிட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், இருக்கை 80 க்கும் மேற்பட்ட மாநாடுகள், ஆய்வரங்குகள் மற்றும் விரிவுரைகளை நடத்தியுள்ளார், மேலும் 250 க்கும் மேற்பட்ட பேச்சாளர்களை உரையாற்ற அழைத்துள்ளது.

“இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அறிவு மற்றும் அமைதியை நாடுவதற்கும், மனிதகுலத்திற்கான சிறந்த உலகத்தைத் தேடுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டவை,” என்று ஃப்ரோவோஸ்ட் ரைஸ் கூறினார்.

30வது ஆண்டு விழா விருந்தினர்களுக்கு அதன் மையக் கருப்பொருள்களை ஆராய்வதற்கான பஹாய் இருக்கையின் முயற்சிகளைப் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பை வழங்கியது: கட்டமைப்பு-இனவெறி மற்றும் தப்பெண்ணத்தின் மூல காரணங்கள்; மனித இயல்பு; பெண்கள் அதிகாரம் மற்றும் அமைதி; உலகளாவிய நிர்வாகம் மற்றும் தலைமை; மற்றும் சுற்றுச்சூழலின் உலகமயமாக்கலில் உள்ள சவால்களை சமாளித்தல்.

“பஹாய் இருக்கை இதைப் பல வழிகளில் மேற்கோள்கிறது,” என்று அவர் கூறினார், அதன் பணியின் மையமாக இருக்கும் ஐந்து கருப்பொருள்களை சுட்டிக்காட்டினார்: “இனவெறியின் வேர்கள் மற்றும் நாமும் அடிக்கடி நம் வாழ்வில் எதிர்கொள்ளும் தப்பெண்ணத்தின் காரணங்களைக் கடுமையான ஆய்வு; பெண்களின் சமத்துவமின்மையை உருவாக்கும் கட்டமைப்புகள் பற்றிய விசாரணை; உண்மையான உலகளாவிய ஆட்சிமுறை மற்றும் தலைமைத்துவ அமைப்பைக் கொண்டிருப்பதிலிருந்து நம்மைத் தடுக்கும் தடைகள்; காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அநீதிக்கான காரணங்கள் மற்றும் மனித இயல்பின் சவால்கள்.”

“அமைதிக்கான தடைகளை அகற்றுவதில் சமூக முதன்மையாளர்களோடு கட்டமைப்புகளின் பங்கை ஆராயும் அறிவு மற்றும் உத்திகளுக்கு இது ஒரு சிறந்த அறிவியல் அடிப்படையை உருவாக்கியுள்ளது” என்று கூறிய ப்ரோவோஸ்ட் ரைஸ், பஹாய் இருக்கையின் முயற்சிகளிலிருந்து வெளிப்பட்டுவரும் நுண்ணறிவுகளுக்காக (insights) தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.

அமைதிக்கான தடைகளின் மூல காரணங்களை நிவர்த்தி செய்தல்

அமைதி தொடர்பில் மையமாக ஐந்து கருப்பொருள்களைத் தலைமைக் கருதுகிறது: கட்டமைக்கப்பட்ட இனவெறி மற்றும் தப்பெண்ணத்தின் மூல காரணங்கள்; மனித இயல்பு; பெண்களுக்கு அதிகாரம் மற்றும் அமைதி; உலகளாவிய நிர்வாகம் மற்றும் தலைமைதத்துவம் மற்றும் சுற்றுச்சூழலின் உலகமயமாக்கலில் உள்ள சவால்களை வெல்லுதல்.

இந்த கருப்பொருள்களுடன் தொடர்புடைய சவால்களைச் சமாளிப்பதற்கான அடிப்படையில் வித்தியாசமான அணுகுமுறை இல்லாமல் நீடித்த அமைதியை அடைய முடியாது என்று பேராசிரியர் மஹ்மூதி விளக்கினார். அவை சமூகத்தில் ஏற்படுத்தும் “கட்டுமானஞ்சார்ந்த சிதைவுகள்” என்பது குறிப்பிடத்தக்கது. புதுமையான அணுகுமுறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டு, அமைதியை நோக்கிப் பயணிப்பதைத் தடுக்கின்ற, தற்கால உரையாடலில் ஆழமாக வேரூன்றிய மனித இயல்பைப் பற்றிய ஒரு பரவலான அனுமானத்திற்கு—அதாவது மனிதகுலம் இயல்பாகவே சரிசெய்ய முடியா சுயநலமிக்கது என்பதற்கு சவால்விட  பஹாய் இருக்கை முயற்சி செய்கிறது., 

அமைதியை அடையும் திறன் கொண்ட மனிதகுலத்தின் பார்வை

உலகின் சவால்கள் மற்றும்  பலக்கிய தன்மையை(complexities) அடையாளங்கண்டதில் சமூகத்தில் ஊழல் மற்றும் ஒழுக்கக்கேடான நடத்தைக்கான சோகமான உதாரணங்கள் உள்ளன என்பதை பஹாய் இருக்கை(Bahá’í Chair) ஒப்புக்கொள்கிறது. இருப்பினும், பொது நலனுக்காக மக்கள் தன்னலமின்றி செயல்பட்டதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் இருப்பதையும் இருக்கை பார்க்கிறது.

ஆண்டு விழாவில் தனது கருத்துகள் முழுவதும், பேராசிரியர் மஹ்மூதி, அமைதியான உலகத்தை நோக்கிச் செயல்படுவதற்கு மனிதகுலத்தை அடிப்படைத் திறன் கொண்டதாக, இருக்கை கருதுகிறதென்று வலியுறுத்தினார். மனித ஆவியின் உன்னதத்தை அங்கீகரிப்பதோடு, அந்த உன்னதத்திற்கு தகுதியான ஒரு சமூகத்தை கற்பனை செய்யும் இந்தக் கண்ணோட்டம் பஹாய் போதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,

அனைத்து மக்களும் ஒரே மனித குடும்ப உறுப்பினர்களெனும் அடையாளத்தை அங்கீகரிப்பதன் மூலமும், சமூகத்திற்கு நீதி மற்றும் தன்னலமற்ற சேவை போன்ற மதிப்புகளை ஊக்குவிப்பதன் மூலமும், அமைதியை நோக்கி முன்னேறுவதைத் தடுக்கும் சில அடிப்படையான மானுட நம்பிக்கைகளுக்கு பஹாய் இருக்கை சவால் விடுகிறது. பேராசிரியர் மஹ்மூதி கூறியுள்ளது போல், “ஒரு சிறந்த உலகத்தை உருவாக்கவே முடியாதென்ற கருத்தை நாங்கள் கருத்திற்கொள்ள மறுக்கிறோம்.”

பல்கலைக்கழகத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி கலாச்சாரத்தை வளர்ப்பது

பஹாய் இருக்கையின் வளர்ச்சியில் ஒரு நம்பிக்கைக்குரிய பகுதி, வகுப்பறையில் அதன் பணியாகும். அங்குப் பேராசிரியர் மஹ்மூதி ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஒரு தனித்துவமான பாடத்தை வழங்குகிறார், இது ஆன்மீகக் கொள்கைகளின் வெளிச்சத்தில் மாணவர்களுக்கு சமூக சவால்களின் மூல காரணங்களைக் கண்டறிய உதவுகிறது. அமைதியின் கேள்விக்கு மையமாக ஐந்து கருப்பொருள்களை இருக்கை கருதுகிறது: கட்டமைக்கப்பட்ட இனவெறி மற்றும் தப்பெண்ணத்தின் மூல காரணங்கள்; மனித இயல்பு; பெண்கள் அதிகாரம் மற்றும் அமைதி; உலகளாவிய நிர்வாகம் மற்றும் தலைமை; மற்றும் சுற்றுச்சூழலின் உலகமயமாக்கலில் உள்ள சவால்களை சமாளித்தல்.

பேராசிரியர் மஹ்மூதி, இந்தக் கருப்பொருள்களுடன் தொடர்புடைய சவால்களைச் சமாளிப்பதற்கான அடிப்படையில் வேறுபட்ட அணுகுமுறை இல்லாமல் நீடித்த அமைதியை உணர முடியாது என்று விளக்கினார், அவை சமூகத்தில் ஏற்படுத்தும் “டெக்டோனிக் சிதைவுகள்”. புதுமையான அணுகுமுறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டு, தற்கால உரையாடலில் ஆழமாக வேரூன்றிய மனித இயல்பைப் பற்றிய ஒரு பரவலான அனுமானத்தை சவால் செய்ய இருக்கை முயற்சி செய்கிறது, அதாவது, மனிதகுலம் இயல்பாகவே சரிசெய்ய முடியா சுயநலம்கொண்டது என்ற எண்ணம், அமைதியை நோக்கி முன்னேறுவதைத் தடுக்கிறது- 

“பேராசிரியர் மஹ்மூதியின்… தாக்கத்தை ஏற்படுத்தும் பணி, ‘உலக அமைதியை எவ்வாறு உருவாக்குவது?’ போன்ற பெரிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முயல்கிறது. நாம் எப்படிப்பட்ட உலகத்தைப் பெற விரும்புகிறோம் என்பது பற்றி மேலும் சிந்திக்கவும் யோசிக்கவும் அவர் மக்களை ஊக்குவிக்கிறார்,” என ஃப்ரோவோஸ்ட் ரைஸ் கூறினார்.

பேராசிரியர் மஹ்மூதியின் இரண்டு முன்னாள் மாணவர்கள் இருக்கையுடனான அவர்களின் அனுபவங்கள் மற்றும் அது அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் பயணங்களில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி பேசினர்.

சமீபத்தில் வெர்மான்ட் சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றவரான அஷ்லி டெய்லர்,  இப்போது ஐக்கிய அமெரிக்க விமானப்படையின் நீதிபதி அட்வகேட் ஜெனரல் படைப்பிரிவின் உறுப்பினராக உள்ளார். பஹாய் இருக்கையின் தான் பயணித்ததைப் பற்றி உணர்வுப்பூர்வமாக தெரிவித்தார். கல்லூரியில் தாம் முதலாம் ஆண்டு மாணவராக இருந்தபோது, பஹாய் இருக்கையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ஈரானிய பெண் எழுத்தாளர்கள் பற்றிய விரிவுரையில் கலந்து கொண்டதன் அனுபவத்தைப் பற்றி அவர் பேசினார்.

திருமதி டெய்லர், உலக அமைதிப் பிரச்னையில் பஹாய் இருக்கையின் தனித்துவமான அணுகுமுறைக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார், “…நமக்குள்ளாக இருந்தாலும், நமது சமூகங்கள், நமது கல்வி முறை, நமது சூழல் மற்றும் பல [வழிகளில்] இருந்தாலும் சரி உலகம் முழுவதிலும் உள்ள அறிஞர்களை ஒன்றிணைத்து, நாம் எவ்வாறு அமைதியை அடையலாம் என்பது குறித்த அவர்களின் உறுதியான கருத்துக்களை விவாதிக்கலாம்.”

பேராசிரியர் மஹ்மூதியால் கற்பிக்கப்படும் வகுப்பில் உதவி ஆசிரியராக இருந்த அனுபவத்தைப் பற்றியும் திருமதி டெய்லர் பேசினார், இதில் பங்கேற்பாளர்கள் தப்பெண்ணம் மற்றும் அதன் வேர்களைப் பற்றி விவாதித்தனர்: “இந்தக் குறிப்பிட்ட கருத்தரங்கில், மாணவர்கள் உண்மையிலேயே வளர்ந்து சுயபரிசோதனை செய்துகொள்வதை நான் கண்டேன்… பல ஆண்டுகளுக்குப் பிறகு, வகுப்பு எந்தளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியது, அவர்கள் இன்னும் இந்த உரையாடலைத் தொடங்கி, கடினமான உரையாடல்களைத் தொடர்கிறார்கள் என்று மாணவர்கள் என்னிடம் கூறினர்.

மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியும் இப்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு படைப்பாற்றல் நிறுவனத்தின் மூலோபாய நிபுணருமான எமிலி கோரே, பஹாய் இருக்கை தனது வாழ்க்கையில் மாற்றியமைக்கும் தாக்கம் மற்றும் அது தனது எதிர்கால அபிலாஷைகளை எவ்வாறு வடிவமைத்துள்ளது என்பதைப் பற்றி பேசினார். படிப்பில் சேரும் போது, சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அநீதிகளுக்கு அவர் எவ்வாறு ஒத்திசைந்தார் (attuned) என்பதை விளக்கினார்; அங்குதான் அவர் பஹாய் இருக்கையின் கருப்பொருள்கள் மற்றும் மிகவும் சமத்துவமான உலகத்தை உருவாக்குவதற்கான ஒரு வழிமுறையாக இரக்கம் மற்றும் புரிதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

“கல்லூரி காலம் முழுவதும், நான் 35 வகுப்புகளை எடுத்தேன். ஆனால், நான் உலகைப் பார்த்த விதத்தை அடிப்படையாக மாற்றியது ஒன்றுதான்” என்கிறார் திருமதி. கோரே. “இது மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் எனது முதல் வாரத்தில் பேராசிரியர் மஹ்மூதியின் சிறப்பு கருத்தரங்கு. மேரிலாந்தின் ஹோவர்ட் மாவட்டத்திற்கு வெளியே உலகம் எவ்வளவு வித்தியாசமாக உள்ளது என்பதையும், சுயநினைவற்ற சார்புகள், பாரபட்சத்தின் அறிவியல் மற்றும் பிரதிநிதித்துவத்தின் சக்தி,” பற்றி நான் அங்குதான் கற்றுக்கொண்டேன்.

பஹாய் இருக்கையுடன் திருமதி. கோரேய் செலவழித்த நேரம், மக்கள் ஒன்றோடொன்று இணைந்திருப்பது பற்றியும், மிகவும் சமத்துவமான உலகத்தை உருவாக்குவதில் பட்சாதாபமும் புரிதலும் வகிக்கும் பங்கையும் அறிந்துகொள்ள அனுமதித்தது. வகுப்பிற்கு உதவி ஆசிரியராக, இந்தப் பாடங்கள் தன் சக மாணவர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை நேரடியாகக் கண்டார். மேலும், தனது கல்வியையும் தொழிலையும் மற்றவர்களுக்கு உதவுவதற்குப் பயன்படுத்த ஊக்கமளித்தார்.  பஹாய் இருக்கையின் படிப்புகள் வழியாக சென்ற பல மாணவர்கள், “நாங்கள் சிறந்த கேட்போராக மாறினோம்,”  என்ற அவர்களின் உணர்வுகளை திருமதி. கோரேய் எதிரொலித்தார்.

தற்போதைய மாணவியான ஸ்டெல்லா ஹட்சன் விளக்குகையில், பஹாய் இருக்கை “சிக்கலான கேள்விகளை நுண்ணறிவு மற்றும் முக்கியமான மனித கண்ணோட்டத்துடன் அணுகுகிறது, பிரச்சனையின் வேரில் மூழ்குகிறது,” என்பதால், உலகத்தைப் பற்றிய மாணவர்களின் பார்வை பரிணமிக்கிறது என்று மேலும் விளக்கினார்.

விருந்தினர் பேச்சாளர்கள், மாணவர்கள் மற்றும் பேராசிரியர் மஹ்மூதி ஆகியோரால் பகிரப்பட்ட பல கருத்துக்களுக்கு மேலதிகமாக, நினைவேந்தலில் தலைமையின் சில வெளியீடுகளின் காட்சியும் இடம்பெற்றது.

இந்த ஆண்டு விழா, பஹாய் இருக்கை மற்றும் அதன் பரந்த அளவிலான ஒத்துழைப்பாளருக்கு சமாதானம் பற்றிய சொற்பொழிவை முன்னெடுத்துச் செல்வதற்கும், எதிர்காலத்தை எதிர்நோக்குவதற்கும் இருக்கையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது.

“அமைதியின் வெற்றிகள் நம் அனைவரிடமிருந்தும் வரும்” என்று பேராசிரியர் மஹ்மூதி தனது இறுதி குறிப்புகளில் கூறினார், “ ‘நாம்’ என்பதில் விருப்பமுள்ளோரின் கூட்டுறவை உள்ளடக்கியது. கடந்த காலத்தைப் பொருட்படுத்தாமல், நிகழ்காலத்தில் முழுமையாகவும் எதிர்காலத்தை மனதில் கொண்டும் ஒற்றுமையாக உழைக்க அர்ப்பணிப்புடன் இருப்போரின் ஒத்துழைப்பால் அமைதிக்கான வேலை வரும். அத்தகைய ஒரு புதிய அமைதி உலகத்தைக் கற்பனை செய்து பார்க்க எங்களுக்கு உதவ உங்களை அழைக்கிறோம்.

கூட்டத்தில் அவரது கருத்துகளில், அமெரிக்க பஹாய்களின் தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினரான கென்னத் போவர்ஸ் விரிவாகக் கூறினார்: “அனைத்து மனிதகுலத்தையும் அதன் எல்லையற்ற பன்முகத்தன்மை மற்றும் செழுமையுடன் பார்ப்பதே பஹாய் இருக்கையின் இன்றியமையா அடிப்படையாகும். ஒட்டுமொத்த கூட்டிணைப்பியல் (an organic) உலகிற்கு மிகவும் அவசியமான கொள்கைகளை முறையாகவும் அறிவியல் ரீதியாகவும் பயன்படுத்துவதாகும். இந்தக் கண்ணோட்டத்துடன், உலக அமைதிக்கான பாதையைப் பற்றிய சொற்பொழிவு மற்றும் கற்றலை முன்னெடுத்துச் செல்வதே அதன் பணியாகும், ”

30வது ஆண்டு கூட்டத்தின் பதிவை இங்கே பார்க்கலாம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1647/

கருப்பர் சரித்திர மாதம்: வழிபாட்டு இல்லம் ஒருமையை வளர்க்கின்றது


1 மார்ச் 2023

வில்மெட், ஐக்கிய அமெரிக்கா – அமெரிக்காவின் வில்மெட் நகரில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லம் சமீபத்தில் கருப்பு வரலாற்று மாதத்தை நினைவுகூரும் கலைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மாலை என்னும் நிகழ்வை ஏற்பாடு செய்தது.

அமெரிக்கா முழுவதும், ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்றைக் கொண்டாடுவதற்கும் அதன் சாதனைகளை கௌரவிப்பதற்கும் ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் அனுசரிப்புகள் மற்றும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. பஹாய் கோயில் வளாகத்தில் கூடிய  சுற்றியுள்ள அண்டைப்புறங்களிலிருந்தும் அதற்கு அப்பாலும் இருந்து சுமார் 350 பேரைத் திரட்டிய அந்த ஒன்றுகூடல், ஒருமை மற்றும் இன ஒற்றுமையின் ஆன்மீகக் கொள்கைகளை ஆராய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியது. இந்தக் கோட்பாடுகள் குழுப்பாடல், ஆர்கெஸ்ட்ரா இசை, கவிதை, கோயிலின் கீழ்த்தள மண்டபத்தில் ஒரு கலை கண்காட்சி ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தப்பட்டன. இந்தக் கண்காட்சியில் இன நல்லிணக்கத்தை வளர்ப்பதில் பஹாய் சமூகத்தின் பங்களிப்புகளை எடுத்துக்காட்டும் தேசிய பஹாய் ஆவணக்காப்பகத்தின் வரலாறு சார்ந்த பல பொருட்களும் இடம்பெற்றிருந்தன. இது, பொதுமை சமூகத்தின் பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்ட மாலைநேர சொற்பொழிவுகள் பலவற்றின் கருப்பொருளாக இடம்பெற்றிருந்தன.

இந்த கொண்டாட்டத்தில், பிற கருப்பொருகளுள் வேற்றுமையில் ஒற்றுமை பற்றிய நேரடி ஆர்கெஸ்ட்ரா மற்றும் கோரல் (choral) இசையும், அடங்கும். (புகைப்படம், கீழே உள்ள இரண்டு படங்கள்: கேரி ஏஞ்சல்-லூக்)

“இன்றிரவு இந்த மண்டபத்தை நிரப்புவதானது,  வரவிருக்கும் ஆண்டுகளில் மேன்மேலும் அதிகரிக்கக்கூடிய தொடர்புகள் மற்றும் உறவுகளின் வரிசையாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்” என கோவில் இயக்குநர் ஜார்ஜ் டேவிஸ் தமது உரையில் கூறினார். “பஹாய் வழிபாட்டு இல்லம் இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்துவதும், வழிபாட்டுக்கும் சேவைக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதும் முக்கியமாகும்.”

வழிபாட்டிற்கும் சேவைக்கும் இடையிலான தொடர்பு அடித்தட்டிலும் வெளிப்படுவதைக் காணலாம் என திரு டேவிஸ் குறிப்பிட்டார். அமெரிக்கா முழுவதும் நடைபெறும் பஹாய் சமூக நிர்மாணிப்பு முயற்சிகள் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இந்த முன்முயற்சிகள் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து, பொது நன்மைக்குச் சேவை செய்வதற்கான அவர்களின் பகிரப்பட்ட விருப்பத்தில் அவர்களை ஒன்றிணைக்கின்றன.

இந்த நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக இருக்கும் இன்றியமையா மனிதகுல ஒருமைப்பாடு என்னும் கோட்பாட்டை அமெரிக்க பஹாய்களின் தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினர் கென்னத் போவர்ஸ் மேலும் ஆராய்ந்தார், அவர் இது “நமது காலத்தின் முக்கிய கொள்கை” என கூறினார். அவர் மேலும் கூறினார்: “இந்த விழிப்புணர்வின் பற்றாக்குறையும், அதைச் செயல்படுத்துவதற்கான திறனின்மையும் இன்று அமைதி மற்றும் செழிப்புக்கு முக்கிய தடையாக உள்ளன, … [இதன் விளைவாக] நாம் யார் என்பதைப் பற்றிய சிதைவான பார்வைகளும், அதனுடன் இணைவான அனைத்து தப்பெண்ணங்களும் உள்ளன..”

அமெரிக்காவின் வில்மெட் நகரில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தில் கருப்பின வரலாற்று மாதத்தைக் கொண்டாடும் நிகழ்வில் கலைக் கண்காட்சி இடம்பெற்றது.

இனவாதத்தைப் புரிந்துகொள்வதற்கும் நிவர்த்தி செய்வதற்கும் ஒரு விரிவான அணுகுமுறையை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசிய போவர்ஸ், தற்போது நடைபெற்று வரும் இன நீதிக்கான போராட்டத்தை அங்கீகரிக்காமல் கடந்த காலத்தின் மீது குறுகிய கவனம் செலுத்துவதற்கு எதிராக அவர் எச்சரிக்கை விடுத்தார். “இது வெறும் வார்த்தைகளுடன் முடிவடையும் உரையாடலாக இருக்கக்கூடாது: [இது] அனைத்து மக்களும் முழுமையாக பங்கேற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு வழிவகுக்க வேண்டும்.”

1912-ஆம் ஆண்டில் கோவில் அடிக்கல் நாட்டு விழாவின் போது, ‘அப்துல்-பஹா வில்மெட்டில் எதிர்கால வழிபாட்டு இல்லத்திற்கான அடித்தளத்தை அமைத்ததிலிருந்து, இப் புனித அமைப்பு ஒருமையை குறிக்கின்றது.

அடிக்கல் நாட்டு விழாவிற்கு சில நாள்களுக்கு முன்பு, நியூயார்க் டைம்ஸ்  ‘அப்துல்-பஹாவின் அமைதி பற்றிய செய்தி’ குறித்து ஒரு செய்தியை வெளியிட்டது. “தப்பெண்ணங்களை அகற்றுமாறு மனிதகுலத்திற்கு அழைப்பு விடுத்தது… தேசியம், இனம், மதம் ஆகியவற்றின் தப்பெண்ணம்.” “மனித உலகின் ஒருமைப்பாடு என்னும் பதாகையை மனிதகுலம் உயர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது, அப்போதுதான் பிடிவாத சூத்திரங்களும் மூடநம்பிக்கைகளும் ஒரு முடிவுக்கு வரும்” என அந்தக் கட்டுரை மேற்கோளிட்டுள்ளது.

அமெரிக்காவின் வில்மெட்டில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தில் கருப்பு வரலாற்று மாத அனுசரிப்பின் பதிவை இங்கே காணலாம்.

நிகழ்வில் கலந்துகொண்ட சில கலைஞர்களுடன் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த பொருள்களைப் பற்றி கலந்துரையாடுவதற்குப் பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பேற்பட்டது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1646/

BIC நியூ யார்க்: டிஜிட்டல் (Digital) தொழில்நுட்பங்களை மறுவடிவமைப்பதில் பெண்களின் ஈடுபாடு


28 பிப்ரவரி 2023

BIC நியூயார்க் – விரைவாக மாறிவரும் உலகளாவிய சூழ்நிலைகள், மனிதகுலத்தின் இடைத்தொடர்பை மேலும் ஆழமாக மதித்துணரும்படி தூண்டியுள்ளதுடன், டிஜிட்டல் தொழில்நுட்பங்களின்பால் மேலும் அதிக சார்ந்திருத்தலையும் தூண்டியுள்ளது. அணுகல் கிடைக்காதோர் அல்லது அத்தகைய தொழில்நுட்பங்கள் தங்கள் சமூகங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதைத் தீர்மானிக்கும் திறன் இல்லாதோர் உட்பட பல பெண்களுக்கு, இது விலக்குதலுக்கும் ஒதுக்குதலுக்கும் அதிகமாக வழிவகுத்துள்ளது.

இந்த அவதானிப்பு, பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) நியூயார்க் அலுவலகத்தின் புதிய அறிக்கையின் நடுமையத்தில் உள்ளதுடன், மார்ச் மாதம் நடைபெறவுள்ள பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் (UN) ஆணையத்தின் 67-வது அமர்வில் அதன் பங்களிப்பின் ஒரு பகுதியாகவும்  இது அடங்கும்.

“புதுமையின் மதிப்புகள்: டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மறு-கற்பனை செய்வதில் பெண்களின் ஈடுபாடு” என்னும் தலைப்பிலான அறிக்கை, டிஜிட்டல் தொழில்நுட்பங்களை வடிவமைத்து விநியோகிக்கும் செயல்பாட்டில் பல்வேறு கண்ணோட்டங்களை, குறிப்பாக பெண்களின் கண்ணோட்டங்களை ஒருங்கிணைப்பது ஏன் அவசியம் என்பதை ஆராய்கிறது.

“பெண்களின் பங்கேற்பை விரிவுபடுத்துவது, மனித அனுபவத்தின் முழு நெடுக்கத்திற்கும் விடையிறு எதிர்காலத்தை உருவாக்குவதற்குப் பலவிதமான முன்னோக்குகள் ஒரு முன்நிபந்தனை என்னும் அங்கீகாரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்” என BIC கூறுகிறது.

“…இருப்பினும் நியாயமான பிரதிநிதித்துவமானது, அதுவே ஒரு முடிவு என்பதின்றி, போட்டி மற்றும் சமத்துவமின்மையின் மேலாதிக்க வடிவங்களை ஒத்துழைத்தல், கூட்டு விசாரணை மற்றும் பொது நலனுக்கான அக்கறை ஆகியவற்றிற்கு வழிவகுக்க உதவும் ஒரு சூழலாகவும் அப்பிரதிநிதித்துவம் செயல்படுகிறது.

அறிக்கையின் மூலம் முன்வைக்கப்பட்ட ஒரு மையக் கருத்து யாதெனில், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நடுநிலை மதிப்புடையவை அல்ல. அவை எவ்வாறு வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து, நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகளை நீட்டிக்கலாம் அல்லது நிவர்த்தி செய்யலாம்.

பல தொழில்நுட்பங்கள் மனித இயல்பு, அடையாளம், முன்னேற்றம் மற்றும் நோக்கம் குறித்த சிதைவான கருத்துக்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அவை பெரும்பாலும் லௌகீகவாத மதிப்புகளால் ஆதரிக்கப்படுகின்றன என BIC விளக்குகிறது. ஆதலால், டிஜிட்டல் கருவிகள் மிகவும் நியாயமான மற்றும் சமத்துவமான சமூகத்தை ஊக்குவிக்க வேண்டுமானால், புதுமைகளின் செயல்முறைகளுக்கு தெரிவிப்பு செய்யும் மதிப்புகள் மற்றும் நோக்கங்களின் நேர்மையான ஆய்வு அவசியமாகும்.

BIC-யின் பிரதிநிதியான சஃபிரா ரமேஷ்ஃபர் கூறுவது: “முன்பு கடினமான அல்லது சாத்தியமில்லாத பணிகளைச் செய்ய இப்போது மக்களுக்கு உதவும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் ஏற்படும் முன்னேற்றங்கள் மனித திறனாற்றலைப் பெரிதும் மேம்படுத்தும் மற்றும் சமூகங்களை இணைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. இருப்பினும், இது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான தார்மீகத் தாத்பர்யங்களை எழுப்புகிறது.

அவர் மேலும் கூறுவது: “உதாரணமாக, அவர்களின் உள்ளூர் சூழல்களுக்குள் பொருத்தமான மதிப்புகள் மற்றும் முன்னுரிமைகளை அடையாளம் காணும் ஆலோசனைகளில் சமூகங்களின் முன்னோக்குகளை, குறிப்பாக பெண்களின் முன்னோக்குகளை, எவ்வாறு ஈடுபடுத்துவது?” BIC-யின் நியூயார்க் அலுவலகம், வரவிருக்கும் ‘பெண்களின் நிலை குறித்த ஆணையத்தில்’ ஆராயவிருக்கும் பல தலைப்புகளில் தொழில்நுட்ப முன்னேற்றம் பற்றிய பிரச்சினையும் உள்ளது. இதில் ஆளுகை மற்றும் அதிகாரத்தின் மறுவரையறை, சமூக ஒத்திசைவு மற்றும் கூட்டுத் தன்மைமாற்றத்தில் இளைஞர்களின் பங்கு ஆகியவையும் அடங்கும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1645/