

28 பிப்ரவரி 2023
BIC நியூயார்க் – விரைவாக மாறிவரும் உலகளாவிய சூழ்நிலைகள், மனிதகுலத்தின் இடைத்தொடர்பை மேலும் ஆழமாக மதித்துணரும்படி தூண்டியுள்ளதுடன், டிஜிட்டல் தொழில்நுட்பங்களின்பால் மேலும் அதிக சார்ந்திருத்தலையும் தூண்டியுள்ளது. அணுகல் கிடைக்காதோர் அல்லது அத்தகைய தொழில்நுட்பங்கள் தங்கள் சமூகங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதைத் தீர்மானிக்கும் திறன் இல்லாதோர் உட்பட பல பெண்களுக்கு, இது விலக்குதலுக்கும் ஒதுக்குதலுக்கும் அதிகமாக வழிவகுத்துள்ளது.
இந்த அவதானிப்பு, பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) நியூயார்க் அலுவலகத்தின் புதிய அறிக்கையின் நடுமையத்தில் உள்ளதுடன், மார்ச் மாதம் நடைபெறவுள்ள பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் (UN) ஆணையத்தின் 67-வது அமர்வில் அதன் பங்களிப்பின் ஒரு பகுதியாகவும் இது அடங்கும்.
“புதுமையின் மதிப்புகள்: டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மறு-கற்பனை செய்வதில் பெண்களின் ஈடுபாடு” என்னும் தலைப்பிலான அறிக்கை, டிஜிட்டல் தொழில்நுட்பங்களை வடிவமைத்து விநியோகிக்கும் செயல்பாட்டில் பல்வேறு கண்ணோட்டங்களை, குறிப்பாக பெண்களின் கண்ணோட்டங்களை ஒருங்கிணைப்பது ஏன் அவசியம் என்பதை ஆராய்கிறது.
“பெண்களின் பங்கேற்பை விரிவுபடுத்துவது, மனித அனுபவத்தின் முழு நெடுக்கத்திற்கும் விடையிறு எதிர்காலத்தை உருவாக்குவதற்குப் பலவிதமான முன்னோக்குகள் ஒரு முன்நிபந்தனை என்னும் அங்கீகாரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்” என BIC கூறுகிறது.
“…இருப்பினும் நியாயமான பிரதிநிதித்துவமானது, அதுவே ஒரு முடிவு என்பதின்றி, போட்டி மற்றும் சமத்துவமின்மையின் மேலாதிக்க வடிவங்களை ஒத்துழைத்தல், கூட்டு விசாரணை மற்றும் பொது நலனுக்கான அக்கறை ஆகியவற்றிற்கு வழிவகுக்க உதவும் ஒரு சூழலாகவும் அப்பிரதிநிதித்துவம் செயல்படுகிறது.
அறிக்கையின் மூலம் முன்வைக்கப்பட்ட ஒரு மையக் கருத்து யாதெனில், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நடுநிலை மதிப்புடையவை அல்ல. அவை எவ்வாறு வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து, நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகளை நீட்டிக்கலாம் அல்லது நிவர்த்தி செய்யலாம்.
பல தொழில்நுட்பங்கள் மனித இயல்பு, அடையாளம், முன்னேற்றம் மற்றும் நோக்கம் குறித்த சிதைவான கருத்துக்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அவை பெரும்பாலும் லௌகீகவாத மதிப்புகளால் ஆதரிக்கப்படுகின்றன என BIC விளக்குகிறது. ஆதலால், டிஜிட்டல் கருவிகள் மிகவும் நியாயமான மற்றும் சமத்துவமான சமூகத்தை ஊக்குவிக்க வேண்டுமானால், புதுமைகளின் செயல்முறைகளுக்கு தெரிவிப்பு செய்யும் மதிப்புகள் மற்றும் நோக்கங்களின் நேர்மையான ஆய்வு அவசியமாகும்.
BIC-யின் பிரதிநிதியான சஃபிரா ரமேஷ்ஃபர் கூறுவது: “முன்பு கடினமான அல்லது சாத்தியமில்லாத பணிகளைச் செய்ய இப்போது மக்களுக்கு உதவும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் ஏற்படும் முன்னேற்றங்கள் மனித திறனாற்றலைப் பெரிதும் மேம்படுத்தும் மற்றும் சமூகங்களை இணைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. இருப்பினும், இது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான தார்மீகத் தாத்பர்யங்களை எழுப்புகிறது.
அவர் மேலும் கூறுவது: “உதாரணமாக, அவர்களின் உள்ளூர் சூழல்களுக்குள் பொருத்தமான மதிப்புகள் மற்றும் முன்னுரிமைகளை அடையாளம் காணும் ஆலோசனைகளில் சமூகங்களின் முன்னோக்குகளை, குறிப்பாக பெண்களின் முன்னோக்குகளை, எவ்வாறு ஈடுபடுத்துவது?” BIC-யின் நியூயார்க் அலுவலகம், வரவிருக்கும் ‘பெண்களின் நிலை குறித்த ஆணையத்தில்’ ஆராயவிருக்கும் பல தலைப்புகளில் தொழில்நுட்ப முன்னேற்றம் பற்றிய பிரச்சினையும் உள்ளது. இதில் ஆளுகை மற்றும் அதிகாரத்தின் மறுவரையறை, சமூக ஒத்திசைவு மற்றும் கூட்டுத் தன்மைமாற்றத்தில் இளைஞர்களின் பங்கு ஆகியவையும் அடங்கும்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1645/