நவ்-ரூஸ் என்பது பஹாய் நாள்காட்டி வருடத்தின் முதல் நாளாகும், மற்றும் இந்நாள் பஹாய் சமயத்தவர்களின் 11 (இவற்றுள் 9 பணிவிடுப்புக்கான நாள்கள்) புனித நாள்களில் ஒன்றும் ஆகும். அது மார்ச் மாதம் 21-இல் அல்லது அதற்கு அருகில் மகாவிசுவத்தில் (மஹாவிஷுவம்/vernal equinox) நிகழும். இந்த நாள் பாரம்பரிய ஈரானிய புத்தாண்டும் கூட.
பஹாய் புனிதநாளின் தோற்றுவாயான பாரம்பரிய நவ்ரூஸ் புனிதநாள், ஈரானில் பண்டைய காலத்திலிருந்தே கொண்டாடப்படுவதுடன், கலாச்சார ரீதியில் அண்டைநாடுகளான அஸர்பைஜான், துருக்கி, ஈராக், ஆர்மீனியா, ஜோர்ஜியா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள மக்களால் அனுசரிக்கப்படுகிறது. பாப்-யி சமயத்தை ஸ்தாபித்த பாப் பெருமானார் மற்றும் பின்னர் பஹாய் சமயத்தை ஸ்தாபித்த பஹாவுல்லா இருவரும் இந்த நாளை ஒரு புனித நாளாக ஏற்றுக்கொண்டு கடவுளின் ‘அதிபெரும் நாமத்துடன்’ அந்நாளை இணைத்தனர். இப்போது கணக்கிடப்பட்டுள்ளபடி பஹாய் விடுமுறை எப்போதும் பாரம்பரிய பண்டிகையின் அதே நாளில் வராது என்பதுடன் (அது ஒரு நாள் வித்தியாசத்தில் வரலாம்), பாரம்பரிய நவ்-ரூஸ் தினத்துடன் தொடர்புடைய பல பாரசீக கலாச்சார நடைமுறைகளையும் பஹாய் நவ்-ரூஸ் கொண்டிருக்கவில்லை. மாறாக, பஹாய் நவ்-ரூஸ் பஹாய் திருவாக்குகளிலிருந்து வாசிப்புகளைக் கொண்ட ஒரு மதம் சார்ந்த நிகழ்வாகும்.

முக்கியத்துவம்
பாப்-யி மதத்தை ஸ்தாபித்த பாப் பெருமானார், ஒவ்வொன்றும் 19 நாள்கள் கொண்டதும் 19 மாதங்களைக் கொண்டதுமான படீ’ நாள்காட்டியை நிறுவினார். முதல் பஹாய் மாதமும், ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் ‘பஹா’ என பெயரிடப்பட்டுள்ளன. இது பேரொளி அல்லது தேஜஸ் என பொருள்படும் அரபு வார்த்தையாகும். இவ்வாறாக, வருடத்தின் முதல் நாளான நவ்-ரூஸ், பஹா மாதத்தில் பஹா நாளாகும். இந்த நாள் பாப் பெருமானாரால் கடவுளின் நாள் என அழைக்கப்பட்டது, மற்றும் பாப் பெருமானாரின் எழுத்துக்களில் ஒரு மேசியானிய (Messianic) திருவுருவான, ‘கடவுள் வெளிப்படுத்தவிருக்கும் அவருடன்’ இந்த நாள் இணைக்கப்பட்டது.
பாப் பெருமானார் எதிர்பார்த்திருந்த மெசியானிய நபராக அங்கீகரிக்கப்பட்ட பஹாய் சமயத்தின் ஸ்தாபகர் பஹாவுல்லா, புதிய நாள்காட்டியை ஏற்றுக்கொண்டார், நவ்-ரூஸை ஒரு புனித நாளாகவும் அங்கீகரித்தார். இந்த நாள் பஹாய் நோன்பு மாதத்தின் பஹா மாதத்தைத் தொடர்ந்து வருகிறது. மேலும், நவ்-ரூஸ் கடவுளின் அதிபெரும் நாமத்துடன் தொடர்புடையது எனவும் அவர் விளக்கினார், மற்றும் நோன்பைக் கடைப்பிடிப்பவர்களுக்கான ஒரு திருவிழாவாக அந்நாள் ஸ்தாபிக்கப்பட்டது.
ஒவ்வொரு மத திருவெளிப்பாட்டிலும் காலம் புதுப்பிக்கப்படுகின்றது என்பதற்கான குறியீட்டுக் கருத்து பாப் மற்றும் பஹாவுல்லா இருவரின் எழுத்துகளால் தெளிவாக்கப்பட்டது. மற்றும், நாள்காட்டியும் புத்தாண்டும் இந்த ஆன்மீக உருவகத்தை மேலும் உறுதியானதாக ஆக்கின. பஹாவுல்லாவின் மகனாரும், அவரது வாரிசுமான அப்துல்-பஹா, வசந்தகாலம் மற்றும் அது தோற்றுவிக்கும் புதிய வாழ்க்கையின் அடிப்படையில் நவ்-ரூஸின் முக்கியத்துவத்திற்கு விளக்கமளித்தார். விசுவம் (equinox, சம பகல் சம இரவு) என்பது இயேசு, முஹம்மது, பாப் மற்றும் பஹாவுல்லா உள்ளிட்ட கடவுள் அவதாரங்களின் சின்னமாகும் எனவும், அவர்கள் அறிவிக்கும் செய்தி ஓர் ஆன்மீக வசந்த காலத்தைப் போன்றது எனவும், அதை நினைவுகூர நவ்-ரூஸ் பயன்படுத்தப்படுகிறது எனவும் அவர் விளக்கினார்.

தேதி
தமது கித்தாப்-இ-அக்டாஸ் திருநூலில், நவ்-ரூஸ் என்பது மகாவிசுவம் நிகழும் நாள் என வரையறுத்தார். உலகெங்கிலும் உள்ள பஹாய்களுக்கான நவ்-ரூஸின் சரியான நேரம் பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்தது மற்றும் அவ்விடத்தை முடிவு செய்வது பஹாய்களின் நிர்வாக அமைப்பான உலக நீதிமன்றத்திடம் விடப்பட்டது. உலக நீதிமன்றம் 2014-கில் அக்குறிப்பிட்ட இடமாக தெஹரான் நகரைத் தேர்வு செய்தது. பஹாய் தினங்கள் சூரிய அஸ்தமனத்தில் நிகழ்வதனால், விசுவம் சூரிய அஸ்தமனத்திற்கு சிறிது முன்பாக நிகழ்ந்தால், முந்தைய சூரிய அஸ்தமனத்தில் தொடங்கிய நாள் நவ்-ரூஸ் ஆகும். ஆதலால், நவ்-ரூஸ் தினம் கிரிகோரியன் நாள்காட்டியின்படி மார்ச் 20, 21 அல்லது 22 ஆகிய தேதிகளில் வரலாம். இந்த நாள்கள் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்கூட்டியே கணிக்கப்பட்டுவிட்டன. பஹாய் நாள்காட்டியில் உள்ள அனைத்துத் தேதிகளும் நவ்-ரூஸ் தினத்தின் தொடர்பாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆதலால், கிரிகோரியன் நாட்காட்டியில் மகாவிசுவ நேரத்தைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அவை மாறி மாறி வரக்கூடும்.
பஹாய் வருடம் | நவ்-ரூஸுடன் இணைவாக வரும் கிரிகோரிய தேதி |
174 | 20 மார்ச் 2017 |
175 | 21 மார்ச் 2018 |
176 | 21 மார்ச் 2019 |
177 | 20 மார்ச் 2020 |
178 | 20 மார்ச் 2021 |
179 | 21 மார்ச் 2022 |
180 | 21 மார்ச் 2023 |
181 | 20 மார்ச் 2024 |
182 | 20 மார்ச் 2025 |
183 | 21 மார்ச் 2026 |
184 | 21 March 2027 |
கொண்டாட்டங்கள்
வேலை மற்றும் பள்ளி இடைநிறுத்தப்பட வேண்டிய ஒன்பது பஹாய் புனித நாட்களில் நவ்-ரூஸ் தினமும் ஒன்றாகும்; பாப் பெருமானார் அல்லது பஹாவுல்லா இருவரின் வாழ்க்கையில் ஒரு நிகழ்வுடன் தொடர்புபடுத்தப்படாத ஒரே நாள் நவ்-ரூஸ் தினமாகும். இது பொதுவாக பிரார்த்தனை, இசை, நடனம் ஆகியன கூடிய கூட்டங்களுடன் அனுசரிக்கப்படும் ஒரு திருவிழா ஆகும். புத்தாண்டு பஹாய் உண்ணாவிரத மாதத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதால், இந்தக் கொண்டாட்டம் பெரும்பாலும் இரவு உணவோடு இணைக்கப்படுகிறது. இருப்பினும் சூழலைப் பொறுத்து இந்த நாள் வேறு தினங்களிலும் கொண்டாடப்படும் அனைத்து பஹாய் புனித நாள்களையும் போலவே, நவ்-ரூஸ் தினத்தைக் கடைப்பிடிக்கச் சில நிலையான விதிகள் உள்ளன. உலகெங்கிலும் உள்ள பஹாய்கள் உள்ளூர் வழக்கப்படி இதை ஒரு பண்டிகை நாளாகக் கொண்டாடுகின்றனர். பாரசீக பஹாய்கள் ஹஃப்ட் சின் (Haft Sin) போன்ற நவ்ரூஸுடன் தொடர்புடைய பல ஈரானிய பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கின்றனர், உலகைச் சூற்றியுள்ள பிற பஹாய் சமூகங்கள் விசேஷ நவ்-ரூஸ் பிரார்த்தனை, மற்றும் வேறு பிரார்த்தனைகள் மற்றும் வாசிப்புகளுடன் ஒரு விருந்தோம்பலுடன் கொண்டாடக்கூடும்.
கூடுதல் தகவலுக்கு: https://prsamy.com/2022/03/18/naw-ruz/