

20 மார்ச் 2023
பஹாய் உலக மையம் — படீ’ நாட்காட்டி எனவும் அழைக்கப்படும் பஹாய் நாள்காட்டிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய பகுதி, உலகளாவிய பஹாய் சமூகத்தின் இணையதளத்தில் http://www.bahai.org/calendar/ இல் கிடைக்கின்றது.
புதிய பகுதியானது பஹாய் காலண்டர், அதன் தோற்றம், முக்கியத்துவம், அமைப்பு ஆகியவற்றின் ஒரு மேலோட்டக் காட்சியை வழங்குகிறது. இது புனித நாள்கள் மற்றும் பத்தொன்பது நாள் விருந்துகளுக்கான பஹாய் தேதிகளை 2064-ஆம் ஆண்டு வரையிலான அவற்றின் தொடர்புடைய கிரிகோரியன் தேதிகளுடன் வழங்குகிறது, அத்துடன் நடப்பு ஆண்டிற்கான தரவிறக்கம் செய்யப்படக்கூடிய காலெண்டரையும் வழங்குகிறது.

பஹாய் நாள்காட்டி பாப் பெருமானாரால் அறிமுகப்படுத்தப்பட்டது, பின்னர் பஹாவுல்லாவினால் உறுதிப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாள்காட்டியின் உலகளாவிய அமலாக்கம் தொடர்பான செய்தியில், உலக நீதிமன்றம் கூறியது: “ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புதிய நாள்காட்டியை ஏற்றுக்கொள்வது, லௌகீக, சமூகம் மற்றும் ஆன்மீக உண்மை பற்றிய மனித உணர்தலை மறுவடிவமைக்கும் தெய்வீக வெளிப்பாட்டின் சக்தியின் அடையாளமாகும். அதன் மூலம், புனிதமான தருணங்கள் வேறுபடுத்தப்படுகின்றன, காலத்திலும் இடத்திலும் மனிதகுலத்தின் இடம் மறுகற்பனை செய்யப்படுகிறது, மேலும் வாழ்க்கையின் லயம் மறுவார்ப்பு செய்யப்படுகிறது.
Bahai.org இணையதளம் பஹாய் சமயத்தின் நம்பிக்கைகள் மற்றும் திருவாக்குகளை ஆராய்வதுடன் பஹாவுல்லாவின் தொலைநோக்கினால் ஈர்க்கப்பட்டு, சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கப் பாடுபடும் உலகம் முழுவதும் உள்ளவர்களின் அனுபவங்களை வழங்குகிறது. பஹாய்கள் என்ன நம்புகின்றனர் மற்றும் பஹாய்கள் என்ன செய்கின்றனர் என்பது பற்றிய விரிவான பகுதிகள் மற்றும் ஒரு விரிவான பஹாய் குறிப்பு நூலகத்தை வழங்குகிறது. இந்த நூலகம் பஹாய் சமயம் பற்றிய தகவல்களைத் தேடுபவர்களுக்கு ஒரு மதிப்புமிக்க ஆதாரமாக அமைகிறது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1648/