“ஒரு கூட்டுக் கலை முயற்சி”: கட்டிடக்கலைஞர் DRC கோவில் பணித்திட்டத்தைப் பற்றி பிரதிபலிக்கிறார்


23 மார்ச் 2023

கின்ஷாசா, காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) பஹாய் வழிபாட்டு இல்லம் (DRC) திறக்கப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, கோயிலை வடிவமைத்த தென்னாப்பிரிக்க நிறுவனமான Wolff Architects’இன் கட்டிடக் கலைஞர் ஹென்ரிச் வோல்ஃப் இந்தத் திட்டத்தில் பணிபுரியும் போது அவர் கடந்து வந்த தனிப்பட்ட மற்றும் தன்மைமாற்றப் பயணத்தைப் பற்றி பிரதிபலிக்கிறார்.

இந்தத் திட்டம் திரு வோல்ஃபின் இதயத்தில் ஒரு விசேஷ இடத்தைப் பிடித்துள்ளது. கோயிலுடனான தனது ஈடுபாட்டின் மூலம், பஹாய் போதனைகளின் கருத்துகளை அவர் அறிந்துகொண்டார்; அவை அவருடன் ஆழமாக எதிரொலித்தன; இறுதியில் கோயிலின் வடிவமைப்புக்கு உத்வேகம் அளித்தன எனவும் அவர் விளக்குகிறார்.

ஹைன்ரிச் மற்றும் இல்ஸ் வொல்ஃப், Wolff Architects பார்ட்னர்கள்

சேவை உணர்வுடன் மேற்கொள்ளப்படும் பணி

கோயிலின் வளர்ச்சி மற்றும் கட்டுமானத்தின் போது திரு வோல்ஃப்’இன் தனிப்பட்ட பயணம் மீள்திறம் மற்றும் அர்ப்பணிப்பின் ஒரு குறிப்பிடத்தக்க கதையாகும். அவரது நிறுவனத்திற்கு இந்தத் திட்டம் ஒதுக்கப்பட்ட நேரத்தில், திரு வோல்ஃப் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்தார். “என்னைச் சுற்றியிருந்த அனைவரையும் ஆட்கொண்ட நம்பிக்கையின்மை உணர்வு, என் வாழ்க்கையில் ஒருவித மகிழ்ச்சியற்ற தவிர்க்க முடியாமை உள்ளது என்னும் உணர்வு என்னைத் தாக்கியது.

“என் வாழ்க்கைக்கும் ஒரு வாய்ப்பு இருக்கலாம் என்பதை நாங்கள் உணர்ந்தபோது, கோயில் பணித்திட்ட அழைப்பு வந்தது,” என அவர் கூறினார்.

பஹாய் போதனைகளில் தான் எதிர்கொண்ட ஒரு கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்டதாக திரு வோல்ஃப் விளக்குகிறார் – அதாவது மனிதகுலத்திற்குச் சேவை  மனப்பான்மையுடன் மேற்கொள்ளப்படும் பணி வழிபாட்டுக்குச் சமமாகும்.

“உங்கள் வாழ்க்கையில் அனைத்து வேலைகளையும் மற்றவர்களுக்கு அர்ப்பணிப்பது கடவுளுடனான ஒரு பக்தரின் உறவுடன் ஒப்பிடப்படலாம் என்னும் கருத்து மிகவும் அழகான யோசனை மற்றும் அற்புதமான தாராளத்தன்மை மிக்க வாழ்க்கை முறையாகும்.”

அவர் மேலும் கூறுகிறார்: “ஒருவரின் வேலையை மற்றவர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்னும் எண்ணத்தை மதிக்கும் நபர்களுடன் இருப்பது சிறப்பாக இருக்கும் என நான் உணர்ந்தேன்; எங்கள் வேலையின் பலனால் பயனடைபவர்களை நாங்கள் சந்திக்கப் போவதில்லை என்றாலும் கூட. மீதமிருக்கும் என் வாழ்நாளை இந்தத் திட்டத்திற்காகக் கொடுக்க நான் தயாராக இருந்தேன்.

திட்டம் முன்னேறி வந்தபோது, உலகளாவிய பெருந்தொற்று தொடங்குவதற்கு சற்று முன்பு, திரு வோல்ஃப் வெற்றிகரமான சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். “நான் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தேன், திடீரென்று உலகம் மூடப்பட்டது, எல்லாமே மிகவும் விசித்திரமாக மாறியது.

“அந்த வகையில், இந்தத் திட்டம் ஒரு கனவு நிலையில் அமர்ந்திருக்கிறது, ஏனெனில், நாங்கள் அலுவலகத்தில்  இருக்கவில்லை,” என அவர் கூறுகிறார், வடிவமைப்பு செயல்முறையின் பெரும்பகுதி அவரது நோய்மீட்சியின் போது வீடியோ கான்ஃபரன்ஸ் அழைப்புகள் மூலம் நடந்தது என விளக்குகிறார்.

“அது ஒரு முற்றான மகிழ்ச்சியாக இருந்தது. அது சோர்வாக இல்லை என நான் உங்களுக்குச் சொல்ல முடியும்; அது ஒரு சிரமமும் அல்ல. அது முற்றிலும் பேரின்பமாக இருந்தது, “என அவர் கூறினார்.

தமது தனிப்பட்ட பயணத்திற்கும் அப்பால், கோயிலின் வடிவம் மற்றும் கட்டுமானத்தை வடிவமைத்த கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை திரு வோல்ஃப் வலியுறுத்துகிறார். திட்டத்தின் வெற்றியை உறுதி செய்ய ஒத்துழைத்தத் தமது அலுவலகத்தில் உள்ள குழு, கட்டுமானக் குழு, திட்ட மேலாண்மைக் குழு மற்றும் DRC சமூகம் அனைத்தின் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

ஒரு பகுதி சித்திரம், கோயிலின் உட்புறத்தைக் காட்டுகிறது (மேல்) மற்றும் கோவிலின் வெளிப்புறத்தின் (கீழே) எலிவேஷன் வரைபடம்.

ஒரு கூட்டு முயற்சி

வழிபாட்டு இல்லத்தின் கலைக் கூறுகளும் ஒட்டுமொத்த வடிவமைப்பும் மக்கள் ஒன்றிணைவதற்கான கருத்தை அடிப்படையாகக் கொண்டவை என திரு வோல்ஃப் விளக்குகிறார். உதாரணத்திற்கு, குவிமாடத்தில் உள்ள ஓடுகள் உறை, காங்கோ நதியின் உத்வேகத்தைப் பெறுகிறது – அதன் துணை நதிகள் நாடு முழுவதும் இருந்து மழையை ஒரு பெரிய நதியாக சேகரிக்கின்றன – மற்றும் ‘அப்துல்-பஹாவின் எழுத்துக்களிலிருந்து பின்வரும் மேற்கோள்:

 “ஒரு காலத்தில் தனித்தனி நீரோடைகள், ஆறுகள், ஓடைகள், ஒற்றைத் துளிகள் என அனைத்தும் ஒன்று சேரும்போது, ஒரே இடத்தில் ஒன்று சேரும்போது அது ஒரு மகத்தான கடலாக உருவெடுக்கும்.”-அது எத்தகைய ஓர் ஆசீர்வாதமாக இருந்திடும்!”

“கடவுளின் கிருபையைப் பெறுவதை ‘பெருமழை’ என பஹாய் திருவாக்குகள் விவரிக்கின்றன” என திரு வோல்ஃப் எடுத்துரைத்தார்.

“டி.ஆர்.சி.யில், மழை ஒரு தீவிரமான மற்றும் வரையறுக்கும் அம்சமாகும் என்பதுடன் கோயிலின் வடிவமைப்பு மழையைக் கொண்டாடும் மற்றும் வரவேற்கும் கூறுகளை இணைப்பதன் மூலம் இதற்கு ஒப்புதலாக இருக்கின்றது”, அதாவது, குவிமாடத்தின் அடுக்கான விளிம்புகள் மற்றும் கீழே சுற்றிலும் வலம் வரும் தங்குமிடம் போன்றவை. “இந்தக் கட்டிடம் டி.ஆர்.சி.யின் மழையைத் தழுவி வருகிறது.”

மழையின் கருப்பொருள் ஓர் ஆரம்பகால கருத்தாக்க வரைபடத்தில் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதைத் திரு வோல்ஃப் “அபரிமிதமான மழை” என குறிப்பிடுகிறார், இது ஒரு புயலின்போது மக்கள் மழையில் நனைந்தவாறு நெருங்கும்போது கோயிலை சித்தரிக்கிறது. இயற்கைக்கும், ஆன்மீகத்திற்கும், மனித அனுபவத்திற்கும் இடையில் உள்ள தொடர்பை வலியுறுத்தும் வகையில், கட்டிடம் மழையில் கரைவதை இந்தக் காட்சி காட்டுகிறது.

டிஆர்சியில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தின் வடிவமைப்பிக்கு உத்வேகமளித்த “பெருமழை” என்னும் தலைப்பில் ஒரு கலை சித்திரம்.

பெருமழைக்கு மத்தியில், இந்தக் கோயில் ஒரு சரணாலயமாகவும், அதன் உருவாக்கத்தில் ஈடுபட்ட கூட்டு முயற்சி மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகவும் செயல்படுகிறது.

உள்ளூர் சமூகங்களின் ஈடுபாட்டுடனும், திரு வோல்ஃப் குழுவினருக்கும் ஒரு கலைஞருக்கும் இடையிலான ஒத்துழைப்புடனும் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு முயற்சியின் விளைவாக இந்தக் கருத்தாக்கச் சித்திரம் இருந்தது. “நாங்கள் மாயா மார்க்ஸ் என்ற கலைஞருடன் பணிபுரிந்தோம். அவர்தான் இந்த ஓவியத்தை உருவாக்க எங்களுக்கு உதவினார்.”

அவர் மேலும் கூறுகிறார்: “இந்தக் கலைப்படைப்பின் பல்வேறு பதிப்புகளை நாங்கள் தயாரித்தோம், இது டி.ஆர்.சி பஹாய் சமூகத்திற்கு விநியோகிக்கப்பட்டது, அவர்கள் தங்களுக்கு இந்தக் கலைப்படைப்பு என்ன அர்த்தத்தை கொடுக்கின்றது என சொல்லும் திறன் இருந்தது.”

இந்த உள்ளடக்கிய அணுகுமுறை பல மூலாதாரங்களிலிருந்து பல்வேறு வகையான உள்ளீடுகளை அனுமதித்தது. டி.ஆர்.சி.யில் உள்ள வழிபாட்டு இல்லம் “அடிப்படையில் ஒரு பெரிய மக்கள் குழுவினரின் கூட்டுக் கலை முயற்சி” என்று திரு வோல்ஃப் கூறுகிறார்.

கோவிலின் குவிமாடத்தின் (மேல்-இடது) வடிவமைப்பின் விவரம் மற்றும் டிஆர்சியின் பாரம்பரிய கட்டமைப்புகள் மற்றும் கலைப்படைப்பிலிருந்து வடிவமைப்புக்கான உத்வேகமூட்டிகள்

இந்த ஒத்துழைப்பு டி.ஆர்.சியின் ஜவுளிகளில் காணப்படும் கூட்டுக் கலைத்துவத்தின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது. அங்கு ஆண்களும் பெண்களும் ஒரே துணியில் ஒன்றாக வேலை செய்கின்றனர். இந்த யோசனை திரு வோல்ஃப் மற்றும் அவரது குழுவினருடன் எதிரொலித்தது.  டி.ஆர்.சி.யின் ஜவுளிக் கலைகளை நினைவூட்டும் வகையில் 135,000 கூரை ஒடுகள் ஒன்றிணைக்கப்பட்ட கோயிலின் வெளிப்புற ஓடுகள் அமைப்பில் இந்தக் கூட்டு உணர்வு தெளிவாகத் தெரிகிறது.

ஓடுகள் அமைப்புப் பணி, கட்டிடக்கலையில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது என திரு வோல்ஃப் கூறுகிறார். ” தங்கள் கட்டிடங்களின் கதைகளின் நடுமையத்தில் தனிப்பட்ட கட்டிடக் கலைஞர்கள் இருக்கக்கூடாது.”

இந்தத் திட்டத்திற்கு கலந்தாலோசனை மற்றும் உரையாடல் அவசியம் என அவர் மேலும் கூறுகிறார். “கூட்டாக எடுக்கப்படும் முடிவுகளில் கூட்டு ஞானம் இருக்கும்.”

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் உள்ள Wolff Architects இல் ஒரு கூட்டம், இதில் நிறுவனத்தின் ஊழியர்கள், திட்ட மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பஹாய் உலக மையத்தின் பிரதிநிதி.

காலத்தின் ஒரு விசேஷ தருணம்

வடிவமைப்பு மற்றும் கட்டுமான செயல்முறை சம்பந்தப்பட்ட அனைவரிடமும் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை திரு வோல்ஃப் விவரித்தார். “அத்தகைய கட்டிடத்தை எழுப்புவதானது மக்களை ஒன்றிணைக்கும் காலத்தின் ஒரு விசேஷ தருணத்தைக் குறிக்கிறது” என கூறினார்.

சம்பந்தப்பட்டவர்கள் மீதான தாக்கத்தை மனிதகுலத்தின் ஒருமைப்பாடு உட்பட பஹாய் வழிபாட்டு இல்லங்களின் அடிப்படைக் கொள்கைகளினூடே கண்டறியலாம்.

பஹாய் கோயில்களின் வடிவமைப்புகள், மற்ற கட்டிடங்களைப் போலல்லாமல், எந்தவொரு தனிநபரையோ குழுவையோ மற்றவர்களை விட உயர்த்துவதில்லை என அவர் விளக்குகிறார். அதற்கு மாறாக, அவை சமத்துவத்தை வலியுறுத்துகின்றன; அனைவருக்காகவும் கட்டப்படுகின்றன; மற்றும் ஒற்றுமைக்கும் ஆன்மீகப் பிரதிபலிப்புக்கும் ஒரிடத்தை உருவாக்குகின்றன.

“படிநிலை என்பது பல கட்டிடங்களின் நடமையத்தில் உள்ளது” என திரு வோல்ஃப் கூறுகிறார். “கட்டிடக்கலையின் வெளிப்பாட்டில் தனிநபர்களின் முதன்மை பொதுவானது; சமத்துவத்தை அக்கறையாகக் கொண்ட கட்டிடங்களைக் காண்பது அரிது.”

இந்தக் கோயில் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கூட்டு முடிவெடுக்கும் பஹாய் கொள்கைகளை உள்ளடக்கியுள்ளது. அதே நேரத்தில் டி.ஆர்.சி.யின் இயற்கைக் கூறுகள் மற்றும் கலாச்சாரத்தையும் தழுவுகிறது என திரு வோல்ஃப் கூறுகிறார். இந்தக் கோயில் தியானம் மற்றும் ஆன்மீகத்திற்கான இடமாக மட்டுமின்றி, அதன் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள அனைவரின் அர்ப்பணிப்பு, முயற்சி மற்றும் பகிரப்பட்ட அனுபவத்தின் அடையாளமாகவும் இருக்கின்றது.

சுற்றியுள்ள நகர்ப்புற நிலப்பரப்பினூடே கோயில் தளத்தின் ஒரு காட்சி.

கோயில் கட்டுமான செயல்முறையானது, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரு தனித்துவமான, பகிரப்பட்ட அனுபவமாக இருந்தது. அது இதை “மனித வரலாற்றில் ஒரு தருணமாக” ஆக்கியுள்ளது என திரு வோல்ஃப் விளக்குகிறார்.

இந்த திட்டத்துடனான தனது நேரம் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத நேரம் என அவர் மேலும் கூறினார். “நான் இன்று புற்றுநோயிலிருந்து முற்றிலும் விடுபட்டும், கோயில் கட்டுமானத்தைப் பார்க்கவும் முடிவது என் வாழ்க்கையில் ஒரு முழுமையான மகிழ்ச்சியாகும். நான் சொர்க்கத்தில்  மிதக்கின்றேன்!” சனிக்கிழமை கோயில் திறப்புவிழாவில் அது தன் கதவுகளைத் திறக்கும் போது, அனைத்து தரப்பு மக்களையும் தங்களின் பகிரப்பட்ட மனிதநேயத்தைக் கொண்டாட ஒற்றுமையுடனும் வருமாறு அழைப்புவிடுக்கும்.

வோல்ஃப் ஆர்கிடெக்ட்ஸ் நிறுவனத்தின் சில குழு உறுப்பினர்கள் (இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக): நோகுபெகெசெலா மச்சுனு, அலெக்ஸாண்ட்ரா போஹ்மர், பாயோ விண்டபோ, தகாலனி எம்பாடி, பால் முன்டிங், டெம்பா ஜாச், மத்தேயு எபர்ஹார்ட், அலெக்ஸ் கோட்ஸி மற்றும் கோகோ ஹெல்லர் (படத்தில் இல்லை) .

மூலாதாரம்: https://news.bahai.org/story/1649/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: