

KINSHASA, காங்கோ ஜனநாயக குடியரசு – தேசிய வழிபாட்டு இல்லம் சனிக்கிழமை காலை திறக்கப்படுவதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு, GMT காலை 9:00 மணிக்கு தொடங்கும் அர்ப்பணிப்பு விழாவிற்கு நாடு முழுவதிலும் இருந்து 2,000 விருந்தினர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோயிலின் திறப்பு விழா ஒரு வரலாறு சார்ந்த மைல்கல்லைக் குறிக்கும் — பஹாய் உலகில் அர்ப்பணிக்கப்படப்போகும் முதல் தேசிய வழிபாட்டு இல்லம்.
கடந்த ஒரு வாரமாக, கோவிலின் தளத்திற்கு ஏராளமான மக்கள் வந்தவன்னம் இருக்கின்றனர். சிலர் 10-நாட்கள் வரை பயணம் செய்துள்ளனர். இவர்கள் ஏற்பாடுகளில் உதவுகின்றனர்.
நாளைய நிகழ்ச்சிக்கு முன்னதாக வருபவர்களில் ஒருவரான வனேசா மசெங்கு கூறுகிறார்: “உங்கள் கோத்திரம், மதம் அல்லது பின்னணி எதுவாக இருந்தாலும் இங்கு நாங்கள் அனைவரும் ஒன்றாக இருப்போம். இது அனைவருக்கும், குறிப்பாக நமது சமூகத்தின் இளைஞர்களுக்கு, நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும், ஏனெனில் இங்கு தடைகள் ஏதும் கிடையாது.
அவர் மேலும் கூறுகிறார்: “இந்தக் கோவில் நம் அனைவருக்குமாக திறந்திருக்கும்.”
கீழே உள்ள படங்கள் தற்போது நடைபெற்று வரும் ஏற்பாடுகளின் ஒரு பார்வையை வழங்குகின்றன.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1650/




