

கின்ஷாசா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு – காங்கோ ஜனநாயகக் குடியரசு (டிஆர்சி) முழுவதிலுமிருந்து 2,000-க்கும் மேற்பட்ட மக்கள், பிற நாடுகளைச் சேர்ந்த சில சிறப்பு விருந்தினர்கள் உட்பட, பஹாய் உலகின் முதல் தேசிய பஹாய் வழிபாட்டு இல்லத்தின் அர்ப்பணிப்பு விழாவுக்காக இன்று கின்ஷாசாவில் ஒன்றுகூடினர்.
இந்த நிகழ்ச்சியில் உலக நீதிமன்றம் தனது பிரதிநிதியாகப் பெயரிட்டுள்ள ஆப்பிரிக்காவின் கண்ட பேரவை உறுப்பினர் மெலனி பங்கலாவின் கருத்துக்களும் அடங்கும். திருமதி பங்கலா கூட்டத்தினருக்கு எழுதிய உலக நீதிமன்றத்தின் கடிதத்தை வாசித்தார், அதில் கூறப்பட்டதாவது: “இந்த காங்கோ பெருநகரத்தில் எழுப்பப்பட்ட வழிபாட்டு இல்லம்… உலகத்தின் மீளுருவாக்கத்திற்கு இன்றியமையாத கடவுள் வழிபாடு, மனிதகுலத்திற்கான சேவை ஆகியவற்றை ஒன்றிணைக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.”
அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: உங்கள் முதல் வழிபாட்டு இல்லமான இது ஓர் ஒளிவிளக்காக இருக்கட்டும். அதன் சுவர்கள் கடவுள் திருவாக்குகள் என்னும் இசைகளால் எதிரொலிக்கட்டும்; அது உண்மை மெய்நம்பிக்கையிலிருந்து பிறக்கும் செயல்களைத் தூண்டட்டும்; அதில் பிரவேசிக்கும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது சாந்தியையும் சமாதானத்தையும் அளிக்கட்டும்; இது கின்ஷாசா நகரம் முழுவதிலும் காங்கோ ஜனநாயகக் குடியரசு தேசம் முழுவதிலும் சர்வலோக மகிழ்ச்சி என்னும் ஒளியினைப் பாய்ச்சட்டும்.”
நாளை தொடரும் இந்த விழா, அரசு அதிகாரிகள், பாரம்பரிய தலைவர்கள், மதத் தலைவர்கள், பஹாய் ஸ்தாபன உறுப்பினர்கள் மற்றும் பரந்த நாடு முழுவதிலிருந்தும் பலரை ஒன்றிணைத்தது.
டி.ஆர்.சி.யின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் செயலாளர் லாவோசியர் முடோம்போ ஷியோங்கோ தனது தொடக்க உரையில், இந்தக் கூட்டம் “வேற்றுமையில் ஒற்றுமை என்னும் கோட்பாட்டின் வெளிப்பாடாகும். இது வெவ்வேறு மக்கள், இனக்குழுக்கள் மற்றும் பழங்குடிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது” என விவரித்தார்.
தேசிய சபையின் மற்றோர் உறுப்பினரான ஜஸ்டின் கம்வான்யா நிகழ்ச்சியில் உரையாற்றுகையில், “வழிபாட்டு இல்லத்தை ஒரு சாதாரண கட்டிடமாகவோ அல்லது நமக்குப் பழக்கமான வேறு எந்த வழிபாட்டுத் தலமாகவோ கருத முடியாது. இது ஒரு விசேஷமான கட்டிடம், குறிப்பாக ஆன்மீக ஆற்றல்கள் நிறைந்தத ஒரு கட்டிடம்.
“ஆன்மீக சக்திகள் வெளிப்படும் இடமாக, வழிபாட்டு இல்லம் ஒரு பொது விருப்ப ஆற்றலின் வெளிப்பாடு மற்றும் மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கான தீவிர விருப்பத்தை பிரதிபலிக்கிறது.”
இந்த நிகழ்வில் டி.ஆர்.சி.யின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல பாடகர்கள் கலந்து கொண்டனர், அவர்கள் இந்த விசேஷ நிகழ்விற்கு மூன்று மாதங்களுக்கும் மேலாக பயிற்சி செய்து வந்துள்ளனர். கோயிலுக்குள் ஒரு வழிபாட்டு நிகழ்வின் போது, லிங்காலா, பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளிலும் பாடப்பட்ட பஹாவுல்லாவின் திருவாக்குகள் ஆழமாக எதிரொலித்தன: “தூய்மையும், அன்பும், பிரகாசமும் நிறைந்த உள்ளத்தினைக் கொண்டிருப்பாயாக. அதனால் தொன்மையும் அழியாத் தன்மையும் வாய்ந்த, என்றும் நிலையான இராஜ்யம் உனக்கே உரியதாகட்டும்.”
இந்த நிகழ்வு மற்றும் கோயிலின் எதிர்காலம் குறித்து பிரதிபலிக்கும் வகையில், தேசிய சபையின் மற்றோர் உறுப்பினரான நகுலு டோமெனே ட்டுட்டு கூறுகிறார்: “எங்கள் நாட்டில் 450-க்கும் மேற்பட்ட இனக் குழுக்கள் உள்ளன. இந்த இடம் அவர்களின் பன்முகத்தன்மை மற்றும் அவர்களின் பொதுவான மனிதநேயத்தின் அழகைத் தழுவி ஒன்றிணையக்கூடிய இடமாகும்.”
விழாவில் பங்கேற்றவரும் உள்ளூர்வாசியுமான மேடலின் லுட்சாகா ஃபண்டி இந்த உணர்வை எதிரொலித்தார்: “கோயில் என்பது இதயங்களை அவற்றின் படைப்பாளருடன் இணைக்க விதிக்கப்பட்ட ஒரு மையமாகும்.
ஆன்மாவுக்கு பாலினம் இல்லை, ஆன்மாவுக்கு குலம் இல்லை, ஆன்மாவுக்கு வயது இல்லை, ஆன்மாவுக்கு சமூக அந்தஸ்து இல்லை. அது அனைவரின் உடைமை. இதுவே இந்தக் கட்டமைப்பின் இன்றியமையாத பண்பாகும்- சர்வலோகத் தன்மை. இது உலகிற்கு அறிவொளியூட்டும் என நாங்கள் நம்புகின்றோம். உண்மையில், இது இந்தத் தப்பெண்ணங்கள் என்னும் இருளை அகற்றுவதற்கான கலங்கரை விளக்கமாகும்.”
ஒரு குறிப்பிடத்தக்க பதிலிறுப்பு: காங்கோ ஜனநாயகக் குடியரசில் பஹாய் சமயத்தின் விடியல் (ஆங்கிலம், பிரெஞ்சு) என்னும் தலைப்பில் ஒரு திரைப்படம் விழாவில் திரையிடப்பட்டது. இதில், நாட்டின் பஹாய்கள் தங்கள் சமூகத்தின் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் முயற்சிகளில் அவர்களின் பயணத்தைப் பற்றிய கதைகள் இடம்பெற்றிருந்தன. ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் இப்படத்தை இங்கே காணலாம்.
பஹாய் உலகின் முதல் தேசிய வழிபாட்டு இல்லத்தின் வரலாற்று முக்கியத்துவமிக்க அர்ப்பணிப்பு விழாவைக் காண news.bahai.org-க்கு வருகை தரவும்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1651/
அர்ப்பணவிழா படங்கள்














