டிஆர்.சி: வழிபாட்டு இல்லம்அனைவரையும் அரவணைக்கின்றது


28 மார்ச் 2023

கின்ஷாசா, காங்கோ ஜனநாயகக் குடியரசு – பஹாய் உலகின் முதல் தேசிய வழிபாட்டு இல்லத்திற்காக கொங்கோ ஜனநாயகக் குடியரசின் (டிஆர்சி) கின்ஷாசாவில் சனிக்கிழமை தொடங்கிய அர்ப்பணிப்பு விழா நிறைவடைந்துவிட்டது. இவ்விழா பாரம்பரிய தலைவர்கள், மதத் தலைவர்கள், பஹாய் ஸ்தாபனங்களின் உறுப்பினர்கள் மற்றும் பரந்த நாடு முழுவதும் உள்ள பல மக்களை ஒன்றுதிரட்டியது.

கடந்த நாள்களில் 2,000-க்கும் மேற்பட்டோர் வழிபாட்டு இல்லத்தின் ஒருங்கிணைக்கும் தொலைநோக்கை கலை வெளிப்பாடுகள் மற்றும் கருத்துரைகள் மூலம் அறிந்து கொண்டுள்ளனர். விழாவின் இறுதி நாளில், ஆலோசகர்கள் அகதா கைசி-என்கெட்சியா, அலன் பியர் டிஜோல்ட் ஆகியோர் ஆப்பிரிக்காவில் உள்ள ஆலோசகர்கள் சார்பாக கருத்துகளை வழங்கினர், இது கோயிலின் நிறைவை நோக்கிய பயணம் முழுவதும் வெளிப்படுத்தப்பட்ட ஊக்கமளிக்கும் மீள்திறனை வலியுறுத்தியது.

அவர்களின் கருத்துக்கள் இந்தப் பயணத்தில் பொதிந்துள்ள குணங்களுக்கும் வழிபாட்டு இல்லத்தின் நீடித்த பணிக்கும் இடையே ஒற்றுமைகளைப் பற்றி உரைத்தன: துன்பங்களுக்கு மத்தியில் அமைதியை ஊக்குவித்தல், சேவைக்கு அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் சக குடிமக்களின் நலனுக்கான அர்ப்பணிப்பு.

திரு. ட்ஜோல்ட் மற்றும் திருமதி கெய்சி-என்கெட்சியா ஆகியோர் முறையே பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் பின்வருமாறு கூறினர்: “உங்கள் நிலத்தை சீரழித்த பல்வேறு வகையான ஒடுக்குமுறைகள் மற்றும் மோதல்கள் இருந்தபோதிலும், உங்கள் மக்களின் தணியாத உறுதியும் மீள்திறனும் குறிப்பிடத்தக்கதாகவும் அனைவரும் காணக்கூடியதாகவும் இருந்தது.”

அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து, தற்போது கோயில் தனது கதவுகளைப் பொதுமக்களுக்குத் திறந்துள்ளது.

பஹாய் உலகின் முதல் தேசிய வழிபாட்டு இல்ல திறப்பு விழாவின் ஒரு காட்சியை கீழே காணலாம். பிரதிஷ்டையின் போது நிகழ்த்தப்பட்ட சில பாடல் அமைப்புகளின் மாதிரியை இங்கே காணலாம்.

வழிபாடுகளையும் பாடல்களையும் செவிமடுக்க இங்கே கிளிக் செய்யவும்

திறப்புவிழாவின் போது நிகழ்த்தப்பட்ட சில பாடல் அமைப்புகளின் மாதிரியை இங்கே காணலாம்.

நிகழ்ச்சியின் சில அமர்வுகளுக்கு பங்கேற்பாளர்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
DRC இல் தேசிய பஹாய் வழிபாட்டு இல்லத்தின் அர்ப்பணிப்பைக் குறிக்க அனைத்துப் பின்னணியில் இருந்தும் மக்கள் ஒன்று சேர்ந்தனர்.
விழாவிற்கு வந்த மக்களை இசைக் கலைஞர்கள் குழு வரவேற்றது.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஒரு குறிப்பிடத்தக்க பதிலிறுப்பு: கொங்கோ குடியரசில் பஹாய் சமயத்தின் வருகை. கடந்த ஏழு தசாப்தங்களாக நாட்டு பஹாய்களின் பயணத்தைப் பற்றி ஒரு திரைப்படம் (ஆங்கிலம், பிரஞ்சு) வெளியிடப்பட்டது.
கோவிலுக்கான முதல் வருகைக்காக வழிபாட்டு இல்லத்தை அணுகும் பங்கேற்பாளர்கள்.
பங்கேற்பாளர்கள் கோவிலுக்குள் முதன் முறையாகப் பிரவேசிக்கின்றனர்
அதிபெரும் நாமம் என அழைக்கப்படும் புனிதமான பஹாய் சின்னம் கோயிலின் குவிமாட உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. அதிபெரும் நாமம் என்பது “பேரொளியின் பேரொளியே” என்னும் வேண்டுதலின் எழுத்துக்கலை பிரதிபலிப்பாகும்.
கோவிலுக்குள் நடந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் பஹாய் பிரார்த்தனைகள் மற்றும் திருவாக்குகளை இசையமைத்துப் பாடிய பல பாடகர்களின் நிகழ்ச்சிகள் அடங்கும்.
இரண்டாவது நாள் வழிபாட்டு நிகழ்ச்சியின் போது மற்றொரு பாடகர் குழு கோவிலில் உள்ள மெஸ்ஸானைன் தளத்தில் பாடுகிறது.
பிரார்த்தனைகள் மற்றும் பஹாய் திருவாக்குகளைக் கொண்ட அதன் முதல் வழிபாட்டு நிகழ்ச்சிக்காகப் பங்கேற்பாளர்கள் கோவிலுக்குள் அமர்ந்துள்ளனர்.
கோவிலுக்குள் நடந்த வழிபாட்டு நிகழ்ச்சியின் ஆன்மீகச் சூழ்நிலையில் பிரார்த்தனைகள், பாடலுக்கான ஏற்பாடுகள் மற்றும் உலக நீதிமன்றத்தின் செய்தியை வாசிப்பது ஆகியவை அடங்கும்.
கோவில் வளாகத்தில் பங்கேற்பாளர்கள் நடக்கும் வான்காட்சி
கலோம்பா பகுதியைச் சேர்ந்த தலைவர்களுடன் இங்கு வந்தவர்கள்: பட்வா கடிம்பா கிராமத்தைச் சேர்ந்த மைகோபி மைகோபி (இடமிருந்து மூன்றாவது) மற்றும் டிட்டலாலா (https://news.bahai.org/story/1233/) கிராமத்தைச் சேர்ந்த முகன்ஷாயி லாரன்ட் (வலமிருந்து இரண்டாவது).
சில பங்கேற்பாளர்களின் குழுப
நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் அமைதிமிகு சிந்தனையில் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை ஆராய்வதில் நேரத்தை செலவிட்டனர்
கோயிலின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தின் சில கட்டிடக்கலை அம்சங்கள் இங்கே காணப்படுகின்றன.
அர்ப்பணிப்பு விழாவின் நேரடி ஒளிபரப்பைக் காண DRC முழுவதிலும் உள்ள சமூகங்கள் ஒன்றுகூடினர்.
வழிபாட்டு இல்லத்தின் அர்ப்பணிப்பைக் கொண்டாடுவதற்காக DRC முழுவதும் உள்ளூர் ஒன்றுகூடல்கள் நடைபெற்றன.
கோவிலின் வானவெளி காட்சி
கோவிலின் நுழைவாயில்களில் ஒன்றின் காட்சி மற்றும் அதை ஒட்டிய குளத்தில் அதன் பிரதிபலிப்பு.
கோயிலின் மாலைக் காட்சி மற்றும் இரவில் பிரதிபலிக்கும் குளம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1652/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: