பஹாய் உலக மையம் – உலக நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட “ஒரு விரிவடையும் வாய்ப்பு” திரைப்படம், இன்று 13-வது அனைத்துலக பஹாய் மாநாட்டில் திரையிடப்பட்டது.
பஹாய் போதனைகளின் தன்மைமாற்றும் சக்தியை சமூக மாற்றத்தை நோக்கிச் செலுத்துவதற்கு மக்கள், சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்கள் இணைந்து பாடுபடும் உலகின் நான்கு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இந்தத் திரைப்படம் எடுத்துக்காட்டுகிறது.
பிரஞ்சு, பாரசீகம், ரஷ்ய மற்றும் ஸ்பானிஷ் மொழி வசனவரிகளுடனான 72 நிமிடத் திரைப்படத்தை ஆங்கிலத்தில் இங்கே பார்க்கலாம். அரேபிய மொழியில் படத்தின் குரல்வழி பதிப்பும் உள்ளது. கூடுதலாக, ஒரு விரிவான வாய்ப்பை YouTube-இல் பார்க்கலாம்.
பஹாய் உலக மையம் – உலக நீதிமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு பிரதிநிதிகளால் நேற்று வாக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 9-வது இடத்திற்கு சமநிலை வாக்குகள் இருப்பதாக இன்று காலை தலைமை தேர்தல் அதிகாரியினால் அறிவிக்கப்பட்டது. சமநிலையை முறிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நடைபெறும். நீதிமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை மாநாட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஹாய் உலக மையம் – பஹாய் புனித ஸ்தலங்களுக்குச் சென்று ஆன்மீகத் தயாரிப்புக்குப் பிறகு, உலகெங்கிலும் உள்ள 176 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,250 பிரதிநிதிகள் இன்று உலக நீதிமன்றத்தின் தேர்தலுக்குப் பயபக்தியுடன் வாக்களிக்க ஒரு முக்கியமான ஒன்றுகூடலில் ஒன்றுகூடினர். நேரடியாக வராதோர் வாக்குகள் உட்பட பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 1590ஐத் தாண்டியது.
நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கிய அனைத்துலக போதனை மையத்தின் உறுப்பினரான ஹோலி வுடார்ட் தமது தொடக்கக் கருத்துக்களில், இந்தக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார், இது “இதுவரை அதிக எண்ணிக்கையிலான சபைகள் பிரதிநிதிக்கப்பட்டதும், ஓர் அனைத்துலக மாநாட்டில் பங்கேற்பாளர்களின் மிகப்பெரிய கூட்டமும் ஆகும்” என குறிப்பிட்டார். ”
டாக்டர் வூட்டார்ட், “51 தேசிய மற்றும் மண்டல ஆன்மீக சபைகளின் 288 உறுப்பினர்கள் ஹைஃபாவில் உள்ள அப்துல்-பஹா மாளிகையின் பிரதான மண்டபத்தில் 1963இல் உலக நீதிமன்றத்தின் முதல் தேர்தலுக்காக ஒன்றுகூடியதில் இருந்து” பல தசாப்தங்களான உலகளாவிய பஹாய் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியை சுட்டிக்காட்டினார்.
மாநாட்டின் தொடக்கத்தில், பல தசாப்தங்களாக பஹாய் ஸ்தாபனங்களை உருவாக்குவதிலிருந்து தடுக்கப்பட்டு, அதனால் பேராளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தடைகளுக்குள்ளாகியிருந்த ஈரான் நாட்டு பஹாய்கள், பங்கேற்பாளர்களால் நினைவுகூரப்பட்டனர். மேலும் அவர்கள் அங்கு இல்லாதது 95 சிகப்பு ரோஜாக்களால் ஆன பூச்சென்டினால் குறிக்கப்பட்டது.
இன்று காலை நடைபெற்ற வாக்குப்பதிவு உலகளாவிய தேர்தல் செயல்முறையின் உச்சக்கட்டமாகும், இதில் வயது வந்த ஒவ்வொரு பஹாய்களும் பங்கேற்கலாம். பஹாய் தேர்தல்களில் வேட்புமனுக்களும் பிரச்சாரமும் இல்லாததால் அது தனித்துவமானது. அனைத்து தேசிய பஹாய் சபைகளின் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய அனைத்துலக பேராளர் மாநாட்டின் பிரதிநிதிகள், உலக நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள் என அவர்கள் நம்பும் ஒன்பது நபர்களுக்கு ரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்களிக்கின்றனர்.
பஹாவுல்லா தமது சட்டப் புத்தகத்தில் வகுத்துள்ள உலக நீதிமன்றத்திற்கான ஆணை, பல பொறுப்புகளுக்கு மத்தியில் மனித குலத்தின் நலனில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவது, கல்வி, அமைதி மற்றும் உலகளாவிய செழிப்பை மேம்படுத்துவது மற்றும் மனித கண்ணியத்தைப் பாதுகாப்பதும் ஆகும்.
உலகளாவிய பஹாய் சமூகத்தின் ஒற்றுமையை நீதிமன்றம் பாதுகாத்து, வளமான உலகளாவிய நாகரீகத்தை உருவாக்குவதில் பங்குபெறும் திறனை வளர்த்துக்கொள்ளவும், உலக அமைதி பற்றிய பஹாவுல்லாவின் பார்வையை மெய்நிலைப்படுத்திடவும் வழிகாட்டுகிறது.
நாளின் பிற்பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட மக்கள், பேராளர்கள், ஆலோசகர்கள் மற்றும் , மனித இனத்தின் குறுக்குப் பிரிவைப் பிரதிநிதிக்கும் பிற பங்கேற்பாளர்கள் ரித்வான் பண்டிகையைக் கொண்டாடினர்.
166 ஆண்டுகளுக்கு முன்பு பஹாவுல்லா கடவுளின் அவதாரமாகப் பிரகடனப்படுத்தியதன் ஆண்டு நிறைவை இந்த விழா நினைவுபடுத்துகிறது. அப்போது அவர் வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய கட்டத்தின் வருகையைக் குறிக்கும், தமது போதனைகளின் மையத்தில் இருக்கும் அத்தியாவசிய ஆன்மீகக் கொள்கைகளை அறிவித்தார்.
மாநாட்டின் இன்றைய காலை அமர்வின் படங்களைப் பார்க்க news.bahai.org ஐப் பார்வையிடவும்.
பஹாய் உலக மையம் – 13-வது அனைத்துலக பஹாய் மாநாடு நெருங்குகையில், உலகம் முழுவதிலுமிருந்து வரும் பேராளர்கள் பஹாய் புனித இடங்களின் ஆன்மீக சூழ்நிலைக்குள் தங்களை மூழ்கடித்து வருகின்றனர். பஹாவுல்லா மற்றும் அப்துல்-பஹாவின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடைய தளங்களுக்கான இந்த வருகைகள், பேராளர்களுக்கு, உலக நீதிமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதெனும் அவர்களின் புனிதமான கடமைக்குத் தயாராகும் விசேஷ வாய்ப்பை வழங்குகின்றன.
(இச்செய்தியில் சுமார் 100 படங்கள் உள்ளன. அனைத்தையும் இங்கு இடுவது சிரமமாகும். படங்களைக் காண தயவு செய்து இதே செய்தியின் ஆங்கில பதிப்பை https://news.bahai.org/story/1657/-இல்காணவும்)
பின்வரும் படங்கள், பஹாய் புனித ஸ்தலங்களுக்குச் செல்லும் ‘அக்கா/ஹைஃபா பகுதியின் ஊடாகப் பயணிக்கும் போது, பிரதிநிதிகள் பகிர்ந்துகொண்ட உணர்ச்சிபூர்வமான அனுபவங்களைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகின்றன.
பஹாவுல்லாவின் சிறை அறை
பஹாவுல்லாவும் அவரது குடும்பத்தினரும் 1868 முதல் 1870 வரை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அக்காநகரில் உள்ள இந்தக் கோட்டையின் வடமேற்குப் பகுதியில் சிறையில் அடைக்கப்பட்டனர். இங்குதான் பஹாவுல்லா மனிதகுல ஒருமைப்பாட்டின் அடிப்படையில் ஒரு நியாயமான உலகளாவிய நாகரீகத்தை உருவாக்குதல் என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க படைப்புகளை வெளிப்படுத்தினார்: .
நாடுகடத்தப்பட்டவர்களாகவும், வீட்டுக் காவலில் இருந்தவர்களாகவும், பஹாவுல்லாவும் அவரது குடும்பத்தினரும் 1871-இல் இந்தக் கட்டிடத்திற்கு வந்து சில காலம் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்தனர். 1873-ஆம் ஆண்டில், பஹாவுல்லா தமது புனித நூலான கித்தாப்-இ-அக்தாஸை இந்தப் புனித தளத்தில் வெளிப்படுத்தினார்.
ஜூன் 1877-இன் தொடக்கத்தில், அக்காநகரின் சுவர்களுக்கிடையில் ஒன்பது வருடகால சிறைவாசத்திற்குப் பிறகு, ‘, பஹாவுல்லா’ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மஸ்ராயில் குடியேறினர், அங்கு அவர் வருகையாளர்களைச் சந்தித்தார் மற்றும் பல நிருபங்களை எழுதினார்.
‘அப்துல்-பஹா’ தமது வாழ்வின் கடைசி ஆண்டுகளில் வசித்த இல்லம் இதுவாகும். 28 நவம்பர் 1921 அதிகாலையில் அவர் காலமானார். அவர் மறைந்த மறுநாள் ‘அப்துல்-பஹாவின் இறுதிச் சடங்கில் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். .
‘அப்துல்-பஹாவின் எதிர்கால நினைவால கட்டுமானப் பகுதியைப் பார்வையிட பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. 2019-ஆம் ஆண்டில், அக்காநகரில் உள்ள ரித்வான் தோட்டத்திற்கு அருகில் உள்ள இந்தத் தளத்தில் பணிகள் துவங்கின.
சர்வதேச ஆவணக் காப்பகம், பஹாய் சமயத்தின் மைய நாயகர்கள் மற்றும் ஆரம்ப ஆண்டுகளுடன் தொடர்புடைய வரலாறு சார்ந்த பொருட்கள் மற்றும் விலைமதிப்பற்ற நினைவுச்சின்னங்களைக் கொண்டுள்ளது.
பஹாய் உலக மையம் – அனைத்துலக பஹாய் மாநாட்டில் பங்கேற்க 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 1,400 பிரதிநிதிகள் ஹைஃபாவிற்கு வந்துள்ளனர், இது உலகளாவிய பஹாய் சமூகத்தின் நிர்வாக மற்றும் ஆன்மீக மையத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இணையற்ற கூட்டமாகும். .
அனைத்துலக மாநாட்டின் போது, மனிதகுலத்தின் குறுக்குப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தப் பேராளர்கள், கலந்தாலோசனை அமர்வுகளில் பங்கேற்று, உலக நீதிமன்றமான பஹாய் சமயத்தின் அனைத்துலக ஆளும் குழுவைத் தேர்ந்தெடுப்பார்கள்.
உலகளாவிய பஹாய் சமூகம் எவ்வாறு அமைதியை நோக்கிய மனிதகுலத்தின் நகர்வுக்குப் பங்களிக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தலாம் என்பதை கலந்தாலோசனைகள் ஆராயும். இந்த முயற்சிகள் சமூக நடவடிக்கை மற்றும் சமூகச் சொல்லாடல்களில் பங்கேற்பது உட்பட சமூக நிர்மாணிப்புத் திறனை வளர்க்கும் கல்வித் திட்டங்களை உள்ளடக்கியிருக்கும்.
அனைத்துலக மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் தங்கள் நாடுகளின் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படும் தேசிய பஹாய் ஆளும் குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். தேசிய ஆன்மீக சபைகள் என குறிப்பிடப்படும் இந்த ஸ்தாபனங்கள், அந்தந்த அதிகார வரம்புகளுக்குள் பஹாய் சமூகத்தின் செயல்பாடுகளைத் தூண்டுகின்றன, வழிகாட்டுகின்றன மற்றும் ஆதரிக்கின்றன.
மாநாடு ஏப்ரல் 29 முதல் மே 2 வரை நடைபெறுகிறது. தொடக்க நாளில், ஐந்தாண்டு காலத்திற்கு உலக நீதிமன்றத்தின் ஒன்பது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க பேராளர்கள் ஒன்றுகூடுவர்.
பிரதிநிதிகளின் வருகை மற்றும் ஹைஃபா மற்றும் அக்காநகரிலுள்ள புனித சன்னதிகளுக்கு அவர்கள் சென்றதைப் பற்றிய காட்சிகளுக்கு news.bahai.org ஐப் பார்வையிடவும். இந்த வருகைகள் பேராளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் ஆன்மீக ரீதியில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள அனுமதிக்கின்றன.
சமூக மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான உலகளாவிய பஹாய் சமூகத்தின் முயற்சிகளை ஆராய்ந்து, கண்காட்சியில் காட்டப்பட்டுள்ள இந்த 4 நிமிட வீடியோவை பேராளர்கள் பார்க்கலாம். இந்த முயற்சிகள் சமூக நிர்மாணி்பபுத் திறனை வளர்க்கும் கல்வித் திட்டங்களை உள்ளடக்கியதுடன் சமூக நடவடிக்கை மற்றும் சமூக உரையாடல்களில் பங்கேற்பதையும் உள்ளடக்கியுள்ளது.
உலக நீதிமன்றத்தின் இரண்டு உறுப்பினர்கள் பஹாய் உலக மையத்தில் பல வருட சேவைக்குப் பிறகு வெளியேறுகின்றனர்.
பஹாய் சமயத்தின் அனைத்துலக நிர்வாகக் குழுவில் 13 ஆண்டுகள் பணியாற்றிய திரு. ஸ்டீபன் பிர்க்லாண்ட், 71, மற்றும் திரு. ஸ்டீபன் ஹால், 69, ஆகியோர் கடந்த ஆண்டு தங்கள் பதவியை ராஜினாமா செய்ய அனுமதி கோரினர்.
நீதிமன்றம் அவர்களின் கோரிக்கையை ஏற்று நவம்பர் 2022-இல் திரு. பிர்க்லாண்ட் மற்றும் திரு. ஹால் இந்த மாத இறுதியில் நடைபெறும் 13-வது அனைத்துலக பஹாய் பேராளர் மாநாட்டிற்குப் பிறகு வெளியேறுவதாக அறிவித்தது.
மாநாடு 2023 ஏப்ரல் 29 முதல் மே 2 வரை ஹைஃபாவில் நடைபெறும். உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 1,400 பேராளர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரு பிர்க்லேண்ட் அமெரிக்காவைச் சேர்ந்தவர்; திரு ஹால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். இரு உறுப்பினர்களும் முதன்முதலில் 2010-இல் உலக நீதிமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ரித்வான் 12 நாள் திருவிழாவைக் கொண்டாடுவதில் உலகெங்கிலும் உள்ள பஹாய்களுடன் நாம் ஒன்றுசேரும்போது, இந்த விசேஷ நாள்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 விஷயங்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. இது பாக்தாத்தில் உள்ள ரித்வான் தோட்டத்தில் 12 நாள்கள் பஹாவுல்லா தங்கியிருந்ததைக் குறிக்கின்றன.
1. திருவாக்கு
ரித்வான் என்பது அரபு மொழியில் “சொர்க்கம்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது; அது ஆன்மீக அழகு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒர் இடம் அல்லது மையத்தை விவரிக்க பஹாய் திருவாக்குகளில் பயன்படுத்தப்படலாம். “தெய்வீகப் பிரசன்னம் என்னும் ரித்வான்” அல்லது “பேரொளிமிக்க மகிமையின் ரித்வான்” போன்ற சொற்றொடர்களில், ரித்வானை சொர்க்கம் என்னும் வார்த்தைக்கு ஒத்ததாக நாம் புரிந்துகொள்கிறோம்.
2. (ரித்வான்) திருவிழா
1863-ஆம் ஆண்டில் பாக்தாத்தில் உள்ள ரித்வான் தோட்டத்தில் பஹாவுல்லா கழித்த 12 நாட்களை நினைவுகூரும் வகையில் ஏப்ரல் 21 முதல் மே 2 வரை 12 நாட்கள் வருடாந்திர திருவிழாவான ரித்வான் பண்டிகையை ரித்வான் பெரும்பாலும் குறிக்கிறது. இந்த நேரத்தில் அவர் தமது நம்பிக்கையாளர்களுக்குத் தமது தீர்க்கதரிசன பணியை அறிவித்ததுடன் அவரது ஸ்தானத்தை அனைத்து மதங்களிலும் வாக்குறுதியளிக்கப்பட்ட ஒன்றாக அறிவித்தார். ரித்வான், பாப் பெருமானார் பிரகடனம் இரண்டும், பஹாவுல்லாவினால் “இரு அதிபெரும் திருவிழாக்கள்” என பெயரிடப்பட்டுள்ளன. மேலும், அவை பஹாய் நாள்காட்டியிலும்் அவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன, மற்றும் பஹாய் உலகில் அதற்கேற்ப கொண்டாடப்படுகின்றன. ரித்வானின் 1, 9 மற்றும் 12-வது நாள்கள் புனித நாள்களாகக் கருதப்படுகின்றன; அந்நாள்களில் பணிநிறுத்தம் செய்யப்பட வேண்டும்.
3. முதலாம் நாள்
1863-ஆம் ஆண்டில், புத்தாண்டு (நவ்-ரூஸ்) கொண்டாடப்பட்ட சரியாக 31 நாட்களுக்குப் பிறகு, பஹாவுல்லா நகரின் நிர்வாக அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட பின்னர் பாக்தாத்திலிருந்து கான்ஸ்டான்டிநோப்பிள் வரை நான்கு மாத பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினார். பஹாவுல்லா தமது வீட்டை விட்டு வெளியேறி டைகிரிஸ் நதியின் குறுக்காக படகில் பயணம் செய்த பிறகு நஜிபிய்யா தோட்டத்தை அடைந்தார். அங்கு, அடுத்த 12 நாள்கள் பாக்தாத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு பிரியாவிடை அளித்திடுவார். பஹாவுல்லாவின் புறப்பாடு துக்கரமான நிகழ்வாக இருந்தபோதிலும், அதை விழுமிய பேரானந்தமும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு திருவிழாவின் தொடக்க விழாவாக முன்னறிவித்தார்.
4. ஒன்பதாம் நாள்
ரித்வான் தோட்டம் என அழைக்கப்படும் நஜிபியிய்யா தோட்டத்திற்கு பஹாவுல்லா வந்த ஒன்பது நாட்களுக்குப் பின்னர், அவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் அவருடன் இணைந்தனர். அதற்குள்ளாக, அடுத்தடுத்து பார்வையாளர்கள் பஹாவுல்லாவின் வருகையைத் தேடியும், அவரிடம் விடைபெறவும் தோட்டத்திற்கு படையெடுத்து வந்தனர். நபில் தனது விவரணையில், தோட்டத்திற்கு வந்தோர் தங்கியிருந்த கூடாரங்களுக்கிடையில் பஹாவுல்லா இரவில் நடந்து செல்வதைப் பற்றி விவரிக்கிறார்:
‘இந்த இராப்பாடிப் பறவைகளைப் பாருங்கள். இந்த ரோஜ மலர்களின் மீது அவற்றிற்கு உள்ள அளவு கடந்த நேசத்தினால், சாயத்திலிருந்து வைகறை வரை, தங்கள் கீதங்களைப் பாடிக்கொண்டும் தங்கள் ஆராதனைக்குறிய அவற்றுடன் பெரும் உணர்வெழுச்சியுடன் தொடர்புகொண்டும் இருக்கின்றன. ஆனால், தங்கள் அன்பரின் ரோஜா நிகர் அழகினால் பெரும் தகிப்படைந்துள்ளோம் எனக் கூறிக்கொள்வோர் மட்டும் எவ்வாறு தூங்க முடிகின்றது?’
5. பன்னிரண்டாம் நாள்
பஹாவுல்லா புறப்படுவதற்கு முன்பு ரித்வான் தோட்டத்தில் தங்கியிருந்த கடைசி நாள், எஞ்சியிருக்க வேண்டியவர்களுக்கு இழப்பும் சோகமும் நிறைந்த நாளாக இருந்தது.
நம்பிக்கையாளர்களும், நம்பிக்கையாளர் அல்லாதாரும் ஒன்றாக அழுது புலம்பினர். கூடியிருந்த தலைவர்களும், முக்கியஸ்தர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். எந்த நாவினாலும் விவரிக்க முடியாத அளவுக்கு உணர்ச்சிகள் கிளரப்பட்டன; அவற்றின் தொற்றலிலிருந்து எந்த பார்வையாளரும் தப்பிக்க முடியவில்லை.
நடுப்பகலில், தோட்டத்திற்கு அவர் வந்த 12 நாள்களுக்குப் பிறகு, பஹாவுல்லா ஒரு குதிரையில் ஏறி தோட்டத்தை விட்டுப் புறப்பட்டார்.
6. முக்கியத்துவம்
ரித்வான் பண்டிகையின் போதுதான், பஹாவுல்லா, முதன்முதலில், உலகின் அனைத்து மதங்களிலும் முன்னறிவிக்கப்பட்ட வாக்குறுதியளிக்கப்பட்ட கடவுளின் அவதாரம் என்னும் தமது ஸ்தானத்தைப் பகிரங்கமாக அறிவித்தார். பஹாய் சமயத்தின் ஆரம்பமான ஒரு புதிய சகாப்தத்தை முன்னறிவிக்கும் ஒரு திருவெளிப்பாட்டை அவர் தம்முடன் கொண்டு வந்தார்.
7. தோட்டங்கள்
மேற்குறிப்பிட்ட ரிட்வான் தோட்டம் நஜிபிய்யா தோட்டத்தைக் குறிக்கிறது, அங்கு பஹாவுல்லா பாக்தாத்தில் தமது கடைசி 12 நாட்களைக் கழித்தார், அங்கு அவருக்கு பிரியாவிடை கொடுக்க வந்த நண்பர்களை வரவேற்றார். உண்மையில், பஹாய்களால் குறிப்பிடப்படும் இரண்டாவது ரித்வான் தோட்டம் ஒன்றும் உள்ளது. அசல் ரித்வான் திருவிழாவில் பஹாவுல்லா தமது பணியை அறிவித்த பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் இறுதியில் இன்றைய இஸ்ரேலில் உள்ள சிறை நகரான அக்காநகருக்கு வெளியே ஒரு வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். பஹாவுல்லாவின் மகனார் அப்துல் பஹா, பஹாவுல்லா அடிக்கடி சென்றுவருவதற்காக வீட்டிற்கு அருகில் ஒரு சிறிய தீவுத் தோட்டத்தை வாடகைக்கு எடுத்தார். பஹாவுல்லா இந்த தோட்டத்திற்கு ரித்வான் தோட்டம் என பெயரிட்டார். ஒரு முறை ஒன்பது நாட்கள் வரை அங்கு யாத்ரீகர்கள் அவரைத் தரிசிக்க வந்தனர்.
8. தேர்தல்கள்
பஹாய் சமூகத்தை இன்று வரை நிர்வகித்து வரும் ஒரு தனித்துவமான நிர்வாக முறையை பஹாவுல்லா ஸ்தாபித்தார். தனித்துவமான தேர்தல் மற்றும் கலந்தாலோசனைக் கொள்கைகள் தொகுப்பின் அடிப்படையில் நிறுவப்பட்ட பஹாய் நிர்வாக அமைப்பு உள்ளூர், தேசிய மற்றும் அனைத்துலக மட்டங்களில் செயல்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அவைகள் குழுக்களைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மட்டத்தில், பஹாய் சமூக வாழ்க்கை உள்ளூர் ஆன்மீக சபையினால் நிர்வகிக்கப்படுகிறது – சமூகத்தின் விவகாரங்களை வழிநடத்தவும் நிர்வகிக்கவும் ஒன்பது பேர் கொண்ட சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு. உள்ளூர் ஆன்மீக சபை ரித்வான் முதல் நாளில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இது, பஹாய் நாள்காட்டியின்படி, ஏப்ரல் 20 அன்று சூரிய அஸ்தமனத்தில் தொடங்கி ஏப்ரல் 21 அன்று சூரிய அஸ்தமனத்தில் முடிவடைகிறது.
ஷோகி எஃபென்டி கூறுகின்றார்:
அது ஸ்தாபிக்கப்படும் வரை, கிழக்கு மற்றும் மேற்கு முழுவதும் சம சீரான தன்மையை உறுதி செய்வதற்காக, அனைத்து உள்ளூர் சபைகளும் ஆண்டுக்கு ஒரு முறை, ரித்வான் முதல் நாளில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், மற்றும் முடிந்தால், வாக்குப்பதிவின் முடிவு, அதே நாளில் அறிவிக்கப்பட வேண்டும்.
9. பேராளர் மாநாடுகள்
‘தேசிய ஆன்மீக சபை’ என அழைக்கப்படும் நாட்டின் பஹாய் தேசிய நிர்வாக அமைப்பில் பணியாற்றக்கூடிய ஒன்பது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முதன்மை நோக்கத்திற்காக உலகெங்கிலும் உள்ள பஹாய்கள் ஆண்டுக்கு ஒரு முறை அந்தந்த நாடுகளில் ஒரு தேசிய பேராளர் மாநாட்டை நடத்துகின்றனர்.
இஸ்ரேலின் ஹைஃபா நகரில் உள்ள பஹாய் உலக மையத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பஹாய் சமயத்தின் அதிவிழுமிய உலகளாவிய ஆட்சி மற்றும் நிர்வாக அமைப்பான ‘உலக நீதிமன்றத்தின்’ உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஓர் அனைத்துலக மாநாடு நடத்தப்படுகிறது.
வருடாந்திர தேசிய பேராளர் மாநாடு மற்றும் அனைத்துலகப் பேராளர் மாநாடு இரண்டும், அப்துல் பஹாவின் அறிவுறுத்தலின் பேரில், ஏப்ரல் 21 முதல் மே 2 வரை ரித்வான் காலத்தில் நடத்தப்படுகின்றன.
10. செய்திகள்
ஒவ்வொரு ஆண்டும் ரித்வானில், உலக நீதிமன்றம் உலக பஹாய்களுக்கு ஒரு ரித்வான் செய்தியை வெளியிடுகிறது. சட்டமியற்றும் அதிகாரமாக இருப்பதால், பஹாய் சமூகம் அதன் ஆன்மீக மற்றும் நிர்வாக விவகாரங்களில் ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் வழிகாட்டுதலுக்காக உலக நீதிமன்றத்தை நோக்கித் திரும்புகின்றது.
பஹாவுல்லா கூறுகின்றார்:
. . .ஒவ்வொரு நாளுக்கும் ஒரு புதிய பிரச்சினை உள்ளது, ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு விரைவான தீர்வு உள்ளது, அத்தகைய விவகாரங்கள் காலத்தின் தேவைகள் மற்றும் அவசியங்களுக்கு ஏற்பநீதி சபையின் நிர்வாகஸ்தர்கள் செயல்பட, அவர்களின் கவனத்திற்குக்கொண்டுவரப்பட வேண்டும்.
1863-ஆம் ஆண்டில் ரித்வானின் போது தமது பிரகடனத்துடன் தொடங்கிய புதிய சகாப்தம் குறித்த தமது தொலைநோக்கை பஹாவுல்லா பகிர்ந்து கொண்டது போன்றே, உலக நீதிமன்றமும் தொடர்ந்து பரிணமித்து வரும் உலகில் பஹாய் சமூகத்தை தன்னுடன் இணக்கமாக வைத்திருக்க ஒவ்வொரு ரித்வானிலும் தொடர்ந்து செய்துவருகின்றது.
11. நிருபங்கள்
ரித்வான் பண்டிகையின் போதும், அப்பண்டிகைக்காகவும் பஹாவுல்லா வெளிப்படுத்திய பல நிருபங்கள் உள்ளன. இந்தப் புனித வார்த்தைகள் பெரும்பாலும் ரித்வான் நிகழ்வைக் குறிக்கவும், அதன் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கவும், பஹாய் சமூகத்திற்கு அதன் நீடித்த தாக்கத்தினால் பயன் பெறவும் உரக்கவோ அல்லது தனிப்படவோ வாசிக்கப்படுகின்றன.
“கருணைமயமான அவர் ரித்வானை நோக்கி அடியெடுத்து வைத்து, அதனுள் பிரவேசித்துள்ளார் என்னும் செய்தியினைப் படைப்பு முழுமைக்கும் பிரகடனஞ்செய்ய எழுவீராக. பிறகு, இறைவன் தமது சுவர்க்கத்தின் அரியாசனமாக ஆக்கியுள்ள பேருவகை என்னும் பூங்காவின்பால் மக்களை வழிநடத்திச் செல்வீராக. உம்மை யாம், எமது அதிவலிமைமிகு எக்காளமாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். அதன் எக்காள ஒலி முழக்கம் மனிதகுலம் அனைத்தின் மறுவுயிர்த்தெழுதலுக்குச் சமிக்ஞை காட்டிடும்.”
12. அதன் முக்கியத்துவம்
இறுதியாக, பாக்தாத்தில் அவரைச் சுற்றிக் கூடியிருந்த நண்பர்களைப் போன்றே, அவரது பிரசன்னத்தின் சொர்க்கத்தைத் தேடும் பஹாவுல்லாவின் சீடர்களாக, “பண்டிகைகளின் அரசனை” அங்கீகரிக்கும் கடமை நமக்கு வழங்கப்பட்டுள்ளது மற்றும் அதற்கான ஆசீர்வாதமும் நமக்குள்ளது.
BIC நியூயார்க் – டிஜிட்டல் மயமாக்கல், ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்மதி மற்றும் பிற தொழில்நுட்ப அல்லது சமூக சக்திகளால் பாதிக்கப்பட்டுள்ள வேலையின் மாற்றங்காணும் நிலப்பரப்புடன், பல ஆழமான கேள்விகள் பொது உணர்வில் எழுகின்றன: வேலைவாய்ப்பின் நோக்கம் என்ன? எந்த வகையான வாழ்க்கை மனித நிறைவுக்கு வழிவகுக்கும்? நாம் என்ன வகையான சமூகங்களை ஒன்றாக உருவாக்க முயல்கிறோம்?
பஹாய் அனைத்துலக சமூகத்தின் நியூயார்க் அலுவலகம் (BIC) இந்தக் கேள்விகளை ஐக்கிய நாடுகள் சபையின் சமூக மேம்பாட்டுக்கான ஆணையத்தின் 6-வது அமர்வில் முன்வைத்த “வேலைவாய்ப்பு மற்றும் அதற்கு அப்பால்: சமுதாயத்திற்கு பங்களிக்க அனைவரின் திறன்களையும் ஈர்த்தல்” என்னும் தலைப்பில் ஒரு புதிய அறிக்கையில் ஆய்வு செய்கிறது.
வேலைவாய்ப்பு தொடர்பான பொருளாதார மாதிரிகளின் அடிப்படையிலான அனுமானங்களை ஆய்வு செய்ய அந்த அறிக்கை அழைப்பு விடுக்கிறது. பல சூழல்களில், வேலை என்னும் கருத்து உயிர்வாழ்வதற்கான ஒரு வழிமுறையாக இருந்து சமூகத்தின் நல்வாழ்வுக்கு பங்களிக்கும் தனிநபர்களின் படைப்பு திறனை அங்கீகரிக்கும் ஒன்றாக உருவாகியுள்ளது என BIC கூறுகிறது
இந்த ஆண்டுக்கான ஆணையத்தின் முன்னுரிமைக் கருப்பொருளுடன் தொடர்புடைய BIC தூதுக்குழுவின் பங்களிப்பிற்கு இந்த யோசனை அடிகோலியது: “முழுமையான மற்றும் உற்பத்தித்திறன் கொண்ட வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை சமாளிப்பதற்கான வழிமுறையாக அனைவருக்கும் நியாயமான வேலை…”
இந்த முயற்சியின் பலக்கியங்கள் BIC அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டன, அது பின்வருமாறு கூறுகிறது: “வேலைவாய்ப்பு மட்டும் சமத்துவத்தை வளர்க்காது என்பதை வரலாறு நிரூபிக்கிறது. எடுத்துக்காட்டாக, பல நாடுகளில் அதிக வேலைவாய்ப்பு விகிதங்கள், விரிவடைந்த ஏற்றத்தாழ்வுகளுடன் கூடிய காலகட்டங்களை அனுபவித்துள்ளன.
BIC பிரதிநிதி அராஷ் ஃபாஸ்லி (மேல்-இடது) மற்றும் லிலியான் நகுன்சிமானா (மேல்-வலது, வலது) UN இன் சமூக மேம்பாட்டு ஆணையத்தில் ஒரு நிகழ்வில் பேசுகிறார்கள். சமூக மேம்பாட்டுக்கான NGO கமிஷன் உறுப்பினர்களை கீழே உள்ள படத்தில் காணலாம்.
ஆணையத்தின் போது நடைபெற்ற UN பொதுமை சமுதாய மன்றத்தில் (பதிவு பகுதி 1 மற்றும் பகுதி 2), BIC-யின் பிரதிநிதியான லிலியேன் ந்குன்ஸிமானா, இந்த யோசனையை விரிவுபடுத்தினார், பாரம்பரிய மாதிரியான வேலைவாய்ப்பு மற்றும் ஊதியங்கள் சமமான மற்றும் செழிப்பான சமூகங்களை வளர்ப்பதற்குப் போதுமானதாக இல்லை என்பதை வலியுறுத்தினார். .
“முறையான மற்றும் முறைசாரா பொருளாதாரத்தில் தொழிலாளர்களின் பற்றாக்குறையான பாதுகாப்பு, குறுகிய சுயநலன்களில் வேரூன்றிய முன்னேற்றம் குறித்த கருத்தாக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பரவலான ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்துகிறது. இதன் விளைவாக, பொதுவான மனிதகுலத்தின் இழப்பில் சிலரின் முன்னேற்றம் விளைகிறது,” என அவர் கூறினார்.
அப்படியானால், மற்றவர்களின் நலனுக்காகச் சிலரை சுரண்ட மறுக்கும் சமத்துவமான பொருளாதார அமைப்பை நோக்கிச் செல்வதே சவாலாகும். இது அனைத்து மக்களின் கண்ணியத்தை ஆதரித்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அமைப்பாகும்.
திருமதி ந்குன்சிமானாவின் கவலைகளை எதிரொலிக்கும் வகையில், இந்தியாவின் இந்தூரில் உள்ள தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கான பஹாய் இருக்கை குழுவின் மற்றோர் உறுப்பினரான அராஷ் ஃபாஸ்லி, பல சமூகங்களை நிர்வகித்து வரும் மேலாதிக்க பொருளாதார முன்னுதாரணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசினார். நூற்றாண்டுகளாக. இடைச்சார்புமை மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
BIC பிரதிநிதிகள் அல்போன்சின் செஃபு (மேல்-வலது, இடது) மற்றும் எலிசபெத் மோஷிரியன் (கீழ்-வலது) ஆகியோர் ஆணையத்தின் போது நடைபெற்ற ஐ.நா. சிவில் சமூக மன்றத்தின் காலை அமர்வில் பேசுகின்றனர்.
மனிதர்களை “பயன்பாட்டின்-அதிகப்பாடு, சுயநலம் கொண்ட நடிகர்கள், மற்றும் வரம்பற்ற பொருளாதார வளர்ச்சி மற்றும் வரம்பற்ற செல்வத்தின் நோக்கத்தை சமூகத்தின் மையமாகக் கருதும்” நிலவும் பொருளாதாரச் சிந்தனை, மதிப்புகளின் நெருக்கடிக்கு வழிவகுத்தது என டாக்டர். ஃபஸ்லி விளக்கினார். பொருளாதாரக் கருத்துகள் மற்ற எல்லா மதிப்புகளையும் இடமாற்றம் செய்துள்ளன. “மனித வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது,” என அவர் கூறினார். “சந்தை மனிதகுலத்தின் அனைத்து தேவைகள் மற்றும் அபிலாஷைகளின் மத்தியஸ்தராக மாறியுள்ளது.”
“மனிதனின் உன்னதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய மதிப்புகள் மற்றும் இயற்கை சூழலுடன் நிலையான உறவை வளர்க்கும் கொள்கைகள்” தேவை என டாக்டர் ஃபாஸ்லி மேலும் கூறினார். அனைத்து மக்களும் தங்கள் சமூகங்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கான திறனை அங்கீகரிக்கும் கொள்கைகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். அது மனிதநேயத்தின் ஒருமையை மையமாகக் கொண்டது மற்றும் செல்வம் மற்றும் வறுமையின் தீவிரத்தை நீக்குவதை ஊக்குவிக்கிறது.
இந்த விவாதங்களைப் பிரதிபலிக்கும் வகையில், எதிர்கால வேலைகளை மாற்றியமைக்க சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வளர்ந்து வரும் ஆவலின் முக்கியத்துவத்தை திருமதி ந்குன்ஸிமானா அடிக்கோளிடுகின்றார்.
“தொடர்புடைய தார்மீக மற்றும் ஆன்மீகக் கொள்கைகளை ஆராய்வதன் மூலம் பணி பற்றிய உரையாடல்களை செழுமைப்படுத்துவதன் மூலம், மக்களின் திறன்கள் மற்றும் வேலைவாய்ப்புக்கான திறன்களை வளர்ப்பது மட்டுமன்றி, சமூக நீதிக்கான மக்களின் உறுதிப்பாட்டை வளர்ப்பதன் அவசியத்தை ஆழமாக புரிந்து கொள்ள முடியும்” என அவர் கூறுகிறார். .”
BIC இன் நியூயார்க் அலுவலகம், “வேலைவாய்ப்பு மற்றும் அதற்கு அப்பால்: சமூகத்திற்கு பங்களிக்க அனைவரின் திறன்களையும் ஈர்த்தல்” என்னும் தலைப்பில் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது, இது ஐக்கிய நாடுகளின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 61-வது அமர்வில் வழங்கப்பட்டது.