கடவுள் சமய திருக்கரம் லெராய் ஆயோவாஸ்: அவர் ஆற்றிய சேவைகள்


லெராய் அயோவாஸ் 15 பி்ப்ரவரி 1896-இல் பிறந்து 22 ஜூலை 1965-இல் ஹைஃபா இஸ்ரேலில் இறைவனடி சேர்ந்தார்.

தமது 16-வயதில் பஹாய் சமயத்தை அறிந்துகொண்ட இவர், அப்துல்-பஹா ஐக்கிய அமெரிக்கா வந்த போது தமது தாய் தந்தையரையும் அவர் உரையாற்றவிருந்த மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். பிந்நாளில் வில்மெட் பஹாய் கோவிலை கட்டுவதற்கான விண்ணப்பத்தை எழுதுவதற்கு இவரது தந்தையாரே உதவினார். கோவில் கட்டப்படுவதற்கு முன் அந்த நிலத்தில் இவர் பஹாய் வகுப்புகளையும் நடத்தினார் சில வருடங்களுக்குப் பிறகு, தமது உயர் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு சிறிது பயிற்சிக்குப் ரயில்வே தொழில்துறையில் சேர்ந்து, முக்கியமாகத் தென் பசிஃபிக் ரயில்வேயில் சாதாரன வேலைக்கு சேர்ந்து அதி 40 ஆண்டுகாலம் சேவையாற்றி, கிழக்கு ஐக்கிய அமெரிக்காவில் அதன் நிர்வாகிப் பதவிக்கும் உயர்ந்தார். மனவுறுதியுடன் பொருந்திய படைப்பாற்றலுடைய பார்வையும் நடைமுறை உணர்வு கொண்டவராகவும் இருந்தார். சமயத்தின் விரிவாக்கத்திற்கான அவரது எதிர்ப்பார்ப்புகள் எல்லையற்றவையாக இருந்தன. பல உள்ளூர் ஆன்மீக சபைகள், ஸ்தாபனங்கள் ஆகியவற்றில் பல ஆண்டுகாலங்கள் பணிபுரிந்தார். ஸ்டான்ஃபர்ட் பல்கலைகழகத்தில் இவர் தமது இளங்களைப் படிப்பை தொடர்வதற்கு ஒரு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஆனால் லெராய் இவ்வாய்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஏனெனில், அவரது குடும்பம் மற்றும் பஹாய் பொறுப்புகள் ஏற்கனவே மிக அதிகமாக இருந்ததும் அதற்குள் அவருக்கு ஃபரூக் மற்றும் அனிதா என இரு மகள்கள் பிறந்ததும் காரணமாக இருந்தன. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, பாதுகாவலர் அவருடன் தொடர்புகொண்ட போது இந்த முடிவின் நல்விளைவு முழுமையாக நிரூபிக்கப்பட்டது: “இப்போது சமயத்திற்குத் தேவைப்படுவது உயர்ந்த கலாச்சாரம் மற்றும் அறிவாற்றல் கொண்டோர்களின் குழு அல்ல. ஆனால், பல அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் விசுவாசமான ஆதரவாளர்கள், தங்கள் சொந்த பலவீனங்கள் மற்றும் வரம்புகளை முற்றும் புறக்கணித்து, கடவுளின் அன்பினால் துடிக்கும் இதயங்களுடன், அவரது சமயத்தைப் பரப்புவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் தங்கள் அனைத்தையும் கைவிடுவோரே தேவைப்படுகின்றனர்.” (அவரது செயலாளர் மூலம், நவம்பர் 14, 1935)

வருடம் 1912-இல் ஐக்கிய அமெரிக்காவில் இவரது மகத்தான சேவைகள், அனுபவம் ஆகியவற்றின் காரணமாக ஷோகி எஃபெண்டி இவரை ஹஃபாவிற்கு வந்து சேவை செய்யும்படி அழைத்தார். பல காலம் இவர் புனித நிலத்தில் உதவி செயலாளராகப் பணிபுரிந்தபோது, அங்கு இவர் பல கார்மல் மலை திட்டங்களில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்துள்ளார். ஷோகி எஃபெண்டி கற்பனையாகக் கண்ட பாப் பெருமானார் நினவாலயத் திட்டத்திற்கு திரு சதர்லன்ட மேக்ஸ்வல் உருவம் கொடுத்தார். இந்தத் திட்டத்தை மேற்பார்வை செய்து நிறைவேற்றிக்கொடுத்தவர் இரு ஆயோவாஸ் ஆவார். அடுத்து கார்மல் மலைத் திட்டங்களில் ஒன்றான பழம்பொருள் காப்பக கட்டிடத்தின் கட்டுமானமும் இவரது மேற்பார்வையில்தான நடைபெற்று இரண்டே வருடங்களில் நிறைவுற்றது. இருப்பினும், இவ்வித சேவைகளுக்குச் சிகரமாக இருந்தது, பாஃஜி-யில் பஹாவுல்லா வாழ்ந்த மாளிகையைச் சுற்றியிருந்த நிலங்களை ஒப்பந்தமீறிகளின் கரங்களில் விடுவித்து அதை பாஹாய் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்ததாகும்:

லெராய் அயோவாஸ், வில்மட் கோவில் அலங்கார வளையங்களுடன்

லெராய் தனது அன்புக்குரிய பாதுகாவலருக்கு அவர் வாழ்ந்த காலத்தில் ஆற்றிய கடைசி சேவை பெருமதிப்புமிக்கது: அது “ஆறு தசாப்தங்களுக்குக் குறையாத நீண்ட காலத்திற்குப் பிறகு, பஹாய் உலகின் அதிப்புனித சன்னதியின் வெளிப்புற சரணாலயத்தின் இறுதி மற்றும் உறுதியான சுத்திகரிப்பு…” பஹாவுல்லாவின் இளைப்பாறல் தலம் மற்றும் பாஹ்ஜி மாளிகையைச் சுற்றிலும் ஒப்பந்தமீறிகளுக்குச் சொந்தமான மற்றும் கட்டுப்பாட்டில் இருந்த முழுச் சொத்தையும் இஸ்ரேல் அரசு கையகப்படுத்துவதற்கான “நீண்ட காலச் செயல்முறையின்” உச்சக்கட்டம் இதுவாகும். (ஷோகி எஃபென்டி, செப்டம்பர் 21, 1957.) இந்தப் பணியை லெராய்யிடம் ஒப்படைத்ததில், கார்டியன் அவரிடம், அவர் செய்த மற்ற அனைத்தும், பாப் பெருமானார் நினைவாலயத்திற்காக அவர் செய்த பணி கூட வெள்ளியைப் போன்றது, இந்த வேலையை நிறைவேற்றியதோ தங்கம் போன்றது என கூறினார். 3 ஜூன் 1957-இல், பாதுகாவலர் அனுப்பிய தந்தியின் மூலம் பெரும் மகிழ்ச்சி பஹாய் உலகம் முழுவதும் பரவியது: “ஆழ்ந்த மகிழ்ச்சி, குதூகலம் மற்றும் நன்றி உணர்வுகளுடன், அறிவிக்கவும்… சமிக்ஞைமிகு, சகாப்தத்தை உருவாக்கும் வெற்றி, இழிவான அவரது ஒப்பந்த மீறிகள் குழுவை வென்றது. …” அவர்கள், கையகப்படுத்தல் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, தோற்றுப்போனார்கள். 6 செப்டம்பர் 1957-க்குள், அவர்களும் அவர்களது உடமைகளும் சன்னதியின் வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தன.

அப்துல்-பஹா அமெரிக்காவுக்கு விஜயம் செய்தபோது லெராய் ஆயோவாஸுக்கு வயது 16. அவ்வேளை அவர் மாஸ்டரோடு பல இனிய அனுபவங்களைப் பெற்றிருந்தார். திரு ஆயோவாஸின் மகள் தன் தந்தையாரைப் பற்றி ஓர் அருமையான புத்தகம் எழுதியுள்ளார். பின்வருவது அந்த நூலில் காணப்படும் ஒரு நிகழ்வாகும்.

Leroy Ioas - Bahaipedia, an encyclopedia about the Bahá'í Faith
லெராய் ஐயொவாஸ்

“பிற்காலத்தில் லெராய் அப்துல்-பஹாவின் பிரசன்னத்தை வர்ணிக்க முயலும் போது அவர் பின்வருமாறு கூறுவார்: ‘நீங்கள் அப்துல்-பஹாவின் படங்கள் பலவற்றைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், அவை எல்லா வேளைகளிலும் அவரிலிருந்து வெளிப்படும் துடிப்பான ஆவியை வெளிப்படுத்துவதில்லை. காலையில் ஆரம்பித்து நாள் முழுவதும் அவரைக் காண்பதற்கு மக்கள் வந்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் சுற்றி நின்றுகொண்டு கேள்விகள் கேட்பார்கள், பிறகு ஒரு பெரிய கூட்டம் அவரது வரவேற்பறையில் கூடிவிடும். அவர் அக்கூட்டத்தினரிடம் சமயத்தைப் பற்றி உரையாற்றுவார். இக்கூட்டம் சென்ற பிறகு வேறு ஒரு கூட்டம் அங்கு கூடிவிடும். அப்துல்-பஹாவிடம் கேட்பதற்கு அவர்களுக்கு நிறைய கேள்விகள் இருந்துகொண்டே இருக்கும். அவர்களுக்குத் தங்களின் அக்கேள்விகள் எல்லையற்ற முக்கியத்துவம் மிக்கவையாகும். அக்கேள்விகளுக்கான பதில்கள் அப்துல்-பஹாவிடமிருந்து மின்னல் வேகத்தில் வரும்-ஒரு வினாடியில் அவர் யாராவது ஒருவரின் தலைவிதியை நிர்ணயிப்பார். அது அவருள் எல்லா தருணங்களிலும் ஒவ்வொரு வினாடியும் இயங்கும் ஆவியின் ஆற்றலை வெளிப்படுத்துவதாக இருந்தது.'”

“லெராய் மனதில் ஒரு நிலையான தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வு மாஸ்டரின் இத்தகைய ஆற்றலைச் சித்தரித்தது. ஓர் அந்தி வேளையில் அப்துல்-பஹா சிக்காகோ மேஸன் கோவிலில் உரை நிகழ்த்திய போது அது நடந்தது. அங்கு ஓராயிரம் பேர்களுக்கு மேல் கூடியிருந்தனர். ஆயோவாஸ் குடும்பத்தினரும் டீலி குடும்பத்தினரும் அணுக்கமான உறவு கொண்டிருந்தனர். திரு போல் டீலியின் மூலமாகவே ஆயோவாஸ் குடும்பத்தினர் பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்டிருந்தனர். ஆயோவாஸ் குடும்பத்தினர் திருமதி டீலியை அக்கூட்டத்திற்கு அழைத்து வந்திருந்தனர், ஏனெனில் திருமதி டீலி சிறுகச் சிறுக தமது பார்வையை இழந்துகொண்டிருந்தார், அதன் விளைவாக அவர் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருந்தார்.”

அப்துல்-பஹாவின் உரை முடிந்ததும் அவரை நூற்றுக்கணக்கானோர் சூழ்ந்தகொண்டனர். அப்போத திருமதி டீலி தமது மகனிடம் நீ அப்துல்-பஹாவிடம் சென்று ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவியோடு தாம் அவரோடு பேசவிரும்புவதாக கூறுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் மகனோ, அப்துல்-பஹாவைச் சுற்றி அத்தனை பேர் கூடியிருக்கும் போது அவ்வாறு செய்வது இயலாது என கூறியது லெராயின் காதில் விழுந்தது. ஆனால் திருமதி டீலியின் வற்புறுத்தலின் பேரில் அவர் மகன் அப்துல்-பஹாவிடம் சென்றார். மொழிபெயர்ப்பாளர் திருமதி டீலியிடம் அப்துல்-பஹா நடந்து செல்லக்கூடிய வழியின் அருகே அமர்ந்திருக்குமாறு கூறினார். அப்துல்-பஹா நடந்து வந்த போது அவர் திருமதி டீலியை நோக்கி அன்புடன் நலம் விசாரித்தார். அப்போது திருமதி டீலி தமது கைகளால் அப்துல்-பஹாவின் கரங்களைப் பற்றிக்கொண்டு, தயவு செய்து என் நெற்றியின் மீது உங்கள் கரத்தை வையுங்கள், அதன் பிறகு என்னால் நிச்சயமாக பார்க்கமுடியும் என கூறினார். அதற்கு அப்துல்-பஹா ‘மகளே, ஆம், உன்னால் நிச்சயமாக பார்க்க முடியும். ஆனால், உனக்கு எது வேண்டுமென நீ தீர்மானிக்க வேண்டுமென கூறினார். உன் ஆன்மீகப் பார்வை, பௌதீகப் பார்வை இரண்டிலும் உனக்கு எது வேண்டுமென நீ தீர்மானிக்க வேண்டும், அவற்றில் உனக்கு எது வேண்டும்?’ என்றார். அதற்கு திருமதி டீலி, ‘அப்துல்-பஹா, இதில் நான் எதைத் தேர்வுச் செய்வது, இது தேர்வே அல்லவே!’ என உணர்ச்சி பொங்க கூறினார். ‘நான் ஓராயிரம் வருடம் குருடியாக இருப்பேனே ஒழிய என ஆன்மீகப் பார்வையை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்!’ என்றார். அதற்கு அப்துல்-பஹா அவருடைய தோள்களைத் தொட்டு ‘நன்கு கூறினாய் மகளே நன்கு கூறினாய்,’ என கூறி அவ்விடம் விட்டு நகர்ந்தார். அவர் அருகே ஒரு பெஞ்சின் மீது அமர்ந்திருந்த லெராய், திருமதி டீலி தமது விதியை அந்த ஒரு வினாடியில் தீர்மானித்ததை மனதில் ஏற்பட்ட ஒரு சிலிர்ப்போடு உணர்ந்தார். திருமதி டீலி பற்றுறுதியோடு இருந்தார்.

(“லெராய் ஆயோவாஸ், கடவுள் சமயத் திருக்கரம்,” ஆக்கம் அனிதா ஆயோவாஸ் சேப்மன், பக். 25-26)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: