
22 ஏப்ரல் 2023

உலக நீதிமன்றத்தின் இரண்டு உறுப்பினர்கள் பஹாய் உலக மையத்தில் பல வருட சேவைக்குப் பிறகு வெளியேறுகின்றனர்.
பஹாய் சமயத்தின் அனைத்துலக நிர்வாகக் குழுவில் 13 ஆண்டுகள் பணியாற்றிய திரு. ஸ்டீபன் பிர்க்லாண்ட், 71, மற்றும் திரு. ஸ்டீபன் ஹால், 69, ஆகியோர் கடந்த ஆண்டு தங்கள் பதவியை ராஜினாமா செய்ய அனுமதி கோரினர்.
நீதிமன்றம் அவர்களின் கோரிக்கையை ஏற்று நவம்பர் 2022-இல் திரு. பிர்க்லாண்ட் மற்றும் திரு. ஹால் இந்த மாத இறுதியில் நடைபெறும் 13-வது அனைத்துலக பஹாய் பேராளர் மாநாட்டிற்குப் பிறகு வெளியேறுவதாக அறிவித்தது.
மாநாடு 2023 ஏப்ரல் 29 முதல் மே 2 வரை ஹைஃபாவில் நடைபெறும். உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 1,400 பேராளர்கள் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரு பிர்க்லேண்ட் அமெரிக்காவைச் சேர்ந்தவர்; திரு ஹால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். இரு உறுப்பினர்களும் முதன்முதலில் 2010-இல் உலக நீதிமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1655/