
25 ஏப்ரல் 2023
பஹாய் உலக மையம் – அனைத்துலக பஹாய் மாநாட்டில் பங்கேற்க 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 1,400 பிரதிநிதிகள் ஹைஃபாவிற்கு வந்துள்ளனர், இது உலகளாவிய பஹாய் சமூகத்தின் நிர்வாக மற்றும் ஆன்மீக மையத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இணையற்ற கூட்டமாகும். .
அனைத்துலக மாநாட்டின் போது, மனிதகுலத்தின் குறுக்குப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தப் பேராளர்கள், கலந்தாலோசனை அமர்வுகளில் பங்கேற்று, உலக நீதிமன்றமான பஹாய் சமயத்தின் அனைத்துலக ஆளும் குழுவைத் தேர்ந்தெடுப்பார்கள்.
உலகளாவிய பஹாய் சமூகம் எவ்வாறு அமைதியை நோக்கிய மனிதகுலத்தின் நகர்வுக்குப் பங்களிக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தலாம் என்பதை கலந்தாலோசனைகள் ஆராயும். இந்த முயற்சிகள் சமூக நடவடிக்கை மற்றும் சமூகச் சொல்லாடல்களில் பங்கேற்பது உட்பட சமூக நிர்மாணிப்புத் திறனை வளர்க்கும் கல்வித் திட்டங்களை உள்ளடக்கியிருக்கும்.
அனைத்துலக மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் தங்கள் நாடுகளின் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படும் தேசிய பஹாய் ஆளும் குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். தேசிய ஆன்மீக சபைகள் என குறிப்பிடப்படும் இந்த ஸ்தாபனங்கள், அந்தந்த அதிகார வரம்புகளுக்குள் பஹாய் சமூகத்தின் செயல்பாடுகளைத் தூண்டுகின்றன, வழிகாட்டுகின்றன மற்றும் ஆதரிக்கின்றன.
மாநாடு ஏப்ரல் 29 முதல் மே 2 வரை நடைபெறுகிறது. தொடக்க நாளில், ஐந்தாண்டு காலத்திற்கு உலக நீதிமன்றத்தின் ஒன்பது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க பேராளர்கள் ஒன்றுகூடுவர்.
பிரதிநிதிகளின் வருகை மற்றும் ஹைஃபா மற்றும் அக்காநகரிலுள்ள புனித சன்னதிகளுக்கு அவர்கள் சென்றதைப் பற்றிய காட்சிகளுக்கு news.bahai.org ஐப் பார்வையிடவும். இந்த வருகைகள் பேராளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் ஆன்மீக ரீதியில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள அனுமதிக்கின்றன.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1656/































































