
28 ஏப்ரல் 2023
பஹாய் உலக மையம் – 13-வது அனைத்துலக பஹாய் மாநாடு நெருங்குகையில், உலகம் முழுவதிலுமிருந்து வரும் பேராளர்கள் பஹாய் புனித இடங்களின் ஆன்மீக சூழ்நிலைக்குள் தங்களை மூழ்கடித்து வருகின்றனர். பஹாவுல்லா மற்றும் அப்துல்-பஹாவின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடைய தளங்களுக்கான இந்த வருகைகள், பேராளர்களுக்கு, உலக நீதிமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதெனும் அவர்களின் புனிதமான கடமைக்குத் தயாராகும் விசேஷ வாய்ப்பை வழங்குகின்றன.
(இச்செய்தியில் சுமார் 100 படங்கள் உள்ளன. அனைத்தையும் இங்கு இடுவது சிரமமாகும். படங்களைக் காண தயவு செய்து இதே செய்தியின் ஆங்கில பதிப்பை https://news.bahai.org/story/1657/-இல் காணவும்)
பின்வரும் படங்கள், பஹாய் புனித ஸ்தலங்களுக்குச் செல்லும் ‘அக்கா/ஹைஃபா பகுதியின் ஊடாகப் பயணிக்கும் போது, பிரதிநிதிகள் பகிர்ந்துகொண்ட உணர்ச்சிபூர்வமான அனுபவங்களைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகின்றன.
பஹாவுல்லாவின் சிறை அறை

பஹாவுல்லாவும் அவரது குடும்பத்தினரும் 1868 முதல் 1870 வரை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அக்காநகரில் உள்ள இந்தக் கோட்டையின் வடமேற்குப் பகுதியில் சிறையில் அடைக்கப்பட்டனர். இங்குதான் பஹாவுல்லா மனிதகுல ஒருமைப்பாட்டின் அடிப்படையில் ஒரு நியாயமான உலகளாவிய நாகரீகத்தை உருவாக்குதல் என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க படைப்புகளை வெளிப்படுத்தினார்: .
(கூடுதல் படங்களைக்கான https://news.bahai.org/story/1657/செல்லவும்)
அப்புட் இல்லம்

நாடுகடத்தப்பட்டவர்களாகவும், வீட்டுக் காவலில் இருந்தவர்களாகவும், பஹாவுல்லாவும் அவரது குடும்பத்தினரும் 1871-இல் இந்தக் கட்டிடத்திற்கு வந்து சில காலம் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்தனர். 1873-ஆம் ஆண்டில், பஹாவுல்லா தமது புனித நூலான கித்தாப்-இ-அக்தாஸை இந்தப் புனித தளத்தில் வெளிப்படுத்தினார்.
(கூடுதல் படங்களைக்கான https://news.bahai.org/story/1657/ செல்லவும்)
மஸ்ரா’யி மாளிகை

ஜூன் 1877-இன் தொடக்கத்தில், அக்காநகரின் சுவர்களுக்கிடையில் ஒன்பது வருடகால சிறைவாசத்திற்குப் பிறகு, ‘, பஹாவுல்லா’ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மஸ்ராயில் குடியேறினர், அங்கு அவர் வருகையாளர்களைச் சந்தித்தார் மற்றும் பல நிருபங்களை எழுதினார்.
(கூடுதல் படங்களைக்கான https://news.bahai.org/story/1657/ செல்லவும்)
அப்துல்-பஹாவின் இல்லம்

‘அப்துல்-பஹா’ தமது வாழ்வின் கடைசி ஆண்டுகளில் வசித்த இல்லம் இதுவாகும். 28 நவம்பர் 1921 அதிகாலையில் அவர் காலமானார். அவர் மறைந்த மறுநாள் ‘அப்துல்-பஹாவின் இறுதிச் சடங்கில் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். .
(கூடுதல் படங்களைக்கான https://news.bahai.org/story/1657/ செல்லவும்)
அப்துல்-பஹாவின் சன்னதி

‘அப்துல்-பஹாவின் எதிர்கால நினைவால கட்டுமானப் பகுதியைப் பார்வையிட பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. 2019-ஆம் ஆண்டில், அக்காநகரில் உள்ள ரித்வான் தோட்டத்திற்கு அருகில் உள்ள இந்தத் தளத்தில் பணிகள் துவங்கின.
(கூடுதல் படங்களைக்கான https://news.bahai.org/story/1657/ செல்லவும்)
அனைத்துலக ஆவணக் காப்பகம்

சர்வதேச ஆவணக் காப்பகம், பஹாய் சமயத்தின் மைய நாயகர்கள் மற்றும் ஆரம்ப ஆண்டுகளுடன் தொடர்புடைய வரலாறு சார்ந்த பொருட்கள் மற்றும் விலைமதிப்பற்ற நினைவுச்சின்னங்களைக் கொண்டுள்ளது.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1657/