

28 மே 2023
ரோம் – சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதில் ஊடகங்களின் பங்கு பற்றிய ஒரு கலந்துரையாடல் அரங்கம், தங்கள் சமூகத்தின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ரோம் பத்திரிகையாளர்களை ஈர்த்தது.
இத்தாலியின் பஹாய்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தக் கூட்டம், பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் விழுமியங்களைக் கொண்ட மக்களுக்குப் பொதுவான நோக்கம் மற்றும் கூட்டு அடையாளத்தை உருவாக்க, உள்ளடங்கலான விவரிப்புகள் எவ்வாறு உதவும் என்பதை ஆராய, சுமார் 60 வல்லுநர்களை ஒன்றிணைத்தது.
இத்தாலி பஹாய்களின் பிரதிநிதி ஒருவர் சமூக முன்னேற்றத்திற்கான செய்திகள் மற்றும் ஊடகங்களின் சாத்தியக்கூறுகள் பற்றிய அப்துல்-பஹாவின் வார்த்தைகளை முன்னிலைப்படுத்தி விவாதத்தைத் தொடங்கினார்: “உயர்ந்த எண்ணங்களை வெளியிடுவது வாழ்க்கைத் தமனிகளில் இயங்கும் சக்தியாகும்; அதுவே உலகின் ஆன்மா.”
இந்த நிகழ்வில் பத்திரிகை சுதந்திரத்தை ஊக்குவிக்கும் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடக ஆய்வு மையம் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் உள்ளடங்கலான மொழிவுகளை ஊக்குவிப்பதில் அவர்களின் பங்கைப் பற்றி சிந்திக்க பங்கேற்பாளர்கள் அழைக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டுகளில் இத்தாலிக்குக் குடியேற்றமானது, புலம்பெயர்ந்தோர் பற்றிய மக்களின் கருத்துகளை வடிவமைப்பதில் ஊடகங்களின் பங்கு பற்றிய கேள்விகளை எழுப்புவது மற்றும் சொந்தம் என்னும் கருத்து பற்றிய நீண்டகால பார்வைகளை சவால் செய்யும் நேரத்தில் இந்த விவாதம் வருகிறது.
இப்பிரச்சினை இத்தாலியில் உள்ள வெளிவிவகார அலுவலகத்தால் விவாதத்திற்கான ஒரு ஏட்டில் உச்சரிக்கப்பட்டு, அவ்வேடு கூட்டத்தில் பங்கேற்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது, இது புவியியல் அல்லது கலாச்சார வரம்புகளுக்கு அப்பால் குடிமைப் பங்கேற்பைப் பற்றிய பரந்த புரிதலைக் கோருகிறது, அவர்கள் பிறப்பின் மூலத்தைக் கருதாமல் பன்முகத்தன்மையை கொண்டாடி, அவர்களின் பங்களிப்பு அரவணைக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
“நாடு மாற்றத்திற்கு உள்ளாகும்போது, ஓர் இடத்திற்கு உரியவர் என்பது தனிப்பட்ட முன்முயற்சியின் உணர்வு, ஒருவருக்கொருவர் அக்கறை, பங்களிப்பு மற்றும் ஆதரவளிக்கும் விருப்பத்துடன் வருகிறது” என அந்த அறிக்கை கூறுகிறது. “மாற்றத்தின் பலக்கிய தன்மையின் (complexity)) கதையைச் சொல்லும் மொழியைப் பயன்படுத்துவதற்கு ஊடகங்கள் பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளன மற்றும் இத்தாலியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் மக்களை முன்னணியாளர்கள் என்னும் கருத்தைப் பேணுகின்றன.”

பொது சொற்பொழிவை வடிவமைப்பதில் ஊடகங்களின் பங்கை பங்கேற்பாளர்கள் ஆய்வு செய்யும் போது, மொழி குறித்த கருப்பொருள் கலந்துரையாடல்களில் முக்கிய இடம் வகித்தது. ஊடக மொழிவுகள் எவ்வாறு (இணைக்கும்) பாலங்களை உருவாக்கலாம் மற்றும் மக்களை ஒன்றிணைக்கலாம் என்பது பற்றி பங்கேற்பாளர்கள் விவாதித்தனர்.
“பாலங்களை உருவாக்கும்” மொழியைப் பயன்படுத்துவது, வெவ்வேறு நம்பிக்கைகள் மற்றும் மதிப்புகளைக் கொண்ட மக்களிடையே உள்ள தடைகளை உடைத்து, புரிதல், பச்சாதாபம் மற்றும் உள்ளடங்கல்நிலையை (inclusiveness) மேம்படுத்துவதைக் குறிக்கிறது என பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டனர். மாறாக, “சுவர்களை உருவாக்கும்” மொழியானது பிளவுகளை அதிகரிக்கலாம், ஒரே மாதிரியான கருத்துக்களை வலுப்படுத்தலாம் அல்லது சில குழுக்களை ஓரங்கட்டலாம்.
இத்தாலிய மக்கள்தொகையை அதிகரிக்கும் முறையில் வகைப்படுத்தும் பல்வேறு பின்னணிகளின் வெளிச்சத்தில், ஊடகங்கள் பரந்த அளவிலான முன்னோக்குகளைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியம் குறிப்பாக முக்கியமானது என பங்கேற்பாளர்கள் எடுத்துரைத்தனர்.
IDOS ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மரியா பாவோலா நேன்னி, புலம்பெயர்ந்த பின்னணியைக் கொண்ட பத்திரிகையாளர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், அவர்கள் “தப்பெண்ணங்களுக்கு சவால் விடுக்கவும் மொழிவை வளப்படுத்தவும் முடியும்.”

அவர் மேலும் கூறியதாவது: “புலம்பெயர்ந்த பின்னணியைக் கொண்ட பத்திரிகையாளர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பது நமது நாட்டின் புதிய உறுப்பினர்களைப் பற்றிய நமது புரிதலையும் பிரதிநிதித்துவத்தையும் மேம்படுத்துகிறது. ஒரு கூட்டு அடையாளத்தைப் பேணுவது-நமது நாட்டில் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான மிக முக்கிய படியாகும்.
“பன்முக கலாச்சார ஈடுபாட்டிற்கும் திறந்த மற்றும் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்ட மக்களின் முன்னோக்குகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கு திறந்தும் இருக்கும் ஒரு புதிய சொல்லாடலை உருவாக்கும் குறிக்கோளுடன் இந்த உரையாடலை நாம் முடித்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்.” இதற்கு உள்ளூர் செய்திகளின் பங்கு மற்றும் நாட்டின் ஊடக வெளியீட்டில் அடிக்கடி தொலைந்து போகும் பல்வேறு குரல்கள் மற்றும் கதைகளைப் பெருக்குவதற்கான அதன் திறனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பங்கேற்பாளர்கள் எடுத்துரைத்தனர்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1672/