
18 மே 2023
பஹாய் உலக மையம் – உலக நீதிமன்றம் மூன்று புதிய பஹாய் வழிபாட்டு இல்லங்களை ஸ்தாபிப்பதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது—காஞ்சன்பூர், நேபாளம் மற்றும் ஜாம்பியாவின் ம்வினிலுங்கா ஆகிய இடங்களில் உள்ள உள்ளூர் கோயில்கள்; கனடாவில் ஒரு தேசிய ஆலயம்.
இந்தச் செய்தி 2012-இல் நீதிமன்றம் முதல் தேசிய மற்றும் உள்ளூர் வழிபாட்டு இல்லங்கள் ஸ்தாபிக்கப்படுவதை அறிவித்த வரலாற்றுத் தருணத்தைப் பின்பற்றி வருகின்றது.

வழிபாட்டு இல்லம் — பஹாய் திருவாக்குகளில் ஒரு மாஷ்ரிகுல்-அஸ்கார் என குறிப்பிடப்படுகிறது, அதாவது “கடவுள் வாழ்த்தின் உதயபீடம்” — சமூகத்தின் இதயத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. அனைவருக்கும் திறந்திருக்கும், இது பிரார்த்தனை மற்றும் தியானமும் சமூகத்திற்கான சேவையை ஊக்குவிக்கும் இடம்.
வழிபாட்டு இல்லங்கள் ஸ்தாபிக்கப்படுவது உலகளாவிய பஹாய் சமூகங்களின் வளர்ச்சியுடன் பின்னிப்பிணைந்துள்ளது. ஒரு வட்டாரத்தில் வளர்ந்து வரும் பக்தி மனப்பான்மையனது சமூக நல்லிணக்கத்தைப் பேணும் பிரார்த்தனைக் கூட்டங்களிலும், மனிதகுலத்திற்குச் சேவை செய்வதற்கான திறனை வளர்ப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட கல்வித் திட்டங்களிலும் வெளிப்படுகிறது. லௌகீக மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் முயற்சிகள் அதிகரித்து வரும் சமூகங்களில் வழிபாடு மற்றும் சேவையின் இந்த பரஸ்பர தொடர்பு குறிப்பாக வெளிப்படுகிறது.

இந்த முயற்சிகள் தழைத்தோங்கும் உள்ளூர்களில், ஒற்றுமைக்கான அதிக மதிப்புணர்வு பேணப்படுகிறது. வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை ஆராய்வதன் மூலம் எல்லாப் பின்னணியிலிருந்தும் மக்கள் பகிரப்பட்ட நோக்கத்தைக் காண்கிறார்கள். அந்நியர்கள் நண்பர்களாக மாறுகிறார்கள், நம்பிக்கையான எதிர்காலத்தைப் பற்றிய அவர்களின் தொலைநோக்கு, ஒருவர் மற்றவரைப் பற்றி மேலும் சிந்திக்கத் தூண்டுகிறது, அதே நேரத்தில் அவர்களின் சமூகத்தின் சமுதாய மற்றும் பொருளாதாரத் தேவைகள் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படும்.
தங்கள் சமுதாயத்திற்குச் சேவை செய்வதற்கான இந்த சமூகத்தின் திறனாற்றல் விரிவடைவதால், நாளடைவில் ஒரு பஹாய் வழிபாட்டு இல்லம் உருவாகும் வாய்ப்பு ஏற்படக்கூடும். இந்தப் புனித கட்டிடங்கள் அவற்றைச் சுற்றியுள்ள மக்களுக்குச் சேவை செய்ய சமுதாய, மனிதாபிமான மற்றும் கல்வி நிறுவனங்களைப் பேணுகின்றன.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1669/