
23 மே 2023
பஹாய் உலக மையம் – பஹாய் உலக மையத்தில் ஆலோசகர்களின் கண்ட வாரியங்கள் மாநாட்டின் போது, இளைஞர்கள் மற்றும் சமூக மாற்றம், பெண்களின் முன்னேற்றம் மற்றும் பஹாய் தார்மீக மற்றும் ஆன்மீக கல்வி முயற்சிகள் குறித்த தொடர்ச்சியான ஒலிபரப்புகளுக்காக (podcasts) பஹாய் உலக செய்தி சேவையால் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களில் பல ஆலோசகர்கள் இணைந்தனர். .
இந்த முதல் பகுதியில், ஸாம்பியாவைச் சேர்ந்த ஆலோசகர்களான முசோண்டா கபுசா-லின்செல், கிரீஸைச் சேர்ந்த ஷிரின் யூசுபியன் மானியன், இத்தாலியைச் சேர்ந்த ரஃபேல்லா கபோஸி, சமோவாவைச் சேர்ந்த பாப் அலே, அஸர்பைஜானைச் சேர்ந்த குல்னாரா எய்வசோவா மற்றும் கனடாவில் இருந்து அயாஃபர் அயாஃபர் ஆகியோரிடமிருந்து எவ்வாறு உலகம் முழுவதும் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் சமுதாய தன்மைமாற்றத்திற்குப் பங்களிக்கின்றனர் என்பது குறித்த நுண்ணறிவுகளை நாம் செவிமடுப்போம்.
கலந்துரையாடலில், திருமதி யூசுபியன் மானியன், ஒவ்வொரு மனிதனின் உள்ளார்ந்த உன்னதத்தை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இளைஞர்கள் குறித்த ஓர் அழுத்தமூட்டும் பார்வையுடன் ஆரம்பிக்கின்றார். இளைஞர்களை ஓர் எதிர்மறையான வெளிச்சத்தில் காட்டி, அவர்களை கலகக்காரர்கள் அல்லது அக்கறையற்றவர்கள் என முத்திரை குத்தி, நடைமுறையில் இருக்கும் கருத்துகளுக்கு அவர் சவால் விடுகிறார். அவர் கூறுகிறார்: “இருப்பினும் நாம் அனைவரும் பார்த்திருப்போம்… [இளைஞர்களுக்கு] அறிவு மற்றும் கற்றல் மீதான இந்தத் தாகம் எப்படி இருக்கிறது என்பதை. அவர்கள் ஒரு சிறந்த உலகத்திற்கு பங்களிக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கும் நீதியின் மீது ஆர்வம் உள்ளது. இளைஞர்கள் தங்கள் சுஅண்டைப்புறங்கள் மற்றும் கிராமங்களின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் வாய்ப்பை வழங்கும்போது, அதன் விளைவுகள் வியக்க வைக்கின்றன என அவர் மேலும் கூறுகிறார்.
ஆலோசகர்கள் பஹாய் சமூகத்தில் கற்றலை ஊக்குவிப்பதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட பஹாய் ஆன்மீகக் சபைகளுக்கு ஆதரவளிக்கவும், சமூக வாழ்க்கையின் துடிப்பான வடிவத்தை மேம்படுத்தவும் பணியாற்றுகின்றனர். ஆலோசகர்கள் அமைப்பின் மூலம், உலகின் மிகத் தொலைதூர இடங்களிலிருந்தும் கற்றுக்கொண்ட பாடங்கள், பஹாவுல்லாவின் போதனைகளைத் தங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு அறிவூட்டவும், வளப்படுத்தவும் முடியும்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1670/