
26 மே 2023
நியூயார்க்—மே 25 அன்று ஏமனின் சானாவில் பஹாய்களின் அமைதியான கூட்டத்தின் மீது ஹௌத்தி ஆயுததாரிகள் வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஐந்து பெண்கள் உட்பட குறைந்தது 17 பேரைக் கைது செய்து, வலுக்கட்டாயமாக அவர்களைக் காணடித்துள்ளனர். அந்த நாட்டில் கடுமையாக துன்புறுத்தப்பட்ட மத சமூகத்திற்கு ஏற்பட்ட சமீபத்திய அடியில் இருந்து ஏமன் பஹாய்களை இந்தத் தாக்குதல் தடுமாறச்செய்துள்ளது. பஹாய் சர்வதேச சமூகம் (BIC) தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுக்கிறது.
சமீபத்திய தாக்குதலின் வீடியோ (இணைப்பு வெளிப்புறமானது) ஸூம் மூலம் பஹாய்கள் கூட்டத்தில் சேர்ந்தனர்.
“அரபு மண்டலம் முழுவதும், காலாவதியான சமூக வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அமைதியான சகவாழ்வை மேம்படுத்தி, எதிர்காலத்தை நோக்கிய அரசாங்கங்கள் சமாதானத்தை நோக்கிச் செயல்படுவதை நாங்கள் காண்கிறோம்” என ஐக்கிய நாடுகள் சபைக்கான BIC-யின் முதன்மைப் பிரதிநிதி பானி டுகால் கூறினார். “ஆனால் சனாவில் நடைமுறையில் உள்ள ஹௌத்தி அதிகாரிகள் எதிர் திசையில் செல்கிறார்கள், மத சிறுபான்மையினரை துன்புறுத்துவதை இரட்டிப்பாக்கி, அமைதியான மற்றும் நிராயுதபாணியான பொதுமக்களுக்கு எதிராக வெட்கக்கேடான ஆயுதமேந்திய தாக்குதல்களை நடத்துகிறார்கள். ஹௌத்திகள் பஹாய்கள் மற்றும் பலரின் மனித உரிமைகளை மீண்டும் மீண்டும் மீறியுள்ளனர், அது நிறுத்தப்பட வேண்டும்.
சமூகத்தின் தேசிய ஆளும் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக பஹாய்கள் குழு ஒன்று ஒரு தனியார் இல்லத்தில் கூடியிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையானது மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளின் கீழ், மத மற்றும் சமூக விவகாரங்களை ஒன்றுகூடி நடத்துவதற்கான உரிமையை தெளிவாக மீறுவதாகும்.
பஹாய் சயமத்தில் மதகுருக்கள் இல்லை மற்றும் அவர்களின் சமூகங்களின் ஆன்மீக மற்றும் லௌகீக தேவைகளுக்குப் பணியாற்றிட ஆண்டுதோறும் சபைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
ஏமனில் உள்ள பஹாய்கள் பல ஆண்டுகளாகக் கைதுகள், சிறைவாசங்கள், விசாரணைகள், சித்திரவதைகள் மற்றும் பஹாய்களுக்குச் சொந்தமான சொத்துக்களைக் கைப்பற்றிய ஹௌத்திகளின் கைகளில் வன்முறைக்கான பொதுத் தூண்டுதல்களை அனுபவித்துள்ளனர். பல ஏமன் பஹாய்கள் தங்கள் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். 24 பஹாய்களுக்கு எதிரான முந்தைய வழக்கை அரசாங்கம் இன்னும் தள்ளுபடி செய்யவில்லை.
“ஏமனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும்போதும், ஹௌத்தி அதிகாரிகள் தங்கள் சொந்த மக்களுக்கு எதிராக வன்முறையான துன்புறுத்தல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதை நாங்கள் காண்கிறோம்” என திருமதி டுகால் கூறினார். “இந்த வன்முறை, நியாயப்படுத்த முடியாத தாக்குதலில் கைது செய்யப்பட்ட 17 அல்லது அதற்கு மேற்பட்ட அப்பாவி பஹாய்களின் விடுதலையில் தொடங்கி, அனைத்து ஏமன் குடிமக்களின் மனித உரிமைகளையும் மதிக்குமாறு ஹௌத்திகளை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகம் இப்போது அதன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும். ஏமன் பஹாய்கள் தங்கள் நாட்டிற்குச் சேவை செய்ய விரும்புகிறார்கள், அதன் தற்போதைய சவால்களை சமாளிக்க உதவுகிறார்கள், மேலும் அதன் அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கு வேலை செய்ய விரும்புகிறார்கள். இந்த நல்ல தருணத்தில், ஹௌத்தி அதிகாரிகள் இந்த வெட்கக்கேடான வழியில் செயல்படுவது தயரமூட்டுவதாக இருக்கின்றது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1671/