“நாம் அனைவரும் ஒரே குடும்பம்”: மதத் தலைவர்கள் அமைதிக்கான ஓர் அடித்தலமாக தார்மீகக் கல்வியை முன்னிலைப்படுத்துகின்றனர்


23 மே 2022

ஹைஃபா, இஸ்ரேல் – இஸ்ரேலில் உள்ள மதத் தலைவர்கள் மன்றத்தின் 12-வது ஆண்டு மாநாடு சமீபத்தில் பஹாய் உலக மையத்தில் நடத்தப்பட்டது, இதில் பல்வேறு சமய சமூகங்களின் தலைவர்கள், உள்துறை அமைச்சர், ஹைஃபா நகர தலைவர் மற்ற அரசு அதிகாரிகள், மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட சுமார் 115 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சமூக நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தார்மீகக் கொள்கைகளைப் பேணுதல் மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடும் திறனை வளர்ப்பதில் கல்வியின் முக்கியப் பங்கை இக்கூட்டத்தில் நடந்த விவாதங்கள் எடுத்துக்காட்டின.

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், ஒரு வீடியோ செய்தியின் வழி கூட்டத்தில் உரையாற்றினார், மதங்களுக்கிடையில் பகிரப்பட்ட விழுமியங்களை முன்னிலைப்படுத்தி, வேற்றுமையில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “ஒற்றுமை என்பது சீர்மை அல்ல, அது நமக்கு இடையே உள்ள வேறுபாடுகளை மங்கச் செய்வது என்பதல்ல, மாறாக, பாரம்பரிய மற்றும் கலாச்சார வேறுபாடுகள் தான் நம்மை மிகவும் சிறப்புறச் செய்கின்றன.”

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் வீடியோ செய்தியில் கூட்டத்தில் உரையாற்றினார், மதங்களுக்கிடையில் பகிரப்பட்ட விழுமியங்களை முன்னிலைப்படுத்தினார் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

ஹைஃபாவில் உள்ள பஹாய் அனைத்துலக சமூகத்தின் துணைப் பொதுச்செயலாளர் அரியன் சபேட் தனது தொடக்கக் கருத்துக்களில் கூறியது: “மனிதகுலத்தின் உன்னதத்தை உறுதிப்படுத்தவும், அதன் தன்மையை செம்மைப்படுத்தவும், நிலையான மற்றும் செழிப்பான நாகரிகத்தை உருவாக்குவதற்கு அர்த்தத்தையும் ஊக்கத்தையும் வழங்குவதில் மதத்தின் தனித்துவமான சக்தியை மிகைப்படுத்தவியலாது.”

அவர் மேலும் கூறியதாவது: “இந்த மாநாடு நம் அனைவருக்கும், சமயங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகத்தின் தலைவர்கள் எனும் முறையில் மனிதகுலம் ஒரே மனித குடும்பத்தின் உறுப்பினர்களாக ஒன்றிணைவதற்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்கான அழைப்பாக அமையட்டும்.”

மதத் தலைவர்களும் அரசாங்க அதிகாரிகளும் அமைதி, நல்லுறவு மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான கூட்டு முயற்சிகளைப் பற்றி விவாதிக்க ஒன்றுகூடினர்.

உள்துறை அமைச்சரான, அய்லெட் ஷாகெட் கூட்டத்திற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்: “இந்த மாநாடு மரியாதை மற்றும் பரஸ்பரம், குறிப்பாக வன்முறையை எதிர்த்துப் போராடுவதற்கான கூட்டு நடவடிக்கைக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.”

ஹைஃபா மேயர், ஐனாட் கலிஷ்-ரோடெம், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த ஹைஃபா நகரில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து பேசினார். “இங்கே ஹைஃபாவில், நாங்கள் ஒன்றாக வாழ்வதை மட்டும் நம்பியிருக்கவில்லை, மாறாக நாங்கள் அனைவரும் ஒரே சமூகமாக, ஒன்றாக வாழ்கிறோம்.”

மற்றொரு பங்கேற்பாளரான முஸ்லீம் மதகுருமார்கள் சங்கத்தின் தலைவர் ஷேக் நாதர் ஹெய்ப் கூறினார்: “…அன்புடனும் எதிர்காலத்தை நோக்கிய புதிய பார்வையுடனும்… எப்படி மீண்டும் ஒன்றாக இணைவது என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்…”

மாநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு, ஆக்கப்பூர்வமான உரையாடல், ஒற்றுமையை மேம்படுத்துவதில் கல்வியின் பங்கு உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்கள் குறித்து ஆராய்ந்தன.

பள்ளிகளிலும் பிற சமூகத் தளங்களிலும் தங்களிடையே கூடுதல் ஒத்துழைப்பு அவர்களின் ஒற்றுமையையும் அமைதிக்கான அர்ப்பணிப்பையும் குறிப்பாக இளைஞர்களுக்கு வெளிப்படுத்தும் என்று மதத் தலைவர்களிடையே ஒருமித்த கருத்து நிலவியது.

இஸ்ரேலிய தலைமை ரபினேட் கவுன்சிலின் உறுப்பினர் ரப்பி சிம்ஹா வெயிஸ், இந்த உணர்வை எதிரொலித்தார்: பஹாய் உலக மையத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பன்முகத்தன்மை ஒரு நம்பிக்கையான எதிர்காலத்திற்கான பார்வையை அளிக்கிறது என்று கூறினார். “ஒன்றாக வாழ்வது சாத்தியம் என்பதை [அவர்கள்] எங்களுக்கு வெளிப்படுத்துகிறார்கள்.”

அவர் மேலும் கூறியதாவது: “நாம் அனைவரும் ஒரே குடும்பம்… இதைத்தான் இன்றைய இளைஞர்களுக்கு நாம் கற்பிக்க வேண்டும்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1596/

“அமைதி மற்றும் நம்பிக்கையைப் பிரகாசித்தல்”: பனாமாவில் உள்ள கோவில் 50-வது வருடத்தைக் குறிக்கின்றது


17 மே 2022

பனாமா சிட்டி, 17 மே 2022, (BWNS) – செர்ரோ சொன்சொனேட்-டின் (ஒரு மண்டலத்தின் பூர்வீக பேச்சுவழக்கில் “இனிய கீதங்களின் மலை என பொருள்படும்) உச்சியில் பனாமா நகர வழிபாட்டு இல்லம் வீற்றிருக்கின்றது. இது அனைத்து பின்னணிகளையும் சேர்ந்தவர்கள் பிரார்த்தனைக்காகவும் அவர்களின் சமூகத்திற்கு சேவை செய்வதற்கான உத்வேகம் பெறவும் செல்கின்ற ஓர் இடமாகும்.

பனாமா பஹாய்கள் சமீபத்தில் இந்தக் கோவில் முதன் முதலில் அர்ப்பணிக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒரு விழாவை நடத்தினர். கோலிலைச் சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமின்றி, அரசாங்க அதிகாரிகள், மாவட்ட மேயர், பழங்குடி மற்றும் பலதரப்பட்ட சமய சமூகங்களின் தலைவர்கள் மற்றும் பஹாய் ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை ஒன்றுசேர்த்தனர்.

பனாமா நகரில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லம் அர்ப்பணிக்கப்பட்ட 50-வது ஆண்டு விழாவின் காட்சிகள் இங்கே படத்தில் உள்ளன.

“உயிர்களை குணப்படுத்துவதிலும், அண்டையரிடையே அன்பைப் பேணுவதிலும் இந்த வழிபாட்டு இல்லம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பஹாய்கள் நமது சமூகத்தில் அதிக ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளைத் தொடர நான் ஊக்குவிக்கிறேன்,” என மாவட்ட மேயர் ஹெக்டர் கராஸ்குல்லா கூறினார்.

பனாமாவின் பஹாய் தேசிய ஆன்மிகச் சபையின் செயலாளரான யோலண்டா ரோட்ரிகஸிடம், நம்பகம் மற்றும் நட்பைப் பிரதிநிதிக்கும் அடையாளத் திறவுகோலை திரு. கராஸ்குவிலா வழங்கினார்.

ரபி குஸ்டாவோ க்ராசெல்னிக் கூட்டத்திற்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்தார்: “கோயில் எப்போதும் உரையாடலுக்கான இடமாக இருக்கட்டும். மேலும், அதன் ஆன்மீகம் தொடர்ந்து பனாமா முழுவதும் அமைதியையும் நம்பிக்கையையும் பரப்பட்டும்.”

வருங்காலத்தை நோக்கி, திருமதி. ரோட்ரிகுவெஸ், சமுதாயத்தின் பலதரப்பட்ட உறுப்பினர்களை ஒருங்கிணைத்த இந்த விழா, கடந்த ஐம்பது ஆண்டுகளில் கோவிலின் ஒருங்கிணைக்கும் சக்தியின் பிரதிபலிப்பாகவும், சுற்றியுள்ள சமூகங்கள் மற்றும் அதற்கு அப்பால் உள்ளோரின் ஆன்மீக வாழ்வில் அதன் வளர்ந்துவரும் தாக்கத்தின் அறிகுறியாகவும் இருந்தது என விளக்கினார்.

அவர் கூறுகிறார்: “பஹாய் திருவாக்குகளில் வழிபாட்டு இல்லமானது மாஷ்ரிகுல்-அஸ்கார் அல்லது ‘கடவுள் துதியின் உதயஸ்தலம்’ என குறிப்பிடப்படுகிறது. மக்கள் பனாமா கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்யும்போது, அவர்களின் சக குடிமக்களுக்கு சேவை செய்வதற்கான தெளிவு, நம்பிக்கை மற்றும் உந்துதலை அங்கு பெறுகின்றனர்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1595/

BIC: ஆப்பிரிக்க-ஐரோப்பிய கூட்டாண்மையில் ஒற்றுமை கோட்பாட்டை ஊக்குவித்தல்


11 மே 2022

பிரஸ்ஸல்ஸ் – கடந்த இரண்டு ஆண்டுகளில், குறிப்பாக அவற்றின் பொருளாதார உறவுகளில், நாடுகள் ஒன்று மற்றொன்றைச் சார்ந்திருப்பதற்கான உலகளாவிய அங்கீகார உணர்வை பெருந்தொற்று தூண்டியுள்ளது. அதே நேரத்தில், பஹாய் அனைத்துலக சமூகம் (BIC), அடிப்படை மட்டத்தில் மனிதகுலம் ஒன்றே என்னும் ஓர் ஆழமான யதார்த்தத்தின் புரிதலைப் பேணிட முற்பட்டது. ஆப்பிரிக்க ஒன்றியத்தின் (AU) நிகழ்வில் BIC-யின் அடிஸ் அபாபா மற்றும் பிரஸ்ஸல்ஸ் அலுவலகங்களால் கூட்டாக தயாரிக்கப்பட்ட “மனுக்குலத்தின் ஒற்றுமை—ஆப்பிரிக்கா-ஐரோப்பிய ஒன்றிய கூட்டாண்மைக்கான தாக்கங்கள்” என்னும் தலைப்பில் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் (EU) உச்ச மாநாடுக்கான BIC-யின் சமீபத்திய அறிக்கையின் கருப்பொருள் இதுவாகும்.

அடிஸ் அபாபா அலுவலகத்தின் சாலமன் பெலே குறிப்பிடுவதாவது: “அரசு அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், சமயத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுடன் BIC-யின் பல உரையாடல்களிலிருந்து வெளிவரும் உலகளாவிய நிர்வாகம், இடம்பெயர்வு, காலநிலை மாற்றம், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட சமீபத்திய ஆண்டுகளில் BIC-ஆல் ஆராயப்பட்ட முக்கிய நுண்ணறிவுகளை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு வழங்கிட உச்சமாநாடு ஒரு வாய்ப்பை வழங்கியது. AU தலைவர்களுக்கும் நாங்கள் அதே கண்ணோட்டத்தை வழங்குவோம்.

இரு கண்டங்களும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்னிப்பிணைந்திருப்பதால் AU-EU உறவின் முக்கியத்துவத்தை டாக்டர் பெலே விளக்குகிறார். “தற்போதைய உறவுகள் இரு கண்டங்களிலும் அதற்கு அப்பாலும் உள்ள அனைத்து மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதன் அடிப்படையில் கூட்டாக மாற வேண்டும். இதற்கு பரஸ்பர ஆதரவும் நம்பகமும் தேவை,” என்கிறார்.

ஒரு கண்டத்தின் முன்னேற்றம், செழிப்பு, நல்வாழ்வு ஆகியன மற்றொரு கண்டத்தின் நலனுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன என்னும் கருத்தைப் பலர் ஏற்றுக்கொண்டாலும், “உலகளாவிய ஒழுங்கமைப்பின் தற்போதைய கட்டமைப்பு அதன் முழு வெளிப்பாட்டிற்கு இடங்கொடுக்கவில்லை” என BIC தனது அறிக்கையில் அங்கீகரிக்கின்றது.

தொடர்ந்து அந்த அறிக்கை: “இன்றைய அரசியல் மற்றும் சமூகப் பொருளாதார அமைப்புகளில் பெரும்பாலானவை, உலகின் ஒரு பகுதி மற்றவற்றின் மீது ஆதிக்கம் கொண்டிருப்பது அடிப்படையான மெய்நிலை என கருதப்பட்ட நேரத்தில் உருவாக்கப்பட்டவை. சமீபத்திய தசாப்தங்களில் இந்த அனுமானத்தின் சில அப்பட்டமான வெளிப்பாடுகளை முறியடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சமத்துவமின்மையின் வடிவங்கள் மாற்றத்திற்குப் பிடிவாதமாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.”

பிரஸ்ஸல்ஸ் அலுவலகத்தின் ரேச்சல் பயானி, மனிதகுல ஒருமைப்பாட்டின் கொள்கையின்படி சர்வதேச கட்டமைப்புகள் மற்றும் உறவுகளை மறுவடிவமைப்பது ஒரு சவாலான பணியாகும், இதற்குப் பல தலைமுறைகளாக முயற்சி தேவைப்படும். “இந்த இலக்கை நோக்கிச் செல்வதற்கான சில நடைமுறை ஆலோசனைகளை அறிக்கை வழங்குகிறது. முதலாவதாக, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் உள்ள சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் ஐரோப்பிய கொள்கைகளின் தாக்கத்தை கவனமாக பரிசீலிக்க வேண்டும்,” என அவர் கூறுகிறார்.

“மற்றொரு ஆலோசனையானது, சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ள ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய சமூக நடவடிக்கையாளர்களுக்கு, பரிவர்த்தனை பேரம் பேசுவதைத் தாண்டி, முன்னரே தீர்மானிக்கப்பட்ட மற்றும் முன்னரே முடிவுசெய்யப்பட்ட தீர்வுகளுக்கு வாதிடாத கலந்தாலோசனைச் செயல்பாட்டில் ஈடுபடுவதற்கு, சில கட்டமைக்கப்பட்ட தளங்களை உருவாக்குவது” என்று திருமதி. பயானி தொடர்கிறார். ”

பிரஸ்ஸல்ஸ் மற்றும் அடிஸ் அபாபா அலுவலகங்களின் அறிக்கையானது, உலகளாவிய ஆளுகை பற்றிய உரையாடலுக்கு பங்களிப்பதற்கான BIC-யின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் “ஒரு பொருத்தமான ஆளுமை: மனிதநேயம் மற்றும் ஒரு உலகளாவிய ஒழுங்கை நோக்கிய பாதை” என்னும் தலைப்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட கருத்துகளை உருவாக்குகிறது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1594/

உலகளாவிய மாநாடுகள்: அடித்தட்டு ஒன்றுகூடல்கள் சமூகங்களுக்கு ஒரு பொது நோக்கத்தை வழங்குகின்றன


பஹாய் உலக மையம், 6 மே 2022, (BWNS) – அமைதியான உலகம் பற்றிய பஹாய் நம்பிக்கையின் அடிப்படையில் துடிப்பான சமூகங்களை அவர்கள் எவ்வாறு நிர்மாணிக்கலாம் என்பதைப் பற்றி ஆலோசிக்க, நண்பர்கள், அண்டை வீட்டார் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள அண்டைப்புறங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள அறிமுகமானவர்கள், வீடுகள் மற்றும் கொல்லைப்புறங்கள், தாழ்வாரங்கள் மற்றும் கூரைகள் மற்றும் பல வேறுபட்ட அமைப்புகளில்-பெரிய மற்றும் சிறிய— இடங்களில் ஒன்றுகூடுகின்றனர்.

இந்தக் கூட்டங்கள் ஒரு வரவேற்கும் மற்றும் ஆன்மீகமான சூழலை வழங்கி, அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் தங்கள் சமூகங்களின் முன்னேற்றத்தை நோக்கிய ஒரு ஆழமான நோக்கத்துடன் ஊக்கமளிக்கும் நட்பின் வலுவான பிணைப்பை உருவாக்க உதவுகின்றன.

பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் இருந்து அவர்களின் நுண்ணறிவு மற்றும் அனுபவத்துடன் கலந்துரையாடல்களை வளப்படுத்த, கூட்டங்களில் இளைஞர்கள் குறிப்பாக முக்கிய பங்கு வகித்துள்ளனர். மக்கள் தன்னலமின்றி சக குடிமக்களுக்கு சேவை செய்யும் போது சமூக மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகளை அவர்களின் அனுபவம் வெளிப்படுத்துகிறது.

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இப்போது நடந்து கொண்டிருக்கும் எண்ணற்ற கூட்டங்களின் மாதிரியைப் பெற news.bahai.org ஐப் பார்வையிடவும்.

ஓர் உள்ளூர் மாநாட்டின் பங்கேற்பாளர்கள் கொலம்பியா,நோர்ட்டே டெல் கௌகா பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கு முன் நிற்கின்றனர்

மேலும் இது போன்ற ஒன்றுகூடல்கள் பற்றிய படங்களைப் பார்க்கவும் விவரங்களைப் பெறவும் இங்கு செல்லவும்: https://news.bahai.org/story/1593/

உலகளாவிய மாநாடுகள்: கலை படைப்புகள் அமைதியை ஊக்குவித்து, சமுதாய சேவையைத் தூண்டுகின்றன


26 ஏப்ரல் 2022

பஹாய் உலக மையம் – உலகெங்கிலும் பரவியுள்ள மாநாடுகளின் அலை தொடர்கையில், இந்தக் கூட்டங்களில் இருந்து வெளிவரும் கலை வெளிப்பாடுகள் மனித ஆன்மாவின் அத்தியாவசிய ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன: நல்லிணக்கத்தை நாடவும், தன்னலமற்ற முறையில் சமூகத்திற்குச் சேவை செய்வதன் தேவையும்.

இசை, நாடகம், காட்சிக் கலை, பாரம்பரிய நடனம், கைவினைக் கலைகள் அல்லது பிற கலை வடிவங்கள் என இந்தக் கலைப் படைப்புகளின் மூலம், உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அடித்தட்டில் உள்ள பங்கேற்பாளர்கள் நீதி, சமாதானம் மற்றும் ஒற்றுமை போன்ற ஆழமான ஆன்மீகக் கருத்துக்களை ஆராய்ந்து வருகின்றனர்.

பின்வருபவை உலகளாவிய மாநாடுகளின் தொடர்களால் ஊக்குவிக்கப்பட்ட எண்ணற்ற கலைப் படைப்புகளின் மாதிரிகளாகும்.

பாக்கிஸ்தானின் இஸ்லாமாபாத்தில், ஓர் உள்ளூர் மாநாட்டில் பங்கேற்றவர்கள் மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான நல்லிணக்கம், பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் மற்றும் தப்பெண்ணங்களிலிருந்து விடுபடுதல் போன்ற கருப்பொருள்களில் கலைப் படைப்புகளுக்கு பங்களித்தனர்.

மேலும் பல கலை வெளிப்பாடுகளைக் காண்பதற்கு பின்வரும் இணைப்பிற்குச் செல்லவும்:

https://news.bahai.org/story/1592/

இந்தூர் பஹாய் இருக்கை: காலநிலை நடவடிக்கைக்குத் தேவைப்படும் கொள்கைகள்


14 ஏப்ரல் 2022

செய்தியை இணையத்தில் படிக்க அல்லது கூடுதல் புகைப்படங்களைப் பார்க்க, news.bahai.org-ஐப் பார்வையிடவும்.

இந்தூர், இந்தியா, 14 ஏப்ரல் 2022, (BWNS) – கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தூரில் உள்ள தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கான பஹாய் இருக்கை, இந்தியாவின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீது பெருந்தொற்றின் சமூக மற்றும் பொருளாதார தாக்கம் குறித்த வலையரங்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.

அதன் மிக சமீபத்திய கூட்டத்தில், இயற்கை உலகத்துடன் மனிதகுலத்தை அதிக சமநிலைக்கு கொண்டு வருவதற்கு சமூக அமைப்புகளிலும் கூட்டு புரிதலிலும் தேவைப்படும் மாற்றத்தின் தன்மை பற்றி ஆராய்ந்திட அவ்விருக்கை கல்வியாளர்களையும் பொருளாதார வல்லுனர்களையும் ஒன்றுகூட்டியது.

“நீண்ட காலத்திற்கு, காலநிலை மாற்றம் தொடர்பான பல்பரிமாண மற்றும் பலக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் தொழில்நுட்ப தீர்வுகளுக்கு அப்பாலும் தணிப்புக்கான உத்திகளுக்கு அப்பாலும் செல்ல வேண்டும். மாறாக, மனித குலத்தின் ஒருமைப்பாடு, நீதி மற்றும் பூமியின் இயற்கை வளங்களை வழிநடத்துதல் போன்ற காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மையமாக இருக்கும் புதிய அடிப்படை மதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை அவர்கள் மேம்படுத்த வேண்டும்,” என உதவிப் பேராசிரியரும் பஹாய் இருக்கையின் தலைவருமான அராஷ் ஃபாஸ்லி கூறினார்.

இந்தூரில் உள்ள தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தில் பஹாய் இருக்கையின், மேம்பாட்டிற்கான பஹாய் இருக்கை ஏற்பாடு செய்திருந்த வலையரங்கில் கலந்து கொண்டவர்களில் சிலரை இங்கே காணலாம், இது கல்வியாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களை ஒன்றிணைத்து சமூக அமைப்புகளில் தேவைப்படும் மாற்றத்தின் தன்மையையும் இயற்கை உலகத்துடன் மனிதகுலத்தை அதிக சமநிலைக்கு கொண்டு வருவதற்கான கூட்டு புரிதலையும் ஆராய்கிறது.

உலக வள நிறுவனத்தைச் சேர்ந்த அஷ்வினி ஹிங்னே கூறியது: “இதுவரை, நாம் பார்த்தது என்னவென்றால், [காலநிலை நடவடிக்கை குறித்து] உரையாடல் பெரும்பாலும் மேலிருந்து கீழாகவும் தொழில்நுட்பத்தை மையமாகவும் கொண்டிருந்தது. உரையாடல்கள் பெரும்பாலும் சரியான திசையில் நகர்வதற்கு பொருளாதார அடிப்படையிலான வாதத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்திவந்துள்ளன மற்றும் தனியார் துறை நலன்களை முன்னணியில் வைத்தன; இது மெதுவான அரசியல் செயல்முறைக்கு வழிவகுத்துள்ளது.

“இருப்பினும், நமது வாழ்க்கை, இயற்கை மற்றும் நாம் மேற்கொள்ளும் பொருளாதார நடவடிக்கைகளின் விளைவுகள் ஆகியவற்றின் பரஸ்பரமான இணைப்பை மிகவும் அர்த்தமுள்ள வகையில் ஒப்புக்கொண்டு, ஒருங்கிணைக்கும் காலநிலை நடவடிக்கை பற்றிய உரையாடலில் மாற்றம் தேவை.”

காலநிலை நடவடிக்கை குறித்த சொற்பொழிவில் அத்தகைய மாற்றத்தை அடைவதற்கான எந்தவொரு முயற்சியும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்புகளின் அடிப்படையிலான ஆழமான வேரூன்றிய–மனிதர்கள் திருத்த முடியாத சுயநலவாதிகள்–அனுமானத்தை எவ்வாறு தீர்க்க வேண்டும் என பங்கேற்பாளர்கள் விவாதித்தனர்.

“மனிதர்களைப் பற்றிய இந்த அனுமானங்களைச் செய்வதற்கான உரிமை எங்களுக்கு இல்லை. … மக்கள் சுயநலம் இல்லாத ஒரு வித்தியாசமான மதிப்புகளின் முறைமைக்கு திறன் பெற்றவர்கள் என நாம் நம்ப வேண்டும்,” என்று அசோகா அறக்கட்டளையின் சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு மையத்தின் மூத்த உறுப்பினர் சரச்சந்திர லேலே கூறினார்.

இத்தகைய மதிப்புகளின் முறைமை காலநிலை நடவடிக்கையில் உலகளாவிய பங்கேற்பை ஊக்குவிப்பதுடன், பொது நலனுக்காக கூட்டு முடிவுகள் எடுப்பதற்காக வேறுபாடுகளைக் கடப்பதற்கு மனிதர்களிலும் ஸ்தாபனங்களிலும் ஆற்றலைக் காணும் என்பதை விவாதங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

நிகழ்வைப் பற்றி பிரதிபலிக்கும் போது, டாக்டர். ஃபாஸ்லி, மனிதகுலம் எதிர்கொள்ளும் அழுத்தமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்களிடையே கலந்தாலோசனை மற்றும் ஒத்துழைப்பை முன்னிலைப்படுத்தும் பஹாய் போதனைகளிலிருந்து நுண்ணறிவுகளைப் பற்றி உரைக்கின்றார்.

“அரசின் முகமைகள் மூலமாகவோ அல்லது சமூகங்களில் தன்னார்வ நடவடிக்கை மூலமாகவோ அணிதிரட்டப்பட்டாலும், உள்ளூர் அமைப்புகள், சமூகங்கள், அரசு, கல்வித்துறை மற்றும் தனியார் துறையில் உள்ளவர்கள் தங்கள் சவால்களில் அடையக்கூடிய மைல்கற்கள் மற்றும் சூழல் சார்ந்த தீர்வுகளை அடையாளம் காண ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,” என அவர் கூறினார்.

இந்தோர் பஹாய் இருக்கை நடத்தும் வலையரங்கம் இங்கே பார்க்கபுபடலாம்.

உலகளாவிய மாநாடுகள்: எதிர்காலத்திற்கான ஒரு நம்பிக்கை நிறைந்த கண்ணோட்டத்தை இளைஞர்கள் வழங்குகின்றனர்


5 ஏப்ரல் 2022

பஹாய் உலக நிலையம், 05 ஏப்ரல் 2022, (BWNS) – செய்தி சேவையின் சமீபத்திய கதைகள், உலகெங்கிலும் உள்ள பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைத்து, ஒற்றுமையை நிர்மாணிப்பதற்கும் மேலும் அமைதியான சமூகங்களைப் பேணுவதற்கும் தங்கள் முயற்சிகளை எவ்வாறு தீவிரப்படுத்துவது என்பதை ஆராய்வதற்காக மாநாட்டு அலைகளைப் பற்றி அறிக்கைகள் வழங்கியுள்ளன. .

பெரிய மற்றும் சிறிய அளவிலான கூட்டங்கள் தொடரும் போது, ​​குறிப்பாக இளைஞர்கள் பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் தங்கள் அனுபவத்திலிருந்து புதிய நுண்ணறிவுகளை வழங்கி, எதிர்காலத்திற்கான நம்பிக்கைமிகு கண்ணோட்டத்தை வழங்குகிறார்கள்.

குரோஷியாவில், “உலகின் மேம்பாடு” என்ற தலைப்பில் ஓர் உள்ளூர் மாநாட்டின் முடிவில், இளம் பங்கேற்பாளர்கள் ஒரு மோசமடைந்த பொது இடத்தை அழகுபடுத்த ஒரு சமூக நடவடிக்கை முயற்சியை மேற்கொண்டனர். ஏனெனில், உலகில் அதிக அழகு அமைதியான எண்ணங்களைத் தூண்டுகிறது என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.

இதற்கிடையில், பஹ்ரைனில், இளைஞர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மாநாட்டில், பல்வேறு பின்னணியில் இருந்து பங்கேற்பாளர்கள் மனிதகுல ஒருமைப்பாடு கோட்பாட்டின் அடிப்படையில் தங்கள் சமூகத்தின் எதிர்காலத்திற்கான தொலைநோக்கை ஆராய உதவியது. “அதிகமான உரையாடல் மற்றும் உள்ளடக்கிய விவாதங்கள் மூலமாகவும், நமது சக குடிமக்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமாகவும் அமைதியான சமூகங்களைப் பேணிட முடியும் என்று நான் நினைக்கிறேன்,” என்று பங்கேற்பாளர்களில் ஒருவர் கூறினார்.

மனிதகுலத்திற்குச் சேவை செய்யும் திறனாற்றலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பஹாய் கல்வியல் திட்டங்களை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்லும் மார்ஷல் தீவுகளில், கல்வி அமைச்சர் கிட்லாங் கபுவா, மாநாடுகளுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்: “ஒற்றுமை, மனித நலன் மற்றும் உலக ஒற்றுமை இந்த சமயத்தின் தூண்கள். கல்வி அமைச்சர் என்னும் முறையில்… நான் இந்த தூண்களுக்கு ஆதரவாக நிற்கிறேன் மற்றும் வலுவான கலாச்சார மற்றும் ஆன்மீக அடித்தளத்துடன் திறமையான மற்றும் இரக்கமுள்ள உலகளாவிய குடிமக்களாக எங்கள் மக்களை வளர்ப்பது குறித்து நான் உறுதியாக இருக்கிறேன்.

உலகம் முழுவதும் நடைபெறும் மேற்கண்ட மாநாடுகளின் படங்களைப் பார்க்க news.bahai.org-ஐப் பார்வையிடவும்.

BIC நியூயார்க்: காலநிலை நடவடிக்கையில் பெண்களின் முக்கிய பங்கை கருத்தரங்கு முன்னிலைப்படுத்துகிறது.


காலநிலை நடவடிக்கை மற்றும் விவாதங்களில் ஈடுபட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் வண்ணமயமான படத்தொகுப்பு

இணையத்தில் கதையைப் படிக்க அல்லது கூடுதல் புகைப்படங்களைக் காண, news.bahai.org செல்லவும்.

27 மார்ச் 2022

(BWNS) — BIC நியூயார்க் – பஹா’யி சர்வதேச சமூகத்தின் (BIC) நியூயார்க் அலுவலகம் சமீபத்தில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா), சிவில் சமூக நடவடிக்கையாளர்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து காலநிலை நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் பெண்கள் எவ்வாறு ஒரு தனித்துவ நிலையில் உள்ளனர் என்பதை ஆராய பஹாய் வெளிவிவகார அலுவலகங்களின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்தது.

BIC-யின் ஒரு பிரதிநிதியான சஃபிரா ரமேஷ்ஃபர், மன்றம் சமீபத்தில் வெளியிடப்பட்ட BIC-யினால் முன்வைக்கப்பட்ட “மீள்ச்சித்திறத்தின் மையம்: காலநிலை நெருக்கடியானது சமத்துவ கலாச்சாரத்திற்கான ஒரு வினையூக்கி” என்னும் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களில் கவனம் செலுத்தியது என விளக்கினார்.

“அந்த அறிக்கையின் கருத்தாக்கங்கள் மற்றும் கருப்பொருள்களை உயிர்ப்பிக்கும் நோக்கத்துடன் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இது உலகெங்கிலும் உள்ள பல சமூக நடவடிக்கையாளர்கள், அறிக்கையில் அடங்கியிருந்த யோசனைகளின் அடிப்படையில் ஒருவர் மற்றவரின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள அனுமதித்தது, “என திருமதி ரமேஷ்ஃபர் கூறினார்.

பி.ஐ.சி. அறிக்கையில் ஒரு முக்கிய விஷயம் மற்றும் கூட்டத்தின் முக்கிய அம்சம் யாதெனில், அதிகரித்து வரும் காலநிலை அபாயங்களுக்கு மத்தியில், சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் பெண்களின் தலைமை ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஊக்குவிக்கப்படும்போது மனிதகுலம் பயனடைகிறது.

ஐ.நா.வுக்கான செயிண்ட் லூசியாவின் நிரந்தர தூதுக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கேட் வில்சன், காலநிலை நெருக்கடியில், முடிவெடுக்கும் இடங்களில் அதிகமான பெண்களைச் சேர்க்க வேண்டிய முக்கியமான தேவை குறித்துப் பேசினார். ஏனெனில், விகிதாசாரமற்ற முறையில் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூர் சவால்களை எதிர்கொள்வதில் அவர்கள் மிகவும் சமயோசிதமாக இருக்க வேண்டியும் உள்ளது.

“பெண்கள் தங்கள் தேசங்களின் தாய்மார்கள் ஆவர். தங்கள் குழந்தைகள் பசியுடன் இருக்கும்போது, அவர்கள் உயிர்வாழ உதவும் வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். பெண்கள் தொடர்ந்து தீர்வுகளைத் தேடுகிறார்கள், “என்று அவர் கூறினார், கரீபியனில் உள்ள பெண்களின் எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டி, இயற்கை பேரழிவுகளின் காலங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதன் மூலம் அடிக்கடி பாதிக்கப்படும் நாட்டின் கட்டமைப்பைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முற்படுகிறார்கள்.

புவேர்ட்டோ ரிக்கோவின் பஹா’யி சமூக நடவடிக்கை குழுவின் மற்றொரு பங்கேற்பாளரான இடாலியா மொராலெஸ்-சிமிகா, சமீபத்திய ஆண்டுகளில், புவேர்ட்டோ ரிக்கோவின் நிலையான விவசாயத்திற்கு பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகின்றனர், இது அதன் உணவில் 85%0-ஐ இறக்குமதி செய்யும் ஒரு நாடு.  “இரண்டு சூறாவளிகளான பூகம்பங்கள் மற்றும் தொற்றுநோய்களின் விளைவுகளில் இதுவும் ஒன்று. ஒரு தேசிய சமூகமாக, எங்கள் மண் மிகவும் வளமானதாக இருந்தாலும், வெளியிலிருந்து வரும் உணவை நாங்கள் எவ்வளவு சார்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்துள்ளோம்.”

இந்த உணர்தல் இளைஞர்களை, குறிப்பாக பெண்களை, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவின் அளவை அதிகரிப்பதற்காக உணவு உற்பத்தி மற்றும் விவசாய வலைப்பின்னல்களின் வளர்ச்சியில் ஈடுபடத் தூண்டியுள்ளது என அவர் விளக்கினார். “சூறாவளியின் போது எல்லோரும் எங்களுக்கு உதவ விரும்பினாலும், இங்கே உணவைக் கொண்டுவர எந்த வழியும் இல்லை, தொங்கா தீவிவிலும் அதே விஷயம் நடப்பதை நாங்கள் இப்போதுதான் பார்த்திருக்கிறோம்.”

“பெண்களின் திறனை முழுமையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக குறைந்தபட்சம் இரண்டு முனைகளில் நடவடிக்கை தேவைப்படும்: தலைமைப் பாத்திரங்களில் பெண்களின் பங்கை அதிகரிப்பது மற்றும் பெண்கள் மிகவும் அர்த்தமுள்ள, சமூக வாழ்க்கையில் ஈடுபடுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல்” என திருமதி ரமேஷ்ஃபர் மேலும் கூறினார்.

இந்தக் கருப்பொருளைப் பற்றி பேசுகையில், CSW இளைஞர் தலைவர்கள் மற்றும் இளம் வல்லுநர்கள் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சயீதா ரிஸ்வி, தலைமைத்துவம் குறித்த ஆழமான கருத்துக்கள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என விளக்கினார். “[தலைமைத்துவம்] தற்போது ஆண்மை நிலையில் இருப்பது என்றால் என்ன என்ற எண்ணத்தில் மிகவும் வேரூன்றியுள்ளது,” என அவர் கூறினார். “பல வழிகளில், இது ஒரு வலுவான தலைவரையும் அதற்கு எதிர்வினையாக பலவீனமான தலைவரையும் வரையறுக்கிறது. நெகிழ்வான மற்றும் அதிக அனுதாபத்துடன் இருப்பதில் பெண்களின் பலம் ஒரு வலுவான தலைவரின் பண்புகளாக கொண்டாடப்பட வேண்டும்.”

துருக்கியில் உள்ள பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் சுசான் கரமன், BIC அறிக்கையைக் குறிப்பிட்டு, “ஒத்துழைப்பு மற்றும் உள்சேர்ப்பை நோக்கிய சாய்வு, கவனிப்பு மற்றும் தன்னலமற்ற தன்மையை நோக்கிய மனப்பான்மை, நீண்டகால நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் போக்கு மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வைக் கருத்தில் கொள்ளுதல்” போன்ற தலைமைக்கு இன்றியமையாத, பெண்மையுடன் தொடர்புடைய சில பண்புகளை எடுத்துக்காட்டினார். பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் குறித்த சொற்பொழிவில் பி.ஐ.சி நியூயார்க் அலுவலகத்தின் தற்போதைய பங்களிப்பின் ஒரு பகுதியாக இந்த விவாத மன்றம் இருந்தது, மேலும் பெண்களின் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) ஆணையத்தின் 66- வது அமர்வின் ஒரு பக்க நிகழ்வாகவும் இது நடைபெற்றது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1589/

அப்துல்-பஹாவின் நினைவாலயம்: உருபெற்று வரும் நினைவாலயம் மானிடத்தின் அமைதிக்கும் சேவைக்குமான ஒரு சின்னமாகத் திகழ்கின்றது.


21 மார்ச் 2022

பஹாய் உலக மையம் — ‘அப்துல்-பஹா’ நினைவாலயத்துக்கான தளத்தில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள பஹாய்கள் குறிப்பாக நவ்-ரூஸ் தினமான இன்று வசந்தகாலத்தின் முதல் நாளும் ஆன்மீக புதுப்பிப்பிற்கான நாளுமான இன்று உலகளாவிய அமைதிக்கான அவரது அவசர அழைப்பை, நினைவு கூர்கின்றனர்.

இந்த நினைவாலயம் கட்டி முடிக்கப்பட்டதும், உலகம் முழுவதிலுமிருந்து வரும் எண்ணற்ற பார்வையாளர்கள், ‘அப்துல்-பஹாவின் வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெறுவதற்கும், அமைதியின் தூதர், சமூக நீதியின் நாயகர், மனிதகுலத்தின் ஒருமைப்பாடு குறித்த கொள்கையை நிலைநிறுத்துபவர் என்னும் அவரது பணிகளிலிருந்து உத்வேகம் பெறுவதற்கு அமைதிமிகு தியனத்திற்கான தளமாக விளங்கும். .

மேற்கத்திய பயணத்தின் போது அவர் ஆற்றிய உரைகளில் ஒன்றில், ‘அப்துல்-பாஹா வசந்த உத்தராயணம் (மகா விசுவம்) தொடர்புடைய இயற்கையின் புதுப்பித்தல் பற்றிய உருவகத்திலிருந்து: “நீங்கள் வளரும் தாவரங்களாக மாறுங்கள். உங்கள் இதயங்கள் என்னும் மரங்கள் புதிய இலைகளையும் பலவிதமான பூக்களையும் விளைவிக்கட்டும். லௌகீக நாகரீகத்தில் வளர்ந்து மேம்பாடு கண்டுள்ள மனிதகுல உலகமானது ஆன்மீக இலட்சியங்களை வெளிக்கொண்டு வருவதில் விரைவாகி அதனிலிருந்து சிறந்த கனிகள் தோன்றட்டுமாக.

நினைவாலய தளத்தின் முன்னேற்றம் பின்வரும் படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

சன்னதியின் மையப் பகுதியில் விரிந்து கிடக்கும் குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டிக்கான கட்டமைப்பை உருவாக்கும் உன்னிப்பான வேலை முடியும் தருவாயில் உள்ளது.
Formwork பணியின் இந்த அனிமேஷன் வரிசையானது, பாலிஸ்டிரீன் கட்டமைப்பை வைப்பது, rebar வைப்பது, கான்கிரீட்டை ஊற்றுவது மற்றும் இறுதியாக formwork-ஐ அகற்றுவது உள்ளிட்ட trellis-M உருவாக்கும் செயல்முறையைக் காட்டுகிறது.
The formwork comprises precisely placed EPS blocks that will form a mold for the structure of the trellis.
Formwork-இல் துல்லியமாக வைக்கப்பட்டுள்ள EPS தொகுதிகள் உள்ளன, அவை குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டியின் கட்டமைப்பிற்கு ஓர் அச்சை உருவாக்கும்.
Steel formwork has also been installed to create extensions on the sides of trellis that will connect with the portal walls of the north and south plazas.
வடக்கு மற்றும் தெற்கு பிளாசாக்களின் வாசல் சுவர்களுடன் இணைக்கும் குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டியின் பக்கங்களில் நீட்டிப்புகளை உருவாக்க எஃகு கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
Work on the marble that will clad the trellis is also advancing. Pictured here is a view of the quarry in the town of Carrara, Italy, where Margraf—the marble company working on the project—is sourcing stone for the Shrine.
குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டையான பளிங்குக் கற்களை உருவாக்கும் பணியும் நடந்து வருகிறது. இங்கே படத்தில் இருப்பது இத்தாலியின் கராரா நகரில் உள்ள குவாரியின் காட்சியாகும், அங்கு திட்டத்தில் பணிபுரியும் மார்பிள் நிறுவனமான மார்கிராஃப் – நினைவாலயத்திற்கு கற்களை ஆதாரமாகக் கொண்டுள்ளது.
பஹாய் சமூகத்தின் பணிக்கும் இத்தாலியின் இந்தப் பகுதிக்கும் 1940கள் வரையிலான உறவைப் பற்றி மேலும் அறிய இந்தக் கட்டுரையைப் படியுங்கள்..

A full-scale model of a section of the trellis was prepared at Margraf’s factory in Chiampo, Italy, to assist with developing possible approaches for use in the complex process of mounting the stone on the lower side of the trellis. The marble seen here is for demonstration and is not the final material.
குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டியின் ஒரு பகுதியின் முழு அளவிலான மாதிரியானது இத்தாலியின் சியாம்போவில் உள்ள மார்கிராஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது, இது குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட அடிப்பகுதியில் கல்லை ஏற்றும் பலக்கிய செயல்பாட்டில் பயன்படுத்த சாத்தியமான அணுகுமுறைகளை உருவாக்க உதவுகிறது. இங்கு காணப்படும் பளிங்கு காட்சிக்கானது மற்றும் இறுதிப் பொருள் அல்ல.
Staff from the project office at the Bahá’í World Centre recently visited the Margraf factory to discuss aspects of the plans for the preparation of the marble for the trellis and the main edifice of the Shrine.
பஹாய் உலக மையத்தில் உள்ள திட்ட அலுவலகத்தின் பணியாளர்கள் சமீபத்தில் மார்கிராஃப் (Margraf) தொழிற்சாலைக்கு வருகை தந்து, குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி மற்றும் ஆலயத்தின் முக்கிய கட்டிடத்திற்கான பளிங்கு தயாரிப்பதற்கான திட்டங்களின் அம்சங்களைப் பற்றி விவாதித்தனர்.
Meanwhile, a new stage of the construction of the two garden berms on either side of the Shrine has begun as they are backfilled with expanded EPS blocks. This is an innovative use of EPS, which will give shape and volume to the berms while adding relatively little weight to the structure.

இதற்கிடையில், விரிவாக்கப்பட்ட EPS தொகுதிகளால் நிரப்பப்படும் போது சன்னதியின் இருபுறமும் உள்ள இரண்டு தோட்ட berm-களின் கட்டுமானத்தின் ஒரு புதிய கட்டம் தொடங்கப்பட்டது. இது EPS-இன் புதுமையான பயன்பாடாகும், இது கட்டமைப்பிற்கு ஒப்பீட்டளவில் சிறிய எடையைச் சேர்க்கும் அதே வேளையில் berm-களுக்கு வடிவத்தையும் அளவையும் கொடுக்கும்.

Progress on the backfilling of the east berm is seen here. The placement of blocks in overlapping layers has been carefully planned to provide a firm base for the landscaping of the berms.
கிழக்கு berm மீண்டும் நிரப்பப்படுவதில் முன்னேற்றம் இங்கே காணப்படுகிறது. ஒன்றுடன் ஒன்று அடுக்குகளில் தொகுதிகள் வைப்பது, berm-களின் நிலப்பரப்புக்கு உறுதியான தளத்தை வழங்குவதற்கு கவனமாக திட்டமிடப்பட்டுள்ளது.
To the north of the Shrine, work on the north plaza floor has been completed.
நினைவாலயத்திற்கு வடக்கே, வடக்கு பிலாஸா தரை பூர்த்தியாகிவிட்டது
As seen in the aerial view on the left, most of the south plaza floor and the path encircling the Shrine has been completed.
இடதுபுறத்தில் உள்ள வான்வழிக் காட்சியில் காணப்படுவது போல், தெற்கு பிளாசா தளத்தின் பெரும்பகுதியும் சன்னதியைச் சுற்றியுள்ள பாதையும் முடிக்கப்பட்டுள்ளது.
The north and south plaza garden planters have been built and are now being backfilled with reused EPS from other parts of the site.
வடக்கு மற்றும் தெற்கு பிளாசா பூங்கா தொட்டிகள் கட்டப்பட்டு, இப்போது தளத்தின் பிற பகுதிகளிலிருந்து மீண்டும் பயன்படுத்தப்பட்ட EPS மூலம் நிரப்பப்படுகின்றன.
Seen here are blocks of EPS being cut to be placed in the planters.
தொட்டிகளில் வைக்கப்படவிருக்கும் EPS புலோக்குகள் இங்கே காணப்படுகின்றன
Another notable development at the site is the landscaping work on the gardens that will surround the Shrine. Seen here are some of the plants (left) that are being grown at an off-site nursery and a winding garden path (right) that is being laid out on the east side of the Shrine.
இத்தலத்தில் உள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி, நினைவாலயத்தைச் சுற்றியுள்ள தோட்டங்களில் நிலவடிவ வேலை ஆகும். இங்கு காணப்படுகின்ற சில தாவரங்கள் (இடதுபுறம்) வெளியே உள்ள ஓரிடத்தில் வளர்க்கப்படுகின்றன. மற்றும், ஒரு வளைந்த தோட்டப் பாதை (வலது) ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
These images show the foundations of the access paths at the north and south end of the site.
இந்தப் படங்கள் தளத்தின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் உள்ள பாதைகளுக்கான அடித்தலங்களைக் காண்பிக்கின்றன.
Preparation of foundations for the side garden path to the east of the Shrine is now complete. Soil that was bored for the support piles of the main structure is now being used for landscaping the garden path.
கோவிலின் கிழக்கே பக்க தோட்டப் பாதைக்கான அடித்தளம் தயாரிக்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது. பிரதான கட்டமைப்பின் ஆதரவு தூண்களுக்கு நோண்டப்பட்ட மண் இப்போது தோட்டப் பாதையை வடிவமைக்கப் பயன்படுத்தப்படுகிறது.
The top image shows a Geoweb network of interconnected porous containers that confine the base layer of soil, a standard technique being used to strengthen the foundations of the side garden path.
மேலே உள்ள படம், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நுண்ணிய கொள்கலன்களின் பூகோளப் பின்னலை காட்டுகிறது, அவை மண்ணின் அடிப்படை அடுக்கைக் கட்டுப்படுத்துகின்றன, இது பக்க தோட்டப் பாதையின் அடித்தளத்தை வலுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு நிலையான நுட்பமாகும்.
Seen here at the nursery are some of the trees and plants that will line the garden paths.
தோட்டத்தின் பாதைகளின் ஓரங்களை அலங்கரிக்கவிருக்கும் மரங்களும் செடிகளும் இங்கு காணப்படுகின்றன.
Platforms have been created at several points along the garden paths, where benches and fountains will be installed to provide visitors with an opportunity to pause for quiet contemplation.
தோட்டப் பாதைகளில் பல இடங்களில் நடைமேைகள் உருவாக்கப்பட்டுள்ளன, அங்கு பெஞ்சுகள் மற்றும் நீரூற்றுகள் நிறுவப்பட்டு பார்வையாளர்களுக்கு அமைதியான தியானத்தை இடைநிறுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும்.
Elsewhere on the site, groundwork for a visitors’ center has begun.
தளத்தின் மற்றோர் இடத்தில் வருகையாளர் மையத்திற்கான பணிகள் ஆரம்பித்துள்ளன.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1588/

உலகளாவிய மாநாடுகள்: மானிடத்தின் மேலான நலனுக்குப் பாடுபடுதல்


BAHÁ’Í உலக மையம், 18 மார்ச் 2022, (BWNS) – உலகளாவிய மாநாடுகளின் அலை உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வருவதால், அதிகமான மக்கள் ஒற்றுமையை வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் தங்கள் அண்டை மற்றும் பிற சக குடிமக்களுடன் இணைந்து தங்கள் சமூகத்திற்குச் சேவையாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளின்பால் விழிப்புற்று வருகின்றனர்..

இந்த மாநாடுகளில் பங்கேற்பாளர்கள்–அவற்றில் பெரும்பாலானவை அடித்தட்டு அளவில் நடைபெறுகின்றன–ஒரே அலகென அவர் விவரித்த மானிட உலகம் பற்றிய பஹாவுல்லா தொலைநோக்கினுடைய வெளிப்பாட்டை உறுதியான வடிவத்தில் காண்கிறார்கள். ஒரு குடும்பம் – பின்வரும் மேற்கோளில்: “நீங்கள் அனைவரும் ஒரே மரத்தின் இலைகள், ஒரே கடலின் துளிகள்.”

ச்சாட் நாட்டில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்களிடையே இந்த ஒற்றுமை உணர்வு உணரப்பட்டது, இது தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களை ஒன்றிணைத்து கூட்டு அமைதியை அடைய ஒவ்வொரு நபரும் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை ஆராய்வதற்காகும். “இந்த மாநாடுகள் எண்ணற்ற நெருக்கடிகள், வன்முறை இடையூறுகள் மற்றும் அநீதிகளை நன்கு அறிந்த ஒரு நாட்டில் அமைதியை ஸ்தாபிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்” என கலந்து கொண்ட தலைவர்களில் ஒருவரான மஹாமத் ஹசானே கூறினார். அந்த எழுச்சியூட்டும் கூட்டத்தில், பங்கேற்ற முதல்வர்கள் அனைவரும் தங்கள் கிராமங்களில் இதுபோன்ற மாநாடுகளை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்தியாவில், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஹிங்கன்வேதேயில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், குடும்பங்களில் மது அருந்துவதால் ஏற்படும் பேரழிவை உண்டாக்கும் விளைவுகள் உட்பட பல்வேறு சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். மாநாட்டைத் தொடர்ந்து சுகாதார மேம்பாட்டு பிரச்சாரம் நடந்தது. ஒரு சர்பஞ்ச் (கிராமத் தலைவர்) ராஜு அர்ஜுன் தத்ரக் கூறுகிறார்: “இந்த மாநாடுகளை நாம் தவறாமல் நடத்துவது மிகவும் முக்கியம், ஏனென்றால் நாம் ஆராய்ந்து வரும் பஹாய் கொள்கைகள் எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கான புதிய கண்ணோட்டத்தை நமக்கு வழங்குகின்றன.”

இதற்கிடையில், ஐக்கிய அமெரிக்காவில் மண்டல ஒன்றுகூடல்களில் கலந்துரையாடல்கள் வரும் மாதங்களில் அந்த நாடு முழுவதும் நடத்தப்படும் நூற்றுக்கணக்கான உள்ளூர் கூட்டங்களுக்கு தளத்தை அமைக்கின்றன. அந்தக் கூட்டங்களில் ஆராயப்படும் கருப்பொருள்களில் மானிடத்தின் ஒருமைப்பாடு மற்றும் இன நீதி ஆகியவை அடங்கும்.

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் நடைபெற்ற சமீபத்திய மாநாடுகள் சிலவற்றின் படங்களைப் பார்க்க news.bahai.org- ஐப் பார்வையிடவும்.

கூடுதல் படங்களுக்கு: https://news.bahai.org/story/1587/

மூலாதாரம்: https://news.bahai.org/story/1587/