மார்த்தா ரூட்


கீழ்ப்படிதலும், அளப்பரிய உழைப்பும் – மார்த்தா ரூட்

அப்துல்-பஹா மார்த்தா ரூட் பற்றி கூறுகின்றார்:

உண்மையில் நீரே இராஜ்யத்தின் முன்னோடியும், திருவொப்பந்தத்தின் முன்னறிவிப்பாளரும் ஆவீர். நீர் உண்மையிலேயே சுய அர்ப்பணம் மிக்கவராவீர். நீர் எல்லா தேசங்களுக்கும் அன்பை வெளிப்படுத்துகின்றீர். வருங்காலத்தில், ஆயிரக்கணக்கில் அறுவடையளித்திடும் ஒரு விதையை இப்பொழுது விதைக்கின்றீர். நித்திய காலமும் இலை விடும், பூக்கள் பூக்கும், கனிகள் கொடுக்கும் ஒரு மரத்தை நடுகின்றீர்; பருமனளவில் அதன் நிழல் நாளுக்கு நாள் அதிகரித்திடும்.

marthroot
மார்த்தா ரூட்

ஷோகி எஃபெண்டி, மார்த்தா ரூட்டை “பஹாவுல்லாவின் சமயத்தின் அருஞ்சேவகர் எனவும், “ஒப்பிடப்பட முடியாதவர்” எனவும் கருதியுள்ளார். 1939-இல் அவரது மரணத்தின் போது, “முதல் பஹாய் நூற்றாண்டில் அப்துல்-பஹாவின் கரங்கள் உருவாக்கியுள்ள பிரதான திருக்கரம்” என அவரது ஸ்தானத்தை விவரித்துள்ளார். ஒரு (சமய)போதகர் எனும் முறையில் அவரைக் குறிப்பிடும் போது:

…அனைத்துலக போதனைக்களத்தில் அவரது மகத்தானதும், தனித்துவமிக்கதுமான உழைப்பினால், உலகம் முழுவதுமுள்ள அவரது சக சமய போதகர்களின் சாதனைகளை பெரும் மகிமையோடு அவர் மங்கச்செய்தது மட்டுமின்றி, ஒரு முழு நூற்றாண்டினூடே சமயத்தை விருத்திசெய்தோரின் சாதனைகளையும் விஞ்சிய ஒரு மகிமை அவருடையதாகும். ஆங்காங்கு பயணம் செய்திடும் பஹாய் போதகர்களின் முன்மாதிரியும், அப்துல்-பஹாவின் மறைவிலிருந்து பஹாவுல்லாவின் கரங்கள் உருவாக்கியுள்ள முன்னணி (சமயத்)திருக்கரமுமான மார்த்தா ரூட்-இன் பன்மடங்கான சேவைகளும், அவரது விழுமிய வாழ்க்கையும் சரியாக மதிப்பிடப்பட வேண்டுமானால், அவரது சமயத்தின் முன்னணி அரசதூதர், மற்றும் ஆண் அல்லது பெண் ஆனாலும், கிழக்கில் அல்லது மேற்கிலுள்ளவரானாலும், பஹாய் போதகர்களின் ‘பெருமிதம்’ எனும் பட்டம் அவருக்கு வழங்கப்பட வேண்டும்.

விஞ்சிட முடியாத இந்த ஆன்மா, தனது உழைப்பின் தன்மைகளாலும், வென்ற வெற்றிகளின் தரத்தினாலும், அப்துல்-பஹா மேற்கு முழுவதுமான தமது பயணங்களின் போது தமது சீடர்களுக்குத் தாமே எடுத்துக்காட்டிய ஓர் உதாரணத்திற்கு அடுத்த நிலையை உள்ளடக்கியதோ எனும் ஒரு சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

martharoot-grave
ஹவாயி தீவிலுள்ள மார்த்த ரூட்டின் கல்லறை

பஹாவுல்லாவின் சமயத்தின் அருஞ்சேவகரான இவர் அவரது சமயத்திற்கு ஆற்றிய எல்லா சேவைகளிலும், ருமேனியா நாட்டின் அரசியாரின் வாழ்வின் இருள்சூழ்ந்த தருணம் ஒன்றான, கசப்பும், குழப்பமும், துன்பமும் ஒரு நேரத்தில் அந்தப் பேரார்வமும், துணிகரமும் மிக்க முன்னோடி அவ்வரசியாரின் மனதில் ஏற்படுத்திய உடனடி மறுவினையே அதி அற்புதமானதும், முக்கியத்துவமும் மிக்கதும் ஆகும். “பெருந் துக்கமும், உள்ளார்ந்த குழப்பம், துன்பம் ஆகியவை சூழ்ந்திருந்த ஒரு நேரத்தில், எல்லா மகத்துவம் மிக்க செய்திகளைப் போன்றே இதுவும் வந்தடைந்தது; ஆதலால், விதை ஆழமாகப் பதிந்தது,” என அரசியார் தமது கைப்பட எழுதிய ஒரு கடிதத்தில் சான்றளித்துள்ளார்.

மார்த்தா ரூட்டின் வாழ்க்கை, மற்றும் அவர் சமயத்திற்கு எவ்வாறு சேவையாற்றினார் என்பதைப் பற்றி ஆய்வு செய்வது, ஒருமுகமான அர்ப்பணம், தூய்மை மற்றும் தியாகத்துடன் சமயத்தைப் போதிப்பது என்றால் என்பது குறித்து மதிப்புமிகு நுண்ணறிவுகளை அடைவதாகும். பாதுகாவலர், போதகர்களுக்கான ” கட்டுக்கடங்காத காற்றைப்போல் போன்று இருங்கள்” எனும் பஹாவுல்லாவின் அழைப்பை, மார்த்தா ரூட்டில் கண்டும், பல தலைமுறைகள் பின்பற்ற முயலவேண்டிய, கீழ்ப்படிதலுக்கான ஒரு முன்மாதிரியின் உயர்வான நிலையில் அவரை மதித்தார்:

அப்துல்-பஹா தமது உயிலில் வெளிப்படுத்திய இயேசு சீடர்களின் காலடிகளைப் பின்பற்றவேண்டுமெனும் உத்தரவைப் பொறுத்தவரை:”எல்லா பிரதேசங்களிலும் பயணித்திடவும்”, “ஒவ்வொரு நாட்டிலும், யா பஹாவுல்-அப்ஹா எனும் கூக்குரலை” “ஒரு கணங் கூட ஓய்வில்லாமல்” எழுப்பிடவும், இக்காலத்தினரும், வருங்காலத்தலைமுறையினரும் பெருமைப்படுவம், பின்பற்றவும்கூடிய ஒரு கீழ்ப்படிதலை சிரஞ்சீவியான இந்த வீராங்கனை வெளிப்படுத்தினார்.

” கட்டுக்கடங்காத காற்றைப் போன்று”, தமது பயணத்திற்கான “அதி சிறந்த முன்னேற்பாடாக” தமது “முழு நம்பிக்கையையும்” கடவுளில் வைத்து, அதன் ஆணைகளை அத்தருணமே செயல்படுத்திட அவர் முன்னெழுந்திட்ட, அப்துல்-பஹாவின் நிருபங்களில் கிளர்வூட்டும் வகையில் வெளிப்படுத்தப்பட்ட விருப்பத்தை ஏறத்தாழ கடைசி வார்த்தை வரை அவர் செயல்படுத்தினார்: “மிகுந்த வறிய நிலையிலும் கால்நடையாக நடந்தும்கூட இப்பகுதிகளுக்கு நான் பயணம் செய்து, நகரங்களிலும், கிராமங்களிலும், மலைகளிலும், பாலைவனங்களிலும், சமுத்திரங்களிலும், “யா பஹாவுல்-அப்ஹா” என்ற அழைப்பினை எழுப்பி, தெய்வீகப் போதனைகளை விருத்தி செய்ய என்னால் முடியுமாயின்! அந்தோ, இதை என்னால் செய்ய முடியவில்லை. அதற்கு நான் எத்துணைக் கடுமையாக வருந்துகிறேன்! நீங்கள் அதனை நிறைவேற்ற இறைவன் விரும்பிடுவாராக.”

வாழ்க்கை வரலாற்று ஆசிரியரான மேபல் காரிஸை பொறுத்த வரை, அப்துல் பஹாவின் அவ்வார்த்தைகள், மார்த்தா ரூட்டின் உள்ளத்தைச் சூழ்ந்தும், “அவருக்குள் தங்களை உட்புகுத்திக்கொள்ளவும் செய்தன. அவரது சக்திகளுக்கான தூண்டுகோலாகவும், அவரது இல்லத்தை விடுத்து தூர தேசங்களில் இருக்கும் போது அவருக்கு ஆறுதலாகவும் அவை இருந்தன. அப்துல்-பஹா சாதிப்பதற்குத் தடுக்கப்பட்டவற்றை, பஹாய் சமயத்திற்காக மார்த்தா ரூட் செய்தார்.”

போதிப்பதற்கான மார்த்தா ரூட்டின் முயற்சிகளுக்கு பிரார்த்தனையும், தெய்வீக வழிகாட்டுதலுமே நடுமையமாக இருந்தன. “ஒரு நகரத்தில் நான் செயல்பட ஆரம்பித்துவிட்டால், என் உறவினர்களுக்காக ஒரு தபால் கார்டை எழுதுவதற்காகக் கூட நிறுத்தமாட்டேன்,” என அவரே கூறியுள்ளார். எல்லாமே, புனித ஆவி வேகமாக வீசுவதைப் போலாகின்றன. அதனால், லௌகீகங்கள் எதுவுமே முக்கியமற்றதாகிவிடும். அப்துல்-பஹா! பஹாவுல்லா! எனக்கு உதவுங்கள்… நகரத்தின் மக்களும் உதவிடுவார்களாக; அவர்களே எல்லாவற்றையும் சாதிக்கின்றனர்; நான் பிரார்த்தனை மட்டும செய்கின்றேன், வழிகாட்டலைச் செவிமடுத்து, செயல்படுகின்றேன். ஆனால், அது சந்தோஷமான நேரமாகும்.” “எப்போதெல்லாம், போதிப்பதற்காக நான் ஒரு நகரத்திற்குள் நழைந்தாலும், முதலில் நான் அஹமதுவின் நிருபத்தை பத்து முறை கூறுவேன்.” கணக்கிலடங்கா பொது சொற்பொழிவுகள், வானொலி மற்றும் பத்திரிக்கை பேட்டிகள், உலகம் முழுவதுமுள்ள நாழிதள்களில் எழுதப்பட்ட கட்டுரைகள், சுயபோதனை ஆகிவற்றின் மூலம், மில்லியன் கணக்கிலான ஆன்மாக்களுடன் சமயத்தைப் பகிர்ந்துகொண்டார்!

அவர் போதித்த விதமானது மக்களை அவர்பாலும், அவர் பகிர்ந்துகொண்ட செய்தியின்பாலும் வசீகரித்தது; அவர்கள் பஹாய்கள் ஆகாவிட்டாலும், மக்கள் அவரது முயற்சிகளுக்கு ஏதாவது வகையில் உதவிட முன்வந்தனர்.

மார்த்தாவின் உரைகள் ஒரு கல்விமானின் உரைகளல்ல; அவை எளிமையானவை, நேரடியானவை, சொல் அலங்காரமில்லாத, பஹாய் சமயத்தின் ஒன்று அல்லது இரண்டு அம்சங்களிலும், அதன் மையநாயகர்களின் வாழ்க்கைகள் மீதும் கவனம் செலுத்திடும் உரைகளாக இருந்தன. ஆனால், மார்த்தா உரையாற்றும் போது, அவரது எளிமை தன்மைமாற்றமடைந்தது. அவர் ஓர் ஆன்மீக ஒளியுடன் பிரகாசித்தார்; அவரது செய்தி மற்றும் நோக்கத்தின் தூய்மை அவரை ஓர் ஈர்ப்புமிக்கவராக ஆக்கின. அங்கு அகந்தை இல்லை; மனிதகுல ஒருமை, அதை அடைவதற்கான வழி ஆகியவை குறித்த ஒரு தேவையே இருந்தது. அங்கு வாக்குவாதம் இல்லை, உரத்த குரலொலி கிடையாது; அவர் எங்கு சென்ற போதிலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் ஓர் ஆழ்ந்த, ஊடுருவும் அன்பே இருந்தது.

மார்த்தா தமது முயற்சிகளை வெளிப்படையான விதை விதைக்கும் நடவடிக்கைளோடு மட்டுமே கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை.

[சீன நாட்டில்] முன்னாடியாகப் பணிபுரிந்த போது, அவர் சீன சமூகத்தின் ஒரு பகுதியாகி, (மக்களின்) வாழ்க்கைகளை வளப்படுத்திட வேறு வழிகளிலும் முயன்றார்.

தமது பத்திரிகை சாமர்த்தியத்தை வெளிப்படுத்தும் ( ) கிளப் ஒன்றை ஆரம்பித்தார்; பிறகு, அனேகமாக மேற்கத்திய இசைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இசை சார்ந்த கிளப்பையும் ஆரம்பித்தார். இதிலெல்லாம் ஈடுபடுவதற்கு அவருக்கு எங்கிருந்து சக்தியும் நேரமும் கிடைத்தது என்பது ஒரு மர்மமே.

ஒரு புதிய திருவெளிப்பாட்டின் ஒளி தோன்றும் போதெல்லாம், அதை எதிர்ப்பவர்களும் தோன்றுவர். இவ்விதமான எதிர்ப்பு குறித்த இரண்டு வெவ்வேறு தருணங்களைக் காண்பது ஒரு போதனையாக இருக்கும்.

உரைகள் வழங்கப்பட்ட மாநகரங்களிலும், நகரங்களிலும், அரங்குகளிலும், பல்கலைக்கழகங்களிலும், பள்ளிகளிலும், அரங்கங்களிலும் பார்வையாளர்கள் பொதுவாகவே ஏற்பிசைவும், உற்சாகமும் உடையவர்களாக இருந்தனர், ஆனால எப்போதுமல்ல. ஒரு நகரத்தில், சமயத்திற்கு எதிர்ப்பாக இருந்த ஒரு பெண்மணி, மார்த்தாவின் உரை, விளம்பரப்படுத்தப்பட்டது போன்று இல்லை எனவும், மேலும் உரையும் கூட பொருத்தமற்றதாக இருக்கின்றது என ஆர்ப்பாட்டம் செய்தார். அதற்குப் பிரதியாக, மார்த்தா மேடையைவிட்டு இறங்கி, அப்பெண்ணிடம் சென்று, அவரை அன்போடு அரவணைத்துவிட்டு, தம்மிடத்திற்குத் திரும்பிவந்தார். ஆர்ப்பாட்டம் செய்தவர் குழப்பமடைந்தார்; தமது வாதத்திற்கு அது எதிர்ப்பார்க்கப்பட்ட பதிலாக இல்லை. மார்த்தா அந்த ஆர்ப்பாட்டத்தினால் சற்றும் தொல்லையின்றி தமது உரையைத் தொடர்ந்தார்.

ஒரு முறை, ஒரு பிட்ஸ்பர்க் தங்கும் விடுதியில் ரோய் வில்ஹெல்ம் உரையாற்ற வேண்டியிருந்தது; அவ்வேளை இரான் நாட்டிலிருந்து திரும்பியிருந்த ஒரு மதபோதகர், அங்கு வந்து மார்த்தா ரூட்டிடம் பேசவேண்டுமென்றார். மார்த்தா அவரைப் பக்கத்திலிருந்த ஓர் அறைக்கு அழைத்துச் சென்றும், அவர் வெளிப்படுத்திய எதிர்ப்பைக் கண்டுகொண்டும், அவர் கூட்டத்தை களைத்திடும் நோக்கத்துடனேயே அங்கு வந்திருந்தார் என்பதையும் அறிந்தார். மார்த்தா அவரை அங்கிருந்து வெளியேறும்படி கண்டிப்புடன் கேட்டுக்கொண்டார். கூட்டம் எவ்வித இடையூறுமின்றி, திட்டமிடப்பட்டது போன்று தொடர்ந்தது.

போதித்தலின்பால் அவர் கொண்டிருந்த முழுமையான அர்ப்பணமும், சமயத் தலைமைத்துவத்தின் மீது சார்ந்திருந்த்தல், மற்றும் அதன் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிதலே மார்த்தா ரூட்டின் தொடர்ச்சியான, ஏறத்தாழ அதிசயமான முறையில் நடந்த வெற்றிகளுக்கான காரணமாகும். அவர் சமயத்திற்காக சேவையாற்ற முனைந்த போது, அவர் தமக்குள் தன்னல எண்ணங்கள், பொருளாதார பிரச்சனைகள், அல்லது பிறரிடமிருந்து உதவி ஏதும் இல்லாமை ஆகியவை, பஹாவுல்லாவிற்காக, என்ன செய்யப்பட வேண்டும், மற்றும் என்ன செய்யப்படக்கூடும் என்பதற்குத் தடங்கல்களாக விளங்கிட அனுமதிக்கவில்லை. “உருவாக்கக் காலத்தால் வழங்கப்பட்ட அதிசிறந்த கனிகள்” என அவரது வாழ்க்கையை விவரிக்கும் போது, பாதுகாவலர் பின்வருமாறு கூறுகின்றார்:

வயது அல்லது உடல்நோய், அவரது ஆரம்ப முயற்சிகளுக்கு இடயூறாக விளங்கிய இலக்கியங்கள் இல்லாமை, அல்லது தமது ஊழியத்தின் மீது மேலும் சுமைகளை ஏற்படுத்திய குறைந்த அளவிலான பொருள்வளங்கள், அல்லது அவர் அனுபவிக்க வேண்டியிருந்த கடுமையான சீதோஷ்ன நிலைகள், அல்லது தமது பயணங்களின்போது அவர் எதிர்நோக்கிய அரசியல் இடையூறுகள், எதுவுமே ஆன்மீக ரீதியில் ஆற்றலுமிக்க, பரிசுத்தமான அப்பெண்மணியின் உற்சாகத்தை குறைக்கவோ, கவனத்தைத் திருப்பவோ முடியவில்லை. ஒரு கொடிய, வேதனைமிகுந்த, வீரமிகு மனோபலத்துடன் அவர் சகித்துக்கொண்ட ஒரு நோய் அவரைத் தாக்கி வீழ்த்தியது வரை, தனியாகவும், பலமுறை மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலும், எக்காளக் குரலில், பஹவுல்வாவின் நற்செய்தியின்பால் பல்வேறு நம்பிக்கைகளையும், நிறங்கள், வகுப்புகள் சார்ந்த மக்களை, அவர் அழைத்தே அழைத்தார்.

“மார்த்தா உலகை வலம் வந்தபோது, அவரது பிரசன்னம் பணிவு மிகவும், தன்னினைவின்றியும், உணரக்கூடிய ஓர் அன்புணர்வை வெளிப்படுத்துவது போன்றுமிருந்தது. அவர்களைச் சென்றடைந்திட அவர் எடுத்த முயற்சிகளின் பயனாகவே, பன்மடங்கான, வேறுபட்ட மனிதர்களின் வாழ்க்கைகளை அவர் மாற்றியமைத்தார்.” “ஐக்கிய அமெரிக்காவில் தெய்வீகத் திட்டத்திற்கான நிருபங்கள் வெளியிடப்பட்ட அதே வருடத்தில், தெய்வீகத் திட்டத்திற்கான நிருபங்களின் அப்துல்-பஹாவினால் உரைக்கப்பட்ட சகாப்த முக்கியத்துவமிக்க ஆணைகளுக்கு மறுவிணையாக, முன்னெழுந்த முதலாமவர்; தமது உள்ளமும், பார்வையும் பஹாவுல்லாவின் சக்தி மற்றும் பேரொளியின் மீது நிலைப்படுத்தப்பட்ட மார்த்தா ரூட், வழுவாத தீர்மானத்துடனும், விழுமிய பற்றின்மையோடும், நான்கு முறை உலகையே வலம் வரச்செய்த, தமது இடைவிடாத இருபது வருடகால உலகப் பயணங்களில் ஈடுபட்டார்”; தமது ஆரம்பப் பயணங்களின்போது அப்துல் பஹாவுக்கு மார்த்த அனுப்பிய ஓர் அறிக்கையில் அப்துல் பஹா வெளிப்படுத்திய பின்வரும் எதிர்ப்பார்ப்புகளை அவர் பொருத்தமுறவே நிறைவேற்றினார்.

புனிதமிகு பஹாவுல்லாவின் ஆசிகளிலிருந்து, நீர் அவரது பாதையில் சுயத்தியாகம் செய்பவராகவும், நீர் ஓய்வு, அமைதி ஆகியவற்றை மறந்தும், விரைவாகப் பறக்கும் ஒரு பறவையைப் போன்று, நீண்ட தூரங்களை நீர் கடந்தும், எந்தெந்த நாட்டில் நீர் தங்கியபோதும், அங்கு நீர் இராஜ்யத்தின் கீதத்தை இசைத்தும், அதிசிறந்த தாளத்துடன் பாடல்களிலும், இசையிலும் ஈடுபடக்கூடும் என்பதே என் எதிர்ப்பார்ப்பாகும்.

நீர் புனித நிலத்திற்கு வருகையளித்திட வேண்டும், அதன் மூலமாக நான் உம்மைச் சந்தித்திட வேண்டுமென்பதே எனது பெரும் ஆவலாகும்; ஆனால், ஆனால் போதிக்கும் செயலே யாவற்றுக்கும் மேலாக முன் நிற்கின்றது, மற்றும் நீர் விரும்பினால், உலக மண்டலங்கள் அனைத்திலும் அதைப் பரப்புவதில் ஈடுபடுவீராக.

ஒரு பெட்டியில் அடக்கம்!


Continue reading “ஒரு பெட்டியில் அடக்கம்!”

அவளுக்குஅவன் (HeForShe)


அவளுக்குஅவன் (HeForShe) – 20 செப்டம்பர் 2014ல் எம்மா வாட்ஸன் (Emma Watson)  ஐநா-வில் ஆற்றிய ஓர் உரை

<http://www.heforshe.org/&gt;

(இது ஒரு தற்காலிக மொழிபெயர்ப்பு)

இன்று, HeForShe எனப்படும் ஓர் இயக்கத்தை ஆரம்பிக்கின்றோம். எங்களுக்கு உங்கள் உதவி தேவைப்படுவதால் உங்களை அணுகுகின்றோம். மாற்றத்திற்கான பேச்சாளர்களாக முடிந்த அளவு அதிகமான முதிய மற்றும் இளம் ஆண்களைத் திரட்ட வேண்டும். அதைப் பற்றி பேசிக்கொண்டிருக்க மட்டும் முடியாது. அதை நடைமுறையான ஒன்றாக ஆக்கிட நாங்கள் முயலுகின்றோம். ஐநா-வின் நல்லெண்ணத் தூதுவராக நான் ஆறு மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டேன்

பெண்ணியம் (feminism) குறித்து நான் அதிகமாகப் பேசப் பேச, பெண்கள் உரிமைக்காகப் போராடுவது பெரும்பாலும் ஆண்களை-வெறுத்தல் என்பதன் இணைபொருளான ஒன்றாக ஆகிவிட்டது. ஒன்று மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிகிறது, இந்த நிலைமை ஒரு முடிவிற்கு வரவேண்டும். பெண்ணியம் என்பது பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமவுரிமையும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டும். இதுவே அரிசியல், பொருளாதார மற்றும் சமூக நிலையிலான பாலின சமத்துவம் குறித்த கோட்பாடாகும்.

எங்களின் பெற்றோருக்காக ஒரு நாடகத்தை நானே இயக்க விரும்பியதால் எனது 8 வயதில், நான் போஸ்ஸியாக (bossy) இருக்கின்றேன் என்றனர். எனக்கு 14 வயதானவுடன், ஊடகத்தின் சில பகுதியினர் என்னை பாலியல் பகுப்பிற்கு உட்படுத்தப்படுத்திட ஆரம்பித்தனர். எனது 15 வயதில் என் தோழிகள், ஆண்மைத்தனத்தோடு தங்களைக் காண்பித்துக்கொள்ள விரும்பாமல் விளையாட்டுக் குழுக்களிலிருந்து விலக ஆரம்பித்தனர். என் 18 வயதில் என் ஆண் தோழர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திட முடியாமல் தவித்தனர்.

harry-reliquias-806

ஆகவே, நான் ஒரு பெண்ணியல்வாதி என நான் முடிவு செய்தேன். அது சிக்கலான ஒன்றென எனக்குப் படவில்லை. ஆனால் நான் சமீபமாக மேற்கொண்ட ஆய்வின்படி பெண்ணியம் என்பது ஒரு வேண்டத்தகாத வார்த்தையாக ஆகியுள்ளது தெரியவருகின்றது. பெண்கள் தங்களை பெண்ணியல்வாதிகளாகக் காண்பித்துக்கொண்டிட விரும்புவதில்லை. உண்மையில் பெண்ணிய வெளிப்பாடு வன்மைமிக்க, அடாவடியான, தனிமைப்படுத்துகின்ற மற்றும் ஆண்-எதிர்ப்பாகவும் கவர்ச்சியற்ற ஒன்றாகவும் கருதப்படுகின்றது.

இந்த வார்த்தை ஏன் மனதில் ஓர் அசௌகர்ய உணர்வைத் தோற்றுவிக்கவேண்டும்? என் ஆண் சகப்பணியாளர்களுக்குச் சமமாக எனக்கு ஊதியம் வழங்கப்படுவது நியாயமே என நான் நினைக்கின்றேன். என் உடல் குறித்த சொந்த முடிவுகளைச் செய்திடும் உரிமை எனக்கு வேண்டு. என் வாழ்வைப் பாதிக்கக்கூடிய தீர்மாணங்களிலும் முடிவுகளிலும் பெண்கள் சம்பந்தப்பட்டிருப்பது சரியே. சமூக ரீதியில் ஆண்களைப் போன்றே எனக்கும் சம மரியாதை வழங்கப்படுவது சரியே.

ஆனால் துரதிர்ஷடவசமாக, பெண்கள் இவ்வுரிமைகள் அனைத்தையும் அனுபவிக்கக்கூடிய ஒரு நாடு கூட இவ்வுலகில் இல்லை என்றே நான் கூறுவேன். பாலின சமத்துவத்தை அடைந்துவிட்டதாக எந்த ஒரு நாடும் இன்று கூறிக்கொள்ள முடியாது. இவ்வுரிமைகள் மனிதவுரிமைகளைச் சார்ந்தவை, ஆனால் நான் மட்டும் அதிர்ஷ்டம் செய்தவளாக இருக்கின்றேன்.

நான் ஒரு பெண்ணாகப் பிறந்ததினால் என் பெற்றோரின் அன்பு எனக்கு எவ்விதத்திலும் குறைந்துவிடவில்லை. அவ்விதத்தில் நான் கொடுத்து வைத்தவள். நான் பெண் என்பதால் என் பள்ளி வாழ்க்கையும் ஓர் எல்லைக்குட்படவில்லை. எனது அறிவுறையாளர்கள் வருங்காலத்தில் நான் ஒரு தாயாகும் சாத்தியத்தினால் வாழ்க்கையில் நான் பெரும் சாதனைகள் புரிந்திட முடியாது என்று நினைக்கவில்லை. இச்சூழல்களே இப்போது நான் அடைந்துள்ள மேம்பாட்டிற்கான பால்மை சமத்துவத்திற்கான பாலங்கள். அவர்களுக்கு அது தெரியாதிருக்கலாம், ஆனால் அவர்களே இன்று உலகிற்குத் தேவைப்படும் மற்றும் தெரியாமலேயே செயல்படும் பெண்ணியர்களாவர். இவர்கள் மேலும் அதிகமாத் தேவைப்படுகின்றனர்.

பெண்ணியம் எனும் வார்த்தை இன்னமும் உங்கள் மனதில் ஓர் அசௌகர்யத்தை ஏற்படுத்தினாலும் அவ்வார்த்தையானது முக்கியமன்று. அதன் கருத்தும் அதன் பின்னணியில் வீற்றிருக்கும் பேரார்வமுமே முக்கியமாகும், ஏனெனில் நான் பெற்றிட்ட அதே உரிமைகளை எல்லா பெண்களுமே பெற்றிடவில்லை. வெகு சிலரே அந்நிலையை அடைந்துள்ளனர்.

1997ல் பெய்ஜிங் நகரில் பெண்கள் உரிமை குறித்து ஹில்லரி கிலின்டன் ஒரு பிரபலமான உரையாற்றினார். துரதிர்ஷ்ட வசமாக, அவர் அன்று கோரியிருந்த மாற்றங்கள் இன்றும் தேவைப்படுகின்றன. அக்கூட்டத்தில் ஆண்களின் பங்கேற்பு 30 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருந்தது. ஆகவே, உலகின் பாதி மட்டுமே அவ்வுரையாடலில் பங்கேற்றிட அழைக்கப்படுகையில் அல்லது வரவேற்கப்படுவதாக உணரும் நிலையில் உலகில் மாற்றங்களைக் கொண்டுவருவது எவ்வாறு?

ஆண்களே, இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி உங்களுக்கு முறைப்படியான அழைப்பு ஒன்றை விடுக்கின்றேன். பால்மை சமத்துவம் உங்களையும் சார்ந்த ஒரு பிரச்சினையாகும். ஏனெனில், பெற்றவர் எனும் முறையில் என் தந்தையின் பங்கு சமுதாயத்தால் சற்று குறைவாகவே மதிப்பிடப்படுவதை நான் காண்கின்றேன். மனநோய்க்கு ஆளான ஆண்களைக் கண்டிருக்கின்றேன். அவர்கள் தங்களின் ஆண்மைக்குப் பங்கம் விளைந்துவிடுமோ எனும் உணர்வில் உதவி கேட்க முடியாமல் தவிக்கின்றனர். பொருண்மையாக, ஐக்கிய அரசில் (UK) 20லிருந்து 49 வயதுக்கு உட்பட்டோரின் மரணத்திற்குச் சாலைவிபத்துகள், புற்றுநோய், இருதயநோய் ஆகியவற்றிற்கும் மேற்பட்டு தற்கொலையே முக்கிய காரணமாக இருக்கின்றது. ஆண்மையின் வெற்றி என்கையில்,  நலிந்துபோன மற்றும் மனவுறுதியற்ற ஆண்களை நான் கண்டிருக்கின்றேன். ஆண்களுக்கும் சமத்துவத்தின் பலன்கள் கிடையாது.

ஆண்களும் ஆண் பால்மைத்தன்மைக்கு அடிமைப்பட்டுள்ளதாக நாம் பெரும்பாலும் கூறுவதில்லை, ஆனால் அவர்கள் அவ்வாறு அடிமைப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை. அவர்கள் அதிலிருந்து விடுபடும்போது, அதன்விளைவாகப் பெண்கள் நிலையும் இயல்பாகவே மாற்றம் காணும். ஆண்கள் தங்கள் நிலையை நிலைநாட்டிக்கொள்ளக் கடுமையாக நடந்துகொள்ளவிட்டால் பெண்களும் கீழ்ப்படிந்திட வற்புறுத்தலுக்கு உட்பட வேண்டியதில்லை. ஆண்கள் கட்டுப்படுத்த வேண்டியதில்லை எனும்போது, பெண்களும் கட்டுப்படுத்தப்பட வேண்டியதில்லை.

ஆண் பெண் இருவருமே உணர்திறத்தில் தயக்கம் காண்பிக்கக்கூடாது. இருவரும் உறுதிப்பாடு உடையவர்களாக இருக்கவேண்டும். பால்மையை நேரெதிரான இரண்டு இலட்சியத் தொகுப்புகளாகக் காண்பதினின்று அதை ஒரு நிறமாலையாகக் (spectrum) காணவேண்டிய காலம் கனிந்துவிட்டது. நாம் யாராக இல்லையோ அதை விடுத்து நாம் யார் என்பதைக் கொண்டே நம்மை நாம் வரையறுத்துக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் மேலும் சுதந்திரமாக இருக்கலாம், இதுவே “அவளுக்குஅவன்” என்பதின் கருப்பொருளாகும். அது சுதந்திரம் பற்றியது. ஆண்கள் இந்நிலையை அடைந்திட வேண்டும். அதன் மூலம் அவர்களின் மகள்களும் சகோதரிகளும் தாய்மார்களும் தப்பெண்ணங்களிலிருந்து விடுபடுவதோடு அவர்களின் மகன்களும் இழகியமனம் பெறவும் மனிதர்களாகச் செயல்படவும் வாய்ப்புகள் பெற்றும் தாங்கள் இயல்பாகப் பெற்றிரிருந்தும் கைவிட்டுமிருந்தவற்றை மீண்டும் பெற்றும் அதன்மூலம் தங்களின் உண்மையான மற்றும் பூரணமான நிலையை அடையலாம்.

இந்த ஹேரி பொட்டர் பெண் யார் என நீங்கள் நினைக்கலாம். இவளுக்கு ஐ;நாவில் என்ன வேலை? நானும் எனக்கு நானே அதே கேள்வியைத்தான் கேட்டு வந்துள்ளேன். எனக்குத் தெரிந்ததெல்லாம், இப்பிரச்சினை குறித்து நான் அக்கறை கொண்டுள்ளேன் மற்றும் அதை சரிபடுத்திடவும் விரும்புகின்றேன். வாழ்க்கையில் நான் கண்டுள்ளவற்றின் அடிப்படையில், வாய்ப்பளிக்கப்படுமானால், என் பங்கிற்கு நானும் எனக்குத் தெரிந்ததைக் கூறு விரும்புகின்றேன். நல்ல ஆண்கள், பெண்கள் ஆகியோரின் செயல்படாமையே தீய சக்திகள் வெற்றிபெறுவதற்குத் தேவையான சூழலாகும் என அரசியல் மூதறிஞரான எட்மன்ட் பர்க் கூறியுள்ளார்.

இவ்வுரைக்காக நான் நடுங்கியும் நம்பிக்கையிழந்திருந்தபோது, நானின்றி வேறு யார் என எனக்கு நானே கூறிக்கொண்டேன். இப்பொழுதில்லாவிட்டால் எப்பொழுது? வாய்ப்புகள் ஏற்படும்போது சந்தேகங்கள் எழுகையில் அவ்வார்த்தைகள் உபயோகமாக இருக்கும் என நான் நம்புகின்றேன். நாம் ஒன்றும் செய்யாது இருந்தால் ஒரே விதமான பணிக்கு, பெண்கள் ஆண்களுக்குச் சமமான ஊதியம் பெறுவதற்கு இன்னும் 75 அல்லது 100 ஆண்டுகள் கடந்திடலாம் என்பதே உண்மை. அடுத்த 16 வருடங்களுக்குள் 15.5 மில்லியன் பெண் பிள்ளைகள் பால்ய விவாகத்திற்கு உட்படுத்தப்படுவார்கள். இப்போதுள்ள நிலையில், ஆப்பிரிக்கப் பெண்கள் அனைவரும் உயர்நிலை கல்வி பெறுவதற்கு வருடம் 2086 ஆகிவிடும்.

நீங்கள் பால்மை சமத்துவத்தை விரும்புகிறவர் என்றால் நான் ஏற்கனவே கூறிய, அதிர்ஷ்டவசமாக உதித்த பெண்ணியவாதிகளுள் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடும். அதற்காக நான் உங்களை வாழ்த்துகின்றேன். நாம் ஓர் ஒற்றுமையான உலகிற்காகப் பாடுபட வேண்டும். இதில் ஒரு நற்செய்தி என்னவென்றால் நமக்கு அதற்கான ஒரு தளம் அமைத்துள்ளது. <http://www.heforshe.org/>அதுதான் “HeForShe” என அழைக்கப்படுகின்றது. முன்னெழுந்து, முன்வந்து, நான் இல்லையெனில் வேறு யார்? இப்பொழுது இல்லையெனில் வேறு எப்பொழுது? என உங்களை நான் கேட்கின்றேன்.

இதுபோன்ற கருத்தில் ஓர் உரை: http://goo.gl/D8Scpd

பஹாய் தலைமையகம் இஸ்ரேல் நாட்டில் அமைந்திருப்பது ஏன்?


பஹாய் புனித ஸ்தலங்கள் இஸ்ரேல் நாட்டில் இருப்பது ஏன்?

அன்பான பிரபுவே, நீர் மனிதர்கள் யாவரையும் ஒரே இனத்திலிருந்து  ஆக்கியுள்ளீர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினராக வாழ விதித்துள்ளீர். உமது தெய்வீக முன்னிலையில் அவர்களெல்லாரும் உமது ஊழியர்களே…(பஹாய் பிரார்த்தனைகள்-பஹாவுல்லா)

இன்று இரான் நாட்டிலுள்ள பஹாய்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். பலவிதமான குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்படுகின்றன. பஹாய்கள் அமெரிக்க ஒற்றர்கள், இஸ்ரேலின் ஒற்றர்கள், பிரிட்டிஷ் ஒற்றர்கள், ரஷ்ய நாட்டோடு அரசியல் தொடர்புகொண்டவர்கள், அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படுகின்றனர் எனப் பலவாறாக குற்றஞ் சாட்டப்படுகின்றனர்.

bab_34-Shrine2-460
பாப் பெருமானாரின் நினைவாலயம்

அதுமட்டுமல்லாது, பஹாய்கள் கடைப்பிடிக்கும் ஆண் பெண் சமத்துவத்தின் காரணமாக, அவர்கள் ஒழுக்கக் கேடுடையவர்கள் எனவும் குற்றஞ்சாட்டுகின்றனர். இன்று இரானிய பஹாய் நம்பி்க்கையாளர்கள் பஹாய்கள் எனும் காரணத்தினால் பணிநீக்கம் மற்றும் வியாபார முடக்கம் ஆகியவற்றை எதிர்நோக்குகின்றனர். பள்ளிகளில் துன்புறுத்தப்படுவதோடு பல்கலைக்கழகங்களிலிருந்து நீக்கப்படுவது போன்ற பல கொடுமைகளுக்கும் பஹாய் மாணவர்கள் ஆளாகிவருகின்றனர்.

பஹாய்கள் மீது சுமத்தப்படும் முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, பஹாய்களின் உலக நிலையம் இஸ்ரேல் நாட்டில் உள்ளது என்பதேயாகும். இதனால், பஹாய்கள் இஸ்ரேல் நாட்டிற்கு விசுவாசமாக இருப்பவர்கள், அவர்கள் அந்நாட்டின் ஒற்றர்கள் என இரான் அரசாங்கம் குற்றம் சுமத்துகின்றது. இக்குற்றச்சாட்டு உட்பட மற்ற மற்ற அனைத்துமே பொய்யென நிரூபிக்கப்பட்போதும், இரான் அரசாங்கம் இத்தகைய குற்றச்சாட்டுகளையும் இவை போன்று மேலும் பல கற்பனையான குற்றச்சாட்டுகளையும் கைவிடவில்லை. இவ்விதமான பொய்க் குற்றச்சாட்டுகளுக்கான மூலகாரணம், ஒன்று மட்டுமே. நபியவர்கள் எல்லா நபிகளின் வரிசையில் இறுதியானவர் என்பதாகும். அவருக்குப் பிறகு வேறு நபி எவரும் கிடையாது எனக் கூறப்படுகின்றது. ஒரு வகையில் இஃது உண்மைதான். நபியவர்கள் தீர்க்கதரிசிகளுள் இறுதியானவராவார். அவருக்குப் பிறகு இனி தீர்க்கதரிசிகள் அல்லது நபிகள் என எவருமே உலகில் தோன்றப்போவதில்லை.

ஆனால், இஸ்லாம் சமயத்தில் இறைத்தூதர்களுள் இருவகையினர் உள்ளனர் எனக் கூறப்படுகின்றது, அதாவது நபி, இரஸூல் என இரு வகையினராவர். இவர்களுக்கிடையே பல ஒற்றுமைகள் உள்ளன அதே சமயம் வேற்றுமைகளும் உண்டு. இதன் தொடர்பில் நபியவர்கள் இனி நபிகள் யாரும் கிடையாது எனக் கூறினாலும் இனி இரஸூல்கள் யாரும் கிடையாது எனக் கூறவில்லை. மேலும், இஸ்லாத்தில் சுன்ன வகுப்பினரிடையே இயேசு பிரான் உலகில் மீண்டும் தோன்றுவார் எனும் நம்பி்க்கையுள்ளது. அதே போன்று ஷியா வர்க்கத்தினரிடையே அவர்களின் 12வது இமாமாகிய இமாம் மஹதி மீண்டும் பூமியில் அவதரிப்பார் எனும் நம்பிக்கையும் உண்டு. ஆகவே, நபியவர்களுக்குப் பிறகு வேறு இறைத்தூதர்கள் இனி கிடையாது எனும் கூற்று சற்று முரண்பாடான ஒன்றாக இருக்கின்றது.

1844ல் சையிட் அலி முகமது அல்லது பாப் (திருவாசல்) எனும் பெயருடைய ஓர் இளைஞர் உலகம் எதிர்ப்பார்த்திருந்த, எல்லா சமயங்களும் முன்கூறிய அவதாரம், தாமே எனப் பிரகடனம் செய்தார். தமக்குப் பிறகு தோன்றவிருக்கும் மற்றொரு மாபெரும் அவதாரத்திற்குத் தாம் ஒரு ‘வாசல்’ அல்லது முன்னோடி என அறிவித்தார். அதைத் தொடர்ந்து நாடே அல்லோல கல்லோலப்பட்டது. ஆயிரக்கணக்கான பாப் பெருமானாரின் சீடர்கள் கொலை செய்யப்பட்டனர். பாப் அவர்களும் மரண தன்டனைக்கு ஆளானார்.

baha_shrine_2
பஹாவுல்லாவின் நினைவாலயம்

பாப் அவர்களைக் கொலை செய்ததோடு மட்டுமின்றி, அவருடைய திருவுடல் ஒரு மதகில் வீசப்பட்டதுடன் அது மிருகங்களுக்கு இறையாகக்கூடும் எனவும் அதிகாரிகள் நினைத்தனர். ஆனால், கடவுளின் திருவருளால் அவரது உடல் மீட்கப்பட்டு சுமார் அறுபது வருட காலம் இங்கும் அங்குமாகப் பாதுகாக்கப்பட்டு இறுதியில் அந்நாளில் ஓட்டமான் அரசாங்கத்தின் கீழிருந்த பாலஸ்தீனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு ஹைஃபா நகரின் கார்மல் மலைமீது நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாப் அவர்களின் மறைவுக்குப் பிறகு பஹாவுல்லாவை பாப் அவர்களின் நம்பிக்கையாளர்களின் தலைவர் எனத் தீர்மானித்த இரான் அரசாங்கம் அவரை ஒரு பாதாளச் சிறையில் நான்கு மாதகாலம் அடைத்துவைத்தது. பிறகு அவர் நாட்டை விட்டே வெளியேற வேண்டுமெனவும் உத்தரவிட்டது. இதனால், அவர் முதலில் இராக் நாட்டின் பாக்தாத் நகருக்கும், பிறகு துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லிற்கும் அதன் பிறகு அதே நாட்டின் எடிர்னே எனப்படும் ஏட்ரியாநோப்பிளிற்கும் நாடுகடத்தப்பட்டார். இறுதியில் அவரது நம்பிக்கையாளர் எண்ணிக்கையின் அதிகரிப்பினாலும் அவரை எதிர்த்தவர்களின் செயல்களாலும் ஓட்டமான் அரசாங்கத்தின் சிறை நகரான ஆக்காவிற்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்குச் சிறை வைக்கப்பட்டார். இந்த நகரின் விசேஷம் என்னவெனில், இந்நகரின் மீது ஒரு பறவை பறந்தால் அஃது அப்பொழுதே அங்கேயே வீழ்ந்து இறந்துவிடும் என்பதாகும். அவ்வளவு மோசமான நிலையில் அந்த நகரம் அன்றிருந்தது.

பஹாய் உலக நிலையம்
பஹாய் உலக நிலையம்

பஹாவுல்லா ஆக்கா சிறை சென்றது 1868 ஆகஸ்ட் மாதம். பாலஸ்தீனம் எனப்படும் அப்பிரதேசம் கி.பி. 1918 வரை துருக்கியர் வசமிருந்தது. கி.மு. 1920க்குப் பிறகு முறைப்படி பிரிட்டிஷ் மேலாதிக்கத்தின் கீழ் வந்தது. அதன் பிறகு யூதப் பகுதியையும் அரபுப் பகுதியையும் தனித் தனியாகப் பிரித்து இரண்டு நாடுகளாக்கிட ஐ.நா தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வாக்கெடுப்பினை நடத்தியது. வாக்கெடுப்பு யூதர்களுக்குச் சாதகமாக அமைந்தது. ஆனால், அரபு நாடுகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 1948ல் யூதர்கள் சுதந்திரப் பிரகடனம் செய்து தங்கள் நாட்டிற்கு இஸ்ரேல் எனப் பெயரிட்டனர். பிறகு போர் மூண்டு யூதர்கள் தங்கள் வசமிருந்த சிறிது நிலத்தையும் பன்மடங்காகப் பெருக்கிக்கொண்டு இஸ்ரேல் எனும் நாட்டை நிலைநிறுத்திக்கொண்டனர்.

இதன் விளைவாக ஹைஃபா மற்றும் ஆக்கோவிலிருந்த பஹாய் புனிதஸ்தலங்கள் இஸ்ரேல் நாட்டிற்குள் சிக்கிக்கொண்டன. பஹாவுல்லாவின் ஒரு முக்கிய போதனை என்னவெனில், பஹாய்கள் எங்கெங்கு வசித்த போதிலும் அவர்கள் தாங்கள் வசிக்கும் நாட்டிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் கடவுளுக்கே துரோகம் செய்பவர்கள் என பஹாவுல்லா வலியுறுத்தியுள்ளார். ஆகவே, பஹாய்கள் அவரவர் நாட்டிற்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதோடு, இஸ்ரேலில் உள்ள பஹாய் தலைமையகமும் இஸ்ரேல் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிந்தே ஆகவேண்டும்.

300px-Map_iran_ottoman_empire_banishment
திஹரானிலிருந்து ஆக்கா வரையிலான பஹாவுல்லாவின் நாடுகடப்பு

உலகம் முழுவதுமுள்ள பஹாய் சமூகத்தினர் தாங்கள் வசிக்கும் நாடுகளில் கொண்டிருக்கும் சுமுகமான உறவுகள் போன்று பஹாய் தலைமயையகமும் இஸ்ரேல் நாட்டோடு ஒரு சுமுகமான உறவைக் கொண்டுள்ளது. அதே சமயம் பஹாய் தலைமையகம் இஸ்ரேல் நாட்டிடமிருந்து எவ்வித உதவியையும் பெறவுமில்லை எதிர்ப்பார்க்கவுமில்லை. பஹாய் தலைமையகம் பொருளாதார ரீதியின் தன்னிச்சையானது. அது இஸ்ரேல் அரசாங்கத்தோடு எவ்வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்பதோடு அதனுடன் எதற்காகவும் ஒத்துழைக்கவுமில்லை. இஸ்ரேலிலுள்ள பஹாய் சொத்துடைமைகள் அனைத்துமே பஹாய்கள் வழங்கிடும் நிதிகளின் மூலமாகக் கொள்முதல் செய்யப்பட்டவை.

ஆக, பஹாய் தலைமையகம் இஸ்ரேல் நாட்டில் இருப்பதற்கு நிச்சயமாகவே பஹாய்கள் காரணமல்ல, அதற்கு அரசியல் பிரச்சினைகளே காரணம். பஹாவுல்லாவின் கோட்பாடான “உலகம் ஒரே நாடு மனிதர்கள் அதன் பிரஜைகள்” என்பதற்கிணங்க மனிதர்கள் வாழும் காலம் வரும்போது இத்தகைய இன, சமய மற்றும் அரசியல் பிரச்சினைகள் கடவுளின் திருவிருப்பத்திற்கு இணங்க  நீங்கிவிடும்.

லிடியா ஸாமென்ஹோஃப்


lidya-zamenhof

 

லிடியா ஸாமென்ஹோஃப்

யூத இனத்தவரான லிடியா ஸாமென்ஹோஃப் (1904-1942) எஸ்பரான்டோ (Esperanto) துணைமொழியின் உருவாக்குனரான லுட்விக் ஸாமென்ஹோஃப்’இன் மகளாவார், தாயாரின் பெயர் கிலாரா ஸாமென்ஹோஃப். இவர் போலாந்து நாட்டின் வார்ஸோ நகரில் ஜனவரி 29, 1904ல் பிறந்தவராவார். போலாந்து நாடு அப்பொழுது ருஷ்ய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இவர் தமது தந்தை உருவாக்கிய எஸ்பரான்டோ துணை மொழியின் தீவிர ஆதரவாளராக இருந்ததோடு திரு ஸாமென்ஹோஃப் வரையறுத்திருந்த ‘ஹோமாரானிஸ்மோ’ எனப்படும் மதச் சார்புடைய ஒருவித மனிநேயத்தின் மேம்பாட்டை ஊக்குவிப்பவராக இருந்தார்.

ஏறக்குறைய 1925ல் இவர் பஹாய் சமயத்தில் ஓர் உறுப்பினரானார். பிறகு 1937ல் பஹாய் சமயத்தையும் எஸ்பரான்டோ மொழியையும் போதிப்பதற்காக ஐக்கிய அமெரிக்காவிற்கு விஜயம் செய்தார். அதே வருடம் டிசம்பர் மாதத்தில் அவர் போலாந்து நாடு திரும்பினார், தொடர்ந்து பஹாய் சமயத்தைப் போதித்தும் பல பஹாய் திருவாசகங்களை போலாந்து மொழிக்கு மொழிபெயர்க்கவும் செய்தார். போலாந்து நாட்டின் இன அழிப்புப் பேரிடரின் போது 1942ல் இவர் டிரெப்லிங்கா (Treblinka) மரணமுகாமில் கொலை செய்யப்பட்டார்.

லிடியா ஸாமென்ஹோஃப் தமது ஒன்பது வயதிலேயே எஸ்பரான்டோ மொழியை கற்றார். பதினான்கு வயதில் பல இலக்கியங்களைப் போலாந்து மொழிக்கு மொழிபெயர்த்தார். பல வருடங்களுக்கு இவரின் மொழிபெயர்ப்புகள் தொடர்ச்சியாகப் பிரசுரமாயின. 1925ல் தமது பல்கலைக்கழக சட்டப்படிப்பை முடித்தவுடன், எஸ்பரான்டோ மொழியின் மேம்பாட்டிற்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார். அதே வருடம் 1925ல் ஜெனேவாவில் நடந்த உலக காங்கிரசின்போது பஹாய் சமயத்திப்பால் அறிமுகமானார். போலாந்து நாட்டின் மனிதநேய/எஸ்பரான்டோ சங்கத்தின் இணக்க நிகழ்வின்போது அதன் செயலாளராகி, பல நிகழ்வுகளுக்குப் பேச்சாளர்களையும் உரைகளையும் ஏற்பாடு செய்தார். 1924 வியன்னா உலக காங்கிரஸிலிருந்து  அதற்குப் பிறகு  நடந்த எல்லா மாநாடுகளிலும் கலந்துகொண்டார். (அவ்வேளை அவர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்ததால், 1938ல் நடந்த மாநாட்டில் மட்டும் அவர் கலந்துகொள்ளவில்லை.) ‘ட்ஸே’ முறையில் எஸ்பரான்டோ மொழியைக் கற்பிப்பவர் எனும் முறையில் அவர் பல்வேறு நாடுகளுக்கு ஊக்குவிப்பு விஜயங்கள் செய்தார், பல பயிற்சிகளையும் நடத்தினார்.

அனைத்துலக மாணவர் கூட்டு, ஐக்கிய அரபு எமிரேட், ட்சே பயிற்சிக்கழகம் மற்றும் பஹாய் சமூகங்களில் தமது பணிகளை அவர் ஆக்கத்துடன் ஒருங்கிணைத்தார். ‘லிட்டெராட்டுரா மொன்டோ’ பத்திரிகைக்கு பல கட்டுரைகளை, பெரும்பாலும் போலாந்து இலக்கியங்களை, எழுதியதோடு ‘போலா எஸ்பெரான்டோ’, ‘லா பிராக்டிகோ’, ‘ஹெரால்டோ டெ எஸ்பரான்டோ’, ‘என்சிக்லோபீடியோ டெ எஸ்பரான்டோ’ ஆகியவற்றுக்கும் கட்டுரைகள் எழுதினார். 1933ல் பிரசுரிக்கப்பட்ட சியென்கியெவிச் எழுதிய ‘குவோ வாடிஸ்’ நூலின் மொழிபெயர்ப்பு மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
1937ல் அவர் அமெரிக்கா சென்று அங்கு நீண்டகாலம் தங்கியிருந்தார். அதன் பிறகு 1938 டிசம்பர் மாதத்தில் குடிநுழைவுத் துறை அவரின் விசாவை நீட்டிக்க மறுத்ததால் அவர் போலாந்து திரும்ப வேண்டியிருந்தது. அவ்வேளை அவர் ஓர் அமெரிக்கரை திருமணம் செய்துகொண்டால் அமெரிக்காவில் தங்கமுடியும் எனும் ஆலோசனை வழங்கப்பட்டது ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். தாயகமான போலாந்து திரும்பியவுடன், அவர் நாடு முழுவதும் பிரயாணம் செய்து எஸ்பரான்டோ மொழியையும் பஹாய் சமயத்தையும் போதித்தார்.

1939ல் ஜெர்மன் ஆக்கிரம ஆட்சியின் கீழ், வார்சொ நகரில் இருந்த அவருடைய வீடு வார்சொ யூத ஒதுக்கச் சேரியின் ஒரு பகுதியாகியது. அமெரிக்காவுக்குச் சென்று நாஸி எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார, ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டு, தமது சொந்த நகருக்குத் திரும்பினார். ஆனால், கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவரும் அவரது குடும்பத்தினரும் வாழ்ந்து வந்தனர். அங்கும் அவர் பிறருக்குத் தம்மால் ஆன உதவிகளைச் செய்து உணவும் மருந்தும் கிடைப்பதற்கு உதவி செய்தார். போலாந்து நாட்டின் எஸ்பரான்டோவினர் பலமுறை அவருக்கு அடைக்கலம் அளிப்பதற்கு அல்லது தப்பிச் செல்வதற்கு உதவிட முன்வந்தனர் ஆனால், அவர் அவ்வுதவிகளை மறுத்துவிட்டார். பல சமயங்களில் லிடியாவிற்கு உதவியளிக்க முன்வந்த ஒரு பிரபல போலாந்து நாட்டு எஸ்பெரான்டினரான ஜோஸெஃப் ஆர்ஸென்னிக்கிடம், “ஒரு யூதரை ஒளித்துவைக்கும் எவரும் அந்த யூதர் கண்டுபிடிக்கப்படும் போது அந்த யூதரோடு சேர்ந்து அவரும் அவரின் குடும்பத்தினரும் அவர்களின் உயிரை இழக்க நேரிடும்,” என விளக்கமளித்தார். மற்றொருவருக்கு, இறுதியாக அவர் எழுதியதென நம்பப்படும் ஒரு கடிதத்தில் அவர் பின்வருமாறு விளக்கமளித்திருந்தார்: “உங்களை அபாயத்திற்குள்ளாக்கிட நினைக்காதீர்கள்; நான் சாக வேண்டும் என்பது எனக்குத் தெரியும்,ஆனால் நான் என் மக்களோடு இருக்க வேண்டியது என் கடமையாகும். எங்களின் துன்பங்களின் மூலமாக இவ்வுலகம் சீர்படுவதற்கு கடவுள் அருள்வாராக. நான் கடவுளை நம்புகிறேன். நான் ஒரு பஹாய், ஒரு பஹாய் ஆகவும் இறப்பேன். எல்லாமே அவர் கரங்களில் உள்ளது.”

இறுதியில், ஹிட்லரின் கீழ் செயல்படுத்தப்பட்ட  வார்ஸொ நகர யூத ஒழிப்புத் திட்டத்தின் கீழ் யூதர்களைக் கொல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த மரணமுகாம்களில் ஒன்றான டிரெப்லிங்காவுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு 1942 இலையுதிர்காலத்திற்குப் பிறகு கொல்லப்பட்டார்.

நினைவாஞ்சலி

லிடியாவின் நினைவாக, 1955ல் ஐக்கிய அமெரிக்காவின் வாஷிங்டன் நகரின் ஹோலோகோஸ்ட் மியூசியத்தில் ஒரு நினைவாஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. அங்கு இரண்டாவது உலகப்போரின்போது கொடுங்கோன்மைகளுக்கு உள்ளான யூதர்களை காப்பாற்றுவதற்கு எஸ்பரான்டினர் மேற்கொண்ட முயற்சிகள் நினைவுகூறப்பட்டன.

பஹாவுல்லாவைப் பற்றிய ஒரு கதை


பஹாவுல்லாவைப் பற்றிய ஒரு கதை

பஹாவுல்லா பற்றிய மனதைத் தொடவல்ல மொழிபெயர்ப்பினை டாக்டர் காஹ்ஜெ ஃபானானாபாஜிர் பகிர்ந்துகொண்டார். இக்கதை ஆங்கிலத்தில்/தமிழில் இதற்கு முன்னர் பிரசுரமாகாததால், நண்பர்களுக்கு ஆர்வத்தைத் தருமென நம்புகின்றேன். ஐரோப்பாவில், பாயம்-இ-பஹாய் அவர்களின் சமீபத்திய அரேபிய வெளியீட்டில் இக்கதை காணப்படுகின்றது.

பர்ஜான்ட் நகரின் ஒரு பகுதியான குசேவ் எனும் ஊரில் வாழ்ந்தவரான செல்வாக்குமிக்க பணக்காரர் ஜனாப் இ முஹமாட் குலி கான் நகா’இ, அருளழகர் பஹாவுல்லாமீது நம்பிக்கைகொண்டார். பஹாவுல்லாவின் சமயத்தை அவர் ஏற்றதன் காரணமாக அவரின் பெரும்பாலான உறவினர்கள் கடவுள் சமயத்தை ஏற்றனர்.

புனிதர் பஹாவுல்லாவை நேரில் சந்திக்க ஜனாப் இ முஹமாட் குலி கான் நகா’இ புனிதப் பயணம் மேற்கொண்டார். முதலாம் இரண்டாம் நாள்களில் அவர் சக யாத்திரிகர்களோடு பஹாவுல்லவைச் சந்திக்கச் சென்றார். பின் யாத்திரிகர்கள் இல்லம் திரும்பியதும் தனக்குள், தன் ஆத்மா மற்றும் மனதுக்குள்: தனித்தன்மை வாய்ந்த, தெய்வீக நிகழ்வுகள் ஏதேனும் நடக்குமென எதிர்பார்த்து ஆறு மாத கால துயரமான கடினமிக்க பயணத்தை மேற்கொண்டு ஆக்கா நகர் நோக்கி வர இணங்கினேன் … ஆனால் பஹாவுல்லா மற்ற மனிதர்களைப்போல்தான் பேசுகிறார். மற்ற மனிதர்களைப்போலவே அறிவுரைகள் வழங்குகிறார், உபதேசிக்கிறார். இங்குத் தனித்தன்மையோ அற்புதங்களோ ஏதுமில்லை, என எண்ணினார்.

இப்படிப்பட்ட எண்ணங்களில் மூழ்கியிருந்த என்னிடம் மூன்றாம் நாள் பஹாவுல்லா என்னை மட்டும் சந்திக்க விரும்புவதாக ஊழியர்களில் ஒருவர் வந்து என்னிடம் சொன்னார். நான் உடனே அருளழகரின் இருப்பிடம் சென்று அறையின் திரைச்சீலையை அகற்றி அவர் முன்னிலையில் நெருக்கமாக நின்றேன். நான் சிரம் தாழ்த்திய அத்தருணமே அருளழகர் வர்ணிக்க இயலாத பிரகாசத்துடன் கண்களைப் பறிக்கும் ஒளியாகவும் காட்சி தந்தார். அந்த ஒளியின் கடுமையினைத் தாங்க முடியாத நான் அடுத்த கனமே நினைவிழந்தேன். ”ஃபீ அமனில்’லா” அதாவது ஆண்டவரின் பாதுகாப்புடன் செல் என்று அவர் கூறியது மட்டுமே என் நினைவில் இருந்தது.

ஊழியர்கள் என்னை நடைகூடத்திற்கு இழுத்துச் சென்று பின் யாத்திரிகர்கள் இல்லத்தில் சேர்ப்பித்தனர். அதன் பின் இரண்டு நாட்கள் என்னால் உண்ணவோ உறங்கவோ இயலவில்லை. நான் செல்லும் இடமெல்லாம் அவரது பிரசன்னத்தின் பிரமாண்டத்தைக் கண்டேன். அவர் இதோ இங்கே இருக்கின்றார்…அங்கே இருக்கின்றார் என மற்ற யாத்திரிகர்களிடம் அடிக்கடி கூறிக்கொண்டே இருந்தேன். எனது உபத்திரவத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத சக யாத்திரிகர்கள் அப்துல் பஹாவின் உதவியை நாடினர். மேலும் இரண்டு நாள்களுக்குப் பின் மீண்டும் என்னைப் பஹாவுல்லாவின் முன்னிலைக்கு அழைத்துச் சென்றனர். நான் அவரது முன்னிலையை அடைந்ததும் அவர் அன்புக் கருணையை என்மீது பொழிந்ததோடு கனிவாகவும் பேசினார். பிறகு உட்காருமாறு பணித்தார்.
ஜனாப் இ முஹமாட் குலி கான்! தெய்வீகச் சாரத்தின் அவதாரங்கள் மானுட ஆடைகளையும் துணிகளையும் அணிய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். திரை மறைவிலுள்ள அவர்களின் உண்மையான தோற்றம் வெளிப்படுத்தப்படுமாயின் தங்களுக்கு ஏற்பட்டது போல் மானுடமே சுயநினைவிழந்து கணப்பொழுதிலேயே தன்னுணர்வற்ற நிலைக்குத் தள்ளப்படும். மேலும் தொடர்ந்த பஹாவுல்லா: “கிளிகளுக்கு எவ்வாறு பேசக் கற்றுத் தருகிறார்களென உங்களுக்குத் தெரியுமா?” “எனக்குத் தெரியாது,” என சிரம்தாழ்த்திச் சொன்னேன். “கிளியின் சொந்தக்காரர் கூ..ண்டுக்குள் ஒரு கிளியை வைத்திருந்தார். பிறகு ஒரு பெரிய பேழையைக் கொண்டு வந்து கூண்டின்முன் வைத்தனர். பிறகு ஒரு மனிதர் கண்ணாடியின் பின்புறம் மறைந்துகொண்டு சில சொற்றொடர்களை மீண்டும் மீண்டும் கூறுகிறார், பேசுகிறார். தன்னைப் போன்றதோர் கூண்டுக் கிளி ஒன்று (கண்ணாடியில் தோற்றமளிப்பது) பேசுவதாகக் கற்பனைசெய்து அக்கிளியும் பேச கற்றுக்கொள்கின்றது. கண்ணாடியின் பின்னால் இருக்கும் அந்த மனிதர் தொடக்கத்திலிருந்தே தன்னை வெளிப்படுத்தி இருப்பாரேயாயின் அக்கிளி பேசக் கற்றுக்கொண்டு இருக்காது. இதனால்தான் தெய்வீக அவதாரங்களும் தங்களின் அற்புதமான தோற்றத்தினைக் கொண்டு மனிதகுலத்தினை மிரளச் செய்யாதிருக்க வேண்டி அவர்கள் மனித உடையிலும் துணிகளிலும் இவ்வுலகில் தோன்றுகின்றார்கள்…”

பஹாவுல்லாவின் முன்னிலையிலிருந்து திரும்பிய இம்மனிதர் பரிபூரண மாற்றமடைந்திருந்தார். தனது இறுதிமூச்சுவரை மற்றவர்களுக்குப் போதிப்பதிலேயே ஈடுபட்டதோடு ஆன்மீக உள்ளுணர்வையும் பெற்றிருந்தார். இவ்வுலக வாழ்விலிருந்து தான் விடைபெறப்போவதாக அந்த இறுதி இரவில் முன்கணிப்பு செய்தார்.

பயாம்-இ-பஹாய்.

அன்னல் பாப் அவர்களின் இறுதித் தருணங்கள்


(திரு வில்லியம் சீயர்ஸ் எழுதிய ‘கதிரவனை விடுவியுங்கள்’ எனும் நூலிலிருந்து.)

(பஹாய் சமயத்தின் முன்னோடித் தூதரான பாப் அவர்கள் அரசாங்கத்தால் மரணதண்டனைக்கு ஆளாக்கப்பட்டார். அவருடைய உலக வாழ்வின் இறுதித் தருணங்களின் விவரிப்பு)

வெரிச்சோடிக் கிடந்த அச்சாலையின் வழி ஒரு சுழல்காற்றின் தூசிப் படலம் சப்தமின்றி நகர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ஒரு பூணையின் மீது ஒரு காகிதத்தை அக்காற்று உந்தித்தள்ளியது. பயத்தால் அப்பூணை வாசல்வழி வீட்டிற்குள் ஓடி மறைந்தது. பிறகு அங்கு அசைவுகளற்ற நிசப்தமே சூழ்ந்தது.

சாலையின் ஒரு மூலையிலிருந்து ஒரு சிறுவன் திடீரெனத் தோன்றி, வெரிச்சோடிக்கிடந்த அச்சாலையின் வழி விரைந்தோடினான். அச்சிறுவனின் காலனிகளற்ற கால்கள் வெப்பம் மிகுந்த மண்ணிலிருந்து சிறு சிறு தூசிப்படலங்களைக் கிளப்பிக் கொண்டிருந்தன.

“அவர் வருகிறார்! அவரை இவ்வழியாகத்தான் கொண்டு வருகிறார்கள்!” என அச்சிறுவன் உரத்த குரலில் கூவினான்.
ஓர் எரும்புப் புற்றின்மீது கால்கள் பட்டுவிட்ட எரும்புக் கூட்டம் போன்று பதட்டமுற்ற மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக் கிளம்பினர். எதிர்பார்ப்புடன் சிலிர்ப்புற்ற முகங்கள் அச்சாலைக்கு உயிர்ப்பூட்டின. அணுகிவரும் கொந்தளிக்கும் மக்கள் கும்பலின் சினம் நிறைந்த கூச்சலைக் கேட்டு அவர்களின் ஆர்வமும் அதிகரித்தது.

சாலை வளைவில் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் என மக்கள் வெள்ளம் வழிந்தோடியது. அவர்கள் பின்பற்றிச் சென்ற இளைஞர் இவர்களின் அவமதிக்கும் கூச்சல்களினால் திணறலுக்குள்ளானது போல் தோன்றியது. மக்கள் கூட்டம் அது கண்டு களிப்புக் கூச்சல் எழுப்பியது. அவ்விளைஞர் தங்களைவிட்டு தப்பியோட முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர் ஒரு கைதி. அவர் கழுத்தில் ஒரு வளையம் மாட்டப்பட்டு அதில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. காவலர்கள் அக்கயிற்றைப் பற்றியிழுத்து அவ்விளைஞரை அதிகாரிகளிடம் கொண்டு சென்றுகொண்டிருந்தனர். அங்கு அவ்விளைஞரின் மரண தண்டனைக்கான ஆணைப்பத்திரம் கையெழுத்திடப்படும்.

அவ்விளைஞரின் கால்கள் தடுமாறிய போது காவலர்கள் அவருக்கு ‘உதவியாக’ கயிற்றை வெடுக்கென்று பிடித்து இழுத்தனர் அல்லது காலால் எட்டி உதைத்தனர். அவ்வப்போது யாராவது கூட்டத்திலிருந்து பிரிந்து காவலர்களைத் தாண்டி வந்து அவ்விளைஞரை கையாலோ கம்பாலோ அடித்தனர். அவ்வாறு செய்தவர்களை கூட்டம் கரகோஷத்தாலும் சப்தம் போட்டும் ஊக்குவித்தது. கூட்டத்திலிருந்து ஒரு கல்லோ குப்பைக் கூளமோ அவ்விளைஞரைத் தாக்கியபோது காவலர்களும் கூட்டத்தினரும் எக்காளமிட்டுச் சிரித்தனர். “மாவீர்ரே, இப்பொழுது உம்மைக் காப்பாற்றிக்கொள்வதுதானே” “உமது கட்டுக்களை உடைத்தெரியுங்கள்! எங்களுக்கு மாயாஜாலம் எதையாவது செய்து காட்டுங்கள்,” என அவரைப் பின்தொடர்ந்த ஒருவர் அவரைப் பார்த்து கேலி செய்து அவர் மீது ஏளனத்துடன் எச்சிலை உமிழ்ந்தார்.

அவ்விளைஞர் இராணுவ முகாமிற்கு மீண்டும் கொண்டுசெல்லப்பட்டு, சிறிது நேரத்திற்குப் பிறகு அவரைக் கொலை செய்யப்போகும் இடத்திற்குக் கொண்டுவரப்பட்டார். அப்பொது கதிரவனால் காய்ந்துபோன அந்நகரின் சதுக்கத்தில் உச்சிவேளை நிலவியது.

நிமிர்த்தப்பட்ட துப்பாக்கிகளில் கோடைக்காலத்தின் சுட்டெரிக்கும் சூரியன் ஒளி பிரதிபலித்தது. அத்துப்பாக்கிகள் அவ்விளைஞரின் மார்பினை நோக்கி குறிவைக்கப்பட்டிருந்தன. அவ்விளைஞரை சுட்டு அவரின் உயிரைப் பறிப்பதற்கான ஆணைக்காக காவலர்கள் காத்திருந்தனர்.

அப்போது சதுக்கத்தில் பெருங்கூட்டம் தொடர்ந்தாற்போல் கூடிக்கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளின் கூறைகளில் ஏறி அக்கொலைகளத்தினை நோக்கியபடி நின்றுகொண்டிருந்தனர். தங்கள் நாட்டையே கலக்கியிருந்த அவ்விசேஷ இளைஞரின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்ப்பதற்கு அவர்கள் ஆவலாக இருந்தனர். அவர் ஒன்று நல்லவராக இருக்கவேண்டும் அல்லது தீயவராக இருக்கவேண்டும். அவர்களுக்கு அவர் எப்படிப்பட்டவர் என்பது உறுதியாக தெரிந்திருக்கவில்லை.

முப்பது வயைத்கூட தாண்டாத ஓர் இளைஞராக அவர் காணப்பட்டார். முடிவு நெருங்கிவிட்ட இவ்வேளையில், அவர்களி வெறுப்புக்கு ஆளான அவ்விளைஞர் அப்படியொன்றும் அபாயகரமானவராகத் தோன்றவில்லை. பார்ப்பதற்கு பலமற்றவராக ஆனால் மென்மை குணம் படைத்தவராகவும் அதே வேளை உறுதியுடனும் பார்ப்பதற்கு அழகாகவும் தோன்றினார். தம்மை தாக்கவிருந்த அத்துப்பாக்கிக் குழல்களை அவர் நிதானமாக பார்த்துக்கொண்டிருந்த போது அவர் முகத்தில் சாந்தமும், பார்க்கப்போனால் ஆர்வமுமே தோன்றின.

பதினாறு வயதினிலே


வீடியோ

“பதினாறு வயதினிலே” எனும்போது இயக்குனர் பாதிராஜாவின், நடிகை ஸ்ரீதேவி நடித்த பதினாறு வயதினிலே 1977 திரைப்படமே ஞாபகத்திற்கு வரும். ஓர் இளம்பெண் எவ்வாறு பருவத்தின் கோளாரினால் காதல் வயப்படுகிறாள் மற்றும் அதனால் பெரும் சோதனைகளையும் சந்திக்கின்றாள் என்பதே கதை. அந்த இளம் பெண்ணின் உலகமே அவள் வாழ்ந்த கிராமந்தான். அவள் உட்பட்டிருந்த அந்தச் சூழ்நிலையில் அவளுக்குத் தெரிந்த வாழ்க்கையை அவள் வாழ்ந்தாள். இறுதியில், அவள் சந்தித்த சோதனைகளின் வாயிலாகத் தான் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் அந்தப் பதினாறு வயதையும் தாண்டிய மனமுதிர்ச்சியோடு தன் வாழ்க்கைக்கு ஏற்ற முடிவைத் தேர்ந்தெடுக்கின்றாள்.  இது “பதினாறு வயதினிலே” திரைக்கதை. ஆனால், 1982ல் வேறொரு பதினாறு வயதினிலே கதை நடந்தது. அக்கதையின் முடிவும் சோகம் நிறைந்தது ஆனால், நிறைவான ஒரு வாழ்க்கையை உள்ளடக்கியது.


மோனா மஹ்முட்நிஸாட்

அந்தப் பெண்ணுக்கும் பதினாறு வயது, அவளும் காதல் வயப்பட்டிருந்தாள், இறுதியில் அவளுடைய வாழ்க்கைப் பாடத்தின் அடிப்படையில் தன் முடிவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். ஆனால், இந்தப் பெண் கொண்ட காதல் இறைவன் மீது கொண்ட தெய்வீகமான காதலாகும். இந்தக் காதலின் பயனாக அவள் தன் உயிரைத் துச்சமாக மதித்துத் தன் காதலுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்தாள். அவள் பெயர் மோனா மஹ்முட்நிஸாட். இன்று உலகம் முழுவதும் இந்தப் பெண்ணின் பெயரால் பல அறநிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, அவள் பெயரால் பல சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன, அவள் பெயரால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆன்மீகப் பார்வைப் பெற்றுள்ளனர். மோனா தான் வாழ்க்கையின் பயனாக “இரான் நாட்டின் தேவதை” எனும் பெயரையும் அடைந்தாள்.

இரான் நாட்டின் ஷிராஸ் நகரில் பத்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்…

கைது செய்யப்பட்ட பெண்களுள் தனது பதினாறாவது வயதை அடைந்திருந்த மோனாவும் இருந்தாள். அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் எனும் பேரார்வம் ததும்பும் குழந்தை முகம். அவளை எதற்காக கைதுசெய்திருந்தார்கள்? அவள் செய்த தவறுதான் என்ன? திருடினாளா? கொலை செய்தாளா? இல்லையில்லை, அதைவிட மிகவும் ‘மோசமான’ ஒரு காரியத்தைச் செய்துவிட்டிருந்தாள். ஆம், ‘செய்யக்கூடாத’ ஒரு காரியத்தை அவள் செய்துவிட்டாள். அவள் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டாள். குழந்தைகளுக்குக் கடவுள் அன்பையும் ஒழுக்கத்தையும் போதித்துவிட்டாள். உலகில் இதைவிட மோசமான ஒரு குற்றத்தை யாருமே செய்ததில்லை. கொலை கொள்ளை போன்ற சாதாரண குற்றங்களைச் செய்திருந்தாலும் பரவாயில்லை. குழந்தைகளுக்கு நன்னெறி பாடம் நடத்துவதா? அது ஒரு மாபெரும் குற்றம் அல்லவா.

சிறுவயதில் தாய்ப்பாலுடன் கடவுள்மீது அன்பையும் சேர்த்து அவளின் தாயார் ஊட்டியிருந்தார். மோனாவுக்கு வயதாக ஆக, இந்த அன்பு சற்றும் குறையாமல் மேலும் மேலும் அதிகரிக்கவே செய்தது. அவள் தன் குடும்பத்தாரின் மீது மட்டும் அவள் பாசம் கொள்ளவில்லை. உலகையே நேசித்தாள். தன் வழியில் குறுக்கிட்டோர் அனைவர் மீதும் அன்பு செலுத்தினாள். நன்கு பழக்கமானோரைத் திடீரெனக் கண்டால் கண்களில் நீர் வழிய அவர்களை ஓடிச்சென்று கட்டிக்கொள்வாள்.  பள்ளியில் அவள் அருகே இருந்தாலே போதும் என நினைக்கும் ஒரு சிநேகிதிகள் கூட்டம் அவளை எந்நேரமும் சுற்றியிருக்கும். இத்தகைய நற்பண்புகளால் “ஷிராஸ் நகரத்தின் தேவதை” எனும் பெயரும் அவள் பெற்றிருந்தாள். கல்விகேள்விகளில் தனிச்சிறப்பு, கலைத்திறன்கள், இனிமை நிறைந்த குரல்வளம் ஆகியவற்றை அவள் இயல்பாகவே பெற்றிருந்தாள். வயதுக்கு மீறிய விவேகமும் கடவுள் பக்தியும் அவளிடம் பரிபூரணமாகக் குடிகொண்டிருந்தன. மானிடத்திற்கு சேவை செய்யவேண்டும் எனும் அவளின் அவாவிற்கு எல்லையே இல்லை.

மோனா உலகையே நேசித்தாலும், எல்லோரையும் விட அவள் அதிகம் நேசித்த ஒருவர் இவ்வுலகில் இருந்தார். அது அவளுடைய தந்தை. தந்தை, மகள் இருவருக்குமிடையில் இருந்த உறவு ஒரு மிகவும் விசேஷமான உறவு. தன் தந்தையின் கண்களை ஆழ்ந்து உற்று நோக்கி காதுகளால் கேட்க முடியாத, வார்த்தைகளுக்கு இடமில்லாத ஓர் உரையாடலில் மோனா ஈடுபடுவாள். மோனாவின் தந்தையும் மக்களின் சேவையில் சற்றும் சளைத்தவர் அல்ல. பலவிதமான சேவைகளில் அவர் தம் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்தவராவார். ஒரு காலத்தில் தமது பிறந்தகத்தை விடுத்து வேறொரு நாட்டிற்குச் சேவைச் செய்திட சென்றார். அங்குதான் அவரின் இரு பெண்களும் பிறந்தனர். அரசியல் நிலைமை சரியில்லாத நிலையில் அவர் தமது குடும்பத்தினரோடு மீண்டும் தமது தாயகத்திற்குத் திரும்பினார்.

மோனாவின் கடவுள் பக்தி அவள் குடும்பத்தினரின் சமய நம்பிக்கையின் பலனாக ஏற்பட்டதாகும். அவர்கள் தங்களின் தேசத்தின் அதிகாரபூர்வச் சமயத்தைச் சார்திருக்கவில்லை. கடவுள் அவதாரங்களின் வரிசையில் ஆகக் கடைசியாகவும், கோடிசூர்யப் பிரகாசராய் உலகில் தோன்றிய கடவுளின் அவதாரமான பஹாவுல்லாவின் நிழலை அவர்கள் சரனடைந்திருந்தனர். பாரம்பரியத்தைச் சாராத நம்பிக்கைகள் எப்போதுமே பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் பரவாயில்லை, மாறாக, அத்தகைய சிறுபான்மை நம்பிக்கையினர் தங்களுக்கென சொந்த நம்பிக்கைகளைப் பெற்றிருக்கும் உரிமையை இழந்து பெரும்பான்மைச் சமூகத்தினரின் நம்பிக்கையினை அவர்களும் பற்றிக்கொள்ளவேண்டுமென நெருக்குதலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். தவறினால் கொடுங்கோண்மைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது சமயங்களின் வரலாற்றில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் விஷயமாகும்.

இரான் நாட்டின் சிறுபான்மை பஹாய் சமூகத்தினர் தங்கள் சமயத்தின் தோற்றத்திலிருந்து இத்தகைய கொடுங்கோண்மைகளுக்கு ஆளாகியே வந்துள்ளனர். இருபதிலிருந்து முப்பதாயிரம் விசுவாசிகள் தாங்கள் கொண்ட நம்பிக்கைக்காகத் தங்களின் உயிரைக் கடவுளின் பாதங்களில் மனமுவந்து அர்ப்பணித்துள்ளனர். மோனாவின் குடும்பத்தினரும் இதற்கு விதிவிலக்கல்ல.

பஹாய்களின் புனிதஸ்தலங்களுள் ஒன்றான பாப் அவர்களின் இல்லம் 1980களின் ஆரம்பத்தில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. சிறுபான்மையினரான பஹாய்களைத் தங்கள் வழிக்குக் கொண்டுவந்திடும் சமயவாத அரசாங்கத்தின் முயற்சிகளுள் இதுவும் ஒன்றாக இருந்தது. நல்ல வேளையாக மோனாவின் குடும்பத்தினர் அதற்கு முன்பாகவே அத்தலத்திற்கு விஜயம் செய்து தங்கள் புனிதயாத்திரையை நிறைவு செய்திருந்தனர். ஒரு நாள் தன் தந்தையாரோடு பாப் அவர்களின் இல்லத்தின் இடிபாடுகளைக் காணச் சென்றிருந்த மோனா, தன் இல்லம் திரும்பியதும் தன் தாயை விளித்து, “அம்மா, நான் என் காலனிகளோடு வீட்டிற்குள் வரலாமா,” எனக் கேட்டாள். அதற்கு மோனாவின் தாயார், “இதென்ன திடீர் ஆசை,” எனக் கூறினார். அதற்கு மோனா, “அம்மா இன்று பாப் அவர்களின் இல்லத்தின் இடிபாடுகளிடையே நடந்து வந்துள்ளேன். என் காலனிகளில் அந்த இல்லத்தின் புனித மண் பதிந்துள்ளது. அதனால்தான் என் காலனிகளோடு வீட்டிற்குள் வரலாமாவென கேட்டேன்,” என்றாள். பிறகு கண்களின் நீர் வழிய தன் அறைக்குள் சென்று அன்றைய அனுபவத்தை ஒரு கவிதையாக எழுதினாள்.

பஹாய்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அதிகரித்த போது, தனக்கும் தன் தந்தைக்கும் கடவுளின் விதி என்னவாக இருக்கும் என்பது குறித்து மோனாவுக்கு பலவிதமான எண்ணங்கள் தோன்றின. ஒருநாள் தானும் தன் தந்தையும் தங்களின் நம்பிக்கைக்காக கொல்லப்படப்போகின்றார்கள் என ஒரு கனவு கண்டாள். அதன் பிறகு மோனாவிடமிருந்த நற்பண்புகளோடு வேறொரு நற்பண்பும் சேர்ந்துகொண்டது, அது ‘பயமின்மையாகும்’.

இரான் நாட்டின் பஹாய்களுக்கு இழைக்கப்பட்ட கொடுங்கோண்மைகள் சிறிது சிறிதாக அந்நாட்டு பாடசாலைகளையும் சென்றடைந்தது. குழந்தைகள்கூட தங்கள் நம்பிக்கைக்காக துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். ஒரு முறை சமய நம்பிக்கைக் குறித்து மோனாவின் வகுப்பினர் கட்டுரை எழுதிட பணிக்கப்பட்டனர். சமய நம்பிக்கைச் சுதந்திரம் பறிக்கப்படுவதை மனதில் வைத்து மோனா ஒரு கட்டுரை எழுதினாள்.

“உலகிலுள்ள ஒளிமிகு வார்த்தைகளுள் “சுதந்திரம்” எனும் வார்த்தையே பேரொளி மிக்க வார்த்தையாகும். மனிதன் என்றும், இன்றும், இனி என்றென்றும் சுதந்திரத்தையே விரும்புவான்.  ஆனால், அவனிடமிருந்து சுதந்திரம் பறிக்கப்படுவது ஏன்? மனிதனின் பிறப்பிலிருந்து அவனுக்குச் சுதந்திரம் இல்லாமல் போவது ஏன்? ஆரம்பத்திலிருந்தே வலிமைமிக்க ஆனால் அநீதியான மனிதர்கள் தங்களின் சுயநலத்திற்காக பலவிதமான அடக்குமுறைகளையும் கொடுங்கோண்மைகளையும்  பயன்படுத்திவந்துள்ளனர்…”

“இச்சமூகத்திற்கான எங்கள் குறிக்கோள்களை வெளிப்படுத்திடவும்; நான் யார் என்பதையும் எனக்கு என்ன வேண்டும் என்பதையும், என் சமய நம்பிக்கையை பிறருக்கு தெரிவிப்பதற்கும் எங்களுக்குச் சுதந்திரமளிக்க ஏன் மறுக்கின்றீர்கள்; என் கருத்துக்களை பத்திரிக்கைகளுக்கு எழுதவோ வானொலியிலும் தொலைக்காட்சியிலும் அதுபற்றி பேசுவதற்கோ எனக்கு சுதந்திரம் கொடுப்பீர்களா? ஆம், தன்னிச்சையென்பது ஒரு தெய்வீகக் கொடையாகும், அது எங்களுக்கம் உரியாதாகும், ஆனால் அதை எமக்கு மறுக்கின்றீர்கள். ஒரு தனிநபர் பஹாய் எனும் முறையில் என்னை சுதந்திரமாகப் பேச விடுவீர்களா? ஒரு புதிய வெளிப்பாடு தோன்றியுள்ளது, ஒரு பிரகாசமிகு புதிய நட்சத்திரம் உதித்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள ஏன் மறுக்கின்றீர்கள். உங்கள் கண்களை மறைக்கும் தடித்தத் திரைகளை அகற்றுவீர்களா?”

“ஒரு வேளை எனக்கு சுதந்திரம் இருக்கவே கூடாது என நீங்கள் நினைக்கின்றீர்கள் போலும். கடவுள் மனிதனுக்கு இந்தச் சுதந்திரத்தை வழங்கியுள்ளார். அவர்தம் சேவகராகிய நீங்கள் அதை என்னிடமிருந்து பறிக்க முடியாது. கடவுள் எனக்கு பேச்சு சுதந்திரத்தை வழங்கியுள்ளார். ஆகவே, “புனிதராகிய பஹாவுல்லாவே மெய்யராவார்”. கடவுள் எனக்குப் சொல் சுதந்திரம் வழங்கியுள்ளார். ஆகவே, “கடவுள் வெளிப்படுத்தியுள்ள அந்த ஒருவர் பஹாவுல்லாவே ஆவார்! அவரே பஹாய் சமயத்தின் ஸ்தாபகரும் அவரது திருநூலே நூல்களுக்கெல்லாம் தாய் நூலும் ஆகும்.”

வெளிப்படையான இக்கட்டுரையின் விளைவாக மோனா அதுவரை பள்ளியில் பெற்றிருந்த சிறிதளவு பேச்சு சுதந்திரத்தையும் இழந்தாள்.

சாதாரணமாக நம் ஒவ்வொருவருக்கும் நமது எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது தெரியாது. அனுமானிக்கலாம் ஆனால், நிச்சயமாக எதையும் கூற முடியாது. மோனாவுக்கோ தன் எதிர்காலம் என்னவாகும் என்பது ஓரளவுக்குத் தெரிந்திருந்தது. அவள் கண்ட ஒரு கணவின் வாயிலாக தன் எதிர்காலம் என்னவாகும் என்பது அவளுக்குத் தெரிந்தே இருந்தது. இரான் நாட்டின் பஹாய்கள் பலரைக் கொள்ளைக்கொண்ட கொடுங்கோண்மைகள் ஒரு நாள் மோனாவின் இல்லத்திற்கும் வந்துக் கதவைத் தட்டின……

தொடர்ந்து கதையை வீடியோவில் காணவும்…

தொடர்பு கொண்ட பிற பதிவுகள்

பாப் அவர்கள்
பஹாவுல்லா
வெண்பட்டாடை (தாஹிரியின் மரணம்)
பாஹிய்யா காஃனும்
ஸைனாப்

பஹாவுல்லா பற்றிய ஒரு கதை


பிர்ஜந்த் மாநிலத்தின் குஸேஃப் நகரில் வாழ்ந்த ஜெனாபி முகம்மத் குஃலி காஃன் நாக்காயி எனும் பிரபல செல்வந்தர் அருட்பேரழகரான பஹாவுல்லவின் விசுவாசியாக வாழ்ந்து வந்தார். பஹாவுல்லாவை அவர் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து அவரின் உறவினர்களும் கடவுளின் சமயத்தை ஏற்றுக்கொண்டனர்.

இந்த ஜெனாபி முகம்மத் குஃலி காஃன் நாக்காயி பஹாவுல்லாவை தரிசிக்கும் பொருட்டு புனித யாத்திரை ஒன்றை மேற்கொண்டார். சென்றடைந்தவுடன் அவர் முதல் நாள் மற்றும் மறுநாள் பிற புனிதயாத்ரீகர்களோடு பஹாவுல்லாவின் முன்னிலையை அடைந்தார். ஆனால், விடுதிக்கு வந்தவுடன் தனது மனதிலும் ஆன்மாவிலும் பின்வருமாறு சிந்தனை செய்தார்: சில ஆசாதாரன மற்றும் தெய்வீக சம்பவங்களை கண்டுகழித்திடும் பொருட்டு இந்த ஆக்கோ நகரை வந்தடைய நான் ஆறு மாத காலம் கஷ்டங்களையும் சுமைகளையும் தாங்கி பிரயானம் செய்து வந்தேன். ஆனால், பஹாவுல்லாவோ மற்ற சாதாரன மனிதர்களைப்போலவே பேசுகின்றார் ஆணைகளையும் போதனைகளையும் வழங்குகின்றார். இங்கு ஒரு வேளை அசாதாரன சம்பவங்களும் அற்புதங்களும் கிடையாது என நினைத்துக்கொண்டார்.

நான் இவ்விதமான சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த போது மூன்றாம் நாள் ஒரு சேவகர் என்னிடம் வந்து பஹாவுல்லா உம்மை தனியாகவும் யாருடனும் இல்லாமலும் சந்திக்க விரும்புகிறார் என அறிவித்தார். நானும் உடனடியாக அவரது முன்னிலைக்கு சென்று அவரோடு நெருக்கமுற அந்த அரையிலிருந்த திரைத்துனியை அகற்றினேன். உடனடியாக அவர் முன்னிலையில் நான் வணங்கி எழுந்த போது பஹாவுல்லாவை அதியற்புதமிக்க பிரகாசமான கண்ணைப் பறிக்கும் ஓர் ஒளியாக கண்டேன். அந்த ஒளியின் அனுபவத்தின் தீவிரத்தின் பயனாக நான் மயக்கமுற்று தரையில் சாய்ந்தேன். அவ்வேளை என் காதில் விழுந்ததெல்லாம்: “கடவுளின் பாதுகாப்பில் செல்வாயாக”, எனும் வார்த்தைகளே.

சேவகர்கள் என்னை தாழ்வாரத்திற்கு இழுத்துச் சென்றும் பிறகு யாத்ரீகர்கள் இல்லத்திற்கும் கொண்டு சென்றனர். அந்த நிகழ்ச்சிக்குப் பின் இரண்டு நாட்கள் என்னால் சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை. என்ன நடந்ததென்றால், நான் சென்றவிடங்களில் எல்லாம் அவரது ஆட்கொள்ளும் பிரசன்னைத்தையே உணர்ந்தேன் மற்றும் மற்ற யாத்ரீகர்கள் அனைவரிடமும் அவர் இங்கிருக்கின்றார் இங்கிருக்கின்றார் என கூறிக்கொண்டிருந்தேன்.

என்னோடு இருந்த மற்ற யாத்ரீகர்கள் என் பிதற்றல்களால் பெரிதும் தொந்திரவு அடைந்து அப்துல் பஹாவிடம் அது பற்றி கூறி எனக்கு உதவிடுமாறு வேண்டிக்கொண்டனர். பிறகு இரண்டு நாட்கள் கழித்து அதே சேவகர் என்னிடம் வந்து பஹாவுல்லாவின் முன்னிலைக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு அவரது அன்மையை அடைந்தவுடன், அவர் என்மீது தமது அன்புக் கருணையையும் அருள்மிக்க வார்த்தைகளையும் பொழிந்தார். அவர் என்னை அமரும்படி கூறினார்.

பிறகு பஹாவுல்லா: ஜெனாபி முகம்மத் குஃலி காஃன் அவர்களே! தெய்வீக சாரத்தின் அவதாரங்கள் மனித உருவிலும் மேலங்கிகளிலும் வெளிப்படும் கட்டாயத்திற்கு உட்பட்டவர்கள். மறைவெனும் திரையின் பின் வதியும் அவர்களின் மெய்யுறு (உலகில்) தோற்றமளித்தால் உம்மைப்போன்ற மானிடர்கள் சுயநினைவிழந்தும் மயக்க நிலைக்கு சென்றுவிடுவர் என கூறினார். அவர் மேலும்: “கிளிகளுக்கு எவ்வாறு பேசக் கற்றுத்தரப்படுகிறது என உமக்கு தெரியுமாவென விளவினார்”. அதற்கு நான் தலை வணங்கி எனக்குத் தெரியாதென கூறினேன்.

பஹாவுல்லா விளக்கினார்: “கிளியின் உரிமையாளர்கள் கிளியை ஒரு கூண்டுக்கள் அடைப்பார்கள். பிறகு அவர்கள் அதற்கு முன் ஒரு கண்ணாடியை வைப்பார்கள். அதன் பின் ஒரு மனிதன் அந்த கண்ணாடிக்குப் பின் மறைந்துகொண்டு சொற்றொடர்களையும் வார்த்தைகளையும் மீண்டும் மீண்டும் உச்சரிப்பார். தன் முன் உள்ள கண்ணாடியில் பிரதிபலிக்கும் தன்னைப் போன்ற உரு கொண்ட வேறொரு கிளி பேசுகின்றது என எண்ணிக்கொண்ட அக் கிளியும் அது போன்றே தானும் பேச ஆரம்பிக்கும். மாறாக, உண்மையில் கண்ணாடிக்குப் பின்னால் உள்ள மனிதர் ஆரம்பத்திலிருந்தே தம்மை வெளிப்படுத்திக் கொண்டால், அக் கிளி பேச கற்றுக்கொள்ளப்போவதே இல்லை. அது போன்றே, தங்களின் விஷ்வரூபத்தில் தோன்றி மனிதர்களை பீதியடையச் செய்யாதிருக்க தெய்வீக அவதாரங்களும் மனிதர்களின் உருவிலும் உடையிலும் தோன்றுகின்றனர்.”

பஹாவுல்லாவின் தரிசனத்திற்கு பின் நாடு திரும்பிய இம்மனிதர் முற்றாக தன்மைமாற்றம் பெற்றவராகவும் தமது இறுதிநாள் வரை பிறருக்கு போதனை செய்தும் இவ்வுலக வாழ்வை தாம் எப்போது நீக்கப்போகின்றார் என்பது குறித்து ஆன்மீக அகவிளக்கமும் அடைந்தார்.

பாயாம் இ பஹாய்

பெண்கள் உரிமைக்காக போராடிய தாஹிரி


தாஹிரி அல்லது குர்ராத்து’ல்-அய்ன் பஹாய் சமயத்தின் இரட்டை அவதாரங்களுள் முன்னோடி அவதாரமான பாப் அவர்களின் பதினெட்டு சீடர்களில் ஒருவராவார். உலகில் பெண்களின் உரிமைக்காக போராடியோர் பட்டியலில் முதன்மையாக இருப்போரில் இவரும் ஒருவர். பாப் அவர்களின் சிஷ்யை எனும் முறையில் பாரசீக அரசினால் இவர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டு இறந்தவுடன் அவருடைய பிறப்பு விவரங்கள் அழிக்கப்பட்டன.இவர் 1817 – 1820க்குள் பிறந்தவராக இருக்கக்கூடும்.

தம்மை திருமணம் செய்துகொண்டால் தாஹிரியை விடுதலை செய்வதாகக் கூறும் நாஸிரிட்டின் ஷா – நாடகத்தின் ஒரு காட்சி

பாரசீக நாட்டு பெண்களுக்கு அக்காலத்தில் எவ்வித சுதந்திரமும் கிடையாது. சிறுவயதிலேயே திருமணத்திற்கு உட்படுத்தப்பட்டு பிள்ளைகள் பெறுவது கனவனுக்கு சேவை செய்வது தவிர வேறு எந்த உரிமையும் அவர்களுக்கு கிடையாது. முதலில் அவர்களைப் பெற்ற தந்தைகளுக்குக் கீழ்ப்படிந்தும் பிறகு அவர்களின் கனவர்களுக்குக் கீழ்ப்படிந்தும் வாழ்வது அவர்களுடைய வாழ்க்கையாக இருந்தது. சதா கருப்பு நிற சடோர் அல்லது முகம் உட்பட உடல் முழுவதையும் மூடியிருக்கும் ஒரு வித ஆடையை அவர்கள் அனிந்திருப்பார்கள். அவர்களின் முகங்களை அவர்களின் குடும்பத்தைச் சார்ந்த ஆண்களைத் தவிர வேறு ஆண்கள் யாரும் பார்க்கமுடியாது. கல்வியறிவுக்குக் கூட அவர்களுக்கு வழியில்லை.

இத்தகைய சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த தாஹிரி சிறுவயது முதற்கொண்டே தனிசிறந்து விளங்கினார். அவருடைய அறிவாற்றலைக் கண்ட அவருடைய தந்தை “இவள் மட்டும் ஆணாகப் பிறந்திருந்தாள், அவன் என் குடும்பத்தின் மீது ஒளிவீசச் செய்து, எனக்குப் பிறகு என் வாரிசாகி இருப்பான்”, என்றார்.

அக்காலத்தில் பாஹ்ரேய்ன் தீவுகளில் ஒன்றில் வாழ்ந்த ஷேய்க் அஹ்மத் என்பார் புது அவதாரம் ஒன்று விரைவில் தோன்றவிருப்பதை தமது ஆன்மீக அறிவினால் உணர்ந்து அதை தம்மைச் சுற்றியுள்ளோருக்கு போதித்தும் வந்தார். தமக்குப் பிறகு தமது போதனைகளை தொடர்ந்து உலக மக்களுக்கு அறிவுறுத்திட சையிட் காஸிம் என்பாரை தமது வாரிசாக நியமித்தார். அவ்வேளையில்தான் தாஹிரி சையிட் காஸிம் பற்றி கேள்விப்பட்டு அவர் வாழ்ந்த கர்பலா நகருக்கு தமது கனவர் மற்றும் தகப்பனாரின் விருப்பத்திற்கு எதிராக சையிட் காஸிமோடு தொடர்பு கொண்டு அவரை சந்திக்கவும் சென்றார். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக தாஹிரி அங்கு சென்றடைவதற்கு முன்பாக சையிட் காஸிம் மரணமுற்றிருந்தார். அங்கு சென்ற பிறகு பாப் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டு அவருடைய படைப்புகளையும் தாஹிரி படித்துணர்ந்தார். அதன் பிறகு பாப் அவர்களின் போதனைகளை மிகவும் வன்மையுடன் தாம் சென்றவிடங்களில் எல்லாம் போதித்தார்.

1848ம் ஆண்டிற்கு முன்பே பாப் அவர்கள் தமது போதனைகளுக்காக கைது செய்யப்பட்டிருந்தார். அவ்வேளையில் படாஷ்ட் எனும் இடத்தில் பாப் அவர்களின் முக்கிய சீடர்கள் பலர் அவ்வருட ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். அம்மாநாடு பாப் அவர்களின் சமயம் ஒரு சுதந்திரமான சமயம் மற்றும் சிறைவாசம் அனுபவித்த பாப் அவர்களை எவ்வாறு விடுவிப்பது என்பது குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்மாநாட்டின்போதுதான் தாஹிரி எனும் பெயர் அவருக்கு பஹாவுல்லா அவர்களால் வழங்கப்பட்டது. மாநாட்டின் ஒரு நாளின்போது தாஹிரி பாப் அவர்களின் சமயத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்த சம உரிமையை அங்கு கூடியிருந்தோருக்கு திடுக்கிம் வகையில் வெளிப்படுத்தினார். அவர் அங்கு கூடியிருந்த ஆண்களின் முன்னிலையில் தமது முகத்திரையை திடீரென அகற்றினார். இன்னமும் பழைய சம்பிரதாயங்களில் மூழ்கியிருந்த பல பாப்யிக்கள் மரண தண்டனைக்கு வழி வகுக்கும் அச்செய்கையை கண்டு பொறுக்க முடியாமல் பாப் அவர்களின் சமயத்திலிருந்தே விலகினர். அதில் பெரிதும் திடுக்கிட்டிருந்த ஒருவர் தமது கழுத்தை சொந்தமாகவே அறுத்துக் கொண்டார். உலகிலேயே பெண்கள் உரிமையை முதன் முறையாக பரைசாற்றியவர் தாஹிரியே ஆவார். இச்சம்பவம் நடக்கும் வேளையில் எலிஸபெத் கேடி ஸ்டேன்டன் எனும் பெண்மனி செனெக்கா போல்ஸ் மாநாட்டிற்கு பெண்களின் உரிமை குறித்த பிரகடனம் ஒன்றை வெளிப்படுத்தும் “Declaration of Sentiments” எனும் அறிக்கையை எழுதிக்கொண்டிருந்தார்.

தாஹிரி அம்மையார் சிறிது காலத்திற்குள் தமது நம்பிக்கைக்காக மரணதண்டனை வழங்கப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்டு இறந்தார். அவர் கொல்லப்படுவதற்கு முன் ,”நீங்கள் என்னை கொல்வதற்கு விரும்பலாம், ஆனால் பெண்களின் விடுதலையை உங்களால் தடுக்க முடியாது.” என கூறியவாறே கொல்லப்பட்டார். தாஹிரியின் வாழ்க்கை மற்றும் அவருடைய வைரியம் இன்றும் பல கவிதைகளுக்கும், நாடகங்களுக்கும் மற்றும் உலகளாவிய கருத்துக்களுக்கும் உற்சாக உணர்வை அளிக்கின்றது. அவர் பாரசீக நாட்டில் மட்டும் பிரபலமாக இருக்கவில்லை. மாறாக, அவர் பாக்கிஸ்தான், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமாக இருந்தார். பெண்கள் உரிமைக்காக முதன்முதலாக உயிர்த்தியாகம் செய்தவரான தாஹிரி பற்றி கேள்விப்பட்ட ஆஸ்த்திரியா நாட்டின் ஜனாதிபதி ஒருவரின் தாயார், “பாரசீக நாட்டின் பெண்களுக்காக தாஹிரி தமது உயிரை எதற்காக தியாகம் செய்தாரோ அதே காரியங்களை நான் ஆஸ்த்ரிய நாட்டின் பெண்களுக்கு செய்வேன்,” என்றாராம்.

பிரான்ஸ் நாட்டின் ‘Journal Asiatique’ எனும் 1866ம் ஆண்டு பிரசுரத்தில் தாஹிரி குறித்து பின்வருமாறு கூறப்படுகிறது: “பாரசீக நாட்டில் அதிகாரமே இல்லாத அபலைகளாக அந்த நாட்டு பெண்கள் அனைவரும் இருக்கையில், ஒரு பெண் அதுவும் அரசாங்கத்தையும் மக்களையும் தங்கள் ஆற்றலின் கீழ் அவர்கள் எண்ணிக்கையினாலும் முக்கியத்துவத்தினாலும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மதகுருக்கள் வாழும் காஸ்வின் போன்ற ஒரு நகரில், எவ்வாறு ஒரு பெண் இத்தகைய சக்தி வாய்ந்த ஒரு சமயப்பிரிவை உருவாக்கியிருக்க முடியும்? பலரை வியக்கச் செய்துள்ள ஒரு முக்கிய கேள்வி இதுவே ஆகும்…” இந்திய நாட்டின் தலை சிறந்த பெண்மனிகளுள் ஒருவரான சரோஜினி நாயுடு அவர்கள், தாஹிரி பற்றி நன்கு அறிந்திருந்து அவருடைய கவிதைகளையும் ஒரு இரான் நாட்டு நண்பரின் வாயிலாக பெற்றிருந்தார்.

தாஹிரி கொல்லப்படுவதற்கு முன், அதற்கு முதல் நாள் அவர் பாரசீக அரசனான நாஸ்ரிட்டின் ஷா-வின் முன்னிலைக்கு விசாரனைக்காக கொண்டுசெல்லப்பட்டார். அதற்கு முன்பாகவே ஷா மன்னன் தாஹிரி பற்றி கேள்விப்பட்டிருந்தான். அவருடைய ஆற்றலை பற்றி அறிந்திருந்த மன்னன் தாஹிரி பாப் அவர்களின சமயத்தை விடுத்து மறுபடியும் ஷீயா மார்க்கத்தை தழுவினால் அவரை தமது அரண்மனையில் பெண்கள் பகுதியில் ஒரு முக்கிய அதிகாரியாக நியமிப்பதாகவும், ஏன், அவரை தமது மனைவியாகவும் ஆக்கிக்கொள்வதாக கூறினான். ஆனால் அதற்கு தாஹிரி:

அரசு, செல்வம் ஆட்சி உமக்கே உரியதாகட்டும்
தேசாந்திரமும், ஏழை ‘தர்வேஷ்’ ஆவதும் பேரபாயமும் எனதாகட்டும்
அந்த நிலை நல்லதென்றால், அது உமக்காகட்டும்
இந்த நிலை தீயதென்றால், நான் அதற்காக ஏங்குகின்றேன்; அது எனதாகட்டுமாக!

அதைப் படித்த ஷா மன்னன் இத்தகைய ஒரு பெண்ணை வரலாறு இது வரை நமக்கு வெளிப்படுத்தியதில்லை என்றானாம்.

ஷா மன்னன் தாஹிரியை நேரில் கண்டபோது, “நீ ஏன் பாப் அவர்களில் விசுவாசியாக இருக்கவேண்டும்?” என கேட்டானாம். அதற்கு தாஹிரி ஏறக்குறைய பின்வருமாறு பதிலளித்தாராம்:

நீர் வழிபடுவதை நான் வழிபடவில்லை
நான் வழிபடுவதை நீர் வழிபடவில்லை
நீர் வழிபடுவதை நான் வழிபடப்போவதில்லை
நான் வழிபடுவதை நீரும் வழிபடப்போவதில்லை
உமக்கு உமது சமயம், எனக்கு எனது சமயம்.

தாஹிரி கொல்லப்பட்டாலும் அவர் ஆரம்பித்து வைத்து பெண்கள் உரிமை போராட்டம் தொடர்ந்து மேலும் வலுவடைந்தே வந்துள்ளது, மேலும் பெண்கள் முழு சுதந்திரம் அடையும் வரை தொடர்ந்து வலுவடையும்.