பொருளாதார கோட்பாடுகளைப் பின்பற்றுவதன் ஆன்மீகத் தாத்பர்யங்கள்


“பொருளாதார கோட்பாடுகளைப் பின்பற்றுவதன் ஆன்மீகத் தாத்பர்யங்கள்”

பஹாய் உலக நிலையத்தில் திரு அலி நாக்ஜவானி அவர்களால் ஆற்றப்பட்ட உரை

24 நவம்பர் 2001

அரை மணி நேரத்திற்கு மேல் பேசக்கூடாது என செயற்குழு எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளது, ஆகவே நீங்கள் கவலைகொள்ள வேண்டாம்! மதிய வேளையிலிருந்து நீங்கள் அணைவரும் ஓய்வின்றி இருந்திரப்பீர்கள் என்பதும், பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடியிருப்பீர்கள் எனவும் எனக்குத் தெரியும்.

உலக நீதி மன்றம் எண்ணியுள்ள விஷயத்தின் உணர்வை எய்திட நீங்கள் பல அப்புதமான முடிவுகள் கண்டுள்ளீர்கள் என்பதை நான் இப்போதுதான் கேள்விப்பட்டேன்.

பஹாய் உலகத்திற்கும், தேசிய ஆன்மீக சபைகளுக்கும் சுமார் பத்துப் பதினான்கு நாள்களுக்கு முன் உலக நீதி மன்றம் அனுப்பிய கடிதத்தை நீங்கள் படித்திருப்பீர்கள். அவை உலகத்தில் குறிப்பிட்ட சில செயற்பாடுகளை முடுக்கிவிட்டிருக்கின்றன.

நாம் பேசிக்கொண்டிருக்கும் அதே வேளை, பஹாய் அனைத்துலக நிதிக்கு மேலும் அதிகமான உதவியை எவ்வாறு வழங்கக்கூடும் என்பது குறித்து தேசிய ஆன்மீக சபைகள் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கின்றன. அதே வேளை, உலக நீதி மன்றமும் தங்களுடைய ஒதுக்கீடுகளை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து வழிவகைகளைப் பற்றி சிந்திக்கும்படி தனது காரியாலயங்களையும், இலாகாக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது; அந்த நடவடிக்கையும் நடந்துகொண்டிருக்கின்றது;
இந்தச் செயற்பாடுகள் இயங்கிக்கொண்டிருக்கும் அதே வேளை, இங்கும் உலக நீதி மன்ற அடித்தள ஊழியர்களிடையேயும் ஓர் இயக்கம் தோன்றியுள்ளது; இது வரவேற்கப்படக்கூடியது, பெரிதும் மதிக்கப்படுகின்றது, மேலும், அவ்வித நடவடிக்கை உருவாகியுள்ளது மிகுந்த ஆரோக்கியமானதும்கூட. எனக்குத் தெரிந்த வரை இவ்வித ஒரு நடவடிக்கைத் தொன்றியுள்ளது இதுவே முதன் முறையென நான் நினைக்கின்றேன்.

இந்த விஷயத்தைப் பற்றி எப்படி உரையாற்றுவது என நான் நிறைய சிந்தித்தேன்; பஹாவுல்லாவின் எழுத்தோவியங்களிலிருந்து ஒரு சில வார்த்தைகளை குறிப்பிடுவது என நான் முடிவுசெய்துள்ளேன். அவ்வார்த்தைகள் எச்சரிக்கை விடுப்பவையாக உள்ளன:

“இறைவன்பால் அச்சங்கொள்ளுங்கள், மிதத்தன்மையின் எல்லைகளை மீறி, ஊதாரிகளோடு சேர்ந்தவர் என கணக்கிடப்படுவதில் கவனமாக இருங்கள்.”
(பொறுக்குமணிகள், பக். 251)

அப்துல் -பஹாவிடமிருந்து:

“உதாரித்தனம் எப்போதும் கடுந்துன்பத்திற்கும், குழப்பத்திற்கும் இட்டுச்செல்லும். ஒரு தேவையை அல்லது கடமையை நிறைவுசெய்வதற்காகவே நாம் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். உணவில் கூட, தேவைக்கு அதிகமாக ஒருவர் உண்பாரெனில், அது நிலைகுலைவுக்கும், உடல்நலக்குறைவுக்கும் இட்டுச்சென்று, நோய்களிலும், வியாதிகளிலும் முடியும்.”
(மஹ்மூதின்’ நாள்குறிப்பு, தொகை நூல் 2, பக். 324 – தற்காலிக மொழிபெயர்ப்பு)

மேலும், ஓர் உண்மையான ஆர்வலரின் பண்புகள் குறித்து கித்தாப்-இ-இஃகானில் பஹாவுல்லா கூறியவை குறித்து நீங்கள் பரிச்சயம் அடைந்திருப்பீர்கள். அவற்றுள் ஒன்று பின்வரும் பண்பு:

அவ்வார்வலர் சிறிதளவோடு திருப்தியுற்றும், மட்டுமீறிய ஆவல்களிலிருந்து விடுபட்டிருக்கவும் வேண்டும்.”
கித்தாப்-இ-இஃகான், பக். 193)

நமது புனிதவாசகங்களில் பொருளாதாரம் பற்றிய விஷயம் எவ்வாறு அனுகப்பட்டுள்ளது என்பதை இவ்வொருசில வாசகப்பகுதிகள் காண்பிக்கின்றன. இந்த இடத்திலாகட்டும் அல்லது உலகின் வேறு இடங்களிலும் சரி, அவற்றைப் படிக்கும்போது, அவற்றை நமது வாழ்க்கைமுறைகளோடு சில வேளைகளில் நாம் தொடர்புபடுத்திப் பார்ப்பதில்லை.
“ஊதாரித்தனம்,” எனும் வார்த்தையை பஹாவுல்லா பயன்படுத்தியுள்ளார். “ஊதாரித்தனம்” என்பதன் அர்த்தம், “மிதம் மீறி செலவளித்தல்” என்பதாகும், மேலும், “தேவைக்கும் அதிகம்” என்பதும் ஆகும். அது ஒரு கோடியுள்ள நியையாகும். மறு கோடியில், “ஊதாரித்தனம்” என்பதன் எதிர்ப்பதம், “கஞ்சத்தனம்” அல்லது “கருமித்தனம்” என்பதாகும். அதுவும் நல்லதல்ல. ஆனால், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு நிலையுள்ளது. ஒரு முறை, பஹாய் சமயம் என்பது நடுநிலையிலுள்ள ஒரு சமயமாகும் என ஷோகி எஃபெண்டி கூறியதாக ரூஹிய்யி ஃகானும் தெரிவித்துள்ளார்.

அவ்விரு கோடி நிலைகளுக்கும் இடையிலான நிலையை சிக்கனம் என வருணிக்கலாம். “சிக்கனம்,” என்பது “செலவுகள் குறித்து கவனமாக இருப்பது, மேலும், பணம் நமது பணமாக இருந்தாலும், சமயத்தின் நிதியாக இருந்தாலும், செலவுகள் மிகக் கவனமாக செய்யப்பட வேண்டும்.

நாம் இன்று பகல் முழுவதும் இவ்விஷயங்கள் குறித்தே சிந்தித்தும், கலந்துரையாடிக்கொண்டும் இருந்தோம். “நாம் இப்போது ஒரு நெருக்கடியைச் சந்தித்துள்ளோம். இந்நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக மட்டுமே நான் பொருளாதாரம் குறித்து சிந்திக்க வேண்டுமா,” என்பதே நம்மை நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியாக உள்ளது.

அல்லது பொருளாதாரத்தைப் பற்றிக்கொள்வதென்பது தனியாகவும், செயல்பாடு வாயிலாகவும் பெரும் ஆன்மீக மதிப்பினைக் கொண்டுள்ளதா? என் பனிவான கருத்து என்னவென்றால், நெருக்கடி ஏற்பட்டுள்ளதோ இல்லையோ, பணத்தைச் செலவு செய்வதன்பால் நாம் கொள்ளவேண்டிய மன்ப்பான்மை என்பது, தானாகவும், தனியதிகாரம் பொருந்தியதுமான ஒரு நற்பண்பாகும். அஃது இறைவனின் பார்வையில் தனிச்சிறப்புடையதாகும். நாம் எவ்வளவுக்கெவ்வளவு இவ்வித மனப்பான்மையாடு அனுக்கமாகின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு நமது பஹாய் வாழ்வு ஆரோக்கியமாக இருக்கும் என்பது என் எண்ணம்.

உதாரணமாக, 1911ல் அப்து’ல்-பஹா பாரீசில் இருந்தபோது, அவர் பாரீசின் மிகவும் ஆடம்பரமான பகுதியில் ஒரு நேர்த்தியான அடுக்குமாடி விடுதி ஒன்றை வாடகைக்கு அமர்த்தினார். இந்த விடுதி இப்போது பிரான்ஸ் நாட்டின் தேசிய ஆன்மீக சபையினால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது:

அவ்வேளையில் அப்து’ல்-பஹா தம்மோடு வந்திருந்த அனைவரும் தம்முடைய காரியத்தைக் கண்டு சிறிது சஞ்சலமடைந்திருப்பதாக உணர்ந்தார். ஆகவே, அவர் தமது காரியத்திற்கு விளக்கமளிக்கவேண்டியிருந்தது. ஒன்றை நாம் உணர வேண்டும். பாரீஸ் நகரம் அப்போது பிரமுகர்கள் நிறைந்த ஓர் உலக நகரமாக விங்கியது. குறிப்பாக, கிழக்கிலும் இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் ஈரானிலிருந்தும் தொடர்ச்சியாகப் பிரமுகர்கள் ஒன்றுகூடும் இடமாக அது திகழ்ந்தது. சமயத்தின் நற்பெயரை நோக்கமாகக் கொண்டு, அவர், பிறர் கண்களுக்கு கௌரவமாகத் தென்படும் ஓரிடத்தை வாடகைக்கு அவர் அமர்த்த வேண்டியிருந்தது. இத்தகைய ஒரு விளக்கத்தைத்தான் அப்து’ல்-பஹா தமது குழுவிருக்கு வழங்கினார். அவர் பின்வருமாறு கூறினார்:

“செலவீட்டிற்கு இட்டுச் செல்லும் சம்பிரதாயமான செயல்களில் நான் ஈடுபடுவதை நீங்கள் கண்டீர்களென்றால், சமயத்திற்கு அது நன்மை பயக்கும், அதன் மரியாதை காப்பாற்றப்படும் எனும் ஒரே காரணத்திற்காகத்தான். நான் பாக்தாத்திலும், ஏட்ரியாநோப்பிலிலும் இருந்தபோது, என் தலைப்பாகையும், என் துணிகளும் பல வருடங்கள் பழையனவாக இருந்தன. அவற்றின் பின்னல் வேலைகளெல்லாம் நைந்துபோயிருந்தன. கடனுக்குக்கூட புதியவற்றைப் பெறும் நிலையில் நான் அப்போது இல்லை. இப்போது, ஒரு சில காரணங்களுக்காக அல்லாது இவ்விதமாக நான் செலவு செய்திருக்கமாட்டேன்; இந்நகரத்தில் ஆகத் தாழ்வானதும், விலை மலிவானதுமான விடுதியையே நான் வாடகைக்கு அமர்த்தியிருப்பேன்.
(மஹ்மூதின்’ நாள்குறிப்பு, தொகை நூல் 2, பக். 324 – தற்காலிக மொழிபெயர்ப்பு)

அப்து’ல்-பஹா இவ்விஷயத்தை அதிகம் விளக்க வேண்டியிருக்கவில்லை, ஏனெனில், அவருடன் இருந்த பாரசீக நண்பர்கள், அவர்மேல் பெரும் அன்பு வைத்திருந்தனர், அவரைப் பெரிதும் மதித்தனர், ஆகவே இறுதியில் பிரச்சினை எதுவுமே எழவில்லை.

ஆனால், அவர் தமது கோட்பாடு என்னவென்பதை விளக்க விரும்பினார். இப்போது, புனித நிலத்தில் உள்ள நினைவாலயங்களை நீங்கள் காணுகின்றீர்கள். அவற்றின் உள்ளும் புறமும் காணுகின்றீர்கள், அவற்றைச் சுற்றியுள்ள பூங்காக்களையும் நீங்கள் காணுகின்றீர்கள். என்ன கோட்பாட்டையொட்டி இது உருவாக்கப்பட்டுள்ளது?
வெளிப்படையாக பார்க்கும்போது அது பெரும் ஆடம்பரச் செலவாகத் தென்படும். நினைவாலயங்களிலும், நிலவடிவமைப்பு வேலைப்பாடுகளிலும், படிக்கட்டு வேலைகளிலும் பெரும் பொருள் வளத்திற்கு மேல் பொருள் வளத்தை நீங்கள் காணுகின்றீர்கள். இத்தோட்டங்கள், இவ்வுலகத்திலேயே அதிப்புனிதமான நினைவாலயங்களுக்கான சுற்றுச் சூழல்களாகும்.
ஷோகி எஃபெண்டி அவர்கள் விளக்கியது போல, இப்பூவுலகின் ஆன்மீக மையமாக இவ்விடம் விளங்குகின்றது. ஆகவே, இக்கட்டிடங்களும், தோட்டங்களும் உலக மையத்தில் வாழ்க்கை முறை இத்தகைய படாடோபம் மிக்கதாக இருக்கும் எனும் எண்ணத்தை ஏற்படுத்தக்கூடாது. அவ்வாறு இல்லை. இது பாரீசில் அப்து’ல்-பஹா வாடகைக்கு அமர்த்திய அடுக்குமாடி விடுதியைப் போன்றது. இது சமயத்தின் நன்மதிப்பைக் காரணமாகக் கொண்டது. அவ்விரண்டையும் நாம் ஒன்றுகலக்க முடியாது.

அப்து’ல்-பஹா தமது தலைப்பாகை நைந்துபோயிருந்தது என்றார். நீங்கள் பழம்பொருள் காப்பகத்திற்குச் சென்றீர்களென்றால் ஷோகி எஃபெண்டி அவர்களின் துணிகளைப் பாருங்கள். அவை எவ்வளவு எளிமையானவை என்பதையும், எவ்வளவு நைந்துபோயுள்ளன என்பதையும் பாருங்கள்.

அவரை நண்பர்கள் காண வந்த போது அவர் அந்த பொருள்களைத் தான் அணிந்திருந்தார், அந்தக் காலனிகளைத்தான் பயன்படுத்தியிருந்தார். அவர் பொதுமக்களிடையே காட்சி தரவில்லையாதலால் அவர் அத்தகைய துணிகளை அனிந்திருந்தார்.
அங்கு நண்பர்களையெல்லாம் ஆட்கொண்டது, அவர் பிரகாசித்த மேன்மையும், அவருடைய புனிதத் தன்மையுமே, அவர் அணிந்திருந்த துணிகளல்ல. அவருக்காக எனப் பார்க்கும் போது அவர் பெரும் சிக்கனமாகவே வாழ்ந்தார், உணவும் உட்கொண்டார். அவ்விரு நிலைகளுக்கிடையிலும் பெரும் வேறுபாடு உண்டென்பதை நாம் உணரவேண்டும்.
உதாரணமாக, உணவைப் பற்றிக் குறிப்பிடுகையில், பஹாவுல்லா கூறியருளிய வாக்கொன்று உள்ளது. அவர் கூறுவது என்னவென்றால்:

“உணவு ஒரே வகையாக இருக்குமானால், இறைவனின் பார்வையில் அது மிகவும் விரும்பத் தக்கதாக இருக்கும்”.
(கித்தாப்-இ-படீ – தற்காலிக மொழிபெயர்ப்பு)

இவை வெரும் வார்த்தைகளாக மட்டும் நின்றுவிடவில்லை; பஹாவுல்லா, அப்து’ல்-பஹா, ஷோகி எஃபெண்டி ஆகியோரின் இல்லங்களில் இவை செயல்படுத்தப்பட்டன. ஷோகி எஃபெண்டி அவர்களின் காலத்தில் நானும் இத்தகைய நாட்களைக் கண்டிருக்கின்றேன். ஒரே சமயலறைதான் இருந்தது. அச்சமயலறை ஷோகி எஃபெண்டி அவர்களின் இல்லத்திற்கு மட்டுமல்ல, உலக மையத்திற்கே அதுதான் சமயலறையாக விளங்கியது.

ஆனாலும், இப்போது இருப்பதுபோல், அப்போது உலக மையத்தில் 700 அல்லது 800 ஆட்கள் வேலை செய்யவில்லை. அது மிகவும் சிறிய மையமாக இருந்தது. ஆனால், வீடுகள் ஒரு சிலரை மட்டும் கொண்டிருக்கவில்லை. மாஸ்டர் அவர்களின் வீட்டில் சுமார் 100 பேர்கள்தங்கியிருந்தனர்; அது சுமார் 200 பேர்களுக்காவது உணவு வழங்கவேண்டியிருந்தது. வேலைக்காரர்கள், தோட்டக்காரர்கள், என பலர் இருந்தனர். அவர்கள் எல்லாருக்கும் உணவு வழங்கப்பட வேண்டியிருந்தது. புனித யாத்ரீகர்களும் இருந்தனர்; அவர்களுக்கும் உணவு வழங்கப்பட வேண்டியிருந்தது, ஏனெனில் அவர்கள் உலக மையத்தின் விருந்தினர்களாக இருந்தனர். உணவு ஒரு வகையாக மட்டுமே இருந்தது, ஷோகி எஃபெண்டி அவர்கள் உட்பட.
பழம்பொருள் காப்பகத்தில் ஷோகி எஃபெண்டி அவர்களின் பத்திரங்களும், தாள்களும் உள்ளன. அவர் கணக்குகள் வைத்திருந்தார்; அவர் தமக்கென பற்று வரவு கணக்குப்புத்தகம் வைத்திருந்தார்; ஒவ்வொரு புனித இடத்திற்கும் அவர் கணக்குகள் வைத்திருந்தார்; ஒவ்வொரு திட்டத்திற்கும் அவர் கணக்குகள் எழுதி வைத்திருந்தார். அவர் தமது கைகளாலேயே எழுதப்பட்ட கணக்குகளை வைத்திருந்தார். அவற்றை நாம் பழம்பொருள் காப்பகத்தில் காணலாம்.

உதாரணமா, “பிச்சைக்காரனுக்கு அறை பியாஸ்தர் கொடுக்கப்பட்டது,” என படிக்கலாம். அறை பியாஸ்தர் என்பது அறைக்காசு கூட பெறாது! “பற்பசைக்கு 15 பியாஸ்தர்கள்” எனப் படிக்கலாம். ஷோகி எஃபெண்டி அவ்வாறுதான் கணக்கு வைத்திருந்தார். அவர் நினைவாலயங்களின் காப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் மிதவை நிதி ஒன்றை கொடுத்திருந்தார். அஃது அக்காலத்து அமெரிக்க வெள்ளிகள் இரண்டுக்குச் சமமானது. அவ்வளவுதான். செலவீடுகள் இரண்டு வெள்ளிக்கும் அதிகமானால், பிரச்சினை அவரிடம் கொண்டுசெல்லப்பட வேண்டும்; அவர்தான் முடிவு செய்வார்.

அவர் தமது வசந்தகாலத்திற்கென தனி நிதி ஒதுக்கீடு வைத்திருந்தார். அதை அவர் தமது பயணங்களுக்கு முன்பாகவே, உதாரணமாக சுவிட்சர்லாந்துக்குப் போகுமுன், ஒதுக்கி வைத்திருப்பார்; அவர் தமது நிதியொதுக்கீட்டை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுவார். அவரைக்கான விருந்தினர்கள் வருவார்கள்; உதாரணமாக அவருடைய குடும்பத்தினர்கள் வியாபார நோக்கமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவரைக்கான வருவார்கள்.

விருந்தோம்புபவர் அவரே; அவரே அவர்களுக்கெல்லாம் உணவளிப்பார்; அவை யாவும் அவருடைய நிதியொதுக்கீட்டுக்கு உட்பட்டே இருக்கும். அவரோடு எப்போதும் இருந்த ரூஹிய்யா ஃகானும், இவ்விதமான மேற்படி செலவுகளால் அவருடைய நிதியொதுக்கீடு குறைந்துகொண்டே போயிற்றாம். ஆகவே, அவர் குறைவாகவே உண்பார், உடன் ஃகானும் அவர்களும் அதில் பங்குகொள்வார். இத்தகையவையே ஷோகி எஃபெண்டி அவர்களின் செயல்முறைக்கொள்கைகள், அவ்வாறுதான் அவர் உலக மையத்தையும் நடத்தி வந்தார்.

தேசிய ஆன்மீக சபைகளுடனான அவருடைய உறவுகளில், இவை போன்றுதான் அவர் கூறக்கூடியவைகளும் இருக்கும். உதாரணமாக, ஆப்பிரிக்காவில் உள்ள தேசிய ஆன்மீக சபை ஒன்றுக்கு அவருடைய சார்பாக அவருடைய செயலாளர் எழுதிய கடிதத்தில்:

அவர்… உங்களுடைய ஆன்மீக சபை தனது செலவீடுகளை… கவனமாக கண்கானிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றார்… விவேகமான சிக்கனத்தின் வாயிலாக மட்டும், தேவையற்றவற்றை நீக்குவதன் வாயிலாகவும், தேவையானவற்றின்பால் கவனம் செலுத்துவதன் மூலமும், மிகவும் விழிப்புடனான கண்காணிப்பின் வாயிலாகவுமே உலக மையத்தில் நினைவாலயத்தையும், அனைத்துலக பழம்பொருள் காப்பகத்தையும் கட்டி, புனித நிலங்களைச் சுற்றிலும் மிகவும் படாடோபமான தோட்டங்களோ எனத் தோன்றும், ஆனால் உண்மையில் தீவிரமும், சிக்கனமும் மிகுந்த திட்டமிடுதலின் பயனான பூங்காக்களை உருவாக்கவும் பாதுகாவலரினால் முடிந்தது. இது பஹாய்களுக்கு மிகவும் அனுகூலமான ஓர் உதாரணமாக இருக்கும்… எவ்வளவுக்கெவ்வளவு சிக்கனமும், நுண்ணறிவுமிக்க கண்கானிப்பும் நிறைந்த நடவடிக்கைகளை அவர்கள் காண்கின்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு… அவர்கள் ஊக்கம் பெறுவார்கள்.
மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க தேசிய ஆன்மீக சபைக்கு, 8 ஆகஸ்ட் 1957)

இவ்விதமான ஆலோசனைகளையே அவர் தேசிய ஆன்மீக சபைகளுக்கு வழங்கிவந்தார்.

உலக மயைத்திலுள்ள நாம் உலகம் உழுவதிலுமுள்ள மற்ற பஹாய்களோடு தொடர்புகொண்டுள்ளோம். நாம் இங்கு தன்னந்தனியாக இல்லை. 100 – 500 புனிதயாத்ரீகர்கள் வந்த வண்ணமாக இருக்கின்றனர். மூன்று நாள் யாத்ரீகர்கள் வருடம் முழுவதும் வந்து போகின்றார்கள். அவர்கள் நம்மைக் காண்கின்றார்கள். அவர்களை நாம் நமது இல்லங்களுக்கு அழைத்துச் செல்கின்றோம். அவர்களுக்கு நாம் விருந்தோம்பல் வழங்குகின்றோம். அவர்களுடைய மனதில் நாம் என்னவிதமான எண்ணங்களை உருவாக்குகின்றோம், அவர்கள் அந்த எண்ணங்களைத்தான் தங்களோடு தங்களுடைய நாடுகளுக்கு கொண்டுசெல்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அவர்கள் இங்கிருக்கும் போது தங்களுடைய அனுபவங்களைப் பற்றி பேசுகின்றனர்: வீடுகள் எப்படியிருந்தன, உணவு எப்படியிருந்தது, எத்தனை வகையான உணவு பரிமாறப்பட்டது போன்றவை. நாம் சிக்கனமாக இருந்தோமானால், நாம் சிக்கனமாக இருப்பது தெரியவரும், பஹாய் உலகமும் அதிலிருந்து கற்றுக்கொள்ளும். நமது நடத்தை, போக்கு ஆகியவற்றின் மூலமாக பல்வேறு சமூகங்களின்பால் நாம் செல்வாக்குச் செலுத்தும் ஒரு சிறப்பான நிலையை நாம் இங்கு பெற்றிருக்கின்றோம்.

உலக மையத்தை ஷோகி எஃபெண்டி நிர்வகித்த பாங்கையும், அவருடைய வாழ்க்கை முறையையும், அவர் கடைப்பிடித்து வந்த மூன்று பரந்த செயல்முறைக் கொள்கைகளின் வாயிலாக வரையறுக்கலாம். ஒன்று, உலக மையத்தின் எல்லா வரவுசெலவுகளையும் மிகுந்த கவனத்துடன் கண்கானித்தது. அடுத்தது நினைவாலயங்கள் குறித்தது.
அவர், சமயத்தின் கௌரவத்தின் காரணமாக நினைவாலயங்களை பெரும் வள்ளன்மையுடனும், பெருந்தன்மையுடனும், தாரளத்துடனும் நிர்வகித்து வந்தார். மூன்றாவது, அவருடைய தனிப்ப்டட வாழ்க்கை, அவரோடு அனுக்கமாக இருந்தோர் ஆகிவற்றைப் பொருத்த வரையில், அவர் கண்டிப்பு, கடுமை ஆகியவை கூடிய சிக்கனத்தையே கடைப்பிடித்தார். அவ்விஷயத்தில் அவர் செலவீடுகள் குறித்து விழிப்போடும், எல்லா சூழ்நிலைகளிலும் சிக்கனத்தையும் கடைப்பிடித்து வந்தார்.
மீண்டும், ரூஹிய்யா ஃகானும் அம்மையார் கூறிய கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது. பாதுகாவலர் அவர்கள் நினைவாலயங்களுக்குப் பொருட்கள் வாங்க கடைகளுக்குச் செல்லும்போது, உதாரணமாக லண்டன் நகரின் கடைகளுக்குச் செல்லும் போது, தாம் விரும்பும், தமக்குத் தேவைப்படும் பொருட்களைக் காண்பார், அவை அதிக விலை மிக்கதாக இருக்கும். அஃது அவருக்உகத் தேவைப்பட்டதென்றாலும் அவர் அதை வாங்க மாட்டார். அவர் கடைக்காரரிடம் தாம் விதிக்கும் விலையைக் கூறுவார்; அஃது ஏற்கப்ட்டதென்றால் ஏற்கப்பட்டது, இல்லையெனில் அஃது ஏற்கப்படவில்லை. அவருக்கென ஒரு கோட்பாடு இருந்தது, அவர் அக்கோட்ப்பாட்டைப் பற்றியே செயல்பட்டு வந்தார்.
தெய்வச் சமயத் திருக்கரம் திரு பல்யுஸி அவர்கள், அப்துல் பஹா குறித்த ஒரு கதையைச் சொன்னார். திலு பல்யுஸியின் தந்தை மாஸ்டர் அவர்களோடும், மற்றும் சில பஹாய்களோடும் லண்டனில் இருந்ததாகவும், அவ்வேளை அவர் ஹேரட்ஸ் எனப்படும் டிபார்ட்மண்ட் ஸ்டோருக்குச் சென்றதாகவும் கூறினார். இந்த ஹேரட்ஸ் என்பது மிகவும் பெரிய விற்பனைக்களமாகும்; பல மாடிகள் கொண்ட இதில் தேவைப்படும் எந்தப் பொருளையுமம் நாம் வாங்கலாம். மாஸ்டர் அங்கு எதையோ வாங்கச் சென்றார். விலையை விசாரித்தார், அது மிகவும் அதிகமாக இருந்தது.

அதற்கு அவர், “நான் இவ்வளவிற்குதான் அதை வாங்க இயலும்,” என தமது விலையைக் குறிப்பிட்டார். ஆனால், ஹேரட்ஸ் போன்ற பெரிய விற்பனை நிலையங்களில் பேரமெல்லாம் பேச முடியாது. ஆனால், அப்து’ல்-பஹா தாமே விலையை நிர்ணயித்தார். விற்பணைப் பணிப்பெண், “மன்னிக்கவும், நான் அவ்வாறு உங்களுக்கு விற்க இயலாது,” என்றாள். ஆனால், மாஸ்டர் அவர்களின் இயல் தோற்றத்தையும், போக்கையும் கண்ட அப்பெண், அவர் அப்பால் திரும்பியவுடன், நிர்வாகியிடம் ஓடிச்சென்று நடந்தவற்றைக் கூறினாள். நிர்வாகியும் உடனடியாக வெளிய வந்து, வெளியேறிக்கொண்டிருந்த மாஸ்டர் அவர்களைப் பார்த்து, “தயவு செய்து திரும்பி வாருங்கள்; நீங்கள் கேட்ட விலைக்கே நாங்கள் அப்பொருளை விற்கின்றோம்,” என்றார். ஆக, செலவு செய்வதில் நமது சமயத்தின் தலைவர்கள் அனைவருமே பெரும் கவனம் செலுத்தியுள்ளனர் என்பதை நாம் காண்கின்றோம்.

இப்போது, சில இறுதி வார்த்தைகள். ஆடம்பரச் செலவு என்பது நல்லதன்றென்பது நமக்குத் தெரியும், இருந்தும் நம்மையறியாமலேயே நாம் ஒரு சில வேளைகளில் இவ்விஷயத்தில் விட்டுக் கொடுப்பவர்களாக தேவையற்று செலவுகளை மேற்கொள்கின்றோம். இது ஒரு வேளை மனித இயற்கையோ என்னவோ. இதைப் புரிந்துகொள்வதற்கு நான் எவ்வளவோ முயன்றுள்ளேன். பெஞ்சமின் ஃபிராங்லின் என்பவரின் பிரபலமான கூற்றாகிய, “நேரம் பணத்திற்குச் சமம்,” என்பதை நான் ஞாபகப்படுத்திக்கொண்டேன். “சரி, நான் இப்போது நேரத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்,” என எனக்கு நானே கூறிக்கொண்டேன். அப்போது நேரத்தைப் பற்றி பஹாவுல்லா கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வந்தன:

“மூச்சுக் காற்று ஒன்றைப்போல் உங்கள் வாழ்நாட்கள் மறைந்தோடிக்கொண்டிருக்கின்றன… இறைவனை ஞாபகப்படுத்திக்கொள்வதற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாட்கள் மகிழ்ச்சி நிறைந்த நாட்கள்… சோம்பலிலும், சுறுசுறுப்பின்மையிலும் உங்கள் நேரங்களை வீனாக்காதீர்கள்.”
(கித்தாப்-இ-அக்டாஸ், பாரா. 40 & 33)

நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து நமக்கு ஆலோசனை வழங்கும் நமது சமய ஸ்தாபகரின் குரல் இது. சுறுசுறுப்பின்மை என்பது சோம்பலே ஆகும். நானும் அவருடைய நம்பிக்கையாளர்களில் ஒருவர். பஹாவுல்லா, நான் சோம்பலாக இருக்கக்கூடாது எனவும், நேரத்தை வீனாக்கக்கூடாது எனவும் கூறுகின்றார், ஆனால், நான் என்னுடைய 24 மணி நேரத்தைக் ஆய்வு செய்யும் போது, “ஆஹா!” நிமிடங்கள் அல்ல, மாறாக பல மணி நேரங்களைக் கூட ஒன்றும் செய்யாமல் நான் வீணாக்கியுள்ளேன்!

“பெரும் கலைப்பினாலோ, சோம்பலினாலோ நான் ஒன்றுமே செய்ய இயலாமல் இருக்கின்றேன்.” எனக்கு நானே கூறிக்கொள்ளும் சமாதானம் இது. நாம் பெஞ்சமின் ஃபிராங்க்லின் வார்த்தைகளோடு ஒத்துப்போனால், “நேரம் பணத்திற்குச் சமம்,” என நினைத்தால், நாம் நேரத்தை எவ்வாறு செலவளிக்கின்றோம் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். நேரம் பணத்திற்குச் சமமென்றால் வீனான நேரங்களை நாம் பணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாம் சுலபத்தில் சோம்பலில் ஆழ்ந்துவிடுகின்றோம். நாம் செய்வன குறித்து நாம் உணர்வற்று இருக்கின்றோம். துரதிர்ஷ்ட வசமாக இதுவே மனித இயல்பாக உள்ளது.

மற்ற நேரங்களில், பஹாய் நிதியின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் செயலைச் சாறாத ஒன்றை உலக மைய ஊழியர் ஒருவர் செய்கின்றார் என வைத்துக்கொள்வோம்; பிறகு அதே போன்ற ஒரு செயலை மற்ற ஓர் ஊழியரும் செய்கின்றார். சாதாரணமாக, அக்காரியத்தை இரு நபர்கள் செய்ததனால், அதைப் பொதுவான ஒரு கருத்தாக்கி, பலர் அவ்விதமாக செயல்படுகின்ற காரணத்தினால், எல்லாரும் அவ்விதமாகவே செயல்படுகின்றனர் என நாம் கற்பனை செய்யக்கூடும்.
அதனால்: “உலக மையத்தில் இதுவே நடைமுறை போலிருக்கின்றது,” என நாம் முடிவு செய்யலாம். “நாம் ரோமாபுரியில் இருக்கும் போது ரோமர்கள் செய்வது போன்றுதான் நாமும் செய்யவேண்டும். உலக மையத்தில் இதுதான் முறை,” ஆனால், அதே வேளை அவ்வாறு நடந்துகொள்ளாத ஒருவரோ, இருவரோ, அல்லது ஐந்து அல்லது பத்து தனிநபர்கள் இருக்கக்கூடும் என்பதை நாம் கண்டுணரக்கூடாதா? அஃது அவர்களுடைய பிரச்சனை. ஒரு மனிதனின் நம்பிக்கை அம்மனிதனாலன்றி வேறு யாராலும் முடிவு செய்யப்பட முடியாது என பஹாவுல்லா கூறுகின்றார்

அதே போன்று, ஒரு மனிதனின் செயல்கள், மற்றவர்களின் செயல்கள் அல்லது துர்செயல்களின் அடிப்படையில் நிலைப்படுத்தப்படக்கூடாது. இறைவனின் முன்னிலையில் நானே பொறுப்பாளியாவேன். மற்றவர்கள் செய்யக்கூடியன அல்லது செய்யாமலிருப்பனவற்றுக்கு நான் பொறுப்பாளியல்ல. எனக்கு நானே பொறுப்பாளியாவேன்; நான்தான் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும்; சரியானவையோ, தவறானவையோ, மற்றவர்கள் செய்யும் காரியங்கள், தெளிவாகவே, என் பிரச்சனைகள் அல்ல! நான் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யலாம், ஆனால், அவர்களை நான் பின்பற்றக்கூடாது.

பாரசீகத்தில் “ஹம் சிஸ்மி”, என பாரசீகர்களால் அழைக்கப்படும் ஒரு மனப்போக்கு உள்ளது. அது, ஏறத்தாழ போட்டி மனப்பான்மையைக் குறிக்கும், அல்லது, ஒருவர் மற்றவரைவிட மேலும் நன்கு செய்யவேண்டும் எனும் மனப்போக்கையும் அது குறிக்கும். இம்மனப்பான்மையை பின்வருமாறு விளக்கப்படுத்தலாம்: “அந்த மனிதர் அதை செய்கின்றார், நானும் அதையே ஏன் செய்யக்கூடாது? நான் அவரைவிட ஒன்றும் குறைந்தவனல்லவே.” அல்லது, “அவள் அதைச் செய்கின்றாள், நானும் அதையே செய்யவேண்டும்.”

அஃது ஒரு விதமான பொறாமையாகும், அல்லது போட்டியாகும். இது ஆரோக்கியமானதல்ல, மிக மிக ஆரோக்கியமற்றதாகும்; இது துராசை; இத்தகைய ஆசைகளை பஹாவுல்லா கண்டித்துள்ளார். உங்களுக்குப் பழக்கமானவையான வார்த்தைகளை உங்களுக்கு இப்போது படித்துக்காண்பிக்க விரும்புகின்றேன்: “எல்லாப் பேரிச்சைகைைளயும் விலக்கிவைத்துவிட்டு மனநிறைவை நாடுக”. (பாரசீக மொழி தெரிந்த அன்பர்களுக்கு: பஹாவுல்லா இங்கு உபயோகிக்கும் வார்த்தை “ஃகணா’அத்”, எனனும் வார்த்தையாகும்; பாதுகாவலர் மறைமொழி நூலில் அதை “மனநிறைவு” என மொழிபெயர்த்துள்ளார்). நான் மீண்டு அதை கூறுகின்றேன்:

“எல்லா பேரிச்சைகளையும் விலக்கிவைத்துவிட்டு மனநிறைவை நாடுக, ஏனெனில் பேரிச்சைகொண்டோர் என்றென்றும் இல்லாதவர்களாகவும், மனநிறைவெய்தியோர் நேசிக்கவும், போற்றவும் பட்டுள்ளனர்.” (பாரசீக மறைமொழிகள், #50)

இறுதியாக, ஒன்றே ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். நான் இங்கு நிற்கும் மேடையை ஓர் உதாரணமாகக் கொள்ள விரும்புகின்றேன். இதன் ஒரு மூலை படாடோபமெனவும், மறு மூலை கஞ்சத்தனம் எனவும் எடுத்துக்கொள்வோம். அந்த இரண்டு குணங்களும் ப‎ஹாவுல்லாவால் கண்டிக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கு நடுவில் ஒன்று உள்ளது; அதுதான் சிக்கனம். ஆக, இதுவே நாம் இருக்க வேண்டிய நிலையாகும். ஆனால், எத்தனை முறை ப‎ஹாய்கள் நடுப்பாகத்திலிருந்து ஓரங்களான படாடோப நிலைக்கு இடம் பெயர்ந்துள்ளனர். ஒரு மூலை புயலைப் போன்றது, அதன் மறு மூலை பஞ்ச நிலையைப் போன்றது! நடுவில் விழுவதே தூரல். அவர் நாம்னைவரும் நடுவில் இருக்க வேண்டுமென கூறுகின்றார்; கூடக்குறைய ஐந்து விழுக்காடு அங்கும் இங்கும் இருக்கலாம். பாதுகாவலர் ரூஹிய்யா ஃகானும் அவர்களுக்கு கூறியது போல, “பஹாய் சமயம் நடுநிலை சமயமாகும்”.

தெய்வீக சாம்ராஜ்யம்


டாக்டர் பீட்டர் காஃன் அவர்களின் சொற்பொழிவு
வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2001
இராஜ்யத்தின் மாநாடு, மில்வௌக்கீ, விஸ்கான்சின்

அன்பு மிகு நண்பர்களே, ஐக்கிய அமெரிக்காவின் எல்லா பாகங்களிலிருந்தும் நாம் இங்கு கூடியுள்ளோம். பார்க்கப்போனால், உலகின் பல பாகங்களிலிருந்தும் கூடியுள்ளோம் எனவே கூறலாம். அப்படி கூடியுள்ள நாம், இறைவனின் சாம்ராஜ்யம் உலகில் நிறுவப்படும் நாள் வரப்போகின்றது எனும் நம்பிக்கையையும், எதிர்ப்பார்ப்பையும், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அனையாமல் வைத்திருந்த எண்ணிகையிலடங்கா தலைமுறையினரின் வாரிசுகள் ஆவோம். சில சமய நம்பிக்கைகளில், இறைவனே பூமிக்கு வந்து தமது மக்களிடையே குடியிருப்பார் எனும் நம்பிக்கையோடு இது தொடர்புபெற்றிருந்தது. இந்த அனைத்து எதிர்ப்பார்ப்புகளிலும், மனித நடவடிக்கைகளில் இறைவனே தலையிடுவார் எனவும், நீண்ட காலமாக வாக்களிக்கப்பட்டிருந்த சுபிட்சம், ஐக்கியம், மற்றும் சாந்தி ஆகியவை உலகம் முழுவதும் ஸ்தாபிக்கப்படும் எனவும் ஒரு விழிப்புணர்வு இருந்துவந்துள்ளது.

நாம் வாழ்ந்துவரும், சமய முக்கியத்துவம் பெரிதும் குறைந்துள்ள இக்காலத்தில், அந்த எதிர்ப்பார்ப்பு மங்கிவிட்டது. ஆனால், கடந்த பல வருடங்களாக, உலகில் நடந்துவரும் சம்பங்களால் அது மீண்டும் தலைதூக்கியுள்ளது. அதோடு, உலகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளின் பரினாமம் குறித்த விழிப்புணர்வினாலும் இந்த எதிர்பார்ப்பு தலைதூக்கியுள்ளது. உங்களில் பலர் அல்லது எல்லாருமே உணர்ந்துள்ளதுபோல், இது பஹாய் சமயத்தின் மைய செய்தியும் ஆகும். உலகத்தில் இறைவனின் சாம்ராஜ்யம் பூமியில் ஸ்தாபிக்கப்படப் போகின்றதெனும் தொன்மையான தீர்க்கதரிசனம், நிறைவேறும் காலத்தில்தான், நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

நாம் எங்கெங்கு பார்க்கினும், மாற்றியமைக்கும் சக்திகள், மனித சிந்தனை மற்றும் நடவடிக்கைகளின் எல்லா நிலைகளினூடும் தனியாத வேகத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை, இக்குறிக்கோளின் நிறைவேற்றத்திற்கு ஏற்புடைய மாற்றங்களை உருவாக்கிவருகின்றன. நம்மிடையே பலர், பஹாய் சமயத்தின் உறுப்பினர்களாக உங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளீர்கள். நீங்கள், உலகில் நடப்பவற்றை ஆன்மீகமயமாக்குதல் குறித்தும் அஃது ஒரு நிலையான அஸ்திவாரத்தில் ஸ்தாபிக்கப்படுவதற்கும் ஒரு முக்கிய பங்காற்றவிருக்கின்றீர்கள். இந்தக் கடமையை நீங்கள் தொண்டு ரீதியில் ஏற்றுள்ளீர்கள். இது நமது சலுகையாகும். இது நமது உரிமையாகும்.

பூமியில் இறைவனின் சாம்ராஜ்யம் என்றால் என்ன என்பது குறித்து நாம் சிந்திக்கும் அதே வேளையில், இது குறித்து பஹாய் சமயம் என்ன கூறுகின்றது என்பது பற்றிய எனது புரிந்துகொள்ளலை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவரவிரும்புகிறேன். என் நம்பிக்கை என்னவெண்றால், நம்மைச் சுற்றிலும் இந்த விஷயம் குறித்து மேலோங்கியுள்ள பொதுவான நம்பிக்கையிலிருந்து பஹாய் சமயத்தின் கண்ணோட்டம் மூன்று வகைகளில் வேறுபடுகின்றது என்பதாகும். முதலாவதாக, பஹாய்களெனும் முறையில், இது தீடீரென நடக்கப்போகும் ஒரு நிகழ்ச்சி. என நாம் நம்பவில்லை. மனித காரியங்களில் இறைவனின் தலையீடு என்பது தொடரும் வளர்செயற்பாடே என்பது நமது நம்பிக்கை. சரித்திரமென்பது பெரும் வியப்பளிக்கும் முறையில் ஒரு முடிவிற்கு வரும் எனவோ, கண்சிமிட்டும் நேரத்தில் ஒரு தன்மை மாற்றம் ஏற்பட்டு, இறைவனின் சாம்ராஜ்யம் பூமியின் மீது படியும் எனவோ நாம் எதிர்பார்க்கவில்லை. பார்க்கப்போனால், இறைவனின் சாம்ராஜ்யம் என்பது, நீண்ட கால இடைவெளியில், மகத்தான, வலுமிக்க ஒரு முயற்சியின் விளைவாகவே உருபெறும் என நாம் நினைக்கின்றோம். இந்த உருபெறும் காலம், பத்தாண்டுக் காலங்களாக அல்ல, மாறாக, நூற்றாண்டுக்காலங்களாக கணக்கிடப்படுகின்றது..

இந்த உலகில் இறைவனின் சாம்ராஜ்யத்தின் வருகையானது, தற்போதைக்கு அற்பமாகத் தோன்றும், ஆனால், காலப்போக்கில் பெரும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படப்போகின்ற செயல்களைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் என்பதே நமது நம்பிக்கை. தனிமனிதர்கள், தங்களின் மாபெறும் சாதனைகளை, தங்களின் ஆழ்ந்த மனதிருப்தியை, தங்களின் வாழ்க்கையின் அர்த்தம் குறித்த அதி ஆழ்ந்த ஞானத்தை, சாம்ராஜ்யத்தை உருவாக்கும் வளர்செயற்பாட்டில் தங்களை ஈடுபடித்திக்கொள்வதன் வாயிலாக அடையப்போகின்றனர் என்பதே நமது நம்பிக்கை. இந்த சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்திடுமாறு நாம் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளோம். ஆரம்பமாக, இதை நமக்குள், நமது இதயங்களில், நமது ஜீவனின் ஆழ்மையத்திற்குள்ளேயே ஸ்தாபிக்கவேண்டும். அடுத்ததாக, உலகந்தழுவிய நிலையில் உள்ள பஹாய் சமூகத்திற்குள் அதை ஸ்தாபிக்கவேண்டும்.

மூன்றாவதாக, இராஜ்யத்தை உருவாக்குவதற்காக உலகின் நாலாமூலைக்களுக்கும் இந்த சமூகம் பரவிச்செல்வதன் வாயிலாக அது ஸ்தாபிக்கப்படப்போகின்றது. இராஜ்யத்தைப் பற்றிய பஹாய் எண்ணத்தின் அசாதாரன அம்சங்களில் அதுவும் ஒன்று. எல்லா தேசங்களையும், இனங்களையும், பின்னனிகளையும் சார்ந்த மக்களின் பெரும் முயற்சி, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பின் வாயிலாக அது சிறுகச் சிறுக உருபெறப்போகின்றது. எனது இரண்டாவது கருத்து என்னவென்றால், இராஜ்யத்தின் உருவாக்கம் குறித்த நமது அறிவு, மனித வரலாற்றில் இதுவரையிலும் நடந்திராத அதிமேன்மையான படைப்புச் செயல் ஒன்றை அது உள்ளடக்கியுள்ளது என்பதே ஆகும். குழுக் குறிக்கோளைப் பின்தொடருவதில் மனிதர்களின் கூட்டுமுயற்சியில் ஒரு மகத்தான நிலைமாற்றமாகும் இது.
பஹாவுல்லா, உயிர்ப்பொருளியல் சார்ந்த ஒருமங்களை உருவாக்கும்படி விதித்துள்ளார் என்பதே என்னுடைய புரிந்துகொள்ளல் ஆகும். இது, மனித நடவடிக்கை மற்றும் நடத்தைமுறைகளின் வரலாறு இதுவரை கண்டிராத ஓர் அம்சமாகும். இந்த உயிர்ப்பொருளியல் ஒருமங்கள், பஹாய்கள் எனும் முறையில் ஒரே நம்பிக்கையைக் கொண்டுள்ள குழுக்களையும், தனிநபர்களையும் உள்ளடக்கியுள்ளன. ஆனால், இந்த ஒருமங்கள் அவற்றின் தனிக்கூறுகளின் ஆற்றலைக்காட்டிலும் அதி உயர்வான ஆற்றலைக் கொண்டுள்ளன. அவற்றை நாம் உள்ளூர் ஆன்மீக சபைகளெனவும், தேசிய ஆன்மீக சபைகளெனவும், நியாய மன்றங்கள் எனவும் அழைக்கின்றோம். அவை, நடைமுறை ரீதியில் உண்மையாகவே மனிதநிலைக்கும் அப்பாற்பட்டவை. அவற்றின் கூறுகளின் ஒன்றுதிரண்ட ஆற்றல்களைக்காட்டிலும் அவை அதி உயர்வான ஆற்றல்களைக் கொண்டுள்ளன. எந்த ஒரு நேரத்திலும், அவற்றின் உறுப்பினர்களாக உள்ளடங்கியிருக்கும் தனிபர்களின் வாழ்க்கையைக் காட்டிலும், அவற்றிற்கு நிலைத்து நிற்கும் ஓர் இருப்பு நிலை உண்டு.

அவை அதி ஆழ்ந்த ஆன்மீக ஆற்றல்களின் வாயிலாக உந்துதல் அளிக்கப்படுகின்றன. அறிந்துள்ளவரை, பெரும்பாலும் ஆற்றல் குறைந்த ஓர் ஆரம்ப நிலையிலிருந்து வலுவும், ஆற்றலும் நிறைந்த ஓர் நிலையை நோக்கி படிப்படியாக வளர்ச்சியடைகின்றன. நம்மைச் சுற்றிலும், செயல்படாத நிலையில் இருக்கும் பல உள்ளூர் ஆன்மீக சபைகளை அடிக்கடி காணுகின்றோம். ஒன்றுகூடுவதற்கு இயலாதவைகளாகவும், மிகவும் அடிப்படையான தீர்மானங்கள் எடுப்பதற்கு இயலாதவைகளாகவும், தங்களின் கலந்தாலோசனை குறித்த கடமைகளின் அடிப்படை அம்சங்களிலேயே பிரச்னைகளை எதிர்நோக்குபவைகளாகவும் இவை இருக்கின்றன. நாம், ஒரளவிற்கு வலுவற்றிருக்கும் இந்த ஸ்தாபனங்களைப் பார்க்கின்றோம். பெரும் அன்புடனும் நம்பிக்கையடனும் நாம் அவற்றை பார்க்கின்றோம். ஏனெனில், இந்த சாதாரன ஆரம்ப நிலைகளிலிருந்துதான், ஆன்மீகப் படிமுறை வளர்செயற்பாட்டின் வழி, பத்தாண்டுக்காலங்கள் மற்றும் நூற்றாண்டுக்காலங்களினூடே, வரலாறு காணாத இந்த மகத்தான உயிர்ப்பொருளியல் ஒருமங்கள் உருவாகின்றன என்பது நமக்குத் தெரியும்.

அவற்றின் தற்போதைய ஆற்றல் குறைந்த நிலையை நாம் கண்டனம் செய்ய கிளம்புவோமானால், தெளிவாகவே ஆற்றல் குறைந்த நிலையில் இருக்கும் பச்சிளம் சிசுக்களையும் நாம் கண்டனம் செய்யவேண்டும். இந்த ஆன்மீக சபைகளின் பராமரிப்பு, அன்பு, மற்றும் மேம்பாட்டில் நாம் ஈடுபட மறுத்தோமானால், அன்றலர்ந்த பச்சிளம் சிசுக்களையும் நாம் புறக்கணிக்க வேண்டும், அவற்றை அவற்றின் வழிக்கே விட்டுவிட வேண்டும், கேட்பாரற்று அவை அழிந்து போகவும் விடவேண்டும். உலகம் முழுவதும் உள்ள இந்த உள்ளூர், தேசிய உயிர்ப்பொருள் ஒருமங்கள், ஓர் உலகளாவிய உயிர்ப்பொருள் அமைப்பாக ஒன்று சேர்கின்றன. இந்த ஒன்றசேர்க்கை, இறைவனின் சாம்ராஜ்யம் பூமியில நிறுவப்படுவதற்காக நாம் பயன்படுத்தவிருக்கும் குறைவான வளங்களை செயல்விளைவுகளிக்கும் வகையில் பஹாய் சமூகங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்கின்றது. பூமியில் இறைவனின் சாம்ராஜ்யம் குறித்த பஹாய் புரிந்துகொள்ளலாக, மூன்றாவது அம்சமாகவும், ஒரு வேளை மனதை பெரிதும் ஈர்ப்பதாகவும் இருக்கக்கூடிய ஒன்று உள்ளது. இராஜ்யத்திற்குள் நிறைவளிக்கும் இருப்புநிலை, வளர்ச்சியாற்றல் கொண்டநிலையே எனவும், இயங்காநிலையி அல்ல எனும் பஹாய் புரிந்துகொள்ளலே அது. இயங்காநிலை, மாற்றமற்றநிலை, மற்றும் உண்மையில் சொகுசுநிலை ஆகியவை சம்பந்தமான உணர்விலேயே சுவர்க்கநிலை மனதுக்குகந்த நிலையென்பது பாரம்பரிய சமயநம்பிக்கையாகும். இதற்கு நேர் எதிர்நிலையில் மேற்கண்ட பஹாய் கருத்து உள்ளது.

தனிமனிதர்களும் சமூகஅமைப்புக்களும் நிறைவு பெறுவதற்கு, தொடர்ந்தாற் போன்ற நிலையிலான மாற்றங்களும், வளர்ச்சியும் அத்யாவசிய தேவைகளாகின்றன என்பது நமது கருத்தாகும். ஏன்? ஏனெனில், மனிதர்கள் படைப்புணர்வு மிக்கவர்கள். பஹாய்கள் எனும் முறையில், இதன் காரணமாகவே படைப்புத்திறன் வெளிப்படும் ஓர் தூண்டுகோலாக நமது சமயம் இருப்பதே நமது குறிக்கோளாகவும், முயற்சியாகவும் இருக்கவேண்டும். அன்றி, பகுத்தறிவுக் கைவிலங்காக அது இருக்கக்கூடாது. அஸ்திவார நம்பிக்கைகளின் மாற்றவியலா தன்மையை இசைவிணக்கமான பயன்படுத்துதலோடு இணைத்திட நாம் முற்படுகின்றோம்.

என்றும் தொடர்ந்து கல்வி கற்கும், என்றும் தொடர்ந்து மேம்பாடு காணும், என்றும் தொடர்ந்து விரிவடையும் ஓர் சமூகத்தை உருவாக்கவே நாம் முயற்சி செய்கின்றோம். அவ்வித சமூகத்தில், பல்வகைப்பட்ட பின்னனிகள், திறன்கள், ஆற்றல்கள் மற்றும் விருப்பங்களைக் கொண்ட எல்லா தனிமனிதர்களும் தங்களுடைய ஆழ்ந்த நிறைவுநிலையை அடையமுடியும். ஒன்றுக்கொன்று எதிர்மாறானவை என கருதப்படும் அம்சங்களை அறிவுக்கப்பாற்பட்ட உயிர்ப்பொருளியல் ரீதியில் ஒன்றிணைக்க நாம் முயலுகின்றோம். வாழ்க்கையில், தியாகம் சார்ந்த முயற்சிகளுடன் ஒத்துப்போகும் இன்பத்தைத் தேடுவது நியாயமான ஒன்றாக இருக்கக்கூடிய இராஜ்யத்தை அமைக்க நாம் முயற்சி செய்கின்றோம். தன்னிச்சை என்பது இணக்கமான முறையில் கட்டொழுங்குடன் ஒன்றிணையும் ஓர் இராஜ்யத்தை நாம் உருவாக்குகின்றோம்.

கூட்டு ஸ்தாபனங்களின் அதிகாரத்திற்குக் கீழ்படிவதோடு இசைவிணக்கம் கொள்ளக்கூடிய, தனிமனிதத்தன்மை பராமரிக்கப்படும் ஓர் இராஜ்யத்தை நாம் உருவாக்குகின்றோம். நம்பிக்கையில் உறுதிப்பாடு என்பது, எதையும் ஆராயும் ஓர் உணர்வுடன் இசைவுகொள்ளக்கூடியதும், வேறுபடும் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கக்கூடியதுமான ஓர் இராஜ்யத்தை நாம் ஸ்தாபிக்க முயலுகின்றோம். இராஜ்யத்தை உருவாக்கு வழிவகைகள் குறித்து அடுத்த சில நாட்களில் பல விஷயங்கள் பேசப்படவிருக்கின்றன. நாளை, தேசிய ஆன்மீக சபை தனது அற்புதமான திட்டத்தை நம்மோடு பகிர்ந்துகொள்ள விருக்கின்றது. இத்திட்டம், இந்த வளர்செயற்பாட்டில் ஒரு பெரிய அடி எடுத்துவைக்கப்படுவதற்கு இணையாகும். இருந்தபோதிலும், இராஜ்யத்தை உருவாக்கும் விஷயம் குறித்து ஒரிரண்டு கருத்துக்களை முன்வைக்க எனக்கு அனுமதி தாருங்கள்.

ஒரு தூரநோக்கை மேம்படுத்திக்கொள்வதே நமது மிகப் பெரியதும், அதி அடிப்படையானதுமான ஒரு தேவையாக இருக்கின்றது என்பது என் கருத்து. நமக்கு என்ன வேண்டும், எங்கு செல்கின்றோம், மற்றும் அங்கு எவ்விதம் சென்றடையப்போகின்றோம் என்பது குறித்த ஓர் கூர்நோக்கை நாம் நம் மனதில் உருவாக்கிக்கொள்வோம். அடிப்படையில், புனித வாசகங்களில் மூழ்குவதன் வாயிலாகவும், பஹாய் வாழ்வுமுறையின் வாயிலாகவும், அவ்வப்போது நமது ஸ்தாபனங்கள் அமுல்படுத்தும் வெவ்வேறு திட்டங்களின் வாயிலாகவும் இந்தக் கூர்நோக்கை நாம் அடையலாம். இந்தக் கூர்நோக்கை சுலபமாக அடைந்துவிடுவோம் என நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அவ்வப்போது வாசகங்களில் மூழ்குவதால் மட்டும் இந்தக் கூர்நோக்கு ஒரு பரிசாகக் கிடைக்கும் என நம்மை நாம் ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அல்லது, அவ்வப்போது பஹாய் சமூக வாழ்வு முறையில் பங்கெடுப்பது, அமெரிக்க பஹாய் சமூகத்தின் முயல்வுகளான பல்வேறு திட்டங்களில் அவ்வப்போது பங்கெடுப்பது, ஆகியவை மூலமாகவும் கிடைக்கும் என நாம் நம்மை ஏமாற்றிக்கொள்ளவேண்டாம். இந்த எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதன் வாயிலாக மட்டுமே இக்கூர்நோக்கு நமக்குக் கிடைக்கும்.

இந்த கூர்நோக்கை அடைவதன் வாயிலாக, விலைமதிப்பற்றதும், அபூர்வமானதும், பார்க்கப்போனால், தனிச்சிறப்புடையதுமான ஒன்றை நாம் அடைவோம். ஒரு விசாலநோக்கை அடைவோம். அந்த விசாலநோக்கு, உலகில் இராஜ்யத்தை உருவாக்கிட உதவும் ஆன்மீக, பௌதீக சக்திகள் மற்றும் வளர்செயற்பாடுகள் ஆகியவற்றின் இயக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும். ஒரு புதிய அறிவு, ஒரு புதிய பார்வை, ஒரு புதிய உள்ளம், ஒரு புதிய செவிப்புலன், மற்றும் உறுதியாகவே, ஒரு புதிய குரலையே நாம் பெறுவோம். இறைவனின் திருவிருப்பத்திற்கிணங்க, உலகில் செயல்பட்டும், அதை மாற்றியமைத்தும், நிலைமாற்றம் செய்யவும் கூடிய ஆன்மீக மற்றும் பௌதீக சக்திகளை உள்ளடக்கிய ஒரு கூர்நோக்கு அது. இந்த மேம்படுத்தப்பட்ட பார்வையின் வாயிலாக, ஒரு சமூக உணர்வையும் நாம் பெறுவோம். பல்வகைப் பரிமானங்களை உள்ளடக்கிய ஒரு சமூகமாக அது இருக்கும். குறிப்பிட்ட இடம் எனும் குறுகிய உணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு சமூக உணர்வு அது. ஐக்கிய அமெரிக்காவில் உள்ள பஹாய்களோடோ, வட அமெரிக்காவில் உள்ள பஹாய்களோடோ, அமெரிக்க துணைக் கண்டத்தில் உள்ள பஹாய்களோடோ மட்டும் கொண்ட ஒற்றுமை மற்றும் ஐக்கிய உணர்வல்ல. மாறாக, உலகம் முழுவதையும் உள்ளடக்கிய ஒரு உணர்வாக அது இருக்கும்.

ஒரே உண்மையான, அறிவிற்கப்பாற்பட்ட பல்வகைத் தன்மை, புலனுக்கோ, கணிப்பிற்கோ அப்பாற்பட்ட அன்பெனும் பந்தங்களால் ஐக்கியப்படுத்தப்பட்ட குடும்பம் எனும் உணர்வை இன்று, இங்கு இந்த கூட்டத்தில் நாம் உணர்வது போலவே நாம் உணர்வோம். காலப்பரிமானத்தைத் தாண்டிய ஒரு சமூக உணர்வையும் நாம் பெறுவோம். நமக்கு முன் சென்றவர்களோடும் நாம் ஒரு சமூக உணர்வைப் பெறுவோம். ஈரான் நாட்டின் ஆரம்ப பஹாய்கள் மற்றும் உதயத்தைத் தோற்றுவித்தவர்களின் உற்சாக உணர்வில் நாமும் பெங்குபெறுவோம். இந்த வீர ஆன்மாக்களோடு ஒரு சமூக உணர்வை நாம் பெறுவோம். நாம் உற்சாகம் அடைவோம். அமெரிக்க பஹாய்கள், ஈரானிய பஹாய்களின் ஆன்மீக சந்ததியினராக தங்களை கருதிக்கொள்கின்றனர், எனும் ஷோகி எபெஃண்டி அவர்களின் எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றுவோம். அதற்கும் அப்பால் நமது சமூக உணர்வு, வானவெளியை மட்டும் தொடுவதாக இருக்காது, கடந்தகாலங்களை மட்டும் உள்ளடக்கியதாக இருக்காது, ஆனால், இனி வரப்போவோருடனும் நாம் தொடர்புகொள்வோம்.

வருங்காலத்தில் வரப்போகிறவர்கள், கால ஓட்டத்தில் தங்கள் உலகவாழ்வை நோக்கி வந்துகொண்டிப்பவர்கள், வருங்காலத்திலிருந்து நம்மை நோக்கி அனிவகுத்துவருபவர்கள், தங்கள் கைகளில் நிர்வாகத்தை எடுத்துக்கொள்ளப்போகின்றவர்கள், இந்த காரியங்களில் நமக்கு உதவிசெய்ய போகின்றவர்கள், வரப்போகும பத்தாண்டுகளிலும், நூற்றாண்டுகளிலும் தாங்கள் அனுபவிக்கப்போகும் ஐக்கியத்திற்கும் சுபிட்சத்திற்குமான அஸ்திவாரமாக நமது தற்போதைய முயற்சிகளை காணப்போகின்றவர்கள் குறித்து நாம் விழிப்புணர்வு கொள்வோம்.

இந்த தூரநோக்கின் மூலமும், இந்த சமூக ரீதியிலான உணர்வின் மூலமும், இன்னமும் பிறந்திடாத வருக்கால சந்ததியினரின் நல்வாழ்வு குறித்து நாம் எந்த அளவிற்கு பொறுப்பேற்றுள்ளோம் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இராஜ்யத்தை உருவாக்கும் இந்த நேரத்தில், மனதில் வீர உணர்வுகளை மறுமலர்வு பெறச் செய்வதே இப்போதைய தேவையாகும்.

சுகவாழ்வை நாடும், பேராசையும் தன்னலமும் மிகுந்த, அவநம்பிக்கை மிக்க ஒரு காலத்தில் நாம் வாழுகின்றோம். இங்கு, இன்று கூடியுள்ள நாம், அமெரிக்க வாழ்வுக்கும், ஈரானிய பஹாய் சமூகத்தின் வாழ்வுக்கும், மேற்கு நாடுகளின் வாழ்வுக்கும் கடந்த காலங்களில் மையமாக விளங்கிய அந்த அம்சங்களை மறுஉயிர் பெறச் செய்திட ஆணையிடப்பட்டுள்ளோம். வீர உணர்வு பெற ஆணையிடப்பட்டுள்ளோம். மேன்மை மிகு குறிக்கோள்களின்பால் நாம் நம்மை அர்ப்பணம் செய்திட வேண்டும். மனித இயல்பின் சிறப்பு அம்சங்களை மறு உயிர்பெறச் செய்திட நாம் அழைக்கப்பட்டுள்ளோம். தியாகம் செய்ய தூண்டும், மனிதர்களின் அதிய உயர்ந்த நாட்டங்களாக மேன்மையான நோக்கங்களை உள்ளடக்கியிருக்கும் மனிதர்களின் அந்த சிறப்பம்சங்களை, நாம் மறு உயிர்பெறச் செய்திட வேண்டும்.
இன்று நிலவக்கூடிய அந்த இன்னல்களுக்கு எதிராக விடாமுயற்சியை நமது உள்ளங்களில் மறுஉயிர்பெறச் செய்திட நாம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம். இந்த இன்னல்கள், இராஜ்யத்தை ஸ்தாபிக்கும் நமது முயற்சியின்போது வருங்காலங்களிலும் கண்டிப்பாக எழவே செய்யும். வீரம், அர்ப்பண உணர்வு, மற்றும் விடாமுயற்சி ஆகிய இந்த அம்சங்கள், தனிமனித ஆன்மீக ம்ேமாடுக்கும், நமக்குள்ளேயே இராஜ்யத்தை அமைத்துக்கொள்வதற்கும் மிகவும் இன்றியமையாதவை. இது சுலபமாக நிறைவேறப் போவதில்லை. இது விரைவாகவும் நடக்கப்போவதில்லை. அவ்வப்போது நிகழும் நடவடிக்கைகளின் மூலமாகவும் அது நடந்தேறப்போவதில்லை. நமக்குள், இராஜ்யத்தின் ஆன்மீக பண்புகளை அடைவதற்கு, தேவையான சீரான, தொடர்ந்தாற்போன்ற நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

இவ்வழியில், மேம்பட்ட ஓர் அர்ப்பண உணர்வை நாம் பெறுவோம். நம்முடைய சமயத்தின் அஸ்திவாரமாக விளங்கும் ஆன்மீக நடைமுறைகளின்பால் ஒரு புதிய விழிப்புணர்வைப் பெறுவோம். அதோடு, பிரார்த்தனை நடவடிக்கைகள், தியானம், நோன்பு நோற்பது, நல்லியல்புகளை உருவாக்கிக்கொள்வது ஆகியவற்றின்பாலும் ஒரு புதிய விழிப்புணர்வை நாம் ஏற்படுத்திக்கொள்வோம். வீரம், அர்ப்பணம், மற்றும் விடாமுயற்சி ஆகிய இந்த அம்சங்களை பஹாய் நிர்வாக முறையில் ஊக்கத்துடன் ஈடுபடுத்துவதற்கு கேட்டுக்கொள்ளப்படப்போகின்றோம். அதன் வாயிலாக கூட்டு மற்றும் பரஸ்பர நடவடிக்கைகள் குறித்த புதிய மாதிரிகள் உருவாக்கப்பட்டும், அவை ஸ்தாபன நிலையை அடையவும் கூடும். அதன் வாயிலாக, பஹாய் சமூகத்தின் தனிநபர் மற்றும் சமூக மேம்பாட்டை மேம்படுத்துவதன் குறிக்கோளை நிர்வாகமுறை சாதிக்கவும் கூடும்.

நான் மேற்கொண்டு ஒரு விஷயத்தை மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன். ஆனால் அது மிகவும் முக்கியமானது. மனித வரலாறு தோல்வியடைந்த முயற்சிகளையும், நிறைவேறாத மேன்மையான குறிக்கோள்ககளையும், மண்ணாகிப்போன ஆவல்களையும், உருபெறாத உற்சாகமூட்டும் திட்டங்களையும் கொண்ட ஒரு குறிப்பேடாக விளங்குகிறது. நூற்றாண்டுகளாக, மேன்மையான குறிக்கோள்கள் ஆகாயக்கோட்டைகள் என விமர்சிக்கப்பட்டுள்ளன என்பதை வரலாறு காண்பிக்கின்றது. அற்புதங்கள் நிறைந்த நாட்கள், அமைதி நிறைந்த நாட்கள், இணக்கம் நிறைந்த நாட்கள் ஆகியவவை குறித்து மனிதர்கள் ஏங்கியுள்ளனர். இந்த மேன்மை மிக்க குறிக்கோள்களை நோக்கிய முயற்சியில் தங்கள் வாழ்நாட்களை அர்ப்பனித்து தோல்வியடைந்துள்ளனர்.

தற்போதைய மனிதவரலாற்றில், நனவாகாத கனவுகளின் குறிப்புகள் நிறைய உள்ளன. நிரந்தரமான நிலையில் ஓர் புதிய உலகை ஸ்தாபிக்கும் மனித முயற்சிகள் ஏன் சதா தோல்வியடைந்துள்ளன என்பது குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன என்பது அவர்களின் முடிவாகும். அதிகாரத்தில் உள்ளவர்களின் ஊழல்; லௌகீகம்; பொருளாசை மிகுந்திருத்தல்; அகங்காரம் ஆகியவை. வெளியே உள்ள கெட்ட எண்ணம் கொண்ட எதிர்வாதிகளின் வேற்றுமை வளர்க்கும் போக்கு. சமூகத்தினுள் கடுமையான போட்டிக் குழுக்களாக பிரிந்து போகுதல். இவை யாவும், பல நூற்றாண்டுகளான, ஆயிரமாண்டுகளான, மனுக்குலம் முயற்சித்து வந்த மேன்மையான குறிக்கோள்கள் மற்றும் உயர்ந்த எண்ணங்களின் தோல்வியின் குறிப்புகளின் ஒரு பகுதியாகும்.

பஹாய் கண்ணோட்டம் யாதெனில், இந்த யுகத்தில், வரலாறு இனி மீண்டும் திரும்பப்போவதில்லை என்பதாகும். உணர்வு ரீதியில் இந்த விஷயம் குறித்து வாதிடுவது வீன் வேலையாகும். நமது நோக்கங்கள் கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் குறிக்கோள்களை விட தூய்மையானவை என நாம் கோர முடியுமா? அல்லது, மனித நிலையை மேம்படுத்திட ஏங்கிய கடந்தகால மனிதர்களின் பண்புக்கூறுகளைவிட நமது பண்புக்கூறுகள் மேன்மையானவை என நாம் கூறிட முடியுமா? நான் அப்படி நினைக்கவில்லை. வரலாறு இனி திரும்பாது எனும் நமது கண்ணோட்டம், முன்பு மனித, சமய அல்லது சமூக வரலாற்றில் காணப்படாததும், இக்காலத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததுமான ஒரு புதிய அம்சம் உள்ளது என்பதை அடிக்கோலிடுகிறது. இந்த அம்சம், பல ஆயிரம் நூற்றாண்டுகளான வரலாற்று வடிவங்களை தலைகுப்புற வீழ்த்தக் கூடியதாகும்.

அந்த சிறப்பு மிகுந்த வலிமை வாய்ந்த புதிய அம்சம் மட்டும் இல்லையனில், கடந்தகாலத்தில் மனுக்குலத்தை பீடித்த அதே தோல்வியை நாமும் அடைவது தின்னம். நமது வாதங்கள் யாவும் இந்த ஒரு விஷயத்தையே முற்றாக சார்ந்துள்ளன. பஹாய் ஒப்பந்தம் என நாம் அழைக்கும் அந்த ஒன்றே இந்த தனிச்சிறப்பு வாய்ந்த அம்சமாகும். அஃது இல்லையெனில் நாம் வெற்றியை அடைய முடியாது. பஹாய் ஒப்பந்தத்தினால் நமது வெற்றி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பஹாய் ஒப்பந்தம் எனும் சிறப்பினால் அஃது அதிகாரம் சார்ந்த ஒற்றுமையை வழங்குகிறது. அஃது ஒன்றிணைவை வழங்குகிறது. நமது போதனைகளின் பிரிவுபடாமயை அஃது உறுதிபடுத்துகிறது. வளரும், விரிவடையும் மற்றும் மேம்பாடு காணும் பஹாய் சமூகத்தின் வளைந்துகொடுக்கும் தன்மையை மற்றும் ஆக்கமிக்கமையை பராமரிக்கும் உத்தரவாதத்தையுைம் அது வழங்குகிறது.

அகங்காரம் நோக்கிய நமது உள்ளார்ந்த நடத்தையை ஒப்பந்தம் கட்டுப்படுத்துகிறது. தனிநபர்களின் கட்டுப்படுத்தப்படாத தனியாத நடவடிக்கைகளினால் பஹாய் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய நிரந்தர பாதிப்புக்களிலிருந்து தற்காப்பு தரும் வஜ்ரம் போன்ற வழிவகைகளை ஒப்பந்தம் பெற்றுள்ளது. தனிநபர்கள் தாங்கள் மற்றவர்களைவிட சிறந்தவர்கள் எனும் நினைப்பால் மனுக்குலத்தின் ஐக்கியத்தை தகர்ப்பதிலிருந்து அது நமக்கு பாதுகாப்பு அளிக்கின்றது. தலைமைத்துவம், சக்தி, மற்றும் அதிகாரத்திற்கான பேராசையினால் விளையும் பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாக்கின்றது. இந்த வெளிப்பாட்டில் பரிசுகளிலெல்லாம் சிறந்த பரிசை ஒப்பந்தம் நமக்கு வழங்கியுள்ளது. ஒப்பந்தம் நமக்கு நிர்வாக முறையை வழங்கியுள்ளது. மக்கள், அது தரவல்ல சமநிலை, புதிரான விஷயங்கள், வழங்கக்கடிய ஆன்மீக வெகுமதிகள் ஆகியவற்றைக் கண்டு வியப்படைவார்களாக. கூட்டு அதிகாரம் கொண்ட தேர்வு செய்யப்பட்ட அமைப்புக்கள்; உற்சாகமளிக்கவும், ஆலோசனைகள் வழங்கவும், தூண்டுதலளிக்கவும், பாதுகாப்பு தரவும், விவேகமும் அன்பும் கூடிய தனிநபர்கள். அன்பு, பரஸ்பர ஒத்துழைப்பு, மற்றும் பொதுவான குறிக்கோள்களுடன் அனைவரும் ஒன்றாக செயல்படுகின்றனர்.

நான் குறிப்பிடும் விஷயம், என்னுடை இறுதி குறிப்பு, இதுவே: பூமியின் மீது இறைவனின் சாம்ராஜ்யம் உருவாகுவதற்காக உழைத்திட உறுதியெடுத்திட நாம், இன்று, இங்கு கூடியிருந்தோமானால், இதுவே நமது வாழ்க்கையில் மையக் குறிக்கோள் என முடிவெடுத்தோமானால், நமது அதிஉயரிய குறிக்கோள்கள் மற்றும் முயற்சிகள், இந்த வழியிலேயே பூரணமான நிறைவேற்றத்தைக் காணப்போகின்றன என முடிவெடுத்தோமானால், ஒப்பந்தத்திலிருந்து உதித்துள்ள நிர்வாக முறையின் ஸ்தாபனங்களுக்கு நமது முழு ஆதரவையும் வழங்க வேண்டியது அவசியமாகும். இந்த புதிய படைப்பினை இறுதி அழிவிலிருந்து இந்த ஒரே வழியினால் மட்டுமே நாம் பாதுகாக்க முடியும். உணர்ச்சிகளைத் தூண்டும் கோரிக்கைகள் மூலமாக அவை பாதுகாக்கப்பட போவதில்லை. அல்லது, அதி உயரிய நமது நோக்கங்கள் குறித்து உரக்க பிரகடணப்படுத்துவதன் வாயிலாகவும் அது பாதுகாக்கப்பட போவதில்லை. நிர்வாக முறையின் ஸ்தாபனங்களுக்கு ஆதரவு நல்கிடுவதற்காக நாம் அளிக்கும் நமது முழு ஈடுபாட்டின் வாயிலாகவே அது அழிவிலிருந்த பாதுகாக்கப்படுகின்றது. இதுவே நமது அரண். இதுவே நமது முன் நோக்கிய வழி. இதுவே முன்னேற்றத்திற்கான பாதை. நமது தனிச்சிறப்புடைய குறிக்கோள்களையும், நமது அவாக்களையும், நமது ஆவல்களையும் நமது இலட்சியங்களையும் இந்த ஒரு வழியின் வாயிலாகவே நாம் அடையமுடியும்.

தன்னகத்தை வெற்றிகொள்வது


இறைவனின் சமயத்தின் திருக்கரம் திரு லெரோய் ஐயவாஸ்

(ஆகஸ்ட் 31, 1958ல் பதிவு செய்யப்பட்ட ஒரு சொற்பொழிவின் பகுதி)

பாதுகாவலர் ஸ்தானம் குறித்து ஒரிரு வார்த்தைகள் கூற விரும்புகிறேன். அப்துல் பஹா விண்ணேற்றமடைந்தபோது, அவருக்கு (ஷோகி எபெஃண்டி அவர்களுக்கு) இவ்வுலகமே இருளாகிவிட்டது. எல்லா ஒளிகளும் அனைந்துபோய்விட்டன. அவர் புனித நிலத்திற்கு வந்தபோது, அப்துல் பஹா அவரிடம் கூறியவற்றிலிருந்து, ஷோகி எபெஃண்டி சில விஷயங்களை ஞாபகத்தில் வைத்திருந்தார். அவர் கூறியவற்றை நான் இங்கு குறிப்பிடுகிறேன், “அப்துல் பஹா, உலக நீதி மன்றத்தை தேர்வு செய்யும் அந்த மகா சபையை ஒன்றுகூட்டும் தனிச்சிறப்பைத்தான் எனக்கு வழங்கப்போகின்றார் என நான் நினைத்திருந்தேன். (மாஸ்டர்) அவர்களின் உயில் மற்றும் சாசனத்தில் அதைச் செய்திடுமாறுதான் உத்தரவு பிறப்பித்திருப்பார் என நினைத்திருந்தேன்.”

“ஆனால், அதற்குப் பதிலாக, இறைவனின் சமயத்திற்கு நானே பாதுகாவலராக நியமிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். நான் சமயத்தின் பாதுகாவலராக இருக்க விரும்பவில்லை. முதலாவதாக, நான் அதற்குத் தகுதியுடையவன் என நினைக்கவே இல்லை. அடுத்து, இந்தப் பொறுப்புக்களை சுமக்க நான் விரும்பவில்லை.” எனக் கூறினார்.

“நான் பாதுகாவலராக இருக்க விரும்பவில்லை. அதன் அர்த்தத்தை நான் அறிந்துவைத்திருந்தேன். ஒரு மனிதன் எனும் முறையில் என் வாழ்க்கை முடிந்துவிட்டதை நான் அப்போது உணர்ந்தேன்.” அதை நான் விரும்பவில்லை, அதை எதிர்நோக்கவும் நான் விரும்பவில்லை. ஆகவே, நான் புனித நிலத்தை விடுத்துச் சென்றதை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள். சுவிட்சர்லாந்தின் மலைகளை நாடிச் சென்றேன். அங்கு, நான் என்னை வெற்றிகொள்ளும்வரை என்னோடு போராடினேன். அதன் பிறகே நான் திரும்பினேன். என்னை இறைவனிடம் ஒப்புவித்தேன், பிறகு பாதுகாவலரானேன்.”

“இப்போது, உலகில் உள்ள ஒவ்வொரு பஹாயும், ஒவ்வொரு மனிதனும், இதையேதான் செய்ய வேண்டும். நீங்கள் சமயத்திருக்கரமாக இருந்தபோதிலும், பஹாவுல்லாவின் வீரப்பெருந்தகையாக இருந்த போதிலும், நீங்கள் முன்னோடியாக இருந்தபோதிலும், நிர்வாகியாக இருந்தபோதிலும், எதுவாக இருந்தபோதிலும், சமயத்தைப் பொறுத்தமட்டில், ஒவ்வொரு பஹாயும் தன்னோடு போராடிக்கொள்ளவே வேண்டும். அதன் பிறகே அவர், இறைவனின் சமயத்தின் சேவைக்குத் தக்க கருவியாகின்றார். அது நடக்கும் வரையில் அல்ல. உலகில் உள்ள ஒவ்வொரும் பஹாயும் அறிய வேண்டியது இதுவே.”
“இந்த இரவின் உரையிலிருந்து நீங்கள் அறிய வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்று இதுவே. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னோடு போராடிக்கொள்ளவேண்டும், தன்னை வெற்றிகொள்ள வேண்டும், தனது கீழான இயல்புகளை வெல்ல வேண்டும், தனது அகங்காரத்தை ஜெயிக்க வேண்டும், பிறகு, புனித ஆவி உங்கள் மூலமாக செயல்படுவதற்கு ஏதுவாக உங்களை இறைவனுக்கு அர்ப்பனிக்கவேண்டும்.” என்பது பாதுகாவலரின் அறிவுரை. புனித ஆவி உங்கள் வாயிலாக செயல்படும்போதுதான், நீங்கள் வெற்றிக்கு மேல் வெற்றி அடைவீர்கள். புனித ஆவி என்பது இறைவனின் படைப்பாற்றலின் அம்சமே ஆகும். வெற்றிகள் அடைவதும், சமயத்திற்கு ஜெயங்களை கொண்டுவருவதுமன்றி வேறெதனையும் அதனால் செய்ய முடியாது.”

ஹுகுகுல்லா


ஹுகுகுல்லா

உலக மையத்ததில் 1987ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி திரு  அலி நக்ஜவானி அவர்களினால் ஆற்றப்பட்ட உரை.

அமாத்துல் பஹா ருஹியா கானும் அவர்களே, அன்புக்குரிய நண்பர்களே!

நம்மில் பலர் ஹுகுகுல்லாவுக்குச் செலுத்துவதற்குத் தாயாராகிக்கொண்டு வருவதைப் பார்க்கையில் உண்,ையில் மனதுக்கு இதமாக இருக்கிறது. நான் இச்சட்டத்தின் ஆன்மீக முக்கியத்துவம் பற்றி பேச விரும்புகிறேன். பஹாவுல்லா அதனைப் பின்வரும் வார்த்தைகளில் குறிப்பிடுகிறார். ஹுகுக் ஸ்தாபணம் “புனிதமானது,” “ஹுகுக் பற்றிய கேள்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது,”  “ஹுகுல்லா என்பது உண்மையிலேயே ஒரு மாபெரும் சட்டமாகும். ” இந்த மேற்கோள்கள் யாவுமே ஐக்கிய அரசின் (பிரிட்டன்) தேசிய ஆன்மீக சபை பிரசுரித்துள்ள ஹுகுகுல்லா பற்றிய தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டவை, பிற தேசிய ஆன்மீக சபைகள் அதனை அச்சடிக்கும் என உலக நீதி மன்றம் நம்புகிறது. மேலும் உலக நீதி மன்றம் இந்த தொகுப்பின் சுருக்கமான வடிவத்தையும் வெளியிட்டுள்ளது. எந்தத் தேசிய ஆன்மீக சபையும் அதன் சுருக்கப்பட்ட வடிவத்தையோ அல்லது அச்சட்டத்தின் சுருக்கத்தையோ இன்னும் பிரசுரிக்கவில்ல. இச்சட்டம் உலகம் முழுதும் அமுலுக்கு வருவதை எதிர்பார்த்தவாறு அதனைப் பற்றி நண்பர்கள் கற்றறிந்து ஆழமாக அறிந்துவைக்கவேண்டும் என்பதற்காக எல்லா தேசிய ஆன்மீக சபைகளுக்கும் இவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

நாம் பிற சமயங்களின் சட்டங்களை ஆய்வு செய்யும் போது, நன்கொடைகளையும் தர்மங்களையும் கொடுப்பதற்கான கட்டளை எனவும் , இத்தகைய செயல்கள் சுயவிருப்பத்துடனும் ஒருவரால் முடிந்த அளவுக்குச் செய்யப்பட வேண்டும் என்ற கட்டளை இருப்பதையும் அவற்றை கடவுள் மீது கொண்டுள்ள நன்றியின் அடையாளமாகச் செய்யவேண்டும் என இருப்பதையும் நாம் ஒவ்வொரு சமயத்திலும் காணச்செய்கிறோம். உதாரணமாக பழைய ஏற்பாட்டில் நாம் இவ்வாறு காண்கிறோம், “உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் ஊக்கத்தைக் கடை பண்ணு”.

மேலும் ஒருவருடை சொத்தில் இருந்து பத்தில் ஒரு பகுதி என தீர்மாணிக்கப்பட்ட தசமபாகம் பற்றியும் இவ்வாறு இருக்கக் காண்கிறோம். “தேசத்திலே நிலத்தின் வித்திலும் விருட்சங்களின் கனியிலும், தசமபாகம்  எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது. (லெவியராகமம் 27:30) இஸ்லாம் சமயத்திலும்கூட, ஒருவருடைய செல்வத்தில் இருந்து ஒரு பகுதியைக் குறிக்கின்ற “ஃகும்” பற்றிய ஒருவருடைய நிலத்தில் இருந்து பெறப்படும் வருவாயைக் கணக்கிடுவதில் மிகவும் குழப்பமாக உள்ள சக்காட் பற்றியும் குறிப்புக்கள் இருப்பதைக் காண்கிறோம்.

அடைப்புக்குறிகளில் உள்ள சாதாரண குறிப்புக்கள் (கூம் 8) ஹுகுகுல்ல எனும் தொகுப்பில் உள்ள பாராக்களின் எண்களைக் குறிப்பவை. மேலும். இந்தக் குறிப்புக்களும், இவைப் போன்ற அடிக்குறிப்புக்களும் ஆசிரியரின் இடைச்செருகளே அன்றி அகல் உரையின் பகுதி அல்ல. இறுதியாக எங்கெங்கும் அர்த்தம் தெளிவாக இருக்காது எனப் பட்டதோ, அல்லது ஒரு குறிப்பிட்ட மேற்கோளை முழுமையாகப்ப பயன்படுத்தும்படி செய்வதற்கோ (உரையில் உள்ள வார்த்தைகள் மேற்கோளில் உள்ள வார்த்தைகளைவிட அதிகமாக வேறுபடாதபோது) சில திருத்தங்கள் செய்யப்பட்டன. இவை அடைப்புக்குறியில் குறிப்பிடப்பட்டுள்ளன. {இப்படி}

இது குறிப்பாக கேனடா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற சில நாடுகளில் நிறைவேற்றபட்டுள்ளது.
பயானில் முதன் முறையாக ஹுகுகுல்லா எனும் சொல் பாப் அவர்களாலும் பயண்படுத்தப்பட்டது. ஆனால் அதன் வடிவமும் உள்ளடக்கமும், பஹாவுல்லா நமக்குக் கொடுத்ததில் இருந்து மாறுபடுகிறது. ஹுகுகுல்லா என்பது கடவுளின் உரிமை என ஷோகி எபெண்டியால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது, ஆனால், பாரசீகப் பின்னனியில் இருந்து வந்தவர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பதுபோல், “ஹுகுக்” என்பது ஹுக் என்ற சொல்லின் பன்மையாகும். ஆகவே ஹுகுகுல்லா என்பது கடவுளின் உரிமைகள் ஆகும். கித்தாப்-இ-அக்டாஸின் பின் இணைப்பில் உள்ள கேள்விகளும் பதில்களும் எனும் பகுதியில், ஹுகுகுல்லா எனும் இச்சட்டம் பயானில் இருந்து எடுக்கப்பட்டதாக பஹாவுல்லாவே ஒப்புக்கொள்வதை நீங்கள் அறிவீர்கள்.

இப்பொழுது தம்முடைய சட்டங்கள் தொடர்பாக பஹாவுல்லா எவ்வாறு கையாண்பார் என்பது பற்றி சில வார்த்தைகள் கூரிட விரும்புகிறேன். தம்முடைய சட்டங்களின் நூலை வெளியிடுவதற்கு, தம்முடைய முப்பத்தொன்பது வருட பதவிக்காலத்தில் இருந்து இருபதுக் ஆண்டுகளை அவர் எடுத்துக்கொண்டார் என்று அவர் கறுதுவதையூம், கிதாப்-இ-அக்டாஸின் சுருக்கத்தில் இது மிகவும் தெளிவாக இருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். இருபது ஆண்டுகள் திருவெளிப்பாடு பிறந்தது 1853ல், சட்டங்களின் நூலாகிய கித்தாப்-இ-அக்டாஸ் 1873ல் வெளியிடப்பட்டது. பின்னர் அந்த நூலை வெளியிட்டபின்னர், அவர் அதனைத் தம் நண்பர்களுக்கு அனுப்பிவைக்க விருப்பவில்லை. அவர் அதனைக் சில நாட்களுக்கு வைத்திருந்தார். அவர் அதனை எவ்வளவு நாட்களுக்குத்தான் வைத்திருந்தார் எனத் திட்டவட்மாகத் தெரியாது. ஆனால் அது எப்படியும் ஒரு வருடத்திற்கு இருக்கக்கூடும். அதன் பிறகு அவருடைய சீடர்களில் பெரும்பாலானோர் வசித்துவந்த ஈரானுக்கு அதனை அவர் அனுப்பிவைத்தார். கித்தாப்-இ-அக்டாஸில் ஹுகுகுல்லா பற்றிய ஒரு குறிப்பு உள்ளது. அதனை நாம் அனைவரும் இன்று மாலையில் ஒன்றாகப் படிப்போமாக. எனினும், அந்த ஹுகுகுல்லாவைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் எவரையும் நியமிக்கவில்லை. இந்த நன்கொடையைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. இந்த நூல் வெளியிடப்பட்டு ஐந்து அன்டுகளுக்கு மௌனம் பூண்டார். பிறகு, இறுதியில் 1878ல் தான் அவர் இப்படிச் சொன்னார்: யாம் இப்பொழுது ஹுகுகுல்லாவைப் பெற்றுக் கொள்வதை அதிகாரபுர்வமாக்குகிறோம். ஆகவே, திருவெளிப்பாடு பிறந்த காலத்தில் இருந்து ஹுகுகுல்லா இருபது ஆண்டுகளுக்குத் தள்ளிப்போடப்பட்டது. இதே காலத்தில்தான் பஹாவுல்லா கட்டாயப் பிரார்த்தனைகளை வெளியிட்டார்,ஆகவே, இத்தகைய தெய்வீகக் கட்டளைகளைப் பெற்றுகொள்ளும் வண்ணம் ஈரானிய சமூகத்தில் நிலைத்தன்மை மற்றும் போதிய முதிர்ச்சியும் நிலவியதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். அதனை நண்பர்கள் மீது கட்டுண்டபோது, சமயத்தின் பொதுவான தேவைகளின் பொருட்டே அவ்வாறு செய்யப்பட்டதாக அவர் தெளிவுப்படுத்தினார். சமயமும் விரிவு அடைந்துவிட்டது. நண்பர்களும் இத்தகைய கூட்டணங்களைச் செலுத்தும் வகையில் நிலவரங்களும் சூழ்நிலைகளும் கேட்டுக்கொண்டன. ஆகவே, அவருடைய தூதுப் பணியின் கடைசிப் பதினான்கு ஆண்டுகளில்தான் அவர் ஹுகுக் பற்றி இன்னும் குறிப்பாக எழுதி இந்த முக்கியமான சட்டம் பற்றி நண்பர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலுரைத்து, இந்த முக்கியமான நிதியை இயக்கச் செய்தார்.

சமயத்தின் தேவைகள் பற்றிய பேசுகையில் சமயத்தின் வளர்ச்சிக் லௌகீக வழிமுறைகளின் முக்கியத்துவம் பற்றிய பல குறிப்புக்கள் இருக்கின்றன. உதாரணமாக, “கடவுளின் சமயத்தின் வளர்ச்சியும் மேம்மாடும் லௌகீக வழிமுறைகளை நம்பியுள்ளது ” (1) “அல்லது லௌகீக விமுறைகளின் தேவையை முன்னிட்டு இந்த செயல் விதிக்கப்பட்டுள்ளது.” (27) மேலும் “சில அத்தியாவசிய விவகாரங்களை ஏற்பாடு செய்வதற்காக, இந்தகைய கூட்டணங்களை ஏற்றுக்கொள்ளும்படி அனுமதி வழங்கப்பட்டது” (28) மீண்டும் “ சில பேர்கள் உதவியைப்பெறுவதும் பிறர் கவனத்தையும் பரிவையும் பெறுவதும் அத்தியாவசியமாகிறது, ஆனால் இவை யாவும் கடவுளின் அனுமதியுடன் நடைபெற வேண்டும். ” (32) அவர் ஹுகுக் பெற்றுக்கொள்வதை அனுமதித்தார், ஆனால் அதனை செலவு செய்வது மற்றும் செலுத்துவது யாவும் அவரிடம்  தெரிவிக்கப்படவேண்டும். “தற்போது பல்வேறு பகுதிகளில் சமயத்தின் சேவையில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டு, ஆனால் சம்பாதிக்க இயலாமல் இருக்கின்ற பல தனிநபர்கள் உள்ளனர்,” (33) மறுபடியும் “கடவுளின் உரிமையில் இருந்து ஏழைக்கு வாங்குவது அனுபதிக்கப்படுகிறது, இது அனுமதி வழங்கப்படுவதற்கு உட்பட்டதாகும்.” அனுமதி பொதுவாகவே வழங்கப்படுமாயின், “அது கலகத்துக்கு இட்டுச் சென்று தொல்லையை ஏற்படுத்தும்,” (44) ஆகவே அவர் இந்த நிதியை ஒருங்கிணைத்துவருவதை நீங்கள் காண்பீர், இது கடவுளின் உரிமையாகும் அங்கே ஒரு மத்திய அதிகாரம் தேவைப்பட்டது. அவர் ஈரானில் ஒரு தலைமை அறங்காவலரை நியமித்தார், அவர் நாட்டின் பிற பகுதிகளிலும் வட்டாரங்களிலும் என அறங்காவலர்களையும் துணை அறங்காவலர்களையும் நியமித்துக்கொள்வதற்கு அனுமதி  கொடுக்கப்பட்டார். இவை யாவுமே அவரால் ஒருங்கிணைக்கப்பட்டன.

கித்தாப்-இ-அக்டாஸில் விளக்கப்பட்டுள்ள வாரிசு முறை இங்கே ஹுகுகுல்லா தொடர்பாக மேலோட்டமாக குறிப்பிடப்பட வேண்டும். கித்தாப்-இ-அக்டாஸில் ஆஸ்திகளைப் பற்றி குறிப்பிடுகையில், பஹாவுல்லா வாரிசு முறையில் இந்த வரிசையை வைக்கிறார். கடவுளின் அவதாரப் புருஷர்; அவருக்குப் பிறகு கிளைகள், பன்மை; அவர்களுக்குப் பிறகு உலக நீதி மன்றம். ஆஸ்திகள் பற்றி குறிப்பிடுகின்ற கித்தாப்-இ-அக்டாஸின் அப்பகுதியில் அது இவ்வாறுதான் விதிக்கப்பட்டுள்ளது. பஹாவுல்லா காலமானபோது, ஹுகுகுல்லா பற்றியோ, அல்லது யார் ஹுகுகுல்லாவைப் பெறுபவர் என்பது பற்றியோ அவர்தம் உயில் ஏற்பாட்டில் குறிப்பு இல்லை. ஆகவே அன்பர்கள் அது பற்றி அப்துல் பஹாவிடமே கேட்டனர். அதற்கு பதிலுரைக்கையில், பாரசீகப் பின்னனியில் இருந்து வருபவர்களுக்குப் பழக்கப்பட்ட ஒரு வார்த்தையை அவர் பயன்படுத்தினார் – அந்த வார்த்தை மார்ஜா 5 என்பதாகும். அதன் பொருள் அனைவருமே நாடிநிற்கவேண்டிய சமயத்தில் உள்ள அதிகாரம் என்பதாகும், அதுவே மார்ஜா. ஆகவே, பஹாவுல்லாவுக்குப் பிறகு தாமே அந்த மார்ஜா என அப்துல் பஹா குறிப்பிட்டார். அனைவரும் அவரிடம்தான் திரும்பவேண்டும். அந்த அதிகாரத்தின்பால்தான் ஹுகுகுல்லா போய்ச்சேரவேண்டும் என அவர் சொன்னார். ஆகவே பிறகு, தம்முடைய உயில் ஏற்பாட்டில் ஹுகுகுல்லா பாதுகாவலரிடம் கொடுக்கப்படவேண்டும் என அப்துல் பஹா மிகவும்  தெளிவுபடுத்தினார். ஷோகி எபெண்டி அந்த உயில் ஏற்பாட்டை மொழிபெயர்க்கையில், அந்த ஹுகுகுல்லா அவர் மூலமாகத்தான் செலுத்தப்படவேண்டும் என மொழிபெயர்த்துள்ளார். சமயத்தின் தலைவர்களாக ஷோகி எபெண்டிக்கு நேரடியான வாரிசுகள் இருந்திருப்பார்களேயானால், அவர்களே ஹுகுகுல்லாவைப் பெறுபவர்களாக இருந்திருப்பார்கள். அது அவர்கள் “மூலமாகத்தான்” செலுத்தப்பட்டிருக்கும் காலப்போக்கில் நமக்கெல்லாம் தெரிந்ததுபோல், ஷோகி எபெண்டியின் மறைவுக்குப் பிறகு கடவுளின் சமயத்தன் திருக்கரங்களின்  இடைவெளிக் காலம் முடிவடைந்த பிறகு, சமயத்தின் தலைமைப் பொறுப்பு உலக நீதி மன்றத்தின்பால் போய்ச் சேர்ந்தது. ஆகவே, “மார்ஜா” பற்றி அப்துல் பஹா கொடுத்த வழிமுறை உலக நீதி மறைத்தினால் பயன்படுத்தப்பட்டது. இத்தகைய சூழ்நிலைகளில் தாம் ஹுகுகுல்லா பெறலாம் எனவும், புனித எழுத்துக்கலில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக பணத்தை உலக நீதி மன்றத்தின் மூலம் செலுத்திடலாம் என அந்த ஸ்தாபனம் நண்பர்களுக்கு அறிவித்திருந்தது.

தமது சொந்த நாட்களில் இருந்த ஹுகுகுல்லா பற்றி குறிப்பிடுகையில் பஹாவுல்லா இப்படி எழுதியுள்ளார்,

“ஹுகுகுல்லாவுக்கு என விசேவுமாக வெளியிடப்பட்ட விதி ஒன்று உள்ளது. உலக நீதி மன்றம் உரு பெற்றபின்னர், அதற்கான சட்டம் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப தெளிவுபடுத்தப்படும்.” (59) உலக நீதி மன்றம் அமைக்கப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று உலக நீதி மன்றம் இச்சட்டத்தை உலகாலாவிய ஆறு ஆண்டுத்திட்டத்தின்  இலக்குகளில் ஒன்றாகச் செய்து, அனைவரின் மீதும் சுமத்தப்படுகின்ற நாளை எதிர்நோக்கியவாறு இச்சட்டம் பற்றி நாம் கல்விப் பெறும்படியாகவும் செய்துள்ளது.

ஹுகுகுல்லா தொடர்பாக ஒரு விளக்கம் இருக்கிறது. நான் அதனை உங்களுக்காக வாசிக்க விரும்புகிறேன். அது இரண்டு இடங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஒன்று கித்தாப்-இ-அக்டாஸில் இருந்து எடுக்கப்பட்டது, (நாம் கட்டாயம் படிக்கவேண்டும் என நான் முன்னரே குறிப்பிட்ட பகுதியாகும்)  அடுத்த அப்துல் பஹாவின் நிருபமாகும். அதன் சில பாகங்களை நான் வாசிக்கிறேன்.

பஹாவுல்லா எவ்வாறு இது பற்றி முதன் முதலாக கித்தாப்-இ-அக்கடாஸில் குறிப்பிட்டுவிட்டு, அது பற்றி விளக்கம் கொடுப்பதற்காக எப்படி 25 ஆண்டுகளுக்கு காத்திருந்தான் என்பதனை நாம் பார்த்துவிட்டோம். “ஒரு மனிதனின் 100 மிஸ்கால் தங்கள் பெற்றிருந்தால், அதில் இருந்து 19 மிஸ்கால் புமியையும் சொர்க்கத்தையும் படைத்தவர்ராகிய கடவுளுக்குச் சொந்தமாகும் இந்த மாபெரும் வள்ளன்மை உங்களுக்குக் கிடைத்தப்படி இருந்துவிடாமல்  கவனமாக இருப்பீராக, ஓ மக்களே உங்களிடமிருந்தும் சொர்க்கங்களின் மீதும் பூமியின் மீதும் உள்ள அனைத்தில் இருந்தும் தாங்கள் முழுமையாக சுதந்திரமாக இருக்கையில் நாங்கள் இச்சட்டத்தை உங்கள் மீது விதித்துள்ளோம். உண்மையில், எல்லாம் தெரிந்தவரும் எல்லாமறிந்தவருமான கடவுளைத்தவிர அனைவரின் புரிந்துகொள்ளுதலுக்கும் அப்பாலான மர்மங்களும் நலன்களும் இந்தக் கட்டளைகளுக்குள்ளே மறைந்துகிடக்கின்றன. சொல்விராக: இந்த கட்டளையின் வழியாக கடவுளின் உங்கள் உடமைகளில் இருந்து உங்களைத் தூய்மைப்படுத்தி, கடவுளாக விரும்புகின்றவர்களைத் தவிர வேறெவருமே அடையமுடியாதபடியான ஸ்தானங்களுக்கு நீங்கள் நெருக்கமாக ஈர்க்கப்படும்படியாக அவர் உங்களுக்கு உதவுகிறார், அவரே தாரளகுணமுடையவர், இரக்கமுடையவர், வள்ளன்மை நிறைந்தவர்.” (10)

இப்போழுது, பின்வரவுள்ள சில வாக்கியங்களில் காணப்படுகின்ற ஆழ்ந்த அறிகுறிகளைப் பற்றி நீங்கள் சிந்திக்கவேண்டும் மென நான் கேட்டுக்கொள்கிறேன். “ ஓ மக்களே, ஹுகுகுல்லா விவாகாரத்தில் துரோகமாக நடந்துக் கொள்ளாதீர், அவருடைய அனுமதி இன்றி அதனைக் கொடுத்துவிடாதீர்.” (10)  இதன்வழி உண்மையில் 19 வழுக்காடு நமக்குச் சொந்தமில்லை என்று பொருள் படும், நாம் அவருடைய அனுமதி இல்லாமல் 19 விழுக்காட்டைப் பயன்படுத்தினால், நாம் துரோகமுடன் நடத்துகொள்கிறோம். அது நமக்குச் சொந்தமல்ல, அது கடவுளுக்கே சொந்தமாகும். அதுவே கடவுளின் உரிமையாகும். “இது இவ்வாறுதான் அவர்தம்  மடல்களிலும் இந்த மகிமைமிகு நிருபத்திலும் விதிக்கப்பட்டுள்ளது. ” இப்பொழுது எச்சரிகை வருகிறது. “ எவரொருவர் கடவுளிடம் நேர்மையில்லாமல் நடந்துகொள்கிறாரோ”- அவர் ஹுகுகுல்லாவைக் குறிப்பிடுகிறார்; வார்த்தைகளில் கனுவதானால், நாம் அந்த 19 விழுக்காட்டை நாம் விரும்பிய விதம் பயன்படுத்தினால், நாம் கடவுளிடம் நேர்மையற்ற முறையில் நடந்துகொள்கிறோம்- “எவரொருவர் கடவுளிடம் நேர்மையின்றி நடந்துகொள்கிறாரோ அவர் நீதியின்றிபடி வெளிப்படுத்தப்படுவார்.”(10) கடவுளின் நீதி அந்த நபர் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோருகிறது. இப்பொழுது அந்த சாதகமானப் பகுதியைக் காண்போம் – “ எவரொருவர் தமக்கு இடப்பட்டுள்ளவற்றை நிறைவேற்றுகிறரோ, அவர் மீது, வழங்குபவரும், அதி தாராளகுணமுடையோருமாகிய தம் பிரபுவின் வள்ளன்மை எனும் சொர்க்கத்தில் இருந்து தெய்வீக நல்லாசிகள் பொழியும்.”(10)

அப்துல் பஹாவின் நிருபத்தைப் பொருத்தவரைக்கும், அது “அப்துல் பஹாவின் எழுத்துக்களில் இருந்து எங்களிடம் பகுதிகள்” என்ற பகுதியின் முதல் பகுதியில் காணப்படுகின்ற மிக நீண்ட நிருபமாகும். அதில் இருந்து நான் சுமார் ஐந்து அல்லது ஆறு பகுதிகளை வாசிக்கிறேன். நான் இந்த ஸ்தாபணத்தின் தத்துவம் எனவும் அதன் ஆன்மீக முக்கியத்துவம் எனவும் நாம் வருணிக்க இயன்றதை அவர் இங்கு நமக்காகக் கொடுக்கிறார். “உலகின் ஆலயம் என்பது மனிதனுடைய உருவத்தையும் சாயலையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. லௌகீக உலகின் அமைப்பு என்பது தன் கைகால்களும் அங்கங்களும் இனைப்பிரியாமல் ஒன்றாக இனைக்கப்பட்டுள்ள ஒரு  தனி உருவுக்குச் சமமாகும். படைக்கப்பட்டுள்ள எல்லாம் பொருட்களும்மே நெருக்கமான தொடர்புடையவை என இருப்பதுபோல, ஒத்துழைப்பு, பரஸ்பர உதவி, மற்றும் கைமாறு என்பவை உருவின் உலகின் ஒன்றுபட்ட உடலுக்கு அத்தியாவசியம் பண்புகளாகும்.”(61) இப்பொழுது இந்த விஷயத்தை கவனிப்பீர்களாக, உயர்வு எனும் பிறைவட்டத்தின் மீது படைக்கப்பட்ட பொருட்களின் இராஜ்யம், எந்த அளவுக்கு உயரமாக ஏறுகின்றதோ அந்த அளவுக்கு உண்மையின் அறிகுறிகளும் ஆதாரங்களும் இன்னும் கூடுதல் வெட்டவெளிச்சமாக அதனால் உயரிய நிலையின் எல்லையில் கானப்படுகின்ற ஒத்துழைப்பும் கைமாறும் கிழுநிலையின் எல்லையில் காணப்படுபவையைக் காட்டிலும் இன்னும் பெரிதாக உள்ளன. உதாரணமாக, இந்த அடிப்படை உண்மையியலின் ஆதார அறிகுறிகள் உலோக இராஜ்த்தைக் காட்டிலும் தாவர இராஜ்யத்தில்தான் இன்னும் அதிகமாக வேறுபடுத்திக் காணமுடிவதோடு, தாவர உலகைக் காட்டிலும் விலங்கு உலகில்தான் இன்னும் கூடுதாலாகப் புலப்படுகின்றது. ஒத்துழைப்ப, பரஸ்பர  உதவி, மற்றும் கைமாறின் செயல்கள் யாவும் உடலுக்கும் லௌகீக உலகின் பொருளுக்கும் மட்டும் சார்ந்தவை அன்று, ஆனால் அவை லௌகீக சூழ்நிலைகளானலும் சரி, அல்லது ஆன்மீக சூழ்நஉலைகள் ஆனாலும் சரி எல்லாச் சூழ்நிலைக்கும் பொருந்துகின்றன. ஒன்றுக்கொன்றுள்ள இந்த உறவுகள் எந்த அளவுக்கு பலப்படுத்தப்பட்டு விரிவடையும் போது, அந்த அளவுக்கு மனித சமுதாயம் வளர்ச்சியிலும் செழிப்பிலும் மேம்பாடு அடையும். இதுவே ஹுகுகுல்லா எனும் ஸ்தானம் நிறைவப்பட்டுள்ளது அடிப்படை கோட்பாடாகும்.

வேறு வார்த்தைகளில் கூறவதானால் மனித சமுதாயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கும் அங்கத்தினர்களுக்கும் இடையில் பரஸ்பர கைமாறும் இணைந்த செயலும், ஒத்துழைப்பும் மேம்பாடு கானுப்படி செய்வதற்காகவே அது பஹாவுல்லாவினால் அங்கு நிறுவப்பட்டுள்ளது. பஹாவுல்லா இச்சட்டத்தை ளிெப்படுத்துகையில் பஹாவுல்லாவினால் அங்கு கோட்பாடைத்தான் கொண்டிருந்தார் என அப்துல் பஹா குறிப்பிடுகிறார். நான் இந்த நீண்ட நிருபம் முழுவதையும் வாசிக்க இயலாது, அனால் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது நீங்கள் இதனைக் படிப்பீர்கள் என நான் நம்புகிறேன்.
ஹகுகுல்லா எவ்வாறு கொடுக்கப் படவேண்டும்? எந்தப் பாராக்களில், ஹுகுகுல்லாவின் அறங்காவலர்கள் இந்தக் கட்டணத்தை வரப்புறுத்தி வாங்கவோ அல்லது கெட்டு வாங்குவதோ கூடாது என அவர் மீண்டும் மீண்டும் தெள்ளத்தெளிவாகத் தடைவிதிக்கிறார். (8,9,27,32, 38, 40, 44,46, 51, 53). அவர் மறையிடும்படி கேட்டுக்கொள்கிறார். அது அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அத்தகைய முறையீடுகளும்கூட பொதுவானவையாகவும் நண்பர்களின்  கூட்டத்திற்கும் இருக்க வேண்டும். எவ்வித அழுத்தமோ வற்புறுத்தலோ அவர்கள் மீது சுமத்தப்படலாகாது. எப்பொழுதும் எல்லாச் சூழ்நிலைகளிலும் சமயத்தின் கண்ணியத்தைக் காக்கும்படி அவர் தம்முடைய தலைமை அறங்காவலரையும். பிற அறங்காவலர்களையும் கேட்டுக் கொள்கிறார். இந்தக் கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது? அவர் நண்பர்களின் இதயங்களிலும் மனங்களிலும் காணவிரும்புகின்ற பண்புகள் மற்றும் மனப்பாட்ன்மைகளையும் கொண்ட முழுப் பட்டியல் ஒன்று உள்ளது.

இதுவே அந்தப் பட்டியல்:-

மகிழ்ச்சி;
பிரகாசம்;
பரிபூரண பணிவு எனும் உணர்வு;
தாழ்மை எனும் உணர்வு;
நிறைவு தரும் மனது;
கடவுளுக்காக

அளவு என்பது முக்கியமல்ல, சிறு மருவானாலும் பரவாயில்லை. வெறு வார்த்தைகளில் கானுவதானால், உங்களிடம் ஐந்து தானியங்கள் இருந்தால், நீங்கள் பஹாவுல்லாவுக்கு ஒரே ஓரு தானியம் மட்டுமே தரவேண்டும். அவர் அதனை ஏற்றுக்கொள்கிறார், அதுவே அவருக்கு விலைமதிப்பில்லாத பொருளாகிறது. இன்னும் தொடர்கிறென்:-

சந்தோஷத்துடன்
நல் இணக்கத்துடன்
கொடுப்பது இயற்கையாக வரவேண்டும்
நல்விருப்பத்தைதுடன்;
விரும்பிய தாழ்பனிவுடன்;
இயன்றபோகுதெல்லாம் கொடுத்தல்;
ஆர்வத்துடன்;
அது மனசாட்சியைப் பொறுத்தது;
அது ஒரு ஆன்மீக மற்றும் நேர்மையான கடமையாகும்;

இவ்வாறுதான், கட்டணம் எந்த மனப்பான்மையோடு கொடுக்கப்பட வேண்டும், எவ்வாறு கொடுக்கப்படவேண்டும் என்று விளக்கும் இந்தத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட சில வார்த்தைகளே இவை.
அது இவ்வாறு இல்லாமல் போனால், அதனை ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்று தமது அறங்காவலர்களுக்குச் சொல்லும்  அளவுக்கு அவர் போகிறார். (9) அவர் அவ்வளவு தூரம் செல்கிறார். அதுதான், அது கடவுளுன் கண்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பது.

இப்பொழுது நாம் சில பலன்கள் பக்கம் திரும்புவோம். பலாபலன்கள் கொடையாளர்களுக்கே  திரும்பவும் போய்ச் சேர்கின்றன என அவர் மீண்டும் மீண்டும் கூறுகிறார் (2,3,4,5,35,36,38,40,44,45,47,48). ஹுகுகுல்லா என்பது “இரக்கம், நிறைவு மற்றும் எல்லா நன்மைகளின் பிறப்பிடம்.” அது கடவுளின் உலகங்களின் ஒவ்வொரு உலகிலும் ஒவ்வொரு ஆன்மாவுக்குள்ளும் நிலைக்கவல்ல ஒரு வள்ளன்மையாகும். “ (7)” ஹுகுகுல்லாவின் பாலும், அவர்தம் சேவர்களின்பாலும் எவ்விதமான கடமையுணர்வும் இன்றி கடவுளின்பால் பெயர்கின்ற அவர் நிலமடைவாராக. “(22) மனிதனுக்கோ அல்லது கடவுளுக்கோ எந்தவிதமான கடன்களும் இருக்ககூடாது. கட்டணம் செலுத்துவது என்பது “ நல்லாசிகளின் பிறப்பிடமும் உள்ளது.”(29) “அதன் நல்ல பலன்களும் அதன் கனிகளும் பூமியின் இராஜ்ஜியமும் சொர்க்கமும் நீடிக்கும்வரைக்கும் நிலைக்கும்.”(36) அது “மனிதர்களின் ஆன்மாக்களை சுத்தரித்து, தூய்மைப்படுத்தி, சுத்தப்படுத்துகின்ற ஒரு சாதனமாகவும்,”செழிப்பு மற்றும் ஆசிக்கான பிறப்பிடமாகவும் உள்ளது. “(40) அது தெய்வீக அதிகரித்தலுக்கும் மோட்சத்துக்கும்… ஏதுவானது.” (41) “ அதனைக் கடைபிடிப்பதனால் ஒருவர் தன்மதிப்புக்கு பெயர்த்தப்படுவார்,” (42) அது “ஒருவருடைய உடைமைகளை தூய்மைப்படுத்தஉதவுகின்றது. “(42) அது கூடிதல் செழிப்புக்கு” ஏதுவாகிறது (42) அது நண்பனை வழிப்போக்கனிடம் இருந்து வேறுபடுத்துவதற்கு ஒரு அபூர்வமான சோதனையாகும் (62) அது “கொடையாளர்கள் உறுதிப்பபெற்று பலம் பற்றிறுதி அடைவதற்கும் உதவும்.”(62) அது கொடையாளர்களின்மீது “தெய்வீக அதிகரித்தலை” ஈர்த்து (45,63) இறுதியில் அது “கண்ணியத்திற்கும் நன்மதிப்புக்கும் ஏதுவாக இருக்கும்.”(45 )இவை யாவுமே இந்த தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டவை. அவை அடுக்கப்பட்டுள்ளன.
அங்கு எச்சரிக்கைகளும் உள்ளன. நாம் கித்தாப்-இஅக்டாஸில் இருந்து ஓர் எச்சரிக்கையைக் கேட்டுவிட்டோம், இங்கு இன்னும் சில உள்ளன. “எவரொருவர் இந்த அழைப்புக்கு செவிசாய்க்கிறரோ, அது அவருக்கே நலனாக அமையும், எவரோருவர் தவறுகிறரோ, அவர் தம் ,ருத தோல்வியைக் கொண்டுவருவார்.” (6) இரண்டு பாராக்களில் இன்னெரு கற்று உள்ளது. நான் அதனைச் சுருக்கித் தருகிறேன். ஒரு வட்டாரத்தில் ஒவ்வெருவரும் ஹுகுக் செலுத்தி, கடவுளின் இந்த உரிமையை பிடித்துவைத்துக் கொள்ளாமல் இருந்தால் நன்பர்கள் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்கப்போவதில்லை, மாறாக அவர்கள் வசதியும் சொகுசும் (20,22) அனுவிப்பார்கள். பிறகு இரகையும் காணுங்கள், ஹுகுகுல்லாவைப்  பிடித்துாவத்துக்கொண்டு அவர்தம் காக்கப்பட்ட நிருபத்தில் அவர்கள் மீது விதிக்கப்பட்டதை கடைபிடித்கத் தவறுகின்ற செல்வந்தர் மீது துக்கம் நிகழட்டுமாக மேலும், “செல்வங்களைத் தங்களுடைய வாரிசுகளுக்கு மாற்றி எழுதுவதற்காக மக்கள் ஆற்றச் செல்வங்களை சட்ட பூர்வமாகவோ சட்டத்துக்கு விரோதமாகவோ திரடுவதற்குத் தொடர்ச்சியாக முயற்சிக்கின்றனர், ஆனால் இது எந்த அளவுக்கு நன்மைத்தரும் என்பதை யாருமே சொல்ல இயலாது. சொல்வீராக இந்நாளில் உண்மையான வாரின க்வமுளின் வார்த்தையே ஆகு. ”(42) நான் உங்களுக்கு வாசித்ருக்காட்டப்போகும் இந்தப் பகுதி தெய்வச் சமயத் திருக்கரமாகிய ஜீனாப்-இ-சாமாண்டாரி அவர்களின் தந்தைக்கு எழுதப்பட்டதாகும். அவர் சொல்கிறார். கடுமையான உழைப்பினாலும் முயற்சியினாலும் ஒரு கைப்பிடி அளவுக்கு உலகுசார்ந்த பொருட்களை சேகரித்துவிட்டு இச்செயலுக்காக மிகவும் மனிழ்கின்ற ஆன்மாக்கள்தான் எத்தனை, ஆனாலும் உண்மையில் அதிவுயரிய எழுதுகோல் இந்தச் செல்வத்தை உலக நீதி மன்றம் இந்தச் சட்டத்தை உலகம் முழுதும் அனைவர் மீதும் அமுலாக்கம் செய்வதற்கான காலம் இன்னும் கனியவில்லை. அந்த நாள் வெகு தூரத்தில் இருக்கக் கூடாது என நாம் எதிர்பார்த்து பிரார்த்தனைக் கூறுவோமாக.

கேள்விகளும் பதில்களும்

கேள்வி        : ரசீதுகள் பற்றி சில விளக்கங்கள் தரமுடியுமா?

பதில்    : அறங்வலர் ரசீது கொடுக்க வேண்டும் என பஹாவுல்லா தமது நிருபங்களில்    விதித்துள்ளார். (56) இது அவர்தம் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஒருவர் எவ்வளவு ஹுகுகுல்லா  செலுத்தியுள்ளார் என்பதைக் காட்டுவதற்கு அது ஒரு நல்ல குறியீடு ஆகும். காரணம், ஒருவர் மரணமடைந்ததும், அந்தச் சொத்துக்களின் மீது நடவடிக்கை எடுப்வர் ஆதாரத்தைக் கொண்டிப்பார்; ஒருவர் உண்மையில் நேர்மையாக இருந்து அந்தத ரசீதுகளை வைத்திருப்பாரேயானால், எவ்வளவு ஹுகுகுல்லா செலுத்ததப்பட்டுள்ளது என்பது செல்வத்தின் மீது நடவடிக்கை எடுப்போருக்குத் தெரியும்.
கேள்வி    : ஒரு வருடத்தின் காலத்தில் ஹுகுகுல்லாவை நாம் எத்தனை முறை செலுத்தவேண்டும்?
பதிதல்    :அப்துல் பஹாவின் எழுத்துக்களிலும் (65) பஹாவுல்லாவின் எழுத்துக்களிலும் (18) ஒருவருடைய எனும் குறிப்பு ஒன்று உள்ளது. உண்மையில், பாப் அவர்கள் கூட ஒரு வருடத்தையே குறிப்பிடுகிறார், ஆனால் ஒருவர் ரு வருஷம் என்ந கட்டுப்பாட்டுக்குள் இருக்குறார் என்று பொருள்படாது. நீங்கள் எப்பொழுது விரும்புகிறீர்களோ அப்பொழுதே அதனைச் செல்த்தலாம். மேலும், ஒரு ஆண்டு எப்பொழுது தொடங்குகிறது என்பதற்கு எவ்விதமான குறிப்பும் கிடையாது. ஆகவே அது வசதிக்கேற்றவாறு இனங்கும் தன்மை உடையது.

கேள்வி    :இக்கேள்வி எழைகளுக்கும் வறியவர்களுக்கும் உதவுவது பற்றியதாகும்.  இது ஹுகுகுல்லா பற்றியதும் கூட. உள்ளூர் ஆன்மீக சபை  அதன் மத்தியில் இருக்கின்ற ஏழைகளை கவனிக்க வேண்டும் எனக்கூறுகின்ற உள்ளூர் ஆன்மீக சபையில் சட்த்திட்டங்கள் பற்றி நான் நினைக்கிறேன். எது முதல் பொறுப்பாகும்? உள்ளூர் சமூகம் அதன் ஏழை மக்களுக்கு உதவமுடியாமல் போகும்போதா, அல்லது ஏழைகள் உதவும் கட்டுதலாக இருக்கும்போதா அவர்கள் ஹுகுகுல்லா பக்கம் திரும்ப வேண்டும் ? இது எவ்வாறு செயல்படுகிறது?

பதில்    :உதாரணத்திற்கு நாம் சமயத்தின் பாதுகாப்பை எடுத்துக்கொள்வொம். இது ஒவ்வொரு உள்ளூர் ஆன்மீக சபையின் கடமையாகும். இது தெய்வச் சமயத் திருக்கரங்கள் மற்றும் ஆலோசகர்களின் கடமையும் ஆகும். அது பற்றி எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் அப்துல் பஹாவின் உயில்  ஏற்பாட்டைப் படித்துப்பார்த்தால், அவர் சமயத்தைப் பாதுகாக்கின்ற பொறுப்பை ஒவ்வொரு தனிப்பட்ட பஹாய் அன்பரின் மீதும் சரிசமாக வைக்கிறார். இதனால், யார்தான் முதல் அடியை எடுத்துவைப்ப ஒன்று தணிப்பட்ட நம்பிக்கையாளரும், உள்ளூர் ஆன்மீக சபைகளும் கண்ட ஆலொசகரிகளும் முததலில் கலந்பேசவேண்டும் என்று பொருள்படுமா என்ன? இல்லை. அனைவருமே தம்மால் இயன்றவரை சிறப்பாகக் செய்யவேண்டும். இங்குகூட அதே நிலைதான் பொறுத்துகின்றது. ஏழைக்கு உதவுவது, உதாரணத்திக்கு, குடும்பத்தின் பொறுப்பாகும். அது அந்த நபரின் குடும்பத்தின் அங்கத்தினர்களின், அந்த நபரின் நண்பர்களின் அந்த உள்ளுர் சமூகத்தின், தேசிய சமூகத்தின் பொறுப்பாகும். அங்கு ஏதாவது ஒரு தரப்புத் தவறினால், கடவுள் மன்னிப்பாராக இவற்றிடங்களை புர்த்தி செய்வதற்காகவே அனைத்துலக சமூகம் இருக்கின்றது. நான் இவ்வாறுதான் புரிந்துகொண்டுள்ளேன். இந்த நிதியை நிர்வகிக்கையில் உலக நீதி மன்றம் கூட உதவிக் கரம் நீட்டுவதற்காக தனனிப்பட்ட விவரங்களை மாத்திரமே நாடுவதில்ல, மாறாக ஒரு நாடு முழுதுக்கும் அல்லது ஒரு வட்டாரம் முழுதுக்கும் பலன்தரக்கூடிய மனிதாபிமானமுள்ள திட்டங்ளைப் பற்றியும் சிந்திப்பதுண்டு. இந்த கைமாறு மற்றும் பரஸபர உதவிப் பற்றி நீங்கள் நினைக்கும் போது இவ்வாறுதான் இருக்கும்: தான் செலவு செய்வதற்கு வைத்துள்ள இந்த நிதியைப் பற்றி நினைக்கும் போது உலக நீதி  மன்றம் இதனைத்தான் நினைத்துவந்துள்ளது.

புனிதத்தன்மையும் தன்மைமாற்றத்தின் இயல்பும்


புனிதத்தன்மையும் தன்மைமாற்றத்தின் இயல்பும்

டாக்கடர் பீட்டர் காஃன்

அ. வஸ்துவும் ஆவியும்

கூட்ட தலைமையாளரே, சிறப்பு வருகையாளர்களே மற்றும் நண்பர்களே! இங்கு நமக்கிடையே உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து ஒருவர் இங்கு வருகையளித்திருப்பதாக நாம் கற்பனை செய்துகொள்வோம். அவர் நவீன மின்சாதனங்களான வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றுடனும், நவபௌதீகம் குறித்தும் ஏதும் அறியாதவராக இருக்கின்றார் என வைத்துக் கொள்வோம். அச்சாதனங்களைச் சுற்றிலும் — கதிரலைகள், தொலைக்காட்சி சமிக்ஞைகளைச் சுமந்திருக்கும் அலைகள், மற்றும் இவ்விஸ்வத்தின் தொலைதூரங்களிலிருந்து வரும் நுன்கதிரியக்கம் ஆகியவை உட்பட — மின்காந்த அலைகள் சூழ்ந்துள்ளன என்பது குறித்து அவரை எவ்வாறு நம்பவைப்பது? இதை எப்படித்தான் அவருக்கு எடுத்துரைப்பது? இவ்வலைகளைப் பார்க்க முடியாத நிலையிலும், அவைக் குறித்து எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையிலும், அவற்றைத் தொடவோ உணரவோ முடியாத நிலையிலும்; தங்களைச் சுற்றிலும், அவர்களூடேயுேம் ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும், ஹெப்ரூ மொழியிலும், ரஷ்ய மொழியிலும் மற்றும் பிற மொழிகளிலும் பெருமளவில் ஒலி மற்றும் ஒளித் தகவல்களைச் சுமந்த சக்தியலைகள் பாய்ந்துகொண்டுள்ளன என அவர்கள் எவ்வாறு நம்பப்போகின்றனர்? தன்னை மூழ்க்கடித்துள்ள இவ்வலைகளின் உளதாம்தன்மையை, உண்மையியலை மற்றும் பெருமதிப்பை அவருக்கு எடுத்துரைக்க இயலுமா? அல்லது ஒரு தூர கிரகத்திலிருந்து தோன்றும் மின்காந்தச் சிற்றலைகள் நிமிடத்திற்கு 12 முறை அவருடைய உடலை ஊடுருவிச் செல்கின்றன என்றோ அல்லது அவரது உடலை நியூட்ரினோ அனுக்கள் ஊடுருவிச் செல்கின்றனோ என்றோ எப்படி விளக்குவது.

இவ்விஷயங்களை நான் குறிப்பிடுவதன் நோக்கம், சமய தத்துவங்களில், நமது சமயமும் நிச்சமாக உட்பட, முக்கியமான ஒரு தத்துவம் என்னவெனில் நமது வாழ்நாள் முழுதும் நாம் அனைவரும் சக்திக்கூறுகளிலான கடல் ஒன்றினால் சூழப்பட்டுள்ளோம் என்பதே; நாம் அதனுள் மூழ்கடிக்கப்பட்டுள்ளோம்; அது நம்மைச் சுற்றிலும், மற்றும் நம் உள்ளும் இருக்கின்றது. நாம், நம்மை ஆன்மீக சக்திகள் சூழ்ந்தும், அரவணைத்தும், மற்றும் போர்த்தியும் உள்ள உருவளவை ஒன்றினுள் வாழ்கின்றோம். நாம் அவற்றைக் காணமுடியாது. நமது கருவிகள் அவற்றை அளக்க முடியாது. அவை பொதுவான ஒன்றாகவும், தொட்டுணரும் வகையிலும் இல்லை. அவை இங்குதான் உள்ளன, மற்றும் இவ்விஸ்வத்தின் உண்மையியலின் ஓர் அம்சமாக இவ்வான்மீக சக்திகளின் வலிய மற்றும் முன்னாதிக்கம் செலுத்தும் செல்வாக்கு உள்ளதென நமது சமயம் நமக்கு அறிவு புகட்டுகின்றது. ஓரிடத்தில், அப்துல் பஹா ஆவியைப் பற்றி குறிப்பிடுகையில், “…யாவற்றையும் உயிர்ப்பித்தும் ஊடுருவவும் செய்யும் தெய்வீக மூச்சுக் காற்று,”1 எனக் கூறுகின்றார். நாம் இந்த கடலில், இந்த ஆன்மீகச்சக்திகள் அடங்கிய  சூழலில் மூழ்கடிக்க மட்டும் படவில்லை, ஆனால் இவ்வான்மீகச்சக்திகள் நம்மை மர்மமான முறையில் ஆனாலும் மிகவும் இன்றியமையாத விளைவுகளுக்கு உட்படுத்துகின்றன. நமது உணர்ச்சிகள், நாம் செயல்படும் விதம், நமது ஊக்கம், நமது மேம்பாடு, நமது சந்தோஷம், நமது நோக்க உணர்வு, நமது வாழ்க்கைச் செல்லும் விதம் ஆகியவை இச்சக்திகளினால், அவற்றை நாம் கண்டுணரும் விதத்தினால், அவற்றை நாம் ஈர்க்கும் விதத்தினால் மற்றும் நாம் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தினால் பெரும்பாலும் நிர்ணயிக்கப்படுகின்றன.

இதுவே இன்றிரவு எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பின் மையமாக இருக்கின்றது எனும் எண்ணமே நான் இவற்றைக் குறிப்பிடும் காரணம். தனிநபர்கள் எனும் முறையில் நமது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளைக் கடக்கும் நமது சவால் யாதெனில், ஆழமாகவும், தன்னியக்கமாகவும், இச்சக்திகளின் பிரசன்னம் குறித்த உணர்வு பெற்றும், நாம் வாழும் மற்றும் இயங்கும் இவ்வுலகினைப் பற்றிய நமது புரிந்துணர்வில் அதைக் கணக்கில் சேர்த்துக்கொள்வதும் ஆகும். நாம் இந்த ஆழமான அறிவைப் பெற்றால் மட்டும் போதாது, ஆனால் அதற்கும் மேலாக, நாம் பிரயோஜனமான வகையில் தன்மைமாற்றம் பெற இச்சக்திகளை ஈர்த்திடக்கூடிய வழிவகைகளை நாம் செயல்படுத்த வேண்டும். இதுவே இத்தலைப்பின் சாரம் என்பது என் எண்ணம் — அதாவது இவ்வான்மீக சக்திகளை நாம் உணருவதும் நம்மை மாற்றிக்கொள்வதற்காக இச்சக்திகளை நாம் எப்படி ஈர்க்கப் போகிறோம் என்பதும் ஆகும். இதை நாம் செயல்படுத்தும் போது, நமது வாழ்க்கையில் சம்பந்தப்பட்டுள்ள இவ்வான்மீக சக்திகளின் உண்மையியல் குறித்து விழிப்புணர்வற்றவர்களுக்கு நாம் செய்யக்கூடிய இக்காரியங்கள் முற்றிலும் அறிவுக்கொவ்வாதவையாக இருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு நான் நமது புனித நினைவாலயம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அவ்வேளை அங்கு என்னைச் சுற்றிலும் நான் கண்ட இயல்நிகழ்ச்சியைப் பற்றி சிந்திப்பதற்காக என்னுடைய தியானங்களிலிருந்து வெளிவந்தேன். பார்வைக்கு வெற்றுக் கூடமாக காட்சியளித்த அந்த அரைக்குள் மக்கள் வந்தவண்ணமாக இருந்தனர்; அத்திருவாசலுக்குள் நுழையும்போது அவர்கள் கண்ணீர் மல்கவும், பெரும் பக்தியுடனும், தங்கள் சிரங்களை தரையில் தாழ்த்தியும், நினைவாலயத்தின்பால் தங்களது பக்தியினை வெளிப்படுத்தும் வேறு பல காரியங்களைச் செய்தவாறும் இருந்தனர்.  புனித நினைவாலயங்களின் மேன்மையைப் பற்றியும் அவற்றின் செயல்விளைவுகளையும் அறியாதவர்களுக்கு இக்காட்சி மிகவும் விநோதமாகவே இருக்கும். அவர்: இம்மக்கள் என்ன செய்கின்றனர்? — ஒரு வெற்றரைக்குள் இவர்கள் ஏன் நுழைகின்றனர், அங்கு பெரிதும் உணர்ச்சிவசப்படுகின்றனர், வெற்றிடத்திற்கு முன்பாக சிரந்தாழ்த்துகின்றனர்? இது எதற்காக? இவர்கள் ஏன் இதைச் செய்கின்றனர்?” ஆக, ஆன்மீக சக்திகள் குறித்த நமது புலனறிவு, வேறுவகைகளில் அறிவுக்கெட்டாத சில நடவடிக்கைகளில் நம்மை ஈடுபட தூண்டுகிறது. ஆக, இச்சக்திகள் குறித்து மிகக் கூர்மையான அறிவு பெற்றும், நமது வாழ்க்கையை தன்மைமாற்றமடையச் செய்வதற்கு அச்சக்திகளை ஈர்ப்பதற்கான வழிவகைகளை காண்பதுமே நம்முன் இருக்கும் சவாலாக உள்ளது. இது உள்ளியல்பாக இவ்விஸ்வத்தின் வலிமைகளுடன் நம்மை ஒருங்கிணைத்திடுவதில் ஏற்படும் சவாலாகும். இப்படி ஒருங்கிணந்து அச்சக்திகளோடு நாம் இயங்கும்போது நமது செயல்கள் வாழ்க்கையின் பற்பல அநுபவங்களினூடே இயல்பானவையாகவும் தன்னிச்சையானவையாகவும் இருக்கும்.

நாம் பயன்பெறவும் நமது வாழ்க்கையில் தன்மைமாற்றத்தை ஏற்படுத்தவும் இந்த ஆன்மீக சக்திகளையும் ஆதிக்கங்களையும்  நாம் எப்படி ஈர்க்கப்போகின்றோம் என்பதே இன்றிரவு நான் உங்களுடன் கலந்துரையாடவிருக்கும் விஷயமாகும். இது எனது அறிவிற்கும் வெகுவாக அப்பாற்பட்ட ஒரு மர்மமான விஷயம் என்பது தெளிவு. இது “ஒரு சில பொருளியலான விஷயங்கள் ஆன்மீக விளைவுகளை உண்டாக்குகின்றன…”2 எனும் அப்துல் பஹாவின் மர்மமான வாக்கிலிருந்து உதித்ததாகும். இந்த வாக்கை என்னால் முழுமையாக புரிந்துகொள்ள இயலவில்லை மற்றும் இதை நான் மற்ற ஒருவருக்கு நான் எவ்வாறு விளக்குவது. ஆனால் இது உண்மையியலான ஒன்று என்பதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன் ஏனெனில் இது நமது சமயத்தில் உள்ளடங்கியுள்ள ஒரு விஷயமாகும். நமது புனித வாசகக் குறிப்புகளில், ஒரு சில பொருளியலான விஷயங்கள், பௌதீக உலகில் மேற்கொள்ளப்படும் ஒரு சில நடவடிக்கைகள், ஒரு சில எண்ணங்கள், ஒரு சில கூற்றுகள், ஒருவர் மற்றவருடன் கொள்ளக்கூடிய ஒரு சில உறவுகள் ஆகியவை, ஆன்மீக விளைவுகளை உண்டாக்குகின்றன என நாம் அறிவிக்கப்படுகிறோம். இது குறித்த மர்மத்தின் ஓர் உதாரணமாக அப்துல் பஹா மற்றும் பஹாவுல்லா ஆகியோரின் எழுத்துக்களில் வரும், ஏறக்குறைய பின்வருவது போல் இருக்கும், ஒரு வாசகக்குறிப்பாகும்: “…பௌதீக உலகில், (உடற்)தூய்மை அதியான்மீகத்திற்கு ஏதுவானதாகும்…”3 நாம் இதை எப்படித்தான் விளக்குவது? நான் தூய்மையாகவோ அல்லது தூய்மையற்றோ இருக்கின்றேன் என்பது அப்படி என்ன பெரிய விஷயம்? என் ஆன்மீகம், என் இருப்பின் உட்சாரம், என் நன்நடத்தை உருவாக்கம், இறைவனுடனான என் உறவு ஆகியவற்றுடன் இது ஏன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்? அதியான்மீகம் எதனால் தூய்மைக்கேட்டினால் பாதிப்படைகிறது? இவ்வுறவு குறித்த உறவுகள், அது இயங்கும்விதம் மற்றும் இந்த உறவு சம்பந்தமான சக்திக்கூறுகள் ஆகியவை யாவை? இக்கேள்விகளுக்கு நாம் முழுமையாக பதிலளிக்க மடியாது. ஆனால் இது உண்மை என்பது நமக்குத் தெரியும்; பௌதீக நடவடிக்கை மற்றும் அதன் அதியான்ம பின்விளைவு  ஆகியவற்றிற்கிடையே உள்ள மர்ம உறவின் ஒரு பகுதியே இது என்பதும் நமக்குத் தெரியும்.

2.    காந்தவிசை சம்பந்தமான கோட்பாடு

காந்தவிசை குறித்த கோட்பாடு நம்மைச் சுற்றியுள்ள அதியான்மீக சக்திகளை நாம் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த கலந்துரையாடலின் மையத்தில் உள்ளது. நம்மில் பலர் பள்ளிப்பாடமான பௌதீகப் பாடத்தில் காந்த சக்தியை இயற்கை குறித்த ஓர் ஆவிர்பாவமாக கண்டிருக்கலாம். ஆனால், உண்மையிலேயே காந்தவிசையென்பது நாம் புரிந்துகொள்ளமுடியாத ஒரு சக்தியாகும். நகர்ச்சியினால் பிறக்கும் மின்னனுக்களிலிருந்து காந்த சக்தி பிறக்கின்றது என்பது நமக்குத் தெரியும். ஆனால், அது காந்தவிசையின் ஆவிர்பாவம் குறித்த விவரிப்பே ஒழிய அதன் பிறப்பின் விளக்கமல்ல. இருதுருவ மற்றும் விளைவெல்லைகள் எனப்படும் கட்டுமானவடிவங்களாக அனுக்கள் மற்றும் அனுத்திரள்களின் பௌதீக அமைப்புகளினால் வேறுபட்டிருப்பதே ஒரு காந்தவஸ்து. காந்தவிசையென்பது காந்தமல்லாத ஒன்றிலிருந்து இரசாயன கலவையினாலின்றி அதன் பௌதீக உள்ளமைப்பினாலேயே வேறுபட்டுள்ளது. அவ்வமைப்பினால் ஏற்படும் பின்விளைவால், காந்தவஸ்துவோடு, காந்தவிசையென அழைக்கப்படும், கண்ணால் காணப்பட முடியாத, பன்மடங்கு தூரத்திலிருந்து செயல்படக்கூடிய ஓர் அற்புதமான சக்தி தொடர்புற்றுள்ளது. ஒரு காந்தமும், அதற்கப்பால் காந்தவிசைத் தொடர்புள்ள பொருளும் இருந்தால், அவற்றிற்கிடையே ஓர் ஈர்ப்பு சக்தி ஏற்படுகின்றது. அவ்விரண்டிற்கிடையே கையை வைத்தால் எதுவுமே ஸ்பரிசப்படாது. ஆனால், அச்சக்தி அங்குள்ளது மற்றும் அவ்விரண்டையும் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால், அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும்.  இது, விவரிப்புக்குட்படாத ஓர் ஆழமான மர்மமாக இருந்தபோதிலும், இது ஒரு மெய்மையாகும் மற்றும் காந்தவிசையின் கலவையனுக்களின் கட்டமைப்பால் இது உருபெருகிறது.

இந்தளவிற்கு காந்தவிசையை ஒப்புவமையாக நான் இவ்வுரையில் நான் பயன்படுத்துவதற்குக் காரணம் பஹாய் சமய கோட்பாடுகளின் ஒரு வேறுபடுத்திக்காட்டும் அம்சமாக வஸ்து மற்றும் ஆவி ஆகியவற்றிற்கிடையே ஏற்படும் இனைந்தசெயற்பாட்டை விவரிப்பதற்கு காந்தவிசை எந்தளவிற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதே ஆகும். இவ்வெளிப்பாடே இதைச் செய்துள்ள முதல் வெளிப்பாடாகும். காந்தவிசை 13வது நூற்றாண்டிலேதான் முதன்முறையாக ஆய்வுரீதியாக கருத்தில் கொள்ளப்பட்டது. ஆகவே, அதைப் பயன்படுத்தக்கூடிய முதல் திருவெளிப்பாடாக பயஹாய் வெளிப்பாடு இருப்பதானது இயல்பானதே. பௌதீக உலகில் காந்தவிசையெனப்படும், அனுக்களின் ஒரு குறிப்பிட்ட பௌதீக சேர்க்கை ஒரு மிகவும் சக்திகரமான ஆற்றலோடு தொடர்புற்றிருப்பதானது, பஹாய்கள் எனும் முறையில் அதியான்மீக ஆற்றல்களை நாம் ஈர்த்திட செய்யும் முயற்சிக்குத் தேவைப்படுபவைகளைப் புரிந்துகொள்ள மிகவும் ஆற்றல்வாய்ந்த ஓர் உதாரணமாகும். இவ்விஷயத்தை விளக்கிட பஹாய் புனித வாசகங்களிலிருந்து மேலும் சில உதாரணங்களை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். அப்துல் பஹா கூறுகிறார்:

” நம்பிக்கையே சர்வ தயை மிக்கவரின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தக்கல்லாகும். சேவையே தெய்வீக ஆற்றலை ஈர்க்கும் காந்தக்கல்லாகும்…”4

மேலும் அப்துல் பஹா கூறுவது:

“…இறைவனை நினைவுகூறுவதென்பது ஒரு காந்தக்கல்லைப்போல் உறுதிப்பாடுகளையும் உதவிகளையும் ஈர்க்கின்றது.”5
ஒரு காந்தவிசையின் மேற்கோளை நான் உபயோகப்படுத்துவதன் நோக்கத்தைப் பற்றி நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நான் நினைக்கின்றேன். அந்த ஒழுங்குமுறை, நாம் எடுக்கும் நடவடிக்கைகள், அர்ப்பண உணர்வு, சமய போதனைகளுக்கேற்ப சேவையுணர்வில் பிறக்கும் செயலுணர்வு, நம்மைக் காந்தக்கற்களைப் போல் ஆக்குகின்றது. நாம் காந்தக் கற்களைப்போல் ஆகின்றோம். நாம் இரும்பை ஈர்க்கவில்லை ஆனால், இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கின்றோம். இக்கருத்து குறித்த பல வாசகப் பகுதிகள் உள்ளன. இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் சக்தியை, அப்துல் பஹாவின் அழகான வாசகப் பகுதி ஒன்று பின்வருமாறு விவரிக்கின்றது. அவர் கூறுவதாவது:
கவனமற்ற ஆன்மாக்கள் விழிப்புணர்வு பெறவும், இறந்த ஆன்மாக்களுக்கு உயிரளிக்கவும், ஆன்மீக நோயாளிகளை குணப்படுத்தவும், எளிமையானவர்களை விவேகிகளாக்குவதற்கும், அறியாதோருக்கு அறிவுபுகட்டவும், லௌகீகமானதை ஆன்மீகமானதாக்குவதற்கும், தூரவிலகியுள்ளோரை (இறைவன்) அருகில் ஈர்த்திடவும், அன்னியர்களை நண்பர்களாக்கிடவும் இரவும் பகலும் முயற்சிப்பீர்களாக.”

“இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்த்திடும் காந்தவிசையாற்றல் இதுவே.”6

இவ்வாசகப்பகுதி ஒரு குறிப்பிட்ட செயற்பட்டியலை விவரிக்கின்றது — ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையை விவரிக்கின்றது, இது இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும், நம்மைப்பற்றிய, நமது பேச்சு, நமதுடல், நமது எண்ணங்கள், ஆகியவைக் குறித்த செயல்கள் உருவாக்கும் அற்புதமான காந்தவிசையைப்பற்றியது. இது போன்று வேறு பல வாசகப் பகுதிகளும் உண்டு. மற்றொரு இடத்தில் பின்வருமாறு அப்துல் பஹா கூறுகிறார்:

“…இறைவனின் உறுதிப்பாடுகளை  ஈர்க்கும் காந்தக்கல்லாக ஒற்றுமையும் இணக்கமும் உள்ளன.”7
சமயத்தைப் போதிப்பதிலும், இதே கோட்பாடுகளே பொருந்துகின்றன. அப்துல் பஹா கூறுவது:
“மனிதர்களை சரியான பாதையில் வழிநடத்தும் செயலே இறைவனின் உதவிகளின்பால் நம்மை ஈர்த்திடும் காந்தக்கல்லாகும்.”8

அவர் அடுத்து கூறுவது:
“…போதகரின் நாவானது போதித்துக்கொண்டிருக்கும் போது, அவரும் இயற்கையாகவே அதனால் உற்சாகத்திற்குள்ளாகக்கூடும், சாம்ராஜ்யத்தின் தெய்வீக உதவி மற்றும் கொடைகளை ஈர்க்கும் ஒரு காந்தமாகவும் ஆகக்கூடும்…”9

இது போன்றே, தமது சார்பாக எழுதப்பட்ட ஒரு கடிதத்தில்:

“என்றுமில்லாத வகையில், இன்று, விண்ணுலக ஆசிகளை ஈர்க்கும் காந்தமாக, இறைவனின் சமயத்தைப் போதிப்பதே உள்ளது.”10

ஒரு சீரமைப்பிலோ, அல்லது ஒரு செயலிலோ, இப்பிரபஞ்சத்தின் விதிகளில் ஒன்றை பின்பற்றும்போது காந்தக்கல் குறித்த கோட்பாடு அதில் உடன்பட்டிருப்பதைக் காணலாம். இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கக்கூடிய ஆன்மீக காந்தவிசையை உருவாக்கும் செயல்கள் அல்லது சீரமைப்புக்கள் பற்றிய பிரபஞ்சம் சார்ந்த பௌதீக விதியல்லாத ஓர் ஆன்மீக விதியே இங்கு குறிப்பிடப்படுகிறது.

இந்த உரையில் காந்தவிசையின் உருமாதிரி பரவலாகப் பயன்படுத்தப்படுவதை பஹாய் புனித வாசகங்களில் காணப்படும் காந்தவிசை குறித்த உட்கருத்தின் முழுமையான ஆய்வாக கருதக்கூடாது. ஆன்மீக சபை குறித்த உட்கருத்து பலவிடங்களில் காந்தவிசையாக விவரிக்கப்பட்டுள்ளது: அதாவது, காந்தவிசையை தோற்றுவிப்பதற்காக ஒரு காந்தவிசைப்பரப்பின் மூலப்பொருள்களை குறிப்பிட்ட வகையில் சீரமைப்பு செய்வது ஓர் ஆன்மீக சபையை தோற்றுவிப்பதற்குச் சமமாகும். வேறு இடங்களில், மனிதனின் இயல்பு குறித்து விரிவுரை செய்யும் போது மனித சரீரத்தின் கூறுகளைக் குறிப்பிட்டு பின்வருமாறு கூறுகிறார்:

“…மனிதனெனும் ஜீவனில் காணப்படும் இந்த அவயங்கள், இந்த உடற்கூறுகள், இந்த கூட்டமைவு, ஆவிக்கான ஈர்ப்புகளும் காந்தவிசையுமாகும்…”

இந்தப் பகுதியில், கூட்டமைவு மற்றும் சிதைவுறுதல், வாழ்வு மற்றும் மரணம்,  ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பு குறித்தும், உடல் சிதைவுறும் போது உடலிலிருந்து ஆவி பிரிவது குறித்தும் விரிவுரை செய்கின்றார். “பஹாவுல்லா, காந்தம் எனும் வார்த்தையோடு சமஅர்த்தம் கொண்டுள்ள ‘காந்தக்கல்’ எனும் வார்த்தையை உபயோகப்படுத்தி:
“…எல்லா தேசங்களுக்கும், எல்லா உலக மக்களுக்கும் காந்தக்கல் போல செயல்படும்”12 என குறிப்பிடுகின்றார்.

ஒரு வாசகப் பகுதியில் பஹாவுல்லாவின் வருகை குறித்து பின்வருமாறு கூறுகிறார்:

“…தூர தேசங்கள் மற்றும் நாடுகளிலுள்ள புனிதமான இதயங்கள் ஈர்க்கப்படும் தற்போதைய உலகின் துருவத்தின் ஆன்மாக்கள் மற்றும் இதயங்களுக்கான காந்தவிசையை உனது ஆண்டவர் வெளிப்படுத்தியுள்ளார்… ஓர் ஈர்ப்பு மிகுந்த சரீரத்திற்காவும், இறைவனின் சாம்ராஜ்யத்தின் காந்தவிசையின்பால் ஈர்ப்புற்றதற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்துவாயாக.”13

3.    ஆன்மீக தன்மைமாற்றீடு

இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தவிசைகளாக மாறுவதே நாம் எதிர்நோக்கும் சவாலாக இருப்பின், அத்தகைய மாற்றத்தை நாம் எப்படி தோற்றுவிப்பது மற்றும் ஆன்மீக காந்தவிசைகளாக எப்படி மாறுவது? தன்மைமாற்றீடாகப்பட்டது இரு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது என் நம்பிக்கை. தைரியமூட்டுவதாகவும் அதே வேளை பயமுறுத்துவதாகவும் நிலைதடுமாறச் செய்வதாகவும் இருக்கும் மாஸ்டர் அவர்களின் வாசகம் ஒன்றில் முதலாவது கோட்பாடு உள்ளது:

“…மாற்றமென்பது ஓர் அவசியமான பண்பாகவும் இவ்வுலகின் அத்தியவசிய குணங்களில் ஒன்றாகவும் உள்ளதோடு, நேரம் மற்றும் இடத்திற்கும் அது பொறுத்தமுடையதாக இருக்கின்றது.”14

இப்பகுதி தன்மாற்றீட்டோடு மிகவும் நெருங்கிய ஏற்புடைமையுள்ளதாக தெளிவுடன் விளங்குகிறது. நாம் மாற்றம் பெறுகிறோம் என அது கூறுவது மனதுக்கு தைரியமூட்டுகின்றது. எல்லாமே மேம்பாடு காணும் நிலையில் உள்ளன; இயக்கமற்றதல்லாத இயக்காற்றல் மிக்க ஓர் உலகத்தில் நாம் வாழுகின்றோம். காலப்போக்கில், மாற்றம் காண்பதற்கான ஆற்றல் நமக்குள்ளது, மேம்பாடு காணவும் பரிணமிக்கவும், அதன்மூலம் தன்மைமாற்றம் அடையவும் முடியும் என்பது மனதுக்கு உறுதியளிக்கின்றது. அதே சமயம் இந்த வாசகம் பயமளிக்கவும் செய்கின்றது, ஏனெனில் எல்லா மாற்றங்களுமே நன்மை பயக்கவல்லவையல்ல; அது மேம்பாடாகவோ தாழ்வுற்றலாகவோ இருக்கக்கூடும். நாம் முன்னோக்கியும் செல்லலாம் பின்நோக்கியும் செல்லலாம்; இப்பகுதியிலிருந்து நாம் ஒரே நிலையில் இருக்கப் போவதில்லை என்பது நிச்சயம். ஆகவே, நாம் பின்னோக்கிச் செல்லாமல் இருக்க வேண்டுமானால், நாம் வலிந்து முன்னோக்கி செல்லவேண்டும். முன்னோக்கி நாம் வலிந்து முயற்சிக்காது போதனால், நாம் பின்னோக்கியே செல்லுவோம். இதுவே மாற்றத்தின் அத்யாவசிய பண்பியல்பின் பீதியூட்டும் அம்சமாகும்.

ஆக, தன்மைமாற்றம் குறித்து ஆலோசிக்கையில், தவிர்க்கவியலா வகையிலும், மீட்கமுடியா வகையிலும், மாற்றத்திற்கு உட்பட்டவர்களாவோம், மற்றும் அதன் காரணமாக நாம் அடையும் எதிர்படையாற்ற நேர்படையான மாற்றத்தை உறுதி செய்வதற்கு நாம் கட்டாயம் முயலவேண்டும்.

தன்மைமாற்றத்தை உள்ளடக்கிய இரண்டாவது கோட்பாடு முயற்சியின் பண்பியல்பு குறித்தது. புனித வாசகங்களின் ஒரு சில குறிப்புகளைக் கொண்டு, மேலும் அதிக விளைவுகள் மிக்க ஒரு காந்தவிசையாகிட ஒரு தனி மனிதனுக்கு உதவும் ஆன்மீக ஆற்றல்களை ஈர்க்கும் காந்தவிசைகளாக முயற்சியை உள்ளடக்கிய செய்கைகள் உள்ளன. தன்மைமாற்ற செயற்பாடு முயற்சியை உள்ளடக்கியுள்ளது. முயற்சியோடு நாம் ஆரம்பித்தோமானால், நாம் மேலும் அதிக மேம்பாடு காண்பதற்கு உதவும் ஆன்மீக ஆற்றல்களெனும் வெகுமதியை இறைவன் நமக்களிப்பார். அதன்மூலம்,  ஒரு சக்கரச் செயற்பாட்டின் வழி, அதிக நற்பயன் விளைவிக்கும் முயற்சியானது அதைவிட மேலும் அதிக ஆன்மீக ஆற்றல்களை ஈர்க்கும்; மற்றும் இதன்வழி அப்துல் கூறியது போன்று, “நம்பிக்கையே தயைமிக்கவரின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தமாகும்,” எனும் காந்தவிசை நிலைக்கும் ஒருவர் உயரலாம்.

இதே விஷயம் குறித்து பாதுகாப்பாளர் தமது செயலாளர் மூலம் எழுதியதாவது:

“…தான் எவ்வளவுதான் தகுதியற்றவராகத் தன்னை எண்ணியபோதிலும், சேவை செய்திடுவதற்கு எடுக்கப்படும் முயற்சியாகப்பட்டது, இறைவனின் ஆசிகளைக் கவர்ந்து அக்காரியத்திற்கு அவரை தகுதிபெற்றவராக ஆக்கிடும்.”15
மற்றும்:

“…உங்கள் குறிக்கோள்களை அடைந்திட நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முயலுகின்றீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக பஹாவுல்லாவின் உறுதிப்பாடுகள் அமைந்தும், நிச்சயமாக வெற்றியடைவீர்கள் எனும் உணர்வையும் பெறுவீர்கள்.”16

தெய்வீக உறுதிப்பாடுகள் வந்தடையும் செயற்பாட்டை எண்ணுகையில் இங்கு மறுபடியும், மறுவுறுதியும் அச்சுறுத்தலும் எனும் இணை அம்சங்கள் (காணப்படுகின்றன). நமது நிலையை பொருட்படுத்தாமலும், அல்லது எவ்வளவு வலுக்குறைந்தாற் போன்று ஒருவர் உணர்வு பெற்றிருந்தாலும், தேவைப்படுவதெல்லாம், அவசிய முயற்சியை மேற்கொள்ளவேண்டும்; முயற்சி மேற்கொள்ளும் செயலே உறுதிபாட்டிற்கு வழிவகுக்கும் சக்கரச் செயற்பாட்டிற்கு வழிகோளி, மேலும் அதிக முயற்சிகளுக்கு நமக்கு வலுவூட்டியும், அதன் பயனாக அதற்கும் மேலான  வலு வழங்கியும் வரும் எனும் மறுவுறுதி நமக்கு வழங்கப்படுகின்றது. இதில் அச்சுறுத்தும் அம்சமாக, நாம் இச்செயற்பாட்டில் முயற்சிகள் செய்வதை நிறுத்தியும், மனநிறைவும், தன்நிறைவுணர்வு பெற்றும், இறுமாப்பு அல்லது கர்வம் அடைத்தாலும் இந்த சூழ்நிலையின் காரணமாக நாம் முன்பு ஈர்த்துக்கொண்டிருந்த இறைவனின் உறுதிப்பாடுகளைக் குறைத்து விடுவோம். முன்பு குறிப்பிட்டது போல, “இவ்வுலகிற்கு… மாற்றம் என்பது அவசியமான ஒரு பண்பு…”14 நாம் மாற்றம் பெற உதவி காந்தவிசைகளாவதற்கு முயற்சி செய்வதெனும் செயல் இன்றியமையாததாகும்.

புனித வாசகங்களின் மூலம், நம்பிக்கையுடனும் அர்ப்பண உணர்வுடனும் முயல வேண்டும் என்பதே எனது முடிவாகும். இம்முயற்சியில் நாம் விடாது தொடர்ந்தோமானால், மாற்றங்கள் நிகழ்ந்து தன்மைமாற்றம் அதன் பயனாக விளையும். இவ்விஷயங்களைக் கருதுவதானது அப்துல் பஹாவின் இரு குறிப்புகளின்பால் எனக்கு அகக்காட்சிகள் வழங்குகின்றது. இக்குறிப்புகள் அசாதாரணமானவையாக எனக்கு அப்போது தோன்றின. இக்குறிப்புகள், வில்மட் கோவில் கட்டப்படுவதற்கான ஆரம்ப வேளையின் போது உச்சரிக்கப்பட்டவையாகும். இவற்றில் முதல் குறிப்பாக, “நீங்கள் ஆரம்பிக்க வேண்டியதுதான், யாவுமே சரியாக அமைந்துவிடும்,”17 நான் என் வாழ்க்கையிலும் சரி பிறரது வாழ்க்கையிலும் சரி பல முயற்சிகள் இந்த எளிமையான வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளேன். “நீங்கள் ஆரம்பிக்க வேண்டியதுதான், யாவுமே சரியாக அமைந்துவிடும்,” மற்ற எதுவுமே முக்கியமில்லை. உங்களுடைய தற்போதைய நிலை, உங்கள் சிரமங்கள், உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், உங்கள் துரதிர்ஷ்டங்கள் மற்றும் வாய்ப்பின்மை, எல்லாமே இந்த வாக்கின் மூலம் அழிந்துபடுகின்றன, அதாவது, “நீங்கள் ஆரம்பிக்க வேண்டியதுதான், யாவுமே சரியாக அமைந்துவிடும்,” எனும் வாக்கு.

குறிப்பிட்ட வகையில் நமது ஆர்வத்தைத் தூண்டும் மற்றொரு கூற்று, 1912ல் அக்கோவிலின் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியின் போது கூறப்பட்டது. அப்போது அங்கிருந்தோர் கூறியதாவது, அப்துல் பஹா கல்லை நட்டுவிட்டு, “கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது,”18 என கூறினாராம். இது மிகவும் அதிசயமான ஒரு கூற்று.  நான் இது குறித்து ஆழமாக சிந்தித்தேன். “கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது,”18 கோவிலைக் கட்டுவதற்கு முன்பாக அமெரிக்க பஹாய்கள் 40 வருட பெரும் முயற்சிகள், பிரமாண்ட தியாகங்கள், நம்பமுடியாத சிரமங்கள் ஆகியவற்றை எதிர்நோக்கினர். அது பல சவால்களை வெற்றி கண்டது. 1953ல் கட்டிடம் திறப்பு விழா காணும் வரையில், கட்டிடத்தை எழுப்பவும், கட்டிடத்தின் வெளிச் சித்திர வேளைப்பாடுகளையும் உள் வேளைப்பாடுகளை முடிக்கவும், புற நிலம் சார்ந்த வேளைகள் பூர்த்தி செய்யப்படவுமான சவால்கள் அவை. ஒரு சாதாரண கல்லை மட்டும் வைத்துவிட்டு அப்துல் பஹா ஏன் அவ்விதமாக கூறவேண்டும், “கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது,” என? இதற்கான பதில் நான் இதுவரை தொட்டுப்பேசிய போதனைகளில் அடங்கியுள்ளது; முயற்சி செய்வதின் பெரும் முக்கியத்துவம், மாற்றம் ஏற்பட வேண்டும் எனும் இயல்பு, மற்றும் காந்தவிசை செல்வாக்கின் ஆற்றல் ஆகியவை. தங்களின் மாபெரும் முயற்சிகளின் மூலமாக தெய்வீக உறுதிகளை ஈர்த்திடும் ஒரு மாபெரும் காந்தக்கல்லாக தங்களை அமெரிக்க பஹாய்கள் மாற்றிக்கொண்டு இம்மாபெரும் திட்டத்தை பூர்த்தியடையச் செய்தனர். தூரநோக்கெனும் கண்களோடு, வருங்காலத்தைப் பார்த்து, அடிக்கல் நாட்டப்பட்டதும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதும் அந்த ஆரம்பத்திற்கான நடவடிக்கைகளே என்பதை உணர்ந்தார். இதனாலேயே அவர் “கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது,” என கூறிட உந்தப்பட்டார்.

படைப்புச்சக்திமிக்க இறைமொழி


படைப்புச்சக்திமிக்க இறைமொழி
(டாக்டர் பீட்டர் கான்)

அவைத்தலைவி அவர்களே, நண்பர்களே,

பஹாய்களுக்கு ஒரு புனித ஸ்தலமாக விளங்குகின்ற இந்த இடத்தில், இப்புனித கட்டிடத்தின் மண்டபத்தின் கீழ் ஒன்றுகூடியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இனிய மாலைவேளையில், பல பழைய புதிய நம்பிக்கையளர்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

டாக்டர் கார்னி அவர்கள் அறிவித்ததைப்போன்று “படைப்புசக்திமிக்க இறைவார்த்தையின்” பரிபூரண மாற்றத்தின் சக்தி எனும் பொருள் பற்றி நான் பேசவிருக்கிறேன். பஹாவுல்லாவின் திருவெளிப்பாடு தன்னுள் பல புதிர்களை உள்ளடக்கியிருக்கின்றது என்றுதான் எனக்கு தோன்றுகின்றது, அதைப்பற்றி நமக்கு சிறிதளவே தெரிந்துள்ளது. கடவுள் அவதாரப்புருஷரின் வாயிலாக வருகின்ற திருவெளிப்பாட்டை புனித வாசகங்கள் விளக்குகின்றன. புனித வாசகங்கள் என்று நாம் கருதுகின்ற அந்த திருநூல்களின் ஒரு சில பகுதிகளே நமக்கு தெரிந்தவை.

உதாரணமாக, திருவெளிப்பாடு இறைதூதர்மீது பொழியும்போது, அந்த அருள் மழை மாபெரும் வேகத்தொடச்சியாகவும், பெரும்பாலும் இறைதூதரின் சுய விருப்பத்திற்கப்பாற்பட்டே சம்பவிக்கின்றது என நமக்குத் தெரியும். அத்தகைய அருள் மழை பொழியும்போது, பஹாவுல்லாவுக்கு அருகில் இருந்து அந்த திருவெளிப்பாட்டின் வரவைக் கண்ணுற்றவர்கள் அவர்மீது அந்த அருள் மழை எப்படி பொழிந்தது என்பதை விவரித்துள்ளனர் – பஹாவுல்லாவினால் வெளியிடப்பட்ட இறைவார்த்தைகள் பெருக்கெடுத்த வேகத்திற்கு ஈடுகொடுத்து எழுத முடியாமல் எப்படி அவரது செயலாளர்கள் திணறினார்கள் என்பதையெல்லாம் அவர்கள் விவரித்துள்ளனர். ஆக, நமக்கு அந்த திவ்விய அருள்மழையைப் பற்றி ஒன்று நிச்சயமாக தெரிகின்றது. அதாவது, அந்த அருள் மழை கடும் வேகத்தில் சம்பவிக்கின்றது. அந்த சம்பவத்தின்போது இறைமொழிகள் மடைதிறந்த வெள்ளம்போல் பிரவாகமெடுத்து அவை மனதிற்கு சவால் விடுக்கின்றன. நூற்றாண்டு காலங்களுக்கு தியானத்தின் மூலாதாரமாகவுள்ள மானிட ஆவியினை அந்த இறைமொழிகள் அதிர்ச்சியுறச் செய்கின்றன. ஆக, அந்த அருள் மழையின் ஒரு தன்மை கடும் வேகமாகும்.

அந்த திருவெளிப்பாட்டின் அருள் மழையோடு சம்பந்தப்பட்ட சக்தியான அந்த அருள்மழையின் இன்னொரு தன்மை. திருவெளிப்பாட்டின் அருள்மழை பொழிந்ததை நேரில் கண்டவர்கள் அந்த அருள்மழையில் ஒரு மாபெரும் சக்தியை உணர்ந்ததாக விவரித்துள்ளனர். ஒரு மாபெரும் ஒளியினைக் கண்டதாக சிலர் சொல்லியுள்ளனர். வேறுசிலர் அதிர்ச்சியுற்றுவிட்டனர். ஈரான் நாட்டு உயிர்த்தியாகிகள் குடும்பம் என அழைக்கப்படும் வர்க்கா குடும்பத்தைச் சேர்ந்த வர்க்கா பஹாவுல்லாவின் முன்னிலையில் அனுமதிக்கப்பட்டபோது மயக்கமுற்று வீழ்ந்துவிட்டார். இந்ந அதிர்ச்சி, சக்தி எல்லாம் பஹாவுல்லாவின் சமயத்தில் மட்டும்தான் உண்டு என்பதற்கில்லை. முகம்மது நபியின் மீது திருவெளிப்பாடு பொழியப்பட்டபோது மாபெரும் சக்தி உணரப்பட்டதை இஸ்லாம் சமயத்தில் காண்கின்றோம். ஒருமுறை அண்ணல் முகமது நபி அவர்கள் மீது திருவெளிப்பாடு பொழியப்பட்டபோது அவர் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தார். அந்த திருவெளிப்பாட்டின் சக்தியின் தீவிரத்தால் அந்த ஒட்டகம் மண்டியிட்டுச் சாய்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் விவரித்துள்ளனர். ஆக, அந்த அருள்மொழியின் இன்னொரு தன்மை மாபெரும் சக்தி என்பது நமக்கு தெரிகின்றது.

இந்த திருவெளிப்பாட்டின் மூன்றாவது தன்மை என்னவென்றால், அது பொழியப்படும் இறைதூதர் மீது ஏற்படும் அதன் பாதிப்புதான் அது. திருவெளிப்பாடு அண்ணல் முகமதுநபியின் மீது பொழிந்தபோது, அந்த அருள் மழையின் வேகத்தொடர்ச்சியின் தீவிரத்தால் எப்படியெல்லாம் அந்த அண்ணல் தமது போர்வையால் தம் முகத்தை மூடிக்கொண்டார் என்பதையெல்லாம் அங்கே சூழ்ந்திருந்தவர்கள் விவரித்துள்ளனர். அத்தகைய ஒரு சம்பவத்தின்போது முகமது நபியின் தோழர் ஒருவர் அவரது போர்வையை விலக்கிப் பார்த்தபோது அந்த அண்ணலின் திருமுகம் வேர்வை வெள்ளத்தில் இருந்ததைக் கண்டார். அந்த திருமுகம் செஞ்சிவப்பாக இருந்தது. திருவெளிப்பாட்டின் அதிதீவிரத்தால் அவர்தம் நெற்றியின் நரம்புகள் புடைத்து பெரிதாகி இருந்தன.

இம்மாலையில் இங்கு வந்திருக்கும் அன்புமிகு எட்னா ட்ரூவின் தாயாரும், தெய்வ சமயத்தின் திருக்கரமுமான கொரீன் ட்ரு அவர்கள், தாம் மாஸ்டர் அப்துல் பஹா அவர்களை சந்தித்த நிகழ்ச்சியை ஒருமுறை விவரித்துள்ளார். பஹாவுல்லாவின் திருவெளிப்பாட்டின் அருள்மழை பொழிந்த ஒரு நிகழ்ச்சியையும், அதனால் அவர் மீது ஏற்பட்ட பாதிப்பையும் அப்துல் பஹா எடுத்துச் சொல்லியுள்ளார். அந்நிகழ்ச்சி குறித்து அப்துல் பஹா இப்படிச் சொல்லியுள்ளார் “ஆசீர்வதிக்கப்பட்ட பேரழகான பஹாவுல்லா தெய்வீக போதனையைப் பறைசாற்றிக் கொண்டிருந்த நாட்களில் அவர் மீது தெய்வீகத் திருவாக்கு சதா பொழிந்து கொண்டிருந்தது. அந்த தெய்வீகத் திருவாக்கின் பாதிப்பால் இதயம் பெரும் துடிப்புக்கு உள்ளாகி அவரால் மிகவும் சிறிதளவு உணவைத்தவிர வேறெதுவுமே சாப்பிட இயலாதிருந்தார். இறைதூதரின் மீது அந்த அருள் மழையின் பாதிப்பு இப்படித்தான் இருந்தது. அவரது இதயம் பெரும் துடிப்புக்கு உள்ளாகி அவரது நாளங்களுக்குள் இரத்தம் மிக வேகமாக பாயும். அவரது உடல் கடும் உதறலுக்கு உள்ளாகி, பாதிக்கப்பட்டு அவரால் எதுவுமே சாப்பிட இயலாமல் போய்விடும்.

ஆக, திருவெளிப்பாடு பொழியும்போது ஏற்படும் ஒரு சிறு பகுதிதான் இந்த பாதிப்புக்கள். திருவெளிப்பாட்டு அருள் மழை என்பது ஒரு புதிரான ஜீவ அம்சம் என்பதைக் குறிக்க இந்த பாதிப்புக்கள் போதுமானவையே. கடும் உழைப்பின் பயனாகவும், மறு சரி பார்ப்புக்களினாலும், மாபெரும் சிந்தனை செலவழிப்புக்களினாலும், மிக மெதுவாகவும் உருவாக்கப்படும் மனிதனுடைய எழுத்துக்கோர்வையிலிருந்து இந்த இறை வாசகங்கள் வேறுபட்டவை என்பதைக் காட்ட அந்த பாதிப்புக்கள் போதுமானவையே. மாபெரும் சக்தியோடு இறைதூதரின் மீது பொழிந்து அந்த திருவுடலின் மீது பாதிப்பு ஏற்படுத்தும் திரு வெளிப்பாட்டு அருள்மழை என்பது ஒரு திடீர் சம்பவமாகும். ஆகவே, தேசிய ஆத்மீக சபை இந்த மாலையில் எனக்கு விடுத்த அழைப்பை ஏற்று இக்கருப்பொருள் பற்றி நான் பேசவிருக்கின்றேன். அந்தக் கருப்பொருள் பற்றி போசுவதற்கு முன்பதாக சமயத்தின் மூன்று அடிப்படை கோட்பாடுகளை விவரிக்க விரும்புகின்றேன். முதலாவது, படைப்பின் இயல்பு. இரண்டாவது காந்தசக்தி எனும் கோட்பாடு. மூன்றாவது, பரிணாமம் எனும் கோட்பாடு. தெய்வீகத் திருவெளிப்பாட்டை போதுமான அளவுக்கு விளக்கிட எந்தவொரு முயற்சிக்கும் அடிப்படை இந்த கோட்பாடுகள்தான் என நான் நம்புகின்றேன். இந்த அடிப்படைக் கோட்பாடுகள் நமது சமயத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படை கோட்பாடுகள் ஒவ்வொன்றைப்பற்றியும் சுருக்கமாக பேசிவிட்டு அந்த கோட்பாடுகள் எப்படி திருவெளிப்பாட்டுச் செயல்முறைக்கு பொருந்துகின்றன என்பதை எடுத்துக்காட்ட விரும்புகின்றேன்.

முதலாவதாக, படைப்பின் தன்மை நாம் வாழும் இவ்வுலகில் படைப்புச் செயலின் இரு ஜீவ அம்சங்கள் ஒன்றாகக் கலந்துள்ளன என அப்துல் பஹா அவர்கள் பல இடங்களில் அதனைப் பற்றி பேசும் பொழுது குறிப்பிட்டுள்ளர். அவற்றில் ஒன்று ஜடப் பொருள் எனும் வஸ்து. மற்றது உயிர்ப்பு சக்தி (ஆவி) . அவரது விளக்கங்களை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். ஏனென்றால், அவரது விளக்கங்கள் நடைமுறை வாழ்க்கையில் புழங்கி வரும் விளக்கங்களிலிருந்து மாறுபட்டவை. உதாரணமாக, அப்துல் பஹா அவர்கள் ஜடப்பொருளைப் (வஸ்து) பற்றி விவரிக்கும்போது, அதனை விசேஷ தன்மை கொண்டதாகவும், அமைதியான, ஐடமான ஒன்று என விவரிக்கின்றர். ஆகையால், அவரது விளக்கம் நமது விளக்கத்திலிருந்து மாறுபட்டது என்பது புரிகின்றது. அதனை அவர் விவரிக்கும்போது இடத்ததை நிரப்பும் பொருள் என குறிப்பிடுகின்றார். ஒரு பௌதிக வல்லுணர் அதனை விளக்கும்போது, இடம் சம்பந்தப்பட்ட பொருளாகத்தான் அதனை குறிப்பிடுவார். அப்துல் பஹா அவர்கள் படைப்பின் இதர அமசங்களைப் பற்றியும் பேசுகின்றார். படைப்பை உயிர்ப்பு சக்தி எனக் குறிப்பிட்டு அதனை செயல்துடிப்பு, ஆக்கசக்தி, ஆன்மீக மற்றும் எல்லா ஜடப்பொருள்ளையும் ஊடுருவல்லது என விளக்குகின்றார் அப்துல் பஹா. அண்மையில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது நிருபங்களடங்கிய நூலில் படைப்பு என்பது ஜடப்பொருள், உயிர்ப்பு சக்தி இரண்டுக்கிடையே எற்படும் தொடர்புறவினால் ஆளப்படுவதுதான் என அப்துல் பஹா விளக்கியுள்ளார். இந்த விளக்கம் நம்மைச் சுற்றியுள்ள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விளக்கம் என இப்போதைக்கு கருதிக்கொள்வோம்.

பெரும்பாலும் எல்லாருமே உயிர்ப்பு சக்தியைப்பற்றிய விளக்கத்தை ஏற்றுக்கொள்வர், அவர்கள் மண்வகை உயிர்ப்பு சக்தி, தாவர வகை உயிர்ப்பு சக்தி மற்றும் மிருக இன உயிர்ப்பு சக்தி உள்ளதை ஒப்புக்கொள்வர். பஹாய்கள் உட்பட பெரும்பாலான மக்கள் மிருக இன உயிர்ப்பு சக்திக்கும் மானிட உயிர்ப்பு சக்திக்கும் (மானிட ஆவி) உள்ள வேறுபாட்டை உணர்வர். இந்த வகையிலான உயிர்ப்பு சக்திகள் பற்றி விளக்கம் கேட்கப்படும் பொழுது, அவர்கள் மிருகம், மனிதன், மண், தாவரம் முதலிய ஒவ்வொரு பொருளோடும் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளையே அந்தந்த உயிரினங்களுக்கு விளக்கங்களாக குறிப்பிடுவர். காலங்காலமாக வழங்கப்பட்டு வரும் மண்வகை, தாவர வகை, மிருக வகை முதலிய ஜீவ சக்திகளோடு சேர்த்து இன்னும் இரன்டு உயிர்ப்பு சக்தி (ஆவி)கள் இருப்பதாக பஹாய்கள் நம்புகின்றனர். அவற்றை நாம் நம்பிக்கை விசுவாசம் என்று ஒரு ஜீவ சக்தியாகவும், பரிசுத்த ஆவி என்று இன்னொரு உயிர்ப்பு சக்தியாகவும் கருதுகின்றோம். மேலே நான் சொல்லியுள்ள இதர உயிர்ப்பு சக்திகளின் வடிவங்களைத் தவிர்த்து தனித்தன்மை வாய்ந்த இந்த இரு ஜீவ சக்திகள் எல்லாம் வல்ல படைப்பாளியிடமிருந்து தோன்றுகின்றன. அதுவே நான் விவரிக்கப்போகும் மூன்று கோட்பாடுகளில் முதல் கோட்பாடு இரண்டாவது காந்தசக்தி எனும் கோட்பாடாகும். பஹாய் திருவாசகங்களின் பல இடங்களில் காணப்பட்டிருக்கும் இதுவே அடிப்படைக் கருத்தாக நான் கருதுகின்றேன். இந்த கோட்பாட்டை முழுமையாக சொல்லிய பிறகு அதற்கான சில உதாரணங்களை கொடுக்கின்றேன் பாஹாய் புனித வாசகங்களில் குறிக்கப்பட்டிருக்கும் காந்தசக்தி கோட்பாடு என நான் விளங்கிக்கொள்வது இதுதான். ஒரு தெய்விக நியதியின் சட்டத்திற்கு ஏற்ப பொருளுலகில் ஒரு செயல் ஓர் ஒழுங்கு முறை ஏற்படும்போது அது உயிர்ப்பு சக்தியின் உத்தரவிடப்பட்ட ஒரு அளவினை கவர்ந்து ஈர்க்கின்றது. நான் மீண்டும் அதனைக்கூறிவிட்டு சில உதாரணங்களைக் கொடுக்கின்றேன். ஒரு தெய்வீக நியதியின் சட்டத்திற்கு ஏற்ப ஒரு செயல் அல்லது ஒர் ஒழுங்கு முறை ஏற்படும்போது அந்த சம்பவம் உயிர்ப்பு சக்தியின் உத்தரவிடப்பட்ட ஒரு பகுதியை கவர்ந்திழுக்கிறது. இப்போது சில உதாரணங்களைச் சொல்கின்றேன். முதல் உதாரணம் அந்த காந்தம். எல்லாருக்குமே காந்தம், திசைக்காட்டும் கருவி என்பதெல்லாம் தெரிந்த ஒன்றுதான். அந்த காந்தத்தினுள் ஓர் ஒழுங்கு முறை ஒன்று உள்ளது. அங்கே அணுக்கள், மின்னணு முதலியவை உள்ளன. அங்கே காந்த ஈர்ப்புத்தன்மையின் ஆதிக்கம் ஒரு குறிபிட்ட ஒழுங்கு முறையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். அந்த ஒழுங்குமுறை இந்த மண்ணுலகில் ஒரு தெய்வீக நியதிக்கு ஏற்ப உள்ளது. அந்த தெய்வீக நியதியை நீங்கள் காந்த சக்தியின் நியதி என்றோ, ஈர்ப்பு சக்தியின் நியதி என்றோ, அல்லது வேறு ஏதாவது ஒரு பெயரிட்டோ அழைக்கலாம். ஆனால், அது என்ன பெயராக இருந்தாலும், அது இயற்கையின் நியதி என்பதுதான் உண்மை. அந்த ஒழுங்கு முறை இயற்கையின் நியதிக்கு ஏற்ப ஒழுங்குப் படுத்தப் பட்டிருப்பதால் அணுக்களின் அந்த ஒழுங்கு முறை உயிர்ப்பு சக்தியின் உத்தரவிடப்பட்டுள்ள ஒரு பகுதியை கவர்ந்து ஈர்க்கின்றது. இங்கே உயிர்ப்பு சக்தியின் ஈர்ப்புக்கு மண்ணுலக உயிர்ப்பு சக்தி காந்த சக்தியின் ஒரு வெளிப்படையான தோற்றம் இது. நான் என்ன சொல்லவருகின்றேன் என்றால் காந்தத்தினுள் அணுக்கள் ஒரு விஷேச முறையில் ஒழுங்குப்படுத்தப்பட்டு அமைந்திருப்பதால் அது இயற்கையின் நியதிக்கு ஏற்ற ஒரு சரியான அமைப்பு முறை. அதனால்தான் காந்தசக்தி அந்த உலோகத்தோடு தொடர்பு கொண்டுள்ளது.

நாம் இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு சாதாரண விதையை இப்பொழுது பாபர்ப்போம். செடி வளர்க்கப்படுவதற்காக தோட்டத்தினுள் தூவப்படுவது விதை. ஒரு விதையின் உள்ளே அடிப்படையிலேயே ஓர் ஒழுங்து முறை உள்ளது. அந்த சிறு சிதையை நாம் பிளந்து பார்த்தோமானால் அணுக்கள் பல ஒரு விஷேச முறையில் ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கும். அணுக்களின் குவியல் அங்கே ஒரு விஷேச முறையில் இயற்கையின் நியதிக்கு ஏற்ப ஒழுங்கு படுத்தப்பட்டிருப்பதால் அந்த சரியான அமைப்பு முறையானது உத்தரவிடப்பட்டுள்ள உயிர்ப்பு சக்தியினை கவர்ந்திழுக்கின்றது. உத்தரவிடப்பட்டுள்ள அந்த உயிர்ப்பு சக்தி என்ன? அதுதான் தாவர உயிர்ப்பு சக்தி. எனவே, தாவர உயிர்ப்பு சக்தி ஒரு விதையோடு தொடர்பு கொண்டிருக்கின்றது. காந்தசக்தி எனும் கோட்பாட்டினை மீண்டும் ஒருமுறை நான் வாசிக்கின்றேன். ஒரு தெய்வீக நியதியின் சட்டத்திற்கு ஏற்ப பொருளுலகில் ஒரு செயல் அல்லது ஓர் ஒழுங்குமுறை ஏற்படும்பொழுது, அது உயிர்ப்பு சக்தியின் உத்தரவிடப்பட்ட ஓர் அளவினை ஈர்க்கின்றது. எனவே, காந்தத்தின் பரந்த அளவு விளக்கத்தினை நாம் பார்க்கும்பொழுது, அவ்விளக்கத்தின் ஒர் உதாரணம் விதையாகும். ஏனெனில், அந்த சிறு விதையில் அமையப்பட்ட ஒர் ஒழுங்கு முறை உயிர்ப்பு சக்தியின் ஒர் அளவினை ஈர்க்கின்றது. கருத்தரிக்கப்பட்ட மானிட சிசு மேலுமோர் உதாரணமாகும். கருத்தரிப்பின்போது ஆன்மா உலக வாழ்வுக்கு உருவெடுத்து வருவதாக பஹாய்களாகிய நாம் நம்புகின்றோம். இங்கே என்ன நடைபெருகின்றது என்பதைப்பார்ப்போம். இங்கு சினை, விந்து என்ற இரு இயற்கை அம்சங்கள் உண்டு. இந்த இரு அம்சங்களின் இணைப்பின்போது கருத்தரிப்பு உண்டாகின்றது. சினை கருத்தரிக்கப்பட்ட மானிட சிசுவாக கருவாகி உருவாகின்றது. இதன் பயனாக என்ன நடக்கின்றது? அணுக்களின் ஒழுங்கு முறை அங்கே உள்ளது. அந்த ஒழுங்கு முறை ஒரு தெய்வீக நியதிக்கு ஏற்ப அமைந்திருப்பதால், அதற்கு ஈர்ப்பு சக்தி உண்டு. அது ஓர் உயிர்ப்பு சக்திக்கு ஏற்ப அமைந்திருப்பதால், அதற்கு ஈர்ப்பு சக்தி உண்டு. அது ஒர் உயிர்ப்பு சக்தியோடு தொடர்பு கொண்டுள்ளது. அந்த உயிர்ப்பு சக்தியைத்தான் நாம் மானிட உயிர்ப்பு சக்தி என்றும் மானிட ஆவி என்றும் அழைக்கின்றோம். மீண்டும் ஒரு முறை காந்த சக்தியின் கோட்பாடு இங்கே இயங்குகின்றது. பஹாய் சமயத்தின் புனித வாசகங்களைக் கற்றிடும்போது எனக்கு புரிகின்ற விளக்கம் என்ன வென்றால், காந்த சக்தி என்பது இயற்கையின் நியதிகளுக்கு மட்டுமோ, அல்லது காந்த உலோகங்கள், விதைகள், கருத்தரிக்கப்பட்ட மானிடர் ஆகிய அம்சங்களுக்கு மட்டுமோ பொருந்தும் ஒன்றல்ல. கடவுளது இறைத்தூதர்கள் கொடுத்துள்ள தெய்வீக சட்டங்களக்கும் இந்த காந்த சக்தி பொருந்தும். அதாவது, எங்கெல்லாம் தெய்வீக சட்டம் இயங்குகின்றதோ அங்கெல்லாம் இந்த காந்த சக்தி கோட்பாடு வரும். இது இயற்கைச் சட்டங்களுக்கு மட்டுமல்லாமல், கடவுளது இறைத்தூதர்களின் சட்டங்களுக்கும் பொருந்தும்.

மூன்றவது கோட்பாடு, பரிணாம் எனும் கோட்பாடு. பஹாய் புனித வாசகங்களைப்பற்றி அதிகம் தெரிந்துள்ளவர்கள் பரிணாம் எனும் கோட்பாடு பஹாய் நித்திய கோட்பாடுகளின் சாரம் என்பதை ஒப்புக்கொள்வர். அதாவது, காந்தம் என்பதை ஒரு மாபெரும் இசைவு பொருத்தத்தை, மாபெரும் ஒற்றுமையை, மாபெரும் ஒழுங்கு முறையை ஏற்படுத்தவல்ல உயிர்ப்பு சக்தியோடு தொடர்பு கொண்டுள்ளது. நமது உலோக காந்தத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்போம். அதை நாம் கீழே போடுகிறோம் காந்தம் விழுந்த இடத்திற்கு அருகே இரும்புத்துகள்ளோ அல்லது காந்த ஈர்ப்பு சக்தி கொண்ட உலோகங்களோ இருந்தால், அவை காந்த உலோகத்தின் வட, தென் துருவங்களக்கு அருகில் ஒர் ஒழுங்கு முறையிலான அமைப்புடன் பொருத்தமாக ஈர்க்கப்பட்டிருக்கும். ஒரு மாபெரும் இசைவு பொருத்தம், மாபெரும் ஒழுங்கு முறை எல்லாம் அங்கே அணிவகுத்து நிற்கும். பரிணாமம் எனும் கோட்பாட்டின் இயக்கம் அங்கே இருக்கும். உலோக காந்தத்தின் இதே கோட்பாடுகள் விதை என்ற இன்னோரு காந்தத்தில் இருப்பதைக் காணலாம். அந்த விதை என்ற காந்தத்தோடு தாவர உயிர்ப்பு சக்தி தொடர்பு கொண்டுள்ளது. நாம் அழைத்திடும் காந்தத்தில் மென்மேலும் பல அணுக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டவாறு அமைந்திருக்கின்றன. இதன் பயனாக முதலில் இளந்தளிர், பிறகு செடி, அப்புறம் மரம் உருவாகும். மென் மேலும் அணுக்கள் ஒர் இசைவு பொருத்தத்தில் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டு, அதன் பயனாக ஒற்றுமை சம்பவிக்கும். மானிட சிசு வளரும்போது இதே கோட்பாடுதான் இயங்குகின்றது. மானிட சிசு என நாம் அழைத்திடும் காந்த்ததோடு மானிட ஆவியானது பிறப்பு ஏற்படும் வரை மானிட சிசுவை மாபெரும் அளவில் வளர்த்து கொண்டே வருகின்றது. இசைவு பொருத்தம், மானிடபொருத்தம், மாபெரும் ஒற்றுமை வளர்ச்சி எல்லாம் சம்பவிக்கின்றது.

எனவே, பரினாமம் எனும் கோட்பாடு இயங்குகின்றது. இதனைத் தொட்டு பேசும்பொழுது அப்துல் பஹா அவர்கள் இப்படி குறிப்பிடுகின்றார்கள். “பரிணாம வளர்ச்சியின் போது, தனது வெளிப்படுத்துதலின் சாதனாமாக மானிட ஆவி எல்லையற்ற உபரிபாகங்களைக் கொண்ட அமைப்புக்களை அல்லது சரீரங்களை உருவாக்குகின்றது,” அப்துல் பஹா என்ன சொல்கின்றார் என்று எனக்கு என்ன படுகின்றது என்றால், பரிணாம வளர்ச்சியின் செயல்முறையின்போது, காந்தத்தின் ஒரு பகுதியான உயிர்ப்பு சக்தி, அந்த சக்தியின் வெளிப்படுத்துலுக்கான சாதனங்களையும், அமைப்புக்களையும், சரீரங்களையும் உருவாக்குகின்றது, கருநிலையிலுள்ள மானிட சிசுவோடு சம்பந்தப்பட்ட மானிட குழந்தையானது மானிட ஆவியை வெளிப் படுத்திக்காட்டும் ஓர் சாதனம் அல்லது வாகனம். இதுவே பரிணாம வளர்ச்சியின் கோட்பாடு என விளங்கிக் கொள்கின்றேன்.

இந்த மூன்று கோட்பாடுகளைப் பற்றி விளக்கிய பிறகு, அவற்றை நான் பேசப்போகும் தலைப்போடு தொடர்பு படுத்த வேண்டியதுதான் எனது வேலை. நான் பேச வேண்டிய தலைப்பு சக்திமிக்க இறைமொழி என்பதாகும். படைப்பு, காந்தசக்தி, பரிணாம் என்ற மூன்று கோட்பாடுகள் அவை. சுருக்கமாக சொன்னால், இந்த மூன்று கோட்பாடுகளும் இறைத்தூதரின் திருவெளிப்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானவை என்பது எனது கருத்தாகும். நான் ஏன் அப்படி சொல்கிறேன் எனறால், இறைத்தூதரிடமிருந்து வாருகின்ற திருவெளிப்பாடு ஒரு தெய்வீக நியதிக்கு ஏற்ப நிகழ்கின்றது என்பதுதான் காரணம். இறைத்தூதர் தமது திருவெளிப்பாட்டில் வெளியிடுகின்ற மெய்மையே தெய்வீக சட்டத்தின் வெளிப்பாடு. அது படைப்பு சக்திமிக்க சொல் என்று அழைத்திடும் இறைமொழியில் அடங்கப்பட்டுள்ளது. திருவெளிப்பாடு என்பது உயிர்ப்பு சக்தியின் மூலதாரம். ஏனெனில், அதுவே ஒரு காந்தம். அது ஏன் ஒரு காந்தம்? ஏனெனில், அது ஒரு தெய்வீக நியதியினைப் பின்பற்றுகின்றது அது ஒரு சொற்களஞ்சியம். திருவெளிப்பாட்டிலுள்ள சொற்கள் ஒரு நல்ல அகராதியில் இருக்கும். அந்த சொற்கள் வெப்ஸ்டர் அகராதியிலும் காணப்படுகின்ற வார்த்தைகள் தாம். ஆனால், திருவெளிப்பாட்டில் அவை ஒழுங்குபடுத்தப்பட்ட ஓர் அமைப்பில் உள்ளன. சாதரண அமைப்பு முறையில் இல்லாமல் இறைத்தூதர் வகுத்துள்ள ஓர் ஒழுங்கு முறையில் அவை அமைந்திருக்கும். அப்படிப்பட்ட ஒழுங்குமுறையின் காரணத்தினால்தான் அந்த சொற்களஞ்சியம் ஓர் உயிர்ப்பு சக்தியோடு தொடர்புகொண்டுள்ளது. பரிசுத்த ஆவியின் சக்தி அந்த சொற்களஞ்சியத்தோடு தொடர்பு கொண்டுள்ளது. அந்த சக்தியைத்தான் நாம் படைப்பு சக்திமிக்க இறைமொழி என்று அழைக்கின்றேம். மனித சிசு என்பது கோடிக்கணக்கான அணுக்களின் கூட்டுத்திரட்டு. அந்த அணுக்களும் சாதரண அணுக்கள்தாம். ஆனால், அந்த அணுக்கள் அமையப்பட்டுள்ளது. அதே உவமானம்தான் திருவெளிப்பாட்டிற்கும். இறைதூதரினால் வழுங்கப்படும் வார்த்தைகள் அமையும் முறை, பரிசுத்த ஆவி அவற்றுடன் தொர்பு கொள்ளும் வகையில் அமையப்படுவதால் அவற்றை படைப்பு சக்திமிக்கசொற்கள் என அழைக்கின்றேம். பஹாவுல்ல இப்படிமொழிகின்றர், “எமது திருவாயிலிருந்து வெளிவருகின்ற ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு மனித கூட்டினுள் ஒரு புதிய வாழ்வினை வழங்கவல்ல அளவுக்கு ஆற்றலைக்கொண்டுள்ளது.” இன்னொரு இடத்தில் பஹாவுல்லா அவர்கள் இறைவனுடைய புதிர்களை இறந்து விட்ட உடல்களுக்கு ஒரு புதிய வாழ்வினை வழங்கவும் உயிர்வாழ்க்கையின் அமைப்புகளுக்கு பரிசுத்த ஆவியினை வழங்கவும் போதுமானது ஒரேயொரு வார்த்தை, என்று குறிப்பிடுகின்றார். மேலுமோர் அப்துல் பஹா அவர்கள் திருவெளிப்பாடு பற்றி பேசுகின்றார். அப்படி பேசும்பொழுது அவர் திருவெளிப்பாட்டினை தெய்வீக காந்தமாக விவரிக்கின்றார். அப்துல் பஹாவின் நிருபங்கள் என்ற புத்தகத்தில் அவர், ” இறைவனின் திருவாக்கினுடைய சக்தி எனும் தெய்வீக காந்தம் இதயங்களைக் கவர்ந்து ஆத்மாக்களின் மீது பேரின்பத்தையும் உற்சாகத்தையும் வழங்கும்,” என்று கூறுகின்றார்.

திருவெளிப்பாடுபற்றிய இன்னொரு அம்சம் என்னவென்றால், அதனுள் பரிணாம வளர்ச்தியின் கோட்பாடு உள்ளடங்யிருக்கிறது என்பதுதான். திருவெளிப்பாட்டின் சக்தி வயிலாகவும், அந்த இறைமொழிகளோடு ஒன்றரக் கலந்திருக்கும் ஆவியின் வாயிலாகவும் மாபெரும் ஒற்றுமை அமைப்பயையும் நம்மைச்சுற்றியுள்ள உலகில் நாம் காண்கிறோம். இறைவனின் திருவாக்கினை குறிப்பிட்டுப் பேசும் பொழுது அப்துல் பஹா அவர்கள் இப்படி மொழிகின்றார். “இறைவனின் திருவாக்கின்பால்தான் சகல மானிடமும் திரும்பவேண்டும். மானிட முழுவதிற்கும் அது ஒற்றுமையின் மையமாகும். அது மனித இனத்தின் ஒருமைப் பாட்டிற்கு கூட்டு மையம், இதயங்களை இணைப்பதற்கும், தொடர்புறச் செய்வதற்கும் அது நித்திய வாழ்வின் மூலாதாரம், எனவே இங்குதான் நாம் இறைத்தூதரின் சுவடுகளைக் காண்கின்றோம். அவரது உடல் மண்ணில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மானிட உடல் வடிவில் அவர் இப்போது நம்மிடையே இல்லை. இறைத்தூதரோடு நாம் பிராத்தனைகள் வழியாகவும், தியானத்தின் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். விண்ணுலகிற்கும் இறைதூதர் சிறகடித்து பறந்து சென்றுவிட்ட பிறகு, இவ்வுலகில் அவரது சுவடுகளை நாம் அவர்தம் திருவெளிப்பாட்டில்தான் காணமுடியும். நமது இதயங்களை இறைதூதரின் வார்த்தைகளின்பால் திறப்பதின்வழி, தியான நிலையில் நம்மை நாம் திருவெளிப்பாட்டிற்கு சரணடையச் செய்வதன் வழி, அந்த திரு ஆவியோடு நாம் தொடர்புகொள்கின்றோம். ஆவியினைக் கவர்ந்திழுக்கும் காந்தமாக நாமும் மாறிவிடுகின்றோம், பரிணாம வளர்ச்சியின் செயல்பாட்டின் ஒரு பகுதியாக நாம் ஆகிவிடுகின்றோம். “மனித இனத்தின் ஒருமைப்பாடு நிலைநாட்டப்பட்டு இணக்கமும், தொடர்பும் நிகழ்ந்தேறும்,” என அப்துல் பஹா கூறியுள்ளதற்கு நாம் வாகனமாக ஆகின்றோம். அந்த எல்லா கொட்பாடுகளுக்கும் முக்கியத்துவங்கள் உண்டு. உதாரணமாக, நாம் முழுதாக அடிப்படையிலே இறைவார்த்தைகளை பிரித்து உயர்த்திப்பார்க்க வேணண்டும். மானிட வார்த்தைகள் தெய்வீக வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன என்றும், மானிட வார்த்தைகள் ஒரு தேய்விக அமைப்பு முறையினை பின் பற்றுகின்றன என்றும் யார் கோரிக்கொள்ள முடியும்? முடியாது. ஏனெனில், இறைவனின் திருவாக்கு என்பது ஓர் ஆன்மீக காந்தத்தோடு தொடர்புகொண்டுள்ளது. இதன் பொருள் யாதெனில், இறைதூதரது வார்த்தைகளை நாம் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும். அவற்றை புனிதமானதாகவும், பரிசுத்தமிக்கதாகவும், மரியாதைக்குரியதாகவும் பயபக்திக்குரியதாகாவும் கருதவேண்டும். ஏனெனில், இவ்வார்த்தைகள்,சாதாரண காகிதத்தாளில், சாதாரண அகரர்யில் காணப்படும் அதே சொற்கள் இங்கே இறைதூதரின் இறைமொழியாக ஓர் அமைப்பு முறையில் விளங்குகின்றது. அவற்றில் ஒரு மாபெரும் ஆன்மீக சக்தி தொடர்பு கொண்டுள்ளது. அறிவுக்காக மட்டும் திருவெளிப்பாட்டின்பால் நாம் திரும்ப்கூடாது உற்சாகத்திற்காகவும் நாம் அதன்பால் திரும்பவேண்டும். அறிவுக்காக ஒருவர் சில நேரங்களில் பஹாவுல்லாவின் நூல்களின்பால் திரும்பக்கூடும். வாழ்க்கைப்பற்றியும், இறப்புபற்றியும், ஆண் பெண்சமத்துவம் பற்றியும், இவ்வுலகின் எதிர்கால நிலைமை பற்றியும் பஹாவுல்லா என்ன சொல்கின்றார் என அறிவதற்காக ஒருவர் சமய நூல்களைப் படிக்கக்கூடும் ஆனால், நாம் சக்திக்காகவும், ஆன்மீக வாழ்வுக்காகவும் திருவெளிப்பாட்டு நூல்களின்பால் திரும்புவதுண்டு. தனிப்பட்டு களையிழந்து இருக்கும் நேரங்களிலும், உற்சாகமிழந்து, துணிவிழந்து இருக்கும் நேரங்களிலும் திருவெளிப்பாட்டின் நூல்களின்பால் நாம் திரும்புவதுண்டு. அத்தகைய நேரங்களில் நாம் அறிவுக்காக அந்தநூல்களை திறக்காமல் அவற்றில் உளளடங்கியுள்ள உயிர்ப்பு சக்திகாகவும் நாம் திருவெளிப்பாட்டின்பால் திரும்பவதுண்டு. அத்தகைய நேரங்களில் புனிதவாசங்காளாக இருந்தாலும் சரி, பிரார்த்தனைகளாக இருந்தாலும் சரி, ஏழுபள்ளத்தாக்குகள் என்ற நூலாக இருந்தாலும் சரி, மறைமொழிகளாக இருந்தாலும் சரி, அல்லது பஹாவுல்லாவின் வேறெந்த நூலாக இருந்தாலும் சரி, அவை மனதிற்கு மனநிறைவையும், ஆறுதலையும் அளிப்பதாகத்தான் இருக்கும். ஏனெனில், இந்த புனித வார்த்தைகளின் பஹாவுல்லாவின் உயிர்ப்பு சக்தி ஒளிர்கின்றது அவற்றின்பால் நமது இதயம் கவர்ந்திழுக்கப்படுகின்றது.

நம்மில் சிலர் ஆர்வலர்களுக்கு திருவெளிப்பாட்டை அறிமுகம் செய்து வைக்க புதிய உத்திகளை கடைப்பிடிப்போம். ஆஸ்திரேலியாவிலும் பஸிபிக் தீவுகளிலும் மக்கள் எவ்வாறு திருவெளிப்பாட்டின் சக்தியினால் மட்டுமே சமயத்தின்பால் கவரப்பட்டனர் என்பதுபற்றி பல உதாரணங்களை போதிய நேரமிருந்தாலும் உங்களோடு பகிர்ந்து கொள்வேன், பீஜி நாட்டில் முதல் பஹாய் நம்பிக்கையாளர் எப்படி சமயத்தின்பால் ஈர்க்கப்பட்டார் என்பதை எனக்கு ஞாபகமிருக்கின்றது. 1950-இல் அல்லது 1951-இல், பீஜி நாட்டின் சுவா என்ற இடத்தில் எப்படி ஒரு முன்னோடி போனார், சுவா தகவல் ஒளிபரப்புக் கழகத்தில் எப்படி வேலை வாய்ப்பு பெற்றார், எப்படி எப்படி மக்களிடம் நட்புகொண்டு பழகலானார், ஆர்வமுள்ளவர்களுக்கு எப்படி சமயத்தைப்பற்றி எடுத்துச்சொல்ல ஆரம்பித்தார் என்பதையெல்லாம் நான் நினைவில் வைத்துள்ளேன். அந்த முன்னோடி வேலை செய்த தகவல் ஒலிபரப்புக் கழகத்தில் உள்ள சக தொழிலாழி சமயத்தில் ஆர்வம் காட்டினாராம். அக்காலத்தில் உள்ள பஹாய் சமயத்துண்டு பிரசுரங்கள் சிலவற்றையும், பஹாய் சமயத்தைப் பற்றி விளக்கும் கட்டுரைகளையும் அந்த முன்னோடி கொடுத்தாராம். அவர் அந்த கட்டுரைகளையும் துண்டுப் பிரசுரங்களையும் படித்தாலும் கூட அவர் சமயத்தின்பால் கவரப்படவில்லையாம். ஒரு நாள் முன்னோடி தாம் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு புனித வாசகத் தொகுப்பு நூலை கொண்டு வந்து தமது மேஜை மேல் வைத்திருந்தாரம் அங்கு வந்த அவரது நண்பர் அப்புத்தகத்தை திறந்து ஒரு சில வரிகளைப்படடித்து விட்டு “இதை நான் எடுத்துச் சென்று கண்டிப்பாக படிக்க வேண்டும். நான் இதைக் கொண்டு செல்லலாமா? “என்று கேட்டாராம். அந்த முன்னோடியும் “சரி” என்று அனுமதிக்கவே, அந்த நண்பரும் அப்புத்தகத்தை எடுத்த சென்றார். மறுநாள் புத்தகத்தைக் கொண்டு வந்து “நான் நம்புகிறேன், இப்பொழுது இது என் இதயத்தில் இருக்கிறன்றது” எனறாராம். இப்படிப்பட்டதுதான் திருவெளிப்பாட்டின் சக்தி. திருவெளிப்பாட்டடின் சக்தி பற்றிய உதாரணங்களில் இது ஒன்று. சமயத்தை சமய ஆர்வலர்களுக்கு போதிக்கும் போது திருவெளிப்பாட்டின் சக்தி பற்றிய கதைகள் பற்றி இங்கு குழுமியிருக்கும் நண்பர்கள் எத்தனையோ அநுபவங்களை சந்தித்திருப்பீர்கள். கடந்த ஆண்டின்போது ஆஸ்திரேலியாவில் (ஐக்கிய அமெரிக்காவில் கூட அது போன்று இருக்கக்கூடும்) சமயத்தைப் பொதிப்பதில் நமது அணுகுமுறை மாற்றப்பட்டுள்ளது. கடந்த வருடத்திற்கு முன்பதாக ஆஸ்திரேலியாவில் சமயத்தைப் போதித்தலில் நமது அணுகுமுறை பல வழிகளில் வழக்கமான ஒன்றாகத்தான் இருந்துவந்துள்ளது. அப்பொழுதெல்லாம் நாம் சமயத்தைப் போதிக்கும்பொழுது பஹாய் சமயத்தின் உலகளாவிய கோட்படுகள், உலக ஒற்றுமை, உலக உணர்வு, சமயங்களின் இணக்கம் விஞ்ஞானத்திற்கும் சமயத்திற்கும் இடையே இணக்கம், ஆண்பெண் சமத்துவம் மற்றும் இதர பொது விஷயங்கள் பற்றிதான் பேசுவோம். இத்தகைய உலகளாவிய கோட்பாடுகள் வழி மக்கள் பஹாய் சமயத்தை ஆய்வு செய்யவும், அதைப்பற்றி அக்கறையோடு எடைபோடவும் அவர்களை கவர்ந்திடுவோம். படிப்படியாக அவர்களும் இறைதூதரின் ஸ்தானத்தைப்பற்றி கேள்வி எழுப்பி, அவர்மீது நம்பிக்கைக்கொள்பவர்கள் சமயத்தை ஏற்று தாங்களும் ஒரு நம்பிக்கையாளர் என பதிவு செய்து கொள்வர். கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நமது அணுகுமுறையும் முழுதாக மாறியுள்ளதுதான் நமக்குக் கிடைத்துள்ள வெற்றி. நாம் எப்படி அதை மாற்றினோம்? அது இப்படித்தான். ஆஸதிரேலியா என்பது இப்பொழுதெல்லாம் பொருள்வளமிக்க செல்வ செழிப்பு மிக்க ஒரு நாடு. சொல்வவளமிக்க, நகர்புற, நாகரிகமிக்க, கல்விகற்ற மக்களுக்கிடையே ஒர் ஆத்மீக பசி ஏற்பட்டுள்ளதை உனர்ந்துள்ளோம். அது ஓர் மாபெரும் ஆத்மீக தாகம். எனவே, இந்த சூழ்நிலைக்கு நமது அணுகுமுறை இப்பொழுது மாறுபட வேண்டாம்.

நாம் சர்வ சாதரணமாக சமயத்தைப்பற்றி ஒருவரிடம் பேசுவோம். மிக விரைவில் நாங்கள் அவருக்கு பஹாவுல்லாவின் ஆக்கசக்கமிக்க வார்த்தைகளை அறிமுகப்படுத்துவோம். ஒரு வருடத்திற்கு முன்பு விவேகமற்றது அவசரமிக்கது என நான் எதை கருதுவேனோ அதை அவருக்கு எடுத்துச் சொல்வோம். சமயத்தில் ஆர்வம் காட்டும் அந்த நபருக்கு நாங்கள் முதலில் கொடுக்கும் பத்தகங்களில் ஒன்று ஏழுபள்ளத்தாக்குகள் என்ற நூல்தான். இதைக்கண்டிப்பாக ஒவ்வொருவரும் செய்யவேண்டும் என்று நான் சொல்லவில்லை. எனெனில், ஒவ்வொரு மனிதரும் மாறுபாடு மிக்கவர்தான். ஒருவருக்கு பொருத்தமில்லாத ஒன்றாக இருக்கும். ஒருவருடத்திற்கு முன்பு அதை நான் விவேகமற்றது என கருதினேனோ அது இந்த செயல்தான். இது மிகப்பொருத்தமான செயல்தானா என இவரும் என்னைக் கேட்டால், நான் “மிக ஆபூர்வமாக” என பதிலளிப்பேன். ஏனெனில், அந்த நூலின் ஆரம்பத்தில் முதல் இரண்டு பக்கங்களில் அகமது, மாமூட், முகமது என்றும், குர்-ஆன் மேற்கோள்களும் உள்ளன. சில சமூக பேதங்கள் கொண்ட சராசரி மேற்கத்திய நண்பருக்கு இதெல்லாம் பொருத்தமில்லாத விஷயங்கள். மூன்றாவது அல்லது நான்காவது பள்ளத்தாக்கிற்கு அந்நபர் சென்றால் கேட்கவே வேண்டாம் அவர் குழம்பிவிடுவார். என்ன நடக்கின்றது என்பது அவருக்கே தெரியாது. எதுவும் புரியாது. அத்தகைய தகவல் ஒரு நபரை துரத்திவிடும். இப்படித்தான் நாம் நம்பிக்கொண்டிருந்தோம். இருந்தாலும், உண்மையில் இது உண்மை நிலையல்ல. நாம் சந்திக்கும் பெரும்பாலான மக்களுக்கு அக்கசக்திமிக்க திருமொழியினை அறிமுகப்படுத்தி, அதன் ஆவி அவர்களை ஓளிரச்செய்து அந்த ஆன்மீகப் பசியினை உரசட்டும் என்பதில் குறியாய் இருப்போம். தங்களுக்கு அந்த ஆன்மீகப் பசி உண்டென்பதை பெரும்பாலோர் ஒத்துக்கொள்வதில்லை, இப்படி அவர்களிடம் பேசும்பொழுது நாம் அவர்களிடம், “உங்களிடம் ஒரு மாபெரும் ஆன்மீக பசி உள்ளதை நான் உணருகின்றேன்,” என குறிப்பிடுவோம். அதற்கு, அவர்கள், “அது உண்மையல்ல, நான் கடவுளை நம்புவதில்லை. ஆன்மீக ஆற்றல்களையோ நான் நம்புவதில்லை. இதுபொன்ற விஷயங்களெல்லாம் பழமையானவை, அறையெல்லாம் மனநிலை விவாகாரம்” என்பார். இருப்பினும், பஹாய் போதனைகள் நமக்கு வழங்கிடும் கட்டொழுங்கின் உணர்வினால் அந்த ஆன்மீகப் பசியினை நாம் உணரமுடியும். கேட்கப்படாத அந்த கேள்வியினை நாம் எடுத்துரைக்க முடியும். தேடுபவரின் இதயத்தினுள்ளே இருக்கும் சொல்லப்படாத அந்த தேவையை நம்மால் எடுத்துரைக்க முடியும்.

நான் எனது தலைப்பின் இன்னொரு அம்சத்தைப்பற்றி பேசப்போகிறேன். அது திருவெளிப்பாட்டை புரிந்துகொள்ளுதலைப்பற்றியது. திருவெளிப்பாடு என்பது நாம் அனுபவப்படுகின்ற எல்லா விஷயங்களிலிருநஙதும் முற்றக மாறுபட்டது என்பதைத்தான் நான் சற்றுமுன்பு சொன்னேன். அதில் ஒரு தந்திரமான தன்மை உண்டு. அந்த தந்திரத்தன்மை என்னவென்றால் அந்த திருவெளிப்பாட்டின் வார்த்தைகள் சாதரணமாகத்தான் அச்சிடப்பட்டுள்ளன. மிகச்சாதாரண வகையில் தொகுக்கப்பட்டுள்ளன. பை பில் திருநூலின் புனித மத்தேயு சுவிசேசக்திற்கு ஏற்ப தமது வருகை குறித்து கோடிகாட்டியுள்ள மேகங்கள் இவைதான். தனிநபருக்கும் மெய்யான புரிந்துகொள்ளுதலுக்கும் இடையே மேகங்கள் என ஏசுநாதர் சொல்லியுள்ளார். திருவெளிப்பாடு மனிதர்களுடைய வார்த்தைகள் போன்றுதான் தோன்றும், மனிதர்களுடைய பேச்சுமொழியில்தான் இறைமொழிகள் வெளிப்படும் என்பதுதான் அந்த மேகம். இத்தகைய மேகங்களை யெல்லாம் ஊடுருவி அந்த மெய்யான திருவெளிப்பாட்டை கண்ணுறுவதுதான் நமது சாவல்களில் ஒன்று. அதனை நாம் அணுகிடும் முறையில் ஒரு மாபெரும் வேறுபாடு எழுகின்றது.

இங்கு அந்த மூன்று கோட்பாடுகள் சம்பந்தப்படுவதாக எனக்கு தோன்றுகின்றது. முதலாவது, திருவெளிப்பாட்டைப் புரிந்து கொள்ளல் என்பது எல்லையற்றது, முடிவற்றது என்பதைத்தான் பொதனைகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. எந்தவொரு வேளையிலும் நாம் “நான் பஹாவுல்லாவினுடைய இந்த நூலை கற்று தேர்ந்துவிட்டேன். மறைமொழிகள், கித்தாப்-இ-இகான் அல்லது பஹாவுல்லாவின் மற்ற சில நூல்களைப் பற்றி எனக்கு இப்பொழுது முழுதாக புரிகின்றது,” என்று கூறிவிடவே முடியாது. புரிந்து கொள்ளுதல் என்பது எல்லையற்றது, பஹாவுல்லாவே இப்படி கூறுகின்றார். “கடவுளது (அவரது மகிமை உயர்த்தப்படுவதாக) திருவாக்கு சதாகாலமும் நீடித்திருக்கும் என நீங்கள் நம்புவதைப்போன்று, அதன் அர்த்தம் முடிந்துவிடாது என்பதையும் நீங்கள் சந்தேகமற்ற விசுவாசத்துடன் கண்டிப்பாக நம்பிவிடவேண்டும்,” இக்கூற்று நமக்கு மிகமுக்கியமான அம்சத்தை எடுத்துச் சொல்கின்றது. அதாவது, திருவெளிப்பாட்டை நாம் கற்பது ஒரு முடிவுக்கு வராது. நாம் வாழ்நாள் முழுவதுவே அக்கல்வியில் நாம் இன்பம் துய்க்கலாம். திருவெளிப்பாடு நமக்கு வழங்கவிருக்கும் விவேகத்தை நாம் பெறுகின்றோம். ஆதியில் எனது பின்னனி இஸ்லாம், பிற்காலத்தில் இஸ்லாமிய பாரம்பரியம் வீழ்ச்சியுற்றுவிட்டாலும், எனக்கு தூய்மையான ஆதிகால இஸ்லாமிய பாரம்பரியம் தெரியும். அன்றைய காலத்தின் பற்றுறுதிமிக்க நம்பிக்கையாளர்கள் எவ்வாறு திருக்குர்-ஆன் புனித நூலிலிருந்து தங்களது வாழ்வுக்கான ஆற்றலைப் பெற்றனர் என்பதையும் உணர்ந்துள்ளேன். அந்த புனித நூலை அவர்கள் சிறுபிள்ளைகளாய் இருக்கும்போதும், இளைஞராய் இருக்கும்போதும், முதியவராய் இருக்கும்போதும், அடுத்த உலகிற்கு தங்களை தயராக்கிக்கொள்கின்ற வயதான காலத்திலும் படிப்பார்கள். அத்திருநூலைப்பற்றிய தங்களது புரிந்துகொள்ளுதல் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என அவர்கள் கருதவேமாட்டார்கள். அதுபோன்றுதான், பொற்காலத்தை நோக்கி மலர்ச்சியுடன் முனனோக்கி நடைபோடும் பஹாய் சமயகாலகட்டத்திலும். நாம் பெற்றிருக்கும் புனித நூல்களை வாழையடிவாழையாக, தலைமுறையாக, நாளுக்கு நாள், வாரத்திற்கு வாரம், மாதத்திற்கு மாதம், வருடத்திற்கு வருடம், தாங்கள் முழதும் வாசித்துக்கொண்டேயிருப்பார்கள். எந்தவொரு கட்டத்திலும் அவர்கள், “புனித நூல் கற்பது முடிந்துவிட்டது, ஒரு முடிவுக்கு வந்து விட்டது” என்று சொல்லவே மாட்டார்கள். ஏனெனில், திருவெளிப்பாட்டை புரிந்து கொள்ளல் என்பது உண்மையில் எல்லையற்றதாகும். இந்த ஓர் அம்சம்தான் திருவெளிப்பாட்டினை மனிதர்களது வார்த்தைகளிலிருந்து வேறுபடுத்தி உயர்த்திக் காண்பிக்கின்றது.

இன்னொரு அம்சம் என்னவென்றால், திருவெளிப்பாடு பற்றிய ஆழமான அறிவு பெறுவதற்கு பிரதான தேவை ஆன்மீக அடிப்படையே அன்றி ஏட்டுப்படிப்பல்ல, தமது வார்த்தைகளை புரிந்துகொள்வதும், விண்ணுலகக் குயில்களின் திருமொழியினைவிளங்கிக்கொள்வதும் மானிட கல்வியை அடிப்படையாகக் கொண்டதல்ல என பஹாவுல்லா கூறுகிறார். அது உள்ளத்தூய்மை, ஆத்மாவின் புனிதம், ஆவியின் சுதந்திரத் தன்மை ஆகியவற்றை பிரதான அடிப்படைகளாகக் கொண்டது. இது மிக முக்கியமான அம்சம். அதனைப் பற்றி பிறகு மீண்டும் சொல்கிறேன்.
பஹாய்க் கல்விப்புலமை பற்றி நான் ஓரிரு வாத்தைகள் சொல்ல விரும்புகிறேன். பஹாய்களாகிய நாம் மானிடக் கல்விக்கு எதிரனவர்கள் அல்ல. திருவெளிப்பாடுபற்றிய நமது புரிந்துகொள்ளுதலோடு மானிடக் கல்வி தொடர்புகொள்வதை நாம் காணலாம். ஆனாலும், திருவெளிப்பாடு பற்றிய ஓர் ஆழ்நிலை கல்விக்கு, அதனைப்பற்றிய ஒர் ஆழமான புரிந்து கொள்ளுதலுக்கு ஒருவரது ஏட்டுக் கல்வித் தகுதி பிரதான அடிப்படைத் தேவையாகாது. திருவெளிப்பாடு பற்றி ஆழமாக தெரிந்து கொள்ளுதல் என்பது நமது எந்த விதமான ஏட்டுக்கல்வி பாண்டித்யத்தையும் பொறுத்தது அல்ல. ஒருவர் எழுத்துப்படிப்பு வாசனையே இல்லாமலிருக்கலாம். ஆனால் அப்படியிருந்தும்கூட அவருக்கு திருவெளிப்பாடுபற்றி ஆழமான புலமை இருக்கும். ஏட்டுக்கல்வியற்ற எத்தனையோ நம்பிக்கையாளர்கள், தங்களது இதயங்களைத் தூய்மைப்படுத்தி, தங்களது உயிர்ப்பு ஆவியினை பரிசுத்தப்படுத்தி, கனல்மிகுந்த ஆவலுடனும், பக்தியுடனும், பணிவுநிலையிலும், கடவுளின்பால் வழிகாட்டலுக்காகவும், உதவிக்காகவும் பிரார்த்தித்து அதன் வழி அவர்கள் மாபெரும் விவேகத்தையும், மாபெரும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுள்ளனர். இப்படி பல உதாரணங்கள் உண்டு. இங்கு முக்கியமான கருத்து என்னவென்றால், எவரும் திருவெளிப்பாடுபற்றிய புரிந்துகொள்ளலைப் பெறலாம். ஏனெனில், படிப்பறிவு இல்லாதவரும் சரி, எமுதப்படிக்கத் தெரிந்தவரும் சரி, கல்வி பெற்றவரும் சரி, கல்வியறிவு இல்லாதவரும் சரி, ஒவ்வொருவரின் மானிட ஆவியிலும், திருவெளிப்பாட்டில் உள்ள ஞான முத்துக்களை கண்டுணரக்கூடிய, மாபெரும் உண்மைகளை பகுத்துணரக்கூடிய ஆற்றல் உண்டு. எனவே, எவரும் திருவெளிப்பாடு பற்றிய கல்வி எனக்கு இல்லை என சொல்லிவிட முடியாது. இது முக்கியமான விஷயம். இந்த சமயக் காலகட்டத்தில் இதனை நாம் பாதுகாத்து, தூய்மையாக மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். அதனால், அது எதிர்கால தலைமுறைளுக்கு விவேகத்தின் பொக்கிஷமாக அமைவது மட்டுமின்றி, யாவரும் திருவெளிப்பாட்டை மனிதர்களுடைய வார்த்தைகளிலிருந்து வேறுபடுத்தி சரியான பாதையில் அணுகுவர்.
கற்றல் என்ற பதத்திற்கு பஹாய்களாகியா நாம் விளக்கம் கொடுக்கும்போது நமது விளக்கம் திருவெளிப்பாட்டோடு சம்பந்தப்படிருக்கும். அவ்விளக்கம் சாதாரண வழக்கமான விளக்கத்திலிருந்து மாறுபட்டிருக்கும். கற்றல் என்ற வார்த்தையை நாம் வேறுவகையில் விளக்கப்படுத்தியுள்ளோம். அந்த விளக்கம்பற்றி சொல்லும்போது முதலில் பஹாவுல்லாவின் வார்த்தைகளை உங்களுளோடு நான் பகிர்ந்துகொள்கின்றேன். “இறைத்தூதைரை ஏற்றுக்கொள்ளத் தவறும் ஒரு மனிதன், எல்லைக்குப்பட்ட மானிட அறிவைப் பெறுவதில் பல காலங்களை செலவழித்திருப்பினும், எங்கனம் அவனை நீதியுடன் கற்றறிந்தவன் என அழைத்திட முடியும்?” மேலும் அவர் தொடர்ந்து சொல்கின்றார் இப்படி “எல்லா மனிதர்களிடையேயும் எழுத்துவாசனையற்ற ஒரு மனிதன் இந்த ஓர் உயரியநிலையை பெற்றிருப்பின், அவன் மெய்யாகவே கடவுளது அறிவைப் பெற்றிருக்கும் இக்கற்றறிந்த மனிதர்களில் ஒருவன் எனக் கருதப்படுவான்.” எனவே, அளவுகோள் வித்தியாசமானது. கற்றறிந்தவர் என்பது பற்றிய நமது கருத்து, மெய்யான அறிவின், அதாவது இக்காலகட்டத்தில் பஹாவுல்லாவின் திருவெளிப்பாட்டோடு தொடர்புகொள்வதிலிருந்து வருகின்றது. இதற்கு திருவெளிப்பாட்டை ஏற்றுக்கொள்ளும் ஒரு மனிதர், அந்த திருவெளிப்பாட்டிற்கு தமது இதயத்தைத் திறக்கும் ஒருவர் அவர் படித்தவரோ, எழுதப் படிக்கத் தெரியாதவரோ, உலக வழக்கத்தில் கல்வியறிவு பெற்றவரோ அல்லது கல்வியறிவு பெறாதவரோ, அவர் மெய்யாகவே கற்றறிந்தவர். மெய்யான கற்றறிதல் என்பது நமக்கு இவ்வாறுதான் விளக்கப்படுத்தப் பட்டுள்ளது.

நான் ஒரு விஷயத்தைப்பற்றி ஒருசில வார்த்தைகள் பேசவிரும்புகின்றேன். பஹாய் சமய சொற்களஞ்சியத்தில் அந்த விஷயம் கடந்த சில வருடங்களில் ஒரு பகுதியாக மாறிவிட்டது. பஹாய் கல்விப்புலமை என்பதுதான் அந்த சொற்பகுதி. பல பஹாய் நூல்களில் இவ்வார்த்தை பயன்படுத்தப்படுவதை நீங்கள் காணலாம். உலக நீதிமன்றத்திலிருந்து வரும் செய்தியில் பஹாய் கல்விப்பலமை குறிப்பிடப்பட்டுள்ளது. உலக நீதிமன்றத்தின் வழிக்காட்டலின் கீழ் சில பஹாய் ஸ்தாபனங்கள் இந்த விஷயத்தை மேற்கொன்டுள்ளன. பஹாய்க் கல்விப் புலமையை மேம்படுத்துவதற்காக உலக நீதிமன்றம் அண்மையில் அனைத்துலக போதனை நிலையத்தை உலகெங்கிலுமுள்ள ஆலோசகர்களிடம் பஹாய்க் கல்விப்புலமையை மேம்படுத்திடும் கூடுதல் பொருப்பினை வழங்குமாறு பணித்தது. எனவே, இந்த காரணத்திற்காகத்தான் நான் அதுபற்றி ஒருசில வார்த்தைகள் பேசவிரும்புகின்றேன். அது எவ்வாறு பஹாவுல்லாவின் திருவெளிப்பாட்டோடு தொடர்பு கொண்டுள்ளது என்பதைப் பற்றியும் நான் எனது கருத்தினை கூறவிரும்புகின்றேன். நான் என்ன புரிந்துகொள்கின்றேன் என்றால், அது சம்பந்தமாக “தேசிய பஹாய் மறுசீராய்வு” என்ற சஞ்சிகையின் 1979-ஆம் ஆண்டில் ஜுன் மாத இதழில் பிரசுரமான மிக ஒளிமயமான ஒரு கட்டுரையில் விளக்கப்படுத்தப்பட்டுள்ளது. அந்த விளக்க அறிக்கை உலக நீதிமண்றத்தின் ஆராய்ச்சித் துறையினால் வெளியிடப்பட்டதாகும். இரண்டு பக்கங்கள் நீளமான அக்கட்டுரையில் இந்த வாக்கியம் காணப்படுகின்றது. ” சமயத்திற்கும் விஞ்ஞானத்திற்குமிடையேயுள்ள இணக்கம் என்பது சமய போதனைகளை தர்க்கரீதியாகவும், ஆதாரப் பூர்வமாகவும் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் கற்க வேண்டு மென்பது மட்டுமல்ல. அவற்றோடு சேர்த்து படைப்பில் உள்ள யாவற்றையும், மானிட வாழ்வின் சகல அமசங்களையும், அறிவையும், தர்க்கரீதியாகவும், திருவெளிப்பாட்டின் கண்கொண்டும் கற்றல் வேண்டும். ” அதை நான் எளிமையாகப் பிரித்துச் சொல்கிறேன். அந்த வாக்கியம் என்ன சொல்கின்றது என்றால் நம் சமயத்தில் சமயமும் விஞ்ஞானமும் ஒத்து இயங்குதல் என்றால் சமய போதனைகளை நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் மட்டும் கற்பது அல்ல. அதோடு சேர்த்து தர்க்க ரீதியாகவும், ஆதாரப் பூர்வமாவும் கற்க வேண்டும். இது அந்த வாக்கியத்தில் ஒரு பாதி. அதில் மறுபாதி என்னவென்றால் படைப்பில் உள்ள வாழ்வில் உள்ள, மானிட அறிவில் உள்ள யாவற்றையும்நாம் பகுத்தறிவோடும் திருவெளிப்பாட்டின் கண்கொண்டும் கற்க வேண்டும். வேறொருவகையில் சொல்வதென்றால், திருவெளிப்பாட்டினைப் பகுத்தறிவு கொண்டும் நாம் கற்கவேண்டும் நம்பிக்கை மற்றும் தியானத்தோடும் நாம் கற்க வேண்டும். அதோடு பகுத்தறிவு கொண்டு கற்கப்படும் விஞ்ஞானம், முகவியல் விஞ்ஞானம் முதலிய துறைகளிலுள்ள அம்சங்களைப் திருவெளிப்பாட்டின் துனைக்கொண்டு கற்க வேண்டும். பஹாய் கல்விப்புலமை எனபது இந்த இரு அம்சங்களையும் கொண்டது என்றுதான் நான் நினைக்கின்றேன்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் அம்சம் போதனைகளை தர்க்க ரீதியாகவும், ஆதாரப்பூர்வமாகவும் கற்க வேண்டும் என்பதுதான். இது சம்பந்தமாக பாதுகாவலரது எழத்துக்களில் காணலாம். அதில் ஒன்றிரண்டை நான் படிக்கின்றேன். ஒன்றில் அவர் கூறுகின்றார், “கல்வியின் பல கூறுகளை கற்பதானது ஒருவரது அபிப்பிராயத்தை விரிவடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. பிறகு பஹாய் இயக்கம் மற்றும் அதன் கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை நம்மால் மேலும் புரிந்துகொண்டு உணரமுடியும்”. வேறொரு வகையில் சொல்வதென்றால் மாணிட கல்வியின் பல்வேறு கூறுகளை கற்பதினால் நாம் சமயபோதனைகளைப் பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்ள முடியும். இது பஹாய் கல்விப்புலைமயின் மீதி அம்சம். இன்னொரு இடத்தில் பாதுகாவாலர் தமது செயலாளர்வழி இப்படி எழதுகின்றார், “இளம் வயதினர் சரித்திரம், பொருளாதாரம், சமுகவியல் மற்றும் இதரகல்விகளை ஆழமாக கற்றிட பாதுகாவலர் எப்போதுமே அறிவுறுத்தியுள்ளார். அது எல்லைக்குட்பட்ட பட்டியல் அல்ல. அதனால் நாம் திருவெளிப்பாட்டினைப் புரிந்துகொள்ள புதிய கோணங்களைப் பெறுகின்றோம்,” இதற்கு நேர்மாறான நடைமுறையும் உண்டு. நேர்மாறான நடை என்னவென்றால் திருவெளிப்பாட்டின் சக்தியின் வாயிலாகவும், ஒளியின் வாயிலாகவும் மானிட அறிவின் பலகூறுகளை கற்பதுதான். பாதுகாவலர் மோலும் கூறகிறார் இப்படி, “சரித்திரம் பொருளாதாரம் சமுகவியல் முதலிய துறைகள் வழங்கும் அறிவுகள் மீது நமது போதனைகள் புதிய ஒளியினை பாய்ச்சமுடியும்”. இது நான் சற்றுமுன்பு படித்தவாக்கியத்திற்கு நேர்மாறான விஷயம் என்பதை கவனியுங்கள். நான் முதலில் படித்த வாக்கியம் என்ன சொல்கின்றது என்றால், நாம் சரித்திரம், பொருளாதாரம் சமுகவியல் முதலிவற்றை படிக்கவேண்டும். ஏனென்றால் அவை பஹாய் போதனைகளைப் புதிய கோணத்தில் புரியவைக்கின்றன. நான் இப்பொழது படித்த வாக்கியம் என்ன சொல்கின்றது என்றால் நாம் அந்தப் பாடங்களை படிக்க வேன்டும். ஏனெறால், நமது போதனைகள் அவற்றின் மீது புதிய ஒளியினை பாய்ச்சுகின்றது. இதன் பொருள் என்ன வென்றால் பாதுகாவலர் இங்கே ஒத்து இயங்கும் ஒருபொது உறவை விவரிக்கின்றார். ஏனெனில், மானிட அறிவு என்ற உலக கல்வியும் திருவெளிப்பாட்டு அறிவும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. மானிட கல்வியான சரித்திரம், பொருளாதாரம், சமுகவியல் மற்றும் இதர பாடங்களைக் கற்பதன் வழி பஹாய் போதனைகளை புதிய கோணத்தில் புரிந்துகொள்ளலாம். அதுபோல பஹாய்ப் போதனைகள் வழி கொண்டு மானிட கல்வியைப் புதிய கோனத்தில் புரிந்து கொள்ளலாம். எனவே கல்விக்கும் திருவெளிப்பாட்டுக் கல்விக்கும் இங்கே ஓர் இணக்கம் உண்டு.

சரித்திரத்தில் கற்றுக்குட்டியாக இருக்கும் எனக்கு இந்த வாக்கியம் பெரிதும் மன நிறைவளிக்கின்றது. ஏனெனில், பல்வேறு சமய காலக்கட்டங்களின் இரண்டாம் நூற்றான்டில் அறிவார்ந்த நிலைக்கு எதிர்ப்பு இருந்தது. கிறிஸ்துவ சமயத்தின் இரண்டாம் நூற்றண்டு காலத்தில் நிலவிய அறிவுப்பூர்வமான கல்விக்கு இருந்துள்ள எதிர்ப்பை நீங்கள் கவனித்தால், இஸ்லாம் சமத்தின் இரண்டாவது நூற்றாண்டில் இருந்த நிலையினை நீங்கள் கவனித்தால், ஒரு நிலைக்கு சமயம் பரவியதுடன் சமயம் ஏளனத்திற்கும், கொடுமைக்கும் உள்ளானது. அறிவுப்பூர்வ நிலைக்கு எதிரியாக விளங்கிய சமயவர்கள் ” தேவையான எல்லா அறிவும் எங்களுக்கு உண்டு. இதற்கு வெளியே உள்ள அறிவில் எங்களுக்கு அக்கறையில்லை ” என்று சொன்னார்கள். மிதமிஞ்சிய நிலையில் அவர்கள், “அது சாத்தானின் உலகம். எங்களுக்கு திருக்குர்-ஆன் போதும், எங்களுக்கு ஏசுநாதரின் திவ்விய மொழிகள் உண்டு. அவரது மருவருகையின் வாக்குறுதியும் உண்டு, அது போதும்” என்று சொன்னார்கள். இதனால் மதம் என்பது அறிவுப்பூர்வமான கல்விக்கு எதிரியாக மாறி, ஒரு வடுவை ஏற்படுத்த, கடந்த நூற்றாண்டுகளில் மதம் வீழ்ச்சியுற்றது. நமது சமயத்தில் அத்தகைய வீழ்ச்சி, ஒப்பந்தத்தின் சமயமும் விஞ்ஞானமும் ஒத்து இயங்குதல் என்ற கோட்பாட்டின் வழி சமயம் அறிவுப்பூர்வமான கல்வி நிலைக்கு எதிரி என்ற அபாயம் தடுக்கப்பட்டது. மேலும் சமயம் முழுக்க முழுக்க அறிவுப்பூர்வமான சமாச்சாரம் என்ற நினைப்புக்கு இட்டுச்செல்லும் பாதகமும் பஹாய் கல்விப்புலமையின் கோட்பாடுகளால் தவிர்க்கப்பட்டுள்ளது. மானிட சரித்திரத்தில் யுகம்-யுகமாக பஹாய் மிகவும் கடினப்பட்டு சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் பரந்த அளவிளான மானிட அறிவோடு சமயத்தையும் அதன் உயிர்ப்பு சக்தியையும் இணைப்பதன் வழி சமயம் பாதுகாப்பாக இருக்கின்றது என்ற நிலையையும் அந்த பஹாய் கல்விப்புலமை கோட்பாடு உறுதிசெய்ததுள்ளது. அக்கோட்பாடு மிக அற்புதமான ஓர் இணக்க நிலையைப் பேணி பாதுகாத்துள்ளது. மானிட அறிவுக்கும் பஹாய் திருவெளிப்பாட்டிற்கும் இடையேயுள்ளதொடர்புறவை நாம் துண்டித்தால் சமய வெறி தலைதூக்கும். அறிவுப்பூர்வமான கல்வி நிலைக்கு எதிரான நிலை ஏற்பட்டுவிடும், அல்லது சமயம் என்பது விஞ்ஞான அளவுகோள்களிடம் சரணடைந்துவிடும். வெறும் அறிவுப்பூர்வமான நிலையிலேயே சஞ்சரிக்கும். இத்தகைய எல்லா அபாயங்களும் பஹாய் கல்விப்புலமையில் உள்ள ஏக்கத் தன்மையின் வழி தடுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, நான் எனது உரையை முடிப்பதற்க்கு முன்பு ஆக்க சக்திமிக்க இறைவனின் திருவாக்கினை பயன்படுத்தி நாம் பரிபூரண மாற்றம் அடைவதில் நாம் சந்திக்கும் வீழ்ச்சிகளை மிக சுருக்கமாக கூறிவிடுகின்றேன். நாம் பஹாவுல்லாவினுடைய திருவெளிப்பாட்டின் சக்தியை பெற முயலுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். நமது இதயங்களை அதன்பால் திறக்கின்றோம். அந்த திருவெளிப்பாட்டில் உள்ளுர புதைந்து கிடக்கின்றது என வாக்களிக்கப்பட்ட அருளாவியினைப் பெறுவதற்கு நாம் முயலுகின்றோம். இதில் தடைகள் என நான் கருதுவதை முதலில் பட்டியலிடுகின்றேன். அப்படி முயற்சி மேற்கொள்ளும்போது ஒருவரது கண்களுக்கு அனைத்துமே தெரிந்துவிடாது. அதனால் ஒரு ஏமாற்றம் வரக்கூடும், அதை நான் அப்பட்டியலில் இணைக்கவில்லை. நான் சொல்லப் போகும் முதல் தடை ஒரு மாபெரும் அபாயம். அது என்னவென்றால், திருவெளிப்பாட்டினை மனிதர்களது வார்த்தைகளிவிருந்து வேறுபடுத்தி உணராமல் இருப்பதன் வாயிலாக சமயபோதனைகளை வெறும் மனிதர்களின் வார்த்தைகளாக கருதிவிடும் அபாயம். பிறகு நாம் போதனைகளை மனிதனின் சாதாரன வார்த்தைகளாக கருதுவோம். பிறகு என்ன இருக்கும்? பல நிகழ்ச்சிகள் நடக்கும். அந்த போதனைகளில் குற்றம் குறைகளை கண்டுபிடிக்க ஆரம்பிப்போம். இறைதூதரின் நாவிலிருந்து வெளிவருகின்ற தெய்வீகமாக கட்டளையிடப்பட்டு வெளிவருகின்ற புனிதமிகு வார்த்தைகளை எடைபோட குறையுள்ள மானிதனின் மானிட அளவுகோல்களைப் பயன்படுத்துகின்றோம். நண்பர்களே, இது எவ்வளவு நகைப்புக்குரிய விஷயம். பஹாவுல்லா இவ்வாறு நம்மை கடுமையாக எச்சரிக்கின்றார், கடவுளது திருநூலை உங்களுக்கிடையே உள்ள எத்தகைய அளவு கோல்களினாலும், விஞ்ஞான முறைகளினாலும் எடைபோடப் பார்க்காதீர்கள். ஏனெனில், அந்த திருநூலே மாசற்ற துலாக்கோலாக மனிதர்களுக்கிடையே நிலை நாட்டப்பட்டுள்ளது”. உலக நீதிமன்றமும் இதுபற்றி எழுதியுள்ளது. உலக நீதிமன்றம் இப்படி எழுதியது, “எனவே, புனிதவாசகங்களை புரிந்துகொள்ள முயலும்போது, அந்த வாசகங்களில் உண்மையான முரண்பாடு இல்லை என்றும், அப்படிப்பட்ட முரண்பாடு காணப்படமாட்டாது என்றும் உணரவெண்டும்”. இந்த பார்வைகொண்டுதான் அவ்வாசகங்கள் கொண்டிருக்கும் பொருளின் ஒற்றுமையை நாம் நம்பிக்கையோடு தேடவேண்டும். இது ஒரு தடை.

இரண்டாவது தடை என்னவென்றால் போதனைகாளப் பற்றி நமக்கு ஏற்கனவே தெரிந்துள்ள அபிப்பிரயாயங்களோடு சமய போதனைகளை அணுகுதல். இந்த முன் அபிப்ராயாயத்தால் போதனைகள் நம்மை வழிநடத்திடவிடுதற்கு பதிலாக, போதகைளை நாம் விரும்பும் வழிக்கு கொண்டுபோகிறோம். பஹாவுல்லாவின் திருவெளிப்பாட்டு நூல்கள் ஏறத்தாழ 100 இருக்கும். நாம் சில வேளையில், இங்கே ஒரு வார்த்தை, அந்த நூலில் ஒரு சொற்றொடைரயும், இன்னொரு நூலின் ஒரு வாக்கியத்தையும் எடுத்து விரும்பியவாறு பயன்படுத்துவோம். பிறகு என்ன நடக்கும்? திருவெளிப்பாட்டிற்கு நமது ஆன்மாக்களை சரணடையச்செய்து அதனிடம் முழுதும் ஒப்படைத்து அது இட்டுச்செல்லும் வழியில் செல்ல தயாராகாமல் நாம் விரும்பிய வழிக்கு போதனையை எடுத்துச் செல்ல ஆரம்பிப்போம். எனவே, போதனைகளை வாசிப்பதிலும், அவற்றை கற்பதிலும், அவற்றிலிருந்து விவேகத்தை பெறுவதிலும் நமக்கு மாபெரும் சோதனை உண்டு, அகந்தை எனும் சோதனை உண்டு, போதனைப் பற்றி ஏற்கனவே நாம் முடிவு செய்திருக்கும் முன் அபிப்பிராயத்தில் திளைத்திருக்கும் சோதனை உண்டு, நமது விருப்பத்தை இறைத்தூதரின் விருப்பத்திற்கு சரணடைந்து அவர்தம் போதனைகள் நம்மை வழிநடத்தவிடும் சோதனை உண்டு. இந்த சோதனையில் எனக்கு ஏற்படும் அதிர்ச்சி உங்களுக்கும் ஏற்படும். உங்களுடைய அதிர்ச்சி எனக்கும் ஏற்படும். இது நமது சோதனை. போதனைகள் நம்மை வழிநடத்திட வழிவிட விரும்பமுகின்றோமா அல்லது போதனைகளை நிறுத்தி நாம் விரும்பு வழிக்கு அதை வற்புறுத்தி இழுக்கின்றோமா? ஒரு சில காலத்திற்கு பஹாய் நம்பிக்கையாளராக இருந்துவிட்ட ஒருவர் அதிர்ச்சியளிக்கும் ஒருசில போதனைகளைப் படித்துவிட்டு” எனக்கு தெரியாதே இதையெல்லாம் நாம் நம்புகின்றோம் என்று, இது உண்மையாய் இருக்கும் என்று நான் நினைத்ததே இல்லையே” என்று கூறுவார்கள். எனக்கும் இந்த அனுபவம் உண்டு, உங்களுக்கு நிச்சியமாக இந்த அனுபவம் இருக்கும்.

மூன்றாவது அபாயம் அறிவுப்பூர்வமான அகந்தை. சமூகத்திற்கு வெளியே “கல்விமான்” என்ற அடைமொழியை படித்திருப்போம். அத்தகைய “படித்த மேதையோடு” பழகும்போது நாம் அவமானப்படுத்தப்பட்டிருப்போம், ஒதுக்கப்பட்டிருப்போம். நாம் போதனைகளைப்பற்றி ஆராயும்போது, பஹாய் கல்விப்புலமையில் நாம் நடைபோடும் போது பஹாய் சமுகத்தினுள் அகந்தை என்ற அறிவுத் தற்பெருமையை நுழையவிடாமலிருப்பதில் நாம் பெருமுயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். பஹாவுல்லா நமக்காக தயார் செய்த நல்விருந்து மேஜைக்கு அந்த வேன்டத்தகாத விருந்தாளியைக் கொண்டுவரக்கூடாது. பஹாவுல்லாவே இப்படி சொல்லியுள்ளார், “தங்களது சாதனைகளில் பெருமையடையாதவர்கள் ஆசிபெற்றவர்கள்” இன்னொரு இடத்தில் உலக நீதி மன்றத்தின் ஆராய்ச்சித் துறையினால் வெளியிடப்பட்ட மிக அழகிய, அற்புதமான இந்த வாக்கியம் ஒரு முக்கியமான கேள்விக்கு பதிலளிப்பதாய் உள்ளது. கேள்வி இதுதான், மாபெரும் கல்வியைத் தொடர்பவர்கள், தங்களது அபிப்பிராயங்கள் கருத்துக்கள் சம்பந்தமாக நாம் காட்டிட வேண்டிய அதே பணிவுநிலை, தோழமைநட்பு, சகிப்புத்தன்மை, மரியாதை ஆகியவற்றை பிரதிபலிப்பதிலிருந்து விதிவிலக்களிக்கப்பட்டவர்களா?” இக்கோள்விக்கு இதே வாக்கியத்தில் காணப்படும் பதில் அபாரம், “இல்லை. நீங்கள் விதிவிலக்கப்படவில்லை. ஒவ்வொரு மனிதரும் அந்த தன்மைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவரது மெய்யான கல்வியிலும் விலக்களிக்கப்படவில்லை”.

அந்த வாக்கியத்தில் தொடர்ந்து இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, “கல்விமான்கள் மட்டுமின்றி எல்லா மனிதர்களும் தங்களது பேச்சுகளின் விவேகத்தையும், மற்றவர்களது கருத்தை மதிப்பிடும்போது சகிப்புத்தன்மையையும், தங்களது நடத்தையிலும், பேச்சிலும் தோழமைநட்பையும் காண்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.”

இன்னும் இரண்டு தடைகள் உள்ளன. நான் முடிப்பதற்து முன்பு இவற்றை சொல்ல விரும்புகின்றேன். அதில் ஒன்று, நமக்கு எல்லாருக்கும் தெரிந்ததுதான். நாம் திருவெளிப்பாட்டை கற்றிடும்போது தனிநபர் விளக்கவுரையின் திருவாசகங்களில் தெளிவாக உள்ளது. நமது சமயத்தின் நோக்கம் எல்லைக்குப்பட்ட ஒரு அறிவுக்கல்வி கூடு அல்ல. ஒரு கருத்தை நமது மனங்களில், நமது அக்கறையை எழச்சிபெறச்செய்து, நமது சிந்தனையின் எல்லைகள் அகலப்படுத்திட நமது சமயம் ஊக்குவிக்கின்றது. அதன் விளைவுதான் விளக்கம். ஆனால் இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் அது தனிநபரின் சுயவிளக்கம். சமய போதனைகளில் அதிகாரப்பூர்வமாக உள்ள, இலைமறை காய்மறையாக உள்ள சட்டங்களுக்கு தெளிவையும் விளக்கத்தை கொடுக்கும் பொறுப்பு உலக நீதிமன்றத்திற்கு உள்ளது.

சோதனைகளின் இயல்பும் அவற்றின் சவாலும்


சோதனைகளின் இயல்பும் அவற்றின் சவாலும்
டாக்டர் பீட்டர் கான் அவர்கள் வில்மட் பஹாய் கோவிலில் ஆற்றிய உரையின் மொழியாக்கம்

(இச்சொற்பொழிவு, அமெரிக்க பஹாய்களைக் குறித்து ஆற்றப்பட்டிருந்தாலும், இதில் அடங்கியுள்ள விஷயங்கள் யாவும் அனைத்து பஹாய்களுக்கும் பொருந்தும் என்பதை வாசகர்களுக்கு எடுத்துரைக்க விரும்புகிறோம்.)

அன்பார்ந்த நண்பர்களே,
அமெரிக்க பஹாய் சமூகத்தின் மையமாக விளங்கும் இவ்விடத்தில் மீண்டும் ஒன்று கூடியிருப்பதில் ஏற்பட்டிருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை என் சார்பாகவும் என் மனைவியின் சார்பாகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மிச்சிகன் மாகாணத்தில் நாங்கள் 12 வருடங்கள் வாழ்ந்திருக்கின்றோம். அவை, நாங்கள் சமயத்தைப் பற்றியும் பஹாய் சமூகத்தைப் பற்றியும் கற்றுணர்ந்த உருவாக்கம் மிக்கவையும் களிப்பு மிகுந்தவையுமான12 வருடங்கள்.

இந்த நிகழ்வின் போது நாங்கள் அமெரிக்கா திரும்பியிருக்கும் இவ்வேளையில், அந்த வருடங்களின் நினைவுகளும், அவ்வேளையில் எங்களுக்கு அறிமுகப்பட்டிருந்த அமெரிக்க பஹாய்களின் ஊக்கமும் அர்ப்பண உணர்வும் அற்புதங்களும் எங்கள் இதயங்களில் நிறைந்துள்ளன. இன்றிரவு நான் உங்களில் ஒருவன் என்ற நிலையிலேயே உங்கள் முன் உரை நிகழ்த்துகின்றேன். உலக நீதி மன்றத்தின் சார்பாக நான் இங்கு உரை நிகழ்த்தவில்லை. நிகழ்காலத்தில் அந்த மேன்மை மிக்க சபையின் அங்கத்தினராகும் வாய்ப்பு பெற்ற ஒருவர் என்ற முறையிலேயே, ஒரு தனி பஹாய் என்ற முறையிலேயே, சொற்பொழிவாற்றுகின்றேன். ஆக, இங்கு உங்களுக்கு முன் நான் சமர்ப்பிக்கவிருக்கும் எண்ணங்கள் என்னுடைய சொந்த எண்ணங்களே ஆகும்.

பாதுகாவலர் ஷோகி எ*பெண்டி அவர்கள், பாதுகாவலர் என்ற முறையில் தமது பணிக்காலத்தின் ஆரம்ப வருடங்களிலிருந்து முக்கியத்துவம் கொடுத்து வந்த ஒரு விஷயத்தின்பால் என்னுடைய மற்றும் உங்களுடைய கவனத்தைத் திருப்ப விழைகின்றேன். பார்க்கப் போனால், ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்குத் தாம் அனுப்பிய ஜனவரி 21, 1922 எனத் திகதியிடப்பட்ட முதன் முதற் கடிதத்தில் பாதுகாவலர் இவ்விஷயம் குறித்துக் கவனத்தை ஈர்த்தும், அடுத்தடுத்து வந்த கடிதங்களில் அதைப் பற்றி மறுபடியும் மறுபடியும் குறிப்பிடவும் செய்துள்ளார். அவ்விஷயம் யாது?

பாதுகாலர் அவர்கள், அமெரிக்க நம்பிக்கையாளர்கள், வரப்போகும் காலங்களில் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் என 73 வருடங்களுக்கு முன்பு கூறினார். அவர்கள், உடல் சித்திரவதைக்கு அப்பாற்பட்ட பகுத்தறிவு சார்ந்த மனச்சோதனைகளை எதிர்நோக்குவர், எனக் கூறினார். அவை அமெரிக்க பஹாய்களைத் தூய்மை பெறச் செய்யவும் அவர்களை மேலும் அறிவுடையோர் ஆக்கவும் சம்பவிக்கக் கூடியவை எனக் கூறினார். சில வருடங்களுக்குப் பிறகு அவர் அதே விஷயத்தைப் பற்றி மறுபடியும் குறிப்பிட்டார். “மேற்கு நாடுகளைச் சார்ந்த தமது அன்பிற்கினியவர்களை நிச்சயமாக தாக்கக் கூடிய கடுமையான சிந்தனா சோதனைகளைப் பற்றி, இவ்வுலகத்தில் தமது பணிக்காலத்தின் இறுதி சில வருடங்களில் நமது அன்பிற்குகந்த மாஸ்டர் அவர்கள் நமக்குக் குறிப்புடன் விடுத்த எச்சரிக்கைகளைத்தான் நாம் எத்துணை விரைவில் மறந்துவிடுகிறோம்,” எனக் கூறினார். “அவர்களின் உயர்வுமிக்க பணிகளுக்காக அவர்களை மாசகற்றி தூய்மைப்படுத்தி தயார் செய்யக்கூடிய சோதனைகள் அவை.”

தவிர்க்க இயலாத சிந்தனா சோதனைகள்

அமெரிக்க பஹாய்களைத் தயார்படுத்தக்கூடிய, இனி வரவிருக்கும் தவிர்க்க இயலாத சிந்தனை சார்ந்த சோதனைகள் என பாதுகாவலரால்  வர்ணிக்கப்படும் இவ்விஷயம், அவரது எழுத்துக்களில் மீண்டும் மீண்டும் தோன்றியும், உலக நீதி மன்றத்தால், அதன் மே 19, 1994 என திகதியிடப்பட்ட நீண்ட கடிதத்தில், “அவர்களைத் தூய்மைப்படுத்த தாம் அனுப்ப வாக்குறுதியளித்திருக்கும் அப்துல் பஹாவின் அந்தச் சிந்தனா சோதனைகளில் அவர்கள் மறுபடியும் மறுபடியும் வெற்றிபெற அமெரிக்க பஹாய்களுக்குத் தெய்வீக வலிமை அருளப்படுவதாக,” என அவர்கள் தங்களது எதிர்பார்ப்புகளையும் பிரார்த்தனையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பாதுகாவலர் எழுதியவற்றில் பல பகுதிகள் இந்த சிந்தனை சார்ந்த சோதனைகளைக் குறிப்பிடுகின்றன. உதாரணமாக, அமெரிக்க பஹாய்களுக்குப் பாதுகாவலரால் எழுதப்பட்டு பிரசுரமான கடைசி செய்தி ஒன்றில், வருங்காலங்களில் எதிர்ப்பார்க்கக் கூடியவற்றை அவர் முன்குறிப்பிட்டுள்ளார். அவர், வருங்காலங்களில் பஹாய் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய வெளிச்சோதனைகள் சிந்தனை ரீதியில் அமைந்திருக்குமே அன்றி உடலை வருத்துவனவாக இருக்காது எனக் கூறியுள்ளார். நமது சமயத்தை வெளியிலிருந்தே அழித்திட குறிவைக்கக்கூடிய பலம் வாய்ந்த வைதீக மத ஆச்சாரங்களை ஆதரிக்கும் மதத்தலைவர்களான எதிரிகளின் தாக்குதலுக்கு அது ஆளாகும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 1957 எனத் திகதியிடப்பட்ட அந்த இறுதிச் செய்தியில், மேலும், அமெரிக்க பஹாய்களுக்குச் சிந்தனா சோதனைகள் சமயத்திற்கு உள்ளளிருந்தே வரும் என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க சமுதாயத்திற்குள் இயங்கும் பல சக்திகளை அவர் வரிசைப்படுத்தி, அந்தச் சக்திகளின் தாக்கத்தினால் சமயத்தின் நிர்வாக மையங்கள் உள்ளிருந்தே கடுமையான ஆன்மீகச் சவால்களுக்கு உட்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டு, “உள்ளிருந்தே அதற்குக் குழிபறித்திட முயலும் துரோகச் சக்திகளை,” எதிர்த்திடும் முயற்சிக்கு ஏதுவாக பஹாய் சமூகத்தைப் பலப்படுத்த வேண்டும் எனவும் நண்பர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

இவ்வசனங்கள் அமெரிக்க பஹாய் சமூகத்தின் சீதனங்களாக உள்ளவற்றின் ஒரு பகுதி எனக் கொள்ளப்படவேண்டும். சவால்கள் மிக்க காலங்கள், சிரமங்கள் மிக்க காலங்கள், சோதனைகள் மிக்க காலங்கள் மற்றும் அவற்றோடு சேர்ந்து பெரும் வெற்றிகள் நிறைந்த காலங்கள் ஆகியவற்றை முன்குறிப்பிடும் வசனங்கள் இவை.

நான் ஏற்கனவே வாசித்த ஒரு வசனம் குறிப்பிடுவது போல், இச்சோதனைகள், அன்பர்களை “மேலும் அதிக ஒளிவிட்டு பிரகாசிக்க செய்யவும்,” “மேலும் அதிக காந்தியுடன் ஒளிரவும்,” “பாப், பஹாவுல்லா, மற்றும் அப்துல் பஹா ஆகியோரின் வாசகங்களில் வழிவகுக்கப்பட்டிருக்கும் தமது மகிமை நிறைந்த எதிர்காலத்தை அடைந்திட அமெரிக்க பஹாய் சமூகத்திற்கு உதவவும்,” நோக்கம் கொண்டுள்ளன” என பாதுகாவலர் வருணிக்கின்றார்.

இங்கு நான் குறிப்பிட விரும்பும் விஷயம் என்னவெனில், நாம் அத்தகைய சிந்தனா சோதனைகள் மிகுந்த காலத்தில் வாழ்கின்றோம் என நானும் காலப்போக்கில் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன் என்பதே ஆகும். சிந்தனா சோதனைகள் வரப்போவது  வரக்கூடிய காலங்களில்தான்  என்றில்லாமல், அவை இப்போதே தோன்றிவிட்டன.

சிந்தனா சோதனைகளின் இயல்பு

நான் இதை ஏன் சொல்கிறேன்? சிந்தனா சோதனைகளின் இயல்புதான் நான் இதைச் சொல்வதற்குக் காரணமாக உள்ளது. உடல் சார்ந்த சோதனைகளைப் பற்றி நாம் அனுபவப்பட்டும் அறிந்துகொண்டும் இருக்கின்றோம். இங்கு குழுமியுள்ள கூட்டத்தினரிடையே உள்ள நமது சமயத்தின் தொட்டிலாகிய இரானைச் சேர்ந்த பல அன்பர்கள் இவ்வித உடல் வதை சார்ந்த சோதனைகள் குறித்த அனுபவம் நன்கு பெற்றுள்ளர். 150 வருடங்களாகப் பால்ய சமயமான இது பல நாடுகளில் உடல் பொருள் சார்ந்த சோதனைகளைச் சந்தித்துள்ளது — சித்திரவதைகள், சிறையிலிடுதல், தியாகமரணம், குடும்பங்களும் இல்லங்களும் சிதரிப்போகுதல் ஆகியவை. ஆனால் நாம் சிந்தனா சோதனைகளில் இன்னும் அனுபவப்படவில்லை.

உலக நீதி மன்றம், ஜனவரி 1986 எனத் திகதியிடப்பட்ட ஒரு கடிதத்தில், இறைவனின் சமயம் அறியப்படாத நிலையிலிருந்து வெளிப்படுகின்றது எனும் உண்மையைக் குறிப்பிட்டுள்ளது. அதாவது, அதன் பரிணாமம் குறித்துப் பாதுகாவலர் குறிப்பிட்டுள்ள ஏழு படிகளின் முதல் படியை விட்டு இரண்டாவது படியான, சித்திரவதை அல்லது ஒடுக்கப்படும் கட்டத்திற்கு அது வந்துவிட்டது. சிந்தனா சோதனைகளைப் பற்றி, ஒரே உலகளாவிய பஹாய் சமூகமாக மேலும் மேலும் அதிகமாக அறிந்துகொள்ளக்கூடிய ஒரு கட்டத்தை நாம் அடைந்தும் அடைந்துகொண்டும் இருக்கின்றோம். இங்கு, இந்த இரவில் நாம் இங்கு கூடியிருக்கும் இந்த வேளையில், எனது உணர்வாகவும் எனக்குத் தோன்றுவதாகவும் உள்ளது நாம் இந்தச் சிந்தனா சோதனைகளைத் தற்போது அனுபவித்து வருகிறோம் என்பதே ஆகும். சிந்தனா சோதனைகள் என நான் குறிப்பிடும் அதற்கு அர்த்தம் என்ன? அவையாவன, நம்பிக்கையையும் உறுதிப்பாட்டையும் அரித்தும் தகர்த்தும் பஹாய் சமூகத்தில் ஒழுங்கீனத்தை உருவாக்கவும் கூடிய சோதனைகள் ஆகியவை. சிந்தனா சோதனைகளின் ஓர் இயல்புக்கூறாக பஹாய் அல்லாத சமுதாயத்தில் நிலவக்கூடிய வாழ்க்கை முறைகள் மற்றும் மதிப்பீடுகளால் பார்வை மங்கியும், அவ்விதம் பார்வை மங்கிப்போவதனால் இந்தச் சிந்தனா சோதனைகளை நாம் கடக்க முடியாமல் போவதும் ஆகும்.

இவ்விதச் சோதனைகளின் அபாயங்களைக் குறைத்து மதிப்பிட்டும், ஏனோ தானோ என்றிருந்தும், காலம் தாழ்ந்து இச்சோதனைகளைப் பற்றி உணர்ந்து கொள்ளக்கூடிய ஓர் ஆபத்தான நிலையிலும் நாம் இருக்கின்றோம். இது, போர் வீரன் ஒருவன் கத்தி கேடயங்களுடன் போருடை தரித்து போருக்காக அதிக நேரம் காத்துக் கொண்டிருக்க, ஆனால் போரோ அவனைச் சுற்றிலும் நெடு நேரமாக நடந்து, அவன் அங்கு நின்று கொண்டிருக்கும் போதே ஒரு முடிவிற்கும் வந்தவிட்ட ஓர் ஆபத்தான நிலையை அடையக்கூடிய நிலையில் நாமும் இருக்கின்றோம். அமெரிக்க சமூகத்தின் அங்கத்தினர்கள் என்ற முறையில் — நானும் என் மனைவியும் பல வகைகளில் நாங்களும் அமெரிக்கர்கள் என்றே எங்களை எண்ணிக் கொள்கின்றோம் — இச் சொற்பொழிவின் ஒலிப்பதிவு ஆஸ்திரேலியா போகாமல் இருந்தால் சரி! — இன்றைய சூழ்நிலையில் சிந்தனா சோதனைகளுக்கு மூன்று கூறுகள் உள்ளன என்பது என் எண்ணம். நான் அவற்றை குறிப்பிட்டும் பிறகு அவை ஒவ்வொன்றைப் பற்றியும் ஆழமாக உரையாற்றவும் விரும்புகிறேன்.

முதலாவதாக: லௌகீகங்கள் நிறைந்த ஒரு சூழ்நிலையில் ஆன்மீகத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய காட்டாயத்தினால் நாம் சோதனகளுக்கு உட்படுத்தப் படுகிறோம் என்பது என் எண்ணம். இது நம் ஒவ்வொருவருடைய சோதனையும் ஆகும். இரண்டாவதாக: அக்கறையின்மை மற்றும் ஊக்கமின்மை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ள ஒரு சுற்றுச்சூழலில் மனித சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான நமது ஈடுபாட்டில் நாம் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றோம். மூன்றாவதாக: சமூக நிறுவனங்கள் மற்றும் ஸ்தாபனங்கள்பால் ஒரு மாற்று மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளவேண்டிய தேவையால் நாம் சோதிக்கப்படுகின்றோம்.

இந்த மகோன்னத நாட்டில் வாழும் நாம், இந்த விருவிருப்பு மிக்க சமூகத்தில் வாழும் நாம், இந்த மூன்று நிலைகளிலேயே சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றோம் என்பது என் எண்ணம். இச்சோதனைகளில் நாம் வெற்றி அடையப்போகின்றோமா அல்லவா? பஹாய் சமூகம் இதில் தேர்ச்சி பெறும். அமெரிக்க சமூகம் பெரும் அற்புதமிக்க விஷயங்களைக் கடந்து செல்ல விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனிநபர்களாகிய நாம், சோதனைகளுக்கு உட்பட்டவர்கள்.

ஓர் ஆன்மீக மெய்யுணர்வை ஏற்படுத்திக்கொள்ளல்

இவற்றில் முதலாவதாக உள்ளதை நான் முதலில் தொட்டுப் பேச விரும்புகிறேன். மனித வாழ்வின் லௌகீக கூறுகளில் அதிகரித்த அளவில் ஆழ்ந்தும், பார்க்கப்போனால் மூழ்கிப் போயும் உள்ள ஒரு சுற்றுச் சூழலில் ஒர் ஆன்மீக உணர்வை மேம்படுத்துவதானது அளிக்கும் சவாலே இப்போது நம்மை தாக்கக் கூடிய முதல் சிந்தனா சோதனையாக உள்ளது. பாதுகாவலரின் எழுத்துக்களும், சமீப காலங்களில் உலக நீதி மன்றத்தின் செய்திகளும், நண்பர்கள் தங்கள் வாழ்க்கைகளை ஆன்மீக மயமாக்கிக் கொள்ளும்படியும், அதன் லௌகீக நிலையை விட முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட, சர்வ -முக்கியத்துவம் வாய்ந்த, இன்றியமையாத ஆன்மீக நிலையிலான வாழ்வை உள்ளடக்கிய ஒர் உலக கண்ணோட்டத்தை உருவாக்கிக்கொள்ளும்படியும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கின்றன.

இதைச் செய்யும்படி நாம் அழுத்திக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம். நமது போதனைகளில் பஹாவுல்லாவின் மெய்யன்பர்கள் என்ற முறையில் நமது கடமையாக நமது வாழ்க்கைகளை ஆன்மீக மயமாக்கிக் கொள்வது இருக்கின்றது என நமக்குக் கூறப்பட்டுள்ளது. நாம் இதை நிறைவேற்றுவோமானால், அதன்மூலம் நாம் நமது வலிமைகளையும் ஆற்றல்களையும் அதிகப்படுத்திக்கொள்வதோடு, அதன் மூலமாக மட்டுமே இன்பமும் நிறைவேற்றமும் காணமுடியும் எனும் வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்து.

இது நடைபெறாமல் போனால் — இச் சோதனையில் நாம் கண்டிப்பாக தேர்ச்சி பெறப் போகின்றோம் என யாருமே கூறிட முடியாது — சமயமாகப்பட்டது வெறும்  கோட்பாடாகவும், சடங்குச் சம்பிரதாயங்களாகவும் உயிரற்ற அநுஷ்டானங்களாகவும்  தரம் குறைந்துவிடும். உலக நிகழ்வுகளும் உலக சரித்திரம் செல்லும் திசையையும் குறித்த லௌகீக வியாக்கியானங்கள்பால் நாமும் தவிர்க்க முடியாமல் ஈர்க்கவும் படுவோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களின் கலக்கங்கள்பாலும், பதட்டங்கள்பாலும், ஈடுபாடுகள்பாலும், தயக்கங்கள்பாலும் மற்றும் சந்தேகங்கள்பாலும் நாமும் ஆழ்ந்து போய், மனிதகுலத்தின் ஆன்மீக வளர்ச்சி குறித்த நமது உலகளாவிய கண்ணோட்டமும் மறைந்து போகும். இத்தகைய ஆன்மீக செயற்பாட்டை நாம் ஆரம்பிக்காமலும் ஆக்கத்துடன் பின்தொடராமலும் இருந்தால் நமது சமூக வாழ்வானது சடங்குச் சம்பிரதாய முறைகளாகி சீரழிந்துவிடும்.

இது ஏன் நமக்குச் சிரமமாக இருக்கின்றது? இதன் காரணம், ஒரு சமூகத்தில் எத்துனை பஹாய்கள்தான் இருந்தபோதிலும், பஹாவுல்லாவை அறிந்திராதவர்களுடன் ஒப்பிடுகையில் அங்கு நமது எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கின்றது. நமது வாழ்வின் அதிக பட்சமான நேரங்களை பஹாவுல்லாவை அறியாதவர்களுடனேயே கழிக்கின்றோம். அவர்களில் பலர் சிறந்தவர்களாகவும் தெளிவான மற்றும் உயர்ந்த கோட்பாடுகள் நிறைந்தவர்களாகவும் இருக்கின்றனர், மற்றவர்கள அதற்கு எதிரிடையாக இருக்கின்றனர். அடிப்படையில் லௌகீக ரீதியில் அமைந்துள்ள சக்திகள், தாக்கங்கள், சார்புகள், ஆலோசனைகள், மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றுக்கு நாம் உட்படுத்தப்படுகிறோம். நாம் அறியாமலேயே இது நமது உலக கண்ணோட்டத்திற்கான மாதிரி ஆகின்றது.

பல தசாப்தங்களாகவும், நூற்றாண்டுகளாகவும், வாழ்க்கையை ஆன்மீக மயப்படுத்துவதற்கு உலக வாழ்க்கையை துறக்க வேண்டும் எனும் எண்ணம் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்துள்ளது. பொருட் செல்வங்களைத் துறந்திட வேண்டும் எனவும், நமது ஆன்மீக மேம்பாட்டிற்குச் சன்னியாசம் வாங்கிக் கொள்ள வேண்டும்  எனவும் நம்பப்பட்டு வந்துள்ளது. பஹாவுல்லா ஹுக்குக்குல்லா சட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த தவறான நம்பிக்கை அடக்கம் செய்யப்பட்டு விட்டது.

ஹுக்குக்குல்லா சட்டத்தின் மூலம் பஹாவுல்லா நமக்கு வழங்கியுள்ள தயவு மற்றும் சலுகைகளின் மூலம், நாம் சேர்த்து வைத்துள்ள செல்வத்தில் செலவு போக மிஞ்சியவற்றில் 19 விழுக்காடு இறைவனுக்குச் சொந்தம் எனவும், மீதமுள்ள 81 சதவிகிதம் நமக்குச் சொந்தம் என்பது பஹாவுல்லாவின் அடிப்படைக் கூற்று. மனிதகுலத்தின் நல்வாழ்விற்காக அதை அர்ப்பண உணர்வோடு நாம் கொடுக்க விரும்பலாம். அப்படி செய்ய விரும்பாமலும் இருக்கலாம். அது நம்முடைய பிரச்சினை. அதில் ஒரு பகுதி இறைவனுக்குச் சொந்தம். மனசாட்சி குறித்த ஒரு விஷயமாக ஹுக்குக் செலுத்த நாம் கேட்டுக் கொள்ளப்படுகிறோம். ஹுக்குக்குல்லாவிற்கு நாம் காணிக்கை செலுத்துகிறோம் எனக் கூறுவது கிடையாது. தேசிய, உள்ளூர் மற்றும் அனைத்துலக நிதிகளுக்கு நாம் நிதி வழங்குகிறோம், ஆனால் ஹுக்குக்குல்லாவிற்கு நாம் பணம் கட்டவேண்டுமே அன்றி காணிக்கை கொடுப்பதென்பது கிடையாது.

ஹுக்குக்குல்லா குறித்த விவேகம்

ஒருவர் ஆன்மீக மயப்படுவதற்குச் சகல பொருட் சுகங்களை, நாட்டங்களை மற்றும் நன்மைகளை முழுக்கத் துறக்க வேண்டும் எனும் கோட்பாடு, ஹுக்குக்குல்லா சட்டம் அளிக்கும் அகப்பார்வை மற்றும் விவேகத்தினால் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது. நான் இங்கு கண்டுணர்ந்த வகையில், ஆன்மீகவியல் பற்றியும், அதை நாம் எப்படி அடைவது என்பது பற்றியும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் இதுவே நமது சவால். நம் ஒவ்வொருவருக்கும் இது ஒரு சவால் — ஆன்மீக ரீதியிலான ஒரு மேம்பாட்டை நாம் எப்படிப் பெறுவது என்பது பற்றியது.

ஆன்மீக மேம்பாடு குறித்த செயற்பாடு மூன்று கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது என் கருத்து. முதலாவதாக: இறைவனின் அவதாரம் நமக்கு வழங்கியுள்ள குறிப்பிட்ட ஒரு சில விதிமுறைகளை இவ்வுலகில் அனுசரிக்கும் போது அவை மர்மான, ஆனால் இன்றியமையாத ஆன்ம சக்திகளை ஈர்க்கின்றன.

நமது சமயத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ள, குறிப்பிட்ட ஒரு சில விதிமுறைகளை நாம் அனுசரிக்கும் போது, மர்மமான, புரிந்துகொள்ள முடியாத வகையில்  ஒரு மாபெரும் ஆன்மீகச் சக்தியை நாம் ஈர்க்கின்றோம். இது நமது புரிந்துகொள்ளலுக்கு அப்பாற்பட்ட ஒரு சிக்கலான சிரமமான விஷயம். ஆனால் அதிர்ஷ்ட வசமாக பாப் அவர்கள் மற்றும் பஹாவுல்லாவின் வருகைக்கு முன்பான சமயக் காலக்கட்டத்தில் காந்தச்  சக்தியைப் பற்றி விஞ்ஞானிகள் முறையான ஆய்வு மேற்கொண்டார்கள். இதனால், மனிதகுலம் காந்தம் பற்றியும், காந்தச் சக்தி குறித்த கோட்பாடு பற்றியும், காந்தத்தின் இயல்புப் பற்றியும் ஒரளவு அறிந்து கொள்ளமுடிந்தது. சிறிய அமைப்புமுறைகளோடு கூடிய, ஒரே திசையை நோக்கித் திரும்பியுள்ள அணுக்களால் அமைக்கப்பட்ட “டைப்போல்கள்” எனப்படுபவை காந்தவிசை இயல்பைத் தோற்றுவிக்கின்றன என்பது நமக்குத் தெரியும். இதனோடு தொடர்புடையதே, வெகுதூரத்திலிருந்தே இயங்கக்கூடிய கண்ணுக்குப் புலப்படாத ஆனால் மிகவும் வலிமை வாய்ந்த காந்தச் சக்தி.

இதன் பயனாக, நான் ஏற்கனவே குறிப்பிட்ட ஆன்மீக மேம்பாடு தொட்ட செயற்பாட்டை அடிக்கோலி்டும் அந்த மூன்று கோட்பாடுகளில் முதல் கோட்பாடு, பஹாவுல்லா, அப்துல் பஹா மற்றும் பாதுகாவலரால் இந்தக் காந்தத்தின் உவமானத்தின் உதவியோடு சித்தரிக்கப்படுவதைக் காணலாம். காந்தத்தின் உவமை, இறைவனின் விதிகளுக்கு ஏற்ப செயல்படுத்தப்படும் சில விஷயங்கள் கண்ணுக்குப் புலப்படாத ஒரு வலிமை வாய்ந்த சக்தியை ஈர்க்கக்கூடியவை என்பதை நமது சமயத்தின் நடுநாயகர்கள் மிகவும் விருவிருப்புடன் எடுத்துக்காட்ட உதவியுள்ளன.

சில உதாரணங்களை நான் உங்களுக்குப் படித்துக் காட்ட விரும்புகிறேன். ஓரிடத்தில், “தயவு மிக்கவரின் உறுதிப்பாடுகளைப் பற்றுறுதி எனும் காந்தமே ஈர்க்கின்றது.” அப்துல் பஹா கூறுவது, “இறைவனை நினைவு கூறுவதென்பது உறுத்திப்பாட்டையும் உதவியையும் காந்தத்தைப் போல் ஈர்க்கக்கூடியது.” மறுபடியும், “ஒற்றுமையும் நல்லிணக்கமுமே இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கக்கூடிய காந்தக்கல் ஆகும்,” என மேலும் கூறப்படுகின்றது. “மனிதகுலத்தைச் சரியான பாதையில் வழிகாட்டுவதே இறைவனின் உதவியை ஈர்க்கக்கூடிய காந்தக்கல் ஆகும்.”

ஈர்க்கக்கூடிய காந்தக்கல்

“என்றும் இல்லாத வகையில், இன்று, இறைவனின் சமயத்தைப் போதிப்பதே விண்ணுலகிலிருந்து ஆசீர்வாதங்களை ஈர்க்கக்கூடிய காந்தக்கல் ஆகும்,” என பாதுகாவலர் கூறுகின்றார். வேறோர் இடத்தில், “சமயத்தைப் பரவச்செய்வது எனும் மகிமை பொருந்திய காரியத்தின்பாலும், பாஹாய் வாழ்வு வாழ்வது என்பதின்பாலும் கொள்ளக்கூடிய அர்ப்பண உணர்வு புனித ஆவியை ஈர்க்கக்கூடிய காந்தக்கல்லை உருவாக்குகின்றது. இவ்வாறாகவே மேலும் பல வாசகங்கள் உள்ளன…

ஆகவே, என் அபிப்ராயத்தில் ஆன்மீக மேம்பாட்டைக் குறிக்கக்கூடிய அந்த மூன்று கோட்பாடுகளில் முதல் கோட்பாடு காந்தக்கல் குறித்த கோட்பாடாகும் — லௌகீக ரீதியில் அணுக்களின் ஒரு குறிப்பிட்ட அமைப்பு முறை காந்தச் சக்தியை ஈர்ப்பது போல் பக்தி மனப்பான்மையுடனும் அர்ப்பண உணர்வுடனும் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட ஒரு சில காரியங்கள் ஒரு மாபெரும் ஆன்மீகச் சக்தியை ஈர்க்கக்கூடியவை, எனும் கோட்பாடு. இந்தக் காந்தக்கல் குறிந்த கோட்பாடு பஹாய் வாசகங்களினூடே ஒருங்கே உருகியோடிடக் காணலாம். உதாரணமாக, தமது வெளிப்பாட்டினைக் குறிப்பிட்டு, அதைக் “காந்தம்” அல்லது “காந்தக்கல்” என பஹாவுல்லா வர்ணிக்கக் காணலாம்.

தமது வெளிப்பாடு, “உலகின் அனைத்து தேசங்களுக்கும் இனங்களுக்கும் காந்தக் கல்லாக,” விளங்கும் என அவர் கூறியுள்ளார். வேறோர் இடத்தில், பஹாவுல்லா இறைவனின் வெளிப்பாட்டாளர் என்பதை பின்வரும் வார்த்தைகள் மூலம் அப்துல் பஹா குறிப்பிடுகின்றார்: “படைப்புலகின் துருவத்தில் ஆன்மாக்கள் மற்றும் இதயங்களை ஈர்க்கும் ‘காந்தக் கல்லை’ இறைவன் வெளிப்படுத்தியுள்ளார்.”

வலிமை வாய்ந்த ஆன்மீகச் சக்திகளைக், குறிப்பிட்ட ஒரு சில விதிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஈர்ப்பதாகிய இதுவே ஆன்மீக மயப்படுத்தும் செயற்பாட்டினை அடிக்கோலிடும் முதல் கோட்பாடு என்பது என் நம்பிக்கை.

ஆன்மீக மேம்பாடு அடைவற்கான செயற்பாட்டில், நான் காணும் இரண்டாவது நிலை கோட்பாடாக இருப்பது, “நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு” என்பதாகும். முதலாவதில், நாம் பிரார்த்தனை, நோன்பு, போதித்தல், ஒற்றுமையைக் கடைபிடித்தல், ஆன்மீகக் கூட்டங்கள் நடத்துதல் போன்றவற்றைக் கடைபிடித்தால் ஆன்மீகச் சக்திகளையும் வலிமைகளையும் ஈர்க்கலாம் என்பதாகும்.

இரண்டாவது கோட்பாடாகிய “”நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு”” என்பது பின்வரும் உதாரணத்தின் மூலம் சித்தரிக்கப்படுகிறது.

நமது புனித வாசகங்களின் மூலம், நாம் பிரார்த்தனை செய்தால் ஆன்மீகச் சக்திகளை ஈர்க்கலாம் என்பது தெளிவாகப் புலப்படுகிறது. நான் சிறிதளவுப் பிரார்த்தனை செய்து அதன்மூலம் அதே அளவு ஆன்மீக சக்திகளை ஈர்க்கின்றேன் என வைத்துக்கொள்வோம். இது எனது முயற்சிகளை மறுபலப்படுத்தும். இது என்னைப் பலவந்தனாக்கும். அதனால் நான் மேலும் அதிகமாகப் பிரார்த்தனை செய்வேன். இந்த உதாரணம் ஓர் எளிமையான மாதிரி என்றாலும், என்னுடைய நோக்கத்திற்கு அது போதுமானதே ஆகும். ஆக, நான் அதிகமாகப் பிரார்த்தனை செய்வேன். இது  மேலும் அதிக அளவிலான ஆன்மீக வலிமைகளை ஈர்க்கும். நான் அதற்கும் மேலும் அதிகமாகப் பிரார்த்திப்பேன், அது அதற்கும் மேலும் அதிகமாக ஆன்மீக வலிமைகளை என்பால் ஈர்க்கும். நான் மேலும் பிரார்த்தனை செய்வேன், அதன்மூலம் என் வலிமைகள் குவிந்து கொண்டே போகும்.

இரண்டாவது கோட்பாடு குறித்து, “”நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு”” எனும் அடிப்படையிலேயே நான் பேசப்போகிறேன். நாம் சிறிதளவுடன் ஆரம்பிக்கின்றோம். அது மேலும் அதிகமான வலிமைகளை ஈர்க்கின்றது, உங்களைப் பலவந்தனாக்குகின்றது. நீங்கள் மேலும் அதிகமாகச் செயலாற்றுகின்றீர்கள், அது மேலும் அதிகமான வலிமைகளை ஈர்த்துக் கொண்டே போகிறது. இந்த அடிப்படையிலேயே, ஆன்மீகக் குணங்களைப் பின்பற்றவும், பக்தியை அடிப்படையாகக் கொண்ட — போதித்தல், காணிக்கை வழங்குதல், சமயக் காரியங்களில் ஈடுபடல் போன்ற செயல்களில் — அவை நமது முயற்சிகளைப் பலப்படுத்தும், நாம் மேலும் மேலும் அதிகமாகச் செய்திட ஊக்கம் தரும் — எனும் நம்பிக்கையில் ஈடுபடக் கேட்டுக் கொள்ளப்படுகிறோம்.

கோவில் எழுப்பப்பட்டுவிட்டது

இந்த விளக்கத்துடனேயே–இந்த “”நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு”” எனும் கோட்பாட்டுடனேயே — இந்த ஒரே வழியிலேயே, 1912-இல் இதே இடத்தில் அப்துல் பஹா உச்சரித்ததாகக் கூறப்படும்,  நமது புனித வாசகங்களில் தோன்றும் வினோதமானதும் மர்மமானதுமான ஒரு கூற்றை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அன்று நடந்த நிகழ்ச்சியில், நாம் இங்கு கூடியிருக்கும் இந்த மகோன்னதமான கட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டியபோது, அவர் வினோதமான ஒன்றைக் கூறினார். அடிக்கல் நாட்டி முடிந்த பிறகு, அங்கு கூடியிருந்த நண்பர்களைப் பார்த்து, “கோவில் எழுப்பப்பட்டுவிட்டது” எனக் கூறினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

“கோவில் எழுப்பப்பட்டுவிட்டது.” 1912-இல் இப்போது நாம் காணும் இந்த கட்டிடம் எதுவும் இங்கு இல்லை. அப்போது ஒரு குறிப்பிட்ட கல்லையே இங்கு மண்ணில் பதித்தனர். அதன் பிறகு, “கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது,” என அப்துல் பஹா கூறினார். இவ்வித ஒரு கூற்றை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? என்னுடைய நம்பிக்கை, “நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு” எனும் இந்தக் கோட்பாட்டின் வெளிப்பாடே அது என்பதாகும். அப்போது அப்துல் பஹா விளக்கியது, “நீங்கள் ஆரம்பிக்க வேண்டியதுதான், மற்ற அனைத்தும் சரியாகிவிடும்,” என்பதே ஆகும்.

“ஆரம்பியுங்கள், முதல் அடி எடுத்து வையுங்கள், நீங்கள் ஆத்யாத்மீகச் சக்திகளை ஈர்க்கக்கூடும். அது உங்களது முயற்சிகளை மறுபலப்படுத்தும். நீங்கள் மேலும் அதிகமாகக் காரியங்கள் ஆற்றக்கூடும், மேலும் அதிகச் சக்திகளை ஈர்க்கக்கூடும், பிறகு கோவிலும் தோற்றம் பெறும், 1912-இல் நீங்கள் எடுத்துள்ள இந்த முயற்சிகளால் அது கட்டி முடிக்கப்பட்டுள்ளது,” என1912-இல் அவர் கூறினார். இதன் அடிப்படையிலேயே, ஆன்மீக மயப்படுதலின் செயற்பாட்டிற்கு இன்றியமையாத இந்த “நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு” எனும் கோட்பாட்டை நான் காண்கின்றேன்.

நான் ஏற்கனவே கூறியது போல், ஆன்மீக மயப்படுதலுக்கான செயற்பாட்டை ஒட்டி மூன்று கோட்பாடுகள் இயங்குகின்றன. அதாவது, முதலாவதாக காந்தம் போல் இயங்கி ஆன்மீகச் சக்திகளை ஈர்ப்பது. அடுத்தது, “நல்விளைவேற்படுத்தும் பரஸ்பரச் செயற்பாடு” எனும் கோட்பாட்டிற்கிணங்க செயற்பட்டு மேலும் அதிகமான சக்திகளை ஈர்த்தும், அதன்மூலம் அச் சக்திகள் அத் தருணந் தொட்டு மேலும் அதிகமாகக் குவியத் தொடங்குவதும் ஆகும். இவ்விரண்டு கோட்பாடுகள் மட்டுமே வாழ்க்கையில் இருந்திருந்தால் அது எவ்வளவு சுலபமாக இருந்திருக்கும். ஆனால், இவ்விரண்டுக் கோட்பாடுகளோடு சேர்ந்து மூன்றாவதாகவும் ஒரு கோட்பாடு உள்ளது என மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இந்த மூன்றாவது கோட்பாடு சோதனைகள் பற்றியதாக உள்ளது.

சோதனை தவிர்க்க முடியாத ஒன்று. சோதனை நாடகப் பாணியை உட்படுத்துவது. நமது தனி மற்றும் கூட்டு வாழ்க்கையில் அது வெற்றிக்கும் தோல்விக்குமான தோற்றுவாய் ஆகும். ஆனால் நாம் முயற்சிகள் எடுத்திடும் போது, ஆன்மீகச் சக்திகளை ஈர்த்திடும் போது, நமது சக்திகளை மேம்படுத்திக்கொள்ளும் போது, நாம் சோதனைக்கு உட்படுத்தப் படுகிறோம்.

நாம் மீண்டும் மீண்டும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றோம். சோதனைகள் ஆன்மீக மேம்பாட்டுடன் இணைந்தே வருவன என நாம் அறிவிக்கப்ப்டடுள்ளோம். இரண்டுக் கோட்பாடுகள் அல்ல ஆனால் மூன்று உள்ளன. மூன்றாவது கோட்பாடு சோதனைகள் பற்றியது.

துன்பங்கள், குழப்பங்கள், இழிநிலை, ஆகியவற்றின் போது அவற்றிற்குத் தேவையான மனவலிமை, சக்திகள் மற்றும் உறுதி, இருக்கின்றதா, அல்லது அவற்றால் ஏற்படக் கூடியச் சிரமங்களிலிருந்தும், எடுக்கப்பட வேண்டிய முயற்சிகளிலினால் ஆயாசப்பட்டு ஒதுங்கியும் போகின்றோமா என்பது குறித்தே நாம் சோதிக்கப்படுகிறோம்.

அதை விவரிக்கும் போது, சோதனைகளை உட்படுத்தும் இந்தச் செயற்பாடு மிகவும் அவசியமான ஒன்றெனவும், ஆக ஆன்மீக சக்திகள் தூண்டப்படவும், நாம் வளரவும், மேம்பாடடையவும், மேலும் சோதனைகள் இறைவனின் வெகுமதிகள் எனவும் பாதுகாவலர் அவர்கள் கூறுகின்றார். அதே வேளையில், சோதனைகள் தாமாகவே கடக்கப்படுவதில்லை என்பது குறித்தும் நாம் உஷாராக இருக்க வேண்டும். நாம் சோதிக்கப்படும் போது, நாம் மெய்யன்பர்கள் என்ற நிலை அந்த சோதனைகளை நாம் வெற்றிகொள்வோம் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை. நமது சமயச் சரித்திரத்திலிருந்து பலர் சோதனைகளை வெற்றி கொண்டுள்ளனர் வேறு பலர் அவற்றில் தோல்வியுற்றும் உள்ளனர் என்பதை நாம் அடுத்தடுத்துக் காண்கின்றோம். அதே சமயம் இறைவனின் சமயம் அதன் ஒளிமிக்க இலக்கை நோக்கி பீடு நடை போட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

“சிந்தனா சோதனைகள்” என்பதே இன்றிரவு நான் பேசவிருப்பதின் கருப்பொருள். முதலாவது சிந்தான சோதனை என்பது லௌகீகங்கள் மிகுந்த சூழ்நிலையில் ஆன்மீக மேம்பாடடைய முயற்சி செய்வது என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். இதைச் செய்வதற்கு முன்பாக நம்மைத் தாக்கக் கூடிய  அபாயங்களை நாம் ஆராய வேண்டும்.

பக்தியோடு செய்யக்கூடியக் காரியங்கள், மற்றும் நமது சமயத்தின் அதி உயரிய நெறிமுறைகள் மற்றும் நீதிமுறைகள் குறித்த செயல்களில் மிகுந்த உறுதியுடன் ஈடுபட நம்மை அர்ப்பணிக்க வேண்டியது மிகவும் அவசியம். நாம் தெளிவாகவும் உறுதியாகவும் புரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவெனில், நம்மைச் சுற்றிலும் உள்ள அமெரிக்க சமூகத்தால் முன்மாதிரிகள் என பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விஷயங்கள், பஹாய்கள் எனும் முறையில் நாம் ஏற்றுக் கொண்டுள்ளவற்றிற்குப் பல வகைககளில் முற்றிலும் எதிர்மாறானவை.

சிறுமைப்படுத்தும் நோக்கத்துடன் நாம் இங்கு கூடியிருக்கவில்லை. இறைவனை நோக்கிய   நமது பாதையைக் கண்டுகொள்ள, மனிதகுலம் அனைத்தும் பெரும் குழப்பங்கள், சோதனைகள், சிரமங்கள் மற்றும் துன்பங்களால் சூழப்பட்டுள்ள இந்த நேரத்தில் நாம் முன் நோக்கிச் செல்லத் தேவைப்படும் நமது பாதையை அறிந்து கொள்ளும் நோக்கத்துடனேயே நாம் கூடியுள்ளோம். அதை, பஹாவுல்லாவின் பாதையை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம் எனும் முழுமையான அறிவுடனேயே செய்யப்போகின்றோம் — பஹாவுல்லாவின் பாதையானது நம்மைச் சூழ்ந்துள்ள சமூகத்தினின்றும் பல வழிகளில் மிகத் தெளிவாக மாறுபட்ட ஒன்றாக உள்ளது.

ஒரே உதாரணத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்: பஹாய்களின் நெறி தவறா வாழ்விற்குரிய இன்றியமையாத, ‘கற்புடைமை’ குறித்த நமது கோட்பாடாகப்பட்டது, உடலுறவு என்பது, ஒரு திருமணமான ஆண் பெண் இருபாலருக்கிடையில் மட்டுமே நிகழ அனுமதிக்கின்றது. இதுவே நமது முன்மாதிரி. நாம் வாழும் இந்தச் சமூகத்தின் முன்மாதிரி அல்ல அது. ஒரு சில இடங்களில் இதை “ஓரினக் காதல் எதிர்ப்பு” என வர்ணிப்பர். இது பல வகைகளாகவும் வர்ணிக்கப்படுகின்றது. எது எப்படியாகிலும் இதுவே நமது முன்மாதிரியாக உள்ளது. இதைத்தான் நமது சமயம் நமக்கு அறிவுறுத்துகின்றது. நம்மைச் சுற்றியுள்ள சமூகம் அதற்குத் தக வாழ்கின்றதோ இல்லையோ, பஹாவுல்லாவின் விதிகளைப் பின்பற்றிச் செல்லக்கூடிய ஒரு பாதையில் நடப்பதற்கு நாம் நம்மை உட்படுத்திக் கொண்டுள்ளோம்.

குறிப்பிட்ட சில கோட்பாடுகளின் வாயிலாக நம்மைச் சுற்றியுள்ளவர்களிலிருந்து நாம் வேறுபட்டவர்களாக இருக்கின்றோம். உதாரணமாக, கடமை எனும் கோட்பாட்டில் நாம் வேறுபட்டவர்கள். இந்த “கடமை” எனும் வார்த்தை, மக்கள் நடுவில் மிகவும் பிரபலம் குறைந்துள்ள ஒரு வார்த்தை. ஆனாலும் நாம் கடமை மிகுந்த மக்கள். செய்யவேண்டும் எனும் இச்சை கொண்டிராத காரியங்களையும் நாம் கடமையுணர்வால் ஆற்றுகின்றோம். நாம் சிரமமான செயல்களில், ஆயாசமிக்கச் செயல்களில், கவனம் செலுத்த முடியாத செயல்களில் ஈடுபடும் மக்களாவோம். ஏன்? உயிர்த்தியாகத்தை இச்சித்து அல்ல, ஆனால் ஒரு கடமை உணர்வுடனேயே இவற்றைச் செய்கின்றோம்.

பஹாய்களாகிய நாம் கடமை உணர்வு மிக்க மக்கள். நாம் கட்டுப்பாடுள்ள மனிதர்கள். நாம் பொறுப்பு மிக்க மனிதர்கள். நாம் நேர்மை மற்றும் நம்பத்தகுந்தமை போன்ற குணங்களை மதித்து வணங்கும்  மக்களாவோம். லௌகீகமான ஒரு சுற்றுச் சூழ்நிலையில் ஆன்மீகப் பயிற்சியில் வெற்றி பெற வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.

யாவற்றுக்கும் மேலாக, நமக்குத் துணிவு தேவைப்படுகின்றது — விடாமுயற்சி கொண்டவர்களாக, நம்மை ஆன்மீக மயப்படுத்திக் கொள்வதில் விடாப்பிடியாக இருப்பவர்களாக, வேறு சிந்தனைகள் இல்லாமல், நம்மைச் சுற்றிலுமுள்ள மக்களின் சக்திகள் மற்றும் செல்வாக்கில் கவனம் இன்றி வித்தியாசமானவர்களாக இருக்கத் தேவைப்படும் துணிவு மற்றும் மன இசைவு நமக்குத் தேவைப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்காவில் இந்த இரண்டாவது சோதனை நம்மைத் தாக்கிக் கொண்டிருக்கின்றது என்பது என் எண்ணம். இது  மனிதகுலத்தின் வருங்காலம் மற்றும் மாறிக்கொண்டு வரும் ஒர் உலகம் குறித்த விசார சிந்தனை உள்ள, கடமையுணர்வு மிக்க மனிதர்களாக நம்மை நாம் மேம்படுத்திக் கொள்வதற்காக நமக்கு ஏற்படும் சோதனைகள். இறைவனின் சமயம் இவ்விதமான கடமையுணர்வு மிக்க மனிதர்களை மேலும் மேலும் வேண்டுகின்றது.

அமெரிக்காவின் வருங்காலம்

தமது விண்ணேற்றத்திற்கு அருகாமயை்ல் பாதுகாவலரால் எழுதப்பட்ட ஒரு வாசகப் பகுதியில், அமெரிக்காவின் வருங்காலம் பற்றி அவர் குறிப்பிடுகின்றார். அமெரிக்காவின் வருங்காலத்தின் ஒரு பகுதியாக இருக்கக் கூடிய ஒன்றைப் பற்றி அங்கு அவர் குறிப்பிட்டுள்ளது சமீப காலங்களில் என் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்போது அவர், அமெரிக்க பஹாய்கள் வருங்காலத்தில் ஒரு சவாலை எதிர்நோக்குவர் என கூறினார். அது எத்தகைய சவால்? “பற்றுறுதிக்கான அரண்” எனும் நூலில் வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், அமெரிக்க அன்பர்கள் எதிர்கொள்ள வேண்டிய பல சவால்களைப் பற்றிப் பாதுகாவலர் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் ஒன்று, “வருங்காலத்தில் அவர்களது ஆன்மீக மனோசக்திகளை அக்கறையின்மையும் ஊக்கமின்மையும் நிலைகுத்திடச் செய்துவிடும்” என்பதாகும்.

இன்று நாம் அந்தச் சோதனையை எதிர்நோக்குகின்றோம் — அதாவது, அக்கறையின்மையையும் ஊக்கமின்மையையும் வெற்றி கொள்ள வேண்டியதற்கான ஒரு சோதனை. நம்மைச் சுற்றியுள்ளவர்கள், அதிகரித்த அளவில் உலகினை மாற்றிடுவதற்கு ஆர்வமும், கொள்கைகளும், உணர்வெழுச்சியும் இன்றி உள்ளது நமக்குச் சோதனையாக உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள சமூகம் தனதுத் தூரநோக்கை இழந்து விட்டது. அது வீரர்களும் வீராங்கனைகளும் இன்றி இருக்கின்றது. அவர்கள் மதிப்பிழந்துள்ளனர். அவர்களுடைய இரகசியங்கள் எழுத்து பூர்வமாக அம்பலமாகிவிட்டன. அவர்கள் பயங்கொள்ளிகள் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. வீர நாயகர்கள் கிடையா. வீர நாயகிகள் கிடையா. தூர நோக்கும் கிடையாது.

வேறெவரும் தன் மீது அக்கறை கொள்ளாத நிலையில் தன் மீது தானே முழு அக்கறை கொண்டு அன்றாடங் காய்ச்சி என்ற நிலையில் காலம் போய்க்கொண்டுள்ளது. வாழ வேண்டும் அல்லது செத்து மடிய வேண்டும். வெளியே இருப்பது இரக்கமற்ற கொடூரமான உலகம்.

ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவது

நாம் வெளியே காண்பது பஹாய் முறை அல்லவே! நாம் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் கண்டுண்டு உள்ளவர்களாயிற்றே! நாம் வைரியச் செயல்கள் புரிந்திட ஆணையிடப் பட்டுள்ளோம். நாம் தியாகங்கள் புரிந்திட ஆணையிடப்பட்டுள்ளோம். நாம் சித்தாந்தக் கொள்கைகளும் பொதுநல உணர்வும் கொண்டிட ஆனையிடப்பட்டுள்ளோம். நாம் ஒரு புதிய சமுதாயத்தை, ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கும் மக்கள். இன்னும் பிறந்திடாத பல தலைமுறையினரைப் பற்றி அன்புக் கொண்டும் அக்கறைக் கொண்டும் உள்ள மக்கள் நாம். வரக்கூடிய தசாப்தங்களில், நூற்றாண்டுகளில் தோன்றிடக்கூடிய அத்தலைமுறையினருக்கு இதை விட நல்ல வாழ்வு அமைந்திட, அமைதியும், ஒற்றுமையும், இணக்கமும், அவர்களது முழு இயற்சக்திகளும் மேம்பாடு கண்டிடுவதற்கான வாய்ப்பும் பெற்றிட, நமது வாழ்க்கையை நாம் அர்ப்பணிக்கக் காத்திருக்கின்றோம்.

இச் சித்தாந்தத்தின்பாலே நாம் பஹாய்கள் என்ற முறையில் ஆணையிடப்பட்டுள்ளோம். சமுதாயத்தின் இந்த அக்கறையின்மை மற்றும் ஊக்கமின்மையை அகற்றி ஒரு புதிய உலகத்தை ஸ்தாபிப்பதில் அர்ப்பண உணர்வுடன் செயல்படுபவர்களெனும் தனிச் சிறப்புடன் நாம் திகழ வேண்டும்.

இது எதைக் குறிக்கின்றது? இதை நாம் எப்படி அடைவது? இது எப்படி ஏற்படப் போகின்றது? நம்பிக்கையாளர்கள் என்ற முறையில், நமக்கு, மனிதகுலத்தின் விமோசனத்தில் சமயத்தின் பங்கு பற்றி ஓர் ஆழமான புரிந்து கொள்ளல் தேவைப்படுகிறது என்பது என் அபிப்ராயம்.

பலவிதமான மதங்கள் நிறைந்து கிடக்கின்ற உலகத்தில் நாம் மேலும் ஒரு புதிய சமயத்தைப் பரப்பி நிலைமையை மேலும் சிக்கலாக்கிக் கொண்டிருக்கவில்லை. மனிதகுலத்தின் பலசமய சமூகத்தினரிடையே நாம் பலத்தைப் பிரயோகித்துப் பிரவேசித்திட முயற்சிக்கவில்லை. உலகம் முழுவதும் பரவியுள்ள சமயம் எனும் பெயருடன் பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியத்தில் இடம் பிடித்திட்டதோடு நாம் மனத்திருப்தி கொள்ளவில்லை. தேசியச் சபைகள், உள்ளூர் சபைகள், மதிப்புமிக்க நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடல்களை கண்ணுக்குக் குளிர்ச்சியாக வரிசைப்படுத்துவதில் மட்டும் நாம் திருப்தியடையவில்லை. நமது சமயம் “எல்லாக் காலங்களிலும் வாக்களிக்கப்பட்டவரது” சமயம். ஏட்டில் உள்ள, ஆயிரம் ஆயிரம் வருடங்களான சரித்திரக் காலம் முழுதும் காணப்படும், சிரமங்கள் மற்றும் குழப்பங்கள், துன்பங்கள் ஆகியவற்றுக்குப் பிறகு தோன்றியுள்ள, உலகத்தை இரட்சிக்க வந்தவரது சமயமே நமது சமயம்.

மனித நாகரிக வரலாற்றில் ஒரு திருப்பு முனையில், பஹாய்கள் என்ற முறையில், பெரும் சிரமத்துடனும் துன்பத்துடனும் இப்போது ஒரே ஐக்கியப்படுத்தப்பட்ட பொருளாக அச்சில் வார்க்கப்படும் மனிதகுலத்தின் சரீரத்தில் புத்துணர்வை ஊட்டிவிடக்கூடியக் கருவிகளாக, நாம் நிற்கின்றோம்.

தற்போதைய உலக நீதி மன்ற அங்கக்தினர் எனும் எனது நிலையில், எவ்வித விதிகளின் கட்டுப்பாடும் இன்றி, பாதுகாவலரின் எழுத்துக்களில் தோன்றும் ஒரு குறிப்பைப் பற்றிச் சில நேரங்களில் நான் சிந்தித்தது உண்டு. இப்படியும் அல்லது அப்படியும் இருக்கலாம் எனும் சந்தேக மொழி இன்றி திண்மையாகத் தோன்றும் வாசகம் அது.

அந்த வாக்கியத்தில், பாதுகாவலர், நான் அங்கத்தினராக இருக்கும் அந்த உலக நீதி மன்றத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். “இந்த மன்றமாகப் பட்டது, தள்ளாடிக் கொண்டிருக்கும் ஒரு நாகரிகத்தின் கடைசிப் புகலிடமாக வருங்காலச் சந்ததியினர் கருதப்போகும் ஒன்று,” எனக் கூறுகின்றார். அப்பகுதியை நான் படிக்கும்போது, “மனிதகுலத்தின் வருங்காலத்தைப் பற்றி இது எதைக் குறிக்கின்றது?” என நான் என்னையே கேட்டுக் கொண்டேன். உலக நீதி மன்றத்தின் இருக்கையின் வாரியக் கூடத்தில் அமர்ந்தவாறு, மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருக்கும் எனது சக அங்கத்தினர்களைப் பார்க்கும் போது, நாங்கள் ஒன்பது பேரும் இந்த நீதி மன்றம் அல்ல என்பதைப் புரிந்து கொள்வேன். இந்த அதிவுயர்ந்தச் சிறப்பு வாய்ந்த ஆன்மீகத் திருவுருவின் அகத் தோற்றமாக விளங்கும் வலுக்குறைந்தச் சக்தியற்ற மனிதர்களே நாங்கள் என்பதை உணர்வேன்.

வரப்போகும் மாபெரும் மாற்றங்கள்

ஆனால் பல வருடங்களாக நான் ஓரளவுக்குப் பரீட்சயப்பட்டுள்ள, இந்த ஸ்தாபனம், இந்த உலக நீதி மன்றம், பாதுகாவலரின் நிச்சயமான, ஆணித்தரமான, சந்தேகத்திற்கு இடமற்ற வார்த்தைகளில் “தள்ளாடிக் கொண்டிருக்கும் ஒரு நாகரிகத்தின் கடைசிப் புகலிடமாக வருங்காலச் சந்ததியினர் கருதப்போகும் ஒன்று.” என நான் எனக்கே கூறிக் கொள்வேன். மனிதகுலம் எதிர்நோக்கக்கூடிய, வரப் போகும் மாபெரும் மாற்றங்களைக் குறிக்கும் ஒரு பகுதியாக இந்தப் பகுதியை நான் உங்களுக்கு அளிக்கின்றேன்.

எப்போது வருவார்கள் — எந்தத் தசாப்தத்தில், எந்த நூற்றாண்டில் — என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவ்ரகள் கண்டிப்பாக வருவார்கள் என்பது நமக்குத் தெரியும் — நாமெல்லோரும் அங்கத்தினர்களாக இருக்கும்  இந்த சமயம் இந்த உலகத்தில் மனிதகுலத்தின் சரித்திரத்தில் புரட்சிகரமான நிலையில் ஒரு பெரும் தன்மை மாற்றச் சக்தியாக செயல்படப் போகின்றது.

மனித அறிவிற்கு அப்பாற்பட்ட நோக்கங்களான, நாம் நம்பிக்கை கொண்டுள்ள, பஹாவுல்லாவுக்கும் அவரது வெளிப்பாட்டிற்கும் ஜீவனளிக்கும் அந்த இறைவனின் சக்தியின் மூலமே தோன்றிட்ட நோக்கங்களான சமயத்தின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் ஆகியவற்றின் பரிமாணம் குறித்த ஒரு அகக்காட்சியை நாம் நமது மனதில் மறு உருவகப்படுத்த முடியுமானால் — நாம் அதைச் செய்யக் கூடுமானால் — நாம் அந்த அகக்காட்சியை மறு உருவகப்படுத்தக் கூடும் — இந்த தலைமுறையிலும், இன்னும் பிறந்திடாத வரக்கூடிய எண்ணிக்கையற்றத் தலைமுறையினரின் நல்வாழ்வுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மனிதர்களும் ஆவோம் நாம்.

இறுதியாக, நான் இன்றிரவு உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்பிய அந்த மூன்றாவது சிந்தனா சோதனையைத் தொட்டுப் பேசவிருக்கிறேன். உலகின் பல பாகங்களில் பஹாய் சகோதரர்கள் அனுபவிக்கும் ஒரு சவாலும் சோதனையும் ஆகும் அது. நான் இங்கு அமெரிக்க பஹாய்கள் என்ற முறையிலேயே எனது கருத்துக்களை உங்களுக்கு வெளியிடுகின்றேன், ஆனால் நான் சமீபத்தில் விஜயம் செய்திருந்த மற்ற பல நாடுகளிலும் இதே விதமான குறிப்புகளைத்தான் நான் வெளியிட்டுள்ளேன்.

என் கவலையெல்லாம் — மேற்கு நாடுகளையும், உலகின் பிற பகுதிகளைச் சார்ந்த நாடுகளையும் தாக்கும் ஆபத்தானதும் நெருக்கடியானதுமென நான் கருதும் — சமூக அமைப்புகள் மற்றும் ஸ்தாபனங்கள் பற்றி சில மனப்பான்மைகளை உருவாக்கிக் கொண்டுள்ள இந்த நாடுகளைச் சார்ந்த நம்பிக்கையாளர்கள் தொட்ட சிந்தனா சோதனையே.

முதலாவதாக, மக்கள் தங்களது அரசாங்கம் மற்றும் அரசியலாட்சி முறை குறித்து சந்தேக மனப்பான்மையும் நம்பிக்கையின்மையும் கொண்டுள்ளனர். தங்களது அரசியல் தலைவர்கள் ஊழல் மிக்கவர்கள் என்பதையும் அவர்களது சமூக அமைப்பின் அரசியல் முறை அவர்களைத் திக்கு முக்காடச் செய்தும், அவர்களது சுதந்திரத்தை வெகுவாகக் குறைத்தும், பல வழிகளில் அவர்களது துன்பங்களுக்குக் காரணமாக அது விளங்குவதையும், கொடுமையான அனுபவங்களினூடே இவர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.

இன்றைய மக்கள் தாங்கள் ஒரே சமூகத்தினர் எனும் உணர்வைக் கொண்டிருக்கவில்லை. நேர்மையானவர்களாகவும், உயர் பண்புகளை உடையவர்களாகவும்,  நன்னடத்தையுடையவர்களாகவும் தோன்றுபவர்களை நம்பக்கூடாது என்பதைக் கசப்பான அனுபவங்கள் மூலம் கண்டு கொண்டுள்ளனர், ஏனெனில் அத்தகையத் தோற்றம் தந்தவர்கள் பிறகு அதற்கு நேர்மாறாக விளங்கியதே இதற்கு காரணம் ஆகும். ஆகவே, இவர்கள் மாற்ற இயலா தன்னிச்சைத் தன்மையை வளர்த்தும், கட்டுப்பாடற்ற தனி மனித சுதந்திரத்தைப் பூஜிப்பவர்களாகவும் ஆகிவிட்டனர்.

சமூகத்தின் மனப்பான்மைகள்

நமது சமூகத்திலுள்ள மக்கள் தங்களை ஆள்பவர்களைப் பொறுத்த மட்டில் தாங்கள் ஒரு சக்தியற்ற நிலையில் இருப்பதையே அதிகரித்த அளவில் உணர்ந்து வருகின்றனர். தாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கப் படாதவர்களாகவும், நடப்பு ஆட்சி முறையை மாற்ற முடியாத நிலையில் இருப்பவர்களாகவும், அதன் கொடுமையான எதிர்மாறான விளைவுகளை உருவாக்கும் சூழ்நிலைகளையும் பின்விளைவுகளையும் அனுபவிக்க வேண்டியத் தண்டனைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளவர்களாகவும் தங்களைக் காண்கின்றனர். ஆகவே, அவர்கள் நடப்பு ஆட்சி முறைக்கு எதிராகச் செயல்பட ஆரம்பிக்கின்றனர்; அவர்கள் பயங்கரவாதிகளாகின்றனர்; அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டுச் செயல்பட ஆரம்பிக்கின்றனர்; ஆட்சி முறையைக் கவிழ்க்க முயல்கின்றனர்; அதன் அழிவை நாடுகின்றனர்; தற்போது இருப்பதை விட வேறெதுவுமே நல்லதாகத்தான் இருக்க வேண்டும் என, ஒரு விதத்தில் உண்மையாகவே உள்ளதை, கூறுகின்றனர்

இவையே நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின் அதிகரித்து வரும் மனப்பான்மைகள். பஹாவுல்லா அரசர்களுக்கும் சமயத் தலைவர்களுக்கும் அனுப்பிய தமது நிருபங்களில் இவற்றைப் பற்றி மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார். “நெருக்கடியான மாற்றங்கள் நிகழும் காலம்” என பாதுகாவலரால் அழைக்கப்பட்ட இக்காலத்தின் சமூகத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி அவர் விரிவாகவே விவரித்துள்ளார். அது இப்போது நம்மைச் சமீபித்துவிட்டது. நம் சமூகத்தில் உள்ள மக்கள் அதற்கான மனப்பான்மைகளை வளர்த்துக் கொண்டுள்ளனர். அதைப் பற்றி அவர்களை நாம் கேட்டால் அதற்கு அவர்கள் நிறையவே நியாயங்கள் கூறுவர். நம்பிக்கையாளர்களாகிய நாம் எதிர்நோக்கக் கூடிய பெரும் சிந்தனா சோதனை, நமக்கே தெரியாமலும், அறியாமலும், கண்கூடாகவே தேய்ந்துக் கொண்டிருக்கும் சமூகத்தின் அத்தகைய மனப்பான்மைகளைப் பஹாய் நிர்வாக முறையினுள் புகுத்தி விடக் கூடியதே ஆகும்.

இது நமக்கான சோதனை. ஏனென்றால், நமக்குத் தெரியாத நிலையிலும் கூட அவற்றை நம்மோடு நாம் கொண்டு வந்தோமேயானால், பஹாவுல்லாவால் விதிக்கப்பட்டுள்ள நிர்வாக முறையை அது தகர்த்தும் சேதப்படுத்தியும் விடும்.

பாதுகாவலர் இது குறித்து பல ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ளார். “நமது தற்போதைய தலைமுறையினர், பெரும்பாலும் நிர்வாக அமைப்புகளோடு ஒப்பிடப்பட்டுள்ள ஊழல்களினால், எந்த ஒரு ஸ்தாபனத்திற்கும்  எதிர்ப்பு அளிப்பதாகவே தோன்றுகிறது. ஒரு ஸ்தாபனமெனும் நிலையில் சமயமும் இடித்துரைக்கப்படுகிறது. ஒரு ஸ்தாபனமெனும் நிலையில் அரசாங்கமும் இடித்துரைக்கப் படுகிறது. ஒரு ஸ்தாபனமெனும் நிலையில் திருமணமும் கூட இடித்துரைக்கப்படுகிறது.”

பஹாய்களாகிய நாம் நடப்பில் உள்ள இத்தகையச் சிந்தனைகளினால் பாதை தவறி விடக்கூடாது. அவை அவ்வாறாக இருந்திருக்குமாயின், இறை அவதாரங்கள் தங்களுக்குப் பின் தமது பணியினைத் தொடர வேறு ஒருவரை நியமித்திருக்க மாட்டார்கள். அந்த ஸ்தாபனங்களை ஊழல்கள் ஊடுருவியது உண்மையாகவே இருந்திருந்தாலும், அத்தகைய சீர்கேடுகள் அந்த அந்த ஸ்தாபனங்களின் அமைப்பினால் ஏற்படவில்லை, மாறாக, அவற்றுக்கு உள்ள அதிகாரம் மற்றும் தொடர்ந்து அவை செய்ய வேண்டிய காரியங்கள் குறித்து அவற்றை மேற்கொண்டு வழிநடத்தும் வழிமுறைகள் இல்லாத காரணத்தினால் அவை சீர்குலைந்து போயின. பாதுகாவலர் கூறுவது: “பஹாவுல்லா எல்லா ஸ்தாபனங்களையும் சமயத்தில் இருந்து நீக்கிவிட வில்லை, மாறாக கடந்தக் கால ஸ்தாபனங்களின் வீழ்ச்சிக்குக் காரணமாக விளங்கிய சீர்கேடுகளைத் துடைத்தொழிக்கக்கூடிய பாதுகாப்புக் கவசங்களை அளித்துள்ளார்.” என்பதாகும். அத்தகையக் கவசங்கள் யாவை என்பதைக் கண்டு கொள்வதும் கற்பதும் மிகவும் ஆர்வமளிக்கக்கூடியதாகவும், அவற்றை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகவும் உள்ளது.

பற்றின்மையின் சவால்

வேறு வார்த்தைகளில் கூறப்போனால், நம்மைப் பற்றறுத்து, இக்காலத்தில் ஸ்தாபனங்கள்பால் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கைளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதே நமக்களிக்கப்பட்டுள்ள சவாலாகும். பார்க்கப் போனால் இந்த அவநம்பிக்கையாகப்பட்டது, வழக்கில் இருப்பதோடு, துரிதமாக வளர்ந்தும் வருகின்றது. அதோடு, தங்களது நிர்வாக ஸ்தாபனங்கள்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துரிதமாக வளர்ந்து வரும் அந்த நம்பிக்கையின்மை மற்றும் ஆதரவின்மை ஆகியவற்றிலிருந்தும் பஹாய்கள் தங்களை விடுவித்துக் கொண்டு, தங்களது பஹாய் ஸ்தாபனங்களோடு தங்களுக்கு உள்ள உறவை பாதிக்கக் கூடிய அளவிற்கு அத்தகைய மனப்பான்மைகளை வளரவிடவும் கூடாது.

அவை இரண்டும் ஒன்றல்ல. அவை முற்றாக மாறுபட்டவை. நமது ஸ்தாபனங்கள் இறைவனால் உருவாக்கப்பட்டவை, அவரது அவதாரத்தால் உருவாக்கப்பட்டவை. அவற்றுக்குப் பண்புக்கூறுகள் உள்ளன. சீரழிக்கக்கூடிய மனப்பான்மைகள் மற்றும் நடத்தை ஆகியவற்றிலிருந்து தன்னைத் தூய்மைப் படுத்திக்கொள்ள அதற்கு உதவக்கூடிய, அதனோடு இணைந்து வந்துள்ள ஒரு வழிமுறை அதற்கு உண்டு. உலக வழிகளிலிருந்து அது முற்றாக மாறுபட்டு உள்ளது. நமது பஹாய் நிர்வாக முறைக்குள் கறைபடிந்த உலக முறைகளைப் புகுத்துவோமேயானால், அதிகபட்சம் அதைத் தற்காலிகமாக ஸ்தம்பிக்கச் செய்வோம். அவ்வளவுதான். ஆனால், நம்முடைய சுய ஆன்மீக வளச்சியினைப் பொறுத்தமட்டில், அதை ஈடுசெய்ய முடியாத அளவிற்குக் கெடுத்துக் கொள்வோம்.

நாம் புதிய மனப்பான்மைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பஹாவுல்லா மற்றும் அப்துல் பஹா ஆகியோரின் ஒப்பந்தத்தின்பால் ஓர் ஆழமான புரிந்துகொள்ளலை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். “நான் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்கிறேன்” என விண்ணப்ப அட்டையில் கையொப்பம் இட்டால் மட்டும் போதாது. பலவித விருதுகளைத் தாங்கிய மக்கள் பலர் நம்மைச் சுற்றி உள்ளனர். அவர்கள் யாராயினும் நான் அவர்களை ஏற்றுக் கொள்கிறேன். நல்லது, அவ்வளவுதான். அப்படியா? இல்லை! அது போதாது நண்பர்களே!

நமது சமூகத்தில் அடங்கியுள்ள பல ஆபத்தான சக்திகளினால் நாம் அடித்துச் செல்லப்படுவோம். விஷம் போல் சமூகத்தை ஊடுருவக்கூடிய சக்திகள் உள்ளன. நாம் நம்மை இப்போது காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நமது அத்தகைய பாதுகாப்புக் கவசம், ஒப்பந்தத்தில் ஓர் ஆழ்நிலை புரிந்துகொள்ளலை உருவாக்கிக் கொள்வதே ஆகும்.

பாதுகாவலரால் எழுதப்பட்ட ஒரு மிக மிகக் கடினமான, சவால் மிக்க  வாசகப் பகுதியை உங்களுக்கு வாசித்துக் காட்ட விரும்புகிறேன். நான் உச்சரிக்கவே பயப்படும் சில விஷயங்களை பாதுகாவலர் அதில் குறிப்பிடுகிறார். நான் அவற்றைப் படிப்பதன் காரணம் அவை பாதுகாவலரால் எழுதப்பட்டுள்ளன. நான் பாதுகாப்பாக உள்ளேன். நான் அவற்றைப் படிப்பதற்காக நீங்கள் என்னைக் குற்றம் கூற முடியாது. பாதுகாவலரே எழுதியுள்ளார். உங்கள் முன் நின்று, நான் இப்போது வாசிக்கப் போகும் வாசகங்களில் அடங்கியுள்ள அதே விஷயங்களை எனது சொந்த வார்த்தைகளாக உச்சரிப்பதற்கு எனக்குத் தைரியம் கிடையாது. பாதுகாவலர் கூறுவதாவது: பஹாவுல்லா மற்றும் அப்துல் பஹா ஆகிய இருவரின் ஒப்பந்தங்களைப் பற்றிய அறிவும் மெச்சுதலும் பெறுவதில் அன்பர்கள் ஆழ்படுத்தப் பட வேண்டும். ஒவ்வொரு பஹாயினுடைய மெய்நம்பிக்கையின் அரணும், சமயத்தின் புற எதிரிகளின் சோதனையையும் தாக்குதல்களையும் அவர் தாங்கிக் கொள்ள உதவுவதும் இதுவே.” இதுவரை நான் வாசித்தது சிறிது சுலபமாகவே இருக்கின்றது. நானே அதைத் தைரியமாகக் கூறியிருப்பேன். சரி, இப்போது மிகக் கடினமான பகுதிக்கு வருவோம்.

“சமயத்தின் புற எதிரிகளின், மற்றும், அதனினும் மிகவும் ஆபத்தான, விஷமிகளான, அரைமனதுடனான, ஒப்பந்தத்தின்பால் உண்மையான பற்றுதல் இல்லாமல் அதனால் சமயத்தின் பகுத்தறிவிற்கு உட்பட்ட விஷயங்களை மட்டும் ஆதரித்து அதே சமயம் இறைவனின் சமயம் முழுமையும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் ஆன்மீக அஸ்திவாரத்திற்குச் சமயத்திற்கு உள்ளிருந்தவாறே குழிபறிப்போரின், சோதனையையும் தாக்குதல்களையும் தாங்கிக் கொள்ள உதவுவக்கூடிய ஒவ்வொரு பஹாயினுடைய மெய்நம்பிக்கையின் அரண் இதுவே.”

ஒப்பந்தம்: அது நமது கவசம்

இப்போது தெரிகிறதா, நான் இவ்விஷயங்களை உச்சரிப்பதற்கு ஏன் இவ்வளவு பயந்தேன் என்று? இவை யாவும் பாதுகாவலரின் வார்த்தைகள். ஒப்பந்தத்தில் ஆழ்படுவதன் மூலமாக மட்டுமே, புற எதிரிகளை மட்டும் அல்ல, ஆனால் அவர் குறிப்பிடும், அதிக அபாயகரமான தாக்குதல்களான, விஷமத்தனமாகத் தாக்குதல்களைத் தொடுக்கக்கூடிய, சமயத்தின்பால் ஓர் உண்மையான பற்றுதல் இல்லாமல், சமயத்தின் பகுத்தறிவிற்கு உட்பட்ட விஷயங்களை மட்டும் ஆதரித்து அதன் ஆன்மீக அஸ்திவாரத்திற்குக் குழிபறிக்கும், சமயத்திற்குள் இருக்கும் அரைமனம் கொண்டோரின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியும்.

நண்பர்களே, ஒருவரைக் குறித்து நீதி வழங்கிட நமக்கு உரிமை கிடையாது. தனி நபர்கள் என்ற முறையில் நாம் நீதிபதிகளாக இருக்க முடியாது. இதோ இவர் இருக்கின்றாரே, இவர்தான் அந்த அரைமனம் கொண்ட, பகுத்தறிவு சார்ந்த நம்பிக்கைகளை மட்டும் கொண்டு, ஆன்மீகமானதைக் குழிபறிப்பவருமான  நம்பிக்கையாளர்களில் ஒருவர், என நாம் கூறிட முடியாது. அத்தகைய ஒரு சொல்லை உச்சரிப்பதற்கு எனக்கு உரிமை கிடையாது. இந்த அறையிலோ அல்லது இந்த நாட்டிலோ உள்ள ஒருவரைப் பற்றியோ அல்லது நீங்கள் என்னைப் பற்றி அவ்வாறு கூறிடவோ உரிமை கிடையாது.

மனிதர்களைத் தரம் பிரிப்பதற்கோ அல்லது அவர்களது குற்றம் குறித்து நியாயம் வழங்கிடவோ நாம் இங்கு கூடவில்லை. ஆனால் பாதுகாவலர் கூறுவது என்னவென்றால், நமது பஹாய் சமூகம் அத்தகைய மனிதர்களையும் உள்ளடக்கியுள்ளது என்பதே ஆகும்! நாம் தரம் பிரித்திருக்கும் அத்தகைய மனிதர்களுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட இங்கு குழுமியிருக்கவில்லை. நாம் இங்கு கூடியிருப்பதன் காரணம் என்னவெனில், நாம் நம்மை ஆன்மீக ரீதியில், ஆரோக்கியப்படுத்திக் கொண்டும், பலப்படுத்திக் கொண்டும், அதன் மூலம் நாம் குறிப்பிட்ட அந்த மனிதர்கள் யாராக இருப்பினும், அவர்கள் எங்கே இருப்பினும், அவர்களைப் பற்றி நியாயம் வழங்காதும், ஆனால் அவர்களுடைய அபாயகரமான, விஷமமான தாக்கங்கள்பால் பாதுகாப்புடன் இருப்பதற்காகவே.

ஆக, நமது வேலை குறைக் கண்டுபிடித்து அதைக் களைவது அல்ல. மனிதர்களைத் தரம் பிரித்து இவர் நல்லவர், அவர் கெட்டவர் எனும் குறிப்புச் சீட்டுகளை அவர்கள் மேல் ஒட்டி விடுவதற்காவும் அல்ல. நமது வேலை, ஆன்மீக ரீதியில் உறுதியடைந்தும், ஆரோக்யமடைந்தும், நமது ஸ்தாபனங்கள் பால் உண்டாகியுள்ள இந்த எதிர்படையான மனப்பான்மைகளைச் சமாளிக்கவும், ஒப்பந்தத்தில் நம்மை ஆழ்படுத்திக் கொண்டும் — பாதுகாவலர் கூறியுள்ளதை உள்ளது உள்ளபடி கடைபிடிப்பதுமே ஆகும்.

இச்சோதனைகளைச் சந்தித்திடும் வேளை, நமது சமூக அமைப்புக்கள் மற்றும் ஸ்தாபனங்கள்பால் ஒரு புதிய மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளும் அதே வேளை, எதையும் யோசிக்காமல் விமர்சனம் செய்வது குறித்து ஒரு மறு ஆய்வும்  நாம் செய்ய வேண்டும். ஆங்காங்கே இந்த விமர்சனங்கள் நடக்கின்றன. நமது பஹாய் புனித வாசகங்களும், இவ்வித விமர்சனமானது, பஹாய் கலந்தாலோசனை மற்றும் சமூகச் செயற்பாடுகள் சார்ந்த அம்சங்களுக்கு உகந்த ஒன்றாகும் என கூறுகின்றன மற்றும் அது குறித்து யாரும் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் அதே வேளை நமது புனித வாசகங்களில், பாதுகாவலர் குறிப்பிட்ட அந்த “குரூரமான மற்றும் எதிர்படையான” விமர்சனங்களின் மிகவும் அபாயகரமான பண்புக்கூறுகள் பற்றியக் குறிப்புகளும் உள்ளன.

“ஒரு  சரீரம்(தீஷீபீஹ்) என்ற முறையில் ஒரு (பஹாய்) ஸ்தாபனம் குறித்த எதிர்படையான விமர்சனங்களும் விவாதங்களும், திண்ணமாகத் தவிர்க்கப்பட வேண்டும்.” பெரும்பாலான மக்கள் இதில் அடங்கியுள்ள வித்தியாசத்தைக் கண்டு கொள்ளும் அளவிற்குப் புத்திசாலிகள் என்றே நான் நினைக்கின்றேன். அதே சமயம் நாம் விதித்துள்ள ஒழுங்கு முறைகளைக் கடைபிடிக்காமல் எப்படி தவிர்த்துச் செல்வது என்பதிலும் அவர்கள் சாமர்த்தியசாலிகளே. ஏனென்றால், இது வெறும் ஓர் உரையில் அடங்கியுள்ள வார்த்தைகள் குறித்த கேள்வி அல்ல ஆனால் தகுந்த மனப்பான்மை குறித்தக் கேள்வி ஆகும்.

எதிர்படையான விமர்சனங்களிலிருந்து விடுபடுதல்

தனது காரியங்கள் மற்றும் நடத்தைக் குறித்து மேம்பாடும் கூர்மையும் அடையத் தேவையில்லை என பாசாங்கு செய்யாத, ஆனால் பாதுகாவலர் கூறுவது போல், ஆன்மீகச் சபையின் அதிகாரத்தைக் குழிபறிக்கும் விளைவினைக் கொண்டிராத எதிர்மாறான விமர்சனங்களிலிருந்து விடுபட்டிருக்கும், உருபெரும், மேம்பாடு காணும் ஒரு பஹாய் சமூகத்தையே நாம் காண விரும்புகிறோம்

நமது பஹாய் சமூகங்கத்தில் ஒரு சில இடங்களில் நடக்கும், விரயம் மிகுந்த, அழிவை ஏற்படுத்தும், எல்லோரும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடக்கூடியச் செயலாக, வரக்கூடிய “பேராபத்து” பற்றிய யூகவாதங்களே உள்ளன. எவ்விதம் நமது நகரங்களின் பலமாடிக் கட்டிடங்கள் அப்படியே பொசுங்கிப் போகப் போகின்றன, மற்றும், இந்த அமெரிக்க நாட்டின் கரையோரங்களில் எப்படி எதிரி நீர்மூழ்கிகள் சூழ்ந்து நிற்கப் போகின்றன எனும் மிகவும் பிரமிப்பு ஏற்படுத்தும் விஷயங்களை நீங்கள் முன்பு பல வேளைகளில் செவிமடுத்திருப்பீர்கள். இந்தப் “பேராபத்து” எவ்விதமாக நிகழப் போகின்றது என்பது நமக்குத் தெரியாது என பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி — ஒரு வாசகப் பகுதியில் — இவ்விதமான பகுதிகள் பல உள்ளன — கூறியுள்ளார். இப்போது இங்கு நிகழ்வதும் அந்தப் “பேராபத்துதானே!” இப்போது நிகழ்வதே பேராபத்து என பாதுகாவலர் கூறும் ஒரு பகுதி உள்ளது, நானும் அதை இப்போது உங்களுக்கு வாசித்துக் காட்டப் போகின்றேன். இறுதியில் அந்தப் பகுதியை நாம் கண்டுபிடித்து விட்டோம். சரி. பாதுகாவலர் சார்பாக எழுதப்பட்ட, டிசம்பர் 18, 1949 என திகதியிடப்பட்ட, ஜூலை 1950 அமெரிக்க பஹாய் செய்தியில் பிரசுரிக்கப்பட்ட கடிதம் அது. அதில் பாதுகாவலர் என்ன கூறுகிறார்? அதில் அவர் இந்த “பேராபத்தை” வரையறுக்கின்றார்.

அவர் கூறுவது: “குரூரமான விமர்சனம் நிச்சயமாக ஒரு “பேராபத்தே” ஆகும், ஆனால், பஹாவுல்லாவின் அமைப்பு முறையில் (அதாவது நிர்வாக அமைப்பு முறை) நம்பிக்கையின்மையும் அவருக்குக் கீழ்படியாதிருப்பதிலும் — அவர் அதை தடுத்துள்ளார் — அதன் (குரூரமான விமர்சனத்தின்) ஆணி வேர் அமைந்து உள்ளது. வாக்களிப்புச் (பஹாய் தேர்தல்) சம்பந்தமான, தேர்ந்தெடுப்பதில், சபையின் முடிவுகளுக்குக் கீழ்படிவது, போன்றவற்றில் பஹாய் விதிமுறைகளைப் பஹாய்கள் கடைபிடிப்பார்களேயானால், பிறரை விமர்சித்துக் கொண்டிருப்பதில் வீணாக்கப்படும் சக்திகள் கூட்டுறவுச் செயல்களின்பால் திருப்பி விடப்படலாம்.”

ஆக, சமூக அமைப்புகளின்பால் ஒரு புதிய மனப்பான்மையை உண்டாக்கிக் கொள்ளப்பட வேண்டியதின் ஒரு கூறாக திருவொப்பந்தத்தில் ஆழ்படுதல் உள்ளது. இரண்டாவதாக, விமர்சனங்கள் செய்வது குறித்து மாற்று சிந்தனை செய்ய வேண்டி உள்ளது, ஏனென்றால், தகுந்த முறைகளில் விமர்சனம் செய்வது பஹாய் கலந்தாலோசிப்பின் ஒரு கட்டுமானக் கூறாக உள்ளது. மூன்றாவது கூறும், இறுதியானதுமான, நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது மிகவும் புரட்சிகரமான ஒன்று. அது, பெரும் எண்ணிக்கையிலான நம்பிக்கையாளர்களைச் சமயத்திற்குள் கொண்டுவரத் தேவைப் படும் வரைமுறைகளை வரையறுக்குமாறு பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டது தொட்ட ஒரு வாக்குமூலம். அவர் நான்கு வரையறைகளை முன்வைத்தார்: அந்த நான்கில் மூன்று வெளிப்படையானவை, ஆனால் நான்காவது மிகவும் அசாதாரணமானது. இந்த நான்கு வரையறைகளும் இன்றி சமயத்திற்குப் பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்த்திடவே முடியாது என அவர் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:

பஹாவுல்லாவின்பாலும் அவரது சமயத்தின்பாலும், அதன் ஸ்தாபனங்களின்பாலும், மற்றும் நம்பிக்கையாளர்கள் ஒருவர்பால் ஒருவர் கொள்ளும், அந்த  உண்மையான அன்பில் விளையும் அந்த உற்சாகமின்றி.” முதல் மூன்றும் தெளிவாக உள்ள வரையறைகள் ஆகும் ஆனால் நான்காவது அப்படி இல்லை.

பஹாவுல்லாவின்பால் நம்பிக்கையாளர்கள் உண்மையான அன்பு வைத்திருப்பார்கள் என்பது இயற்கையான எதிர்பார்ப்பு. அவரது சமயத்தையும் அவ்வாறே நேசிப்பார்கள் எனவும் எதிர்ப்பார்ப்போம். அதுபோன்றே, அன்பர்கள் ஒருவர்பால் ஒருவர் இயற்கையிலேயே அன்பு கொள்வார்கள், எனவும் எதிர்பார்ப்போம்.

ஆனால், பெரும் எண்ணிக்கையிலான மக்களைச் சமயத்தின்பால் ஈர்த்திட சமய நிர்வாக ஸ்தாபனங்கள்பால் ஓர் அன்புணர்வை, உண்மையான அன்புணர்வை நாம் உருவாக்கிக் கொள்வதைப் பாதுகாவலர் அந்த நான்கு வரைமுறைகளில் ஒன்றாக வரையறுத்துள்ளார். இது பஹாய்த் திருவெளிப்பாட்டின் ஒரு திடுக்கிட வைக்கும் புதுமை. சரி, நாம் இப்போது இந்த ‘இல்லினோய்’ மாகாணத்தில் இருக்கின்றோம். இங்கு உங்களிடம் வந்து, “நான் இல்லினோய் மாகாணத்தின் சட்டமன்றத்தை நேசிக்கின்றேன்” எனக் கூறப் போகும் ஒருவரை எங்கு தேடுவது. அல்லது “நான் பிரதிநிதிகள் சபையை நேசிக்கின்றேன்,” அல்லது செனட் சபையை நேசிப்பதாக கூறும் ஒருவரை நாம் எங்கு தேடுவது. ஒருவேளை, “நான் சுப்ரீம் கோர்ட்டை நேசிக்கின்றேன்” எனக் கூறும் ஒருவரை, குறிப்பாக தனக்குச் சாதகமாகக் கிடைத்த நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக அப்படி கூறும் ஒருவரை நாம் காணலாம். “நான் மந்திரிசபையை நேசிக்கின்றேன், நான் நகரசபையை நேசிக்கிறேன், நமது உள்ளூர் நிர்வாகசபையை நேசிக்கிறேன்,” எனக் கூறக் கூடியவரை எங்கு தேடுவது. இது அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளின் சிந்தனைகளுக்கு அன்னியமானது. இது இயற்கைக்கு விரோதமானது. இது புரட்சிகரமானது.

குறைந்த அளவு அரசாங்கமே நல்லது என்பது தற்போது பரவலாக இருக்கும் எண்ணம். அரசாட்சி மிகும்போது, இந்த ஏமாற்றுக்கார அரசியல்வாதிகளை எப்படி வெளியாக்குவது எனும் எண்ணம் தோன்றும். ஆனால் இங்கு இதற்கு முற்றிலும் நேர் எதிரான ஒரு திசையில் நமது சிந்தனை செல்கிறது.

நாம் நடப்பு உணர்வுகளிலிருந்து சிறிது அப்பாற்பட்டோ, அல்லது அதற்கும் சிறிது அப்பாற்பட்டோ இருக்கவில்லை. நாம் அதிலிருந்து நேர் எதிரான ஒரு சிந்தனையைக் கொண்டிருக்கின்றோம். ஏனென்றால் நமது சமயம் அவ்வாறு கூறுகின்றது. நமது ஸ்தாபனங்கள்பால் நாம் உண்மையான அன்புணர்வைக் கொண்டிருக்க வில்லையென்றால் நாம் பெரும் பெரும் எண்ணிக்கையிலான நம்பிக்கையாளர்களை ஈர்க்கமுடியாது என நமது சமயம் கூறுகின்றது. நான் என்னுடைய உரையை முடிக்கும் தருவாயில் இருக்கின்றேன். ஆனால் இன்னும் சில விஷயங்கள் உள்ளன. நன்றாக இயங்குகின்றன எனத் தோன்றும் நமது சமய ஸ்தாபனங்களை நேசிப்பது மிகவும் சுலபம். மிகவும் சிறப்பாக இயங்குகின்ற ஸ்தாபனங்களை நேசிப்பது சுலபம். ஒரு சமூகத்தில் இருந்துகொண்டு, அங்கு நன்றாக இயங்கி வரும், அற்புதமான காரியங்களை இயற்றி வரும் ஒரு சபையின்பால் நிச்சயமாக அன்பு உண்டாகும். நானும் அத்தகைய சபைகளை நேசிக்கத்தான் செய்கின்றேன்.

மேம்பாடு பொறுத்த வரை குறைபாட்டுடன் இயங்கியும், தவறுகள் செய்தும், தனது சமூகத்தினரின் ஒற்றுமையில் பிரச்சினைகளை எதிர்நோக்கியும், தனது செயல்களில் குறைகள் நிறைந்தும், அதன் பிரதம செயலாக்கங்களில் பிரச்சினைகள் இருந்தும், சமூகத்தின் முக்கியமான நிகழ்ச்சிகளை உங்களுக்குத் தெரிவிக்காமலும் இருக்கும் ஒரு சபையை நேசிப்பது எப்படி? இதுதான் நமது சவால். கபடமில்லாமல் அதை எப்படி செய்வது?

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி நேசிக்கிறார்களோ அப்படித்தான் இத்தகைய சபைகளையும் நாம் நேசிக்க வேண்டும். ஒரு குழந்தை தடுமாறியும், மோசமாக நடந்து கொண்டும், நோய்வாய்ப் பட்டும், அல்லது பொது இடங்களில் எப்படி நடந்துகொள்வது எனத் தெரியாமலும் இருந்தால், அதன் பெற்றோர் அதனை நேசிக்கவே செய்கின்றனர். ஏனெனில், அப்பெற்றோர் அக்குழந்தை இயல்பாகவே மேம்பாட்டிற்கான இயற்திறனைப் பெற்று இருப்பதை உணர்ந்துள்ளனர். அன்புடனும் அரவணைப்புடனும், அக்குழந்தை மேம்பாடடைந்து தனது இயற்திறன்களின் நிறைவேற்றத்தைக் காணும். எதிர்படையான விமர்சனங்களாலும், அன்பில்லாமலும் அக்குழந்தையின் வளர்ச்சி குன்றிப்போகும்; அதன் மேம்பாடு நிறைவேற்றம் அடையாது போகும்.

இப்படியாகவே நமது சமய ஸ்தாபனங்களை நேசிக்கும்படி நாம் கேட்டுக் கொள்ளப்படுகிறோம். செயற்கையாகவோ, கபடமாகவோ அல்ல, ஆனால் மகிமை மிக்க, அற்புதமான எதிர்காலத்தைக் கொண்டுள்ள பஹாவுல்லாவால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஸ்தாபனங்கள் எனும் முறையிலேயே இவற்றை நாம் நேசிக்க வேண்டும். நமது அன்பினாலும், நமது அரவணைப்பாலும், தோள்கொடுப்பதன் மூலமாகவும், நமது தயவுணர்ச்சியின் மூலமாகவும், புரிந்துகொள்ளல் மூலமாகவும், அவை வளரும். அவை பரிணாமம் பெறும். இத்தகைய அன்பினையே நாம் கோருகின்றோம். தாழ்ந்து கொண்டும் மறைந்துகொண்டும் உள்ள தங்களது ஸ்தாபனங்கள்பால் நம்மைச் சூழ்ந்துள்ள (பஹாய் அல்லாத) சமூகத்தின் மக்களின் விமர்சிக்கும் போக்கு, சந்தேகம், ஒழுங்கின்மை, மற்றும் ஊழல் மனப்பான்மைகளி்லிருந்து அடியோடு மாறுபட்ட அன்பினையே நாம் வேண்டுகின்றோம்.

மூன்றாண்டுத் திட்டத்தின் மூன்று குறிக்கோள்கள்

இப்போது முடியும் தருவாயிலிருக்கும் மூன்றாண்டுத் திட்டம், மூன்று மையக் குறிக்கோள்களை வலம் வருகின்றது. அவையாவன, தனி நம்பிக்கையாளர்களின் பற்றுறுதியின் உயிரூட்டத்தை மேம்படுத்துவது, சமயத்தின் மனித வளங்களைப் பெரிதும் அதிகரிப்பது, மற்றும் உள்ளூர் மற்றும் தேசிய ஸ்தாபனங்கள் முறையாக இயங்குவதைப் போஷிப்பதும் ஆகும். பஹாய்கள் எனும் முறையில் நமது பங்கிற்கு இந்த மூன்றாண்டுத் திட்டத்தின் நிறைவேற்றத்தை நான் குறிப்பிட்டுள்ள அந்த மூன்று சிந்தனா சோதனைகளை வெற்றிகொள்ள முயற்சிப்பதன் மூலமாகவே காணமுடியும் எனும் அடிப்படையில்தான் உங்கள் கவனத்தை நான் கோரியுள்ளேன்.

நான் எனது உரையை ஒரு முடிவிற்குக் கொண்டுவந்துவிட்டேன். இந்த அமெரிக்க பஹாய் சமூகம் பெரும் ஆற்றல்களைப் பெற்றுள்ள ஒரு சமூகம் என்பது பரவலாக அறியப்பட்டதே. அப்துல் பஹா தமது திருப்பாதங்களை இங்கு பதித்து இந்தப் பூமியைப் புனிதப் படுத்தியுள்ளார். அவர் தமது அன்பையும் ஆதரவையும் இந்நாட்டிற்குப் பொழிந்துள்ளார். பாதுகாவலர் தமது முக்கியமான செய்திகளையெல்லாம் இந்த நாட்டின் மெய்யன்பர்களுக்கே எழுதியுள்ளார். அமெரிக்க பஹாய்கள் தெய்வீகத் திட்டத்தின் நிருபங்களை அமலாக்கம் செய்யக்கூடியவர்களில் தலையாய நிலையில் உள்ளவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். உலக நீதி மன்றமும், அமெரிக்க பஹாய் சமூகத்தையும் அதன் ஸ்தாபனங்களையும் அப்துல் பஹாவும் பாதுகாவலரும் தங்களுடைய அன்பைப் பொழிந்த வண்ணத்திற்குச் சிறிதும் குறையாது நேசிக்கின்றனர் என்பதை இங்கு நான் அறுதியிட விரும்புகிறேன். உங்கள் அனுமதியோடு, நாங்கள் அதிக நம்பிக்கையுடனும் உறுதியுடனும் அமெரிக்க பஹாய்கள்பாலும் இச்சமூகம் ஆற்றக் கூடிய பெரும் பங்கின்பால் பெருமையுடனும் எங்கள் முகங்களைத் திருப்பியுள்ளோம் எனக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

அமெரிக்க பஹாய்கள் குறித்த வருங்கால மகிமை மற்றும் இறுதி இலக்கு பற்றி சமயத் திருவாசகங்களில் வாக்களிக்கப்பட்டுள்ளவை யாவும் முற்றாகவும் முழுமையாகவும் நிறைவேற்றப்படும் என்பதில் என் மனதில் சிறிதும் சந்தேகமே இல்லை. இச் சமூகத்தைப் பற்றி அப்துல் பஹா கூறியது யாவும் மெய்ப்பிக்கப்படும். அது நடக்கும். அது தவிர்க்கப்பட முடியாதது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஐயப்பாடு உண்டு. அதாவது, இதில் நீங்களும் நானும் எங்கிருப்போம்? இம்மாபெரும் காட்டுமானத்தில் நாமும் நமது பங்கினை ஆற்றுவோமா? இந்த வெற்றிகளில் நமக்கும் பங்கிருக்குமா? நாம் இப்போது உட்படுத்தப் பட்டுள்ள இந்த அபாயமிக்க, சவால்கள்மிக்கதுமான சிந்தனா சோதனைகளை நாம் வெற்றிகொள்வோமா? வெற்றி அலைகளின் மீது வலம் வருவது நமது விதியா அல்லது தோல்வி அலைகளால் கரைக்கு அடித்துத் தள்ளப்படும் சருகுகள் நாம் எனும் கதியா? பஹாய்ச் சரித்திரத்தில் காணப்படும், தாங்கள் சந்தித்த சோதனைகளை வெல்ல முடியாமல் வீழ்ந்துபட்டவர்களின் பட்டியலில் நாமும் சேர்க்கப்படுவோமா? நண்பர்களே, முடிவு நம் கைகளில்தான் உள்ளது. முடிவு நம் கைகளில்தான் உள்ளது.

ரித்வான் 2009 செய்தி மீதிலான சிந்தனைகள்


ரித்வான் 2009 செய்தி மீதிலான சிந்தனைகள்
டாக்டர் பீட்டர் கான் வழங்கிய உரை
3 ஜூலை 2009

ரித்வான் செய்தி

முக்கியமானதும், நீண்டகாலத்திற்கு அவசியமானதுமான ரித்வான் 2009 செய்தி எனும் செய்தி பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் மகிழ்ச்சியடைகின்றேன். உங்களுக்குத் தெரிந்திருப்பதைப் போல, அச்செய்தியானது உலக நீதிமன்றத்தின் பல்வேறு செய்திகளிடையே தனது சுருக்கத்திலும், தனது உள்ளீட்டிலும் தனித்தன்மை வாய்ந்ததொரு செய்தியாகும். முன்பு எப்போதுமில்லாத அளவுக்கு ஒரு சிறப்பான நிகழ்வு பற்றி, மேலும் சொல்லப் போனால், உண்மையில் மானிட உலகம் முழுவதிலும் சமய வரலாறு பற்றி அச்செய்தி மிகக் கடுமையாக எடுத்துரைக்கின்றது; அது யாதெனில், உலக நீதிமன்றத்தின் உத்தரவுக்கேற்பவும், அனைத்துலக போதனை நிலையத்தின் உறுப்பினர்களுடைய விலைமதிப்பில்லா துணையுடனும் உலகம் முழுவதிலும் நடைபெற்று முடிந்த, சுமார் எண்பதாயிரம் மக்கள் பங்கேற்ற 41 வட்டார மாநாடுகள்தான் அது.

உங்களுக்குத் தெரிந்திருப்பதைப் போல, அத்தொடர்ச்சியான மாநாடுகளை உலக முழுவதிலுமுள்ள பஹாய் சமூகத்தின் மீதும், இறுதியாக பொது சமுதாயத்தின் மீதும் ஓர் ஒன்றிணைக்கவல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. நமது சமயம் உலகம் முழுவதும் படர்ந்திருக்கின்றது என்பதற்கு அது வெளிப்படையான ஒரு சித்தரிப்பாகும். அத்துடன், அவ்வட்டார மாநாடுகள், தற்போதைய திட்டத்தின் இறுதிக்குள் உலகம் முழுவதிலும் 1,500 தீவிர வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிட வேண்டும் எனும் குறிக்கோளுக்கு ஒரு சாதகமான எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வருடத்திய ரித்வான் பண்டிகை கொண்டாட்ட உணர்வு கொண்டது என கருதப்படலாம்: அதாவது, ரித்வான் 2009க்குள் உலகம் முழுவதிலும் 1,000 தீவிர வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தியிருப்பதற்கான கொண்டாட்டம் என்பதுடன், அதன் அடிப்படையில் பார்த்தால், ஐந்து வருடத் திட்டத்தின் இலட்சியம் நிச்சயம் நிறைவேற்றம் காணும் எனும் உலக நீதிமன்றத்தின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு தெரிகின்றது.

இன்றிரவு நான் பேசப்போவது அத்தகைய விவரங்கள் அல்ல. ஆனால், நான் பேசப்போவது, அந்த செய்தியினுள் புதைந்திருக்கும் இரண்டு முக்கியமான பிரச்சனைகள் பற்றிதான். அந்த இரண்டு அம்சங்களை ஆய்வு செய்வதானது, இந்த ரித்வான் செய்தியை ஆழமாகக் கற்பதற்கும், சமயம் போய்க் கொண்டிருக்கும் போக்கை நன்கு புரிந்து கொள்வதற்கும் அவசியமானதாக இருக்கும்.

நான் பேசப்போகும் அந்த இரண்டு அம்சங்கள், முதலாவதாக, உலகின் சரித்திரத்தில் தற்போதைய பஹாய் நடவடிக்கையின் முக்கியத்துவத்தை முதலில் ஆய்வு செய்திடும். இரண்டாவதாக, சமயத்தில் மாற்றம் குறித்த ஒரு மனப்பாங்கினையும் ஆய்வு செய்திடும்.

பஹாய் நடவடிக்கையின் முக்கியத்துவம்

வீழ்ச்சி எனும் செயல்பாடு

இன்றைய உலகில் இரண்டு செயல்பாடுகள் இயங்கிக் கொண்டு வருகின்றன என்பது மக்களால் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றுதான் நான் நினைக்கின்றேன். அவற்றில் ஒன்று, வாழ்க்கையின் தரத்தில் வீழ்ச்சி எனும் செயல்பாடு. மற்றது, உரிமைகளை இழந்துள்ள சிறுபான்மை மக்களின் விடுதலை, அனைத்துலகத் தன்மை வாயிலாக ஓர் உலகளாவிய இயல்புநிலை, பயனளிக்கும் காரியங்களில் தொழில்நுட்ப பயனீடு ஆகியவை உட்பட சாதகப்பூர்வமான அம்சங்களில் வளர்ச்சி. இந்த இரண்டு செயல்பாடுகள் இருந்து வருகின்றன என்பதை அங்கீகரிப்பதானது, பல வருடங்களாக மானிடத்தின் குணவியல்பாக இருந்து வந்துள்ளது என்று பொருள்படாது. 20ம் நூற்றாண்டின் சரித்திரத்தை நாம் ஆய்வு செய்வோமாகில், அந்நூற்றாண்டில் அளவுக்கதிகமான மகிழ்ச்சி நிரம்பிய காலங்களும் இருந்துள்ளன என்பது தெரிய வரும். அந்த மகிழ்ச்சி நிரம்பிய காலங்கள் பிரபல அரசியல் தலைவரைத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டதைப் போன்றதாகவும் இருக்கலாம் அல்லது 1989ம் ஆண்டு பெர்லின் சுவர் இடித்துத் தள்ளப்பட்டதைப் போன்று எல்லையற்ற வாக்குறுதியைக் கொண்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் அமைந்திருக்கலாம். ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நெருக்கடிமிக்க கடும் பிரச்சனைகள் வந்திருப்பதன் காரணமாக நடப்புக்கள் அவ்வளவு சுமூகமாக இல்லை என பொதுப்படையாக மனிதர்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர் என்றுதான் எனக்குத் தோன்றுகின்றனர்.

உலக நடப்பு குறித்து சாதாரண பார்வையாளர் ஒருவரிடம் நீங்கள் கேட்பீர்களாயின், அவர், “வீழ்ச்சி, உயர்ச்சி என இரண்டு விஷயங்கள் ஒரே நேரத்தில் உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன,” என பதிலளிப்பார்.

இந்தத் தலைப்புப் பற்றி நமது பஹாய் போதனைகளில் நிச்சயமாக நிறையவே எழுதப்பட்டுள்ளது. ஆனால், இப்போது நமது கருத்து அதுவல்ல. இந்த வீழ்ச்சி எனும் செயல்பாடு குறித்து மக்களிடையே எழுந்த உணர்வலைகள் பல வடிவங்களில் வெளிப்பட்டு வருகின்றன. இப்பிரச்சனை தற்காலிகமானது என்றும், விரைவில் அது சீர்பட்டு விடும் என்றும் பெரும்பான்மையான மக்கள் எண்ணுகின்றனர். “இந்த நெருக்கடி வந்த பிறகு பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் அல்லது மற்ற நாடுகளிலும் விவகாரங்கள் அவ்வளவு நன்றாக இல்லை. ஆனால், சில அதிர்ஷ்ட நிலையுடன் நிலைமை வழக்க நிலைக்குத் திரும்பும், அமைதிமிக்க சமுதாயமாக நாம் திரும்பவும் மாறுவோம்,” என்றுதான் பலர் நினைக்கின்றனர்.

ஆகவே, இந்த வீழ்ச்சி தற்காலிகமானதே எனும் ஒரு பொதுவான எதிர்பார்ப்பு நிலவுகின்றது. உலகளாவிய நிலையில் அவ்வீழ்சியின் அகலம் எடைபோட்டுப் பார்க்கப்படவில்லை. அதன் இறுதியான கடுமை ஏற்கப்படவுமில்லலை. அந்த வீழ்ச்சியிக்கான அடிப்படை காரணங்களைப் பற்றி உலகளாவிய நிலையில் ஓர் அறியாமை நிலவி வருகின்றது. அதற்கு மாறாக, அவ்வீழ்சிக்குக் காரணம் சில மாற்றங்களின் அறிகுறிகளே என கருதப்பட்டு வருகின்றது: அதவாது, அரசியல் மாற்றங்கள், கல்வியின் மேம்பாடு, சில சிறுபான்மை மக்களின் சுய கட்டுப்பாடின்மை, பெண்களின் சுதந்திரம் ஆகியவை அந்த மாற்றங்களாகக் கருதப்படுகின்றன. இப்பிரச்சனைகளுக்குத் தீர்வாக ஒரு திடீர் நிவாரணம் ஏற்பட்டு அப்பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து, கவலையெனும் மேகங்களைக் கலைத்து விட்டு, அதனால் மானிடமானது தனது வருங்காலத்தை நோக்கி அமைதியுடனும், இணக்கமாகவும் பணம் செய்திடும் என பெரும்பான்மையாக மக்கள் நம்பிக்கையுடன் கருதுகின்றனர்.

இவ்வாறான மனபோக்குகளை நாம் பஹாய் திருவாசகங்களின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது என நினைக்கின்றேன். ஏனெனில், பஹாய்கள் எனும் முறையில் நாம் சந்திக்கும் சவால் யாதெனில், அறியாத நிலையில் பொது சமுதாயத்தின் இத்தகைய மனப்போக்குகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர்க்கும் சவாலாகும். அதற்கு மாறாக, நாம் அதிகாரப்பூர்வமான பஹாய் வாசகங்களின் அடிப்படையில் இப்பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்த நமது மனக்கருத்துகளை உருவாக்கிக் கெள்ள வேண்டும். இந்த அதிகாரப்பூர்வமான பஹாய் வாசகங்கள் பொது சமுதாயத்தில் தற்போது பரவியுள்ள கருத்திலிருந்து முற்றாக மாறுபட்டவையாகும். இத்தலைப்பு மீது பாதுகாவலர் எழுதியுள்ள சில பகுதிகளை நான் உங்களுடைன் பகிர்ந்து கொள்கின்றேன். பஹாவுல்லாவினுடைய சமயத்தின் பரந்தளவிலான பரப்பெல்லையைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது பாதுகாவலர் பின் வருமாறு கூறுகின்றார்:

“அத்தகைதோர் அதி உன்னத உதவி வெளிப்படுவதற்கு, தீவிர குழப்பநிலை கொண்ட காலமும், பரந்தளவிலான துயரமும் தவிர்க்கவியலாததாக இருந்திடும்..1”

இன்னோரிடத்தில் அவர் சொல்வதாவது:

“ஏற்கனவே உலகினைச் சூழ்ந்துள்ள இருளைப் போலவே, உலகம் அனுபவிக்க வேண்டிய வேதனைமிக்க துயரங்கள் இன்னும் தயாரிப்பு நிலையிலேயே இருக்கின்றன.அதன் கருமைத்தன்மை இன்னமும் கற்பனை செய்து பார்க்கப்படாமலேயே இருக்கின்றது..”

சமயத்தினுடைய அதிகாரப்பூர்வமான வாசசகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இன்னுமொரு வாசகப் பகுதி மிக விவரமான வாசகப் பகுதியாகும். அது இக்கூட்டத்தினரை கவலையுறச் செய்யக்கூடும். வருங்ாகலத்தைப் பற்றி ஷோகி எஃபெண்டி விவரமாகக் குறிப்பிட்டு பகுதி இது:

“திவ்விய உண்மைகளையும், கோட்பாடுகளையும் ஏற்கவும், கடைப்பிடிக்கவும் மறுத்தொதுக்கி மாசுபடுத்திய கவனக்குறைவான மானிடத்தின் ஆன்மாவின் மீது, கற்பனை செய்து பார்க்க முடியாத பேரச்சத்தைக் கொடுத்திடும் இன்னல்களும், நினைத்துப் பார்க்க முடியாத நெருக்கடிகளும், புரட்சிகளும், போர்களும், பஞ்சமும், கொடிய நோய்களும் ஒன்று சேர்ந்து தொடர்ந்து தாக்கி வரும். மானிடம் இது வரை அனுபவித்திடாத முடக்க நிலை அதனைப் பீடித்து, ஏற்கனவே சீர்குலைந்து போன சமுதாயத்தை, அச்சமுதாயம் மறுசீரமைப்புச் செய்யப்பட்டு, மறுமலர்ச்சியடையச் செய்யப்படுவதற்கு முன்னதாக மேலும் துன்புறுத்திடும் .”

இவ்வாசகத்தில் காணப்படும் “சீர்குலைந்து போன சமுதாயம்” எனும் சொற்றொடர் இவ்வருடத்திய ரித்வான் செய்தியில் “சீர்குலைந்து போன உலகம்” என எதிரொலிக்கின்றது. நமது வாசகப் பகுதிகள் எதிர்பார்ப்பது போலவே, உலகின் வீழ்ச்சி எனும் செயல்பாடு நெடு நீண்டகாலத்திற்குத் தொடர்ந்து நடைபெற்று வரும். காலவரை எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால், அது பல ஆண்டுகாளக இருக்கக்கூடும் அல்லது பல நூற்றுணாடுகளாகவும் இருக்கக்கூடும். அத்துயர்மிகுந்த காலத்தில், சமுதாயத்தின் சீர்குலைவும், மனிதகுலத்தைத் தாக்கிடும் இன்னல்களும் தற்போது கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு நெடு நீண்டகாலம் நீடிக்கவல்லதாகவும், மாபெரும் பரப்பெல்லையைக் கொண்டதாகவும் இருக்கும். அத்தொல்லைகள் தொடர்ந்திடும்போது, நம்மைச் சுற்றியுள்ள மக்களிடமிருந்து பல்வேறான உணர்வகளை நாம் எதிர்பார்க்கலாம்.

அவர்களுடைய முதல் வேலை மறுப்பு தெரிவிப்பதாகும்: “நீங்கள் கூறுவது போல நிலைமை அப்படியொன்றும் மோசமாக இல்லை. ஜெரெமியா போன்று நீங்கள் நடந்து கொள்கின்றீர்கள். நிலைமை மேம்பட்டு வருகின்றது.”

அம்மாதிரி மறுப்பு தெரிவிக்கும்போது, அப்பிரச்சனைக்கு எவரையாவது பலி கடாவாக இரையாக்க ஆள் தேடப்படும். குறிப்பாக அந்த பலி கடா, ஒரு சிறுபான்மை சமூகத்தவராக இருக்கலாம், அல்லது வட அயர்லாந்தைப் பாதித்துக் கொண்டிருக்கும் அங்குள்ள குறவர்களாக இருக்கலாம், மத்திய கிழக்கிலுள்ள யூத மக்களாக இருக்கலாம் அல்லது உலகின் வேறெங்கிலுமுள்ள மற்ற மக்களாகவும் இருக்கலாம். கல்வியின் படர்க்கை ஒரு கவர்ச்சிகரமான வில்லனாக சித்தரிக்கப்படும். “மக்கள் பள்ளிக்குச் சென்று சில பைத்தியக்காரத்தனமான கருத்துகளைக் கற்றுக் கொண்டு வந்து சமுதாயத்திற்குத் தொல்லை கொடுக்கின்றனர்.”

பெண் விடுதலைப் பற்றிய பேச்சு இன்னொரு கவர்ச்சிகரமான பலிகடாவாக இருக்கின்றது. “பெண்களை வீட்டில் தங்கி பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டால், ஆண்களுக்கு நிறைய வேலைகள் காலியாக இருக்கும். சட்டர்டே ஈவினிங் போஸட் எனும் பத்திரிகையில் 1940ம், 50ம் ஆண்டுகளில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இருந்த அமைதியான நிலைமை மீண்டும் திரும்பும்.” இப்பிரச்சனைக்கு ஒரு தீர்க்கமான தீர்வை தேடும்பொழுது இவ்வாறான மனநிலை நிச்சயமற்ற ஒரு நிலைமையை ஏற்படுத்தி விடும் என்று நான் நினைக்கின்றேன்:”ஏதோ ஒன்று மிக மோசமான நிலையில் தவறாக இருக்கின்றது. அதற்கான பதில் என்ன என்பதை நாம் கண்டாக வேண்டும். அது இதுவா? அதுவா?” அதற்காக ஒரு தீவிர நிவாரணம் முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிறகு கைவிடப்படும். அதன் சில அறிகுறிகளை பல நாடுகளின் அரசியல் அரங்குகளில் நாம் இன்று காண்கின்றோம். அதவாது, தீவிர இடதுசாரி நிலையிலிருந்து வலதுசாரி நிலைக்கு தேர்தல் முடிவுகள் திரும்புகின்றன. ஒவ்வொரு நபரும் தேர்ந்தெடுக்கப்படும்போது, மக்கள் குழப்பமடைகின்றனர். சில வேளைகளில், நேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நபரின் பதவிகாலம் முடியும் முன்னரே அவர் வெளியேற்றப்படுகின்றார். மற்ற வேளைகளில், அவ்வாறான நபருக்குப் பதிலாக, அவருக்கு முற்றிலும் நேரெதிரான இன்னொரு நபரை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இது, மேலும் ஒரு தலைவரைத் தேட வைத்து இறுதியில் ஏமாற்றத்திற்கும், நம்பிக்கையின்மைக்கும் இட்டுச் சென்று விடுகின்றது: “இது வரை என்ன பயன் அடைநதோம்? ஏன் மீண்டும் முயற்சிக்க வேண்டும்?” என்ற எண்ணம் வந்து விடுகின்றது.

ஷோகி எஃபெண்டி ஓரிடத்தில் வீழ்ச்சி நிலையைக் குறிப்பிட்டு, அது இறுதியில், “காட்டுமிராண்டித்தனம், குழப்பங்கள், அழிவு ஆகியவற்றுடன்4.,” முடிவுறும் என்று கூறுகின்றார். இக்கசப்பானதும், இறுதியானதுமான இந்த முடிவின்போது மானிடத்தின் கொஞ்சங் கொஞ்சமான பகுதிகள் மட்டுமே அதனுடன் இணைந்திருக்கும் என்பதுதான் உண்மை.

சமயத்தின் பங்கு

அதன் அடிப்படை காரணம் என்ன? இவை யாவும் ஏன் ஏற்பட்டது? இவை யாவும் எங்கிருந்து வந்தது? இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. உலகின் அக்கொந்தளிப்புக்கள் மற்றும் பதற்றத்தினுடைய மூலம் என்ன என்பதைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் சில ஒளிமயமான பகுப்பாய்வுகள் இன்றைய சமுதாய இலக்கியங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன: அவை உட்பார்வைமிக்கவை, ஆழ்ந்த கண்ணோட்டமிக்கவை. ஆனால், ஒருகேள்விக்கு மட்டும் அந்தப் பகுப்பாய்வுகள் பதிலளிக்கவில்லை: இவை யாவும் எங்கிருந்து வந்தது? எனும் கேள்விதான அது. குழந்தைகளின் கேள்வி மாதிரி: “என்னைப் படைத்தது யார்?” – “கடவுள்”- “கடவுள் எங்கிருந்து வந்தார்?” -“இங்கிருந்து சென்று விடு”

மானிடச் சமுதாயத்தின் இந்த அடிப்படையான இறுதிக் கேள்வி பற்றி பஹாவுல்லா பேசியுள்ளார். மெய்யான சமயத்தை மனிதன் கடைப்பிடிக்கத் தவறியதே அந்த வீழ்ச்சிக்குக் காரணம் என பஹாவுல்லா கூறுகின்றார். அவர் கூறுவதாவது:

“உலக மக்களின் பாதுகாப்புக்கும், பொதுநலனுக்கும் சமயம் என்பது ஒரு பிரகாசமான ஒளியும், வெல்லப்படவியலா ஒரு வலிமையான அரணுமாகும்……….சமயமெனும் ஒளிவிளக்கு மூடி மறைக்கப்படுமானால், ஒழுங்கற்ற நிலையும், குழப்பங்களுமே விளையும். நேர்மை, நீதி, சாந்தி, அமைதி ஆகிய தீபங்கள் ஒளிரத் தவறி விடும்.” .”5

இந்த அடிப்படையில்தான் ஒருவர் ரித்வான் 2009 செய்தியை வாசிப்பார். உலகம் முழுவதிலும் நிலவி வரும் கொடுமைக்குள்ளாதல் என்பது குறித்தும், மானிடத்தை அக்கொடுையிலிருந்து மீட்க வேண்டியது நமது பொறுப்பும், பஹாவுல்லாவினுடைய பொறுப்புமாகும் எனும் அடிப்படையில் ரித்வான் 2009 செய்தியைக் காண முடியும். சமயம் என்ற ஒன்று இல்லாமல் போனதற்கும், கொடுமைக்குள்ளாதலுக்கும் என்ன தொடர்பு என நாம் கேட்கக் கூடும் அதற்கான பதில் கித்தாப்-இ-இகான் எனும் திருநூலில் காணப்படுகின்றது. அத்திருநூலில் பஹாவுல்லா பின்

வருமாறு கூறுகின்றார்: “ உண்மையைத் தேடிடும் ஓர் ஆன்மா இறைவனுடைய அறிவைப் பெற முயன்றிடும் வேளைதனில் எங்குச் செல்வது,எவரிடமிருந்து அதனைப் பெறுவது என்று எதுவும் அதற்கு தெரிந்திராவிடில் அதனை விடவும் கொடுரமானதொரு “கொடுமைக்குள்ளாதல்” இருந்திடவும் கூடுமா?”

மக்களை சிறையில் தள்ளி விடாமல் அல்லது வேறொரு நாட்டிற்கு அவர்கள் அகதிகளாக விரட்டி விடாமல் அல்லது அவர்களுடைய மனித உரிமைகளை இழக்கச் செய்து விடாமல் வாட விடப்படும் இந்நிலையே இறுதியான கொடுமைக்குள்ளாதல் நிலையாகும். ஒரு மானிட ஆன்மா உண்மைக்காக அலைந்து, இறைவனுடைய அறிவுக்காக அலைந்து, அதனைப் பெற எங்கே செல்வது என்றும், அதனை யாரிடமிருந்து பெறுவது என்றும் அவ்வான்மாவுக்குத் தெரியாவிடில், அதுவே ஆக உச்ச கட்ட அதி கொடுமைக்குள்ளாதல் நிலையாகும். மனிதகுலத்திடமிருந்து பஹாவுல்லா அகற்ற வந்துள்ள மெய்யான கொடுமைக்குள்ளாதல் இதுவேயாகும். அவ்விஷயத்தைப் பற்றியதுதான் ரித்வான் 2009 செய்தி.

உண்மைக்கு தேடியலைந்து திரிதலை நாம் இன்று காண்கின்றோம். மெய்யான சமயத்திற்குப் பதில் அதற்கான மாற்று ஏற்பாடுகளின் பல வடிவங்களின்பால் அத்தேடுதல் ஈர்க்கப்படுகின்றது. உதாரணமாக, சமய தீவிரவாதம், மதத்தலைவர்களின் சர்வதிகாரம் ஆகியவை மெய்யான சமயத்தின் வீழ்ச்சியினுடைய ஆதாரங்களாக நான் காண்கின்றேன்.

“வாக்களிப்பட்ட நாள் வந்து விட்டது” எனும் நூலில் ஷோகி எஃபெண்டி அவர்கள் இஸ்லாத்தின் வீழ்ச்சியையும், அதன் அதிகாரம் மற்றும் செல்வாக்கினுடைய தோல்யையும் பற்றிக் குறிப்பிடுகின்றார். அதற்கு நேர்மாறான சம்பவங்களாக இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கும் தற்போதைய நடப்புக்களின் அடிப்படையில் அந்த வீழ்ச்சியை நாம் எவ்வாறு மதிப்பீடு செய்வது? அதாவது, உலகின் பல நாடுகளில் (ஷியா அல்லது சன்னி பிரிவினரின்) இஸ்லாத்தின் எழுச்சி நிலவி வரும் இவ்வேளையில் அந்த வீழ்ச்சியை எப்படி மதிப்பீடு செய்வது? இஸ்லாத்தின் எழுச்சி என்பதை விட அதனை வீழ்ச்சியின் ஆதாரமாகத்தான் நான் பார்க்கின்றேன். அதிகாரத்தின் அப்பட்டமான சக்தியை அடைந்து தங்களுடைய பதவிகளையும், அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக மதத்தலைவர்கள் ஆன்மீகச் செல்வாக்கை கைக்கழுவி விடுகின்றனர்.

சமயத் தீவிரவாதம்- அது கிறிஸ்துவம் சார்ந்ததாக இருந்தாலும் சரி, முஸ்லீம்களைச் சார்ந்ததாக் இருந்தாலும் சரி, யூதர்களைச் சார்ந்ததாக இருந்தாலும் சரி, இந்து அல்லது புத்த சமயத்தினரைச் சார்ந்ததாக இருந்தாலும் சரி, அது மெய்யான சமயத்தின் வீழ்ச்சியைப் பிரதிநிதித்து, கொடுமைக்குள்ளாதலைத் தொடக்கி வைக்கின்றது.

உலகில் நடைபெற்று வரும் பகைமைகளும், பிளவுகளும் இக்கொடுமைக்குள்ளாதலின் ஒரு வெளிப்பாடாகவே நான் காண்கின்றேன்: ஓர் உள்ளார்ந்த அமைதியையயும், மன நிறைவையும் பெறும்பொருட்டு ஒருவர் தனது எல்லா ஏமாற்றங்களையும், ஆத்திரங்களையும், கோபதாபங்களையும், சினத்தையும் ஒரு வெளிச்சக்தியின்பால் திருப்பிடுவதற்காக அச்சக்தியை அடையாங்காணும் முயற்சி நடைபெறுகின்றது.

கொடுமைக்குள்ளாதலின் இன்னொரு வடிவம் யாதெனில், அர்த்தமுள்ள திடீர் தீர்வுகளை: தாக உணர்வு, வாழ்வில் பறிகொடுத்து விட்ட ஒன்றுக்கான பரிதவிப்பு-காலப்போக்கில் அது மணவாழ்க்கை மற்றும் சமுதாயத்தின் சீர்குலைவுக்கு இட்டுச் செல்கின்றது.

ஆன்மீக வெற்றிடத்தை நிரப்புவதற்காக அதீத சாகசச் செயலில் ஈடுபடுதல், மதுவருந்தலில் ஈடுபாடு அல்லது போதை பழக்கத்தில் ஈடுபடுதல் அல்லது அபாயகரமான விளையாட்டுக்களில் வேண்டுமென்றே ஈடுபடுதல் போன்ற செயல்களின் அடியில், பஹாவுல்லா தமது கித்தாப்-இ-இகான் திருநூலில் கூறுவதுபோல் ஓர் ஆன்மாக அர்த்தத்திற்காகத் தேடியலைந்து, உண்மையைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு, அத்தேடுதலின் மன உளைச்சலினால் சுய தீங்கு விளைவிக்கவல்லதும், மனநிறைவளிக்கவியலாததுமான காரியங்களில் ஈடுபடுகின்றது.

கொடுமைக்குள்ளாதலின் இன்னொரு வடிவம் யாதெனில், பிரபல ஹீரோவின்பால் பக்தி விசுவாசம் காண்பித்தல். அது கற்சிலையோ அல்லது வெண்கலச் சிலையோ அல்ல. ஆனால், அரசியல் பிரமுகர்கள், மனமகிழ்சசியூட்டுவதில் பிரபலமானவர்கள், விளையாட்டுத்துறையில் பிரபலமானவர்கள் முதியவர்கள். உதாரணமாக, அண்மையில் அகால மரணமடைந்த மைக்கல் ஜேக்ஸசனின் மறைவுக்காக உலகம் முழுவதிலும் காண்பிக்கப்பட்ட உணர்ச்சியலைகளைப் பாருங்கள். பிரபல சமயத் தலைவர் ஒருவருக்குக் கிடைக்கும் வீரவணக்கம் போன்று அப்பாடகருக்கு பக்தி விசுவாசம் காட்டப்பட்டுள்ளது: “மைக்கல் இறக்கவில்லை, மைக்கல் இன்னமும் உயிரோடுதான் இருக்கின்றார். மைக்கல் தனது இசையில் தொடர்ந்து வாழ்ந்து வருவார்.” நெவர்லாந்து மாளிகையின் முன் இரசிகர்கள் ஒன்று திரண்டு அங்கு மலர்கள் வைக்கப்படுகின்றன, அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெறப்போகும் நிகழ்வரங்கிற்கு பதினேழாயிரம் பேர் வரும் செவ்வாய்க்கிழமையன்று நேரிடையாகக் கலந்து கொள்ளப் போகின்றார்கள். எல்விஸ் பிரஸ்லே போன்று அவர் ஒரு ஹீரோவாகி, டென்னனெஸ்ஸி எனுமிடத்திற்கு ஆண்டுதோறும் ரசிகர்கள் யாத்திரைக்குப் போவதுபோல் இவரது இடத்திற்கும் யாத்திரைக்குப் போவார்கள்.

பிரபலமானவர்களுக்குச் செலுத்தப்படும் வழிபாடு பலவாறாகக் வெளிப்படுவதை நாம் காணலாம். ஆனால், அவற்றில் தேடுதலின் வேட்கையையும் நாம் காண முடியும், நானும் நீங்களும் போன்று தங்களுடைய ஆழ்ந்த உணர்வுகளை அர்ப்பணம் செய்வதற்கான ஒரு தேடியலைதலை அதில் நாம் காண முடியும், மெய்யான சமயயத்தினால் மட்டுமே மனநிறைவளிக்கப்படவல்ல ஒன்றை நாடிடும் தேடியலைதலை நாம் அதில் கண்டு கொள்ள முடியும். இத் தேடுதல் தற்போது பிரபல அரசியல் ஹீரோக்களின்பால் காண்பிக்கப்படுகின்றது. முதன் முதலாக அந்த அரசியல் தவைவர் பதவிக்கு வரும்போது சமயத்தலைவருக்குரிய பக்தி விசுவாசம் காண்பிக்கப்படுகின்றது. அதன் பிறகு நிலைமை வேறு விதமாக சென்று விடுகின்றது. சமய வழிபாட்டுச் சடங்கின்பால் காட்டப்படும் விசுவாசம்போல் விளையாட்டு ஹீரோக்களுக்கும் பக்தி காண்பிக்கப்படுகின்றது. நியாயமற்ற நம்பிக்கைகளும் விதிமுறைகளும் இக்கொடுமைக்குள்ளாதலின் இன்னொரு அம்சமாகும்.

நான் ஏன் இதையெல்லாம் சொல்கின்றேன்?

நான் இதைச் ஏன் சொல்கின்றேன் என்றால், ரித்வான் செய்தியின் அறிவுரைகளுக்கேற்ப வீழ்ச்சியெனும் செயல்பாட்டிற்கு அடிப்படையான நிவாரணம், பஹாய் சமயத்தைப் பறைசாற்றுதலேயாகும் என்பதை நாம் நம்புவதால்தான். ஷோகி எஃபெண்டியினால் தெளிவாக வருணிக்கப்பட்டிருக்கும் வீழ்ச்சி செயல்பாட்டின் இயல்பு மீது நாம் கவனம் செலுத்துகின்றோம். வருத்தப்படுவதற்கோ, ஊக்கமிழப்பதற்கோ நாம் அவ்வாறு செய்வதில்லை. மாறாக, நம்மைச் சுற்றி நடைபெற்று வரும் மானிடத் துன்பங்களை கண்டு, சமயத்தின் தேவைகளுக்கு சேவையாற்றுவதற்கும், தற்போதைய ஐந்தாண்டு திட்டத்தின் நிறைவேற்றத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கும், அணி அணியாக பிவேசித்தல் எனும் செயல்பாட்டில் இனி வரவிருக்கும் எல்லா அம்சங்களையும் நிறைவு செய்வதற்காகவும் அந்தத் தன்முனைப்பைப் பெறுகின்றோம். பிரார்த்தனைகள், திருவாசகங்கள், மற்றவர்களின் முன்னுதாரணம் ஆகியவற்றிலிருந்து மட்டுமே நாம் தன்முனைப்பைப் பெறுவதில்லை. ஆனால், அவற்றுடன் சேர்த்து தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் துயரமான செய்திக் காட்சிகள், உதாரணமாக டர்ஃபாரில் அல்லது சோமாலியாவில் அல்லது மேற்கு ஆப்ரிக்காவில் அல்லது கம்போடியாவில் மக்கள் அனுபவிக்கும் அவதிகள் பற்றிய செய்திப் படங்களிலிருந்தும் சமயத்தைப் போதிக்க வேண்டியதற்கான முனைப்பு நமக்குக் கிடைக்கின்றது.

அவ்வாறான செய்திக் காட்சிகளில் சமயத்தினுடைய தேவைகளுக்குச் சேவையாற்றுவதற்கான ஒரு புதிய சக்தியை நாம் காண்கின்றோம்: அச்செய்திப்படம் சமயப் போதனையுடன் மறைமுகமாக அல்லாமல் நேரடியாகவே சம்பந்தப்பட்டுள்ளது. அதாவது, வீழ்ச்சியிலிருந்து மானிடத்தை மீட்டெடுக்க வேண்டும் எனும் நோக்கத்தில் சமயப் போதனை நேரடியாகவே இணைந்துள்ளது.

சமயத்திற்குச் சேவையாற்றுதல் என்பது பல வேளைகளில் உற்சாகமளிப்பதாகவும், சக்தியளிப்பதாகவும், விடுதலையளிப்பதாகவும் இருக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், சில வேளைகளில் அச்சேவை அசதிமிக்கதாகவும், மன உச்ைசல்மிக்கதாகவும், ஏமாற்றமிக்கதாகவும் இருக்கின்றதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அது மனித சூழ்நிலையின் ஒரு பகுதி. அவ்வாறான நேரங்களில், மானிடத்தை

கொடுமைக்குள்ளாக்கப்படுதலிலிருந்து மீட்டெடுப்பதில் பஹாவுல்லாவுக்கு உதவிடும் நமது இலட்சியப் பணியிலிருந்து நாம் நமது உற்சாகத்தைப் பெறுகின்றோம். இதைத்தான் ரித்வான் 2009 செய்தி கூறுகின்றது.

நாகரிகத்தின் இயல்தன்மை

“சீர்குலைந்து விட்ட ஒரு சமுதாயத்தின்” மறுசீரமைப்பதில் சமயம் ஆற்றிடும் பங்கு பற்றி ரித்வான் 2009 செய்தி குறிப்பிடுகின்றது. தற்போதைய சமுதாயத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், பண்படுத்தப்பட்டுள்ள வாழ்வினுடைய கட்டுமானத்திற்குப் பயமுறுத்தல் என ஷோகி எஃபெண்டி குறிப்பிடுகின்றார். அவர் சொல்வதாவது:

நாகரிகங்கள், மிதவாதத்தின் எல்லைகளை மீற அனுமதிக்கப்படுமாயின், அது, தீமையின் தோற்றுவாயாக ஆகிவிடும். மிதவாதத்துடன் ஒரு கட்டுப்பாட்டுக்குள் நாகரிகம் இருந்து வந்தபோது அது நன்மையே அளித்து வந்துள்ளது.

“(நாகரிகத்தின்) தீச் சுவாலை மாநகரங்களை அழித்திடும் நாளை நெருங்கிக் கொண்டிருக்கின்றது….”

மனிதகுலத்தினுடைய பிரகாசமான வருங்காலத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர் பின் வரும் கேள்வியைக் கேட்கின்றார்:

“பரந்தளவினாதும், தனித்தன்மை வாய்ந்ததும், ஒளிமயமானதுமான ஒரு காலம் மானிட வரலாற்றில் பிரவேசிப்பதற்கு கிறிஸ்த சகாப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் சம்பவித்த ரோமாபுரியின் நாகரிக வீழ்ச்சியையே மிஞ்சிடும் ஒரு வீழ்ச்சி வரத்தான் வேண்டுமா?”

உங்களுக்குத் தெரிந்துள்ளதைப் போலவே, ரோமாபுரியின் சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைய சுமார் 400 ஆண்டுகள் பிடித்தது. அவ்வீழ்ச்சி திடீரென நடைபெறவில்லை. முதலில் வீழ்ச்சி நடைபெறத் தொடங்கி அங்குமிங்குமாக குளறுபடிகள் ஏற்பட்ட பிறகு கட்டுமானம் முழுவதுமே சரிந்தது. தற்போதைய காலத்தின் வீழ்ச்சிச் செயல்பாட்டை ஷோகி எஃபெண்டி நாகரிக வீழ்ச்சியாகக் குறிப்பிட்டு, அது மத்தியத்தரைக் கடல் பகுதியிலுள்ள ரோமாபுரி உலகில் மட்டுமே அல்லாமல் உலகம் முழுவதுமே நடந்தேறவிருக்கின்றது எனக் கூறுகின்றார். ரோமாபுரி இராஜ்யத்தின் வீழ்ச்சி குறித்து சிறிது பேசுவது நமக்குப் பயனுள்ளதாக இருக்கும். கிப்பன் முதல் ஸ்பெங்லர் வரை பலரும் அது குறித்து பல நூல்கள் எழுதி விட்டனர். ஆனால், நமது தற்காலத்திய எழுத்தாளர்கள் சிலர் அது குறித்து எழுதியவற்றின் மீது நான் அக்கறை கொண்டுள்ளேன். “நாகரிகம்” எனும் தலைப்பில் கென்னத் கிளார்க் என்பவர் ஒரு நூலை எழுதி, நாகரிகம் என்பது வரலாற்றின் பல்வேறு நேரங்களில் சம்பவிக்கும் அம்சம் என அதில் குறிப்பிட்டு, எந்தளவுக்கு நாகரிகம் வலுவான கட்டுமானத்தின் மீது எழுப்ப்பட்டிருப்பினும் அது உண்மையில், நொருங்கிபோகவல்ல அளவுக்கு மென்மையானதுதான் என அவர் விவரித்துள்ளார்.

நியூ ஆர்லின்ஸ் எனும் பகுதியை காட்ரினா எனும் கடும்புயல் தாக்கிய கொடூரக் காட்சிகளை தொலைக்காட்சியில் கண்டவர்களை, நாகரிகத்தின் மென்மைத் தன்மையையும் பார்த்திருப்பார்கள் (அது ஒரு தற்காலிக அம்சமாக இருப்பினும் கூட). ரோமாபுரி நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான பல காரணங்களை கிளார்க் முன் வைக்கின்றார்: அச்சத்தின் அதிகரிப்பு, விளங்கிக் கொள்ள முடியாதவற்றின் மீதுள்ள அச்சம், சமுதாயம், தத்துவம், சட்டங்கள், மனோபாவ செயல்பாடுகள் ஆகியவற்றின் மீது தன்னம்பிக்கையின்மை, (நன்னெறியில் அல்லாது சக்தியின்மை தொடர்பான) நடத்தையில் வீழ்ச்சி. நாகரிகத்தைப் பற்றி இன்னொருவரும் எழுதியிருக்கின்றார். அவர்தான் இந்திய தத்துவவாதியும், இந்தியாவின் மந்தைய துணை அதிபருமான டாக்டர் ராதாகிருஷ்ணன். “கிழக்கத்திய சமயமும், மேற்கத்திய சிந்தனையும்” எனும் தலைப்பு கொண்ட நூல் அது. ரோமாபுரியின் வீழ்ச்சியையும், கிறிஸ்துவத்தின் எழுச்சியையும் பற்றிய கிறிஸ்துவரல்லாத ஒருவரின் கண்ணோட்டம் அது. ரோமாபுரியின் சாம்ராஜ்ய வீழ்ச்சிக்கு அவரும் பல்வேறு காரணங்களை முன் வைக்கின்றார்: பேராசை, ஊழல். பரந்தளவிலான செழிப்புவளங்களின் வளர்ச்சியையும், பரந்தளவிலான வறுமையையும் சமுதாயத்தின் சமநிலையின் தடுமாற்றத்திற்கு இட்டுச் சென்றதை அவர் குறிப்பிடுகின்றார். என்ன நடைபெற்றது என்பதை அவர் முடிவாகக் கூறி, அது அமைதியின்மையின் ஒரு காலம் என்றும், உயர்ந்த அறிவார்ந்த வாழ்வின் வீழ்ச்சி என்றும், நேர்மைத்தன்மையின் வீழ்ச்சி என்றும், தத்துவம் தோல்வியடைந்து, இலக்கியம் மங்கி, சமயம் என்பது கண்டிப்பானதும், மூடநம்பிக்கைமிக்க ஒன்றாகவும் ஆகி விட்டது எனக் குறிப்பிடுகின்றார் அவர்.

அத்தகைய நாகரிக வீழ்ச்சி கொண்ட அபாயத்தை நமது உலகில் நாம் எதிர்நோக்கியிருக்கின்றோம். நமது சமயமானது, ஓர் உலக நாகரிகம் உருவாகுவதை இலட்சியமாகக் கொண்டிருக்கின்றது என்பது நமக்குத் தெரியும். பஹாவுல்லாவினுடைய மாற்றப்படவியலா வாக்குறுதியான அது நிறைவேற்றம் காணும் என்றும் நமக்குத் தெரியும். ஆனால், அந்த மாற்ற காலத்திற்குள் மிகப் பெருமளவிலும், நெடு நீண்ட காலத்திற்கு நீடிக்கவல்லதுமான பழைய நாகரிகத்தின் வீழ்ச்சி ஏற்பட்டு அதற்குப் பதிலாக புதியதொரு நாகரிகம் மலரும்.

ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்குவதில் தனது நோக்கத்தை உணர்வுப்பூர்வமாக காணும் முதல் சமயம் பஹாய் சமயமே என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது. வரலாறு பற்றிய எனது அறிவு ஓர் எல்லைக்குட்பட்டதுதான். நான் ஒரு பொறியியலாளர். நாங்கள் பல நூல்கள் வாசிப்பதில்லை. ஆனால், உதாரணமாக நான் கிறிஸ்துவத்தை பார்க்கும்போது, ஆரம்பகால கிறிஸ்துவர்களின் வாழ்வு சிரமிக்கதாயிருந்தது, இஸ்ரேயர்களல்லாதோரிடத்திலும் யூதர்களிடத்திலும் அவர்கள் கிறிஸ்துவின் வருகை பற்றிய நற்செய்திகளை மத்திய தரைப் பகுதியில் எடுத்துச் சொல்வதில் ஈடுபட்டு அதில் அவர்கள் வெற்றியடைந்தனர். கிறிஸ்துவ சமயம் விஸ்தரிப்பு அடைந்தபோது, பைசெண்டீன் நாகரிகமும் உயர்ச்சியடைந்து வந்தது. முஹம்மதுவின் ஆரம்பகால நம்பிக்கையாளர்கள் வருங்கால பாக்தாத், கொர்டோவா, டமாஸ்கஸ் ஆகிய ஆட்சி பீடங்களின் புகழொளிகளை தாங்கள் கண்ணுற்றதாக எடுத்துரைக்கவில்லை. ஆரம்ப கலாத்தில் அவர்களுடைய பணி பேகன் சிலைவழிபாட்டை துடைத்தொழிப்பதாகத்தானிருந்தது.

நமது சமயமோ, தனது ஆரம்ப நாட்களிலிருந்தே தனது இலட்சியம் ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்குவதுதான் என்றும், அது தொடர்பான வழிமுறையை அது தயாரித்துள்ளது என்றும் தொடர்ச்சியாக சொல்லி வந்துள்ளது.

நமக்கு ஒரு வினோத சக்தி இருக்கின்றது என்றும், “ஒரு புதிய நாகரிகத்திற்கான தேவைகளை இங்கு நீங்கள் எழுத வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டு ஒரு வெற்றுத் தாளை நமக்குக் கொடுக்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். நாம் அது குறித்து சிந்திக்கின்றோம். கையடக்கக் கணினிகளை விட அது மிகப் பெரிதான ஒன்று என நாம் கருதுகின்றோம்.

ஒரு நாகரிகத்தை எப்படி உருவாக்குவது?

ஆன்மீக தன்மை மாற்றம் வாயிலாக அடிப்படை நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஈடுபடுவதுதான் நாகரிகச் செயல்பாடு. நாம் அதனை ஒப்புக் கொள்ளக் கூடும். ஒரு நாகரிகம் என்பது சில தார்மீக, நன்னெறி மற்றும் ஆன்மீகப் பண்புநலன்களைப் பொருத்துள்ளது. (சற்று முன் நான் சொன்னது போல) நமக்குக் கொடுக்கப்பட்ட வெற்றுத்தாளில் நாம் விவரிக்கப்போகும் புதிய நாகரிகத்தின் புதிய நாகரிகத்தின் கட்டுமானம் என்ன?

அதில் சிலவற்றை நாம் சேர்க்கக் கூடும்:

-பல்வேறு காரணங்களுக்காக தனி நபர்களின் நடைமுறை வாழ்க்கை, சமூக வழிபாடு ஆகியவற்றை நாம் சேர்க்க விரும்புவோம்.

-அன்றாட வாழ்வின் தெய்வீக போதனைகளை பற்றிய ஆய்வு மற்றும் அவற்றின் அமலாக்கம் ஆகியவற்றில் ஈடுபடும் ஒரு நாகரிகத்தைக் கொண்ட தனிநபர்களை நாம் அதில் சேர்க்க விரும்புவோம். அதனால், நாம் நியாயமான வழியிலும், ஆக்கப்பூர்வமான வழியிலும் நாம் ஒரு நாகரிகத்தை உருவாக்க இயலும்.

-மானிடத்திற்கு சுயநலமற்ற உணர்வுடன் சேவையை வழங்கவல்ல ஒரு சமுதாயத்தை நாம் விரும்பக்கூடும். பேராசையும், சுயநலமுமிக்க மக்கள் நமக்குத் தேவைப்படாது. ஆனால், மக்களுக்கு பரந்தளவில் நன்மை செய்யக் கூடிய மக்களே நமக்குத் தேவை.

-பண்படுத்தப்பட்ட பண்புநலன்களை புதிய தலைமுறையின் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் அவர்கள் கொண்டு செல்ல வேண்டும் என நாம் விரும்புவோம்.

ஒரு நாகரிகத்தின் கட்டுமானத்தினுடைய அடிப்படை அம்சங்கள் அவைதான் என நீங்கள் ஒப்புக் கொண்டால், அவை சரியானவை அல்ல என்பதை நான் சொல்லியாக வேண்டும். ஏனெனில், அவை ஐந்து வருடத் திட்டத்தின் மைய நடவடிக்கைகள். வழிபாட்டுக் கூட்டங்கள், பயிற்சியக செயல்பாடு, ரூஹி பாட நூல்களைக் கற்றல், மானிடத்திற்குச் சேவையாற்றுதல் பாலர் வகுப்புகள், இளைஞர் வகுப்புகள், பால்ய இளைஞர் பயிற்சிகள் ஆகியவற்றைத்தான் நான் குறிப்பிட்டேன்.

நான் சொல்ல வரும் கருத்து என்னவென்றால், சமயத்தைப் பறைசாற்றும் நடவடிக்கையிலும், ஐந்து வருடத்தின் இலட்சியங்களை நிறைவேற்றுவதிலும், அதற்கும் அப்பாற்பட்டு வரவிருக்கும் காரியங்களிலும் நாம் ஈடுபட்டுள்ளோம் என்பதுதான். ஆனால், இங்கு மிக முக்கியமான விஷயம் என்னவெனில், தற்போதைய திட்டத்தின் நமது அன்றாட நடவடிக்கைகளின் வாயிலாக நாம் ஒரு புதிய நாகரிகத்தின் வேர்கள் ஸ்தாபிப்பதில் ஈடுபட்டு வருகின்றோம் என்பதுதான். அதீனா தெய்வம் போன்று நாகரிகம் ஒரு மாயஜாலமாக திடீரென வெளிப்பட்டு விடும் என்பது இதன் அர்த்தமல்ல. மாறாக, பொற்காலத்தின் இலட்சியமான அந்த நாகரிகம் படிப்படியாகவும், மெதுவாகவும், தலைமுறைக்கு தலைமுறை, ஆண்டுக்கு ஆண்டு, நூற்றாண்டுக்கு நூற்றாண்டு மலர்ந்து வரும். ஆனால், அந்த நாகரிகத்தின் வேர்கள் வரலாற்றின் இந்த நேரத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இருக்கின்றன. அதுதான் முக்கியம்.

சமயத்தில் மாற்றத்தைக் கையாளுதல்

தீர்க்கதரிசன வட்டத்தின் சமயங்கள்

இப்பொழுது நான், ஐந்து வருடத் திட்டத்தின் அம்சங்கள் அடிப்படையில் எனது இரண்டாவது கருப்பொருளை பற்றி பேசவிருக்கின்றேன். சமயத்தினுள் மாற்றம் எனும் கருப்பொருளின்பால் உங்களுடைய கவனத்தை நான் ஈர்க்க விரும்புகின்றேன்.

தீர்க்கதரிசன வட்டத்திலுள்ள எல்லா சமயங்களும் தங்களுக்குள் ஒரு முரண்பாட்டைக் கொண்டிருக்கின்றன என்பதை நான் கூற விரம்புகின்றேன்: அவற்றின் ஸ்தாபகர்களிடத்தில் பழுது இருந்தது என்பது இதன் பொருளல்ல. மாறாக, மானிட வரலாற்றில் அது ஒரு பரிணாம வளர்ச்சிக் கட்டம். இச்சமயங்கள் ஒவ்வொன்றும் மானிட ஆவிக்கு விடுதலை வழங்கி, அதன் வாயிலாக படைப்புத்தன்மையும், புதிய கண்டுபிடிப்புகளும், இறுதியில் சமூக பரிணாம வளர்ச்சியும் ஏற்பட்டது. அவற்றில் நான் முரண்பாட்டைக் காண்கின்றேன். இவையெல்லாம் நடைபெறுகையில், ஒரு சமயம் தோன்றும்போது, அதன் தொடக்கத்தில் எழுத்துப்பூர்வமான வரையறுக்கப்பட்டிந்த நடத்தையமைப்பு காலப்போக்கில் காலாவதியாகி விடுகின்றது. அது நடைபெறுவதற்குக் காரணம், சமயம் வெற்றிகரமாக அமைந்து விடுவதால்தான்: அது நாகரிகத்தை உருவாக்குகின்றது, அது கண்டுபிடிப்பை ஏற்படுத்துகின்றது, அது நடத்தையில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றது. ஆகவே, ஆரம்பத்தில் அதன் அவதாரப்புருஷராலோ, மற்ற தரப்பினராலோ கொடுக்கப்பட்டநடத்தைக் கோட்பாடுகள் காலாவதியாகி விடுகின்றன.

இந்த முரண்பாடு சமயம் சார்ந்த சமூகத்தில் பிளவை ஏற்படுத்தி விடுகின்றது. ஒரு தரப்பினர், சமயத்தினுடைய அதிகார மையத்தின்பால் விடாப்பிடியான விசுவாசம் கட்டிய நிலையில், மாற்றத்தை எதிர்க்கின்றனர். “பரவாயில்லை, அது நமக்கு தேவாலயத்தின் பாதிரியாரால், சமயத்தில் ஸ்தாபகரால் கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாம் கடைப்பிடித்து வருவோம்” என்ற நிலை வருகின்றது. எனவே, மாற்றத்தின்பால் விடாப்பிடியான எதிர்ப்பு ஏற்பட்டு

இறுதியில், தொடக்கநிலை வடிவத்தை தற்காத்திடும்பொருட்டு அது தீவிரவாதமாக உருவெடுத்து விடுகின்றது. இதில் இன்னோர் அதீத நிலை என்னவென்றால், மாற்றத்தை விரும்பும் தரப்பினர் அதிகாரத் தரப்பினருடன் முரண்படுகின்றனர். ஆகவே, பிரிவுகள் ஏற்படுகின்றன, எதிரணிகள் உருவாகின்றன. அங்கு அந்த மாற்றத்திற்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டு விடுகின்றன. ஒவ்வொரு சமயத்திலும் நாம் இதனைக் காண்கின்றோம்.

உதாரணமாக இஸ்லாத்தை எடுத்துக் கொள்வோம். இஸ்லாத்தின் புகழை நிலைநாட்ட மீண்டும் ஷரியா சட்டத்திற்கு திரும்பிட தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுவதை நாம் இன்று காண்கின்றோம். (அதனுடன் சேர்த்து அது தொடர்பான எல்லா பிரச்சனைகளும் உட்பட.). இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் நிலவிய நிலைபோன்று, தனித்து வாழும் ஒரு கட்டுப்பாட்டுக்குட்பட்ட நிலைக்கு பெண்கள் உட்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவதையும் நாம் காண்கின்றோம். அது முஹம்மதுவினால் கட்டளையிடப்பட்டதா, இல்லையா என்பது வேறு விஷயம். இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் நிலவிய உணவுக் கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவதையும் நாம் காண்கின்றோம். இவை அனைத்திலும் ஒரு மன உளைச்சலை நாம் காண்கின்றோம்.

அதே மன உளைச்சல் கிறிஸ்துவத்திலும் எழுகின்றது: கிறிஸ்துவத்தின் ஆரம்ப காலத்தில் மணவிலக்குத் தடை இப்பொழுது மன உளைச்சலுக்குக் காரணமாகி வருகின்றது; மக்களின் படிப்பறிவற்ற நிலை அதிகமாக நிலவிய ஆரம்ப காலத்தில் பொருத்தமாக இருந்த தேவாலாயத்தின் பாதிரிமார் அதிகாரம் இப்பொழுது இன்னொரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. (படிப்பறிவற்ற நிலையின்போது ஏதாவது ஒரு தலைவரின்பால் வழிகாட்டலுக்காககத் திரும்ப வேண்டிய அவசியம் இருந்தது). உணவுக் கட்டுப்பாடு தொடர்பான சட்டங்கள். இந்த மன உளைச்சல் குறித்து ஷோகி எஃபெண்டி குறிப்பிட்டிருப்பது சுவாரசியமானது. அவர் கூறுவதாவது:

தீவிரவாதிகளுக்கும், சுதந்திர விரும்பிகளுக்குமிடையே உள்ள இடைவெளி தொடர்ந்து அகலமாகிக் கொண்டே வருகின்றது.

அதன் பிறகு அவர், வீழ்ச்சியின் ஒர் பகுதியைக் குறிப்பிடுகின்றார். வீழ்ச்சியின் ஒரு பகுதியாக தீர்க்கதரிசன வட்டத்தின் மதம் சார்ந்த சமூகங்களின் இரு வேறு அதீத நிலைகளுக்கிடையிலான உளைச்சல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது

பஹாய் சமயத்தில் மாற்றம்

இப்பொழுது நாம் பஹாய் சமயத்திற்கு வருகின்றோம். நிச்சயமாக பஹாய் சமயம் மாற்றம் என்ற ஒன்றைக் கையாள வேண்டும். தோற்றத்தில் இரு வேறு நிலைகளாகவும், அதே நேரத்தில் ஒன்று மன்றொன்றுடன் தொடர்பு கொண்டதாகவுமுள்ள இரு வேறு நிலைகளை அது கையாள வேண்டும்: ஒன்று, சட்டப்பூர்வமானது, மற்றது, மனோத்துவ ரீதியதிலானது.

பஹாய் சட்டத்தின் கட்டமைப்பினுள் பிரச்சனை மிகவும் நேரடியானது: பஹாவுல்லாவினுடைய அதிகாரம், அவருக்குப் பிறகு, அப்துல் பஹாவிடம் வழங்கப்பட்டு, பின்னர், அவருக்கும் பிறகு பாதுகாவலரிடம் வழங்கப்பட்டு, பின்னர் உலக நீதிமன்றத்திடம் வழங்கப்பட்டு, இப்பொழுது, மாற்றம் எதையும் மேற்கொள்வதற்கு அசைக்க முடியாத சட்ட அதிகார மையாக அந்த உலக நீதிமன்றம் விளங்கி வருகின்றது. உலக நீதிமன்றத்தின் நிலையைப் பொருத்த வரை, மாற்றத்தை அமல்படுத்த அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மிக சுவாரசியமானது. அதற்கு பல பரிமாணங்கள் உண்டு. அவை:

-பஹாய் சட்டம் குறித்து படிப்படியாக தெளிவு அளிப்பதிலும், அதனை அமலாக்கம் செய்வதிலும் அந்த அமைப்புக்கு வழங்கப்பட்ட அதிகாரம், மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் அதிகாரம் வழங்குகின்றது. உதாரணமாக, ஹூக்குக்குல்லா: அச்சட்டம் திருநூலில் பல காலமாக இருந்து வந்தது. ஆனால், 1992ம் ஆண்டுதான் அது உலகளாவிய நிலையில் அமல்படுத்தப்பட்டது. இன்னமும் உலகளாவிய நிலையில் அமல்படுத்தப்படாத பல சட்டங்கள் கித்தாப்-இ-அக்டாஸில் இருக்கின்றன. அவற்றை உலக நீதிமன்றம் அமலாக்கம் செய்வதற்கு மாற்றம் வரும்.

-துணை விதிகள் ஏற்படுத்தி அதனை அமலாக்கம் செய்வதும், அதன் சட்ட எல்லைகளின் வரம்புகளுக்குள் உலக நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் சட்ட உரிமையாகும். வருங்காலத்தில் சமயம் அபிவிருத்தியடையவிருப்பதை ஷோகி எஃபெண்டி குறிப்பிட்டு பின் வருமாறு கூறுகின்றார்:

“புதியதும், மிகச்சிறந்தவையாகவுமுள்ள வழிமுறைகளைத் தேர்வு செய்வதில் பஹாய்கள் எப்பொழுதுமே கடைசி ஆளாக இருக்கக் கூடாது. ஆனால், அவ்வாறான வழிகளைத் தேர்ந்தெடுப்பதில் அவர்கள் முதல் ஆளாக இருக்க வேண்டும். ஏனெனில், அது சமயத்தினுடைய வலிமைமிக்க தன்னியல்புடன் ஒன்றிணைந்திருக்கின்றது. அது படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவது மட்டுமன்றி, முழுதும் புதிய கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை தன்னுள் கொண்டுள்ளது.”

துணை விதிகள் மீது மாற்றத்தைக் கொண்டு வரும் உலக நீதிமன்றத்தின் சட்டப்பூர்வமான இந்த உரிமை, சமயம் வளர்ச்சிக்குரியதாகவும், கலாச்சாரப்பூர்வமான பண்படுத்தப்பட்ட மாற்த்தின் முன்னணியில் இருந்து வருவதற்கும் வழியமைத்துக் கொடுக்கும் கருவிகளில் அது ஒரு பகுதியாகும்.

-உலக நீதிமன்றத்தில் சட்ட அமைப்பில் எடுத்துரைக்கப்பட்டிருப்பதைப் போன்று, அதற்கு பரந்தளவிலான அதிகாரம் உள்ளது; பஹாவுல்லாவினுடைய உலக அமைப்புமையைக் கொண்டு வருவதற்காக ஸ்தாபனங்களை நிறுவிக் கொள்ளும் மாபெரும் அதிகாரம் அதற்கு உண்டு: இச்சமயத்தில் அந்த அமைப்புக்கு வழங்கப்பட்ட அதிகாரம் ஒரு மாபெரும் அதிகாரம். அவ்வாறிருந்தபோதிலும், மாற்றம் தொடர்பான மனோத்துவ அங்கத்தை சமாளிப்பது பஹாய் சமூகத்தின் சவாலாக இருந்து வருகின்றது. நான் இதனைச் சொல்வதற்குக் காரணம், மாற்றம் இல்லையென்றால், ஒருவர் பாதுகாப்பு உணர்வுடனே சதா இருந்து வருவார்: அதாவது, ஒவ்வொரு நாளும் ஒருவர் பழையதையே திரும்ப திரும்ப செய்து வருவார், அதனைச் செய்வதற்கு சிந்தனை தேவையில்லை. ஒவ்வொன்றும் அந்தந்த இடத்தில் நிதானமுடன் செயல்பட்டு வரும். மாற்றம் வந்தவுடன் அவையெல்லாவற்றையும் அம்மாற்றம் தடம் மாற்றி விடுகின்றது. அது குறித்து ஒருவர் எதிர்ப்பு காட்டுவார்:” எப்போதும் இருந்து வந்துள்ளதைப் போன்று அது இல்லை. சிறு குழந்தையாய் நான் இருந்தபோது, அது குறித்தும், அப்போதைய நடத்தை குறித்தும் எனக்கு பல ஞாபகங்கள் உண்டு.” அதீத நிலைகளைத் தவிர்த்திடுமாறு ஷோகி எஃபெண்டி நமக்குப் பல இடங்களில் எச்சரித்துள்ளார். உதாரணத்திற்கு:

சமயத்தினுடைய வளர்ச்சியினுடைய குணவியல்பின் தன்மை மற்றும் அதன் வழிமுறை குறித்து அதிகவனத்துடன் கண்காணித்து வருவது நமது பிரதான பணியாகும்……. வெற்றியை நோக்கி எது மட்டுமே சமயத்தை வழிநடத்திச் செல்லவியலுமோ, அந்த நேரான பாதையிலிருந்து அதீத பழமைவாதம் ஒரு புறத்திலும், பொறுப்பற்ற சுதந்திரம் மறுபுறத்திலும் சமயத்தினுடைய வளர்ச்சியை தவற வைத்திடாத வகையில் அந்த அக்கண்காணிப்பு நடைபெற்று வரவேண்டும்..

அதே கருப்பொருளை கொண்ட மற்ற பல வாசகப்பகுதிகளும் உண்டு. உலக நீதிமன்றமும் அது குறித்து இவ்வாறு ஓரிடத்தில் கூறுகின்றது:

“கடந்த அருளாட்சிக் காலங்களில் நம்பிக்கையாளர்கள் பரஸ்பர பகைமைக் கொண்ட இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்தனர்: திருவெளிப்பாடு எடுத்துரைத்த அனைத்தின் மீதும் கண்மூடித்தனமான விசுவாசம் கொண்ட அணியினர் ஒரு தரப்பாகவும், எல்லாவற்றையுமே சந்தேகித்து கேள்வியெழுப்பிய இன்னொரு தரப்புமாக அவர்கள் பிரிந்திருந்தார்கள். எல்லா அதீத நிலைகளைப் போலவே, இந்த இரண்டு அணிகளும் தவறுக்கு வழிகாட்டப்பட முடியும்.

நான் இதை ஏன் சொல்கின்றேன் என்றால், கண்மூடித்தனமாக சட்டத்தை அப்படியே கடைப்பிடிக்கும் ஒருவருக்கு அந்நிலை பழைய நிலை மிக வசதியாக இருக்கும்:

-“நீ ஏன் இதை செய்கின்றாய்?”

-“இங்கே பாருங்கள், எழுத்துப்பூர்வமாகவே இங்கு தெளிவாக எழுதப்பட்டிருக்கின்றது. நீங்களே படித்துப் பாருங்கள்!”

அதீத பழைமைவாதத்திற்கு எதிராக ஷோகி எஃபெண்டி நம்மை எச்சரித்துள்ளதைப் போன்று, கண்மூடித்தனமாக சட்டத்தை அப்படியே கடைப்பிடிக்கும் பழக்கத்தை கடைப்பிடிப்பதைத் தவிர்த்திட நாம் எச்சரிக்கப்படுகின்றோம். இது குறித்து அப்துல் பஹாவும் நம்மை எச்சரித்துள்ளார். மேற்கின் நட்சத்திரம் எனும் சஞ்சிகையில் அவர் இப்படிக் கூறியுள்ளார்:

“கண்மூடித்தனமாக சட்டத்தை அப்படியே கடைப்பிடிக்கும் பழக்கம், தலைமைத்துவ ஆசையைத்தான் சுட்டிக் காட்டுகின்றது. அச்சட்டத்தை அமல்படுத்துவபர் சமயத்தினுடைய அறிவுப்பூர்வமான புரிந்துகொள்ளலைக் காண்பிக்கின்றார். ஆனால், அதிலுள்ள ஆன்மீக வழிகாட்டல் இன்னமும் ஸ்தாபிக்கப்படவில்லை.”

அப்துல் பஹாவிடமிருந்து வந்துள்ள கவலையளிக்கும் ஒரு வாசகப் பகுதியாகும் இது.

சமயம் வெளிப்பட்டு வரும் ஒவ்வொரு கட்டத்திலும், அங்கு மாற்றம் நிகழ்ந்தபோதெல்லாம், அது நம்பிக்கையாளர்களுக்கு ஒரு சோதனையாகவே இருந்து வந்துள்ளது: பஹாய் சரித்திரத்தை நான் வாசிக்கும்பொழுது, அப்துல் பஹாவினுடைய நிர்வாகக் காலத்தில் நடைபெற்ற பல செயல்கள் பல நம்பிக்கையாளர்களுக்குச் சோதனையாக அமைந்துள்ளன என்பது எனக்குத் தெரிய வந்தது. அவர் மேற்கத்திய நாட்டின் மீது காண்பித்த கவனம் அவற்றில் ஒன்று: “சமய போதனைகளைப் பெறுவதற்கு இங்கு இன்னமும் பல மக்கள் இருக்கின்றபோது, ஏன் கனடா அல்லது ஐக்கிய அமெரிக்கா அல்லது ஆஸ்திரேலியா அல்லது மற்ற தொலை தூரத்துப் பகுதிகள் பற்றி கவலைப்பட வேண்டும்?

“அவர்களை நாம் இறுதியில் சென்றடைவோம்”-; தெய்வீகத் திட்டத்தின் நிருபங்கள், நண்பர்கள் உலகம் முழுவதும் அனுப்பி அவரது உயில் மற்றும் சாசனத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளைத் தொடக்கி வைத்தன.

சமயத்தின்பால் விசுவாசமாக இருந்த பல நண்பர்களுக்கு அந்த நேரத்தில் ஒரு சோதனை இருந்தது. ஷோகி எஃபெண்டி காலத்திலும் அம்மாதிரியான சோதனை இருந்தது. அவரது நடத்தை அப்போது சிலருக்கு சோதனையாக இருந்தது. அச்சோதனை இப்போது சரித்திரத்தில் மறைந்து விட்டது. ஷோகி எஃபெண்டி செய்த ஒரு காரியம் விசுவாசமான பல நம்பிக்கையாளர்களுக்கு சோதனையாக அமைந்தது. அந்த நம்பிக்கையாளர்கள் ஒப்பந்தமீறிகள் அல்லர். அவர்கள் ஒப்பந்தத்தில் சந்தேகம் கொண்டவர்களும் அல்லர். ஆனால், குழப்பத்திற்கு இலக்கானார்கள்: “ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஏன் அவர் மசூதிக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டார். அவரது பாட்டனார், உதராணப்புருஷர் அவ்வாறு சென்று வந்தாரே? தனது மூதாதையர்களைக் போலன்றி ஏன் அவர் மேற்கத்திய உடைகள் அணிகின்றார்?” “ஏன் அவர் 1921 முதல் 1937ம் ஆண்டு வரை நிர்வாக அமைப்புமுறையை எழுப்புவதில் மிகக் கவனமாக இருந்தார்? கட்டுப்பாடு மிக்க சமயம் எனும் நிலையிலிருந்து சுதந்திரமான ஆன்மீக சமயம் என்பதற்குப் பதிலாக அவர் சமயத்தை ஓர் அமைப்பாக மாற்றியமைப்பதில் ஈடுபடுகின்றாரே?” “பஹாய் சட்டத்தை மிகக் கடுமையாக மீறியவர்களை ஏன் சமயத்தை விட்டே அவர் வெளியேற்றினார்? அன்பு எங்கே? மன்னிப்பு எங்கே? பாவத்தை மறைக்கும் கண்கள்தாம் எங்கே?” “உயிரோடிருக்கும்போதே சிலரை ஏன் இறைசமயத்தின் திருக்கரங்கள் எனும் அமைப்புக்கு உறுப்பினர்களாக்கி இறுதியில் துணைவாரிய உறுப்பினர்களைக் கொண்டு வந்தார்?” சில விசுவாசமான நம்பிக்கையாளர்கள் அவர்களது இறப்புக்குப் பிறகு இறைசமயத்தின் திருக்கரங்கள் என அழைத்து, பின்னர், சில காலம் கழித்து உயிரோடு வாழ்ந்து கொண்டிருந்த சில நம்பிக்கையாளர்களை அதே அமைப்பின் உறுப்பினர்களாக்கினார்.

உலக நீதிமன்றம் தனது பொறுப்புக்களை ஆற்றிக் கொண்டிருந்த காலத்தில் அந்த உயரிய ஸ்தாபனம் மாற்றத்தை ஏற்படுத்தி அதே மாதிரியான சோதனையைக் கொண்டு வந்தது. நேர்மையான, அர்ப்பணமிக்க, விசுவாசமிக்க நம்பிக்கையாளர்கள் அச்சோதனைக்கு இலக்கானார்கள். உலக நீதிமன்றம் தனது முதற் காரியமாக, கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய யாத்திரிகர்கள் ஒன்றிணைத்தபோது, அக்காரியத்தினால் ஆழமான சோதனைக்குள்ளான சிலருடன் நான் பேசினேன். அவர்கள் சமத்தின்பால் விசுவாசமிக்கவர்கள், அவர்கள் சமயத்தின்பால் அர்ப்பண உணவுமிக்கவர்கள். ஆனால், அக்காரியத்தினால் அவர்கள் ஆட்டங் கண்டனர். அதே போன்று, பாதுகாவலர் இல்லாத நிலையில், ஹூக்குக்குல்லா பணம் உலக நீதிமன்றத்தின்பால் வழங்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டபோது, அது பலருக்கு சோதனையாக அமைந்தது. கண்ட ஆலோசகர்கள் வாரியங்களின் ஸ்தாபிதம், நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குறித்து சந்தேகம் கொண்ட பலருக்கு சோதனையாக அமைந்தது. அதுபோல, அனைத்துலக போதனை நிலையம் ஸ்தாபிக்கப்பட்டபோதும் அதே சோதனை காத்திருந்தது. உலக நீதிமன்றம் புதிய ஸ்தாபனங்கள் அமைத்துக் கொள்ளலாம் என்று உலக நீதிமன்றத்தின் விதிமறைகள் இருந்தும்கூட, வட்டார பஹாய் பேரவைகள் அமைக்கப்பட்டபோது, அதுவும் பலருக்கு சோதனையைக் கொண்டு வந்தது: “ தேசிய ஆன்மீகச் சபைகள் என்ன ஆகும்? ஏன் அவற்றின் அதிகாரம் அகற்றப்பட்டு விட்டது?” பல ஆண்டுகளாக நாம் வட்டார பஹாய் பேரவைகள் இல்லாமல் செயல்பட்டு வரவில்லையா, ஏன் இப்போது மட்டும் அதற்கு தேவை ஏற்பட்டது?”

நாம் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக வாழ்வோமாகில், வருங்காலத்தில் பல விதமான மாற்றங்களை நாம் சந்திக்க நேரிடும்.

நான் எனது உரையில் இறுதியாக ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசப்போகின்றேன். ஏனென்றால், 1996ம் ஆண்டு உலக நீதிமன்றம் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்தது. அந்த மாற்றம் நேர்மையான பல நம்பிக்கையாளர்ரகளுக்குச் சோதனையாக அமைந்து விட்டது. கிளஸ்டர்கள் என்ற ஒன்றை அனைவருக்கும் அல்லாமல் சிலருக்கு மட்டும் உலக நீதிமன்றம் அறிமுகப்படுத்தியது. அது சோதனையாக அமைந்தது: “உள்ளூர் ஆன்மீகச் சபைகள் என்ன ஆகும்? அவற்றை நாம் மறந்துவிடப் போகின்றோமா? ஷோகி எஃபெண்டிதானே நமக்கு உள்ளூர் ஆன்மீகச் சபைகளைக் கொடுத்தார்? ஏன் நமக்கு கிளஸ்டர் தேவை?”

மைய நடவடிக்கைகளுக்கு கொடுக்கப்பட்ட முன்னுரிமையும், ரூஹி பாட நூல்களை நெடு நீண்டகாலமாகக் கற்க வேண்டும் எனும் தேவையும் சிலருக்கு சோதனையாக அமைந்து விட்டது: “நாம் இனிமேல் சமய சிறுவிளக்கக் கூட்டம் நடத்த முடியாது என்று இதன் அர்த்தமா? ஆழ்நிலை வகுப்புகளை நாம் இனிமேல் நடத்த முடியாதா? திருவாசகங்களில் பல விஷயங்கள் உள்ளனவே, அவை என்ன ஆவது? ரூஹி பாடநூல்களை மட்டுமே நாம் கற்க வேண்டுமா?”

தீவிர வளர்ச்சித் திட்டத்தின் மீது செலுத்தப்பட்ட கவனம் ஒரு சோதனையாக ஆகி விட்டது. அனைத்துலக போதனை நிலையம், ஆலோசகர்கள், துணைவாரிய உறுப்பினர்கள் ஆகியோர் சமூகத்தினுடைய வாழ்வில் நேரடியாக ஈடுபட்டது ஒரு சோதனையாக ஆகி விட்டது. முந்தைய காலத்தில் சமூக வாழ்க்கை மிக எளிமையாக இருந்தது: அப்போதிருந்த நம்பிக்கையாளர்கள் பண்டிகைக்குச் சென்றனர், ஆழ்நிலை வகுப்புக்குச் சென்றனர். அவ்வப்போது வேறு ஏதாவதொரு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். வாழ்க்கை அப்போது எளிமையாக இருந்தது. வாழ்க்கை நேரடியான வாழ்க்கையாக இருந்தது. அதன் பிறகு, நெடு நீண்டகாலத்திற்குப் பிறகு இந்த மாற்றங்களெல்லாம் வந்து விட்டன. அவை திருவாசகங்களில் எழுதப்பட்டிருக்கவில்லை: கிளஸ்டர், தீவிர வளர்ச்சித் திட்டம், மைய நடவடிக்கை ஆகியவை சமய நூல்களில் இல்லை..

இது மாற்றத்தின் சவாலாகும். சமயம் வளர்ச்சியடையாமல் இருந்து விட்டு மங்கிப் போக அனுமதிப்பதின் வாயிலாக இந்த சவாலை நாம் தவிர்த்து விடலாம். அது மாதிரி நாம் செய்ய முடியாது. நமக்கு வேறு வழியில்லை. பஹாவுல்லாவினுடைய உலக அமைப்புமுறையை நாம் எழுப்பியாக வேண்டும். நம்மால் புரிந்து கொள்ளவியலாத வழிகளில் சமயம் விரிவடைந்து வளர்ச்சியடைய வேண்டும். சமயம் தனக்கு கட்டளையிடப்பட்டுள்ள இலட்சியத்தை நிறைவேற்றி தனது வருங்காலத்தில் பிரவேசிக்க வேண்டுமானால், மாற்றம் நகிழ்ந்தாக வேண்டும் என்பது ஒரு கட்டாயம்.

மாற்றத்திற்குத் தடையாயுள்ள எந்தவொரு மனோபாவ தடையையும், தவறான தகவல்களையும், தொல்லைகளையும் நாம் வென்றிட வேண்டும். மாற்றம் வரும்போது, தீவிரவாதம் தலைதூக்கும் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். 1996ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாற்றம் தொடர்பாக, சிலர் தீவிரவாதத்திற்குத் தள்ளப்பட்டனர்: அதவாது, ரூஹி பாடநூல்கள் மூன்றாம் உலக நாடுகளுக்கு மட்டுமே பொருத்தமான பாடநூல்கள். ஏன்? நீங்கள் அப்பாடநூல்களைத் திறந்தவுடன் அங்கே காணப்படுவது திருவாசகங்ள்! அதிகாரப்பூர்வமான வாசகப்பகுதிகள்.

நீங்கள் முதலாவது பாடநூலைப் பார்த்தால், உங்களுடைய வாழ்நாள் முழுவதும் ஆழமாகச் சிந்திக்கக் கூடிய வாசகப் பகுதிகள் அங்கு காணப்படும். பக்திமிக்க கிறிஸ்தவர்கள் ஆண்டவருடைய பிரார்த்தனையின் சொற்றொடர்களை வாழ்நாள் முழுவதிலும் கற்றதைப் போன்ற செயல் அது. இன்னுமொரு குற்றச்சாட்டு என்னவெனில், நாம் சபைகளையும், பண்டிகைகளையும், சமய சிறுவிளக்கக் கூட்டங்களையும் ஆழ்நிலை வகுப்புகளையும் அலட்சியப்படுத்துகின்றோம் என்பதுதான். ரூஹி பாடநூலில் விவரிக்கப்பட்டிருக்கும், குமாரி அனாவின் சமய போதனை முறை, கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்வது போன்ற ஒரு செயல் எனும் பொய்யான குற்றச்சாட்டு அது. உலக நீதிமன்றத்தினால் மாற்றம் கொண்டுவரப்படுகையில், அது குறித்து ஒருவரது அதிருப்தியை வெளிக்காட்டி எழுகின்ற தீவிரவாதத்தின் பன்முகங்கள் இவை.

உலகின் சூழுநிலைகள் அடிப்படையிலும், மனிதகுலத்தின் ஆன்மீகத் தாகத்தை அடிப்படையாகக் கொண்டும் சமயத்தை நேரடியாக போதிக்க வேண்டும் என்றும், பஹாவுல்லாவினுடைய வருகையை மேலும் நேரடியாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் உலக நீதிமன்றம் விடுத்த வேண்டுகோளை சிலர் திரித்து விட்டனர். மாற்றம் வந்தபோது அதைக் கண்டு தடுமாற்றமடைவோரின் போக்குகளின் வெளிப்பாடே இவை என நான் கருதுகின்றேன். ஒரு தீவிரவாத நிலைக்கு செல்லும்போது, மறு முனையின் தீவிரவாதத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பத்தான் செய்யும். பயிற்சியக செயல்பாட்டில் ஈடுபட்டிராதவர்களிடமிருந்து விமர்சனங்கள் வரும். உள்ளூர் ஆன்மீகச் சபையை அல்லது சமய சிறுவிளக்கக் கூட்டத்துடன் அதனைத் தொடர்புபடுத்தி தொந்தரவு அளிக்க வேண்டாம், முன்னுரிக்கும் ஏகபோக உரிமைக்கும் உள்ள குழப்பம் என பல விமர்சனணங்கள் வரும்.

இதுவே நாம் சந்திக்கும் சவாலாகும். இச்சவால் ரித்வான் 2009 செய்தியில் உள்ளார்ந்த நிலையில் காணப்படுகின்றது. அதற்கான தீர்வு மிக மிக எளிமையானது. அது என்னவெனில், சமயத்தினுடைய மையமாக விளங்கும் உலக நீதிமன்றம் எடுத்துரைக்கும் எதனையும் மறுப்பின்றி ஏற்றுக் கொள்வதாகும்.

அதனை நாம் செயல்படுத்துவோமாகில், அது குறித்து நாம் ஆழமாகச் சிந்திப்போமாகில், சமயத்தினுடைய அதிகார மையமாக விளங்கிடும் உலக நீதிமன்றம் விடுக்கும் எதனையும் நாம் ஏற்றுக் கொண்டு பாதுகாப்பாக இருப்போம். எதுவும் நமக்குத் தொல்லைக் கொடுக்காது. தகர்க்கவியலா கோட்டையினுள் பாதுகாப்பாக நாம் இருப்போம். அத்துடன், பேராபத்துமிக்க ஒழுங்கின்மையிலிருந்தும், வீழ்ச்சியிலிருந்தும் மானிடத்தை மீட்டு, பொற்காலத்தில் அதற்குக் கட்டளையிடப்பட்டிருக்கும் புதியதோர் நாகரிகத்திற்கு உலகினை வழிநடத்திச் செல்லும் இச்சமயத்தின் ஒரு பகுதியாக நாம் ஆகிவிடுவோம்

பெண்கள்: சமத்துவமும் அமைதியும்


பெண்களும் அமைதியும்
டாக். பீட்டர் காஃன்

இங்கு, பெண்களும் அமைதியும் எனும் தலைப்பில் இன்றிரவு நான் நிகழ்த்தவிருக்கும் சொற்பொழிவு குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். முதலில் இத்தலைப்பிலான ஒரு விஷயம் ஏன் இங்கு விவாதிக்கப்படுகிறது என்பது குறித்தும், பெண்களுக்கும் அமைதிக்கும் இடையில் என்ன தொடர்புள்ளது என்ப குறித்தும் நாம் ஆலோசிக்கவிருக்கின்றோம். இந்த இரண்டு விஷயங்களுக்கிடையிலான உறவவை, சமயத்தின் உலக மையத்தில் இருந்து கிடைத்துள்ள அசாதாரணமான மற்றும் குறிப்பிடத்தக்க எழுத்துக்களின் வாயிலாக காணலாம். உதாரணமாக, அப்துல் பஹா பின்வருமாறு எழுதி யுள்ளார்:

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவம் உணரப்படும்போது, யுத்தங்களுக்கான அஸ்திவாரம் முற்றாக அழிக்கப்பட்டுவிடும். சமத்துவமின்றி இது சாத்தியப்படாது.” மற்றும் சமீபத்தில், “உலக அமைதிக்கான வாக்குறுதி,” எனும் தங்களின் சாசனத்தில் உலக நீதி மன்றம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: பெண்களின் விடுதலை, அதாவது, இருபாலர்களுக்குமிடையிலான முழு சமத்துவம், அடையப்படுவதானது, மிக முக்கியமான, ஆனால் அவ்வளவாக அங்கீகரிக்கப்படாத முன் தேவைகளில் ஒன்றாகும். இதிலிருந்து நான் புரிந்கொள்வது என்னவென்றால், உலகத்தில் இரு அடிப்படையான கேள்விகள் உள்ளன என்பதாகும். ஒன்று ஆண் பெண் சமத்துவம் அடையப்படுவது குறித்தது மற்றது, உலக அமைதி அடையப்படுவது குறித்தது.

அப்துல் பஹாவிடமிருந்தும், உலக நீதி மன்றத்திடமிருந்தும் கிடைத்துள்ள இவ்விரு வாக்குமூலங்களும், இவ்விரு விஷயங்களையும் இணைக்கின்றன. மற்றும், ஒரு விஷயம் மற்றதற்கான முன்தேவையும் ஆகும் என குறிப்பிடுகின்றன. ஆகையால், உலக அமைதி அடையப்படுவது குறித்து நாம் கொண்டுள்ள அக்கறை, முதலில் ஆண் பெண் சமத்துவத்தின்பால் கண்டிப்பாக செலுத்தப்பட வேண்டும் எனவே பொருள்படுகின்றது. இந்த விஷயம் பஹாய் போதனைகளின் சக்தி, செல்வாக்கு ஆகியவற்றின் மூலம் எவ்வாறு அடையப்படப்போகின்றது என்பது குறித்தும் நாம் சிந்திக்கவேண்டும்.

ஆக, இன்றிரவு நான் மூன்று தலையாய விஷயங்களைக் கருத்தில் கொள்ள விரும்புகிறேன்: முதலாவதாக ஆண் பெண் சமத்துவம் குறித்த கேள்வி, இரண்டாவதாக, அமைதி அடையப்படுவதற்கும் அதில் பெண்கள் ஆற்றக்கூடிய பங்கு குறித்தும் எழக்கூடிய கேள்வி, மூன்றாவதாகவும் சுறுக்கமாகவும், இந்த சமத்துவம் அமுல் செய்யப்படுவதை பராமரிப்பதற்கு பஹாய் சமூகத்திற்கு கைவசம் உள்ள வாய்ப்புக்கள் குறித்த கேள்வி. இதை நாம் நிகழ் காலத்தில் அமைந்துள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கப்போகின்றோம். இன்றைய உலகம், பல விதமான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றது. ஒரு புறம், பழமை விரும்பிகள் சமயத்தின்பாலும், தத்துவங்களின்பாலும் கொண்டுள்ள வெறியின் வளர்ச்சியும் அதிகரிக்கும் ஆதிக்கமும் உள்ளது. இது பெரும்பாலும் பெண்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றது. மறுபுறம் பார்க்கையில், விரிவான ஆண்கள் எதிர்ப்பு வெறியை வெளிப்படுத்தும் பெண்கள் இயக்கங்கள் உள்ளன. இக்கேள்வியை, அமைதிக்கான சாசனத்தில் ஐக்கியம் அடையப்படுவதற்கான முயற்சியில் நமது பஹாய் சமூகத்தையே ஒரு முன்மாதிரியாக உலக நீதி மன்றம வழங்கியிருப்பதன் கண்ணோட்டத்தில் காண வேண்டும். உலக நீதி மன்றம், புலப்படாத நிலையிலிருந்து நாம் வெளிப்பட்டிருப்பதானது, மேலும் மேலும் அதிகரிக்கும் எண்ணிக்கையிலான கூரிய பார்வையும், நம்பிக்கையின்மையும், சந்தேகப்போக்கும் உடைய மக்கள் பஹாய் சமூகத்தை கூராய்வு செய்யப்போகின்றனர் எனக் கூறியுள்ளது. அவர்கள், நமது சமயத்தில் விவரிக்கப்பட்டுள்ளதற்கும், இன்னாளில் நமது நடத்தைக்கும் இடையில் வேறுபாடுகளைக் கண்டுபிடிக்கும் வகையில் நமது வெற்றிகளையும் நடந்துகொள்ளும் முறைகளையும் கூராய்வு செய்வர். இவை யாவற்றையும் வைத்தே நாம் “ஆண் பெண் சமத்துவம்” குறித்த கேள்வி பற்றியும், அதைச் செயல்படுத்துவதற்காக உலக பஹாய் சமூகம் எடுக்கும் முயற்சிகள் குறித்தும் ஆய்வு செய்யவேண்டும். காலங்காலகமாக பெண்களுக்கு அளிக்கப்பட்ட ஸ்தானம் மற்றும் அவர்கள் நடத்தப்பட்டு வந்துள்ள முறை குறித்தும் ஒரு சுருக்கமான வரலாறு ரீதியிலான ஆய்வு செய்வதன் மூலம் நான் எனது உரையை ஆரம்பிக்க விரும்புகின்றேன். நாம் ஏன் இதைச் செய்ய வேண்டும், ஏன் பஹாய் போதனைகளை மட்டும் ஆய்வு செய்து அவற்றில் பெண்கள் சமத்துவம் குறித்து என்ன கூறப்பட்டுள்ளது என மட்டும் பார்த்தால் போதாதா?, என ஒரு சிலர் வினவலாம். இதற்கு எனது மறுமொழி என்னவெனில், காலங்காலமாக பெண்கள் நடத்தப்பட்டு வந்துள்ள விதத்தை நாம் ஆராய்வது பயனுள்ள ஒன்றே என்பதாகும். ஏனெனில், பஹாய் போதனைகளை நன்கு கண்ணோட்டமிட்டும் அவற்றை மெச்சுவதற்கும் உரிய ஓர் ஒப்பீட்டை இது வழங்குகிறது. பஹாய் போதனைகளின் சிறப்புத்தன்மைகள் குறித்தும், அவற்றின் குறிப்பிடத்தக்கமை குறித்தம், மற்றும் அவற்றின் நீண்ட கால விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்திட இது உதவுகின்றது. பெரும்பாலும் மாற்று வகைகளில் இயங்கும் பஹாய் அல்லாத ஒரு சூழ்நிலையில் நமது கோட்பாடுகளை அமுல் செய்திட முனைவது குறித்த சவால்களை பஹாய்கள் எனும் முறையில் நாம் மேலும் நன்கு அறிந்துகொள்ள இது அதிகம் உதவுகின்றது.

ஆரம்பமாக, வரலாறு சார்ந்த ரீதியில் பெண்கள் எவ்வாறு அனுகப்பட்டுள்ளனர் என்பதை சரித்திர உணர்வோடு நான் கண்ணோட்டமிட விரும்புகின்றேன். இது, நிச்சயமாகவே வாதத்துக்கிடமான ஒரு விஷயமாகும். ஒரு சிலர் வரலாற்று காலம் முழுவதும பெண்கள் அநீதியாகவே நடத்தப்பட்டுள்ளனர் என வாதிடுவர். பிறர், இது பெரிதுபடுத்தப்பட்ட ஒரு விஷயம் எனவும், உண்மையில் பெண்கள் அவ்வாறு நடத்தப்படவில்லை எனவும் கூறுவர். ஆகவே, இது பல வேளைகளில் இணக்கம் காணப்பட முடியாத ஒரு விஷயமாகும். பல வேளைகளில், சமுதாய நிலையிலும், அல்லது பஹாய் சமூகத்திலும் கூட சரித்திரம் முழுவதும் பெண்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து வாதங்கள் எழுவதைப் பார்க்கலாம். ஆனால், இக்கேள்வி மிக எளிதில் தீர்க்கப்படக் கூடிய ஒன்றாகும். அதற்காக நாம் அப்துல் பஹாவின் அதிகாரபூர்வ எழுத்துக்கள்பால் திரும்பவேண்டும். அவ்வாறு திரும்பி, வரலாறு முழுவதும் பெண்கள் எவ்வாறு நடத்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து அவர் என்ன கூறுகிறார் என்பதைக் காண்பதன் மூலம் இப்பிரச்சனைக்கு நாம் தீர்வு காணலாம். இவ்விஷயம் குறித்து அப்துல் பஹா எழுதியுள்ளவற்றிலிருந்து இரு பத்திகளை நான் உங்களுக்காக படித்துக் காட்ட விரும்புகிறேன்.

அவர் முதலாவதாக கூறுவது: கடந்த காலங்களில் பெண்களும ஆண்களும் சமமானவர்கள் எனக் கருதப்படவில்லை. அதாவது, ஆணுக்குப் பெண் தாழ்ந்தவளே என்பதும், இது பெண்களின் உடல்கூறு மற்றும் படைப்பு ரீதியாகவும் கருதப்பட்டு வந்தது. பெண்கள் நுண்ணறிவில் மிகவும் தாழ்ந்தவர்கள் எனக்கருதப்பட்டது. இந்த எண்ணம் அனைத்துலக ரீதியானதாகவும், பெண்கள் மிகவும் முக்கியமான விஷயங்களில் பங்கெடுப்பதிலிருந்து தடுக்கவும் பட்டனர். ஒரு சில நாடுகளில், மனிதனுக்குத் தாழ்வான ஒரு படைப்பாக பெண்கள் கருதப்பட்டும் அவ்வாறு போதிக்கப்படும் அளவிற்கும் மனிதன் சென்றான். இவ்விஷயம் குறித்த அப்துல் பஹாவின் பல்வேறு எழுத்துக்களிலிருந்து மேலும் ஒன்று. அவர் கூறுவது: முற்காலத்தில், இந்தியா, பாரசீகம் மற்றும் கிழக்கு நாடுகள் முழுவதும், அவள், அதாவது பெண், ஒரு மனிதஜென்மமாகவே கருதப்படவில்லை. ஓரு சில அரபு இனங்கள், தங்கள் பெண்டிர்களை தாங்கள் வளர்க்கும் கால்நடைகளோடு சேர்த்தே கணக்கிட்டனர். அவர்களுடைய மொழியில் பெண்களுக்கான பெயர்ச்சொல் ‘கழுதை’ எனும் சொல்லின் அர்த்தத்தையும் கொண்டிருந்தது. அதாவது அச்சொல் கழுதை மற்றும் பெண் என இரு பொருள்பட இருந்தது. ஒரு மனிதனின் செல்வம் அவன் பெற்றிருந்த கால்நடைகளைக் கொண்டே கணக்கிடப்பட்டது. ஒரு மனிதனைப் பார்த்து ஒருவர் இகழ்ச்சியாக கூறக்கூடியவற்றில் “பெண்” எனும் வார்த்தையே அதி தாழ்வானதாகும். பண்டைய காலங்களில் பெண்கள் எழுதவோ படிக்கவோ தெரியாமல் இருப்பதே விவேகமாகும் எனக் கருதப்பட்டது. அவள் அடிமை வேலை புரிவதிலேயே தனது காலத்தை தள்ளவேண்டும்.

ஆகவே, தெளிவாகவும் ஒரு சில வார்த்தைகளிலும் காலங்காலமாக பெண்கள் பொதுவாகவே நடத்தப்பட்ட விதம் குறித்து அப்துல் பஹா கூறியுள்ளதை நாம் காண்கின்றோம். அப்துல் பஹா இதை ஏன் எழுத வேண்டும்? நான் படித்த இந்த கடுமையான வார்த்தைகளின் வாயிலாக அவர் என்ன கூற விழைகிறார்? சரித்திரக் குறிப்புகளைக் காண்கையில் பெண்கள் குறித்த பாகுபாடுகள் பல சரித்திர ரீதியான எண்ணங்களாக அல்லது உருவகங்களாக வெளியிடப்பட்டிருப்பதைக் காணலாம். உதாரனமாக, பெண் என்பவள் தான் ஒரு தாழ்வான பிறவி என்பதால் இயற்கை அன்னையோடு கூட்டுச் சேர்ந்து கொண்டவள், கருவளத்தின் மூலாதாரம் எனும் வகையில் மர்மமான, கட்டுப்படுத்த முடியாத சக்திகளைக் கொண்டவள், பெண் என்பவள் இயற்கை சக்திகளை பலியிடுபவள் என்பதெல்லாம் சரித்திரக் கருத்துக்கள். இக்கருத்துக்களை பண்டைய கால மேல்நிலை பெண் தெய்வங்களின் வாயிலாகவும், பழைய ஏற்பாட்டில் சாலமனின் பாடல்களில் பயன்படுத்தப்பட்ட உவமைகளின் வாயிலாகவும் நாம் காணலாம். பெண் என்பவள், மர்மான ஒரு சக்தி படைத்தவள் எனவும். அவள் கட்டுப்பாடுகள் மூலமாகவும், புனிதப்படுத்தும் சடங்குகள் வாயிலாகவும் அடக்கப்பட வேண்டியவள் எனவும் கருதப்பட்டு வந்தது.

பெண் என்பவள் தாழ்வானவளாகவும், மாறுபட்ட ஒரு பிறவியாகவும், மாறும் குணம் கொண்டவளாகவும், உணர்ச்சிவசப்படுபவளாகவும், கல்வி பெறுவதற்கு ஆற்றலற்றவள் என்பதும் மற்றொரு கருத்தாககும்.

பெரும்பாலும் மரபுச்சமயங்களில் காணப்படும், பெண்கள் சமத்துவமற்ற வகையில் நடத்தப்படும் மற்றொரு முறையாக, அவள் கற்புநெறியின் முன்மாதிரியெனவும், பக்தை எனவும், கன்னித் தன்மையுடையவள் எனவும், கீழ்ப்படிபவள் எனவும், சாது எனவும், ஆணுக்கு அடிபனிபவள் எனவும், வீட்டுப் பணிகளுக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவள் எனவும், சட்டரீதியிலோ அரசியல் ரீதியிலோ அதிகாரம் இல்லாதவள் எனவும், பகுத்தறிவு சார்ந்த எந்த விஷயமாயினும், அதை தனது கணவனிடமோ, தந்தையிடமோ, சகோதரனிடமோ, சுருக்கமாக ஓர் ஆணிடமே கொண்டுசெல்ல வேண்டியவள் எனக் கருதப்படுவதே உள்ளது. இந்தக் கருத்து, அதிகமான வரலாற்றுக் குறிப்புகளில் அடங்கியும், ஒரு சில சட்டமுறைகளிலும் இணைக்கப்பட்டிருந்தது. 1804ல் பிரான்ஸ் நாட்டில் நெப்போலியனின் சமூக சட்டமுறை, உரிமைகள் இல்லாதவர்களென, சிறார்களையும், திருமணமான பெண்களையும், குற்றவாளிகளையும், மற்றும் மனோநிலை பாதிக்கப்பட்டவர்களையும் குறிப்பிடுகின்றது. நெப்போலியனின் 904 சட்டக் குறிப்பின்படி பெண்களுக்கு உரிமைகள் ஏதும் கிடையாது. ஷொப்பன்ஹோவர் என்பவர், பெண்கள் தங்கள் இயல்பினால் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட வேண்டியவர்கள் எனவும், அவர்களுக்கு பாதுகாப்பவர் ஒருவர் அவசியமெனவும், அவர்கள் கீழ்படிதலுக்கென படைக்கப்பட்டவர்கள் எனவும் கூறியுள்ளார். ஆகவே, இந்தப் பல்வேறு மற்றும் மாறுபட்ட கண்ணோட்டங்களின் வாயிலாக பெண்கள்பாலான சமத்துவமற்ற போக்கு வெளிப்படுத்தப்பட்டது.

இந்த நிலை குறித்து சமயம் என்ன செய்துள்ளது? மீண்டும், இவ்விஷயம் வாதத்திற்குட்படுவதையே காண்கின்றோம். பெண்களை நடத்தும் விதம் குறித்து சமயங்களின் பங்கைக் கண்ணுறுகையில், பலதரப்பட்ட கண்ணோட்டங்கள் இருக்கின்றன. மீண்டும் நாம் நமது சமயத்தின் புனிதமும் அதிகாரமும் நிறைந்த எழுத்துக்களின் பக்கமே வழிகாட்டலுக்காக திரும்பவேண்டியுள்ளது. இந்தப் பஹாய் எழுத்துக்களை நாம் ஆராய்கையில், சமயங்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதத்தை புரிந்துகொள்ள எனக்கு உதவும் வகையில் மூன்று கோட்பாடுகள் இருப்பதைக் காண்கின்றேன்.

முதல் கோட்பாடு பஹாவுல்லாவின் ஒரு கூற்றில் காணப்படுகின்றது. அவர்: “கடவுளின் பார்வையில் பெண்களும் ஆண்களும் என்றும், இனி என்றென்றும், சமமானவர்களே. ஆகவே, இது முதல் கோட்பாடு, அதாவது – கடவுளின் பார்வையில் சமத்துவம்.

இரண்டாவது கோட்பாடு, பெண்கள் பெரும் நெறிமுறை சார்ந்த மன உறுதியுடையவர்கள் என்பது குறித்தது. அப்துல் பஹா கூறுவது: “ஓர் ஆணைவிட ஒரு பெண்ணுக்கு அதிகமான நெறிமுறை சார்ந்த மன உறுதி உள்ளது. அபாயங்கள் மற்றும் நெருக்கடி மிக்க நேரங்களில் காரியநிர்வாகம் செய்திட ஆற்றலளிக்கும் விசேஷ கொடைகளும் அவள் பெற்றுள்ளாள்.

மூன்றாவது கோட்பாடு, வரலாற்று ரீதியில், சமயங்கள் ஆண்களை பெண்களுக்கும் மேம்பட்டவராகவே சித்தரித்துள்ளன. அப்துல் பஹா கூறுவது: அவர், அதாவது பஹாவுல்லா, ஆண் பெண் சமத்துவத்தை ஸ்தாபித்துள்ளார். பஹாவுல்லாவின் போதனைகளுக்கு இது விசேஷமாகும். ஏனெனில் மற்ற எல்லா சமயங்களும் பெண்களை ஆண்களுக்கு கீழ்ப்பட்டவர்களாகவே சித்தரித்துள்ளன.

இறைவனின் பார்வையில் ஆணும் பெண்ணும் சமம், பெண்களுக்கு அதிகமான நெறிமுறை சார்ந்த மன உறுதியுண்டு, மற்றும் எல்லா சமயங்களும் பெண்களை ஆண்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாகவே சித்திரித்துள்ளன, எனும் மூன்று கோட்பாடுகள்.

இம்மூன்று கோட்பாடுகளும், சமயங்கள் பெண்களை இதுகாறும் பாவித்துள்ள விதம் குறித்த ஆய்வை ஒளிபெறச் செய்யும் அஸ்திவாரங்கள் என்பது என் கருத்தாகும். உதாரனமாக, கடவுளின் பார்வையில் சமத்துவம் எனும் கேள்வி தொட்டு, திருக்குரானிலும், புதிய ஏற்பாட்டு நூலின் காலேஷியன்ஸ் அத்தியாயத்திலும், மற்ற புனித நூல்களிலும் அற்புதமான குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. இக்குறிப்புகள், இறைவனின் அவதாரங்களின் வார்த்தைகளின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வார்த்தைகள் தற்போதும் அவற்றின் அதிகாரபூர்வ நிலையில் வழக்கில் உள்ளன.

இவ்விரண்டாவது கோட்பாடு நெறிமுறை குறித்த மனோ தைரியமாகும். ஆணைவிட பெண்ணுக்கே அதிக நெறிமுறை சார்ந்த மன உறுதி உள்ளதென அப்துல் பஹா கூறுகின்றார். சமய சரித்திரத்தை நாம் பார்க்கையில், ஒவ்வொரு சமயத்தின் ஆரம்ப காலங்களிலும் பெண்கள் தங்கள் பங்கிற்கும் அதிகமான நிலையிலேயே செயல்பட்டிருப்பதைக் காணலாம். அவர்கள் அச்சமயங்களுக்கு உறுதியையும், நம்பிக்கையையும் நிர்வாகத் திறனையும் அளித்துள்ளனர். உதாரனமாக, கிருஸ்தவ சமயத்திற்கு மகதல மேரி ஆற்றிய சேவையை, முகம்மதுவின் சமயப்பணிக்காலத்தின் ஆரம்பத்தில் அவருக்கு உருதுணையாக காத்திஜா அவர்கள் ஆற்றிய பங்கை, முகம்மது அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டபோது பாத்திமா அவர்கள் காட்டிய மன உறுதியையும், அவர் முகம்மது அவர்களுக்கு காட்டிய ஆதரவையும் பாருங்கள். அப்துல் பஹா மற்றும் பாதுகாவலரின் காலங்களில் பாஹிய்யா காஃனும், தாஹிரி, நவ்வாப், ஆகயோரைப் பாருங்கள். அப்துல் பஹாவின் காலத்திலும், பாதுகாவலரின் காலத்திலும், அவர்களுக்கு பாஹிய்யா காஃனும் அளித்த உறுதியான ஆதரவையும், பாதுகாப்பகத்தின்(Guardianship) ஆரம்பகாலங்களில் அவர் அளித்த நிர்வாகத் திறனையும் பாருங்கள். இவற்றிலும் மற்றும் சமய வரலாற்றின் பிற உதாரனங்களின் வாயிலாகவும், அப்துல் பஹா குறிப்பிடும் நெறிமுறை சார்ந்த மன உறுதியைக் காணலாம்.

இப்போது சமயங்கள் பெண்களைவிட ஆண்களே மேம்பட்டவர்கள் எனச் சித்தரிப்பதாகத் தோன்றும் மூன்றாவது கோட்பாட்டைக் காண்போம். இங்கு, சமூக கோட்பாடுகளுக்கும் ஆன்மீக நெறிகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நாம் உணர வேண்டும். எல்லா மதங்களையும் காண்கையில், ஆன்களுக்கும் பெண்களுக்கும் இடையில் எப்போதுமே சமூக ரீதியில் ஒரு வேறுபாடு என்றென்றும் இருந்து வந்துள்ளது. இந்த வேறுபாடு அந்தந்த காலங்களின் சமூக சூழ்நிலைகள் அல்லது சுற்றுச்சூழலை பொறுத்தும் இருந்துள்ளது. ஆண்கள் பெண்களுக்கும் அவர்களைப் போன்றோர்களுக்கும் பாதுகாப்பளிப்பவர்களாக இருந்துள்ளனர். இருந்தபோதிலும், இங்கு முக்கிய பிரச்சினையானது பல்வேறு மதங்களின் போதனைகளில் உள்ள சமூக கோட்பாடுகள் அல்ல; ஆனால், பெண்களுடனான ஆண்களின் உறவில் உள்ள ஆன்மீக மதிப்புணர்வே பிரச்சனையாக உள்ளது. இங்கும் வரலாற்றைக் காண்போமானால் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். ஆன்களின் வசப்பட்ட சமயங்களில் ஆண் சமயகுருக்கள் மற்றும் இறைமையியலின் எழுச்சியின் போதெல்லாம் இத்தகைய சூழ்நிலைகள் உருவாகின்றதை வரலாற்றில் காணமுடிகிறது. என்னைப் பொறுத்த வரையில் சமயங்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதத்திற்கு இந்த சூழ்நிலையே முக்கிய நிலையில் உள்ளது.

காலப்போக்கினாலும், சமயகுருக்களின் எழுச்சியினாலும், இறைமையியலின் மேம்பாட்டினாலும், சமயங்கள் பெண்களை விட ஆண்களுக்கே அதிக மதிப்பளிக்க முற்பட்டன. உதாரனமாக, தால்முட்டில்(யூத மதம்) பின்வரும் வாக்கியத்தைக் காணலாம்: என்னை ஒரு புறவினத்தவனாக, முட்டாளாக, அல்லது ஒரு பெண்ணாக படைக்காத இறைவா, நீர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.

தால்முட்டிலும்.. புதிய ஏற்பாட்டின் கோரிந்தியனிலும், மாதாகோவில்களில் பெண்கள் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அவர்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இது முக்கியமல்ல, ஏனெனில் சட்டமே பின்வருமாறு கூறுகின்றது: அவர்கள்(பெண்கள்) ஏதேனும் தெரிந்துகொள்ள விரும்பினால் அவர்கள் இல்லத்தில் தங்கள் கணவர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும். ஒரு பெண் மாதா கோவிலில் வாய்திறந்து பேசுவது வெட்கக்கேடானது. கிருஸ்தவ இறைமையியல்வாதிகள் பெண்களை மட்டப்படுத்தினர். கி.பி. 2வது நூற்றாண்டில், டிட்டிலியன், இயேசு சிலுவையில் அரையப்பட்டதற்கு பெண்களையே குறை சொன்னான். ஏனெனில் பெண்கள் தங்கள் பூர்வீகத்தை ஏவாளிடமிருந்தே பெற்றுள்ளனர்; ஏவால் வாழ்வின் மிக உயர்ந்த குறிக்கோள்களுக்கு அப்பால் ஆதாமை ஈர்த்தாள்; இது பூர்வபாவத்தை உருவாக்கியது, பூர்வபாவத்தின் பயனாக இயேசு சிலுவையில் அரையப்பட்டும் மூன்று நாட்கள் கீழே நரகத்திற்குச் செல்லவும் வேண்டியதாயிற்று. ஆக, அவன் இயேசு சிலுவையில் அரையப்பட்டதற்கு பெண்குலத்தையே குற்றம் சாற்றினான். டிட்டிலியனின் எழுத்துக்களில் ஒரு பகுதி பெண்களுக்குக் கூறுவது யாதெனில்: இறைவன் உங்கள் இனத்திற்கு அளித்த தண்டனை இக்காலத்திலும் செயல்படுகின்றது, அதன் பயனாக விளையும் குற்றவுணர்வும் செயல்படவே செய்யும். நீங்கள் சாத்தானுக்கான வாயில்கள். சாத்தானே எதிர்ப்பதற்குத் துணியாத அவனை நீங்கள்தாம் வற்புறுத்தினீர்கள் என மேலும் மேலும் கூறிக்கொண்டே போகலாம். கி.மு. 585ல் கிருஸ்தவக்கோவில் ஒன்றின் வழிகாட்டி கூறுவது: பெண்களுக்கு ஆன்மாவென ஒன்று இருந்தால், அது ஆண்களின் ஆன்மாவுக்கும் கீழான நிலையில் உள்ள ஒன்றாகவே இருக்கவேண்டும், அதாவது மிருகங்களுக்கு உள்ளதுபோல.

தனது பூர்வபோதனைகளிலிருந்து வேறுபட்டும், மதகுருக்களின் அமைப்புமுறையும், இறைமையியலும் எழுச்சிகண்டுள்ள இஸ்லாத்தின் வரலாறு, கிருஸ்தவ வரலாற்றுக்கும் மேம்பட்டதல்ல. பொதுவாக, தற்கால இஸ்லாமிய இறைமையியல்வாதிகள், பெண்கள் குறித்த தங்களது பிரத்தியேக கண்ணோட்டம் ஒன்றை எழுதிவைத்துள்ளனர். இக்காண்ணோட்டம், மூன்று கோட்பாடுகளின் அடிப்படையில் வரையப்பட்டுள்ளது. ஒன்று, ஆண்களோடு ஒப்பிடுகையில், உயிரியல் ரீதியில், உதாரனமாக பெண்களின் மாதவிடாய், ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே சமத்துவமற்ற நிலைய உருவாக்கியுள்ளது. இரண்டாவதாக, ஆண்களின் பாலுணர்வு கட்டுப்படுத்தப்பட முடியாததால், தினசரி வாழ்க்கையில் பெண்கள் கண்காணாமலேயே வாழவேண்டும். மூன்றாவதாக, இல்லங்களில் ஆண்களுக்கே அதிகாரம் உள்ளது.

இஸ்லாமிய பழமைவிரும்பிகளின் எழுச்சியின் பயனாக, இக்காலத்து இஸ்லாமிய சட்டங்கள் பெண்கள்பால் மேலும் மேலும் அதிகமான ஒரவஞ்சனையுனர்வை வெளிப்படுத்தி வருகின்றன. அவர்கள் ஒதுக்கிவைக்கப்படுவது, முகத்திரை அனிவது, கல்வி பெறுவதில் கட்டுப்படுத்தப்படுவது ஆகியவை மட்டுமின்றி, சட்ட அமைப்புமுறை ரீதியிலும் அவர்கள் ஒதுக்கிவைக்கப்படுகின்றனர். உதாரனமாக, இன்றைய இஸ்லாமிய நாடு ஒன்றில், பெண் ஒருத்தி ஓர் ஆணின் மீது கற்பழிப்பு புகார் ஒன்றை செய்தும், அவளால் அதை நிரூபிக்க முடியாமலும் போனால், சோரம் போன குற்றத்திற்காக அவளே பிறகு குற்றஞ்சாற்றப்படுகின்றாள். வேறொரு இஸ்லாமிய நாட்டில் குருடியான பதின்மவயது கற்பினி பெண் ஒருத்திக்கு 15 பிரம்படியும், மூன்று வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. ஏனெனில் தன்னைக் கற்பழித்தவர்களை அவளால் அடையாளம் காட்ட முடியவில்லை; காரணம், அவள் குருடி! பெண்கள் ஒதுக்கப்பட வேண்டும் எனும் இந்தப் பாரம்பரிய கருத்து, அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது போன்றவை, குறிப்பிட்ட அளவிற்கு இன்று எழுச்சி கண்டுள்ளன. இது கிருஸ்தவ சமயம், இஸ்லாம், இந்து, மற்றும் பிற சமயங்களில் பழமைவிரும்பகளின் எழுச்சியின் பயனாக தோன்றியுள்ளது.

இக்காலத்தில் நடப்பவற்றை இப்போது காண்போம். கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இருவிதமான கண்ணோட்டம் ஒன்றைக் காணலாம். ஒரு புறம், சமத்துவத்தை நோக்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. மறுபுறமோ, இன்னமும் குறைபாடுகள் இருக்கின்றன. அவை, பஹாய் சமூகமும் அதன் போதனைகளும் இதில் ஒரு முக்கிய பங்காற்றுவதற்கு வாய்ப்பளிக்கின்றன. கல்வி, பெண்கள் கல்லூரிகள், 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் பல்கலைகழகங்களில் இருபாலர்கல்வி, ஆகியவை சமத்துவத்தை நோக்கி ஒரு பெரும் உந்துசக்தியளித்துள்ளன.

1892ல் பஹாவுல்லா இயற்கை எய்திய காலகட்டத்தில், ஆண்களுக்குச் சமமான வாக்குரிமையை பெண்களுக்கு எந்த நாடுமே வழங்கிடவில்லை. அவர் இயற்கை எய்தியபோது எந்த நாடுமே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவில்லை. அதன் பிறகு, 1893ல் நியூ சீலாந்தும், 1902ல் ஆஸ்திரேலியாவும், பிறகு வாக்களிப்பதை அனுமதிக்கும் மற்ற எல்லா நாடுகளும் சிறுக சிறுக பெண்களுக்கு குறிப்பிட்ட அளவு வாக்குரிமை அளித்துள்ளன.

1848ல், ஐக்கிய அமெரிக்காவில், வாக்களிக்கும் புனித உரிமை பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனும் பிரகடனத்தை பெண்கள் உரிமைப் பேராளர் மாநாடு ஒன்று வெளிப்படுத்தியது. ஆனால், இப்பிரகடனம் நடப்பிற்கு வருவதற்கு 80 ஆன்டுகளுக்கும் மேல் ஆகியது.

தொழில்துறையைப் பொறுத்த வரையில் பெண்களுக்கான வாய்ப்புக்களில் பெரும் அடிகள் எடுத்துவைக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகவே உள்ளது. இது பெண்களுக்காக திறந்துவிடப்பட்ட வேளை வாய்ப்புக்களை மட்டுமே சார்ந்துள்ளது. இருந்தபோதும், மருத்துவம், சட்டத்துறை மற்றும் பௌதீக விஞ்ஞானத்துறை ஆகிய பாரம்பரிய துறைகளில் பெண்களுக்கு வாய்ப்புக்கள் கிடைப்பது கடினமாகவே உள்ளது.

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களின் விடுதலையில் நாம் பெற்றுள்ள வெற்றிகளைக் கண்டு நாம் திருப்தி அடைந்துவிடலாகாது. மாறாக, இப்போதும் நடப்பில் உள்ள ஒரு சில குறைபாடுகள் யாவை என நாம் சிந்திக்கவேண்டும். உதாரனமாக, 1980ல் ஐக்கிய நாட்டின் கணிப்பு ஒன்றில், உலக ஜனத்தொகையில் சரிபாதியான பெண்கள், அதில் மூன்றில் இரண்டு பங்கு வேளைகளை தாங்களே செய்கின்றனர், அதன் வருமானத்தில் பத்தில் ஒரு பங்குதான் பெருகின்றனர், அதன் செல்வங்களில் நூற்றில் ஒரு பங்கே அவர்களுக்குச் சொந்தம், மற்றும் உலகில் வாழும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களில் பெண்கள் மூன்றில் இரண்டு பங்கினர் ஆவர். ஆகவே, வெளிப்படையாகவே பெரும் குறைபாடுகள் உள்ளன. இந்தியாவிலும் சீனாவிலும் பெண் சிசுஹத்தி இன்றும் நடைபெறுகின்றது. உலகின் பல பாகங்களில் பெண்களின் பாலியல் உருப்புக்களை உருக்குலைக்கும் பழக்கம் இன்னமும் தொடருகிறது. சீதனம் குறைவாகக் கொண்டு வரும் பெண்களை எரிக்கும் செயல் இந்தியாவில் காணக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது. சமய பழமைவிரும்பிகளின் ஏற்றம் ஆகியன என மேலும் பலவற்றைக் கூறலாம்.

1984ல் நியு யார்க்கில் உள்ள பஹாய் அனைத்துலக சமூகம் எழுபது தேசிய ஆன்மீக சபைகளைக் கொண்டு ஒரு புள்ளிவிவர கணிப்பு செய்தது. அதில், அவற்றின் நாடுகளில் வாழும் பெண்களின் நிலைமை குறித்து விவரங்கள் கேட்கப்பட்டன. இதன் தொடர்பில் அந்த சபைகளிடமிருந்து கிடைக்கப்பட்ட விவரத்தின்படி இவ்வித பாரம்பரிய சமத்துவமில்லாமை ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் இருந்தது. அவையாவன, தீர்மானங்கள் செய்வதில் ஆண்களின் ஆக்கிரமிப்பு, பிரயாணம் செய்வதில் பெண்களுக்கு சுதந்திரம் இல்லாமை, பெண்ணைவிட மேலானவன் எனும் எண்ணம், கலந்துரையாடல்களில் பெண்களின் கருத்துக்களுக்கு மதிப்பில்லாமை ஆகியவை. வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு வேளை உயர்வு பெறுவதில் இன்னமும் பெரும்படியான முட்டுக்கட்டைகள் உண்டு. பெரும்பாலான நிறுவனங்களில் பெண்கள் ஊதியம் குறைவாகவும், செல்வாக்கு இல்லாத பதவிகளிலுமே அமர்ந்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள நிலைக்குலைந்து வரும் சமூகங்களில் உயர்ந்து வரும் சீர்கேடுகளினால் பென்களின் நிலை மேலும் அபாயத்திற்குள்ளாகியுள்ளது. ஆபாசப்படங்களின் அதிகரிப்பு, கிரிமினல்களாலும், மனங்கெட்டவர்களாலும் பெண்கள் கொடுமைகளுக்குள்ளாக்கப்படுவது, கற்பழிப்பு சம்பங்களின் அதிகரிப்பு, வேலை வாய்ப்புக்கள் குறைவாக இருக்கும் காரணத்தினால் பெண்கள் விபச்சாரங்களில் ஈடுபடுவது, வேலை பற்றாக்குறைக்கு பெண்களைக் காரணமாக்குவது, திருமணங்கள் சீர்குலைவதற்கு பெண்களே காரணமென்பது, குழந்தைகளின் தவறான நடத்தைக்கு பெண்களே காரணமென்பது ஆகியவற்றைக் கூறலாம். இக்காலத்திலும் பெண்களை நடத்தும் முறையில் நடப்பில் உள்ள பெரும் குறைபாடுகளின் உதாரனங்களே இவை யாவும்.

பஹாய் போதனைகளின்பால் திரும்பும் முன், சரித்திர ரீதியில் குடும்பத்தில் பெண்களின் பங்கு குறித்து மேலோட்டமாகப் பார்ப்போம். குடும்பத்தில் ஆணே தலைவன் என பெரும்பாலான சமூகங்களால் உருவரையப்பட்டுள்ளது. இந்த உருவரை பின்வருமாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது: மனைவி கணவனுக்கு கீழ்படிபவள், ஆணே தீர்மானங்கள் செய்வதில் ஆதிக்கம் செலுத்துபவன், பெண் பெரும்பாலும் வீட்டிலேயே அடைந்துகிடப்பவள். உதாரனமாக, விவிலிய நூலின் எபீஃசியன்ஸ் பகுதியில் பின்வருவதைப் போன்று காணலாம்: இயேசு, புனிதசபைக்குத் தலைவராக விளங்குவது போன்று கணவன் மனைவிக்குத் தலைவனாக இருப்பதால் மனைவிகள் இறைவனைப்போன்று கணவனுக்கும் கீழ்படிந்து நடக்க வேண்டும். சபை இயேசுவுக்குக் கீழ்பட்டிருப்பது போல், யாவற்றிலும் மனைவிகள் தங்கள் கணவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும்.

உலகிலுள்ள மற்ற சமூகங்களிலும் இது போன்ற பழக்க வழக்கங்களைக் காணலாம். இல்லங்களில் காணப்படும் ஆண் ஆதிக்கத்திற்கெதிரான பெண்களின் மறுமொழி இரு வகையாக உள்ளது: ஒன்று, கீழ்படிந்து போதல், பார்க்கப்போனால் அதற்கு ஒத்துப்போவது போலும் இருக்கும். அதாவது, தான் ஒரு பேதையைப் போன்ற நிலையை உருவாக்குவது. இதை நாம் அடிக்கடி ஆங்காங்கு படித்துத் தெரிந்துகொள்ளவும் கூடும். மற்ற வகையானது, கடும் எதிர்ப்பினால் அடக்கப்பட்ட கொந்தளிப்பை உட்படுத்தியதாகும். இது, தன் குழந்தைகளிடமே தன் கணவனைப் பற்றி தரக்குறைவாகப் பேசுவது, புறம்பேசுவது மற்றும் அதைப்போன்ற செயல்களில் ஈடுபடுவது – இவை யாவுமே ஆண் ஆதிக்கத்திற்கு எதிரான பின்விளைவான மறுமொழிகளே.

மனித சமுதாயத்தின் ஒரு சோகமான அம்சம் என்னவெனில், இல்லங்களில் ஆண் ஆதிக்கத்தை பலாத்காரமான முறையில் சுமத்தியதே ஆகும். மனவிகளை உடல்வதை செய்ததே இதன் உச்சகட்டமாக விளங்கியது. பண்டைய காலங்களிலும் சரி, இப்போதும் சரி, இச்செயலினால் பெரும்பாலான சமுதாயங்கள் இழிவடைந்துள்ளதாகவே காணப்படுகின்றது.19ம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் பொதுச் சட்டமாகப்பட்டது கணவன்மார்களுக்குப் பின்வரும் சலுகையை வழங்கியது, “தன் மனைவியை இணக்கமான எந்த தடி கொண்டும் கண்டிக்கலாம்,” என அதிகாரம் வழங்கியது. பிறகு, வழக்கு மன்றங்கள் இணக்கமான தடி என்பது என்ன என்பது குறித்து விளக்கமளிக்க கோரப்பட்டன. அவை, இணக்கமான தடி என்பது ஒரு மனிதனின் கட்டை விரலின் அளவுக்கு மிஞ்சாத கோல்கள் என விளக்கமளித்தன. அதாவது, ஒரு மனிதனின் கட்டை விரலுக்கு மேற்போகாத அளவு கொண்ட ஒரு கோலோ, தடியோ, கட்டையோ கொண்டு ஒரு மனிதன் தன் மனைவியைக் கண்டிக்கலாம்.

1871ல், ஐக்கிய அமெரிக்காவில் உள்ள வழக்கு மன்றங்கள், ஒரு பழமையான அதிகாரம் மீட்டுக்கொள்ளப்படுவதற்கு காலம் கனிந்துவிட்டதென முடிவெடுத்தன. அது, ஒரு மனிதன் தன் மனைவியை தடி கொண்டு அடிப்பதற்கும், அவளுடைய முடியைப் பிடித்து இழுப்பதற்கும், அவள் குரல்வளையை நெறிப்பதற்கும், அவள் முகத்தில் உமிழ்வதற்கும், அல்லது அவளைத் தரையில் தள்ளி காலால் எட்டி உதைப்பதற்கும் அல்லது அது போன்ற வேறு அவமானங்களைப் புரிவதற்குமான கணவனுடைய அதிகாரமாகும். இவை 1871ல் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வழக்கு மன்றத்தின் தீர்ப்புகளிலிருந்து மேற்கோளிடப்பட்டவையாகும். அவை, “இவ்விதமான பழக்கங்களை மீட்டுக்கொள்வதற்கான காலம் கனிந்துவிட்டது,” என குறிப்பிட்டன.

இக்காலத்திலும் கூட மனைவியைத் துன்புறுத்துவது நடக்காத ஒன்றல்ல, என்பதை உங்களில் பலர் உணர்ந்திருப்பீர்கள் என நான் நம்புகின்றேன். நியு யார்கில் நடை பெற்ற ஒரு வழக்கு குறித்து நான் படித்தேன். அதில், மனைவி ஒருத்தி தன் கணவனைக் கொலை செய்ததாக கொலைக் குற்றம் சாற்றப்பட்டிருந்தாள். வழக்கின் போது, கணவன் அவளை படிகளிலிருந்து உதைத்துக் கீழே தள்ளியதாகவும், காரின் பின்புறத்தில் வைத்து அவளைப் பூட்டியதாகவும், கொதிக்கும் ஷவரின் கீழ் அவளை பிடித்துகொண்டிருந்ததாகவும், மற்றும் அவளை சிகரெட்டினால் சுட்டதாகவும் தெரியவந்தது. பல வருடங்களுக்குப் பிறகு அந்த கொடுமைகளின் முடிவில் அந்தப் பெண் தன் கணவனைக் கொலை செய்தாள். இப்போது அவள் 15 வருட ஆயுள் சிறை அனுபவித்து வருகின்றாள். ஆகவே, மனைவியைக் கொடுமைப் படுத்துவதென்பது, பண்டைய காலத்திலும் சரி, இப்போதும் சரி, நடைமுறையில் இருக்கும் ஒன்றாகும். மனைவிமார்கள் வதை குறித்த ஒரு சமூக ரீதியான கருத்துக்கணிப்பு பின்வரும் முடிவிற்கு வந்தது. அதாவது, “மனைவிகள் வதைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கு முழுமையான இருபாலர் சமத்துவம் அவசியம்,” என்பது.

சரி, இப்போது இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுற்றதால், இந்த மிக முக்கியமானதும் சிக்கலானதுமான விஷயம் குறித்து பஹாய் போதனைகள் என்ன கூறுகின்றனவென பார்ப்போம். பஹாய் போதனைகளில் பெண்களின் நிலை, சட்டரீதியானது மட்டுமல்ல, ஆனால், ஆன்மீகமானதும் கல்விரீதியானதும் கூட, என பாதுகாப்பாளர் ஷோகி எபெஃன்டி கூறுகின்றார். இப்போதனைககளை பல வகைகளாக ஆராயலாம். முதலாவதாக, சமத்துவமெனும் மிக அடிப்படையான கோட்பாட்டைப் பார்க்கலாம். நான் அது குறித்து பல புனிதவாசகப் பத்திகளில் இருந்து எடுத்துக்காட்டுகள் காட்ட விரும்புகிறேன். அவற்றில் பெரும்பான்மையானவற்றை சமீபத்தில், பஹாய் உலக மையத்தில் ஆராய்ச்சிப் பிரிவினால் தயாரிக்கப்பட்டும், உலக நீதி மன்றத்தால் வெளியிடப்பட்டதுமான, பெண்கள் குறித்த வாசகத் திரட்டில் காணலாம்.

முதலாவதாக சமத்துவம் குறித்த கோட்பாட்டைப் பார்ப்போம். இது குறித்து பஹாவுல்லா வெளிப்படுத்தியுள்ள பல குறிப்புகள் உள்ளன: “இந்த நாளில் தெய்வீக அருளெனும் கரம் எல்லாவிதமான வேறுபாடுகளையும் அகற்றியுள்ளது. கடவுளின் சேவகர்களும், அவரது பணிப்பெண்களும், ஒரே நிலையிலானவர்களாகவே பார்க்கப்படுகின்றனர்.” ஆண்களையும் பெண்களையும் குறித்து அப்துல் பஹா கூறுவது: “ஓர் ஆன்மீக ரீதியான கண்ணோட்டத்திலிருந்து அவர்களுக்கிடையில் எந்த வேறுபாடும் கிடையாது.” ஆகவே, நமது சமயத்தின் எழுத்துக்கள் மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் உள்ளன – ஓர் ஆன்மீக ரீதியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வேறுபாடுகள் கிடையாது. வேறொரு இடத்தில், மனுக்குலத்தைப் பற்றி குறிப்பிடுகையில், அதற்கு இரு பாகங்கள் உண்டென கூறுகின்றார். அவை இரண்டும் ஒன்றை ஒன்று நிறைவு செய்பவையெனவும் கூறுகின்றார். ஆன்மீக ரீதியில் இரண்டிற்கும் வேறுபாடுகள் கிடையாது, நடைமுறை ரீதியில் இரண்டும் ஒன்றையொன்று நிறைவு செய்பவையாகும். ஆணும் பெண்ணும் ஒருவருக்கு மேல் ஒருவரை உயர்த்திக் கூறுவதைத் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தும் வாசகங்கள் உண்டு. அவை, சட்டங்கள் ஆணையும் பெண்ணையும் சமமாகவே உட்படுத்த வேண்டும் எனவும் கூறுகின்றன.

இரண்டாவதாக, திருமணம் மற்றும் குடும்பங்கள் குறித்த பஹாய் போதனைகள். இங்கு, காலங்கள் தோறும், பார்க்கப்போனால் ஆயிரமாயிரம் வருடங்களாக, உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயங்களினால் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளவற்றுக்கும் பஹாய் போதனைகளுக்கும் இடையிலான முக்கியமானதும், குறிப்பிடத்தக்கதுமான வேறுபாட்டை நாம் காணுகின்றோம். அது, நமது சமயத்தில் தம்பதிகளுக்கிடையிலும் குடும்ப அங்கத்தினர்களுக்கும் இடையிலான உறவாகப்பட்டது, சமத்துவம், கலந்தாலோசனை, ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தாமலும் இருப்பது ஆகியவற்றின் அஸ்திவாரத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில வாசகங்களைப் படிப்பதற்கு என்னை அனுமதிக்குமாறு வேண்டுகின்றேன். ஒரு பஹாய் குடும்பத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலை, ஒரு முழு சமூகத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலையைப் போன்று சமயத்தின் முக்கிய எண்ணத்தையே பிரதிபலிக்க வேண்டும். இந்த எண்ணம், ஆதிக்க அதிகாரம் அல்ல, ஆனால், பனிவான தோழமை; தன்னிச்சையான அதிகாரமல்ல, ஆனால், வெளிப்படையானதும் அன்பு சூழ்ந்ததுமான ஒரு கலந்துரையாடலாகும், என பாதுகாவலர் குறிப்பிடுகின்றார். வேறொரு இடத்தில், கணவன் மனைவிக்கிடையே நிகழக்கூடிய முடிவெடுக்கும் செயல் பற்றி குறிப்பிடுகின்றது. அது கூறுவது: சமநிலை மற்றும் மிதப்போக்கு குறித்த விழிப்புணர்வால் ஊக்கமளிக்கப்பட்ட, முழுமையானதும் வெளிப்படையானதுமான குடும்பக் கலந்துரையாடல் குடும்ப தகறாறுகளுக்கு பூரனநிவாரனமாக இருக்கக்கூடும். கணவர்கள் மனைவிகளையோ அல்லது மனைவிகள் கணவர்களையோ ஆதிக்கம் செலுத்த நினைக்கக்கூடாது. இதற்கும், காலங்காலமாக, திருமனங்களின் ஓர் அம்சமாக, ஆண்களே எல்லா தீர்மானங்களையும் எடுப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டைக் கவனிக்கவும்.கலந்தாலோசனையின் இந்த அம்சம் குறித்து, பஹாய்களாகிய நாம், பெரிய அளவில் பெரும்பான்மையான கருத்தே தீர்மானமாகக் கொள்ளப்படும் பஹாய் கலந்துரையாடலோடு, நாம் பழக்கப்பட்டிருக்கின்றோம். கணவனும் மனைவியும் கொண்ட குடும்பமும், அங்கு கலந்துரையாடலும் நிகழும் ஒரு சூழ்நிலையில் என்ன நடக்கின்றது, தீர்மானங்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன? உலக நீதி மன்றம் கூறியது: சில நேரங்களில் கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் விட்டுக்கொடுத்துப்போவது அவசியம். ஆனால், இதில் ஒருவர் மற்றவரை நியாயமற்ற முறையில் ஆதிக்கம் செய்ய நினைக்கக்கூடாது. வேறொரு இடத்தில் உலக நீதி மன்றம் இதே விஷயம் குறித்து விளக்கம் அளிக்கின்றது: இவ்வித விட்டுக்கொடுத்தல் எவ்வாறான சூழ்நிலையில் நடைபெறவேண்டும் என்பது அந்தந்த தம்பதியினரின் முடிவைப் பொறுத்துள்ளது.

குறைந்தது ஒரு முறையாவது, குடும்பத்தில் நிகழும் தகறாறுகள் மற்றும் மனைவியை அடிப்பது பற்றி உலக நீதி மன்றம் எழுதவேண்டியது அவசியமெனக் கண்டுள்ளது. இந்த விஷயம் குறித்து உலக நீதி மன்றம் வெளியிட்ட சாசனத்தை நான் படித்துக்காட்ட விரும்புகின்றேன்: குடும்பத்தில் அடிதடிசெயல்கள் சமயத்தின் உணர்விற்கு எதிர்மாறானதாகும். அது கண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயலாகும். சமுதாயத்தின் பரந்த கட்டமைப்புமுறை முழுமைகெடாமல் இருக்க வேண்டுமானால், குடும்பங்களில் காராசாரமான தகறாறுகளை ஒடுக்குவதற்கு மருத்துவ முறை உட்பட உறுதியான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இது குறிப்பாக, மிகவும் மட்டுமீறிய மனைவியை அடிப்பது மற்றும் சிறார்வதை போன்ற பிரச்சினைகளை உட்படுத்தியதாகும்.

பஹாவுல்லா அவர்களே, ஒரு வாசகப்பகுதியில், ஆண்களால் பெண்கள் வதைபடுவதை தவிர்க்கவேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றி குறிப்பிடுகின்றார். அவர் கூறுவது: நீதி, நியாயம், அன்பு மற்றும் கருனை ஆகியவற்றால் இறைவனின் நண்பர்கள் அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் தாங்கள் எவ்வாறு சித்திரவதைக்கும் அத்துமீரல்களுக்கும் தங்களை உட்படுத்திக்கொள்ள அனுமதிப்பதில்லையோ, அவர்கள் அவ்வாறே, கொடுமைகள் பணிப்பெண்களை அனுகுவதையும் அனுமதிக்கக்கூடாது.

எவ்வாறு ஆண் குடும்பத்திற்கான வருவாயை ஈட்டும் அடிப்படையான பொறுப்பைக் கொண்டுள்ளானோ, அதே போன்று பெண்ணும் தான் குழந்தையின் முதல் ஆசிரியை எனும் முக்கியப் பொறுப்பினைக் கொண்டுள்ளாள். இருந்தபோதிலும், பஹாய் போதனைகள் இவ்வளவுதாம் என்றிருந்தால், நமது நிலையும் பாரம்பரியமாக வந்துள்ள நிலையைப் போன்றே இருந்திருக்கும். அதாவது, பெண் வீட்டுப்பொறுப்பை கவனிப்பவளாகவும், ஆண் வெளியே வருவாய் ஈட்டுபவனாகவும் இருப்பது. ஆனால் இது மட்டும் அல்ல. பொறுப்புமாற்றம் குறித்து பஹாய் எழுத்துக்களில் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது, பெண்ணின் இடம் வீட்டுப்பொறுப்பை மட்டும் உட்படுத்தியது அல்ல. உலக நீதி மன்றத்திலிருந்து வந்துள்ளதில் ஒரு பகுதியைப் படிக்க விரும்புகிறேன். உலக நீதி மன்றம் கூறுவது: பஹாய் குடும்பம் குறித்த உட்கருத்து, ஆன் குடும்பத்திற்கான வருவாயை ஈட்டிடும் அடிப்படைப் பொறுப்பை வகிப்பவனாகவும், பெண் என்பவள் குழந்தைகளுக்கான முக்கிய மற்றும் அஸ்திவாரமான ஆசிரியை எனும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதற்காக இக்கடமைகள் மாற்ற முடியாத வகையில் நிலைப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட சில குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொள்ளா என பொருள்படாது. அல்லது, பெண்களின் இடம் வீடுதான் எனவும் பொருள்படாது. மாறாக, அடிப்படைக் கடமைகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், தந்தைகள் சிறார்களின் கல்வியில் முக்கியப் பங்காற்றுவார்கள் எனவும், தாய்மார்கள் குடும்பத்திற்கான வருவாய் ஈட்டுபவர்களாகவும்கூட இருப்பர் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆக, நமது போதனைகள் கடமைகள் பரிமாற்றம் செய்யப்படுவதற்கு குறிப்பிட்ட அளவுக்கு அனுமதிக்கின்றது. இது சம்பிரதாயமான குடும்பங்களில் உள்ளதைவிட அதிகமே ஆகும்.

நமது சமயம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமான பாடமுறைகளையே வலியுறுத்துகின்றது. சமுதாயத்தில் பெண்களுக்கான பொறுப்புக்கள் இதிலிருந்தே அறியப்படுகின்றன. சம்பிரதாயமாகவே, பெரும்பாலான மேற்கத்திய சமூகங்களில், ஆண்கள் பௌதீக அறிவியலையும், பெண்கள் குடும்பநூல் அல்லது குடும்பஅறிவியலைக் கற்கின்றனர். ஒரு பொதுவான பாடமுறையினால், பெண்களும் பௌதீக அறிவியல்களைக் கற்பார்கள் என்றும் ஆண்கள் குடும்பக்கலைகளையும் கற்பார்கள் எனவும், அதனால் வருங்கால உலகம் ஒன்றிற்கு பெரிய அளவில் தயார் நிலையும் இருக்கும் என்பது பொருள்.

புனித வாசகங்கள், பெண்கள் ஆற்றக்கூடிய குறிப்பிடத்தக்க சில விசேஷ கடமைகளை அடையாளம் காட்டுகின்றன. உதாரனமாக, அப்துல் பஹா, சட்டத்துறை மற்றும் அரசியல்களில் பெண்கள் மன உறுதியுடனும் ஆற்றலோடும் நுழைவர் எனவும், போர்கள் ஓயவேண்டியது முக்கியம் எனவும் கூறுகின்றார். வேறொரு இடத்தில், பெண்கள், தொழில்துறை மற்றும் விவசாய அறிவியல்கள் குறித்து தங்கள் சக்திகளையும் திறன்களையும் செலுத்தவேண்டும், அவ்வாறு செய்து, மிகவும் இன்றியமையாதவைகளுக்காக மனுக்குலத்திற்கு உதவிடவும் வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார். ஆக, இவ்வாசகப்பகுதிகளும் மற்றவைகளும், குடும்பத்திற்கு வெளியே பெண்கள் ஆற்றக்கூடிய பங்கு குறித்த நமது பரந்த கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகின்றன. அதாவது, விவசாயம், சட்டத்துறை, அரசியல், மற்றும் பிற விஷயங்கள். உலக நிருபத்தில் பஹாவுல்லா பெண்களும் அதே சமயம் ஆண்களும் வருவாய் ஈட்டுவர் என தாமே அறிவித்துள்ளார் என உலக நீதி மன்றம் அறிவிக்கின்றது.

வருவாய் ஈட்டுபவர்கள் எனும் தங்கள் பங்கு குறித்த ஏற்புடைமை குறித்த பஹாய் போதனைகளை அடையாளம் காணும் வேறு பல வாசகப்பகுதிகளும் உள்ளன. அவை, தாய்மை குறித்த கடமைகளோடு சேர்த்து இதையும் எப்படி சிறப்பாக நிறைவேற்றப்போகிறார்கள் என தீர்மானிக்கும்படி கேட்டுக்கொள்கின்றன.

ஒரு பெண் தாய்மைப் பேற்றை அடையும்போது, ஒருபுறம் தாய் எனும் முறையில் தனது தலையாய கடமைகளை எவ்வாறு சிறப்பாக நிறைவேற்றப்போகிறாள் எனவும், மறுபுறம், தான் அங்கம் வகித்துள்ள சமூகத்தின் நடவடிக்கைளின் பிற அம்சங்களில் முடிந்த அளவு எவ்வாறு பங்கேற்கப் போகிறாள் எனவும் அவள் தீர்மானிக்க வேண்டும். ஆண் பெண் சமத்துவம் குறித்த பஹாய் போதனைகள் சிலவற்றை இதுவரை கண்டோம்.

வேறு இரண்டு போதனைகளைப் பற்றி நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். சமூகத்தின் தினசரி நடவடிக்கைளில் பிரச்சனைகள் இல்லாமல் ஒரு கலவையை பாலுறவு நெறிமுறை குறித்த நமது போதனைகள் வழங்குகின்றன. இது, வீட்டில், சமூக கலந்துறவாடல்களில், வானிபங்களில், தொழில்களில், பள்ளிகளில், மற்றும் அவை போன்றவைகளில் வழங்குகின்றன. உதாரணமாக, சமுதாயத்தோடு தொடர்புகொண்டுள்ள பல பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் பெரும் பிரச்சினைகளாகியுள்ளன. ஆக, பாலியல் சம்பந்தமான நமது போதனைகள் பரவலான சமுதாயத்தின் பல்வேறு நிலைகளில் செயல்பட ஆண் பெண் இருபாலரையும் இவற்றிலிருந்து விடுவிக்கின்றது. நாம் இங்கு ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறித்து குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஏனெனில், ஒப்பந்தம் பெண்களுக்கு பலவழிகளில் பாதுகாப்பு அளிக்கின்றது. உலக நீதி மன்றத்தின் ‘தவறிழைக்காமையின்’ வழி, சமயம் கெடுக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றது. உலக நீதி மன்றத்தின் சட்டமியற்றும் செயல்பாடு நமது போதனைகளில் உள்ள சமத்துவ உணர்வை அதிகாரபூர்வத்துடன் வெளிப்படுத்தும். ஒப்பந்தத்தின் மற்றுமொரு பரிமாணம், சமயகுருமார்கள் உருவாக்கப்படுவதை தவிர்க்கின்றது. சமயகுருக்களின் ஸ்தாபனம் பெண்கள் உரிமைக்கு எந்த அளவுக்கு பாதகமாக இருந்துள்ளது என்பதை வரலாற்று பூர்வமாக நாம் கண்டுள்ளோம். அதற்கும் மேலாக, சமயகுருக்கள் போல் நடந்துகொள்வதிலிருந்து நமது நிர்வாக ஸ்தாபனங்களை ஒப்பந்தம் தடுக்கின்றது. அதாவது, அவர்கள் சமயகுருக்கள் போல் நடந்து, சமயகோட்பாட்டு ரீதியான சொந்த அறிக்கைகளை வெளியிடுவது தவிர்க்கப்படுகின்றது. இத்தகைய அறிக்கைகள் தவறிழைக்காமையின் பாதுகாப்பின்றி, பெண்களுக்கு எதிரான அபிப்ராயங்களை வெளியிடவும் கூடும். ஆக, ஒப்பந்தம் பலவழிகளில் பெண்களுக்கு இன்றியமையாத பாதுகாப்பளிக்கின்றது. இப்போது, பெண்களும் அமைதியும் குறித்த நேரடியான கேள்விக்கு வருவோம். பெண்கள் விடுதலை பெறுவது, வாக்குறிமை பெறுவது, மற்றும் சமுதாயத்தில் தங்கள் பங்கை ஆற்றுவது, ஆகியற்றுக்கும் அமைதி குறித்த அவர்களின் அக்கறை ஆகியவற்றுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க தொடர்பு உள்ளதென்பதை 19 மற்றும் 20ம் நூற்றாண்டின் வரலாறு எடுத்துக்காட்டுகிறது. ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் காண்போம்: அதாவது, 1873ல் ஜூன் மாதம் 2ம் தேதி நடந்த பெண்களுக்கான அமைதி விழா. இது நடந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும் நகரிங்களில் இது நடத்தப்பட்டது. பிஃரான்கோ-பிரஸ்ஷியன் போரினால் விளைந்த மாபெரும் துன்பங்ளைக் கண்டு மனம் திகைப்படைந்த ஒரு பெண்கள் குழுவின் வழி இது நடைபெற்றது. அந்தப் பெண்கள் குழு, அமைதியை தோற்றுவிக்கும் நோக்கம் கொண்ட பெண்களின் அமைதி விழாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கிய அமைப்பு இது. 1873ல் நடைபெற்ற இந்த விழா, பின்வருவனவற்றைக் கோரியது:

– பொது ஆயுதக்களைவின் வாயிலாக போர்களை ஒழிப்பது,

– உலக நாடுகளின் மீது கண்டிப்பான அதிகாரம் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பு ஒன்றை தோற்றுவிப்பது,

– அமைதிக்கு கேடு விளைவிப்பதால் மது விற்பனைக்குத் தடை விதிப்பது,

– பயங்கரமான ஆயுதங்களுக்கான விற்பனை மற்றும் அவற்றை கைவசம் வைத்திருப்பதற்குத் தடை விதிப்பது,

– பாலியல், நிறம் மற்றும் இனம் போன்றவற்றின் அடிப்படையில் ஏற்படும் சமத்துவமின்மையை போக்குவது, மற்றும்

– போர்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவும், தகறாருகளைத் தீர்த்து வைப்பதற்காக நடுநிலையாளர்களாக செயல்படுவதற்காகவும், பெண்களின் பங்கை அடையாளம் காண்பது.

நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட காலத்திற்கு முன், அனைத்துலக பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, நாடுகளின் பொது ஆயுதக்களைவும், அனைத்துலக பிரச்சினைகளைக் களைவதற்காக கட்டாயமான விசாரனைக்கூட்டங்களும் ஏற்படுத்தப்படவேண்டுமென வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சார்ந்த பெண்கள் அமைப்புக்கள் ஓர் உலக அரசாங்கம் வேண்டுமென கோரிக்கைகள் விடுத்தன. இந்த அமைதிக்கான பெண்களின் விழா, இறுதியில் பிரிவுகளுக்கு உட்பட்டுப் போயிற்று. காரணம், 19ம் நூற்றாண்டில் அமெரிக்க பூர்வகுடியினர் பற்றிய அமெரிக்க இராணுவக் கொள்கை சம்பந்தமாக இந்தப் பிரிவினை உண்டாயின்று. ஆனாலும், இந்தப் பிரிவினை, இன்றுவரை நிலைத்திருக்கும் வேறு பல அமைப்புக்களுக்கு இட்டுச் சென்றது. உதாரனமாக, அமைதிக்கான பெண்களின் கட்சி, அமைதிக்கும் சுதந்திரத்துக்குமான பெண்கள் அனைத்துலக சங்கம், மற்றும் 1921ன் பெண்களின் அமைதிக் கூட்டம், ஆகியவை. அமைக்கும் சுதந்திரத்துக்குமான பெண்கள் சங்கம் பாரீசில் 1919ல் நடைபெற்ற அமைதி மாநாட்டிற்கு சில கருத்துரைகளை வழங்கியது. இது முதலாம் உலக யுத்தத்திற்குப் பிறகு நடந்தது. நிறந்தர அமைதி நிலவுவதற்காக அச்சங்கம் பல பரிந்துரைகளை வழங்கியது. ஆனால், இந்தப் பரிந்துரைகள் அந்த 1919ம் ஆண்டின் அமைதி மாநாட்டினால் நிராகரிக்கப்பட்டன.

அந்த மாநாட்டில் கூடியிருந்தோரில் …………………. எனும் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார். 1946ல், 26 வருடங்களுக்குப் பிறகு, ஸ்கேண்டினேவியாவில் உள்ள நோபல் நிறுவனத்தின் ஓர் ஆங்கத்தினராகவும் அவர் இருந்தார். இந்த நிறுவனம், அமைதிக்கும் சுதந்திரத்துக்குமான அனைதுதுலக பெண்களின் சங்கத்திற்கு எமிலி பல்க் ஆற்றிய சேவைக்காக நோபல் அமைதித் பரிசை அவருக்கு அளித்த நிறுவனமாகும். அந்த வேளையில் அவர் பின்வரும் வார்த்தைகளை உரைத்தார். அவர்: “நான் நிறைய கூற விரும்புகிறேன். 1919ல் அமைதிக்கும் சுதந்திரத்துக்குமான அனைதுதுலக பெண்களின் சங்கம் மாநாட்டுக்கு அளித்த பரிந்துரைகளை மாநாடு ஏற்றுக்கொண்டிருந்தால் அது மிகவும் விவேகமாக இருந்திருக்கும். ஆனால், வெகு சில ஆண்களே பெண்கள் அளித்த அந்த பரிந்துரைகளைச் செவிமடுத்தனர். அங்கு நிலவிய சூழ்நிலை மிகவும் கசப்பு நிறைந்தும் பழியுணர்ச்சி மிகுந்தும் இருந்தது. அதற்கும் மேலாக, பரிந்துரைகள் பெண்களால் செய்யப்பட்டிருந்தன. நாம் வாழும் ஆண்தலைமைத்துவ உலகில், பெண்களிடமிருந்து வரும் கருத்துக்கள் பெரிதாகக் கருதப்படுவதே இல்லை. அவர் பின்வரும் வார்த்தைகளோடு உரையை முடித்தார்: “தங்களுடைய செறுக்கு மிகுந்த புன்சிரிப்பை விட்டுவிடுதல் ஆண்களுககு விவேகமாகும்,” ஆகவே, கூற விரும்புவது என்னவென்றால், 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளிலில் குறிப்பிடத்தக்க அளவில் அமைதி அடையப்படுவதில் பெண்கள் அனுக்கமான சம்பந்தம் கொண்டுள்ளனர் என்பதே ஆகும்.

அமைதி குறித்த பஹாய் அனுகுமுறை குறித்தும், ஆண் பெண் சமத்துவம் மற்றும் அமைதி அடையப்படுதலுக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்தும் நாம் என்ன கூறக்கூடும். அது மூன்று பெரும்படி கோட்பாடுகளை அஸ்திவாரமாகக் கொண்டுள்ளது என்பது என் எண்ணம்.

முதலாவது கோட்பாடாக இருப்பது பூரணவளர்ச்சி குறித்த கோட்பாடாகும். பெரும்பாலான பஹாய்கள் தங்களை இந்தக் கோட்பாட்டோடு பழக்கப்படுத்திக் கொள்டுள்ளனர். பஹாய் நிர்வாக முறையின் வழி நாம் அமைக்க விரும்பும் சமுதாயமானது, பூரனவளர்ச்சியோடு கூடிய சமுதாயமாகும். அது ஜீவனுள்ள ஒன்று. எல்லா பகுதிகளுடனும் அது தொடர்புடையது. ஒரு பகுதியின் நல்வாழ்வு மற்ற எல்லா பகுதிகளையும் பாதிக்கக்கூடியது. இதுவே ஆண் பெண் சமத்துவம் குறித்த கேள்வியோடு மிகவும் அனுக்கமாக தொடர்புகொண்டுள்ளது. ஏனெனில், அமைதி ஐக்கியத்தைக் கோருகிறது என நமது புனித வாசகங்கள் கூறுகின்றன. அமைதி வேண்டுமென்றால் நமக்குள் ஐக்கியம் வேண்டும். இந்த ஐக்கியம் மனுக்குல ஒற்றுமையை அடிக்கோளிடுகிறது. மனுக்குல ஒற்றுமை இல்லையெனில் நமக்குள் அடிப்படை ஒற்றுமை கிடையாது. அமைதியும் கிடையாது. மனுக்குல ஒற்றுமைக்கு ஆண் பெண் சமத்துவம் அடிப்படையாகும். அமைதி, இனங்களுக்கிடையில் உள்ள உறவு குறித்ததோ, சமுதாயப்பகுதிகள் சிலவற்றுக்கிடையில் உள்ள உறவு குறித்ததோ மட்டும் அல்ல. அது ஆண் பெண் சமத்துவம் குறித்த விஷயமும் கூட. ஆக அந்த எண்ணத்தில், ஆண் பெண் சமத்துவம் மனித சமுதாயத்தின் பூரணவளர்ச்சியின் ஓர் அடிப்படை அம்சமே ஆகும். இந்தப் பூரணவளர்ச்சி கொண்ட பகுதியோடு நமது சமயம் அடையாளப்படுத்தும் ஆன்மீக ஆற்றல்களை அது பெற்றிருக்கும்.

அமைதி குறித்த தனது அறிக்கையில், சமத்துவமில்லாமை சமுதாயத்தையே பாதிக்கக்கூடிய அபாயகரமான மனப்பாங்குகளை ஆண்களுள் உருவாக்குகிறது என உலக நீதி மன்றம் கூறியுள்ளது. இதே கோட்பாட்டை அப்துல் பஹா பல இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார். உதாரனமாக, தாங்கள் சாதிக்கக்கூடிய உச்சங்களை பெண்கள் அடைவது தடுக்கப்படும் வரை, ஆண்களும் தங்களுக்கெ ஒதுக்கப்பட்டுள்ள சிறப்பை அடையத் தவறுவர், என அப்துல் பஹா கூறுகின்றார். ஆண் பெண் இருபாலரையும் நோக்கி அவர் கூறுவது என்னவென்றால்: ஒன்று பழுதுபட்டு இருக்குமானால், மற்றதும் நிச்சயமாக குறையோடு இருந்து, பூரணத்துவம் அடையப்படாமலேயே போகும். ஒன்று குறையோடு இருக்குமானால் அது மற்றதையும் பாதிக்கம். இவற்றிலிருந்து நான் அறிவது யாதெனில், பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படவில்லையெனில், ஆண்களும் தங்களது முழு மேம்பாட்டை அடைவதிலிருந்த தடுக்கப்படுகின்றனர். அல்லது, அப்துல் பஹா கூறுவது போல, ஆண்கள் தங்களுக்கென விதிக்கப்பட்டிருக்கும் சிறப்பை அடைவதிலிருந்து தடுக்கப்படுவார்கள். ஆகவே, உண்மையான ஒரு விதத்தில் ஆண்கள் பெண்களிடம் பிணைப்பட்டவர்களே. நமது சமுதாயத்தின் ஆண்கள் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்க தவறினால், அதே ஆண்கள் தங்கள் முழுமையான சிறப்பை நிறைவு செய்வதிலிருந்து தடுக்கப்படுகின்றனர். அல்லது, அப்துல் பஹா கூறுவது போல தங்களுக்கென விதிக்கப்பட்டிருக்கும் சிறப்பை அவர்கள் அடையாமற் போகக்கூடும்.

அப்துல் பஹா பல இடங்களில், அமைதி அடையப்படுவதில் தாய்மார்கள் ஆற்றக்கூடிய முக்கியப் பங்கினைப் பற்றி குறிப்பிடுகின்றார். தாய்மார்கள் தன்னிச்சையாக தங்கள் பிள்ளைகளை போருக்கு அனுப்பப்போவதில்லை, என கூறுகிறார். 20 வருடங்கள் போல் தங்கள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, போருக்கு அனுப்பி, நிலத் தகறாறோ அல்லது அது போன்ற வேறு ஏதாவது தகறாற்றினாலோ தயவு தாட்சன்யமின்றி அவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை தாய்மார்கள் அனுமதிக்கப்போவதில்லை. பிள்ளைகளை சன்டைக்கு அனுப்பமாட்டார்கள் எனும் வார்த்தைகளுக்கும் அப்பால் இங்கு வேறு ஏதோ ஆழமான அர்த்தங்கள் இருப்பதாக நான் எண்ணுகிறேன். அதாவது, தாய்மை என்பது பிறரை பராமரிப்பதிலும் கவனித்துக்கொள்வதிலும் தன்னலமற்ற செயல்களை உள்ளடக்கியுள்ளது எனவும், தனக்குள் வளரும் அந்த கருவுக்காக தன்னையே அழித்துக்கொள்வதை அது உள்ளடக்கியுள்ளது எனவும், இந்த புதிய படைப்பிற்கு தனது உடலில் இருந்து ஊரும் பாலை, தனது உடலிலிருந்தே உருவாக்கப்படும் பாலை ஊட்டுவதை உள்ளடக்கியுள்ளது எனவும், நான கருதுகிறேன். ஏனெனில், தாய்மை எனும் வளர்செயற்பாடு, தன்னலமின்மை உணர்வை வெளிப்படுத்துகிறது, ஆதிக்கம் மற்றும் கட்டுப்படுத்துதல் எனும் உணர்வின்றி பராமரிப்பு மற்றும் பிறருக்கு உதவும் உணர்வை வெளிப்படுத்துகின்றது. அமைதியை அடைந்திட இந்த உலகிற்குத் தேவைப்படுவது பராமரிப்பு குறித்த இந்த உணர்வு அதிகமாகவும், ஆதிக்கம் குறித்த உணர்வு குறைவாகவுமே ஆகும். அமைதி அடையப்படுவதற்கும் அது பராமரிக்கப்படுவதற்கும் பெண்கள் ஆற்றங்கூடிய முக்கிய பங்கிற்கு இதுவும் ஓர் அம்சமாக இருக்கும்.

என் உரையை நான் இப்போது ஒரு முடிவிற்குக் கொண்டுவரவிருக்கின்றேன். அதற்கு முன்பாக, ஆண் பென் சமத்துவம் குறித்த பஹாய் கோட்பாடுகளை அமுல் செய்வதில் நமக்கு வழிகாட்டுவதற்கு பஹாய் எழுத்துக்களில் நான் கண்ட ஒரு சில அம்சங்களை நான் இங்கு சுருக்கமாக குறிப்பிடவிரும்புகிறேன். நாம் என்ன வழிகாட்டிகளைப் பின்பற்ற வேண்டும், நாம் எதில் கவனமாக இருக்கவேண்டும், நாம் எதைத் தவிர்க்கவேண்டும், ஆண் பெண் சமத்துவத்தை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும். இது குறித்து ஐந்து கோட்பாடுகள் உள்ளதாக நான் எண்ணுகிறேன்.

முதலாவதாக, நமது புனித வாசகங்கள் பலத்தை பிரயோகிப்பதையோ கண்டன ஊர்வலங்கள் நடத்துவதையோ அனுமதிக்கவில்லை. அப்துல் பஹா கூறுவது: இப்போது இங்கிலாந்தில் பலத்தை வெளிப்படுத்தும் கண்டனக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. அவை, பெண்மை மற்றும் சமத்துவத்தின் ரீதியில் உகந்தவையுமல்ல, நல்விளைவுகளை உருவாக்கக்கூடியவையுமல்ல. நமது அனுகுமுறை பலத்தை பிரயோகிப்பதை உட்படுத்தியதல்ல.

என் எண்ணத்தில், மாற்றங்கள் என்பவை பரிணாம ரீதியானவை என்பது இரண்டாவது கோட்பாடாகும். எதையும் உடனடியாக செய்யவேண்டும், ஒரே நாளில் முடிக்க வேண்டும் என நாம் விரும்புகின்றோம். ஆனால் மனிதம் அவ்வாறு செயற்படக்கூடியதல்ல. அது படிமுறை வளர்ச்சியை உட்படுத்தியது. தங்களின் சார்பாக எழுதப்பட்ட கடிதம் ஒன்றில் உலக நீதி மன்றம்: சமயத்தில் உள்ள மற்ற போதனைகளைப் போல், ஆண் பெண் சமத்துவம் குறித்த கோட்பாடு, பஹாய் வாழ்க்கையின் மற்ற அம்சங்களோடு சேர்த்து பின்தொடரப்படுமாயின், அது நண்பர்களின் மத்தியில் செயல்விளைவுடனும், அனைத்துலக ரீதியிலும் ஸ்தாபிக்கப்படும். மாற்றம் என்பது படிமுறை வளர்செயற்பாடாகும். அது ஒருவர் தன்னோடும் பிறரோடும் பொறுமையும், அன்பான வழியில் கல்விபுகட்டுவதும் மற்றும் நம்பிக்கையாளர்கள் தங்கள் சமய அறிவை பெறுக்கிக்கொள்ளும் காலத்தின் ஓட்டமும், காலம் காலமாக கடைபிடித்து வரும் பாரம்பரிய மனப்பாங்குகளைக் கலைந்தும், சமயத்தின் ஒன்றுபடுத்தும் போதனைகளோடு படிப்படியாக தங்கள் வாழ்க்கைகளை இணக்கமாக்கியும் கொள்வதை கோருகின்றது. பொறுமை, படிமுறைவளர்ச்சி, படிபடிப்படியான மேம்பாடு, அன்போடு கல்விபுகட்டல், காலப்போக்கு, தன்னோடும் பிறரோடும் பொறுமையை கடைப்பிடித்தல் மற்றும் பிற.

மூன்றாவது கோட்பாடு, ஆண்களுக்கும் பெண்களுக்கு இடையே சச்சரவுகளைத் தவிர்ப்பது. ஈரானில், பஹாய் பெண்களால் உருவாக்கப்பட்ட ஒரு பெண்கள் இயக்கத்தைப் பற்றி அப்துல் பஹா குறிப்பிடுகிறார். அந்த இயக்கம், அறிவு வளர்ச்சி குறித்து உருவாக்கப்பட்டதாகும். அதற்கு அறிவுரைகள் எழுதும் போது, வித்தியாசங்கள் நாட்பட நாட்பட, முற்றிலும் துடைத்தொழிக்கப்படுமாறு செய்யப்படவேண்டும் என எழுதினார். மாறாக, ஆன்களுக்கும் பெண்களுக்கும் இடையே வாக்குவாதங்களை, இறைவன் பெயரால் , உருவாக்காமல் இருக்குமாக. சுறுக்கமாகச் சொல்லப்போனால், அவர் முற்றிலும் ஆன்மீகமான விஷயங்களிலேயே தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். மாறாக, ஆண்களோடு வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. இந்த விஷயம் குறித்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமுதாய ரீதியில் ஏற்படும், வீனான மற்றும் பலனற்ற பகைமையை நாம் கண்டுள்ளோம். நாம் இவற்றை தவிர்க்க வேண்டும் என நமது போதனைகள் வலியுறுத்துகின்றன. பெண்களை ஊக்குவிக்கும் ஒரு மாபெரும் கடமை ஆண்களுக்கு இருப்பதாக நமது புனித வாசகங்கள் தெரிவிக்கின்றன. அதோடு ஆண்கள் கொண்டுள்ள ஆதிக்க உணர்வையும் அவர்கள் போக்கிக்கொள்ள வேண்டும். அப்துல் பஹா கூறுவது: பெண்கள் சமத்துவத்தை அடைதலானது படைப்பு ரீதியில் அறவே இயலாததெனும் வகையில் ஆண்களின் ஆதிக்கம் செலுத்தும் போக்கானது அவர்களுக்குத் தொடர்ந்து வாட்டம் அளிக்கக்கூடிய ஒன்றாகவே இருந்துவரும். மேம்பாட்டை நோக்கிய பெண்ணின் இலட்சியம் இதனால் தடைபட்டு, அவள் சிறுக சிறுக நம்பிக்கை இழந்துவிடுவாள். இதற்கு மாறாக, நாம் அவளுடைய ஆற்றல் சமமானதே என அறிவிக்க வேண்டும். பார்க்கப்போனால் ஆண்களுடையதை விட பெண்களின் ஆற்றல் அதிகமானதே. இச்செய்கை பெண்களின் மனதில் நம்பிக்கையையும் இலட்சியமனப்பான்மையையும் தோற்றுவிக்கும். ஆக, ஆண்களுக்குப் பெரும் கடமை உள்ளது. பெண்களுக்கு அவர்கள், மேம்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்த எல்லா விஷயங்களிலும் நேர்மையானதும், மாசற்றதும், நல்விளைவுகள் மிக்கதுமான உற்சாகத்தை அளிக்கும் கடமையைக் கொண்டுள்ளனர். ஆண்கள், அப்துல் பஹா கூறும், தாங்கள் (பெண்களைவிட)உயர்ந்தவர்களெனும் அந்த மனப்பாங்கை அழித்துவிட வேண்டும். கடைசிக் கோட்பாடு, பெண்கள் சுயமேம்பாடு மற்றும் சாதனைகள் குறித்த சொந்த முயற்சிகளில் கடும் ஈடுபாடு காட்டுவதன் முக்கியத்துவம். அப்துல் பஹா கூறுகிறார்: எல்லா வழிகளிலும், ஆணுக்குச் சமமாக பெண் அதிக பூரணத்துவம் எய்திட முயலவேண்டும். அவள், தான் பின்தங்கியுள்ளவற்றில் எல்லாம் மேம்பாடு அடையவேண்டும். இதன்வழி, ஆண்கள், ஆற்றல் மற்றும் சாதனைகளில் பெண்கள் தங்களுக்கு ஈடானவர்களே என்பதை ஆமோதித்திட வலியுறுத்தப்படுவார்கள். ஆண்கள் மற்றும் பெண்களின் சமத்துவம் குறித்த கோட்பாட்டை அமுல்படுத்துவதற்கான செயல்விளைவுகள் மிக்க பஹாய் அனுகுமுறையை இந்த ஐந்து கோட்பாடுகளும் அடிக்கோளிடுகின்றன என்பது என் எண்ணம்.

சேவை செய்வது


சேவை (Service)
(திரு அலி நாக்ஜவானி)

“சேவை”- பஹாய் புனிதத் திருவாசகங்களில் நாம் அடிக்கடிக் காணக்கூடிய ஒரு சொல் இந்த ‘சேவை’ அல்லது ‘தொண்டு’ எனப்படுவது. இறைவனுடனான உறவை, எல்லா தெய்வ அவதாரங்ளும் சேவகத்தின் அடிப்படையிலேயே அமைத்துக் கொண்டுள்ளனர் என பஹாவுல்லா, கித்தாப்-இ-இகான் நூலில் குறிப்பிட்டுள்ளார். சேவைக்குப் பல வழிகள் உண்டு. அதற்குப் பல அம்சங்களும் உண்டு. சேவைக்கு ‘(உற்சாக)ஆவியும்’ உண்டு. உணர்வாக இருந்து, பின் செயல் பெறும் போது, சேவை, உருவம் அடைகின்றது. தொடரும் நமது உரையாடலினூடே (உற்சாக)ஆவி செயலைவிட முக்கியமா அல்லது (உற்சாக)ஆவியைவிட செயல் முக்கியமா என்பது பற்றி நாம் ஒரு முடிவிற்கு வரலாம்.

சேவை பல ரீதிகளில் வெளிப்படுத்தப்படலாம்: இறை சேவை, இறைச்சமய சேவை, இறையன்பர்களுக்குச் சேவை, பெற்றோர்களுக்குச் சேவை, சொந்தக் குடும்பத்திற்குச் சேவை, தன்னைச் சுற்றியுள்ளவருக்குச் சேவை, தேசத்திற்குச் சேவை, சமூகத்திற்குச் சேவை, நற்பணிகள் அல்லது சொந்த உத்தியோகம் மற்றும் தொழில் மூலம் சேவை செய்தல் எனக் கூறிக்கொண்டே போகலாம்.

இந்த சொற்பொழிவு ஐந்து தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலில், அப்துல் பஹா அவர்கள், அதாவது ‘பஹாவின் சேவகர்’. அவரைப் பற்றி சுறுக்கமாக உரையாடுவோம். அதன் பின் எல்லோருமாக அப்துல் பஹா அவர்களின் உதாரணத்தை உண்மையில் பின்பற்ற வேண்டுகின்றோமா அல்லவா என பரிசீலனை செய்யலாம். அதன் பின் நம் உள் வீற்றிருக்கும் இயல் திறன்களைப் பற்றி ஆலோசிக்கலாம். இது பஹாய் சேவையின் பிற அங்கங்களுக்கு இட்டுச் செல்லும். அதன் பிறகு நாம் அப்துல் பஹா அவர்களின் நேர்வு நிருபங்களின் பல பகுதிகளைப் படித்து, அவற்றைப் பற்றி கலந்துரையாடலாம்.

“அப்துல் பஹா” இப்பெயரை தமக்குத் தாமே சூட்டிக் கொண்டார். பஹாவுல்லா இப்பெயரை அவருக்கு வழங்கவில்லை. இதன் காரணம், அப்துல் பஹாவின் சேவை அடிப்படையிலான, உன்னத ஸ்தானத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக இருந்திருக்கலாம். அப்துல் பஹா தமது சேவகத்தைப் பற்றி கூறுகையில், அது ‘முழுமைபெற்றது, ‘பவித்திரமானது’, ‘மெய்யானது’, ‘உறுதியாக நிலைநிறுத்தப்பட்டது’, ‘என்றும் நிலைத்திருக்கக்கூடியது’ மற்றும் ‘வெளிப்படையானது’ என்று அவரே தமது திருவாய் மலர்ந்தருளியிருக்கின்றார். ‘மெய்யானது’ மற்றும் ‘வெளிப்படையானது’ எனும் வார்த்தைகளை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பார்க்கவும். அதாவது, இச்சேவகம் அகமும் புறமும் கொண்டது என பொருள்படக் காணலாம். அதாவது அப்துல் பஹா அவர்களின் அக மற்றும் புற மெய்நிலைகள், சேவகத்தையே வெளிப்படுத்தின. ஆனால், பஹாவுல்லா, அப்துல் பஹாவைப் பற்றி குறிப்பிடுகையில், அவரை, “இறைவனின் திருமர்மம்”, “மனிதகுல முழுமைக்குமான அடைக்கலம்…” “மனிதர்கள் யாவருக்கும் அருள் வழங்கும் சமுத்திரம்”, “மானிடர்களுக்கு தயை சுரக்கும் ஒளி ஊற்று”, “இறைவனை நம்பியோர் பற்றிக் கொள்ள ஒரு கொம்பு……” என்றும், “அவர் குரலுக்கு (அப்துல் பஹாவின்) செவிசாய்க்கும் பாக்கியம் பெற்ற காதுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை, ஒரு மடங்கு அல்ல இரு மடங்கு ஆசீர்வதிக்கப் பெற்றவை,” என்றும் பஹாவுல்லா கூறுகின்றார். பாதுகாவலர் ஷோகி எ•பெண்டி தமது நூல்களில், “…பஹாவுல்லாவின் ஒளியைப் பிரதிபலிக்கும் கறைகளற்ற கண்ணாடி” எனவும், அவர் போதனைகளை பிரதிபலிக்கும் குறைகளற்ற உதாரண புருஷர் எனவும் குறிப்பிடுகின்றார். பயங்கர மிரட்டல்கள், ஓழிவில்லா கொடுமைப் புயல்கள் மற்றும் அவமானத்தின் கொடூரங்களினூடே, ஒரு நூழிழை அளவு கூட பஹாவுல்லா திருவெளிப்படுத்திய கோட்பாடுகளில் இருந்து பிரழாமல் இருந்த நமது நேசத்திற்குறிய அப்துல் பஹா அவர்களின் உதாரணத்தை, நமது தனிப்பட்ட நடத்தை மற்றும் பொது வாழ்க்கையில், விடாமுயற்சியுடன் பிரதிபலித்தால் மட்டுமே, நாம் நமது திருச்சமயத்திற்கு உகந்தவர்கள் என்பதை நிரூபிக்க முடியும். இங்கு ‘மட்டுமே’ எனும் வார்த்தையை கவனிக்கவும். அவர் தமது வாழ்க்கையின் இறுதி வரை கடைபிடிக்கவெனத் தேர்ந்தெடுத்த சேவை மற்றும் பவித்திரத்தின் பாதை இவ்வாறே அமைந்திருந்தது. விண்ணிலிருந்து, அவர் நம்மை எப்பொழுதும் பார்த்த வண்ணம், “என்னைப் பார், என்னைப் பின்தொடர், என்னைப் போலவே இரு” எனும் ஐக்கிய அமரிக்காவில் முன்பு உச்சரித்த, அதே வார்த்தைகளை மறுபடியும் மறுபடியும் கூறுவது போன்று உணரமுடிகிறதல்லவா?

இவ்விதப் பிண்ணனியில், இந்த வார்த்தைகளை சிரமேற்கொள்ளும் பொருட்டு நாம் சிந்திக்காமல் இருக்கமுடியுமா? நிச்சயமாக நாம் சிந்திக்கவேண்டும். அப்துல் பஹா அவர்களைப் பின்பற்றி நடக்க நாம் பெரும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்பதே எதிர்பார்ப்பு. இது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த இலக்கை ஒரு வேலை நாம் அடைய முடியாது போகலாம், ஏனெனில் அவர், குறைகளற்ற உதாரண புருஷர், நாம் அவ்விதமில்லை. உங்களைப்போலும் என்னைப்போலும் அவர் குறைகள் அற்றவர், எனக் கூற இடமில்லை. இது இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயம். அப்துல் பஹா அவர்களிடம் மட்டுமே ‘குறைகளற்ற’ நிலை இருந்தது. நாம் என்றுமே அந்த நிலையை அடையமுடியாது. இருந்தபோதும் அந்நிலையை அடைய, அந்த உதாரணத்துவத்தின் அருகாமையை நாள்தோரும் நெருங்கியவாறு இருக்க, முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். இக்கடமையை நாம் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். இது, ஒரு அவா அல்ல. இதை ஒரு சிறந்த கோட்பாடாகவோ, ஒரு தத்துவமாகவோ மட்டும் கொள்ளக்கூடாது. நம்மை நாமே வளைத்துக் கேட்க வேண்டிய கேள்வி, “தினமும் அப்துல் பஹா அவர்களின் உதாரணத்தை பின்பற்ற நான் முயற்சிகள் மேற்கொள்கின்றேனா?” என்பதே.

இவ்வுலகில் இரு விதமான பஹாய்கள் உள்ளனர் என பாதுகாவலர் அவர்கள் கூறுகின்றார். ஒரு சாரார், தங்கள் மதம் பஹாய் மதம் எனக் கூறிக்கொள்வோரும், மறு சாரார் தங்கள் வாழ்வு பஹாய் மதத்திற்கே அர்ப்பணம் என்போரும் ஆவர். தம்முடைய ஒரு கடிதத்தில், “சில பஹாய்கள், இச்சமயத்தின் சம்பந்தப்படாத ரசிகர்கள்” எனவும், “வேறு சிலர் இச்சமயத்தின் மும்முறமான ஊழியர்கள்” எனவும், அவர் குறிப்பிடுகின்றார். ஒரு பஹாய் எனும் முறையில், பஹாவுல்லா அறிவுறுத்துவது போல், நான் தனிமையில் இது பற்றி கண்டிப்பாக சிந்தனை செய்தும் தியானம் செய்யவும் வேண்டும். “நான் எப்படி இருக்க விரும்புகிறேன், என் வாழ்க்கையை எப்படி செலவிட விரும்புகின்றேன்”, என்று என்னையே நான் கேட்டுக் கொள்ளவேண்டும். கித்தாப்-இ-இகான் நூலில், பஹாவுல்லா, “ஒரு மணி நேர சிந்தனைப் பிரதிபலிப்புகள், எழுபது வருட பக்திமயமான வழிபாட்டிற்குச் சமம்,” எனக் கூறுகின்றார். ஒரு மணி நேரம்தான், ஆனால் தனிமையில் இருக்கவேண்டும். சிந்தனை செய்து மேற்குறிப்பிட்டுள்ளவை பற்றிய கேள்விகளை, அடிப்படைக் கேள்விகளை நான் என்னையே கேட்டுக் கொள்ளவேண்டும். “இவ்வுலகம் ஒரு நாடக அரங்கம்; அல்பமானதும் சூன்யமானதும், இல்லாத மெய்மையை பரைசாற்றும் எதுவும் அற்ற ஒன்றாகவும் உள்ளது.” “அதனில் பிரியம் வைக்காதீர்கள்.” மறைமொழிகளில், பஹாவுல்லா, இறைவன் இந்த விரைந்தோடும், கண்ணைப் பறிக்கும், பளபளப்பு மிகுந்ததும் கவர்ச்சி நிறைந்ததுமான உலகைப் படைத்து, மெய்யுலகான உண்மை உலகினை, ஆத்யாத்மீகத்தின் இருப்பிடத்தினை ஏன் மறைத்தான் என்பதை சிந்திக்கச் சொல்கிறார். முன்னதை (இவ்வுலகை) தினமும் கண்முன் வைத்து, பின்னதை (அவ்வுலகை) கண்களுக்கு அப்பால் வைத்தும் ஏன் விளையாடுகிறார்? இதைப்பற்றி நம்மைச் சிந்திக்கச் சொல்கின்றார். இறைவன் ஏன் இவ்விதம் செய்துள்ளார் என்று?
மறுபடியும், மறைமொழிகளை படிக்குங்கால், இறைவனிடமிருந்தோ அல்லது நம் சக மனிதப்பிரவிகளிடமிருந்தோ நாம் மறைப்பனவற்றை, உண்மையில் இறைவன் காண்கின்றாரா இல்லையா என்பதுபற்றி தம்முடைய நம்பிக்கையாளர்களை சிந்திக்கச் சொல்கின்றார். இறைவன் கவணிக்கின்றாரா? பதில் மிகவும் தெளிவானது. நிச்சயமாக கவனிக்கின்றார். அவர் கவனமிக்க, சதா பார்த்துக்கொண்டிருக்கும் இறைவன். அவர் பார்ப்பது மட்டும் அல்ல, யாவற்றையும் அவர் பதிவு செய்கின்றார் என பஹாவுல்லா கூறுகின்றார். மறைமொழிகளில், நம் செய்கைகள் யாவும் பதிவு செய்யப்படுகின்றன என குறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமா, இறைவன் சந்நிதியில், அவர் திருமுன் நிற்கும் போது, நம் மொத்தச் செய்கைகளுக்கும் காரணம் தெரிவிக்க வேண்டும். இதுவும் மறைமொழிகளில் காணக் கிடைக்கிறது. “தினசரி உன் செய்கைகளை கணக்கிட்டுக் கொள்க”வென, அவர் பகர்கின்றார்.

பஹாய் உலகத்தின் அங்கத்தினர்களாகிய நம் ஒவ்வொருவருக்குள்ளும், மறைமுகமான இயற் திறன்கள் மற்றும் சக்திகள் உள்ளன என்பதை நிச்சயித்துக் கொள்ளவேண்டும். நம் வாழ்வின் நோக்கமே, நன்பர்களே, இவ்வியற் திறன்கள் வெளிப்படுத்தப்பட்டு, அபிவிருத்தியாக வேண்டும் என்பதே. அதுவே நம் வாழ்வின் நோக்கம். மனிதர்களாகிய நமக்கு, நம் உள் உறையும் இவ்வியற் திறன்கள் வெளிப்படுத்தப்பட்டு, அபிவிருத்தியாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே, உதவ, இறைத் தூதர்கள், வந்துள்ளனர். நம் ஒவ்வொருவர் உள்ளும் இருக்கும் இயற் திறன்கள் ஒறே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொன்றும், வேறுபட்டது. ஆனால், நோக்கம் எல்லாம் ஒன்றே. நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட வலிமைகளின் அடிப்படையிலேயே, நம் உள் வீற்றிருக்கும் திறமைகளை, ஒரு விதை எப்படி சிரமப்பட்டு, தன்னுள் இருக்கும் மரத்தை வெளிக்கொணருகிறதோ, அதேபோல் நாமும் வெளிக்கொணர வேண்டும்.

“ஒவ்வொரு மனிதனும், இயல்திற முறையில் தன்னுடை உள்மெய்நிலைக்கு அளிக்கப்பட்டுள்ள சக்திகள் எல்லாவற்றையும் அவன் வெளிப்படுத்தக்கூடிய அந்த நிலையை அடையும்வரை, தொடர்ந்து முன்னேறியும், வளர்ந்தும் வருவான்” என பஹாவுல்லா கூறுகிறார். (இதில் ‘யாவற்றையும்’ எனும் வார்த்தையை கவனியுங்கள், ஒன்றோ இரண்டோ அல்ல.) இது பஹாவுல்லாவின் திருவாசகத் தொகுப்பான “சில பொறுக்குமணிகள்” எனும் நூலில் காணப்படுவது. அப்துல் பஹா அவர்களும், “…நம்மைப் படைத்த தயை மிகுந்த ஆண்டவர், எப்படி ஒரு முளையும் விதையில் இருந்து மரம் வெளிப்படுகின்றதோ, அதேபோல்… மனித மெய்நிலையினுள் சில உள்ளுரைந்த, வெளிப்பட உள்ளவையான இயல்திறமுறையிலான பன்புகளை வைத்துள்ளார்.” மறுபடியும் ‘முளையும் விதை’ உவமானத்தை நாம் காண்கின்றோம்.” கடவுள் தமது அன்பை மனிதன் பால் வெளிக்காட்டவே அவனை படைத்துள்ளார்” என நாம் புனித வாசகங்களின் மூலம் அறிகின்றோம். “உன் படைப்பினை யாம் விரும்பினோம், ஆகவே உன்னைப் படைத்தோம்”. மனிதனைத் தாம் படைத்ததன் காரணம், அவன் மேல் தாம் கொண்ட அன்பே என பஹாவுல்லா கூறுகின்றார். சரி, அவர் நம்மைப் படைத்தார், நம்மிடம் என்ன எதிர்ப்பார்கின்றார்? ஆம், அவர் எதிர்பார்ப்பதும் அன்பைத்தான். இதுவே எழுத்தால் வடிக்கப்பட்டுள்ள திருவொப்பந்தம். “எம்மிடம் அன்பு கொள்வாயாக அதனால் யாம் உன்னிடத்தில் அன்பு காட்ட இயலும்.” இது ஒரு ஒப்பந்தம். இது இரு சாரருக்கும் பொருந்தும். “நீ எம்மிடம் அன்பு காட்டாவிடில் எமது அன்பு எவ்வகையிலும் உன்னை வந்தடைய இயலாது.” “உன் படைப்பினை விரும்பினோம், உன்னைப் படைத்தோம், நீ எம்மை நேசிப்பாயாக, அதனால் யாம் உன் நாமத்தை உணக்குச் சூட்டி உனது ஆன்மாவையும் எமது உயிர் ஆவியினால் நிரப்பக்கூடும்.” ஏன்? “அதனால் யாம் உன் நாமத்தை உனக்குச் சூட்டி, உன் ஆன்மாவை எமது உயிர் ஆவியினால் நிரப்பக்கூடும்” இதனால்தான்! நான் இறைவனை விரும்பாவிட்டால், அவர் அன்பு என்னை வந்தடைவது மட்டும் இல்லாமல், நான் என்னுடைய பிறவி நோக்கத்தையே நிறைவேற்றியவன் ஆகமாட்டேன். மேலும் நான் பிறவி எடுத்ததன் நோக்கம், வளர்வதற்கே! நான் ஒரு விதையைப்போன்றவன். நான் வளரவேண்டும். நான் வளர்வதற்கென்றே பிறந்தவன். விதை உண்டானதின் நோக்கமே, வளர்வதற்குத்தானே! ஒரு விதை படைக்கப்பட்டது, என்றென்றும் ஒரு தானியக் கிடங்கில் கிடப்பதற்கோ அல்லது ஏதோ ஒரு பழம் பொருள் நிறைந்த புதையலில் கிடப்பதற்கோ அல்லவே! அது படைக்கப்பட்டது, ஒரு பெரிய மரமாக வளர்ந்து, நிறைய பழங்களைத் தரவேண்டும் என்பதற்காகவே. அதனால் தான் அந்த விதை இறைவனால் படைக்கப்பட்டது.

நாம் செய்வதனைத்தும் அன்புடனேயே செய்யப்படல் வேண்டும்; அதாவது, இறைவன் மேலுள்ள அன்பினாலும், அவர்தம் வெளிப்பாட்டாளர் மீதுள்ள அன்பினாலும். பின் வரும் பிரார்த்தனை நமக்குப் பரீட்சயமானதுதான், இருந்தாலும், மேலே நாம் புறிந்துகொண்டவற்றை வைத்து, இப்பிரார்த்தைனையில் அடங்கிக் கிடக்கும் வார்த்தைகளை ஒப்பிட்டுப் பார்ப்போம். பஹாவுல்லாவின் பிரார்த்தனைகளிலிருந்து:
“என் இறைவா, நான் உங்கள் அன்பெனும் நிலத்தில், உங்களால் ஊன்றப்பெற்றும், உங்கள் தயை எனும் கரங்களால் வெளி வரச் செய்யப்பட்டதுமான ஒரு சிறு விதை. ஆகவே, இந்த விதை “(அதாவது நாம் ஒவ்வொருவரும்) தன்னுள் ஏங்குவது, தங்கள் தயை எனும் நீர் மற்றும் தங்களது திருவருள் எனும் மெய் ஊற்றுக்கே. உங்கள் நிழலிலும், உங்கள் சபையின் எல்லைக்குள்ளும், அதை மலரச் செய்விக்கக்கூடியவற்றை, உங்கள் அன்பு-நேசமெனும் சுவர்க்கத்தில் இருந்து அனுப்பிவைப்பீராக.”

ஆகவே நாம் எல்லோரும் விதைகள், நாம் எல்லோரும் வளரவேண்டும். இந்த வளர்ச்சி சுயவிருப்பத்தால் வரவேண்டும். தானியக் கிடங்கில் கிடக்கும் ஒரு விதைக்கு தன்னிச்சை கிடையாது. ஆனால் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. நம்மை நாம் இடம் பெயரச் செய்வித்துக்கொள்ள முடியும். நம் வேர்களை, நமது திருச்சமயம் எனும் நிலத்தில் பதியவைக்கின்றோம். நமது சிறு கிளைகளை வெளிக்கொணர்கின்றோம். ஒரு சிறு கன்றாகின்றோம். பிறகு மரமாகின்றோம். பழம் கொடுக்கின்றோம். நிழல் தருகின்றோம். இதுவே பிறவியின் நோக்கம். இது நம் கைகளில் இருக்கின்றது. நாம் பிறவிப் பயன் அடைவது, நம் கைகளிலேயே உண்டு, பிறர் கைகளில் இல்லை. “ உங்கள் முழு இதய ஆர்வத்துடனும், உங்கள் ஆன்மாக்களின் முழு ஆவலுடனும், உங்கள் சுயவிருப்பத்தால் ஆன முழு வேட்கையுடனும் மற்றும் உங்கள் சக்தி முழுமையையும் செலுத்தி, எழுங்கள்.” (இந்த ஆவலை, இந்த வேட்கையை, இந்த சுயஇச்சையை நடப்பில் காட்டவென, பஹாவுல்லா தேர்ந்தெடுத்துள்ள வார்த்தைகளைக் கவனியுங்கள்.) இவ்விதத்திலேயே இறைவனின் அருளுடனும், தயையுடனும், நாம் வளருவோம்.

அடுத்து நாம் மேலோட்டமாகத் தெரிந்துகொள்ளப்போவது, நம்பிக்கை மற்றும் அடிபனிதல் ஆகியவற்றின் பிரிக்கமுடியாமை. ‘பொறுக்குமணிகள்’ நூலிலிருந்து இரண்டு பத்திகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். உங்கள் எல்லாருக்கும் அவை பரீட்சயமானவையாக இருக்கலாம், ஆனால் மேலும் அழுத்தம் கொடுக்கவென அவற்றை உபயோகப்படுத்துகிறேன். நமது முதல் பாரா, பாதுகவலர் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, ‘பொறுக்குமணிகள்’ நூலில் சேர்க்கப்பட்டதுமான, ‘கித்தாப்-இ-அக்தாஸ்’ நூலின் முதல் பாராவே. ‘கித்தாப்-இ-அக்தாஸ்’ நூலின் ஆரம்ப உரையும் இதுவே.

“இறைவனால் தமது ஊழியர்களுக்கு அறிவுருத்தப்பட்டிருக்கும் முதல் கடமை, தமது திருவெளிப்பாட்டின் திவ்விய ஊற்றையும், தமது ஆனைகளின் தோற்றுவாயையும் கண்டுகொள்வதேயாகும்…. இக்கடமையை நிறைவேற்றிய எவரும், எல்லா நன்மைகளையும் பெற்றரவராவார்…. இந்த மிக உன்னத நிலையை, மகிமையின் உயர்வான சிகரத்தை அடைந்திட்ட எவரும், இவ்வுலகின் ஆவலாகியவரின் ஒவ்வொரு விதியையும் அநுஷ்டிக்கக் கடமைப்பட்டவராவார்.”

இதற்கு பிறகு பஹாவுல்லா அவர்களிடமிருந்து இந்த சாஸ்வதமான திருக்குறிப்பு, “ இவ்விரட்டைக் கடமைகள் ஒன்றுக்கொண்று பிரிக்க இயலாதவை.” அதாவது, இறைத் தூதரை அடையாளம் கண்டுகொள்ளலும், அவரது திருவடி பணிதலும், இனைபிரிக்க முடியாதவை. “ஒன்றில்லாமல் மற்றது ஏற்புடையதாகாது.” ‘பொறுக்குமணிகள்’ லின் மற்றொரு பகுதியிலிருந்து, “இறை ஐக்கியத்தின் திவ்விய ஊற்றினைக் கண்டுகொண்டவர்க்கு, இனைகடமைகள் இரண்டு உள்ளன…. முதலாவதாக, அவர் அன்பில் தவறா உறுதி… அடுத்தது, மெய்யானவற்றிலிருந்து பொய்யானவைகளை பேதம் கண்டும் பிரிவுபடுத்திக்கொள்ளவுமென, அவர் நிர்ணயித்திருக்கும் சட்டவிதிகளைக் கண்டிப்புடன் கடைபிடித்தல்…. ‘என பஹாவுல்லா ‘பொறுக்குமணிகள்’ இல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.” ‘பொய்யானவைகள்’ எனும் கடிய வார்த்தையை, பஹாவுல்லா, வேண்டுமென்றே இங்கு பயன்படுத்தியுள்ளார். இப்பகுதிகளை மேலும் ஆழமாக பரிசீலனை செய்வதற்கு மிகுந்த நேரம் தேவையாகையால், கிடைக்கும் நேரத்தில், நீங்களாகவே அதை செய்துகொள்ளவும்.

இப்பொழுது நான், பாதுகாவலர் அவர்களின் வாசகங்களிலிருந்து சில பகுதிகளைப் படிக்கப்போகின்றேன். அப்பொழுது நீங்கள், பஹாய் சேவைக்குத் தேவையான, இன்றியமையாத அங்கங்களை அதிலிருந்து கண்டுகொண்டு, மனதிலேயே அவற்றை நீங்கள் குறிப்பும் செய்துகொண்டு, பின் நீங்களாகவே ஒரு அபிப்ராயத்திற்கு வருவீர்கள். பெரும்பாலான பகுதிகள் மேலோட்டமானவையே. நான், ஐந்து அங்கங்களை இனம் கண்டுகொண்டுள்ளேன், ஆகவே, முடிவில் நாம் எல்லோரும், குறிப்பெடுத்துக்கொண்டவைகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

நமது சமயம் உட்பட, சகல மதங்களின் அடிப்படை நோக்கமும், மனிதனை இறைவனின் அருகாமைக்கு இட்டுச்செல்லவும், அதிமுக்கியமானதாக விளங்கும் அவன் நடத்தைமாற்றத்தைக் கொண்டுவருதற்கும் ஆகும். நமது சமயபோதனைகளில், சமூகப் பொருளாதார அம்சங்களுக்கு பெரும்பாலும் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகின்றது, ஆனால், அதன் ஒழுக்க சம்பந்தப்பட்ட அம்சங்களை இவற்றிலிருந்து குறைத்து மதிப்பிடமுடியாது.

மற்றுமொரு பகுதி :

இறைவனின் சமயத்தில் சேவையைப்போல் வெற்றிகள் அளிக்கக்கூடிய ஒன்று வேறில்லை. சேவையே தெய்வீகத் திருவுறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தக்கல் ஆகும். ஆகவே, ஓர் அன்பர் செயல்பட்டுக்கொண்டிருந்தால், பவித்திராத்மாவின் ஆசீர்வாதம் அவருக்கு உண்டு. செயலாற்றாமல் இருக்கின்ற போது, பவித்திராத்மாவின் நோய்தீர்க்கும் மற்றும் வேகப்படுத்தும் ஒளிக்கதிர்கள், அந்த மனிதனுள் வைப்பிடம் இல்லாமற் போய், அவனுக்குக் கிடைக்காமற் போகும்.

மற்றுமொரு பகுதி :

ஒவ்வொரு நம்பிக்கையாளரும், புதியவரோ பழையவரோ, அறியவேண்டியது என்னவெனில், திருச்சமயத்திற்கு, நம்மை புணர் உருவாக்கம் செய்யக்கூடிய அத்யான்மீக சக்தி உண்டு…

இதையே மறுபடியும் பார்ப்போம் :

ஒவ்வொரு நம்பிக்கையாளரும், புதியவரோ பழையவரோ, அறியவேண்டியது என்னவெனில், திருச்சமயத்திற்கு, நம்மை புணர் உருவாக்கம் செய்யக்கூடிய அத்யான்மீக சக்தி உண்டு…, அதாவது, நாம், அந்த சக்தி தனது செல்வாக்கை நம் மீது செலுத்த அனுமதிக்கவேண்டும். மற்றும், இந்த ரீதியில், மிகவும் உதவுவது, பிரார்த்தனை. நாம் நம் சுவபாவங்களின் பிழைகளிலிருந்து மீழவும், நம் சுயத்தேர்வுச் சக்தியை, நம்மை நாமே அடக்கியாள, நம்மீதே செலுத்திக்கொள்ளும்படி பஹாவுல்லா நமக்கு உதவ, அவரை இறைஞ்ச வேண்டும்.

மற்றுமொரு பகுதி :

நம் பழைய தன்மைகளோடு ஒப்பிடும்போது, முன்காணா ஜீவன்களாக, நம் சுவபாவங்களை முற்றாக நிலைமாற்றம் செய்யக்கூடியது, இறைவனின் திருச்சக்தி.

பின்வரும் வார்த்தைகள் பொண்ணால் பொறிக்கப்பட வேண்டும் :

பிரார்த்தனகைள் மற்றும் மண்றாடல்கள் மூலமாகவும், பஹாவுல்லா வெளிப்படுத்தியுள்ள தெய்வீக விதிகளுக்கு அடிபனிந்தும், அதிகரித்துக்கொண்டே போகும் (பஹாவுல்லா) அவர்களுடைய சமய சேவை மூலமாகவும், நம்மை நாம் மாற்றிக்கொள்ள முடியும்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது, “அதிகரித்துக்கொண்டே போகும் சமயசேவை”, ஒரே சீராகப் போய்க்கொண்டிருக்கும் சமய சேவை அல்ல, அதிகரித்துக்கொண்டே போவது.

மற்றுமொரு பகுதி :

ஒரு “உதாரணமாக விளங்கும் நம்பிக்கையாளர்” இறுதியில், சமயச்சேவையில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டும், அதன் போதனைகளில் தன்னை ஆழப்படுத்திக்கொண்டும் புறிந்துணர்வை வளர்த்தும், தனது நம்பிக்கையை பஹாவுல்லாவின்பால் வைத்தும், தன் சிறப்பான சேவையை அவருக்கு வழங்கவென எழுந்தும் உள்ள ஒரு சாதாரண நம்பிக்கையாளரைவிட வேறுபட்டவர் அல்லர். தீர்மானமும், ஆவலும், தகுந்த அளவுடன் இருந்தால், வழிகள் நிச்சயமாகப் பிறக்கும்.

மற்றுமொரு பகுதி :

இறைத்தூதர் மேல் ஆத்யான்மீக பிரக்ஞையை மையப்படுத்தினால், மன அமைதி பெறலாம். ஆகவே நீங்கள் புனிதத் திருவாசகங்களைப் படித்து அப்புனித வாக்குகளிலிருந்து ஜீவநீரைப் பெறுங்கள். பிறகு இவ்வுயர்ந்த சித்தாந்தங்களை நீங்கள் செயல் வடிவெடுக்கச் செய்வதனால், உங்கள் போக்கு முழுவதும் மாறி உங்கள் மனது அமைதி பெறுவது மட்டும் அல்லாது, உங்கள் ஜீவிதமே களிப்பும் ஆர்வ உணர்வும் அடையப் பெறும்.

மற்றுமொரு பகுதி :

பாதுகாவலர் ஷோகி எ•பெண்டி அவர்கள், சமயத்தை நீங்கள் முடிந்த அளவு தீவிரமாகக் கற்றும் போதிக்கவும் வேண்டும் என பெறிதும் உணர்த்த விரும்புகிறார். திருபோதனைகள் பற்றிய உங்களுடைய கல்வி, பஹாய் இலக்கியங்களை படிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், உங்கள் உள்ளூர் பஹாய் நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபாட்டுடன் பங்கேற்பதன் மூலம் அக்கல்வியை பரந்ததும் நடைமுறைக்கு உகந்ததுமாகச் செய்யவேண்டும். உங்கள் சமய உற்சாகத்தை பரிபாலிக்க, உங்கள் பஹாய்ச் சகோதரர்களுடன் ஒன்றுகூடி வேலை செய்வது அத்யாவசியமானது.
மற்றுமொரு பகுதியில் கூறப்படுவது :

சமயப் போதனைகளில் நாம் கிரகித்துக் கொண்டவைகளை வாழ்ந்துப் பார்க்கவும் மற்றும் உபயோகமான செயல்களாக்கிப் பார்க்கவும், இன்றியமையாத ஒரு ஆய்வு மனையை, பஹாய் சமூக வாழ்வு நமக்கு வழங்குகிறது. அந்த உயிரோட்டமுள்ள ஜீவனின்(பஹாய் சமூகம்) ஒரு அங்கமாக ஆவதன் மூலம், நாம் போதனைகளின் ஊடே ஓடும் மெய் ஆவியை அடையலாம்.

இன்னும் ஒரு பகுதியில் :

நிர்வாகத்தின் தரமும் மற்றும் ஓழுங்கு முறைகளும், சம அளவிலான நேசம், விசுவாசம் மற்றும் அத்யான்மீக வளர்ச்சியோடு இனைந்திருக்க வேண்டும்.
அடுத்தது இங்கு சம்பந்தப்படாவிட்டலும், அதனைப் பார்ப்போம் :

நிச்சயமாக, போதனையே சகல பஹாய் சேவைகளுக்கும் அடிக்கல் ஆகும். …தேடுவோர்களுக்கு புது வாழ்வு தரும்பொருட்டு, புனிதத் திருஆவி பாயக்கூடிய ஒரு நானற் குழலைப் போல் தனிமனிதர் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும்.
இறுதியாக :

தோல்விகள், சோதனைகள், மற்றும் இடுக்கண்கள் ஆகியவற்றை முறையோடு பயன்படுத்திக்கொண்டால், நமது அத்யான்மீக நிலையை தூய்மைப்படுத்திக்கொள்ளவும், சுவபாவங்களை உறுதிப்படுத்திக்கொள்ளவும், மற்றும் சேவையில் உயர்ந்த நிலையை அடையவுமான வழிகளாக அவை விளங்கும்.

ஆகவே, எனதருமை நன்பர்களே, நீங்கள் ஒப்புக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம். நான் அடையாளம் கண்ட அந்த ஐந்து அங்கங்களாவன : பிரார்த்தனை, போதனைகளை கற்றல், போதனை செய்தல், பஹாய் ஸ்தாபனங்களின் காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளல், சோதனைகள் மற்றும் இடுக்கண்களின் போது இறைவன் மேல் உறுதியும் நம்பிக்கையும் கொள்ளல். இந்த ஐந்து அங்கங்களுக்கிடையில் ஒரு பொது அம்சம் உள்ளது. அதாவது; பஹாவுல்லாவின் திருவெளிப்பாட்டின்ஆதிக்கத்தின்பால் மனித ஆன்மாவை உட்படுத்துவது. இந்த ஐந்து கட்டங்களிலும் கண்டிப்பாக இந்த அம்சம் இருக்கும். அடையாளம் கண்டுகொள்வது : நீங்கள் பஹாவுல்லாவை கண்டுகொண்டும் அவர்பால் நெருங்கியும் வருகின்றீர்கள். அடிபனிதல் : அவர்தம் விதிமுறைகளுக்கும் ஆனைகளுக்கும் அடிபனிந்து, ‘(பஹாய்)வாழ்வை’ வாழ்கின்றீர்கள். பிரார்த்தனை : நீங்கள் அவரோடு நெருக்கம் வைத்துள்ளீர்கள்; இது பஹாவுல்லா அவர்களுடன் தொடர்புகொள்வது. இது உங்கள் ஆன்மாவை பாதிக்காமல் எப்படி இருக்கும்? போதனைகளைக் கற்றல் : நீங்கள் (புனித)வார்த்தைகளை உங்கள் ஆன்மாவில் புகச் செய்து, உங்கள் ஆன்மாவுக்கு புத்துயிர் அளிக்கின்றீர்கள்; இந்த ஜீவ உணவை உண்கின்றீர்கள். பஹாய் ஸ்தாபனங்களின் காரியங்களில் ஈடுபாடு: பாதுகாவலர் ஷோகி எ•பெண்டி அவர்கள், பஹாய் நிர்வாக முறை, நமது சமயத்தின் ஆன்மாவின் மறுபிறவியாகும் என்று கூறுகிறார். ஆம் ‘மறுபிறவி’ எனும் வார்த்தையைத்தான் அவர் உபயோகப்படுத்துகின்றார். அவர் கூறுவது, நமது சமயத்தின் ஆவி , அந்த இறவா ஆவி, பஹாய் ஸ்தாபனங்களின், இந்த தெய்வீக ஸ்தாபனங்களின் மறுபிறவியாகும். இங்கு உலக மையத்தில், நாங்கள் எல்லா ஸ்தாபனங்களுக்குமான மையமெனும் ‘இதயத்தில்’ இருக்கின்றோம். இறுதியாக, நான் சோதனைகளை சந்திப்பேன், என்பதை உணருவது. நான் இச்சோதனைகளில் தோல்வியுற்றால் பரவாயில்லை, ஏனெனில் நான் மீண்டும் முயற்சி செய்வேன். என்னுடைய நம்பிக்கையையும் உறுதியையும் அவர்மேல் வைப்பேன். அவர் எனக்கு உதவுவார். என் கையை அவர் பிடித்துக்கொள்வார். என்னை வழிநடத்திச் செல்வார். இந்த நம்பிக்கை நிச்சயமாகத் தேவைப்படுகிறது.

பாதுகாவலர் ஷோகி எ•பெண்டி அவர்கள், நிர்வாக அமைப்பின் உலக மையத்தைப் பற்றிக் கூறியதை நினைவுகூர்வோம். அவர் அதை “…தன் இருதயம் துடித்துக்கொண்டிருக்கும், இந்த (நிர்வாக)முறையின் உலக இருக்கை…” நீங்கள் நம்பவேண்டும் அன்பர்களே, சில நேரங்களில் நாங்கள் உலக மையத்தின் இந்த துடிப்பை உணரமுடிகின்றது. நாம் எல்லோருமே இதை நிச்சயமாக உணருகின்றோம். “…அதன் இதயம் துடித்துக் கொண்டிருக்கும், அதன் திருஸ்தாபகர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டும், அதன் நோக்கங்களை வெளிப்படுத்தியும், அதன் ஜீவனுக்கு புத்துயிர் அளித்தும், அதன் இலக்கை உருவகப்படுத்துவதுமான யாவற்றுக்கும் தோற்றுவாயாகவும்…” இந்த புனிதத் தலத்தில் உரையும் அனைவரும் பாக்கியம் செய்தவர்கள். இங்கு சேவை செய்யும் அனைவரையும் இறைவனின் அருள் இங்கு கொண்டு சேர்த்திருக்கின்றது. அது எப்படி என்று நமக்குத் தெரியாது, ஆனால் நாம் எல்லோரும் இங்கு இருக்கின்றோம். நமக்குக் கிட்டிய இந்த ஆசீர்வாதத்தை உணர்ந்து நன்றி செலுத்த வேண்டும். நாம் எங்கிருக்கின்றோம் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.

பாதுகாவலர் அவர்கள், ஏசு நாதர் அவர்களின் வார்த்தைகள் சிலவற்றை விவிலியத்தின் புதிய ஏற்பாடு ‘செய்ன்ட் லியூக்கி’ல் அடங்கியவாறு, குறிப்பிடுகின்றார்: எவருக்கு அதிகமாக அளிக்கப்பட்டுள்ளதோ, (அவரிடமிருந்த) அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.” இங்கு நமது ஆசீர்வாதங்கள் அதிகமாக இருக்குமானால், இறைவனின் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கும்.

இப்பொழுது, அப்துல் பஹா அவர்களின் நேர்வு நிருபத்தைக் காண்போம். இந்நிருபம், பாதுகாவலர் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. இது நமக்கெல்லாம் தெரியும். இதன் மூல ஏட்டில், பாராக்களாக இந்த நிருபம் பிரிக்கப்படவில்லை. பாதுகாவலர் அவர்கள், ஆங்கில மூலத்தை ஆறு பாராக்களாகப் பிரித்துள்ளார். முதல் இரண்டு பாராக்களும் முகவுரைகள் போல் விளங்குகின்றன. அடுத்த இரண்டும், உங்கள் அனுமதியோடு, இந்நிருபத்தின் இதயமெனக் கூறுவேன். இறுதி இரண்டு பாராக்களும், இந்த அரங்கேற்றத்தின் முடிவுறைகள் ஆவன.

முதல் இரண்டு பாராக்களும், வழிபடுவோர்கள், இறைவனின் திருவருளின் வாசலில் நின்றுகொண்டு, பனிவுடனும், தாழ்மையுடனும், அவரை இறைஞ்சியும், அவர் கைகளில் கைதி போன்றும், அவர் மீது நம்பிக்கை வைத்தும், அவர் முன் நீர் மழ்கிய கண்களுடனும் இருப்பதாக விவரிக்கின்றன. இந்த விவரிப்பைத்தைதான் அவர்(அப்துல் பஹா அவர்கள்) தருகின்றார். தழுதழுத்த நெஞ்சோடு அடுத்த இரு பாராக்களைக் கூறுவதற்கு, வழிபடுவோர்களை தயாராக்கும் பொருட்டு, அப்துல் பஹா அவர்கள், இந்த விவரிப்பைத் தருகின்றார் என நான் நினைக்கின்றேன். இந்த இரண்டு பாராக்களும் பின்வருமாறு:

தேவரே, எனதாண்டவரே! தங்களின் அன்பர்களுக்குச் ஊழியம் செய்ய எனக்கருள்புரிவீராக, தங்களது சேவையில் என்னைப் பலப்படுத்துவீராக, தங்களது திருச்சபையை போற்றிப் புகழும், தங்களின் திவ்விய இராச்சியத்தின்பால் பிரார்த்தனை செய்யும் எனது புருவங்களை ஒளிவிட்டுப் பிரகாசிக்கச் செய்வீராக.

இங்கு ‘ஊழியம்’ எனும் வார்த்தையில் அழுத்தம் கொடுத்திருப்பதைக் காணுங்கள். குறைந்த பட்சத்திற்கும், அதிகபட்சத்திற்கும் இடையில் நிறைய வித்தியாசம் உண்டு. குறைந்த பட்சமாக ஒரு பஹாய், அனிதினமும், கட்டாயப் பிரார்த்தனைகளில் ஒன்றைக் கூறி, பத்தொன்பது நாட்களுக்கு விரதம் இருந்தும், அரசியலில் பங்கெடுக்காமலும், அரசாங்கத்திற்கு விசுவாசமாகவும், முடிந்தால் பத்தொன்பதாம் நாள் பண்டிகைக்குச் சென்றும், நேரிட்டபோது பஹாய் நிதிக்கு வழங்கியும், தன் கைகளை பஹாவுல்லா அவர்களைப் புகழ உயர்த்தி, “இறைவா நான் ஒரு நம்பிக்கையாளனாக இருப்பதற்கு நன்றி” எனக் கூறியும் வாழலாம். இதுவே அடிமட்டம். இதுபோல் வாழ்ந்தால் போதும் என்றும் இருக்கலாம், நல்லது. இது ஒவ்வொருவருடைய வாழ்க்கை, எல்லோருடைய வாழ்க்கையும்தான். தேர்வு செய்வது நம் கையில். ஆனால் அவர் நமக்காக விரும்புவது இந்த மிதமான, மறையப் போகும் குறைந்த பட்ச வாழ்க்கை அல்ல. நாம் ஒரு உயரிய நிலையை குறி வைக்கவேண்டுமென அவர் விரும்புகிறார். நம் செல்வங்கள் யாவற்றையும் அவருக்கு அர்ப்பணிக்க வேண்டுமாய் விரும்புகிறார். சமயத்திற்கு, மனிதகுலத்திற்கு, மற்றும் நம்பிக்கையாளர்களுக்கும் சேவை செய்து, தாம் பஹாவின் சேவகராக இருந்ததைப் போன்று நாமும் இருப்பதை அவர் விரும்புகிறார். இதுவே நம் ஒவ்வொருவருக்காகவும் அவர் வேண்டுவது.

“எனது புருவங்களை ஒளிவிட்டுப் பிரகாசிக்கச் செய்வீராக…” என் புருவத்தைக் காணமுடியும், அதாவது புருவம் வெளிப்படையாகக் காணக்கூடிய ஒன்று. மேலும் ஒரு “ஒளிவிட்டுப் பிரகாசிக்கச் செய்வீராக,” எனும் வசனம் பிறகு வருகின்றது, இங்கு அவர் “என் உள்ளத்தை ஒளிபெறச் செய்வீராக” எனக் கூறுகின்றார். உள்ளம் உள்ளே இருக்கின்றது, புருவம் வெளியிற் தெரிவது. இந்த சேவாமார்க்கத்தில், அவர் நம்மைப் படிப்படியாக வெளியில் இருந்து உள்ளே உள்ளவற்றுக்கு வழிநடத்திச் செல்கின்றார். “…திவ்விய இராச்சியத்தின்பால் பிரார்த்தனை செய்யும்.” “ யான் தங்களின் தெய்வீக நுழைவாயிலில் தன்னநலமற்றவனாய்த் திகழ்வதற்கு உதவி புரிந்து,” நாம் இப்போதும் அந்த வாசலில் காத்துக்கொண்டும், தாழ்மையுடனும், பனிவுடனும் நின்றுகொண்டிருக்கின்றோம். ஆனால் அவர் வழிபடுவோர் அனைவரையும் தன்னலமற்று இருக்குமாறு கூறுகிறார். இந்த ‘தன்னலமின்மை’ எனும் வார்த்தைக்கு ஆழமான பிற சம்பந்தங்கள் உண்டு. அப்துல் பஹா அவர்கள், பின்னால், இதே வார்த்தையை அழுத்தத்திற்காக மேலும் உபயோகிப்பதால், அதை நான் பிறகு தொட்டுப் பேசுவேன். “யான் தங்களின் தெய்வீக நுழைவாயிலில் தன்னநலமற்றவனாய்த் திகழ்வதற்கு உதவி புரிந்து, தங்களது தெய்வீக அருகாமையில் எனது பற்றுகள் யாவற்றையும் துறக்கத் துணை புரிவீராக.” ஒரு பஹாய்க்கு லௌகீகப் பொருட்களில் பற்றற்று இருப்பது சுலபம். லௌகீகப் பொருட்கள், தெய்வீக அருகாமைக்கு வெளியே இருப்பன: பணம், கேளிக்கைகள், சுகந் தருபவை, பதவி, புகழ் என்று கூறிக் கொண்டே போகலாம். ஒருவர் இவற்றின் பற்றிலிருந்து விடுபட முடிவெடுப்பது ஏறக்குறைய சுலபம். இப்பொழுது நாம் சமயத்துக்குள் வந்துவிட்டோம். ஆனால், அவர் என்ன சொல்கின்றார்? “தங்களது தெய்வீக அருகாமையில் எனது பற்றுகள் யாவற்றையும் துறக்கத் துணை புரிவீராக” எனக் கூறுகின்றார், ‘அருகாமை’ என்பது அவரைச் சுற்றியுள்ள இடம். நாம் அதற்குள்தான் இருக்கின்றோம். இந்த இடத்தில் நாம் எல்லா பற்றுக்களையும் துறக்க வேண்டும். வெளியே உள்ள இடங்களுடையதை அல்ல! அவர் கூறுவது, அவரது அருகாமை சோதனைகள் நிறைந்தது. அதாவது பாதுகாவலர் அவர்கள் கூறுவது போல், நமது சமயத்துள் நாம் நிறைய சோதனைகளையும் சோதிப்புகளையும் சந்திக்கவேண்டியிருக்கும். ஆகவே, சமயத்திற்குள் நாம் யாவற்றிலிருந்தும் பற்றற்று இருக்கவேண்டும். (திரு. அலி அவர்கள் தம்மைப்பற்றி குறிப்பிடுவது) மையக் கட்டிடத்தில் எனக்கு பிரத்தியேக அறை, அதில் என் பெயர் அட்டை, ஒரு தனி மேஜை மற்றும் ஆலோசனை மன்ற அறைக்கும் நான் செல்கின்றேன், இத்யாதி இத்யாதி. இவை யாவும் என் தலைக்கேறிவிட்டால் நான் எனதாண்டவருடன் பிரச்னை கொண்டுவிடுவேன் என நிச்சயமாக நம்புங்கள். இது சமயத்திற்கு உட்பட்டது. வெளிப்படையாகத் தெரியும் எனது புறச் சேவையே எனக்கு புதைகுழியாகிவிடும். எனக்கு வாழ்வளிப்பதற்கு பதிலாக, இது என் ஆத்யாத்மீக உயிரைப் பறித்து, நான் மறைந்துபோகும்படி செய்துவிடும். இதுதான் நடக்கும். பற்றற்று இருப்பதென்பது, உள்ளிருக்கும், வெளியிருக்கும், யாவற்றிலிருந்தும் உண்மையாகவே பற்றில்லா நிலையை கடைபிடிப்பதாகும். இது தன்னைத் தானே அழித்துக்கொள்வது அல்ல. இது அகங்கார நிலையை அடக்கிவைப்பது, அகங்கார நிலையை கட்டுப்பாட்டில் வைப்பது. இதுதான் அதன் அர்த்தம். அகங்கார நிலையிலிருந்து முழுமையாக விடுபட்டிருப்பதானது, அவதாரங்களுக்கும் அப்துல் பஹா அவர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்ற ஒன்று என நமது திருவாசகங்கள் கூறுகின்றன. நீங்களும் நானும் ஆகக்கூடி அகங்காரத்தினை கட்டுப்பாட்டில் வைத்து, அதன் தாக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்கலாம்.

அடுத்த வாக்கியம்:

தேவரே! தன்னலமின்மையெனும் கிண்ணத்திலிருந்து என்னை பருகச்செய்வீராக; அம்மேலாடையைக் கொண்டு எது உடலைப் போர்த்துவீராக, அதன் கடலில் என்னை மூழ்க்கச் செய்வீராக.

அன்பர்களே, இதில் எங்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனித்தீர்களா? அப்துல் பஹா அவர்கள், தன்னலமின்மையைப் பருகவும், போர்த்திக்கொள்ளவும், நமது அகம் முழுவதும் அதனால் சூழப்பட்டும் அதில் மூழ்கிப் போகவும், வேண்டும் என விரும்புகிறார் —

இதுவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள அழுத்தம். பாதுகாவலரின் சார்பில் எழுதப்பட்ட பின்வரும் வார்த்தைகளை பரிசீலிக்கவும்: “…தெளிவடைந்த மனித ஆன்மாவிற்கு, நாளுக்கு நாள் அதிகரித்த அளவில், அகம்பாவம் அடங்கியதாகவே இருக்கவேண்டும், அப்படி இருக்கவும் முடியும்… . இங்கு: “நாளுக்கு நாள் அதிகரித்த அளவில்” எனும் வார்த்தையை கவனிக்கவும். உணர்ச்சிவசப்படாமலும், ஆழமாகவும் இதை ஆராய்வோமானால், இந்த துன்பங்களுக்கும், கருத்துவேறுபாடுகளுக்கும், மூல காரணமாக அகம்பாவ உணர்ச்சிகளும், சுயநல உணர்ச்சிகளுமே இருக்கக் காணலாம்…. ஒவ்வொரு மெய்நம்பிக்கையாளருக்கும், தூயபற்றின்மையும், தன்னலமற்ற சேவையுமே ஒரே குறிக்கோளாக இருக்கவேண்டும்.”
பாப் பெருமானார் அவர்கள் கூறுவதையும் பார்ப்போம்:

அப்பழுக்கில்லா தூய்மையின் துனையுடனான, பவித்திரமான உத்தேசத்தைத் தவிர, வேறு எதுவுமே அதிஉயர்ந்தவரின் சிம்மாசனத்தின்பால் ஏற்றம் அடையவோ, அவருக்கு ஏற்புடையதாகவோ, இருப்பதற்கு தகுதி இல்லை என்பதற்கு காலம் வந்துவிட்டது.

ஆக இந்த அளவு பற்றின்மையை நாம் அடையவேண்டும் என்பது எதிர்பார்ப்பு.
அப்துல் பஹா அவர்கள் மேற்கொண்டு கூறுகிறார்:

“தங்களது அன்பர்களின் பாதையில் என்னை தூசாக்கி….”நம்மில் எத்தனை பேர் புழுதியைப் போலாக விரும்புகிறோம்? நன்பர்களே, அப்துல் பஹா அவர்களின் உத்தேசம், நம்மை நாமே கீழ்த்தரப்படுத்திக்கொள்வது அல்ல. இது, ஒருவர் தன்னைத்தானே மட்டப்படுத்திகொள்ளும் ஒரு அப்பியாசமும் அல்ல. இல்லை, நமது கௌரவத்தை (உயர் பிறவிகள் எனும் நிலையை செயல்களால் கடைபிடிப்பது) நாம் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்றுதான் அவர் வேண்டுகிறார். ஆண்டவனால் நாம் உயர்பிறவிகளாக படைக்கப்பட்டுள்ளோம் என்றே பஹாவுல்லா கூறுகின்றார். நாம் கௌரவத்துடனும், உயர்பிறவிகளாகவும் இருக்கவேண்டும். ஆனால் பிற அன்பர்களின் பாதையில் பாறையைப் போல் நாம் இருந்தால் அவர்கள் தடுமாறி கீழே விழ வேண்டிய சூழ்நிலை உருவாகும். இருக்கும் இடத்திலேயே இருந்தால் பிற மனிதர்கள் நம்மேல் கால்தடுமாறி விழும் நிலையே ஏற்படும். யாரோ ஒருவர் உங்கள் மேல் இடரி விழுவாரேயானால், நீங்கள் “என் உடல் அடிபட்டுவிட்டது” எனக் கூறலாம். ஆனால் அப்துல் பஹா நம்மை தாழ்மையோடு இருக்கச் சொல்கிறார். அடிபட்டுவிட்டால் பரவாயில்லை. அன்பர்கள் உங்கள் மேல் ஏறி நடந்து செல்லட்டும், நம் சமயம் முன்னேறட்டும். “என்னைப்போல் இரு, என்னைப் பின்பற்று.”

“உயர்வுமிக்க ஒளியின் அதிபரே, தங்களது அன்பர்களின் பாதையில் என்னை ஒரு தூசாக்கி, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தங்களது வழியில் நடப்போர்களின் பாதங்கள் பட்டு அதனால் உயர்வடைந்துள்ள நிலத்திற்கு, எனதான்மாவை அர்ப்பணிக்க அருள்புரிவீராக.”

அவர் நமக்கென சித்தரிக்கும் காட்சியை பார்க்கின்றோம். அவர் கூறுவது: “இதோ மண். இந்த மண்ணின் மேல் கடவுள் தேர்வுபெற்றோர் காலடி பட்டுள்ளதால் இந்த மண் மேன்மையடைந்துள்ளது. இறைபக்கதர்களுக்கு அவர் கூறுவது, “ நான் இருந்ததைப்போல் நீங்களும் கடவுள் சம்பந்தம் பெற்ற இந்த மண்ணுக்காக, இறைவனுடனான அதன் உறவுக்காக, உயிரைவிடவும் சித்தமாக இருக்கவேண்டும்.” பஹாவுல்லாவின் ‘பிரார்த்தனைகளும் தியானங்களும்’ நூலில் அவர் இதே தொனியில் கூறுவது: “என் இறைவா, ஒரு கைப்பிடி மண் உங்களுடன் தொடர்புற்றிருந்தால், உங்கள் உறவு பெற்ற அதை ஆராதிக்க நான் எதைச் செய்தாலும் போதாது. இந்த பிணைப்பால், இந்த உறவால், அந்த மண்ணுக்காக நான் எது செய்தாலும் போதுமானதாகாது.” இந்த பிரார்த்தனையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் சிந்தனை, அப்துல் பஹா அவர்களின் நேர்வு நிருபத்திலும் அடங்கியுள்ளது. அவர் அடியார்கள் காலடி பட்ட மண்ணுக்காக நாம் உயிரைவிடவும் சித்தமாக இருக்கவேண்டும் என்றிருக்கும் போது, அவர் சமயத்திற்காக நாம் இன்னும் என்ன என்ன செய்ய வேண்டும்? அந்த மண்ணைவிட இறைவனின் சமயம் நிச்சயமாக விலைமதிப்பற்ற ஒன்று அல்லவா? நாம் இங்கே விவரிப்பது நமது சமயத்தின் நன்மையை. அந்த மண் அவ்வளவு சிறப்பானதென்றால், புனிதத் தலத்தில் வீற்றிருக்கும் நினைவாலயங்கள், அந்த இரு கட்டிடங்கள், பா‹ஜி நகர், எவ்வளவு சிறப்பானவைகளாக இருக்கவேண்டும். அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது இந்த அளவிலான சுயநலமின்மையையே. அவர் அந்தவிதமான வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார்.

கடைசி இரு பத்திகளும் முடிவுறையாகும். இருந்தபோதிலும் அவற்றிலிருந்து இரு விஷயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “ தேவரே! அவனது ஆவலைப் பூர்த்தி செய்வீராக; அவனது உள்ளத்தை ஒளிபெறச் செய்வீராக; அவனது மனதுக்கு மகிழ்ச்சியூட்டுவீராக; அவனது ஒளியைப் பிரகாசிக்கச் செய்வீராக… இந்த வரியே இந்த பிரார்த்தனையின் முடிவு. “அவனது உள்ளத்தை ஒளி பெறச் செய்வீராக…” ஒளி பெறுவதற்கும் பிரகாசிப்பதற்க்கும் வித்தியாசம் உண்டு. அவை இரு வெவ்வேறு விஷயங்கள். பாப் பெருமானார் அவர்களின் நினைவாலயத்துக்குப் போகும்போது, அதன் உள்ளிருந்து பாதுகாவலரால் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளின் ஒளி, அதன் சன்னல்கள் வழியாக வீசக் காணலாம். அங்கு ஒளியைக் காண்கின்றோம். ஒளிவெள்ள விளக்குகளின் பிரகாசத்தையும் காணலாம். வெளியே தெரிவது ஓளிவீச்சு, உள்ளே தெரிவது ஒளித்தூண்டல். ஆக அப்துல் பஹா அவர்கள், நாம் இரு விதத்தில் ஒளி பெற வேண்டும் எனக் கூறுகிறார். சமய ஒளியில் நாம் எப்போதும் காய்ந்துகொண்டு இருக்க வேண்டும். திருச்சமயத்தின் ஒளி நம்மீது வீச அனுமதிக்கப்படல் வேண்டும். அதிலிருந்து உங்களைத் தடுத்துக்கொள்ளாதீர்கள். சதா அதன் ஒளியை நாடுங்கள். ஆனால் இது மட்டும் போதாது. அதே சமயம் உங்கள் ஆன்மாவும் தீப்பற்றி, எரிய வேண்டும். வெளியிலிருந்து கிடைக்கும் சமய ஒளி ஒருவேலை இல்லாது போகும்போது, உங்கள் உள்ளிருந்து பிறக்கும் ஒளியானது, நீங்கள் பிற அன்பர்கள் மற்றும் சமய நடவடிக்கைகளிலிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டுத் தனிமையில் இருக்கும் அந்த நேரத்தில், உங்கள் உள்ளிருந்து பிறக்கும் பிறகாசம் உங்களுக்கு ஒளி தரும். தங்கள் உயிர் பறிக்கப்படப்போகும் நாளை எதிர்பார்த்து, தனிமையில், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த நமது பாரசீக உயிர்த்தியாகிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று நினைக்கின்றீர்கள்? வெளிப்படையாக என்ன வைத்திருந்தார்கள்? தங்களைத் தவிர, வேறு ஒன்றுமே இல்லை. மற்றும் அவர்கள் மனனம் செய்துவைத்திருந்த பிரார்த்தனைகளும் திருவாசகப் பகுதிகளும், மற்றும் தங்கள் ஆண்டவரைத் தவிர வேறு ஒன்றுமில்லை. ஆனால் அவர்கள் ஒளி பெற்றிருந்தனர், உள்ளொளி தூண்டப்பெற்றிருந்தது. இதைத்தான் அப்துல் பஹா எடுத்தியம்புகின்றார். புற ஒளி அடையப் பெற்றால் மட்டும் போதாது, நமது அக நிலையில், நமது ஆன்மா இறை அன்பு எனும் தீ பற்றி எரிய வேண்டும்.

இப்போது, முடிக்குமுன் நான் மிகவும் விரும்பும், அன்புப் பாதுகாவலர் எழுதிய சில வரிகைள இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

காண்பது எவ்வளவு காரிருளாயிருப்பினும், காரியம் எவ்வளவுதான் சிறமமாக இருப்பினும், சுற்றுச் சூழ்நிலை என்னதான் அன்னியமானதாகவும் வசதியற்று இருப்பினும்… இடைஞ்சல்களும் கட்டுப்பாடுகளும் எவ்வளவுதான் நிறைந்திருப்பினும்… அனுபவித்தாக வேண்டியத் தற்காலிகத் தோல்விகள் எவ்வளவுதான் சோதிப்பனவாயிருப்பினும், எந்தச் சூழ்நிலையிலும், நாம் கண்டிப்பாக, தடுமாறாதும் பின்வாங்காமலும் இருக்கவேண்டும். சர்வ-நேசரும், சர்வ-போஷகரும், சதா-ரட்சிப்பவரும், சதா-பாதுகாப்பவருமாகிய, ஆண்டவரின் குறைவுபடாத அருளின் மேல் நாம் வைத்துள்ள நம்பிக்கை, எவ்வளவுதான் சூழ்நிலையால் இடிபட்டாலும், இறுதி வரை உறுதியாக இருக்கவேண்டும்….. உடலின் கடைசிச் சொட்டு பலமும் போன நிலையில், கலைத்து ஆனால் புலகாங்கிதம் நிறைந்து, நம்மால் வாக்களிக்கப்பட்ட அறுவடை கொண்டுவரப்படும் வரையில், நமது அன்பருக்கு நாம் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரையில், ஒருவர் தவறாமல், எல்லோரும், எல்லா ரீதியிலான நடவடிக்கைகளிலும்… சிரத்தையுடனும், தொடர்ந்தாற்போலும், பங்கேற்று உழைக்கவேண்டும்.