கடவுள் யார்?


கடவுள் யார் எனும் கேள்விக்கு பஹாவுல்லாவின் எழுத்தோவியங்களிலிருந்து (பிரார்த்தனை) ஒரு விளக்கம்

பிரபுவே, எனதாண்டவரே, நீர், போற்றி மகிமைப் படுத்தப்படுவீராக! எந்த ஒரு நாவுமே, அதன் விவேகம் எத்துணை ஆழமானதாயினும், உம்மைப் பொருத்தமுற புகழ்ந்திட இயலாதென எனக்கு உறுதியாகத் தெரிந்திருந்தும் எவ்வாறு யான் உம்மைக் குறித்துரைக்க இயலும்; அல்லது, மனித மனம் என்னும் பறவையின் பேராவல், எவ்வளவு மிகுதியாயிருப்பினும், எங்ஙனம் அது உமது மாட்சிமை, அறிவு என்னும் விண்ணுலகத்திற்கு உயர்ந்திடுவோம் என நம்பிக்கைக் கொண்டிட இயலும்.

என் இறைவா, சகலத்தையும் உணரக் கூடியவர் என உம்மை நான் வருணிப்பேனாயின், உணரும் சக்தியின் அதிசிறந்த உருவங்களானவர்களே உமது கட்டளையின் மூலமாகப் படைக்கப்பட்டோர் என ஒப்புக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படும் நிலையில் நான் என்னைக் காண்கின்றேன். நான் உம்மைச், சர்வ விவேகி எனப் புகழ்வேனாயின், விவேகத்தின் ஊற்றுகள் எனப்படுபவர்களே உமது விருப்பத்தின் இயக்கத்தினால் பிறப்பிக்கப்பட்டவர்கள் என உணர்கின்றேன். உம்மை நிகரற்ற ஒருவரென நான் பிரகடனஞ்செய்வேனாயின், விரைவில், ஒருமைத் தன்மையின் உள்ளார்ந்த சாராம்சங்களாகிய அவர்களே, உம்மால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் எனவும், உமது கைவேலையின் அடையாளங்களே எனவும் கண்டு கொள்கின்றேன். உம்மை, சகலமும் அறிந்தவரென நான் ஆர்ப்பரிப்பேனாயின், அறிவின் சாரம் எனப்படுபவர்களே உமது படைப்பெனவும், உமது நோக்கத்தின் சாதனங்களெனவும், நான் ஒப்புக்கொள்ள வேண்டியவனாகின்றேன்.

மரணத்துக்குரிய மனிதன், உமது மர்மத்தினை வெளிப்படுத்தவோ, உமது மகிமையை வருணிக்கவோ, மேலும் கூறினால், உமது சாரத்தின் இயற் தன்மையினை அவன் மறைமுகமாகக்கூட குறிப்பிடவோ செய்திடும் முயற்சிகள் அனைத்திற்கும் அப்பால், அளவிடற்கரிய, அதி உயரிய நிலையில் நீர் இருந்து வருகின்றீர். எதனையெல்லாம் அத்தகைய முயற்சிகள் சாதிக்க இயன்றிடினும், அவை, உமது படைப்பினங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள வரம்புகளைக் கடந்திடுவோம் என்ற நம்பிக்கைக் கொண்டிடவே இயலாது; ஏனெனில் அம்முயற்சிகளே உமது கட்டளையினால் இயக்கப்பட்டும், உமது புதியது புனைதலெனும் ஆற்றலினாலுமே தோற்றுவிக்கப்படுகின்றன.

அதிபுனித மகான்கள், உம்மைப் புகழ்வதற்காக வெளிப்படுத்திடும் அதி உயரிய உணர்ச்சிகள், மனிதரிலேயே அதி புலமைவாய்ந்தோர் உமது இயல்பினைப் புரிந்து கொள்வதற்காகச் செய்யும் முயற்சியில் வெளிப்படுத்த முடிந்த அறிவுக் கூர்மை, ஆகியவை அனைத்துமே, உமது ஆட்சியுரிமைக்கே முழுமையாக உட்பட்டு, அம் மையத்தையே சுற்றிச் சுழல்கின்றவையாகும்; அவை உமது திருவழகினையே வழிபடுகின்றன. அவை உமது எழுதுகோலின் அசைவினாலேயே இயக்கப்படுகின்றன.

இல்லை, என் இறைவா, உமது வெளிப்பாட்டின் எழுதுகோலானவருக்கும் படைப்புப் பொருள் அனைத்தின் சாராம்சத்திற்கும் இடையே, தேவையின் காரணமாக, எந்த நேரடித் தொடர்பும் இருக்கின்றதென எனது சொற்கள் பொருள்கொள்ளச் செய்திடுமாயின் அவற்றைத் தடைச் செய்திடுவீராக.

உம்முடன் தொடர்புடையோர் அத்தகையத் தொடர்புக் குறித்த புரியுந்திறனுக்கப்பால் கண்ணுக்கெட்டாத தொலைவில் உள்ளனர்! எல்லா ஒப்புவமைகளும் ஒத்தத் தோற்றங்களும் உமது வெளிப்பாடெனும் விருட்சத்தினைத் தகுதியுற வருணிக்கத் தவறிவிடுகின்றன; உமது மெய்ம்மையின் வெளிப்படுத்துதலையும், உமது பேரழகு என்னும் பகலூற்றினையும் புரிந்துகொள்வதற்கான ஒவ்வொரு வழியும் தடுக்கப்பட்டுள்ளது.

உமது பேரொளியானது, மரணத்துக்குரிய மனிதனானவன் உம்மைக் குறித்து ஒப்புதலளிப்பதற்கும் உம்மைச் சார்ந்துரைப்பதற்கும் உம்மை மகிமைப்படுத்துவதற்குமான அவனது புகழுரைக்கும் அப்பால் வெகு தொலைவில் உள்ளது! உமது மாட்சிமையையும், மகிமையையும் மேன்மைப்படுத்திட நீர் உமது ஊழியர்களுக்கு விதித்துள்ள கடமை எதுவாயினும், அது, அவர்கள்பால் உமது கருணையின் ஓர் அடையாளமேயாகும்; அதனால் அவர்கள் தங்களின் சொந்த, உள்ளார்ந்த மெய்ம்மைக்கு அளிக்கப்பட்ட ஸ்தானத்தின்பால் – தங்களின் சொந்த அகநிலையைக் குறித்த அறிவு என்னும் ஸ்தானத்தின்பால் – உயர்ந்தெழுந்திட உதவப்படக் கூடும்.

உமது மர்மங்களை ஆழங்காண்பதோ, உமது மேன்மையைப் பொருத்தமுற பாராட்டுவதோ, அது, உம் ஒருவரைத் தவிர வேறெவராலும் என்றுமே இயலாது. தேடவியலாத நிலையிலும், மனிதர்களின் புகழ்ச்சிக்கு மேலான உயரிய நிலையிலும், நீர், என்றென்றும் இருந்து வருவீர். அணுகவியலாத, சர்வ வல்லவரான, சகலமும் அறிந்தவரான, புனிதருக்கெல்லாம் புனிதராகிய, உம்மைத் தவிர இறைவன் வேறெவருமிலர்.

(Gleanings from the Writings of Baha’u’llah)

அன்பு


அன்பே கடவுள் அருளாட்சியின் இரகசியமும், சர்வ-இரக்கமிக்கவரின் வெளிப்படுகையும் ஆன்மீகப் பொழிவுகளின் ஊற்றுக்கண்ணும் ஆகும் என்பதை உறுதியாகவே நீ அறிவாயாக.

அன்பே விண்ணுலகின் கருணைமிகு ஒளியும் மனித ஆன்மாவுக்கு உயிர்ப்பூட்டும் புனித ஆவியின் நித்திய மூச்சுக்காற்றும் ஆகும்.

அன்பே கடவுள் மனிதனுக்குத் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் காரணமும், தெய்வீகச் சிருஷ்டிக்கிணங்க எல்லா வஸ்த்துக்களின் மெய்ம்மையினுள்ளும் இயல்பாகவே வீற்றிருக்கும் இன்றியமையா பிணைப்பும் ஆகும்.

அன்பே இம்மையிலும் மறுமையிலும் உண்மையான கழிபேருவகையை உறுதிபடுத்தும் ஒரே வழியாகும்

அன்பே இருளில் வழிகாட்டும் ஒளியும், மனிதனைக் கடவுளோடு ஐக்கியப்படுத்தும் உயிர் இணைப்பும், ஒளிபெற்ற ஆன்மா ஒவ்வொன்றின் மேம்பாட்டினை உறுதிபடுத்துவதும் ஆகும்.

அன்பே இவ்வாற்றல்மிகு, தெய்வீகமான காலவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் அதிபெரும் கட்டளையும், பருப்பொருளான இவ்வுலகின் வேறுபட்டத் தனிமங்களை ஒன்றிணைத்திடும் தனிச்சிறந்த சக்தியும், விண்வெளியில் கோள்களின் நகர்ச்சியை வழிநடத்தும் தனிப்பெரும் காந்தசக்தியும் ஆகும்.

அன்பே தவறாததும் எல்லையற்றதுமான ஆற்றலோடு இப்பிரபஞ்சத்தில் உள்ளடங்கியுள்ள மர்மங்களை வெளிப்படுத்துகிறது.

அன்பே மானிடம் எனும் அலங்கரிக்கப்பட்ட உடலுக்கு உயிராவியும், மாள்வுக்குரிய இவ்வுலகில் உண்மையான நாகரிகத்தை ஸ்தாபிப்போனும், மேன்மையான நோக்குடைய இனம் மற்றும் தேசம் ஒவ்வொன்றின் மீதும் அழிவே இல்லாத கீர்த்தியைப் பொழிவோனும் ஆகும்.

-அப்துல் பஹா-

பாதுகாப்புக்கும் குணப்படுத்துதலுக்குமான ஒரு பிரார்த்தனை


உயரிய, அதி மேன்மையுடைய, அதி விழுமிய அவரது திருநாமத்தின் பெயரால்! தேவரே, எனதாண்டவரே, நீர் போற்றப்படுவீராக! எனதாண்டவரே, என் பிரபுவே, என் தேவரே, என் ஆதரவாளரே, என் நம்பிக்கையே, என் புகலிடமே, என் ஒளியே. உம்மைத் தவிர வேறெவருமே அறிந்திராத, மறைவாயுள்ள, பாதுகாக்கப்பட்ட உமது திருநாமத்தின் பெயரால், இந்நிருபத்தினை ஏந்தி வருபவனை ஒவ்வொரு பேரிடரிலிருந்தும் ஈதியிலிருந்தும், கொடிய ஆண், பெண் ஒவ்வொருவரிடமிருந்தும்; திங்கிழைப்போரின் தீமையிலிருந்தும், இறைநம்பிக்கையற்றோரின் சூழ்ச்சியிலிருந்தும் பாதுகாக்குமாறு உம்மை வேண்டிக் கொள்கிறேன். மேலும், அனைத்துப் பொருள்களின் மீதுமான அதிகாரத்தினை உமது கையில் வைத்துள்ள என் இறைவா, வேதனை, துன்பம், ஆகிய ஒவ்வொன்றிலிருந்தும் அவனைப் பாதுகாப்பீராக. உண்மையிலேயே, சகலத்தின்மீதும் சக்தி கொண்டுள்ளவர் நீரே. நீர் விரும்பியாவாறு நீர் செய்கின்றீர், நீர் திருவுளங்கொண்டதற்கேற்ப ஆணையிடுகின்றீர்.
மன்னருக்கெல்லாம் மன்னரே!
கருணைமிக்க தேவரே!
புராதன அழகிற்கும், அருளுக்கும், தயாளத்திற்கும் ஈகைக்கும் ஊற்றாகியவரே!
நோய்களைக் குணப்படுத்துபவரே!
தேவைகளைப் பூர்த்தி செய்பவரே!
ஒளிக்கெல்லாம் ஒளியானவெரே!
ஒளிக்கெல்லாம் மேலான ஒளியானவரே!
ஒவ்வோர் அவதாரத்தையும் வெளிப்படுத்துபவரே!
தயாள குணமுடையவரே!
கருணையாளரே!
அருளாளரே, வள்ளன்மை மிக்கவரே, உமது அதிமிகு கருணையின் மூலமாகவும், கிருபையின் மூலமாகவும், இந்நிருபத்தினை ஏந்தி வருபவனிடம் கருணை காட்டுவீராக! மேலும், உமது பாதுகாப்பின் வாயிலாக, அவனது உள்ளமும் மனமும் வெறுக்கத் தக்க யாவற்றிலிருந்தும் அவனைக் காத்தருள்வீராக. சக்தி வழங்கப் பட்டோரிடையே நீர், மெய்யாகவே, அதி சக்தி வாய்ந்தவர்.
உதய சூரியனே, இறைவனின் ஒளி உம்மீது லயித்திடுமாக! தம்மைத் தவிர கடவுள் வேரெவருமிலர் என எல்லாம்வல்ல, அதி அன்பரான, ஆண்டவனே தம்மைக் குறித்து அளித்திட்ட அத்தாட்சிக்கு, நீர், சாட்சியம் அளிப்பீராக.
~ பஹாவுல்லா

பஹாவுல்லாவின் நேசர் மற்றும் நேசிக்கப்படுபவருக்கான நிருபம்


பஹாவுல்லாவின் நேசர் மற்றும் நேசிக்கப்படுபவருக்கான நிருபம்
(தற்காலிக அதிகாரபூர்வமற்ற மொழிபெயர்ப்பு)

வஸந்த காலத்தின் உதயத்தின் போது, இறைவனின் பூங்காவிலுள்ள ஆன்மீக ரோஜா மர்ம அர்த்தங்கள் கொண்டு மலர்ந்தது. ஆனால், லௌகீக இராப்பாடிகளோ கவனமின்மையில் ஆழ்ந்திருந்திருந்தன.

ரோஜா கூறியது: “இராப்பாடிகளே! யாமே உங்கள் நேசத்திற்குறியவர். முழுநிறை வர்ணம், நறுமணம், மற்றும் பசுமையும், புதுமையும் கொண்ட அழகுடன் யான் தோன்றியுள்ளேன். வாருங்கள், உங்கள் நண்பனோடு வீற்றிருங்கள். பறந்து சென்றுவிடாதீர்கள்.“

மேலோட்டமான இராப்பாடிகளோ: “நாங்கள் மதினாவின் பூர்வகுடிகள், நாங்கள் அராபிய ரோஜாவின் நண்பர்களாக இருந்தோம். நீ வேறு இடத்திலிருந்து வந்துள்ளாய், மற்றும் ஈராக் நாட்டின் தோட்டம் ஒன்றில் உனது முகத்திரையை நீ வீசியெறிந்து விட்டாய்,”

ரோஜா: “ஆக, இவ்வளவு காலமாக, சர்வ-இரக்கமிக்கவரின் அழகிலிருந்து நீ தூரமாகவே இருந்துள்ளாய் என்பது இப்போது தெளிவாகியுள்ளது; மற்றும் நீ என்னை என்றுமே கண்டுணரவே இல்லை. ஐயமின்றி, ஆந்தைகளைப் போல், நீங்கள் சுவர்களையும், விட்டங்களையும், கூறைகளையும் மட்டுமே கண்டிருக்கின்றீர்கள். நீங்கள் என்னை எப்போதுமே அறிந்திருந்தால், உங்கள் நண்பனை விட்டு இப்போது பறந்தோடியிருக்க மாட்டீர்கள்.

இராப்பாடிகளே! யாம் மதினாவையோ, மக்காவையோ சார்ந்தவர் அல்ல, அல்லது ஈராக்கையோ, சிரியாவையோ சார்ந்தவரும் அல்ல. மாறாக, பார்வையிடுவதற்காக காலத்திற்குக் காலம் நான் எல்லா நாடுகளினூடும் பிராயணம் செய்வேன். ஒரு சமயம் நான் எகிப்பதில் தோன்றினேன், வேறு சமயம் பெத்லெஹமில் தோன்றினேன். ஒரு காலத்தில் நான் அரேபியாவில் இருந்தேன், மற்றொரு நேரம் நான் ஈராக்கில் பூத்திருந்தேன், பிறகு ஷிராஸில் மலர்ந்திருந்தேன். இப்போது, அடிர்னேயில் நான் மீண்டும் தோன்றியுள்ளேன்.

என்மீதான உங்கள் அன்புக்கு நீங்கள் பெயர் பெற்றிருந்தீர்கள், ஆனால், நீங்கள் இப்போது என்னை புறக்கணிக்கின்றீர்கள். நீங்கள் இராப்பாடிகளாக பாவனை செய்யும், காக்கைகள் எனவே தோன்றுகிறது. மாயத்தோற்றம் மற்றும் கண்மூடித்தனமாகக் கீழ்படிதல் எனும் தேசத்தில் நீங்கள் அலைந்துகொண்டிருக்கின்றீர்கள், மற்றும் நீங்கள் தெய்வீக ஒருமையெனும் புனிதத் தோட்டத்தை இழந்தவர்கள் ஆவீர்.

ஒரு முறை இராப்பாடியிடம்: ‘உங்களைவிட காக்கைகளே அழகாகப் பாடக்கூடியவை‘ எனக் கூறிய அந்த ஆந்தையைப் போன்றவர்களே நீங்கள்.

அதற்கு அந்த இராப்பாடி: ‘ஆந்தையே, எவ்வாறு நீ நியாயமில்லாமல் இருந்தும், உண்மையின்பால் உன் கண்களை மூடிக்கொண்டும் இருக்கின்றாய்? ஒவ்வொரு கூற்றும், இறுதியில் நிரூபிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாக்குமூலமும் தக்க ஆதாரங்கள் கொண்டு மெய்ப்பிக்கப்பட வேண்டும். நான் இங்குதான் இருக்கின்றேன், மற்றும் காக்கையும் இங்குதான் உள்ளது. ஆகவே, அதுவும் பாடட்டும், பிறகு நானும் பாடுகின்றேன்‘ என மறுமொழி பகன்றது.

ஆனால் அதற்கு ஆந்தை: ‘நான் உனது சவாலை ஏற்றுக்கொள்ள முடியாது, மற்றும் உன் ஆதாரங்களை நான் ஏற்கமறுக்கின்றேன். ஏனெனில், ஒருமுறை ஒரு தோட்டத்தில் இருந்து மகிழ்ச்சியளிக்கும் கீதம் ஒன்று ஒலிப்பதைக் கேட்டேன். பிறகு, அதைப் பாடியவர் யார் எனக் வினவினேன். அதற்கு அவர்கள் அஃது ஒரு காக்கையின் குரல் என்றனர். அந்தக் காக்கை தோட்டத்தை விட்டு வெளியே வருவதைக்கூட நான் கண்டேன். ஆகவே, அந்தப் பதில் உண்மையென்றே நான் உணர்ந்தேன்,‘ என பதிலிறுத்தது.

பாவம் அதற்கு அந்த இராப்பாடி: ‘ஆந்தையே, அது காக்கையின் குரல் அல்ல. அஃது என்னுடைய குரலே. நீ செவிமடுத்த அதே போன்ற கீதத்தை, ஏன் அதைவிட சிறந்த ஒன்றை, தனிச்சிறப்புமிக்க ஒன்றை இப்போதே பாடுகின்றேன்,‘ எனக் கூறியது.

“அதற்கு ஆந்தை: ‘நான் கூறியவற்றிலிருந்து நான் சிறிதும் மாறப்போவதில்லை. உன் கோரிக்கையை நான் நிராகரிக்கின்றேன். என்னுடைய மூதாதையர்களும், தோழர்களும் அவ்வாறே கூறுகின்றனர். காக்கை தன்னுடைய வாதத்தை நிரூபிக்க சாட்சிப்பத்திரங்களை அப்போது வைத்திருந்தது. எப்போதும் நீ தான் அங்கு இருந்தாய் என்றால், அதனுடைய பெயர் ஏன் பிரபலமடைந்தது?‘

அதற்கு இராப்பாடி: ‘நீ முற்றிலும் நியாயமின்றி இருக்கின்றார். வெறுப்புமிகு வேட்டைக்காரன் என்னைக் கண்ணிவைத்துப் பிடித்திருந்தான். அவன் கொடுங்கோன்மை எனும் வாளை என் முதுகில் பிடித்திருந்தான். அதன் காரணமாகத்தான் காக்கை பிரபலமடைந்திருந்தது. முழுமையாக வெளிப்படுத்தப்படுவதற்குப் பதிலாக நான் மறைக்கப்பட்டிருந்தேன். முழுநிறைவுடன் பாடிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக நான் மௌனமாக இருந்தேன். செவிபடைத்த எவரொருவருமே சர்வ-இரக்கமுடையவரின் பாடலுக்கும், காக்கை கரைவதற்குமிடையே உள்ள வேறுபாட்டை உணரமுடியுமே. உண்மையை உனக்குப் புகட்டும் வண்ணம், இப்போது என் குரலையும், கீதத்தையும் கேள்,‘ எனக் கூறியது.

“இராப்பாடிகளான நீங்கள் அனைவரும் அந்த ஆந்தையைப் போன்றவர்களே. ஒரு சிறிய மாயத்தோற்றத்தை ஒரு நூறாயிரம் நிச்சயத்தன்மைகளாகவும், அல்லது செவியுற நேர்ந்த ஓர் அசையெழுத்தை பிரபஞ்சமளவுக்கும் பெரிதாக்கிவிடாதீர்கள். நண்பரின் ஆலோசனையைக் கேளுங்கள், அந்நியனின் கண்களைக் கொண்டு உங்கள் அன்புக்குகந்தவரைப் பார்க்காதீர்கள். என்னை எனது இருக்கையையோ, ஓய்வுத்தலங்களையோ கொண்டல்லாமல் என் வாயிலாகவே உணரமுயலுங்கள்.
அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் திடீரென, இறைவனின் அடையாளத்தை ஏந்திய ஒளிபெற்ற இராப்பாடி ஒன்று, தெய்வீக பாடல் ஒன்றை பாடிக்கொண்டு அந்தப் புனிதப் பூங்காவிலிருந்து தோன்றியது. அஃது அந்த ரோஜாவை சுற்றிச் சுற்றி வந்தும், பிறகு: “நீங்கள் இராப்பாடிகளின் உருவமைப்பு கொண்டிருந்தாலும், நீங்கள் நீண்டகாலமாக காக்கைகளுடனேயே இருந்துள்ளீர்கள், மற்றும் அவற்றின் வழிகளையே நீங்களும் பின்பற்றுகிறீர்கள். உங்களுக்கு இந்தப் பூங்காவில் இடமில்லை. பறந்து போய்விடுங்கள்! இந்த ஆன்மீக ரோஜா தெய்வீகக் கூட்டின் இராப்பாடிகளே வலம் வரக்கூடிய மையமாகும்” எனக் கூறியது.

பிறகு, மனித இராப்பாடிகளே, நண்ரை அறிந்துகொள்ள எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள். தெய்வீகத் தோட்டத்தின் ரோஜாவை அதன் எதிரிகளிடமிருந்து காத்திடுங்கள். உண்மையின் நண்பர்களே! நீங்கள் சேவை எனும் ஆயுதம் தரித்தும், சச்சரவுகளைத் தூண்டிவிடுவோர்களின் சதிகளிலிருந்தும், பாசாங்குகளிலிருந்தும் உலக மக்களை பாதுகாத்திடுங்கள். மக்களிடையே நீங்கள் மரியாதை எனும் அலங்கரிப்புடனும், பனிவுடனும், இறைவனின் மற்ற எல்லா பண்புகளுடனும் தோன்றிட வேண்டும். புனிதத்தன்மையெனும் அங்கிக்கரை சைத்தான் அதன் வெளிப்பாடுகளிலின் அவதூறுகளிலிருந்து தூய்மையாகவும், மாசுபடாமலும் இருக்கட்டும். மற்றும் பொய்யர்களின் பொய்கள் உலக மக்களுக்குத் தெளிவாகவும், வெளிப்படையாகவும் தோன்றட்டுமாக. ஒரு வேளை, கடவுள் தடுப்பதாக, முறைகேடான ஒரு செயலை நீங்கள் செய்துவிட்டீர்களானால், நீங்கள் அனைவரும் அதி புனித உறைவிடத்திற்குக் கண்டிப்பாகத் திரும்பிச் செல்லுங்கள். மற்றும் இதே செயல்களே உங்களைப் பழியிலிருந்து விடுவிக்கக்கூடியவையாக இருக்கும். இதுவே உறுதியான உண்மை.
உலகங்களின் ஆண்டவராகிய, இறைவன் புகழப்படுவதாக.

இந்நாளின் மகத்துவம்


12 ஏப்ரல் 1912
திருமதி பிலிப்ஸ் அவர்களின் ஸ்டூடியோவில் ஆற்றப்பட்ட உரை
39 வெஸ்ட சிக்ஸ்டி-செவன்த் ஸ்ட்ரீட், நியு யோர்க்
திரு ஜோஃன் ஜி. க்ரன்டி அவர்களால் எடுக்கப்பட்ட குறிப்புகள்

அன்பும், ஐக்கியமும் கலந்த வாழ்த்துக்களை நான் வழங்குகின்றேன். இறைவனின் அன்பர்களைச் சந்திப்பதில் ஏற்படும் களிப்போடும், தெய்வீக மகிழ்ச்சியோடும் ஒப்பிடுகையில் இவ்வுலக காரியங்கள் ஒன்றுமற்றவை எனவே கணக்கிடப்படுகின்றன. நீண்ட கடல்வழி பயணத்தால் நான் சோர்வடைந்திருந்தாலும், இப்பெரும் களிப்பையும், ஆசீர்வாதத்தையும் அனுபவிப்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். இன்றிரவு, இந்த இறைவனின் கூட்டத்தினரின் மீது பார்வையை செலுத்தும் நான் அதிஉயர்ந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றேன். நீங்கள் இங்கு ஒன்றுகூடியிருப்பது நீங்கள் இறைவனின் சமயத்தை நிலைநிறுத்தியுள்ளீர்கள் என்பதற்கும், இறைவனின் சாம்ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கு உதவியளிக்கவும், கைகொடுக்கவும் செய்கிறீர்கள் என்பதற்கும், நிச்சயமாகவே ஓர் அடையாளமாகும். ஆகவே, என் ஆனந்தத்தின் உச்சநிலையென்பது உங்கள் வதனங்களைப் பார்த்து ஆசீர்வதிக்கப்பட்ட அழகர், பஹாவுல்லாவின் சக்தியால் நீங்கள் இங்கு ஒன்றுதிரட்டப்பட்டுள்ளீர்கள் என்பதைக் கண்டுணர்வதிலேயே அடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் நீங்கள் அவரது போதனைகளை நிலைநிறுத்தி, அவரது சமயத்திற்குக் கைகொடுக்கவும் செய்கின்றீர்கள். ஆகவே, மனுக்குல உலகிற்கு ஊட்டம் வழங்குவதற்கான தெய்வீக கனிகள் தோன்றக்கூடிய நல்விருட்சமாக நீங்கள் ஆகிடுவதை நான் காண்கின்றேன்.

பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன் முன்னெழுந்த சீடர்களைப் போல், இறைவனின் அன்பெனும் நெருப்பால் உங்கள் உள்ளங்கள் தீப்பிடித்தும், தெய்வீக ஆவியெனும் உணவால் உங்கள் ஆன்மாக்கள் புத்துணர்வு பெற்றும், நற்செய்தியின் அறிவிப்பினால் மனித உள்ளங்களை உயிர்ப்புறச் செய்தும், உங்கள் முகங்களில் இறையொளியுடனும், இறைவனைத் தவிர மற்றெல்லாவற்றிலிருந்தும் உங்களைத் துண்டித்துக்கொண்டும் நீங்கள் முன்செல்லவேண்டும். ஆகவே, தெய்வீக போதனையின் முதல் கோட்பாடாகிய அன்புக்கு ஏற்ப உங்கள் வாழ்க்கைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே ஆசீர்வதிக்கப்பட்ட அழகரது நூற்றாண்டு!
இதுவே அவரது அழகின் ஒளியின் காலவட்டம்!
இதுவே எல்லா அவதாரங்களின் முழுமை நிறைந்த நாள்!

விதைகள் விதைத்திட வேண்டிய நாட்கள் இவையே. மரங்கள் நட வேண்டிய நாட்கள் இவையே. இறைவனின் தாரள அருட்கொடைகள் ஒன்றடுத்து ஒன்றென உள்ளன. இந்நாளில் ஒரு விதையை விதைப்பவன், தெய்வீக இராஜ்யத்தில் அதன் கணிகளிலும் அறுவடையிலும் தனது சன்மானங்களைக் காண்பான். உரியநேரத்திற்கேற்ற இந்த விதை, இறைவனின் அன்பர்களின் இதயங்களில் விதைக்கப்படும்போது, தெய்வீகப் பரிவெனும் மழையினால் நீர்பாய்ச்சப்பெற்றும், தெய்வீக அன்பெனும் சூரிய ஒளியால் வெப்பமளிக்கவும் படும். மனுக்குல ஒருமைப்பாடு, நீதியின் பூரணத்துவம், மனுக்குலத்தினரிடையே வெளிப்படும் சுவர்க்கத்தின் வாழ்த்துக்குறிய பண்புகள் ஆகியவை அதன் கணியும், மலரும் ஆகும். பஹாவுல்வாவின் போதனைகளுக்கேற்ப இவ்விதமான ஒரு விதையை விதைக்கவும், இவ்விதமான ஒரு மரத்தை நடவும் செய்பவர்கள் இத்தெய்வீக விளைவை அதன் முழுநிறைவின் படிப்படியான வெளிப்பாட்டினூடே கண்ணுறவும், தயைமிக்கவரது நல்விருப்பத்தை அடையவும் செய்வார்கள்.

இன்று உலக நாடுகள், சுயகாரியங்கள் நிமித்தமாய் இருந்தும், அழியக்கூடியதும், நிலையற்றதுமான சாதனைகளில் ஈடுபட்டும், தாபம் மற்றும் அகந்தையெனும் நெருப்பில் பொசுங்கியும் உள்ளனர். அகந்தையே ஆதிக்கம் செலுத்துகின்றது; பகைமையும், விரோதமும் மேலோங்கி நிற்கின்றன. தேசங்களும், மக்களும் தங்கள் உலகாசைகள் மற்றும் பலன்களைப் பற்றியே சிந்திக்கின்றனர். சண்டையின் மோதல் சத்தமும், சச்சரவின் இரைச்சலும் அவர்கள் மத்தியில் செவிமடுக்கப்படுகின்றது. ஆனால், ஆசீர்வதிக்கப்பட்ட பூரணரின் நண்பர்களுக்கு விண்ணுலகம் மற்றும் இறையன்பைத் தவிர வேறு எண்ணங்கள் கிடையாது. ஆகவே, இறை அன்பின் பிறங்கொளியின் மினுமினுப்பைப் பரப்புவதில் உங்கள் சக்திகளை பயன்படுத்துவதில் தாமதம் செய்யாமல், அதன் பிரகாசத்தின் உதாரணங்களென அறியவும் காணவும் படும் வகையில் உங்கள் வாழ்க்கைகளை ஒழுங்குபடுத்திக்கொள்வீர்களாக. நட்டுவைப்பீர்கள் என உங்களை நம்பிவிடப்பட்டுள்ள இந்த அரிய விதை மேலும் தொடர்ந்து வளர்ந்தும், அதன் கணிகளை வழங்கவும் கூடிய வகையில் நீங்கள் எல்லாரையும் அன்புக்கருணையோடு நடத்தவேண்டும். உங்கள் உள்ளங்களில் நீங்கள் அன்பு கொண்டிருப்பீர்களேயானால் இறைவனின் அன்பும், இரக்கமும் உங்கள் மூலமாக இதை நிச்சயம் சாதிக்கும். இராஜ்யத்தின் வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. உண்மைச்சூரியனின் ஒளிகள் பிரகாசிக்கின்றன. தெய்வீக இரக்கம் எனும் மேகங்கள் தங்கள் விலைமதிப்பற்ற மணிக்கற்களைப் பொழிகின்றன. புதியதும், தெய்வீகமானதுமான இளவேனிற்காலத்தின் மென்பூங்காற்றுகள் அருவ உலகிலிருந்து சுகந்த மூச்சுக்களை மெல்ல வீசச் செய்கின்றன. ஆகவே, இந்நாளின் மதிப்பினை அறிவீராக.

இத்தெய்வீக வாய்ப்பின் நிறைவேற்றத்திற்குத் துயிலெழுவீர்களாக. இந்த நற்செய்தியைப் பரப்புவதற்கும், இந்த இரக்கம் மிகுந்த கொடையின் தோற்றத்திற்கும், உங்கள் ஆன்மாக்கள், உங்கள் செயல்கள், நடவடிக்கைகள் மற்றும் வார்த்தைகளின் சக்திகள் அனைத்தையும் கொண்டு உதவிபுரிவீர்களாக. நீங்களே உங்கள் செயல்கள் மற்றும் நடவடிக்கைகளின் மெய்நிலையும், வெளிப்பாடும் ஆவீர்கள். ஆசீர்வதிக்கப்பட்ட பூரணரின் கட்டளைகளுக்கும், போதனைகளுக்கும் இணங்க நடப்பீர்களேயானால், தெய்வீக உலகும், தொன்மையான இராஜ்யமும் உங்கள் உடைமையாகும் – நித்திய ஆனந்தமும், அன்பும், நிலையான வாழ்வும் உங்களுக்கே உரித்தாகும். தெய்வீகக் கொடைகள் பொழிகின்றன. மிகுந்த கனிகளை வழங்கும் ஒரு மரமாவதற்கான வாய்ப்பு உங்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதுவே பஹாவுல்லாவின் இளவேனிற்காலம். ஆன்மீக வளர்ச்சியின் பசுமையும், இலைதழைகளும் மனித உள்ளங்கள் எனும் தோட்டங்களில் பெரும் அளவில் தோன்றிக்கொண்டிருகின்றன. இந்த உருண்டோடிம் நாட்கள் மற்றும் மறைந்துபோகும் இரவுகளின் மதிப்பினை அறிவீர்களாக. ஒருவர்பால் ஒருவர் முழுநிலை அன்பெனும் ஸ்தானத்தை அடைந்திட முயலுவீர்களாக. அன்பின்மையால், பகைமையே அதிகரிக்கும். அன்பை கடைப்பிடிப்பதால், அன்பு பலப்படுவதோடு, பகைமைகள் சிறிது சிறிதாக ஒழிந்துவிடும்.

என்னைக் கவனியுங்கள் – உங்கள் முகங்களைக் காண்பதற்காக, முற்றிய வயதான காலங்களில், உடல் பலவீனத்தின் சுமையைத் தாங்கி, பரந்த சமுத்திரத்தைக் கடந்து வந்துள்ளேன். ஆவியின் வாழ்வின் வாயிலாக நீங்கள் அனைவரும் ஒரே ஆன்மாவாகவும், இராஜ்யத்தின் ரோஜாவனத்தை அலங்கரிக்கும் ஒரே மரமாகவும் ஆவீர்கள் என்பது என் எதிர்பார்ப்பு. இறைவனின் கொடைகள் எனும் முடிவற்ற பொக்கிஷங்கள் இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கே உரித்தாகும் என்பது என் எதிர்பார்ப்பு. நித்தியமான மகிமை எனும் சுவர்க்கத்தில் என்றென்றும் பிரகாசிக்கும் உங்களுடைய பளிச்சிடும் ஒளிகளின் வாயிலாக விண்ணுலகத் திருக்கூட்டத்தினர் ஒளிரப்பெறுவார்கள் என்பது என் பிரார்த்தனை.

அப்துல்-பஹா: அனைத்துலக அமைதிக்கான பிரகடணம், பக். 7-9)

பஹாவுல்லாவின் துன்பங்களுக்கான நோக்கம்


பஹாவுல்லாவின் துன்பங்களுக்கான நோக்கம்

(அப்துல் பஹாவின் நிருபம் ஒன்றின் பகுதிகள்)

மேன்மைப் படுத்தப்பட்ட அழகரின்பால் உங்கள் முகத்தைத் திருப்பியுள்ளோரே. இரவும் பகலும், காலை வேளைகளிலும் அந்தி வேளைகளிலும், இருள் சாயும் பொழுதிலும், அதிகாலையிலும், என் சிந்தையிலும் இதயத்திலும் தேவரின் அன்புக்குரியவர்களை நான் நினைவுகூர்ந்த வன்னமிருந்தேன், சதா நினைவுகூர்ந்த வன்னமிருந்தேன். அந்தத் தூய்மையானதும் புனிதமானதுமாகிய தேசத்தில் வசிக்கும் நேசத்துக்குரியவர்களின் மீது அவரது ஆசீர்வதிப்பு பொழியப்படுமாறு நான் அவரிடம் இறைஞ்சுகிறேன், மற்றும் எல்லா காரியங்களிலும் வெற்றியை அவர்களுக்கு அளிக்குமாறும், அவர்களது குணத்தில், அவர்களது நடத்தையில், அவர்களது வார்த்தைகளில், அவர்களது வாழ்க்கை நெறியில், அவர்கள் இயங்கிச் செயலாக்கும் எல்லாவற்றிலும் அவர்கள் மனிதர்களிடையே தனிச்சிறப்பை அடையுமாறு செய்வாராக; அவர்களது இதயங்கள் உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் ஏங்கும் அன்போடும், அறிவோடும் மெய்யுறுதியோடும், பற்றுறுதியோடும் ஒற்றுமையோடும், அவர்களது வதனங்கள் அழகோடும் பிரகாசத்தோடும் இருக்கும் வகையில் அவர் அவர்களை உலக சமூகத்தினுள் ஒன்றிணைப்பாராக.

சியாச்-சால் சிறை

தேவரின் நேசத்திற்குரியவர்களே! இந்நாள் ஒற்றுமைக்குரிய நாள், மனித இனம் அனைத்தும் ஒன்று கூட்டப்படும் நாள். “மெய்யாகவே இறைவன், ஒரு திடமான சுவரைப்போல், அவரது சமயத்திற்காக இணைந்த வரிசைகளாக போரிடுவோரைத்தான் நேசிப்பார். அவர் “இணைந்த வரிசைகள்” என்று குறிப்பிடுவதைக் கவனியுங்கள் – இதன் பொருள் கூட்டமாகவும் பிணைந்துகொண்டும், ஒருவர் மற்றோருவருடன் கட்டுண்டும், ஒருவர் தனது அன்பர்களுக்கு உதவுவதுமாகும்.

புனித வாசகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல், போர் செய்வதென்றால், சகாப்தத்திற்கெல்லாம் அதி உயர்வான இந்த சகாப்தத்தில், வாளோடும் ஈட்டியோடும், அம்போடும், துளைக்கும் கனைகளோடும் முன்செல்வதென்று பொருளல்ல – மாறாக தூய்மையான எண்ணங் கொண்டும், நேர்மையான நோக்கங்களைக் கொண்டும், உதவிடும் மற்றும் விளைவுகள் தந்திடும் ஆலோசனைகளைக் கொண்டும், இறை பண்புகளைக் கொண்டும், சர்வ வல்லமை பொருந்தியவரை மனம் நிறைவடையச் செய்யும் செயள்களைக் கொண்டும், தெய்வீக இயல்புகளைக் கொண்டும் போர் செய்வதே ஆகும். இது மனிதர்கள் யாவருக்கும் கல்வி புகட்டுவதும், எல்லா மனிதர்களுக்கும் வழி காட்டுவதும், ஆவியின் தித்திக்கும் நறுமணங்களை பரவலாகவும் விசாலமாகவும் பரப்புவதும், இறைவனின் ஆதாரங்களைப் பிரகடனம் செய்வதும், தெய்வீக மற்றும் தெளிவான வாதங்களை முன்வைப்பதும், அரச்செயல்களைச் செய்வதுமே ஆகும்.

எப்போதெல்லாம் புனித ஆன்மாக்கள், வின்னுலகச் சக்திகளைப் பெற்றுக் கொண்டு, அத்தகைய ஆன்மீக இயல்புகளைக் கொண்டு எழுந்து, ஒன்றிணைந்து, அணிவரிசை அணிவரிசையாக அணிவகுத்துச் செல்வார்களாயின், அந்த ஆன்மாக்கள் ஒவ்வொருவரும் ஓர் ஆயிரம் ஆன்மாக்களுக்குச் சமமானவர்களாவர், மேலும் அந்தச் சக்திவாய்ந்த சமுத்திரத்தின் பொங்கி எழும் அலைகள் வின்னுலகப் படைகளுக்குச் சமமாக இருக்கும்.

நாம் எல்லோரும் ஒருபொழுதில் தனித்திருந்த ஊற்றுகளும், நீரோடைகளும் அருவிகளும், விரைந்தோடிடும் நீர் உற்றுகளும், தனித் துளிகளுமாக இருந்தபின், ஒரே இடத்தில் சேர்க்கப்பட்டு ஒரு மாபெரும் கடலாக ஆக்கப்பட்டால் – அது எத்தகையதொரு அருளாகும். மேலும், அங்கு வியாபிக்கும் எல்லோருடைய இயல்பான ஒற்றுமையாகப்பட்டது, இந்த மானிடர்களின் மிளிரும் வாழ்கையின் கலாச்சாரம், கோட்பாடுகள், பழக்க வழக்கங்கள் மற்றும் வேற்றுமைகளானவை தனித் தனித் துளிகளைப்போல் அந்த ஒருமைத்தன்மை எனும் பெருங்கடலானது பாய்ந்துப் பொங்கியெழுந்து ஓடுகையில் அழிந்து மறைந்துவிடும்.

ஆதி அழகானவரின் மேல் நான் ஆனையிடுவது, யாதெனில், அத்தகையதொரு வேளையில் வியக்கச் செய்யும் கருணை எல்லோரையும் வட்டமிடும், மற்றும் ஆகக் குறுகளான நீரோடையானது எல்லையற்ற சமுத்திரத்தைப் போல அகன்று வளர்ந்துவிடும், மற்றும் ஒவ்வொரு நுன்னிய துளியும் ஆழங்கானா சமுத்திரமாகிவிடும்.

இறைவனின் நேசத்துக்குரியோரே! அந்த உயர்ந்த நிலையினை அடைந்திட முயல்வீராக, இந்தப் பூமியின் எல்லைகளுக்கப்பால் பிரகாசித்திடும் ஒரு பிரகாசத்தை உருவாக்குவீராக, அதனால் அதன் கிரனங்கள் நித்தியமெனும் தொடுவானத்திலிருக்கும் ஓர் உதயபீடத்திலிருந்து பிரதிபலிக்குமாக.

இதுவே இறை சமயத்தின் மெய்யான அஸ்திவாரமாகும். இதுவே இறை சட்டங்களின் மெய்யான வித்தாகும். இதுவே ஆண்டவனின் தூதர்களினால் எழுப்பப்பட்ட மாபெரும் அமைப்பு. இதன் காரணமாகத்தான் ஆண்டவனின் உலகத்தின் சூரியன் உதிக்கின்றது. இதனால்தான் இறைவன் தமது மனித உடல் எனும் சிம்மாசனத்தின்மீது தம்மை ஸ்தாபித்துக்கொண்டார்.

இறைவனின் நேசத்துக்குரியோரே! இந்த உயர்ந்த நோக்கத்திற்காக மேன்மைப் படுத்தப்பட்ட வரான (பாப் பெருமானார்) – பூலோகத்தில் இருக்கும் அனைத்து ஆன்மாக்களும் அவருக்கு அர்ப்பனம்செய்யப்படுமாக – தனது புனித நெஞ்சத்தினை சோதனையின் கனைகளுக்கு இரையாக்கினார்; மற்றும் தொள்ளழகரின் (பஹாவுல்லாவின்) – மேலுலகவாசிகளின் ஆன்மாக்கள் அவருக்காக அர்ப்பனம் செய்யப்படுமாக — நோக்கம் இதே ஆன்மீக குறிக்கோளினை வென்றிட வேண்டும் என்பதனால் — மேன்மைப் படுத்தப்பட்டவர், வஞ்சகமும் வெறுப்பும் கொண்ட மக்களினால் துளைக்கப்பட்ட எண்ணிலடங்கா குண்டுகளுக்குத் தனது புனித மார்பைக் குறியாக்கினார். அவர் அதி தாழ்மையுடன் உயிர்த் தியாகியாக மரணமடைந்தார்.

இந்தப் பாதையின் புழுதியில்தான் ஆயிரமாயிரமான தெய்வீக ஆன்மாக்களின் புனித இரத்தம் பொங்கிப் பீரிட்டது, மேலும் எத்தனையோ முறை ஒரு நேர்மையான இறை நேசனின் புனித உடல் தூக்கிலுடும் விருட்சத்தில் தொங்கவிடப்பட்டது.

அப்ஹா அழகர் – எல்லா உயிரினங்களின் ஆன்மாக்களும் அவரது நேசர்களுக்காக அர்ப்பணிக்கப்படுமாக — எல்லா வித இன்னல்களையும் தானே தாங்கிக்கொண்டார், மேலும் பெரும் இடுக்கண்களையும் தானே ஏற்றுக்கொன்டார்.

தன் புனித மேனி உட்படுத்தப்படாத கடும் சித்திரவதைகள் எதுவுமில்லை, தன்மீது பொழிந்திடாத சோதனைகள் எதுவுமில்லை. எத்தனை இரவுகள்தான், அவர் சங்கிலியால் பினைக்கப்பட்டிருக்கும் வேளையிள், தமது இரும்புக் கழுத்து வளையத்தின் பாரம் தாங்கவியலாமல், தூக்கமின்றிக் கிடந்தார்; எத்தனை நாட்கள்தான் தம்மைப் பிணைத்திருக்கும் விலங்குகள் மற்றும் சங்கிலிகளின் வாட்டிடும் வலி அவரு க்கு ஒரு வினாடி நிம்மதியைக்கூட தரவில்லை.

நியாவரானிலிருந்து தெஹெரான் வரை அவரை ஓடச்செய்தார்கள் — உருவெடுத்த ஆவியான அவர், அலங்கரிக்கப்பட்ட பட்டுத் துனியினாலான பஞ்சு மெத்தைகளின் மேல் உறங்கி பழக்கப்பட்டவரான அவர் — சங்கிலியால் கட்டப்பட்டு, காலனி இல்லாமல், தலைப்பாகையற்று ஓடச்செய்யப்பட்டார்; மேலும், மன்னின் ஆழத்திற்குள், அந்த நெறுக்கமான பாதாளத்தின் கடுமையான இருளில், கொலையாளிகள், தீவிரவாதிகள் மற்றும் திருடர்களுடன் அவர் அடைக்கப்பட்டார்.

மேலும் மேலும் அவர்கள் ஒரு புது சித்திரவதைக்கு அவரை ஆளாக்கினார்கள், அவர் உயிர்த்தியாகியென மரணம் அடைவார் என அவர்கள் எல்லோரும் ஒரு வினாடிக்கு மறு வினாடி உறுதியாக இருந்தனர். சில காலத்திற்குப் பிறகு அவர்கள் அவர் பிறந்த நாட்டை விட்டு அவரை நாடு கடத்தி, அந்நிய மற்றும் தூரமான நாடுகளுக்கு அனுப்பினர்.
ஈராக்கில் பல ஆண்டுகளுக்கு, ‘அவரது புனித இதயத்தை ஒரு புதிய கனை துளைத்திடாமல் ஒரு விநாடி கூட கடந்திடவில்லை; ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு புது வாள் அவரது புனித மேனியின் மேல் பாய்ந்தது. ஒரு கனம் கூட பாதுகாப்பையோ ஓய்வையோ அவர் எதிர்பார்த்திட இயலவில்லை.

இடைவிடாத வெறுப்புடன் எல்லா திசைகளிலிருந்தும் தம் எதிரிகள் தாக்குதல் நடத்தினர்; தனியாகவும் ஒருவராகவும் எல்லோரையும் அவர் எதிர்த்து நின்றார். இப் பேரிடர் எல்லாவற்றுக்கும் பிறகு, இந்த உடற் காயங்கள் யாவற்றிற்கும் பிறகு, அவர்கள் அவரை ஆசியா கன்டத்திலுள்ள ஈராக்கிற்கு வெளியே ஐரோப்பா கண்டத்திற்கு அவரைத் துரத்தினர். அந்த கசப்பு மிகுந்த நாடுகடத்தப்பட்ட இடத்தில், கடுமையான கஷ்டங்கள் நிறைந்த இடத்தில், குர்-ஆனை நம்புவோர்கள் அவர்பால் சுமத்திய பழிகளுக்கு மேல் இப்பொழுது பாயானை பின்பற்றுவோரின் தொடர்ச்சியான துன்புறுத்தல்களும், மோசமான தாக்குதல்களும், நாச வேலைகளும், அவதூறுகளும், தொடர்ச்சியான விரோதமும் வெறுப்புகளும் பொறாமையும் சேர்ந்துகொண்டன.

என் எழுதுகோல் இவை எல்லாவற்றையும் எழுதிட பலமற்றுள்ளது; ஆனாலும் நீங்கள் நிச்சயமாக இவைகளை அறிந்திருப்பீர்கள். பிறகு, இருபத்து நான்கு வருடம் இந்த அதி பெரும் சிரையில், நொந்தும் கடும் நோயுற்றும், அவரது நாட்கள் இறுதி கட்டத்தை நெருங்கின.

சுருக்கமாகச் சொல்லப்போனால், ஆதி அழகர், இந்த மாயை உலகில் தாம் கடந்து செல்கையில், எப்பொழுதுமே, சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு கைதியாகவோ, அல்லது ஒரு வாளின் கீழ் வசிப்பவராகவோ, அல்லது ஆகக் கடுமையான துயரங்களுக்கும் கொடுமைக்கும் ஆளாக்கப் பட்டவராகவோ, அல்லது இந்த அதி பெரும் சிரையில் அகதியாகவோ தான் இருந்தார். தனக்கு நேர்ந்த சோதனைகளினால் விளைவிக்கப்பட்ட தனது உடல் வலிமையின்மையின் காரணத்தால், அவரது புனித உருவம் ஒரு சுவாசமாகத் தேய்ந்துப் போனது; நீண்ட துயரத்தின் காரணத்தினால் அது ஒட்டடையைப் போல் கனமற்றுப் போனது. அவர் இந்தப் பெரும் பாரத்தைச் சுமந்து, தனது அலைகளை வானத்தின் உயரத்திற்கு ஓங்கிடச் செய்யும் சமுத்திரத்தைப் போல் திகழ்ந்த இந்த சோகங்களை எல்லாம் தாங்குவதின் காரணம் — அவர் கனமான இரும்புச் சங்கிலிகளை அனிந்ததற்கான காரணம், பரிபூரனப் பொறுமை மற்றும் தாழ்மை என்பதற்கான மெய்யான அடையாளமாக ஆவதற்கான காரனமானது, உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவனையும் சமாதானம், நட்பு மற்றும் ஒருமைத்தன்மைக்கு வழிகாடுவதற்கும்; இறைவனின் ஒருமைத்தன்மையின் சாயலை எல்லா மக்களிடமும் அறிவிப்பதற்குமாகும். இதன் நோக்கமானது, இறுதியாக எல்லா படைக்கப்பட்டப் பொருட்களின் இதய மையத்திற்குள் பொதிக்கப்பட்டிருக்கும் முதன்மை ஒருமைத் தன்மையானது தனது முன்விதிக்கப்பட்ட கனியைக் காய்க்கும் என்பதற்கும், ‘கருணை எனும் இறைவனின் படைப்பில் ஏதேனும் வேறுபாட்டினை நீங்கள் கண்ணுர வியலாது’ எனும் அட்சரங்களின் பிரகாசம் தன் கிரணங்களைப் பரவச் செய்வதென்பதற்குமே ஆகும்.

தேவனின் அன்புக்குரியோரே, இதுதான் தீவிர முயற்சி கொள்வதற்கான சரியான நேரம். நீங்கள் கடும் முயற்சி செய்து, போராடுவீராக. மேலும், ஆதி அழகர் பகல் வேளையிலும், இரவுக் காலங்களிலும் உயிர்த் தியாகமெனும் களத்தில் முன்வைக்கப்பட்டார் எனும் காரணத்திற்காக, நாமும், நமது பங்கிற்கு கடுமையாக உழைத்து, இறை ஆலோசனைகளுக்குச் செவிசாய்த்து சிந்திப்போமாக; நம் உயிர்களைத் தூக்கி எறிந்திடுவோமாக, நம் குறுகிய மற்றும் எண்ணிக்கைக்குள் அடங்கிய நாட்களை துறந்திடுவோமாக. இவ்வுலகின் வேறுபட்ட உருவங்களைப்பற்றிய வெறும் வீன்கனவுகளிலிருந்து நம் கண்களை நாம் திருப்பிடுவோமாக, மாறாக இந்த அதி மேன்மையான, இந்த மாபெரும் அமைப்பிற்காக சேவையாற்றுவோம். நமது சொந்த கற்பனைகளின் காரணத்தினால், இறை கருணை எனும் கரங்கள் நட்டிருக்கும் இந்த விருட்சத்தை நாம் வெட்டிவிட வேண்டாம்; நமது வீண் தப்பெண்ணங்களெனும் இருள் மேகங்களைக் கொண்டு, நமது சுய விறுப்பங்களைக் கொண்டு, அப்ஹா இராச்சியத்திலிருந்து பொழியும் மகிமையினை நாம் அகற்றிட வேண்டாம். சர்வ வல்லமை வாய்ந்த இறைவனின் அலைபாயும் சமுத்திரத்தைக் கட்டுப்படுத்திடும் சுவர்களாக நாம் ஆகிட வேண்டாம். சர்வ மேன்மையான அழகரின் வனத்தின் தூய்மையான, தித்திக்கும் நறுமணங்கள் தொலைவாகவும் பரவலாகவும் ஊதி வீசிடுவதை நாம் தடை செய்ய வேண்டாம். இந்த ஒன்றுகூடும் நாளில், மேலுலகிலிருந்து பொழியும் இறை மழை எனும் கருணையை நாம் தடுத்திட வேண்டாம். உண்மைச் சூரியனாகியவரின் பிரகாசங்கள் என்றுமே மங்கி அழிந்திட நாம் ஒப்புக் கொள்ள வேண்டாம். தமது புனித நூல்களிலும் வாசகங்களிலும், தமது ஆலோசனைகளை நேர்மையானவர்களுக்குப் போதிக்கும் தம் நிருபங்களிலும் பொதிக்கப் பட்ட இறைவனின் ஆலோசனைகள் இவைதான்.

மேன்மையும், கடவுளின் கருணையும், கடவுளின் ஆசீர்வாதமும் உங்களைச் சாருமாக.

இறைவனின் ரோஜா மலர்கள்


இறைவனின் அன்பெனும் பூங்காவிலுள்ள ரோஜா மலர்களே. அவரது அறிவின் ஒன்றுகூடலில் ஒளிவீசும் தீபங்களே. இறைவனின் மெல்லிய சுவாசக்காற்றுகள் உங்களை மோதிச் செல்லட்டுமாக, இறைவனின் ஜோதி உங்கள் உள்ளங்களின் தொடுவானத்தை பிரகாசிக்கச் செய்யட்டுமாக.

நீங்கள் அறிவெனும் ஆழக் கடலின் அலைகளாவீர், பற்றுறுதி எனும் புல்வெளியில் கூடி இருக்கும் படைகளும் ஆவீர், நீங்கள் இறைவனின் கருணை எனும் வானத்தில் உரைந்திடும் வின்மீன்கள் ஆவீர், முடிவான அழிவு நிலையிலுள்ள மக்களை ஓடச்செய்திடும் கற்களும் ஆவீர், நீங்கள் வாழ்வெனும் தோட்டங்களின்மேல் வீற்றிருக்கும் இறை கருணை எனும் மேகங்கள் ஆவீர், நீங்கள் படைக்கப்பட்ட யாவற்றின் சாரங்களின்பால் பொழியப்படும் இறை ஒருமைத்தன்மையின் அளவில்லா ஆதரவும் ஆவீர்.

திறந்திருக்கும் இவ்வுலகமெனும் ஏட்டில், நீங்கள் அவரது தனித்தன்மையின் வரிகள் ஆவீர் – நீங்கள் உயர்ந்த அரண்மனை கோபுரங்களின் மேல் தேவனின் கொடிகளும் ஆவீர். அவரது இரகசிய தோட்டத்தில் நீங்கள் பூக்களும் நருமணம் வீசும் செடிகளும் ஆவீர், ஆவியின் ரோஜாத் தோட்டத்தில் நீங்கள் சோக கீதங்கள் பாடிடும் இராப்பாடிகளும் ஆவீர்.

அறிவெனும் வானத்திற்குள் உயரப் பறந்திடும் பறவைகள் நீங்களே, இறைவனின் மணிக் கட்டின்மீது அமர்ந்திருக்கும் இராஜாளிகளும் நீங்களே. ஆகவே நீங்கள் ஏன் உற்சாகம் குன்றி இருக்கின்றீர்கள், ஏன் மௌனம், மனச்சுமையும் சோகமும் ஏன்?

நீங்கள் மின்னலைப் போன்று பளிச்சிட வேண்டும், பெருங் கடலைப் போன்று பேரிரைச்சல் செய்திட வேண்டும். ஒரு மெழுகுவர்த்தியைப் போன்று நீங்கள் ஒளி பாய்ச்சிட வேண்டும், இறைவனின் இளந்தென்றலைப் போல் நீங்கள் உலகெங்கும் வீசிடல் வேண்டும்.

தெய்வீக வனங்களில் இருந்து வீசிடும் இனிய சுவாசக்காற்றுகளைப் போலவும், தேவரின் பூங்காக்களிலிருந்து வீசிடும் கஸ்தூரி கமழும் மாருதங்களைப் போலவும், நீங்கள் அறிவுடையோருக்கான காற்றில் நறுமணம் கமழ்ந்திடச் செய்ய வேண்டும், மேலும் மெய்மை சூரியன் பொழிந்திடும் பிரகாசங்களைப் போல் நீங்கள் மனிதகுலத்தின் இதயங்களை பிரகாசிக்கச் செய்திடல் வேண்டும்.

ஏனெனில் நீங்கள்தாம் உயிர் தாங்கிவரும் மாருதங்கள், நீங்கள்தாம் மீட்கப்பட்டோரின் பூங்காவிலிருந்து வீசிடும் மல்லிகையின் வாசங்கள். ஆகவே இறந்தோர்க்கு உயிர் கொடுங்கள், உறங்கிட்டோரை விழித்திடச்செய்யுங்கள்.

உலக இருளில் பிரகாசிக்கும் சுடர்களாக இருப்பீராக – நரகமெனும் பாலையில் உயிர்கொடுக்கும் நீருற்றுகளாக இருப்பீராக, ஆண்டவராகிய தேவரிடமிருந்து வரும் வழிகாட்டுதல்களாக இருப்பீராக.

இதுவே சேவை செய்ய வேண்டிய நேரம், இதுவே தீயைப்போல் உற்சாகமாய் இருந்திட வேண்டிய நேரம். இந்த வாய்ப்பின் மதிப்பை, எல்லையற்ற கொடையாக இருக்கும் இந்த பொருத்தமானநேரத்தின் மதிப்பை, உங்கள் கரங்களை விட்டு அது நழுவிச் செல்லும்முன் நீங்கள் அறிவீர்களாக.

நமது இந்த ஒரு சில நாட்கள், நமது மறைந்தோடிடும் வாழ்க்கை, விரைவில் கடந்துவிடும், பிறகு நாமும், வெருங்கையுடன், இனி பேச முடியாதவர்களுக்கென தோண்டப்பட்டிருக்கும் புதைகுழிக்குள் சென்றுவிடுவோம் – ஆகவேதான் நாம் வெளிப்படுத்தப்பட்ட அழகரோடு நம் இதயங்களை பிணைத்தும், என்றும் துவண்டிடாத உயிர்க்கொடியை பற்றிக் கொள்ளவும் வேண்டும்.

சேவைக்காக நாம் நம்மை தயார் செய்துகொண்டும், அன்பின் தீயை தீண்டிவிட்டும், அதன் அனலில் எரிந்திடவும் வேண்டும். இந்த பரந்த உலகின் இதயத்தையே தீமுட்டிடும் வரை நாம் நமது நாவுகளை தளர்த்திவிட வேண்டும், பிறகு வழிகாட்டுதல் எனும் பிரகாசமான கதிர்களைக் கொண்டு இருட்படைகளை மறைந்திடச் செய்யவேண்டும். அதன் பிறகு, தியாகம் எனும் களத்தில், நம் உயிர்களை, அவருக்காக நீத்திடவேண்டும்.

ஆகவே இறைவனை அறிதல் எனும் பொக்கிஷத்தின் மணிகளை எல்லா மக்களின்மீதும் தூவிடுவோம், பிறகு தீர்க்கமான வாள் எனும் நாவினைக் கொண்டும், குறிதவறா கனைகளெனும் அறிவைக் கொண்டும், அகங்காரம் மற்றும் உணர்வெழுச்சி ஆகிய படைகளை வென்று, உயிர்த் தியாக சதலத்திற்கு, தேவருக்காக உயிர் விடும் இடத்திற்கு நாம் விரைவோமாக.

அதன் பிறகு, பறக்கும் கொடிகளோடும், முரசுகளின் கொட்டு முழக்கத்தோடும், சர்வ-மகிமை மிக்கவரின் இராஜ்ஜியத்திற்கு விரைந்து, விண்படைகளோடு ஒன்று சேருவோமாக.

பெருஞ் செயல்கள் புரிவோர் நலன்தனை அடைவார்களாக.

(அப்துல் பஹாவின் புனிதவாசகங்களின் தேர்ந்தெடுப்புகள், பக்கம் 266-267)

இத் தெளிவுமிகு செய்யுட்கள்


இந்நாளில் விண்ணுலகத்தில் ஒரு மாபெரும் விழா நடைபெறுகின்றது; ஏனெனில் புனித நூல்களில் வாக்களிக்கப்பட்டவை யாவும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது பரமானந்தம் அடைய வேண்டிய நாள். தூரமெனும் நெருப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனும், ஆனந்தத்துடனும், பேருவகையுடனும், களிப்புடனும் அவரது அருகாமையெனும் அரணுக்கு விரைந்திட வேண்டியது ஒவ்வொருவருக்கும் ஏற்புடையதாகும். -பஹாவுல்லா

பின்வரும் நிருபம் பஹாவுல்லாவின் எழுத்துக்களான, பஹாவுல்லாவின் நிருபங்கள், மற்றும், ஒநாயின் மைந்தனுக்கான திருமுகம் ஆகியவற்றில் காணக்கிடைக்கின்றது. இரண்டிலும், இந்த நிருபம் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட ஒரு நிருபம் என பஹாவுல்லா கூறுகின்றார். ஆக, மூன்று முறை பல்வேறு சூழ்நிலைகளில் இந்நிருபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிருபத்தின் முக்கியத்துவம் அதன் இறுதிப் பத்தியிலேயே விவரிக்கப்பட்டுள்ளது.

இத் தெளிவு மிகு செய்யுட்கள்

பிற விஷயங்களுக்கிடையே, இத்தெளிவு மிகு செய்யுட்கள், மறுமொழியாக, குறிப்பிட்ட சில நபர்களுக்கு, தெய்வீக அறிவெனும் இராஜ்ஜியத்திலிருந்து கீழே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன:

‘எமது வதனமெனும் பிரகாசங்களின்பால் தனது முகத்தை திருப்பியுள்ளவரே! உலகவாசிகளை வீன் ஆசைகள் சூழ்ந்து, உறுதிப்பாடெனும் தொடுவானத்தையும், அதன் பிரகாசத்தையும், அதன் வெளிப்பாடுகளையும் அதன் ஒளிகளையும் நோக்கித் திரும்புவதிலிருந்து அவர்களை தடுத்துவிட்டிருக்கின்றன. தனித்தியங்க வல்லவரான அவரை அனுகுவதிலிருந்து வீன் கற்பனைகள் அவர்களை தடுத்துள்ளன. புறிந்து கொள்ளாமல், தங்கள் சபலங்கள் தூண்டிய வண்ணம் அவர்கள் மொழிகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் இவ்வாறு கூறியவர்கள் ஆவர்: ‘செய்யுட்கள் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டனவா?’. கூறுங்கள்: ‘ஆம், விண்ணுலகங்களின் பிரபுவான அவரது பெயரால்!” “நேரம் சம்பவித்து விட்டதா?” “அல்ல, அதனினும் மேலாக; தெளிவான அடையாளங்களை வெளிப்படுத்தும் அவரது பெயரால், அது கடந்து சென்றுவிட்டது! மெய்யாகவே, தவிர்க்கவியலாதது வந்துவிட்டது, ஆதாரங்களுடனும் சான்றுகளுடனும் உண்மையானவரான, அவர் தோன்றிவிட்டார். ‘திருவெளி’ வெளிப்படுத்தப்பட்டுள்ளது, மனிதகுலம் கடுந்துன்பமும் பீதியும் கொண்டுவிட்டது. பூகம்பங்களும் வெடித்துவிட்டன, சர்வ உந்துதல் அளிக்கும், வலிமையின் பிரபுவான இறைவன்பால் உள்ள பயத்தால் இனங்கள் யாவும் புலம்பவும் செய்கின்றன.” கூறுங்கள்: “ஸ்தம்பிக்கவைக்கும் தாரை ஒளி உரக்க எழுப்பப்பட்டுவிட்டது, ஏகமானவரான, கட்டுப்படுத்தப்படாதவரான இறைவனுடையது இந்நாள்.” திடீர்ப் பேரழிவு கடந்து சென்றுவிட்டதா?” கூறுங்கள்: “ஆம், பிரபுக்களுக்கெல்லாம் பிரபுவின் பெயரால்!” “மறு உயிர்த்தெழல் வந்துவிட்டதா?” “அல்ல, அதற்கும் மேலாக; தனித்தியங்குபவரான அவர் தமது அடையாளங்கள் எனும் இராஜ்ஜியத்துடன் தோனறிவிட்டார்.”மனிதர்கள் தாழ்வுற்றுக் கிடப்பதை காண்கின்றீரா?” “ஆம், மேன்மைபடுத்தப்பட்டவரான, அதி உயர்ந்தவரான எனது பிரபுவின் பெயரால்.” “அடிமரங்கள் வேருடன் பிடுங்கியெறியப்பட்டுவிட்டனவா?” “ஆம், அதனினும் மேலாக; நற்பண்புகளின் பிரபுவானவர் பெயரால், மலைகளே தூசிப்படலங்களாக சிதறடிக்கப்பட்டுவிட்டன.” அவர்கள் கூறுவதாவது: “சுவர்க்கம் எங்கே, நரகம் எங்கே?” கூறுங்கள்” “இறைவனோடு பங்காளியாக இனைந்து சந்தேகங்கொள்பவனே, ஒன்று எம்முடன் மறுபடியும் இனைதலாகும்; மற்றது உனது சுயநிலையே ஆகும்.” அவர்கள் கூறுவதாவது: “துலாபாரத்தை காண்கின்றோமில்லை.” கூறுங்கள்: நிச்சயமாகவே, கருணைத் தேவரான என் பிரபுவின் பெயரால்! உட்பார்வை பெற்றுள்ளோர்களைத் தவிர வேறு எவரும் அதைக் காண இயலாது.” “விண்மீன்கள் வீழ்ந்துவிட்டனவா?” கூறுங்கள்: ஆம், தனித்தியங்க வல்லவரான அவர் மர்ம பூமியில் (ஆட்ரியாநோப்பில்) வாசம் செய்திட்ட போதே.” பகுத்தறியும் தன்மை பெற்றுள்ளவர்களே, கவனங் கொள்ளுங்கள்! யாம் எமது வல்லமையெனும் கரத்தை மாட்சிமை மற்றும் வலிமை எனும் நெஞ்சிலிருந்து அகற்றியபோதே எல்லா அடையாளங்களும் தோன்றிவிட்டன. மெய்யாகவே, வாக்களிக்கப்பட்ட நேரம் தோன்றிய கனமே கூவுபவர் கூவிட, சைனாயின் மகிமைகளை கண்டுணர்ந்தோர் படைப்பின் பிரபுவான உன் பிரபுவின் பிரமிக்க வைக்கும் மாட்சிமையின் முன்னிலையில் தாமதிப்பு எனும் வனாந்திரத்தில் மூர்ச்சையாகிவிட்டனர். ‘தாரை’ வினவுவதாவது: “ஊது குழல் ஒலிக்கப்பட்டுவிட்டதா?” கூறுங்கள்: “ஆம், வெளிப்பாட்டின் அரசரின் பெயரால்!, சர்வ-தயாளமுடையவரெனும் அவரது நாமமெனும் சிம்மாசனத்தில், அமர்ந்தவுடன்.” பிரகாசங்கள் யாவற்றுக்கும் தோற்றுவாயானவரான உன் பிரபுவின் கருணையின் உதய ஒளியினால் இருள் விரட்டப்பட்டுவிட்டது. சர்வ-தயாளமுடையவரின் தென்றல் வீசிட, அவர்களின் உடல் எனும் கல்லறையினுள் ஆன்மாக்கள் புத்துணர்வுபெறச் செய்யப்பட்னர். இவ்விதமாகவே, வலிமைமிக்கவரும் கொடையாளியுமாகிய இறைவனால் ஆணை நிறைவேற்றப்பட்டுள்ளது. வழிதவறியோர் கூறியுள்ளனர்: “விண்ணுலகங்கள் எப்போது பிளக்கப்பட்டன?” கூறுங்கள்: “வழிதவறுதல் மற்றும் தவறுகள் எனும் புதைகுழிகளில் நீங்கள் உரங்கிக்கொண்டிருந்த போது.” தன் கண்களைத் தேய்த்துக்கொண்டு, வலதுபுறமும் இடதுபுறமும் பார்ப்பவன் கவனமற்றவர்களில் ஒருவனாக உள்ளான். கூறுங்கள்: “நீ கண்ணிழந்தவனாக ஆகிவிட்டாய். ஓடி ஒளிந்திட உனக்குப் புகலிடம் கிடையாது.” அவர்களிடையே இவ்வாறு கூறுபவனும் உள்ான்: “மனிதர்கள் ஒன்று திரட்டப்பட்டுள்ளனரா?”. கூறுங்கள்: “ஆம், என் தேவரின் வாயிலாக! நீங்கள் உங்கள் வீண் ஆசைகள் எனும் தொட்டிலில் சாய்ந்திருந்தபோதே.” அவர்களிடையே இவ்வாறு கூறுபவனும் உள்ளான்: “உண்மையான சமயத்தின் சக்தியின் மூலமாக திருநூல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா?” கூறுங்கள்: “உண்மையான சமயம் தானே திகைப்படைந்துள்ளது. புறிந்துகொள்ளும் உள்ளம் கொண்ட மனிதர்களே, அச்சங்கொள்ளுங்கள்!” அவர்களிடையே இவ்வாறு கூறுபவனும் உள்ளான்: “குருடனாக நானும் மற்றவர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளேனா?”. கூறுங்கள்: “ஆம், மேகங்களின் மீது அமர்ந்து வருபவரின் பெயரால்!” சுவர்க்கம் மர்ம ரோஜாக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டும், நரகம் பக்தியற்றோரின் தீயினால் எரிந்திடச் செய்யப்பட்டும் உள்ளது. கூறுங்கள்: “வெளிப்பாடெனும் தொடுவானத்திலிருந்து ஒளி உதயமாகிவிட்டது, திருவொப்பந்த நாளின் பிரபுவின் வருகையினால் உலகம் ழுவதுமே ஒளிபெறச் செய்யப்பட்டுவிட்டது!” நம்பிக்கையற்றோர் அழிந்துவிட்டனர். அதே வேளையில், உறுதியெனும் ஒளியினால் வழிகாட்டப்பட்டு, மெய்யுறுதியெனும் பகலூற்றின்பால் திரும்பியவன், செழிப்படைந்தான். எம்மீது உன் பார்வையை குத்திடச் செய்துள்ளோனே, உனக்காக அனுப்பப்பட்டுள்ள — மனிதர்களின் ஆன்மாக்களை வானோங்கச் செய்யும் ஒரு நிருபமான இந்த நிருபத்திற்காக நீ ஆசீர்வதிக்கப்பட்டுள்ளாய். அதை மனனம் செய்து ஒப்புவிப்பாயாக. என் உயிரின் மீது ஆணை! உன் பிரபுவின் தயைக்கு அது ஒரு நுழைவாயிலாகும். மாலை வேளைகளிலும் காலை வேளைகளிலும் அதை வாசிப்பவன் நலமடைவானாக. அறிவெனும் மலை நொறுக்கப்பட்டும், மனிதர்களின் கால்களை வழுக்கிட செய்திடும் இந்த சமயத்தின் புகழை நீர் பாடியதை யாம், மெய்யாகவே, செவிமடுக்கின்றோம். உன்மீதும், சர்வ-வல்லவரும், சர்வ-கொடையாளியுமானவர்பால் திரும்பியுள்ள எவர்மீதும், எமது மகிமை சாரட்டுமாக. இந்நிருபம் முடிவுற்றது, ஆனால் அதன் பொருள் வற்றாமல் உள்ளது. பொறுமை கொள், ஏனெனில் உன் தேவர் பொறுமையானவர்.
பஹாவுல்லா, பஹாவுல்லாவின் நிருபங்கள், ப. 117-119

கடவுளின் வார்த்தைகள்


இறைவனின் வார்த்தையும் அதன் ஆற்றல்கள் அனைத்தும் எல்லாம்-அறிந்தவரும் சர்வ-விவேகியுமான அவரால் முன்விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்குட்பட்டே மனிதர்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டுமென எம்மால் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதனை மறைத்திடும் திரையாக வேறெதுவுமின்றி அதனையே யாம் விதித்துள்ளோம். எமது நோக்கங்களை எய்திடக்கூடிய ஆற்றல் இவ்வாறாகவே உள்ளது. அவ்வார்த்தை தன்னுள்ளடங்கியுள்ள சக்திகளையெல்லாம் திடீரென வெளிப்படச்செய்திட அனுமதிக்கப்படுமேயானால், எம்மனிதனாலும் அவ்வித ஆற்றல்மிகு வெளிப்பாட்டின் பலுவைச் சுமந்திட முடியாது. மாறாக, விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள அனைத்தும் அதன் முன்னிலையிலிருந்து வெருண்டோடிப் போகும்.

மனிதர்களின் இறைநம்பிக்கையின் உள்ளுரம் எல்லா நாடுகளிலும் மறைந்துகொண்டிருக்கின்றது; அவரது முழுமையான குணமளிக்கும் மருந்தைத் தவிர வெறெதுவுமே அதனை மறுபடியும் உயிர் பெறச் செய்யமுடியாது. இறைநம்பிக்கையின்மையின் அரிக்குந்தன்மை மனுக்குலத்தின் உயிர்நாடியை அரித்துக்கொண்டிருக்கின்றது; அவரது ஆற்றல்மிகு வெளிப்பாடெனும் அமுதத்தைத் தவிர வெறெதுதான் அதனைத் தூய்மைப்படுத்தியும் மீட்டுயிர்ப்பெறவும் செய்யமுடியும்? ஓ ஹாக்கிம், பருப்பொருளின் நுட்பமானதும் பகுக்கமுடியாததுமான ஏதாவது ஒரு பகுதியின் மூலக்கூற்று தனிமங்களில் அவற்றைத் தங்கமாக உருத்திரிபு செய்யவல்ல ஒரு பூரணமான தன்மைமாற்றத்தை உண்டாக்கிடுவது மனித சக்திக்கு உட்பட்டதா? திகைக்க வைப்பதும் சிறமமானதுமாக இரு தோன்றினாலும், இதனினும் பெரிய காரியமாக பேய்த்தனமான வலிமையை தெய்வீக வளமாக மாற்றஞ்செய்வதற்கு யாம் ஆற்றல் பெற்றுள்ளோம். இவ்வித தன்மைமாற்றத்தை உண்டாக்கக்கூடிய சக்தி அமுத சக்தியினையும் மிஞ்சிய ஒன்றாகும். இறைவனின் வார்த்தை ஒன்றே, தனியே, இவ்வித உயர்ந்த மற்றும் எட்டும்வரையிலான விளைவுகளை உண்டாக்கக்கூடிய மாற்றத்திற்கான ஆற்றலைப் பெற்றுள்ளது எனும் தனித்தன்மையைக் கோரிட முடியும்.

உண்மையான வெற்றிக்கு வழிகாட்டுபவர் வந்துவிட்டார். இறைவனின் நேர்மைத் தன்மையின் சாட்சியாக! ஒரே ஒரு வார்த்தையின் சக்தியின் மூலம் உலகத்தையே மாற்றியமைக்க அவர் முழுமையான ஆற்றல் பெற்றுள்ளார். விவேகத்தைக் கையாழுமாறு எல்லா மனிதர்களுக்கும் ஆணையிட்டு, தாம் மட்டும் பொறுமை மற்றும் கீழ்படிகை எனும் கயிற்றைப் பற்றிக்கொண்டுள்ளார்.

ஆன்மீகச் சபைகளை நிறுவுவீர்களாக; இவ்வுலகில் ஒற்றமை மற்றும் உடன்பாடு ஆகியவற்றிற்கான அடித்தலத்தை அமைப்பீர்களாக; உலகத்தின் மீதிருந்து சச்சரவு மற்றும் போர் ஆகியவற்றின் கட்டமைப்பை அழித்திடுவீராக; இணக்கம் மற்றும் ஒத்திசைவு ஆகியவற்றின் ஆலயத்தை அமைப்பீராக; மனுக்குல ஒறுமைத்தன்மை நிலையின் ஒளியைத் தூண்டிவிடுவீராக; உங்கள் கண்களைத் திறந்திடுவீராக; மருமை உலகைக் கண்ணுற்று உற்று நோக்குவீராக! அமைதி, கடைத்தேற்றம், நேர்மை மற்றும் மறுஇணக்கம் ஆகியவற்றின் இராஜ்ஜியம் அருவ உலகில் அமைக்கப்பட்டுள்ளது, இறைவனின் வார்த்தையின் ஆற்றல் மூலமாக அது சிறுகச் சிறுகவே வெளிப்பட்டும் தோற்றம் காணவும் செய்யும்!

நீங்கள் நட்புறவு கொண்டுள்ளோரின் வட்டத்தை அதிகரித்திட முயற்சி செய்தும், நன்மைகள் புறிந்திட வேண்டுமெனும் ஒரே நோக்கும், அனைத்துலக அமைதி கோட்பாட்டின் செயலாக்கத்திற்காக பாடுபட்டும், மனுக்குலம் ஐக்கியப்படுதலை காண்பதன்றி வேறு ஆசைகள் எதனையும் மனதிற் பேணாத, நன்மைகள் மட்டுமே புரிந்திட வேண்டுமெனும் ஒரே எண்ணங்கொண்டுள்ள பரந்தமனப்பான்மைக் கொண்ட ஆன்மாக்களோடு மிக நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும் வேண்டும். தெய்வீக இராஜ்ஜியம் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு ஊட்டிடவேண்டி, இவ்விதமான மக்கள் கூட்டை நீங்கள் நாடிட வேண்டும். அவர்களது நோக்கங்கள் மிக நேர்த்தியானவையாக இருந்தபோதிலும், இவ்வுலக சக்திகள் அனைத்தும் அனைத்துலக அமைதியை ஸ்தாபித்திடவோ அல்லது மனுக்குல ஒறுமைத்தன்மையை மேம்பாடடையச் செய்திடவோ சக்தியற்றிருக்கின்றன என்பதை அவர்கள் உணரவில்லை. இறைவனின் வார்த்தையின் சக்திக்கும் புனித ஆவியின் மூச்சுக் காற்றுக்கும் குறைந்து வேறு எதுவுமே இதில் வெற்றி பெற்றிட முடியாது.

அலியே! எல்லா உலகங்களுக்கும் ஆண்டவராகியவரின் கொடை, உமக்கு அருளப்பட்டுள்ளது, தொடர்ந்து அருளப்பட்டும் வருகின்றது. அவரது வலிமையையும் ஆற்றலையும் கொண்டு கவசம் பூண்டு, அவரது சமயத்துக்கு உதவிடவும் அவரது புனித நாமத்தை மிகைப்படுத்திடவும் முன்னெழுந்திடுவீராக. மானிடக்கல்வியின்பால் அறியாமையும் வாசிப்பதிலும் எழுதுவதிலும் உமது இயலாமையும் உமது உள்ளத்தை வருத்தமுறச் செய்திட அனுமதியாதீர். அவரது பன்முகமான அருள்பாலிப்புகளின் கதவுகள் அந்த ஒரே உண்மை இறைவனின் ஆற்றலின் வலிமையான பிடிக்குள் அடங்கியுள்ளன. அவருக்குச் சேவைச் செய்யும் அனைவர்பாலும் அவர் அவற்றைத் திறந்துவிட்டுள்ளார், தொடர்ந்து திறந்துவிடவும் செய்வார். தெய்வீக நறுமனமெனும் இத்தென்றல், உமது உள்ளமெனும் பசும்புல்வெளியிலிருந்து அதன் விளைவுகள் வெளிப்படுமளவுக்கு தொடர்ந்து உலகம் முழுமையின் மீதும், எல்லாக் காலங்களிலும், தொடர்ந்து வீசிட வேண்டுமென யான் உறுதியாக எதிர்பார்க்கின்றேன்.

அவரது வார்த்தைகளை அறிந்துகொள்வதென்பதும் விண்ணுலகப் பறவைகளின் உச்சரிப்புக்களை ப் புரிந்துகொள்வதென்பதும் மனிதக் கல்விக்கு எவ்வகையிலும் உட்பட்டவையல்ல. அவை, உள்ளத் தூய்மை, ஆன்மநெறி, மற்றும் ஆவியின் தன்னிச்சையையுமே முற்றாக சார்ந்துள்ளன. இன்று, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கல்வி முன்மாதிரிகளைச் சார்ந்த ஒரு வார்த்தையைக் கூட அறிந்திராமல், அறிவின் மிக உயர்ந்த இருக்கைகளில் அமர்ந்துள்ளோர்களாலேயே இது உதாரணப்படுத்தப்பட்டுள்ளது; மற்றும் அவர்களது உள்ளங்களெனும் தோட்டம், தெய்வீக அருட்பொழிவுகளின் மூலமாக, விவேகமெனும் ரோஜாக்களாலும் பூவரசம்பூக்களெனும் அறிவினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஹிக்மத் நிருபம்


லோ-இ-ஹிக்மத்
(மெய்யறிவிற்கான நிருபம்)

காஃயின் எனப்படும் நகரத்தைச் சார்ந்த பிரசித்திபெற்ற நம்பிக்கையாளரான, ஆகாஃ முகமது எனும் குடும்பப் பெயர் கொண்ட நபில்-இ-அக்பர் என்பாருக்கு இந்நிருபம் வரையப்பட்டது. (மெய்யன்பர்களுக்கான நினைவாஞ்சலிகள் எனும் நூலின் பக்கம் 1-5 காண்க). காஃயினைச் சார்ந்த வேறொரு பிரசித்திபெற்ற நம்பிக்கையாளரான முல்லா முகமது அலி என்பார் நபில்-இ-காஃயினி என  வழங்கப்பட்டார் (மெய்யன்பர்களுக்கான நினைவாஞ்சலிகள் எனும் நூலின் பக்கம் 49-54 காண்க). அப்ஜட் குறிப்பில் ‘முகமது’ எனும் பெயர் ‘நபில்’ எனும் பெயருக்கு ஈடான எண்ணியல் மதிப்பு கொண்டது.

இது உச்சரிப்பு எனும் இராஜ்ஜியத்திலிருந்து சர்வ-தயை மிகுந்தவர் அருளிய ஒரு திருமுகமாகும். சிருஷ்டி மண்டலத்தில் வசிப்போருக்கு இது மெய்யாகவே உயிர்கொடுக்கும் மூச்சுக்காற்றாகும். எல்லா உலகங்களுக்கும் பிரபுவானவர் புகழொளி சாற்றப்படுவாராக! முக்கியவத்துவம் வாய்ந்த ஒரு நிருபத்தில் நபில் எனப் பெயரிடப்பட்டவரும், தனது பிரபுவானவரான, இறைவனின் நாமத்தை மிகைப்படுத்தியவருமானவரைக் குறித்து இத்திருமுகத்தில் எழுதப்பட்டுள்ளது.

முகமதுவே! ஸாஃப்ரான் எனும் நிலத்திலிருந்து மேற்றோன்றியுள்ள விண்ணவ விருட்சத்திலிருந்து உரக்கக் கூவியழைக்கும், மகிமை மண்டலத்திலிருந்து விளைந்துள்ள குரலுக்குச் செவிசாய்ப்பாயாக. மெய்யாகவே, எல்லாம்-அறிந்தவரும், விவேகியுமான இறைவன் எம்மைத் தவிர வேறெவருமிலர். வாழ்வுலகின் தருக்களுக்குச் சர்வ-தயைமிக்கவரின் தென்றல்களைப்போலிருந்து, நீதிமானும், எல்லாம் அறிந்தவருமாகிய உனது ஆண்டவரது நாமத்தின் ஆற்றலால் அவர்களது வளர்ச்சியைப் பேணுவீராக. மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக விளங்கக்கூடியதைப் பற்றி உமக்கு அறிவிக்க யாம் விரும்புகிறோம், அதனால், அவர்கள் தங்களிடையே நடைமுறையிலுள்ள விஷயங்களைக் கைவிட்டு, நேர்மைமிக்கவர்களின் ஆண்டவராகிய, இறைவனை நோக்கித் தங்கள் முகங்களைத் திருப்பட்டும்.

நீதியின் வதனத்தில் மாசு படிந்தும், நம்பிக்கையின்மையின் அனற்கொழுந்துகள் உயரமாக எரிந்து கொண்டும் இருக்கும், விவேகமெனும் மேலாடை அகலக் கிழிபட்டும், சாந்தமும் விசுவாசமும் நலிவுற்றும், சோதனைகளும் கொடுந்துன்பங்களும் கடுமையாகச் சீறியெழுந்தும், ஒப்பந்தங்கள் மீறப்பட்டும் பந்தங்கள் முறிக்கப்பட்டும், எந்த மனிதனும் இருளிலிருந்து ஒளியை வேறுபடுத்திப் பார்க்கத் தெரியவோ அல்லது வழிகாட்டுதலிலிருந்து தவற்றைப் பிரித்துணரவோ தெரியாதிருக்கும் இந்நாட்களிலே யாம் மனுக்குலத்திற்கு நன்மதி பகர்கின்றோம்.

உலக மாந்தரே! எல்லாத் தீங்குகளையும் விட்டொழியுங்கள், நன்மைப் பயப்பனவற்றைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா மக்களுக்கும் ஒளிரும் உதாரணங்களாகவும், இறைவனின் சிறப்பியல்புகளின் உண்மை நினைவுறுத்தல்களாகவும் இருக்க முயலுங்கள். எமது சமயத்திற்குச் சேவை செய்ய முன்னெழுபவர் எமது விவேகத்தை வெளிப்படுத்தியும், மண்ணுலகிலிருந்து அறியாமையை விரட்டிட எல்லா முயற்சிகளை எடுத்திடவும் வேண்டும். அறிவாலோசனை வழங்குவதில் ஐக்கியமாகவும், சிந்தனையில் ஒற்றுமையாகவும் இருங்கள். ஒவ்வொரு காலைவேளையுைம் அதன் மாலைவேளையினும் மேற்பட்டதாகவும், ஒவ்வொரு மறுநாளும் அதற்கு முந்தியநாளினும் செழிப்புமிக்கதாகவும் இருக்கட்டுமாக.

மனிதனின் நன்மதிப்பு, சேவை மற்றும் நன்னெறி ஆகியவற்றிலன்றி செல்வச்செழிப்பு மற்றும் பொருள்வளம்  ஆகியவற்றின் பகட்டாரவாரக்காட்சியில் இல்லை. உங்கள் வார்த்தைகள் வீண் கற்பனை மற்றும் பொருளாசை ஆகியவற்றிலிருந்து விடுபட்டும் உங்கள் செயல்கள் சூழ்ச்சி மற்றும் ஐயுறவு ஆகியவற்றிலிருந்து தூய்மைப்படுத்தப்பட்டும் இருப்பதில் கவனமாக இருங்கள். உங்கள் பொண்ணான வாழ்க்கைச் செல்வங்கள் தீவினை மற்றும் துராசை ஆகியவற்றில் அழிந்திடவோ, அல்லது உங்கள் முயற்சிகள் யாவும் உங்கள் தன்னலங்களை மேம்படுத்திடுவதில் செலவிடப்படவோ அனுமதியாதீர்கள்.

செல்வம் நிறைந்த நாட்களில் பரோபகாரத்துடனும், வறிய நேரத்தில் பொறுமையுடனும் இருங்கள். துரதிர்ஷ்டத்தைத் தொடர்ந்து வெற்றியும் துன்பத்தைத் தொடர்ந்து மகிழ்ச்சிகளும் பின்தொடரும். இளையவராயினும் முதியவராயினும், உயர்ந்தவராயினும் தாழ்ந்தவராயினும், வீண்பொழுது மற்றும் சோம்பல் ஆகியவற்றிற்கெதிராக கவனத்துடன் இருந்தும், மனுக்குலத்திற்கு நன்மைப் பயப்பனவற்றை இருகப்பற்றிக்கொள்ளவும் வேண்டும். மனிதர்களிடையே கருத்துவேறுபாடெனும் புல்லுறுவிகளை விதைப்பதிலிருந்தோ அல்லது தூய்மையும் பிரகாசமும் நிறைந்த உள்ளங்களில் சந்தேகமெனும் கள்ளியை நடுவதிலிருந்தோ எச்சரிக்கையாக இருங்கள்.

ஆண்டவரின் அன்பிற்கினியவர்களே! அன்பெனும் தெளிந்த நீரோடையைக் களங்கப்படுத்தக்கூடியனவற்றையோ அல்லது நட்பெனும் நறுமனத்தினை அழிக்கக்கூடியனவற்றையோ புரியாதீர்கள். ஆண்டவரின் நேர்மைத்தன்மையின் மீது சாட்சியாக! நீங்கள் படைக்கப்பட்டது ஒருவருக்கொருவர் அன்பு காட்டவன்றி நெறிப்பிறழ்வையும் கசப்புணர்வையும் காட்டுவதற்காக அல்ல. உங்கள் மீது அன்புகொண்டுள்ளீர்கள் என்பதிலல்லாது உங்கள் சகஜீவர்கள் மீது அன்புகொண்டுள்ளீர்கள் என்பதிலேயே நீங்கள் பெருமைக் கொள்ளுங்கள். உங்கள் தேசத்தின் மீது அன்பு கொள்வதிலின்றி, எல்லா மனிதர்கள் மீதும் அன்புகொள்வதில் பெருமைகொள்வீர்களாக. உங்கள் கண் கற்புடையதாகவும், உங்கள் கரம் விசுவாசமாகவும், உங்கள் நா வாய்மையுடனும், உங்கள் உள்ளம் தெளிவு பெற்றதாகவும் இருக்கட்டும்.

பஹாவில் அறிவுபெற்றோரின் ஸ்தானத்தைத் தாழ்த்திடவும், உங்களிடையே நீதியைச் செயல்படுத்தக்கூடிய ஆட்சியாளர்களின் நிலையைக் குறைத்துமதிப்பிடவும் செய்யாதீர். நீதியெனும் படையின் மீது உங்கள் நம்பிக்கையை வைப்பீர்; விவேகம் எனும் போர்க்கவசம் பூணுவீர்; மன்னிக்குந்தன்மையும் தயையும் மற்றும் இறைவனின் நல்லாதரவு பெற்றோரின் இதயங்களைக் களிப்புறச் செய்வனவும் உங்கள் அனிகலன்களாக இருக்கட்டுமாக.

எமது உயிரின் மீது ஆணை! உமது துக்கங்கள் எம்மைத் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளன. உலகார்ந்த புத்திரர்களையும் அவர்தம் செய்கைகளையும் பெரிதுபடுத்தாதீர் ஆனால் கடவுளின் மீதும் அவரது முடிவே இல்லாத இராஜ்ஜியத்தின் மீதும் உமது பார்வையைக் குவித்திடுவீர். அவர் மெய்யாகவே, மனுக்குலம் முழுமைக்கும் களிப்பின் தோற்றுவாயாக விளங்கும் அதனை உமக்கு நினைவுபடுத்துகின்றார். இவ்வலிமைமிகு அறனில் உம்மைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளவராகிய — தெய்வீக வெளிப்பாட்டின் தோற்றவாயாகியவர் உச்சரிப்பு எனும் கிண்ணத்திலிருந்து பருகத்தரும் மெய்சிலிர்க்க வைக்கும் இன்பமெனும் உயிர்ப்பளிக்கும் நீரைப் பருகிடுவீர். சொல்வண்மையுடனும் விவேகத்துடனும் உண்மையெனும் வார்த்தையை தின்மையுடன் நிலைப்படுத்திடவும் உலகத்திலிருந்து பொய்மையை அகற்றிடவும் உமது இயன்றளவு வலிமைகளைக் கொண்டு முயலுங்கள்.

எமது நாமத்தின் பெயரால் பேசுகின்றவரே! இம்மக்களையும் எமது நாட்களில் அவர்கள் இழைத்தவற்றையும் சிந்திப்பீராக. உலகவாசிகள் அனைவரையும் ஸ்தம்பிக்கச் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை ஆட்சியாளர்களில் ஒருவருக்கு வெளிப்படுத்தி, இறைவனின் அத்தாட்சியையும், அவரது ஆதாரங்களையும், அவரது மகிமை மற்றும் மாட்சிமை, ஆகியவற்றை அவருக்கு நிரூபிப்பதற்காக இக்காலத்தின் அறிவாற்றல் மிக்க மனிதர்கள் முன் எம்மை நேருக்கு நேர் நிறுத்திட யாம் வேண்டுகோள் விடுத்தோம். யாம் விரும்பியதெல்லாம் இதன்மூலம் பெரும் நன்மையைத் தவிர வேரொன்றுமில்லை.

ஆனால், நீதி மற்றும் நியாயம் ஆகிய நகரங்களின் மக்களைப் புலம்பச்செய்யதிட்ட ஒன்றை அவர் இழைத்தார். இவ்வாறாகவே எமக்கும் அவருக்கும் இடையில் நியாயம் வழங்கப்பட்டுள்ளது. மெய்யாகவே, உமது ஆண்டவரே விதிப்பவரும், எல்லாம்-அறிந்தவரும் ஆவார். நீர் காண்கின்ற இவ்விதச் சூழ்நிலைகளில், வீண் கற்பனைகள் மற்றும் ஆழ்ந்த வெறுப்புணர்வெனும் கற்களால் தனது இறக்கைகளில் தாக்கப்பட்டும், தகர்க்கவியலாத கற்களால் கட்டப்பட்ட இக்கோட்டைக்குள் அடைக்கப்பட்டும் உள்ள தேவப்பறவையானது தெய்வீக மர்மங்களெனும் ஆகாயத்தில் எவ்வாறுதான் பறக்கக்கூடும்? கடவுளின் நேர்மைத்தன்மையின் மீது ஆணையாக! மக்கள் ஒரு கொடும் ஆநீதியையே இழைத்துள்ளனர்.

சிருஷ்டியின் ஆரம்பம் பற்றி நீர் அறுதியிடுவது குறித்து (கூறுவதானால்), மனிதர்களின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் பலவாறு உள்ளதன் காரணத்தினால் அபிப்ராயங்கள் வேறுபடும் ஒரு விஷயமாகும் இது. அது என்றென்றும் இருந்துள்ளது மற்றும் இனி என்றென்றும் இருந்தே வரும் என நீர் வலியுறுத்தினாலும், அது உண்மையாகவே இருக்கும்; அல்லது புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்ற அதே எண்ணத்தை நீர் கொண்டிருந்தாலும், அது குறித்தும் சந்தேகங்கள் இருக்காது, ஏனென்றால் அது உலகங்களின் ஆண்டவராகிய, கடவுளாலேயே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நிச்சயமாகவே அவர் மறைக்கப்பட்டிருந்த ஓர் அரும்பொருளாவார். இது என்றுமே வர்ணிக்கப்படவோ அல்லது குறிப்பிடுவதற்கோ கூட முடியாததாகிய ஒரு ஸ்தானமாகும். மற்றும் ‘யாம் எம்மை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பினோம்!,’ எனும் ஸ்தானத்தில், இறைவன் இருந்தார்,  மற்றும் ஆரம்பமே இல்லாத ஓர் ஆரம்பத்திலிருந்து, ஒரு முதன்மை எனக்கருத முடியாத ஒரு முதன்மையால் இது முந்தப்பட்டிருந்த நிலையையும் அறிவாற்றல் மிக்க மனிதர்கள் அனைவராலும் கண்டுகொள்ளப்பட முடியாத ஒரு மூலகர்த்தாவினால் முன்னுருவாக்கப்பட்ட நிலையையும் தவிர்த்து அவரது படைப்புகள் யாவும் அவரது அடைக்கலத்தின் கீழேயே எப்போதும் இருந்துவந்துள்ளன.

இதுவரை இருந்துவந்துள்ளவை இதற்கு முன் இருந்தவையே, ஆனால் நீர் இன்று காணும் வகையில் அல்ல. செயல்படும் சக்தி மற்றும் அதனை ஏற்கும் சக்தி ஆகிய இரண்டிற்கிடையே ஏற்பட்ட இனைந்தசெயற்பாட்டில் விளைந்த வெப்பசக்தியின் மூலமாக இருப்புலகம் தோற்றம் கண்டது. இவை இரண்டும் ஒன்றானவை, அதேசமயம் வெவ்வேறானவை. ‘அதிவுயர்ந்த அறிவிப்பு’ இவ்வாறாகவே இம்மகிமைமிகு கட்டமைப்புக் குறித்து உமக்குத் தெரியப்படுத்துகின்றது. உருவாக்கும் ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி மற்றும் அதன் தாக்கத்தை ஏற்கும் சக்தி ஆகிய இரண்டுமே எல்லா படைப்புக்களும் தோன்றக் காரணமாக இருந்த தடுக்கவியலாவசீகரமிக்க இறைவனின் வார்த்தையின் மூலமாகவே படைக்கப்பட்டுள்ளன. அதே வேளை, அவரது வார்த்தையைத் தவிர்த்து மற்ற யாவும் அதன் படைப்பினங்களும் விளைவுகளுமே ஆகும்.

மேலும், இறைவனின் — அவரது மகிமை மேன்மைப்படுத்தப்படுமாக — வார்த்தையாகப்பட்டது, புலன்களால் கண்டுணரப்படுவதற்கும் அப்பாற்பட்டு உயர்ந்தும் அதிமேலான நிலையில் உள்ளதென்பதையும், உணர்வீராக, ஏனென்றால் அது இயல்புகள் மற்றும் வஸ்துக்கள் ஆகியவற்றிலிருந்து புனிதப்படுத்தப்பட்டுள்ளது. புலப்பட்டுள்ள மூலவஸ்துக்களின் வரம்புகளுக்கப்பால் அது மிகவுயர்ந்த நிலையில் உள்ளதோடு, எல்லா இன்றியமையாத மற்றும் அறியப்பட்டுள்ள வஸ்துக்களினும் அது மேன்மையுடையதாக இருக்கின்றது. அது சொல்லசைவுகளும் ஒலியும் இன்றி வெளிப்பாடு கண்டது, மற்றும் அஃது எல்லா படைக்கப்பட்ட பொருட்களையும் ஊடுருவி நிற்கும் இறைவனின் கட்டளையன்றி வேறில்லை. இருப்புலகிலிருந்து அது என்றுமே மீட்டுக்கொள்ளப்பட்டதில்லை. எல்லா திருவருளும் தோன்றக் காரணமான, யாவற்றையும் வியாபிக்கும் கடவுளின் திருவருளே அது. இருந்துவந்துள்ள மற்றும் வரப்போகின்ற யாவற்றிலிருந்தும் அதிவுயர்த்தப்பட்டுள்ள ஒரு பொருளாகும் அது.

இவ்விஷயத்தை மேலும் விரிவுபடுத்துவதை யாம் விரும்பவில்லை, ஏனெனில் நம்பிக்கையற்றோர்கள், ஆபத்தில் உதவுபவரும், தனித்தியங்கவல்லவருமான இறைவனுக்கெதிராகக் குற்றங்கண்டிட தங்களுக்கு உதவுவனவற்றைச் செவிமடுத்திடுவதற்காகத் தங்கள் செவிகளை எம்மிடம் திருப்பியுள்ளனர். தெய்வீகப் பிரகாசமானது வெளிப்படுத்தியுள்ளவற்றிலிருந்து அறிவு மற்றும் விவேகங்கள் சார்ந்த மர்மங்களை அவர்கள் அறிய இயலாததன் காரணத்தினால், அவர்கள் எதிர்ப்புகொண்டெழுந்து, கடுங்கிளர்ச்சி செய்கின்றனர். ‘விளக்கவுரையாளர்’ அளிக்கும் விரிவுரையையோ, அல்லது கண்களுக்குப் புலப்படாதவற்றை அறிந்துள்ளவரான, ஒரே உண்மைக் கடவுளானவர் அளிக்கும் மெய்மைகளையோ அவர்கள் எதிர்க்கவில்லை, மாறாக அவர்கள் எதைப் புரிந்துகொண்டுள்ளார்களோ அதையே அவர்கள் எதிர்க்கின்றனர் என்பது உண்மை. அவர்ககளது ஆட்சேபங்கள் ஒவ்வொன்றுமே, அவர்கள் மீதே திரும்பிப் பாய்கின்றன, மற்றும் அவர்கள் புரிந்துகொள்ளுந் தன்மையற்றவர்கள் என உமது உயிரின் மீது யாம் ஆணையிட்டுக் கூறுகின்றோம்.

ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு தோற்றுவாயும் ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒரு கட்டிடக்கலைஞரும் கண்டிப்பாக இருக்கவேண்டும். மெய்யாகவே, இறைவனின் வார்த்தையே, நாட்களுக்கெல்லாம் ஆதியானவவரின் பிரகாசங்களினால்  இந்நிலையற்ற உலகத்திற்கு முன்பாக  தோன்றிய விணைமுதலாகும், இருந்தும் அது எந்நேரமும் புதுப்பிக்கப்படவும் புத்துயிரளிக்கவும் படுகின்றது.  இவ்வதிவிழுமிய கட்டமைப்பை எழுப்பிய முன்மதிமிக்க இறைவன் அளவிடற்கப்பால் உயர்ந்தவராவார்.

இவ்வுலகைப் பார்த்து அதன் நிலைதனை சிறிது சிந்திக்கவும். அது உமது கண்முன்பாகவே தன்னைப் பற்றிய நூலைத் திரைநீக்கம் செய்தும் வடிவமைப்பாளரும், எல்லாம்-அறிந்தவருமாகிய உமது ஆண்டவரின் எழுதுகோல் அதனுள் வரைந்திட்டவற்றை வெளிப்படுத்திடவும் செய்கின்றது. அது அதனுள்ளும் அதன்புறத்திலும் அடங்கியுள்ளவற்றை உமக்குப் அறிமுகப்படுத்தியும் நாவளம் மிக்க எந்தவொரு விளக்கவுரையாளரும் தேவைப்படாத சுதந்திரத்தை அடைந்திட அவசியமான தெளிவான விளக்கங்களை உமக்களிக்கும்.

கூறுவீர்: அதன் சாரத்தைப் பொருத்தமட்டில் இயற்கையானது, உருவாக்குபவர், படைப்பாளர் எனும் எமது நாமத்தின் பண்புருவம் ஆகும். அது வெளிப்படுத்தக்கூடியவை பல்வேறு மூலகாரணங்களினால் பலவகைப்பட்டும், பகுத்தறியும் தன்மைப்பெற்ற மனிதர்களுக்கு இப்பல்வகைமையில் பல அறிகுறிகளும் தென்படுகின்றன. இயற்கையென்பது இறைவனின் விருப்பாற்றலும், இந்நிலையற்ற உலகினுள்ளும் அதன் மூலமாகவும் வெளிப்படுகின்ற அதன் பாவவெளிப்பாடும் ஆகும்.  அது சர்வ-விவேகியான நியமகரால் ஆணையிடப்பட்ட  தெய்வீக அருளளிப்பாகும். இருப்புலகில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இறைவனின் திருவிருப்பமே அதுவென எவரேனும் வலியுறுத்தினால், அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்கலாகாது. கல்வியறிவு மிக்க மனிதர்களும் அதன் மெய்யியல்பைக் கிரகிக்க இயலாத அளவிற்கு அது ஆற்றல் படைத்ததாகும். மெய்யாகவே, அகப்பார்வையுடைய மனிதர் எவரும் படைப்பாளர் எனும் எமது நாமத்தின் பிரகாசத்தைத் தவிர்த்து அதனுள் வேறு எதனையுமே காணமுடியாது. இது அழிவென்பதையே அறியாத ஓர் இருப்புநிலையாகும், மற்றும், அதன் வெளிப்பாடுகளினாலும், அதன் வலிந்தீர்க்கும் ஆதாரங்களினாலும் மற்றும் பிரபஞ்சம் முழுவதையும் சூழ்ந்துள்ள அதன் பிராகாசமிகு மகிமையினாலும் இயற்கையே பிரமிப்பில் ஆழ்ந்துள்ளது.

கடந்தகாலங்களுக்கோ அல்லது சமீப காலங்களுக்கோ நீர் உமது பார்வையைத் திருப்புவது உமக்கு ஏற்புடையதாகாது. இந்த நாளைக் குறித்தே நீர் உச்சரித்தும், அதன்வழி தோன்றியுள்ளவற்றை மிகைப்படுத்தவும் செய்வீராக. உண்மையாகவே அது எல்லா மனிதர்களுக்கும் போதுமானதாகும். மெய்யாகவே அவ்வித விஷயங்கள் குறித்த விளக்கவுரைகளும் விரிவுரைகளும் ஆன்மவுணர்வுகளைச் சில்லிட்டுப் போகச் செய்யும்.  உண்மையான நம்பிக்கையாளர்களின் இதயங்களைக் கொழுந்துவிட்டெரியவும் அவர்களது உடல்கள் வானில் மிதப்பதைப்போல் உணர்வுண்டாகும் வகையிலும் நீர் பேச வேண்டியது ஏற்புடைமையாகும்.

எவராயினும் மனிதனின் மறுபிறவியில் உறுதியாக நம்பிக்கைக்கொள்பவராகவும் அப்புதிய சிருஷ்டியின் மீது அதிவுயர்ந்தவராகிய இறைவன் பெரும் ஆதிக்கமும் அதிகாரமும் செலுத்துகின்றார் என முழுமையாக உணர்பவராகவும் இருப்பாராயின், மெய்யாகவே அவ்வித மனிதன் இவ்வதிபெரும் திருவெளிப்பாட்டில் அகப்பார்வைகள் அளிக்கப்பெற்ற மனிதர்களுல் ஒருவரென மதிக்கப்படுவார். இதற்கு ஒவ்வொரு பகுத்துணரும் நம்பிக்கையாளரும் சாட்சியம் பகர்கின்றார்.

அதிபெரும் நாமத்தின் சக்தியால் இருப்புலகினும் மேன்மையுடைய நடத்தையுடையவராக நீர் இருப்பீராக, அதனால் நினைவிற்கப்பாற்பட்ட மர்மங்கள் குறித்து விழிப்புணர்வு பெறவும் எவருமே அறிமுகம் அடைந்திராதவற்றோடு நீர் அறிமுகம் பெறவும் கூடும். மெய்யாகவே, உமது ஆண்டவரே உதவியாளரும், சர்வ-ஞானியும், எல்லாம்-அறிந்தவரும் ஆவார். சிருஷ்டியின் உடலினூடே துடிக்கும் இரத்தநாளத்தைப் போன்றிருப்பீராக. அதனால், அத்துடிப்பின் விளைவாக உருவாகும் வெப்பத்தின் மூலமாக தயக்கம் காட்டிடுவோர் இதயங்களுக்கு உயிர்ப்பூட்டக்கூடிய ஏதோ ஒன்று தோன்றிடக்கூடும்.

எண்ணிலடங்கா முகத்திரைகளுக்குப் பின்னால் யாம் மறைந்திருந்த நேரத்தில் நீர் எம்மோடு தொடர்பு கொண்டும் எமது முன்மதியெனும் சுவர்க்கத்தின் ஒளிப்பிழம்புகளையும் எமது உச்சரிப்பு எனும் சமுத்திரத்தின் பேரலைகளையும் கண்டீர். மெய்யாகவே உமது ஆண்டவர் உண்மையானவர், நம்பிக்கைக்குறியவர். அதிபெரும் கொடையாளியும் சர்வ-விவேகியுமான தனது ஆண்டவரின் நாட்களில் இச்சமுத்திரத்தின் தாராளப் பிரவாகத்தை அடைந்தவரின் ஆசீர்வாதம் பெரிதே.

இராக் நாட்டில் எமது நிவாசத்தின் போது யாம் மஜீத் எனப்படும் ஒருவரின் இல்லத்தில் இருந்தபோது சிருஷ்டியின் மர்மங்கள் பற்றியும் அதன் தோற்றுவாய், அதன் உச்சநிலை மற்றும் அதன் விணைமுதல் ஆகியவற்றை உமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைத்தோம். ஆயினும், எமது புறப்பாட்டுக்குப் பிறகு பின்வரும் வலியுறுத்தலோடு யாம் நிறுத்திக்கொண்டோம்: ‘மெய்யாகவே, என்றும்-மன்னிப்பவரும், கொடையாளியுமான எம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை.’

புதர்களைத் தீப்பிடித்து எரியச் செய்யக்கூடிய பேச்சாற்றலுடனும், அதனிலிருந்து, ‘மெய்யாகவே சர்வ-வல்லவரும், கட்டுப்படுத்தப்படாதவருமான எம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை’ எனும் அழைப்பு எழுப்படும் வகையிலும் இறைவனின் சமயத்தைப் போதிப்பீராக. கூறுவீர்: மனிதப் பேச்சு தனது செல்வாக்கைப் பதிக்க அவாவுரும் ஒரு சாரம், அதற்கு மிதப்போக்கு அவசியமாகும். அதன் செல்வாக்கைப் பொறுத்தவரை அது நற்பண்பை நிபந்தனையாகக் கொண்டுள்ளது; இந்நற்பண்பு பற்றற்றதும் தூய்மையானதுமான இதயங்களைச் சார்ந்துள்ளது. அதன் மிதப்போக்கைப் பொறுத்தவரை, அது புனித நூல்களிலும் நிருபங்களிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளவாறு நயம் மற்றும் முன்மதி ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும். எல்லா அருளுக்கும் தோற்றுவாயாகிய, உமது ஆண்டவரின் திருவிருப்பமெனும் சுவர்க்கத்திலிருந்து ஊற்றெடுத்து வந்துள்ள அவற்றின் மீது தியானம் செய்வீராக, அதனால் புனித வாசகங்களின் பரிசுத்த ஆழங்களில் ஆலயித்துள்ள உத்தேசமான அர்த்தங்களை நீர் கிரகிக்கக்கூடும்.

இறைவனை நிராகரித்தும் தன்னுள் அது இருப்பது போல் இருக்கும் இயற்கையைப் பற்றிக் கொண்டும் உள்ளவர்கள், மெய்யாகவே, அறிவும் முன்மதியும் அற்றவர்கள்.  உண்மையாகவே அவர்கள் தூர விலகிச் சென்றவர்களைச் சார்ந்தவர்கள். அவர்கள் மிகவுயர்ந்த சிகரத்தை எட்டிப்பிடிப்பதில் தோல்வியடைந்தவர்களும், இறுதி நோக்கத்தை அடைவதில் வெற்றிபெறாதவர்களும் ஆவர்; இதன் காரணமாக, அவர்களிடையே இருந்த அவர்களது தலைவர்கள் கடவுளிலும் அவரது வெல்லமுடியாத இறைமையிலும் நம்பிக்கைக் கொண்ட அதே வேளை, இவர்களது கண்கள் மூடப்பட்டும் இவர்களது சிந்தனைகள் வேறுபட்டும் இருந்தன. ஆபத்தில் உதவுபவரும், தனித்தியங்க வல்லவருமான உமது ஆண்டவர் இதற்கு சாட்சியம் பகர்கின்றார்.

கிழக்கில் உள்ள மக்களின் கண்கள் மேற்கில் உள்ள மக்களின் கலைகளாலும் அற்புதங்களினாலும் ஈர்க்கப்பட்டபோது, பொருள்வகை நோக்கங்களெனும் பாலையில், காரணங்களுக்கு மூலகாரணமானவரும், அவற்றை ஆதரிப்பவருமாகியவரைப் பற்றிய கவனமின்றி குழப்பமுற்றவர்களாக அலைந்து கொண்டிருந்தனர். அதே வேளையில், முன்மதியின் தோற்றுவாய்களாகவும் ஊற்றுக்களாகவும் விளங்கிய மனிதர்கள் இக்காரணங்களின்பின்னனியில் இயங்கிக்கொண்டிருந்த தூண்டுவிசையையோ, அல்லது சிருஷ்டிகர்த்தாவையோ அல்லது அவற்றின் தோற்றுவாயையோ மறுக்கவில்லை. உமது ஆண்டவர் உணர்ந்துள்ளார், இருந்தும் பெரும்பான்மையான மக்கள் உணராமல் உள்ளனர்.

இப்போது யாம், நாமங்களுக்கெல்லாம் அதிபதியாகிய இறைவனின் பொருட்டு, சாதுக்கள் ஒரு சிலரின் விவரங்களை இந்நிருபத்தில் அளித்திடும் பணியை மேற்கொள்கின்றோம். அதன் வாயிலாக மக்களின் கண்கள் திறக்கப்பட்டும், மெய்யாகவே அவரே செய்பவர், எல்லாம் வல்லவர், படைப்பாளர், ஆரம்பிப்பவர், எல்லாம் அறிந்தவர், சர்வ-ஞானி என அவர்கள் முழுமையாக உறுதியடையவும் கூடும்.

சமகாலத்து அறிவாற்றல் மிக்க மனிதர்கள் தத்துவஞானம், கலைகள் மற்றும் கைத்திறன்கள் ஆகியவற்றில் பெரும் தகுதிகள் பெற்றவர்களாக இருக்கின்றார்கள் என அறியப்பட்டிருந்தபோதும், வேறுபடுத்தியுணரும் கண்களோடு எவரேனும் பார்ப்பார்களேயானால் இந்த அறிவின் பெரும் பங்கு அக்கடந்தகால சாதுக்களிடமிருந்தே பெறப்பட்டுள்ளது என்பதை உடனடியாக உணர்வார்கள், ஏனெனில் தத்துவஞானத்திற்கான அஸ்திவாரத்தை அமைத்து, அதன் கட்டமைப்பைப் பேணி மற்றும் அதன் தூண்களை மறுவுறுதிப்படுத்தியவர்கள் இவர்களே ஆவார்கள். இவ்வாறாகவே, நாட்களுக்கெல்லாம் ஆதியானவரான உமது ஆண்டவர் உமக்கு உணர்த்துகிறார். கடந்தகால சாதுக்கள் தங்கள் அறிவை தீர்க்கதரிசிகளிடமிருந்தே பெற்றனர், ஏனெனில் தெய்வீகத் தத்துவங்களின் விளக்குனர்களாகவும் தெய்வீக மர்மங்களின் வெளிப்பாட்டாளர்களாகவும் இவர்களே இருந்துள்ளனர். மனிதர்கள் அவர்களின் தெளிந்த, உயிர்தரும் உச்சரிப்பெனும் நீரினைப் பருகினர், அதே சமயம் பிறர் அடிமண்டிகளைக் கொண்டு திருப்தியுற்றனர். ஒவ்வொருவரு அவரவர் தகுதிக்கேற்ப தங்கள் பாகத்தினைப் பெறுவர். மெய்யாகவே அவரே நடுநிலையாளர், ஞானி.

தத்துவ ஞானத்தில் பிரசித்தி பெற்றவரான எம்படோக்கல்ஸ், டேவிட்டின் சமகாலத்தவர். அதே வேளை, பைத்தாகரஸ் டேவிட்டின் புத்திரனான சாலமனின் காலத்தில் வாழ்ந்து, திருநாவுரைமை எனும் பொக்கிஷத்திலிருந்து முன்மதியினைப் பெற்றார். தான் விண்ணுலகங்களின் முனுமுனுக்கும் ஓசைகளைச் செவிமடுத்ததாகவும், தேவதூதர்களின் ஸ்தானத்தை எட்டிவிட்டதாகவும் உரிமைக்கொண்டாடியவர் இவரே. உண்மையாகவே, அவர் விரும்பினால் எல்லா விஷயங்களையும் உமது ஆண்டவர் தெளிவாக எடுத்துக்காட்டுவார். மெய்யாகவே, அவரே ஞானி, யாவற்றையும் வியாபிப்பவர்.

இறைத்தூதர்களிடமிருந்தே தத்துவஞானத்தின் சாரமும் அடிப்படைகளும் தோன்றியுள்ளன. அவற்றின் உள்படையான அர்த்தங்கள் மற்றும் மர்மங்கள் குறித்து மக்கள் வேறுபாடுகள் கொண்டுள்ளனர் என்பதற்கு அவர்களது கண்ணோட்டங்களின் மற்றும் உள்ளங்களின் வேறுபாடுகளே காரணமெனக் கொள்ளவேண்டும். பின்வருவதை யாம் உமக்கு மகிழ்வுடன் விவரிக்கின்றோம். ஒரு முறை, இறைத்தூதர்களில் ஒருவர் சர்வ-வல்லமை மிக்க ஆண்டவர் அவருக்கு உள்ளுணர்த்தியவற்றை தமது மக்களுக்கு எடுத்துரைத்துக்கொண்டிருந்தார்.

உண்மையாகவே, உமது ஆண்டவர் அகத்தூண்டுதலளிப்பவர், கிருபையாளர், மேன்மைமிக்கவர். அவரது உச்சரிப்பெனும் நீரூற்றிலிருந்து முன்மதியெனும் நீர்த்தாரையும் பேச்சாற்றலும் பீரிட்டு, தெய்வீக அறிவெனும் திராட்சைமது அவரது திருவாசலை நெருங்கியோர் அனைவரையும் மயக்கமுறச் செய்திட்டபோது: ‘அகோ! அனைவரும் ஆவியினால் நிரப்பப்பட்டுள்ளர்,’ என அவர் குரலெழுப்பினார். அங்கிருந்து மக்களில் ஒருவர் இக்கூற்றை இருகப் பற்றிக்கொண்டு, தமது வீண் கற்பனைகளால் தூண்டப்பட்டு, ஆவியென்பது உண்மையிலேயே உடலை ஊடுருவவோ அல்லது அதனுள் நுழையவோ செய்கிறது எனும் எண்ணத்தைத் தோற்றுவித்துக்கொண்டார்., மற்றும் விரிவான விளக்கவுரைகள் மூலமாக இக்கருத்தை நிலைநாட்டிட ஆதாரங்களை முன்வைத்தார்; கும்பல் கும்பலாக மக்களும் அவரது பாதையில் பின்தொடர்ந்தனர்.

இச்சமயத்தில் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதோ, அல்லது இவ்விஷயம் குறித்து ஒரு விரிவான விவரிப்பை உமக்களிப்பதோ சொல்மிகைக்கு இட்டுச் சென்று, மையக்கருப்பொருளை விட்டு விலகிச் சென்றுவிடும். மெய்யாகவே, உமதாண்டவரே சர்வ-ஞானி, எல்லாம்-அறிந்தவர். அருளாளரும், பெருந்தன்மைமிக்கவருமான உமதாண்டவரின் செய்யுட்களை வெளிப்படுத்தியவரானவரது நாவின் திறவுகோலினால் தனது முத்திரை அகற்றப்பட்ட நனிசிறந்த திராட்சை மதுவினைப் பருகியவர்களில் ஒருவரும் இருந்தார்.

நாட்களுக்கெல்லாம் ஆதியானவரை தத்துவஞானியர் மெய்யாகவே, மறுக்கவில்லை. அவரது மர்மங்களை ஆழங்காணுவதில் தங்களது தோல்வி குறித்துப் புலம்பியவாறு அவர்களில் பெரும்பான்மையினர் மறுமை எய்தினர், என அவர்களில் ஒரு சிலர் சான்றளித்துள்ளனர். மெய்யாகவே, ஆலோசகரும், எல்லாம்-அறியப்பெற்றவரும் உமதாண்டவரே ஆவார்.

மருத்துவரான, ஹிப்போகிரேட்டிசைப் பாருங்கள். இறைவனில் நம்பிக்கை வைத்தும் அவரது மாட்சிமையை ஏற்றும் கொண்ட பிரபலமான தத்துவஞானியருள் இவரும் ஒருவராவார். இவருக்குப் பிறகு மெய்யாகவே முன்மதிமிகுந்தவரும், சாதனைகள் புறிந்தவரும், நேர்மையாளருமான சாக்கிரடீஸ் தோன்றினார். இவர் அகமறுத்தலைக் கடைபிடித்தார்; சுயநல இச்சைகளை அடக்கினார்; மற்றும் லௌகீக ஆசைகளிலிருந்து அப்பால் திரும்பினார். இவர் மலைகளுக்குப் பின்வாங்கி, அங்கு ஒரு குகைதனில் வாழ்ந்தார். சிலைவழிபாட்டுக்கெதிராக மக்களுக்கு அறிவுரை கூறி, இரக்கம் மிக்க ஆண்டவரான, இறைவனின் பாதைக்கு, அறிவற்றவர்கள் அவருக்கெதிராக பொங்கியெழும் வரை, வழிகாட்டினார்.  அவர்கள் அவரைக் கைது செய்து சிறையில் அவருக்கு விஷமிட்டுக் கொன்றனர். இவ்வாராகவே இத்துரிதமாக-நகரும் எழுதுகோல் எடுத்துரைக்கின்றது.

இச்சிறந்த மனிதர் தத்துவஞானம் குறித்து எத்தகைய கூர்மையான பார்வையைக் கொண்டிருந்தார்! எல்லா தத்துவஞானியருள்ளும் இவரே அதி புகழ்வாய்ந்தவராகவும் விவேகத்தில் பெரிதும் பாண்டித்தியம் பெற்றவராகவும் திகழ்ந்தார். இத்துறை சம்பந்தமான சான்றோர்களுல் இவரும் ஒருவரெனவும், அதற்காக பாடுபட்டோர்களில் இவர் தனிச்சிறப்பு வாய்ந்தவரெனவும் யாம் சாட்சியம் கூறுகின்றோம். அக்காலக்கட்டத்தில் மக்களிடையே நடப்பிலிருந்த விஞ்ஞானங்கள் பற்றியும், அதோடு மனிதர்களின் மனங்களுக்கு மறைக்கப்பட்டிருந்தவைகளைப் பற்றியும் இவர் ஆழமான அறிவு பெற்றிருந்தார்.

அதிபெரும் சமுத்திரமானது ஒளிரச் செய்வதும், உயிரளிக்கக்கூடியதுமான நீரினைக் கொண்டு கரைபுரண்டோடிய போது அதிலிருந்து இவர் ஒரு மிடறைப் பருகினாரெனவே யாம் எண்ணுகின்றோம். மனித ஆவிக்கு மிகவும் ஒப்பான ஒற்றுமையுடையதும், தனிச்சிறப்புடையதும், பக்குவமானதுமான ஊடுருவும் ஆற்றல்மிகு இயல்பொன்று எல்லா பொருட்களிலும் உள்ளது என இவரே முதன் முதலில் கண்டுணர்ந்தார். இவ்வியல்பு, வஸ்துக்களின் ஆக்கமைவுப்பொருட்களின் தூய்மையான நிலைகளிலினின்றும் தனிவேறுபட்டதாகும் எனவும் இவர் கண்டார். இம்முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் குறித்து இவர் ஒரு விசேஷ அறிவிப்பும் செய்தார். இவ்விரிவுரைக் குறித்து இத்தலைமுறையினரில் லௌகீக விஷயங்களிள் அறிவுபடைத்தோரை நீர் வினவுவீராயின், அதைக் கிரகிப்பதில் அவர்களது இயலாமயை நீர் காண்பீர். மெய்யாகவே, உமது ஆண்டவர் உண்மைப் பேசுகின்றார் ஆனல் பெரும்பாலான மக்களால் அதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை.

சாக்கிரடீசுக்குப் பிறகு பிலாட்டோ தோன்றினார். இவர் முன்னவரது மாணவரும், அவருக்குப் பிறகு தத்துவஞானபீடத்தில் அவரது பின்னமர்வாளராகவும் வீற்றிருந்தார். இறைவன் மீதும், இருந்துவந்துள்ளன மற்றும் வரப்போகின்றவை யாவற்றையும் வியாபித்துள்ள அவரது அடையாளங்களின் மீதும் இவர் தமது நம்பிக்கையை ஒப்புக்கொண்டனர். அதற்குப் பிறகு அறிவாற்றல் மிக்கவரென புகழ்பெற்ற அரிஸ்டாட்டில் தோன்றினார். வாயுக்களின் ஆற்றலைக் கண்டுபிடித்தவர் இவரே. மக்கள் தலைவர்களாக தனிச்சிறப்பும் அவர்களிடையே  பிரபலமும் பெற்ற இம்மனிதர்கள் அனைவருமே, எல்லா விஞ்ஞானங்களுக்கும் கடிவாளமாக விளங்கக்கூடியவற்றைத் தனது கரங்களில் பிடித்துள்ள அழிவற்றவராகியவரின் மீது தங்கள் நம்பிக்கையை ஒப்புக்கொண்டனர்.

தனது பச்சைமணிக் கல்வெட்டுகளில் சிருஷ்டியின் மர்மங்கள் பற்றி ‘தத்துவஞானத்தின் தந்தை’ முன்வைத்த புணைகருத்துக்களை நன்கு தெரிந்து வைத்திருந்த பாலினுஸ் வாய்மொழிந்த வேண்டுதலை உமக்காக யான் குறிப்பிடுகிறேன். இதன் மூலம், நியாயம் மற்றும் அறிவெனும் கரங்களினால் அழுத்தினால் எல்லா படைக்கப்பட்ட பொருட்களும் புத்துயிர்பெற உயிர்ஆவியை அளிக்கக்கூடிய இத்தெளிவான நிருபத்தில் யாம் உமக்காக மேற்கோளிட்டு விளக்கியுள்ள விஷயங்கள் குறித்து எல்லோரும் முழு உறுதியடையட்டும். இச்சமுத்திரத்தில் நீந்திக்கொண்டும் கிருபையாளரும் அதிநேசிக்கப்படுபவருமான தனது ஆண்டவரின் புகழைப் பாடிக்கொண்டுமிருப்பவரின் ஆசீர்வாதம் பெரியது. உமதாண்டவரின் செய்யுட்களிலிருந்து தெய்வீக வெளிப்பாடெனும் தென்றல்கள் வியாபித்திருப்பதானது, உண்மையாகவே, கேட்கும் சக்தி, பார்வை, அறிவாற்றல், மற்றும் எப்புலன்களுமற்றவர்களைத் தவிர அதன் உண்மைகளை மறுத்துரைக்கக்கூடியவர்கள் எவரும் இல்லை.  மெய்யாகவே இதற்கு உமது ஆண்டவரே சாட்சியமளிக்கின்றார், இருந்தபோதிலும் மக்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை.

இம்மனிதன் கூறியதாவது: முன்மதி மிக்கவனும், அற்புதங்கள் நிகழ்த்துபவனும், தாயத்துகள் தயாரிப்பவனுமாகிய பாலினுஸ் நானே! கலைகளையும் ஞானங்களையும் பரப்புவதில் இவரே அனைவரையும் விஞ்சி, பனிவு மற்றும் பிரார்த்தனைகளின் உச்ச சிகரங்களில் இவர் சிறகடித்துத் திரிந்தார். சகலத்தையும் கொண்டுள்ள, அதி மேன்மை மிகுந்தவரை இறைஞ்சி, அம்மனிதர் கூறக்கூடியவற்றின்பால் செவிசாயுங்கள்: ‘நான் என் ஆண்டவரின் முன்னிலையில் நின்று, என் வார்த்தைகளை ஒப்புக்கொள்ளும் மனிதர்களுக்குறிய ஆசிகள் மற்றும் வழிகாட்டல்களுக்கான தோற்றுவாயாக நான் ஆகிட, அவரது வெகுமதிகளையும் கொடைகளையும்  வாழ்த்தியும், எவற்றைக் கொண்டு அவர் தம்மைத் தாமே போற்றிக்கொள்கிறாரோ அவற்றையே கொண்டு அவரைப் போற்றியும் வருகிறேன்.’

அவர் மேலும் கூறியது:’ஆண்டவரே! நீரே கடவுள். உம்மையன்றி வேறு கடவுள் இல்லை. நீரே படைப்பாளர். உம்மையன்றி வேறு படைப்பாளர் இல்லை. உமது கிருபையால் எனக்கு உதவிபுரிந்து என்னைப் பலப்படுத்துவீராக. என் இதயத்தைத் திகில் ஆட்கொண்டுள்ளது, என் கைகால்கள் நடுங்குகின்றன, நான் என் அறிவை இழந்துவிட்டேன், என் மனமும் என்னைக் கைவிட்டுவிட்டது. எனக்குச் சக்தி அருளி என் நா முன்மதியோடு உரையாற்றிட உதவிபுரிவீராக. அவர் இதனினும் மேலும் கூறுவது: மெய்யாகவே, நீரே அறிவாளி, விவேகி, ஆற்றல்மிக்கவர், தயாளு.’ இம்முன்மதி மிக்க மனிதரே படைப்பின் மர்மங்களைப் பற்றி அறியப்பெற்றும் ஹெர்மத்திய நூல்களில் கோவில்கொண்டுள்ள நுட்பமான விஷயங்களை உணர்ந்திடவும் செய்தவர்.

மேற்கொண்டு எதையும் யாம் குறிப்பிட விரும்பவில்லை, ஆனால், திருஆவி எமது உள்ளத்தில் பதித்துள்ளவற்றையே யாம் குறிப்பிடுவோம். மெய்யாகவே, அறிந்தவரும், வல்லமைமிக்கவரும், ஆபத்தில் உதவுபவரும், அதிசிறந்தவரும், முழுமையாகப் போற்றப்படுபவருமான இறைவன் அவரின்றி வேறிலர். எமது உயிரின் மீது ஆணை! ‘மெய்யாகவே, ஈடினையற்றவரும், எல்லாம்-அறிந்தருமான இறைவன் எம்மைத் தவிர வேறு எவரும் இல்லை,’ எனும் இவ்வலியுறுத்தலைத் தவிர இந்நாளில் விண்ணுலக விருட்சம் வேறு எதனையும் உலகத்திற்குப் பிரகடனப்படுத்திட விரும்பவில்லை.
உம்மீது யாம் கொண்டுள்ள அன்பின்றி, இதுவரை குறிப்பிடப்பட்டுள்ளவற்றிலிருந்து ஒருவார்த்தையைக்கூட யாம் உச்சரித்திருக்கமாட்டோம். இந்த ஸ்தானத்தின் மதிப்பை மதித்துணர்ந்தும், உமது கண்ணைப் போல் அதைப் பாதுகாத்தும், உண்மையாகவே நன்றிமிகுந்தவர்களுல் ஒருவராக நீர் இருப்பீராக.

மனிதர்கள் பெற்றுள்ள நூல்களை யாம் கற்றதில்லை என்பதையும், அவர்களிடையே நடைமுறையிலுள்ள கல்வியையும் யாம் பெற்றதில்லை என்பதையும், நீர் நன்கு அறிவீர்.  இருந்தும், கற்றோர் மற்றும் முன்மதிமிக்கோர் மொழிந்துள்ளவைகளை யாம் குறிப்பிட விரும்பியபோதெல்லாம், உலகில் இதுவரை தோன்றியுள்ள மற்றும் புனித நூல்களிலும் சாஸ்திரங்களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள யாவும் ஓர் ஏட்டுவில்லையின் உருவில், உமது பிரபுவின் முகத்திற்கெதிராகத் தோன்றும். இவ்விதமாகவே கண்கள் உணரக்கூடியவற்றை யாம் எழுத்தில் வடிக்கின்றோம். மெய்யாகவே அவரது அறிவு பூவுலகையும் விண்ணுலகங்களையும் சூழ்ந்துள்ளது.

இது இதுவரை இருந்துவந்துள்ளவை மற்றும் இனித்தோன்றப்போகின்றவை ஆகியவைக் குறித்த அறிவை அருவமானவரின் எழுதுகோல் வரைந்துள்ள ஒரு நிருபமே ஆகும். எமது அற்புத நாவினைத் தவிர வேறு எதுவுமே வியாக்கியனப்படுத்திட முடியாத ஓர் அறிவாகும் இது. மெய்யாகவே எமது இதயமானது உள்ளது உள்ளவாறு கற்றோரின் கருத்துக்களிலிருந்து தூய்மைப்படுத்தப்பட்டும் விவேகிகளின் உச்சரிப்புக்களிலிருந்து புனிதப்படுத்தப்பட்டும் உள்ளது. மெய்யாகவே, அது இறைவனின் வெளிப்படுத்துதல்களைத் தவிர வேறு எதனையும் பிரதிபலிப்பதில்லை. இத்தெளிவுமிகு நூலில் பேராற்றல் மிக்கவரின் நா இதற்கு சாட்சியம் அளிக்கின்றது.
உலகமக்களே கூறுங்கள்! முன்மதி குறித்துப்பேசுவது அதன் தோற்றுவாயிடமிருந்து உங்களை விலக்கிவைப்பதிலிருந்தோ, அல்லது அதன் உதயஸ்தானத்தை அடைவதிலிருந்து உங்களைத் தடுப்பதிலிருந்தோ கவனமாயிருங்கள். கல்வியாளரும், சர்வ-விவேகியுமானவரான உங்கள் ஆண்டவரின் மீது உங்கள் இதயங்களை நிலைப்படுத்துங்கள்.
ஒவ்வொரு நாட்டிற்கும் யாம் ஒரு பங்கினை விதித்துள்ளோம், ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு பாகத்தை ஒதுக்கியுள்ளோம், ஒவ்வொரு அதிகார அறிவிப்புக்கும் ஒரு விதிக்கப்பட்ட நேரத்தையும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தகுந்ததொரு விமர்சனத்தையும் வைத்துள்ளோம். கிரேக்க நாட்டைப் பாருங்கள். நெடுங்காலமாக அதனை முன்மதியின் இருப்பிடமாக்கியிருந்தோம். ஆனால், விதிக்கப்பட்ட நேரம் கூடியபோது, அதன் ஆட்சிபீடம் கவிழ்க்கப்பட்டும், அதன் நா உச்சரிப்பை நிறுத்திடவும் அதன் ஒளி மங்கிடவும் மற்றும் அதன் அறிவிப்புக்கொடி சாய்க்கப்படவும் செய்யப்பட்டது. இவ்விதமாகவே யாம் கொடுக்கவும் பின் அதை மீட்கவும் செய்வோம். மெய்யாகவே உமது ஆண்டவரே அளிப்பவரும் மீட்டுக்கொள்பவருமான, சக்திவாய்ந்த ஆற்றல்மிக்கவர்.
ஒவ்வொரு நிலத்திலும் யாம் அறிவொளிப்பிழம்பு ஒன்றை உருவாக்கியுள்ளோம் மற்றும் முன்நியமிக்கப்பட்ட நேரம் கைகூடும்போது, எல்லாம் அறிந்தவரும், சர்வ-ஞானியுமான இறைவனால் கட்டளையிடப்பட்டதுபோல் அது அதன் அடிவானத்திற்கு மேல் பேரொளியுடன் பிரகாசிக்கும். எமது திருவிருப்பத்திற்கு இனங்கியதாக இருப்பின், ஒவ்வொரு நிலத்திலும் இதுவரை தோன்றியவற்றையோ அல்லது கடந்துசென்றுள்ளவற்றையோ உமக்கு விவரிக்கும் முழு ஆற்றலை யாம் பெற்றுள்ளோம். மெய்யாகவே, உமது ஆண்டவரின் அறிவு விண்ணுலகங்களையும் மண்ணுலகையும் ஊடுருவியுள்ளது.
மேலும், தற்போதைய அறிவாற்றல்மிக்க மனிதர்கள் எவருமேஉருவாக்கமுடியாத பொருட்களை பண்டைய மக்கள் உருவாக்கியுள்ளனர் என்பதை அறிவீராக. கற்றோர்களில் ஒருவராக இருந்த முர்த்தூஸை உமக்காக யாம் நினைவுகூர்கிறோம். அறுபது மைல்கள் தூரத்திற்கு ஒலியை அனுப்பத்தக்க கருவி ஒன்றை அவர் உருவாக்கினார். அவருக்கடுத்து வேறு பலரும் இக்காலத்து மக்கள் கண்ணுறாத பல விஷயங்களைக் கண்டுபிடித்துள்ளனர். மெய்யாகவே உமது ஆண்டவர் தமது பங்குக்கு விவேகத்தின் சின்னமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் தாம் விரும்பியதை வெளிப்படுத்துகிறார். உண்மையாக அவரே அதிவுயரிய ஆணையாளர், சர்வ-விவேகி.
ஓர் உண்மையான தத்துவஞானி கடவுளையோ அல்லது அவரது அடையாளங்களையோ மறுக்கமாட்டார், மாறாக, அவர் அவரது மகிமையையும் அவரது தடுக்கவியலாத மாட்சிமையையும் ஏற்றுக்கொள்ளவே செய்வார். மெய்யாகவே மனுக்குலத்தின் உயர் நன்மைகளை உயர்த்திடுவதற்குரிய விஷயங்களை வெளிப்படச் செய்துள்ள அறிவாற்றல் பெற்ற மனிதர்களை யாம் நேசிக்கின்றோம், மற்றும், எமது கட்டளைக்குட்பட்ட ஆற்றலின் மூலம் யாம் அவர்களுக்கு உதவிகளும் புரிந்தோம், ஏனெனில் யாம் எமது நோக்கங்களை நன்கு நிறைவேற்றிட இயன்றவராக இருக்கின்றோம்.

எமது அன்பிற்குறியவர்களே, மனிதர்களுக்கிடையில் ‘வடிவமைப்பாளர்’ எனும் அவரது நாமத்தின் விளக்குனர்களாக இறைவன் கருணைகூர்ந்து தேர்ந்தெடுத்துள்ள எமது கற்றுணர்ந்த சேவகர்களின் மதிப்பினை இகழ்வுபடுத்துவதிலிருந்து கவனமாயிருங்கள்
இளையவரோ முதியவரோ, எல்லோருமே பயன்பெறக்கூடிய குறிப்பிட்ட கைத்திறமுறைகளையும் பணிகளையும் உருவாக்கிட முழுவதும் சார்ந்த உங்கள் பெறுமுயற்சிகளில் ஈடுபடுங்கள். ஒருவரது வீண் கற்பனைகளுக்குக் கால்வாய்களாகவும் எல்லா மனிதர்களின் ஆண்டவரான இறைவனை மறுதளிக்கவுமே முன்மதியானது உள்ளது என மனப்பூர்வமாக கற்பனை செய்யும் அறிவிலிகளை யாம் துறந்துவிட்டோம்; இன்று, அதே நேரத்தில், அவ்வித வற்புறுத்தல்களை உரைத்திடும் கவனமற்றவர்களை யாம் செவிமடுக்கின்றோம்.

கூறுங்கள்: இறைவன் தெளிவாக வரையறுத்துள்ளவற்றை ஏற்றுக்கொள்வதே முன்மதியின் ஆரம்பமாகவும் அதன் தோற்றுவாயாகவும் உள்ளது, ஏனெனில் அதன் ஆற்றலின் மூலமாகவே, மனுக்குலமுழுமையின் பாதுகாப்புக்கான கவசமாக உள்ள ஆட்சிநயத்திறத்தின் அஸ்திவாரம், உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இவ்வற்புத நிருபத்தில் எமது அதிவுயரிய எழுதுகோல் பிரகடனப்படுத்தியுள்ளதை நீர் உணர்ந்திடுவதற்காக சற்று சிந்தியுங்கள். கூறுங்கள், ஆலோசிப்பிற்காக நீர் எழுப்பியுள்ள அரசாங்கம் சம்பந்தமான ஒவ்வொரு விஷயமும் அவரது மகிமைமிகுந்ததும் அதிவுயர்ந்ததுமான உச்சரிப்பெனும் சுவர்க்கத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட வார்த்தைகள் ஒன்றின் நிழலின் கீழேயே அடங்கியுள்ளது. இவ்வாறாகவே, உமது உள்ளத்தை மகிழ்விக்கக்கூடியதும், உமது கண்களுக்கு ஆறுதல் வழங்கக்கூடியதும், மற்றும், எல்லா மக்களிடையேயும் அவரது சமயத்தை பரவச்செய்திட நீர் முன்னெழுவதற்கு உதவிடக்கூடியதுமான ஒன்றை யாம் உமக்கு எடுத்துரைத்துள்ளோம்.

என் நபிலே! எதுவுமே உம்மைத் துயருறச் செய்திட அனுமதியாதீர், மாறாக, யாம் உமது நாமத்தை உச்சரித்துள்ள காரணத்தினாலும், உம்மை நோக்கி எமது உள்ளத்தையும் முகத்தையும் திருப்பியுள்ள காரணத்தினாலும், இம்மறுக்கமுடியாததும் முக்கியமானதுமான விரிவுறையின் மூலமாக யாம் உம்மோடு உரையாடியுள்ள காரணத்தினாலும் நீர் எல்லையற்ற இன்பத்தால் மகிழ்வுறுவீராக. யாம் சுமக்க நேரிட்ட துயரங்களையும், யாம் அனுபவித்த சிறைவாசம் மற்றும் தடுப்புக்காவல் ஆகியவற்றையும், எம்மைத் தாக்கிய துன்பங்களையும், மக்கள் எம்மீது சாற்றிய குற்றச்சாட்டுக்களையும் நீர் உமது உள்ளத்தில் எண்ணிப்பார்ப்பீராக. மெய்யாகவே பெரும் துன்பமளிக்கக்கூடிய மறைதிரையினால் இவர்கள் மூடப்பட்டுள்ளதைக் காண்பீர்.

உரையாடல் இக்கட்டத்தை எய்தியதும், தெய்வீகப் புதிர்களின் விடியல் தோன்றியது, பேச்செனும் ஒளியும் மங்கியது. சர்வ-வல்லவரும், சகல போற்றதலுக்கும் உரியவரான அவரால் பணிக்கப்பட்டவாறு முன்மதிமிக்க மக்களின் மீது அவரது மகிமை சாரட்டுமாக.

கூறுங்கள்: எனது கடவுளாகிய ஆண்டவரே, உமது நாமம் மிகைப்படுத்தப்படுமாக! மனுக்குலத்திடையே தெய்வீக வெளியிடுகையெனும் சுவர்க்கங்கள் நகரத்தொடங்கியதும் முன்மதியெனும் ஒளியின் புகழொளி எதன்வழி பிரகாசத்துடன் ஒளிர்ந்திட்டதோ, அதன்வழி உமது தெய்வீக உறுதிப்பாடுகளைக் கொண்டு எனக்குக் கருணைகூர்ந்து உதவிடவும், உமது ஊழியர்களிடையே உமது நாமத்தை நான் மகிமைப்படுத்திட எனக்கு உதவிடவும் உமது நாமத்தின் பெயரால் நான் உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன்.

ஆண்டவரே! உம்மைத் தவிர  யாவற்றையும் துறந்தும் உமது பல்வகையான ஆசீகளெனும் அங்கியின் நுனியை இறுகப்பற்றிக்கொண்டும் நான் என் முகத்தை உம்மை நோக்கித் திருப்பியுள்ளேன். ஆகவே, மனிதர்களின் மனங்களை கவரக்கூடியவற்றையும், அவர்களின் ஆன்மாக்களையும் உணர்வுகளையும் களிப்புறச் செய்திடக்கூடியவற்றையும் நான் பிரகடனப்படுத்திட என் நாவைத் தளர்த்தி விடுவீராக. உமது படைப்பினங்களிடையே உள்ள கொடுங்கோலர்களின் ஏற்றத்தால் எனக்கு இடையூறு நேராமலோ, அல்லது, உமது இராஜ்ஜியத்தில் வாசம் செய்வோரிடையே உள்ள நம்பிக்கையற்றோர்களின் கடுந்தாக்குதல்களால் தடுக்கப்படாமலோ இருக்கும் வகையில் என்னை உமது சமயத்தில் வலுப்படச்செய்வீராக. உமது அறிவாற்றலெனும் ஒளி தணல்விட்டும், உமது அன்புக்கான ஏக்கம் நீடித்தும் இருக்கும் இதயங்களுடையோர் அதன் பிரகாசத்தால் வழிகாட்டப்படும் வன்னம் என்னை உமது நிலங்களினூடே ஒரு பிரகாசிக்கும் ஒளிவிளக்காக்குவீராக.

மெய்யாகவே, நீர் விரும்பியதைச் செய்வதற்கு நீர் வல்லமைபடைத்தவராகவும், படைப்பு இராஜ்ஜியத்தை உமது கைப்பிடியில் நீர் வைத்தும் உள்ளீர். சர்வ-வல்லவரும், சர்வ-விவேகியுமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.

-பஹாவுல்லாவின் நிருபங்கள்-