ஓநாயின் மைந்தனுக்கான பஹாவுல்லாவின் நிருபம்


ஓநாயின் மைந்தனுக்கான பஹாவுல்லாவின் நிருபம்

பஹாவுல்லாவின் அதிசிறப்பு வாய்ந்த நிருபங்களில் இதுவே இறுதியானதாகும். அவர் நம்மைவிட்டு பிரிவதற்கு முன்பு இறுதியாக எழுதியதும்; அதற்கு முன்பாக பாப் அவர்கள், “எல்லா துன்பங்களும் அத்துன்பத்தின் நிழல்களே”, என எழுதத் தூண்டிய சம்பவம் நடந்தேறியும் இருந்தது. பஹாவுல்லா நமக்காக வெளிப்படுத்திய நூறு நூல்களில் இதுவே இறுதி நூலாகும்.

இந்நூல் இஸ்பாஃஹான் நகரைச் சார்ந்த, ‘ஓனாயின் மைந்தன்’ என வழங்கப்பட்ட ஒரு மதகுருவிற்கு எழுதப்பட்டதாகும். இவருடைய தந்தை “ஒளிவீசும் இரட்டைத் தீபங்களான” உயிர்த்தியாகிகளுள் அரசர், உயிர்த்தியாகிகளுள் அன்புக்குகந்தவர் ஆகிய இருவருடைய மரணத்திற்கும் வழிவகுத்த வார்த்தகளை உச்சரித்தவராவார். இந்த இருவரும் இஸ்ஃபாஹான் நகரின் அருகே இரு மணல் சவக்குழிகளில் புதைக்கப்பட்டனர். (பல வருடங்களுக்குப் பிறகு கீத் ரேன்ஸம் கெஹ்லர் எனப்படும் அமெரிக்க பஹாய் அந்த இருவருக்கும் மலர்கள் வைத்தும், அங்கு மண்டியிட்டு கண்ணீர் வடிக்கவும் செய்தார்; பிறகு சில நாட்களில் அவரே நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார். நண்பர்கள் அவரை அதே மணல் புதைகுழிகளுக்குக் கொண்டு சென்று அந்த இருவருக்கும் அருகிலேயே புதைத்தனர்.)

ஆஃகா நஜஃபீ எனப்படும் இந்த மதகுரு மன்னிக்கமுடியாத அந்தப் பெரும் பாவத்தைப் புரிந்தவராவார்; அவர் (பஹாவுல்லாவின்) திருவொப்பந்தத்தை மீறியும், புனித ஆவியைப் பழிக்கவும் செய்தவராவார்; அதாவது, அவர் விளக்கை வெறுக்கவில்லை, அறியாமையினால், ஒரு தனி மனிதர் எனும் முறையில் இறை அவதாரத்தை அவர் வெறுக்கவில்ல, ஆனால் அவர் ஒளியையே வெறுத்தவராவார்; இறை அவதாரம் பிரதிபலிக்கும் நிறைவான இறைவனின் குணங்களை அவர் வெறுத்தார்; தீபத்தில் பிரகாசிக்கும் ஒளியையே அவர் வெறுத்தார் – ‘ஒளியின்பாலான இவ்வித வெறுப்புக்கு நிவாரணமே கிடயாது…’

ஆகவே, இந்த மதகுரு பாவிகளிலேயே நம்பிக்கைக்கே வழியில்லாத ஒரு பாவியாவார். அவருடைய தீய நோக்கங்கள், பல வழிகளில் வெளிப்பாடு கண்டன. அவற்றுள், இஸ்ஃபாஹானில், தியாகமரணமுற்ற மிர்ஸா அஷ்ரஃப்பின் (பஹாவுல்லாவின் பொறுக்கு மணிகள் நூலில் நாம் படித்த ஸஞ்சான் நகரில் தலை வெட்டுண்ட அந்த சிய்யிட் அஷ்ரஃப் அல்லர்) உடலை இவர் தமது சீடர்களுடன் சேர்ந்து காலால் உதைக்கவும், துவைக்கவும் செய்தார்.

இருந்தபோதிலும், பஹாவுல்லா இந்நிருபத்தை ஆகா நஜபீஃ ஒப்புவிக்க வேண்டிய ஒரு மன்னிப்பு பிரார்த்தனையின் வாயிலாகவே துவங்குகிறார். தம்மை அழிக்க முனைந்த தமது துரோககுணம் கொண்ட ஒன்றுவிட்ட தம்பியாகிய மிர்ஸா யாஹ்யாவுக்கு தமது அதி புனித நூலில் மன்னிப்பு வழங்கிட முன்வந்தது போலவே இந்த ஒப்பந்தமீறிக்கும் மன்னிப்பு வழங்க பஹாவுல்லா முன்வருகிறார். இது தாம் விரும்பியதைச் செய்பவரும், அவரது செயல்களுக்கு காரணம் ஏதும் கேட்க முடியாதவருமான இறைவனின் திருவிருப்பத்தின் தன்னிச்சையான இயக்கம் எனும் கோட்பாடாகிய, ‘படா’ எனப்படுவதன் வெளிப்பாடாகும். இது, எல்லாமே முன்விதித்தபடியே இயந்திர முறையில் இயங்குகிறது என நம்பும், அதாவது இவ்வளவு பாவங்கள் இவ்வளவு தண்டனையை பெற்றுத்தருகின்றன, இவ்வளவு நன்மைகள் இவ்வளவு பிரதிபலன்களைப் பெற்றுத் தருகின்றன என நம்பும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் எந்த அளவுக்கு தவறான நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதை நிரூபிக்கின்றது. இவர்களைப் பொருத்த வரையில் கடவுள் என்பவர், இரயில் வண்டிபோல் இயந்திரமென இயங்கும், வெறும் சக்தியே ஆவார். ஆனால், இவர்கள் தாங்களும் அதே போன்று வெறும் சக்திகளே என அழைக்கப்படுவதை விரும்பமாட்டார்கள். (பாரசீக பாயானில் பாப் அவர்கள் இந்த ‘படா’ கோட்பாட்டை உருவாக்குகிறார்).

உமது மன்னிப்பு எனும் உயிர்நீர்களை உமது அன்புக்கருணையெனும் கைகளிலிருந்து பெறுவதற்கு வெட்கப்பட்டு, உமது ஆதரவு எனும் வாயிலின் முன் இறந்தவனென கிடக்கும் இவனை, நீர் காண்கின்றீர்.

உம்மை முன்மொழிந்திட ஒவ்வொரு மதபீடத்தையும் ஒதுக்கிவைக்குமாறு நீர் விதித்துள்ளீர்… ஆனால், நானோ உமது திருவொப்பந்தத்தின் மீறலை அறிவிப்பதற்காக அவற்றின் மீது ஏறியுள்ளேன்…

ஆண்டவரே, என் ஆண்டவரே! மீண்டும், ஆண்டவரே என் ஆண்டவரே! மீண்டும் ஒரு முறை, ஆண்டவரே, என் ஆண்டவரே!

பிரார்த்தனை செய்யும்படி இந்த நிருபம் முழுவதும் அந்த மதகுரு பலமுறை அறிவுறுத்தப்படுகிறார்; ப‎ஹாவுல்லாவின் புத்திரர்களில் ஒருவரைப் போலவே இவரும் அழைக்கப்படுகிறார்; முன்னெழுந்து சமயத்திற்குச் சேவை செய்திடுமாறு; நம்பிக்கை பெறுமாறு, சேவை செய்திடுமாறு, நம்பிக்கை வைக்குமாறு கூறப்படுகிறார்; பஹாவுல்லாவின் முன்னிலையை அடையுமாறு (பஹாவுல்லாவை அவர் அதுவரை பார்த்ததே கிடையாது); ‘தான் எனும் சேற்றிலிருந்து’ மனிதர்களைக் காப்பாற்றுமாறு; அவர் அழைக்கப்படுகிறார்; அதன் வாயிலாக, உமக்கு முன்னால் இராஜ்யத்தின் கதவுகள் அகலத் திறந்திட… அதிபெரும் சமுத்திரத்தை தேடுமாறு… அவர் அறிவுறுத்தப்படுகிறார். ஓ ஷேய்க்! உமது கண் அதன் வாயிலாக களிப்படைந்திட… விண்ணுலகக் குயிலின் கீதங்களை நீர் செவியுறுமாறு யாம் உமக்கு ஆற்றலளித்துள்ளோம்… என கூறுகின்றார்.

டாக்டர் அலி-குலி ஃகான் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளது போல, ப‎ஹாவுல்லா ஆஃகா நஜாஃபியைப் பல்வேறு தலைப்புக்களால் அழைப்பதானது இக்கடிதம் அவரை மட்டும் குறிக்காமல் பரந்த அளவிலான ஒரு தரப்பினரையே குறிவைக்கின்றது எனலாம். இது ‘மனுக்குலத்திற்குச் சமயத்தை வழங்குதலாகும்’; மனிதனின் பல குணவியல்புகள் தனிப்படுத்தப்பட்டும், அவை விமர்சிக்கவும் படுகின்றன. இத்தலைப்புக்களுள், ‘ஓ ஷேய்க்’; ‘சிறப்புறும் சமயகுருவே’; ‘வழிதவறியோனே’! ‘இறைவனிடமிருந்து அப்பால் திரும்பியோனே!’ ஆகியவையும் உள்ளடங்கும். பல தருணங்களில், வேறு பலவும் குறிப்புடன் உபயோகிக்கப்படுகின்றன: ‘பஹாவின் மக்களே’; ‘ ஓ ஹாடீ’, போன்றவை உதாரணங்களாகும். மனிதனின் பல குணவியல்புகள் தனிப்படுத்தப்பட்டும், அவை விமர்சிக்கவும் படுகின்றன. இங்கு ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் தங்களுடைய ஆண்டவரிடமிருந்து அவர்களைப் பிரிக்கும் – ‘லைசிடாஸின் குருட்டு வாய்களான’, தீய மதகுருக்கள் மட்டுமல்ல, ஆனால், அதி புனித நூலின் ‘பஹாவின் உலமாக்களை’ நினைவுகூறும், தேசங்களுக்கு கண்கள் போன்ற நல்ல மதகுருக்களையும் நாம் காணலாம். இங்கு அரசன், பண்டிதன், சாதாரண நம்பிக்கையாளன், தெய்வீகமானன், பாவி ஆகியோரையும் நாம் காணலாம்.

ஆகவே, இக்கடிதம் ஒரு தனிமனிதனுக்கு வரையப்பட்ட ஒரு நிருபத்திற்கும் மேலான ஒன்றை உள்ளடக்கிய நிருபமாகும். இது சமயத்தைப் பற்றிய ஒரு பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த அளிப்புமுறையாகும். பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி நமக்குக் கூறுவது போல், இப்படைப்பில், ‘பஹாவுல்லா தமது எழுத்துக்களுள் சிறப்புப் பண்புகளுடையவையும், புகழ்வாய்ந்தவையுமானவற்றை’ மேற்கோளிடுகின்றார் மற்றும் தமது சமயத்தின் வாய்மை குறித்த நிரூபணங்களை எடுத்துக்காட்டுகின்றார்.’

பெரும்பாலான நூல்கள் அவற்றின் எழுத்தாளரின் அருகாமைக்கு நமக்கு வழிகாட்டுகின்றன. ஆனால், பஹாவுல்லாவின் படைப்புக்களை நாம் படிக்கும் போது, அவர் நமது புலப்பாட்டுக்கும் அப்பால் நழுவியே செல்கின்றார். ‘பஹாவுல்லாவின் சமயகாலகட்டம்’ எனும் நூலில் பாதுகாவலர் நமக்குக் கூறியுள்ளது போல், ‘அனுகுவதற்கும் அப்பால் அவர் மகிமைமிகுந்து’ நிற்கின்றார்.

கீத் என்பவர், ‘எல்லா சிகரங்களின் உச்சியிலும் ஓய்வுள்ளது’ என கூறுகின்றார். நான் இந்த நூலை மூன்று முறை படித்துள்ளேன் மற்றும் நீண்ட காலங்கள் அதை ஆய்வு செய்தும் உள்ளேன்; ஆனால், எனக்கென்னவோ எல்லா சிகரங்களின் உச்சிக்கும் உயரே மேலும் ஒரு சிகரத்தின் உச்சி உள்ளதாகவே தென்படுகின்றது.

கிட்டத்தட்ட முடியாததென உணர்ந்நிருந்தாலும், இதை ஒரே மூச்சில் படித்து முடித்திடவே விரும்புவீர்கள். அது துரிதமாகவே வரும், மற்றும் பாதுகாவலரின் ஆங்கில மொழிபெயர்ப்பு, அப்பழுக்கில்லாமல் உள்ளது. இதை மேலும் மேலும் அள்ளிப்பருகிடவே விரும்புவீர்கள். நிதானித்து இதைப் பற்றியோ அதைப்பற்றியோ சிந்திக்கத் தோன்றாது. நீங்கள் துரிதமாகப் படித்தும், மீண்டும் கவனிக்கவேண்டும் என நினைக்கும் பகுதிகளை நீங்கள் குறிக்கும் போது, பின்வரும் வாக்கியங்கள் போன்றவற்றை நீங்கள் காணக்கூடும்:

என்னை நேசிப்பவனுக்கே நான் உரிமையாவேன்.

… மற்றவர்கள், சில வேளைகளில் பசியெனும் தெய்வீக உணவைக்கொண்டு தங்களுக்கு உணவூட்டிக்கொண்டனர்.

முழுமையாக இல்லாவிட்டாலும், பெரும்பாலுமாக, பயன்படுத்தப்படுகையில், பயத்தை போக்கவல்ல ஓர் அறிவு இறைவனின் அறிவெனும் பொக்கிஷங்களில் மறைக்கப்பட்டு கிடக்கின்றது.

(இறைவனின் அவதாரத்தை) கண்டுகொண்ட பிறகே மனிதனின் செயல்கள் ஏற்கத்தக்கவைகளாகின்றன.

எமது வெளிப்பாட்டை ஒப்புக்கொண்டு, எமது அறிவெனும் சமுத்திரத்திலிருந்து பருகி, எமது அன்பெனும் காற்றுமண்டலத்தில் வானளாவப் பறப்பவன் உண்மையாகவே அறிவு பெற்றவன் ஆவான்…

நீதியுடைய ஓர் அரசன் மற்ற எவரைக்காட்டிலும் இறைவனிடம் அதிகமான அனுக்கத்தை அனுபவிப்பவனாவான்.

உறுதியாகவே, தூய தங்கத்திலான நகரங்களை அடைந்தாலும் அவற்றைக் கருதாதமலும், பெரும் அழகும், மிகுந்த வனப்பும் வாய்ந்த பெண்களைச் சந்தித்த போதிலும் அவர்களிடமிருந்து அப்பால் திரும்பும் இவர்களே, மனிதர்கள் ஆவர்.

இந்நூல் வருங்காலத்தில் நுண்ணிய ஆய்வை மேற்கொள்ள தூண்டும் வரலாற்று விஷயங்களை வழங்குகிறது. உதாரணமாக, மாஸ்டர் அவர்களின் திருமணத்தைப் பற்றியும்; நியாவரானில் பஹாவுல்லாவின் கைது பற்றியும், எம்மாதிரி சங்கிலிகள் கொண்டு அவர் பிணைக்கப்பட்டார் என்பது பற்றியும்; கான்ஸ்டான்டிநோப்பிலில் உள்ள பாரசீக அதிகாரிகள் அவருக்கு எதிராக மேற்கொண்ட சதிகளைப் பற்றியும், அங்கு ஹாஜி-ஷேய்க்-முகம்மது-அலி தற்கொலை செய்து கொண்டது பற்றியும்; மிர்ஸா யாஹ்யா பாரசீகத்தை விட்டு தம்மைப் போல் நாடுகடத்தப்பட வில்லை என்பது பற்றியும்; மிர்ஸா யாஹ்யா பாக்தாத்திலேயே பாப் அவர்களின் எழுத்துக்களை கைவிட்டு விட்டது பற்றியும்; ஹாடி டௌலத் அபாடி பாயானின் பிரதிகள் யாவற்றையும் அழிக்க முனைந்தது பற்றியும்; அஸாலிகள்(மிர்ஸா யாஹ்யாவைப் பின்பற்றியவர்கள்) சிய்யிட்- ஜவாட்-இ-கர்பிலாயி அவர்களைத் தங்களில் ஒருவர் என உரிமை கொண்டாடி, மிர்ஸா யாஹ்யாவின் படத்திற்குக் கீழ் அவரது படத்தை ஒட்டி வைத்தது பற்றியும்; பஹாவுல்லா பாயான் திருநூலைப் படித்ததே இல்லை என்பது பற்றியும்; 1863ல் (இத்தேதி ‘இறைவன் கடந்து செல்கிறார்‘ நூலில் கொடுக்கப்பட்டுள்ளது) கமால் பாஷா எனும் துருக்கிய அதிகாரியிடம், அவருடைய அரசாங்கம் உலக மொழி மற்றும் எழுத்து குறித்து திட்டமிட ஒரு கூட்டத்தை கூட்ட ஆலோசனை வழங்கியது பற்றியும் (இதன் தொடர்பில், ‘வொலாபூக்‘ எனும் செயற்கை மொழி 1879ல் கொன்ஸ்டன்ஸ், பேடனைச் சார்ந்த ஜொஹான் மார்ட்டின் ஷ்லேயரால் புணையப்பட்டது; 1887ல் டாக்டர் லுடோவிச் லாஸாரஸ் ஸாமென்ஹொஃப்பினால் முதன் முதலில் எஸ்பராண்டோ மொழி எழுத்துபூர்வமாக விவாதிக்கவும் பட்டது.)

அது நமக்கு ஒரு நன்நெறிமுறையை வழங்குகிறது. அதன் உதாரணங்கள் பின்வருமாறு:

இறைவனின் பாதையில் உன்னை யாரேனும் திட்டினாலோ, உன்னைத் தொல்லைகள் அனுகினாலோ, பொறுமையுடன் இருந்து, செவிமடுப்பவரும், பார்த்துக்கொண்டிருப்பவருமாகிய அவரில் உனது நம்பிக்கையை வைப்பாயாக. உண்மையாகவே, அவரே, பார்த்தும், உணர்ந்தும், தமது அரசாட்சியின் வாயிலாக தாம் விரும்பியதைச் செய்தும் வருபவர்.

கோடை வெய்யிலைக்காட்டிலும் விவேகம் எனும் வாள் கடுவெப்பமுடையதாகும்… அவரது அருளால் உனக்கு வழங்கப்பட்டவைகளை ஏழைகளுக்குக் கொடுக்க மறுத்துவிடாதே. உறுதியாகவே, கண்டிப்பாக, அவர் நீ பெற்றிருப்பதை விட இருமடங்கு அதிகமாக அளிப்பார்.

வேறொருவர் இழைத்த பாவத்தைப் பற்றி நீ அறியவரும்போது, அதை மறைத்திடுவாயாக அதனால் உன் பாவத்தை இறைவன் மறைத்திடக்கூடும்.

துன்பங்களின் போது நன்றியுடையவனாக இருப்பாயாக… உனது தீர்ப்பில் நியாத்துடனும், உனது பேச்சில் எச்சரிக்கையுடனும் இருப்பாயாக… துயரமுற்றோருக்கு ஒரு புகலிடமாகவும், ஒடுக்கப்பட்டவனுக்கு உருதுணையாகவும், அவனைக் காப்பவனாகவும்… அறிமுகமற்றவருக்கு ஓர் இருப்பிடமாகவும்… இருப்பாயாக…

இறைவன் மீதான பயம் தொடர்ந்தாற் போல் வலியுறுத்தப்படுகிறது:

இறைவனின் சேவகர்களும், சேவகிகளும் தூய்மையுடன் இருந்தும், இறைபயம் உடையவர்களாக இருந்திடுமாறும் யாம் அவர்களுக்கு கட்டளையிடுகின்றோம்… இறைபயம் என்றுமே… பாதுகாப்பான அரணாக.. இருந்துள்ளது… அவர்களுடைய (பஹாய்கள்) இதயங்கள் இறைபயம் எனும் ஒளியினைக்கொண்டு ஒளிபெறச் செய்யப்படுகின்றன…

திருக்குரான் நூலில் இதே போன்று இறைபயம் எவ்வாறு குறிப்பிடத்தக்க வகையில் போற்றப்படுகிறது என்பதை அந்நூலின் மாணவர்கள் ஞாபகத்திற்குக் கொண்டுவருவர்:

‘தம்மிடம் பயம் கொள்வோரை இறைவன் நேசிக்கின்றார்,‘ மற்றும் ‘எவர் இறைவனிடம் பயம் கொள்கின்றாரோ அவருடைய பாவச்செயல்களை அவர் அழித்துவிடுகிறார்…

இவ்விதமான பல கட்டளைகளுக்கிடையே பஹாவுல்லா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ‘அரசர்களுடைய நிலைக்கான மதிப்பு தெய்வீகமாக விதிக்கப்பட்டதாகும்…‘ மற்றும் ‘சீசருக்கு வழங்கவேண்டியதை‘ எனும் வார்த்தைகளுக்கு கிருஸ்துவ உலகத்தில் வழக்கில் இருந்து வரும் அர்த்தத்திற்கு மிகவும் மாறுபட்ட வகையில் பொருளுரைக்கின்றார். ‘சீசர்(ஒரு மிகவும் பிரபலமான ரோமானிய பேரரசன்) என்பது இறைவன் எனும் கருத்துக்கு எதிர்கோடி கருத்தாக பொருளுரைக்கின்றனர். தற்போது நிலவும் இக்கருத்து அரசபதவி குறித்த பஹாய் போதனைகளுக்கு மாறுபட்டதாகும்.

இப்படைப்பில், பன்முறை எழுப்பட்டுள்ள ஒரு கேள்விக்குப் பஹாவுல்லா பதிலுரைக்கின்றார்: எதற்காக ஒரு புதிய சமயம்? அவர், முஸ்லிம்களை குறிப்பிட்டு, அப்படி அவர்களுக்கு பழமையே போதுமானதாக இருப்பின், பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுக்குப் பதிலாக அவர்கள் ஏன் திருக்குரானை ஏற்றுக்கொள்ள வேண்டும்? அப்படி அவருடைய குற்றம் ஒரு புதிய சமயத்தை தருவித்ததாக இருக்குமாயின், தமக்கு முன்பாக அதே குற்றத்தை முகம்மது அவர்களும் புரிந்துள்ளார், மற்றும் அதற்கும் முன்பாக மோஸசும் புரிந்துள்ளார். அவர் மேலும் கூறுவது:

அப்படி, இறைவனின் வார்த்தையை உயர்த்தியதும், அவரது சமயத்தை வெளிப்படுத்தியதுமே எனது குற்றமாக இருப்பின், பாவம் புரிந்தவர்களில் யானே பெரும் பாவியாவேன்! மண்ணுலகு மற்றும் விண்ணுலகங்களின் அரசாட்சிகளுக்காகக்கூட இவ்விதமான ஒரு ‘பாவகாரியத்தை‘ பண்டமாற்று செய்ய மாட்டேன்.

(இன்றைய அனைத்துலக ரீதியான ஈனநிலையை மறந்து இதே கேள்வியைப் பொதுமக்கள் கேட்பது விந்தையிலும் விந்தை; நாட்டில் பிராயணம் செய்யும் போது காணப்படக்கூடிய இரும்பு வாசல்களுக்குப் பின்னால் கற்கட்டிடங்களில் குழுமியும் தனிமையில் வாடியும் நிற்கும் இதயங்கள், தங்களைப்போலவே உள்ள மற்ற மனிதர்களை அடிமைகளாகப் பயன்படுத்தும் மனிதர்கள்; காலைவேளைகளில் பெரிய நகரங்களின் சாலையோர நடைபாதைகளையும், அதன் சாக்கடைகளில் கிடக்கும் குப்பைகளையும் பார்த்தாலே போதும். மருத்துவர்களின் நோய்க்குறிப்பேட்டையோ, தினசரிகளையோ பார்க்க வேண்டியதில்லை, நெறிமுறைகளின் சீர்கேடு நன்றாகவே தெரியும். (பலர் கூறிக்கொள்வது போல, நீங்களும் “நல்ல மக்களில்‘ ஒருவராக இருப்பின், அளவுக்கதிகமாக மதுவருந்தாத ஒருவராக இருப்பின், எவருக்கும் தீங்கு விளைவிக்காத ஒருவராக இருப்பின், ஆதலால், கீழ்ப்படிவதற்கு கடவுள் என ஒன்று தேவையில்லாமல் இருப்பின் – அல்லது தாங்களே தேர்ந்தெடுத்துக்கொண்ட விளைவுகளற்ற இஷ்டதெய்வம் ஒன்றையே தேவையாக கொண்டும், தாங்கள் விரும்பும் போது மட்டும் அதன் விதிமுறைகள் சிலவற்றை பின்பற்றியும், வாரம் ஒரு முறை, கேட்கின்றார்களோ இல்லையோ, அதன் செயற்கையான முழக்கங்கள் – அவர்களை ஒருபோதும் முட்டாளாக்கியதும் இல்லை எனும்போது, நீங்கள் பயனற்றவர், சமூகத்தில் நீங்கள் ஒரு பயன்விளைவையும் ஏற்படுத்தப்போவதில்லை; சாலையோரங்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் மனித உடல்களே உங்கள் மதுக்கிண்ணங்கள், தினசரிகளில் நீங்கள் படிக்கக்கூடிய மரணங்களே நீங்கள் பறைசாற்றும் உங்களுடைய நல்லெண்ணங்கள், மற்றும் பயனற்ற பல ஆண்களும் பெண்களும் அனுபவிக்கும் தேவையற்ற சித்திரவதைகளே உங்கள் பாலியல் செயற்கைப்பண்பாடும் ஆகும்.)

மேற்கு நாடுகளில் உள்ள பஹாய்கள் பாப் அவர்களைப் பற்றி இப்போது படிப்படியாக மேலும் அதிகமாக தெரிந்துகொண்டு வருகின்றனர்; “உதயத்தை வென்றவர்கள்”, “பஹாவுல்லாவின் சமயகாலகட்டம்”, மற்றும் இங்கு கற்கப்படும் விஷயம், ஆகியவற்றின் வாயிலாக அவர்கள் அவரோடும், பஹாவுல்லாவுக்கான பாப் அவர்களின் அன்புடனும், அவரது வாழ்க்கையோடும் அனுக்கமாகியுள்ளனர். அவர் உச்சரித்தவைகளுள், தமது நம்பிக்கையாளர்களுக்கு அவர் விடுத்த குறிப்பிடத்தக்க வேண்டுகோள் ஒன்று உள்ளது. அதாவது, அவருக்குப் பின் ஒரு வேஷதாரியே தோன்றினாலும், அவர்கள் அம்மனிதனை எதிர்க்கவோ, அவனுக்கு துக்கம் ஏற்படுத்தவோ செய்யக்கூடாது. சிறிது காலத்திற்குள், சுமார் இருபத்தைந்து பேர்கள், இவர்களில் பெரும்பாலோர் பின்னாட்களில் பஹாவுல்லாவிடம் மன்னிப்பை வேண்டினர், இறைவன் வெளிப்படுத்தவிருப்பவர் தாங்களே என பிரகடணப்படுத்தினர். உண்மையான அவதாரத்தின் பாதுகாப்பை விரும்பியே பாப் அவர்கள் இவ்வாறு கூறினார். அவரே அவருடைய உண்மையான நிரூபணமாகும்:‘… ஒருவர் அவர் மூலமாக அல்லாது வேறு எவர் மூலமாகத்தான் அவரை அறிந்துகொள்வது? பாப் அவர்களின் மனத்தளர்வெனும் மூச்சு இங்கு வெளிப்படுகிறது, மற்றும் அவர் மொழிந்த சுந்தர வார்த்தைகளாக, ‘உறுதியாகவே, இறைவன் வெளிப்படுத்தவிருப்பவராகிய அவருடைய விரலில் உள்ள ஒரு மோதிரமே நான்…‘ என்பவை உள்ளன. பாப் அவர்களின் முன்தோன்றலை யோவான் அவர்களின் முன்தோன்றலோடு பஹாவுல்லா தொடர்புபடுத்துகிறார், மற்றும் யோவான் அவர்களின் தோழர்களும் அதே போன்றே ஆவியாகியவரை (இயேசுவை) கண்டுகொள்வதிலிருந்து தடுக்கப்பட்டனர் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார்.

பண்ணிரண்டாவது இமாமின் மறுவருகையானவரின் (பாப்) அன்மைக்கு மட்டும் நாம் கொண்டுவரப்படவில்லை, மாறாக, எல்லா இமாம்களின் அன்மைக்கும் நாம் கொண்டுவரப்பட்டுள்ளோம். ஏனெனில், பாதுகாவலர் அவர்களும் இமாம் போன்றவராதலால், நமது சமயத்தின் பாதுகாவலர் ஸ்தாபனத்தின் அன்மைக்கு நாம் கொண்டுவரப்பட்டதன் வாயிலாக எல்லா இமாம்களின் அன்மைக்கும் நாம் கொண்டுவரப்பட்டுள்ளோம். ‘ஃகாயிம்‘ அவர்களின் ‘பனியின் வெண்மை‘ மிக்க கரங்கள் எனும் குறிப்பு திருக்குரானில் உள்ள மோசஸ் அவர்களின் சின்னத்தைக் குறிப்பிடுகின்றது. ‘வரி‘ என்பது, உண்ணா நோன்பு மற்றும் புனித யாத்திரை போன்ற சமயம் சார்ந்த கடமையாகிய சமயவரியைக் குறிப்பிடுகின்றது. ‘“யாமே வழியாவோம்… யாமே ‘வரியும்‘ ஆவோம், மற்றும் யாமே உண்ணா நோன்பாவோம், புனித யாத்திரையும் ஆவோம், மற்றும் புனித மாதமும் ஆவோம், புனித நகரமும் ஆவோம்… ” என இமாம் ஜாஃப்பார்-இ-சாதிக் கூறுகிறார். இமாம்களின் ஸ்தாபனம் குறித்து திரு இ.ஜி. பிரௌன் அவர்களின் சுருக்கவுரை மிகவும் இன்றியமையாததாக உள்ளது: ‘இமாமிய கண்ணோட்டத்தின்படி… உதவி-ஆட்சிக்காவலர் ஸ்தாபனம் என்பது (இமாம்கள், பாதுகாவலர் ஸ்தாபனம் போன்றவை) முற்றிலும் ஆன்மீகமயமான ஒரு விஷயமாகும்; முற்றிலும் இறைவனால் வழங்கப்படுகிறது, முதலில் அவருடைய அவதாரத்தின் வாயிலாகவும், பிறகு அவதாரத்தைத் தொடர்ந்து வருவோராலும் இது வழங்கப்படுகிறது… இறைத்தூதரின் தெய்வீகமாக நியமிக்கப்பட்ட வாரிசாக ஷியாக்களின் இமாம் உள்ளார். இவர் எல்லா நிறைவுகளையும், ஆன்மீக வெகுமதிகளையும் பெற்றவர், எல்லா மெய்யன்பர்களாலும் கீழ்ப்படியப்பட வேண்டியவர், இவரது தீர்மானம் இறுதியும், முடிவானதுமாகும், இவரது விவேகம் மனித சக்திக்கு மீறியதாகும், இவரது வார்த்தைகள் அதிகாரப்பூர்வமானவை.

இந்த நூலில், காட்சிகள் விரைவாகக் கடந்து செல்கின்றன. முதலில் இருட்டு நிலவறை, பிறகு கனவு, மற்றும் வாக்குறுதி ஆகியவை:

உறுதியாகவே, உம்மாலும் உமது எழுத்தாணியினாலும் உம்மை யாம் வெற்றி பெறச் செய்வோம்… உமக்கு உதவும் மனிதர்களாகிய — பூமியின் பொக்கிஷங்களை இறைவன் விரைவில் எழச்செய்வார்…

பள்ளிவாசலில் ஹாஜி ஷேய்க் முகம்மது-அலியின் பரபரப்பான தற்கொலையைக் காண்கின்றோம். பிறகு, இறைவனுக்கு மகிழ்வூட்டும் வெண்மையைக் கொண்ட, கடல்கரையோரத்தில் வீற்றிருக்கும் அந்த நகரமும் உண்டு… உணர்வு வேறுபாடு அடைகிறது, விருவிருப்பு மாறுபாடு காண்கிறது. ஆன்மீக நிலையென இந்தத் துரிதக் கேள்விகளையும், பதில்களையும் இசை வடிவாக நீங்கள் செவிமடுக்கலாம்.

நேரம் கணிந்துவிட்டதா? இல்லை, அதனினும் மேலாக; அது கடந்தே சென்றுவிட்டது… மனிதர்கள் வீழ்த்தப்பட்டிருப்பதை நீர் காண்கின்றீரா? ஆம், எமது ஆண்டவரின் மீது ஆணையாக… நீர் பார்வையிழந்தவராவீர்… சுவர்க்கம் மர்ம மலர்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளது… நரகம் கொழுந்துவிட்டு எரியச் செய்யப்பட்டுள்ளது.

மதபீடங்களின் முனகல்களின் சிந்தனையைத் தூண்டும் வரிகள்:

உனது ஆண்டவரின் அடையாளங்களின் பகலூற்றாகிய, “த” எனும் நிலத்தில்(தெஹரான்) யாம் நடந்துகொண்டிருந்தோம் — அவ்வேளை, மதபீடங்களின் புலம்பல்களையும், இறைவன்பாலான அவற்றின் இறைஞ்சல்களையும் — அவர் புனிதமும், மகிமையும் பெறுபவராக இருப்பாராக — யாம் செவிமடுத்தோம். அவை ஓலமிட்டு… அந்தோ, அந்தோ!… உம்மால் நாங்கள் படைக்கப்பட்டும், வெளிப்படுத்தப்படாமலும் இருந்திருக்கக்கூடுமானால்!

பஹாவுல்லா அவர்களால் இதற்கு முன் குறிப்பிடப்பட்ட, குரானிய வாசகம் நமது ஞாபகத்துக்கு வருகின்றது: ‘இறைவா, எங்களுக்கும் குரல் அளிப்பவரே…‘ பிறகு, ‘பெண்-அரவத்திற்கான‘ பூமியையே அதிரவைக்கும் முன்னிலையணிவிப்பு:

பெண்-அரவமே, நடுநிலையோடு நியாயம் காண்பாயாக! எக்குற்றத்திற்காக இறைவனின் திருத்தூதரின் குழந்தைகளை நீ தீண்டினாய்…?

இது, முகம்மது அவர்களின் வழித்தோன்றல்களாகிய, ‘இரட்டை ஒளிவிடும் தீபங்களின்‘ (இஸ்ஃபாஹான் நகரில் பஹாவுல்லாவின் நம்பிக்கையாளர்கள் இருவர்) தியாகமரணத்தைக் குறிக்கின்றது; இதற்கு கருத்துக்கள் கூற நாம் மைக்கலேஞ்சலோ அல்லது மில்டனைத்தான் (மேற்கத்திய கவிஞர்கள்) நாடவேண்டும்.

ஏதாவது ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனும் நிலையில் இருப்பவர்கள், எந்த நூலை தங்களுடைய நூலகங்களுக்காக தேர்ந்தெடுப்பது என கேட்பார்கள். இந்த நூலை என் நூலகத்தில் நான் சேர்த்ததற்கான காரணம்: அதன் வாசகங்களின் சௌந்தர்யம், மொழிபெயர்ப்பு மற்றும் வாசகவடிவமைப்பு; அதன் சுருக்கம்; புலமைக் கண்ணோட்டத்தில் அதன் செழுமை — ஆய்வுக்கு அஃது அளிக்கக்கூடிய விஷயங்கள்; அதன் விசாலத்தன்மை — ஏனெனில், இது ஒரு தன்னிச்சையான படைப்பாற்றல்மிக்க காரியமாகவும், தனது சொந்த வடிவ ஐக்கியத்தைக் கொண்டும், அதற்கென தனிப்பட்ட உணர்வைக்கொண்டும் இருந்தபோதிலும் — இது கிட்டத்தட்ட ஒரு பாமாலையாகவும், பஹாவுல்லா அவர்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றாகவும் உள்ளது.

ஆம், இது அவரது முன்னிலையை அடைய நமக்கு உதவுகிறத; ‘உலகம் ஒதுக்கித் தள்ளிய மற்றும் தேசங்கள் கைவிடவும் செய்த அவரிடம் நம்மைக் கொண்டு சேர்க்கின்றது…‘

ஆஃகா நஜப்ஃபீ எங்கே இப்போது? தனது பிரமாண்டமான வட்டத் தலைப்பாகயுடனும், தனது சுருண்ட காலனியுடனும் அவர் இப்போது எங்கே போய்விட்டார்? பஹாவுல்லா இவரது தோழரை அழைத்தது போல், இவர், மலை உச்சியில் காணப்படும் இறுதிச் சொட்டு ஒளி‘ ஆவார் அவர் தனது வெறுப்பையெல்லாம் எங்குதான் கொண்டு சென்றுள்ளார்? எப்படியான போதிலும், இது பஹாவுல்லாவிடமிருந்து நமக்குக் கிடைத்த இறுதியான லௌகீக பரிசாகிய இந்த நூலின் விசேஷ காலமாகும்; அவருடைய எதிரிகள் அவருக்கு விஷமளித்தனர், ஆனால், அவர் அதை தமது அன்பர்களுக்கு அமுதமாக மாற்றிவிட்டார்.

அமெரிக்காவில் மிர்ஸா அபுல்-பஃடல்


அமெரிக்காவில் மிர்ஸா அபுல்-பஃடல்

தமது தந்தையிடம் சேகரித்த விஷயங்களின் அடிப்படையில் மார்ஸியே கேய்ல் அவர்களால் எழுதப்பெற்ற கட்டுரை.

மாலை வேளைகளில் நியு யார்க் நகரின் மேற்புறமாக உள்ள அந்த பழைய இடுகாட்டில் அவரும் நானும் நடப்போம். கல்லரைகள் எங்களைச் சூழ்ந்திருக்க, மரங்களின் கீழ் மேலும் கீழுமாக நடந்த வன்னம் இருப்போம். மறுமை வாழ்வைப் பற்றி நான் அவரிடம் வினவுவேன், அவர் அதற்கு பதிலளிக்க மாட்டார். ஒரு நாள் நான் பொறுமை இழந்து அவரிடம் கேட்டே விட்டேன்:

‘மாஸ்டர் அவர்கள், நான் உங்களோடு இருக்கும் போது பல விஷயங்களை கற்க முடியும் என்றார், ஆனால் நான் எதையுமே கற்க முடியவில்லை… நான் மறுபடியும் உங்களை கேட்கின்றேன்: இவ்வுலகில் நாம் நமது பௌதீக உடலால் அறியப்படுகிறோம்; மறுமை உலகில் நாம் எவ்வாறு அறியப்படுவோம்? மாஸ்டர் அவர்கள் நீங்கள் இதைப்பற்றி எனக்கு விளக்கம் சொல்வீர்கள் எனக் கூறியுள்ளார்.’

அதற்கு அவர்: நீர் என்னை வற்புறுத்துகின்றீர், நான் பதிலளித்தே ஆகவேண்டும். ஆனால் நான் அளிக்கும் பதிலினால் நீர் சந்தோஷப்படப்போவதில்லை.’

‘ஏன்’

‘ஏனென்றால், இறப்பிற்குப் பின் வரும் வாழ்க்கையை நீர் புறிந்துகொள்ள இயலாது.’

‘ஆனால் நான் ஷொப்பன்ஹோவர் மற்றும் காண்ட் ஆகியோரின் எழுத்துக்களை புறிந்துகொள்ள முடிகிறதே. கிரேக்கர்களை என்னால் புறிந்துகொள்ள முடிகிறது. இதை மட்டும் என்னால் புறிந்துகொள்ள முடியாது என ஏன் கூறுகிறீர்கள்?’
அதற்கு அவர்: நீர் இது குறிந்து கேள்வி கேட்கின்றீர் என்பதே இதை நீர் புறிந்து கொள்ளமுடியாதவர் என்பதற்கு ஆதாரம்,’ என்றார்.

அதன் பின், படைப்பினங்கள் வாழும் தளங்கள் ஒவ்வொன்றிற்கும் அந்தந்த தளத்தை வர்ணிக்க பாஷை ஒன்று தேவைப்படுகிறது, என என்னிடம் கூறினார். பூவுலகில், இங்கிருப்பதை விட உயர்ந்த நிலையில் வாழும் ஆன்மாவின் வாழ்வைப் பற்றி விளக்கங்கள் அளிக்கக்கூடிய பரிபாஷை ஏதும் கிடையாது என்றார்.  அதன் பிறகு, அமர நிலை குறித்து எனக்கு பல வழிகளிலும் விளக்கமளிக்க முற்பட்டார். அவர் உபயோகித்த ஓர் உதாரணம் முதிர்ச்சி நிலை குறித்தது: ஒரு குழந்தைக்கு முதிர்ச்சி நிலை என்றால் என்ன என்பதை விளக்குவதற்கு தகுந்த மொழி கிடையாது என்றார். அக்குழந்தை குழந்தை பருவத்தைத் தாண்டி ஒரு முதிர்ச்சி நிலைய அடைந்த பிறகே அதை புறிந்து கொள்ள முடியும். ‘அமர நிலையை புறிந்துகொள்ளத்தக்க ஒரு நிலையை நாம் எப்படி அடைவது?’ என நான் கேட்டேன்.

‘சமயத்தை தொடர்ந்தாற் போன்று பக்தியுடன் ஒழுகி வருவதன் மூலம்,’ என அவர் பதிலளித்தார். ‘சிறுகச் சிறுக ஒருவர் அந்த ஞானத்தை அடையலாம். நீர் சேவை செய்கிறீர்; ஆகவே நீர் சரியான திசையில் செல்கிறீர். நீர் அந்த ஸ்தானத்தை புறிந்து கொள்ள நான் பஹாவுல்லாவை வேண்டிக்கொள்கின்றேன். ஆனால் அது கல்வி கற்பதன் மூலம் கற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அந்த (அமர) நிலை குறித்த ஒருவரது அறிவு அவரது செயல்களின் மூலமே வெளிப்படுத்தப்படுகிறது. ஒருவர் அந்த அறிவு நிலையை எய்திவிட்டார் என மக்கள் மனதில் படுமே அன்றி அது வார்த்தைகளால் விவரிக்கப்பட முடியாதது.

மிர்ஸா அவர்கள் அமெரிக்க சென்றது இதுவே முதன் முறை அன்று. பாரசீகத்தின் குல்பைகான் எனும் இடத்தில் 1844 அவர் பிறந்தார். பஹாவுல்லா மற்றும் அப்துல் பஹா ஆகியோரின் கட்டளைகளுக்கினங்க சமயத்தைப் பரவச் செய்ய பல்வேறு இடங்களுக்கு அவர் சுமார் 30 வருட காலம் பிராயணங்கள் மேற்கொண்டார். கிழக்கத்திய வாசகர்களுக்கு அவர் ஒரு சிறந்த கல்விமான் என்பது குறித்து அறிவிக்கப்பட வேண்டியதில்லை; ஹக்கீம்-ஹாஷீம் எனப்படும் தெஹரானின் முன்னனி அரபுப் பல்கலைக்கழகம் ஒன்று அவர் தலைமையில் இயங்கியது என்றும், மேலும் அங்கு அவர் தத்துவ ஞானம் பற்றி விரிவுரையாற்றினார் எனவும்; ஆயிரம் ஆண்டுகள் ஆன இஸ்லாமியக் கல்வி மையமான கைரோவின் புகழ்பெற்ற அல்-அஸ்ஹார் பல்கலைக்கழகத்தில் அவர் இஸ்லாமியச் சான்றுகள் குறித்து ஒரு அதிகார நிலையில் இருந்தார் எனவும் (அத்தாரிட்டி), அங்கு அவர்கள் தாங்கள் இயற்றிய காரியங்களை பரிசீலனை செய்திட அவரை நாடினர் என்றும்; புதிய மற்றும் பழைய பாரசீக மொழிகளில் புலமை பெற்றவர் எனவும், அரபு மொழி வல்லுனர் எனவும், கிழக்கு மற்றும் மேற்கத்திய கலாச்சாரங்களை நன்கு அறிந்தவராகவும் அவர் விளங்கினார். 1876-இல் எட்டு மாத விவாதத்திற்குப் பிறகு சமயத்தை ஏற்றார், அதன் பிறகு சமயத்தின் போதனைகளை அச்சமின்றி போதித்ததன் பயனாக பல முறை சிறை சென்றும் மரண தண்டனை பெறக் கூடிய ஒரு நிலைக்கும் உள்ளானார். அமெரிக்காவிற்கு பிராயணம் செய்வதற்கு முன்பாக, பாரசீகம், துருக்கி, ரஷியா, கோக்கசஸ், தார்த்தரி, சிரியா, மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் அவர் பிரயாணம் செய்தும், போதித்தும், எழுத்துப் பணிகளும் செய்திருந்தார்; சமயத்தை சீனாவின் எல்லை வரையிலும் கொண்டு சென்றிருந்தார். தமது போதனைத் திறன்களுக்கு தமக்காக பஹாவுல்லா வெளிப்படுத்தியிருந்த ஒரு பிரார்த்தனையே காரணம் என அவர் சுட்டினார்: ‘பஃடல் அவர்கள் விவேகத்துடனும் விளக்கத்துடனும் தமது உண்மையை பொதிக்க உதவிடுமாறும், அவரது அறிவின்கண் மறைக்கப்பட்டும் அரும்பொருளாய் வைக்கப்பட்டும் உள்ளவற்றை திரைநீக்கம் செய்திடவும், யான் ஆண்டவனை இறைஞ்சுகின்றேன். மெய்யாகவே அவரே வலிமைமிக்கவர், வழங்குபவர்!’

நான் மட்டும் அப்துல் பஹாவையும் பாதுகாவலரையும் அறியாது இருந்திருந்தால், பஃடல் அவர்களே இவ்வுலகில் ஒரு மாபெரும் மனிதர் என நினைத்திருப்பேன். மாஸ்டர் அவர்கள் நான் அவரை விட்டு அமெரிக்கா செல்ல வேண்டும் எனக் கூறியபோது நான் விம்மி அழுதேன். என் துக்கம் பாரசீக முறையில் வெளிப்பட்டு அதன் பயனாக ஆக்கா நகரில் மாஸ்டர் அவர்களின் வீட்டுச் சுவற்றில் நான் என் சிரசை மோதிக்கொண்டேன். ‘மிர்ஸா அவர்களின் பெரும் கல்வி மற்றும் சமயத்தின்பாலான அவரது பக்தியை நோக்குங்கால் நீர் அவருடன் இருக்க இதுவே உமக்கு நல்லதொரு வாய்ப்பு, எனப் பிறகு அப்துல் பஹா கூறினார்.
அந்த நாட்களில் மாஸ்டர் அவர்களின் உதவியாளர்கள் மிகக் குறைவு, மற்றும் சமயத்தின் வேலைப் பழு அதிகரித்த வன்னமாக இருந்தது. ஒரு மொழிபெயர்ப்பாளர் எனும் முறையில் என் சேவை அதிகமாகத் தேவைப்பட்டது. மாஸ்டர் அவர்களுக்காக இரவும் பகலுமாக சேவை செய்து வந்தேன். ஆனால், அந்த அமெரிக்கா சம்பந்தமான வேலை அதி முக்கியமானதாக இருந்தபடியால் அவர் என்னை என் கடமைகளிலிருந்து விடுவித்தார். 1901-ஆம் ஆண்டின் வசந்த காலத்தின் போது, திருமதி லுவா மற்றும் அவரது கனவருடன் நான் பாரீஸ் சென்றடைந்தேன். அங்கு மிர்ஸா அவர்கள் மே போல்ஸ் (பின்னாளில் திருமதி மே மாக்ஸ்வல்), லோரா பார்னி, ஜூலியட் தோம்சன், சார்ல்ஸ் மேசன் ரேமி, லிட்டல் சிகுர்ட் ரஸ்சல் மற்றும் ஏனைய நம்பிக்கையாளர்களுடன் இருக்கக் கண்டேன். மாஸ்டர் அவர்கள் என்னை உடனடியாக அமெரிக்கா செல்லும்படி உத்தரவிட்டார். நியு யார்க்கில், என்னை சிக்காகோ போகும்படி கட்டளையிட்ட, அப்துல் பஹா அனுப்பி வைத்த இரண்டாவது தந்தியைக் கண்டேன். இருண்டு மாதங்கள் சென்று மிர்சா அவர்கள் அங்கு என்னுடன் வந்து சேர்ந்துகொண்டார்.

சிக்காகோவில் நடந்தது இதுதான்: அந்த சிரியா நாட்டவரான, இபுராஹிம் கைருல்லா, புனர்ஜன்மம், கனவு விளக்கம், மாயவித்தைகள் போன்ற தமது சொந்து கற்பனைகள் பலவற்றை சமய போதனைகளுடன் சேர்த்து போதித்து வந்தார். அவர் இவற்றையெல்லாம் ஒரு புத்தகமாக எழுதி அதை அச்சிடுவதற்கு அனுமதி கேட்க ஆக்கா நகருக்கும் சென்றார். மாஸ்டர் அவர்கள் அவரை இத்தகைய மூட நம்பிக்கைகளை விட்டுவிடுமாறு கூறினார். அவர் அவ்வாறு செய்து சமயத்தை மட்டும் ஒழுங்காக போதிப்பாரேயானால் அவர் ஒரு முன்னனி போதகராக திகழ்வதற்கு வாய்ப்புள்ளது எனவும் கூறினார். ஆனால் அவர் அமெரிக்கா திரும்பி அப்புத்தகத்தை வெளிட்டார். நம்பிக்கையாளர்கள் இடையே ஒரு பிளவு ஏற்பட்டது; அப்பிளவை சரிசெய்ய மிர்சா அவர்களும் நானும் அனுப்பிவைக்கப்பட்டோம்.

சிக்காகோவில் நாங்கள் அசாடுல்லாவைச் சந்தித்தோம். அவர் அமெரிக்கவுக்கு எகிப்து நாட்டைச் சார்ந்த மிகவும் பற்று நிறைந்த இரு நம்பிக்கையாளர்களான ஹாஜி அப்துல்-காரிம் மற்றும் ஹாஜி மிர்சா ஹசான்-இ-குராசானி எனப்படுவோருடன் வந்திருந்தார். அவர் நன்கு அறிமுகமான ஒரு பொதகராக இருந்த போதிலும், கனவு விளக்கங்களும் மூட நம்பிக்கைகளையும் அவர் நம்பிக்கையாளர்களிடையே பரப்பிக் கொண்டிருந்தார். நம்பிக்கையாளர்கள், மிர்சா அபுல்-பஃடல் அவர்களோடு சிறிது பேசிய பிறகு அவர் ‘கடின சித்தமும் பகுத்தறிவு வாதமும்’ மிக்கவரென கூறினர். அசாடுல்லா ஆன்மீகமானவர், அவர் தங்கள் கனவுகளையெல்லாம் விளக்குகிறார் எனக் கூறினர். அவர்கள் மிர்சா அவர்களின் அரைக் கதவைக் கடந்து அசாடுல்லாவின் அரைக்கே செல்வர். அவர்கள் ஆவியினால் வழிகாட்டப்பட்டதாகவும், அல்லது அசரீரி ஒன்று அவர்களை தங்கள் சக நம்பிக்கையாளர் ஒருவர்பால் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரித்ததாகவும் சொல்வர். (மிர்சா அவர்கள் இவர்களை பேயோட்டிகள் என அழைத்தார்)

இந்த மாயஜாலங்கள் யாவும் அன்பரிடையே ஒரு பிளவையே உண்டாக்கும் என நாங்கள் நினைத்தோம். அவர்களில் பலர் சமய நம்பிக்கையில் இன்னும் உறுபடுத்தப்படாமல் இருந்தனர். நாங்கள் அவ்விஷயத்தைக் கலந்தாலோசித்து பின்வரும் வழியை பின்பற்ற முடிவு செய்தோம்: யாராவது எங்களிடம் வந்து, ஆவியினால் ஒரு காரியத்தை புரிய வழிகாட்டப்பட்டதாகக் கூறினால், சர்வலோக ஆவியே இன்று பஹாவுல்லாவிடம் வெளிப்பட்டுள்ளது, என நாங்கள் கூறினோம். உங்களுக்கு அசரீரியான காட்சிகள், அல்லது அனுபவங்கள் ஏதேனும் ஒரு காரியத்தை செய்யச் சொல்வது போல் தோன்றினால், அதை பஹாவுல்லாவின் வெளிப்பாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும்படி கூறினோம். அச்செயல் சமய போதனைகளுக்கு ஒப்ப இருந்தால் அது உண்மையான வழிகாட்டுதலாகும், இல்லையேல் அது வெறும் கனவே.’

சிக்காகோவில், மிர்சா அவர்கள் வாரம் மூன்று வகுப்புகள் நடத்தினார். அதோடு நாங்கள் இருவரும் மேசனிக் மண்டபத்தில் வாரம் ஒரு முறையும் போதித்தோம். கிழக்கத்திய பஹாய் போதகர்களுக்கான மையமாக விளங்கிய எங்களது இல்லம், மேற்கு மொன்ரோ வீதியில் இருந்தது. அங்கு நாங்கள் சந்தித்த உறுதியான பக்திமிகுந்த நம்பிக்கையாளர்கள், தோர்ன்டன் சேஸ், அவரது செயலாளர், ஜெர்ட்ருட் புய்கெமா, குமாரி நாஷ், டாக்டர் பார்ட்லட், டாக்டர் தாட்சர், ஆர்த்தர் அக்னியு, திரு லேய்ஷ், அல்பர்ட் வின்டஸ்ட், திருமதி பிரிட்டிங்காம், திரு திருமதி சார்ல்ஸ் ஐயோவாஸ், கிரீன்லீஃப் எனப்படும் சிறந்த வழக்குறைஞரும் அவரது மனைவியும் ஆவர். அப்துல் பஹாவின் கடித வழி கட்டளையின் பேரில் திரு பீட்டர் டீலி அலபாமாவின் பேஃர்ஹோப்பில் இருந்து மிர்சாவுடன் சமய தீர்க்கதரிசனங்கள் மற்றும் அதன் பிற அம்சங்களை கற்க வந்து சேர்ந்தார்.

அமெரிக்காவின் முதல் பஹாயான திரு தோர்ன்டன் சேஸ் அவர்களைப் பற்றிய எனது முதல் ஞாபகம், எங்கள் வீட்டிற்கு எதிரே இருந்து ஒரு மூலை மருந்துக் கடைக்கு என்னை அழைத்துச் சென்று நான் மிகவும் வெறுத்த கொக்கக்கோலா பானத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதுதான். இது மருந்து, என நான் அவரிடம் கூறுவேன். ‘இல்லை,’ ‘இது நல்லதொரு பானம்; நீர் கண்டிப்பாக இதை விரும்பி அருந்தப் போகிறீர்,’ என அவர் கூறுவார். அவரது கூற்று தற்போது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.

என் தந்தையாகிய, ஆரம்ப கால நம்பிக்கையாளர், ‘அப்துர்-ரஹீம் காஃன், தெஹரானின் நகர முதல்வராகவும், காவல் துறை தலைவராகவும் இருந்தபோது மிர்சா அவரை நன்கு தெரிந்து வைத்திருந்தார். ஒரு நாள் அவர் பின்வரும் கதையைக் எனக்குக் கூறினார்: அவர், மிர்சா அபுல்-பஃடல், சமயத்தை ஏற்றக்கொண்ட போது, உற்சாகத் தீயில் மிதந்து கொண்டிருந்தார். சாயங்காலங்களில் அவர் அருகிலிருந்த ஒரு காப்பிக் கடைக்குச் சென்று அங்கு மாடத்தைப் போன்றிருந்த ஓரிடத்தில் அமர்ந்து, பகிரங்கமாக சமயத்தைப் போதித்தார். ஒரு நாள் கிருஸ்துவ புரடஸ்ட்டன் பிரிவைச் சேர்ந்தவரும் தெஹரான் புரட்டஸ்டன் மிஷனோடு தொடர்புகொண்டவருமான ஓர் ஆர்மீனியர், அக்காப்பிக் கடைக்குள் நுழைந்து பஹாவுல்லாவைக் குறித்து மிகவும் தரக் குறைவாக ஏதோ கூறிவிட்டார். அதைக் கேட்டுத் தன் வசமிழந்த மிர்சா அவர்கள் கீழே குதித்து அந்த ஆர்மீனியரைத் தாக்கிவிட்டார். வெளிநாட்டுத் தூதரக வாரியத்திடம் அந்த மனிதர் பிராது ஒன்றை சமர்ப்பித்தார். அவர்கள் அதை காவல் துறையினரிடம் அனுப்பி மிர்சா அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வற்புறுத்தினர். என் தந்தையாகிய கலாந்தர், ‘இவ்வித பிரச்சினைகளை நானே தீர்ப்பதுதான் நலம்,’ எனக் கூறினார். அவர் மிர்சாவை தமது பாதுகாப்பில் வைத்தார்; அவர் புரிந்தது மிகப் பெரிய குற்றம் எனக் கூறினார்; மிர்சாவின் சமயநம்பிக்கையை மிகவும் பாராட்டுவதாகக் கூறினார், ஆனால் காலம் மிகவும் ஆபத்தானதாக இருப்பதால் எல்லோரும் மிகவும் ஜாக்கிரதையாக காட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனக் கூறினார். அவர் மிர்சாவை தமது காரியாலயத்திலேயே விட்டுவிட்டு அந்த ஆர்மீனியரை அழைத்து வர ஆளனுப்பினார். அவர் வந்தவுடன், “சிறிது நாட்களுக்கு முன் நமது மன்னர் கத்தோலிக்க சமயப்பணி மன்றத்தை எவ்வாறு மூடினார் என்பது உமக்கு ஞாபகத்தில் இருக்கின்றதா?” என வினவினார். மிர்சா அவர்கள் இந்த நாட்டு மதகுருமார்கள் மத்தியில் எவ்வளவு உயர்ந்த ஸ்தானம் வகிக்கிறார் என்பதை உமக்குத் தெரியும். மிர்சா அவர்கள் மேல் சாற்றப்படும் எந்த குற்றச்சாட்டும் மன்னரை கோபம் கொள்ளச் செய்வதோடு, அவர் உமது புரடெஸ்டன்ட் சமயப் பணி மன்றத்தையும் இழுத்து மூடிவிடுவார், நீர் உமது வேலையையும் இழக்கப் போகின்றீர். நீர் இப்போது எதை விரும்புகிறீர்? நான் மிர்சா அவர்களை தண்டிப்பதா அல்லது நீர் உமது வேலையை தக்க வைத்துக் கொள்வதா?” குற்றச்சாட்டுகள் அவசரத்துடன் வாபஸ் பெறப்பட்டன.

ஒரு நாள் மிர்சா அவர்கள் என்னை கூப்பிட்டு அனுப்பி என்னுடன் மிகவும் பனிவுடன் பேசினார். என் பின்னனியையும் குடும்பத்தையும் நன்குணர்ந்துள்ள அவர் மிகுந்த தயக்கத்துடனேயே ஒரு வாக்குறுதியை என்னிடமிருந்து பெற விரும்புவதாகக் கூறினார்: அதாவது சமயம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் நான் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கலாம், ஆனால் அவரது தனிப்பட்ட விவகாரங்களில் நான் தலையிடக் கூடாது. அதற்கு நான், ‘மிர்சா அவர்களே, என் குடும்பத்தை உமக்கு நன்கு தெரியும், அதன் அங்கத்தினர்கள் எவருமே மகிமை மிகுந்த ஒருவரான உமது தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடப்போவதில்லை. ‘எப்படியாயினும் நீர் வாக்குறுதி தாரும்,’ என அவர் வற்புறுத்தினார். நானும் வரப்போவது தெரியாமல் வாக்குறுதி அளித்தேன்.
1901 டிசம்பர் மாதம், நாங்கள் இருவரும் வாஷிங்டன் சென்றோம். அங்கு லோரா பார்னி அவர்கள் எங்களுக்கு தங்குமிடம் ஏப்பாடு செய்திருந்தார். எங்கள் அறைகள் நான்கு மாடி கட்டிடம் ஒன்றின் நான்காவது மாடியில் இருந்தன. மிர்சாவுக்கு இரைச்சல்கள் தாங்க முடியவில்லை; இதனாலேயே நாங்கள் வாஷிங்டனில் தங்கியிருந்த நான்கு வருட காலங்களில், இரைச்சல்களில் இருந்து தப்பிக்க அவர் பல முறை அவர் தமது தங்குமிடங்களை மாற்ற வேண்டியிருந்தது. அவர் தாம் எழுதிக்கொண்டிருந்த நூலில் கவனம் செலுத்த வேண்டியிருந்தபடியால், நாய்களோ அல்லது பிற குழப்பங்களோ (ஆனாலும் அவர் பூனைகளை விரும்புவார்) நிறைந்த மாடியின் கீழ்த்தளம் அவருக்கு பெரும் திகிலளித்தது.

அவரது உணவு கட்டிட உரிமையாளரினால் வழங்கப்பட்டது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல மிகக் குறைந்த அளவே உணவு உட்கொண்டார் என்பது எனக்கு தெரிய வந்தது. நாள் முழுவதும் கிழக்கத்திய தேநீர் வகை ஒன்றை தயாரித்து, அதுவும் நீரைப்போல, குடித்துக் கொண்டிருப்பார்; அவர் எகிப்திய சுருட்டு வகை ஒன்றை புகை பிடித்து வந்தார் (ஆனால் நண்பர்கள் அதை கண்டித்ததால் அவர்களுக்குச் சோதனையாக இருக்கக் கூடாத என விட்டுவிட்டார்); எப்போதாவது மெல்லிய பிஸ்கட் ஒன்றை உண்பார். அதனால் தாங்க முடியாத அந்த குளிரிலும் அன்னியமான சூழ்நிலையிலும் அவர் மிகவும் இளைத்துப்போக ஆரம்பித்தார். மாஸ்டர் அவர்களின் வேண்டுகோளின்படி அவர் எழுதிக்கொண்டிருந்த நூலை தொடர்ந்து எழுதும்படி நான் வற்புறுத்தி வந்தேன்; ஆனால் அவர் அதை செய்யக்கூடிய உடல் நிலையில் இல்லை என்பது தெரிந்த போதும், நான் அவருக்கு அளித்த வாக்குறுதியின்படி நான் எதிலும் தலையிட முடியவில்லை.

மிர்சா அவர்கள் சதா பிரார்த்தனையிலேயே லயித்திருப்பார். அவரது காலை, நண்பகல் மற்றும் மாலை வேளைகள் பிரார்த்தனையிலேயே கடந்துவிடும். ஒரு முறை நான் அவரது அறைக்குச் சென்ற போது கதவு தாழிடப்பட்டிருந்தது. தட்டினேன் பதில் இல்லை. பிறகு கதவை உடைத்து உட்சென்ற போது, மிர்சா அவர்கள் தமது பிரார்த்தனையின் போது பிரக்ஞை இழந்துவிட்டதும், அவரது வாய் கிட்டித்துப்போயிருந்ததும் தெரிந்தது. அவர் அவ்விதம் மிகவும் கடுமையாகவும் உளம்இளகியும் வேண்டியதன் காரணம், அவர் இறைவனைப்பற்றி கொண்டிருந்த ஓர் அதி உயர்ந்த எண்ணமும் தம்மைத் தாழ்மையின் சாரமாக நினைத்ததுமே ஆகும். தெய்வீகக் கருனையினால் அருளப்பட்ட மிர்சாவின் ஜனனம், “உனது தேவரின் முகத்திலிருந்து பிரகாசிக்கும் கதிர்களின் ஒளியைத் தவிர வேறெதுவுமே காணக்கூடாத,” இந்நாளில் ஒரு பெரும் பாவம் என்பதே அவருடைய நம்பிக்கையாக இருந்தது.  ஒரு புனித ஆன்மாவாகிய நீர் இவ்விதம் அழுவதா? என நான் அவரிடம் கூறுவேன். நீரே ஒரு பாவி என்றால் நாங்கள் எல்லோரும் என்ன கதிக்கு ஆளாவது எனக் கூறினேன். அவர்: “நாம் பஹாவுல்லாவை வாழ்த்துவதற்கு தேவைப்படும் ஒரு மொழியாக பக்தியின் அளவை நீரும் அறிந்து கொள்ளும் நாள் வரும்”, என அவர் கூறினார்.

இறுதியில், மிர்சா மரணத்தோடு போராடிய காலம் வந்தது. மிர்சா அவர்கள் பெரும் மதிப்பு வைத்திருந்த லோராவின் தாயாரான பார்னி அவர்களிடம் நான் சென்றேன். நான் மிர்சாவிடம் கொடுத்த வாக்குறுதியைப் பற்றிக் கூறி, அதை அவர் ஏன் அப்போது வாங்கிக்கொண்டார் என எனக்குத் தெரியாது எனவும் கூறினேன்; அவர் அப்போதே ஒரு கோழியை சமைத்து, டெ சால்ஸ் வீதியில் இருந்த அந்த வீட்டிற்கும் கொண்டு வரப்படச் செய்தார். வந்தவுடன், விடுதித் தலைவியிடம் மிர்சா அனுப்பப்படும் உணவை ஏற்கிறாரா இல்லையா என வினவினார். ‘இல்லை, உணவுக்கு பணம் கொடுக்கிறார் ஆனால் அதைச் சாப்பிடுவதில்லை,” என பதில் வந்தது. அவர் பிறகு மேலே மிர்சாவிடம் சென்றார். நீங்கள் உணவு ஏதும் உண்பதில்லை என கீழே என்னிடம் கூறுகிறார்கள். ஒழுங்காக சாப்பிடாமல் நீர் உமது புத்தகத்தை எவ்வாறு எழுதப் போகிறீர்? எனக் கேட்டார். கண் புறுவத்திற்கு கீழே இருந்து அவரது சிறிய கூரிய கரு விழிகள் என்பால் பார்த்தன.

திருமதி பார்னி சென்றவுடன் அவர், ‘நீர் வாக்குறுதி அளித்தீர்,’ எனக் கூறினார்.

விடுதித் தலைவி அவரிடம் கூறினார் என நான் பதிலளித்தேன்.

உமக்கும் அதில் பங்கிருந்தது, என மிர்சா கூறினார்.

நீர் மரணத்தோடு போராடுவதை என்னால் காண முடியவில்லை என நான் கூறினேன்.

நான் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன் என மிர்சா கூறினார்: ஒரு வீட்டைப் பற்றி அதில் 60 வருடம் குடியிருப்பவருக்கு நன்கு தெரியுமா அல்லது அதை அப்போதுதான் அறிந்தவருக்கு நன்கு தெரியுமா? அந்த இருவரில் அந்த வீட்டை யார் நன்கு அறிந்து வைத்திருப்பார்? ‘உண்மைதான், அந்த மனிதர் அதில் 60 வருட காலம் குடியிருந்திருக்கலாம், ஆனால் அவர் அவ்வீட்டை ஒழுங்காக வைத்திருக்காமல் அது இப்போது ஒழுக ஆரம்பித்தும் சுவர்கள் இடிந்தும் குடியிருக்கத் தகுதியில்லாமலும் அல்லவோ போய்விட்டது,’ என நான் கூறினேன்.

மிர்சா சாப்பிடாமல் உடல் நலிவுற்றும், அமெரிக்க உணவையும் வாழ்க்கைைையயும் ஏற்க முடியாமல் இருந்தார்.  நான் அவருக்கு சேவை செய்வதையும் அவர் தடுத்து வந்தார். கடைகளுக்கு சாமான் வாங்க சென்றால் அவர் வாங்கும் பொருட்களைக் கூட தூக்கி வர விடமாட்டார். இறுதியில் பொறுக்க மாட்டாமல் நான் மாஸ்டர் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். மிர்சாவின் வாழ்க்கைக்கும் வேலைக்கும் ஆன பொறுப்பு என்னால் பொறுக்க முடியாத ஒன்றாக இருந்தது. நிலைமையை உள்ளது உள்ளவாறு விளக்கி புத்தகம் எழுதும் வேலை சுனங்கிவிட்டிருப்பதையும் அப்துல் பஹாவிடம் எழுதினேன். பிரச்சினைக்குத் தீர்வாக மிர்சாவுக்கு உணவு தயாரிக்கவும் அவரது தேவைகளை கவனிக்கவும் ஒரு பார்சி உதவியாளன் இருந்தால் நல்லது எனக் கூறினேன். நான் போர்ட் சைட் வழியாக அமெரிக்கா வந்த போது, அங்கு பதினைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் அஹ்மத் யஸ்டியின் கடையில் வேலை பார்ப்பதைக் கண்டேன். அவன் பெயர் அஹ்மத்-இ-இஸ்பஃஹானி (பின்னாளில் அவன் தனது பெயரை அஹ்மத் சொஹ்ராப் என மாற்றிக்கொண்டான்) அப்பையன் தன்னை அமெரிக்கா அனுப்பி வைக்கும்படி மாஸ்டர் அவர்களை நான் வேண்டிக் கொள்ள வேண்டும் என விண்ணப்பித்தான். இப்போது அவன் இங்கு வந்து மிர்சா கவனித்துக் கொள்ளலாம் என நான் மாஸ்டரிடம் கூறினேன். மாஸ்டர் அவர்களும் அவன் அமெரிக்கா வந்து மிர்சாவுக்கு சேவை செய்தும் பிறகு அவரோடு வீடு திரும்பலாம் எனவும் கூறினார். ஆனால் 1904-இல் மேக்நட் தம்பதியர், திருமதி ஜூலியா கிரன்டி, மற்றும் ஊட்கொக்களுடனும் அவர்களின் மகளுடனும் – மிர்சா நாடு திரும்பிய போது அஹ்மத்-இ-இஸ்பஃஹானி நாடு திரும்பவில்லை. அவன் மாஸ்டர் அவர்கள் 1912-இல் அமெரிக்கா வரும் வரையிலும் வந்து அவரோடு அவனை கிழக்கிற்கு அழைத்துச் செல்லும் வரையிலும் அவன் அமெரிக்காவிலேயே இருந்தான். அப்போதும் அவனுக்கு நாடு திரும்ப விருப்பமே இல்லை.

எப்படியோ எங்கள் வேலை நடந்தது. எங்கள் வகுப்புகள் தவிர்த்து பொருளகத்திற்கு எதிரே இருந்த பழைய கோர்க்கோரன் கட்டிடத்தில் பஹாய் கூட்டங்களில் சொற்பொழிவாற்றுவோம். மிர்சா பேசும் போது நான் அருகே நிற்க, எழுந்து நின்றே சொற்பொழிவாற்றுவார். அவர் இயல்பாகவே சிறந்த சொற்பொழிவாளர்; மிகுந்த ஆர்வத்துடன் அவர் பேசுவார், அவரு பேசும் விஷயத்திற்குத் தகுந்தவாறு அவரது குரலும் மாறும், சில வேளைகளில் உரக்கவும் இருக்கும். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் என் மொழிபெயர்ப்பு அவர் நினைத்தவாறு சரியாக இருக்கின்றதா, தெளிவாக இருக்கின்றதா; என என் உடல் அசைவுகளிலிருந்தும் அது செவிமடுப்போர்களில் என்ன விளைவினை ஏற்படுத்துகிறது என்பதிலிருந்தும் தெரிந்து கொள்வார். சுமார் ஐந்து நிமிடங்கள் பேசிய பின் நான் அதை மொழி பெயர்த்திட தமது பேச்சை நிறுத்திக் கொள்வார்.

ஒரு சிறமான விஷயத்தை விளக்கிடும் போது, அது மனதில் நன்கு பதிந்திட மீண்டும் மீண்டும் அதே விஷயத்தையே பேசுவார். ஒரு நாள் ஒரு இளம் நம்பிக்கையாளர் மிர்சாவிடம் வந்து, ‘மிர்சா அவர்களே, நாங்கள் திறமைசாலிகள்தாம். நீங்கள ஒரு முறை ஒரு விஷயத்தைப் பற்றிக் கூறினால் நாங்கள் அதை கிரகித்துக்கொள்ள முடியும். ஆனால் நேற்று இரவு நீங்கள் பேசியதைப் போன்று அதே விஷயத்தை மீண்டும் மீண்டும் நீங்கள் கூறினால் மக்கள் உங்களையும் எங்களையும் குறை கூறக்கூடும்,’ என்றார். மிர்சா அந்த இளம் பெண்ணுக்கு பனிவுடன் நன்றி கூறினார். ‘இது பேசப்படும் விஷயத்தை மேலும் தெளிவாக்கவே நான் அவ்வாறு செய்தேன்,’ எனக் கூறினார். சரி, இப்போது ஒரு சந்தேகம். நான் நேற்றிரவு எதைப்பற்றி மீண்டும் மீண்டும் கூறினேன்?’ என வினவினார். அந்தப் பெண் சிறிது நேரம் சிந்தித்து விட்டு, ‘எனக்கு ஞாபகமில்லை,’ எனக் கூறினார். ‘அதனால்தான் நான் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் கூற வேண்டியுள்ளது,’ என மிர்சாவும் பதிலளித்தார்.

மிர்சா அவர்கள் ஒரு விஷயத்தை ஆழமாக ஆராய்வதில் நிபுணர் — வாதிடுவோரைச் சுற்றி ஒரு சுவற்றை எழுப்பி அவர்களை அதில் சிக்கிக் கொள்ளச் செய்து, ஒன்று தாம் கூறியவற்றை அவர்கள் ஏற்கவோ அல்லது அவர்கள் அறிவிலிகள் என்பதை ஒப்புக் கொள்ளவோ செய்திடுவார். சகல விதமான பண்டிதர்களும் அவருடன் வாதிடுவதை நான் கண்டேன். ஆனால் ஒரு முறை கூட அவர் தோற்றது கிடையாது. கிருஸ்தவ சரித்திரம், ஐரோப்பிய இறையியல் மற்றும் நுன்பொருள் கோட்பாட்டியல், அல்-அஸ்ஹாரில் அவர் பாண்டித்தியம் பெற்ற விஷயங்கள், ஆகியவற்றை அவர் ஆழக் கற்றிருந்தார். ஒரு முறை ஒரு கிருஸ்தவர் அவரிடம் வந்து நபி அவர்களை கடுமையாகச் சாடினார். அதற்கு மிர்சா: ‘முதலாம் நூற்றாண்டின் யூத மற்றும் ரோமானிய சரித்திர ஆசிரியர்கள் ஒருவர் கூட யேசு பிரானைப் பற்றி குறிப்பிடவில்லை எனவும், பலர் யேசு நாதரின் சரித்திரவாய்மைப் பற்றி சந்தேகப்படுவதாகவும் உங்கள் தலைமைத்துவம் கூறுகின்றது. ஜோசப்ஃபஸின் எழுத்துக்களில் ஏசு நாதர் குறித்து சில கிருஸ்தவர்களால் ஏதோ செருகப்பட்டதாகவும், ஆனால் அந்த ஏமாற்று வேலை பின்னாட்களில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் தெரியும். வேறு பலர் முதலாம் நூற்றாண்டிலேயே கிருஸ்தவ சமயம் சீனாவுக்கு பரவியதாகக் கூறும் ஒரு கல்வெட்டை அங்கு புதைத்தனர். ஆனால் அதுவும் ஏமாற்று வேலை என கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இறைத் தூதர் நபியவர்களைப் பொறுத்த மட்டில், அவர் சரித்திரவாய்மை பெற்ற ஏசுவை மட்டும் பிரகடணம செய்யவில்லை, அவரை 30 கோடி மக்கள் ஏற்கவும் செய்தார்; அவர்கள் அவரை ஒரு சரித்திர புருஷராக மட்டும் ஏற்காமல் அவரை இறைவனின் ஆவியாக  (ரூஹுல்லா) ஏற்கவும் செய்தார். இதையெல்லாம் பார்க்கும் போது, நீர் இப்போது சாடிக் கொண்டிருக்கின்றீரே, அந்த முகம்மது அவர்கள் உங்கள் சமயத்திற்கு கிருஸ்தவ சமயப் பிரச்சாரிகளை விட அதிக வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார் என்பது தெளிவாகின்றதல்லவா?
பிரிவினையை ஏற்படுத்தும் எந்த ஒரு உரையாடலையும் மிர்சா ஊக்குவிக்க மாட்டார். ஒரு முறை ஒரு அன்பர் அவரிடம் வந்து வேறொரு அன்பர் சமயத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறினார். மிர்சா அதை கவனத்துடன் கேட்டார். பிறகு தமது பதிலை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்குமாறு என்னிடம் கூறினார். ‘பஹாவுல்லாவே வாக்களிக்கப்பட்ட தெய்வீகப் படையினரின் நாயகர் என்பதை நீர் நம்புகிறீரா?’

‘ஆமாம்’.

‘நல்லது, அவர்தான் நாயகர் என்றார், இவர்கள் அவரது படையினர். அவரது படையினரைப் பற்றி குற்றம் பேசுவதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கின்றது?’

மிர்சா அவர்கள் பஹாய் நிரூபணங்கள் எனும் அந்த நூலை எழுதச் செய்வதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. ஒவ்வொரு வரியையும் வாக்கியத்தையும் பக்கத்தையும் அவரிடமிருந்து பறிக்க வேண்டியிருந்ததாகவே எனக்குத் தோன்றியது. அமெரிக்க நண்பர்கள், அது ஏன் நிறைய அறிமுகங்களையே கொண்டுள்ளது என கேட்கின்றனர். கிழக்கத்திய பண்டிதர்களின் மரபு முறை மட்டும் அல்ல இது, மிர்சா அதோடு சேர்த்து மேலும் ஒரு பெரிய நூலை எழுதத் திட்டமிட்டிருந்தார். பொங்கும் அவரது அறிவுடன் ஒப்பிடுகையில், இங்கு நாம் பெற்றிருப்பது சொற்பமே. மாஸ்டர் அவர்கள் மிர்சா அவர்களை நூலை எழுதச் சொல்லியும் என்னை அதை மொழி மாற்றம் செய்யும்படியும் கூறியிருந்தார். மிர்சா அவர்களும், மோசமடைந்து கொண்டே போன அவரது உடல் நலத்தையும் பாராமல், நூலை முடிக்காமல் அமெரிக்காவை விட்டு அகலவே இல்லை. அவர் மிகவும் கவனம் நிறைந்த, நுட்பத் திறமை வாய்ந்தவர். இருந்தும் எழுத்துப் பிழைகள் இல்லாமலும் எந்த எழுத்தையும் அடிக்கமாலும் விரைவாகவே எழுதுவார். அவர் தமது தொடையின் மேல், பாரசீக முறையிலேயே, காகிதத்தை வைத்து நாணல் எழுத்தானி கொண்டு எழுதுவார்.

மிர்சா உண்மயிலேயே ஒரு தெய்வீகப் புலவர். தாம் இகான் நூலை பகுத்தறிவுக் கண்களுடன் 17 முறை படித்ததாகவும், ஆனால் அதன் வார்த்தைகள் அர்த்தமில்லாத வார்த்தைக் கோர்வைகளாகவே அவருக்குத் தென்பட்டதாக என்னிடம் கூறினார். ஆனால் பிறகு அவற்றை ‘பற்றுறுதியுடன்’ படித்த போது கடந்த கால சமய நூல்கள் அனைத்தின்  பூட்டுகளையும் திறக்கக்கூடிய சாவியை அதில் கண்டதாகக் கூறினார். இவ்வித விஷயங்களைப் பற்றி அவர் எழுதியிருந்த ‘பஃராய்ட்’ எனும் நூல் இன்னும் மொழி மாற்றம் செய்யப்பட வில்லை. 1914-இல் மிர்சாவின் மறைவுக்குப் பிறகு வாஷிங்கடன் நம்பிக்கையாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘அவரது ஆசீர்வதிக்கப்பட்ட இதயம், தகித்திருக்கும் ஒவ்வொருவரின் தாகத்தையும் தீர்க்கவல்ல,
மெய்மையும் குறிப்பிடத்தக்கவையும் நிறைந்த ஊற்றாகும்.’1 நூல் எழுதும் காரியம் மெதுவாகவே நகர்ந்தது எப்போதுமே அவருடையத் தவறாக இருந்ததில்லை. வகுப்புகள்–கூட்டங்கள்–அளவுக்கதிகமான விருந்தினர்கள் சந்திப்பு என நிறைய காரியங்ளை நாங்கள் கவனிக்க வேண்டியிருந்தது. அவரைச் சந்திக்க வருபவர்கள் அவருக்கு பூக்களும் பழங்களும் கொண்டு வந்தால் நிறையவே கோபப்படுவார். ‘இவற்றை இவர்கள் ஏன் எனக்காக கொண்டு வருகின்றனர்?’ எனக் கேட்பார். ‘நான் பஹாவுல்லாவின் அடியார்க்கு அடியான்தானே! எனக் கூறுவார். அவரது இத்தகைய பனிவின் அடிப்படையில் எழும் வார்த்தைகளை நான் மொழி பெயர்க்க மாட்டேன், ஏனெனில் அவற்றை கர்வத்தின் வெளிப்பாடுகள் என விஷயம் அறியாதவர்கள் நினைக்கக்கூடும். நானும் பழம் மற்றும் பூ கொண்டுவந்தவர்களுக்கு நன்றி கூறிவிட்டு, மிர்சா கூறியதை ஏன் மொழிபெயர்க்கவில்லை என்பதையும் அவரிடம் விளக்கிவிடுவேன்.

இரயில்களிலும் பொதுவிடங்களிலும் மக்கள் மிர்சாவை கவனிப்பார்கள். அவரும் அவர்களைத் தமது கூர்மையான, ஆழப் பதிந்த, கருமையான கண்களைக் கொண்டு பார்த்து புன்னகைப் புரிவார். எல்லா விஷயங்களையும் மிர்சா நுட்பமாக கவனித்தைப் போன்று கவனித்தவர் எவரையும் நான் கண்டதில்லை. அவர் எப்போது தவறமாட்டார். ஒரு முறை நான் சாமுத்திரிகா லக்ஷனங்கள் மூலம் ஒருவரது இயல்பைக் கண்டறியும் முறையைப் பற்றி லவாட்டர் எனும் ஜெர்மானியர் எழுதிய ஒரு நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். கீய்த் கூட அது ஒரு விஞ்ஞான முறைப்படியான விஷயம் அல்லவென கைவிட்டிருந்தார். அந்த வருடம் எமர்சனைப் போல் தோற்றமளித்த ஒரு முதியவரை கிரீன் ஏக்கரில் கண்டேன்; அவரது கடைவாய் சிறிது உறுதியற்று இருந்தாலும் அவருக்கும் எமர்சனைப் போலவே உயர்ந்த நெற்றியும் நீண்ட நாசியும் இருந்தன. லவாட்டரின் கூற்றுப்படி இவர் ஒரு பெரும் அறிவாளியாகவே இருக்க வேண்டும் என நான் மிர்சாவிடம் கூறினேன். மிர்சா என்னைப் பார்த்து புன்னகைத்து, ‘ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கக்கூடிய ஞானம் கூட இவருக்கு இல்லையே,’ என்றார். ‘உங்களுக்கு எப்படித் தெரியும்?’ ‘நானும் சாமுத்திரிகா லக்ஷனம் படித்துள்ளேன்,’ என்றார். ‘இருந்தாலும் என் சாமுத்திரிகா லக்ஷனம் பற்றிய எனது அறிவுக்கு இவர் கூர்மையான அறிவும் ஞானமும் பெற்றவராகவே இருக்கவேண்டும்,’ என நான் கூறினேன். அடுத்த நாள் காலை, எங்கள் வகுப்பிற்கு பிறகு அந்த மனிதர் ஒரு கேள்வி கேட்டார். அக்கேள்வியிலிருந்தே அவரது ஞானம் துல்லியமாக வெளிப்படையாகி, அவர் குறைந்த அறிவு படைத்தவரே என்பதும் தெரிந்தது.

அமெரிக்காவில் நமது சமயத்திற்கு மிர்சா என்ன செய்துள்ளார் என்பதை எதிர்காலம் தீர்மாணிக்கவேண்டும். எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியையே நான் இங்கு வெளிப்படுத்தியுள்ளேன்; எவருமே அறியாத அவரது பயணங்களின் ஒரு சில பகுதிகளையே நான் எழுத்தில் வடித்துள்ளேன். மிர்சா அவர்கள் நாடு திரும்பியதும், அவர் விட்டுச் சென்ற காரியங்களை நான் தொடர வேண்டும் என மாஸ்டர் அவர்களின் கட்டளையினால் நான் எப்படி கதிகலங்கிப் போனேன் என்பதை எதிர்காலத்திலேயே மக்கள் உணர முடியும்.

அவர் மறைந்து பல காலங்கள் ஆகிவிட்டன. அப்துல் பஹாவும் நம்பிக்கையாளர்களும் அவரது மறைவினால் துக்கித்தனர். ஆனால் நான் அவரைக் காண்கின்றேன், அவர் இங்கு என் முன் இருப்பது போலவே தோன்றுகிறது. நல்ல உயரம், மெலிந்த தேகம், வெள்ளைத் தலைப்பாகை, இளம் பழுப்பு வண்ணத்தில் உடை. கலைத்திறன் மிகுந்த உணர்வுமிக்க ஆனால் அதே வேளை அறிவுத் திறனும்  ஆக்கமும் மிகுந்த அழகிய கரங்கள். உயர்ந்த நெற்றி, அசாதாரணமாக உயர்ந்திருந்த கண்ண எலும்பு, துறவியின் பார்வை, ரோஜா வாசனை.  மற்றும் அந்த சிறிய மிகக் கருமையான, கூர்ந்த கண்கள்.

ஆமாம், ஆனால் அவரது உண்மையான உயர்வைக் காண வேண்டுமென்றால் அவரை அப்துல் பஹாவின் முன்னிலையில்தான் பார்க்க வேண்டும். அந்த முன்னிலையில், அங்கு மிர்சாவின் அறிவு அவரை ஒன்றுமில்லா நிலைக்கு கொண்டு சென்றுவிடும். பரந்த சமுத்திரத்தின் கரைகளிலே அங்கு அவரை ஒரு சிறு கூழாங்கல்லாகவே காண்போம்.

பஹாய் ஆன்மீகச் சபைகளுக்கான ஒர் அறிமுகம்


பஹாய் ஆன்மீகச் சபைகளுக்கான ஒர் அறிமுகம் – மார்ஸியே கேய்ல்

ஒரு நூலாகப்பட்டது அறிமுகமில்லாத நண்பர்களுக்கு எழுதப்பட்ட ஒரு கடிதமென அடிக்கடி மேற்கோளிடப்படும் அன்பர் ஒருவர் கருத்துரைத்துள்ளார். குறிப்பிட்ட அந்த வாக்கியத்தில் “அறிமுகமில்லாத” எனும் வார்தைகளே எனக்கு மிகவும் பிடித்தமான வார்த்தைகள். எதனாலோ தெரியவில்லை, நம்மைச் சந்தித்து நம்மோடு உரையாடும் நமது நண்பர்கள் நம் உள்ளத்தில் இருப்பதை தெரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்கள் ஏதும் கூறும் முன்பே நாம் முந்திக்கொண்டு விடுகின்றோம். அதன் விளைவாக நாம் உண்மையில் (சிந்தித்து) கூற வேண்டியதற்கு நாமே இடையூறாகிவிடுகிறோம்.

மிகவும் பொருத்தமான வாசகர் என்பவராக இருப்பவர் நமக்கு அறிமுகமில்லாத வாசகராகவே இருப்பார், ஏனெனில், வேறு யாராவது எழுதியதைத் தேர்ந்தெடுக்காமல் நீங்கள் எழுத்தில் வடித்தவற்றுடன் ஓரிரண்டு மணி நேரம் அவர் செலவிடுகின்றார். நீங்கள் எழுதியதே அந்த நேரத்தில் அவருக்கு ஏற்றதாக இருக்கின்றது.

சரி, இப்போது இந்தக் கட்டுரையைப் பொறுத்த மட்டிலும், என் நண்பர்கள் பலர் அதை நிச்சயம் படிப்பர். என் நண்பர்கள் மட்டுமல்ல, அவர்களுடைய நண்பர்களும்தான். இதில் பெரும்பான்மை வாசகர்களாக பஹாய்களே இருப்பார்கள், அல்லது பஹாய் சமயத்துடன் நெருக்கமாக உள்ளவர்களாகவும் இருக்கலாம்.

ஒரு வேளை உங்களுக்கு குழந்தைகள் இருக்கலாம், நீங்கள் அவர்களுடன் சேர்ந்து சிந்திக்கும் திறன்களை வளர்த்துக் கொள்ள விரும்பலாம். அல்லது, நீங்கள் ஒரு பொழுதுபோக்கு மன்றத்தின் அங்கத்தினராகவோ, அல்லது ஏதோ ஒரு செயற்குழுவின் உறுப்பினராகவோ, அல்லது, ஏதோ ஒரு வழியில் எதை எதையோ பிறருடன் கலந்தாலோசிக்க வேண்டிய நிலையில் உள்ளவராகவோ இருக்கலாம். அப்படியாயின், பஹாய்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் கலந்தாலோசனைக்கான முறைகள் உங்களுக்கு நிச்சயம் பயன் தருவனவாக இருக்கும். குழுவாக சிந்திப்பது குறித்து நிச்சயமாக உங்கள் நூல் நிலையத்தில் உங்களுக்குத் தேவையான நூல்கள் கிடைக்கலாம். ஆனால் பஹாய்களாகிய நாம் அவற்றைவிட நன்மை பயக்கக் கூடிய ஒன்றை அளிக்கும் நிலையில் இருக்கின்றோம். ஏனெனில், நாம் ஈடுபட்டிருப்பது மிகவும் மாறுபட்ட ஒன்றாகும்: குறிப்பிடுவதற்கும் தொடர்பு கொள்வதற்கும், அனைவருக்கும் பொதுவான, “தொடர்பு மையம்,” ஒன்று நம்மிடம் உள்ளது. இந்த பொதுவான “தொடர்பு மையம் நமக்கு இருப்பதால்தான், முன் பின் தெரியாத, ஒருவருக்கு ஒருவர் முரண்பட்ட மக்களாகிய நாம் ஒன்றுகூடியும், ஒன்றாக சிந்தித்தும் செயலாற்றவும் முடிகிறது.

தாங்கள் இட்டதே சட்டம் என இயங்கும் குடும்பத் தலைவிகள், குடும்பத் தலைவர்கள், மேல் மட்டங்களில் தன்னிச்சையாக செயல்படுவோர் — யாவரும் நீர்த்தேக்கத்தைப் போன்றவர்கள். புதிய வாழ்வு முறையாகப்பட்டது, எல்லோரும் ஒன்றாக வாழ்ந்தும், வாழ்க்கைகளைப் பகிர்ந்துகொண்டும், நம்முடைய பிரகாசங்களைப் பிறருடைய பிரகாசங்களோடு ஒன்றுகலந்து, பல்வேறு நிலையில் இருக்கின்ற உண்மையை ஒன்றாகக் குவித்துக் கொண்டும் இருக்கின்றோம். நாமெல்லோருமே இதில் பங்காளிகள். ஒரு புதிய உலகை உருவாக்கும் செயலில் நாம் ஈடுபட்டுள்ளோம். “அன்பு கலந்த கலந்தாலோசனையே” நாம் இதில் பயன்படுத்தும் முறை ஆகும்.

இது ஒரு வேளை எனது மென்மை உணர்வில் பிறந்த ஆவலாக இருக்கக்கூடும், ஆனாலும், எங்கோ ஓரிடத்தில் ஓர் அறிமுகமில்லாத அன்பர் இக்கட்டுரையை நிச்சயமாக வாசிக்க விருப்பப்படலாம் எனவே நான் நினைக்க விரும்புகிறேன்.
ஒரு சில வருடங்களுக்கு முன்பு, நான் அங்கம் வகித்திருந்த செயற்குழு ஒன்றில் என்னைத் தங்களது தலைவராக, தவறாக, நியமித்திருந்த சக அங்கத்தினர்களை, கூட்டங்களுக்குக் கையில் ஒரு மணியைக் கொண்டு வருவதன் மூலம் திடுக்கிட வைத்தேன். அது உலோகத்தால் ஆன மேஜைமணி. அதை இயக்குவதன் மூலம் அதை ஒலிக்கச் செய்யலாம். அது ஒலிக்கும் போது, அடுத்த அங்கத்தினர் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என, பெரும்பாலும் மூத்த வயதினராக இருந்த எனது மதிப்பிற்குரிய சக செயற்குழு அங்கத்தினர்களுக்கு விளக்கம் அளித்தேன். என் கருத்துப்படி, உரையாடல்களை ஒருங்கிணைத்து, எல்லா அங்கத்தினர்களும் தாங்கள் கூற வேண்டியதைச் சுதந்திரத்துடன் கூறுவதை முறைப்படுத்துவதே ஒரு செயற்குழுத் தலைவரின் கடமை ஆகும், என விளக்கமளித்தேன். ஆனாலும், பாரசீகத்தின் பல ஆயிர வருட சரித்திரத்தில் எவருமே ஒரு மணியை அடித்து ஒருவரது பேச்சை நிறுத்தியது கிடையாது. ஆக, அந்த கிழக்கு-மேற்கு செயற்குழுவின் அங்கத்தினர்கள் இப்போது அந்த விஷயத்தை முற்றாக மறந்தும் மன்னித்தும் இருப்பார்கள் என்பதே என் அவா.
ஒரு செயற்குழு அல்லது சபைத் தலைவரின் முதல் பொறுப்பு எல்லோருடைய அபிப்ராயங்களையும் சேகரிப்பதே ஆகும் என்பது என் கருத்து. இதை அவர் மறக்காது செய்வாரேயானால், சபையில் கூறப்பட வேண்டியவைகளை ஒருவரே, முக்கியமாக ஒன்பது பேர் அடங்கிய நமது சபைகளில், கூறிக்கொண்டிருக்க மாட்டார். ஒரிருவர் மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் ஒரு சபையின் தலைவரின் செயல்முறைகள் குறைபாடுகள் நிறைந்தே இருக்கின்றன. புதிய சபைகளின் அங்கத்தினராகியவர்கள், எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ஒருவரை ஒருவரும், தங்கள் சபைத் தலைவரையும், கட்டுப்படுத்தலாம். ஏனெனில், சபையின் ஒன்பது அங்கத்தினர்களும் தங்கள் அபிப்ராயங்களைத் தெளிவாக்கும் வரையில், அந்த கலந்தாலோசனை ஆன்மீக வழிகாட்டுதலைப் பிரதிநிதிப்பதாக எடுத்துக்கொள்ளப்பட முடியாது.

தனது எட்டு சக அங்கத்தினர்கள் மனதில் உள்ளவற்றை வெளிப்படுத்த முயலுவதே ஒரு சபைத் தலைவரின் முதல் பொறுப்பாக இருக்கின்றது. இதைச் செய்து முடிப்பதற்கும், அந்தக் கூட்ட விவகாரங்களை நன்கு முடித்துக் கொள்வதற்கும் அந்த தலைவருக்கு நேர ஒதுக்கீடும் மற்றும் ஒருவர் பின் ஒருவராகப் பேச வாய்ப்பு அளிப்பதற்குத் தேவையான மன உணர்வும் வேண்டும். அத்தலைவர், தான் கூற வேண்டியவைகளை இறுதியில் கூறுவதே சாலச் சிறந்ததாகவும் இருக்கின்றது. தலைவர் எனும் முறையில் தமக்குக் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சபையில் தாமே பேசிக்கொண்டிருப்பது அவருக்கு முறையாகாது. எனக்குத் தெரிந்த ஒரு சிறந்த தலைவர், சபையில் தாம் பேசுவற்கு அனுமதி கேட்ட பிறகே தமது கருத்தைக் கூறுவார். ஒரு தலைவரின் பிற கடமைகளாக, வெளியுலகிற்கு அச்சபையின் பேச்சாளராகவும், பிரதிநிதியாகவும் செயல்படுவது; பண்டிகைகளில் தலைமைத்துவ பொறுப்பேற்பது; சபையின் விருந்தினர்களை உபசரிப்பது, வேறு சில வேளைகளில் பஹாய்த் திருமண விழாக்களில் ஆஜராகுவது எனக் கூறிக்கொண்டே போகலாம். யாரோ ஒருவர் கூறியது போல, சபைத் தலைவர் என்பவர் அச்சபைக்கு ‘முகப்பாக’ விளங்குபவர் ஆவார்.

தகவல்தொடர்பு காரியதரிசிக்குத்தான் மிகவும் கடினமான கடமை உள்ளது. ஒரு பெரிய பஹாய் சமூகத்தில் அவரது தொலைபேசி எல்லா நேரங்களிலும் அடித்த வண்ணமாகவே இருக்கும். எல்லோருமே, எல்லாவற்றுக்கும் அவரையே கூப்பிடுவர், எல்லாவற்றிற்கும் அவரையே குறையும் கூறுவர். ஒரு காரியதரிசியைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் போது, அவருக்கு மதியூகம் இருக்கிறதா? அவர் கடிதங்கள் எழுதக்கூடியவரா? அவருக்குச் சீரான மனப்பான்மை இருக்கின்றதா? போன்ற கேள்விகளை ஒருவர் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளலாம். ஒரு தலைவர் தமது உடை மடிப்புக் களையாமல் செயலாற்றிச் செல்வார். ஆனால் செயலாளரோ நாள் முழுதும் உழைக்க வேண்டும். எல்லா நேரங்களிலும் சபையின் அதிதூதர் எனும் நிலையில் அவர் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் பிராணத்தியாகி என்பது நிச்சயமே!

குறிப்புகள் எடுக்கும் செயலாளரைப் பொருத்த வரையில், சபையின் இயக்கத்திற்கு அவர் உயிர்க்கூறாக விளங்குபவர். ஏனெனில், சட்ட ரீதியான மற்றும் பிற விஷயங்களின் அடிப்படையில் எழக்கூடிய பிரச்சினைகள், இந்தக் குறிப்புகள் எடுக்கும் செயலாளர் எழுதிவைத்துள்ள கூட்டக் குறிப்புகளையே வலம் வரும். கூட்டக் குறிப்புகள் படிக்கப்படும் போது தூங்கி விழுவது பெரும் தவறாகும்; உங்கள் சபையின் சரித்திரத்தை அவை தாங்கியுள்ளன–ஆகவே, உங்கள் சபை செயல்படுத்தும் அனைத்து விஷயங்கள் பற்றியக் குறிப்புகளையும் உள்ளது உள்ளவாறு இந்தக் கூட்டக்குறிப்புகள் உள்ளடக்கியுள்ளனவா என்பதை நீங்கள் நிச்சயித்துக்கொள்ள வேண்டும். இப்போது பொருளாருக்கு வருவோம். சபையின் பிற அங்கத்தினர்களையும் பார்க்கையில், பஹாய் சமூகங்கள்பால் இவரே அதிக அன்பு காட்டுபவராக இருக்க வேண்டும். இது வேடிக்கைக்காகக் கூறப்படவில்லை. பஹாய் நிதியைப் பொருத்த வரையில் ஆன்மீக ரீதியில் நாம் முதிர்ச்சியடையாத பருவத்தினராகவே இருக்கின்றோம், ஏனெனில் பணம் கிடைப்பதற்கு அரிதான ஒரு லௌகீகம் நிறைந்த உலகத்தில் பிறந்தும், அப்படி பணம் கிடைத்துவிட்டால் அதைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியவர்களாகவும் நாம் இருக்கின்றோம். பஹாய் நிதி குறித்த போதனைகள், நாம் நமது மூடிய கைகளைத் திறந்து, இலகுநிலையில் வழங்கிட வேண்டும் என அறிவிக்கின்றன. “தன்னிடம் உள்ள யாவற்றையும் தொடர்ச்சியாக அளித்தும், கண்ணுக்குத் தெரியாத ஒரு மூலத்திலிருந்து தொடர்ச்சியாக நிறைவு செய்யப்படும் ஒரு சுனை அல்லது ஊற்றைப்போல் நாம் இருக்கவும் வேண்டும்.” நிதியைப் பொருத்த வரையில் குழந்தைகளாக உள்ள நமக்கு அன்பு தேவைப்படுகிறது. எனக்குத் தெரிந்த ஒரு நல்ல பொருளாளர், எவ்வளவு சிறிய நன்கொடையாயினும் அதற்கு நன்றி செலுத்த தவறவே மாட்டார்.

கலந்தாலோசனையின் போது ஒரு மனிதர் கொடுக்கும் நிதியைப் பொருத்து அந்த மனிதரது கருத்துக்களை அந்தப் பொருளாளர் அளவிட மாட்டார். பத்தொன்பதாம் நாள் பண்டிகையின்போது அவர் அன்பர்களை நிதிக்காகக் குடைந்து கொண்டிருக்க மாட்டார். ஆனால் அவர் அன்பர்களைத் தமது நம்பிக்கைக்குப் பாத்திரமாக்கி, தமது பிரச்சினைகளை விளக்கி, அவர்கள் அளிக்கும் நிதியாகப்பட்டது சமயத்தை எவ்வாறு முன்னேற்றம் காணச் செய்கின்றது, மற்றும், நிதிகள் இல்லாத நிலையில் சமயக் காரியங்கள் எவ்வாறு நிலைகுத்திப் போகும் என்பதை விளக்குகின்றார். எப்போதாவது, தமது கவனத்தை ஈர்த்துள்ள, நிதி சம்பந்தமான தியாகம் நிறைந்த ஒரு நிகழ்வை, எவரது பெயரையும் குறிப்பிடாமல், சபையில் கூறுவார். தம்மைத் தேர்வு செய்துள்ள ஒவ்வொரு மெய்யன்பர்களின் குரலாக ஒவ்வொரு ஆன்மீக சபையின் அங்கத்தினரும் இருக்கின்றார். இதற்காக வாக்காளர்கள் தாம் தேர்ந்தெடுத்துள்ள அந்த அங்கத்தினரை நெருக்கி தமக்காகப் பரிந்து பேச வற்புறுத்தலாம் என ஆகாது–அப்படி விவகாரமான வழிகளில் அல்ல. வேறுபட்ட வாக்காளர்கள் வெவ்வேறானவர்களை இயல்பாகவே தேர்வு செய்கின்றனர். ஒரு சமூகத்தின், இன்ன இயல்போ, அல்லது வேறொரு இயல்போ, அதன் வாக்குச்சீட்டில்தான் பதிக்கப்படுகின்றது என இவ்விஷயம் குறித்து மேலும் விவரமாகக் கூறலாம்.

இங்கு நாம் சுதாகரித்துக் கொண்டு ஒரு வாக்காளராக விளங்குபவரைச் சிறிது ஆராய வேண்டும். அவர் தமது கையில் ஒரு வலிமை மிக்க ஆயுதத்தை வைத்திருக்கின்றார். ஒரு வருட காலத்திற்கான அவரது சமூகத்தின் தலைவிதி அவரது கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பஹாய் சமூக வாழ்வில் ஒரு விஷயம் தெளிவாக உள்ளது–ஒருவரோடு நாம் ஒரு செயற்குழுவில் பங்காற்றியிருந்தால் ஒழிய அவரைப் பற்றி நாம் முழுமையாகத் தெரிந்துவைத்திருக்க முடியாது; இதன் காரணமாக, ஒரு சமூகத்தின் எல்லா அங்கத்தினர்களையும் செயற்குழுக்களில் இடம் பெறச்செய்வது நன்மை பயக்கும் என்றே நான் நினைக்கின்றேன்! ஒருவரோடு ஒரு மேஜையில் உட்கார்ந்து தேநீர் அருந்தும் போதோ அல்லது ஒருவர் மேடையில் பிரசங்கம் செய்யும் போதோ அவர் மிகவும் நயமானவராகவே காணப்படுவார்; ஆனால் ஒரு செயற்குழுவில் சேவை செய்வதில் படும் உண்மையான துன்பத்திற்குப் பிறகே அவரது ஆற்றல்கள் பகிரங்கப்படுகின்றன. ஆன்மீக சபை அங்கத்தினர்கள் போலவே செயற்குழு அங்கத்தினர்களும் பஹாய் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அச்செயற்குழுவின் அங்கத்தினர்கள் வற்புறுத்துவதன் மூலம் தங்களை ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்–மற்றும் வருங்காலங்களில் ஆன்மீக சபையில் அங்கத்துவம் பெறக்கூடிய வாய்ப்பிருந்தால் இதன் வழி நல்ல அனுபவமும் பெறலாம்.

வாக்களிப்பதற்குத் தேவையான மனமுதிர்ச்சியை அடைவதற்கு நெடுங்காலம் பிடிக்கலாம். ஆன்மீக சபையில் ஒருவர் எவ்வாறு நடந்துகொள்வார் என்பது தெரியாத வரையில் அவரை அச்சபைக்குத் தேர்ந்தெடுக்கக் கூடாது. ஒருவர் பெரும் துன்பத்திற்கு உட்பட்டிருப்பதால் அவரைக் களிப்படையச் செய்யவேண்டும் என்பதாலோ, அல்லது ஒருவருடைய கொள்ளுப்பாட்டி ஆரம்கால நம்பிக்கையாளர் என்பதாலோ, அல்லது அந்த ஒருவருடைய பெயரைத்தான் நன்றாக எழுத வரும் என்பதாலோ அவருக்கு வாக்களிக்கக்கூடாது. வாக்களிக்கும் போது நமக்காக ஒரு வருட காலம் சேவை செய்யக்கூடிய ஒரு சபையைத் தேர்ந்தெடுக்கிறோம். அந்த ஒரு வருட காலத்தின் விதி நாம் வாக்குச் சீட்டில் எழுதக்கூடிய பெயர்களின் கைகளில்தான் இருக்கின்றது.

ஒரு புதிய வாக்காளர், வாக்களிக்க அமரும் போது, பெரும்பாலும் லௌகீக விஷயங்களைச் சார்ந்தே வாக்களிப்பார். ஆனால் பண்பட்ட ஒரு நம்பிக்கையாளர், உடல் ஊனமுற்றோர் நிலையத்தில் வசிக்கும் அங்கஹீனர் ஒருவரைக் குறித்து, பிரார்த்தனைக்கும் தியானத்திற்கும் பிறகு பாதுகாவலர் வரையறுத்திருக்கும் பண்புகளான: “கேள்விக்கிடமில்லாத விசுவாசம்… தன்னலமில்லாத பக்தி… நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மனம்… அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட ஆற்றலும் முதிர்ந்த அனுபவமும்,” ஆகிய பண்புகள் அவருக்கு இருப்பதாக உணர்வாரேயானால் அவருக்குக்கூட அவர் வாக்களிக்க முடியும் என்பதை உணர்ந்திருப்பார். நம் நாட்டில் தோல்வியில் முடியும் திட்டங்களுக்கெல்லாம் பல வேளைகளில் தேர்வு செய்யப்பட்ட ஸ்தாபனங்களையே குறை கூறுவதை நாம் காணுகின்றோம்; மனக்குறை உடையோருக்கெனவே இந்த ஸ்தாபனங்கள் தோற்றுவிக்கப்பட்டதாகத் தோன்றுகின்றன; இந்த அங்கத்தினர்கள் ஒரு சிலர் மட்டும் வெளியேற்றப்பட்டு வேறு சிலர் அச்சபைக்கு தேர்ந்தெடுக்கப்படக் கூடுமானால், அங்கு உடனடியாக சுவர்க்கலோகமே தோன்றிவிடும் என நம்மிடம் கூறப்படுகிறது. ஆனால், பஹாய் நிர்வாக முறையில் “அவர்கள்” மற்றும் “நாம்” என்பது கிடையாது. செயல்படும் ஒரு சமூகம் அதன் சபையெனவும், அந்தச் சபையே அந்தச் சமூகத்தின் பிரதிபலிப்பு எனவும் நாம் கூறலாம்.

ஒரு சில வேளைகளில் பின்வரும் கருத்துரைகளைச் செவிமடுக்கலாம்: நமது சபை கூடாதிருப்பதன் காரணம், அதற்குச் செய்வதற்கு அதிக காரியங்கள் இல்லை. இதற்கான பதில்: சபை அதிகமாக ஒன்றுகூடினால் செய்வதற்கு அதிக வேலைகளும் இருக்கும் என்பதாகும். ஒரு சமூகத்தில் ஆற்றப்பட வேண்டிய வேலைகள் எங்கிருந்துதான் வரும் என பஹாய்கள் எதிர்ப்பார்க்கின்றனர்? என் நினைவாற்றல் சரியாக இருக்குமானால், தெஹரானின் உள்ளூர் ஆன்மீக சபை ஒவ்வோர் இரவும் கூடுகின்றது. ஒரு நல்ல சமூகம் அதன் உள்ளூர் ஆன்மீக சபைக்கு நிறைய வேலைகளைக் கொடுத்து அதற்கு ஓய்வே இல்லாமல் செய்யும்; ஒரு நல்ல சபை அதன் சமூகத்தினரைத் தொல்லைப்படுத்தி, அவர்களை முன்னோக்கிச் செல்ல தூண்டிக் கொண்டே இருக்கும். இவை இரண்டும் சேர்ந்த ஒரு செயற்பாடு சுழலும் ஒரு சக்கரத்தைப் போன்றது.
ஒரு வேளை, ஒரு பஹாய் சபையின் கடமைகள் குறித்து உங்களுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், பஹாய் நிர்வாக முறை,
உண்மையான பஹாய் கலந்தாலோசனை என்பது நினைவில் நிற்கக்கூடிய ஒன்று. (கலந்தாலோசனையின் போது) வருங்காலத்திற்குத் தேவைப்படும் நுட்பங்களைத் தேடித் துளாவிக்கொண்டிருக்கும் நேரங்களில், ஒன்றிணைந்த இணக்கத்தை அனுபவிக்கும் போது–கணநேரத்திற்கு, ஆன்மீக ஒளியின் ஒட்டுமொத்தமான பிரதிபிம்பங்களாக (அதன் அங்கத்தினர்கள்) மாறிடும் போது–இந்த உலகம் வாழ்வதற்கு ஓர் அழகான இடமாகின்றது. செயற்குழுவின் அங்கத்தினர்கள் ஒருவரைப் போலவே மற்றவரும் சிந்தித்து ஓர் இணக்கத்திற்கு வருவது அனுபவமற்ற ஒருவருக்கு இன்பமாகின்றது. ஆனால் ஓர் அனுபவசாலிக்கோ, வேறுபாடுகளின் செயற்பாட்டின் மூலமும்–எதிர்மாறானவை ஒன்றினைந்திடுவதன் மூலமும்–(கூட்டத்தின்) உலைச்சல் சமப்படுத்தப்பட்டும், சமநிலைபடுத்தப்பட்டும், அதைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும் இணக்கத்தின் உண்மையான பேரின்பம் உண்டாகிறது.

ஒரு சமூகம் எந்த அளவிற்கு உண்மையான பஹாய் வாழ்க்கை முறையை கடைபிடிக்கின்றதோ, அந்த அளவிற்கு அதுவும் அதன் ஆன்மீக சபையின் அங்கத்துவமும் வேறுபாடுகள் கொண்டிருப்பதைக் காணலாம். இளைஞர்கள் அவர்களின் வயது கோளாறுடனும், முதியோர்கள் அவர்களது வயதிற்கேற்ற பிரச்சினைகளுடனும் இருப்பர். சிறகடித்துத் திரியும் இளம் பெண்களும், நீதிபதிகளும், குப்பைக் கூட்டுவோரும்; தமது 12 வயதில் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட வணிகரின் கருத்தைக் கவனத்துடன் ஆராயும் பகுத்தவறிவாளரும், அதில் இருப்பர். ஒருவர் மற்றவரின் குறைகளை நிவர்த்தி செய்துகொண்டு, ஒரு பிரச்சினையினை மற்றவர் காண முடியாத வேறு ஒரு கோணத்தில் ஒவ்வொருவரும் கண்டு, தனித் தனியாகத் தங்கள் சமூகத்தின் பண்புக்கூறுகளில் ஒன்றை ஒவ்வொருவரும் பிரதிநிதித்து, அதனால் தங்களுக்கே உரிய விசேஷ கருத்துக்களை வெளியிட வேண்டியக் கடமையைக் கொண்டும் இருப்பர். ஒரு மனிதன் தக்க வயதை அடைந்துவிட்டார் என்பது கிடையாது. ஒன்று இளம் வயதினராகவோ, அதிக முதியவராகவோ அல்லது தேவைக்கதிகமான நடுத்தர வயதினராகவோ இருப்பார்; ஒரு நாட் பொழுதின் வேலை அலுப்புடனோ அல்லது அதிக ஓய்வு எடுத்ததின் பயனாக சோம்பல் பட்டோ, குடும்பச் சுமையால் வளைமுதுகுடனோ, அல்லது துக்கம் அனுபவிக்காததால் தயவற்றவராகவோ, அறிவு ஆழம் அற்றவராகவோ அல்லது சில்லறைகளின் மதிப்பறியாத பெரும் செல்வந்தராகவோ; புனித விதிகளை மீறுமளவிற்குத் துணிவு கொண்டவராகவோ, அல்லது மனதில் ஒரு தேவையற்ற எண்ணம் உதித்ததற்கா மன்னிப்பு கேட்பவராகவோ, காதல் வயப்பட்டவராகவோ, அதன் வயப்படாதவராகவோ, அல்லது ஆபத்தான பருவம் எனக் கூறப்படும் ஒரு தெளிவற்ற 50 வருடக் காலத்தை உள்ளடக்கிய வயது கொண்டவராகவோ அவர்கள் இருப்பர். மனித சுபாவத்தின் இந்த அனைத்து குணங்களும் ஒரு சபைக்குள் ஒன்று திரண்டும், ஒன்று மற்றதை ஈடும் செய்கின்றன.

உங்கள் சக சபை அங்கத்தினராக யார் வரப்போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியப் போவதில்லை. நீங்கள் ஒரு வாரமே ஆன மெய்யன்பராக இருந்த போதிலும், சமயப் போதனைகளுக்கு ஏற்ப ஒவ்வோர் அங்கத்தினரும் தங்கள் அபிப்ராயங்களைத் தொடுத்தால், உங்கள் கருத்தாகப்பட்டது மற்ற எவருடைய கருத்துக்கும் இணையானதே.

நண்பர் ஒருவர் ஒரு பிரச்சினைக்கு உட்பட்டிருந்தார். அவர் அப்பிரச்சினையை ஏன் சபைக்கு எடுத்துச் செல்லவில்லை என வினவப்பட்டபோது, “நான் சபையின் ஒவ்வொரு அங்கத்தினரிடமும் அதைப்பற்றி பிரஸ்தாபித்துவிட்டேன்” எனக் கூறினார். சபையின் அங்கத்தினரான வேறொருவர், ஒரு பிரச்சினை குறித்து வினவப்பட்டபோது, சபை கூறப்போவது இன்ன இன்னதாகவே இருக்கும் எனக் கூறினார். நான் இந்த இரண்டு சூழ்நிலைகளையும் இங்கு குறிப்பிடுவதன் காரணம் இவை இரண்டுமே பொதுவாக நிலவும் மனப்பான்மைகளைப் பிரதிநிதிப்பவையே. முதலாமவர், அவர் ஒன்பது பேர்களையும், ஆனால் தனித்தனியே, சந்தித்திருந்தாலும், அவர்கள் தனித்தனியே சமூகத்தின் அங்கத்தினர்களே என்றும் ஒரு சபையின் முடிவை அவர்களால் எடுக்க முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. இரண்டாமவர், தம்மைத் தவிர்த்து பிற எட்டு பேர்களின் சார்பாக இவரே யோசித்து விட்டார்.

கீத் ரேன்சம்-கெல்லர், மிகவும் எளிமையான ஆனால் மறக்க முடியாத வகையில் பஹாய் கலந்தாலோசனையை விளக்குவார். அவர், அது ஒரு சூப் செய்வதைப் போன்றது என்பார். ஒருவர் உப்பிடுவார், மற்றவர் இறைச்சி, வேறொருவர் காய்கறிகள், இத்யாதி இத்யாதி. இறுதியில் உங்களுக்கு கிடைப்பது, உப்போ, இறைச்சியோ, காய்கறிகளோ தனித் தனியே அல்ல, ஆனால் எல்லாவற்றின் கலப்பால் உண்டாகியுள்ள புதிதான வேறொன்று.

வெற்றிகரமான பஹாய்க் கலந்தாலோசனையில், ஒவ்வோர் அங்கத்தினரும் சபையின் முடிவில் திருப்தி கொள்வார், அல்லது குறைந்த பட்சம் கலந்தாலோசனை நடத்தப்பட்ட விதத்திலாவது மனநிறைவு கொள்வார். உலகாச்சார ரீதியில் பார்த்தோமென்றால், அது பெரும்பான்மையினரைக் கவர செயலாற்றி, அவர்களை உங்கள் கட்சிக்கு வென்று, பிறகு உங்கள் வாக்கைச் செலுத்துவது: பிறகு தோற்றவர்களைப் பார்த்து மரியாதையாக எள்ளி நகையாடி, வீட்டிற்குச் சென்று உங்கள் மனைவியிடம் நீங்கள் எப்படிப்பட்ட ஒரு ஜாம்பவான் என தம்பட்டம் அடித்துக் கொள்வது. ஆனால், இது பஹாய் கலந்தாலோசனை அல்ல.எல்லா 9 சபை அங்கத்தினர்களும் ஒரே கட்சியினராகையால், தனி அங்கத்தினர் என்பவர் சேருவதற்கு எந்த கட்சியும் கிடையாது: அனைவருமே சமயத்தின் அதி பெரும் நன்மையைத்தான் விரும்புகின்றனர். ஒரு சபை அங்கத்தினர் தான் நினைப்பதைப் பலவந்தமாகத் திணிப்பதற்காகச் சபையின் கூட்டங்களுக்குச் செல்வதில்லை. அவர், மற்ற எட்டு பேர்களின் கருத்துக்களைச் செவிமடுத்த பிறகு தனது கருத்து எவ்வாறு இருக்கும் என்பதை அறியவே கூட்டத்திற்கு செல்கிறார். அவர் ஒரு பிரச்சினையைத் தன் கோணத்தில் இருந்து மட்டுமே காண்பதால், அவர், பஹாய் நிர்வாகக் கோட்பாடுகளுக்கு ஒத்த ஒரு முடிவை அடைவதற்கு அதே பிரச்சினையின் வேறு எட்டுக் கோணங்களைத் தான் அதே பிரச்சினையை நோக்கும் அதே கோணத்தோடு ஒன்று சேர்த்திட வேண்டும் என்பதை உணர்ந்துள்ளார். ஒரு மிகவும் சிறந்த முடிவென்பது எல்லா ஒன்பது கருத்துக்களையும் ஒன்றாக உள்ளடக்கியதாகவே இருக்கும். இந்த ரீதியில், ஒரு ஆன்மீக சபையானது, அமைப்பில் ஒரு பஹாய்த் தொழுகை இல்லத்திற்குச் சமமாகும். எந்தவொரு அங்கத்தினரும் கூட்டத்தை விட்டு அகலும்போது, அவர் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாகவோ, தன் கருத்துக்களைக் கூறமுடியாமல் போனதாகோ, சிறுமைப் படுத்தப் பட்டதாகவோ அல்லது கண்டுகொள்ளப்படாமல் போனதாகவோ நினைக்காமலிருப்பதை மற்ற அங்கத்தினர்கள் உறுதி செய்ய வேண்டும். அதே வேளையில், ஒர் அங்கத்தினர் தான் சிறுபான்மையினனாக இருக்கின்றோம் எனவும், சபை தவறுகள் செய்கின்றதெனவும் நினைக்கலாம். இது பரவாயில்லை.எல்லாக் காலங்களிலும் பெரும்பான்மை முடிவுகளையே நமது சமயப் போதனைகள் வேண்டுகின்றன. அப்படி தவறுகள் ஏதும் நடந்துவிட்டால், ஒற்றுமை குலையாத வரை இத்தவறுகள் நிவர்த்தி செய்யப்படலாம் எனவும் அவை உறுதியளிக்கின்றன. சிறிது அறிவாளியான ஓர் அங்கத்தினர் சில வேளைகளில் தமது அறிவின் காரணமாக கூட்டத்தில் தாம் சிறுபான்மையினராக இருக்கக் காணலாம். இது போன்ற நிலைகளில் அவர் பொறுமையையும் அன்பையும் கடைபிடித்தே வரவேண்டும். ஏனெனில் அவர் சொல்வது சரியென காலம் நிரூபிக்கும், அதே வேளை பிற அங்கத்தினர்களும் அவரது கருத்துக்களைப் புரிந்துகொள்ளவும் அவர் வெளிப்படுத்த முயலும் உண்மையின் குறிப்பிட்ட அம்சத்தை மதிக்கவும் செய்வர். ஒரு புதிய அங்கத்தினர் இது போன்ற நேரங்களில் கண்டன அடிப்படையில் ராஜிநாமா செய்வதே இயல்பாக இருக்கக் காணலாம்.இப்படி ராஜிநாமா செய்வது, அவரைத் தேர்வு செய்தோரை ஒதுக்கச் செய்வதோடு அவரது நடத்தையின்பால் தீய விளைவுகளையும் உண்டாக்கும். தனது ராஜிநாமாவிற்குப் பிறகு என்ன செய்வதென அவருக்குத் தெரியாது. நடப்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அதே வேளை சூழ்நிலையைச் சரி செய்வதற்கு உதவக்கூடிய நல்ல வாய்ப்பையும் அவர் தவறவிட்டுவிட்டதோடு, சமூகத்தில் அவரது கருத்துக்கள் கொண்டிருந்து அழுத்தமும் அவரது செயலால் குறையத் தொடங்கிவிட்டது. அதனால் அவர் கூறும் கருத்துக்களைச் செவிமடுப்போர் குறைவாகவே உள்ளனர். பஹாய் வழியாகப்பட்டது, ஈட்டி முனையை நேருக்கு நேர் சந்திப்பதும், துன்பத்தைக் கண்டு மறைந்திடாமல் அதை தேடிச் செல்லவும் வேண்டும் என்பதே ஆகும். அதே வேளை ஒருவர் நல்ல நம்பிக்கையாளராக இருப்பதோடு சகல நிர்வாகம் சார்ந்த கடமைகளிலிருந்தும் தம்மை விலக்கிக் கொள்ளலாம். ஆனால் இதன் பின் விளைவு அவருடைய நற்குணங்களும் அவரது ஆற்றல்களும் பாதிப்படைகின்றன.ஒரு முழுமையான இணக்கநயப் பண்பு இல்லாமல் சபைக் கலந்தாலோசனை நடைபெற முடியாது. இதன் காரணமாகவே பஹாவுல்லா இந்த இணக்கநயம் பற்றி வெகுவாகவே குறிப்பிட்டுள்ளார். குறுக்கிடுவது, உரக்கப் பேசுவது, முகத்தை சுழிப்பது போன்ற–நாம் வெளி உலகில் காணக் கூடியவை–உண்மையை விஞ்ஞான ஆய்வு ரீதியில் ஆராய்ந்துகொண்டிருக்கும் ஒரு கூட்டத்திற்குத் தேவையில்லை. தமது கடமையாகச் சபைத் தலைவர், பல முறைகள் பேசுவதற்கு–தேவைப்பட்டால் நல்லதொரு முடிவேற்படும் வரையில்–உங்குளுக்கு வாய்ப்பளிக்கிறார்–ஆகவே நீங்கள் இடையூறு செய்யத் தேவையில்லை. பஹாய்க் கோட்பாடுகளுக்கு இணங்க ஒரு முடிவிற்கு வருவதற்காக நீங்கள் கூறுவதை உன்னிப்பாகச் செவிமடுக்க வேண்டும் எனும் கடமையை உங்கள் சக அங்கத்தினர்கள் நிறைவேற்றினார்கள் என்றால்–நீங்கள் உங்கள் குரலை உயர்த்த வேண்டிய அவசியமில்லை.

பஹாய் கலந்தாலோசனையைச் சுலபமான ஒன்றாகச் செய்யக் கூடிய இரகசியம் ஒன்று இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அப்துல் பஹா அவர்களின் நினைவாலயத்தில் நாம் ஓதக் கூடிய அவரது நேர்வு நிருபத்தில் இது காணக் கிடைக்கிறது. நான் குறிப்பிடும் அந்த வார்த்தைகளாவன: “உமது அன்பர்களின் பாதையில் என்னைத் தூசாக்குவீராக…” இந்தக் குறிக்கோளை அடையும் ஒரே நோக்கம் கொண்டுள்ள ஒன்பது பேர் குறைந்த அளவு நிர்வாகச் சிரமங்களையே எதிர்நோக்குவர். இவையெல்லாம் என்ன கூறுகின்றன என்றால், சபை அங்கத்தினர்கள் ஒருவர் ஒருவர் மேல் அன்பு செலுத்த வேண்டும். அப்படி அவர்கள் செய்யாது போனால், அவர்கள் தங்கள் சமூகங்களைப் பாழ்படுத்திடுவார்கள், அவை அதனால் புதிய அங்கத்தினர்களை ஈர்க்கவோ அல்லது பழைய அங்கத்தினர்களைத் தக்க வைத்துக் கொள்ளவோ இயலாமல் போய்விடும்.
ஆரம்பக் காலங்களில் ஒரு பஹாய் ஆக்கா நகரம் சென்று அப்துல் பஹாவின் முகாரவிந்தத்தைக் கண்ணுற்றார். அவர், ” நான் உங்கள் முகத்தை அப்படியே அமெரிக்காவில் உள்ள அன்பர்களிடம் என்னுடன் கூட எடுத்துச் செல்ல முடியுமானால்..” எனக் கூறினார். அதற்கு மாஸ்டர் அவர்கள், என் அன்பே என் முகம். அதை அவர்களிடம் எடுத்துச் செல்லவும். அவர்கள் ஒருவர்கொருவர் கொள்ளும் அன்பில் என்னைக் காணலாம், எனக் கூறினார்.

வெண்பட்டாடை


தாஹிஃரி அம்மையார்

தாஹிரியின் மரணம்

தெஹரானுக்கு நடுவில் ஒரிடத்தில், ஒரு தோட்டத்தின் கிணற்றுக்குள், கற்களுக்கும் பாறைகளுக்கும் கீழ் அந்த உடல் சிதைந்து கிடக்கின்றது. அந்தக் கிணற்றைச் சுற்றி உயர்ந்த கட்டிடங்கள் வானளாவுகின்றன. அந்தத் தோட்டம் இருந்த இடத்திற்கு அருகே உள்ள சாலையில் நிறைய வாகனங்கள் வந்தும் போய்கொண்டும் இருக்கின்றன, பொதி சுமக்கும் கழுதைகளை பேருந்துகள் ஓரமாக ஒதுக்கித் தள்ள, ஒட்டகங்கள் சுமக்கும் சுமைகளை உலகின் பல பாகங்களையும் சார்ந்த வாகனங்கள் உரசிச் செல்கின்றன, வண்டிகள் ஆடியவாறு நகர்ந்து கொண்டிருக்கின்றன. சூரிய அஸ்தமனத்தின் போது, அருகில் உள்ள ஓர் ஓடையில் இருந்து சிலர் நீரை வாரி சாலையின் மீது இரைத்து தூசுப்படலம் எழுவதை தடுக்க முயல்கின்றனர். அந்த உடல், மண்ணோடு மண்ணாக சிதைக்கப்பட்டு அங்குதான் கிடக்கின்றது. அது மறைக்கப்பட்டுவிட்டது, மறக்கப்பட்டு விட்டது என நினைத்து மனிதர்கள் வரவும் போகவும் செய்கின்றனர்.

தோழிகளுடன் தாஹிஃரி


பெண்களின் அழகு என்பது காலம் சூல்நிலை ஆகியவற்றை சார்ந்த ஒன்றாகும். உதாரணமாக, லைலியை எடுத்துக்கொள்வோம். அவள் அவளது காதலன் மஜ்னூனை விட்டு பிரிந்த போது அவளது பிரிவை தாளமாட்டாமல் மஜ்னூன் பாலைவனத்தைத் நாடிச் சென்றான், ஏனென்றால் லைலியின் முகத்தை தவிர பிற மனிதர்களின் முகங்களை அவனால் பார்க்கமுடியவில்லை. பாலவன த்தின் மிருகங்களே அவனைச் சுற்றி உட்கார்ந்து அவனுடைய துக்கத்தில் பங்கு கொண்டன. ஆனால், இத்தனைக்கும் லைலி அழகானவளே அல்ல. எத்துனை கவிஞர்கள் அல்லது சித்திரக்காரர்கள் வேண்டுமானாலும் இதற்கு சாட்சியம் கூறுவர். அராபிய நாடுகளைச் சேர்ந்த மன்னன் ஒருவன் மஜ்னூனின் காதலில் தலையிட்டு அவனது மனதை மாற்றிட வீன் முயற்சிகள் எவ்வளவோ செய்து பார்த்தான். அந்த காதல் விவகாரத்தால் ஏற்பட்ட அத்தனை அழிவுகளுக்கும் மூல காரணமாக விளங்கிய அந்த லைலியின் முகம்தான் எத்தகையது என்பதைக் காண வேண்டுமென அந்த மன்னனின் உள்ளத்தில் ஓர் எண்ணமும் உதிக்கச் செய்தது. காவலர்கள் அராபிய இனங்கள் ஒவ்வொன்றிலும் அவளை தேடி, கண்டுபிடித்து, அரண்மனை முற்றத்தில் அந்த மன்னனின் முன்னிலையில் அவளை கொண்டு வந்து நிறுத்தினர். அரசன் அவளை பார்த்தான்; மெலிந்த தேகமுடைய கரு நிறத்தாள் ஒருத்தியையே அவன் கண்டான். அவனது அந்தப்புரத்தில் சேவையாற்றிடும் மிகத்தாழ்ந்த பணிப்பெண்கள் கூட நிறத்தில் அவளை மிஞ்சியிருந்த நிலையில், அவளைப் பற்றி மனதில் பெரிதாக நினைத்திட எதுவுமில்லாமல் இருந்தான் அந்த மன்னன். மஜ்னூன் மன்னன் மனதில் தோன்றிய சிந்தனையை புறிந்து கொண்டு, ‘அரசே, நீர் மஜ்னூனின் கண்களைக் கொண்டு லைலியின் உள் அழகு வெளிப்படுத்தப்படும் வகையில் அவளை பார்த்திட வேண்டும்,’ என கூறினான். ஆக, அழகென்பது பார்ப்பவரது கண்களைப் பொருத்த விஷயம். எல்லா வகையிலும், தாஹிரிஃ அவரது காலத்தின் சிந்தனைகளுக்கு ஒப்ப மிகவும் அழகானவர் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே.தாஹிரிஃயின் அழகைப் பொருத்த மட்டில் பின்வருமாறு ஏதாவது நடந்திருக்கலாம். ஏதோ ஒரு நாளன்று, எட்டு கோணம் கொண்டதும், அரக்கில் வடித்த இராப்பாடி ஒன்று அதன் மூடியை அலங்கரித்தும், அதே அரக்கால் ஆன ரோஜா ஒன்றைப் பார்த்து அந்த இராப்பாடி கீதம் இசைப்பதாக வடிவமைப்பும் கொண்ட தமது கண்ணாடிக் கைப்பேழையை திறந்திட்ட தாகிரிஃ, அதன் உட்பாகத்தில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடியில் தெரிந்த தமது உருவத்தைப் பார்த்து, வருங்காலத்திற்கு அளித்திடவென்று தமது உருவ வர்ணனையின் குறிப்புகள் எதும் இல்லை என்பதை பற்றி சிந்தித்திருக்கலாம். தாம் இள வயதிலேயே மறையப்போவது அவருக்கு தெரிந்திருந்து, முதிய பருவம் தனது கோடுகளை அவரது முகத்தில் வரைந்து அதன் அழகை அழிக்கப்போவதில்லை என்பதை அவர் உணர்ந்தும் இருக்கலாம். அல்லது ஒரு வேளை, நீண்ட ஜன்னலின் கீழ் தரையில் மண்டியிட்ட நிலையில், அவரது புத்தகம் ஒரு பக்கம் கிடக்க, அவருடைய முகம் பார்க்கும் கண்ணாடியில் அவர் தமது முகத்தை பார்த்து, லைலி, ஷிரீன், மற்றும் அவர்களைப்போன்ற பலரின் முகங்கள் போல் தமது முகமும் மறைந்திடும் நாள் வரும் என்பதைப் பற்றி அவர் சிந்தித்திருக்கலாம். அதனால், தமது எழுத்தாணிப் பேழையைத் திறந்து, நாணல் எழுதுகோலை வெளியே எடுத்து, காகிதத்தை தமது கையில் வைத்துக் கொண்டு, அவரிடமிருந்து நமக்கு கிடைத்துள்ள, சுருக்கமான அவரது முக லட்சன வர்ணனையை, அவர் வரைந்திருக்காலாம்:

தோழிகளுடன் தாஹிஃரி


‘உதட்டின் ஓரத்தில் ஒரு சிறிய கருப்பு மச்சம் கண்ணங்கள் இரண்டிலும் ஒவ்வொன்றாக கரு நிற கேசச் சுருள்’ என அவர் எழுதிய போது; காகிதத்தின் மீது நாணல் எழுத்தானி கிரீச்சிட்டிருக்கலாம்.தாஹிரிஃ அழகான உடைகளையும் வாசனை திரவியங்களையும் மிகவும் விரும்புவார். நன்கு சாப்பிடவும் விரும்புவார். நாள் முழுவதும் இனிப்புப் பண்டங்கள் உண்ணக்கூடியவர். ஒரு முறை, தாஹிரிஃ மறைந்து பல வருடங்கள் ஆன பிறகு, அக்காநகருக்கு வருகை தந்திருந்த அமெரிக்கப் பெண்மனி ஒருவர், அப்துல் பஹாவின் விருந்துபசரிப்பு மேஜையில் உட்கார்ந்திருந்தார்; உணவு மிகவும்

நன்றாக இருந்தது, அவரும் நிறையவே விரும்பிச் சாப்பிட்டார். ஆனால், பிறகு அவ்வாறு நிறைய உண்டதற்காக அப்துல் பஹாவிடம் மன்னிப்பு கேட்டார். ‘நற்பண்புகளும் மேன்மையும் இறைவன்பால் உண்மையான நம்பிக்கை கொள்வதில் அடங்கி உள்ளனவே அன்றி, கொண்டிருக்கும் பசி பெரிதோ அல்லது சிறிதோ என்பதில் அல்ல…,’ என அவர் அதற்கு மறுமொழி பகன்றார்.

தோழிகளுடன் தாஹிஃரி


மேன்மைமிகு தாஹிரிஃ அவர்களுக்கு பசி நன்கு எடுக்கும். அதைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்ட போது, ‘பாரம்பரியமாக வந்துள்ள புனிதமுறைகளில் விண்ணுலக மக்களின் ஒரு பண்பாக, தொடந்தாற் போல் உணவு உட்கொள்வது இருக்கும்,’ என அவர் பதிலளித்தாராம்.

அவர் சிறிய வயதினராக இருந்த போது, விளையாடுவதற்கு பதிலாக, காஃஸ்வின் நகரத்திலேயே பெரும் மத ஆச்சார்யர்களாக இருந்த அவரது தந்தை மற்றும் மாமா ஆகியோரின் சமய விவாதங்களையே செவிமடுத்துக் கொண்டிருப்பார். விரைவில், அதன் பயனாக, கடைசி ஹாடிஸ் வரை இஸ்லாத்தை பற்றி போதிக்க அவரால் முடிந்தது. அவரது சகோதரர் கூறுவது: “அவரது அறிவாற்றலுக்கு பயந்து, அவரது தமையனார்கள் மற்றும் மைத்துனர்கள் அனைவரும் அவரது முன்னிலையில் பேசவே பயப்படுவோம்,” என்பதாகும். இது, எதிலும் முதன்மை வகிக்கும், தமது சகோதரிகள் அனைவரும் அவருக்காக பனிவிடை புரிய காத்திருக்கவும் கூடிய, ஒரு பாரசீக சகோதரரின் வாயிலிருந்து வருவதாகும்.

தோழிகளுடன் தாஹிஃரி


தாஹிரிஃ வளர வளர, தமது தந்தையும் மாமாவும் வழங்கிய பாடபயிற்சிகள் எல்லாவற்றிலும் கலந்து கொண்டார்; இருநூறோ முன்னூறோ ஆண்கள் நிறைந்திருந்த ஒரே கூடத்தில், ஆனால் ஒரு திரைக்குப் பின்னால் அவர் உட்கார்ந்து, ஒரு முறைக்கு மேல் பலமுறை அந்த இருவரின் விளக்கங்களை அவர் மறுக்கவும் செய்துள்ளார். கூடிய விரைவில் கர்வம் பிடித்த உலாமாக்கள் கூட அவரது கருத்துக்கள் சிலவற்றை ஏற்க வேண்டிய நிலைக்கு வந்தனர். தாஹிரிஃ தமது மைத்துனர் ஒருவரையே மணந்து குழுந்தைகளும் ஈன்றார். இத்திருமணம், திருமண வைபவத்திற்கு முன்பாக மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காத, மணமகன் முகத்திரையற்ற மணமகளை கண நேரமே பார்க்க அனுமதிக்கப்பட்ட, சாதாரண பாரசீக திருமணமாகவே இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் காதல் திருமணங்கள் அவமானத்திற்கு உரியவைகளாக கொள்ளப்பட்டிருந்தன. ஆகவே, இத்திருமணம் நடப்பு முறைகளுக்கு ஏற்பவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லை, இல்லை, யார் மீதாவது மனித அன்பென ஒன்றை அவர் கொண்டிருந்தால், பிற்காலத்தில் அவர் சந்திக்க நேர்ந்த; இறைத்தூதர் முகம்மது அவர்களின் பேரரான இமாம் ஹாசானின் குலத்துதித்த, குஃடுஸாகவே அது இருக்கும் எனவே நாம் நினைக்க விரும்புவோம். மக்கள் குஃடுஸை எளிதில் நேசிப்பர். பார்வையை அவரிடமிருந்து அவர்களால் அகற்றவே முடியாது. ஷிராஸில் அவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வீதிகளின் வழியாக மூக்கில் தாம்புக் கயிற்றோடு வழிநடத்திச் செல்லப்பட்டபோது, தமது யஜமானரின் சமயத்திற்காக பாரசீக மண்ணில் முதன் முதலில் சித்திரவதைக்குள்ளானவர்களில் இவரும் ஒருவர். பின்னாளில் தபார்ஸி கோட்டையில் அகப்பட்டிருந்தோரை வழிநடத்தியவரும் இவரே, மற்றும் அக்கோட்டை, எதிரிகளின் நம்பிக்கை துரோகத்தினால் வீழ்ந்து, அழிக்கப்பட்டபோது, அவரது சொந்த ஊரான பார்புஃருஷில் அவர் ஜனக்கும்பலின் கைகளில் ஒப்படைக்கப்பட்டார். சங்கிலிகளால் பினைக்கப்படடு, கூட்டங்கள் அவரைத் தாக்க, அவர் சந்தை சதுக்கத்தின் வழியாக இழுத்துச் செல்லப்பட்டார். அவர்கள் அவரது உடையை நாசப்படுத்தி அவரை கத்திகளால் கீறிடவும் செய்து, இறுதியில் அவரது உடலை இரண்டாகப் பிழந்து மீதமிருந்ததை நெருப்பிலும் இட்டனர். குஃடுஸ் திருமணமே செய்துகொள்ளவில்லை. அவரது தாயாரும் பல வருடங்களாக அந்த பொண்னாளினைக் காணும் ஆசையில் வாழ்ந்திருந்தார்; குஃடுஸ் தமது மரணத்தை நோக்கி நடந்து செல்கையில், அவர் தமது தாயாரை நினைத்து, “இப்போது என் அன்னை என்னுடன் இருந்து, தமது கண்களாலேயே என் திருமண வைபவ கொண்டாட்டங்களை கண்ணுற முடிந்தால்!” என உறக்கக் கூவினார்.

தோழிகளுடன் தாஹிஃரி


ஆக, தாஹிரிஃ, காற்றில் அசையும் போது கிண்கிணியென ஒலி தரும் மெலிந்த போப்லார் மரங்கள் சூழ்ந்ததும், சாலைகளின் காவி நிற மண்ணின் ஓரமாக தெளிந்த நீரோடைகள் ஓடுவதுமான, வெய்யிலில் சுட்ட செங்கற்களை கொண்ட பொன்னிற காஃஸ்வின் நகரிலேயே வாழ்ந்தார். ஒரு பரந்த முற்றத்தில் அமைந்த, மண் ஜாடியின் நீரின் குளுகுளுப்பை கொண்டதும், தமது விளக்கையும், கைவேளைப்பாடு கொண்ட பருத்தித் துணியில் சுற்றப்பட்ட புஸ்தகங்களையும் வைக்கக்கூடிய மாடங்களும் கொண்ட, பொண் நிற வீட்டிலேயே அவர் வாழ்ந்தார். அவர் பெற்றிருந்த அனைத்தையும் பார்க்கையில் பிற பெண்களாக இருந்திருந் தால் நிச்சயமாக மனதிருப்தி அடைந்திருப்பர், ஆனால் தாஹிரிஃயோ அவற்றினால் அமைதி அடையவில்லை; அவரது மனம் அவரை அலைக்கழித்தது; இறுதியில் அவர் அனைத்தையும் துறக்க வாய்பு ஏற்பட்டு, மலைகளைக் கடந்து பாரசீகத்தை விட்டு வெளியேறி, குவிந்த கோபுரங்கள் சூழ்ந்த கர்பிலா நகரருக்கு உண்மையைத் தேடி சென்றார்.

ஓரு நாள் இரவு அவர் கனவொன்று கண்டார். இளைஞர் ஒருவர் ஆகாயத்தில் வீற்றிருந்தார்; அவர் கையில் நூல் ஒன்று இருந்தது, அதிலிருந்து அவர் செய்யுட்களை வாசித்துக் கொண்டிருந்தார். தாஹிரிஃ விழித்தெழுந்து தாம் கண்ட அந்த கனவில் கேட்டவை அனைத்தையும் ஞாபகத்தில் வைத்திருக்க அவற்றை ஒரு காகிதத்தில் எழுதி வைத்தார், பிறகு, பாப் அவர்கள் எழுதிய ஒரு விளக்கவுரையில் அதே வரிகளைக் காண, கனவில் தாம் கண்ட அந்த இளைஞர் பாப் அவர்களே அன்றி வேறு யாரும் இலர் என அறிந்து அவரை ஏற்கவும் செய்தார். அவர் உடனடியாக அதைப் பற்றி பொதுவில் பேசிடவும் செய்தார். அவர் தாம் பாப் அவர்களின் சமயத்தை ஏற்றுக் கொண்டுள்ளதை பகிரங்கப்படுத்தினார். அதன் விளைவு பெரும் வசைமாரியே. அவரது கனவர், தந்தை மற்றும் சகோதரர்கள் அனைவரும் அவர் தமது பைத்தியக்கார செய்கையை கைவிடுமாறு கெஞ்சினார்; அதற்கு மறுமொழியாக, அவர் தமது நம்பிக்கையை பிரகடணப்படுத்தினார். தமது தலைமுறை, தமது மக்களின் வாழ்க்கை முறை, பலதாரங்கள் கொள்ளும் முறை, பெண்கள் முகத்திரை அனிவது, உயர் மட்டங்களில் ஊழல், சமயகுருக்கள் இழைக்கும் தீங்கு ஆகியவற்றின்பால் அவர் வசை மாரிகள் பொழிந்தார். தாஹிரிஃ உசிதப் போக்குடையவரோ, மெதுவாக செயல்படுபவரோ அல்லர். அவர் வெளிப்படையாகப் பேசினார்; எல்லா மட்டங்களிலும் மனித வாழ்வில் புரட்சியை வேண்டினார்; இறுதியில் அவர் மரண வாசலில் நின்ற போது தமது வாயிலிருந்து புறப்பட்ட சொற்களாலேயே அது நேர்ந்தது என்பதையும் அவர் உணர்திருந்தார்.

தோழிகளுடன் தாஹிஃரி


“ஊக்கம் நிறைந்த சுபாவம், தெளிவு மிகுந்த நியாயமான பகுத்தறிவு, குறிப்பிடத்தக்க சமநிலை, வசப்படுத்த முடியாத மனவுறுதி கொண்டவர் தாஹிரிஃ”, என நிக்கோலாஸ் நமக்கு கூறுகின்றார். கோபினோவ் கூறுவது, “அவரது உரையின் குறிப்படத்தகும் தன்மை யாதெனில், அதன் கிட்டத்தட்ட திடுக்கிட வைக்கும் எளிமையே ஆகும், இருந்தும் அவர் உரை நிகழ்த்தும் போது.நாம் நமது ஆன்மாவின் ஆழம் வரை நெகிழ்வுற்றும், வியப்பால் நிரைந்தும், கண்களில் நீர் மழ்கிடவும் செய்வோம்.” எவருமே அவரது வசீகர சக்தியிலிருந்து தப்பிக்க முடியாதென நபில் கூறுகிறார்; ஒரு சிலரே தொற்றிக்கொள்ளும் அவரது சமய நம்பிக்கையிலிருந்து தப்பிக்க முடியும். அனைவருமே அவரது சீலத்தின் அசாதாரண தன்மைகளுக்கு சாட்சியம் கூறி, அவரது வியப்பூட்டும் இயல்பால் ஆச்சர்யமடைந்து, அவரது தூய்மையான சமயநம்பிக்கைக்கு சாட்சியமும் பகர்வர்.

மிகவும் குறிப்பிடத்தக்கவையாக தாஹிரியைப் பற்றிய அப்துல் பஹாவின் நினைவுகள் உள்ளன. அவர் சிறுவராக இருந்த போது ஒரு நாள், தாஹிரிஃ அவரை தமது மடியில் உட்கார்த்தி வைத்து, கதவிற்கு வெளியே உட்கார்ந்திருந்த உயர்திரு சைய்யிட் யாஹ்யா-இ-டாராபியுடன் உரையாடிக்கொண்டிருந்தார். சைய்யிட் அவர்கள் பெரும் கல்விமான். உதாரணமாக முப்பதாயிரம் இஸ்லாமிய மரபுக் கூற்றுகளை மனனம் செய்து வைத்திருந்தார்; திருக்குரானின் மையக் கூற்றுகள் அனைத்தையும் தெரிந்து வைத்திருந்ததோடு, பாப் அவர்களின் உண்மையை உணர வைக்க அப்புனித நூலில் இருந்து தகுந்த மேற்கோள்களை எடுத்துக்காட்டும் திறமை பெற்றவர். தாஹிரிஃ அவரைக் கூவி அழைத்து, “ஓ யாஹ்யா! நீர் ஒரு உண்மையான கல்விமானாக இருந்தால், உமது நம்பிக்கையை மெய்ப்பிப்பவைகள் சொற்கள் அன்றி அவை செயல்களாக இருக்கட்டும்,” எனக் கூறினார். சைய்யிட் அதை செவிமடுத்தார், வாழ்க்கையில் முதன் முதலாக அதை புறிந்துகொள்ளவும் செய்தார்; பாப் அவர்களின் சுயஉரிமை கோன்ரிக்கைகளாக இருப்பனவற்றை நிரூபிப்பது மட்டும் அன்றி, தாம் தம்மையே தியாகம் செய்து சமயத்தை பரவச் செய்ய வேண்டும் என்பதையும் உணர்ந்தார். அவர் எழுந்து வெளியே சென்றார், பல இடங்களுக்கு பிராயணம் செய்து சமயத்தை போதித்தார், இறுதியில் நய்ரீஸ் நகரின் செஞ்சாலைகளில் தமது உயிரையும் தியாகம் செய்தார். அவர்கள் அவரது சிரசை துண்டித்து, அதற்குள் வைக்கோலை தினித்து, நகருக்கு நகர் அதை ஊர்வலமாக கொண்டு சென்றனர். தாஹிரி பாப் அவர்களைக் கண்டதே இல்லை. அவர் பாப் அவர்களுக்கு தமது அன்பை வெளிப்படுத்தும் ஒரு செய்தியை அனுப்பினார்: “பிரகாசிக்கும் உமது வதனத்தின் ஒளி பளிச்சிட, உமது திருமுகத்தின் ஓளிக் கதிர்கள் உயரே பாய்ந்தன; நான் உங்கள் பிரபு அல்லவா எனும் வார்த்தையை கூறுங்கள், அது நீரே, நீரே” என நாங்களும் மறுமொழி பகர்வோம். நான் அல்லவா எனும் தாரையின் வரவேற்பொலியால், துன்ப முரசுகள்தான் சப்தமாக முழங்கிட என் இதய வாசலருகே, காலடி பதித்து அழிவுப் படைகளும் கூடாரம் கொண்டன…“

அவர் பாப் அவர்களின் ஜோசப்பின் சூரா பற்றிய விளக்கவுரையை பாரசீக மொழிக்கு மொழி மாற்றம் செய்யும் காரியத்தையும் மேற்கொண்டார். பாப் அவர்களும் தாஹிரியை, அந்த அமரத் திருக்கூட்டத்தினரில் ஒருவராக, உயிர் அட்சரங்களில் ஒருவராக, நியமிக்கவும் செய்தார். சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக, இறை தூதர் முகம்மது அவர்களின் பேரர் இமாம் ஹுசேய்ன் தாகத்தாலும் காயங்களாலும் வீழ்ந்துபட்ட, கர்பிலாவில் அவரை இப்போது கண்ணுறுகின்றோம். அவரது (இமாம் ஹுசேய்னின்) வருடாந்திர விண்ணேற்ற நாளன்று, நகரமே அவரது நினைவால் கருப்பு உடையனிந்து அவருக்காக கதறியழும்போது, இவர் பாப் அவர்களின் பிறந்த நாளை கொண்டாட விழாக்கால உடையனிந்து நிற்கின்றார். இது ஒரு புதிய நாளென அவர்களிடம் கூறுகின்றார்; பழைய வேதனைகள் மறந்துவிட்டன. பிறகு ஹௌடா எனப்படும் குதிரை மேல் பூட்டிய திரைகளிடப்பட்ட ஒரு வித பல்லக்கில் பாக்தாத் சென்று தமது போதனையை தொடர்ந்தார். இங்கு, ஷியா, சுன்ன, கிருஸ்தவ மற்றும் யூத சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள் அவர் செல்லும் தவறான வழியை அவருக்கு விளக்க முற்பட்டனர்; ஆனால் அவரோ பதிலுக்கு அவர்களை பிரமிக்கச் செய்தார், நிலை குலைந்து ஓட வை த்தார், பிறகு அதன் பயனாக துருக்கிய பிரதேசங்களிலிருந்து வெளியேறும்படி ஆணையும் இடப்பட்டார். பின் பாரசீகம் நோக்கி பிரயாணம் செய்தார், வழி நெடுக பாப் அவர்களுக்கு விசுவாசிகளை திரட்டிடவும் செய்தார். எங்கெங்கும், அரசபுத்திரர்களும், உ லாமாக்களும், அரசாங்க அதிகாரிகளுமென அவரைப் பார்க்க திரண்டனர்; பல பள்ளிவாசல்களின் பீடங்களிலிருந்து அவருக்கு வாழ்த்துரைகள் எழுந்தன; அதில் ஒன்று, “அதி உயர்ந்தவை என நாம் அடைந்துள்ள அனைத்தும் அவரது பரந்த அறிவிற்கு முன் னால் ஒரு துளிக்குச் சமமே” என்பதாகும். இது, ஊமைகளாகவும், வெறும் நிழல்களாகவும், தங்கள் வாழ்க்கைச் சக்கரத்தை முகத்திரைக்குப் பின்னால்: திருமணமும், நோயும், குழந்தைப் பேறும், சாதம் கிண்டுவதும், ரொட்டிகள் சுடுவதும், வெல்வெட் துனியில் இலைகள் தைப்பதும், பிறகு ஊர் பேர் தெரியாமல் இறந்து போவதும் என இருக்கும் பெண்கள் நிறைந்த ஒரு நாட்டில் பிறந்த ஒரு பெண்ணைப் பற்றி கூறப்பட்டதாகும்.

கர்பிலா, பாக்தாத், கிர்மான்ஷா, பிறகு ஹமடான் நகர்களுக்கு அவர் விஜயம் செய்தார். முடிவில் அவரது தந்தை அவரை காஃஸ்வின் திரும்பும்படி ஆணையிட்டார். அவர் காஃஸ்வின் திரும்பியவுடன், அவரது கனவனான முஜ்டாஹிட், அவரை தமது வீட்டிற்கு வந்து தம்மோடு வாழ உத்தரவிட்டான். அதற்கு அவரது மறுமொழியாக: “அகம்பாவமும் கர்வமும் மிக்க எனது உறவினனிடம் கூறுங்கள்… ” “என் விசுவாசமான துணைவனாகவும் சகாவாகவும் இருப்பதே உமது ஆவலாக இருந்திருந்தால் நீர் என்னை கர்பிலாவில் சந்திக்க விரைந்து வந்து, காலால் நடந்து என் பல்லக்கை காஃஸ்வின் வரை வழி நடத்தி வந்திருப்பீர். நானும் அக்கரையின்மை எனும் உமது துயிலிலிருந்து உம்மை எழுப்பி உண்மைக்கான வழியையும் உமக்கு.காண்பித்திருப்பேன். ஆனால் இது நடக்கப்போவதில்லை… இம்மையிலும் சரி மறுமையிலும் சரி நான் உம்முடன் இனைந்திருப்பதென்பது ஆகாது. என் வாழ்விலிருந்து உம்மை நிரந்தரமாக வீசி எறிந்துவிட்டேன்.”

அதன் பிறகு அவரது மாமாவும் கனவனும் அவரை சமயத் துரோகி என பிரகடனம் செய்து, அவருக்கெதிராக இரவும் பகலுமாக சதி செய்தனர். ஒரு நாள் காஃஸ்வின் வழியாக ஒரு முல்லா போய்க்கொண்டிருந்தார், அப்போது முரடர்கள் சிலர் ஒரு மனிதனை தெரு வழியாக இழுத்துச் செல்வதைக் கண்டார்; அவர்கள் அந்த மனிதனின் தலைப்பாகையை தாம்புக்கயிறு போல் அவரது கழுத்தில் கட்டி அவரை இம்சித்துக் கொண்டிருந்தனர். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோர், அந்த மனிதன், பாப் அவர்களின் சீடர்கள் இரு வரைப் பற்றி புகழ்ந்து பேசி விட்டதாக தெரிவித்தனர்; அதற்காக தாஹிரிஃயின் மாமா அவரை ஊரைவிட்டு வெளியேற்றுகிறார் எனவும் தெரிவித்தனர். அந்த முல்லா மனக் கிலேசமுற்றார். அவர் ஒரு பாப்’இ அல்ல, ஆனால் இம்சிக்கப்பட்ட அந்த இருவரையும் அவர் நேசித்தார். அவர் கத்திகள் செய்யப்படும் சந்தையடிக்குச் சென்று குத்துவாள் ஒன்றையும் மிகக் கூர்மையான ஈட்டி முனை ஒன்றையும் வாங்கிக்கொண்டு, அவற்றை உபயோகிக்க உசிதமான நேரத்திற்காக காத்திருந்தார். ஒரு நாள் காலைப்பொழுதில், மூதாட்டி ஒருவர் நொண்டிக் கொண்டு பள்ளிவாசலில் நுழைந்து, ஒரு கம்பளத்தை விரித்தார். அதன் பிறகு தாஹிரிஃயின் மாமா அதன் மீது தனியே பிரார்த்தனை செய்வதற்கு வந்தார். அவர் நெடுஞ்சான் கிடையாக தரையில் படுத்தபோது நமது முல்லா ஓடிச் சென்று அவர் கழுத்தில் ஈட்டி முனையை பாய்ச்சினார். அவர் ஓலமிட, முல்லா அவர் உடலைத் திருப்பிப் போட்டு, குத்துவாளை எ டுத்து அவர் வாயில் ஆழமாக குத்தி இரத்தம் பீரிட்டோட அவரை பள்ளிவாசலின் தரையிலேயே கிடக்க விட்டுச் சென்றார்.

அந்தக் கொலையால் காஃஸ்வின் நகரமே அல்லோலகல்லோலமாகியது. அந்த முல்லா தானே கொலை செய்தாரென ஒப்புக்கொண்டும், அவர்தான் கொலை செய்தார் என கொலையுண்டவர் சாவதற்கு முன் வாக்குமூலம் கொடுத்த போதும், ஒரு பாவமும் அறியாத பல மக்கள் குற்றஞ்சாட்டப்பட்டு கைதிகளாக்கப்பட்டனர். தெஹரானில், பஹாவுல்லா ஒரு சில நாட்கள் கொண்ட சிறை தண்டனையான தமது முதல் சித்திரவதையை அனுபவித்தார் ஏனெனில் அவர் இவர்களுக்காக வாதாடி அவர்களுக்கு உணவும் பணமும் கொடுத்தாராம். இறந்தவரின் வாரிசுகள் ஒன்றுமறியாத ஒரு அராபியரை, கர்பிலாவைச் சேர்ந்த ஷேய்க் சாலே என்பவரை, கொண்றனர். தாஹிரிஃயின் ரசிகரான இவரே பாரசீக மண்ணில் இறைவனின் சமயத்திற்காக இறந்த முதல் மனிதராவார்; அவரை தெஹரானில் கொன்றனர்; அவர் தமது கொலயாளியை தான் மிகவும் நேசிக்கும் ஒரு நண்பரை வரவேற்ப தைப் போல் வரவேற்று, தமது இறுதி வார்த்தைகளாக, “எனது எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையுமாக உள்ளவரே! உங்களைக் கண்ட வினாடி முதல் மனிதர்களின் எதிர்ப்புகளையும் நம்பிக்கைகளையும் நான் கைவிட்டுவிட்டேன்,” எனும் வார்த்தைகளை விட்டுச் சென்றார். மீதமிருந்த மற்ற கைதிகள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டதாகவும், புதைப்பதற்கு அவர்கள் உடல்களின் ஒரு பகுதி கூட மிஞ்சவில்லை எனவும் கூறுப்படுகிறது. இருந்தும் இறந்து போன முஜ்டாஹிடின் வாரிசுகள் மன திருப்தி அடையவில்லை. அவர்கள் தாஹிரிஃயை குற்றம் சாட்டினர். அவரை அவரது தந்தையின் வீட்டில் அடைத்து வைத்து, அவரை கொலை செய்யவும் ஆயத்தமானார்கள்; ஆனால் அவரது காலம் கனியவில்லை. அப்போது ஒரு நாள் பிச்சைக்கார கிழவி ஒருத்தி வாசலில் நின்று உணவுக்காக ஓலமிட்டாள்; ஆனால் அவள் பிச்சைக்காரியல்ல பஹாவுல்லாவால் அனுப்பப்பட்ட ஒருவர் மூன்று குதிரைகளுடன் காஃஸ்வின் கோட்டைவாசலருகே நிற்ப தாக தகவல் கொண்டுவந்தவள். தாஹிரிஃ அப்பெண்மணியுடன் தப்பித்துச் சென்று, காலைப்பொழுதிற்குள் தெஹரானை அடைந்து, பஹாவுல்லாவின் வீட்டையும் சேர்ந்தார். இரவு முழுவதும், அவர்கள் அவரைத் தேடினர், ஆனால் அவர் மறைந்துவிட்டார்.

இப்போது காட்சி பாடாஷ்ட் பூங்காவின்பால் திரும்புகிறது. பசுமையான தோட்டங்கள், அவற்றை மறைத்திடும் மண்சுவர்கள், பாலையின் மீது ஓடிய ஒரு நீரோடை, அதற்கப்பால், வானளாவும் உயர்ந்த மலைகள். “துன்பம் தரும் மலை” என பாப் அவர்களால் வ ருணிக்கப்பட்ட ஷிஃரீக்கில் பாப் அவர்கள் சிறையில் இருந்தார். அவர் வாழ இரண்டு குறுகிய வருடங்களே எஞ்சியிருந்தன. இப்போது பஹாவுல்லா, முன்னனி பாப்’இக்கள் என எண்பத்தொரு பேருடன் பாடாஷ்ட் வந்து சேர்ந்தார். அவரது ஸ்தானம் இதுகாரும் அறியப்படாமலேயே இருந்தது. பாப் அவர்களால், முகம்மது அவர்களால், இயேசுவால், ஸாராதுஸ்ட்ராவால், மற்றும் அனேகரால் வாக்களிக்கப்பட்டவர் அவர். நூற்றாண்டுகள் தோறும் தூதருக்குப்பின் வந்த தூதர்களான அவர்களால் முன்கூறப்பட்ட அவர் அறியப்படாமலேயே இருந்தார். அவரது நாமம் உலகம் முழுவதும் நேசிக்கப்படப் போகின்றது என படாஷ்ட்டில் உள்ளோர் எப்படி அறிந்திருக்க முடியும்? உலக முழுவதுமுள்ள நகரங்களில்; சான் பிரான்சிஸ்கோ, அடிலேய்ட், என முன் கேட்டறியப்படாத வினோதமான பெயர்களைக் கொண்ட இடங்களில்? அனுமானிக்கப்படாத ஆண்களும் பெண்களுமென அவரது நாமத்தை சேவிக்க முன்னெழப்போவோரை அவர்கள் எவ்வாறு கண்டிருக்க முடியும்? ஆனால் தாஹிரிஃ கண்டார்..“அவரது முகத்தில் இருந்து பளிச்சிடும் ஒளியில், விட்டில்களைப் போல் நடனமாடிடும் அவரது நேசர்களின் ஆன்மாக்களை பாருங்கள்” என அவர் எ ழுதினார். இந்த பாடாஷ்ட் எனும் ஊரில்தான் பழைய விதிகள் முறிக்கப்பட்டன. இந்நாள் வரை பாப்’இக்கள், அவர்களது தலைவர் இஸ்லாத்தை மறுஸ்தாபிதம் செய்யவே வந்துள்ளார் என நினைத்தனர்; ஆனால் இங்கோ பழைய விதிகள் ஒவ்வொன்றாக மறைவதை கண் ணுற்றார்கள். அவர்களது குழப்பமும், மனக் கிலேசமும், அதிகரித்துக் கொண்டே போனது, ஒரு சிலர் தங்களின் பழைய மார்க்கத்தை இருகப் பிடித்துக்கொண்டு புதிய வழியிற் செல்ல இயலாமலும் நின்றனர். பிறகொரு நாள், அவர்கள் பஹாவுல்லாவுடன் ஒன்றாக உட்கார்ந்திருந்த வேளை, அதிரடி போன்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. தாஹிரிஃ அவர்கள் எல்லோருக்கும் முன்னால் வந்து நின்றார். ஆனால் அவர் எப்படி வந்து நின்றார்? அவர்களுக்கு முன் அவர் தமது முகத்திரை இல்லாமல் தோன்றினார்! தாஹிரிஃ, புனிதத் தாஹிரிஃ, எவருடைய நிழலைக் கூட பார்ப்பது தவறு என மக்கள் நினைத்தனரோ; தமது காலத்தில் பெரு மதிப்புடன் திகழ்ந்த அந்த தாஹிரிஃ, தமது முகத்தை மறைத்த திரையை அகற்றிவிட்டு, அவர்களுக்கு களிப்பூட்ட வந்த ஒரு நடன மாதைப்போல் அவர்கள் முன் நின்றார். மின்னும் அவரது உடல் நிறத்தை, கூறிய இரு விழிகளின் மேல் இரு வாட்களைப் போல் ஒன்றினைந்திருந்த அவரது புருவங்களை, அவர்கள் கண்டனரே! ஆனால் அவர்களால் அவரை பார்க்க முடியவில்லை. ஒரு சிலர் தங்கள் முகங்களை தங்கள் கைகளால் மூடிக் கொண்டனர், ஒரு சிலர் தங்கள் ஆடை களை தலை மேல் போட்டு மூடிக் கொண்டனர். ஒருவர் தமது கழுத்தை தாமே அறுத்துக் கொண்டு இரத்தம் கசிந்த நிலையில் வீரிட்டவாறு ஓடிச் சென்றார். பிறகு, அங்கு மீதமிருந்தோரைப் பார்த்து உரத்த குரலில் தாஹிரிஃ பேசினார், அப்போது அவரது உரை திருக்குரானின் வார்த்தைகளை ஒத்திருந்தது எனக் கூறுவர். “இந்த நாள், இந்த நாள் கடந்த காலங்களின் தளைகள் உடைத்தெறியப்பட்டுள்ள நாள் காஃய்யிம் உச்சரிக்கவிருக்கும், பூவுலகின் குடித்தலைவர்களையும் உயர்மட்டத்தில் உள்ளவர்களையும் மருண்டோடச் செய்யக்கூடிய அந்த வார்த்தை நானே!” அவர், மேலும், எவ்விதம் பழைய விதிகள் புதிய விதிகளின்பால் வழிவிட்டுச் செல்கின்றன என்பது பற்றி கூறி, புனித நூலில் இருந்து: “மெய்யாகவே, பூங்காவனங்களிலும், ஆறுகளின் இடையிலும், ஆற்றல் மிகு அரசரின் முன்னிலையில், பக்தியுடையோர் உன்மையின் ஆசனத்தில் வீற்றிருப்பர்.” எனும் தீர்க்கதரிசனமான வார்த்தைகளோடு தமது உரையை முடித்தார். தாஹிரிஃ, பஹாவுல்லா பிறந்த அதே ஆண்டில்தான் பிறந்தார். அவர் கொலை செய்யப்படும் போது அவருக்கு முப்பத்து ஆறே வயது. ஐரோப்பிய கல்விமான்கள் அவரை, அவரது ஒரு பெயரான குர்ராத்துல் அய்ன், ‘கண்களின் ஆறுதல்’ எனும் பெயரால் நெடுங் காலமாக அறிந்து வைத்துள்ளனர். பாரசீகர்கள், மொழிமாற்றத்திற்காக காத்திருக்கும் அவரது கவிதைகளைப் பாடுகின்றனர். பல நாடுகளில் உள்ள பெண்கள் அவரைப் பற்றி கேள்விப்பட்டு, அவர் மூலமாக மனோபலமும் அடைகின்றனர். ஆண்கள் அவரை வாழ்த்திப் பேசியுள்ளனர். கோபிநோவ், அவரது அழகை வருணிக்கும் போது, “(ஆனால்) இந்த இளம் பெண்ணின் மனமும் சீலமும் அதைவிட (அவரது அழகைவிட) பன்மடங்கு சிறப்பு வாய்ந்தவை” எனக் கூறியுள்ளார். சர் பிராண்சிஸ் யங்ஹஸ்பன்ட் கூறுவது: “… அவர், செல்வங்கள், குழந்தைகள், பெயர் மற்றும் ஸ்தானம் ஆகியவற்றை தமது தலைவரின் சேவைக்காக தியாகம் செய்தார்… பாரசீக மொழியில் அவரது கவிதைகளே மன நெகிழ்ச்சி மிகச் செய்பவைகளாக இருந்தன.” திரு ஜி. ரி. செய்ன், “. . .அவரது அக்னியைப் போன்ற உற்சாகத்தினாலும் அவரது முற்றிலும் உலகைத் துறந்த போக்கினாலும் நாம் முதன்மையாகக் கவரப்படுவோம். உண்மையில், குஃடுஸ்ஸிற்கு இருந்தது போன்றே… இந்த உலகம் தாகிரிஃக்கும் ஒரு கைப்பிடி மண்ணின் மதிப்பே கொண்டிருந்தது”. இப்போது நாம் அவரை தெஹரான் நகரமுதல்வரின் இல்லத்தில் நடக்கும் ஒரு திருமணத்தில் காண்கின்றோம். அவரது நெற்றியில் விழும் கேசச் சுருள்கள் குட்டையாக உள்ளன, அவர் தமது தலையில், முகவாய்க்கட்டையின் கீழ் ஊசியினால் ஒன்று சேர்க்கப்பட்ட, தோற்பட்டை வரை விழும் ஒரு பூப்போட்ட கைத்துனியை அனிந்துள்ளார். இடையை இருகப் பிடிக்கும் உடை தரை வரை நீண் டுள்ளது; அது கைத்தறியினால் ஆனது, சித்திரப்பூ வேளைப்பாடு கொண்டதாகவும், ஜீவமரத்தின் வடிவம் அதில் வரையப்பட்டும் உள்ளது. அவரது சிறிய செருப்புகள் விரல் நுனியின் மேற்பக்கமாக வளைந்துள்ளன. சுகந்த வாசனை திரவியங்கள் அனிந்த மெல்லியலாள்களெனும் பெண்கள் கூட்டம் அவரைச் சுற்றி தள்ளிக்கொண்டும் சலசலத்துக் கொண்டும் உள்ளது. அவர்கள் குவிந்த இனிப்புப் பண்டங்கள் அடங்கிய வெள்ளித் தட்டுகள் உள்ள தங்கள் மேஜைகளை விட்டு வந்துவிட்டனர். திருமண வைபவத்திற்காக அமர்த்தப்பட்ட, தங்கள் கைவிரல்களை சொடுக்கியும் இடுப்பை ஒடித்தும் ஆடக்கூடிய நடனமணிகளை அவர்கள் மறந்துவிட் டனர். விருந்தினர்கள், தாஹிரிஃ கூறுவதை, இங்கு நகரமுதல்வரின் இல்லத்தில் கைதியாக உள்ளவர் கூறுவதை செவிமடுத்துக் கொண்டுள்ளனர். அவர் புதிய சமயத்தைப் பற்றி, அது கொண்டுவரக் கூடிய புதிய வாழ்வு முறையைப்பற்றி அவர்களுக்கு கூறுகின்றார். அவர்கள் நடணப்பெண்களையும் இனிப்புப் பண்டங்களையும் மறந்தே விட்டிருந்தனர். எவருடைய இல்லம் தாஹிரிஃக்கு சிறையாக இருந்ததோ, அந்த மாஹ்முட் காஃன் ஆகிய நகரத் தலைவர், ஒரு வினோதமான முடிவை அடைந்தார். இந்த மாஹ்முட் காஃன் தாஹிரிஃ அவரது இல்லத்தில் கைதியாக இருந்தகாலத்தில் அவர்பால் அன்பாக ந டந்தும் அவருக்கு நம்பிக்கை அளிக்கவும் செய்தார் என கோபினோவ் கூறுகின்றார். அவர் மேலும் கூறுவது, தாஹிரிஃக்கு இவ்வித நம்பிக்கை அளிப்பு எதுவும் தேவைப்படவில்லை, என்பதாகும். மாஹ்முட் காஃன் தாஹிரிஃயின் சிறைவாசத்தைப் பற்றி பேசும்போதெல்லாம், அவர் குறுக்கிட்டு, தமது சமயத்தை பற்றியே போதிப்பார்; உன்மை மற்றும் பொய்யைப் பற்றி கூறுவார்; எது நிஜம் எது மாயை என்பது பற்றி விவாதிப்பார். ஒரு நாள் காலை மாஹ்முட் காஃன் அவருக்கு நற்செய்தி ஒன்றை கொண்டுவந்தார்; நாட்டுப் பிரதமரிடமிருந்து; அவர் பாப் அவர்களின்பாலான தமது நம்பிக்கையை துறக்க வேண்டியதுதான், பிரதமர் அவர்கள் அதை நம்பாவிட்டாலும்கூட அவரை உடனேயே விடுதலை செய்துவிடுவார் எனும் செய்தியே அது. “இந்த அநித்தியமான, மதிப்பற்ற உடலை, மேலும் ஒரு சில நாட்கள் உயிருடன் வைத்திருப்பது எனும் இந்த வெற்று காரணத்திற்காக… நான் எனது நம்பிக்கையைத் துறப்பேன் என கனவு காண வேண்டாம்,” என பதிலளித்தார். “ஓ மாஹ்முட் காஃனே! நான் சொல்லப்போவதை இப்போது நீர் கேளும்… நீர் எவருக்கு சேவை செய்கின்றீரோ, அந்த யஜமான் உமது உற்சாகத்தை ஈடு செய்யப்தோவது இல்லை; மாறாக, அவரது உத்தரவின் பேரில் நீர் கொடுமையாக அழியப்போகின்றீர். உமது இறுப்பிற்கு முன், உண்மையான அறிவின்பால் உமது ஆன்மாவை ஏற்றம் அடையச் செய்ய முயற்சிப்பீர்.” என தெரிவித்தார். அதை நம்பாமல் நகரத்தலைவர் அந்த அறையை விட்டகன்றார்.

ஆனால் 1861-இன் பஞ்சகாலத்தில் மக்கள் செய்த புரட்சியில் தாஹிரிஃயின் கூற்று மெய்ப்படுத்தப்பட் டது. அந்த உணவுப் பஞ்சத்தால் ஏற்பட்ட புரட்சி; மற்றும் மாஹ்முட் காஃனின் இறப்பு பற்றிய நேரடி சாட்சியம்: “தெஹரானில் ஏற்பட்ட கொந்தளிப்பு ஒரு முடிவை நெருங்கியது, கடக்க முடியாதபடி இருந்த சாலைகளினால் உணவு மக்களைச் சென்று அடையவில்ல. ஐரோப்பியர் எவரேனும் சாலையில் தென்பட்டவுடன் பஞ்சத்தால் அடிபட்ட பெண்கள் அவரைச் சூழ்ந்து உதவி கோரி முறையிட்ட னர்… மார்ச் முதல் நாளன்று… பாரசீக தலைமை செயலாளர், முகம் வெளுத்தும் நடுங்கியவாறும் உள்ளே வந்து, புரட்சி ஒன்று வெடித்து விட்டதாகவும், கலாந்தர் எனப்படும் நகரத் தலைவர் அப்போதுதான் கொல்லப்பட்டுள்ளதாகவும், சந்தை தெருக்கள் வழியாக மக்கள் அவரது உடலை முழு நிர்வாணமாக இழுத்து வருகிறார்கள் எனவும் தெரிவித்தார். விரைவில் ஒரு பேரிரைச்சல் கேட்டது, சன்னல் வழியாக பார்த்தபோது, தெரு முழுவதும் மிகவும் கொந்தளித்துப் போயிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், கொலைக் கள த்தை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டும், அங்கு நிர்வாணமாக தொங்கவிடப்பட்டும் இருக்கப்போகும் மூன்று பிணங்களைச் சூழ்ந்திருந்தனர். அவ்விஷயத்தைப் பற்றி தீர விசாரித்த போது, பிப்ரவரி 28-ஆம் திகதி அன்று, வேட்டையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஷா மன்னனை, உணவு பற்றாக்குறை பற்றி கோஷமிட்டும், அவரது கண் முன்னேயே ரொட்டிக் கடைகளை தீயிட்டும் சூரையாடிக் கொண்டும் இருந்த பல ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம் சூழ்ந்தது… அடுத்த நாள், மார்ச் முதல் நாளன்று… ஹாஜி பாபாவின் ஸைனாப் வீசியெரியப்பட்ட கோபுரத்தின் மீது ஷா மன்னன் ஏறி தூரதர்சினியைக் கொண்டு மக்கள் கொந்தளிப்பை பார்த்துக் கெ ணண்டிருந்தான். நன்கு உடையனிந்தும், பல வேலையாட்களுடனும் இருந்த கலாந்தர் கோபுரத்தின் மீது தானும் ஏறி, அவ்வித நிலை ஏற்படும் வரை நடவடிக்கை எடுக்காத, தன்னை கடிந்து கொண்ட அரசனோடு சேர்ந்து தானும் நின்று கொண்டிருந்தான். அரசனின் கண்டிப்பை பொறுக்க மாட்டாத கலாந்தர், அந்த புரட்சியை தானே அடக்கிக் காண்பிக்கின்றேன் என சவாலிட்டு, கீழே இறங்கி ஒரு பெரும் தடியால் பல பெண்களை தன் கைகளாலேயே தாக்கினான். அதை தாங்கமுடியாமல், தாங்கள் பட்ட காயங்களை அரசனிடம் காண்பித்து அதற்கு நியாயம் கேட்டு பெண்கள் கூட்டம் அரசனிடம் வந்தது. அரசன் கலாந்தரை அழைத்து, “என் கண் முன்னாலேயே நீர் எமது பிரஜைகளிடம் இவ்விதம் நடந்து கொள்ளும் போது உமது இரகசியச் செயல்கள் எல்லாம் இன்னும் எவ்வ ளவு கொடியனவைகளாக இருக்கக் கூடும்?” எனக் கூறினான். பிறகு தமது பணியாட்கள் பக்கம் திரும்பி, “இவனை கால்கட்டைகளால் பினைத்து பாஸ்டினாடோவைப் பிரயோகியுங்கள்” என ஆணையிட்டான். அந்த கட்டளை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் போதே “தனாப்! கயிறு, கழுத்தை நெறித்துக் கொல்லுங்கள்,” எனும் அந்த பயங்கர வார்த்தையை அரசன் உச்சரித்தான்.

ஓரிரவு கலாந்தரின் மனைவியை தமது அரைக்கு தாஹிரிஃ அழைத்தார். அவர் மின்னும் வெண்மை கொண்ட வெள்ளை பட்டினால் ஆன ஒரு ஆடையை அனிந்து கொண்டிருந்தார்; அவரது கேசம் ஒளிர்ந்தது, அவரது கண்ணங்கள் வெள்ளைப் படுத்தப்பட்டு மென்மையாக வெளுத்திருந்தன. அவர் சுகந்த மணம் வீசும் வாசனை திரவியங்கள் அனிந்திருந்தார், அதனால் அந்த அரையே மணம் வீசியது. “நான் எனது அன்பரைக் காண தயாராகிக் கொண்டிருக்கின்றேன்,” எனக் கூறினார். “… நான் சிறைபடுத்தப்பட்டும், தியாகமரணம் அடையவும் கூடிய நேரம் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது” என்றார். அதன் பின், அவர் அந்த பூட்டிய அறையினுள்ளேயே முன்னும் பின்னுமாக நடந்துகொண்டும், பிரார்த்தனைகளை ஓதிக்கொண்டும் இருந்தார். கதவிற்கு வெளியே கலாந்தரின் மனைவி, உயர்ந்தும் தாழ்ந்தும் கொண்டிருந்த அவரது குரல் ஒலியை செவிமடுத்து, கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். “இறைவா, இறைவா, அவரது உதடுகள் தொடத் துடிக்கும் அந்தக் கோப்பையை அவரிடமிருந்து அப்பால் கொண்டு செல்லுங்கள்,” எனக் கதறினாள். நாம் அந்த பூட்டிய கதவை உடைத்து உள்ளே செல்ல முடியாது. அந்த கடைசி சில மணி நேரங்கள் எப்படி இருந்திருக்கும் என்பது பற்றி நாம் ஒரு யூகமே செய்யமுடியும். அது அவரது சொத்துக்களை பிரிப்பதற்கோ, நண்பர்களுக்கு பிரியாவிடை சொல்வதற்கோ என்றில்லாமல், மக்கள் அனைவருடைய ஆண்டவரும், அனைவராலும் நேசிக்கப்படுபவருமான அந்த ஒரே கடவுளுடன் தொடர்பு கொள்வதற்காகவே இருந்திருக்கும். அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டோர், அவரது புனித ஆன்மாக்கள், மற்றும் அவரது தூதர்கள், அனைவரும் அங்கு இருந்தனர்; இது போன்ற நேரங்களில் அவர்கள் ஆஜராகியிருப்பார்கள்; ஊனைத் தாண்டி அவர்களுடன் தாஹிரிஃயும் ஆன்மீக நிலையில் சேர்ந்திருந்தார். அவர்கள் அவரை அழைத்துச் செல்ல வந்த போது, அவர் முகத்திரையிட்டுக் கொண்டு தயாராகவே இருந்தார். “என்னை ஞாபக த்தில் வைத்துக் கொள், எனது களிப்பில் நீயும் சந்தோஷப்படு” என போகும் போது கூறிச் சென்றார். அந்தப் பாரசீக இருளில் அவர் அவர்கள் கொண்டு வந்திருந்த குதிரை மீதேறிச் சென்றார். நட்சத்திர ஒளி மரங்களின் மீது நன்கு விழுந்தது. இராப்பாடிகளின் சலசலப்பு மிகுந்திருந்தது. ஒட்டகங்களின் கழுத்தில் கட்டியிருந்த மணியின் ஓசை ஏதோ ஒரு திசையில் ஒலித்தது. குதிரைகளின் குழம்பொலி சாலையின் மண்ணில் தடதடத்தது. இப்போது தோட்டத்தில் இருந்த வீரர்களின் போதை மிகுந்த சிரிப்போலி கேட்கின்றது. அவர்களது இருக்கமான முகங்களில், விருந்து மேஜை விரிப்புகளில், கொட்டிக் கிடந்த மதுவின் மீது, வர்த்திகளின் ஒளி வீசியது. தாஹிரிஃ அவர்கள் தலைவன் முன் நின்ற போது அவன் அவரை ஏறிட்டு பார்க்கக் கூட இல்லை. “இங்கிருந்து போங்கள், அப்பெண்ணை கழுத்தை நெறித்துக் கொன்றுவிடுங்கள்” எனக் கத்தினான். பிறகு அவன் பார்வை அவனது மதுக் கோப்பை மீது சென்றது. தாஹிரிஃ தம்மோடு ஒரு பட்டுக் கைத்துனியை கொண்டு வந்திருந்தார்; இந்த சந்தர்ப்பத்திற்காகவே அவர் அதை நெடுங்காலமாக சேர்த்து வைத்திருந்தார். இப்போது, அதை, அவர் அவர்கள் கையில் கொடுத்தார். அவர்கள் அதைக் கொண்டு அவரது கழுத்தை சுற்றி இரத்தம் பீரிடும் வரை நெறித்தனர். அவரது உடல் அசைவுகள் நிற்கும் வரை அவர்கள் காத்திருந்தனர், பிறகு அந்த உடலை பாதி தோண்டப்பட்ட தோட்டக் கிணறு ஒன்றில் கிடத்தி, அதை மண்ணால் நன்கு மூடிச் சென்றனர். ஒருவரை ஒருவர் பார்க்கக் கூசிய அவர்கள் பார்வை பூமியின் மீது படர்ந்திருந்தது. அந்தச் சம்பவம் நடந்து தெஹரானில் பல பருவகாலங்கள் கடந்துவிட்டன. வடக்கில் உள்ள மலைகளை பனிக் காலத்தின் பனிக்கட்டிகள், பல ஆயிரம் கண்ணடிகளைக் கொட்டியது போன்று, வெள்ளி மலைகளாக்கின. தோட்டத்தில் பேரி மலர்கள் படர்ந்திடவும், நீல மழைக் குருவிகள் வானத்தில் பாய்ந்திடவும், இளவேனிற் காலங்கள் வந்து சென்றன. கோடை காலத்தில், நகரமே புழுதித் படலம் சூழு, மக்கள், மலைகளின் நீர் படர்ந்த பாறைகளையும், பச்சை படர்ந்திட்ட பள்ளத்தாக்குகளையும் நாடிச் சென்றனர். மரக்கிளைகளெல்லாம் வெறிச்சோடிய சரத் காலத்தில், மயக்கம் தரும் அகன்ற புல்வெளிகளும் வானமும் நகரத்தை மீண்டும் வலம் வந்தன. அந்த இரவுக்குப் பிறகு பல காலம், ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகள், ஆகிவிட்டது. ஆனால் அன்று இருந்த அந்த ஒரே குரலின் இடத்தில் இன்று பல ஆயிரம் குரல்கள் ஒலிக்கின்றன. பல மொழிகளில் வார்த்தைகள், பல எழுத்துப் படிவங்களில் நூல்கள், மற்றும் கோவில்களும் எழுந்துள்ளன. எந்த அன்பிற்காக அவர் இறந்தாரோ அந்த அன்பு பற்றிக் கொண்டு பரவி, தியாகம் செய்ய ஒரே ஒரு இதயம் இருந்த இடத்தில் இன்று பல ஆயிரம் இதயங்கள் தங்களை அர்ப் பணிக்க காத்திருக்கின்றன. அங்கு புழுதியின் கீழ், அவர் மௌனமாக இல்லை. அவரது உதடுகள் மண்ணோடு மண்ணாகிவிட் டன, ஆனால் அவற்றின் சுவடுகள் பொண்ணான மொழி பேசுகின்றன.

தப்ரீஸ் நகரில் ஒரு நாள்…


(மார்ஸியே கேய்ல் அவர்களின் – “தப்ரீஸ் நகரில் ஒரு நாள்” என்னும் கட்டுரையின் தமிழாக்கம்)

மரம் ஒன்றின் கீழ் வழிந்தோடும் நீரோடையின் கரைதனில் சாய்ந்துகொண்டு, ஓடையில் வழிந்தோடும் நீரை ஒரு பாரசீகர் மணிக்கணக்காகப் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பார். சீனர்களோ, கண்ணாடியைப் போன்று தோற்றமளிப்பதும், சப்பென்றிருப்பதுமான நீரையே விரும்புவார்கள் எனக் கூறுகின்றனர்; ஆனால் ஒரு பாரசீகரோ, தெளிந்த, குறுகிய நீரோடையில் நெளிந்து பிரயாசையுடன் ஒடும் நீரையே விரும்பி ரசிப்பார். ஒரு வேளை அக்குளிர்ந்த நீரோடையினுள் ஒரு குடுக்கை நிறைய திராட்சை மதுவை அவர் குளிர வைத்துக்கொண்டும் இருக்கலாம். சித்திரங்களில் மட்டுமே காணப்படும் மறைந்து போய்விட்ட பாரசீகர்களைப் போல், மனித சஞ்சாரத்திற்கு அப்பால் அவரும் ஒரு குன்றின் ஓரமாக ஒரு சமுக்காளத்தில் சாய்ந்துகொண்டிருக்கலாம். முசுக்கட்டை மரத்தின் இலைகள் பரப்பப்பட்ட ஒரு தட்டில் நிறைய இலந்தைப் பழங்கள் அவர் முன் இருக்கின்றன. அவர் ‎ஹஃபீஸின் கவிதைகளில் ஒன்றை முனுமுனுத்துக் கொண்டிப்பார். ‎ஹஃபீஸ் பல காலங்களுக்கு முன் ஷிராஸில் வாழ்ந்த, “அருவமானவரின் நாவென” போற்றப்பட்ட ஒரு மாபெரும் கவிஞராவார். ‘உமது முக ஒளியினைத் தவிர வேறெதனிலும் என் பார்வை படாதிருக்க, உலகில் உள்ள அனைத்திலிருந்தும், ஒரு வல்லூறுக்கு மறைக்கப்பட்டிருப்பது போல் நான் என் கண்களை மறைத்துக்கொண்டுள்ளேன்.” அந்த பாரசீகரைச் சுற்றி மஞ்சள் நிற பாலைவனம்; அவரும் பூத்துக் குலுங்கும் ஒரு சேர்ரி மரத்தின் கீழோ, ஓடைக்கருகே நீரில் சாயந்துகொண்டிருக்கும் வில்லோ வகை மரத்தின் கீழோ அவர் சாய்ந்துகொண்டிருக்கலாம். ஏனெனில், இது நகரத்திற்கு வெகு தூரத்திற்கப்பால் இருக்கும்; அவருக்குப் பின்னால், பல மைல்களுக்கும் அப்பால், பளிச்சிடும் வெள்ளி மலைகள், இருக்கின்றன.

அவர் தான் அருந்திய மதுவாலும், கவிதையினாலும், அல்லது ஒரு வேளை நீரோடையின் ஈர்ப்பினாலும் போதையுற்று இருக்கலாம். ஓடைக் கரையின் ஓரங்களை அலங்கரித்துக்கொண்டிருக்கும் இளம் பசுமை நிற கொடிகளை அவரால் தொட முடிகிறது; இதை உமார்-இ-ஃகய்யாம் பின்வரும் நாலடிகளில் விவரித்துள்ளார்:

நாம் சாய்ந்திருக்கும் ஆற்று விளிம்பெனும் உதடுகளுக்குச் சிறகுகளோ,
வெனக் காட்சி தரும் மெல்லிய பசுங் கொடிகள்.
சாயும் போது மெல்லச் சாயுங்கள்! யாரே அறிவார் இங்கு
கனிந்த உதடு எதனிலிருந்து அறியா வன்னம் இங்கே இது உதித்தது!

இக்கவிஞர், ஆற்று விளிம்பின் இப்பசுமையை, இளைஞன் ஒருவனின் முகத்தில் தோன்றும் முதல் குறுமுடிகளுக்கு இணையாக வருணிக்கின்றார்.

பாரசீகர்களுக்கு நகரத்தை விட்டு வெளியேறுவது மிகவும் விரும்பத்தக்கதாகும். ஏனெனில், நகரங்களில் காவி நிற செங்கற்களிலான சுவர்களே எங்கும் காணப்படுகின்றன. அச் சுவர்களுக்கிடையே குளங்களும், எலுமிச்சை இன மரங்களும், மல்லிகைப் புதர்களும்; தட்டையான கூறை கொண்ட செம்மண் பூசப்பட்ட வீடுகளுமே இருக்கின்றன. குளிர்காலத்தில் அக்கூறைகளிலுள்ள வெண்பனி குவியல்கள் அப்புறப்படுத்தப்பட்டு, சீர்படுத்தப்படுகின்றன; கோடைக்கால இரவுகளில் அக்கூறைகளில் கொசுவலைகளின் தோற்றம். வீடுகளுக்கு உள்ளே, வெள்ளையடிக்கப்பட்ட சுவர்கள்; பளிச்சிடும் மாதாக்கோவில் ஜன்னல்கள் போன்ற நிறத்திலான செம்மையாகப் பின்னப்பட்ட சமுக்காளங்கள். நகங்களில் மருதானி பூசப்பட்டும், தலைகளில் முத்துக்கள் சூடியுமுள்ள பெண்களும் அங்கிருக்கின்றனர். வெளியே தூசிப்படலம் சூழ்ந்த தெருக்கள். பளிச்சிடும் பழுப்பு நிற மை பூசப்பட்ட வால்களைக் கொண்ட அரசகுலத்தினரின் அரபுக் குதிரைகளில் பவனி வரும் பிரபுக்கள். புண் அரித்துப்போன முகங்களுடைய பிச்சைக்காரர்களும் பிரபு ஒருவரின் வாசலில் நின்றுகொண்டிருக்கின்றனர். ப‎ஹாய்ப் பிரார்த்தனைகளில் இத்தகைய பிச்சைக்காரர்களை நாம் காணலாம். அருவமானவரின் வாயிலினருகில் நிற்கும் மனிதர்களின் ஏழ்மை நிலையைக் குறிப்பதற்கு இவர்களுடைய உவமானம் பயனுள்ளதாகின்றது.

19-ம் நூற்றாண்டுக்கும், 20-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சார்ந்த பாரசீகத்தின் ஓர் அகக்காட்சியே இது. பாப் அவர்கள் இதைக் கண்டிருக்க வேண்டும்; அவர் இவ்வாறு கண்டிருக்கக்கூடும்: நாம் இப்போது பார்க்க முடிவது போல, வேலமரத்தினூடே எழும் சந்திரோதயத்தை அவர் பார்த்திருந்திருக்கலாம். “கடவுளே, கடவுளே” என இரவு முழுவதும் கத்திக்கொண்டிருக்கும் ‎‘ஹக்’ பறவையை அவர் பார்த்திருந்திருப்பார்; இப்பறவை இரவு முழுவதும் கடவுளே, கடவுளே என கத்தி விடியற்காலையில் தன் தொண்டையைக் கிழித்துக் கொள்ளும் என்பது ஐதீகம்.

18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் நிலை குறித்து வில்லியம் போலித்தோ இவ்வாறு எழுதியுள்ளார்: ‘ஐரோப்பா தன் கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டு சாவியைத் தொலைத்துவிட்டது…. ஒரு பூட்டிய அறைக்குள் ஏற்படக்கூடிய ஒரு வெடிப்பைப் பற்றி கற்பனைப் பண்ணிப்பாருங்கள்…’. பாப் அவர்கள் பாரசீகத்தில் தோன்றியது இதற்குச் சமமான ஒரு நிகழ்ச்சியாக வருணிக்கப்படலாம். அக்காலத்தில் பாரசீகம் ஓர் ஆன்மீகச் சிறைக்கூடமாக ஆகிவிட்டிருந்தது. ‘பாஸ்ட்டில்’ எனப்படும் பாரீஸ் சிறைச்சாலையைவிட பயங்கரமாக இருந்தது; ஆனால் மனிதர்கள் விடுதலையையும், ஒளியையும் தேடிக்கொண்டிருந்தனர். ஒரு மகத்தான நாள் நெருங்கி வந்துகொண்டுள்ளதாகையால், நம்பிக்கையை இழக்கவேண்டாமெனக் கூறும், மரபுக்கூற்றுகள் வழிவழியாக அவர்களையும் வந்தடைந்திருந்தன. திருக்குரானின், ஆராதனை அத்தியாயத்தில் ஒரு வரியுண்டு; அது பின்வருமாறு கூறுகின்றது:

விண்ணுலகங்களையும், மண்ணுலகையும் இறைவனே படைத்துள்ளார்… அவரைத் தவிர இரட்சகரோ, இடையீட்டாளரோ வேறு எவரும் இலர். ஆதலால் நீங்கள் இதைக் கருதமாட்டீர்களா? விண்ணுலகிலிருந்து மண்ணுலகு வரை அவர் அனைத்தையும் நிர்வகிக்கின்றார்; ஆயிரம் ஆண்டுகள் அளவு கொண்ட அந்த நாளில், அவர்கள் அவரிடமே திரும்பிச் செல்லப் போகின்றனர்…

வருடம் 260 ‎ஹிஜ்ரியில் இறுதியாகத் தோன்றிய இமாம் மறைந்துவிட்டார் என்பது எல்லா (ஷீயா) முஸ்லிம்களுக்கும் தெரியும்; ஹிஜ்ரி 1260ம் வருடத்தில் அவர்கள் காத்திருந்த நாட்கள் ஒரு முடிவுக்கு வரும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

வேறு தீர்க்கதரிசனங்களையும், வேறு சமய நூலையும் பயன்படுத்தி மேற்கத்திய நாடுகளில் வில்லியம் மில்லர் போன்ற சில மனிதர்கள் போதித்து வந்தது போல், பாரசீகத்திலும் குறிப்பிட்ட சில மனிதர்கள் இது குறித்து அவர்களுக்குப் போதித்து வந்தனர். ஒரு நாள் இத்தகைய தீர்க்கதரிசனங்கள் விளக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வகுப்பிற்குள் பாப் பெருமானார் பிரவேசித்தார். அவர் உட்கார்ந்த போது அவருக்குக் குறுக்காக ஒளிக் கீற்று ஒன்று பளிச்சிட்டது. போதித்துக் கொண்டிருந்தவர் தமது பாடத்தை நிறுத்தினார். பாப் அவர்களை அவர் பார்த்தார். ‘அகோ, அந்த மடியில் விழுந்துள்ள ஓளிக் கீற்றைவிட உண்மை அதி வெளிப்படையாகவுள்ளது,’ எனக் கூறினார்.

ஒரு மாதாக்கோவிலைவிட ஒரு பள்ளிவாசல் வசிப்பிடமாக அதிகம் பயன்படுத்தப்பட்டும் சுறுசுறுப்பாகவும் இயங்கிக்கொண்டிருக்கும். வாரத்தின் எந்த நாளில் வேண்டுமானாலும் மக்கள் அங்கு நடமாடிக்கொண்டும், பிரார்த்தித்துக்கொண்டும் இருப்பர். தேகசுத்திக்காக அங்கு நீரூற்றுகள் பாய்ந்த வண்ணம் இருக்கும் – அஃது உண்மையான நீராகும்; (மாதாக்கோவில்களில் காணப்படுவது போல, ஓர் அடையாள அறிகுறியாக நிலைதாழ்ந்துள்ள, ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள புனித நீரல்ல. தரைகளில் கம்பளங்கள் ஜொலித்துக்கொண்டிருக்கும். மனிதர்கள் மண்டியிட்டுக்கொண்டும், எழுந்துகொண்டும், தலைவணங்கிக்கொண்டும் இருப்பர்; அங்கு, உள்ளம் விண்ணுலகச் சிந்தனைகளில் ஈடுபடுவதை தடுக்கும் சிலைகளோ, படங்களோ கிடையாது. பாப் அவர்கள் அடிக்கடி பள்ளிவாசல் செல்வார்; அங்கு அவருடைய கண்களில் கண்ணீர் மல்கும்; அவர், ‘கடவுளே, என் கடன்வுளே, எனதன்பரே, என் இதயத்தின் ஆவலே!’ எனக் கூறிக்கொண்டிருப்பார். அவர் வானிபத் தொழில் புரிந்து வந்தவர். வெள்ளிக்கிழமைகளில் அவருடைய கடை அடைக்கப்பட்டிருக்கும். அன்று அவர் தமது வீட்டின் உப்பரிகைக்குச் சென்று, வெள்ளி நிற சூரிய ஒளியில் நின்றும், மண்டியிட்டுக் கொண்டும், முஸ்ஸுல்மான்கள் வழிபடுவது போல் தாமும் வழிபடுவார்.

பார்ப்பதற்கு அவர் வசீகரம் மிக்கவராவார். ஒரு சாதாரன பாரசீகரைவிட அதிக வெண்மை நிறம் மிக்கவர்; உயரம் குறைந்தவர், மனதில் நிற்கும் குரல்வளம் படைத்தவர். இங்கு நான்காவது இமாமாகிய, பாதி பாரசீகராகிய சைனு’ல்-அபிதினை நாம் நினைவுகூர்கின்றோம். அவர் தமது வீட்டின் கூறையில் இரவு நேரங்களில் பிரார்த்தனைகளை ஓதிக் கொண்டிருப்பார்; கீழே கனமான தோல் பைகளில் நீர் கொண்டு செல்வோர் கூட அவர் ஓதுவதை சிறிது நேரம் நின்று கேட்டுவிட்டே செல்வர் என்பர். அவருடைய நடையும் நினைவில் நிற்கக்கூடியதாகும். தெய்வங்கள் அவற்றின் நடையிலிருந்து அறியப்படுகின்றன என வெர்ஜில் என்பவர் கூறியுள்ளார்; நம்மிடையே தோன்றும் மகாபுருஷர்களுக்கும் இது பொருந்தக்கூடியதாகும். ஒரு முறை பாப் அவர்களை முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் தேடிக்கொண்டிந்தார். ஆனால், பாப் அவர்களின் சிஷ்யர் ஒருவர் வழியை மறைத்துக்கொண்டிருந்தார். அப்போது பாப் அவர்கள் அவ்வழியே நடந்து சென்றதைக் கண்ட அம்மனிதர்: ‘அவரை என்னிடமிருந்து ஏன் மறைக்க முயல்கின்றீர்? அவருடைய நடையிலிருந்தே அவர் யார் என்பது எனக்குத் தெரியும்,’ என்றாராம். பாப் அவர்கள் இறைத்தூதர் முகம்மது அவர்களின் வழித்தோன்றலாவார். அவர் அவரைப் போன்றே இருந்திருக்கக்கூடும். அவரைப் பற்றி சகாபாக்களில் ஒருவர், ‘முகம்மதைப் போன்று வேறு அழகு எதனையும் நான் கண்டதில்லை; அவருடைய முகத்தில் சூரியனே நகர்கின்றது எனக் கூறலாம், என்றாராம்.

பாப் அவர்கள் திருமணம் புரிந்தார். அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை சின்னாளில் இறந்தது. அதன் தந்தையார் அக்குழந்தையை இறைவனுக்கே அற்பணித்தார்: ‘என் இறைவா, என் மகனை நான் தியாகம் செய்துள்ளதானது… உமக்கு ஏற்புடையதாக இருந்திட அருள்வீராக. உமது நல்விருப்பம் என்னும் பாதையில் என்னையே… நான் அர்ப்பணம் செய்திடுவதற்கு இது ஒரு முன்னோடியாக இருந்திட அருள்வீராக.

பிறகு அவர்பால் சில மனிதர்கள் ஈர்க்கப்பட்டனர். அவர் அவர்களை ஆணையிட்டு அழைக்கவில்லை – அவர்களே, பாலைவனப் பிரதேசங்களைத் தாண்டி அவரைக் காணவந்தனர். சிலர் கழுதைகளின் மீதமர்ந்து வந்தனர் – வெள்ளை நிற கழுதைகள். ஒரு வேளை அவற்றின் மீது மருதானி பூசப்பட்ட கைகளின் கறை படிந்திருத்திருக்கலாம், நீலக்கல் மாலைகளை அவை அனிந்திருந்திருக்கலாம்; இத்தகைய கழுதைகள் பாரசீகத்தின் தெருக்களில் இன்னமும் காணப்படுகின்றன – கார்களும், இரயில் வண்டிகளும் அவற்றை இதுவரை ஒழிக்க முடியவில்லை. இம் மனிதர்கள் தாங்கள் கண்ட கனவுகளின் வாயிலாகவும், மனக்காட்சிகளின் வாயிலாகவும் பாப் அவர்களைக் காண வந்தனர்; பார்க்கப்போனால் பல அமெரிக்கர்களும் இதே முறையில் ப‎ஹாய்கள் ஆகியுள்ளனர். இந் நிகழ்ச்சிகள் விஞ்ஞானிகளால் ஆராயப்பட வேண்டியவை. அவற்றை நாம் அறிவியற்கூட ரீதியில் புரிந்துகொள்ள இயலாது. ஓர் இறைத்தூதர் தோன்றப்போகும் வேளையில், அவருக்காகப் பல சிஷ்யர்கள் காத்திருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். காலங்கள் தோறும் தோன்றும் ‘நம்பமுடியாத நூற்றுக்கணக்கான இறைக்காவலர்களிலிருந்து,’ தனிப்பட்டு நிற்கும் உண்மையான இறைத்தூதர்கள் உண்டென்பதும் நமக்குத் தெரியும்; மனித வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் மறுஉயிர்ப்புறச் செய்யும், மூலாதாரமாக இருக்கும் ஒருவர் இருக்கின்றார் என்பதும் நமக்குத் தெரியும். திருத்தூதர் முகம்மது அவர்களைப் பற்றி கார்லைல் இவ்வாறு கூறுகின்றார்:

புராதன மனிதர் என இத்தகைய மனிதரையே நாம் கூறுகின்றோம்; அவர் நம்மிடம் நேரடியாகத் தோன்றுகின்றார்… அவரை, கவிஞர், இறைத்தூதர், இறைவன் என நாம் அழைக்கலாம்; – இப்படியோ, அப்படியோ, அவர் உச்சரிக்கும் வார்த்தைகள் வேறு எந்த மனிதனும் உச்சரிக்க முடியாத வார்த்தைகள் என நாம் உணருகின்றோம். விஷயங்களின் உள்ளார்ந்த மெய்மையிலிருந்து அவர் நேரடியாகத் தோன்றுகின்றார்; – அவர் வாழுகின்றார், அதனோடு தினசரி தொடர்பு கொண்டு, அவர் வாழ்ந்துதான் ஆகவேண்டும்… உலகின் மையத்திலிருந்தே அவர் தோன்றுகின்றார்; அவர் விஷயங்களின் பூர்வமெய்மையின் ஒரு பகுதியாவார்.

பாப் அவர்கள் இச் சிஷ்யர்களை ஆங்காங்கு அனுப்பினார். அவர்கள் கிழக்குப் பிரதேசங்களைத் தட்டியெழுப்பினர்; நூறு நகரங்களில், கருகிப்போனதும் உருக்குலைந்து போனதுமான தங்கள் உடல்களை விட்டுச் சென்றனர். அவர்கள் தங்கள் தலைவரின் செய்தியை வழங்கினர். எந்தத் தோட்டாவும் அவர்களுடைய உதடுகளின் அசைவை நிறுத்தமுடியவில்லை. ஒரு மாபெரும் உலகக் காப்பாளர் குறித்த நற்செய்தியை அவர்கள் வழங்கினர். பாப் அவர்கள், ‘இறைவன் வெளிப்படுத்தவிருக்கும் அவருடைய கைகளில் நான் வெறும் ஒரு மோதிரம் மட்டுமே ஆவேன்.’ பிறகு அவர், இஸ்லாத்தின் அதிப்புனிதஸ்தலமாகிய மெக்காவுக்கு பயணம் செய்தார். அங்கு, கா’பாவின் புனித கருப்புநிற கல்லிற்கு முன்பாக அவர் தமது செய்தியைப் பிரகடணம் செய்தார்; அதன் வாயிலாக தீர்க்கதரிசனமும் நிறைவேறியது. சம்பிரதாயமாக வழங்கி வந்தது போல், அவர் மிகவும் சிறந்த செம்மறியாட்டு வகையிலிருந்து பத்தொன்பது ஆடுகளைப் பலி கொடுத்தார்; மிகவும் கவனமாக வாய்களில் சர்க்கரை ஊட்டப்பட்டவையாகவும், கண்களில் அஞ்சனம் பூசப்பட்டவையுமாக, அந்த ஆடுகள் இருந்திருக்கலாம். இந்தப் பலியானது ஏழைகளுக்குப் பெரும் ஆசீர்வாதம் போன்றதாகும், ஏனெனில், இறுதியில் அந்த ஆட்டிறைச்சி ஏழைகளுக்கே விநியோகம் செய்யப்படும். இந்த இறைச்சியிலிருந்து பாப் அவர்கள் தமக்கென ஒரு பங்கு எடுத்துக்கொள்ளவில்லை. இது, எப்போதும் குறைவான உணவே இருக்கும் முகம்மது அவர்களின் இல்லத்தில் ஓர் ஆடு எவ்வாறு பலி கொடுக்கப்பட்டது எனும் கதையை நினைவிற்குக் கொண்டுவருகின்றது. பலி கொடுக்கப்பட்ட அந்த ஆடு ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. அப்போது, நபியவர்களின் மனைவியான ஆயிஷா, இறைச்சி அனைத்தும் கொடுக்கப்படுகின்றதே என அங்கலாய்த்தார். ‘தோள்பட்டையைத் தவிர வேறொண்றும் மீதமில்லை,’ எனக் கூறினார். அதற்கு நபியவர்கள், ‘தோள்பட்டையைத் தவிற முழு ஆடும் மீதமுள்ளது,’ என்றாராம்.

பாரசீகத்தில் பாப் அவர்கள் பள்ளிவாசல்கள் அனைத்திலும் பிரகடனம் செய்தார். அங்கு அவர் நுழையும் போதெல்லாம் மக்கட் கூட்டம் அவரைச் சூழ்ந்துகொள்ளும். ஷிராஸில் நீர் ஓரத்தில் சா’ஆடி கூறியது போல்: ‘எங்கெங்கு அதிமதுரமான நீரின் ஊற்று இருக்கின்றதோ, அங்கெல்லாம் மனிதர்களும், பறவைகளும், பூச்சிகளும் ஒன்றாகத் திரளும்.’ உரையாற்றிட அவர் பள்ளிவாசல்களின் சமயமேடை ஏறி பேசும்போதெல்லாம் அவர்கள் அமைதியோடு நிற்பார்கள்.

இஸ்லாத்தின் மையங்களாகிய அவற்றில், அவர் முன்னெழுந்தார், தாக்கினார். மரணத்தை அரவனைக்கப் போகும் மனிதரைப்போல் அவர் அறைகூவல் விடுத்தார். அவர் மக்கட் கூட்டத்தின் பிரபுக்களாக விளங்கிய சமயத்தலைவர்களுக்கு எதிராக குரலெழுப்பினார். முல்லாக்களுக்கு திருக்குரான் மனப்பாடமாகும். ஆனால், பாரசீகர் எவருமே அதைத் தங்கள் சொந்த மொழியில் படிக்கும் வாய்ப்புக் கிடையாது. முல்லாக்களுக்கு எது சட்டரீதியானது எது சட்டரீதியானதல்ல என்பதும், ஒரு மருந்து எப்போது உட்கொள்ளப்பட வேண்டும், அல்லது கூடாது என்பதும், ஒரு பயணம் எப்போது மேற்கொள்ளப்பட வேண்டும், ஒரு பெண்ணின் திருமணம் எப்போது நிகழ வேண்டும் என்பதெல்லாம் தெரியும். மற்ற மனிதர்களுக்குத் தெரியாததெல்லாம் முல்லாக்களுக்குத் தெரியும். ஆனால், அவரது மூதாதையரான முகம்மது நபி அவர்கள் அக்காலத்து அராபிய சிறுதெய்வங்களைக் குறை கூறியது போல் பாப் அவர்களும் முல்லாக்களை குறைகூறினார். முகம்மது அவர்கள்: ‘நீங்கள் அவற்றின்(சிலைகள்) மீது எண்ணெய், மெழுகு ஆகியவற்றைக் கொண்டு பூசுகின்றீர்கள், அவற்றின் மீது ஈக்கள் ஒட்டிக்கொள்கின்றன, – இவை வெறும் மரக்கட்டைகளே என நான் கூறுகின்றேன்!’ என்றார். இயேசு நாதர் தமது காலத்து மனிதர்களை, வேஷதாரிகள் – நாய்கள் – விஷப்பாம்புக் கூட்டம் – சோரம்போனவர்கள் என அதே போன்று கூறினார்.

பாரசீகம் முழுவதும் இப்போது அவரைப் பற்றியே பேச்சாக இருந்தது. அவரை ஒரு மலைக்கோட்டையில் வைத்து அடைத்தார்கள். அங்கு அவர்: “இரவு நேரத்தில் எமக்கு ஒரு விளக்கு கொண்டு வருபவரும் கிடையாது.” இஸ்லாத்தின் பலன் பாப் அவர்களை ஏற்றுக்கொள்வதே, இருந்தும் அவர்கள் அவரை சிறைப்படுத்தியுள்ளனர்.’ அவர் மேலும் எழுதினார்: ‘இவ்விடத்தின் அனுக்கள் அனைத்தும், “இறைவனைத் தவிற வேறு இறைவன் கிடையாது!” என கூக்குரலிடுகின்றன. பிறகு அவர் பஹாவுல்லாவின் வருகையை முன்னறிவிக்கும், தமது படைப்புக்களிலேயே மாபெரும் படைப்பை தமது செயலாளருக்கு வெளிப்படுத்த ஆரம்பித்தார். ஓதும் போது அவருடைய குரலொலி மலைக்குக் கீழும், மலைப்பள்ளத்தாக்கின் மீதும் எதிரொலித்தது. பனிக்காலத்தின் குளிரினால் அவர் பெரும் இன்னலுக்குள்ளானார். தமது தேகசுத்திக்காக அவர் பயன்படுத்திய நீர், அவருடைய முகத்திலேயே உரைந்து போனது.

மக்கள் அவரை நேசித்தனர், அவரைத் தேடி வந்தனர். அவர்கள் இந்தியாவிலிருந்தும் கால் நடையாக வந்தனர். அவர் வேறொரு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடைய விசுவாசிகள் தெருக்களில் கொலை செய்யப்பட்டனர்.

பிறகு தாப்ரீசில் ஒன்றுகூடியிருந்த இளவரசர், மதகுருக்கள் ஆகியோரின் முன்னிலைக்கு அவர் ஆணையிட்டு அழைக்கப்பட்டார். சபையில் ஒரு நாற்காலி மட்டுமே மீதமிருந்தது; அஃது இளவரசனுடையதாகும். பாப் அவர்கள் இந்த நாற்காலியிலேயே அமர்ந்தார். அவருடைய முகத்தில் பெரும் சக்தி பிரகாசித்தது; அதனால் சபை நிசப்தமானது. பிறகு, ஒரு மதகுரு கேள்வி கேட்டார்: ‘நீர் யாரென உம்மைப் பிரகடனப்படுத்துகின்றீர்?’ அதற்கு அவர்: ‘நீங்கள் ஆயிரம் வருடங்களாக எவருடைய நாமத்தை உச்சரித்தீர்களோ, எவருடைய வருகையைக் கண்ணுறுவதற்காக ஏங்கினீர்களோ… எவருடைய வெளிப்பாட்டின் நேரத்தைத் துரிதப்படுத்துமாறு இறைவனை வேண்டினீர்களோ, அந்த ஒருவர் யானே ஆவேன். மெய்யாகவே யான் கூறுகின்றேன், எமது வார்த்தைக்குக் கீழ்படிய வேண்டியது கிழக்கிலும் மேற்கிலுமுள்ள எல்லா மனிதர்களுக்கும் விதிக்கப்பட்டதாகும்…

பிறகு நடந்தது அனைத்தும் நமக்குத் தெரியும். ஆனால், இந்நாள்கள் அவரது வெற்றிக்கான நாள்கள். தாப்ரீசில் அந்தக் காலை வேளையில் அவர் எவ்வாறு ஒரு சுவற்றில் தொங்கவிடப்பட்டு சுடப்பட்டார் என்பதை நாம் நினைவுகூர்ந்திட வேண்டியதில்லை. மாறாக, அவர் இன்று உலகம் முழுவதும் வாழ்வதை நாம் பார்க்கின்றோம்.