முகப்பு

பாஹ்ஜி மாளிகையின் உட்புறத்திலிருந்து
பாஹ்ஜி மாளிகையின் உட்புறத்திலிருந்து. இம்மாளிகையில்தான் பஹாவுல்லா தமது இறுதி நாட்களை கழித்து 1892ல் உயிர் நீத்தார்

இக்காலத்திற்கான கடவுளின் அவதாரமான பஹாவுல்லா இன்று உலகம் எதிர்நோக்கும் பிரத்தியேக பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தமது போதனைகளின் வாயிலாக வழங்குகின்றார். உலகம் முழுவதிலுமுள்ள பஹாய்கள் ஒரே ஒரு கூட்டு நோக்கம் மட்டுமே கொண்டுள்ளனர், அது உலக சீரமைப்பு குறித்ததாகும். “தூய்மையான மற்றும் நற்செயல்களின் வாயிலாகவும் மெச்சத்தகுந்ததும் மிகப் பொருத்தமானதுமான ஒழுக்கத்தின் மூலமாகவும் உலகம் சீர்திருத்தம் பெறக்கூடும்” எனும் பஹாவுல்லாவின் போதனைக்கிணங்க இன்று பஹாய்கள் உலகம் முழுவதும் பல நடவடிக்கைளில் ஈடுபட்டு உலக சீர்திருத்தத்திற்குத் தங்களால் இயன்றவற்றைச் செய்துவருகின்றனர். இந்த வகையில் தமிழ் மட்டுமே அறிந்திருக்கும் பஹாய் அன்பர்களின் சேவைகளுக்கு மேலும் உதவிடும் வகையில் இவ்வலைப்பதிவிலுள்ள படைப்புகள் வழங்கப்படுகின்றன.

——————————————————————-

~~~“ஒவ்வொரு காலமும் அதற்குச்
சொந்தமான பிரச்சினையையும், ஒவ்வோர்
ஆன்மாவும் அதன் பிரத்தியேக அவாவையும்
கொண்டுள்ளது. இவ்வுலகிற்குத் தேவைப்படும்
தற்கால துன்பங்களுக்கான பரிகாரம் அடுத்துவரும்
காலத்தின் தேவைக்கு முழுதும் ஏற்றதாய் இருக்கவே
முடியாது. நீங்கள் வாழும் காலத்தின் தேவைகளில்
அக்கறை காட்டி, அதன் உடனடித் தேவைகள்,
அவசியங்கள், ஆகியவற்றிலேயே உங்கள்
கலந்தாலோசனைகளை மையப் படுத்துங்கள்.”~~~


இவ்வருடத்துடன்–2021–அப்துல்-பஹா மறைந்து நூறு ஆண்டுகள் ஆகின்றன. இந்த நினைவாண்டு குறித்த சில நடவடிக்கைள்:
https://prsamy.com/2021/11/04/ta-bwns-1545/
https://prsamy.com/2021/10/17/ta-bwns-1541/

மரீ இராணி

பஹாவுல்லா

பதினாறு வயதினிலே

————-

மரணத்திற்குப் பின்…

————-

பாஹிய்யா காஃனும்

————-

வெண்பட்டாடை

————-

கலியுகமும் கல்கி அவதாரமும்

%d bloggers like this: