ஐக்கிய அமெரிக்கா: பஹாய் இருக்கையின் வருடாந்திர அனுசரிப்பை முன்னிட்டு மேயர் ‘உலக அமைதி வாரம்’ அறிவித்தார்

14 ஏப்ரல் 2023

ஏதென்ஸ், ஜார்ஜியா, அமெரிக்கா — ஜார்ஜியாவின் ஏதென்ஸ்-கிளார்க் மாவட்டத்தின் மேயர் கெல்லி கிர்ட்ஸ், மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் உலக அமைதிக்கான பஹாய் இருக்கை நிறுவப்பட்டதன் 30-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் 2023 ஏப்ரல் 10 முதல் 14 வரை “உலக அமைதி வாரம்” என அறிவித்தார்.

மத வெறி, பாலின சமத்துவமின்மை, இனவெறி மற்றும் கல்விக்கான போதிய அணுகல் உள்ளிட்ட சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பிரகடனத்தில் மேயர் கிர்ட்ஸ் கையெழுத்திட்டார்.

“பஹாவுல்லா ஊக்குவித்த சமாதானம், நீதி, மனித ஒற்றுமை ஆகியன குறித்த கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக” அனைத்து மாணவர்களையும் அவர் வலியுறுத்தினார். பிரகடனம் மேலும் கூறுவது, “இந்த இலட்சியங்களுக்கும் உலக நிலைக்கும் இடையே உள்ள பரந்த இடைவெளி, அனைத்து மதத்தினரையும், மத நம்பிக்கை இல்லாத மக்களையும் குறுகிய பாகுபாடுகளுக்கும் அப்பால் உயர்ந்து, மனித புரிதல் மற்றும் அமைதிக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என கூறுகிறது.

ஏதென்ஸுக்கான ஹோடா மஹ்மூதியின் விஜயத்தின் போது இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது, அங்கு அவர் இருக்கையின் 30-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் உலக அமைதிக்கான பஹாய் இருக்கையின் தலைவராக அழைக்கப்பட்டார்.

இடமிருந்து வலமாக: ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் (UGA) சமூக நீதி, மனித மற்றும் சிவில் உரிமைகளுக்கான மையத்தின் இயக்குனர் லெவெலின் கொர்னேலியஸ்; ஹோடா மஹ்மூதி, மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் உலக அமைதிக்கான பஹாய் தலைவரானவர்; பிலிப் ஹாங், UGA-யில் சமூகப் பணியின் டீன்.

அவரது நான்கு நாள் வருகையின் போது, டாக்டர் மஹ்மூதி ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் (UGA) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குச் சிந்தனையைத் தூண்டும் சொற்பொழிவுகளை வழங்கினார், மேலும் கிரேட்டர் ஏதென்ஸின் சர்வமத குருமார் கூட்டாண்மை உறுப்பினர்களை வாரம் முழுவதும் சந்தித்தார்.

UGA-யில் உள்ள சமூகப் பணி கல்லூரியின் தலைவர் பிலிப் ஹொங் விரிவுரைகளுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். “டாக்டர். மஹ்மூதியின் வருகை புத்துணர்வு அளிப்பதாக இருந்தது. எங்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகப் பணிப் பள்ளி ஊழியர்களுக்கு அமைதி மற்றும் கருணையின் உணர்வுகளை அவர் கொண்டு வந்தார்.

பேச்சுவார்த்தை, ஒருமைப்பாடு ஆகியன குறித்த கொள்கைக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்ததானது விரிவுரை பங்கேற்பாளர்களுக்கு “ஒரு குழு மற்றொரு குழுவை வென்றிட அதை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக மனித உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்காக ஒரு பொதுவான மனித இனமாக ஒன்றிணைந்து அமைதி மற்றும் நீதியை மேம்படுத்துவதற்கான புதுமையான வழிகளைக் கருத்தில் கொள்ள சவால் விடுத்தது.”

மில்லெட்ஜ் அவென்யூ பாப்டிஸ்ட் தேவாலயத்தில் நடந்த நிகழ்வில் ஹோடா மஹ்மூதி (இடது), மத ஆய்வுகள் பேராசிரியரும், UGA மதத் துறைகளில் ஆப்பிரிக்க அமெரிக்க ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநருமான கரோலின் மதீனா (வலது) உடன் இணைந்தார்.

வார நிகழ்வுகளைப் பற்றி பிரதிபலித்த டாக்டர். மஹ்மூதி கூறுகிறார்: “என்னுடைய வருகையின் சிறப்பம்சம் மாணவர்களுடனான உரையாடல்களும் இடைத்தொடர்புகளும் ஆகும். இன்று மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிப் பேச மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

அவரது விரிவுரைகள் இருக்கையின் மையக் கருப்பொருள்கள் குறித்த பரந்த அளவிலான தலைப்புகளை உள்ளடக்கியிருந்தன: கட்டமைப்புடைய இனவெறி மற்றும் தப்பெண்ணத்தின் மூல காரணங்கள்; மனித இயல்பு; பெண்களுக்கு சக்தியூட்டல் மற்றும் அமைதி; உலகளாவிய நிர்வாகம் மற்றும் தலைமை; மற்றும் சுற்றுச்சூழலை உலகமயமாக்கலில் உள்ள சவால்களை சமாளித்தல்.

டாக்டர். மஹ்மூதி UGA வளாகத்தில் உள்ள பஹாய் மாணவர் சங்கம் மற்றும் ஏதென்ஸின் பஹாய்கள் தனது வருகையை ஏற்பாடு செய்ததற்காக நன்றி தெரிவித்தார்.

oda மஹ்மூதியின் விரிவுரைகள் பல வகுப்பறைகளுக்கு ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்பட்டன. சமூகப்பணிப் பள்ளியில் எதிர்கால மாணவர்களுக்கு வழங்கப்படுவதற்காக விரிவுரைகள் பதிவு செய்யப்பட்டன.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1654/

%d bloggers like this: