மேலும் பஹாய்கள் கைது


உலகம் முழுவதும் உள்ள பல தேசத் தலைவர்களும், பல ஸ்தாபனங்களும், பொதுமக்களும் இரான் நாட்டில் பஹாய்கள் தங்கள் சமய நம்பிக்கைக்காக தொடர்ந்து கைது செய்யப்படுவதை வன்மையாக கண்டித்து வருகின்றனர். இருந்த போதும் இரான் நாட்டின் சர்வாதிகாரிகள் பஹாய்களை இம்சித்து வருவதை சிறிதும் குறைத்தபாடில்லை. மாஸ்கான் எபாடி எனும் இஸ்பாஃஹான் மாநில பஹாய் ஒருவர் 28 ஆகஸ்ட் 2010ல் தமது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். அவருடைய கணினியும் கைத்தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன் பெண்கள், சிறார்கள் ஆகியோரின் கல்வியறிவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு பஹாய்கள் அந்த நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்னமும் தடுப்பில் இருந்து வருகின்றனர். இவ்விளைஞர்களுக்கு தங்கள் குடும்பத்தினரை சந்திக்க இதுவரை 15 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் சிறையில் தங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.