புனிதத்தன்மையும் தன்மைமாற்றத்தின் இயல்பும்
டாக்கடர் பீட்டர் காஃன்
அ. வஸ்துவும் ஆவியும்
கூட்ட தலைமையாளரே, சிறப்பு வருகையாளர்களே மற்றும் நண்பர்களே! இங்கு நமக்கிடையே உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து ஒருவர் இங்கு வருகையளித்திருப்பதாக நாம் கற்பனை செய்துகொள்வோம். அவர் நவீன மின்சாதனங்களான வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றுடனும், நவபௌதீகம் குறித்தும் ஏதும் அறியாதவராக இருக்கின்றார் என வைத்துக் கொள்வோம். அச்சாதனங்களைச் சுற்றிலும் — கதிரலைகள், தொலைக்காட்சி சமிக்ஞைகளைச் சுமந்திருக்கும் அலைகள், மற்றும் இவ்விஸ்வத்தின் தொலைதூரங்களிலிருந்து வரும் நுன்கதிரியக்கம் ஆகியவை உட்பட — மின்காந்த அலைகள் சூழ்ந்துள்ளன என்பது குறித்து அவரை எவ்வாறு நம்பவைப்பது? இதை எப்படித்தான் அவருக்கு எடுத்துரைப்பது? இவ்வலைகளைப் பார்க்க முடியாத நிலையிலும், அவைக் குறித்து எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையிலும், அவற்றைத் தொடவோ உணரவோ முடியாத நிலையிலும்; தங்களைச் சுற்றிலும், அவர்களூடேயுேம் ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும், ஹெப்ரூ மொழியிலும், ரஷ்ய மொழியிலும் மற்றும் பிற மொழிகளிலும் பெருமளவில் ஒலி மற்றும் ஒளித் தகவல்களைச் சுமந்த சக்தியலைகள் பாய்ந்துகொண்டுள்ளன என அவர்கள் எவ்வாறு நம்பப்போகின்றனர்? தன்னை மூழ்க்கடித்துள்ள இவ்வலைகளின் உளதாம்தன்மையை, உண்மையியலை மற்றும் பெருமதிப்பை அவருக்கு எடுத்துரைக்க இயலுமா? அல்லது ஒரு தூர கிரகத்திலிருந்து தோன்றும் மின்காந்தச் சிற்றலைகள் நிமிடத்திற்கு 12 முறை அவருடைய உடலை ஊடுருவிச் செல்கின்றன என்றோ அல்லது அவரது உடலை நியூட்ரினோ அனுக்கள் ஊடுருவிச் செல்கின்றனோ என்றோ எப்படி விளக்குவது.
இவ்விஷயங்களை நான் குறிப்பிடுவதன் நோக்கம், சமய தத்துவங்களில், நமது சமயமும் நிச்சமாக உட்பட, முக்கியமான ஒரு தத்துவம் என்னவெனில் நமது வாழ்நாள் முழுதும் நாம் அனைவரும் சக்திக்கூறுகளிலான கடல் ஒன்றினால் சூழப்பட்டுள்ளோம் என்பதே; நாம் அதனுள் மூழ்கடிக்கப்பட்டுள்ளோம்; அது நம்மைச் சுற்றிலும், மற்றும் நம் உள்ளும் இருக்கின்றது. நாம், நம்மை ஆன்மீக சக்திகள் சூழ்ந்தும், அரவணைத்தும், மற்றும் போர்த்தியும் உள்ள உருவளவை ஒன்றினுள் வாழ்கின்றோம். நாம் அவற்றைக் காணமுடியாது. நமது கருவிகள் அவற்றை அளக்க முடியாது. அவை பொதுவான ஒன்றாகவும், தொட்டுணரும் வகையிலும் இல்லை. அவை இங்குதான் உள்ளன, மற்றும் இவ்விஸ்வத்தின் உண்மையியலின் ஓர் அம்சமாக இவ்வான்மீக சக்திகளின் வலிய மற்றும் முன்னாதிக்கம் செலுத்தும் செல்வாக்கு உள்ளதென நமது சமயம் நமக்கு அறிவு புகட்டுகின்றது. ஓரிடத்தில், அப்துல் பஹா ஆவியைப் பற்றி குறிப்பிடுகையில், “…யாவற்றையும் உயிர்ப்பித்தும் ஊடுருவவும் செய்யும் தெய்வீக மூச்சுக் காற்று,”1 எனக் கூறுகின்றார். நாம் இந்த கடலில், இந்த ஆன்மீகச்சக்திகள் அடங்கிய சூழலில் மூழ்கடிக்க மட்டும் படவில்லை, ஆனால் இவ்வான்மீகச்சக்திகள் நம்மை மர்மமான முறையில் ஆனாலும் மிகவும் இன்றியமையாத விளைவுகளுக்கு உட்படுத்துகின்றன. நமது உணர்ச்சிகள், நாம் செயல்படும் விதம், நமது ஊக்கம், நமது மேம்பாடு, நமது சந்தோஷம், நமது நோக்க உணர்வு, நமது வாழ்க்கைச் செல்லும் விதம் ஆகியவை இச்சக்திகளினால், அவற்றை நாம் கண்டுணரும் விதத்தினால், அவற்றை நாம் ஈர்க்கும் விதத்தினால் மற்றும் நாம் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தினால் பெரும்பாலும் நிர்ணயிக்கப்படுகின்றன.
இதுவே இன்றிரவு எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பின் மையமாக இருக்கின்றது எனும் எண்ணமே நான் இவற்றைக் குறிப்பிடும் காரணம். தனிநபர்கள் எனும் முறையில் நமது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளைக் கடக்கும் நமது சவால் யாதெனில், ஆழமாகவும், தன்னியக்கமாகவும், இச்சக்திகளின் பிரசன்னம் குறித்த உணர்வு பெற்றும், நாம் வாழும் மற்றும் இயங்கும் இவ்வுலகினைப் பற்றிய நமது புரிந்துணர்வில் அதைக் கணக்கில் சேர்த்துக்கொள்வதும் ஆகும். நாம் இந்த ஆழமான அறிவைப் பெற்றால் மட்டும் போதாது, ஆனால் அதற்கும் மேலாக, நாம் பிரயோஜனமான வகையில் தன்மைமாற்றம் பெற இச்சக்திகளை ஈர்த்திடக்கூடிய வழிவகைகளை நாம் செயல்படுத்த வேண்டும். இதுவே இத்தலைப்பின் சாரம் என்பது என் எண்ணம் — அதாவது இவ்வான்மீக சக்திகளை நாம் உணருவதும் நம்மை மாற்றிக்கொள்வதற்காக இச்சக்திகளை நாம் எப்படி ஈர்க்கப் போகிறோம் என்பதும் ஆகும். இதை நாம் செயல்படுத்தும் போது, நமது வாழ்க்கையில் சம்பந்தப்பட்டுள்ள இவ்வான்மீக சக்திகளின் உண்மையியல் குறித்து விழிப்புணர்வற்றவர்களுக்கு நாம் செய்யக்கூடிய இக்காரியங்கள் முற்றிலும் அறிவுக்கொவ்வாதவையாக இருக்கும்.
சில நாட்களுக்கு முன்பு நான் நமது புனித நினைவாலயம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அவ்வேளை அங்கு என்னைச் சுற்றிலும் நான் கண்ட இயல்நிகழ்ச்சியைப் பற்றி சிந்திப்பதற்காக என்னுடைய தியானங்களிலிருந்து வெளிவந்தேன். பார்வைக்கு வெற்றுக் கூடமாக காட்சியளித்த அந்த அரைக்குள் மக்கள் வந்தவண்ணமாக இருந்தனர்; அத்திருவாசலுக்குள் நுழையும்போது அவர்கள் கண்ணீர் மல்கவும், பெரும் பக்தியுடனும், தங்கள் சிரங்களை தரையில் தாழ்த்தியும், நினைவாலயத்தின்பால் தங்களது பக்தியினை வெளிப்படுத்தும் வேறு பல காரியங்களைச் செய்தவாறும் இருந்தனர். புனித நினைவாலயங்களின் மேன்மையைப் பற்றியும் அவற்றின் செயல்விளைவுகளையும் அறியாதவர்களுக்கு இக்காட்சி மிகவும் விநோதமாகவே இருக்கும். அவர்: இம்மக்கள் என்ன செய்கின்றனர்? — ஒரு வெற்றரைக்குள் இவர்கள் ஏன் நுழைகின்றனர், அங்கு பெரிதும் உணர்ச்சிவசப்படுகின்றனர், வெற்றிடத்திற்கு முன்பாக சிரந்தாழ்த்துகின்றனர்? இது எதற்காக? இவர்கள் ஏன் இதைச் செய்கின்றனர்?” ஆக, ஆன்மீக சக்திகள் குறித்த நமது புலனறிவு, வேறுவகைகளில் அறிவுக்கெட்டாத சில நடவடிக்கைகளில் நம்மை ஈடுபட தூண்டுகிறது. ஆக, இச்சக்திகள் குறித்து மிகக் கூர்மையான அறிவு பெற்றும், நமது வாழ்க்கையை தன்மைமாற்றமடையச் செய்வதற்கு அச்சக்திகளை ஈர்ப்பதற்கான வழிவகைகளை காண்பதுமே நம்முன் இருக்கும் சவாலாக உள்ளது. இது உள்ளியல்பாக இவ்விஸ்வத்தின் வலிமைகளுடன் நம்மை ஒருங்கிணைத்திடுவதில் ஏற்படும் சவாலாகும். இப்படி ஒருங்கிணந்து அச்சக்திகளோடு நாம் இயங்கும்போது நமது செயல்கள் வாழ்க்கையின் பற்பல அநுபவங்களினூடே இயல்பானவையாகவும் தன்னிச்சையானவையாகவும் இருக்கும்.
நாம் பயன்பெறவும் நமது வாழ்க்கையில் தன்மைமாற்றத்தை ஏற்படுத்தவும் இந்த ஆன்மீக சக்திகளையும் ஆதிக்கங்களையும் நாம் எப்படி ஈர்க்கப்போகின்றோம் என்பதே இன்றிரவு நான் உங்களுடன் கலந்துரையாடவிருக்கும் விஷயமாகும். இது எனது அறிவிற்கும் வெகுவாக அப்பாற்பட்ட ஒரு மர்மமான விஷயம் என்பது தெளிவு. இது “ஒரு சில பொருளியலான விஷயங்கள் ஆன்மீக விளைவுகளை உண்டாக்குகின்றன…”2 எனும் அப்துல் பஹாவின் மர்மமான வாக்கிலிருந்து உதித்ததாகும். இந்த வாக்கை என்னால் முழுமையாக புரிந்துகொள்ள இயலவில்லை மற்றும் இதை நான் மற்ற ஒருவருக்கு நான் எவ்வாறு விளக்குவது. ஆனால் இது உண்மையியலான ஒன்று என்பதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன் ஏனெனில் இது நமது சமயத்தில் உள்ளடங்கியுள்ள ஒரு விஷயமாகும். நமது புனித வாசகக் குறிப்புகளில், ஒரு சில பொருளியலான விஷயங்கள், பௌதீக உலகில் மேற்கொள்ளப்படும் ஒரு சில நடவடிக்கைகள், ஒரு சில எண்ணங்கள், ஒரு சில கூற்றுகள், ஒருவர் மற்றவருடன் கொள்ளக்கூடிய ஒரு சில உறவுகள் ஆகியவை, ஆன்மீக விளைவுகளை உண்டாக்குகின்றன என நாம் அறிவிக்கப்படுகிறோம். இது குறித்த மர்மத்தின் ஓர் உதாரணமாக அப்துல் பஹா மற்றும் பஹாவுல்லா ஆகியோரின் எழுத்துக்களில் வரும், ஏறக்குறைய பின்வருவது போல் இருக்கும், ஒரு வாசகக்குறிப்பாகும்: “…பௌதீக உலகில், (உடற்)தூய்மை அதியான்மீகத்திற்கு ஏதுவானதாகும்…”3 நாம் இதை எப்படித்தான் விளக்குவது? நான் தூய்மையாகவோ அல்லது தூய்மையற்றோ இருக்கின்றேன் என்பது அப்படி என்ன பெரிய விஷயம்? என் ஆன்மீகம், என் இருப்பின் உட்சாரம், என் நன்நடத்தை உருவாக்கம், இறைவனுடனான என் உறவு ஆகியவற்றுடன் இது ஏன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்? அதியான்மீகம் எதனால் தூய்மைக்கேட்டினால் பாதிப்படைகிறது? இவ்வுறவு குறித்த உறவுகள், அது இயங்கும்விதம் மற்றும் இந்த உறவு சம்பந்தமான சக்திக்கூறுகள் ஆகியவை யாவை? இக்கேள்விகளுக்கு நாம் முழுமையாக பதிலளிக்க மடியாது. ஆனால் இது உண்மை என்பது நமக்குத் தெரியும்; பௌதீக நடவடிக்கை மற்றும் அதன் அதியான்ம பின்விளைவு ஆகியவற்றிற்கிடையே உள்ள மர்ம உறவின் ஒரு பகுதியே இது என்பதும் நமக்குத் தெரியும்.
2. காந்தவிசை சம்பந்தமான கோட்பாடு
காந்தவிசை குறித்த கோட்பாடு நம்மைச் சுற்றியுள்ள அதியான்மீக சக்திகளை நாம் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த கலந்துரையாடலின் மையத்தில் உள்ளது. நம்மில் பலர் பள்ளிப்பாடமான பௌதீகப் பாடத்தில் காந்த சக்தியை இயற்கை குறித்த ஓர் ஆவிர்பாவமாக கண்டிருக்கலாம். ஆனால், உண்மையிலேயே காந்தவிசையென்பது நாம் புரிந்துகொள்ளமுடியாத ஒரு சக்தியாகும். நகர்ச்சியினால் பிறக்கும் மின்னனுக்களிலிருந்து காந்த சக்தி பிறக்கின்றது என்பது நமக்குத் தெரியும். ஆனால், அது காந்தவிசையின் ஆவிர்பாவம் குறித்த விவரிப்பே ஒழிய அதன் பிறப்பின் விளக்கமல்ல. இருதுருவ மற்றும் விளைவெல்லைகள் எனப்படும் கட்டுமானவடிவங்களாக அனுக்கள் மற்றும் அனுத்திரள்களின் பௌதீக அமைப்புகளினால் வேறுபட்டிருப்பதே ஒரு காந்தவஸ்து. காந்தவிசையென்பது காந்தமல்லாத ஒன்றிலிருந்து இரசாயன கலவையினாலின்றி அதன் பௌதீக உள்ளமைப்பினாலேயே வேறுபட்டுள்ளது. அவ்வமைப்பினால் ஏற்படும் பின்விளைவால், காந்தவஸ்துவோடு, காந்தவிசையென அழைக்கப்படும், கண்ணால் காணப்பட முடியாத, பன்மடங்கு தூரத்திலிருந்து செயல்படக்கூடிய ஓர் அற்புதமான சக்தி தொடர்புற்றுள்ளது. ஒரு காந்தமும், அதற்கப்பால் காந்தவிசைத் தொடர்புள்ள பொருளும் இருந்தால், அவற்றிற்கிடையே ஓர் ஈர்ப்பு சக்தி ஏற்படுகின்றது. அவ்விரண்டிற்கிடையே கையை வைத்தால் எதுவுமே ஸ்பரிசப்படாது. ஆனால், அச்சக்தி அங்குள்ளது மற்றும் அவ்விரண்டையும் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால், அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். இது, விவரிப்புக்குட்படாத ஓர் ஆழமான மர்மமாக இருந்தபோதிலும், இது ஒரு மெய்மையாகும் மற்றும் காந்தவிசையின் கலவையனுக்களின் கட்டமைப்பால் இது உருபெருகிறது.
இந்தளவிற்கு காந்தவிசையை ஒப்புவமையாக நான் இவ்வுரையில் நான் பயன்படுத்துவதற்குக் காரணம் பஹாய் சமய கோட்பாடுகளின் ஒரு வேறுபடுத்திக்காட்டும் அம்சமாக வஸ்து மற்றும் ஆவி ஆகியவற்றிற்கிடையே ஏற்படும் இனைந்தசெயற்பாட்டை விவரிப்பதற்கு காந்தவிசை எந்தளவிற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதே ஆகும். இவ்வெளிப்பாடே இதைச் செய்துள்ள முதல் வெளிப்பாடாகும். காந்தவிசை 13வது நூற்றாண்டிலேதான் முதன்முறையாக ஆய்வுரீதியாக கருத்தில் கொள்ளப்பட்டது. ஆகவே, அதைப் பயன்படுத்தக்கூடிய முதல் திருவெளிப்பாடாக பயஹாய் வெளிப்பாடு இருப்பதானது இயல்பானதே. பௌதீக உலகில் காந்தவிசையெனப்படும், அனுக்களின் ஒரு குறிப்பிட்ட பௌதீக சேர்க்கை ஒரு மிகவும் சக்திகரமான ஆற்றலோடு தொடர்புற்றிருப்பதானது, பஹாய்கள் எனும் முறையில் அதியான்மீக ஆற்றல்களை நாம் ஈர்த்திட செய்யும் முயற்சிக்குத் தேவைப்படுபவைகளைப் புரிந்துகொள்ள மிகவும் ஆற்றல்வாய்ந்த ஓர் உதாரணமாகும். இவ்விஷயத்தை விளக்கிட பஹாய் புனித வாசகங்களிலிருந்து மேலும் சில உதாரணங்களை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். அப்துல் பஹா கூறுகிறார்:
” நம்பிக்கையே சர்வ தயை மிக்கவரின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தக்கல்லாகும். சேவையே தெய்வீக ஆற்றலை ஈர்க்கும் காந்தக்கல்லாகும்…”4
மேலும் அப்துல் பஹா கூறுவது:
“…இறைவனை நினைவுகூறுவதென்பது ஒரு காந்தக்கல்லைப்போல் உறுதிப்பாடுகளையும் உதவிகளையும் ஈர்க்கின்றது.”5
ஒரு காந்தவிசையின் மேற்கோளை நான் உபயோகப்படுத்துவதன் நோக்கத்தைப் பற்றி நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நான் நினைக்கின்றேன். அந்த ஒழுங்குமுறை, நாம் எடுக்கும் நடவடிக்கைகள், அர்ப்பண உணர்வு, சமய போதனைகளுக்கேற்ப சேவையுணர்வில் பிறக்கும் செயலுணர்வு, நம்மைக் காந்தக்கற்களைப் போல் ஆக்குகின்றது. நாம் காந்தக் கற்களைப்போல் ஆகின்றோம். நாம் இரும்பை ஈர்க்கவில்லை ஆனால், இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கின்றோம். இக்கருத்து குறித்த பல வாசகப் பகுதிகள் உள்ளன. இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் சக்தியை, அப்துல் பஹாவின் அழகான வாசகப் பகுதி ஒன்று பின்வருமாறு விவரிக்கின்றது. அவர் கூறுவதாவது:
கவனமற்ற ஆன்மாக்கள் விழிப்புணர்வு பெறவும், இறந்த ஆன்மாக்களுக்கு உயிரளிக்கவும், ஆன்மீக நோயாளிகளை குணப்படுத்தவும், எளிமையானவர்களை விவேகிகளாக்குவதற்கும், அறியாதோருக்கு அறிவுபுகட்டவும், லௌகீகமானதை ஆன்மீகமானதாக்குவதற்கும், தூரவிலகியுள்ளோரை (இறைவன்) அருகில் ஈர்த்திடவும், அன்னியர்களை நண்பர்களாக்கிடவும் இரவும் பகலும் முயற்சிப்பீர்களாக.”
“இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்த்திடும் காந்தவிசையாற்றல் இதுவே.”6
இவ்வாசகப்பகுதி ஒரு குறிப்பிட்ட செயற்பட்டியலை விவரிக்கின்றது — ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையை விவரிக்கின்றது, இது இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும், நம்மைப்பற்றிய, நமது பேச்சு, நமதுடல், நமது எண்ணங்கள், ஆகியவைக் குறித்த செயல்கள் உருவாக்கும் அற்புதமான காந்தவிசையைப்பற்றியது. இது போன்று வேறு பல வாசகப் பகுதிகளும் உண்டு. மற்றொரு இடத்தில் பின்வருமாறு அப்துல் பஹா கூறுகிறார்:
“…இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தக்கல்லாக ஒற்றுமையும் இணக்கமும் உள்ளன.”7
சமயத்தைப் போதிப்பதிலும், இதே கோட்பாடுகளே பொருந்துகின்றன. அப்துல் பஹா கூறுவது:
“மனிதர்களை சரியான பாதையில் வழிநடத்தும் செயலே இறைவனின் உதவிகளின்பால் நம்மை ஈர்த்திடும் காந்தக்கல்லாகும்.”8
அவர் அடுத்து கூறுவது:
“…போதகரின் நாவானது போதித்துக்கொண்டிருக்கும் போது, அவரும் இயற்கையாகவே அதனால் உற்சாகத்திற்குள்ளாகக்கூடும், சாம்ராஜ்யத்தின் தெய்வீக உதவி மற்றும் கொடைகளை ஈர்க்கும் ஒரு காந்தமாகவும் ஆகக்கூடும்…”9
இது போன்றே, தமது சார்பாக எழுதப்பட்ட ஒரு கடிதத்தில்:
“என்றுமில்லாத வகையில், இன்று, விண்ணுலக ஆசிகளை ஈர்க்கும் காந்தமாக, இறைவனின் சமயத்தைப் போதிப்பதே உள்ளது.”10
ஒரு சீரமைப்பிலோ, அல்லது ஒரு செயலிலோ, இப்பிரபஞ்சத்தின் விதிகளில் ஒன்றை பின்பற்றும்போது காந்தக்கல் குறித்த கோட்பாடு அதில் உடன்பட்டிருப்பதைக் காணலாம். இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கக்கூடிய ஆன்மீக காந்தவிசையை உருவாக்கும் செயல்கள் அல்லது சீரமைப்புக்கள் பற்றிய பிரபஞ்சம் சார்ந்த பௌதீக விதியல்லாத ஓர் ஆன்மீக விதியே இங்கு குறிப்பிடப்படுகிறது.
இந்த உரையில் காந்தவிசையின் உருமாதிரி பரவலாகப் பயன்படுத்தப்படுவதை பஹாய் புனித வாசகங்களில் காணப்படும் காந்தவிசை குறித்த உட்கருத்தின் முழுமையான ஆய்வாக கருதக்கூடாது. ஆன்மீக சபை குறித்த உட்கருத்து பலவிடங்களில் காந்தவிசையாக விவரிக்கப்பட்டுள்ளது: அதாவது, காந்தவிசையை தோற்றுவிப்பதற்காக ஒரு காந்தவிசைப்பரப்பின் மூலப்பொருள்களை குறிப்பிட்ட வகையில் சீரமைப்பு செய்வது ஓர் ஆன்மீக சபையை தோற்றுவிப்பதற்குச் சமமாகும். வேறு இடங்களில், மனிதனின் இயல்பு குறித்து விரிவுரை செய்யும் போது மனித சரீரத்தின் கூறுகளைக் குறிப்பிட்டு பின்வருமாறு கூறுகிறார்:
“…மனிதனெனும் ஜீவனில் காணப்படும் இந்த அவயங்கள், இந்த உடற்கூறுகள், இந்த கூட்டமைவு, ஆவிக்கான ஈர்ப்புகளும் காந்தவிசையுமாகும்…”
இந்தப் பகுதியில், கூட்டமைவு மற்றும் சிதைவுறுதல், வாழ்வு மற்றும் மரணம், ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பு குறித்தும், உடல் சிதைவுறும் போது உடலிலிருந்து ஆவி பிரிவது குறித்தும் விரிவுரை செய்கின்றார். “பஹாவுல்லா, காந்தம் எனும் வார்த்தையோடு சமஅர்த்தம் கொண்டுள்ள ‘காந்தக்கல்’ எனும் வார்த்தையை உபயோகப்படுத்தி:
“…எல்லா தேசங்களுக்கும், எல்லா உலக மக்களுக்கும் காந்தக்கல் போல செயல்படும்”12 என குறிப்பிடுகின்றார்.
ஒரு வாசகப் பகுதியில் பஹாவுல்லாவின் வருகை குறித்து பின்வருமாறு கூறுகிறார்:
“…தூர தேசங்கள் மற்றும் நாடுகளிலுள்ள புனிதமான இதயங்கள் ஈர்க்கப்படும் தற்போதைய உலகின் துருவத்தின் ஆன்மாக்கள் மற்றும் இதயங்களுக்கான காந்தவிசையை உனது ஆண்டவர் வெளிப்படுத்தியுள்ளார்… ஓர் ஈர்ப்பு மிகுந்த சரீரத்திற்காவும், இறைவனின் சாம்ராஜ்யத்தின் காந்தவிசையின்பால் ஈர்ப்புற்றதற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்துவாயாக.”13
3. ஆன்மீக தன்மைமாற்றீடு
இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தவிசைகளாக மாறுவதே நாம் எதிர்நோக்கும் சவாலாக இருப்பின், அத்தகைய மாற்றத்தை நாம் எப்படி தோற்றுவிப்பது மற்றும் ஆன்மீக காந்தவிசைகளாக எப்படி மாறுவது? தன்மைமாற்றீடாகப்பட்டது இரு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது என் நம்பிக்கை. தைரியமூட்டுவதாகவும் அதே வேளை பயமுறுத்துவதாகவும் நிலைதடுமாறச் செய்வதாகவும் இருக்கும் மாஸ்டர் அவர்களின் வாசகம் ஒன்றில் முதலாவது கோட்பாடு உள்ளது:
“…மாற்றமென்பது ஓர் அவசியமான பண்பாகவும் இவ்வுலகின் அத்தியவசிய குணங்களில் ஒன்றாகவும் உள்ளதோடு, நேரம் மற்றும் இடத்திற்கும் அது பொறுத்தமுடையதாக இருக்கின்றது.”14
இப்பகுதி தன்மாற்றீட்டோடு மிகவும் நெருங்கிய ஏற்புடைமையுள்ளதாக தெளிவுடன் விளங்குகிறது. நாம் மாற்றம் பெறுகிறோம் என அது கூறுவது மனதுக்கு தைரியமூட்டுகின்றது. எல்லாமே மேம்பாடு காணும் நிலையில் உள்ளன; இயக்கமற்றதல்லாத இயக்காற்றல் மிக்க ஓர் உலகத்தில் நாம் வாழுகின்றோம். காலப்போக்கில், மாற்றம் காண்பதற்கான ஆற்றல் நமக்குள்ளது, மேம்பாடு காணவும் பரிணமிக்கவும், அதன்மூலம் தன்மைமாற்றம் அடையவும் முடியும் என்பது மனதுக்கு உறுதியளிக்கின்றது. அதே சமயம் இந்த வாசகம் பயமளிக்கவும் செய்கின்றது, ஏனெனில் எல்லா மாற்றங்களுமே நன்மை பயக்கவல்லவையல்ல; அது மேம்பாடாகவோ தாழ்வுற்றலாகவோ இருக்கக்கூடும். நாம் முன்னோக்கியும் செல்லலாம் பின்நோக்கியும் செல்லலாம்; இப்பகுதியிலிருந்து நாம் ஒரே நிலையில் இருக்கப் போவதில்லை என்பது நிச்சயம். ஆகவே, நாம் பின்னோக்கிச் செல்லாமல் இருக்க வேண்டுமானால், நாம் வலிந்து முன்னோக்கி செல்லவேண்டும். முன்னோக்கி நாம் வலிந்து முயற்சிக்காது போதனால், நாம் பின்னோக்கியே செல்லுவோம். இதுவே மாற்றத்தின் அத்யாவசிய பண்பியல்பின் பீதியூட்டும் அம்சமாகும்.
ஆக, தன்மைமாற்றம் குறித்து ஆலோசிக்கையில், தவிர்க்கவியலா வகையிலும், மீட்கமுடியா வகையிலும், மாற்றத்திற்கு உட்பட்டவர்களாவோம், மற்றும் அதன் காரணமாக நாம் அடையும் எதிர்படையாற்ற நேர்படையான மாற்றத்தை உறுதி செய்வதற்கு நாம் கட்டாயம் முயலவேண்டும்.
தன்மைமாற்றத்தை உள்ளடக்கிய இரண்டாவது கோட்பாடு முயற்சியின் பண்பியல்பு குறித்தது. புனித வாசகங்களின் ஒரு சில குறிப்புகளைக் கொண்டு, மேலும் அதிக விளைவுகள் மிக்க ஒரு காந்தவிசையாகிட ஒரு தனி மனிதனுக்கு உதவும் ஆன்மீக ஆற்றல்களை ஈர்க்கும் காந்தவிசைகளாக முயற்சியை உள்ளடக்கிய செய்கைகள் உள்ளன. தன்மைமாற்ற செயற்பாடு முயற்சியை உள்ளடக்கியுள்ளது. முயற்சியோடு நாம் ஆரம்பித்தோமானால், நாம் மேலும் அதிக மேம்பாடு காண்பதற்கு உதவும் ஆன்மீக ஆற்றல்களெனும் வெகுமதியை இறைவன் நமக்களிப்பார். அதன்மூலம், ஒரு சக்கரச் செயற்பாட்டின் வழி, அதிக நற்பயன் விளைவிக்கும் முயற்சியானது அதைவிட மேலும் அதிக ஆன்மீக ஆற்றல்களை ஈர்க்கும்; மற்றும் இதன்வழி அப்துல் கூறியது போன்று, “நம்பிக்கையே தயைமிக்கவரின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தமாகும்,” எனும் காந்தவிசை நிலைக்கும் ஒருவர் உயரலாம்.
இதே விஷயம் குறித்து பாதுகாப்பாளர் தமது செயலாளர் மூலம் எழுதியதாவது:
“…தான் எவ்வளவுதான் தகுதியற்றவராகத் தன்னை எண்ணியபோதிலும், சேவை செய்திடுவதற்கு எடுக்கப்படும் முயற்சியாகப்பட்டது, இறைவனின் ஆசிகளைக் கவர்ந்து அக்காரியத்திற்கு அவரை தகுதிபெற்றவராக ஆக்கிடும்.”15
மற்றும்:
“…உங்கள் குறிக்கோள்களை அடைந்திட நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முயலுகின்றீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக பஹாவுல்லாவின் உறுதிப்பாடுகள் அமைந்தும், நிச்சயமாக வெற்றியடைவீர்கள் எனும் உணர்வையும் பெறுவீர்கள்.”16
தெய்வீக உறுதிப்பாடுகள் வந்தடையும் செயற்பாட்டை எண்ணுகையில் இங்கு மறுபடியும், மறுவுறுதியும் அச்சுறுத்தலும் எனும் இணை அம்சங்கள் (காணப்படுகின்றன). நமது நிலையை பொருட்படுத்தாமலும், அல்லது எவ்வளவு வலுக்குறைந்தாற் போன்று ஒருவர் உணர்வு பெற்றிருந்தாலும், தேவைப்படுவதெல்லாம், அவசிய முயற்சியை மேற்கொள்ளவேண்டும்; முயற்சி மேற்கொள்ளும் செயலே உறுதிபாட்டிற்கு வழிவகுக்கும் சக்கரச் செயற்பாட்டிற்கு வழிகோளி, மேலும் அதிக முயற்சிகளுக்கு நமக்கு வலுவூட்டியும், அதன் பயனாக அதற்கும் மேலான வலு வழங்கியும் வரும் எனும் மறுவுறுதி நமக்கு வழங்கப்படுகின்றது. இதில் அச்சுறுத்தும் அம்சமாக, நாம் இச்செயற்பாட்டில் முயற்சிகள் செய்வதை நிறுத்தியும், மனநிறைவும், தன்நிறைவுணர்வு பெற்றும், இறுமாப்பு அல்லது கர்வம் அடைத்தாலும் இந்த சூழ்நிலையின் காரணமாக நாம் முன்பு ஈர்த்துக்கொண்டிருந்த இறைவனின் உறுதிப்பாடுகளைக் குறைத்து விடுவோம். முன்பு குறிப்பிட்டது போல, “இவ்வுலகிற்கு… மாற்றம் என்பது அவசியமான ஒரு பண்பு…”14 நாம் மாற்றம் பெற உதவி காந்தவிசைகளாவதற்கு முயற்சி செய்வதெனும் செயல் இன்றியமையாததாகும்.
புனித வாசகங்களின் மூலம், நம்பிக்கையுடனும் அர்ப்பண உணர்வுடனும் முயல வேண்டும் என்பதே எனது முடிவாகும். இம்முயற்சியில் நாம் விடாது தொடர்ந்தோமானால், மாற்றங்கள் நிகழ்ந்து தன்மைமாற்றம் அதன் பயனாக விளையும். இவ்விஷயங்களைக் கருதுவதானது அப்துல் பஹாவின் இரு குறிப்புகளின்பால் எனக்கு அகக்காட்சிகள் வழங்குகின்றது. இக்குறிப்புகள் அசாதாரணமானவையாக எனக்கு அப்போது தோன்றின. இக்குறிப்புகள், வில்மட் கோவில் கட்டப்படுவதற்கான ஆரம்ப வேளையின் போது உச்சரிக்கப்பட்டவையாகும். இவற்றில் முதல் குறிப்பாக, “நீங்கள் ஆரம்பிக்க வேண்டியதுதான், யாவுமே சரியாக அமைந்துவிடும்,”17 நான் என் வாழ்க்கையிலும் சரி பிறரது வாழ்க்கையிலும் சரி பல முயற்சிகள் இந்த எளிமையான வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளேன். “நீங்கள் ஆரம்பிக்க வேண்டியதுதான், யாவுமே சரியாக அமைந்துவிடும்,” மற்ற எதுவுமே முக்கியமில்லை. உங்களுடைய தற்போதைய நிலை, உங்கள் சிரமங்கள், உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், உங்கள் துரதிர்ஷ்டங்கள் மற்றும் வாய்ப்பின்மை, எல்லாமே இந்த வாக்கின் மூலம் அழிந்துபடுகின்றன, அதாவது, “நீங்கள் ஆரம்பிக்க வேண்டியதுதான், யாவுமே சரியாக அமைந்துவிடும்,” எனும் வாக்கு.
குறிப்பிட்ட வகையில் நமது ஆர்வத்தைத் தூண்டும் மற்றொரு கூற்று, 1912ல் அக்கோவிலின் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியின் போது கூறப்பட்டது. அப்போது அங்கிருந்தோர் கூறியதாவது, அப்துல் பஹா கல்லை நட்டுவிட்டு, “கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது,”18 என கூறினாராம். இது மிகவும் அதிசயமான ஒரு கூற்று. நான் இது குறித்து ஆழமாக சிந்தித்தேன். “கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது,”18 கோவிலைக் கட்டுவதற்கு முன்பாக அமெரிக்க பஹாய்கள் 40 வருட பெரும் முயற்சிகள், பிரமாண்ட தியாகங்கள், நம்பமுடியாத சிரமங்கள் ஆகியவற்றை எதிர்நோக்கினர். அது பல சவால்களை வெற்றி கண்டது. 1953ல் கட்டிடம் திறப்பு விழா காணும் வரையில், கட்டிடத்தை எழுப்பவும், கட்டிடத்தின் வெளிச் சித்திர வேளைப்பாடுகளையும் உள் வேளைப்பாடுகளை முடிக்கவும், புற நிலம் சார்ந்த வேளைகள் பூர்த்தி செய்யப்படவுமான சவால்கள் அவை. ஒரு சாதாரண கல்லை மட்டும் வைத்துவிட்டு அப்துல் பஹா ஏன் அவ்விதமாக கூறவேண்டும், “கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது,” என? இதற்கான பதில் நான் இதுவரை தொட்டுப்பேசிய போதனைகளில் அடங்கியுள்ளது; முயற்சி செய்வதின் பெரும் முக்கியத்துவம், மாற்றம் ஏற்பட வேண்டும் எனும் இயல்பு, மற்றும் காந்தவிசை செல்வாக்கின் ஆற்றல் ஆகியவை. தங்களின் மாபெரும் முயற்சிகளின் மூலமாக தெய்வீக உறுதிகளை ஈர்த்திடும் ஒரு மாபெரும் காந்தக்கல்லாக தங்களை அமெரிக்க பஹாய்கள் மாற்றிக்கொண்டு இம்மாபெரும் திட்டத்தை பூர்த்தியடையச் செய்தனர். தூரநோக்கெனும் கண்களோடு, வருங்காலத்தைப் பார்த்து, அடிக்கல் நாட்டப்பட்டதும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதும் அந்த ஆரம்பத்திற்கான நடவடிக்கைகளே என்பதை உணர்ந்தார். இதனாலேயே அவர் “கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது,” என கூறிட உந்தப்பட்டார்.