மக்களோடு தொடர்புகொள்ளுங்கள், கருவிகளோடு அல்ல…


(வாட்ஸாப்பில் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஓர் அற்புதமான செய்தி)

என் மாமா பணம் அனுப்புவதற்காக அவரோடு நான் வங்கியில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தேன். அப்போது அவரிடம்:

“மாமா, உங்களுக்கு இணைய வங்கி முறையை நாம் ஏன் ஆரம்பிக்கக்கூடாது?” எனக் கேட்டேன்.

“நான் ஏன் அவ்வாறு செய்யவேண்டுமென்றார்?” என்றார் அவர்

“இல்லை, வங்கி மூலம் பணம் அனுப்புவதற்கு நாம் இவ்வாறு ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியதில்லை அல்லவா?” என்றேன்.

“நீங்கள் இணையம் மூலம் உங்கள் கொடுக்கல் வாங்கல் அனைத்தையும் செய்துகொள்ளலாம். எல்லாமே மிகவும் சுலபமாக இருக்கும்!”

அவரை இணை வங்கிமுறைக்கு அறிமுகப்படுத்துவது குறித்து நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன்.

அதற்கு அவர், “அவ்வாறு செய்தேனென்றால், நான் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டியதில்லையா?” என்று கேட்டார்.

“ஆம், ஆம்,” என்றேன். எவ்வாறு இப்போதெல்லாம் மளிகை பொருள்கள் வீட்டிற்கே அனுப்பப்படுகின்றன மற்றும் எமேஸன் எல்லாவற்றையும் செய்கிறது என்பதை அவருக்கு எடுத்துக் கூறினேன்.

அவருடைய பதில் என்னை வாயடைத்துப்போக வைத்தது.

friends-clipart-9

அவர், “இந்த வங்கியில் இன்று நான் நுழைந்தது முதல், என் நண்பர்களுள் நால்வரைச் சந்தித்தேன், வங்கியில் வேலை செய்யும் ஊழியர்களோடு சற்று உரையாடினேன். அவர்கள் இப்போது எனக்கு நன்கு அறிமுகமாகிவிட்டனர்.

நான் தன்னந்தனியாக இருக்கின்றேன் என்பது உனக்குத் தெரியும். எனக்கு இத்தகைய நட்புகள் எனக்கு மிகவும் அவசியம். நான் என்னைத் தயார்படுத்திக்கொண்டு வங்கிக்கு வர விரும்புகின்றேன். எனக்கு நிறைய நேரம் இருக்கின்றது; நான் நேரடித் தொடர்புகளுக்காக ஏங்குகின்றேன்.

இரண்டு வருடங்களுக்கு முன் நான் உடல்நலமின்றி கிடந்தேன். நான் பழங்கள் வாங்கும் கடைக்காரர் என்னைச் சந்திக்க வந்தார்; படுக்கையருகே அமர்ந்து எனக்காகக் கண்ணீர் விட்டார்.

அதற்குச் சில நாள்களுக்கு முன் காலை வேளை நடக்கும் போது என் மனைவி கீழே விழுந்துவிட்டாள். என் மளிகைக் கடைக்காரர் அவளைப் பார்த்து உடனடியாகத் தமது காரை எடுத்துக்கொண்டு என் வீட்டிற்கே கொண்டுவந்துவிட்டார். நான் எங்கு வாழ்கின்றேன் என்பது அவருக்குத் தெரியும்.

சரி, எல்லாமே இணையமூலமாகிவிட்டால், ஆன்லைன் ஆகிவிட்டால், இந்த ‘நேரடி மனிதத் தொடர்பு’ எனக்குக் கிடைக்குமா?

எல்லாமே என் வீட்டிற்கே அனுப்பப்படும் வகையில் நான் ஏன் கணினியோடு மட்டும் தொடர்புகொள்ள வற்புறுத்தப்பட வேண்டும்?

‘விற்பவரை’ மட்டுமல்லாது, நான் தொடர்புகொள்ளும் மனிதரை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்; அது உறவுகள் குறித்த பந்தங்களை ஏற்படுத்துகின்றது.

உன் ‘அமேஸன்’ இதையெல்லாம் கூட செய்யுமா?”

தொழில்நுட்பவியல் வாழ்க்கையல்ல… மக்களோடு நேரத்தை செலவிடுங்கள்… கருவிகளோடு அல்ல…