ஹுகுகுல்லா
உலக மையத்ததில் 1987ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி திரு அலி நக்ஜவானி அவர்களினால் ஆற்றப்பட்ட உரை.
அமாத்துல் பஹா ருஹியா கானும் அவர்களே, அன்புக்குரிய நண்பர்களே!
நம்மில் பலர் ஹுகுகுல்லாவுக்குச் செலுத்துவதற்குத் தாயாராகிக்கொண்டு வருவதைப் பார்க்கையில் உண்,ையில் மனதுக்கு இதமாக இருக்கிறது. நான் இச்சட்டத்தின் ஆன்மீக முக்கியத்துவம் பற்றி பேச விரும்புகிறேன். பஹாவுல்லா அதனைப் பின்வரும் வார்த்தைகளில் குறிப்பிடுகிறார். ஹுகுக் ஸ்தாபணம் “புனிதமானது,” “ஹுகுக் பற்றிய கேள்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது,” “ஹுகுல்லா என்பது உண்மையிலேயே ஒரு மாபெரும் சட்டமாகும். ” இந்த மேற்கோள்கள் யாவுமே ஐக்கிய அரசின் (பிரிட்டன்) தேசிய ஆன்மீக சபை பிரசுரித்துள்ள ஹுகுகுல்லா பற்றிய தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டவை, பிற தேசிய ஆன்மீக சபைகள் அதனை அச்சடிக்கும் என உலக நீதி மன்றம் நம்புகிறது. மேலும் உலக நீதி மன்றம் இந்த தொகுப்பின் சுருக்கமான வடிவத்தையும் வெளியிட்டுள்ளது. எந்தத் தேசிய ஆன்மீக சபையும் அதன் சுருக்கப்பட்ட வடிவத்தையோ அல்லது அச்சட்டத்தின் சுருக்கத்தையோ இன்னும் பிரசுரிக்கவில்ல. இச்சட்டம் உலகம் முழுதும் அமுலுக்கு வருவதை எதிர்பார்த்தவாறு அதனைப் பற்றி நண்பர்கள் கற்றறிந்து ஆழமாக அறிந்துவைக்கவேண்டும் என்பதற்காக எல்லா தேசிய ஆன்மீக சபைகளுக்கும் இவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
நாம் பிற சமயங்களின் சட்டங்களை ஆய்வு செய்யும் போது, நன்கொடைகளையும் தர்மங்களையும் கொடுப்பதற்கான கட்டளை எனவும் , இத்தகைய செயல்கள் சுயவிருப்பத்துடனும் ஒருவரால் முடிந்த அளவுக்குச் செய்யப்பட வேண்டும் என்ற கட்டளை இருப்பதையும் அவற்றை கடவுள் மீது கொண்டுள்ள நன்றியின் அடையாளமாகச் செய்யவேண்டும் என இருப்பதையும் நாம் ஒவ்வொரு சமயத்திலும் காணச்செய்கிறோம். உதாரணமாக பழைய ஏற்பாட்டில் நாம் இவ்வாறு காண்கிறோம், “உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் ஊக்கத்தைக் கடை பண்ணு”.
மேலும் ஒருவருடை சொத்தில் இருந்து பத்தில் ஒரு பகுதி என தீர்மாணிக்கப்பட்ட தசமபாகம் பற்றியும் இவ்வாறு இருக்கக் காண்கிறோம். “தேசத்திலே நிலத்தின் வித்திலும் விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது. (லெவியராகமம் 27:30) இஸ்லாம் சமயத்திலும்கூட, ஒருவருடைய செல்வத்தில் இருந்து ஒரு பகுதியைக் குறிக்கின்ற “ஃகும்” பற்றிய ஒருவருடைய நிலத்தில் இருந்து பெறப்படும் வருவாயைக் கணக்கிடுவதில் மிகவும் குழப்பமாக உள்ள சக்காட் பற்றியும் குறிப்புக்கள் இருப்பதைக் காண்கிறோம்.
அடைப்புக்குறிகளில் உள்ள சாதாரண குறிப்புக்கள் (கூம் 8) ஹுகுகுல்ல எனும் தொகுப்பில் உள்ள பாராக்களின் எண்களைக் குறிப்பவை. மேலும். இந்தக் குறிப்புக்களும், இவைப் போன்ற அடிக்குறிப்புக்களும் ஆசிரியரின் இடைச்செருகளே அன்றி அகல் உரையின் பகுதி அல்ல. இறுதியாக எங்கெங்கும் அர்த்தம் தெளிவாக இருக்காது எனப் பட்டதோ, அல்லது ஒரு குறிப்பிட்ட மேற்கோளை முழுமையாகப்ப பயன்படுத்தும்படி செய்வதற்கோ (உரையில் உள்ள வார்த்தைகள் மேற்கோளில் உள்ள வார்த்தைகளைவிட அதிகமாக வேறுபடாதபோது) சில திருத்தங்கள் செய்யப்பட்டன. இவை அடைப்புக்குறியில் குறிப்பிடப்பட்டுள்ளன. {இப்படி}
இது குறிப்பாக கேனடா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற சில நாடுகளில் நிறைவேற்றபட்டுள்ளது.
பயானில் முதன் முறையாக ஹுகுகுல்லா எனும் சொல் பாப் அவர்களாலும் பயண்படுத்தப்பட்டது. ஆனால் அதன் வடிவமும் உள்ளடக்கமும், பஹாவுல்லா நமக்குக் கொடுத்ததில் இருந்து மாறுபடுகிறது. ஹுகுகுல்லா என்பது கடவுளின் உரிமை என ஷோகி எபெண்டியால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது, ஆனால், பாரசீகப் பின்னனியில் இருந்து வந்தவர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பதுபோல், “ஹுகுக்” என்பது ஹுக் என்ற சொல்லின் பன்மையாகும். ஆகவே ஹுகுகுல்லா என்பது கடவுளின் உரிமைகள் ஆகும். கித்தாப்-இ-அக்டாஸின் பின் இணைப்பில் உள்ள கேள்விகளும் பதில்களும் எனும் பகுதியில், ஹுகுகுல்லா எனும் இச்சட்டம் பயானில் இருந்து எடுக்கப்பட்டதாக பஹாவுல்லாவே ஒப்புக்கொள்வதை நீங்கள் அறிவீர்கள்.
இப்பொழுது தம்முடைய சட்டங்கள் தொடர்பாக பஹாவுல்லா எவ்வாறு கையாண்பார் என்பது பற்றி சில வார்த்தைகள் கூரிட விரும்புகிறேன். தம்முடைய சட்டங்களின் நூலை வெளியிடுவதற்கு, தம்முடைய முப்பத்தொன்பது வருட பதவிக்காலத்தில் இருந்து இருபதுக் ஆண்டுகளை அவர் எடுத்துக்கொண்டார் என்று அவர் கறுதுவதையூம், கிதாப்-இ-அக்டாஸின் சுருக்கத்தில் இது மிகவும் தெளிவாக இருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். இருபது ஆண்டுகள் திருவெளிப்பாடு பிறந்தது 1853ல், சட்டங்களின் நூலாகிய கித்தாப்-இ-அக்டாஸ் 1873ல் வெளியிடப்பட்டது. பின்னர் அந்த நூலை வெளியிட்டபின்னர், அவர் அதனைத் தம் நண்பர்களுக்கு அனுப்பிவைக்க விருப்பவில்லை. அவர் அதனைக் சில நாட்களுக்கு வைத்திருந்தார். அவர் அதனை எவ்வளவு நாட்களுக்குத்தான் வைத்திருந்தார் எனத் திட்டவட்மாகத் தெரியாது. ஆனால் அது எப்படியும் ஒரு வருடத்திற்கு இருக்கக்கூடும். அதன் பிறகு அவருடைய சீடர்களில் பெரும்பாலானோர் வசித்துவந்த ஈரானுக்கு அதனை அவர் அனுப்பிவைத்தார். கித்தாப்-இ-அக்டாஸில் ஹுகுகுல்லா பற்றிய ஒரு குறிப்பு உள்ளது. அதனை நாம் அனைவரும் இன்று மாலையில் ஒன்றாகப் படிப்போமாக. எனினும், அந்த ஹுகுகுல்லாவைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் எவரையும் நியமிக்கவில்லை. இந்த நன்கொடையைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. இந்த நூல் வெளியிடப்பட்டு ஐந்து அன்டுகளுக்கு மௌனம் பூண்டார். பிறகு, இறுதியில் 1878ல் தான் அவர் இப்படிச் சொன்னார்: யாம் இப்பொழுது ஹுகுகுல்லாவைப் பெற்றுக் கொள்வதை அதிகாரபுர்வமாக்குகிறோம். ஆகவே, திருவெளிப்பாடு பிறந்த காலத்தில் இருந்து ஹுகுகுல்லா இருபது ஆண்டுகளுக்குத் தள்ளிப்போடப்பட்டது. இதே காலத்தில்தான் பஹாவுல்லா கட்டாயப் பிரார்த்தனைகளை வெளியிட்டார்,ஆகவே, இத்தகைய தெய்வீகக் கட்டளைகளைப் பெற்றுகொள்ளும் வண்ணம் ஈரானிய சமூகத்தில் நிலைத்தன்மை மற்றும் போதிய முதிர்ச்சியும் நிலவியதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். அதனை நண்பர்கள் மீது கட்டுண்டபோது, சமயத்தின் பொதுவான தேவைகளின் பொருட்டே அவ்வாறு செய்யப்பட்டதாக அவர் தெளிவுப்படுத்தினார். சமயமும் விரிவு அடைந்துவிட்டது. நண்பர்களும் இத்தகைய கூட்டணங்களைச் செலுத்தும் வகையில் நிலவரங்களும் சூழ்நிலைகளும் கேட்டுக்கொண்டன. ஆகவே, அவருடைய தூதுப் பணியின் கடைசிப் பதினான்கு ஆண்டுகளில்தான் அவர் ஹுகுக் பற்றி இன்னும் குறிப்பாக எழுதி இந்த முக்கியமான சட்டம் பற்றி நண்பர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலுரைத்து, இந்த முக்கியமான நிதியை இயக்கச் செய்தார்.
சமயத்தின் தேவைகள் பற்றிய பேசுகையில் சமயத்தின் வளர்ச்சிக் லௌகீக வழிமுறைகளின் முக்கியத்துவம் பற்றிய பல குறிப்புக்கள் இருக்கின்றன. உதாரணமாக, “கடவுளின் சமயத்தின் வளர்ச்சியும் மேம்மாடும் லௌகீக வழிமுறைகளை நம்பியுள்ளது ” (1) “அல்லது லௌகீக விமுறைகளின் தேவையை முன்னிட்டு இந்த செயல் விதிக்கப்பட்டுள்ளது.” (27) மேலும் “சில அத்தியாவசிய விவகாரங்களை ஏற்பாடு செய்வதற்காக, இந்தகைய கூட்டணங்களை ஏற்றுக்கொள்ளும்படி அனுமதி வழங்கப்பட்டது” (28) மீண்டும் “ சில பேர்கள் உதவியைப்பெறுவதும் பிறர் கவனத்தையும் பரிவையும் பெறுவதும் அத்தியாவசியமாகிறது, ஆனால் இவை யாவும் கடவுளின் அனுமதியுடன் நடைபெற வேண்டும். ” (32) அவர் ஹுகுக் பெற்றுக்கொள்வதை அனுமதித்தார், ஆனால் அதனை செலவு செய்வது மற்றும் செலுத்துவது யாவும் அவரிடம் தெரிவிக்கப்படவேண்டும். “தற்போது பல்வேறு பகுதிகளில் சமயத்தின் சேவையில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டு, ஆனால் சம்பாதிக்க இயலாமல் இருக்கின்ற பல தனிநபர்கள் உள்ளனர்,” (33) மறுபடியும் “கடவுளின் உரிமையில் இருந்து ஏழைக்கு வாங்குவது அனுபதிக்கப்படுகிறது, இது அனுமதி வழங்கப்படுவதற்கு உட்பட்டதாகும்.” அனுமதி பொதுவாகவே வழங்கப்படுமாயின், “அது கலகத்துக்கு இட்டுச் சென்று தொல்லையை ஏற்படுத்தும்,” (44) ஆகவே அவர் இந்த நிதியை ஒருங்கிணைத்துவருவதை நீங்கள் காண்பீர், இது கடவுளின் உரிமையாகும் அங்கே ஒரு மத்திய அதிகாரம் தேவைப்பட்டது. அவர் ஈரானில் ஒரு தலைமை அறங்காவலரை நியமித்தார், அவர் நாட்டின் பிற பகுதிகளிலும் வட்டாரங்களிலும் என அறங்காவலர்களையும் துணை அறங்காவலர்களையும் நியமித்துக்கொள்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டார். இவை யாவுமே அவரால் ஒருங்கிணைக்கப்பட்டன.
கித்தாப்-இ-அக்டாஸில் விளக்கப்பட்டுள்ள வாரிசு முறை இங்கே ஹுகுகுல்லா தொடர்பாக மேலோட்டமாக குறிப்பிடப்பட வேண்டும். கித்தாப்-இ-அக்டாஸில் ஆஸ்திகளைப் பற்றி குறிப்பிடுகையில், பஹாவுல்லா வாரிசு முறையில் இந்த வரிசையை வைக்கிறார். கடவுளின் அவதாரப் புருஷர்; அவருக்குப் பிறகு கிளைகள், பன்மை; அவர்களுக்குப் பிறகு உலக நீதி மன்றம். ஆஸ்திகள் பற்றி குறிப்பிடுகின்ற கித்தாப்-இ-அக்டாஸின் அப்பகுதியில் அது இவ்வாறுதான் விதிக்கப்பட்டுள்ளது. பஹாவுல்லா காலமானபோது, ஹுகுகுல்லா பற்றியோ, அல்லது யார் ஹுகுகுல்லாவைப் பெறுபவர் என்பது பற்றியோ அவர்தம் உயில் ஏற்பாட்டில் குறிப்பு இல்லை. ஆகவே அன்பர்கள் அது பற்றி அப்துல் பஹாவிடமே கேட்டனர். அதற்கு பதிலுரைக்கையில், பாரசீகப் பின்னனியில் இருந்து வருபவர்களுக்குப் பழக்கப்பட்ட ஒரு வார்த்தையை அவர் பயன்படுத்தினார் – அந்த வார்த்தை மார்ஜா 5 என்பதாகும். அதன் பொருள் அனைவருமே நாடிநிற்கவேண்டிய சமயத்தில் உள்ள அதிகாரம் என்பதாகும், அதுவே மார்ஜா. ஆகவே, பஹாவுல்லாவுக்குப் பிறகு தாமே அந்த மார்ஜா என அப்துல் பஹா குறிப்பிட்டார். அனைவரும் அவரிடம்தான் திரும்பவேண்டும். அந்த அதிகாரத்தின்பால்தான் ஹுகுகுல்லா போய்ச்சேரவேண்டும் என அவர் சொன்னார். ஆகவே பிறகு, தம்முடைய உயில் ஏற்பாட்டில் ஹுகுகுல்லா பாதுகாவலரிடம் கொடுக்கப்படவேண்டும் என அப்துல் பஹா மிகவும் தெளிவுபடுத்தினார். ஷோகி எபெண்டி அந்த உயில் ஏற்பாட்டை மொழிபெயர்க்கையில், அந்த ஹுகுகுல்லா அவர் மூலமாகத்தான் செலுத்தப்படவேண்டும் என மொழிபெயர்த்துள்ளார். சமயத்தின் தலைவர்களாக ஷோகி எபெண்டிக்கு நேரடியான வாரிசுகள் இருந்திருப்பார்களேயானால், அவர்களே ஹுகுகுல்லாவைப் பெறுபவர்களாக இருந்திருப்பார்கள். அது அவர்கள் “மூலமாகத்தான்” செலுத்தப்பட்டிருக்கும் காலப்போக்கில் நமக்கெல்லாம் தெரிந்ததுபோல், ஷோகி எபெண்டியின் மறைவுக்குப் பிறகு கடவுளின் சமயத்தன் திருக்கரங்களின் இடைவெளிக் காலம் முடிவடைந்த பிறகு, சமயத்தின் தலைமைப் பொறுப்பு உலக நீதி மன்றத்தின்பால் போய்ச் சேர்ந்தது. ஆகவே, “மார்ஜா” பற்றி அப்துல் பஹா கொடுத்த வழிமுறை உலக நீதி மறைத்தினால் பயன்படுத்தப்பட்டது. இத்தகைய சூழ்நிலைகளில் தாம் ஹுகுகுல்லா பெறலாம் எனவும், புனித எழுத்துக்கலில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக பணத்தை உலக நீதி மன்றத்தின் மூலம் செலுத்திடலாம் என அந்த ஸ்தாபனம் நண்பர்களுக்கு அறிவித்திருந்தது.
தமது சொந்த நாட்களில் இருந்த ஹுகுகுல்லா பற்றி குறிப்பிடுகையில் பஹாவுல்லா இப்படி எழுதியுள்ளார்,
“ஹுகுகுல்லாவுக்கு என விசேவுமாக வெளியிடப்பட்ட விதி ஒன்று உள்ளது. உலக நீதி மன்றம் உரு பெற்றபின்னர், அதற்கான சட்டம் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப தெளிவுபடுத்தப்படும்.” (59) உலக நீதி மன்றம் அமைக்கப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று உலக நீதி மன்றம் இச்சட்டத்தை உலகாலாவிய ஆறு ஆண்டுத்திட்டத்தின் இலக்குகளில் ஒன்றாகச் செய்து, அனைவரின் மீதும் சுமத்தப்படுகின்ற நாளை எதிர்நோக்கியவாறு இச்சட்டம் பற்றி நாம் கல்விப் பெறும்படியாகவும் செய்துள்ளது.
ஹுகுகுல்லா தொடர்பாக ஒரு விளக்கம் இருக்கிறது. நான் அதனை உங்களுக்காக வாசிக்க விரும்புகிறேன். அது இரண்டு இடங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஒன்று கித்தாப்-இ-அக்டாஸில் இருந்து எடுக்கப்பட்டது, (நாம் கட்டாயம் படிக்கவேண்டும் என நான் முன்னரே குறிப்பிட்ட பகுதியாகும்) அடுத்த அப்துல் பஹாவின் நிருபமாகும். அதன் சில பாகங்களை நான் வாசிக்கிறேன்.
பஹாவுல்லா எவ்வாறு இது பற்றி முதன் முதலாக கித்தாப்-இ-அக்கடாஸில் குறிப்பிட்டுவிட்டு, அது பற்றி விளக்கம் கொடுப்பதற்காக எப்படி 25 ஆண்டுகளுக்கு காத்திருந்தான் என்பதனை நாம் பார்த்துவிட்டோம். “ஒரு மனிதனின் 100 மிஸ்கால் தங்கள் பெற்றிருந்தால், அதில் இருந்து 19 மிஸ்கால் புமியையும் சொர்க்கத்தையும் படைத்தவர்ராகிய கடவுளுக்குச் சொந்தமாகும் இந்த மாபெரும் வள்ளன்மை உங்களுக்குக் கிடைத்தப்படி இருந்துவிடாமல் கவனமாக இருப்பீராக, ஓ மக்களே உங்களிடமிருந்தும் சொர்க்கங்களின் மீதும் பூமியின் மீதும் உள்ள அனைத்தில் இருந்தும் தாங்கள் முழுமையாக சுதந்திரமாக இருக்கையில் நாங்கள் இச்சட்டத்தை உங்கள் மீது விதித்துள்ளோம். உண்மையில், எல்லாம் தெரிந்தவரும் எல்லாமறிந்தவருமான கடவுளைத்தவிர அனைவரின் புரிந்துகொள்ளுதலுக்கும் அப்பாலான மர்மங்களும் நலன்களும் இந்தக் கட்டளைகளுக்குள்ளே மறைந்துகிடக்கின்றன. சொல்விராக: இந்த கட்டளையின் வழியாக கடவுளின் உங்கள் உடமைகளில் இருந்து உங்களைத் தூய்மைப்படுத்தி, கடவுளாக விரும்புகின்றவர்களைத் தவிர வேறெவருமே அடையமுடியாதபடியான ஸ்தானங்களுக்கு நீங்கள் நெருக்கமாக ஈர்க்கப்படும்படியாக அவர் உங்களுக்கு உதவுகிறார், அவரே தாரளகுணமுடையவர், இரக்கமுடையவர், வள்ளன்மை நிறைந்தவர்.” (10)
இப்போழுது, பின்வரவுள்ள சில வாக்கியங்களில் காணப்படுகின்ற ஆழ்ந்த அறிகுறிகளைப் பற்றி நீங்கள் சிந்திக்கவேண்டும் மென நான் கேட்டுக்கொள்கிறேன். “ ஓ மக்களே, ஹுகுகுல்லா விவாகாரத்தில் துரோகமாக நடந்துக் கொள்ளாதீர், அவருடைய அனுமதி இன்றி அதனைக் கொடுத்துவிடாதீர்.” (10) இதன்வழி உண்மையில் 19 வழுக்காடு நமக்குச் சொந்தமில்லை என்று பொருள் படும், நாம் அவருடைய அனுமதி இல்லாமல் 19 விழுக்காட்டைப் பயன்படுத்தினால், நாம் துரோகமுடன் நடத்துகொள்கிறோம். அது நமக்குச் சொந்தமல்ல, அது கடவுளுக்கே சொந்தமாகும். அதுவே கடவுளின் உரிமையாகும். “இது இவ்வாறுதான் அவர்தம் மடல்களிலும் இந்த மகிமைமிகு நிருபத்திலும் விதிக்கப்பட்டுள்ளது. ” இப்பொழுது எச்சரிகை வருகிறது. “ எவரொருவர் கடவுளிடம் நேர்மையில்லாமல் நடந்துகொள்கிறாரோ”- அவர் ஹுகுகுல்லாவைக் குறிப்பிடுகிறார்; வார்த்தைகளில் கனுவதானால், நாம் அந்த 19 விழுக்காட்டை நாம் விரும்பிய விதம் பயன்படுத்தினால், நாம் கடவுளிடம் நேர்மையற்ற முறையில் நடந்துகொள்கிறோம்- “எவரொருவர் கடவுளிடம் நேர்மையின்றி நடந்துகொள்கிறாரோ அவர் நீதியின்றிபடி வெளிப்படுத்தப்படுவார்.”(10) கடவுளின் நீதி அந்த நபர் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோருகிறது. இப்பொழுது அந்த சாதகமானப் பகுதியைக் காண்போம் – “ எவரொருவர் தமக்கு இடப்பட்டுள்ளவற்றை நிறைவேற்றுகிறரோ, அவர் மீது, வழங்குபவரும், அதி தாராளகுணமுடையோருமாகிய தம் பிரபுவின் வள்ளன்மை எனும் சொர்க்கத்தில் இருந்து தெய்வீக நல்லாசிகள் பொழியும்.”(10)
அப்துல் பஹாவின் நிருபத்தைப் பொருத்தவரைக்கும், அது “அப்துல் பஹாவின் எழுத்துக்களில் இருந்து எங்களிடம் பகுதிகள்” என்ற பகுதியின் முதல் பகுதியில் காணப்படுகின்ற மிக நீண்ட நிருபமாகும். அதில் இருந்து நான் சுமார் ஐந்து அல்லது ஆறு பகுதிகளை வாசிக்கிறேன். நான் இந்த ஸ்தாபணத்தின் தத்துவம் எனவும் அதன் ஆன்மீக முக்கியத்துவம் எனவும் நாம் வருணிக்க இயன்றதை அவர் இங்கு நமக்காகக் கொடுக்கிறார். “உலகின் ஆலயம் என்பது மனிதனுடைய உருவத்தையும் சாயலையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. லௌகீக உலகின் அமைப்பு என்பது தன் கைகால்களும் அங்கங்களும் இனைப்பிரியாமல் ஒன்றாக இனைக்கப்பட்டுள்ள ஒரு தனி உருவுக்குச் சமமாகும். படைக்கப்பட்டுள்ள எல்லாம் பொருட்களும்மே நெருக்கமான தொடர்புடையவை என இருப்பதுபோல, ஒத்துழைப்பு, பரஸ்பர உதவி, மற்றும் கைமாறு என்பவை உருவின் உலகின் ஒன்றுபட்ட உடலுக்கு அத்தியாவசியம் பண்புகளாகும்.”(61) இப்பொழுது இந்த விஷயத்தை கவனிப்பீர்களாக, உயர்வு எனும் பிறைவட்டத்தின் மீது படைக்கப்பட்ட பொருட்களின் இராஜ்யம், எந்த அளவுக்கு உயரமாக ஏறுகின்றதோ அந்த அளவுக்கு உண்மையின் அறிகுறிகளும் ஆதாரங்களும் இன்னும் கூடுதல் வெட்டவெளிச்சமாக அதனால் உயரிய நிலையின் எல்லையில் கானப்படுகின்ற ஒத்துழைப்பும் கைமாறும் கிழுநிலையின் எல்லையில் காணப்படுபவையைக் காட்டிலும் இன்னும் பெரிதாக உள்ளன. உதாரணமாக, இந்த அடிப்படை உண்மையியலின் ஆதார அறிகுறிகள் உலோக இராஜ்த்தைக் காட்டிலும் தாவர இராஜ்யத்தில்தான் இன்னும் அதிகமாக வேறுபடுத்திக் காணமுடிவதோடு, தாவர உலகைக் காட்டிலும் விலங்கு உலகில்தான் இன்னும் கூடுதாலாகப் புலப்படுகின்றது. ஒத்துழைப்ப, பரஸ்பர உதவி, மற்றும் கைமாறின் செயல்கள் யாவும் உடலுக்கும் லௌகீக உலகின் பொருளுக்கும் மட்டும் சார்ந்தவை அன்று, ஆனால் அவை லௌகீக சூழ்நிலைகளானலும் சரி, அல்லது ஆன்மீக சூழ்நஉலைகள் ஆனாலும் சரி எல்லாச் சூழ்நிலைக்கும் பொருந்துகின்றன. ஒன்றுக்கொன்றுள்ள இந்த உறவுகள் எந்த அளவுக்கு பலப்படுத்தப்பட்டு விரிவடையும் போது, அந்த அளவுக்கு மனித சமுதாயம் வளர்ச்சியிலும் செழிப்பிலும் மேம்பாடு அடையும். இதுவே ஹுகுகுல்லா எனும் ஸ்தானம் நிறைவப்பட்டுள்ளது அடிப்படை கோட்பாடாகும்.
வேறு வார்த்தைகளில் கூறவதானால் மனித சமுதாயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கும் அங்கத்தினர்களுக்கும் இடையில் பரஸ்பர கைமாறும் இணைந்த செயலும், ஒத்துழைப்பும் மேம்பாடு கானுப்படி செய்வதற்காகவே அது பஹாவுல்லாவினால் அங்கு நிறுவப்பட்டுள்ளது. பஹாவுல்லா இச்சட்டத்தை ளிெப்படுத்துகையில் பஹாவுல்லாவினால் அங்கு கோட்பாடைத்தான் கொண்டிருந்தார் என அப்துல் பஹா குறிப்பிடுகிறார். நான் இந்த நீண்ட நிருபம் முழுவதையும் வாசிக்க இயலாது, அனால் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது நீங்கள் இதனைக் படிப்பீர்கள் என நான் நம்புகிறேன்.
ஹகுகுல்லா எவ்வாறு கொடுக்கப் படவேண்டும்? எந்தப் பாராக்களில், ஹுகுகுல்லாவின் அறங்காவலர்கள் இந்தக் கட்டணத்தை வரப்புறுத்தி வாங்கவோ அல்லது கெட்டு வாங்குவதோ கூடாது என அவர் மீண்டும் மீண்டும் தெள்ளத்தெளிவாகத் தடைவிதிக்கிறார். (8,9,27,32, 38, 40, 44,46, 51, 53). அவர் மறையிடும்படி கேட்டுக்கொள்கிறார். அது அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அத்தகைய முறையீடுகளும்கூட பொதுவானவையாகவும் நண்பர்களின் கூட்டத்திற்கும் இருக்க வேண்டும். எவ்வித அழுத்தமோ வற்புறுத்தலோ அவர்கள் மீது சுமத்தப்படலாகாது. எப்பொழுதும் எல்லாச் சூழ்நிலைகளிலும் சமயத்தின் கண்ணியத்தைக் காக்கும்படி அவர் தம்முடைய தலைமை அறங்காவலரையும். பிற அறங்காவலர்களையும் கேட்டுக் கொள்கிறார். இந்தக் கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது? அவர் நண்பர்களின் இதயங்களிலும் மனங்களிலும் காணவிரும்புகின்ற பண்புகள் மற்றும் மனப்பாட்ன்மைகளையும் கொண்ட முழுப் பட்டியல் ஒன்று உள்ளது.
இதுவே அந்தப் பட்டியல்:-
மகிழ்ச்சி;
பிரகாசம்;
பரிபூரண பணிவு எனும் உணர்வு;
தாழ்மை எனும் உணர்வு;
நிறைவு தரும் மனது;
கடவுளுக்காக
அளவு என்பது முக்கியமல்ல, சிறு மருவானாலும் பரவாயில்லை. வெறு வார்த்தைகளில் கானுவதானால், உங்களிடம் ஐந்து தானியங்கள் இருந்தால், நீங்கள் பஹாவுல்லாவுக்கு ஒரே ஓரு தானியம் மட்டுமே தரவேண்டும். அவர் அதனை ஏற்றுக்கொள்கிறார், அதுவே அவருக்கு விலைமதிப்பில்லாத பொருளாகிறது. இன்னும் தொடர்கிறென்:-
சந்தோஷத்துடன்
நல் இணக்கத்துடன்
கொடுப்பது இயற்கையாக வரவேண்டும்
நல்விருப்பத்தைதுடன்;
விரும்பிய தாழ்பனிவுடன்;
இயன்றபோகுதெல்லாம் கொடுத்தல்;
ஆர்வத்துடன்;
அது மனசாட்சியைப் பொறுத்தது;
அது ஒரு ஆன்மீக மற்றும் நேர்மையான கடமையாகும்;
இவ்வாறுதான், கட்டணம் எந்த மனப்பான்மையோடு கொடுக்கப்பட வேண்டும், எவ்வாறு கொடுக்கப்படவேண்டும் என்று விளக்கும் இந்தத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட சில வார்த்தைகளே இவை.
அது இவ்வாறு இல்லாமல் போனால், அதனை ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்று தமது அறங்காவலர்களுக்குச் சொல்லும் அளவுக்கு அவர் போகிறார். (9) அவர் அவ்வளவு தூரம் செல்கிறார். அதுதான், அது கடவுளுன் கண்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பது.
இப்பொழுது நாம் சில பலன்கள் பக்கம் திரும்புவோம். பலாபலன்கள் கொடையாளர்களுக்கே திரும்பவும் போய்ச் சேர்கின்றன என அவர் மீண்டும் மீண்டும் கூறுகிறார் (2,3,4,5,35,36,38,40,44,45,47,48). ஹுகுகுல்லா என்பது “இரக்கம், நிறைவு மற்றும் எல்லா நன்மைகளின் பிறப்பிடம்.” அது கடவுளின் உலகங்களின் ஒவ்வொரு உலகிலும் ஒவ்வொரு ஆன்மாவுக்குள்ளும் நிலைக்கவல்ல ஒரு வள்ளன்மையாகும். “ (7)” ஹுகுகுல்லாவின் பாலும், அவர்தம் சேவர்களின்பாலும் எவ்விதமான கடமையுணர்வும் இன்றி கடவுளின்பால் பெயர்கின்ற அவர் நிலமடைவாராக. “(22) மனிதனுக்கோ அல்லது கடவுளுக்கோ எந்தவிதமான கடன்களும் இருக்ககூடாது. கட்டணம் செலுத்துவது என்பது “ நல்லாசிகளின் பிறப்பிடமும் உள்ளது.”(29) “அதன் நல்ல பலன்களும் அதன் கனிகளும் பூமியின் இராஜ்ஜியமும் சொர்க்கமும் நீடிக்கும்வரைக்கும் நிலைக்கும்.”(36) அது “மனிதர்களின் ஆன்மாக்களை சுத்தரித்து, தூய்மைப்படுத்தி, சுத்தப்படுத்துகின்ற ஒரு சாதனமாகவும்,”செழிப்பு மற்றும் ஆசிக்கான பிறப்பிடமாகவும் உள்ளது. “(40) அது தெய்வீக அதிகரித்தலுக்கும் மோட்சத்துக்கும்… ஏதுவானது.” (41) “ அதனைக் கடைபிடிப்பதனால் ஒருவர் தன்மதிப்புக்கு பெயர்த்தப்படுவார்,” (42) அது “ஒருவருடைய உடைமைகளை தூய்மைப்படுத்தஉதவுகின்றது. “(42) அது கூடிதல் செழிப்புக்கு” ஏதுவாகிறது (42) அது நண்பனை வழிப்போக்கனிடம் இருந்து வேறுபடுத்துவதற்கு ஒரு அபூர்வமான சோதனையாகும் (62) அது “கொடையாளர்கள் உறுதிப்பபெற்று பலம் பற்றிறுதி அடைவதற்கும் உதவும்.”(62) அது கொடையாளர்களின்மீது “தெய்வீக அதிகரித்தலை” ஈர்த்து (45,63) இறுதியில் அது “கண்ணியத்திற்கும் நன்மதிப்புக்கும் ஏதுவாக இருக்கும்.”(45 )இவை யாவுமே இந்த தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டவை. அவை அடுக்கப்பட்டுள்ளன.
அங்கு எச்சரிக்கைகளும் உள்ளன. நாம் கித்தாப்-இஅக்டாஸில் இருந்து ஓர் எச்சரிக்கையைக் கேட்டுவிட்டோம், இங்கு இன்னும் சில உள்ளன. “எவரொருவர் இந்த அழைப்புக்கு செவிசாய்க்கிறரோ, அது அவருக்கே நலனாக அமையும், எவரோருவர் தவறுகிறரோ, அவர் தம் ,ருத தோல்வியைக் கொண்டுவருவார்.” (6) இரண்டு பாராக்களில் இன்னெரு கற்று உள்ளது. நான் அதனைச் சுருக்கித் தருகிறேன். ஒரு வட்டாரத்தில் ஒவ்வெருவரும் ஹுகுக் செலுத்தி, கடவுளின் இந்த உரிமையை பிடித்துவைத்துக் கொள்ளாமல் இருந்தால் நன்பர்கள் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்கப்போவதில்லை, மாறாக அவர்கள் வசதியும் சொகுசும் (20,22) அனுவிப்பார்கள். பிறகு இரகையும் காணுங்கள், ஹுகுகுல்லாவைப் பிடித்துாவத்துக்கொண்டு அவர்தம் காக்கப்பட்ட நிருபத்தில் அவர்கள் மீது விதிக்கப்பட்டதை கடைபிடித்கத் தவறுகின்ற செல்வந்தர் மீது துக்கம் நிகழட்டுமாக மேலும், “செல்வங்களைத் தங்களுடைய வாரிசுகளுக்கு மாற்றி எழுதுவதற்காக மக்கள் ஆற்றச் செல்வங்களை சட்ட பூர்வமாகவோ சட்டத்துக்கு விரோதமாகவோ திரடுவதற்குத் தொடர்ச்சியாக முயற்சிக்கின்றனர், ஆனால் இது எந்த அளவுக்கு நன்மைத்தரும் என்பதை யாருமே சொல்ல இயலாது. சொல்வீராக இந்நாளில் உண்மையான வாரின க்வமுளின் வார்த்தையே ஆகு. ”(42) நான் உங்களுக்கு வாசித்ருக்காட்டப்போகும் இந்தப் பகுதி தெய்வச் சமயத் திருக்கரமாகிய ஜீனாப்-இ-சாமாண்டாரி அவர்களின் தந்தைக்கு எழுதப்பட்டதாகும். அவர் சொல்கிறார். கடுமையான உழைப்பினாலும் முயற்சியினாலும் ஒரு கைப்பிடி அளவுக்கு உலகுசார்ந்த பொருட்களை சேகரித்துவிட்டு இச்செயலுக்காக மிகவும் மனிழ்கின்ற ஆன்மாக்கள்தான் எத்தனை, ஆனாலும் உண்மையில் அதிவுயரிய எழுதுகோல் இந்தச் செல்வத்தை உலக நீதி மன்றம் இந்தச் சட்டத்தை உலகம் முழுதும் அனைவர் மீதும் அமுலாக்கம் செய்வதற்கான காலம் இன்னும் கனியவில்லை. அந்த நாள் வெகு தூரத்தில் இருக்கக் கூடாது என நாம் எதிர்பார்த்து பிரார்த்தனைக் கூறுவோமாக.
கேள்விகளும் பதில்களும்
கேள்வி : ரசீதுகள் பற்றி சில விளக்கங்கள் தரமுடியுமா?
பதில் : அறங்வலர் ரசீது கொடுக்க வேண்டும் என பஹாவுல்லா தமது நிருபங்களில் விதித்துள்ளார். (56) இது அவர்தம் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஒருவர் எவ்வளவு ஹுகுகுல்லா செலுத்தியுள்ளார் என்பதைக் காட்டுவதற்கு அது ஒரு நல்ல குறியீடு ஆகும். காரணம், ஒருவர் மரணமடைந்ததும், அந்தச் சொத்துக்களின் மீது நடவடிக்கை எடுப்வர் ஆதாரத்தைக் கொண்டிப்பார்; ஒருவர் உண்மையில் நேர்மையாக இருந்து அந்தத ரசீதுகளை வைத்திருப்பாரேயானால், எவ்வளவு ஹுகுகுல்லா செலுத்ததப்பட்டுள்ளது என்பது செல்வத்தின் மீது நடவடிக்கை எடுப்போருக்குத் தெரியும்.
கேள்வி : ஒரு வருடத்தின் காலத்தில் ஹுகுகுல்லாவை நாம் எத்தனை முறை செலுத்தவேண்டும்?
பதிதல் :அப்துல் பஹாவின் எழுத்துக்களிலும் (65) பஹாவுல்லாவின் எழுத்துக்களிலும் (18) ஒருவருடைய எனும் குறிப்பு ஒன்று உள்ளது. உண்மையில், பாப் அவர்கள் கூட ஒரு வருடத்தையே குறிப்பிடுகிறார், ஆனால் ஒருவர் ரு வருஷம் என்ந கட்டுப்பாட்டுக்குள் இருக்குறார் என்று பொருள்படாது. நீங்கள் எப்பொழுது விரும்புகிறீர்களோ அப்பொழுதே அதனைச் செல்த்தலாம். மேலும், ஒரு ஆண்டு எப்பொழுது தொடங்குகிறது என்பதற்கு எவ்விதமான குறிப்பும் கிடையாது. ஆகவே அது வசதிக்கேற்றவாறு இனங்கும் தன்மை உடையது.கேள்வி :இக்கேள்வி எழைகளுக்கும் வறியவர்களுக்கும் உதவுவது பற்றியதாகும். இது ஹுகுகுல்லா பற்றியதும் கூட. உள்ளூர் ஆன்மீக சபை அதன் மத்தியில் இருக்கின்ற ஏழைகளை கவனிக்க வேண்டும் எனக்கூறுகின்ற உள்ளூர் ஆன்மீக சபையில் சட்த்திட்டங்கள் பற்றி நான் நினைக்கிறேன். எது முதல் பொறுப்பாகும்? உள்ளூர் சமூகம் அதன் ஏழை மக்களுக்கு உதவமுடியாமல் போகும்போதா, அல்லது ஏழைகள் உதவும் கட்டுதலாக இருக்கும்போதா அவர்கள் ஹுகுகுல்லா பக்கம் திரும்ப வேண்டும் ? இது எவ்வாறு செயல்படுகிறது?
பதில் :உதாரணத்திற்கு நாம் சமயத்தின் பாதுகாப்பை எடுத்துக்கொள்வொம். இது ஒவ்வொரு உள்ளூர் ஆன்மீக சபையின் கடமையாகும். இது தெய்வச் சமயத் திருக்கரங்கள் மற்றும் ஆலோசகர்களின் கடமையும் ஆகும். அது பற்றி எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் அப்துல் பஹாவின் உயில் ஏற்பாட்டைப் படித்துப்பார்த்தால், அவர் சமயத்தைப் பாதுகாக்கின்ற பொறுப்பை ஒவ்வொரு தனிப்பட்ட பஹாய் அன்பரின் மீதும் சரிசமாக வைக்கிறார். இதனால், யார்தான் முதல் அடியை எடுத்துவைப்ப ஒன்று தணிப்பட்ட நம்பிக்கையாளரும், உள்ளூர் ஆன்மீக சபைகளும் கண்ட ஆலொசகரிகளும் முததலில் கலந்பேசவேண்டும் என்று பொருள்படுமா என்ன? இல்லை. அனைவருமே தம்மால் இயன்றவரை சிறப்பாகக் செய்யவேண்டும். இங்குகூட அதே நிலைதான் பொறுத்துகின்றது. ஏழைக்கு உதவுவது, உதாரணத்திக்கு, குடும்பத்தின் பொறுப்பாகும். அது அந்த நபரின் குடும்பத்தின் அங்கத்தினர்களின், அந்த நபரின் நண்பர்களின் அந்த உள்ளுர் சமூகத்தின், தேசிய சமூகத்தின் பொறுப்பாகும். அங்கு ஏதாவது ஒரு தரப்புத் தவறினால், கடவுள் மன்னிப்பாராக இவற்றிடங்களை புர்த்தி செய்வதற்காகவே அனைத்துலக சமூகம் இருக்கின்றது. நான் இவ்வாறுதான் புரிந்துகொண்டுள்ளேன். இந்த நிதியை நிர்வகிக்கையில் உலக நீதி மன்றம் கூட உதவிக் கரம் நீட்டுவதற்காக தனனிப்பட்ட விவரங்களை மாத்திரமே நாடுவதில்ல, மாறாக ஒரு நாடு முழுதுக்கும் அல்லது ஒரு வட்டாரம் முழுதுக்கும் பலன்தரக்கூடிய மனிதாபிமானமுள்ள திட்டங்ளைப் பற்றியும் சிந்திப்பதுண்டு. இந்த கைமாறு மற்றும் பரஸபர உதவிப் பற்றி நீங்கள் நினைக்கும் போது இவ்வாறுதான் இருக்கும்: தான் செலவு செய்வதற்கு வைத்துள்ள இந்த நிதியைப் பற்றி நினைக்கும் போது உலக நீதி மன்றம் இதனைத்தான் நினைத்துவந்துள்ளது.