உடல்நலம் – கறிவேப்பிலை


கறிவேப்பிலையின் பயன்கள்

தென்னிந்திய சமையல்முறைகளில் கறிவேப்பிலையென்பது இன்றியமையாத ஓர் அம்சமாகும். ஆனால், பொதுவாகவே சாப்பிடும்போது கறிவேப்பிலையை ஒதுக்கிவைத்துவிட்டே உணவை உண்போம். இனி அவ்வாறு செய்ய வேண்டாம். ஏன்?

கறிவேப்பிலைக்குப் பல மருத்துவ குணங்கள் உண்டு. அது ஜீரணத்திற்கான என்ஸைம்களைத் (enzymes) தூண்டிச் சுரக்கவைக்கின்றது மற்றும் இதனால் உணவு விரைவாக ஜீரணமாகின்றது. உணவு உண்டபின் ஒரு டம்ளர் மோரில் சிறிது பெருங்காயமும் கறிவேப்பிலை இலைகள் சிலவும் கலந்து குடிப்பது ஜீரணத்திற்கு நல்லதாகும்.

– வாந்தி மற்றும் அஜீரணத்திற்கு நல்ல நிவாரணியாகும். கறிவேப்பிலைச் சாற்றில், சிறிது எலுமிச்சைச் சாற்றையும் சர்க்கரையும் கலந்து குடிக்கவும்.

– உடல் பருமன் குறைய தினசரி கறிவேப்பிலை இலைகள் சிலவற்றை மென்று சாப்பிடவும்.

– கறிவேப்பிலை கண்பார்வையைத் தெளிவாக்கும், ஆகவே உணவு உண்ணும்போது கறிவேப்பிலையைத் தூக்கியெறிந்துவிட வேண்டாம். கறிவேப்பிலை கண்களில் காட்டராக்டை (cataract) தடுக்கின்றது.

– முடியின் வளர்ச்சிக்கும் நிறத்திற்கும் கறிவேப்பிலை நல்லதாகும். அதை அப்படிய சாப்பிடுவது சிரமமாக இருந்தால் இப்போது கடைகளில் விற்கப்படும் கறிவேப்பிலைத் தூளை வாங்கி தோசை அல்லது சாதத்துடன் உண்ணலாம். கறிவேப்பிலையை நீங்கள் வீட்டிலேயே தூள் செய்து உண்ணலாம், அது முடியில் நறை விழுவதைத் தடுக்கும்.

– அல்லது நீங்கள் தலையில் தேய்க்கும் எண்ணெயில் கறிவேப்பிலை இலைகளைக் கலந்து அடுப்பில் சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இதை தலையில் தேய்ப்பது முடியை நலமாக வைத்திருக்க உதவும்.

கறிவேப்பிலை குறித்த உடல்நல குறிப்புகளுள் இவை சில மட்டுமே. கறிவேப்பிலையை இப்போதிருந்தே உணவில் கலந்து சாப்பிடுங்கள்.

– கறிவேப்பிலை மரம் வீட்டருகே இல்லாதவர்கள் கடையில் வாங்கும் கறிவேப்பிலை இலைகளை உருவி ஈரமில்லாமல் ஒரு பிலாஸ்டிப் டப்பாவில் போட்டு மூடி குளிர்சாதனப்பெட்டியின் உறையறைக்குள் வைத்து அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ளலாம். இலைகள் நீண்ட நாள்களுக்கு வாசம் போகாமல் இருக்கும்.