துளிய (quantum) சிந்தனை


துளிய விசையியல் (quantum physics) என்பது பிரபஞ்சத்தை ஐக்கியப்பட்ட ஒரு தளமாக வரையறுக்கின்றது. அதிலுள்ள அனைத்து புள்ளிகளும் மற்ற எல்லா புள்ளிகளுடனும் இணைக்கப்பட்டுள்ளன. அல்லது, அதில் உள்ள எல்லா புள்ளிகளும் மற்ற ஒவ்வொரு புள்ளியுடனும், நேரடியான அணுக்கமற்ற ஒரு தொடர்பினை கொண்டுள்ளன என்பது பிறிதொரு கருத்தாகும்.

அல்லது, வேறொரு கண்ணோட்டத்தில், நமது உறவை மறுவரையறைப்படுத்துவதன் வாயிலாக நாம் மற்ற ஒரு புள்ளியின் மீது செல்வாக்குச் செலுத்தி அதில் மாற்றங்கள் ஏற்படுத்திட முடியும் என்பதாகும்.

இது சற்று தலைவலி அளிப்பதாக இருக்கலாம், ஆனால் இதில் நீங்கள் தனியராக இல்லை. பிரபஞ்சம் குறித்து சிந்திக்கும் விதத்தை நீங்கள் எப்படி மாற்றிக்கொள்வீர்கள் என்பதில் நாம் கொண்டுள்ள பல்வேறு யூகங்கள் மறுசிந்தனைக்கு உட்படுத்தப்பட்டும் பிரபஞ்சம் குறித்த புதிய கருத்துக்கள் ஆய்வு செய்யப்படவும் வேண்டும்.

இவ்விலக்கை அடைவது சற்று சவால் மிகுந்ததாகும்.

இதற்கு ஏன் முயல வேண்டும்? நீங்கள் இதுகாரும் இக்கருத்து குறித்து சிந்தித்து வந்துள்ளதை வேறு விதமாகவும் சிந்திக்கக்கூடும் அல்லது அவ்வாறு சிந்திப்பது பயன்மிகு வழியா என்பது தெரியாமலும் இவ்வளவு காலமாக தட்டுத்தடுமாறி வாழ்ந்துவிடவில்லையா.

மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட கருத்துக்களை நீங்கள் பெற முடியும் என்பது உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். ஆனால், நீங்கள் இருவருமே ஒரே விதமாக, ஆனால் வேறுபட்ட “கலவைகள்” அல்லது மொழி அல்லது தர்க்கம் அல்லது ஒருபுறசார்பாக சிந்தித்திருக்கலாம். ஒரே விதமான சிந்தனை ஆனால் உட்பொருள் குறித்த வேறுபட்ட சொல்லாட்சி திறத்தோடு (சிந்தித்திருக்கலாம்).

பல்வேறு விதமாக சிந்திக்கக் கற்றுக்கொள்வது பலனளிப்பதாக இருக்கும் ஏனெனில், அது உங்கள் சொந்த சிந்தனையில் ஏற்படும் நிலைமாற்றங்களையும் மற்றும் அத்தகைய நிலைமாற்றங்கள் உங்கள் கண்ணோட்டங்களில் ஏற்படுத்தும் விளைவுகள் உண்மையானவையாகவும் உளதாகவும் இயல்பானதாகவும் இருக்கின்றன என்பதை நீங்கள் கவனித்திட அது உங்களுக்கு உதவுகின்றது

மற்றவர்கள் சிந்திக்கும் விதத்தைப் பற்றி கற்றுக்கொள்வது அவர்களின் சிந்தனை நிலைமாற்றத்திற்கு என்ன தேவைப்படுகின்றது அல்லது அவர்களுடைய சிந்தனைகளுக்கு ஏற்ப நீங்கள் உங்கள் சிந்தனையை எவ்வாறு மாற்றிகொள்ள முடியும் என்பதை புரிந்துகொள்ள உதவுகின்றது. இது உறவுகள், பேச்சுவார்த்தைகள், இணக்க முடிவு (conflict resolution) போன்றவற்றில் மிகவும் உதவியாக இருக்கும்.

துளிய விசையியலாக சிந்திப்பது இணக்க முடிவு காண்பதில், புதிய கண்டுபிடிப்புகளில், தெரிந்திராவற்றிற்காக திட்டமிடுதலில், இணையான அல்லது பலவான பிரபஞ்சங்கள் போன்ற கணிதமுகமான அல்லது தத்துவப்படியான துறைகளிடையே இணக்கம் காண்பதில் மற்றும் இருக்கக்கூடிய அல்லது கற்பனை செய்திடக்கூடிய எதற்கும் அதிகப்படியான பலன்களை வழங்குகின்றது,

மற்றும், வரையறையாக பார்க்கையில், துளியநிலைப் பிரபஞ்சத்தில் ஒரு விஷயம் கற்பனை செய்யப்படக்கூடுமாயின், அது மெய்ம்மையாகிவிடும். இதனால்தான் துளிய இயல்நிகழ்வு குறித்த பௌதீக மொழியானது மர்மம், மந்திரம் மற்றும் இயல்கடந்த ஆய்வு போன்றவற்றின் மொழிகளோடு ஒத்திருக்கும். சிந்தனைகளும் வஸ்த்துக்களே. சிந்தனை மாற்றம்காணும்போது, நாம் அனுபவிக்கும் யாதார்த்தநிலையும் (reality) மாற்றம்காண்கிறது. அல்லது ஒரே வேளை நாம் வேறு ஒரு நிதர்சன நிலைக்கு செல்லக்கூடும். அல்லது நாம் அனுபவிக்கும் நிதர்சனநிலையை நாம் மாற்றிவிட்டிருக்கலாம்.

துளியநிலை சிந்தனையின் வாயிலாக, நாம் எக்கேள்விக்கான பதிலோடும் அனுக்கம் பெறலாம். ஏன், ஒரே கேள்விக்கான சரியான பதில்கள் பலவற்றோடு அனுக்கம் பெறலாம் மற்றும் அவற்றுள் நமக்கு ஏற்ற பதிலை தேர்ந்தெடுத்தும் கொள்ளலாம். இது பிரபஞ்சத்தின் சட்டமுறைகளை மீறவில்லை. ஐயமின்றி, தட்டையான பௌதீக உலகு குறித்த கருத்திலிருந்து அது நம்மை, கேள்விக்கான பதில் எப்படி சிந்திக்கின்றோம் என்பதில்லாமல் எதைச் சிந்திக்கின்றோம் என்பதை அடிப்படையாகக் கொண்ட, இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள குறுகிய தூரம் நேர்கோடில்லாததும், பன்முக பரிமாணம் கொண்டதுமான, ஓர் பிரபஞ்சத்திற்கு நம்மை அழைத்துச்செல்கின்றது.

Joan McKenna
jmckenna@LMI.net Her url is http://www.joanmckenna.net
Article Source: http://EzineArticles.com/867032