ஒரு மனதைக் கவரும் செய்தி


ஆர்த்தர் ஏஷ் எனும் பெயர் கொண்ட விம்பல்டன் விளையாட்டு வீர்ர் 1983ல் இருதய அறுவை சிகிச்சையின் போது  பாதிக்கப்பட்ட இரத்தம் செலுத்தப்பட்டதால் மரணத்தை எதிர்நோக்கியிருந்தார்.

அவரது விசிரிகளிடமிருந்த பல கடிதங்களைப் பெற்றார். அதில் ஒன்று:

“கடவுள் உங்களை இத்தகைய மோசமான நோய்க்கு ஏன் ஆளாக்க வேண்டும்?” எனக் கேட்டிருந்தார்.

அதற் ஆர்த்தர் பின்வருமாறு பதிலளித்தார்:

50 மில்லியன் குழந்தைகள் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தனர்,

5 மில்லியன் டென்னிஸ் விளையாடக் கற்றனர்,

500,000 குழந்தைகள் புரஃபெஷனல் டென்னிஸ் கற்றனர்,

50 ஆயிரம் குழந்தைகள் விளையாட்டு வட்டங்களில் கலந்துகொண்டனர்,

5 ஆயிரம் பேர் கிரான்ட் ஸ்லாம் போட்டிக்கு தகுதிபெற்றனர்.

50 பேர் விம்பல்டனுக்குத் தகுதி பெற்றனர், அதில் நால்வர் அரையிறுதிச் சுற்றை அடைந்தனர், இருவர் இறுதிச் சுற்றை அடைந்தனர், நான் விம்பல்டன் கோப்பையை என் கையில் ஏந்தியபோது, “இதற்கு என்னை ஏன் தேர்வு செய்தீர்?” என நான் கடவுளைக் கேட்கவில்லை.

இப்பொழுது நான் வலியால் துடித்துக்கொண்டிருக்கின்றேன் “இதற்கு என்னை ஏன் தேர்வு செய்தீர்?” என நான் கடவுளை எவ்வாறு கேட்பது.