ஹூத்திகளால் தடுத்து-வைக்கப்பட்டிருந்த ஆறு பஹாய்கள் விடுவிக்கப்-பட்டுள்ளனர்


ஹூத்திகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஆறு பஹாய்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்


8 அக்டோபர் 2021


BIC (பிஐசி) ஜெனேவா – பல வருடங்களாக சனா’ஆ, யேமன் நாட்டு அதிகாரிகளால் பொய்க்குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த ஆறு முக்கிய  பஹாய்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என பஹாய் அனைத்துலக சமூகம் உறுதிப்படுத்தியுள்ளது.

உடல்நல மீள்ச்சிக்காக ஒரு பாதுகாப்பான இடத்தில் உள்ள (பின் வரிசையில்) திரு வலீட் அய்யாஷ், திரு வாயெல் அல்-அரீகீ; (நடு வரிசையில்) திரு அக்ரம் அய்யாஷ், திரு கைவான் காடெரி, திரு ஹமெட் பின் ஹைடாரா; (முன் வரிசையில்) திரு படியுல்லா சனாயி. படத்தில் திரு சனாயி’யின் மனைவியும் உடன்காணப்படுகின்றார்.

திரு ஹமெட் பின் ஹைடாரா, திரு வலீட் அய்யாஷ், திரு அக்ரம் அய்யாஷ், திரு கைவான் காடெரி, திரு படியுல்லா சனாயி, மற்றும் திரு வாயெல் அல்-அரீகீ என பெயர் கொண்ட அந்த அறுவரும் ஏறத்தாழ மூன்றிலிருந்து ஏழு வருடங்கள் வரை மிகவும் மோசமான சிறைவாசத்தை அனுபவித்த பின்னர், உடல்நலம் மீள்ச்சி பெறக்கூடிய ஒரு பாதுகாப்பான இடத்தில் உள்ளனர்.

இந்த விடுதலைகளைத் தொடர்ந்து, பஹாய் அனைத்துலக சமூகம் இந்த அறுவர் உட்பட, குற்றம் சாட்டப்பட்ட மற்ற பஹாய்கள் அனைவருக்கும் எதிரான எல்லா குற்றச்சாட்டுகளையும் நீக்கவும், அவர்களின் சொத்துக்கள் மற்றும் உடைமைகளை திருப்பித் தரவும், மிக முக்கியமாக, யேமன் நாட்டில் உள்ள பஹாய்கள் அனைவரும் துன்புறுத்தலின் அபாயமின்றி தங்கள் நம்பிக்கைகளின்படி வாழ்வதற்கான உரிமைகள் பாதுகாக்கப்படவும் கோரிக்கை விடுத்துள்ளது.

“இன்று, இவ்விடுதலைகளை நாங்கள் வரவேற்றாலும், நாங்கள் சற்று கவலையுடனேயே இருக்கின்றோம் என்று பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரதிநிதி டயேன் அலாயி கூறினார். “யேமனின் நீடித்த, சமுதாய அமைதிக்கான தேடல் தொடர்கையில், பஹாய்கள்-எல்லா யேமனியர்களையும் போலவே, மத அல்லது (சமய)நம்பிக்கை சுதந்திரம் குறித்த சர்வலோக கொள்கைகளுக்கு இணங்க, தங்கள் (சமய)நம்பிக்கையை பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் கடைப்பிடிக்க முடிய வேண்டும். ஆனால், குற்றச்சாட்டுகள் நீக்கப்படும் வரை இது சாத்தியமில்லை.”

“பஹாய் சர்வதேச சமூகம் யேமனுக்கான ஐ.நா. சிறப்பு தூதர் மற்றும் மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த செயல்முறை முழுவதும் தங்கள் ஆதரவை வழங்கிய அரசாங்கங்களுக்கும் அரசு சாரா நிறுவனங்களுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்.”

தொடர்புடைய பின்னணி தகவல்

ஒரு பொறியியலாளரான திரு. ஹைடாரா, 2013 டிசம்பரில் தமது சமய நம்பிக்கை காரணமாக அவரது பணியிடத்தில் கைது செய்யப்பட்டார். சரியான செயல்முறை இல்லாத, ஒரு நீண்ட நீதிமன்ற வழக்கைத் தொடர்ந்து, அவருக்கு 2018’இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மேல்முறையீடு 2020 இல் நிராகரிக்கப்பட்டது

பணித்திட்ட அதிகாரியான திரு. காடெரி, 2016’இல் ஓர் ஒன்றுகூடல் மீது நடத்தப்பட்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 2017’இல், யேமன் நாட்டின் ஒரு பழங்குடித் தலைவரான திரு. வலீட் அய்யாஷ், ஹுடாய்தாவுக்குச் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு, யாருக்கும் தெரியாத ஓர் இடத்தில் தடுத்து வைக்கப்பட்டார். அதற்கு அடுத்த மாதம், தமது அறுபதாவது வருடங்களைத் தாண்டும் நிலையில் இருந்த ஒரு பொது உரிமை ஆர்வலரான திரு. அல்-அரீகீ, சனா’ஆவில் அதிகாரிகளால் கடத்தப்பட்டார். யேமனில் ஒரு முக்கிய சிவில் பொறியியலாளரான திரு. சனாயி தனது பணியிடத்தின் முன் கைது செய்யப்பட்டார். அக்டோபர் 2017’இல், ஓர் இலாப நோக்கற்ற அமைப்பின் மேலாளரான திரு. அக்ரம் அய்யாஷ், பஹாய் கொண்டாட்டம் ஒன்றின் போது பாதுகாப்புப் படையினர் நடத்திய திடீர் சோதனையின் போது கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 2018’இல், வேறு பத்தொன்பது பேருடன் இந்த ஐவரும், சனா’ஆவில் ஒரு நீதிமன்ற விசாரணையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இந்த ஆறு பேரின் விடுதலையானது சனா’ஆவில் உள்ள உச்ச அரசியல் பேரவையின் தலைவர் திரு மஹ்தி அல் மஷாத் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் அனைத்து பஹாய் கைதிகளையும் விடுவிக்கவும் திரு ஹைடராவுக்கு மன்னிப்பு வழங்கப்படவும் ஆணையிட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு, 2020 மார்ச் மாத இறுதியில் வருகிறது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1443/

புலம்பெயர்வு இயக்கிகளை குறிவைப்பதற்கு விவசாய கொள்கைகள் முக்கியமானவை என பி.ஐ.சி பிரஸ்ஸல்ஸ் கூறுகிறது8 அக்டோபர் 2021


பிரஸ்சல்ஸ் – புலம்பெயர்வோர் மற்றும் தஞ்சம் தேடுவோரின் வரவு குறித்து கவனம் செலுத்திட, உடனடி பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பொருட்டு எல்லைக் கட்டுப்பாடு, மற்றும் புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றை நாடுகள் மேற்கொள்கின்றன.  இருப்பினும், சமீபமான வருடங்களில், இவ்வித புலம்பெயர்வுக்கான அடிப்படை காரணங்களைக் கணிப்பதற்கான நீண்டகால கவனத்தின் தேவை குறித்து ஓர் அதிகரிக்கும் உணர்வு உண்டாகி வருகின்றது.

கிமான்யா-இங்கேயோ, உகான்டாவில் உள்ள அறிவியல் மற்றும் கல்விக்கான பஹாய் உத்வேகம் பெற்ற ஓர்  அமைப்பின் பயிற்சி மையத்தில் ஓர் “உணவு மேடையின்” கட்டுமானம்.

பிரஸ்சல்ஸில் உள்ள பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) அலுவலகத்தின் பங்களிப்பு, புலம்பெயர்தலின் அடிப்படை இயக்கிகளின் மீது கவனம் செலுத்துதலை உள்ளடக்கியுள்ளதோடு, அது இதன் தொடர்பில் சிந்தித்தலை ஊக்குவித்துள்ளது. கொள்கை வகுப்பாளர்களுடனும் பொது சமுதாய அமைப்புகளுடனும் இந்த இயக்கிகளை ஒன்றாக ஆராய்வதற்கு ஐரோப்பிய கமிஷனின் கூட்டு ஆய்வு மையத்துடன் கலந்துரையாடல் தளங்களை இந்த அலுவலகம் உருவாக்கி வருகின்றது.

பிரஸ்சல்ஸ் அலுவலகத்தின் ரேச்சல் பயானி, இந்த கலந்துரையாடல்களுக்குப் பொருந்தும் சில ஆன்மீக கருத்தாக்கங்கள் குறித்து பேசுகிறார். மனிதகுல ஒருமை குறித்த பஹாய் கோட்பாடு, ஓர் இடத்திலுள்ள மக்கள் இந்த தீர்மானங்களின் தாக்கத்தை தங்களின் சொந்த சூழல்களுக்கு மட்டுமின்றி மானிடம் முழுமைக்கும் பரிசீலிப்பதன் மீது ஆழ்ந்த தாத்பர்யங்களை கொண்டுள்ளன. புலம்பெயர்வு மற்றும் இடப்பெயர்ச்சி குறித்த கொள்கைப் பதில்செயல்களுக்கான ஒரு புதிய அணுகுமுறை இந்தக் கோட்பாட்டை கருத்தில் கொள்ள வேண்டும், ஏனெனில் ஐரோப்பாவின் நல்வாழ்வு உலகின் மற்ற பகுதிகளிலிருந்து தனியாக மேம்படுத்தப் பட முடியாது. 

இந்த அலுவலகம் கவனத்தை ஈர்த்துள்ள இயக்கிகளுள் விவசாய கொள்கைகளுக்கும் ஆப்பிரிக்காவில் புலம்பெயர்வுக்கான காரணங்களுக்கும் இடையினான தொடர்பும் ஒன்றாகும். இந்தத் தலைப்பு குறித்த சமீபமான ஒன்றுகூடலில், பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரஸ்சல்ஸ் அலுவலகமும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் இணையாக ஓர் இணைய கலந்துரையாடலை சென்ற வாரம் ஏற்பாடு செய்து, அதற்கு சுமார் 80’க்கும் மேற்பட்ட கொள்கை வகுப்பாளர்களையும் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து பிற சமுதாய நடவடிக்கையாளர்களையும் ஒன்றுகூட்டியது.    

விவசாய கொள்கைகளுக்கும் ஆப்பிரிக்காவில் புலம்பெயர்வுக்கான எதிர்மறை இயக்கிகளுக்கிடையிலான தொடர்புகளை ஆராய்ந்திட  பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரஸ்சல்ஸ் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் இணையாக ஏற்பாடு செய்த இணைதள கலந்துரையாடலில் கலந்துகொண்ட சுமார் 80’க்கும் மேற்பட்ட கொள்கை வகுப்பாளர்களும் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து பிற சமுதாய நடவடிக்கையாளர்களும்.

“சமீபமான வருடங்களில், மக்கள் தங்களின் தாய்நாடுகளை விட்டு வெளியேறுவதற்கு உந்துவிசையாக விளங்கும் காரணிகளின்பால் மேலும் அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதற்கு ஒப்புதல் உருவாகி வருகின்றது,”  என்கிறார் மிஸ். பயானி. விவசாயம், வணிகம், முதலீடு, சுற்றுச்சூழல் ஆகியன உட்பட வெவ்வேறு கொள்களைத் துறைகள் எவ்வாறு புலம்பெயர்வுக்கான இயக்கிகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நாங்கள் ஆராய விரும்புகின்றோம்.”

“கொள்கைகளின் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளைக் கண்டறிவது கடினம், ஆனால் இது அனைத்து மனிதகுலத்தின் நல்வாழ்வையும் மனதில் கொண்டு நீண்டகால உத்திகளை வளர்ப்பதற்கான முயற்சிகளைத் தடுக்கக்கூடாது.”

கூட்டத்தில் புலம்பெயர்ந்தோர் பெரும்பாலும் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கும், அங்கிருந்து பிற நாடுகளுக்கும் கண்டங்களுக்கும் செல்லும் பாதையை பங்கேற்பாளர்கள் அடையாளங் கண்டனர். பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடிகள், விவசாயிகளால் நில இழப்பு மற்றும் ஆபிரிக்காவில் கிராமப்புறங்களை விட்டு வெளியேற மக்களைத் தூண்டும் பிற காரணிகளானவை கண்டம் மற்றும் அதற்கு அப்பால் சிற்றலை விளைவுகளை எவ்வாறு ஏற்படுத்துகின்றன என்பது பற்றிய விவாதங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

கிராமப்புறங்களில் மக்கள் இருக்கும் இடத்தில்தான் புலம்பெயர்வு தொடங்குகிறது. மக்கள் தங்கள் கிராமப்புறங்களில் அதிருப்தி அடைந்தால், அவர்கள் நகரங்களுக்குத் தள்ளப்படுகிறார்கள், பின்னர் வெளிநாடுகளுக்குத் தள்ளப்படுகிறார்கள் ”என்று ஆப்பிரிக்க யூனியன் கமிஷனில் புலம்பெயர்வுக்கான திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெஃப்ரி வஃபுலா குண்டு கூறினார்.

ஐரோப்பிய இளம் விவசாயிகள் பேரவையின் தலைவர் ஜேன்ஸ் மேய்ஸ், குறிப்பாக கிராமப்புற இளைஞர்களிடையே, விவசாயத்தைச் சுற்றியுள்ள நேர்மறையான கலாச்சார மனப்பான்மைகள், உலகின் எந்தப் பகுதியிலும் கிராமப்புற சமூகங்களை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய அங்கமாகும் என்று குறிப்பிட்டார்.

“விவசாயத்தை நோக்கிய மனநிலையை மாற்றுவதற்கு தடைகள் நீக்கப்படுவது அவசியமாகும்,” என்று திரு. மேஸ் கூறுகிறார். “ஐரோப்பாவில் உள்ள முக்கிய தடைகள்–நமது ஆப்பிரிக்க சகாக்களிடமிருந்தும் நாம் செவிமடுப்பவை கூட—நிலத்திற்கான வாய்ப்பு, விநியோகத் தொடர்புகள், மற்றும் ஆரம்பிப்பதற்கு உள்நாட்டு மூலதனம் இல்லாவிடினும் முதலீடு ஆகியன. இவை நமது ஒட்டுமொத்த சமூகங்களாலும் சமாளிக்கப்பட வேண்டும்.”

உகாண்டாவில் உள்ள பஹாய் உத்வேகம் பெற்ற அமைப்பான அறிவியல் மற்றும் கல்விக்கான கிமான்யா-என்ஜியோ அறக்கட்டளையில் மண் பகுப்பாய்வு நடவடிக்கை.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பைச் சேர்ந்த ஜோசலின் பிரவுன்-ஹால் கூறுகிறார், “… விவசாயமானது தீர்வின் ஒரு பகுதியாக இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம் மற்றும் புலம்பெயர்வு ஏற்படும்போது அது கவனிக்கப்படாமல் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான ஐரோப்பிய ஆணைய பொது இயக்குனரகத்தின் லியோனார்ட் மிஸ்ஸி, கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து ஒரு நிலையான பொருளாதார மீட்சியைப் பெறுவதற்கு இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மேலும் நெகிழ்வுத்தன்மை உடைய விவசாய முறைகளை உருவாக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதைக் கவனித்தார். “வர்த்தகம் போன்ற அமைப்புகளைச் சுற்றியுள்ள பலவீனங்களை கோவிட் அம்பலப்படுத்தியுள்ளது. எதிர்கால அதிர்ச்சிகளின் போது எந்த வகையான உணவு முறைகள் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும்? … இந்த விஷயங்களை உண்மையிலேயே நிவர்த்தி செய்யும் முறைமை அணுகுமுறை நம்மிடம் இல்லையென்றால், நம்மால் மீள்ச்சி பெற முடியாது. மேல்நிலையில் இருந்து வரும் தீர்வுகள் வேலை செய்யாது. நமக்கு ஒரு விவசாயி மற்றும் மனித உரிமைகளின் உந்தம் பெற்ற செயல்முறை தேவை.”

உகாண்டாவில் உள்ள பஹாய் ஈர்ப்புப் பெற்ற அமைப்பான கிமான்யா-என்ஜியோ அறக்கட்டளைக்கான அறிவியல் மற்றும் கல்வியின் கலெங்கா மசைடியோ, விவசாய முறைகள் குறித்த அறிவை உருவாக்குவதில் கிராமப்புற சமூகங்களின் பங்கேற்பை அனுமதிப்பதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.

“தனிநபர்களுக்கும் கிராமப்புற சமூக உறுப்பினர்களுக்கும் அதிகாரம் அளிப்பதே முக்கிய பிரச்சினையாகும், இதனால் அவர்கள் தங்கள் சொந்த சமூக, பொருளாதார மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்கான உரிமையை கையிலெடுத்துக் கொள்ள முடியும்” என்று திரு மசாய்டியோ கூறுகிறார். “இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எப்போதும் வெளியில் இருந்து வரும் என்று நாம் நினைப்பதை விட … அவ்வளர்ச்சி கிராமப்புற சமூகங்களிலிருந்தே தொடங்கப்பட வேண்டும்.”

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படம். ஆப்பிரிக்காவில் பல பஹாய் ஈர்ப்பு பெற்ற நிறுவனங்கள் கிராமப்புற சமூகங்களுக்கு விவசாய முறைகள் பற்றிய அறிவை உருவாக்குவதில் பங்கேற்க உதவும் முயற்சிகளை மேற்கொண்டன. “சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதற்கான முயற்சிகள் விஞ்ஞானம் மற்றும் சமயத்தின் நுண்ணறிவு இரண்டையும் ஈர்க்கும்போது, வாய்ப்புகளும் அணுகுமுறைகளும் வெளிப்படுகின்றன, இல்லையெனில் அவை கண்ணுக்குப் புலப்படாமலேயே இருந்திடும்” என்று ரேச்சல் பயானி கூறுகிறார்.

இந்த கலந்துரையாடல்களைப் பற்றி திருமதி பேயானி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “சர்வதேச முறையில் உள்ள குறைபாடுகளையும் மேலும் எந்தவொரு பிரச்சினையையும் திறம்பட சமாளிக்க ஒற்றுமை எவ்வாறு தேவைப்படுகிறது என்பதையும் தொற்றுநோய் முனைப்புடன் எடுத்துக்காட்டுகிறது. கண்டங்கள் முழுவதிலும் உள்ள கொள்கை வகுப்பாளர்களும் சமூக நடவடிக்கையாளர்களும் ஒன்றிணைந்து சிந்திக்கக்கூடிய ஒரு தளத்தைக் பெற்றிருப்பது நமது அத்தியாவசிய ஒற்றுமையைப் பற்றிய உயர்த்தப்பட்ட புரிதலின் வெளிச்சத்தில் சர்வதேச அக்கறை கொண்ட ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதில் ஒரு முக்கிய படியாக இருந்திடும்.

“சமூக முன்னேற்றத்திற்கு பங்களிப்பதற்கான முயற்சிகள் விஞ்ஞானம் மற்றும் மதத்தின் நுண்ணறிவு ஆகிய இரண்டையும் ஈர்க்கும்போது, வாய்ப்புகள் மற்றும் அணுகுமுறைகள் வெளிப்படுகின்றன, இல்லையெனில் அவை புலப்படாமலேயே இருக்கும்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1442/

புலம்பெயர்வு, வாழ்வியல் அழுத்தம் ஆகியவற்றை “பஹாய் உலகம்” கட்டுரைகள் ஆராய்கின்றன.8 அக்டோபர் 2021


பஹாய் உலக மையம் – தற்போதைய தொற்றுநோயின் சூழலில், மானிடத்தின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டுடன் சம்பந்தப்பட்ட கருப்பொருள்கள் குறித்த கட்டுரைகளை வெளியிட்டு வரும் ‘பஹாய் உலகம்’ இணையதள வெளியீட்டில் இரண்டு புதிய கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

மானிடத்தின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டுடன் சம்பந்தப்பட்ட கருப்பொருள்கள் குறித்த கட்டுரைகளை வெளியிட்டு வரும் ‘பஹாய் உலகம்’ இணையதள வெளியீட்டில் இரண்டு புதிய கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

“ஓர் உலகளாவிய முன்னோக்கிலிருந்து புலம்பெயர்வை மறுசிந்தனை செய்தல்” (எனும் கட்டுரை) சமுதாய தன்மைமாற்றம் மற்றும் எல்லைக்குள் மற்றும் எல்லைதாண்டிய ஜனங்களின் நகர்வை ஆராய்கின்றது. ஏறத்தாழ ஒவ்வொரு சமுதாயத்தையும் பாதித்து வரும் ஓர் உலகளாவிய இயல்நிகழ்வு குறித்து அதிக புரிதலைப் பெறும் முயற்சியில், கட்டுரையானது பஹாய் போதனைகளிலிருந்தும் சமுதாய அறிவியல்களில் இருந்தும் உட்பார்வைகளை கோடிட்டு காட்டுகின்றது.

உருமாற்றத்தின் கருத்தாக்கம் மற்றொரு கண்ணோட்டத்தில் “ஒளி இருளில் இருந்தது: துன்பத்தின் வலியில் மறைந்துள்ள வளர்ச்சி குறித்த பிரதிபலிப்புகள்” எனும் முன்னோக்கிலிருந்து அணுகப்படுகின்றது.  இந்தக் கட்டுரை, மனிதகுலத்தின் வளமான ஆன்மீக மற்றும் தத்துவ பாரம்பரியத்திலிருந்து ஈர்த்து, மனித அனுபவத்திற்குத் தனித்துவமான, துன்பத்தின் ஒரு வடிவமாகிய, இருத்தலியல் மனவழுத்தத்தைப் பரிசீலிப்பதுடன், தனிநபர் வளர்ச்சி, அபிவிருத்தி ஆகியவற்றுடனான அதன் உறவை ஆராய்கிறது.  

பஹாய் உலகம் இணையதளத்தில், “ஓர் உலகளாவிய முன்னோக்கிலிருந்து புலம்பெயர்வை மறுசிந்தனை செய்தல்”, “ஒளி இருளில் இருந்தது: துன்பத்தின் வலியில் மறைந்துள்ள வளர்ச்சி குறித்த பிரதிபலிப்புகள்” என தலைப்பிடப்பட்ட இரண்டு புதிய கட்டுரைகள் சமுதாய தன்மைமாற்றத்தின் வெவ்வேறு அம்சங்களை ஆராய்கின்றன.

உலகில் சமயத்தின் நோக்கத்தைப் பிரதிபலிக்கும் பஹாய் சிந்தனை மற்றும் செயலில் மேம்பாடுகளை வழங்கிடும், பரந்த பொதுமக்களுக்குப் பயனளிக்கும் பல கருப்பொருள்களிலான சிந்தனையார்ந்த வியாசங்களையும் நீள-கட்டுரைகளையும் பஹாய் உலகம் இணையத்தளம் வழங்குகின்றது.

இது குறித்த ஒரு மின்னஞ்சல் சந்தா வழங்கப்படுகின்றது, மற்றும் புதிய கட்டுரைகள் பிரசுரிக்கப்படும் போது சந்தாதாரர்களுக்கு தகவலளித்திட இது வகை செய்யும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1441/

“சுகாதார நெருக்கடியின் மூலம் நாம் என்ன கற்றுக்கொண்டுள்ளோம்?” அமைதி இருக்கை வினவுகின்றது.


“சுகாதார நெருக்கடியின் மூலம் நாம் என்ன கற்றுக்கொண்டுள்ளோம்?” அமைதி இருக்கை வினவுகின்றது.


8 அக்டோபர் 2021


மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் உலக அமைதிக்கான பஹாய் இருக்கை “COVID-19 தொற்றுநோய்களின் போது கற்றல்” என்ற தொடருக்கான கட்டுரைகளை வழங்க ஆராய்ச்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பங்களிப்புகளைப் பற்றி பிரதிபலிக்கையில இருக்கையின் தலைவர் ஹோடா மஹ்மூதி கூறுகிறார்: “இந்தத் தொடரின் நோக்கம் புரிதலையும் அறிவையும் விரிவுபடுத்துவதாகும்; இதன் விளைவாக மேலும் நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியமாகும். எப்போதுமே, உயர்ந்த மற்றும் யதார்த்தமான இலட்சியங்களும் நம்பிக்கை உணர்வும் கொண்ட ஒரு சிறிய மக்கள் குழுமம் உறுதியான நடவடிக்கை எடுக்கத் தொடங்கும் போது மாற்றத்திற்கான சாத்தியங்கள் உருவாகின்றன.”

காலேஜ் பார்க், மேரிலாந்து, அமெரிக்கா – கடந்த மாதங்களில், மில்லியன் கணக்கானவர்களை நோய், பொருளாதார கஷ்டங்கள் மற்றும் பிற நெருக்கடிகளால் தொற்றுநோய் பாதித்துள்ளது. இது அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும், குறிப்பாக முன்னணி தொழிலாளர்களிடமிருந்தும் ஒரு வீரமிகு பிரதிசெயலைத் தூண்டுகிறது. இந்த அசாதாரன காலங்கள் சமூக முன்னேற்றம் குறித்த ஆழமான விவாதங்களையும் தூண்டின.

மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் உலக அமைதிக்கான பஹாய் இருக்கை “கோவிட்-19 தொற்றுநோய்களின் போது கற்றல்” என்ற தொடருக்கான கட்டுரைகளை வழங்க ஆராய்ச்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்தது.

“இந்த நெருக்கடி மனித இயல்பின் இரு பக்கங்களையும் வெளிப்படுத்துகிறது, இந்த காலகட்டத்தில் இருந்து நாம் எவ்வாறு வெளிவர விரும்புகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வழிவகுக்கிறது” என்று உலக அமைதிக்கான பஹாய் இருக்கையின் தலைவர் ஹோடா மஹ்மூதி கூறுகிறார். “அதிக ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அடைவதில், தோற்றங்களில் மட்டுமல்ல, உண்மையான நேர்மறையான முன்னேற்றங்களை நாங்கள் அடைந்திருப்போமா?”

பொருளாதாரங்கள், சுற்றுச்சூழல், ஊடகங்கள் மற்றும் வாழ்க்கையின் பிற பகுதிகளில் தொற்றுநோயின் விளைவுகளைக் கட்டுரைகள் ஆராய்கின்றன. சுகாதார நெருக்கடி எவ்வாறு சமூகத்தில் பரந்த ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தியுள்ளது என்பது ஒரு பொதுவான கருப்பொருளாகும்.

சாண்ட்டா பார்பரா, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அலிசன் ப்ரிஸ்க், இனவெறி மற்றும் மனித உரிமை மீறல்களை ‘பிறத்துவம்’ மற்றும் ‘சமுதாய அணுவாக்கம்/துகள்களாக்கம்’ மூலம் சமூகத்தில் பரப்பப்படும் நோய்கள் என்று விவரிக்கிறார். டாக்டர் ப்ரிஸ்க் குறிப்பிடுகையில், வரலாற்று ரீதியாக துன்பத்தையும் அடக்குமுறையையும் சமாளிப்பது சமூக ஒற்றுமையைப் பொறுத்துள்ளது. “மனிதநிலை அழிப்பு எனும் தொற்றுநோயை எதிர்கொள்ளும் நமது திறன் கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து தப்பிக்க மட்டுமல்ல, நாகரிகமாக உயிர்வாழ்வதற்கும் முக்கியமாக இருக்கும் என்று இது அறிவுறுத்துகிறது.”

மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் உலக அமைதிக்கான பஹாய் இருக்கையின் தலைவர் கல்வியாளர்கள் மற்றும் சமூக நடிவடிக்கையாளர்களுக்கு சுகாதார நெருக்கடி மற்றும் இந்த காலகட்டத்தில் வெளிவரும் படிப்பினைகள் பற்றிய பிரதிபலிப்புகளை வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். பொருளாதாரங்கள், சுற்றுச்சூழல், ஊடகங்கள் மற்றும் வாழ்க்கையின் பிற பகுதிகளில் தொற்றுநோயின் விளைவுகளை கட்டுரைகள் ஆராய்கின்றன. சுகாதார நெருக்கடி எவ்வாறு சமூகத்தில் பரந்த ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தியுள்ளது என்பதே எழுத்துகள் முழுவதும் இயங்கும் ஒரு பொதுவான கருப்பொருளாகும்.

அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் டஃப்னா லெமிஷ் டிஜிட்டல் ஏற்றத்தாழ்வுகள் பற்றி எழுதுகிறார். குழந்தைகள் ஊடகங்களைப் பயன்படுத்துவது பற்றிய பொது சொற்பொழிவில் ஆதிக்கம் செலுத்தும் கருப்பொருள், “திரை நேரம்” பற்றியது என டாக்டர் லெமிஷ் விளக்குகிறார். ஆனால் இப்போது கவனம் மாற்றம் காண்கின்றது: “… இந்த நெருக்கடியின் போது பல ஆழமான டிஜிட்டல் ஏற்றத்தாழ்வுகளின் தெளிவான அறிகுறிகளாக சமூக ஏற்றத்தாழ்வு சார்ந்த கட்டமைப்புகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன: ஊடக உரிமையின் ஏற்றத்தாழ்வுகள், மேலும் இணையம் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான அணுகல்; சரியான/விரும்பிய ஊடக பயன்பாட்டை அனுமதிக்காத வாழ்க்கை நிலைமைகளால் உருவாக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்; மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு, அறிவு மற்றும் ஊடகங்களின் சிறந்த பயன்பாட்டிற்கான திறன்களில் ஏற்றத்தாழ்வுகள்.”

அடிலெய்ட் பல்கலைக்கழகத்தின் மெலிசா நர்சி-ப்ரே நகர்ப்புற அமைப்புகளில் முதலாளித்துவமும் நுகர்வுமையும் எவ்வாறு ஒருவருக்கொருவரிலிருந்தும் இயற்கையிலிருந்தும் மக்களைத் துண்டித்துக் கொண்டிருக்கின்றன என்பதை ஆராய்ந்து, தொற்றுநோய் எவ்வாறு பல்வேறு வாழ்க்கை முறைகளுக்கு நம்பிக்கையின் ஒரு பிரகாசத்தை அளிக்கிறது என்பதைப் பற்றிய எண்ணங்களை வழங்குகின்றார்.

“முன்னர் ஓய்வு நேரம் மற்றும் (பொருள்களை) வாங்குவதற்கான விருப்பத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட பிற, ஆனால் மிக முக்கியமான, அன்றாட நடைமுறைகள், நமது குடும்பத்தை உள்ளடக்குகின்றவை, மேலும் உள்ளூர் வாழ்க்கை முறைகள் மற்றும் முன்னுரிமைகள் ஆகியவற்றிற்கு கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தின்பால் நமது கவனம் திருப்பப்பட்டுள்ளது” என்று டாக்டர் நர்சி-பிரே எழுதுகிறார். நிலைப்படுத்தப்படக்கூடிய வாழ்க்கைமுறை பற்றிய உரையாடலில் மக்கள் கூடி, ஈடுபடக்கூடிய நகர்ப்புற இடங்களை உருவாக்குவதன் அவசியத்தையும் கட்டுரை ஆராய்கிறது.

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். 1993 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக நடத்தை மற்றும் சமூக அறிவியல்கள் கல்லூரிக்குள் நிறுவப்பட்ட, மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் உலக அமைதிக்கான பஹாய் இருக்கை என்பது ஓர் ஆதரிக்கப்படும் கல்வித் திட்டமாகும், இது உலகளாவிய அமைதி குறித்த இடைநிலை ஆய்வு மற்றும் சொற்பொழிவை மேம்படுத்துகின்றது, பொதுநலம், மானிட நல்வாழ்வு ஆகியவற்றை மேம்படுத்தும் அறிவை உருவாக்குகிறது.

வரிசையின் மற்றொரு கருப்பொருளைப் — பெண்களின் சக்தியளிப்பு — பற்றி கருத்து தெரிவிக்கையில் டாக்டர். மஹ்மூதி கூறுகிறார்: “தொற்றுநோய்களின் போது அத்தியாவசியத் தொழிலாளர்களில் அதிகமானோர் பெண்கள். சமுதாயத்திற்கு மகத்தான பங்களிப்புகளைச் செய்யும் அதே வேளை, சுகாதார வழங்குநர்கள் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் என, பல பெண்கள் தங்கள் குடும்பத்தின் இளம் மற்றும் வயதான உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்வதன் மூலம், வீட்டிலேயே அதிக வேலைகளைச் செய்து வருகின்றனர். இன்னும், துரதிர்ஷ்டவசமாக, பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது.

“எந்தவொரு சமுதாயத்திலும் பெண்கள் எப்போதும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்களின் முக்கியமான பங்களிப்புகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை, பாராட்டப்படுவதில்லை. கல்வி மற்றும் வாய்ப்புகளின் முழு சமத்துவமும், முடிவெடுப்பதில் சமமான குரலும் கொண்ட வேறுபட்ட உலகத்தை உருவாக்குவதில் பெண்களின் முழு பங்கேற்பு, நித்தியமான சமூக ஒழுங்கை உருவாக்குவதற்கு இன்றியமையாததாகும். அவர்களுக்கு முழு சமத்துவம் கிடைக்கும் வரை, அமைதி ஒருபோதும் நனவாகாது. ”

இதுவரை அளித்த பங்களிப்புகளைப் பற்றி பிரதிபலிப்பதில் டாக்டர் மஹ்மூதி கூறுகிறார்: “இந்தத் தொடரின் நோக்கம் புரிதலையும் அறிவையும் விரிவுபடுத்துவதாகும், இதன் விளைவாக அதிக நடவடிக்கைகள் சாத்தியமாகும். உயர்ந்த மற்றும் யதார்த்தமான இலட்சியங்களும் நம்பிக்கையின் உணர்வும் கொண்ட ஒரு சிறிய மக்கள் குழுமம் உறுதியான நடவடிக்கை எடுக்கத் தொடங்கும் போது மாற்றம் உண்டாகின்றது. ”

இந்தத் தொடரின் கட்டுரைகளை பஹாய் இருக்கை வலைப்பதிவில் காணலாம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1440/

சமுதாயத்தில் பாலின வன்முறைக்கு எதிரான பாப்புவா நியூ கினி பஹாய்களின் அறிக்கை


முழு அறிக்கையையும் (pdf) இங்கு காணலாம்

 

பாலின சமத்துவத்திற்கு வழி அமைத்தல்

மேலும் ஒரு பாலினம் சார்ந்த வன்முறைக்கு பலியான ஒருவரை அடுத்து, பாப்புவா நியூ கினி  பஹாய்கள் பெருந்துயரத்துடன் எங்கள் சக நாட்டினருடன் சேர்ந்துகொள்கின்றோம். சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் எதிரான இத்தகைய வன்முறை மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களை நாங்கள் கண்டிக்கின்றோம்.

பாலினம் அடிப்படையிலான வன்முறை நம் நாட்டில் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது. அது, நம் சமுதாயத்தை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோயினுடைய அறிகுறியின் வெளிப்பாடாகும். நமது முன்னேற்றமும் வளம்பெறுதலும் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவதற்குக் காரணமான இந்த நோய்க்குரிய பல காரணங்களுள் ஆண் பெண் சமத்துவத்தை கண்டுணரத் தவறியுள்ளதே ஒரு காரணமாக இருக்கின்றது.

“ஆதலால், வன்முறையை ஒழித்தல் சட்டம் மற்றும் கொள்கையில் மாற்றங்கள் மட்டும் தேவைப் படவில்லை; கலாச்சாரம், மனப்பாங்குகள் மற்றும் நம்பிக்கைகளின் மட்டத்திலும் அடிப்படை மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இத்தகைய மாற்றங்கள், பெண் ஆண் சமத்துவம் என்பது எட்டப்பட வேண்டிய ஓர் இலக்கு மட்டுமல்ல, மாறாக மனித இயல்பு குறித்து அங்கீகரித்து அரவணைக்கப்பட வேண்டிய ஓர் உண்மையுமாகும்… மனிதராக நம்மை உருவாக்கும் அந்த சாராம்சம் ‘ஆண்பாலோ’ ‘பெண்பாலோ’ அல்ல. …சமத்துவம் என்பது வள ஆதாரத்தின் ஓர் எண்ணிக்கை, சமுதாய முறைகளின் ஒரு தொகுப்பு ஆகியவற்றுக்கும் மேலான ஒன்றாகும். அது ஒவ்வொரு மனிதனிலும் உள்ளார்ந்துள்ள மேன்மையின் பிரதிபலிப்பாகும்.”[1]

இதன் வெளிச்சத்தில், பாலினம் சார்ந்த வன்முறையை முற்றாக ஒழிப்பதற்கு, ஒரு முழு சமூகம் எனும் முறையில், இந்தக் கோட்பாட்டின் ஆன்மீக உண்மையை கூட்டாகக் கண்டுணர்ந்தும் கடைப்பிடிக்கவும் வேண்டும்.  “பெண்ணும் ஆணும் என்றுமே கடவுளின் பார்வையில் சமமானவர்களாக இருந்துள்ளனர், அவ்வாறே இருந்தும் வருவர்,”[2] என பஹாய் திருவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. இது, ஆன்மாவின் சாராம்சத்திலிருந்து கிளைத்துள்ள ஓர் அடிப்படை ஆன்மீக உண்மையாகும்; இது எல்லா மனிதர்களுக்குமே வழங்கப்பட்டுள்ளது. ஆன்மாவுக்கு பாலினம் கிடையாது; ஆன்மீக திறனாற்றல்கள் மட்டுமே மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுகின்றன.  

நமது சமூக செழுமை ஆண் பெண் இருபாலரின் சமமான பங்கேற்புடன் பிணைக்கப்பட்டுள்ளது. “ஏனெனில், “மானிட உலகு இரண்டு இறக்கைகளைக் கொண்டுள்ளது: ஆண் மற்றும் பெண். இந்த இரண்டு இறக்கைகளும் சம அளவான வலிமை பெற்றிரா வரை, பறவையால் பறக்க இயலாது. மானிடமானது, உண்மையான சாதனைகளின் உச்சங்களுக்கு பறந்து செல்ல முடியாது. இரண்டு இறக்கைகளும் வலிமையில் சமமாகும் போது, சமமான சலுகைகளை அனுபவிக்கும் போது, மனிதனின் பறப்பு அபரிமித உயர்வாகவும் அசாதாரனமானதாகவும் இருந்திடும்” [3]

ஆண் பெண் சமத்துவம் குறித்த கருத்து, நமது சமூகங்களில் ஆன்மீக மற்றும் தார்மீக கல்வியையும் செயலாக்கம் பெற்ற நடவடிக்கையையும் வேண்டுகின்றது. அன்பு, நீதி, சமத்துவம், கருணை எனும் இந்த சில ஆன்மீகப் பண்புகள், குடும்பச் சூழல்களிலும் பள்ளிகளிலும் என நமது சமுதாயத்தின் நடுமத்தியில் கற்பிக்கப்படவும் நடைமுறைப்படுத்தப்படவும் வேண்டும். அது அன்பார்ந்த கலந்தாலோசனையுடன் இணைக்கப்பட வேண்டும்; ஏனெனில், கலந்தாலோசனையானது, “மக்களின் மனச்சாந்தி மற்றும் மகிழ்ச்சிக்கு உகந்த மிகவும் வலிமையான கருவிகளுள் ஒன்றாகும்[4]; அது ஒற்றுமை, புரிதல் ஆகியவற்றைப் பேணுகின்றது.

ஒரு விரிவான சூழலில் கண்ணுறும் போது, பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறையும் பாகுபாடும் முரண்பாடு, அநீதி, பாதுகாப்பின்மை ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படும் ஒரு சமுதாய முறையின் அறிகுறிகளுள் ஒன்றாகும். குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரல்களால் கட்டுப்படுத்தப்படும்-அதன் கட்டமைப்புகளும் செயல்முறைகளும் பொதுநலத்திற்கு சேவை செய்ய அவற்றால் இயலாது என்பதை நிரூபித்துக் காட்டுகின்றன. பெண்களுக்கும் சிறுமியர்களுக்கும் எதிரான வன்முறையை ஒழித்துக்கட்ட நாம் முயலும் போது, விரிவானதும் நீண்டகாலமானதுமான இலக்கின்பால் நாம் பார்வையிழந்திடக் கூடாது: குறிப்பாக, நீதியும் நியாயமும் மிக்க ஒரு சமுதாய முறையை நிர்மாணிப்பதில் பெண்களும் ஆண்களும் தோளுடன் தோள் சேர்ந்து பணிபுரியும் ஒரு சூழ்நிலையை உருவாக்குதல்.” [5]

சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் சிறிது முன்பாக, வெளிப்படுத்தப்பட்ட சமயவரலாற்றில் முதன் முறையாக, பஹாய் சமயத்தின் அவதார ஸ்தாபகரான பஹாவுல்லா, ஆண் பெண் சமத்துவத்தைப் பிரகடனப்படுத்தினார்.  இந்தப் பிரகடனத்தை ஓர் இலட்சியமாக அல்லது ஒரு பக்திமிகு நம்பிக்கையாக அவர் விட்டுவிடவில்லை, மாறாக அதை தமது சமுதாய முறையின் கட்டமைப்பிற்குள் ஓர் அடிப்படை காரணியாக நெய்துவிட்டிருந்தார். பெண்களின் கல்விக்கு ஆண்களைப் போன்று அதே தரத்தையும் சமுதாயத்தில் சம உரிமைகளையும் கோரும் சட்டங்கள் இயற்றுவதன் மூலம் ஆதரித்தார்.  

பஹாய்களுக்கு, பாலின சமத்துவம் என்பது பூமியின் ஒருமைப்படுத்தல், உலக அமைப்புமுறை மடிப்பவிழ்தல் ஆகியவற்றிற்கு இன்றயமையாத ஓர் ஆன்மீக மற்றும் தார்மீக செந்தரமாகும்.  பெண்கள் மற்றும் ஆண்களின் பண்புகள், திறமைகள், திறன்கள் ஆகியன இல்லாமல் இப்பூமியின் முழு பொருளாதார மற்றும் சமுதாய அபிவிருத்தி அறவே இயலாத ஒன்றாகிவிடும். 

வளரிளமைப் பருவத்திலிருந்து முதிர்ச்சிநிலைக்கான மானிடத்தின் தற்போதைய கடப்பில், பரிணமித்து வரும் இந்த சமத்துவத்தின் அடையாளங்கள் எங்கும் காணப்படுகின்றன. பஹாய் கண்ணோட்டத்தில், இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல, ஏனெனில் “பெண்கள் தங்களின் மிக உயரிய வாய்ப்புகளிலிருந்து தடுக்கப்படும் வரை, ஆண்களும் ஆதே காலம் வரை அவர்களுக்குரிய மகத்துவத்தை அடையமுடியமலேயே இருப்பர்.[6]

நாம் தற்போது பிரவேசிக்கும் இந்த காலகட்டத்தின் பண்புகள் பஹாய் திருவாக்குகளில் காணப்படும் பின்வரும் கூற்றிலிருந்து கூர்கவனத்திற்கு மேலும் கொண்டுவரப்படுகின்றது.

கடந்தகாலத்தில் உலகம் முரடான ஆட்சிக்கு உட்பட்டும், உடல் மற்றும் மனம் சார்ந்த அதிக வன்மையும் முரடும் மிக்க பண்புகளின் காரணமாக பெண்கள் மீது ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர்.  ஆனால், இந்த நிலை மாறி வருகின்றது, வலிமை அதன் ஆற்றலை இழந்துவருகின்றது, மன விழிப்புணர்வு, உள்ளுணர்வு, பெண்கள் பலசாலிகளாக விளங்கும் அன்பு மற்றும் சேவை சார்ந்த ஆன்மீகப் பண்புகள் ஏற்றம் கண்டு வருகின்றன. ஆதலால், புதிய யுகமானது, ஆண்மை இலட்சியங்கள் குறைவாகவும், பெண்மை இலட்சியங்கள் அதிகமாக இருக்கவிருக்கும் ஒரு காலமாக இருக்கும், அல்லது, துல்லியமாகக் கூறுவதானால், நாகரிகத்தின் ஆண்மை மற்றும் பெண்மை அம்சங்கள் சீரொழுங்குடன் இருந்திடும். 

கடந்த நூறாண்டுகளுக்கும் மேல், பாலின சமத்துவ கோட்பாட்டை உண்மையென பஹாய் உலகம் ஏற்று வந்தும், இக்கோட்பாட்டை தனிநபர், குடும்ப, மற்றும் சமூக வாழ்வில் அமல்படுத்துவதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டுமுள்ளது. பஹாய் சமூகத்தில் குடும்பத்தின் அஸ்திவாரமாக விளங்கும் திருமணம் எனும் ஸ்தாபனம், இச்செயல்முறையின் ஒரு பகுதியாகும். ஒரு பஹாய் திருமணம் நடைபெறுவதற்கு முன்பாக, ஒருவரை ஒருவர் தன்னிச்சையாக தேர்வு செய்துள்ள ஜோடி, பெற்றோர் அனைவரின் சம்மதத்தையும் பெற்று, அதை சமூகத்தின் நிர்வாக அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும். “மெய்யாகவே, நாங்கள் அனைவரும், கடவுளின் விருப்பத்திற்கு அடிபனிவோம்,” [7] என இருவரும் உச்சரிக்கும் சத்திய பிரமானத்துடன் புதிதாக திருமணம் செய்துகொண்டோர் உண்மையான ஆன்மீக ஒற்றுமை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கைகளை ஒன்றாக ஆரம்பிக்கின்றனர்.

கடவுளின் முன்னிலையில் ஒவ்வொரு மனிதனின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளில் வேரூன்றியுள்ள இந்த ஒற்றுமையும் சமத்துவமும், குடும்பத்தில் மடிப்பவிழ்கின்றன. இங்கு, தனிநபருடன், சமூகம், தேசம், மானிடம் ஆகியவற்றின் அபிவிருத்திக்கு இன்றியமையாத விழுமியங்கள் மற்றும் மனப்பான்மைகள் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்தே கற்பிக்கப்பட வேண்டும். பஹாய் கண்ணோட்டத்தில், ஒரு மனித ஒருமம் எனும் முறையில் குடும்பம் பவித்திரத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப கற்பிக்கப்பட வேண்டும். குடும்பத்தில் எல்லா விழுமியங்களும் கற்பிக்கப்பட வேண்டும். குடும்ப பந்தத்தின் நெறிமை சதா கருதப்பட வேண்டும் மற்றும் தனி உறுப்பினர்களின் உரிமைகள் மீறப்படக்கூடாது…  இந்த உரிமைகளும் தனிச்சிறப்புரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும், ஆயினும் குடும்ப ஒற்றுமை பராமரிக்கப்பட வேண்டும்.  ஒன்றில் ஏற்படும் காயம் அனைத்தின் காயமாக கருதப்பட வேண்டும்; ஒன்றின் சௌகர்யம், அனைவரின் சௌகர்யமாகும்; ஒருவரின் மரியாதை அனைவரின் மரியாதையாகும்.  

பிள்ளைகளின் கல்விக்கான பொறுப்பை பெற்றோர் இருவருமே பகிர்ந்துகொண்ட போதும், மானிடத்தின் முதல் கல்வியாளர் எனும் முறையில் அன்னைக்கே அங்கீகாரம் வழங்கப்படுகிறது, இந்தப் பணிக்காக அந்தத் தாய் கவனத்துடன் ஆயத்தமாக்கப்பட வேண்டும். உண்மையில், பிள்ளையின் குழந்தைப் பருவத்திலிருந்து பெண்ணே பயிற்சியாளராக இருக்கின்றார் என்பதால்,  பஹாய் கண்ணோட்டத்தின்படி, தந்தையைவிட தாயின் கல்வியே அதிக முக்கியத்துவம் உடையதாகின்றது. தாய் என்பார் தானே குறைபாடும் பூரணமின்மையும் உடையவாராக இருப்பின் அக்குழந்தையும் அதே போன்று குறைபாடுகள் உடையதாக இருந்திடும்; ஆதலால், பெண்ணில் குறைபாடு மானிடம் அனைத்திலும் ஒரு குறைபாட்டை உட்குறிக்கின்றது, ஏனெனில் தாயே குழந்தையை வளர்த்து அதன் வளர்ச்சியைப் பேணி வழிகாட்டுகின்றார்.  

பஹாய்கள் வாழ்க்கையை ‘சமயம்சார்ந்த’ ‘சமயமற்ற’ வாழ்க்கை என பிரிப்பதில்லை என்பதாலும் சமயநம்பிக்கை என்பது சமுதாய நடவடிக்கைகள், அதன் உண்மைகள் அனைத்தும் அடங்கிய ஆண் பெண் கல்வியில், வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதாலும், கல்வியானது “விஷயங்களின் புதிய ஒழுங்குமுறையில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கின்றது.” இதன் காரணமாக, ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கட்டாயமான ஒன்றாகும். ஒரு குடும்பத்தில் பெண்ணையும் ஆணையும் ஒன்றாக கல்வி கற்பிக்க போதுமான பணம் இல்லையெனில், இருக்கும் பணம் அப்பெண்ணின் கல்விக்கே அர்ப்பணிக்கப்பட வேண்டும், ஏனெனில் அவளே சாத்தியங்கள் மிக்க தாயாக இருக்கின்றாள். பெற்றோர் இல்லையெனில் சமூகமே அக்குழந்தையின் கல்விக்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும், இந்த விரிவான கல்விக்கு ஒவ்வொரு பிள்ளைக்கும் ஏதாவது தொழில், கலை, அல்லது வணிகம் கற்பிக்கப்பட வேண்டும், அதன் மூலம் சமூகத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் தனது சொந்த வாழ்வாதாரத்தை ஈட்டிட இயலும்.  

மனித பரிணாமத்தின் இப்புதிய யுகத்தின் உணர்வில், “மகள்களும் மகன்களும் படிப்பில் ஒரே பாடத்திட்டத்தைப் பின்பற்றி, அதன் மூலம் பாலினத்தின் ஒற்றுமையை ஊக்குவித்திட ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே பயிற்சிமுறை ஏற்றுக்கொள்ளப்படுவது குறித்து பஹாவுல்லா பிரகடனம் செய்துள்ளார்”[8] என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

பஹாய் திருவாக்குகள் “எல்லா மனிதத் துறைகளிலும் பெண்களின் பிரவேசம் மறுக்கமுடியாத மற்றும் ஆட்சேபிக்கமுடியாத விஷயமென வாக்குறுதியளிக்கின்றன.  எந்த ஆத்மாவும் அதைக் குறைக்கவோ தடுக்கவோ முடியாது”; “எந்த இயக்கத்திலும்” பெண்கள் “பின்தள்ளப்பட மாட்டார்கள்;   அவர்கள் மானிட உலகின் மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படும் அளவிற்கு யாவற்றிலும் சாதனை செய்வார்கள், எல்லா விவகாரங்களிலும் பங்கெடுப்பார்கள்”;   “உலக விவகாரங்களில் பெண்கள் முழுமையாகவும் சமமாகவும் பங்கேற்கும்போது …போர் நிறுத்தப்படும்.”[9] உலக ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஸ்தாபிப்பதில் பெண்களின் இந்த பங்களிப்பு தவிர்க்க முடியாமல் அங்கீகரிக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும்.

கடந்தகாலங்களில் மானிடம் பூரணமின்மையால் குறைபாடும் விளைவுத்திறமற்றதாகவும் இருந்துள்ளது. போர்களும் அவற்றால் ஏற்படும் அழிவுகளும் உலகை மழுங்கடித்துள்ளன. பெண்கள் கல்வி அதனை ஒழிப்பதிலும் முடிவுக்குக் கொண்டுவருவதிலும் ஒரு மகத்தான படியாக இருந்திடும், ஏனெனில் பெண்ணானவள் போர்களுக்கு எதிராக தனது முழு செல்வாக்கையும் பயன்படுத்துவாள்…  சர்வலோக அமைதி, அனைத்துலக மத்தியஸ்தம் ஆகியவற்றை ஸ்தாபிப்பதில் அவள் பெரும் காரணியாக இருப்பாள். உறுதியாகவே, பெண்னாவள் மனிதருக்கிடையில் போரை ஒழித்திடுவாள்.  

இருப்பினும், தனது சாத்தியமிக்க ஆற்றல்களை முழுமையாக மேம்படுத்திக்கொள்ளும் பெரும் கடமை பெண்ணின் மீது சுமத்தப்பட்டுள்ளது. மேலும், பெண்ணின் திறனாற்றலுக்கும், சாதனைகளுக்கும் ஒப்புதல் அளிக்க ஆண்கள் வற்புறுத்தப்பட,  அதிக பூரணத்துவம் பெறவும், எல்லா விதத்திலும் ஆணுக்கு சமமானவராகிடவும், தான் பின்தங்கியுள்ள அனைத்திலும் மேம்பாடு அடைந்திடவும் அவள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.,   

நிச்சயமாக, இனம், தேசியம், வகுப்பு, சமயம், அல்லது பாலினம் கருதாமல், ஒவ்வொரு தனிநபரின் சாத்தியமான ஒழுக்கநெறிகள் மற்றும் திறன்களின் அபிவிருத்தியில்தான் மனுக்குலத்தின் நல்வாழ்வு அடங்கியுள்ளது. இதன் காரணமாக, பிரிவினை, அடக்குமுறை ஆகியவற்றிற்கு காரமான தப்பெண்ணங்கள், பஹாய் சமூக வாழ்வில் முறைமையுடன் ஒழிக்கப்படுகின்றன. பன்மையில் ஒருமை எனும் கருத்தாக்கத்தில் வேரூன்றிய ஒரு தனித்தன்மை மிக்க நிர்வாக முறையானது, சமூகத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் கல்வியை வலியுறுத்துவதுடன், கடந்தகாலத்தில் தங்களின் உரிமைகளை இழந்தோர் அனைவரின் உடனடியான ஒருங்கிணைத்தலையும் அனுமதிக்கின்றது. எவ்வித நியமனமோ பிரச்சாரமோ இன்றி இரகசிய வாக்குகளின் மூலம் இயங்கும், பஹாய் தேர்தல் முறையானது சர்வலோக பங்கேற்பை ஊக்குவிக்கின்றது: பஹாய் விவகாரங்களின் செயல்பாட்டில் முடிவெடுக்கும் பொறுப்பைக் கொண்ட உள்ளூர் அல்லது தேசிய நிர்வாக அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதி ஒவ்வொரு முதிய பஹாய் அன்பருக்கும் உண்டு. நீண்டகாலமாக சம வாய்ப்புகளை இழந்துவந்துள்ள பெண்கள், இப்பொழுது சுலபமாக சமுதாயத்தின் வாழ்வில் ஒன்றிணைக்கப்பட முடிவது, பஹாய் சமூக வாழ்வின் எல்லா துறைகளிலும் பெண்கள் பங்கேற்பின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தப்படுகின்றது. 

பஹாய் உலக சமூகத்தில் இன்று, 200’க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் ஓர் உலகளாவிய சமுதாயத்தை நிர்மாணிப்பதில் ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் பணிபுரிகின்றனர். மனித சாத்தியக்கூறுகளின் நிறைவேற்றத்தைத் தடுக்கும் எல்லா தடைகளையும் நீக்கியுள்ள பஹாவுல்லாவினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள அனைத்தையும் ஊடுருவவல்ல ஆன்மீக சக்தியே ஓர் உலக நாகரிகம் நிறுவப்படுவதற்கான, அவர்களின் முழு பங்களிப்பு சாத்தியப்படுவதற்கான, காரணம் என பஹாய்கள் நம்புகின்றனர். பஹாய் கண்ணோட்டத்தில், இது ஒளிமிகு நூற்றாண்டு என்பதால், திருவாக்கு எனும் மெய்ம்மைச் சூரியன் தன்னை மனிதகுலம் முழுமைக்கும் வெளிப்படுத்தியுள்ளது என்பது தெளிவாக உள்ளது. பெண்மையின் செயல்திறம் அல்லது திறனாற்றலே மானிட உலகில் மறைவாக உள்ள சாத்தியக்கூறுகளுள் ஒன்றாகும். தெய்வீகப் பிரகாசத்தின் பேரொளிமிக்க கதிர்களின் மூலம், இக்காலகட்டத்தில் பெண்களின் திறனாற்றலானது அத்தகைய விழிப்புணர்வும்  வெளிப்பாடும் கண்டுள்ளதானது, ஆண் பெண் சமத்துவம் என்பது ஓர் நிலைப்படுத்தப்பட்ட பொருண்மையாக இருக்கின்றது.  

பாப்புவா நியூ கினி பஹாய்கள், பலியானோருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தங்களின் பிரார்த்தனைகளை வழங்கி, “உங்கள் உள்ளங்களின் சிந்தனைகள் அனைத்தையும் அன்பு மற்றும் ஒற்றுமையின்பால் மையப்படுத்துமாறும்… ஒரு போர் எனும் எண்ணம் வரும்போது அது அதைவிட வலுவான அன்பு எனும் எண்ணத்தால் அழிக்கப்படல் வேண்டும்” எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.” [10]

தொலைபேசி: (+675) 71034101  மின்னஞ்சல்: NSAExternalAffairs@bahai.org.pg

இணையதளம்: http://www.bahai.org.pg


[1] பஹாய் அனைத்துலக சமூகம், பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறை ஒழிப்பு, பெண்கள் ஸ்தானம் குறித்த 57’வது கமிஷனின் அமர்வுக்கான பங்களிப்பு, நியூ யார்க் 2012, பக் 1.

[2] பஹாவுல்லா, பாரசீக மற்றும் அரபு நிருபம் ஒன்றின் மொழிபெயர்ப்பு, ‘பெண்களில்’ மேற்கோளிடப்பட்டது: பஹாவுல்லா, அப்துல்-பஹா, ஷோகி எஃபென்டி ஆகியோர் உட்பட உலக நீதிமன்றத்தின் எழுத்துக்களின் உரைப்பகுதிகள், தொகுப்பு. உலக நீதிமன்றத்தின் ஆய்வுத் துறை (தோர்ன்ஹில், ஒன்டாரியோ: கேனேடிய பஹாய்களின் தேசிய ஆன்மீக சபை, 1986, எண் 54

[3] அப்துல்-பஹா அனைத்துலக அமைதியின் பிரகடனம். ஐக்கிய அமெரிக்கா மற்றும் கெனடாவுக்கான அப்துல்-பஹாவின் பயணங்களின் வழங்கப்பட்ட உரைகள், 1912, தொகுப்பு. ஹோவார்ட் மேக்நட், 2’வது பதிப்பு

[4] ‘அப்துல்-பஹா, பாரசீக நிருபம் ஒன்றிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது

[5] Ibid., பஹாய் அனைத்துலக சமூகம், பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறை ஒழிப்பு, பெண்கள் ஸ்தானம் குறித்த 57’வது கமிஷனின் அமர்வுக்கான பங்களிப்பு, நியூ யார்க் 2012, பக் 1.

[6] அப்துல்-பஹா, பாரீஸ் பேருரைகள்: 1912-1913, பாரீஸ் நகரில் அப்துல்-பஹா வழங்கிய உரைகள், மறுபதிப்பு. (லன்டன்: பஹாய் பிரசுர காப்பகம், 1979), பக. 133

[7] பஹாவுல்லா, கித்தாப்-இ-அக்டாஸ், பக். 105

[8] அப்துல்-பஹா அனைத்துலக அமைதியின் பிரகடனம், பக். 175

[9] Ibid., பாரீஸ் பேருரைகள், பக்.237.

[10] Ibid., பாரீஸ் பேருரைகள், பக்.29.

சமுதாயத்தில் பாலின வன்முறை அதிகரிப்புக்கு எதிரே பாப்புவா நியூ கினி பஹாய்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்


சமுதாயத்தில் பாலின வன்முறை அதிகரிப்புக்கு எதிரே பாப்புவா நியூ கினி பஹாய்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்


8 அக்டோபர் 2021


பெண் ஆண் சமத்துவம் குறித்து பாப்புவா நியூ கினி பஹாய் தேசிய ஆன்மீக சபை ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது, மற்றும் அதில், தொற்றுநோயின் போது அதிகரித்துள்ள ஓர் உலகளாவிய கவலை குறித்து உரைத்துள்ளது.

ஒரு தேசிய தினசரியிலும், சமுதாய ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்ட அந்த அறிக்கை, தலைநகரான போர்ட் மோரெஸ்பியிலும் அதற்கு அப்பாலும் ஆக்கரமான உரையாடல்களைத் தூண்டுவதாக இருக்கின்றது.

“பாலின அடிப்படையிலான வன்முறை நம் நாட்டில் மிகவும் ஆழமாகப் பதிந்துள்ளது” என்று தேசிய சபை அந்த அறிக்கையில் எழுதுகிறது. “இது நம் சமூகத்தை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோயின் வெளிப்பாடு ஆகும். நமது முன்னேற்றம் மற்றும் செழிப்பை மிகவும் கடுமையாக முடக்கியுள்ள இந்த நோய், ஆண்களின் மற்றும் பெண்களின் சமத்துவத்தை அங்கீகரிக்கத் தவறியதன் ஒரு பகுதியாகும் என்று பஹாய் சமூகம் நம்புகிறது.”

இந்த அறிக்கையை பிரதிபலிக்கும் வகையில், தேசிய ஆன்மீக சபையின் செயலாளர் கன்பூசியஸ் இகோய்ரேரே கூறுவதாவது, “நமது சமூகம் அதன் கலாச்சாரம் மற்றும் மரபுகள் பெண்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி ஆழமாக சிந்திக்கும் தருணம் இது. வழிகாட்டுதலின் ஆதாரமாகவும், பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் மூடநம்பிக்கைகளை அகற்றவும் சமயம் சார்ந்த சமூகங்களுக்கு ஒரு பொறுப்பு உள்ளது. இந்த அறிக்கை தனிநபர்களுக்கு இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்பதே நம்பிக்கை, இதனால் இந்த உரையாடல் எல்லா வீடுகளிலும் வேரூன்றி சமூகங்களுக்குள் ஊடுருவிடக்கூடும்.”

பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்தைப் பிரதிபலிக்க வேண்டிய ஒரு சமூகத்திற்கு இன்றியமையாதது என்று கூறும் பல பஹாய் கொள்கைகளை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. சமுதாய ஊடகங்களில் அறிக்கை பரவியபோது, ஆண்களையும் பெண்களையும்–பறவை பறக்க சமமாக பலப்படுத்தப்பட வேண்டிய–ஒரு பறவையின் இரண்டு சிறகுகளுடன் ஒப்பிடும் பஹாய் திருவாக்குகளில் இருந்து மேற்கோள் காட்டப்பட்ட ஒரு பத்தி குறிப்பாக கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.

“உண்மை என்னவென்றால், சமுதாயத்தில் பொதுவான சில அணுகுமுறைகள் பெண்களை ஆண்களை விட தாழ்ந்தவர்களாக்கி வைக்கின்றன, அவர்களை வீட்டிற்குள் கட்டுப்படுத்தி வைக்கின்றன, முடிவெடுப்பதில் இருந்து அவர்களை விலக்கி வைகின்றன” என்று பாப்புவா நியூ கினியில் உள்ள பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் இயக்குனர் கெஸினா வால்மர் கூறுகிறார். அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட பஹாய் சமயத்தின் மிகவும் ஆழ்ந்த கொள்கை என்னவென்றால், ஆன்மாவுக்கு பாலினம் இல்லை என்பதாகும். இதையும் பிற தொடர்புடைய ஆன்மீக உண்மைகளையும் மக்கள் மதித்துணர ஆரம்பித்தவுடன், சமூகத்தில் சமத்துவமின்மைக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதை அவர்கள் உணர்கிறார்கள். இது பெண்களைப் பற்றிய கருத்து மற்றும் நடத்தை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. இது ஒற்றுமையைப் பற்றிய அதிக புரிதலை உருவாக்குகிறது மற்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான நியதிகளைப் பற்றி ஆலோசிக்க அனுமதிக்கிறது.”

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன்னர் எடுக்கப்பட்ட படம். போர்ட் மோரெஸ்பி, பாப்புவா நியூ கினியில் உள்ள எதிர்கால பஹாய் வழிபாட்டுத் தலத்தில் ஒரு வழிபாட்டுக்கான ஒன்றுகூடல்.

தேசிய ஆன்மீக சபை உறுப்பினரான ஃபெலிக்ஸ் சிமிஹா கூறுவதாவது, “தொற்றுநோயின் போது பிரார்த்தனை செய்ய ஒன்று சேரும் பழக்கத்தை குடும்பங்கள் வலுப்படுத்தி வருகின்றன, இது பஹாய் கலந்தாலோசனை செயல்முறைக்கு அவசியமான ஒன்றாகும். ஒரு குடும்பம் ஆலோசனையின் மூலம் முடிவுகளை எடுக்கும்போது, பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு குரல் இருக்கிறது, வன்முறைக்கு இடமில்லை. ”

இந்த அறிக்கை சமத்துவம் குறித்த சொல்லாடலுக்கு நாட்டிலுள்ள பஹாய் சமூகத்தின் ஒரு பங்களிப்பாகும். அது வழங்கிடும் கோட்பாடுகள், பாப்புவா நியூ கினியில் பஹாய் சமூக நிர்மாணிப்பு மற்றும் கல்வியல் முயற்சிகளின் நடுமையத்தில் வீற்றிருக்கின்றன.

“நமது கலாச்சாரத்தின் அம்சங்கள் மாறக்கூடும், குறிப்பாக சிறு வயதிலிருந்தே நம் குழந்தைகளுக்கு புதிய விழுமியங்களைக் கற்பிக்கும் போது,” என்று நாட்டின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் ஸா அகபே-கிரான்ஃபர் கூறுகிறார். “பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஒற்றுமையாகவும் ஒத்துழைப்புடனும் எவ்வாறு தொடர்பு கொள்ள கற்றுக்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் நேரில் காண்கிறோம், பின்னர் இந்தப் பாடங்களை அவர்களது குடும்பங்களுக்கு அவர்கள் கொண்டு வருகின்றனர்.

“பெரிய நகரங்களிலிருந்து தொலைதூரப் பகுதிகள் வரை, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்தை வெளிப்படுத்த முயற்சிக்கும் சமூகங்களில் நேர்மறையான மாற்றங்களை நாங்கள் காண்கிறோம். பெண்கள் படிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள், அவர்களின் குரல்களுக்கு மதிப்பளிக்கப்படுகின்றது, அவர்கள் முடிவெடுக்கும் பாத்திரங்களில் ஈடுபடுகிறார்கள், முன்பு அவர்களை முழு பங்கேற்பிலிருந்து விலக்கிய தடைகள் அகற்றப்படுகின்றன.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1439/

கடினங்கள் மிகுந்த நகரின் இளைஞர் நிகழ்ச்சி இன்றியமையா கூறான –’நம்பிக்கையை’ வழங்குகின்றது.


கடினங்கள் மிகுந்த நகரின் இளைஞர் நிகழ்ச்சி இன்றியமையா கூறான –’நம்பிக்கையை’ வழங்குகின்றது.


8 அக்டோபர் 2021


போர்ட்டிச்சி, இத்தாலி – தென் இத்தாலிய நகரான போர்ட்டிச்சியில் வாழும்12 வயதான அல்பர்ட்டோ லிக்கார்டி, தெருக்களில் திரியும் தனது நண்பர்களுக்கென சில ஆலோசனைகள் வழங்குகிறார்.

“வீனே தெருவில் சுற்றிக்கொண்டு இருப்பதற்குப் பதிலாக, பஹாய் நிலையத்திற்கு வாருங்கள். அது உங்களுக்கு பயன்மிக்கது,” என அவர் அழைப்பு விடுக்கின்றார்.

கலந்தாலோசனைகள், சேவைத் திட்டங்கள், கலைகள், விளையாட்டுகள், ஆகியவற்றின் வாயிலாக, போர்ட்டிச்சியின் இந்த வகுப்புக்கள் தங்கள்பாலும் பிறர்பாலும் மரியாதை செலுத்தவும், எவ்வாறு சேவையாற்றுவது என்பது குறித்து கற்கின்றனர்……

போர்ட்டிச்சி நகர் நேப்பல்ஸ் நகருக்குத் தென்கிழக்கில் உள்ளது. அது சுமார் 60,000 மக்களைக் கொண்ட  ஒரு நகராகும். இத்தாலியிலும் பிற இடங்களிலும் இயங்கும் பால்ய இளைஞர்களுக்கான பஹாய் திட்டம் ஒன்றுக்குத் தங்களைப் பதிந்துகொண்டுள்ள போர்ட்டிச்சி இளைஞர்களுள் அல்பர்ட்டோவும் ஒருவராவார்.

இத்தாலி நாட்டில் 130க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட இத்தகைய இளைஞர் குழுக்கள் சுமார் 25 உள்ளன. இவற்றில் பங்குபெறும் இளைஞர்களில் பெரும்பாலானோர் பஹாய் சமூகத்திற்கு வெளியே உள்ளவர்களாவர்.

11லிருந்து 14 வயதுடைய இளைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டம் பங்கேற்பாளர்கள் தங்கள் ஆன்மீக இயல்நிலையைப் புரிந்துகொள்ளவும், தங்கள் மீதும் பிறர் மீதும் அவர்கள் ஒரு மதிப்புணர்வைப் பெறவும், தங்களைச் சுற்றியுள்ள சமூகத்திற்குச் சேவைச் செய்யவும் அவர்களுக்கு உதவும் நோக்கம் கொண்டதாகும்.

கலந்தாலோசனைகள், சேவைத் திட்டங்கள், கலைகள், விளையாட்டுகள், ஆகியவற்றின் வாயிலாக, போர்ட்டிச்சியின் இந்த வகுப்புக்கள் தங்கள்பாலும் பிறர்பாலும் மரியாதை செலுத்தவும், எவ்வாறு சேவையாற்றுவது என்பது குறித்து கற்கின்றனர்……

அன்னா டெலுச்சா, வயது 12 கூறுவதாவது: போர்ட்டிச்சியின் பல இலைஞர்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ்கின்றனர். அவர்கள் எப்போதும் தெருக்களைச் சுற்றிக்கொண்டும், புகை பிடித்தும், சண்டையிட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். பஹாய் வகுப்புக்களுக்கு செல்பவர்கள்…..
*

ரஃபாயெல் லிக்கார்டி, வயது 14 திட்டம் குறித்துக் கூறுவதாவது:  இந்த வகுப்புக்கள் நான் என்னுள் புதிய நற்பண்புகளையும் கலையாற்றல்களையும் கண்டுகொள்ள துணைபுரிகின்றன, மற்றும் நான் இப்போது வெளிப்படையாக……
*

11லிருந்து 14 வயதுடைய போர்ட்டிச்சி நகரின் “இளைஞர்” வகுப்பின் இளைஞர்கள், தங்களுடைய வகுப்பை சேவைத் திட்டங்களுடனும் பிற நடவடிக்கைகளுடனும் கலந்து நடத்துகின்றனர். இம்மாதம் திட்டம் ஆரம்பிக்கின்றது….

தாங்கள் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளக்கூடிய தெருவீதிகளில் சுற்றித் திரிவதிலிருந்து அவர்களை இவ்விளைஞர் திட்டம் பாதுகாக்கின்றது என்புத உண்மைதான், ஆனால் இத்திட்டத்தின் குறிக்கோள் அதைவிட ஆழமானதாகுமென அதன் படைப்பாளர்கள் கூறுகின்றனர்.

கலந்துரையாடல்கள், சேவைத் திட்டங்கள், குறிப்பிட்ட வாசகக்குறிப்புக்களின் ஆய்வு, விளையாட்டு, இசை ஆகியவற்றின் வாயிலாக இளைஞர்கள் மனிதர்கள் எனும் முறையில் தங்களின் மேலியல்பு குறித்த அறிவைப் பெறுகின்றனர் என்கிறார் இத்திட்டத்தின் இத்தாலிய பொறுப்பாளரான அன்டொனெல்லா டெமொன்டே.

இதன் வாயிலாக இளைஞர்கள் எதிர்மறையான தோழர்வற்புறுத்தல்களை எதிர்த்துநிற்கவும் பிறருக்கு நம்பிக்கையையும் சேவை அடிப்படையிலான ஒரு வாழ்க்கைமுறையை வழங்கிடவும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது, என அவர் மேலும் கூறினார்.

வேலைவாய்ப்பின்மை, குற்றச்செயல், பதின்மகர்ப்பம், மற்றும் பிற பிரச்சினைகள் இளைஞர்களிடையே நம்பிக்கையின்மையை வளர்க்கும் சூழலில் இது மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது, என்றார் அவர்

“மேலும், போர்ட்டிச்சி மக்கள்தொகைமிகுந்தும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கவும் செய்கின்றது – வாழ்வதற்கு இது பெரும் சவால்கள் மிகுந்த இடமாகும்,” என அவர் மேலும் தொடர்ந்தார்.

அல்பர்ட்டோ போன்று, அன்னா டெலுச்சாவுக்கு 12 வயதுதான், ஆனால் பெரும்பாலான தனது சகவயதுடையோரிடையே என்ன நடக்கின்றது என்பதை புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவராக அவர் இருக்கின்றார்.

“அவர்கள் மிகவும் மோசமான சூழலில் வாழ்கின்றனர்,” என அவர் கூறுகின்றார். “அவர்கள் பெரும்பாலான நேரங்களில் தெருக்களில் சுற்றுகின்றனர், சண்டையிடுகின்றனர், புகைப் பிடிக்கின்றனர்… அவர்கள் வயது முதிர்ந்தவர்கள் போன்று வாழ்கின்றனர்…. 12 வயதிலேயே மற்ற நகரங்களுக்கு களியாட்டங்களுக்காக டிஸ்கோ செல்கின்றனர்.”

அன்னா இப்பஹாய் நிகழ்ச்சியில் சென்ற வருடம் சேர்ந்தார். இப்பாடத்திட்டத்தின் இன்றியமையா இரண்டு கருப்பொருள்காளான கடமையுணர்வு மற்றும் மரியாதை குறித்து அவர் இப்போதெல்லாம் பேசுகின்றார்.

“இளையோர்கள் மனதில் தங்கள் செயல்கள் குறித்த பொறுப்புணர்வென்பது கிடையாது,” என அவர் கூறுகின்றார். “மேலும், அவர்கள் யாரையும் மதிப்பதுமில்லை.”

போர்ட்டிச்சியில், இத்தாலி மொழியில், ‘அட்டிவிட்டா பெர் ஜியோவானிஸ்ஸிமி எனப்படும் இந்த “இளமிளைஞர் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் இம்மாதம் புதிய வகுப்பு ஆண்டை துவங்குகின்றனர் மற்றும் சென்ற வருடம் போன்று, குறைந்தது 12 இளமிளைஞர்களாவது அதில் சேருவரென எதிர்ப்பார்க்கின்றனர்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/653/

அமெரிக்க ஜாஸ் இசையமைப்பாளர்கள் 2008 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் ஒரு பாடலை எழுதியுள்ளனர்.


அமெரிக்க ஜாஸ் இசையமைப்பாளர்கள் 2008 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் ஒரு பாடலை எழுதியுள்ளனர்.


8 அக்டோபர் 2021


பிரன்ஸ்விக், ஜோர்ஜியா, ஐக்கிய அமெரிக்கா — தங்களின் சீன இசை, பிரேசில் சம்பா, மற்றும் அமெரிக்க ஜாஸ் குறித்த அறிவைக் கொண்டு இரு ஜாஸ் இசையமைப்பாளர்கள் ஒலிம்பிக் விளையாட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு பாட்டை எழுதியுள்ளனர். (பாடலை இங்கு கேட்கலாம்)

“2008 பெய்ஜிங் ஒலிம்பிக் ஹாவ் யூவிங்” எனும் இசையை பேஸ் இசைக்கருவி கலைஞர் ஃபில் மொரிஸன் மற்றும் பியானோ இசைக்கலைஞர் கீத் வில்லியம்ஸ் இருவரும் அமைத்தனர்.

“பெய்ஜிங் ஒலிம்பிக் ஹாவ் யுய்ங் (Good Luck),” எனும் பாட்டை பிஃல் மோரிசன் மற்றும் வில்லியம்ஸ் என்பவரும் அமைத்துள்ளனர். இப்பாடல் ஒலிம்பிக் செயற்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு போட்டியின் இறுதிச் சுற்றில் தேர்வு செய்யப்பட்ட 30 பாடல்களில் ஒன்றாகும்.

இப்போட்டி சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்தது. இதில் இறுதியில் சுமார் 3000 பாடல்கள் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டன என இதன் ஏற்பாட்டாளர்கள் கூறினார். ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 8 ஆகஸ்ட்டில் ஆரம்பித்தன.

பாடல்கள் எங்கெங்கிலுமிருந்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவை யாவும் பெய்ஜிங் நகர் மற்றும் சீன தேசத்தின் தனிச்சிறப்பான பின்னனி மற்றும் பன்பாட்டைப் பிரதிபலிக்க வேண்டுமென விதிமுறைகள் கூறின.

திரு மொரிசன் திரு வில்லியம்ஸ் ஆகியோர் நீண்டகாலமாக பஹாய்களாக இருந்துவருகின்றனர். இவர்கள் சீனாவில் பல பாடல் பதிவுகளைச் செய்தும் அங்கு பலமுறை பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெற்ற பாடல்களில் இவர்களின் பாடல் மட்டுமே அமெரிக்காவிலிருந்து பெறப்பட்ட பாடலாகும். சீனாவுக்கு வெளியே இருந்து சில பாடல்கள் மட்டுமே போட்டிக்குப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இவர்களின் பாட்டின் வரிகள் பஹாய் சமயத்தின் கோட்பாடுகள் சிலவற்றை உள்ளடக்கியுள்ளன: “உலக ஒற்றுமைக்காக — ஒரே உலகக் குடும்பம் — உலகமே கொண்டாடும்” மற்றும் “அனைவருக்காகவும் அமைதி மற்றும் நட்பைப் பரப்புவோம் — கதவுகளைத் திறப்போம் — உலகம் ஒன்றுகூடட்டும்,” போன்றவை. இவ்விருவரும், பிற கலைஞர்களோடு சேர்ந்து, கீத் வில்லியம்ஸ் பங்கு பெறும் ‘பிஃல் மோரிசன் குழுவினர்’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சிகள் படைக்கின்றனர்.

பாஸ் இசைக் கலைஞர் மற்றும் பாடல் இயற்றுனரான திரு மோரிசன், ஏறத்தாழ தமது வாழ்நாள் முழுவதையுமே ஓர் இசைக் கலைஞராக கழித்தவர். இவர் தமது கலைத் தொழிலை முதலில் பாஸ்டன் நகரில் ஆரம்பித்து பிறகு அனைதுலக ரீதித்கு வந்தவர். இவர் நாட் கிங் கோல் எனும் புகழ் பெற்ற இசைக் கலைஞரின் தம்பியான பிஃரெடி கோல் என்பவரோடு சுமார் ஐந்து வருடங்கள் கலைத்தொழில் புரிந்தார். அப்போது அவர் பிரேசில் நாட்டில் அடிக்கடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இப்போது இவர் பிரன்ஸ்விக் நகர், ஜோர்ஜியா, ஐக்கிய அமெரிக்காவில் வாழ்கின்றார்.

சான் பிரான்சிஸ்கோ நகரில் பிறந்தவரான திரு வில்லியம்ஸ், பாஸ்டன் நகரின் பெர்க்கிலீ காலேஜில் பட்டப்படிப்பை முடித்த ஒரு பாடகர், பியானோ இசைக்கலைஞர், பாடல் இயற்றுனர் மற்றும் இசையமைப்பாளராவார். இவர் டிஸ்ஸி கில்லெப்சி மற்றும் லையனல் ஹாம்ப்டனுடன் நிகழ்ச்சிகள் படைத்துள்ளார். சுமார் ஐந்து வருடங்கள் இவர் தமது சொந்த குழுவைக் கொண்டிருந்தார் மற்றும் இப்போது பிரன்ஸ்விக் நகரில் வாழ்கின்றார்.

திரு மோரிசன் மற்றும் திரு வில்லியம்ஸும், “உலக ஒற்றுமை ஜாஸ் குழுமம்” எனும் பெயரில் — இப்பெயரை இப்போதும் அவ்வப்போது பயன்படுத்துகின்றனர் —

“China Sky” மற்றும் “Hollow Reed,” எனும் இரு பாடல் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிக்கு வந்த பாடல்கள் பெரும்பாலும் பண்களாக அமைக்கப்பட்டிருந்தன, ஆனால், தங்களின் “பெய்ஜிங் ஒலிம்பிக் ஹாவ் யுய்ங்” பாடல் ஒரு கொண்டாட்ட ஒன்றுகூடல் நிகழ்ச்சியின் சுவையைக் கொண்டுள்ளது என திரு வில்லியம்ஸ் கூறினார்

“மனிதக் குடும்பமாக எங்களோடு ஒன்றுகூடுங்கள்,” என இப்பாடலின் வரிகள் அமைந்துள்ளதாக திரு வில்லியம்ஸ் மேலும் கூறுகிறார் மற்றும் சோனி இசையினால் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ ஒலிம்பிக் குறுந்தட்டில் இப்பாடலும் இடம்பெறும். இப்பாடலை கீழ்க்காணும் வலைப்பக்கத்தில் செவிமடுக்கலாம்: http://www.philmorrisontrio.com.

மூலாதாரம்: https://news.bahai.org/story/649/

கொங்கோ ஜனநாயக குடியரசில் முதல் பஹாய் கோவில் வடிவம் திரைநீக்கப்பட்டுள்ளது.


கொ.ஜ.குடியரசின் (DRC) பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கான வடிவமைப்பு பாரம்பரிய சித்திரவேலைப்பாடுகள், கட்டமைப்புகள், மற்றும் அந்நாட்டின் இயற்கை அம்சங்களினால் உத்வேகம் பெற்றதாகும். இந்த பஹாய் வழிபாட்டு இல்லமானது, DRC’யின் பஹாய்களால் பல தசாப்தங்களாக பேணப்பட்ட துடிப்பான பக்தி உணர்வை உள்ளடக்கியிருக்கும்.

கொங்கோ ஜனநாயக குடியரசில் முதல் பஹாய் கோவில் வடிவம் திரைநீக்கப்பட்டுள்ளது.


8 அக்டோபர் 2021


கொ.ஜ.குடியரசின் தேசிய ஆன்மீக சபை அந்நாட்டின் முதல் வழிபாட்டு இல்லத்தின் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது.

மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்குப் பிறகு, கொ.ஜ.குடியரசில் நிர்மாணிக்கப்படவிருக்கும் தேசிய வழிபாட்டு இல்லத்தின் வடிவமைப்பு, அந்நாட்டு பஹாய்களின் தேசிய ஆன்மீக சபையின் ஓர் இணையவழி அறிவிப்பின் மூலம் இன்று திரைநீக்கம் கண்டது.

“பஹாய் தேசிய ஆன்மீக சபையின் செயலாளரான லாவோசியே முத்தும்போ த்ஷியொங்கோ, “இது கோ.ஜ.குடியரசின் பஹாய்கள் நீண்டகாலமாக காத்திருந்த ஒரு தருணமாகும்,” என்றார். “உறுதியான கால்களுடன், இங்கு ஆப்பிரிக்க கண்டத்தின் நடுமையத்தில், எங்களின் முதல் வழிபாட்டு இல்லத்தை நிர்மாணிப்பதற்கான ஒரு புதிய அடியை எடுத்து வைத்து, நமது சமுதாயத்திற்கு சேவையாற்றுவதற்கான எங்களின் எல்லா முயற்சிகளுக்கு ஒரு புதிய உந்துவிசையை வழங்குகின்றது.

கின்ஷாஷாவின் வெளிப்புறத்தில் உள்ள வழிபாட்டு இல்லத்திற்கான இடம், ஒரு வளமான பள்ளத்தாக்கின் ஓரத்திலிருந்து கொங்கோ நதியை நோக்கியவாறு அமைந்துள்ளது.

கேப் டௌன், தென் ஆப்பிரிக்காவிலுள்ள வொல்ஃப் கட்டிடக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட வடிவமைப்பு, பாரம்பரிய கலைகள், கட்டமைப்புகள், இயற்கை அம்சங்கள் பஹாய் புனித போதனைகளினால், குறிப்பாக கடவுளின் அருட்கொடை எல்லா மக்களின் மீதும் அயராமல் பாய்ந்து கொண்டிருக்கின்றது எனும் ஆன்மீக கோட்பாட்டினால் உத்வேகம் பெற்றதாகும்.

கின்ஷாஷாவின் வெளிப்புறத்தில் உள்ள வழிபாட்டு இல்லத்திற்கான இடம், ஒரு வளமான பள்ளத்தாக்கின் ஓரத்திலிருந்து கொங்கோ நதியை நோக்கியவாறு அமைந்துள்ளது.  அதன் துணைநதிகள் நாட்டின் எல்லா பாகங்களிலிருந்தும் மழைநீரைச் சேகரித்து ஒரே பெரும் நதியாக விளங்கும் இந்த ஆறு, கோவிலின் வடிவமைப்பில் பிரதிபலிக்கப்படும் எல்லா மக்களும் ஒன்றாக வருவது எனும் ஓர் ஆற்றல்மிக்க உருவகத்தை வழங்குகின்றது.  மத்திய கட்டமைப்பின் குவிமாடத்தின் வெளிப்புறத்தை அலங்கரிக்கவிருக்கும் வடிவங்கள், பல்வேறு கொங்கோலிய மக்களின் கலைப்படைப்புகளை நினைவுகூரும் ஒரு பாணியில் இந்த யோசனையை வெளிப்படுத்தும். 

கொங்கோ ஜனநாயக குடியரசில் கட்டப்படவிருக்கும் தேசிய வழிபாட்டு இல்லத்தின் உள்புற வடிவத்தின் காட்சி.

வடிவமைப்பு குறித்து கட்டிடக்கலைஞர்கள் பின்வருமாறு விமர்சிக்கின்றனர்: “நாங்கள் 19’ஆம் நூற்றாண்டு கொங்கோலிய கட்டிடக்கலை சார்ந்த ஓர் உருவகத்தினால் உத்வேகம் பெற்றோம். அது பனை ஓலைகளால் செய்யப்பட்ட ஒரு பரவளைய கூரையுடன் கூடிய நுணுக்கமாக நெய்யப்பட்ட மூங்கில் முகப்புகளை கொண்டதாக இருக்கும் மிக அழகான கட்டமைப்புகளைக் காட்டியது. இந்த வீடுகள் இராட்சச பாவோபாப் மரங்களுக்கிடையில் அமைந்திருந்தன. கோவில் கூறையின் அலைஅலையான அமைப்பு இந்த வரலாற்றைக் குறிப்பிடுகின்றது.

கின்ஷாஷாவிலிருந்து கொங்கோ ஆற்றின் ஒரு காட்சி. அதன் துணைநதிகள் நாட்டின் எல்லா பாகங்களிலிருந்தும் மழைநீரைச் சேகரித்து ஒரே பெரும் நதியாக விளங்கும் இந்த ஆறு, கோவிலின் வடிவமைப்பில் பிரதிபலிக்கப்படும் எல்லா மக்களும் ஒன்றாக வருவது எனும் ஓர் ஆற்றல்மிக்க உருவகத்தை வழங்குகின்றது.  மத்திய கட்டமைப்பின் குவிமாடத்தின் வெளிப்புறத்தை அலங்கரிக்கவிருக்கும் வடிவங்கள், பல்வேறு கொங்கோலிய மக்களின் கலைப்படைப்புகளை நினைவுகூரும் ஒரு பாணியில் இந்த யோசனையை வெளிப்படுத்தும். 

வழிபாட்டு இல்லமானது, கொங்கோ பஹாய்களினால் பல தசாப்தங்களாகப் பேணப்பட்ட துடிப்பான பக்தி உணர்விற்கு உருவங்கொடுக்கும். நாட்டில், எல்லா வயது, சமயங்கள் சார்ந்த சுமார் 200,000 மக்களுக்கும் மேற்பட்டு, தங்கள் அண்டைப்புறங்களிலும் கிராமங்களிலும் பஹாய் வழிபாட்டு ஒன்றுகூடல்களில் பங்கேற்கின்றனர். தற்போதைய முடக்க நடவடிக்கைகளுக்கு இடையிலும், அரசாங்கத்தினால் செயல்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும் அதே வேளை இந்த வழிபாடு சார்ந்த வாழ்க்கையின் தீவிரம் அதிகரிப்பே கண்டுள்ளது.  

தற்போதைய சுகாதார நெருக்கடிக்கு முன்னதாக எடுக்கப்பட்ட படங்கள். தேசிய வழிபாட்டு இல்லமானது, கொங்கோ பஹாய்களினால் பல தசாப்தங்களாகப் பேணப்பட்ட துடிப்பான பக்தி உணர்விற்கு உருவங்கொடுக்கும். நாட்டில், எல்லா வயது, சமயங்கள் சார்ந்த சுமார் 200,000 மக்களுக்கும் மேற்பட்டு, தங்கள் அண்டைப்புறங்களிலும் கிராமங்களிலும் பஹாய் வழிபாட்டு ஒன்றுகூடல்களில் வாடிக்கையாகப் பங்கேற்கின்றனர்.

இந்த அனுபவங்களின் மீது பிரதிபலித்த திரு முத்தோம்போ, “எல்லா சமயம் சார்ந்த சமூக்தினரும் பஹாய் வழிபாட்டுக் கூட்டங்களுக்கு வருகின்றனர். வந்து, நமது சமுதாயத்தின் தேவைகள் குறித்து பிரதிபலித்து, தோழமையில் வளர்ச்சி காண்கின்றனர்.

“வழிபாட்டு இல்லம் ஒவ்வொரு திசையையும் எதிர்நோக்கும் ஒன்பது கதவுகளுடன் கட்டப்பட்டு அனைத்து மக்களுக்கும் திறந்திருக்கும், இது பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்ற கொள்கையை தினசரி யதார்த்தமாக மாற்ற அனுமதிக்கிறது. சமீபத்திய காலங்களில் உலகம் மிக மோசமான நெருக்கடிகளில் ஒன்றைக் கடந்து செல்லும் இந்த தருணத்தில், இந்த ஆலயத்தின் தோற்றம் நம்பிக்கையைத் தூண்டுவதிலும் அனைவரையும் செயல்பட ஊக்குவிப்பதிலும் பிரார்த்தனை வகிக்கும் முக்கிய பங்கைக் குறிக்கிறது.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1438/