கல்வியின் மூலம் தப்பெண்ணங்களை அகற்றுவது


bnshead
நியூ டெல்லி, ஜூன் 12, 2019, (BWNS) -சமீபத்தில் பஹாய் உலக செய்தி சேவை, எப்படி கல்வி செயல்முறை மனித ஆத்துமா மற்றும் மனதில் மறைந்திருக்கும் சாத்தியங்கள் எவ்வாறு சமுதாய மாற்றத்தை கொண்டுவரும் என்பதையும் முக்கியமாக இதில் பெண்களைப் பற்றிய நீண்டகால சமுதாய பாரபட்சங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளிருந்து மீளமுடியும் என்பதையும் விவாதித்தது.

சென்னையைச் சார்ந்த திருமதி பாவ்னா அன்பரசனும் (இடம்) புது டில்லியைச் சார்ந்த பூஜா திவாரியும் மாதவிடாய் சார்ந்த அறிவியல் மற்றும் ஆன்மீக புரிதல் குறித்து ஒரு விழிப்புணர்வு பரப்பியக்கத்தை ஏற்பாடு செய்த இளம் பெண்கள் குழுமத்தைப் பற்றி பஹாய் உலக செய்தி சேவையுடன் உரையாடினர்.

இந்தியாவில் உள்ள பெண்கள், சமூகத்தில் தங்கள் முழு பங்களிப்பைத் தடுக்கக்கூடிய உணர்ச்சிப்பிணைப்பு மற்றும் பாரபட்சங்களைத் தாண்டி வருகின்றனர். மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்களுக்கு ஒரு வித்தியாசமான அணுகுமுறையை அமல் படுத்த, இந்தியாவில் நியூ டெல்லி பகுதியில் உள்ள ஒரு இளம் பெண் குழு, உதவ முன்வந்திருக்கின்றனர்.

சென்னையைச் சார்ந்த திருமதி பாவ்னா அன்பரசனும் (இடம்) புது டில்லியைச் சார்ந்த பூஜா திவாரியும் மாதவிடாய் சார்ந்த அறிவியல் மற்றும் ஆன்மீக புரிதல் குறித்து ஒரு விழிப்புணர்வு பரப்பியக்கத்தை ஏற்பாடு செய்த இளம் பெண்கள் குழுமத்தைப் பற்றி பஹாய் உலக செய்தி சேவையுடன் உரையாடினர்.

பெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் “தூய்மையற்றவள்” எனக் கருதி சமூக வாழ்வில் ஈடுபாடு இல்லாத வகையில் தள்ளிவைக்க படுகிறார்கள் என சமுதாய நடவடிக்கை (பி.எஸ்.ஏ) திட்டத்தின்  உதவியாளர் பூஜா திவாரி கூரினார். இந்த கலாச்சார அம்சம் உண்மையில் விஞ்ஞான ரீதியிலோ அல்லது ஆன்மீக ரீதியிலோ எந்த அடிப்படையையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், உள்ளூர் மக்களின் பெரும்பாலோரின் மனதில் வேரூன்றியுள்ளது. “இது குறித்து விவாதிக்கும் போது, குழுவின் உறுப்பினர் ஒருவர்,‘ இந்த நாட்களில், நாங்கள் கோவிலுக்கு செல்ல முடியாது.  எதையும் தொட முடியாது. நாங்கள் படுக்கையில் தூங்க முடியாது, மாறாக தரையில் தூங்க வேண்டும், ”என்று திருமதி திவாரி விளக்குகினார்.

விஞ்ஞானமும் ஆன்மீக நம்பிக்கை அடிப்படையாகவும், மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு திட்டத்தை ஏற்பாடு செய்ய இந்த குழு முடிவு செய்தது.

மாதவிடாய் சுழற்சியின் பின்னால் உள்ள விஞ்ஞானத்தைப் பற்றிய ஆய்வுக்குப் பிறகு, அது “ஒரு மனிதனின் பிறப்புக்கு மிகவும் முக்கியமானது என்று இந்ந குழு உணர்ந்தது. திருமதி திவாரி விளக்குகிறார், “இந்த கருத்து கொண்டு வரப்பட்ட காரணம் இந்த நாட்களில், நாம் பெண்களை மதிக்க வேண்டும், மேலும் மாதவிடாய் காலத்தின் போது ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு தேவைப்படுகிறது” என திருமதி திவாரி விளக்குகிறார்.

ஆபிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் பசிபிக் நாடுகள் உள்பட 17 நாடுகளில் செயல்படுத்தப்படும் பஹாய்-ஊக்கம் திட்டமாக PSA உள்ளது.

இளைஞர்கள் தங்கள் சமூகங்களின் நல்வாழ்வின்  ஊக்குவிப்பவர்களாக ஆவதற்கு, அறிவியல் மற்றும் ஆன்மீக திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விசேஷ ஒன்றுகூடல், பிப்ரவரி மாதத்தில் பஹாய் உலக நிலையத்திலுள்ள அனைத்துலக போதனை மைய கட்டிடத்தில் நடைபெற்றது.

ஆசியாவின் கண்ட வாரிய  உறுப்பினரான பாவ்னா அன்பரசன் அளித்த பேட்டியில் திருமதி திவாரி இணைந்துள்ளார். திருமதி திவாரி மற்றும் திருமதி. அன்பரசன் அவர்கள் பிப்ரவரி மாதத்தில் பஹாய் உலக மையத்தில் இருந்தபோது  செய்தி சேவை மூலம் பேசினர். உலகெங்கிலும் உள்ள எட்டு ஆன்மீக சபைகளை பிரதிநிதித்து  30 பேர் கொண்ட குழுவில் அவர்கள் இருந்தனர். இங்கு ஒரு வலுவான பஹாய் கல்வி மற்றும் சமூக நிர்மாணிப்பு செயல்முறை ஆயிரக்கணக்கான அல்லது பல்லாயிரக்கணக்கான மக்களை ஈடுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த முயற்சிகளின் சாரம், மனிதகுலத்தின் ஒற்றுமை, விஞ்ஞானம் மற்றும் மதத்தின் நல்லிணக்கம் மற்றும் பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் போன்ற அடிப்படை பஹாய் கொள்கைகளைப் பயன்படுத்துவதன் மூலம் சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான உள்ளூர் மக்கள்தொகை முயற்சித்து கொண்டிருக்கிறது.

இந்த விசேஷ ஒன்றுகூடல், பிப்ரவரி மாதத்தில் பஹாய் உலக நிலையத்திலுள்ள அனைத்துலக போதனை மைய கட்டிடத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தூண்டக்கூடிய உரையாடல்கள் பல தசாப்தங்களாக நீடிக்கும் செயல்முறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதில் அனைத்து மட்டங்களிலும் உள்ள பஹாய் சமூகங்கள், அதாவது அடிமட்டத்திலிருந்து உலக அளவுவரை, சமூகத்தை உருவாக்கும் முயற்சிகளில் இருந்து எழும் அனுபவங்களையும் நுண்ணறிவுகளையும் பகிர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை  உருவாக்கி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள மக்கள் மனிதகுலத்தின் எதிர்காலத்துடன் தொடர்புடைய ஆழமான நுண்ணறிவுகளை எவ்வாறு பகிர்ந்துகொள்கின்றனர் என்பதை இந்த கூட்டம் நிரூபித்தது. ஒரு குறிப்பிட்ட உயரடுக்கினருடன் மட்டுப்படுத்தப்படுவதை விட, அறிவின் முன்னேற்றம் ஒவ்வொரு மனிதனுடையக உரிமை மற்றும் பொறுப்பு என்பதையும் இது காட்டுகிறது.