பாலம் அமைத்தல்: ஐக்கிய அமெரிக்காவில் இன சமத்துவம் பற்றி ‘பெற்றோர் பல்கலைக்கழகம்’8 அக்டோபர் 2021


ஐக்கிய அமெரிக்காவில் உள்ள பஹாய் ஊக்கம் பெற்ற அமைப்பான பெற்றோர் பல்கலைக்கழகம், இன தப்பெண்ணம் குறித்து நாட்டில் தற்போது பரவலான விழிப்புணர்வு நிலவும் ஒரு தருணத்தில், ஜோர்ஜியாவின் சவன்னாவில் இன சமத்துவத்தை ஊக்குவிக்கும் பல தசாப்த கால அனுபவத்தைப் பயன்படுத்தி வருகிறது.  சமத்துவம் மற்றும் நீதி தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்கு ஆக்கபூர்வமான இணைய கலந்துரையாடல் தளங்களை ஏற்பாடு  செய்வதன் மூலம் சமூக உறுப்பினர்களுக்கும் நகரத்தலைவருக்கும் மற்றும் காவல்துறைத் தலைவர் உட்பட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்த அமைப்பு பாலம் அமைத்து வருகிறது.

ஜோர்ஜியாவின் சவன்னாவில் உள்ள பஹாய் ஊக்கம் பெற்ற பெற்றோர் பல்கலைக்கழகம் சமத்துவம் நீதி தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்கு ஆக்கபூர்வமான இணைய கலந்துரையாடல் தளங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் சமூக உறுப்பினர்களுக்கும் நகரத்தலைவருக்கும் மற்றும் காவல்துறைத் தலைவர் உட்பட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்த அமைப்பு பாலம் அமைப்பதற்கு இன சமத்துவத்தை ஊக்குவிக்கும் தனது பல தசாப்த கால அனுபவத்தைப் பயன்படுத்திவருகிறது.

சவன்னாவின் கல்வி அமைப்பில் இன ஏற்றத்தாழ்வுகள் குறித்த பதற்றத்தின் மற்றொரு தருணத்தில், முட்டுக்கட்டைக்கு வழிவகுத்த எதிர்ப்பு மனப்பான்மைக்குப் பதிலாக நாம் பஹாய் கலந்தாலோசனை கொள்கையைப் பயன்படுத்தக்கூடிய ஒரு சூழலில், பெற்றோர், நகரம் மற்றும் பள்ளி அதிகாரிகள் மற்றும் பிற சமூக உறுப்பினர்களை ஒரு கற்றல் சூழலில் இணைக்கும் ஒரு வழியாக, பெற்றோர் பல்கலைக்கழகம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. இத்தகைய கூட்டங்களில், நடவடிக்கை குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக சமூகத்தின் பல்வேறு உறுப்பினர்களின் முன்னோக்குகள் கேட்கப்படுகின்றன.

பெற்றோர் பல்கலைக்கழகம், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து ஆலோசிக்க அனுமதிக்கும் கல்வித் திட்டங்களை, பெரும்பாலும் பள்ளி நிர்வாகம் மற்றும் நகராட்சி அரசாங்கத்தின் பங்களிப்புடன் இப்போது நடத்தி வருகிறது.

தொற்றுநோய் நெருக்கடிக்கு முன் எடுக்கப்பட்ட படம்.  பஹாய் கலந்தாலோசனை கோட்பாட்டின் அடிப்படையில் பெற்றோர் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்படும் கலந்துரையாடல்களின் மூலம், செயல்பாட்டில் இணக்கம் அடைவதற்கு ஏதுவாக சமூகத்தின் பல்வேறு உறுப்பினர்களின் முன்னோக்குகள் செவிமடுக்ப்படுகின்றன.

ஆப்பிரிக்க-அமெரிக்க குடிமக்கள் மீதான பொலிஸ் வன்முறை தொடர்பாக நாடு முழுவதும் அமைதியின்மை வெடித்த சில நாட்களில், இந்த அமைப்பு சவன்னாவின் காவல்துறைத் தலைவரை பொது உறுப்பினர்களுடன் ஆன்லைன் கலந்துரையாடலுக்கு அழைத்தது. சமூக உறுப்பினர்களின் கவலைகள் அதிகாரிகளால் பகிர்ந்து கொள்ளப்பட்டன என்பதை ஒப்புக்கொள்வது ஆக்கபூர்வமான உரையாடல் நடைபெற தேவையான பரஸ்பர புரிந்துணர்வை உருவாக்க உதவியது. “நான் பார்ப்பதைக் கண்டு நான் திகைத்துப் போகிறேன்,” என்று காவல்துறைத் தலைவர் ராய் மினெட்டர் கூறினார். “நான் இந்த சீருடையை வேலை செய்ய அணிந்திருக்கிறேன், ஆனால் நான் ஒவ்வொரு நாளும் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்க ஆணாக வாழ்கிறேன், எனவே நான் எங்கிருந்து வந்தேன் என்பதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன், நான் கடந்து வந்ததை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் …”

ஆப்பிரிக்க-அமெரிக்க குடிமக்கள் மீதான போலீஸ் வன்முறை தொடர்பாக நாடு முழுவதும் அமைதியின்மை வெடித்த சில நாட்களில், இந்த அமைப்பு பொது உறுப்பினர்களுடன் இணையதள கலந்துரையாடலுக்கு சவன்னாவின் காவல்துறைத் தலைவரை அழைத்தது. சமூக உறுப்பினர்களின் கவலைகள் அதிகாரிகளால் பகிர்ந்து கொள்ளப்பட்டன என்பதை ஒப்புக்கொள்வதானது ஆக்கபூர்வமான உரையாடல் நடைபெற தேவையான பரஸ்பர புரிந்துணர்வை உருவாக்க உதவியது. “நடப்பதைக் கண்டு நான் திடுக்கிட்டுள்ளேன்,” என்று காவல்துறைத் தலைவர் ராய் மினெட்டர் கூறினார். “என் வேலைக்காக நான் இந்த சீருடையை அணிந்திருக்கிறேன், ஆனால் நான் ஒவ்வொரு நாளும் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்க ஆணாகத்தான் வாழ்கிறேன், ஆதலால் நான் எங்கிருந்து வந்தேன் என்பதை என்னால் ஒருபோதும் மறக்க முடியவில்லை, நான் கடந்து வந்ததை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் …”

அடுத்தடுத்து நிகழ்ந்த உரையாடல்கள் பொதுப் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்துவதில் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிடையே பகிரப்பட்ட பொது நோக்க உணர்வை பலப்படுத்தியுள்ளன.

தற்போதைய தொற்றுநோய் நெருக்கடிக்கு முன் எடுக்கப்பட்ட படம். தங்களின் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பற்றி கிரமமாக கலந்தாலோசிக்க பெற்றோரையும் ஆசிரியர்களையும் அனுமதிக்கும் கல்வியல் திட்டங்களை பேற்றோர் பல்கலைக்கழகம் நடத்தி வருகின்றது.

அரிதாகவே பரஸ்பரமாக செயல்படும், பெற்றோருக்கும் உள்ளூர் ஸ்தாபனங்களுக்கும் இடையிலும் அதே வேளை சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கிடையில் நெருக்கமான ஈடுபாட்டை ஏற்படுத்துவதில் பெற்றோர் பல்கலைக்கழகம் வகிக்கும் முக்கிய பங்கை மேயரும் காவல்துறைத் தலைவரும் எடுத்துரைத்தனர். “இதுபோன்ற அழைப்பில் இருப்பது போன்றும், அதே வேளை நம் சமூகங்களில் உள்ள இளைஞர்களுடனும் உறவுகளை மேம்படுத்துவதற்கு பல வழிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது முக்கியம், என்று காவல்துறைத் தலைமை மினிஸ்டர் கூறினார்.

எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து, திரு. ஓ’நீல் வெவ்வேறு சமூக நடவடிக்கையாளர்களுக்கிடையிலான உறவுகளில் தேவைப்படும் தன்மைமாற்றத்தைப் பற்றி பேசினார். “மோதல் மற்றும் எதிர்ப்பின் அணுகுமுறைகள் நாம் எவ்வாறு இனவாதத்திலிருந்து விடுபடுவோம் என்பதற்கு உதவாது. மனிதகுலத்தின் ஒற்றுமையை உணர்ந்து கொள்வதன் அடிப்படையில் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் சமூக ஸ்தாபனங்களுக்கு இடையே நாம் உடனுழைத்தலான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1446/

தன்னிறைவைப் பேணுதல்: உள்ளூர் உணவு உற்பத்தியை ஃபன்டேக் (FUNDAEC) ஊக்குவிக்கின்றது


குடும்பங்கள் ஒன்றாகச் செயல்படுவதைப் படங்கள் காண்பிக்கின்றன. தொற்றுநோயானது நீண்டகால தாக்கங்களைக் கொண்டிருக்கும் என்பதைக் கண்டுணர்ந்த ஒரு பஹாய் ஊக்கம் பெற்ற அமைப்பான ஃபன்டேக் (FUNDAEC), தற்போது நிலவும் மிகவும் மோசமான நிலையில் சமுதாயத்திற்கு தன்னால் என்ன நடைமுறையான சேவையைச் செய்திட இயலும் என்பதைப் பற்றி சிந்தித்தது.  கடந்த மார்ச் முதல், 1500’க்கும் மேற்பட்ட மக்கள் சுமார் 800 விவசாய முன்முனைவுகளில் ஈடுபடுவதற்கு அது உதவியுள்ளது.

தன்னிறைவைப் பேணுதல்: உள்ளூர் உணவு உற்பத்தியை ஃபன்டேக் (FUNDAEC) ஊக்குவிக்கின்றது


8 அக்டோபர் 2021


காலி, கொலம்பியா – கொலம்பியாவில் தொற்றுநோய் பரவியதால், வாழ்க்கையின் பல அம்சங்களைப் பற்றிய நிச்சயமற்ற நிலைமைகள் விரைவாக உருவாகின. நாட்டின் பஹாய் ஊக்கம் பெற்ற அமைப்பான FUNDAEC, நெருக்கடியினால் நீண்டகால பாதிப்புகள் இருக்கும் என்பதை உணர்ந்து, அது எவ்வாறு மிகுந்த தேவைகள் நிலவும் இந்த நேரத்தில் சமூகத்திற்கு நடைமுறையான சேவையை வழங்கிடக்கூடும் என்பதைப் பற்றி சிந்தித்தது.

ஃபன்டேக்’கின் நிர்வாக இயக்குநரான லெஸ்லி ஸ்டூவர்ட், உள்ளூர் உணவு உற்பத்தி முன்முனைவுகளுக்கு ஆதரவளிப்பதன்பால் அந்த அமைப்பு அதன் கவனத்தை எப்படி மிக விரைவாக திருப்பியது என்பதை விளக்கினார். நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது; ஒரு கோடி மக்களுக்கும் மேல் வேலையில்லாமல் இருக்கின்றனர்.

“சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அபிவிருத்தியைக் குறிக்கோளாகக் கொண்ட எங்களின் பல்வேறு கல்வியல் திட்டங்களின் ஓர் அம்சமாக உணவு உற்பத்தி உள்ளது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து உணவு உற்பத்தியைக் குறிக்கோளாகக் கொண்ட முன்முனைவுகளை ஆதரிக்கும் நான்கு பரந்த துறைகளில் ஃபன்டேக் கவனம் செலுத்தி வந்துள்ளது: வீட்டுத் தோட்டங்கள், பெரிய விவசாய நிலங்களின் சாகுபடி, உணவு உற்பத்தி செயல்முறை ஆகியவற்றுடன் விநியோகம் மற்றும் வணிகமயமாக்கல்.

FUNDAEC (Fundación para la Aplicación y Enseñanza de las Ciencias) எனும் அமைப்பு, கொலம்பியாவில் 1974’இல் நிறுவப்பட்டது, மேலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சமூகங்களின் நல்வாழ்வுக்கு பங்களிக்கும் வகையில் அவர்களில் திறனாற்றலை வளர்ப்பதற்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளது.  இந்த மிகச் சமீபத்திய முயற்சியில், இணைய பணிமனைகளை உருவாக்குவதற்கு, உணவு உற்பத்தித் துறையில் அதன் பல தசாப்த கால அனுபவம், ஆராய்ச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தி, விவசாயத்தின் வெவ்வேறு அம்சங்களைப் பற்றி, உதாரணத்திற்கு விதைகளைத் தேர்வு செய்வது, பூமியின் ஆரோக்கியம், பூச்சிகள் மற்றும் நோய் நிர்வாகம், அறுவடை ஆகியவற்றை மக்கள் கற்றுக்கொள்வதற்கு உதவியது.

பெரிகோ நெக்ரோ, கௌகா, கொலம்பியாவில் உள்ள கிராமப்புற நல்வாவுக்கான பல்கலைக்கழக மையத்தின் இடம் ஒன்றில் நடுவதற்காக மக்காசோள விதைகளைத் தேர்ந்தெடுப்பது.

அபிவிருத்தி குறித்த ஃபன்டேக்கின் அணுகுமுறையானது, அறிவியல் மற்றும் சமயத்திற்கிடையிலான நல்லிணக்கம், மனிதகுல ஒருமை, சமுதாயத்திற்கான தன்னலமற்ற சேவை ஆகிய பஹாய் கோட்பாடுகளின் ஊக்கம் பெற்றதாகும். லௌகீக மற்றும் ஆன்மீக பரிமாணம் சார்ந்த சமுதாய முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதற்கான எங்களின் முயற்சியில் அறிவியலுக்கும் சமயத்திற்கும் இடையில் கலந்துரையாடலுக்கான ஒரு தேவை உள்ளதென நாங்கள் நம்புகின்றோம். நாகரிக நிர்மாணிப்பில் விவசாயம் ஒரு முக்கிய பங்காற்றுகின்றது. அது சமூக வாழ்வு குறித்த செயல்முறைகளுக்கு முக்கியமாகும், மற்றும் அறிவியல், சமயம் இரண்டிலும் காணப்படும் நுண்ணறிவுகளின் பயனை அது பெற வேண்டும்.  

“இருப்பினும், விவசாய அமைப்புகளின் வளர்ச்சியை வழிநடத்தும் லௌகீகவாதம், அனைவருக்கும் செழிப்பைக் கொண்டுவர முடியவில்லை, மேலும் உணவுப் பிரச்சினை அந்த விவாதத்திற்கான மையமாகி வருகிறது. வளர்ச்சியையும் உணவு உற்பத்தியையும் நாம் புரிந்துகொள்ளும் விதத்திற்கு ஆன்மீகக் கொள்கைகள் எவ்வாறு உதவ முடியும்? எடுத்துக்காட்டாக, விவசாய நடைமுறைகள் நேர்மை மற்றும் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து முயற்சிகள் பணிவு மற்றும் மதிப்புணர்வுடன் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

“கொலம்பியாவின் கோர்டோபாவில் உள்ள புவேர்ட்டோ யூஜெனியோவில் உள்ள ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் தங்கள் சமூகத்தின் மற்ற உறுப்பினர்களோடு, சமுதாய செயல்பாட்டுத் திட்டத்திற்கான ஆயத்தத்தின் ஒரு பகுதியாக FUNDAEC உபகரணங்களைப் படிக்கும் இளைஞர்களின் குழுவின் உதவியுடன் சேர்ந்து ஆரம்பித்த ஒரு “சமூக கற்றல் நிலத்தில்” பயிர்களை பயிரிடுகின்றனர்.

மத்திய கொலம்பியாவின் ஐப்பே’யில், ஒரு சிறிய மக்கள் குழுமம், பஹாய் உள்ளூர் ஆன்மீக சபையுடன் உடனுழைத்து ஒரு சிறிய பண்ணையைத் தொடங்கினர். மேயரின் அலுவலகம் மற்றும் ஒரு உள்ளூர் வேளாண் விஞ்ஞானியுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டதால், இந்த முயற்சி நியமிக்கப்பட்ட நிலத்தைச் சுற்றியுள்ள சுமார் 13 குடும்பங்களுக்கு தங்களின் சொந்த தோட்டங்களைத் தொடங்க உத்வேகமளித்து, 70’க்கும் மேற்பட்டவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படக்கூடிய ஒரு முதல் அறுவடைக்கு வழிவகுத்தது. இதையொட்டி அறுவடையிலிருந்து பயனடைந்த நபர்கள் அந்த முயற்சிகளின்பால் ஈர்க்கப்பட்டு, ஆரோக்கியமான, உயிர்மான மற்றும் நியாயமான முறையில் விநியோகிக்கப்படும் உணவு மூலம் தங்கள் சமூகத்திற்கு சேவை செய்வதில் ஓர் உயர்ந்த நோக்கத்தைக் கண்டறிந்துள்ளனர்.

FUNDAEC’இன் திட்டங்களின் ஒருங்கிணைப்பாளரான எவர் ரிவேரா கூறுகையில், “மக்கள் தங்கள் சமூகங்களுக்கான உணவை உற்பத்தி செய்வதில் உள்ள உதாரணம் தொற்றிக்கொள்வதாகும். “இதற்கு முன் உணவை உற்பத்தி செய்யாத நபர்களுக்கு அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் முன்மாதிரியும் ஆதரவும் துணையும் உண்டு. அண்டையர்களுக்கிடையிலான அன்றாட உரையாடல்கள் கூட உணவு உற்பத்தி குறித்த உள்ளூர் அறிவை உருவாக்குகின்றன.”

கொலம்பியாவின் லா குஜிராவில் உள்ள ரியோஹாச்சாவில் உள்ள ஒரு குடும்பம் 40 சதுர மீட்டர் பரப்பளவில் பல வகையான பயிர்களை நடவு செய்துள்ளது. இயற்கை உரங்களுடன் மண்ணை வளப்படுத்தவும், பயிரைப் பாதுகாப்பதற்காக ஒரு உயிரியல் கட்டுப்பாடாக நறுமண உயிரினங்களை பயிரிடவும் கற்றுக்கொண்ட குடும்பம் இப்போது அவர்களின் முயற்சிகளின் பலனை அறுவடை செய்து வருகிறது.

துச்சின்’னில் உணவு உற்பத்தி முன்முனைவுகளின் பங்கேற்பாளர்களுள் ஒருவரான அரெலிஸ், மக்கள் தங்களைச் சுற்றியுள்ள நிலத்தின் மீது இப்போது எவ்வாறு வேறு வகையில் தொடர்பு கொள்ள ஆரம்பித்துள்ளனர் என்பதைக் கண்டு வியப்படைந்துள்ளார். அவர் கூறுகிறார், “குடும்பங்கள் தாங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் இடங்களில் உணவு உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்பதை உணர்ந்து ஊக்கமடைந்துள்ளனர். மேலும், நெருக்கடி தருணங்களின் போது என்ன நேர்மறையான விஷங்கள் ஏற்படக்கூடும் என்பதையும் மக்கள் கண்டிருக்கிறார்கள்.”

ஐப்பி’யைச் சேர்ந்த யெஸ்னேயர் தனது ஊரில் விவசாய கலாச்சாரம் கிடையாது எனவும், உணவு பொதுவாக கிராமப்புறங்களிலிருந்து எவ்வாறு இறக்குமதி செய்யப்படுகிறது என்பதையும் விளக்குகிறார். இருப்பினும், FUNDAEC’இன் இணைய பயிற்சிகள் மக்கள் தங்கள் நிலத்தை வித்தியாசமாகக் கண்ணுறு உதவுகின்றன. “மண் உள்ள எந்தவொரு நிலத்திலும் விதைகளை நடவு செய்வதற்கான இயலாற்றலை நாங்கள் உணர்ந்துள்ளோம்!”

கொலம்பியாவின் கௌகாவின் வில்லா ரிகாவில் உள்ள ஒரு குடும்பம், காய்கறிகள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை தங்கள் மொட்டை மாடியில் வளர்ப்பதற்காக, மறுசுழற்சி செய்யப்பட்ட கொள்கலன்களைப் பயன்படுத்துகிறது. வெவ்வேறு தோட்ட தாவரங்கள் தேனீக்களை ஈர்க்கவும் அதே சமயம் பூச்சிகளை விரட்டவும் உதவுகின்றன. அவர்கள் தங்கள் அறுவடையை பிற நான்கு குடும்பங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளதுடன், தங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு தங்கள் சொந்த வீடுகளில் தாவரங்களை வளர்ப்பதற்கும் உதவிவருகின்றனர்.

பட்டறைகளுக்கு மேலதிகமாக, FUNDAEC நாடு முழுவதும் பங்கேற்பாளர்களை உள்ளூர் முன்முயற்சிகளிலிருந்து உருவாக்கப்படும் அறிவு வளர்ச்சியுடன் இணைக்கின்ற, மாத சஞ்சிகை ஒன்றைத் தயாரித்து விநியோகித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அரசாங்க அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடையே விவசாயம் குறித்த சொற்பொழிவுக்கும் இந்த அமைப்பு பங்களிக்கிறது. “இது, ஆழ்ந்த பாரம்பரிய அறிவைக் கொண்ட விவசாயிக்கும் நவீன அறிவியலின் சிறந்த நடைமுறைகளைக் கொண்டுவரும் வேளாண் அறிவியல் மாணவருக்கும் இடையில் ஓர் உரையாடலைத் ஆரம்பிப்பது பற்றியதாகும்” என்று திருமதி ஸ்டீவர்ட் கூறுகிறார். “இந்த உரையாடல் ஒருபுறம், கடந்த காலங்களின் ‘எளிமையான வழியை’ தேவையில்லாமல் ஒரு காவியமாக்குதலையும், மறுபுறம், நவீன தொழில்நுட்பங்களை ஆராயாமல் ஏற்றுக்கொள்வதையும் தவிர்க்கிறது. அதற்கு பதிலாக, விவசாயியின் ஆழ்ந்த மரபுகளையும் ஆன்மீகக் கொள்கைகளையும் ஒன்றிணைக்கும் ஒரு மாற்று அமைப்பை உருவாக்க இது அனுமதிக்கிறது-இயற்கைக்கு நன்றி செலுத்துவதுடன்,  நவீன வேளாண்மையின் நுண்ணறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளுடன் எதிர்கால தலைமுறையினருக்காக நிலத்துடனான ஒருவரின் உறவின் தாக்கத்தை புரிந்துகொள்வது.

கொலம்பியாவின், கௌகா, புவெர்ட்டோ தேஜாடாவில், உள்ள ஒரு குடும்பம், தங்களுக்கு இருந்த குறுகிய இடத்தை மூலிகைகளையும் காய்கறிகளையும் வளர்ப்பதற்கு சுவற்றில் தொங்கவிடப்பட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட கொள்கலன்களைப் பயன்படுத்தியது.

தொற்றுநோயின் ஆரம்பத்திலிருந்து நாடு முழுவதும் 1,500 க்கும் மேற்பட்ட மக்கள் இப்போது FUNDAEC’ஆல் வழிநடத்தப்பட்ட கிட்டத்தட்ட 800 விவசாய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சிகளிலின் ஆரம்ப அறுவடைகளைப் பற்றி பிரதிபலிக்கும் திருமதி ஸ்டீவர்ட் இவ்வாறு கூறுகிறார்:

அறுவரை நேரம் ஒரு விசேஷமான நேரம். இது பிரதிபலிப்பைத் தூண்டுகிறது மற்றும் தாவரங்கள் வளர்வதைப் போலவே, நாமும் மக்களாகவும் ஒரு சமூகமாகவும் நம் திறன்களில் வளர்கிறோம் என்பதை மக்கள் மதித்துணர அது வகை செய்கிறது. இந்த முயற்சிக்கு குறிப்பிட்ட சில ஆன்மீகப் பண்புகள் இன்றியமையாதவை என்பதை பங்கேற்பாளர்கள் உணர்கின்றனர். நெருக்கடி நேர தேவைகளின்போது, விரைவான கூட்டு பிரதிசெயலுக்கு ஒற்றுமை அவசியம். விதைக்கப்பட்ட விதைகள் முளைவிடும் என்பதில் நம்பிக்கை கொள்வதற்கு சமயநம்பிக்கை அவசியம். தாவரங்கள் வளர்ந்து மேம்பாடு காண காத்திருப்பதற்கும், அதன்போது நிகழக்கூடிய பின்னடைவுகளை எதிர்கொள்வதற்கு பொறுமை அவசியம்.  அன்றாட பணிகளை மேற்கொள்வதற்கு அன்பு, விடாமுயற்சி மற்றும் தளரா ஊக்கம் தேவை.

“இந்தக் காலம், பூமியைக் கவனித்து பாதுகாப்பதன் மூலம் அதன்” தாராளத்தன்மைக்கு “நன்றி செலுத்துவதற்கான ஒரு காலமாகும்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1445/

“நகரங்களை நிர்மாணிக்க பாடுபடுவோருக்கும் நகரங்களைச் சொந்தமாக்குதல்”: இந்தியாவின் பஹாய் இருக்கை நகரமயமாதலை கவனிக்கின்றது.


“நகரங்களை நிர்மாணிக்க பாடுபடுவோருக்கும் நகரங்களைச் சொந்தமாக்குதல்”: இந்தியாவின் பஹாய் இருக்கை நகரமயமாதலை கவனிக்கின்றது.


8 அக்டோபர் 2021


இந்தூர், இந்தியா – இந்திய நகர்களில் முறைசாரா பொருளாதாரத்தில் பயன்படுத்தப்படும் கோடி கணக்கான மக்களில், தொற்றுநோயின் காரணமாக மில்லியன் கணக்கானோர் தங்களின் கிராமங்களுக்குத் திரும்பிச் சென்றுள்ளனர். இந்த செக்டரில் பணிபுரியும் மக்களின் – இவர்களுள் பலர் சமுதாய பாதுகாப்பின்றி தற்காலிக நகர்ப்புற குடியிருப்புகளில் வாழ்கின்றனர் — மிகவும் நிச்சயமற்ற நிலை குறித்து இந்த வெகுஜன புலம்பெயர்வு பொதுமக்களுள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி படிப்பாய்வின் பஹாய் இருக்கை, மனித இயல்பு குறித்த – ஒவ்வொரு மனிதனிலும் மேன்மையைக் காணுகின்ற, அவர்கள் ஒவ்வொருவரையும் தப்பெண்ணம், தந்தை சுபாவம் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்திடும் — ஒரு புதிய கருக்கோளை ஊக்குவித்திட குறிக்கோள் கொண்டுள்ளது.

இந்தூரில் உள்ள தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி படிப்பாய்வுக்கான பஹாய் இருக்கை, அபிவிருத்தி சிந்தனைக்கான நீண்டகால அணுகுமுறையை ஊக்குவிப்பதில் இந்தக் காலகட்டம் குறிப்பான முக்கியத்துவமுடையதாகும்.  “நகரங்களை நிர்மாணிக்க பாடுபடுவோருக்கே அவற்றை உடைமையாக்குதல்” எனும் தலைப்பிலான இணையதள ஒன்றுகூடல் வரிசையில் பொருளாதார நிபுணர்களையும் கல்வியாளர்களையும் பஹாய் இருக்கை ஒன்றுகூட்டியது.  

பஹாய் இருக்கையின் தலைவரும், துணை பேராசிரியருமான அராஷ் ஃபஸ்லி, மனித இயல்பின்—ஒவ்வொரு மனிதனிலும் மேன்மையைக் காணுகின்ற, அவர்கள் ஒவ்வொருவரையும் தப்பெண்ணம் மற்றும் தந்தை சுபாவத்திலிருந்து (paternalism) பாதுகாத்திடும்– ஒரு புதிய கருக்கோள் அபிவிருத்தி குறித்த எந்த கலந்துரையாடலுக்கும் எவ்வாறு இன்றியமையாததாக இருக்கின்றது என்பதை விளக்குகின்றார்.

“நகர்ப்புற ஏழ்மையில் வாழும், குறிப்பாக கிராமப்புறங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்துள்ளோர், ஒடுக்குதலுக்கு உட்பட்ட, பலவிதமான தேவைகளைக் கொண்ட, அல்லது உழைத்தலுக்கான ஒரு மூலாதாரமாக மட்டும் இருக்கும், ஒரு பரிதாபத்திற்குரிய கூட்டமாக பெரும்பாலும் பேசப்படுகின்றனர். இருப்பினும், ஒடுக்குதல் நிறைந்த அவர்களின் சூழ்நிலையை வைத்து அவர்களை வரையறுப்பது அவர்களுக்கு அவர்களின் முழு மனிதத்தன்மையையே மறுப்பதாகும்.

“நமது நகரங்கள் மிகவும் நிலையான, வளமான, அமைதியான எதிர்காலத்தை நோக்கி முன்னேற முதலில் ஒவ்வொரு மனிதனினிலும் உள்ளார்ந்த மேன்மை அங்கீகரிக்கப்பட வேண்டும். தற்காலிக குடியேற்றங்களில் வசிப்பவர்கள் மோசமான சூழ்நிலைகளின் எதிரில் அவர்களுக்கு மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் மீளுந்திறனை அளிக்கின்ற படைப்பாற்றல் மற்றும் புத்தி கூர்மை, வலுவான சமூகப் பிணைப்புகள் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகள் ஆகியவற்றின் மூலம் அர்த்தமுள்ள மற்றும் உற்பத்தி நிறைந்த வாழ்க்கையை நடத்துகிறார்கள்.”

இந்தூரில் உள்ள தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி படிப்பாய்வுக்கான பஹாய் இருக்கை, அபிவிருத்தி சிந்தனைக்கான நீண்டகால அணுகுமுறையை ஊக்குவிப்பதில் இந்தக் காலகட்டத்தைக் குறிப்பான முக்கியத்துவமுடையதாக கருதுகின்றது. ஒதுக்கப்பட்ட மக்கள் மீது தொற்றுநோயின் பாதிப்புகளை ஆராய்ந்திட “நகரங்களை நிர்மாணிக்க பாடுபடுவோருக்கே அவற்றை உடைமையாக்குதல்” எனும் தலைப்பிலான இணையதள ஒன்றுகூடல் வரிசையில் பொருளாதார நிபுணர்களையும் கல்வியாளர்களையும் பஹாய் இருக்கை ஒன்றுகூட்டியது.

அபிவிருத்தித் துறையில் இடைநிலை ஆராய்ச்சி மற்றும் புலமையை மேம்படுத்துவதற்காக, மனித செழிப்பானது லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தின் விளைவாகக் கருதும் ஒரு கண்ணோட்டத்தில் பஹாய் இருக்கை ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்தாபிக்கப்பட்டது.  இருக்கை நடத்திய மிகச் சமீபத்திய கூட்டத்தில், பங்கேற்பாளர்கள் நகர்ப்புற வளர்ச்சி எவ்வாறு ஒதுக்கப்பட்ட மக்களை எவ்வாறு உள்ளடக்கிட முடியும் என்பதை ஆராய்ந்தனர்.

டெல்லியின் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் பார்த்தா முகோபாத்யாய் புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்புவதற்கான பல்வேறு காரணங்களைப் பற்றி பேசினார். “அவர்கள் தங்கள் குடும்பத்தை ஆதரிப்பதற்காக நகரத்திற்கு வந்துள்ளனர், கடினமான காலங்களில் கிராமத்தில் தங்கியிருப்பவர்களை கவனித்துக்கொள்வது தங்களின் பொறுப்பு என்று அவர்கள் உணர்கிறார்கள். அதே சமயம், அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்கள் நகரத்தில் கவனித்துக் கொள்ளப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. … இந்த இரண்டு நிலைகளிலும், [புலம்பெயர்ந்தோர்] அவர்கள் முழு வேலை வாழ்க்கையையும் அங்கேயே கழித்திருந்தாலும் அவர்கள் இன்னும் நகரத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை நாம் உணர்கிறோம்.”

பிரிட்டனின் பாத் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி அறிஞரும், இந்திய பஹாய் சமூகத்தின் உறுப்பினருமான கரோலின் கஸ்டர் பாஸ்லி, கூட்டத்தில், இந்தியாவின் இந்தூரில் முறைசாரா குடியேற்றங்கள் குறித்த ஆராய்ச்சி, குடியிருப்பாளர்களின் கலாச்சாரத்தின் பெரும்பாலும் அடையாளம் காணப்படாமல் போகும் வளமான கூறுகளை எடுத்துக்காட்டுகிறது என்று கூறினார்.

ஒதுக்கப்பட்ட மக்கள் தங்களைத் தாங்களே வாதிட அனுமதிக்கும் கட்டமைப்புகளின் அவசியத்தையும் விவாதங்கள் எடுத்துரைத்தன. புது டில்லியின் நகர்ப்புற ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த சித்தார்த் அகர்வால், அதிகாரிகளுடன் “மென்மையான ஆனால் விடாமுயற்சியான பேச்சுவார்த்தை” மூலம் அவர்களின் சமூகங்களின் தேவைகளை மதிப்பிடவும், அவர்களின் உரிமைகளை நிலைநிறுத்தவும் கூடிய பெண்கள் குழுக்களின் உருவாக்கம் உட்பட தமது அமைப்பின் அனுபவத்தில் வெளிவந்த சமூக ஒற்றுமையின் பல உத்திகளைப் பற்றி  பேசினார்.

பெங்களூரில் உள்ள அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான வந்தனா சுவாமி, “நகரங்கள் ஏழைகளுக்காக ஒருபோதும் கட்டப்படவில்லை” என்றும், நகர்ப்புறங்கள் வறுமையில் வாடும் மக்களின் இருப்பைக் கண்ணுக்குத் தெரியாத நிலையில் வைத்திருக்க முயற்சிக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

புது டில்லியின் நகர்ப்புற ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த சித்தார்த் அகர்வால், அதிகாரிகளுடன் “மென்மையான ஆனால் விடாமுயற்சியான பேச்சுவார்த்தை” மூலம் அவர்களின் சமூகங்களின் தேவைகளை மதிப்பிடவும், அவர்களின் உரிமைகளை நிலைநிறுத்தவும் கூடிய பெண்கள் குழுக்களின் உருவாக்கம் உட்பட தமது அமைப்பின் அனுபவத்தில் வெளிவந்த சமூக ஒற்றுமையின் பல உத்திகளைப் பற்றி பேசினார்.

கருத்தரங்கைப் பிரதிபலிப்பதில், பஹாய் போதனைகளால் ஊக்குவிக்கப்பட்ட கருத்துக்கள் எவ்வாறு வளர்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு விளக்கமளிக்க முடியும் என்பதை டாக்டர் பாஸ்லி விளக்குகிறார். “நகர்ப்புற வளர்ச்சி மற்றும் கொள்கையை செயல்படுத்துவது பற்றிய புதிய வழிகளை அனுமதிக்கும் புதிய மொழி மற்றும் கருத்தாக்கங்களை வழங்குவதே இந்த உரையாடல்களின் நீண்டகால நோக்கமாகும்.

“பொருள் வளங்களை அணுகுவதற்கான கண்ணோட்டத்திலேயே இந்த விஷயத்தைக் கருதுவதற்கான பொதுவான வழிகள் உள்ளன. வறுமையில் வாடுவோருக்குப் பொருள் வசதிகள் கிடையாது என்பது உண்மையே என்றாலும், அவர்கள் அர்த்தமும் குறிக்கோளும் மிக்க வாழ்க்கை வாழ்கிறார்கள். சமூக முன்னேற்றத்திற்கு ஒரு லௌகீக மற்றும் ஆன்மீக பரிமாணம் இருப்பதை நாம் உணரும்போது, நகரத்தின் அனைத்து மக்களையும் ஒட்டுமொத்த லௌகீக மற்றும் ஆன்மீக செழிப்புக்கு சாத்தியங்கள் மிக்க பங்களிப்பாளர்களாக பார்க்க ஆரம்பிக்கிறோம்.

“வறுமை என்பது ஒரு பெரிய அநீதியாகும், அது முறைமையுடன் கவனிக்கப்பட வேண்டும். ஆனால் நல்ல நோக்கங் கொண்ட வளர்ச்சி தலையீடுகள் கூட வறுமையில் வாழும் மக்களைப் பற்றிய தந்தை சுபாவ அனுமானங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும் போது, அவை சார்புமை, சுரண்டல் மற்றும் மனக்கசப்பை உருவாக்குகின்றன என்பதை அனுபவம் காட்டுகிறது. இறுதியில், மக்கள் தங்கள் சொந்த வளர்ச்சியில் தாங்களே முதன்மையாளர்களாக மாறும் போதும், கூட்டு சமூக முன்னேற்றத்திற்கான பொதுவான குறிக்கோள்களை அடைய சமூகத்தில் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற உதவப்படும் போதும் மட்டுமே அபிவிருத்தியானது நீடித்த பலன்களைத் தரும். இந்த செயல்முறைக்குப் பங்களிக்கும் ஒவ்வொருவரிடமும் உள்ள திறனைக் கண்ணுற, பொருள்சார்ந்த சிந்தனையின் கட்டமைப்பிற்கு அப்பால் சென்று மக்களின் தார்மீக மற்றும் ஆன்மீக திறன்கள் கண்ணுறப்பட வேண்டும்.”

கருத்தரங்கின் பதிவு இங்கு காணப்படும்

மூலாதாரம்: https://news.bahai.org/story/1444/