இளைஞர்: சமுதாய தன்மைமாற்றத்தில் இளைஞர்களின் இன்றியமையா பங்கினை BIC எடுத்துக்காட்டுகின்றது.


29 மார்ச் 2024

BIC பிரஸ்ஸல்ஸ் – பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரஸ்ஸல்ஸ் அலுவலகம் (BIC) சமூக முன்னேற்றத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

‘ஓர் ஐரோப்பிய ஒன்றிய இளைஞர் யுக்தி: சில பரிசீலனைகள்’ என்னும் தலைப்பில் அறிக்கை, கல்வியின் பங்கு மற்றும் நோக்கத்தை விரிவுபடுத்துதல், சமூக வாழ்க்கையை வலுப்படுத்துதல், தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகளைப் பேணி வளர்த்தல் மற்றும் முக்கியத்துவம் மிக்க முடிவெடுக்கும் செயல்முறைகளை உருவாக்குவதில் பங்கேற்றலைச் செயல்படுத்துவதன் மூலம் மாற்றத்திற்கான ஊக்கியாக இளைஞர்களின் திறனைப் பேணி வளர்ப்பதற்கான வழிகளைப் பற்றி சிந்திக்க அழைப்பு விடுக்கிறது.

இந்த அறிக்கை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உறுப்பு நாடுகளின் அதிகாரிகளுக்கும், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் கல்வியாளர்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. மற்றும் இந்த அறிக்கை இளைஞர் கொள்கைக்குப் பொறுப்பான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் உள்ள கலந்துரையாடல்களுக்கு தகவலூட்ட முயல்கிறது. அறிக்கையின் வெளியீடு பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய இளைஞர் வியூகத்தின் (2019 – 2027) நடுப்பகுதியைக் குறிக்கும் ஒரு முக்கிய சந்திப்புக்கு இணைவாக வருகின்றது.

பிரஸ்ஸல்ஸ் அலுவலகத்தின் பிரதிநிதியான ரேச்சல் பயானி, பஹாய் உலகச் செய்திச் சேவையுடன் பேசினார்: “இன்றைய சவால்களை எதிர்கொள்ள இளைஞர்களுக்கு தனித்துவமான திறன் உள்ளது. ஏனெனில், அவர்கள் யார், உலகில் தங்களின் இடம் என்ன என்பதைப் பற்றிய அடிப்படைக் கேள்விகளை அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்கின்றனர்.”

அவர் மேலும் கூறினார்: “குறிப்பாக அவர்களின் கல்விப் பயணத்தில், ஊக்குவிக்கப்பட்டும் உடன்வரும் போதும், கேள்வி கேட்கும் அத்தருணம் அவர்கள் தங்கள் சமுதாயத்தை மறுபரிசீலனை செய்யும் திறனை அவர்களுக்கு அளிக்கின்றது.”

தனிநபர் மேம்பாடு, கூட்டு நலன் ஆகிய இரண்டிற்கும் தங்கள் திறமைகளை வழிப்படுத்த இளம் தனிநபர்களுக்கு சக்தியூட்டுவதில் கல்வியின் தன்மைமாற்றும் திறனை அவர் வலியுறுத்தினார்.

சமுதாயத்திற்குச் சேவை செய்யும் திறனை உருவாக்கும் பஹாய் கல்வித் திட்டங்களின் அனுபவங்களில் இருந்து உத்வேகம் பெறும் இந்த அறிக்கை, தன்னலம் என்னும் கண்ணிடியின் வழி இன்றி சமுதாய நல்வாழ்வுக்கு பங்களிக்கும் சக்திவாய்ந்த ஒரு வழிமுறையாக, இளைஞர்கள் அர்த்தமுள்ள பணியில் ஈடுபடுவதைக் காண தூண்டுவதில் கல்வி முறைமைகளின் பங்கை கற்பனை செய்கிறது.

இது சமுதாயத் தேவைகள் பற்றிய பகுப்பாய்வு சிந்தனையைப் பேணி வளர்க்கும், தார்மீகப் பொறுப்புணர்வைத் தூண்டும் மற்றும் சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்ய இளைஞர்களுக்கு அவர்களின் அறிவைப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டும் கல்வி முறைமைகளை உள்ளடக்கியதாகும்.

பல்வேறு குழுக்களிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பைப் பேணி வளர்ப்பதில் இளைஞர்களின் ஈடுசெய்ய முடியாத பங்கை BIC எடுத்துக்காட்டி, மனிதநேய ஒருமைப்பாட்டின் அடிப்படையில், இளைஞர்கள் அடித்தட்டு மட்டத்தில் புதிய, உள்ளடக்கிய உறவுகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை வழிநடத்தும் திறன் கொண்டவர்கள் என கூறுகிறது.

இந்த அறிக்கையை இங்கு பார்க்கலாம். அது BIC-யின் பல்வேறு பரிமாணங்களிலான சமுதாய மேம்பாடு பற்றிய சொல்லாடலுக்குப் பங்களிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் மீது கட்டமைக்கின்றது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1723/

உரையாடலில்: உலகின் மேம்பாட்டிற்கு பஹாய் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்புகளை ஆராய்தல்


22 மார்ச் 2024

பஹாய் உலக மையம் – பஹாய் உலக செய்தி சேவையின் இந்த போட்காஸ்ட் அத்தியாயம் பல தசாப்தங்களாக பஹாய் அனைத்துலக சமூகத்தின் (BIC) வரலாறு மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆராய்வதுடன், அதன் தற்போதைய பணி மற்றும் எதிர்காலம் மற்றும் மனிதகுலத்தின் நல்வாழ்வு பற்றிய சொல்லாடல்களுக்கான பங்களிப்புகளையும் ஆராய்கிறது.

இந்த அத்தியாயத்தின் விருந்தினர்களுள் அடிஸ் அபாபா, பிரஸ்ஸல்ஸ், கெய்ரோ, ஜெனிவா மற்றும் நியூயார்க் உட்பட சில (பஹாய் அனைத்துலக சமூகம்) BIC அலுவலகங்களின் பிரதிநிதிகளும் அடங்குவர். அவர்களின் கதைகள் பல்வேறு அனைத்துலக மன்றங்களில் மனிதகுல ஒருமைப்பாடு குறித்த கோட்பாட்டை மேம்படுத்துவதில் BIC-யின் கடப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன.

போட்காஸ்ட் குறிப்பிடத்தக்க உலகளாவிய மாநாடுகளுக்கு BIC-யின் சில பங்களிப்புகள் மற்றும் கடந்த தசாப்தங்களில் சமூக மேம்பாடு, பெண்கள் முன்னேற்றம், பருவநிலை மாற்றம், நிர்வாகம் மற்றும் ஐ.நா. சீர்திருத்தம், அத்துடன் மனித உரிமைகள் உள்ளிட்ட பல துறைகளில் சிந்தனை மேம்பாட்டிற்குப் பங்களிக்க பல்வேறு ஐக்கிய நாடுகளின் செயலாண்மைகளுடனான அதன் ஒத்துழைப்பை ஆராய்கிறது.

BIC பிரதிநிதிகள், அனைத்துலக மன்றங்களில் கலந்துரையாடல்களுக்கான BIC-யின் பங்களிப்புகள், அமைதியான, துடிப்பான சமூகங்களைப் பேணி வளர்ப்பதில் உலகளாவிய பஹாய் சமூகம் பெற்ற அனுபவத்திலிருந்து எவ்வாறு பயன் பெறுகின்றன என்பதை விவரிக்கின்றனர். அவர்களுடைய சமூகத்தின் தேவைகளுடன் இணக்கமாகவும் பொது நலனுக்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க ஆற்றலளிக்கப்பட்டும் உள்ள ஒரு புதிய தலைமுறையைப் பேணி வளர்க்கின்ற தார்மீகக் கல்விக்கான திட்டங்கள் போன்ற அடித்தட்டு முன்முயற்சிகளைப் பற்றி அவர்கள் விவாதிக்கின்றனர்

பருவநிலை மாற்றம் மற்றும் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் அவசியம் போன்ற உலகளாவிய சவால்களின் பரஸ்பரமான தொடர்பைப் பற்றி விவாதிப்பதில், போட்காஸ்ட் கூட்டு நடவடிக்கைக்கான அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.நா.வின் எதிர்கால உச்சி மாநாடு உட்பட எதிர்கால நடவடிக்கைகளின் செல்திசையை கலந்துரையாடல் சுட்டிக்காட்டுகிறது. இதில் பங்கேற்பாளர்கள் சமகால சவால்களை எதிர்கொள்வதில் அனைத்துலக கட்டமைப்புகளின் பங்கைப் பற்றி சிந்திப்பார்கள். அத்தியாயத்தின் முடிவு கருத்துக்களில், ஐக்கிய நாடுகள் சபைக்கான BIC-யின் முதன்மைப் பிரதிநிதியான பானி டுகால் கூறுகிறார்: “இந்தக் கற்பனைக்கு அப்பாற்பட்ட போர் மற்றும் மோதலை நாம் தொடரலாம், அல்லது கலந்தாலோசனையின் மூலம் ஒன்றாக அமர்ந்து நமக்கு அமைதி வேண்டும் என்னும்  ஒரு முடிவுக்கும் வரலாம். நமக்கு அந்த அரசியல் சித்தம் தேவை, அத்துடன் மானிடம் எழுந்து நின்று, ‘எங்களுக்கு இப்போது அமைதி வேண்டும்’ என சொல்ல வேண்டும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1722/

சில்லி பஹாய் வானொலி: மாபுச்சே கலாச்சாரத்தின் தேசிய ஒலி காப்பகம் உயிர் பெறுகிறது


14 மார்ச் 2024

லாப்ரான்ஸா, சிலி – சில்லியின் லாப்ரான்ஸாவில் உள்ள மபூச்சே-பாரம்பரியம் நிறைந்த சமூகங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள ரேடியோ பஹாய், கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒலியின் மூலம் இணைக்கும் ஒரு அசாதாரண பயணத்தை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த வானொலி நிலையத்தின் தேசிய காப்பகத் திட்டம், பல தசாப்தங்களாக ஒலிப்பதிவுகளை மபூச்சே சமூகத்தின் உணர்வை பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கை களஞ்சியமாக மாற்றியுள்ளது.

“காப்பகம் (இனப்)பாதுகாப்பிற்கு அப்பாற்பட்டது” என திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் நபில் ரோட்ரிக்ஸ் கூறினார். “இது தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பஹாய் போதனைகளில் காணப்படும் ஆன்மீகக் கொள்கைகளுடன் மூதாதையரின் அறிவை ஒத்திசைக்கிறது,.”

“வால்மாபுவின் வாய்வழி பாரம்பரியம்: ரேடியோ பஹாயின் மாபுச்சே ஒலிக் காப்பகத்தின் அடையாளம், இருப்பு மற்றும் நினைவகம்” என்னும் தலைப்பில் இந்தக் காப்பகம், சிலி அரசாங்கத்தின் கலாச்சார பாரம்பரியத்திற்கான தேசிய சேவையுடன் இணைந்து ஸ்தாபிக்கப்பட்டது.

பகிரப்பட்ட அடையாளத்தின் மூலம் குரல்களை ஒத்திசைத்தல்

நவம்பர் 12, 1986 அன்று, பஹாவுல்லாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், ரேடியோ பஹாய் அதன் தொடக்க ஒளிபரப்பை ஆரம்பித்தது.

“உள்ளூர் சமூகங்களின் ஆன்மீக மற்றும் லௌகீக அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய, குறிப்பாக சில்லி நாட்டின் பழங்குடி மக்களில் மிகப் பெரிய பழங்குடி மக்களான மாபுச்சே மக்களின் ஆன்மீக மற்றும் லௌகீக அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய இந்த நிலையம் நிறுவப்பட்டது, ,” என திரு. ரோட்ரிக்ஸ் கூறினார்.

அவர் நிலையத்தின் ஆரம்பத்தைப் பற்றி நினைவு கூர்ந்தார்: ” இசை, கதைகள் மற்றும் உரையாடல்கள் மூலம் இந்த அபிலாஷைகள் செழிக்கக்கூடிய ஒரு புதிய தளம் உருவானது.”

திரு. ரோட்ரிக்ஸ் மேலும் கூறுகையில், நிலையத்தின் திட்டங்களுக்கு அடிப்படையான கொள்கைகளில் வேற்றுமையில் ஒற்றுமை உள்ளது. “நமது பன்முகத்தன்மையில், நாம் அனைவரும் ஒரே மனித குடும்பத்தின் உறுப்பினர்கள் என்னும் பகிரப்பட்ட அடையாளத்தைக் கொண்டுள்ளோம் என்பதை ஒளிபரப்புகள் ஆராய்ந்தன.”

தொடக்கத்திலிருந்தே, ரேடியோ பஹாய் ஸ்பானிய மொழியிலும் மாபுடுங்குன் மொழியிலும்– விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற கருப்பொருள்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இந்த முன்முயற்சியானது சமூகங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், தனிப்பட்ட மற்றும் தொழில்முறைத் துறைகளில் ஆன்மீகத்தை வளர்க்கவும், பரந்த அளவிலான நலன்களைப் பூர்த்தி செய்யவும் அனுமதித்துள்ளது.

“உலகெங்கிலும் உள்ள பிற பஹாய் வானொலி முயற்சிகளின் கருத்துக்களைப் பயன்படுத்தி, உள்ளூர் சமூகங்களில் வசிப்பவர்களால் உள்ளடக்கம் வடிவமைக்கப்பட்டது” என திரு. ரோட்ரிக்ஸ் கூறினார்.

அவர் தொடர்ந்து, “இந்த அணுகுமுறை, நிரலாக்கம் உள்நாட்டில் எதிரொலிக்கும் மற்றும் உலகளாவிய முன்னோக்கினால் செழுமைப்படுத்தப்படுவதை உறுதி செய்தது.”

ரேடியோ பஹாய்யின் ஒருங்கிணைப்பாளரும், மபுச்சே சமூகத்தின் உறுப்பினருமான அலெக்ஸ் கால்ஃபுகியோ, இந்த முயற்சியை வடிவமைப்பதில் மாபூச்சேயின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். “கியூவுன் அல்லது பரஸ்பர ஆதரவு என்னும் ஆவி, நாங்கள் எவ்வாறு செயல்பட்டு வருகிறோம் என்பதுடன் ஒருங்கிணைந்ததாக உள்ளது–பாரம்பரிய ஞானத்தைப் பகிர்ந்துகொள்தல், சமூக நிகழ்வுகளைப் பற்றி அறிக்கை செய்தல் மற்றும் கதை சொல்லும் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருத்தல் ஆகியவற்றில்,” என அவர் கூறினார்.

ரேடியோ பஹாயின் முயற்சிகளின் விரிவாக்கத்தை திரு. கால்ஃபுகியோ விவரித்தார், இந்த விரிவாக்கம் சமூகத்துடன் உருவாகி வரும் நிலையத்தின் ஈடுபாட்டுடன் இதை இணைக்கிறது. “ஆரம்பத்தில், எங்கள் ஒளிபரப்பு 5 முதல் 6 மணிநேரம் வரை இருந்தது. நாங்கள் அதிக இருமொழி உள்ளடக்கத்தை உருவாக்கியதால், எங்கள் ஒளிபரப்பு நேரத்தை தினசரி 16 மணிநேரமாக நீட்டிக்க முடிந்தது, விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முழு குடும்பங்கள் உட்பட பரந்த கிராமப்புற பார்வையாளர்களை ஒலிபரப்பு சென்றடைகிறது,” என அவர் விளக்கினார்.

எதிர்காலத்திற்காக காப்பகப்படுத்துதல்

ரேடியோ பஹாய்யின் ஆரம்ப நாட்களில் ஈடுபட்டவர்களின் அர்ப்பணிப்பான முயற்சிகள் பல தசாப்தங்களுக்குப் பிறகு ஓர் ஆழமான முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்திற்கான– குறிப்பிடத்தக்க கலாச்சார மதிப்புடைய தேசிய ஒலி காப்பகத்திற்கான–அடித்தளத்தை ஸ்தாபித்தது.

திரு. கால்ஃபுகியோ, 3,400 அட்டவணைப்படுத்தப்பட்ட ஆடியோ பதிவுகளுடன் கூடிய விரிவான தரவுத்தளத்தை விவரித்து, காப்பகத்தின் அளவைப் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டினார். இந்த பதிவுகள் சுமார் 120 மணிநேர மாபுச்சே சமூகத்தின் மதிப்புமிக்க கலாச்சார வெளிப்பாடுகள் ஆகும்.

அவர் மேலும் கூறியதாவது: “இது மாபுச்சே இசை மற்றும் கலாச்சார வெளிப்பாடுகள் நிறைந்த அதன் வகையான, மிக விரிவான தொகுப்புகளில் ஒன்றாக வெளிப்பட்டுள்ளது.

“பல வருட அர்ப்பணிப்புப் பணியின் மூலம் உருவாக்கப்பட்ட காப்பகம், மனிதகுலத்தின் பல்வேறு பாரம்பரியத்தை வளப்படுத்த உதவுகிறது.”

அனலாக் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதில் உதவிய ஒரு இசையமைப்பாளரான கேத்தரின் ஜமோரா, அட்டவணையிடல் செயல்பாட்டில் மாபுச்சே சமூகத்தின் நேரடி ஈடுபாடு, முயற்சியின் கூட்டு நெறிமுறையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, “ஒரு ஆராய்ச்சியாளராக, இந்த காப்பகத்தை நிறுவுவதில் பஹாய் மற்றும் மப்புச்சே சமூகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஒரு முன்னோடியாக  நான் கண்டேன்.”

பட்டியலிடுதல் செயல்முறை, டாக்டர். ஜமோரா எடுத்துக்காட்டியது போன்று, மாபுச்சே சமூகத்தை உள்ளடக்கியது மட்டுமின்றி, அதன் சில வகையான சமூக அமைப்புகளாலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. “பொருட்கள் பெயரிடப்பட்ட விதம்–தனிநபர், அவர்களின் குடும்பம் மற்றும் பிற விவரங்களுக்கிடையில் பிறந்த இடம் ஆகியவற்றைக் குறிப்பிடுவது–மபூச்சேயின் பெண்டுகுனைப் பிரதிபலிக்கிறது,” என அவர் விளக்கினார்.

பென்டுகுன் என்பது மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்தவும், அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், சமூகப் பிணைப்புகளைப் பேணவும் ஒரு முறையான அறிமுகமாகும். ஆவணக் காப்பகத்தில் உள்ள இந்த அணுகுமுறை பொருட்களை ஒழுங்கமைப்பதற்கும் அதிகமாக செய்கிறது – இது மாபுச்சேயின் ஆழமான உடனிருத்தல் உணர்வு மற்றும் பரஸ்பரமாக ஒருவர் மற்றவருடன் இணைக்கப்பட்டிருத்தல்.

டாக்டர். ஜமோரா மேலும் கூறியதாவது, “காப்பகத்தை ஸ்தாபிப்பதற்கான உடனுழைப்பு பகிரப்பட்ட உரிமை உணர்வை வளர்த்துள்ளது.” “சிலியில் உள்ள மாபுச்சே மக்களின் வாய்வழி மரபுகளின் மிகப்பெரிய களஞ்சியத்திற்கு” அனைவரும் சமமாக பங்களிக்கும் கூட்டாண்மையை வளர்ப்பதற்கு திட்டத்தின் அணுகுமுறை வழக்கமான உரிப்பொருள்-பார்வையாளர் இயக்கவியலை மீறிய ஒன்றாகும் என அவர் விளக்கினார்.

மாபுச்சே பத்திரிகையாளரும் ஆவணக்காப்பாளருமான நேக்குல்மான நூஞ்செஸ் குறிப்பிட்டது போன்று, இந்தக் காப்பகம் மாபுச்சே கலாச்சாரத்திற்கு ஒரு தனித்துவமான சாளரத்தை ஒலி மூலம் வழங்குவது மட்டுமின்றி, எழுதப்பட்ட இலக்கியம் மற்றும் ஆவணங்களின் பரந்த வரலாற்று சூழலுடன் அதை இணைக்கிறது.

“1600-களில் இருந்து பல வரலாற்று ஆவணங்கள் இருந்தாலும், ரேடியோ பஹாய் மூலம் இந்த நூற்றாண்டிலிருந்து நினைவாற்றல், வாய்வழி பாரம்பரியம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றை உள்ளடக்கிய நமது பாரம்பரியத்தின் உயிருள்ள பரிமாணத்தை நாம் அணுகுகின்றோம்” என திருமதி நூஞ்செஸ் விளக்குகிறார்.

மாபுச்சே மொழியின் புத்துயிர்ப்பு

அதன் தொடக்கத்திலிருந்தே, ரேடியோ பஹாய் ஏற்கனவே பேசுபவர்களின் வீழ்ச்சியை அனுபவித்து வரும் மாபுடுங்குன் மொழியின் ஆபத்தான நிலையை அங்கீகரித்தது. இது பல ஆண்டுகளாக நிலையத்தின் ஒளிபரப்புகளின் நோக்கங்களில் பிணைக்கப்பட்ட அர்ப்பணிப்பைத் தூண்டியது மற்றும் இப்போது காப்பக முயற்சியின் இதயத்திலும் உள்ளது.

“இந்த முயற்சிகள் நமது மொழி புத்துயிர் பெறுவதற்கும் நமது பாரம்பரிய அறிவைப் பாதுகாப்பதற்கும் பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன” என திரு. கால்ஃபுகியோ எடுத்துரைத்தார்.

வானொலி நிலையத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ராபர்டோ ஜாரா மேலும் கூறியதாவது, “மாபுச்சே கலாச்சார மொழிவுகளைக் கொண்டாடுவதில் காப்பகம் முக்கிய பங்கு வகிக்கிறது.”

உள்ளூர் வானொலி நிலைய இயக்குநரான நெஸ்டர் சாவேஸ், மாபுச்சேயின் மொழியியல் பாரம்பரியத்தைப் பேணி வளர்ப்பதில் ரேடியோ பஹாய் ஆற்றிய பங்கிற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். “மபுடுங்குன் புத்துயிர் பெற பஹாய் வானொலியின் முயற்சிகள் வெறும் ஒலிகளைப் பாதுகாப்பதற்கும் அப்பாற்பட்டவை.

“இந்தத் திட்டம், பூர்வீகப் பாரம்பரியத்தைப் பேணி வளர்ப்பது தேசிய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையாக மாறியுள்ள நேரத்தில், ஒரு வளமான கலாச்சாரம் மற்றும் அதன் வரலாற்றில் நம்மை உட்பொதிக்க அனுமதிக்கிறது,” என அவர் கூறினார்.

சில்லி பஹாய்களின் தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினரான ஃபெலிப் டுஹார்ட், சமூக மேம்பாட்டிற்குப் பங்களிப்பதில் தேசிய காப்பகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். “வரலாற்று சவால்களை முறியடித்து, அவர்களின் மூதாதையர் பாரம்பரியம் மற்றும் வேறுபாடுகளை கடந்து ஒரு பொதுவான மனித அடையாளம் ஆகிய இரண்டிலும் வேரூன்றிய எதிர்காலத்தை உருவாக்க முயலும் ஒரு சமூகத்திற்கு இந்த முயற்சி நம்பிக்கையின் ஆதாரமாக உள்ளது,” என அவர் கூறினார்.

ஒற்றுமையை ஊக்குவிப்பதில் ரேடியோ பஹாயின் தொடரும் பங்கு

பல ஆண்டுகளாக, வானொலி நிலையம் சமூக வாழ்வின் ஓர் அங்கமாக மாறியுள்ளது, அப்பகுதியில் உள்ள சமூகங்களின் பக்தி உணர்விற்குப், பங்களிப்பதுடன் சமூகத்திற்கான சேவையை மேம்படுத்துகிறது.

சிலியின் சாண்டியாகோவில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தில் இருந்து ஒளிபரப்பப்படும் சில நிகழ்ச்சிகள் உட்பட, காலை பிரார்த்தனைகளுக்கான நிகழ்ச்சிகளை வானொலி நிலையம் எவ்வாறு கொண்டுள்ளது என்பதை திரு. கால்ஃபுகியோ விவரித்தார். “இவை உன்னதமான யோசனைகளின் மூலம் மக்களை ஊக்குவிப்பதுடன் அவர்கள் தங்கள் சமூகத்திற்கு எவ்வாறு சேவை செய்ய விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்கவும் உதவுகின்றன,” என அவர் கூறினார்.

மாபுச்சே சமூகத்தைச் சேர்ந்த ஜோஸ் டோரோ கரிகியோ, தனது வாழ்க்கையில் வானொலி நிலையத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். “என் பெரியம்மா வானொலியை செவிமடுத்தார், பின்னர் என் அம்மா, இப்போது நாங்கள் அந்த பாரம்பரியத்தை ஒவ்வொரு நாளும் பின்பற்றுகிறோம்.

“வானொலியை செவிமடுப்பது மிகவும் அழகான ஒன்றாக இருக்கின்றது, ஏனெனில் இது பல மக்களுக்கு ஒற்றுமையின் சக்திவாய்ந்த செய்தியைக் கொண்டுள்ளது.”

மாபுச்சே சமூகத்தின் மற்றொரு உறுப்பினரான அரோரா காயுமான், தனது நம்பிக்கை மிக்க கண்ணோட்டத்தைப் பகிர்ந்துகொண்டார், “ரேடியோ பஹாய் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது, பஹாய் போதனைகளின் நுண்ணறிவுகளை எங்கள் சொந்த மொழியான மபுடுங்குனுடன் எங்களின் கலாச்சார மற்றும் ஆன்மீக வேர்களுடன் எங்களை ஆழமாக இணைக்கிறது..”

பல வருடகாலமான ரேடியோ பஹாயின் முயற்சிகளிலிருந்து சில காட்சிகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

லாப்ரான்ஸாவில் ரேடியோ பஹாய் நிலையத்தின் பிரதான கட்டுமாானம்
ரேடியோ பஹாய் வளாகத்தில் தன்னார்வலர்களுக்கான ஒரு பட்டறையில் கலந்து கொள்ள இளைஞர்கள் கூடினர்.
1986 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெற்ற வானொலி நிலையத்தின் தொடக்க விழா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை ஒன்றுதிரட்டியது.
இடதுபுறம்: சுற்றியுள்ள சமூகங்களில் உள்ள செய்திகளை அறிவிக்கும் நிலையத்தின் தன்னார்வலர்கள். வலது: இருமொழித் திட்டங்களைத் தயாரிப்பதில் உதவிய மொழிபெயர்ப்பாளர்களின் குழு.
டாக்டர். ஜமோரா தேசிய காப்பகத்திற்கான அனலோக் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பட்டியல்படுத்துதல்.
நான்கு தசாப்தங்களாக கைப்பற்றப்பட்ட ஒலிப்பதிவுகளின் பரந்த தொகுப்பைக் காப்பகம் கொண்டுள்ளது.
சாச்சே மானுவல் லெவிபில் என்பவரால் இயற்றப்பட்ட மனிதநேயத்தின் ஒருமைப்பாடு என்னும் பஹாய் கொள்கை பற்றிய ஒரு மபூச்சே பாடல்.
சில்லி, சாண்டியாகோவில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கு வருகை தரும் மாபூச்சே சமூகத்தின் உறுப்பினர்கள்.
சிலி கோவில் மனிதகுலத்தின் ஒருமைப்பாட்டின் அடையாளமாக உள்ளது, பிரார்த்தனை செய்யவும், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அவர்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் பற்றி சிந்திக்கவும் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைக்கின்றது.
இசை நிகழ்ச்சிகளுடன் நிலையத்தின் 30வது ஆண்டு விழா கொண்டாட்டம்.
ஒலி காப்பகத்தில் இசை, கதைசொல்லல் மற்றும் உரையாடல்கள் மூலம் நான்கு தசாப்தங்களான மாபுச்சே கலாச்சாரத்தின் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1721/

உரையாடலில்: போட்காஸ்ட் பஹாய் படிப்பாய்வுகளின் மூலம் கூட்டு விசாரனையை (inquiry) ஆராய்கிறது


3 மார்ச் 2024

பஹாய் உலக மையம் – பஹாய் உலக செய்தி சேவையின் இந்த போட்காஸ்ட் அத்தியாயம் வட அமெரிக்காவில் உள்ள பஹாய் ஆய்வுகளுக்கான சங்கத்தின் (ABS) முயற்சிகளை ஆராய்கிறது, இது சமூகங்களின் அறிவுசார் வாழ்க்கையை வளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

செல்வி அடைக்கலம் ஸபிஹி, மைக்கெல் கார்ல்பெர்க், மாலிக் நாஷ் மற்றும் நெகின் டூசி ஆகியோர், அறிவியல் மற்றும் மனித நேயங்களுக்குள் சங்கத்தின் தனித்துவமான அணுகுமுறையைப் பற்றி விவாதிக்க அமெரிக்காவில் இருந்து செய்தி சேவையுடன் இணைந்தனர்.

உடனுழைத்தல் முயற்சிகளுக்கான சங்க செயற்குழுவின் உறுப்பினரான டாக்டர். கார்ல்பெர்க், சங்கம் (ABS) “பஹாய் போதனைகள் மற்றும் பஹாய் அனுபவத்திலிருந்து நுண்ணறிவுகளை மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய கற்றல் செயல்முறைகளைப் பேணி வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்பதை விவரிக்கிறார்.

ABS-இன் வேலைக்கு இன்றியமையாத கொள்கைகளில் ஒன்று அறிவியல் மற்றும் மதத்தின் இணக்கம் என்று அவர் விளக்குகிறார். “ஒருமை மற்றும் நீதி குறித்த கோட்பாடுகள் போன்ற ஆன்மீகக் கொள்கைகளின் பயன்பாடு எவ்வாறு பரந்த அளவிலான தொழில்முறை மற்றும் கல்விச் சூழல்களில் பொருத்தமானதாக இருக்கும் என்பதைக் கற்றுக்கொள்வது இதில் ஒரு பகுதியாகும்” என டாக்டர் கார்ல்பெர்க் கூறுகிறார்.

சங்கத்தின் உடனுழைத்தல் முயற்சிகளுக்கான குழுவின் மற்றொரு உறுப்பினரான திருமதி அடைக்கலம் ஸாபிஹி, புலனறிவு மற்றும் சமூக கட்டமைப்புகளில் இந்த கொள்கைகளின் தாக்கம் குறித்து பிரதிபலிக்கின்றார்: “உலகைப் பற்றி நாம் நினைக்கும் விதம் மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது என்னும் நமது எண்ணம் … சமூகத்தின் கட்டமைப்புகளை வடிவமைக்கிறது. மற்றும்… நமது நடத்தை.”

அவர் சிந்தனைக்கும் சமூக யதார்த்தத்திற்கும் இடையிலான சிக்கலான உறவை எடுத்துரைக்கிறார்: ” யதார்த்தத்தை நாம் உணரும் மற்றும் புரிந்துகொள்ளும் விதத்தை மாற்ற முடியாவிட்டால் நம்மால் கட்டமைப்புகளை மாற்ற முடியாது….”

தொழில்முறை மற்றும் கல்வி அமைப்புகளுக்குள் சமுதாய யதார்த்தத்தைப் பற்றிய ஆழமான பார்வையைப் பெறுவதற்கான ஒரு முக்கிய வழிமுறையாக கலந்தாலோசனையின் பங்கு வெளிப்படுகிறது என டாக்டர் டூசி கூறுகிறார்.

“யாதார்த்தம் அனைத்தையும் புரிந்துகொள்வதாக ஒரு நபரோ அல்லது குழுவோ கூற முடியாது,” என அவர் கூறுகிறார், கலந்தாலோசனையின் மூலம் “நாம் இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தி முயலும் இயல்நிகழ்வைப் புரிந்து கொள்ள முடியும்.”

சமூகப் பிரச்சினைகளின் ஒரு குறுகலான விளக்கத்தை வலியுறுத்தும் பாரம்பரிய முறைகளில் உள்ள சில சவால்களை எதிர்கொள்ள கலந்தாலோசனை உதவும் என திரு. நாஷ் கூறுகிறார்.

“இது சமூகங்கள் கடக்க முயலும் சமத்துவமின்மை மற்றும் கட்டமைப்பு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்,” என அவர் குறிப்பிடுகிறார். “பஹாய் ஆய்வுகளுக்கான சங்கம் பேணி வளர்க்கவும் மேலும் அறியவும் முயல்வது யதார்த்தத்தின் கூட்டு விசாரணையாகும்.”

தொடர்புடைய கதைகள்

பஹாய் ஆய்வுகள்: ஆன்மீகக் கொள்கைகளின் வெளிச்சத்தில் யதார்த்தத்தைப் பற்றிய விரிந்த பார்வையைப் பின்தொடர்தல்

பஹாய் ஆய்வுகள்: “வாசிப்பு குழுக்கள்” வருடாந்திர ABS மாநாட்டை வளப்படுத்துகிறது புலத்தில் இருந்து நுண்ணறிவு: தொழில்நுட்பம், மதிப்புகள் மற்றும் சமூகத்தின் இடைவினையை பாட்காஸ்ட் ஆராய்கிறது

மூலாதாரம்: https://news.bahai.org/story/1720/