2022 ஆண்டு, ஒரு விமர்சனம்: ஒரு புதிய பயணத்தின் ஆரம்பம்


30 டிசம்பர் 2022

பஹாய் உலக மையம் – பஹாய் உலக செய்தி சேவை கடந்த ஆண்டில் பல கதைகளை வெளியிட்டிருந்தது. ஒரு சிறந்த உலகத்தை நோக்கி நகர மனிதகுலத்தின் முயற்சிகளுக்கு பங்களிக்க உலகளாவிய பஹாய் சமூகம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்த சுருக்கமான கண்ணோட்டத்தை வழங்கும் அக்கதைகளை செய்தி சேவை மறுகண்ணோட்டம் இடுகிறது.

உலகளாவிய மாநாடுகள்

2022-ஆம் ஆண்டின் முதல் தருணங்கள் வந்தபோது, உலகளாவிய பஹாய் சமூகம் அதன் பயணத்தில் ஒரு புதிய கட்டத்திற்கு அதை அறிமுகப்படுத்தும் வரிசையான உலகளாவிய மாநாடுகளுக்காக ஆவலுடன் காத்திருந்தது. வரவிருக்கும் தசாப்தத்தில் சமூக மாற்றத்தைப் பேணுவதற்கான பஹாய் முயற்சிகள் எவ்வாறு மேலும் தீவிரமடையக்கூடும் என்பது குறித்துத் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்கள் கலந்தாலோசிக்க இந்த மகத்துவம்மிக்க கூட்டங்கள் ஒரு வாய்ப்பை வழங்கிடும்.

இந்த மாநாடுகளுக்கான அவசரத் தேவையை ஆண்டின் ஆரம்ப நாட்களில் உலக நீதி மன்றம் ஒருமைக் கோட்பாட்டை முன்னிலைப்படுத்தும் ஒரு செய்தியில் வலுப்படுத்தியது, அதில் ஒரு பகுதி பின்வருமாறு கூறுகிறது: “மனிதகுலம் இப்போது எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்கள் குறுகிய கால சுயநலனை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த அப்பட்டமான ஆன்மீக மற்றும் தார்மீக யதார்த்தத்துடன் இணக்கம் காண்பதற்கான அதன் விருப்பத்திற்கு ஏற்பட்டுள்ள கடுமையான சோதனையாகும்:  ஒன்றுடன் ஒன்று இணைந்த ஒரே ஒரு மனித குடும்பம் மட்டுமே உள்ளது, மற்றும் அது ஒரு விலைமதிப்பற்ற தாயகத்தைப் பகிர்ந்து கொள்கிறது.”

தொடர்ச்சியான சமூக அழுத்தங்கள் மற்றும் மோதல்களின் பின்னணியில், வரவிருக்கும் மாதங்களில் மாநாடுகள் உலகெங்கிலும் பரவின, இது எண்ணற்ற மக்கள் உலகளாவிய சவால்கள் குறித்த தங்கள் அதிகரித்து வரும் அவசர உணர்வை தங்கள் சமூகங்களின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த உதவியது.

உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் நடைபெற்ற மாநாடுகள், பஹாய்களுக்கும் அவர்களின் நண்பர்கள் மற்றும் அண்டையருக்கும் பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகள், சமூக நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் மற்றும் பரவலான சொல்லாடல்களுக்கு பங்களிக்கும் முயற்சிகள் ஆகியவற்றின் அனுபவத்திலிருந்து பெறப்பட்ட நுண்ணறிவுகளை இந்த செயல்முறைக்குப் பங்களிக்க விரும்பும் பல நண்பர்களுக்கும் அண்டை நாடுகளுக்கும் வழங்கின. பல இடங்களில், சமூக முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு மற்றும் அமைதியான சமூகங்களைப் பேணுவது போன்ற ஒரு முக்கிய கருப்பொருளின் மீதான விவாதத்தை மாநாடுகள் தூண்டின. இந்த விவாதங்களின் மூலம், சமூக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய முயற்சியில் அன்பின் பிணைப்புகள் மற்றும் மற்றவர்களுடனான ஐக்கியத்தின் பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளோம் என உணர்தல் ஆகியவற்றின் மூலம் மனிதகுலத்தின் பரோபகார திறனில் பங்கேற்பாளர்கள் ஒரு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையைப் பெற்றனர்.

ஆப்பிரிக்கா முழுவதும் மாநாடுகளின் அலை பரவியது, இது தங்கள் சமூகங்களின் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்து ஆலோசிக்க அனைத்து பின்னணிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டியது. சில இடங்களில், கூட்டங்கள் குறிப்பிட்ட கருப்பொருள்களில் கவனம் செலுத்தின. எடுத்துக்காட்டாக, மத்திய ஆபிரிக்க குடியரசில், சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதில் பெண்களின் பங்கை ஆராய பாங்கூய்யில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் சுமார் 500 பெண்கள் கலந்து கொண்டனர். சாட்டில் நடந்த ஒரு மாநாடு தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களை ஒன்றிணைத்து, கூட்டு சமாதானத்தை அடைவதற்கு ஒவ்வொரு நபரும் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்து விவாதித்தது.

உலகின் பிற பகுதிகளைப் போலவே, அமெரிக்கா முழுவதும் நடைபெற்ற மாநாடுகளில் இளைஞர்கள் முக்கிய பங்கு பெற்றனர். அவர்களின் கலந்துரையாடல்கள் மற்றும் கலை நடவடிக்கைகள் அமைதியை ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட துடிப்பான சமூகங்களை நிர்மாணிப்பதை மையமாகக் கொண்டிருந்தன.

ஆசியா முழுவதும் மாநாடுகளில் பங்கேற்றவர்கள் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு அவசியமான தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் ஸ்தாபனங்களுக்கு இடையிலான உறவின் பண்புகள் குறித்து விவாதித்தனர். இக்கூட்டங்களின் ஊற்சாகமூட்டும் சூழல் மாநாடுகளைத் தொடர்ந்து உடனடியாக பல நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் ஒரு கூட்டம் மது அருந்துவதால் குடும்பங்களில் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்ட சுகாதார மேம்பாட்டு பிரச்சாரத்தை ஊக்குவித்தது.

ஆஸ்திரலேசியா முழுவதும், மாநாடுகள் கதைசொல்லல், இசை நாடகங்கள் மற்றும் பாரம்பரிய நடனம் போன்ற கலாச்சார அம்சங்களால் வளப்படுத்தப்பட்டன, அவை இணக்கமான சமூகங்களை மேம்படுத்தத் தேவையான ஆன்மீக கொள்கைகளை எடுத்துக்காட்டின.

ஐரோப்பாவில், இந்தத் துடிப்பான கூட்டங்களில் ஆலோசனைகள் தங்கள் சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு ஆன்மீகக் கொள்கைகளைப் பயன்படுத்தும் திட்டங்களைப் பின்தொடர்வதில் வெவ்வேறு கண்ணோட்டங்களை இணக்கப்படுத்தின என்பதை வாழ்க்கையின் அனைத்து தரப்பு மக்களும் கண்டறிந்தனர்.

ருமேனியாவின் புக்காரெஸ்டில், ஒரு மாநாடு ஒரு சமூக விழாவி உள்ளூர் அதிகாரிகளை வரவேற்பதற்காக நகர வீதியை மூடும்படி செய்தது. கூட்டத்தில் பேசிய மேயர் க்ளோடில்டே அர்மாண்ட், “ஒரு மேயருக்கு, நீங்கள் இங்கே செய்வது தேன் கலந்த உணவின் சுவை போன்றது. ஒரு சமூக நிகழ்வை உருவாக்க இந்தத் திறந்த வெளியை நீங்கள் பயன்படுத்திக் கொள்வதில் நான் மகிழ்ச்சியே அடைகின்றேன்.

சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி முயற்சிகளைப் பின்தொடர்தல்

கடந்த ஆண்டு, செய்தி சேவை பஹாய் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு முயற்சிகள் குறித்து பல்வேறு கதைகளை வெளியிட்டது.

கடுமையான வெள்ளத்தைத் தொடர்ந்து, பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்றவர்கள் உடனடியாக நிவாரண முயற்சிகளை நோக்கித் தங்கள் கவனத்தை திருப்பினர்.

ஸாம்பியாவில், பஹாய் கல்வித் திட்டங்கள் குறித்த கலந்தாலோசனைகள் இளைஞர்களின் கல்வியுடன் தொடர்புடைய பலக்கிய சவால்களை எதிர்கொள்ள கட்டுயோலா கிராமங்களில் வளர்ந்து வரும் திறனை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

ஆஸ்திரிய பஹாய்களின் ஒரு முன்முயற்சி, புதிதாக வந்த குடும்பங்களுக்கு ஜெர்மன் மொழி வகுப்புகளை வழங்கியது, இது பல்வேறு மக்கள் தப்பெண்ணங்களை சமாளிக்க உதவியது.

கனடாவில், பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் இளைஞர்கள், சமூகத்தின் மேம்பாட்டில் இசை எவ்வாறு உயர் அபிலாஷைகளையும் நடவடிக்கைகளையும் தூண்ட முடியும் என்பதை ஆராய்ந்தனர்.

சமூகத்தின் சொல்லாடல்களில் பங்கேற்றல்

பஹாய் சர்வதேச சமூகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள தேசிய பஹாய் சமூகங்கள் அவசர முக்கியத்துவம்மிக்க பல பிரச்சினைகள் குறித்த சிந்தனையில் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க முயல்வதையும் செய்தி சேவை அறிவித்தது.

உலகளாவிய உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்த நுண்ணறிவுகளை மனிதகுல ஒற்றுமை என்னும் கொள்கை எவ்வாறு வழங்க முடியும் என்பதை ஆராய்ந்து பிஐசி (BIC) ஓர் அறிக்கையை வெளியிட்டது.

பருவநிலை மாற்றம் மற்றும் பெண்கள் மீதான அதன் சமமற்ற தாக்கம் குறித்த பல விவாதங்களில் பி.ஐ.சி பங்கேற்றது. பருவநிலை மீள்திறத்தைப் பேணுவதை நோக்கமாகக் கொண்ட நிர்வாக செயல்முறைகளுக்கு பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவம் அவசியம் என்னும் கொள்கையை ஒரு பிஐசி அறிக்கை எடுத்துக்காட்டியது.

இணையவழி வெறுப்புப் பேச்சைக் கையாள்வதற்காக தொழில்நுட்பத் துறை, அரசாங்கம் மற்றும் குடிமை சமூக அமைப்புகளிடையே பகிரப்பட்ட பார்வையின் அவசியத்தை வலியுறுத்தி, பி.ஐ.சியின் ஜெனீவா அலுவலகம் RightsCon உச்சிமாநாட்டில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.

ஸ்டாக்ஹோம் +50-ஐ முன்னிட்டு பி.ஐ.சி ஓர் அறிக்கையை வெளியிட்டது, இது சுற்றுச்சூழல் முறிவின் மூல காரணங்கள் மீது கவனம் செலுத்தியதுடன் நடவடிக்கைக்கான கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகளை முன்னிலைப்படுத்தியது.

BIC-யின் பிரஸ்ஸல்ஸ் மற்றும் அடிஸ் அபாபா அலுவலகங்கள் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு, ஆபிரிக்கா-ஐரோப்பிய ஒன்றிய பங்காண்மைகளில் ஒற்றுமை குறித்த கொள்கையை அங்கீகரிக்க அழைப்பு விடுத்தன.

பி.ஐ.சி ஒரு கலந்துரையாடல் கருத்தரங்கை நடத்தியது, இது ஒற்றுமை, நீதி, ஒத்துழைப்பு, தன்னலமின்மை மற்றும் கலந்தாலோசனை போன்ற வேலையின் எதிர்காலத்தை மீண்டும் கற்பனை செய்வது தொடர்பான சில கொள்கைகளை ஆராய்ந்தது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77-வது அமர்வின் உயர் மட்ட வாரத்தில், பிஐசி நியூயார்க் அலுவலகத்தின் பிரதிநிதிகள் மனிதகுல ஒற்றுமைக் கோட்பாட்டின் அடிப்படையில் பகிரப்பட்ட அடையாளத்தின் அவசியத்தை வலியுறுத்தினர்.

கஸாக்ஸ்தானின் அஸ்தானாவில் உலக மதங்கள் மற்றும் பாரம்பரிய மதத் தலைவர்களின் 7-வது மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து மதத் தலைவர்கள் கூடி, பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலகில் சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதில் மதத்தின் பங்கு குறித்து விவாதித்தனர்.

கிராமப்புறங்களில் இளம் சிறு விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதில் கல்வியின் பங்கை ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தலைமையகத்தில் பி.ஐ.சி ஒரு குழு கலந்துரையாடலை நடத்தியது.

வனுவாத்துவின் தன்னாவில் இளைஞர்கள் தலைமையிலான பவளப்பாறை மறுசீரமைப்புத் திட்டத்தைப் பற்றிய குறும்படத்தை பிஐசி தயாரித்தது. “Tanna: A Study in Leadership and Action,” என தலைப்பிடப்பட்ட இந்த 13 நிமிட படம் COP27-இல் (இது பருவநிலை மாற்றம் குறித்த ஒரு குழு) திரையிடப்பட்டது.

எகிப்தில் நடைபெற்ற COP27 பருவநிலை உச்சி மாநாட்டில் பல BIC அலுவலகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

யுனைடெட் கிங்டமில் உள்ள பஹாய் பொது விவகாரங்களுக்கான அலுவலகம் “In Good Faith” என்னும் புதிய போட்காஸ்ட் (podcast) தொடரை அறிமுகப்படுத்தியது, இது மதத்திற்கும் ஊடகங்களுக்கும் இடையிலான உறவை ஆராய்கிறது.

எகிப்தைத் தளமாகக் கொண்ட ஒர் இணைய செய்தி சேவையான ‘எல்சாஹா’ தயாரித்த ஒரு குறும்படம், 19-ஆம் நூற்றாண்டில் அதன் தொடக்கத்திலிருந்து இன்று வரை அந்நாட்டில் உள்ள பஹாய் சமூகத்தின் அனுபவம் குறித்த ஒரு கண்ணோட்டத்தை வழங்கியது.

அஸர்பைஜானில் சகவாழ்வைப் பேணுவதற்கான முதல் தேசிய மாநாடு அதிகாரிகள், பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்னும் கொள்கையைப் பற்றி விவாதிக்க பல்வேறு மத சமூகங்களின் பிரதிநிதிகள், குடிமை சமூகத் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை ஒன்றுகூட்டியது.

துனிசியாவில், பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் பிரதிநிதி ஒரு தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமூகத்தில் மதத்தின் பங்கை ஆராய்ந்தார். இந்த ஆண்டு அந்த நாட்டின் பல்வேறு மத சமூகங்கள் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, மிகவும் அமைதியான சமூகத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தின.

இந்தியாவின் பஹாய் பொது விவகார அலுவலகம் பல்வேறு சமூக உரையாடல்களில் பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவம் என்னும் கோட்பாட்டின் பயன்பாட்டை ஆராயும்  பல மன்றங்களை நடத்தியது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பஹாய்கள் சமகால சமூகத்தில் மதத்தின் ஆக்கபூர்வமான பங்கு குறித்த உரையாடலை ஊக்குவிப்பதில் அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட நுண்ணறிவுகளை ஆராய்ந்தனர்.

டச்சு பஹாய் வெளியுறவு அலுவலகம் இன ஒற்றுமை குறித்த உரையாடலுக்கான அதன் பங்களிப்புகளில் ஒரு பகுதியாக பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் அது பெற்றிருந்த அனுபவங்களைப் பயன்படுத்தியது.

பல தசாப்த கால முயற்சிக்குப் பிறகு, ஸாம்பியாவில் உள்ள பஹாய் ஸ்தாபனங்கள் அந்த நாட்டில் பஹாய் கல்வி முன்முயற்சிகளின் நெடுக்கத்தைக் குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவம் வரை தடையற்ற, ஒத்திசைவான அனுபவத்தை வழங்க எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை ஆராய ஒன்று கூடின.

ஆஸ்திரியாவின் பஹாய்களால் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம், பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவம் குறித்த சொல்லாடலுக்குப் பங்களிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பஹாய் வீராங்கனையான தாஹிரி மற்றும் ஆஸ்திரியாவின் பெண்கள் இயக்கத்தின் ஸ்தாபனர் மரியன் ஹைனிஷ் ஆகியோருக்கு இடையிலான தொடர்பை ஆராய்ந்தது.

சிலி நாட்டு பஹாய் சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள் அனைவரின் நல்வாழ்விற்காக நகரங்களின் அபிவிருத்திக்கு வழிகாட்டக்கூடிய ஆன்மீகக் கொள்கைகளை ஆராய்ந்திட சான்டியாகோவில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தில் ஒன்றுகூடினர்.

பஹாய் படிப்பாய்வுகளுக்கான சங்கம் ஏபிஎஸ் (ABS) அதன் 46-வது வருடாந்திர மாநாட்டை நடத்தியது, இது பஹாய் போதனைகள் சிந்தனை மற்றும் சொல்லாடலின் பல்வேறு பகுதிகளுக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் பற்றிப் பிரதிபலித்திட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் அதிகமான மக்களை ஒன்றிணைத்தது.

இந்தூரில் உள்ள தேவி அகல்யா பல்கலைக்கழகத்தில்  அபிவிருத்தி படிய்வுகளுக்கான பஹாய் இருக்கை, இயற்கை உலகத்துடன் மனிதகுலத்தை அதிக சமநிலைக்கு கொண்டுவர தேவையான கொள்கைகள் குறித்த ஒரு மன்றத்தை நடத்தியது.

ஈரானில் பஹாய்கள் மீதான அடக்குமுறை

கடந்த ஆண்டு முழுவதும், ஈரான் பஹாய்கள் மீதான துன்புறுத்தல் தீவிரமடைந்துள்ளது, இது கோடைகாலத்தில் கைதுகளின் அலை மற்றும் ரோஷன்கௌ கிராமத்தில் பஹாய் வீடுகள் வன்முறையில் அழிக்கப்பட்டதன் மூலம் தீவிரமடைந்துள்ளது. இந்த ஒடுக்குமுறையைத் தொடர்ந்து உடனடியாக அரசாங்க அதிகாரிகளிடமிருந்து இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரியஏராளமான அறிக்கைகளும் சர்வதேச ஊடகங்களால் செய்தி ஒளிபரப்பும் செய்யப்பட்ட து.

இந்த சம்பவங்களுக்குச் சில வாரங்களுக்குப் பிறகு, ஈரானிய அதிகாரிகள் தங்கள் சொந்த குடிமக்களுக்கு எதிராக அதிகரித்த வன்முறை மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு மத்தியில், 10 ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர் ஈரானில் மீள்ச்சித்திறத்தின் சின்னங்களாகக் கருதப்படும் இரண்டு பஹாய் பெண்களுக்கு இரண்டாம் முறை கொடூரமான 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த இரு பெண்களின் ஆதரவாளர்களும் அவர்களை மீள்ச்சித்திறத்தின் சின்னங்கள் எனவும், ஒடுக்கப்பட்ட மற்றும் சிறைப்படுத்தப்பட்ட நபர்களின் நம்பிக்கைக்குரியவர்கள் எனவும், அனைத்து ஈரானியப் பெண்களுக்கும் தாய்மார்கள் எனவும் அழைத்துள்ளனர்.

வெளியீடுகள்

சென்ற ஆண்டு பல இணைய வெளியீடுகளைக் கண்டது.

உலக நீதி மன்றத்தினால் நியமக்கப்பட்ட ஒரு திரைப்படம், மிகவும் அமைதியான உலகத்தைப் பேணுவதற்குப் பங்களிக்க கடந்த நூற்றாண்டில் பஹாய் சமூகத்தின் முயற்சிகளைப் பற்றிய கண்ணோட்டத்தை வழங்கியது.

பஹாய் உலகம் வலைத்தளத்தில் புதிய கட்டுரைகள் சமூக நீதி பின்தொடரப்படுவதை ஆராய்ந்தன.

பஹாய் உலக செய்தி சேவை ரஷ்ய மொழியிலும் கிடைப்பதற்கு வழிசெய்யப்பட்டது, இம் மொழி ஆங்கிலம் மற்றும் தளத்தின் பிற மூன்று மொழி பதிப்புகளுடன் இணைந்தது.

ஒரு சிறிய ஆவணப்படம் அஃப்னான் நூலகத்தையும், பஹாய் நம்பிக்கை மற்றும் பிற பரவலாக இணைக்கப்பட்ட தலைப்புகள் தொடர்பான 12,000-க்கும் மேற்பட்ட கருபொருள்களின் சிறந்த தொகுப்பையும் கண்ணோட்டமிட்டது.

பஹாய் வழிபாட்டுத் தலங்கள்

கடந்த ஆண்டில், பஹாய் கோயில்கள் அவற்றுக்கு அருகிலுள்ள சமூகங்களின் பக்தித் தன்மைக்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பது குறித்த கதைகளை செய்தி சேவை வெளியிட்டது. இந்தக் கோயில்கள் தங்கள் சக குடிமக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க மக்களை ஊக்குவித்து வருகின்றன. வழிபாட்டுத் தலங்களின் செய்திகளில் காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் பப்புவா நியூ கினியில் கோயில்கள் கட்டுமானத்தின் முன்னேற்றம் குறித்த கதைகளும், பனாமாவில் பஹாய் கோயில் அர்ப்பணத்தின் ஐம்பதாவது ஆண்டுவிழாவும் அடங்கும்.

காங்கோ ஜனநாயகக் குடியரசில், குவிமாடத்திற்கான எஃகு மேல்கட்டுமானத்தின் நிறைவு உட்பட, பஹாய் வழிபாட்டு இல்லத்தின் கட்டுமானம் தொடர்ந்து முன்னேறி வந்தது.

பப்புவா நியூ கினியில் வளர்ந்து வரும் பஹாய் வழிபாட்டுத் தலம் — வழிபாடு மற்றும் சேவை ஆகியவற்றின் ஒன்றியத்தைப் பிரதிநிதிக்கின்றது — அந்தக் கோவில் கட்டுமானத்தின் ஒரு பகுதியாக ஒரு நெசவு திட்டத்திற்கு உதவ அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு உத்வேகமூட்டியது.

பனாமாவில் உள்ள பஹாய் வழிபாட்டுத் தலம் திறக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

அப்துல்-பஹா நினைவாலய கட்டுமானம்

அந்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பின்னடைவு ஏற்பட்ட போதிலும், அதன் கட்டுமானத்தில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டது. ‘அக்கா பார்வையாளர்கள்’ மைய பணிகளின் ஆரம்பம் இந்த ஆண்டின் மற்றொரு மேம்பாடாகும்.

தொடர்புள்ள கதைகள்

மூலாதாரம்: https://news.bahai.org/story/1636/

பஹாய் புனித யாத்திரை தலங்கள்


பாக்தாத் நகரில் இருந்த பஹாவுல்லாவின் இல்லம்.

கித்தாப்-இ-அஃடாஸ் என்னும் அதிப்புனித நூலில் பஹாவுல்லா இரண்டு இடங்களை பஹாய்களின் புனித யாத்திரைக்கான இடங்களாக அருளியுள்ளார். ஒன்று பாரசீகத்தின் ஷிராஸ் நகரில் உள்ள பாப் பெருமானாரின் இல்லம். இவ்வில்லம், இரான் புரட்சிக்குப் பிறகு 1979-இல் மதவெறியர்களால் அழிக்கப்பட்டது. மற்றது, இராக் நாட்டின் பாக்தாத் நகரில் உள்ள, பஹாவுல்லா பத்து வருடகாலம் வாழ்ந்த இல்லம். உலக பாரம்பரிய தள பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இந்த இல்லம்,  2013-இல் அழிக்கப்பட்டது (https://news.bahai.org/story/961/). அவ்விரு இடங்களும் அழிக்கப்பட்டுவிட்டன, ஆனால் எதிர்காலத்தில் அவை மீண்டும் அதே இடங்களில் பேரொளியுடன் அமைக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பாப் பெருமானார் இல்லத்தின் முழு உருவ மாதிரி. சில நியூ சீலாந்து பஹாய்களால் தயாரிக்கப்பட்டது

அத்திருத்தலங்கள் வெறும் கற்களாலும் காரைகளாலும் மரங்களாலும் ஆனவையல்ல, அவை புனித ஆவியின் வெளிப்பாடுகள்.

ஹைஃபா நகர் கார்மல் மலை மீது உள்ள பாப் பெருமானாரின் நினைவாலயம்

அருள்ஜோதியரான பஹாவுல்லாவின் மறைவிற்குப் பிறகு, அவரது மூத்த மகனாராகிய அப்துல்-பஹா, மேலும் இரண்டு இடங்களைப் புனித யாத்திரைக்கான மையங்களாக அறிவித்தார். அவை பாப் பெருமானார், பஹாவுல்லா இருவரின் இளைப்பாறல் தலங்கள், அவ்விருவரின் சன்னதிகள்.

பாஹ்ஜியில் உள்ள பஹாவுல்லாவின் நினைவாலயம்

புனிதப் பயணிகள் பாப் பெருமானாரின் சன்னதிக்கு விஜயம் செய்யும் போது சிலர் முதலில் அச்சன்னதியைச் சுற்றி வலம் வருவர், வேறு சிலர் உள்ளே சென்று அவரது திருவாசலில் தலை வைத்துத் தங்கள் பணிவை வெளிப்படுத்துவர். பிறகு, அத்திருவிடத்தினுள் அமர்ந்து பிரார்த்தனை செய்வர். அங்கு நம்பிக்கையாளர்கள் இப்படித்தான் பிரார்த்திக்க வேண்டுமெனும் முறைகள் ஏதும் கிடையாது. ஆனால் பஹாவுல்லா அறிவித்த இடங்களில் கூறுவதற்காக அவர் சில பிரார்த்தனைகளையும் நிருபங்களையும் வெளிப்படுத்தியுள்ளார். சன்னதியின் உள்ளே இயல்பாகவே கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை முறைகள் உள்ளன. காலனிகளை வெளியே கழற்றிவைத்துவிட்டு சப்தமின்றி உள்ளே நுழைதல், நுழைந்தவுடன் பிரார்த்தனைகளை உரக்கக் கூறாமல் இருத்தல்; பிரார்த்தனைக்குப் பிறகு முன்னோக்கிய முகத்துடன் பின்னோக்கி நடக்க வேண்டும், என்பன போன்ற சில நடைமுறைகள்.

நம்பிக்கையாளர்கள் பஹாவுல்லாவின் நினைவாலயத்திற்கு விஜயம் செய்யும் போது, சிலர் நேரே அவரது சன்னதியின் உட்புறம் சென்று பிரார்த்தனையிலும் தியானத்திலும் ஈடுபடுவர். அதற்கும் மேற்பட்டு சன்னதியைச் சுற்றியுள்ள அழகிய தோட்டங்களுக்கு வருகையளித்து அமைதியாகத் தியானம் செய்தல் மற்றொரு நடவடிக்கையாகும். இங்கு அழகு என்பது ஓர் ஆன்மீகப் பண்பாகும். அது இவ்வுலகிலும் ஆன்மீக இராஜ்யங்களிலும் ஒரு பொக்கிஷம் போன்ற மெய்மையாகும். இவ்வழகை வெளிப்படுத்தவே பஹாய் புனிதத் தலங்களில் அழகிய, மனதைக் கவரும் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சன்னதியைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் வட்டவடிவமான நான்கு கால்வட்டங்கள் கொண்ட ஹராம்-இ-அஃடாஸின் எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் தடத்தின் வழி சன்னதியைச் சுற்றி வலம் வருதல் மற்றொரு முக்கிய நடவடிக்கையாகும். இத்தடத்தின் வழி விண்ணவ திருக்கூட்டத்தினரும் வலம் வருவர் என்பது ஐதீகம். சிலர் பாஹ்ஜி மாளிகையைச் சுற்றி அதன் அருகிலேயே உள்ள நடைபாதையின் வழியும் சன்னதியை வலம் வருவர். இவ்வலம் வருதல் குறித்த ஒரு கதையைப் பார்ப்போம்:

அக்காநகரில் இருந்த ஹாஜி முஹம்மது-தாஹிர்-இ-மல்மிரி, சுக்-இ-அப்யாத் அருகே உள்ள நபில்-இ-அஸாம் -இன் அறைக்கு அடுத்த ஒர் அறையில் வசித்து வந்தார். இவர்களின் அறைகள் வீதியில் செல்வோரைக் காணும்படி அமைந்திருந்தன. சில வேளைகளில் பஹாவுல்லா பாஹ்ஜியிலிருந்து அக்காநகருக்கு வந்துவிட்டு இவ்விருவரின் அறைக்கு வெளியே இருந்த வீதியின் வழி பாஹ்ஜி மாளிகைக்குத் திரும்பிச் செல்வார்.

அப்போது நடைபெற்ற ஒரு நிகழ்வை ஹாஜி முஹம்மது-தாஹிர்-இ-மல்மிரி எழுதுகின்றார்:

புனிதப் பேரழகர், அவரது மகிமை மேன்மைப்படுத்தப்படுமாக, பாஹ்ஜி மாளிகைக்குச் செல்லவிருந்த மாலையில், புனிதப் பரிபூரணர் எங்கள் வீட்டைக் கடந்து செல்வதைக் காண அன்று காத்திருந்தோம். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது. பஹாவுல்லா ஒரு வெள்ளைக் கழுதையின் மீது சவாரி செய்து எங்கள் அறைகளுக்கு முன்னால் செல்வதைக் கண்டோம். பஹாவுல்லா எங்கள் பார்வையில் இருந்து மறைந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து பாஹ்ஜி மாளிகைக்குச் சென்று அதைச் சுற்றி வலம்வந்துவிட்டு வீட்டிற்குத் திரும்புவோம் என நபில் பரிந்துரைத்தார். மிகுந்த ஆர்வத்துடன் நானும் அதற்கு ஒப்புக்கொண்டு, நாங்கள் இருவரும் உடனடியாகப் படிக்கட்டுகளில் இறங்கி ஓடி, ஐம்பது அடிகள் தூரத்திலிருந்து அவர் பின்னால் வேகமாக நடந்து பாஹ்ஜி மாளிகையைச் சென்றடைந்தோம். பாஹ்ஜி மாளிகைக்குள் எண்ணெய் விளக்கின் வெளிச்சத்தை வெளியில் இருந்து எங்காளால் பார்க்க முடிந்தது.

புனிதப் பரிபூரணர் மாளிகைக்குள் சென்றதும், மாளிகையை வலம் வருவதற்காகக் கட்டிடத்தை நோக்கி நடந்தோம். ஆனால் நாங்கள் சற்று நெருங்கி வந்தபோது, மாளிகையின் சுவர்களைச் சுற்றியுள்ள நடைபாதைகளில் மக்கள் நிரம்பியிருந்ததைக் கண்டோம். மாளிகையின் நான்கு பக்கங்களிலும் கூட்டம் கூடியிருந்தது, அவர்களின் முணுமுணுப்பையும் அவர்களின் சுவாசத்தையும் எங்களால் செவிமடுக்க முடிந்தது. அந்த மாளிகையை வலம் வருவதற்காக அக்காநகரிலிருந்து யாரும் வரவில்லை என்பதும், நாங்கள் இருவரும் அனுமதியின்றி அங்கு சென்றிருந்தோம் என்பதும் எங்களுக்குத் தெரியும். எவ்வாறாயினும், நடைபாதையில் நடப்பதற்கு இடமில்லாததால், நாங்கள் சற்றுப் பின்வாங்கி, மாளிகையிலிருந்து சுமார் முப்பது அடிகள் தொலைவில் மாளிகையைச் சுற்றி வலம் வந்தோம். நாங்கள் மாளிகையைச் சுற்றி வரும்போது நாங்கள் இருந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் கட்டிடத்தின் நான்கு பக்கங்களிலும் மக்கள் கூட்டம் இருப்பதை எங்களால் உணர முடிந்தது. இறுதியில், நாங்கள் மாளிகையின் வாயிலுக்கு எதிரே தரையில் விழுந்து வணங்கிவிட்டு, அக்காநகருக்குத் திரும்பினோம்.

நாங்கள் வீட்டிற்கு வந்ததும், அன்றிரவு நாம் தூங்க வேண்டாம் எனவும் அதற்குப் பதிலாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நபில் பரிந்துரைத்தார். இரவு முழுவதும் நான் பலமுறை தேநீர் தயாரித்தேன், நபில் கவிதைகள் புனைந்து கொண்டிருந்தார். கவிதைகளுக்குப் பிறகு, நாங்கள் இருவரும் பஹாவுல்லாவைப் பின்தொடர்ந்து பாஹ்ஜி மாளிகைக்கு சென்றதையும், நாங்கள் மாளிகையைச் சுற்றி வலம் வரும்போது எல்லா தீர்க்கதரிசிகள், இறைத்தூதர்கள் மற்றும் விண்ணவ திருக்கூட்டத்தினர் மாளிகைக்கு வெளியே கூடியிருந்து தங்கள் பிரபுவின் அரியணையை வலம் வந்ததையும் நபில் எழுதினார். நாங்கள் இரவு முழுவதும் விழித்திருந்ததையும் நான் தேநீர் தயாரித்ததையும் அவர் கவிதையில் வடித்திருந்தார்.

புனிதத் திருவுருவானவர் நபிலின் கவிதைகளைப் பெற்றுக்கொண்டு, எங்கள் இருவருவரின் பெயரில் ஒரு நிருபத்தை வெளிப்படுத்தினார். அதில் மாளிகைக்கான எங்களின் புனித யாத்திரையை கருணையுடன் ஏற்றுக்கொண்டு நபிலுக்கு புல்புல் (இராப்பாடி) என்னும் பெயரையும் எனக்கு பஹ்ஹாஜ் (களிப்பு நிறைந்தவர்) என்னும் பெயரையும் வழங்கியிருந்தார்.

(https://d9263461.github.io/cl/Baha’i/Others/ROB/V4/p103-117Ch07.html)

தடத்தின் வழி பாஹ்ஜி மாளிகையை வலம் வரும்போது இன்றைய யாத்ரீகர் ஒருவர் தமது அனுபவத்தை விவரிக்கின்றார்.

பாஹ்ஜி யாத்ரீகர் வரவேற்பு மையத்திலிருந்து சற்று தூரத்திலிருந்த கோல்லின்ஸ் வாசலை நோக்கி நடந்தேன். பொண்மாலை நேரம், மனதை அமைதிப்படுத்தும் நிசப்தம், அவ்வப்போது கேட்கும் பறவைகளின் ஒலி, இதமளிக்கும்  இளம் தென்றல், ஹராம்-இ-அஃடாஸ் என்னும் திருவிடத்தின் விளிம்பின் ஓரத்தைச் சுற்றிலும், கோல்லின்ஸ் வாசலுக்கு முன்னாலிருந்து ஆரம்பிக்கும் வெள்ளை சரளைகளால் இடப்பட்ட ஒரு நடைபாதை. நடையின் வேகத்தைக் குறைப்பதற்கும், சிந்தனைகளை ஒருமுகப்படுத்துவதற்கும் தியானத்துடன் நடப்பதற்காகவும் திட்டமிடப்பட்ட நடைபாதை. மனதை ஒருநிலைப் படுத்திக்கொண்டு நிதானித்து நடக்க ஆரம்பித்தேன். நடக்கும் போது இயல்பாகவே பக்தி மனப்பான்மை நம்மை வந்தடையும். தடத்தில் இடப்பட்ட கற்களின் மீது கால்கள் பதிவதால் உண்டாகும் சரக் சரக் என்னும் ஓசை மனதிற்கு ஆறுதலளிப்பதாக இருக்கின்றது. பாதுகாவலர் இத்தகைய சரளைகளைக் கொண்ட பாதையை ஏன் உண்டாக்கினார் என்பது இப்போது மனதிற்குப் புரிகிறது. மேலான எண்ணங்கள் மனதில் உதிக்கின்றன. பஹாவுல்லாவைப் பற்றிய எண்ணங்கள், அவர்மீது கரைபுரண்டோடும் அன்பு, அல்லது காதல் எனவும் சொல்லலாம். பாதையின் இருபுறமும் மரங்களும் செடிகளும் நம்மை வரவேற்பதைப் போன்றிருக்கின்றது. பக்திப் பெருக்கினால் கண்களில் நீர் வழிகின்றது. ‘காதலாகிக் கசிந்து கண்ணீரும் மல்கியே’ என்பார்களே அதைப் போன்று. மனதில் ஒருவித இன்பமும் சூழ்கின்றது. சிறிது தூரம் நடந்தவுடன் சூழ்நிலையின் காரணமாக திடீரென என்றோ கேட்ட ஒரு பாடல் மனதில் தோன்றுகின்றது. ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா’ என்னும் பாடல். இவ்விடமல்லவா சுவர்க்கம் என எண்ணுவோம். சுமார் மூன்றரை கிலோமீட்டர்கள் கொண்ட அந்தப் பாதையில் நேரம் போவது தெரியாமல் தியானத்துடன் நடப்போம். திடீரென கனவு கலைந்தது போன்று, கோல்லின்ஸ் வாசலுக்கு முன் ஆரம்பித்த இடத்திற்கே வந்திருப்பது தெரிகின்றது. மீண்டும் ஒரு முறை சுற்றி வரலாமா என்னும் எண்ணம் தோன்றுகின்றது. ஆரம்பித்த இடத்திற்கு எதிரே, கோல்லின்ஸ் வாசலுக்கு உட்புறமாக உலகின் போக்கிஷம் போன்ற அருட்பேரழகர் பள்ளிகொண்டிருக்கும் சன்னதி. அதை நோக்கி சரளைகளின் மீது நடந்து அத்திருத்தலத்தைப் பயபக்தியுடன்  அணுகுவோம். படிகளைக் கடந்து உள்ளே கால் பதிவது தெரியாமல் மெல்ல நடந்து சென்று தலைத்திருவாசலில் சிரம் பதித்துப் பக்திப் பெருக்கினால் கண்ணீர் வழிய பிரார்த்திப்போம். நமக்குப் பின்னால் தங்கள் முறைக்காகப் பலர் நிற்பது தெரிகின்றது. அவர்களுக்கு வழிவிட எழுந்துநின்று, அமைதியாக, உடலைத் திருப்பாமல் முன்னோக்கியவாறு பின்னால் மெல்ல நடந்து சென்று, அங்குள்ள அறைகளுள் ஒன்றில் அமர்ந்து பஹாவுல்லாவின்பால் நமது அன்பைப் பிரார்த்தனைகளாக வெளிப்படுத்துவோம், நமது சொந்த வேண்டுகோள்களையும் பிரார்த்தனைகளின் மூலம் வெளிப்படுத்துவோம். நண்பர்களின் பிரார்த்தனை வேண்டுகோள்களை நிறைவேற்றுவதற்கு அதுவே தருணம். போதிய நேரம் கழித்து, அறைக்கு வெளியே வந்து அதே முன்னோக்கிய நடையுடன் பின்னால் சென்று, சன்னதிக்கு வெளியே வருவோம்.

இங்கு ஒரு வியப்பு யாதெனில், இத்திருவிடத்தில் பயபக்தியும், பணிவும் எக்கிருந்துதான் நம்மை வந்தடைகின்றது என்பது தெரியவில்லை. பிற யாத்ரீகர்களிடம் உரையாடும் போது, நடக்கும் போது, கூட்டத்தில் இருக்கும் போது, நாம் வேறொரு பிறவியாகின்றோம். இல்லம் திரும்பினாலும் இதே தோரணையைக் கடைப்பிடிக்க வேண்டுமெனும் மனவுறுதி உண்டாகின்றது.

புனித இடங்களை வலம் வருதல் ஒரு பக்தியும் அன்பும் சார்ந்த நடவடிக்கையாகும். அது புனிதத் திருவுருக்களின்பாலான ஒரு தனிநபரின் பணிவு, கீழ்ப்படிதல் மற்றும் ஆராதனையைக் குறிக்கின்றது. அது ஒருவர் அவர்களை முற்றிலும் சார்ந்திருப்பதன் அடையாளம். இதே செயல் இயற்கையிலும் நிகழ்கின்றது. ஒரு துணைக்கோள் ஒரு கிரகத்தைச் சுற்றி வலம் வருகின்றது, அது ஈர்ப்புச் சக்தியினால் சுற்றுப்பாதையில் நிலைப்படுத்தப்படுகின்றது. அது அக்கிரகத்திலிருந்து தோன்றுகின்றது, அதன் இருப்பு அந்த கிரகத்தையே சார்ந்துள்ளது. அவ்விரண்டிற்கும் இடையில் ஒரு விசேஷ உறவு உண்டு: ஒன்று யஜமானராகவும் மற்றது ஊழியனாவும் செயல்படுகின்றது.

(தொடரும்…)

கலைகள்: வான்கூவர் இளைஞர்கள் உயர்ந்த அபிலாசைகளைத் தூண்டிவிட இசையின் சக்தியைப் பயன்படுத்துகின்றனர்.


26 டிசம்பர் 2022

வான்கூவர், கனடா – வான்கூவரில் அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கை, இசை எவ்வாறு உன்னத உணர்வுகளைத் தூண்டிவிடுவதுடன் தங்கள் சகாக்களுக்கு ஆறுதலையும் உத்வேகத்தையும் அளித்திடக்கூடும் என்பதை ஆராய்ந்து வருகின்றனர். அவர்கள் உருவாக்கும் பாடல்கள், தங்கள் சொந்த அனுபவங்களையும் அவர்கள் நண்பர்களின் அனுபவங்களையும் கொண்டு, வளர் இளம் பருவ இளைஞர்கள் தங்கள் ஆன்மீக அடையாளம் மற்றும் சமூகத்திற்குப் பங்களிக்கும் திறனைப் பற்றி அதிக விழிப்புணர்வுடன் இருப்பதால், அவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்திக்கும் கதைகளை ஆராய்கின்றனர்.

சமூகத்திற்குச் சேவை செய்யும் இளைஞர்களின் திறனை வளர்ப்பதற்கும் அவர்களின் கலை வெளிப்பாட்டை வளர்ப்பதற்கும் பஹாய் கல்வித் திட்டங்களில் உள்ள கருத்துகளை ஆராயும் இந்த இளைஞர்களின் முன்முனைவில் இருந்து இந்த முயற்சி எழுகிறது.

பஹாய் சமூகத்தின் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் இளைஞர்கள், சமூகத்தின் முன்னேற்றத்திற்கான உயர் அபிலாசைகளையும் செயல்களையும் இசை எவ்வாறு ஊக்குவிக்கும் என்பதை ஆராய்கின்றனர்.

பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் இளைஞர்கள், சமூகத்தின் முன்னேற்றத்திற்கான உயர் அபிலாசைகளையும் செயல்களையும் இசை எவ்வாறு ஊக்குவிக்கும் என்பதை ஆராய்கின்றனர்.

உலகத்தைப் பற்றிய ஒருவரின் புரிதலை வடிவமைக்கும் மொழியின் ஆற்றலில் கவனம் செலுத்துவதன் மூலம், இளைய பங்கேற்பாளர்கள் தங்கள் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தவும், நுகர்வியல் (consumerism) சார்ந்த எதிர்மறை தாக்கங்களை எதிர்க்கும் திறனை வலுப்படுத்தவும் இந்தத் திட்டங்கள் உதவுகின்றன என்பதை இந்தத் திட்டங்களின் இளைஞர் ஒருங்கிணைப்பாளர்கள் கவனித்துள்ளனர்.

இளைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல்களில் ஒன்று, லௌகீகவாதத்தின் அழுத்தங்களை எதிர்கொள்ளும் யோசனையை ஆராய்கிறது: அதை கவனமாகக் கேட்கவும்:

(பாடலின் மொழிபெயர்ப்பு)

இன்பத்துக்காக வாழச் சொல்லும் குரல்
பொழுபோக்கை நாடுதல், அழுத்தங்களுக்கு விட்டுக்கொடுத்தல்
இவற்றைக் கணித்திட நமக்கு அர்த்தமுள்ள ஏதேனும் அவசியம்
உண்மையைச் செவிமடுக்கும்போது, அதுவே உண்மையான பொக்கிஷம்

தனது அண்டைப்புறத்தில் உள்ள இளைஞர் குழுக்களை வழிநடத்தும் தினுக் கூறுவதாவது: “இளைஞர்கள் எதிர்கொள்ளும் போப் (pop) கலாச்சார இசையிலிருந்து இது மிகவும் வேறுபட்டது. அங்கு ஆத்திரமூட்டும் கூற்றுகளை வெளியிடுவது அதிகம். அதற்கு நேர்மாறாக, இளைஞர்கள் தங்களை முன்னணியாளர்களாகக் காண உதவும் இசையை உருவாக்க விரும்பினோம்.

“ஓர் இளைஞன் யாரோ ஒருவர் கொடுமைப்படுத்தப்படுவதைக் கவனித்து, அந்தச் சூழ்நிலையில் அவர்கள் என்ன தேர்வுகள் செய்யலாம் என்பதைப் பற்றி சிந்திக்கும் பாடல்களில் ஒன்று இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.”

மதிய உணவுக்கான நேரம் மணி அடிக்கிறது
நான் என் நண்பர்கள் ஒன்றுகூடுவதைப் பார்க்கிறேன்
அப்போது ஒருவர், தனியாக நிற்பதைப் பார்க்கின்றேன்
அவரிடம் நான் இதுவரை பேசியதில்லை
சென்று அவரிடம் வணக்கம் சொல்லவா
நான் அவரிடம் அக்கறை காட்ட விரும்புகிறேன்
நான் என்ன செய்ய போகின்றேன் என
என் நண்பர்கள் என்னைப் பார்க்கின்றனர் என்பது எனக்குத் தெரியும்

இம்முயற்சியின் அமைப்பாளர்களில் ஒருவரான ஷாடி, கேட்பவர் மீது செல்வாக்கு செலுத்தும் இசையின் ஆற்றலைப் பற்றிப் பேசுகிறார், “பல மாதங்களினூடே நீங்கள் யாரிடமாவது எதிர்மறையான மொழியைக் கொண்ட இசையை வாசித்தால், அவர்களும் அப்படியே பேசத் தொடங்குவார்கள்.”

ஒரு பங்கேற்பாளரான ஜேசன், பிரபலமான இசையில் உள்ள எதிர்மறையான செய்திகளால் அவரது சகாக்கள் சிலர் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகரிக்கின்றன என கூறுகிறார். “பின்னர், நீங்கள் எதிர்மறை இசையின் மேலேமொரு அடுக்கைச் சேர்க்கிறீர்கள், அவர்கள் அவ்வார்த்தைகளை உச்சரிக்கும்போது, ​​அது அவர்களுக்கு உதவாது, அதைப் பார்ப்பதற்கும் உண்மையில் வருத்தமாக இருக்கிறது.”

அவர்கள் உருவாக்கும் பாடல்கள் அவர்களின் சொந்த அனுபவங்களையும் அவர்கள் நண்பர்களின் அனுபவங்களையும் பயன்படுத்துகின்றன. வளரிளம் பருவ இளைஞர்கள், தங்களின் சொந்த ஆன்மீக அடையாளம் மற்றும் சமுதாயத்திற்குப் பங்களிப்பதற்கான அவர்களின் சொந்த ஆற்றல் குறித்து மேன்மேலும் அதிக விழிப்புணர்வுகொள்ள ஆரம்பிக்கும் போது அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் குறித்த கதைகளை அப்பாடல்கள் ஆராய்கின்றன.

நேர்மறையான, உற்சாகமளிக்கும் இசையைக் கேட்பது ஒருவர் மீதும் அவரது நடத்தையிலும் மிகவும் மாறுபட்ட விளைவைக் கொண்டிருக்கிறது, இது மனித ஆவியின் மீது இசை செலுத்தும் தனித்துவமான சக்தியை எடுத்துக்காட்டுகிறது என ஷாடி குறிப்பிடுகிறார்.

இளைஞர் குழுக்களின் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான ஆலியா, இந்த முயற்சியின் வாயிலாக வெளிவரும் பாடல்களை, “நேர்மறையான மதிப்புகளை நிலைநிறுத்தும் பாடல் வரிகளைக் கொண்ட… இசை குறித்த பயன்படுத்தப்படாத ஓர் பகுதி… கேட்பதற்கு குளிர்ச்சியாக இருப்பதுடன், நாம் அடையாளம் காணக்கூடிய விஷயங்களையும் கொண்டுள்ளது” என வர்ணிக்கின்றார்.

இந்த முயற்சி ஒரு கூட்டுப் பாடல் எழுதும் அணுகுமுறையைக் கொண்டது. “பாடல்கள் எந்த ஒரு நபருக்கும் சொந்தமில்லை” என்கிறார் ஷாடி.

பல்வேறு வகையான இசை அனுபவங்களைக் கொண்ட பங்கேற்பாளர்கள், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இரண்டு தொடர்ச்சியான வார இறுதிகளில் ஒன்றுகூடி வெவ்வேறு ஆன்மீகக் கொள்கைகளை முன்னிலைப்படுத்தும் பாடல்களை உருவாக்குகிறார்கள்.

அனைவரும் வெவ்வேறு அளவிலான இசை அனுபவங்களைக் கொண்டுள்ள பங்கேற்பாளர்கள், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இரண்டு தொடர்ச்சியான வார இறுதிகளில் கூடுகின்றனர். இந்த அமர்வுகளில், அவர்கள் கலந்தாலோசனை, சேவையின் முக்கியத்துவம் மற்றும் உண்மையான நட்பின் தன்மை போன்ற ஆன்மீகக் கருத்துக்கள் மீது பிரதிபலிக்கின்றனர். அவர்கள் தங்கள் அண்டைப்புறங்களின் சவால்கள் மற்றும் தேவைகள் குறித்தும் விவாதிக்கின்றனர். இந்தச் சந்திப்புகள் இளைஞர்கள் உருவாக்கும் பாடல்களுக்கு உத்வேகம் ஊட்டுகின்றன.

வான்கூவரில் உள்ள முன்முயற்சி உலகெங்கிலும் உள்ள பலவற்றில் ஒன்றாகும், அங்கு பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்குபெறும் மக்கள், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான நம்பிக்கையையும் செயலையும் ஊக்குவிக்கும் இசையின் ஆற்றலைப் பற்றி கற்றுக்கொள்கிறார்கள்.

பஹாய் பயிற்சிக்கழகங்களுடன் நெருக்கமாகச் செயல்படும் இதேபோன்ற முன்முயற்சிகளைப் பற்றி செய்திச் சேவை முன்பு அறிவித்துள்ளது. ஈக்வடோரில், தொடர் கருத்தரங்குகள் சமூக மாற்றத்தைப் பற்றிய பாடல்களைத் தூண்டின. இதற்கிடையில், நியூசீலாந்தில் உள்ள இளைஞர்கள் குழு, தார்மீகக் கருத்துகளைப் பற்றிய அவர்களின் புரிதலை இசை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை ஆராய்ந்து வருகிறது. மேலும், ஸாம்பியாவில், லுண்டா மக்களின் மேம்பாட்டு முயற்சிகளில் இசை இன்றியமையாத அங்கமாக உள்ளது.

உலகத்தைப் பற்றிய ஒருவரின் புரிதலை வடிவமைக்கும் மொழியின் ஆற்றலில் கவனம் செலுத்துவதன் மூலம், இளைய பங்கேற்பாளர்கள் தங்கள் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தவும், நுகர்வியல் சார்ந்த எதிர்மறை தாக்கங்களை எதிர்க்கும் திறனை வலுப்படுத்தவும் இந்தத் திட்டங்கள் உதவுகின்றன என்பதை இந்தத் திட்டங்களின் இளைஞர் ஒருங்கிணைப்பாளர்கள் அவதானித்துள்ளனர்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1635/

ஆஸ்திரியா: ‘மொழி கஃபே’ பிரிவினைகளை இணைக்கின்றது


22 டிசம்பர் 2022

வியன்னா – நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரியாவிற்கு புதிதாக வந்திருந்த தங்கள் பெற்றோர் மற்றும் அண்டை வீட்டாருக்கு இளைஞர்கள் குழு ஒன்று வழங்கிய ஜெர்மன் மொழி வகுப்புகள் என ஆரம்பித்த ஒன்று, இன்று மிகவும் பெரிதான ஒன்றாக உருவெடுத்துள்ளது.

வியன்னாவின் பஹாய்களால் நடத்தப்படும் ஒரு சமூக மையத்தில் வாராந்திரக் கூட்டங்கள் சிறு குழுக்களை ஒன்றுகூட்டி, அவர்களின் மொழித் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, வலுவான நட்புறவையும் உருவாக்குகின்றன.

பஹாய் சமூகத்தைச் சேர்ந்த பூரியா மஹல்லி கூறுகையில், “அவர்களின் சொந்த நாட்டில் எதிர் எதிரான மதப் பிளவுகளில் இருந்த பலர், வேறுபாடுகளைக் கடந்து வாழும் இடமாக இது ஆகியுள்ளது.

“மொழி கஃபே” என பெயரிடப்பட்ட வாராந்திர அமர்வுகள், வியன்னாவின் அண்டைப்புறத்தில் சமூகத்திற்கு சேவை செய்யும் திறனை வளர்க்கும் பஹாய் தார்மீகக் கல்வித் திட்டங்களில் ஈடுபட்டிருந்த பல இளைஞர்களின் முயற்சியாலிருந்து வளர்ந்துள்ளது.

திரு. மஹாலி கூறுவதாவது, “நட்பு, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் மற்றும் நமது பொதுவான மனிதத்தன்மை போன்ற கருப்பொருள்களில் பங்கேற்பாளர்கள் ஒருவருக்கொருவர் உரையாடுவதற்கு மொழி கஃபே ஒரு வாய்ப்பை வழங்குகின்றது. ஒரே மாதிரியான பல சவால்களையும் அபிலாஷைகளையும் அவர்கள் எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றனர் என்பதைப் பார்க்க பல்வேறு குடும்பங்கள் அங்கு வருகின்றன.

வியன்னா பஹாய்கள் வழங்கும் மொழி கஃபே, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் மற்றும் மானிடத்தின் இன்றியமையாத ஒருமைப்பாடு போன்ற கருப்பொருள்களில் பங்கேற்பாளர்கள் ஒருவருக்கொருவர் உரையாடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த விவாதங்கள் மூலம், பலதரப்பட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் பொதுவான நிலையைக் கண்டறிந்து வேறுபாடுகளைக் கடந்து செல்ல முடிந்தது.

பஹாய் சமூகத்தின் மற்றொரு உறுப்பினரான லிசெலோட் பால்க் விளக்குவதாவது: அவர்களின் கலந்துரையாடல்கள் சக குடிமக்களுக்கான சேவையை சிறப்பித்துக் காட்டுவதால், பங்கேற்பாளர்கள் மொழி கஃபேவின் வளர்ச்சிக்குப் பங்களிக்க தூண்டப்படுகிறார்கள்.

“உதாரணமாக, இந்த முன்முயற்சி குறிப்பாக பெண்கள் தங்கள் எழுத்தறிவு திறன்களை மேம்படுத்த ஒருவருக்கொருவர் உதவிட தூண்டியுள்ளது,” என அவர் கூறுகிறார். “சில பெண்களுக்கு இது மிகவும் கடினம். ஏனெனில், அவர்கள் தங்கள் சொந்தத் தாய்மொழியில் முறையான கல்வியைப் பெறுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.”

இந்தப் பிரச்சினையைப் பற்றி கலந்தாலோசித்த பிறகு, பங்கேற்பாளர்களில் சிலர், மொழி கஃபேயின் ஏற்பாட்டுக் குழுவின் உதவியுடன், தங்கள் தாய்மொழிகளில் எழுத்தறிவு வகுப்புகளை வழங்கத் தொடங்கினர் என திருமதி பால்க் கூறுகிறார்.

முன்பு ஆப்கானிஸ்தானில் பள்ளி இயக்குநராகப் பணிபுரிந்த ரஹிமா, இப்போது மொழி கஃபே அமைப்புக் குழுவில் முக்கிய உறுப்பினராக இருக்கின்றார். அவர் கூறுவதாவது: “மக்கள் எப்போதும் பெண்களைப் பற்றி (சொந்தமாக) முடிவெடுத்து, அவர்களுக்குக் கல்வியை மறுத்துள்ளனர். ஆனால் இப்போது, நமது எழுத்தறிவு மற்றும் மொழித் திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம், நாம் தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாகவும் இருக்கின்றோம். எங்கள் குழந்தைகள் கல்விமீது நாங்கள் சிறப்பாகக் கவனம் செலுத்த முடிகிறது.

“நான் கஃபேயில் பங்கேற்கும் வெவ்வேறு பெண்களிடம் உரையாடும்போது, அவர்கள் அனைவரும் உண்மையான சேவை மனப்பான்மையை அனுபவித்தது இதுவே முதல் முறை என கூறுகின்றனர்.”

மற்றொரு பங்கேற்பாளரான ஃபாஹிமா, இந்த முழு முன்முயற்சியும் சமூக முன்னேற்றத்திற்கான ஒரு சக்தியாக மதம் செயல்பட முடியும் என்னும் நுண்ணறிவுக்கு வழிவகுத்துள்ளது என விளக்குகிறார். “கடந்த காலங்களில், என்ன செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எந்த நபர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும், எவருடன் தொடர்பு கொள்ளக்கூடாது என எங்களுக்கு எப்போதும் கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால், நான் இங்கு எல்லா மதங்களின் உண்மையான விழுமியங்களைப் பார்க்கின்றேன்.

அவர் மேலும் கூறுவதாவது: “செயல்களில் நேர்மையை நீங்கள் காணலாம். இங்கு பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒருவர் மற்றவருக்கு ஆதரவு நல்கியும் ஒன்றாக உணவு உண்பதையும் பார்க்கின்றீர்கள். வேற்றுமைகள் பற்றிய விவாதம் இல்லாத சூழலை அனுபவிப்பது மிகவும் அழகாக இருக்கிறது. மாறாக, நம் அனைவரையும் ஒன்றிணைப்பதிலும், எங்களின் குடும்பங்களுக்கான எங்கள் விருப்பங்கள் மற்றும் மிகவும் அமைதியான உலகத்தைப் பேணுவதற்கான விருப்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1634/

பாஹ்ரேன்: சமுதாய மேம்பாட்டில் மதத்தின் முக்கிய பங்கை தேசிய கருத்தரங்குகள் எடுத்துக்காட்டுகின்றன.


19 டிசம்பர் 2022

மனாமா, பாஹ்ரேன், 19 டிசம்பர் 2022, (BWNS) — சமீப வாரங்களில் பாஹ்ரேனில் “The Bahrain Forum for Dialogue: East and West for Human Coexistence,” என்னும் தலைப்பிலான தேசிய ஒன்றுகூடல்களைத் தொடர்ந்து சகவாழ்வு குறித்த சொல்லாடலானது சமீபத்திய வாரங்களில் புதுப்பிக்கப்பட்ட கவனத்தைப் பெற்றுள்ளது. இது, மன்னர் ஹமாட் பின் இசா அல் கலீஃபாவால் ஊக்குவிக்கப்பட்டது.

இந்த சொல்லாடல்களில் சில போப்பாண்டவர் பிரான்சிஸ், அல்-அஸ்ஹாரின் மூத்த இமாம் ஆகியோரின் பங்கேற்பையும் உள்ளடக்கியுள்ளது. இந்த மன்றங்கள் மற்ற மதத் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள், பாஹ்ரேனின் பஹாய் வெளிவிவகார அலுவலக உறுப்பினர்கள் மற்றும் பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரதிநிதியான பானி டுகால் ஆகியோரை சமூக நல்லிணக்கம் தொடர்பான கேள்விகளை ஆராயவும் ஒன்றிணைத்துள்ளன. .

சமூக முன்னேற்றத்தில் மதம் வகிக்கக்கூடிய முக்கிய பங்கை மையமாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடல்களுக்கு பஹாய் சமூகத்தின் பங்களிப்பு, பரந்த அளவிலான தேசிய ஊடகங்களில் இருந்து பிரசித்தம் வழங்கப்பட்டது.

நாடு தழுவிய வானொலி நிகழ்ச்சியில், (பஹாய்) வெளிவிவகார அலுவலகத்தின் உறுப்பினரான ஜலால் கலீல், பாஹ்ரேன் பஹாய்களால் மாதந்தோறும் தேசிய அளவில் சமூக ஆர்வலர்களை ஒன்றுகூட்டி நடத்தப்படும் ஒரு வழிபாட்டுக் கூட்டம் பற்றி பேசினார்.

“இந்தக் கூட்டங்கள் மனிதகுலத்தின் உள்ளார்ந்த ஒற்றுமையை ஊக்குவிக்கின்றன; அக்கூட்டங்கள் தனிநபர்களின் நல்வாழ்வு அவர்களுடைய சமூகத்தின் நல்வாழ்வுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை பங்கேற்பாளர்கள் மதித்துணர உதவுகின்றன” என திரு. கலீல் கூறினார்.

லௌகீக மற்றும் ஆன்மீக ரீதியில் வளமான உலகிற்கான ஒரு பொது தொலைநோக்கை உருவாக்கிக்கொள்ள பலவித பின்னணிகளைக் கொண்ட மக்களுக்கு உதவும் கருத்தரங்குகளின் மகத்தான மதிப்பை பாஹ்ரேன் பஹாய்கள் உணர்கின்றனர் என அவர் விளக்கினார். “சகிப்புத்தன்மை மற்றும் மனிதகுலத்திற்குச் சேவை செய்வது குறித்த மதங்களுக்கிடையிலான உரையாடல் மிகவும் முக்கியமானது” என அவர் கூறினார். அதன் சாரத்தில், மதமானது மக்களிடையே அன்புக்கும் ஐக்கியத்திற்குமான வழியாகத் திகழ முடியும் என்னும் ஒரு பொதுப் புரிதலை மக்கள் அடைந்திட அது உதவுகின்றது.

பஹாய் வெளிவிவகார அலுவலகம் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில், சமூகத்தில் மதத்தின் ஆக்கப்பூர்வமான பங்கை ஆராய்வதற்காக அதிகாரிகள், சமய சமூகங்களின் பிரதிநிதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஒன்று சேர்ந்தனர். பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரதிநிதி பானி டுகால் தொடக்கவுரையாற்றினார்.

வெளிவிவகார அலுவலகம் நடத்திய நிகழ்வில் பிரார்த்தனைக்கும் சேவைக்கும் இடையிலான உறவு அதிகாரிகள் மற்றும் சமயம் சார்ந்த சமூகங்களின் பிரதிநிதிகளால் மேலும் ஆராயப்பட்டது. இதில் திருமதி டுகாலின் கருத்துக்களும் இடம்பெற்றன.

“வழிபாடும் மனிதகுலத்திற்கான சேவையும் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன,” என அவர் கூறினார்.

“பிரார்த்தனை இறுதியில் நோக்கம் நிறைந்த வாழ்வில் வாழப்பட வேண்டும்,” என திருமதி டுகால் தொடர்ந்து கூறினார். “இது உலகெங்கிலும் உள்ள தேசிய மற்றும் உள்ளூர் பஹாய் சமூகங்களில் பேணப்படும் வழிபாட்டுத் தலங்களில் பொதிந்துள்ள கொள்கையாகும். அத்தகைய இடங்கள்… விதிவிலக்கு இல்லாமல் அனைத்து மக்களுக்கும் திறந்திருக்கும்… மேலும் மதரீதியாகப் பலதரப்பட்ட சமூகங்கள் உண்மையில் அமைதிக்கான இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதற்கு அவை சான்றாக நிற்கின்றன.

பரவலாகப் பார்க்கப்படும் தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில், நேர்காணலின் போது, திரு. கலீல், வேற்றுமையில் ஒற்றுமை என்னும் கொள்கையை வலியுறுத்தினார். அதற்கு அவர் மானிடமானது இடைசார்ந்திருப்பதை எடுத்துக்காட்டுவதற்காக மனித உடலின் உவமானத்தை வரைந்து காட்டினார்.

“மனித உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பும் உயிரணுவும் அதன் குறிப்பிட்ட செயல்பாடு மற்றும் கலவையைக் கொண்டுள்ளது. இந்த உறுப்புகளுக்கும் உயிரணுக்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புதான் மனித உடலை முழுமைப்படுத்துகிறது. அதே வழியில்… மானிடமும் இணைந்து செயல்பட முடியும். இந்தப் பன்முகத்தன்மை அழகு மற்றும் செழுமைக்கான மூலாதாரமாக இருக்க வேண்டும்.

திரு. கஹ்லில் மேலும் கூறுகையில், சகவாழ்வு ஓர் உயர்ந்த இலக்கை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றாலும், இந்த உருவகம் பெரிய ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறது. பஹாய் போதனைகளில் விவரிக்கப்பட்டுள்ள ஒற்றுமை என்னும் கருத்து, வேறுபாடுகளைத் தாண்டிச் செல்வது மட்டுமின்றி, அனைவரின் நலனுக்காகச் செயல்படவும் அது மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றது என அவர் கூறினார்.

இந்தக் கருப்பொருள் பாஹ்ரேன் பஹாய்களால் தயாரிக்கப்பட்ட ஒரு புதிய காணொளிக்கான அகத்தூண்டலாகும். இது பல்வேறு பின்னணியைச் சார்ந்த இளைஞர்கள் உள்ளடக்கம், ஒருமைப்பாடு மற்றும் சக மனிதர்களுக்கான சேவை பற்றி பாடுவதைச் சித்தரிக்கின்றது. தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பப்பட்ட இந்தக் காணொளி, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டங்களுடன் இணைவாக ஒளிபரப்பப்பட்டது. இது சமூக நல்லிணக்கம் குறித்த சொல்லாடலுக்கான வெளியுறவு அலுவலக பங்களிப்புகளின் ஒரு பகுதியாகும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1633/

அப்துல்-பஹாவின் நினைவாலயம்: அக்காநகர் வருகையாளர் மையத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கின்றன


15 டிசம்பர் 2022

பஹாய் உலக மையம், 15 டிசம்பர் 2022, (BWNS) — அப்துல்-பஹா மற்றும் ரித்வான் தோட்டத்திற்கு யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்களை வரவேற்கும் ‘அக்காநகர் வருகையாளர் மையத்தின்’ பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன.

நினைவாலயம் நிறைவடைந்ததும், பார்வையாளர்கள், அவர்களில் பலர் தங்கள் அன்பையும் பக்தியையும் வெளிப்படுத்த வெகுதூரம் பயணித்து, ‘அப்து’ல்-பாஹாவின் இறுதி இளைப்பாறல் தளத்தில் பிரார்த்தனை செய்வதற்காகவும் தியானம் செய்வதற்காகவும் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள ‘அக்காநகர் பார்வையாளர்கள்’ மையத்திற்கு வருவார்கள்.

இந்த ஆலயத்திற்கான தளம் ரித்வான் தோட்டத்திற்கு அருகாமையில் உள்ளது. இது ‘அப்துல்-பஹாவினால் நிர்மாணிக்கப்பட்டது. பஹாவுல்லா தமது வாழ்க்கையின் பெரும் பகுதியை நாடுகடத்தப்பட்டும், சிறைவாசத்திலும் கழித்திருந்தார். இவ்விடம் பஹாவுல்லா தமது வாழ்வின் இறுதி வருடங்களை ஓய்வாகக் கழிப்பதற்கான இடமாக இருந்தது.

பார்வையாளர்கள் மையம் தளத்தின் வடகிழக்கு மூலையில், ரித்வான் தோட்டத்திற்கு நேரடியாக வடக்கே மற்றும் ‘அப்துல்-பஹா’ நினைவாலயத்திற்குக் கிழக்கே அமைந்திருக்கும். இந்த வளாகம் மூன்று கட்டிடங்களைக் கொண்டிருக்கும்: ஒரு யாத்ரீகர் வரவேற்பு மையம்: இது கட்டிடங்களில் மிகப்பெரியதாக இருக்கும். ஒரு பொது பார்வையாளர்கள் மையம்: தளத்தின் வடக்கு வாயிலுக்கு அருகில் அமைந்திருக்கும். மற்றும், கிழக்கு வேலி ஓரமாக அமையவிருக்கும் ஒரு பயன்பாட்டுக் கட்டிடம்.

மின்சாரம், நீர் மற்றும் வடிகால் வசதிக்கான அடித்தளம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியன ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மேலும், கட்டிட அஸ்திவாரங்களுக்கான அடித்தூண்களின் கட்டுமானம் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் தொடங்கியது.

(வடிவமைப்பு படம்) இந்த வரைபடம், மேற்கு நோக்கி, ரித்வான் தோட்டம் மற்றும் ‘அப்துல்-பஹா’ நினைவாலயம் தொடர்பாக புதிய கட்டிடங்களின் இருப்பிடத்தைக் காட்டுகிறது. திட்டம் நிறைவடைந்ததும், யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்கள் கிழக்கு வாயில் வழியாக தளத்திற்குள் நுழைவார்கள், அங்கு அவர்கள் தியானமிக்க பயணத்தின் போது ஆலயத்தை நோக்கிச் செல்வதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்ட பாதையில் தொடரும் முன் ‘அக்காநகர் பார்வையாளர் மையத்தைப் பார்வையிடலாம்.
மேலே உள்ள படம், பார்வையாளர்கள் மையக் கட்டிடங்களுக்குத் தயாராக்கப்படும் அடித்தள வேலையைக் காட்டுகிறது.
(வடிவமைப்பு வரைபடம்) யாத்ரீகர்களும் வருகையாளர்களும் வருகையாளர் மையத்திலிருந்து வரலாற்றுப்பூர்வ பாதையில் (நடுவில் வலதுபுறம்) செல்வார்கள், இது குறைந்த பட்சம் ‘அப்துல்-பஹாவின் காலத்திலிருந்தே உள்ளது.
பார்வையாளர்கள் மையத்திற்கான அடித்தளம் அமைக்கும் பணி தொடங்கும் போது, நினைவாலயத்தின் கட்டுமானப் பணிகளும் வேகமாக முன்னேறி வருகின்றன. வலதுபுறத்தில் பின்னணியில் பழைய அக்காநகர் காணப்படுகிறது.
(வடிவமைப்பு வரைபடம்) இந்தப் படம் வடக்கு வாசலில் இருந்து ஒரு காட்சியைக் காட்டுகிறது. வரலாறு சார்ந்த பாதையை மையமாகக் கொண்டு, வலதுபுறத்தில் நினைவாலயத்தின் கிழக்குப் பகுதி மற்றும் இடதுபுறத்தில் அக்காநகர் பார்வையாளர்கள் மையம்.
(வடிவமைப்பு வரைபடம்) இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள பொது பார்வையாளர்கள் மையம் வடக்கு வாயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. வழிகாட்டுனர்கள் இங்கு பார்வையாளர்களுக்கு விளக்கமளித்து, தளத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை விளக்குவார்கள்.
(வடிவமைப்பு வரைபடம்) பொதுப் பார்வையாளர்களின் கட்டிடத்திலிருந்து மேற்கு நோக்கிப் பார்த்தால், ஆலயத்தின் கிழக்குப் பகுதியைக் காண முடியும்.
ரித்வான் தோட்டத்திற்குச் செல்லும் வரலாற்றுச் சிறப்புடைய பாதை மற்றும் ‘அப்துல்-பஹா’ நினைவாலயத்திற்கான வாயில்
1875-இல் பஹாவுல்லா அக்காநகர் சிறைக்குள் அடைக்கப்பட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அப்துல்-பஹா தமது தந்தைக்காக இந்த அழகிய தோட்டத்தை உருவாக்கினார். பஹாவுல்லா தோட்டத்தை “ரித்வான்” என அழைத்தார், அதாவது “சொர்க்கம்”.
பஹாவுல்லா இத்தோட்டத்தைப் “பசுமை தீவு” என பெயரிட்டார்
பஹாவுல்லா ரித்வான் தோட்டத்திற்கு வரும்போதெல்லாம் இக்கட்டிடத்தின் மேற்புற அறைகளில் தங்குவார்
இதற்கிடையில், நினைவாலயத்தின் வேலைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன, மத்திய பிளாசாவை விரிவுபடுத்தும் குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி வேலைகளை எளிதாக்க சாரக்கட்டு தயாராக உள்ளது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1632/

பாப் பெருமானார் தியாகமரணத்தின் விளைவு


இரண்டு உலகளாவிய தீர்க்கதரிசன சுழற்சிகளின் (உலகின் பதிவுசெய்யப்பட்ட மத வரலாற்றின் முதல் விடியல்கள் வரை நீண்டுகொண்டிருக்கும் ஆதாமிய சுழற்சி மற்றும் பிறக்காத பகுதிகள் முழுவதும் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்குக் குறையாத காலம் தன்னைத்தானே செலுத்திக்கொள்வதற்கு விதிக்கப்பட்ட பஹாய் சுழற்சி) சங்கமத்தில் நிற்பதாக இனிவரும தலைமுறையினர் அங்கீகரிக்கும் ஒரு வாழ்க்கை இவ்வாறு முடிந்தது. ஏற்கனவே கவனிக்கப்பட்டபடி, அத்தகைய ஒரு வாழ்க்கை அதன் நிறைவை அடைந்ததானது, பஹாய் காலகட்டத்தின் வீர யுகத்தின் மிகவும் வீரம் நிறைந்த கட்டத்தின் உச்சக்கட்டத்தைக் குறிக்கின்றது. மேலும், இது முதல் பஹாய் நூற்றாண்டின் முழு வரம்பிற்குள்ளும் நடந்த மிகவும் வியத்தகு, மிகவும் சோகமான ஒரு நிகழ்வைத் தவிர வேறு எந்த அடிப்படையிலும் கருதப்பட முடியாது.உலகில் தற்போதுள்ள மத அமைப்புகளின் அனைத்து ஸ்தாபகர்களின் வாழ்க்கை வரலாற்றிலும் இது இணையற்ற ஒன்றென முறையுடன் பாராட்டலாம்.

அத்தகைய ஒரு நிகழ்வு, அது நிகழ்ந்த நாட்டின் எல்லைக்கு அப்பாலும் பரவலானதும் ஆழமானதுமான ஓர் ஆர்வத்தைத் தூண்டாமல் இருந்திட முடியாது. “அது மானிடம் சிந்திப்பதற்காக வழங்கப்பட்ட துணிச்சலின் ஒரு மகத்தான உதாரணங்களில் ஒன்றாகும்,” என்பது பாரசீகத்தில் வாழ்ந்தும் பாப் பெருமானாரின் வாழ்க்கை மற்றும் போதனைகளுடன் தம்மைப் பரிச்சயப்படுத்திக்கொண்ட ஒரு கிருஸ்துவ கல்விமானும் அரசாங்க அதிகாரியுமான ஒருவரின் சான்றாகும், மற்றும் இது நமது இந்த கதாநாயகர் தமது சக குடிகளின்பால் கொண்டிருந்த அன்பிற்கான மனதைக் கவரும் ஆதாரமும் ஆகும். அவர் மானிடத்திற்காகத் தம்மை அர்ப்பணித்தார்: அவர் தமது உடலையும் ஆன்மாவையும் வழங்கினார், மானிடத்திற்காக கொடுமைகளையும் அவமானங்களையும் துன்புறுத்தல்களையும் தாங்கிக் கொண்டார், தியாகமரணமும் அடைந்தார். சர்வலோக சகோதரத்துவம் குறித்த ஒப்பந்தத்திற்கு தமது இரத்தத்தினால் முத்திரையிட்டார், இயேசு நாதரைப் போன்றே நல்லிணக்கத்தின் ஆட்சி, சமத்துவம், அண்டையர்பால் அன்பு ஆகியவற்றுக்காக தமது உயிரையே அர்ப்பணித்தார்.” “மானிட வரலாற்றில் தனித்துவமான ஒரு மர்மமிகு பொருண்மை,” என்பது பாப் பெருமானாரின் தியாகமரணத்தின் சூழ்நிலையை பற்றி கருத்து தெரிவிக்கும் போது அதே கல்விமானின் எழுதுகோலிலிருந்து வரும் மேலும் ஒரு சான்றளிப்பு. “ஓர் உண்மையான மர்மநிகழ்வு,” என்பது ஒரு புகழ்பெற்ற பிரெஞ்சு கிழக்கியலாளரின் அறிவிப்பு. “ஓர் உண்மையான கடவுள்மனிதன்,” என்பது ஒரு புகழ்பெற்ற பிரிட்டிஷ் பயணியர் மற்றும் எழுத்தாளரின் தீர்ப்பாகும். “அவரது நாட்டின் (பாரசீகத்தின்) மிகச்சிறந்த வெளிப்பாடு” என்பது ஒரு பிரபலமான பிரெஞ்சு விளம்பரதாரர் அவருக்கு செலுத்திய அஞ்சலி. “இக்காலத்தின் இயேசு … ஒரு தீர்க்கதரிசி, ஒரு தீர்க்கதரிசிக்கும் மேலான ஒருவர்,” என்பது ஒரு தனிசிறப்புற்ற ஆங்கில மதத்தலைவர் வழங்கிய தீர்ப்புரை. “கிருஸ்துவம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து, மிகவும் முக்கிய சமய இயக்கம்,” என்பது பாப் பெருமானார் ஸ்தாபித்த சமயத்திற்காக மிகவும் பிரபலமான ஆக்ஸ்ஃபர்ட் கல்விமானாகிய காலஞ்சென்ற பால்லியோல் மாஸ்டர் தொலைநோக்காகக் கண்ட ஒரு சாத்தியமாகும்.

“உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பலர், பாரசீகத்திற்குப் புறப்பட்டு, முழு மனதாக இவ்விஷயத்தை விசாரிக்கத் தொடங்கினர்” என்பது ‘அப்துல்-பாஹாவின் எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தலாகும். ரஷ்ய ஸார் மன்னர், பாப் பெருமானாரின் தியாக மரணத்திற்குச் சற்று முன்பாக, தப்ரீஸில் உள்ள ரஷ்ய தூதரகத்தை விளித்து அவ்விஷயத்தைப் பற்றி முழுமையாக விசாரித்து, அத்தகைய திடுக்கிடச்செய்யும் ஓர் இயக்கத்தின் சூழ்நிலைகளைத் தெரிவிக்குமாறு கட்டளையிட்டார் என அக்கால எழுத்தாளர் ஒருவர் எழுதியுள்ளார். ஆனால், பாப் பெருமானார் மரண தண்டனையின் நிறைவேற்றம் காரணமாக இக்கட்டளை நிறைவேற்றப்பட முடியாது போயிற்று.  மேற்கு ஐரோப்பாவைப் போன்ற தொலைதூர நாடுகளிலும் கூட இவ்விஷயம் குறித்து சற்றும் குறையாத ஆர்வம் தூண்டப்பட்டதுடன், இலக்கிய, கலை, இராஜதந்திர மற்றும் அறிவுசார் வட்டாரங்களுக்கும் அது மிக வேகமாகப் பரவியது. “ஐரோப்பா முழுவதும், பரிதாப உணர்வினாலும் கோபத்தினாலும் தூண்டப்பட்டது என மேலே குறிப்பிடப்பட்ட பிரெஞ்சு விளம்பரதாரர் சான்றளிக்கிறார்.  …எனது தலைமுறையின் இலக்கியவாதிகள் மத்தியில், 1890-ஆம் ஆண்டு பாரீஸில் வெளிவந்த பாப் பெருமானாரின் தியாக மரணம் குறித்த முதல் செய்தியைப் போலவே அவரது மரணம் இன்னும் பசுமையான தலைப்பாக இருந்தது. அவரைப் பற்றி நாங்கள் கவிதைகள் புனைந்தோம். சாரா பெர்ன்ஹார்ட் இந்தச் சரித்திரபூர்வ சோகக் கதையின் கருப்பொருளில் ஒரு நாடகத்திற்காக கட்டுல்லே மெண்டேஸை வேண்டிக்கொண்டார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் தத்துவ, ஓரியண்டல் மற்றும் விவிலிய சங்கங்களின் உறுப்பினரான ஒரு ரஷ்ய கவிஞர், 1903-இல் “தி பாப்” என்னும் தலைப்பில் ஒரு நாடகத்தை வெளியிட்டார். இந்த நாடகம் ஒரு வருடம் கழித்து அந்த நகரத்தின் முக்கிய திரையரங்குகள் ஒன்றில் அரங்கேற்றப்பட்டது. அது லண்டனில் பிரபலப்படுத்தப்பட்டது, பாரிஸில் பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது, கவிஞர் ஃபீட்லரால் ஜெர்மன் மொழிக்கும் மொழிபெயர்க்கப்பட்டது, ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு, லெனின்கிராட்டில் உள்ள நாட்டுப்புற அரங்கில் மீண்டும் அரங்கேற்றப்பட்டது, மேலும் புகழ் பெற்ற டால்ஸ்டாயின் உண்மையான அனுதாபத்தையும் ஆர்வத்தையும் தூண்டுவதில் அது வெற்றி பெற்றது. பின்னர், அவ்விஷயம் குறித்த அவரது கவிதைக்கான அஞ்சலி ரஷ்ய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது.

ஷோகி எஃபென்டி – கடவுள் கடந்து செல்கின்றார்

ஒரு நம்பமுடியாத அநீதி: ஈரானில் மஹ்வாஷ் சபேட், ஃபரிபா கமலபாடி இருவருக்கும் இரண்டாவது தசாப்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது


BIC ஜெனீவா, 11 டிசம்பர் 2022, (BWNS) – ஈரானிய அதிகாரிகள் தங்கள் சொந்தக் குடிமக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு மத்தியில், மீள்திறத்தின் சின்னங்களாகக் கருதப்படும் இரண்டு பஹாய் பெண்மணிகளான, மஹ்வாஷ் சபேட், ஃபரிபா கமலாபாடி இருவரும் ஈரானில் 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு, இரண்டாவது முறையாக அவர்களுக்குக் கொடூரமான 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் பஹாய்களுக்கு எதிரான புதிய ஒடுக்குமுறையின் தொடக்கத்தில் இந்த இரண்டு ஈரானிய பஹாய் பெண்களும் ஜூலை 31-இல் இரண்டாம் முறையாகக் கைது செய்யப்பட்டனர்.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பஹாய்களுக்கு எதிரான அடக்குமுறையின் பின்னணியில் 31 ஜூலையில் மீண்டும் கைது செய்யப்பட்ட ஃபாரிபா கமாலபாடி (வலம்) மற்றும் மஹ்வாஷ் சபேட் (இடம்)

மஹ்வாஷ் மற்றும் ஃபரிபா கைது செய்யப்பட்டதில் இருந்து 320-க்கும் மேற்பட்ட பஹாய்கள் தனிப்பட்ட துன்புறுத்தல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஷிராஸ், மஸிந்தரான் மாகாணம் மற்றும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் டஜன் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். ரோஷன்கோவ் கிராமத்தில் பஹாய்களுக்குச் சொந்தமான வீடுகள் இடிக்கப்பட்டன. வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் பிரச்சாரம் மூலம் பஹாய்களுக்குக் களங்கம் விளைவிக்கும் அரசாங்கத் திட்டங்கள் அம்பலப்படுத்தப்பட்டன. மேலும் குறைந்தபட்சம் சுமார் 90 பஹாய்கள் தற்போது சிறையில் உள்ளனர் அல்லது கணுக்கால்-பட்டை கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நவம்பர் 21-இல் ஒரு மணிநேர விசாரணைக்குப் பிறகு சமீபத்திய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது – இது பெரும்பாலும் நீதிபதி பிரதிவாதிகளை அவமதிப்பதிலும் அவமானப்படுத்துவதிலும் செலவிடப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த விசாரணை நடந்தது. தெஹ்ரானில் உள்ள புரட்சி நீதிமன்றத்தின் கிளை 26-க்குத் தலைமை தாங்கிய நீதிபதி இமான் அஃப்ஷாரி, இரண்டு பெண்களும் தங்கள் முந்தைய சிறைவாசத்தில் இருந்து “பாடம் கற்றுக்கொள்ளவில்லை” என கண்டித்தார்.

மஹ்வாஷ், ஃபரிபா இருவரின் முதல் விசாரணையின் போது வழக்குரைஞரும் நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் ஷிரின் எபாடி, 2008-இல் தேசிய பாதுகாப்பு குற்றச்சாட்டுகள் அல்லது பிற குற்றச்சாட்டுகளை நிரூபிக்க “ஒரு துளி ஆதாரமும் இல்லை” என கூறினார். அதே போன்று, இந்த சமீபத்திய விசாரணையிலும் எந்த புதிய ஆதாரமும் வெளிவரவில்லை.

“ஏற்கனவே அநியாயமாக ஒரு தசாப்த காலத்தைத் தங்கள் நம்பிக்கைகளுக்காக சிறைவாசம் அனுபவித்த இந்த இரண்டு பஹாய் பெண்களும், அதே கேலிக்குரிய குற்றச்சாட்டின் பேரில் மீண்டும் 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என அறிவது மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கிறது” என ஐக்கிய நாடுகள் சபைக்கான பஹாய் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதி சிமின் ஃபஹாண்டேஜ் கூறினார். “மஹ்வாஷ் மற்றும் ஃபரிபா இருவரும் ஏற்கனவே 10 கடுமையான ஆண்டுகளாக தங்களிடையே இல்லாததைத் தாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள குடும்பங்களின் மனைவிகள், தாய்மார்கள் மற்றும் பாட்டிகளாவர். இந்தக் குடும்பங்கள் ஏற்கனவே அனுபவித்த அநியாய சிறைதண்டனைக்கு வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக, ஈரான் அரசாங்கம் நம்பமுடியாத மற்றும் விவரிக்க முடியாத அதே கொடுமையை இரண்டாவது முறையாக மீண்டும் இழைக்கின்றது. எந்த ஆதாரமும் இல்லாமல் வழங்கப்பட்ட இந்த அபத்தமான தண்டனை, ஈரானிய நீதித்துறை அமைப்பை முற்றிலும் கேலி செய்கிறது. அங்கு நீதிபதிகளே வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் ஜூரிகள் என அனைவரும் ஒரே நிலையில் உள்ளனர். இந்த அபத்தமான மற்றும் கொடூரமான அநீதியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.

இவ்விரு பெண்களின் ஆதரவாளர்கள் அவர்களை மீள்திறத்தின் சின்னங்கள் எனவும், ஒடுக்கப்பட்ட மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட பிற நபர்களின் நம்பிக்கைக்குரியவர்கள் எனவும், அனைத்து ஈரானியப் பெண்களுக்கும் தாய்கள் எனவும் அழைத்தனர்.

மஹ்வாஷ் சபேத் சிறையில் தாம் எழுதிய கவிதைத் தொகுதி ஆங்கிலத்தில் சிறைக் கவிதைகள் என்னும் தலைப்பில் வெளியான பிறகு சர்வதேச அளவில் பிரபலமடைந்தார். மஹ்வாஷ் PEN இன்டர்நேஷனினால் அதன் 2017 ஆண்டிற்கான துணிச்சல்மிகு சர்வதேச எழுத்தாளராக அங்கீகரிக்கப்பட்டவராவார்.

மஹ்வாஷ் மற்றும் ஃபரிபாவின் முதல் சிறைவாசத்தின் போது அதே நேரத்தில் பல முக்கிய ஈரானிய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஈரானில் பெண்களின் கோரிக்கைகளை ஆதரித்ததற்காகத் தானே மீண்டும் சிறையில் இருக்கும் முன்னாள் ஈரானிய ஜனாதிபதி அக்பர் ஹஷேமி ரஃப்சஞ்சானியின் மகள் ஃபயிஸே ஹஷெமி, ஃபரிபாவின் சிறை விடுமுறையின் போதும் அவர் விடுதலையான பிறகும் அவரைச் சந்தித்தபோது அவர் நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளையே உருவாக்கினார். மேலும் ஈரானிய-அமெரிக்க பத்திரிகையாளரான ரோக்ஸானா சபேரி, மஹ்வாஷ் மற்றும் ஃபரிபாவுடன் ஒரு சிறை அறையைப் பகிர்ந்துகொண்டார். அவ்விரண்டு பஹாய்களும் தங்கள் சக கைதிகளுக்கு ஆறுதலுக்கும் நம்பிக்கையின் ஆதாரங்களாகவும் இருந்தனர் என அவர் கூறினார்.

“டைம் இதழ் ஈரானியப் பெண்களை ‘ஆண்டின் சிறந்த ஹீரோக்கள்’ என குறிப்பிடுவது போல, அனைத்து ஈரானியர்களின், குறிப்பாகத் தங்களின் உரிமைகள் கொடூரமான முறையில் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட போது, தியாகத்துடன் உறுதியாக இருந்த பெண்களின் துணிச்சலையும் வீரத்தையும் சர்வதேச சமூகம் சரியாக அங்கீகரித்துள்ளது” என திருமதி. ஃபஹண்டேஜ் மேலும் கூறினார். மாஹ்வாஷ், ஃபாரிபா இருவரும் அத்தகைய இரு பெண்களாவர். அவர்கள் பல வருடங்களாக பெண் மற்றும் ஆண் சமத்துவத்தை ஊக்குவித்து வந்துள்ளனர், நீதிக்கும் உண்மைக்கும் அறைகூவல் விடுத்துள்ளனர், அதன் விளைவாக அக்கோட்பாடுகளை ஊக்குவித்ததன் காரணமாகக் கடும் விளைவுகளை அனுபவித்துள்ளனர். இந்தத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும், மஹ்வாஷ், ஃபரிபா மற்றும் அனைத்து மனசாட்சிக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும், மேலும் அதன் மக்களின் உரிமைகளை திட்டமிட்டு மீறும் அடக்குமுறை இயந்திரத்தின் ஒவ்வொரு பகுதியையும் அகற்ற வேண்டும் என ஈரான் அரசாங்கத்திற்குச் சொல்ல அனைவரும் இப்போது அவர்களுடனும், அனைத்து ஈரானிய பெண்களுடனும் ஒன்று சேர்ந்து நிற்போமாக.”

பின்னணி

69 வயதான மஹ்வாஷ் மற்றும் 60 வயதான ஃபரிபா ஆகியோர் ஈரானிய அரசாங்கத்தின் முழு அறிவோடு பஹாய் சமூகத்தின் அடிப்படை நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முறைசாரா குழுவின் உறுப்பினர்களாக 2008-இல் முதன்முதலில் கைது செய்யப்பட்டனர். ஐந்து ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட இந்தக் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்கள் நம்பிக்கைகளுக்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். மஹ்வாஷ், ஃபரிபா மற்றும் மற்றவர்கள் இறுதியாக 2018-இல் விடுவிக்கப்பட்டனர்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1631/

குறும்படம்: “அறிவைத் தேடும் அனைவருக்கும் ஒரு நூலகம்


சாண்டி, ஐக்கிய அரசு, 6 டிசம்பர் 2022, (BWNS) — அஃப்னான் நூலகத்தைப் பற்றிய ஒரு சிறு ஆவணப்படத்தை பஹாய் உலக செய்தி சேவை வெளியிட்டுள்ளது, இதில் 12,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள், அசல் கடிதங்கள் மற்றும் பிற உபகரணங்கள் உள்ளன.

பஹாய் சமயத்தின் மைய நாயகர்களின் முக்கியமான சுயசரிதைகளை எழுதிய சமய திருக்கரமும் ஒரு புகழ்பெற்ற வரலாற்று அறிஞரான ஹசான் பால்யுசியின் (1908 – 1980) வேண்டுகோளின் பேரில் 1985-ஆம் ஆண்டில் அஃப்னான் நூலக அறக்கட்டளை ஸ்தாபிக்கப்பட்டது. அவரது சுய சேகரிப்பு “அறிவைத் தேடும் அனைவருக்கும்” கிடைக்க வேண்டும் என்பதே திரு. பால்யுசியின் விருப்பமாகும்.

திரு. பால்யூஸி அஃப்னான் குடும்பத்தைச் சேர்ந்தவர், பாப் பெருமானார் மைத்துனரின் பேரன், பஹாய் சமயத்தின் இரட்டை அவதார-ஸ்தாபகர்களில் ஒருவர்.

நூலகத்தின் அறங்காவலர்களில் ஒருவரான மூஜான் மோமன், “ஒர் ஆராய்ச்சி நூலகத்தின் மையமாகத் தனது சேகரிப்பை உருவாக்க விரும்புவதாக திரு பால்யூசி தனது உயிலில் குறிப்பிட்டுள்ளார்” என கூறுகின்றார்.

நூலக அறக்கட்டளை 1985-ஆம் ஆண்டு நிறுவப்பட்டும், பல்வேறு தற்காலிக இடங்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும், 2015-ஆம் ஆண்டு வரை தற்போதைய கட்டிடத்தில் நிரந்தரமாக சேகரிப்பு இடம் பெற முடியவில்லை.

பஹாய் சமயம், பாரசீக மற்றும் மத்திய கிழக்கு வரலாறு, கலாச்சாரம் மற்றும் மதம் பற்றிய ஆய்வு உட்பட, திரு. பால்யூசியின் தொகுப்பில் உள்ள பாடப் பகுதிகளை பிரதிபலிக்கும் புத்தகங்களுடன் அஃப்னான் நூலகம் தொடர்ந்து அதன் சேகரிப்பை வளர்த்து வருகிறது என டாக்டர் மோமன் விளக்குகிறார்.

அவர் மேலும் கூறுவதாவது: “நூலகத்தில் 1970-களில் ஈரான் பஹாய்களின் தேசிய ஆன்மீகச் சபையால் வெளியிடப்பட்ட பஹாய் சமயத்தின் புனித எழுத்துக்களின் கையெழுத்துப் பிரதிகளின் நூறு தொகுதிகள் அடங்கியுள்ளன.”

ஈரானிய தேசிய பஹாய் காப்பகங்கள் என்னும் தலைப்பில் உள்ள இந்தத் தொகுதிகளின் டிஜிட்டல் டிரான்ஸ்கிரிப்டுகளை அஃப்னான் நூலக இணையதளத்தில் கிடைக்கும் வகையில் பஹாய் உலக மையத்தின் ஆராய்ச்சித் துறையுடன் நூலகம் அணுக்கமாகப் பணியாற்றியுள்ளது.

“இந்த தொகுதிகள் டிஜிட்டல் டைப்ஸ்கிரிப்டுகளாகவும், கையெழுத்துப் பிரதிகளின் டிஜிட்டல் படங்களாகவும் கிடைப்பது பாரசீக மற்றும் அரபு மொழிகளைப் படிக்கும் நபர்களுக்கு அணுகக்கூடியதாக இருக்கிறது, ஆனால் 19-ஆம் நூற்றாண்டின் கையெழுத்துப் பிரதிகளின் கையெழுத்தைப் படிப்பதில் சிரமம் இருந்திருக்கலாம்” என ஆராய்ச்சித் துறையின் ஒருங்கிணைப்பாளர் ஹோலி ஹான்சன் கூறுகிறார்.

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தொகுதிகளில் பஹாவுல்லாவின் 4,000 படைப்புகளும், அப்துல்-பஹாவின் 3,000-க்கும் மேற்பட்ட படைப்புகளும், பாப் பெருமானாரின் பல எழுத்துக்களும் உள்ளன என்று டாக்டர். ஹான்சன் மேலும் கூறுகிறார். “பஹாய் எழுத்துக்களை கருப்பொருளாகப் படிக்க விரும்புவோருக்கு அல்லது இந்த ஆயிரக்கணக்கான நிருபங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேட விரும்புவோருக்கு இது மிகப்பெரும் மதிப்புமிக்க வளத்தை வழங்குகிறது.”

அஃப்னான் நூலகத்தைப் பற்றிய சிறு ஆவணப்படத்தை இங்கே பார்க்கலாம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1629/