சேவை: மனிதவாழ்வின் ஒரு மெய்நிலை


மனித படைப்பின் நோக்கத்தை பஹாவுல்லா வழங்கியுள்ள பிரார்த்தனை ஒன்றில் நாம் காணலாம், அதாவது அவரை (கடவுளை) “அறிந்து வழிபடுவதற்கெனவே” நாம் படைக்கப்பட்டுள்ளோம் என்பது. கடவுளை எவ்வாறு அறிவது? கடவுளை நேரடியாக அறிந்துகொள்ளும் திறம் மனிதருக்குக் கிடையாது. ஒரு பாத்திரத்தில் நாம் நிறைய கடுகுகளை கொட்டி வைக்கலாம், ஆனால் ஒரு சிறு கடுகிற்குள் ஒரு பாத்திரத்தை நுழைக்க முடியாது. அதே முறையில் அற்ப படைப்பாகிய மனிதன், அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த கடவுளை எவ்வாறு தன் புத்திக்குள் கிரகிப்பது? இதுதான் மெய்ம்மை. மனிதரால் கடவுளை நேரடியாக அறிந்துகொள்ளவே முடியாது.

அப்படியானால் நாம் கடவுளை அறவே அறிந்துகொள்ளவே முடியாதா? கடவுளின் மெய்ம்மையை, அவரது சாரத்தை நாம் அறிந்துகொள்ளவே முடியாது. ஆனால், கடவுளின் அவதாரங்கள் மூலம் கடவுளின் தன்மைகளை, அவரது குணங்களை நாம் அறிந்துகொள்ள முடியும். கடவுள் மனிதனைத் படைத்ததோடு அவனை தனியே விட்டுவிடவில்லை. ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாய்தந்தையர் அக்குழந்தையை பேணி வளர்க்கின்றனர், வயது வரும் போது அக்குழந்தையை கல்விக்காக பள்ளிக்கு அனுப்புகின்றனர். சாதாரன மனிதருக்கே இந்த உணர்வு இருக்கும் போது, சிருஷ்டி அனைத்திற்கும் பிரபுவான கடவுளுக்கு அது இல்லாமல் இருக்குமா? நிச்சயமாக அவர் மனிதனைப் படைத்ததோடு விட்டுவிடாமல், அவனுக்குக் கல்வி புகட்டுவதற்காக காலத்திற்குக் காலம் அவர் தமது அவதாரங்களை மனிதரிடையே அனுப்பி மனிதர்களுக்குக் கல்வியளித்து வருகின்றார். இக்கல்வியின் நோக்கமே, மனிதன் கடவுளை அறிந்து வழிபட வேண்டும் என்பதாகும்.

கடவுளின் அவதாரங்கள் மூலம் நாம் கடவுளை அறிந்துகொள்கின்றோம், அவரது தன்மைகளை நாம் அறிந்துகொள்கின்றோம், மனிதரை அவர் படைத்த நோக்கத்தை நாம் அறிந்துகொள்கின்றோம். பஹாவுல்லா பின்வருமாறு அறிவுறுத்துகின்றார்:

இறைவனால் தமது ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட முதல் கடமை யாதெனில் தமது வெளிப்பாட்டின் பகலூற்றானவரும் தமது சட்டங்களுக்குத் தோற்றுவாயானவரும் தமது சமயம் என்னும் இராஜ்ஜியம், படைப்புலகம் ஆகிய இரண்டிலும் இறைமையைப் பிரதிநிதிப்பவருமாகிய அவரை அறிந்து, ஏற்றுக் கொள்வதுதான். இக் கடமையை எய்திடும் ஒருவன் நல்லன அனைத்தையும் அடைந்தவன் ஆவான்; அதன் இழப்பிற்கு ஆளாகிடும் ஒருவன் நேர்மைச் செயல் ஒவ்வொன்றிற்கும் தோற்றுவாயாக இருந்தபோதிலும் வழி தவறிப் போனவனே. அதி விழுமிய இந்நிலையை , உயர்வுமிகு இவ்வொளியின் உச்சத்தை அடையும் ஒவ்வொருவனும் உலகின் ஆவலாகிய அவரது ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டியது இன்றியமையாததாகும்; இவ்விரட்டைக் கடமைகள் பிரிக்கப்பட இயலாதவை.

ஆதலால், கடவுளை அறிந்துகொண்ட பிறகு கடவுளின் ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டியது இன்றியமையாததாக இருக்கின்றது. கடவுளின் இக்காலத்திற்கான பல கட்டளைகளினூடே ஒரு கட்டளை சற்று தனித்துவமானது. இது சேவை சம்பந்தப்பட்டதாகும். கடவுளுக்கு நாம் சேவை செய்யவேண்டும். கடவுள் சேவை என்பது அவரது படைப்பாகிய மனிதனுக்கான சேவையாகும், அதாவது ‘மக்கள் சேவை மகேசன் சேவையாகும்’. ஷோகி எஃபெண்டியின் பின்வரும் மேற்கோளைப் பார்ப்போம்:

“… (சமயத்தில்) வெற்றியை ஈட்டுவதற்கு சேவையைப் போல் வேறொன்றும் இல்லை. சேவையே தெய்வீக உறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தமாகும். ஆதலால், ஒரு மனிதன் செயல்படும் போது, அவன் பரிசுத்த ஆவியினால் ஆசீர்வதிக்கப்படுகின்றான். அவன் செயல்படாத போது, பரிசுத்த ஆவி அவனுள் ஒரு வைப்பிடத்தைக் காணாமல் போகின்றது; அதனால் அவன் அதன் குணப்படுத்தும் மற்றும் உய்விக்கும் கதிர்களை இழந்துவிடுகிறான்.”

இந்த மேற்கோளை நாம் எப்படி பார்த்தாலும், நாம் பிறவிப் பயனை அடையவேண்டுமானால் நமது சக மனிதர்களின் மேம்பாட்டிற்கு, அவர்களின் ஆன்மீக மற்றும் லௌகீக மேம்பாட்டிற்கு உதவிட வேண்டும். இதிலிருந்து நாம் தப்பவே முடியாது. இன்று உலகம் முழுவதுமுள்ள பஹாய் அன்பர்கள் தாங்கள் வாழும் சமூகங்களில் அதன் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடவுளின் ஆசி, அவரது உறுதிப்பாடுகள் ஆகியவற்றை அடைவதற்கு வேறு வழியே கிடையாது. மனிதருக்கு சில மெய்நிலைகள் உள்ளன: அவன் சாப்பிட்டாக வேண்டும், உறங்க வேண்டும், மூச்சு விட வேண்டும் மற்றும் இதர. இவற்றிலிருந்து அவன் தப்ப முடியாது, அவ்வாறு முயன்றால் அதன் விளைவு மோசமாக இருக்கும். அதே தொனியில், சேவை செய்தல் மனிதனின் மெய்நிலையாகும். அதிலிருந்து அவன் தனித்திருக்க முடியாது, அதன் விளைவு, அவன் கடவுளின் ஆசீர்வாதங்களை இழந்துவிடுகிறான்.

ஆதலால், பிடித்திருக்கின்றதோ பிடிக்கவில்லையோ, முடியுமோ முடியவில்லையோ, எப்படியாயினும் மனிதர்களாகிய நாம் ஏதாவது மக்கள் சேவையில் ஈடுபட்டே ஆகவேண்டும்.

பஹாய் உலக செய்தி சேவை


தனியுரிமை அறிவிப்பு

தனியுரிமை
இந்த வலைத்தளத்தில் உங்கள் தனியுரிமையை உறுதிப்படுத்த முயல்கின்றோம். உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கும், நீங்கள் கோரும் கூடுதல் தகவல்கள் மற்றும் பொருள்களை உங்களுக்கு அனுப்புவதற்கும், நீங்கள் வழங்கிய தனிப்பட்ட தகவல்களை மட்டுமே தன்னார்வ அடிப்படையில் சேகரிக்கிறோம்.

தனிப்பட்ட பயனர்களை அடையாளம் காணாத மொத்த புள்ளிவிவர தரவை உருவாக்குவதைத் தவிர, இந்த வலைத்தளத்திற்கு வருபவர்கள் கண்காணிக்கப்படுவதில்லை. அத்தியாவசிய செயல்பாட்டை வழங்க நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில், தளத்தின் உங்கள் பயன்பாட்டைக் கண்காணிக்க அல்லது தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களைச் சேமிக்க இவை பயன்படுத்தப்படுவதில்லை. உங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் பாதுகாப்புடன் இருக்கும், அங்கீகரிக்கப்படாத அணுகல், பயன்பாடு அல்லது வெளிப்படுத்தல் ஆகியவற்றிலிருந்து விடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்தத் தளத்தை ஓர் இணைப்பு வழியாக விட்டகன்றால், அந்த மற்ற இணைப்புக்குரிய தளம் தனியுரிமை தொடர்பாக வேறுபட்ட கொள்கையைக் கொண்டிருக்கலாம் என்பதை நினைவில் கொள்க.

இந்தத் தனியுரிமைக் கொள்கையை நாங்கள் அவ்வப்போது புதுப்பிப்போம்; அதை நீங்களும் அவ்வப்போது மதிப்பாய்வு செய்ய ஊக்குவிக்கிறோம். உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருத்த விரும்பினால், அல்லது இந்தக் கொள்கை தொடர்பான கேள்விகள் இருந்தால், தயவுசெய்து news@bahai.org க்கு ஒரு மின்னஞ்சல் செய்தியை அனுப்பவும் அல்லது பஹாய் உலக செய்தி சேவைக்கு +972 (4) 835-8412 என்ற எண்ணில் காலை 8 மணி முதல் மாலை 5:30 மணி GMT +2, ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழன் வரை அழைக்கலாம்.

பயன்பாட்டு விதிமுறைகள்
பஹாய் உலக செய்தி சேவையால் தயாரிக்கப்பட்ட அனைத்து கதைகள் மற்றும் புகைப்படங்கள் இலவசமாக மறுபதிப்பு செய்யப்படலாம், மின்னஞ்சல் வழி அனுப்பப்படலாம், உலகளாவிய வலையில் வெளியிடப்படலாம், அல்லது பின்வரும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்போ மீண்டும் மறுபதிப்பு செய்யப்படலாம்:

  • அவை எல்லா நேரங்களிலும் பஹாய் உலக செய்தி சேவைக்கு உரிமையாக்கப்பட வேண்டும்.
  • அசல் மூலத்தின் நோக்கம் மற்றும் முன்மாதிரியுடன் முரண்படும் புகைப்படங்கள் மற்றும் கதைகளை எந்த வகையிலும் (வரம்பில்லாமல், எந்தவொரு தயாரிப்பு, சேவை, கருத்து அல்லது காரணத்துடனான ஒரு தொடர்பை அல்லது ஒப்புதலை பரிந்துரைப்பது உட்பட) பயன்படுத்த முடியாது.
  • புகைப்படங்கள் அளவிற்கு மட்டுமே திருத்தப்படலாம். தலைப்புகள் எல்லா நேரங்களிலும் புகைப்படங்களுடன் இருக்க வேண்டும்.
  • எங்கள் நேரடி கதைகள் மற்றும் / அல்லது புகைப்படங்களின் எந்தவொரு அணுகல் அல்லது பயன்பாட்டின் விளைவாக ஏற்படக்கூடிய எந்தவொரு நேரடி, தற்செயலான, விளைவு, மறைமுக அல்லது தண்டனைக்குரிய சேதங்களுக்கான எந்தவொரு பொறுப்புக்கும் பஹாய் உலக செய்தி சேவை எந்தவொரு நபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் பொறுப்பேற்காது. தளம்.
  • சிறப்பு அனுமதி தேவைப்படாத வகையில் BWNS பொருளை மறுபிரசுரம் செய்வதற்கான இந்தப் பொது அனுமதி இலவசமாக வழங்கப்பட்டாலும், பஹாய் உலக செய்தி சேவை அதன் கதைகள் மற்றும் புகைப்படங்களுக்கு பொருந்தக்கூடிய அனைத்து தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களின் கீழ் முழு பதிப்புரிமை பாதுகாப்பை வைத்திருக்கிறது.

பஹாய் உலக செய்தி சேவை என்பது பஹாய் சர்வதேச சமூகத்தின் ஒரு முகவாண்மை ஆகும், இது ஒரு அரசு சாரா அமைப்பாகும், இது பஹாய் சமயத்தின் ஐந்து மில்லியன் உறுப்பினர்களைக் குறிக்கிறது மற்றும் உள்ளடக்கியது.

இரான் பஹாய்கள்: விவசாயிகள், விவசாய விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் இரானின் தலைமை நீதிபதி மற்றும் விவசாய அமைச்சரை விளித்துரைக்கின்றனர்.



8 அக்டோபர் 2021


சிட்னி, 26 பிப்ரவரி 2021, (BWNS) – இரான் நாட்டு பஹாய்களின் பரவலான மற்றும் திட்டமிட்ட துன்புறுத்தல் குறித்து பெருகிவரும் கண்டனங்களை இரானிய அதிகாரிகள் எதிர்நோக்கும் வேளை, இரான் நாட்டில் பஹாய் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை அநியாயமாகப் பறிமுதல் செய்வது குறித்து விவசாயிகளுடன் விவசாய விஞ்ஞானிகளும் ஆஸ்திரேலியா, ஆபிரிக்கா மற்றும் வட அமெரிக்காவைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்களும் உலகளாவிய கூக்குரலில் சேர்ந்து கொண்டுள்ளனர்.

இரான் நாட்டில் பஹாய் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை அநியாயமாகப் பறிமுதல் செய்வது குறித்து விவசாயிகளுடன் விவசாய விஞ்ஞானிகளும் ஆஸ்திரேலியா, ஆபிரிக்கா மற்றும் வட அமெரிக்காவைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்களும் உலகளாவிய கூக்குரலில் சேர்ந்து கொண்டுள்ளனர்.

இரானின் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைஸி மற்றும் வேளாண் அமைச்சர் அப்பாஸ் கேஷவார்ஸ் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், கனடா, எத்தியோப்பியா, மாலி மற்றும் அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இருந்து விவசாயத் துறையில் உள்ளோர் “உலகெங்கிலும் உள்ள சிறுதொழில் விவசாயிகளின் அவலநிலை குறித்து அக்கறை கொண்டுள்ளதாலும், அவர்கள் பெரும்பாலும் தன்மூப்பான அதிகாரத்தினால் அநீதியை எதிர்கொள்வதாலும் தாங்கள் அது குறித்து குரலெழுப்புவதாகக் கூறுகின்றன.

கனடா, எத்தியோப்பியா, மாலி மற்றும் அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இருந்து விவசாயத் துறையில் உள்ளோர் “உலகெங்கிலும் உள்ள சிறுதொழில் விவசாயிகளின் அவலநிலை குறித்து அக்கறை கொண்டுள்ளதாலும், அவர்கள் பெரும்பாலும் தன்மூப்பான அதிகாரத்தினால் அநீதியை எதிர்கொள்வதாலும் தாங்கள் அது குறித்து ஒரு திறந்த மடலில் தாங்கள்குரலெழுப்புவதாகக் கூறியுள்ளனர்.

“இரானில் பஹாய்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் வணிகங்கள் மீதான சோதனைகள் அதிகரித்து வரும் சூழலில், இந்த சமீபத்திய நில அபகரிப்புகள் நடைபெறுகின்றன,” என அவர்கள் கூறி, இடம்பெயர்ந்தும், இரானிய அதிகாரிகளால் அவர்களின் மத நம்பிக்கைகள் காரணமாக பொருளாதார ரீதியாக வறிய நிலையில் உள்ள இவெல் பஹாய்களின் தொடர்ச்சியான துன்புறுத்தலின் சமீபத்திய நிலை குறித்து தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினர்.

அந்தத் திறந்த கடிதம் இவ்வாறு கூறுகிறது: “பஹாய் குடும்பங்கள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இவெலில் விவசாயம் செய்து வருகின்றன மற்றும், இந்தக் குடும்பங்கள் உள்ளூர் சமூகத்தின் ஆக்கபூர்வமான உறுப்பினர்களாக, உதாரணமாக, அனைத்து மதங்களின் சிறார்களுக்காகவும், அனைத்து சமூக உறுப்பினர்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதையும் நாங்கள் அறிவோம்.

ஆஸ்திரேலியாவில், நாட்டின் விவசாய சமூகத்தின் உறுப்பினர்கள் சார்பாக வெளியிடப்பட்ட ஒரு மனதை நெகிழ வைக்கும் வீடியோ செய்தி இரானிய கிராமமான இவெலில் உள்ள பஹாய் குடும்பங்களின் அவல நிலையின்பால் கவனத்தை ஈர்க்கிறது. வீடியோ செய்தியில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த விவசாயி கிளேர் பூத் உரையாற்றுகிறார்.

“சமூகத்திற்கு அவர்கள் பங்களிப்புகள் செய்துவந்த போதிலும், அவர்கள் வெகுஜன வெளியேற்றம், இடம்பெயர்வு மற்றும் அவர்களின் வீடுகளை இடித்தல், தரைமட்டமாக்கல், பறிமுதல் செய்தல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் பல ஆண்டுகளான தொடர்ச்சியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கையொப்பமிட்டவர்கள் பஹாய்கள் மீதான் துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர தலைமை நீதிபதி ரைஸி மற்றும் வேளாண் அமைச்சர் கேஷவர்ஸ் ஆகியோரைக் கோரியுள்ளனர், “இந்தத் துன்புறுத்தல் சம்பவத்தை கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக, சக விவசாயிகள் எனும் முறையில் நாங்கள் எழுதி, இவெல் விவசாயிகள் குறித்து இரானிய அதிகாரிகள் தங்கள் முடிவை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

இதற்கிடையில், ஆஸ்திரேலியாவில், நாட்டின் விவசாய சமூகத்தின் உறுப்பினர்கள் சார்பாக வெளியிடப்பட்ட ஒரு மனதை நெகிழ வைக்கும் வீடியோ செய்தி இரானிய கிராமமான இவெலில் உள்ள பஹாய் குடும்பங்களின் அவல நிலையின்பால் கவனத்தை ஈர்க்கிறது.

வீடியோ செய்தியில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த விவசாயி கிளேர் பூத் கூறுகையில், “சிறந்த நேரங்களில் கூட விவசாயம் என்பது ஓரி கடினமான வேலை. “வெள்ளம், வறட்சி, தீ, காலநிலை மாற்றம் மற்றும் மிக சமீபத்தில், தொற்றுநோயின் தாக்கங்கள் ஆகியவற்றால் இது எளிதாக்கப்படவில்லை.”

வீடியோ செய்தி அதன் விவசாய சமூகங்களுக்கு உதவுவதில் ஓர் ஆதரிக்கும் அரசாங்கத்தின் பங்கை விவரித்து, இரான் நாட்டின் “அமைதியான பஹாய் சமூகம்” கடுமையாக நடத்தப்படுவதை குறித்துக் காட்டியது. “இந்த நாட்டில் உள்ள எங்கள் விவசாய சகோதர சகோதரிகளுடன் நாங்கள் ஒற்றுமையுடன் இருகின்றோம்,” என விவசாயிகள் கூறுகிறார்கள். மேலும், இரானிய அரசாங்கத்தையும் நீதித்துறையையும் நில உரிமையாளர்களான இவெலில் உள்ள பஹாய் விவசாயிகளுக்கு அவர்களின் நிலத்தையும் சொத்துகளையும் திருப்பித் தருமாறு கோரியுள்ளனர்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1492/

இந்தியாவின் முதல் உள்ளூர் பஹாய் கோயில் கட்டுமானத்தின் ஆரம்பம்


இந்தியாவின் முதல் உள்ளூர் பஹாய் கோயில் கட்டுமானத்தின் ஆரம்பம்


8 அக்டோபர் 2021


ஹர்கவன், இந்தியா, 21 பிப்ரவரி 2021, (BWNS) – இந்தியாவின் முதல் உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கான நிலம் தோண்டுதல் இன்று ஆரம்பிக்கப்பட்டது – பீஹார் ஷாரிஃப் என அழைக்கப்படும், இந்த உள்ளூர் பகுதியில் பல தசாப்தங்களாகப் பேணப்பட்டு வந்த வழிபாடு மற்றும் சேவையின் உணர்வு இந்தக் கோவிலிருந்து வெளிப்படும். இந்தக் கோவில் கட்டுமானத்தின் தொடக்க விழா, 2012’இல் அறிவிக்கப்பட்ட ஏழு பஹாய் கோயில்களில் ஒன்றின் கட்டுமான ஆரம்பத்தைக் குறிக்கின்றது.

இந்த விழா, உள்ளூர் பிரமுகர்கள், பஹாய் சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களை ஒன்றுகூட்டியது. பிரார்த்தனை மற்றும் விளக்கேற்றும் சடங்குடன் இந்த நிகழ்வு தொடங்கியது-அறிவு, தூய்மை மற்றும் தெய்வீகத்துடனான தொடர்பை அடைவதைக் குறிக்கும் வகையில் விளக்கு ஏற்றுவது இந்திய வழக்கமாகும். சிறார்களும் இளைஞர்களும் நிகழ்ச்சியில் சிறப்புப் பங்கு வகித்தனர்; பாடல்கள் மற்றும் இசை நாடகங்களின் மூலம் பக்தி சூழ்நிலைக்கு அவர்கள் பங்களித்தனர்.

விழாவில் தனது கருத்துக்களில், ஹர்கவானின் பஞ்சாயத்து (உள்ளூர் குடிமை அமைப்பு) தலைவர் அமோத் குமார், பீகார் ஷெரீப், கோயில் குறித்த தனது எதிர்ப்பார்ப்பைப் பற்றி பேசினார். “இன்று நம் சமூகம் ஜாதி, மதம், தலைமுறை ஆகியவற்றால் பிளவுபட்டுள்ளது. பஹாய் போதனைகள் இங்குள்ள மக்களை ஒன்றிணைக்க பங்களித்துள்ளன, குறிப்பாக சிறார்கள் மற்றும் இளைஞர்கள் பஹாய் சமூகத்தின் தார்மீக கல்வித் திட்டங்களில் பங்கேற்கிறார்கள். இப்போது இந்த பகுதி வழிபாட்டு இல்லத்தை ஒரு தெய்வீக வெகுமதியாகப் பெற்றுள்ளது, மேலும், இங்குள்ள சமூகம் இந்த வெகுமதியிலிருந்து பயனடைந்து முன்னேற்றத்தையும் செழிப்பையும் தொடர்ந்து பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.”

இந்தியாவின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் செயலாளர் நஸ்னீன் ரோஹானி கூறுகையில், “நமது பலவகைப்பட்ட சமுதாயத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் இந்தியாவின் பெருமை வாய்ந்த வேத பாரம்பரியமான வசுதைவ குடும்பகம் (வசுதா ஏவ குடும்பகம் – உலகம் ஒரே குடும்பம்) மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. … [கோயில்] செயலில் வசுதைவ குடும்பகத்தின் ஒரு பிரகாசமான அடையாளமாக இருந்திடும். சமூகம், சாதி, நிறம், மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரும் தங்கள் படைப்பாளருடன் உரையாடுவதற்கு இங்கு வரவேற்கப்படுவார்கள். இந்த பாரம்பரியம் பஹாவுல்லாவின் வார்த்தைகளில் உறுதிப்படுத்தப்பட்டு, வெளிப்படுத்தப்படுகிறது: ‘நீங்கள் ஒருவரையொருவர் அந்நியர்களாகக் கருதவேண்டாம். நீங்கள் ஒரு மரத்தின் கனிகளும் ஒரு கிளையின் இலைகளும் ஆவீர். முழு பூமியையும் ஒளிரச் செய்யும் அளவிற்கு ஒற்றுமையின் ஒளி அத்துனை சக்தி வாய்ந்தது.’”

கோயில் தளத்தில் பீகார் மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மண்ணை வைப்பதன் மூலம் இந்த விழா உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்த நிகழ்வு இந்த கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களுக்கும் வழிபாட்டு மன்றத்திற்கும் இடையிலான தொடர்பை அடையாளப்படுத்தியது.

“இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், வணிகர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் இறுதியில் வழிபாட்டு மன்றத்தில் தினமும் ஒன்றுகூடி சர்வவல்லமையாளரிடம் திரும்பும்போது, ​​இது இந்த சமூகத்தில் உருவாகியுள்ள ஒற்றுமையின் பிணைப்பை மேலும் வலுப்படுத்துகிறது, ”என்று ஆசியாவின் கண்ட ஆலோசகர் வாரியத்தின் உறுப்பினர் ராகுல் குமார் கூறினார்.

விழாவில் தனது கருத்துக்களில், திருமதி ரோஹானி இந்த கோயில் பீகார் ஷெரீஃப்பின் அனைத்து மக்களுக்கும் எப்படி உடைமையாக இருக்கும் என்பதை விளக்கினார். “இந்த அழகிய கட்டிடம் மனிதகுலமானது உள்ளே நுழைந்து நல்லிணக்கம், அமைதி மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றைக் காணும் இடமாக இருக்கும் என்பது இந்தியாவின் பஹாய் சமூகத்தின் தீவிர நம்பிக்கையாகும்.”

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வழிபாட்டு இல்லத்திற்கான வடிவமைப்பின் வெளியீட்டிற்குப் பின்னர் இந்த நிலம் தோண்டுதல் நடைப்பெற்றுள்ளது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1491/

“ஓர் அசாதாரண ஆதரவு அலை”: பஹாய்கள் துன்புறுத்தப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுக்கு ஓர் ஒருமித்த அழைப்பு


“ஓர் அசாதாரண ஆதரவு அலை”: பஹாய்கள் துன்புறுத்தப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுக்கு ஓர் ஒருமித்த அழைப்பு

BIC ஜெனெவா, 18 பிப்ரவரி 2021, (BWNS) – ஈரானிய விவசாய கிராமமான இவெல்’லில் பஹாய்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அநியாயமாக பறிமுதல் செய்யப்படுவது குறித்து உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள், அரசு அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பெருகிவரும் எதிர்ப்புக்குரலில் தாங்களும் சேர்ந்துள்ளனர். மத தப்பெண்ணத்தால் தெளிவாக உந்துதல் பெற்ற, ஈரானிய அதிகாரிகள் சொத்துக்களை பறிமுதல் செய்ய அனுமதிக்கும் நீதிமன்ற தீர்ப்பு சமீபத்தில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. இது டஜன் கணக்கான (பஹாய்) குடும்பங்கள் உள்நாட்டில் குடியிருப்புகளை இழந்து பொருளாதார ரீதியில் அவற்றை வறுமைக்கு ஆளாக்கியுள்ளது.

அமெரிக்க இஸ்லாமிய காங்கிரஸ், கனேடிய இமாம்களின் கவுன்சில், நல்லொழுக்க நெறிமுறைகள் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் ஐக்கிய இராஜ்யத்தின் முன்னணி இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான ஷேக் இப்ராஹிம் மோக்ரா, அகில இந்திய தன்சீம் ஃபலாஹுல் முஸ்லெமின் மற்றும் அகில இந்திய சையிஃபி சங்கம் ஆகியவை அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. பஹாய்களுக்கு ஆதரவளிக்கும் அவ்வறிக்கைள் இவெலில் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவது குறித்து கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளன.

“மசண்டரனில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் பொறுப்புள்ள அனைத்து நபர்களும் நடவடிக்கை எடுக்கவும், இவெலில் உள்ள பஹாய் சமூகத்திற்கு அவர்களின் சொத்துக்களை திரும்பப் பெற உதவவும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்” என்று அமெரிக்க இஸ்லாமிய காங்கிரஸின் அறிக்கை கூறியுள்ளது. இந்த உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில், கனேடிய இமாம்கள் கவுன்சில், “விவசாய கிராமமான இவெல்லில் 27 பஹாய்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஈரானிய நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பால் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்,” எனக் கூறுகிறது.

இவெல் பஹாய்களுக்கு ஆதரவாக கெனேடிய இமாம்களின் கௌன்சில் வெளியிட்டுள்ள அறிக்கை

ஐக்கிய இராஜ்யத்தைச் சேர்ந்த ஷேக் இப்ராஹிம் மோக்ரா, ஈரானின் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசிக்கு “இந்த அநீதியை நிவர்த்தி செய்ய” அழைப்பு விடுத்துள்ளார். மேலும், “வேறு மதத்தைப் பின்பற்றுவதால் குடிமக்களிடமிருந்து நிலத்தை பறிமுதல் செய்ய இஸ்லாம் ஒரு அரசாங்கத்தை அனுமதிக்காது” என்றும் கூறினார்.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பஹாய் சர்வதேச சமூகத்தின் (பி.ஐ.சி) பிரதிநிதி டயான் அலாயி: “உலகெங்கிலும் உள்ள முஸ்லீம் தலைவர்கள் ஈரானில் உள்ள தங்கள் பஹாய் நண்பர்களுக்கு ஓர் அசாதாரண ஆதரவ் அலையின் மூலம் உதவ வருகிறார்கள் என்பது இஸ்லாமிய குடியரசிற்கு உலகெங்கிலும் உள்ள அவர்களின் சக மதவாதிகள் அவர்களின் நடவடிக்கைகளை கண்டிக்கின்றனர் என்பதற்கான ஓர் ஆற்றல்வாய்ந்த சமிக்ஞையாகும்.

“150 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் முஸ்லீம் அண்டையர்களுடன் வசித்து வந்துள்ள இவெலில் உள்ள பஹாய்களுக்கு முன்னணி முஸ்லிம்களின் ஆதரவு அறிக்கைகள், ஈரானிய அரசாங்கம் இஸ்லாமிய சட்டத்தை இச்செயலுக்காகத சுட்டிக்காட்டுவது பஹாய்கள் துன்புறுத்தப்படுவதை மறைத்திடுவதற்கான ஒரு மெல்லிய திரை என்பதை எடுத்துக்காட்டுகிறன.”

கெனேடிய வெளிவிவகார அமைச்சர் ட்விட்டரில் வெளியிட்ட ஒரு செய்தி

ஈரான் பஹாய்களுக்கான சர்வதேச ஆதரவின் கூடுதல் அடையாளமாக, உலகெங்கிலும் உள்ள அரசாங்க அதிகாரிகள் ஈரானிய நீதிமன்ற தீர்ப்பை கண்டித்துள்ளனர். கனேடிய வெளியுறவு அமைச்சர் மார்க் கார்னியோ, தனது அரசாங்கம் இத்தீர்ப்பால் “கவலை கொண்டுள்ளது” என்று கூறுகிறார். அவர் “மதம் அல்லது சமயநம்பிக்கையின் அடிப்படையில் அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்ற” ஈரானை வலியுறுத்தினார். இந்த அழைப்பை ஜெர்மனி, நெதர்லாந்து, சுவீடன், ஐக்கிய இராஜ்யம், பிரேசில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளும் எதிரொலித்துள்ளனர்.

நெதர்லாந்து நாட்டின் சமய அல்லது நம்பிக்கை விசேஷ தூதர் ட்விட்டரில் வெளியிட்ட  செய்தி 

ஸ்வீடனில், அதன் பாராளுமன்றத்தின் 12 உறுப்பினர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற பிரதிநிதிகளும் ஈவெல் பஹாய்களின் நிலங்களை திருப்பித் தருமாறு கடுமையாகக் கோரியுள்ளனர். உலகளாவிய மத சுதந்திரத்திற்கான ஜேர்மன் மத்திய அரசு ஆணையர் மார்கஸ் க்ரூபெல், பஹாய்களை நாட்டில் ஒரு மத சமூகமாக அங்கீகரிக்கவும், “பஹாய் சமூகங்களின் பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு” ​​முற்றுப்புள்ளி வைக்கவும் ஈரானுக்கு கோரிக்கை விடுத்தார்.

நிறவெறியின் போது மனித உரிமைப் பணிகளுக்குப் பெயர்பெற்ற ஓர் அமைப்பான தென்னாப்பிரிக்காவின் சட்ட வள மையம், சொத்துப் பறிமுதல் செய்வதைக் கண்டித்து ஒரு கடிதத்தையும் வெளியிட்டுள்ளது.

“உலகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது, ஈரானிய அரசாங்கத்தின் பஹாய் சமூகத்திற்கு இழைக்கப்படும் அப்பட்டமான அநீதிகளால் அது திகைப்படைந்துள்ளது” என்று BIC’யின் திருமதி அலா’யி கூறுகிறார். “பஹாய்கள் அப்பாவிகள் என்பது சர்வதேச சமூகத்திற்கு முன்னெப்போதையும் விட இப்பாது தெளிவாகத் தெரிகிறது மற்றும், ஈரானில் பஹாய் சமூகத்திற்கு ஏற்படுத்தப்படும் கடுமையான அநீதிகளுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும். இவெலில் உள்ள பஹாய்களுக்கு நிலங்களை திருப்பித் தருவது மட்டுமல்லாமல், நாடு முழுவதிலும் உள்ள பஹாய்கள் மீதான திட்டமிட்ட துன்புறுத்தல்களை முற்றாக ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.”

ஈரான் பஹாய்கள் நில பறிமுதல் மற்றும் பெருமளவு இடம்பெயர்வு சார்ந்த வரலாறு கனேடிய பஹாய் சமூகத்தின் பொது விவகார அலுவலகத்தின் வலைத்தளத்தின் சிறப்பு பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது.

அப்துல்-பஹா: பிரார்த்திப்பது எப்படி


பிரார்த்திப்பது எப்படி

நியூயார்க் நகரில் அப்துல் பஹா தங்கியிருந்தபோது, அதே நகரில் வசித்து வந்ந ஒரு தீவிர நம்பிக்கையாளரை அழைத்து, மறுநாள் விடியற்காலையில் அந்த தீவிர பஹாய் நம்பிக்கையாளர் தமது அறைக்கு வந்தால் அவருக்கு எப்படி பிரார்த்திப்பது என்பதைத் தாம் கற்றுக் கொடுக்கப் போவதாகக் கூறினார்.

Image result for devotional clipart

அதனைக் கேட்ட அந்த பஹாய் அன்பர் மகிழ்ச்சியுடனும், எதிர்பார்ப்புடனும் மறுநாள் விடியற்காலை ஆறு மணிக்கு அப்துல் பஹாவின் இருப்பிடத்திற்கு வந்தார். அவர் வந்து சேர்வதற்குள் அப்துல் பஹா பிரார்த்தனையில் மூழ்கி இருந்தார். உடனே, அந்த பஹாய் அன்பரும் அப்துல் பஹாவுக்கு முன்பாக பிரார்த்திப்பதற்காக அமர்ந்தார். அப்துல் பஹா ஆழமான தியானத்தில் திளைத்திருந்த அவ்வேளையில், அந்த பஹாய் அன்பர் தனது நண்பர்களுக்காகவும், தனது குடும்பத்திற்காகவும், ஐரோப்பாவின் மன்னர்களுக்காகவும் பிரார்த்தித்தார். தனக்கு முன் அமர்ந்திருக்கும் அந்த மனிதர்பால் அப்துல் பஹா எந்தவொரு வார்த்தையையும் கூறாமல் தமது பிராரத்தனையில் ஆழ்ந்திருந்தார். அந்த பஹாய் நம்பிக்கையாளர் தனக்குத் தெரிந்த எல்லா பிரார்த்தனைகளையும் கூறி விட்டு மீண்டும் அவற்றை இரண்டு முறை மவுனமாகப் பிரார்த்தித்தார். அவ்வாறிருந்தும் அப்துல் பஹா எதுவும் கூறவில்லை. பிறகு, அந்த பஹாய் நம்பிக்கையாளர் தனது முட்டிக் காலைத் தேய்த்து விட்டு தனது முதுகின் மீதும் கவனத்தைச் செலுத்தினார்.

மீண்டும் மீண்டும் அவர் பிரார்த்தித்தபோது, அறைக்கு வெளியே விடியற்காலையில் பறவைகளின் ஒலி அவருக்குக் கேட்டது. இவ்வாறாக ஒரு மணி நேரம் கடந்து, இரண்டு மணி நேரமும் கடந்தது. நேரம் செல்லச் செல்ல அந்த நம்பிக்கையாளரின் கால்களும் விறைத்துப் போயின. அவரது கண்களும் அறையின் சுவர்களில் கண்ணோட்டமிடத் தொடங்கி, அந்தச் சுவரில் ஏற்பட்டிருந்த ஒரு வெடிப்பைக் கண்ணுற்றது. அம்மனிதரது மனமும் படிப்படியாக அலைபாய ஆரம்பித்து தனக்கு முன்னால் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்கும் அப்துல் பஹாவை அவரது கண்கள் கண்ணுற்றன. அப்துல் பஹாவிடம் காணப்பட்ட மாபெரும் மகிழ்ச்சி மற்றும் சாந்தத்தின் ஓர் உணர்வு அம்மனிதரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

திடீரென்று, அதுபோல் தாமும் பிரார்த்திக்க வேண்டும் என அவர் விரும்பினார். அந்நிலையில் சுயநல ஆசைகள் அவரை விட்டுப் போயின. சோகமும், முரண்பாடும், அவரைச் சுற்றியிருந்த சூழலும் கூட மறைந்து விட்டது. இறைவன்பால் நெருங்க வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே அவரிடம் இருந்தது.

தனது கண்களை மீண்டும் ஒரு முறை மூடிய நிலையில் அவர் இவ்வுலகினை அப்பால் ஒதுக்கி வைத்து விட்டு, பிரார்த்திக்கத் தொடங்கினார். அவரது இதயம் ஆர்வத்தினால் நிரப்பப்பட்டு, மகிழ்ச்சி நிரம்பி தீவிர நிலையை அடைந்தது. பணிவுநிலையினால் தூய்மைப்படுத்தப்பட்டிருப்பதையும், ஒரு சாந்த உணர்வு தம்மை ஆட்கொண்டு விட்டதையும் அவர் உணர்ந்தார். பிரார்த்திக்க அப்துல் பஹா அவருக்குக் கற்றுக்கொடுத்து விட்டார்!

அக்கா நகருக்கே மாஸ்டரான அப்துல் பஹா உடனே எழுந்து அம்மனிதரிடம் வந்தார். “நீங்கள் பிரார்த்திக்கும்பொழுது, வலிக்கும் உங்களுடைய உடல் பற்றி நீங்கள் சிந்திக்கக் கூடாது. ஜன்னலுக்கு வெளியே வட்டமிடும் பறவைகளையோ, சுவற்றின் மீதுள்ள வெடிப்பையோ நீங்கள் எண்ணக்கூடாது!” அப்துல் பஹா சற்றுக் கடுமையுடன், “நீங்கள் பிரார்த்திக்க விரும்பிடும்போது, எல்லாம்வல்லவரது முன்னிலையில் நீங்கள் நின்று கொண்டிருக்கின்றீர்கள் என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.

அப்துல்-பஹாவின் நினைவாலயம்: மத்திய தளத்தின் சுவர்களை எழுப்புவதற்கான ஆரம்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன


மேற்கு திசையிலிருந்து கட்டுமான தளத்தின் இந்த வான்வழி காட்சியில், இரண்டு தோட்ட வெளிச் சுவர்களுக்கான பூர்த்தி செய்யப்பட்ட கான்கிரீட் அடித்தலங்கள் சன்னதியின் உருவரையை வெளிப்படுத்துகின்றன. மத்திய பிளாசாவின் தளத்திற்கு கான்கிரீட் ஊற்றப்படும் உருவப்படிவம் தளத்தின் நடுவில் தெரிகின்றது

8 அக்டோபர் 2021


தோட்ட ஒரச் சுவர்கள் எழுந்து தோட்ட பாதைகள் பணி மேம்பாடு காணும் அதே வேளை மத்திய தளத்தின் சுவர்களை எழுப்புவதற்குப் பயன்படுத்தப்படும் பிரத்தியேக கட்டமைப்பு பொருத்தப்பட்டுள்ளது

பஹாய் உலக நிலையம் — அப்துல்-பஹா நினைவாலயத்தின் மத்திய தளத்தின் தரை பூர்த்தியடையும் வேளை, சுற்றியுள்ள சுவர்களின் அதிக பலக்கியமான வடிவியல் அம்சங்களை எழுப்புதவற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

இவையும் தளத்தின் சமீபமானன மேம்பாடுகளும் தொடர்ந்து வரும் படங்களில் சித்தரிக்கப்படுகின்றன.

சுவர்களை வடிவமைக்கும் பிரத்தியேகமாக செய்யப்பட்ட பேனல்கள் இப்போது தளத்தை வந்தடைந்துள்ளன.
மத்திய தள சுவர்களின் வார்ப்பாக செயல்படும் வடிவமைப்பு முதன்முறையாக பொருத்தப்படுகிறது
எஃகு பேனல்களுக்கிடையில் உள்ள இடைவெளி சிமென்ட்டினால் நிரப்பப்படுகிறது. இது அதை ஒரே சுவராக்கிடும்
இந்த அச்சு மத்திய தளத்தைச் சுற்றியுள்ள சுவர்களின் பத்து ஒத்த பிரிவுகளை உருவாக்க பயன்படும், அதன் வடிவியல் முறை இடதுபுறத்தில் வரையப்பட்டுள்ள வடிவமைப்பில் தெரியும்.
மேலே: மத்திய தளப் பகுதியிலிருந்து தெற்குத் தளத்தை நோக்கிய காட்சி. கீழே: தெற்குத் தளத்தை இணைக்கும் வளைந்த போர்டல் சுவர் வடிவம் பெறுகிறது.
தெற்கு பிளாசாவை இணைக்கும் தென்கிழக்கு வளைந்த போர்டல் சுவரின் மற்றொரு காட்சி
கிழக்கு தோட்ட தொட்டியின் வடக்கு முனையில் வளைந்த போர்டல் சுவருக்கு வடிவமைப்பு ஆரம்பிக்கப்படுகிறது
தோட்ட பூத்தொட்டிகளின் கீழ் மறைவாக உள்ள இரண்டு பயன்பாட்டு அறைகள் மத்திய பிளாசாவுக்கு அருகில் கட்டப்படுகின்றன.
மத்திய தளத்தின் தரைக்கான இறுதி கட்ட ஆயத்தம் ஒன்றில், மண் மற்றும் நீர்ப்பாசனத்தைக் கொண்டிருக்கும் தொட்டிகளுக்கு இடையில் பாதைகளுக்கான வடிவமைப்பு ஏற்பாடுகள் பொருத்தப்படுகின்றன.
அமைக்கப்பட்டுள்ள பாதைகளின் மூலம், இந்தத் தோட்டங்களின் வடிவியல் முறை வெளிப்படுகின்றது
வருகையாளர்கள் சன்னதியை வலம் வருவதற்கு ஏதுவாக சூழும் பாதை ஒன்று அமைக்கப்படுகின்றது.
மேற்கிலிருந்து (இடது) தளத்தின் காட்சி. வடிவமைப்பு சித்தரிப்பில் (வலது) காணப்படுவது போல, தோட்டத்தின் சுவர் தொட்டிகளின் சாய்வு சுற்றியுள்ள பாதையை சந்திக்கும் கோடு முன்புறத்தில் தெரியும் சுவரால் குறிக்கப்படுகிறது.

மூலாதராம்: https://news.bahai.org/story/1489/

“நாங்கள் ஈரானிய பஹாய்களுக்கு ஆதரவாக இருக்கின்றோம்”: கனடாவின் முன்னாள் பிரதமரும் நீதிபதிகளும் பஹாய்களுக்கு எதிரான துன்புறுத்தலைக் கண்டிக்கின்றனர்



8 அக்டோபர் 2021


BIC GENEVA, 13 பிப்ரவரி 2021, (BWNS) – கனடாவின் முன்னாள் பிரதம மந்திரி பிரையன் முல்ரோனி, கனடாவில் 50 க்கும் மேற்பட்ட உயர் சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழுவில் அவரும் ஒருவராவார். இக்குழுவினர் ஈரானின் இஸ்லாமிய குடியரசின் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி’க்கு ஈரான் பஹாய் சமூக மனித உரிமைகளின் “புதிய மற்றும் தீவிரமான மீறல்கள்” குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும் ஒரு திறந்த மடலை எழுதியுள்னர்.

இரான் இஸ்லாமிய குடியரசின் தலைமை நீதிபதிக்கான திறந்த மடல்
இச்செய்தியை இணையத்தில் படிக்கவோ மேலும் பல படங்களைப் பார்க்கவோ news.bahai.org செல்லவும்

இந்த கடிதத்தில், முன்னாள் நீதி அமைச்சர்கள் மற்றும் கனடாவின் உச்சநீதிமன்ற நீதிபதிகள், முக்கிய சட்ட கல்வியாளர்கள் மற்றும் பயிற்சி பெற்ற வழக்கறிஞர்கள் ஆகியோர் அடங்கிய கடிதத்தில், வடக்கு ஈரானில் உள்ள இவெல் என்ற கிராமத்தில் உள்ள பஹாய்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான சமீபத்திய நீதிமன்ற தீர்ப்பு கண்டிக்கப்படுகின்றது.

“சமாதானம், நீதி மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் நன்னெறிகளை பஹாய் சமயம் ஆதரிப்பது எங்களுக்குத் தெரியும்,” என அக்கடிதம் குறிப்பிடுகிறது, “இந்த நன்னெறிகள் பல தசாப்தங்களாக ஈரானிய அதிகாரிகளின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. ஈரான் பஹாய்களின் மனித உரிமை மீறல்கள் கனேடிய அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏராளமான மனித உரிமை அமைப்புகளால் ஏற்கனவே உரைக்கப்பட்டுள்ளன. இன்று, சட்டத்தை அடித்தலமாகக் கொண்ட ஆட்சியை ஆதரிக்கும் கனேடிய சட்டத் தொழிலின் உறுப்பினர்களாக, நாங்களும் ஈரான் பஹாய்களுக்கு ஆதரவாக நின்று, ஈரானிய நீதித்துறையின் தலைவராக, ஈவெல் பஹாய்கள் மீது தொடுக்கப்படும் இந்தப் புதிய துஷ்பிரயோகத்திற்கு தீர்வு காணுமாறு உங்களை அழைக்கிறோம். “

ஈவெலில் ஈரானிய அதிகாரிகளால் பஹாய்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் அநியாயமாக பறிமுதல் செய்யப்பட்டு, டஜன் கணக்கான குடும்பங்கள் புலம்பெயர்வுக்கும் பொருளாதார ரீதியில் வறிய நிலைக்கும் ஆளாக்கப்பட்டபின், இந்த முன்னோடியில்லாத ஆதரவு வெளிப்படுகிறது.

பல ஆண்டுகளாக, ஈரானின் ஈவெலில் உள்ள பஹாய்க்குச் சொந்தமான சொத்துக்கள் தாக்கப்பட்டு அநியாயமாக பறிமுதல் செய்யப்பட்டு, டஜன் கணக்கான குடும்பங்கள் புலம்பெயர்ந்து பொருளாதார ரீதியாக ஏழ்மை நிலையில் உள்ளன. இந்த படங்கள் 2007 இல் எரிக்கப்பட்ட ஒரு வீட்டைக் காட்டுகின்றன.

பல அதிகாரபூர்வ ஆவணங்கள், பறிமுதல்களுக்குப் பின்னால் உள்ள ஒரே நோக்கமாக மத தப்பெண்ணத்தை சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக, இஸ்லாமிய மதத்திற்கு மாறினால், அவர்களின் சொத்துக்கள் திருப்பித் தரப்படும் என்று பஹாய்களுக்குக் கூறப்பட்டதாக சில பதிவுகள் காட்டுகின்றன.

“2020 தீர்ப்புகள் இப்போது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட பறிமுதல் செய்வதற்கான ஆபத்தான அரசியலமைப்பு முன்மாதிரியை நிறுவுகின்றன, இது உரிமையாளர்களின் மத இணைப்பின் அடிப்படையில் மட்டுமே நியாயமான சொத்து நலன்களை ரத்து செய்கிறது, இதனால் சர்வதேச மனித உரிமை செந்தரங்களிலிருந்து மட்டுமல்ல, ஈரானிய அரசியலமைப்பின் உரை மற்றும் நோக்கத்திலிருந்தும் விலகிச் செல்கிறது,” என தலைமை நீதிபதி ரைசிக்கு எழுதப்பட்ட கடிதம் கூறுகிறது.

பஹாய் சமூகத்திற்கு எதிரான மத பாகுபாடு, “சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுக்கு முன்பாக ஈரானின் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர உறுதியான காரணங்களை வழங்க முடியும்” என அது மேலும் கூறுகிறது.

தங்கள் உரிமைகளுக்காக மேல்முறையீடு செய்ய ஈவெலில் உள்ள பஹாய்கள் பலமுறை முயற்சித்த போதிலும், அவர்களின் வழக்கறிஞர்களுக்கு நீதிமன்ற ஆவணங்களை, ஒரு எதிர்வாதத்தைத் தயாரிக்கவோ அல்லது எந்தவொரு வாதத்தையும் முன்வைக்கவோ வாய்ப்பளிக்கப்படவில்லை.

ஈவெலின் நிலைமை 1800’களின் நடுப்பகுதியில் இருந்து ஒரு பஹாய் சமூகத்தின் துன்புறுத்தலில் ஒரு “ஆபத்தான புதிய அத்தியாயம்” என அக்கடிதம் கூறுகிறது, இது ஒரு காலத்தில் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் “செழிப்பான மற்றும் அமைதியான பல தலைமுறைகளான சமூகமாக” இருந்தது உரிமையாளர்கள். ” 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், ஈவெலில் உள்ள பஹாய்கள் “தங்கள் வீடுகளிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர், துன்புறுத்தப்பட்டனர், மற்றும் அவர்களின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு இடிக்கப்பட்டன.” 2010 ஆம் ஆண்டில், ஈவெல்லில் உள்ள 50 பஹாய் குடும்பங்களின் வீடுகள் அவர்களை அப்பிராந்தியத்திலிருந்து வெளியேற்றுவதற்கான நீண்டகால பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இடிக்கப்பட்டன.

பல அதிகாரபூர்வ ஆவணங்கள் பறிமுதல் செய்வதற்குப் பின்னால் உள்ள ஒரே நோக்கமாக மத தப்பெண்ணத்தை சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்துகின்றன.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பஹாய் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதி டயான் அலாய் கூறுகிறார்: “ஈரானிய அதிகாரிகளால் பஹாய்களுக்கு இழைக்கப்பட்ட கொடூர துன்புறுத்தல்கள்  கவனிக்கப்படாமல் போகவில்லை என்பதை முக்கிய சட்ட பிரமுகர்களின் இந்தக் கடிதம் நிரூபிக்கிறது. சர்வதேச சமூகம். அதற்கு பதிலாக, இது உலகெங்கிலும் உள்ள பொதுமக்களின் மனசாட்சியை தூண்டுவதற்கு உதவியுள்ளது. ”

ஈரானில் பஹாய்களுக்கு எதிரான நில பறிமுதல் மற்றும் பெருமளவான புலம்பெயர்வின் வரலாறு கனேடிய பஹாய் சமூகத்தின் பொது விவகார அலுவலகத்தின் வலைத்தளத்தின் சிறப்பு பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1488/

பஹாவுல்லாவின் அஞ்ஞாதவாசம்


கடவுள் அவதாரங்களின் வாழ்வில் ஒரு காலகட்டத்தை அவர்கள் அஞ்ஞாதவாசமாக கழிப்பது உண்டு. உதாரணமாக இயேசு நாதர் பிறந்ததிலிருந்து சுமார் 15 வயது வரை எகிப்து நாட்டில் கழித்தார் என கூறப்படுகிறது. இதற்கு சரியான சரித்திரபூர்வமான சான்றுகள் இல்லையெனினும் அவரைப் பற்றிய வரலாறு அக்காலகட்டத்தில் எதுவும் இல்லை, உண்மையில், அவரது 30 வயது வரைகூட சரியான வரலாறு ஏதும் கிடையாது. கிருஷ்னர் தமது 12வது வயது வரை தமது பெற்றோரைப் பிரிந்து கோகுலத்தில் நந்தகோபர் யசோதை தம்பதியினரின் இல்லத்தில் வளர்ந்தார் என புராண இதிகாசங்கள் கூறுகின்றன. இராமரும் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்தார், இராமாயணமும் பிறந்தது. இதே போன்று ஒவ்வொரு கடவுள் அவதாரத்தின் வாழ்விலும் ஒரு பகுதி அஞ்ஞாதவாசமாக கழிவது உண்டு. நவயுக அவதாரமான பஹாவுல்லாவின் வாழ்க்கையிலும் இத்தகைய காலகட்டம் ஒன்று உள்ளது.

சுலைமானிய்யாவில் ஓராண்டுக்குப் பிறகு பஹாவுல்லா தங்கியிருந்த பள்ளிவாசல்.

பஹாவுல்லா 1852’இல் இரான் நாட்டிலிருந்து பாக்தாத் நகரத்திற்கு நாடுகடத்தப்பட்டார். மூன்று மாதகாலம் கடும் பனியிலும் காடு மேடு வனாந்தரங்களை கடந்தும் பாக்தாத் நகரை வந்தடைந்தார். அந்தப் பிரயானத்தின் போது அவரோடு அவருடைய குடும்பத்தினரும் பல விசுவாசிகளும் பயணம் செய்தனர். அவர்களுள் அவருடைய ஒன்றுவிட்ட தம்பி ஒருவரும் இருந்தார். இந்த ஒன்றுவிட்ட தம்பியால் பஹாவுல்லாவிற்கு பலவிதமான பிரச்சினைகள் உண்டாயின. அவற்றை இங்கு விவரிப்பதற்கு இடம் போதாது. இருப்பினும், இவர் ஏற்படுத்திய குழப்பங்களால் பாக்தாத் நகரில் இருந்த பாப்’யிக்களுட்கிடையே பல பிரச்சினைகள் உண்டாயின. மிர்ஸா யாஹ்யா எனும் பெயர் கொண்ட இந்த ஒன்றுவிட்ட தம்பி தமது சொந்த அண்ணனாகிய பஹாவுல்லாவின் மீது கொண்ட பொறாமையால் விசுவாசிகளிடையே பலவிதமான பிரச்சினைகள் உருவாவதற்கு காரணமாக இருந்தார். தாமே பாப்’யி (பஹாய் சமூகம் என ஒன்று இன்னமும் உருவாகவில்லை) சமயத்தின் தலைவர் என இவர் கூறிவந்தார். இதனால் மிகவும் விசனம் அடைந்த பஹாவுல்லா, நம்பிக்கையாளர்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக 1854’ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் யாருக்கும் தெரியாமல் பாக்தாத் நகரத்தை விட்டு வெளியேறினார். அவர் எங்கு சென்றார் என்பது யாருக்குமே தெரியாது. தமது பிரிவினால் விசுவாசிகள் சமூகத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்படும், அதனால் உண்மை எது பொய் எது என்பது அதுவாகவே புலப்பட வேண்டும் என பஹாவுல்லா தீர்மானித்து, பாப்’யிகள் சமூகத்தை விட்டகன்றார். பஹாவுல்லாவின் சொற்களில்:

“எமது விலகிச்செல்லலின் ஒரே நோக்கமே விசுவாசிகளிடையே முரண்பாட்டிற்கான பொருளாகாமல், எமது சகாக்களிடையே குழப்பத்திற்கான தோற்றுவாய் ஆகாமல், எந்த ஒரு ஆன்மாவையும் புண்படுத்தாமல், அல்லது எந்த உள்ளத்தையும் துன்பத்திற்கு ஆளாக்கமால் இருப்பதற்குமே ஆகும்.”

“வனாந்திரம் சென்று, அங்கு பிரிக்கப்பட்ட நிலையிலும், தனிமையிலும் இரண்டு வருடங்களை எவ்வித இடையூறுமற்ற தனிமையைக் கழித்தோம். எமது கண்களில் துன்பக் கண்ணீர் மழையெனப் பொழிந்தது, இரத்தம் கொட்டும் எமது இதயத்தில் மரணவேதனை என்னும் சமுத்திரம் ஆர்ப்பரித்தது. உயிர்வாழ்வதற்குரிய உணவு கிடைக்காது யாம் இருந்த இரவுகள் பலவாகும். பல நாள்கள் எமது உடல் ஓய்வு காணாது போயிற்று…..”

Image result for sar galu mountains
சார் காலு மலைகள்

தமது அஞ்ஞாத வாசத்தின்போது பஹாவுல்லா தம்மோடு ஒரு முஸுல்மானாகிய அபுல்-ஃகாஸிம்-இ-ஹமாடானி எனும் பெயர் கொண்ட ஒருவரை மட்டும் தம்மோடு அழைத்துக்கொண்டு ஒரே ஓர் எளிய மாற்றுடையை எடுத்துக் கொண்டு சுலைமானிய்யா சென்றார். இந்த அபுல்-காஃஸிமுக்கு பஹாவுல்லா சிறிது பணம் கொடுத்து வணிகத்தில் ஈடுபடுமாறு கூறினார். அபுல் காஃஸிம் அவ்வப்போது பஹாவுல்லாவுக்கு உணவும் பொருள்களும் கொண்டு வருவார். பஹாவுல்லாவும் மலையிலிருந்து கீழே சுலைமானிய்யா பட்டனத்திற்கு உணவு பொருட்கள் வாங்குவதற்காக வருவார். சார்-காலு என்னும் இடத்திலிருந்து சுலைமானிய்யா மூன்று நாள்கள் நடக்கும் தூரத்தில் இருந்தது. சுமார் 6000 பேர் வசித்த இந்த ஊர், அப்போது பார்ப்பதற்கு சகிக்காத குடியிருப்புகளுடன் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

உணவு வாங்குவதற்காக பஹாவுல்லா பயன்படுத்திய திருவோடு

ஆரம்பத்தில் அவர் சார்-காலுவில் வாழ்ந்தும் பின்னர் சில நேரம் விவசாயிகள் பயன்படுத்தும் கற்களால் ஆன ஓர் அடைக்கலத்திலும் குடியிருந்தார். பெரும்பாலும் பாலும் சாதமுமே அவரது உணவாக இருந்தது. அவர் எப்படி தமது நேரத்தை கழித்தார் என்பது தெரியவில்லை, ஆனால் எழுதுவதிலும் ஒதுவதிலும் பிரதிபலித்தலிலும் அவர் ஈடுபட்டிருந்தார் என்பது தெரிகிறது.

இந்த சுலைமானிய்யா பகுதியில் பஹாவுல்லா வாழ்ந்த காலத்தில் தம்மை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு முஹம்மத்-இ-இரானி” என்னும் நாமம் பூண்டு சுலைமானிய்யா மலைகளின் மீது துறவியைப்போல், மிகவும் எளிய ஆடையனிந்து ஒரு குகையில் வாழ்ந்து வந்தார். அந்த காலத்தில் உணவு யாசிப்பதற்காக தர்வீஷ்கள் எனப்படும் இஸ்லாமிய துறவிகள் பயன்படுத்திய அதே போன்ற திருவோட்டை பஹாவுல்லாவும் பயன்படுத்தினார். அந்தப் பாத்திரம் இன்று பஹாய் உலக மையத்தின் தொள்பொருள் காப்பகத்தில் உள்ளது.

Image result for sar galu mountains
விவசாயிகள் பயன்படுத்தும் கற்களால் ஆன வசிப்பிடம்

சுலைமானிய்யா ஒரு ரம்மியாமான ஆனால் சிறிய பட்டனம். இது பாக்தாத்திலிருந்து சுமார் 320 கிலோமீட்டர்களுக்கும் அப்பால் உள்ளது. இப்பகுதியில் வசிப்போர் குருதியர் (Kurd)  என அழைக்கப்படுவர். இவர்கள் தங்களுடைய சொந்த மொழியைப் பெற்றும், இஸ்லாம் சமயத்தின் சுன்ன பிரிவைச் சார்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.

சுலைமானிய்யா பகுதியின் பழங்கால வீடுகள்

சுலைமானிய்யா பகுதியில் பஹாவுல்லா வாழ்ந்திருந்த காலத்தில் அவரை யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அந்த வழியே வந்த வழிப்போக்கர்களும், விவசாயப் பணியாளர்களும், உலகப் பற்றற்ற ஒரு துறவியாக அவரைக் கண்டு, அந்த இடத்திற்கு அருகிலிருந்து நகரங்களில் உள்ளோரிடம் அவரைப் பற்றி கூறியிருக்கக்கூடும்.

சார்-காலு மலைப்பிரதேசத்திலுள்ள குகை ஒன்று

விரைவில், சூஃபி (இஸ்லாமிய சமயத்தின் ஒரு பிரிவினர்) சமயத்தவர்களின் தலைவரான ஷேய்க் இஸ்மாயில் அவரைப் பற்றி அறிந்து அவரைச் சந்தித்தார்.

பஹாவுல்லாவின் கையெழுத்துப் பிரதி ஒன்று ஓர் உள்ளூர் சூஃபி மதகுருவான ஷேய்க் இஸ்மாயில் கைக்கு கிடைத்த போது பஹாவுல்லா, அவரது தோற்றத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு மேன்மையான மனிதர் என்பதை, உள்ளூர் மக்கள் உணர ஆரம்பித்தனர்.

பஹாவுல்லாவின் மகளான பாஹிய்யா காஃனும் நினைவுகூர்கின்றார்: ஒரு நாள் சிறுவன் ஒருவன் மோசமான கையெழுத்துக்காக வகுப்பை விட்டு வெளியேற்றப்பட்டு வீதியில் அழுதுகொண்டிருந்தான். அப்போது அவ்வழியே வந்த துறவி ஒருவர் (பஹாவுல்லா), அச்சிறுவனின் அழுகைக்கான கரணத்தை வினவினார். காரணம் கேட்டு, “அழ வேண்டாம், நான் உனக்கு அதையே அழகான கையெழுத்தில் எழுத்திதருகிறேன், நன்றாக எழுதவும் உனக்குக் கற்றுத்தருகிறேன்,” என்றார்.

Image result for calligraphy of Baha'u'llah
பஹாவுல்லாவின் கையெழுத்து

எழுத்தறிவு குறைவாக இருந்த காலத்தில், பஹாவுல்லாவின் கையெழுத்தின் அழகு அவர் ஓர் உயர்வான கல்வியைப் பெற்றவர் என்பதைக் குறித்துக்காட்டியது. ஷேய்க் இஸ்மாயிலும் அவரது சீடர்களும் பஹாவுல்லாவைப் பற்றி அறிய ஆரம்பித்தனர். அவர்களுடனான ஒரு சந்திப்பில் பஹாவுல்லா அவர்களுக்காக 2000 வரிகள் கொண்ட ஒரு கவிதையை எழுதியருளினார்.

விரைவில் பஹாவுல்லாவின் பெருமை பாக்தாத் வரை பரவி, அவர் சுலைமானிய்யாவில்தான் இருக்கின்றார் என்பது தெரிய வந்தது. பஹாவுல்லாவின் சகோதரரான மிர்ஸா மூஸா, தமது மாமனாரை விளித்து, சுலைமானிய்யா சென்று பஹாவுல்லாவை அழைத்து வருமாறு கோரினார். அவரும் மற்றொருவருமாக சுலைமானிய்யா சென்றனர். பாப்’யி சமூகத்தை கட்டிக்காக்க முடியாமல் போன மிர்ஸா யாஹ்யாவும், என்ன செய்வது எனத் தெரியாமல் பஹாவுல்லாவை திரும்பி வருமாறு வேண்டியழைத்தார்.

இவர்கள் சுலைமானிய்யாவில் பஹாவுல்லாவைக் கண்டுபிடிப்பதற்கு சுமார் இரண்டு மாதங்களாயிற்று. பஹாவுல்லா பாக்தாத் திரும்ப சம்மதிப்பதற்கும் சில காலம் பிடித்தது. பஹாவுல்லா சுலைமானிய்யாவில் சரியாக இரண்டு சந்திர வருடங்கள் தங்கியிருந்தார்.

பாஹிய்யா காஃனும் கூறக் கேட்டது (Chosen Highway)

என் அம்மா தமது கணவருக்காக சில விலைமதிப்பற்ற பாரசீக பொருட்களிலிருந்து (திர்மிஹ் – சிவப்பு துணி) ஒரு கோட் தயாரித்திருந்தார், அவருடைய திருமண சீதனங்களிலிருந்து எஞ்சியவற்றை இந்த நோக்கத்திற்காக அவர் பத்திரமாக வைத்திருந்தார். இப்போது பஹாவுல்லா அந்த கோட்’டை அணிவதற்கு அது தயாராக இருந்தது.

கடைசியாக! இறுதியில்! என் அம்மா, என் சகோதரர் மற்றும் நானும் மூச்சுவிடாமல் எதிர்ப்பார்ப்புடன் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு காலடி ஓசை கேட்டது. மாறுவேடத்தில் இருந்த எங்கள் அன்புக்குரியவரின் திருவுருவை நாங்கள் கண்டோம்!

விவரிக்க முடியாத மகிழ்ச்சியோடு நாங்கள் அவரை ஓடி அணைத்துக்கொண்டோம்.

அமைதியும் மென்மையும் மிக்க என் அன்புத் தாயும், என் சகோதரனும் தந்தையின் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொள்வதையும் இப்போது என்னால் மனக்கண்ணில் காண முடிகிறது, மீண்டும் ஒருபோதும் அவரை எங்கள் பார்வையில் இருந்து வெளியேற விடமுடியாது என்பது போல. கட்டிப்பிடித்துக்கொண்ட அந்த அழகான பையன் (என் சகோதரன்) என் தந்தை அனிந்திருந்த மாறுவேட ஆடைக்குள் மறைந்தே விட்டான். இந்தக் காட்சியை என்னால் ஒருபோதும் மறக்க முடியவில்லை; மனதைத் தொட்டு மகிழ்ச்சியூட்டியது.

அந்த இரண்டு வருடங்கள் வனாந்தரத்தில் தங்கியிருந்த சம்பவங்கள் பல, அவை எங்களுக்குக் கூறப்பட்டன; அக்கதைகளை அடிக்கடி கேட்ட போதும் நாங்கள் ஒருபோதும் சோர்வடையவில்லை:

விவரிப்பதற்கு உணவு எளிதானது – கரடுமுரடான ரொட்டி, ஒரு சிறிய பாலாடை வழக்கமான உணவாக இருந்தது; சில நேரங்களில், ஆனால் மிகவும் அரிதாக, ஒரு கப் பால்; இதில் சிறிது சாதமும் சிறிது சர்க்கரையும் சேர்க்கப்படும். ஒன்றாக வேகவைக்கும்போது, ​​இந்த மிகச்சிறிய ரேஷன்கள் ஒரு வகையான சிறந்த அரிசிப் புட்டு விருந்தாக அமைந்தன. (பஹாவுல்லா இவ்வுணவை தமது கைகளாலேயே சமைத்தார் என்பது தெளிவு. இரான் நாட்டிலிருந்து பாக்தாத் வந்து சேர்ந்த சில காலத்திற்குப் பிறகு அவரது மனைவியான ஆஸிய்யா காஃனும் நோயுற்ற போதும் பஹாவுல்லா தமது மனைவிக்காகத் தாமே உணவு சமைத்துக் கொடுத்துள்ளார். பிற்காலத்தில் பயணம் ஒன்றின் போது பேரீச்சம் பழங்களை எப்படி வெண்ணெயுடன் சேர்ந்து சமைப்பது என்பதையும் சகாக்களுக்குச் சொல்லிக்கொடுத்துள்ளார்.)

பாக்தாத் திரும்பிய பஹாவுல்லா, அங்கு பாப்’யி சமூகம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டார். மிர்ஸா யாஹ்யா கையாலாகாதவர் என்பதை சமூகம் கண்டுகொண்டது. பஹாவுல்லா பாப்’யி சமூகத்தைத் திருத்தியமைக்கும் பணியில் உடனடியாக ஈடுபட்டார்.

இவ்விதமாக கடவுளின் அவதாரம் தமது இரண்டு வருடகால அஞ்ஞாதவாசத்தை முடித்தார்.