பஹாவுல்லாவின் விண்ணேற்றம்


பஹாவுல்லா நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் அறை, புனித சன்னதி.

பஹாய் சமயத்தில் ஒன்பது நாள்கள் புனித நாள்களாகவும், அத்தினங்களில் பணிகளுக்கு செல்லாமல் அத்தினங்கள் அனுசரிக்கப்பட வேண்டுமென பஹாய் சமயத்தின் பாதுகாவலரான ஷோகி எஃபெண்டி கூறியுள்ளார். மத ஸதாபகர்கள் தொடர்பான சில நிகழ்வுகள், குறிப்பாக அவர்களின் பிறந்தநாள்கள், மறைந்தநாள்கள், மற்றும் வேறு சில நாள்கள் புனிதநாள்களாகக் கருதப்படுகின்றன. அத்தினங்களுக்கு விசேஷ புனிதத்துவமும் தெய்வீக சக்தியும் உண்டு.

பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா மறைந்து இன்றுடன் (2023) 131 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 28/29`ஆம் நாள்களில் அவரது விண்ணேற்ற தினத்தை அனுசரித்து வருகின்றனர். அவர் அதிகாலை 3.00-மணிக்கு விண்ணேற்றம் அடைந்தார். பஹாய்கள் அவர் மறைந்த அந்த நேரத்தில் பிரார்த்தனைகள் செய்யவும், புனிதவாசகங்களைப் படிக்கவும், பாப் பெருமானார், பஹாவுல்லா இருவருக்காகப் பிரத்தியேகமாகத் தொகுக்கப்பட்ட நேர்வு நிருபத்தை வாசிக்கவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். பஹாவுல்லாவின் விண்ணேற்றம் பற்றி பின்வரும் விவரக்குறிப்பு, பஹாவுல்லாவின் பேத்திகளுள் ஒருவரால் வழங்கப்பட்டது.

என் தாயார், என் அத்தை, என் மூன்று சகோதரிகள் ஆகியோருடன் நான் அக்காநகரிலுள்ள பெரிய வீட்டில் எங்கள் தந்தையுடன் வாழ்ந்து வந்தோம். பஹாவுல்லா பாஹ்ஜியில் வாசம் செய்தார். அக்காலத்தில், அவ்விடத்தின் மக்கள் அவரையும் மாஸ்டரையும் பெரிதும் மதித்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினர். நாங்களும் அக்காநகரின் ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் முடிந்த அளவு மகிழ்ச்சியாக இருந்தோம். துயரமிகு இந்த நாளில் பாஹ்ஜியிலிருந்து ஒரு சேவகர் பஹாவுல்லாவிடமிருந்து மாஸ்டருக்கான ஒரு நிருபத்துடன் வந்து சேர்ந்தார்; “நான் நலக்குறைவாக இருக்கின்றேன், எம்மிடம் வருக, காஃனுமையும் உடன் அழைத்து வருக.” அவ்வூழியர், அவர்களுக்காக தம்மோடு குதிரைகளையும் கொண்டு வந்திருந்தார். என் தந்தையும் அத்தையும் பாஹ்ஜிக்கு உடனே விரைந்து சென்றனர்;பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் எங்கள் வீட்டிலேயே எங்கள் தாயாருடன், பதட்டத்துடன் இருந்தோம். ஒவ்வொரு நாளும், எங்கள் ஆராதனைக்கினிய பஹாவுல்லாவின் காய்ச்சல் தனியவில்லை என்னும் செய்தி வந்த வன்னமாக இருந்தது. அவருக்கு ஒரு விதமான மலேரியா கண்டிருந்தது. ஐந்து நாள்களுக்குப் பிறகு நாங்கள் அனைவரும் பாஹ்ஜி சென்றோம்; நோய் மிகவும் தீவிரமடைந்திருந்தது கண்டு நாங்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருந்தோம். நோய் கண்டிருந்த பதினைந்தாவது நாள், பாரசீக யாத்ரீகர்களும் அக்காநகர் பஹாய் நண்பர்களும் அவரது முன்னிலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாஹ்ஜி மாளிகையில் பஹாவுல்லாவின் அறை

ஷிராஸ் நகரிலிருந்து மிர்ஸா அன்டலீப், மற்றும் பார்வையற்ற கவிஞரான மிர்ஸா பஸ்ஸாரும் அங்கிருந்தனர். அவர்கள், கண்ணீர் வழிந்தோட, அவரது படுக்கையைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து, இவ்வுலகத்திற்காக, மேலும் சிறிதளவு நேரத்திற்காவது, அவரது விலைமதிப்பற்ற ஜீவனை காப்பாற்றிட, அவர்கள் தங்கள் உயிரை அர்ப்பணித்திட அனுமதிக்குமாறு பிரார்த்தனையுடன் மன்றாடினர். பஹாவுல்லா அவர்களிடம் சாந்தியும் அமைதியும் நிறைந்த அன்பான வார்த்தைகள் பேசி, கடவுளின் சமயத்திற்கு நம்பிக்கையுடனும், விசுவாசமாகவும், பற்றுறுதியோடும் இருந்து, அவர்களின் நற்பண்புகள் உலகிற்கு எடுத்துக்காட்டாக இருக்கும்படி அறிவுறுத்தினார். “உங்கள் அனைவரிடமும் நான் பெரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றேன். உங்கள் செயல்கள் பஹாய் சமயத்திற்கு மதிப்புமிகு எடுத்துக்காட்டுகளாக இருந்திடும் என்பதே என் எதிர்ப்பார்ப்பு – கடவுள் சட்டமெனும் ஒளியின் உண்மையான பற்றாளர்களாக என்றும் இருப்பீர்களாக.

மாஸ்டர் பல்வேறு விஷயங்களுக்காக, நண்பர்களைச் சந்தித்து, அவரது தந்தையார் சிறிது நலமாக இருக்கின்றார் என்னும் நற்செய்தியை வழங்கிட அக்காநகர் சென்றார். அதன் பின், அக்காநகர் ஏழை சிறைக் கைதிகளிடையே இரண்டு அர்ப்பண ஆடுகள் பகிர்ந்தளிக்கப்படுவதை மேற்பார்வையிட்டார். மாலையில் அவர் பாஹ்ஜி திரும்பி வந்தார்.

பஹாவுல்லா, பெண்களாகிய எங்களையும் பிள்ளைகளையும் தம்மிடம் அழைத்துவரும்படி கேட்டுக்கொண்டார். எங்களின் எதிர்கால வழிநடத்தலுக்கான வழிகாட்டிகளை அவர் தமது உயிலில் எழுதிவைத்துள்ளதாகவும் அதிவுயரிய கிளை, அப்பாஸ் எஃபெண்டி, குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் சமயம் சார்ந்த அனைத்திற்கும் மாஸ்டர் ஏற்பாடுகள் செய்வார் எனவும் எங்களிடம் கூறினார். “அன்டலீப்’பின் அன்பார்ந்த பக்தியும் அவர்கள் அனைவரின் அன்பும் என் மனதை மிகவும் தொட்டுள்ளது, அவர்கள் ஒவ்வொருவரும் உண்மையும் விசுவாசமும் நிறைந்த ஊழியர்களாக இருப்பார்கள் என நம்புகின்றேன்.

நோய் கண்டிருந்த பத்தொன்பதாவது நாள், வைகறையில், அவர் எங்களை விட்டுப் பிரிந்தார். உடனடியாக, ஒரு குதிரைவீரர் முஃப்டியிடம் தகவல் தெரிவிப்பதற்காக அக்காநகர் விரைந்தார்.

“கடவுள் சக்திமிக்கவர். அவர் உயிரளிக்கின்றார்! அதை மீண்டும் எடுத்துக்கொள்கின்றார்! அவர் மரணிப்பதில்லை, என்றும் நிலையாக வாழ்கின்றார்.

பெரிதும் மதிப்பிற்குறிய,கற்றறிந்த,புனித ஆன்மாக்கள் இறைவனடி சேரும் போது ஸ்தூபிகளிலிருந்து செய்யப்படும் இப்பிரகடனம், ஓர் இஸ்லாமிய மரபாகும்.

இத்துயரச் செய்தி அந்த மாநிலம் முழுவதும் காட்டுத்தீயைப் போல் பரவி, எல்லா பள்ளிவாசல்களிலிருந்தும் பிரகடனம் செய்யப்பட்டது. நாட்டுப்புறத்தின் எல்லா கிராமங்களிலிருந்தும் தங்கள் மரியாதையை தெரிவிப்பதற்காகவும், துக்கத்தில் பங்குகொள்ளவும் மக்கள் பாஹ்ஜியில் வந்து கூடினர். ஷேய்க்குகள் பலர் ஆடுகள், அரிசி, சர்க்கரை மற்றும் இதர பொருட்களை கையோடு கொண்டுவந்தனர். இது ஓர் அரபு சம்பிரதாயமாகும். இத்தகைய அன்பளிப்புகளை ஏழைகளுக்கு செய்தால், மறைந்த ஆன்மாவுக்காக அவர்கள் பிரார்த்திப்பர் என்பது எண்ணமாகும்.

இஸ்லாமிய நன்பர்கள், முஃப்டி, முல்லாக்கள், ஆளுனரும் அதிகாரிகளும், கிருஸ்துவ மதத்தலைவர்கள், லத்தீன், கிரேக்க, அபு சினான் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ட்ரூஸ்களும், வேறு பல நண்பர்களும் பெரும் எண்ணிக்கையில் பேரன்பருக்கு மரியாதை செலுத்த ஒன்றுகூடினர்.

அவரது புகழ்பாடும் மார்திய்யே எனப்படும் பாடல்கள் கவிஞர்களால் பாடப்பட்டன. துக்கப் பாடல்களும் பிரார்த்தனைகளும் ஷேய்க்கிகளால் ஓதப்பட்டன.  அவரது அற்புத சுய-தியாக வாழ்க்கையை வர்ணிக்கும் நல்லடக்க உரைகள் நிகழ்த்தப்பட்டன.

வருகையாளர்களுள் பலர், பாஹ்ஜி மாளிகையைச் சுற்றியிருந்த மரங்களுக்குக் கீழ் முகாமிட்டிருந்தனர். சுமார் ஐந்நூறு பேருக்கும் மேற்பட்டோருக்கு அங்கு ஒன்பது நாள்களுக்கு விருந்தோம்பல் நடைபெற்றது. இந்தக் கவனிப்பு மாஸ்ட்டருக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்தது; எல்லா ஏற்பாடுகளையும் அவரே செய்தார், ஒவ்வொரு விஷயத்தையும் அவரே மேற்பார்வையிட்டார்; அந்த ஒன்பது நாள்களிலும் ஏழைகளுக்கு அவர் பணம் கொடுத்தார்.

இந்த நாட்களில் விடியற்காலையில் “பிரார்த்தனைக்கான அழைப்பு” மற்றும் பஹாவுல்லாவின் சில “முனாஜத்” (பிரார்த்தனைகள்) அரண்மனையின் பால்கனியில் இருந்து ஓதப்பட்டன. எங்கள் பிரார்த்தனைக்கான அழைப்பை முழக்கமிடும் அரேபிய பஹாய் நண்பரின் அழகான குரலைக் கேட்பதற்கு மிகவும் மனதைக் கவர்வதாக இருந்தது. அதன் ஒலியில் மாஸ்டர் எழுந்தார்; நாங்கள் அனைவரும் அவரை நல்லடக்க சன்னதிக்குப் பின்தொடர்ந்தோம்; அங்கு அவர் இறுதிச் சடங்கிற்கான பிரார்த்தனை மற்றும் நேர்வு நிருபத்தை ஒதினார்.

(Lady Blomfield, the Chosen Highway)

பருவநிலை மாற்றத்தின் தார்மீக பரிமாணங்களில் கவனம் செலுத்தும் அவசியத்தை தொற்று நோய் வலியுறுத்துகின்றது


பருவநிலை மாற்றத்தின் தார்மீக பரிமாணங்களில் கவனம் செலுத்தும் அவசியத்தை தொற்று நோய் வலியுறுத்துகின்றது


8 அக்டோபர் 2021


காலேஜ் பார்க், மேரிலான்ட், ஐக்கிய அமெரிக்கா – தற்போது நிலவுகின்ற உலகளாவிய சுகாதார நெருக்கடியும் அதன் விளைவுகளும் எதிர்வரும் சுற்றுச்சூழல் சாவல்கள் குறித்த புதிய எச்சரிக்கைகளைத் விடுக்கின்றன. மேரிலான்ட் பல்கலைகழகத்தின் உலக அமைதிக்கான பஹாய் இருக்கையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையதள மாநாடு, மானிடத்தின் ஒருமை மற்றும் இயற்கையுடனான அதன் உறவு குறித்த அதிகரித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள ஒரு நேரத்தில் இச்சவால்களை ஆராய்ந்திட பங்கேற்பாளர்களுக்கு ஒரு கருத்தரங்கை வழங்கியது.

மேரிலான்ட் பல்கலைகழகத்தின் உலக அமைதிக்கான பஹாய் இருக்கையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையதள மாநாடு, மானிடத்தின் ஒருமை மற்றும் இயற்கையுடனான அதன் உறவு குறித்த அதிகரித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள ஒரு நேரத்தில் இச்சவால்களை ஆராய்ந்திட பங்கேற்பாளர்களுக்கு ஒரு கருத்தரங்கை வழங்கியது.

மாநாட்டில், உலக அமைத்திக்கான பஹாய் இருக்கையின் பொறுப்பாளரான ஹோடா மஹ்மூடி, தமது ஆரம்ப உரையில், “தற்போதைய உலகளாவிய சுகாதார நெருக்கடி, ஒரு பொது பிரச்சினையின் மீது கவனம் செலுத்துவதற்கு தனிநபர்கள், சமூகங்கள், ஸ்தாபனங்கள் மற்றும் அரசாங்கங்கள் ஒன்றுகூட வேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றது,” என்றார். இந்த நெருக்கடி, அறிவியல் ஆதாரம், நெறிமுறை கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த  கட்சிசார்பற்ற, ஒற்றுமையான நடவடிக்கையைக் கோருகின்றது. அது தார்மீக தைரியத்தை அழுத்தமாகக் கோருகின்றது. பருவநிலை மாற்றத்திற்கும் இது பொருந்துவதாகும்.

ஹவாயி பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியரான மேக்ஸீன் புர்க்கெட்’டை உள்ளடக்கிய மாநாட்டு பேச்சாளர்கள், மிகவும் பாதிக்கப்படக்கூடியோர் மீது கவனம் செலுத்தப்படுவதை உறுதிசெய்யும் அதே நேரம், பங்காளித்துவம், நம்பகம், உலகம் முழுவதுமான சவால்களை எதிர்நோக்குவதில் பகிரப்பட்ட நோக்கம் ஆகியவற்றை நிர்மாணிப்பதன் தேவையை ஆராய்ந்தனர்.

மாசாசுஸெட்ஸ் வூட்ஸ் ஹோல் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானியான ரிச்சர்ட் ஹௌட்டன், சூழ்நிலையின் துயரத்திற்கு ஒப்புதல் அளித்து, உலகளாவிய உமிழ்வுகள் குறைந்துள்ளது குறித்து பேசினார்.

“மக்கள், தேவைகளின் காரணமாக, தங்களின் பொருள்வளங்கள் குறித்து அதிக புத்திசாலிகளாகவும் அதிக பாதுகாப்பு உணர்வுடையவர்களாகவும் இருக்கின்றனர். இது, எது நடைமுறைப்படும் என்பது குறித்த பாடங்களை வழங்கிடக்கூடும். … பருவநிலை மாற்றத்திற்கு மேலும் உன்னிப்பான கவனம் செலுத்துவதற்கான ஒரு நேரமாக இந்தக் கல்வியூட்டும் காலத்தை, நாம் பயன்படுத்திக்கொள்ளக் கூடும் என நான் எதிர்ப்பார்க்கின்றேன்.  நச்சுயிரியின்பால் நாம் செலுத்தும் கவனமானது, பருவநிலைக்கும் என்ன செய்யப்பட வேண்டுமென்பதற்கும் பயன்படுத்தப்படக் கூடும்.”

ஆகாயப் பயணங்களால் உருவாக்கப்படும் உமிழ்வுகளை தவிர்ப்பதற்காக பல மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்ட இணையதள கூட்டமான இந்த மாநாடு, சுகாதார நெருக்கடி இருந்தபோதிலும், ஆஸ்திரேலியா, கம்போடியா, ஹவாயி, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்களை ஒன்றுதிரட்டியது. பங்களிப்பாளர்கள் கல்வியல் ஒழுக்கங்களின் ஒரு நெடுக்கத்திலிருந்து முன்னோக்குகளை வழங்கினர்.

மாநாட்டின் கலந்துரையாடல்களில், மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் தத்துவம் மற்றும் ‘டிம்னிக்’ இருக்கை பேராசிரியரான காய்ல் வய்ட், புதிய எரிசக்தி தொழில்நுட்பங்களின் அறிமுகத்தைச் சுற்றிய கொள்கைகள், நீதி மற்றும் நியாயம் குறித்த விஷயங்கள் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மாநாட்டின் கலந்துரையாடல்களில், மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் தத்துவம் மற்றும் ‘டிம்னிக்’ இருக்கை பேராசிரியரான காய்ல் வய்ட், புதிய எரிசக்தி தொழில்நுட்பங்களின் அறிமுகத்தைச் சுற்றிய கொள்கைகள், நீதி மற்றும் நியாயம் குறித்த, குறிப்பாக பூர்வகுடியினர் மற்றும் பாதிப்புக்கு ஆளாகும் குழுமத்தினர் தொடர்பான விஷயங்கள் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். “இயல்பாகவே ஒரு நல்ல விஷயம் என பல மக்கள் நம்பும் ஓர் எரிசக்தி மாற்றமானது” இப்போதிருந்து 50 ஆண்டுகளில் முழு மக்கள்தொகையின் இடம்பெயர்வுக்கு வழிவகுத்த ஒன்றென கருதப்படக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

அவரும் ஆஸ்திரேலியாவின் எடிலேய்ட் பல்கலைகழகத்தின் சமுதாய அறிவியல்கள் பகுதியின் இடைக்கால தலைவரான மெலிஸ்ஸா நேர்ஸி-பிரேய்’யும் அவற்றைப் பாதிக்கும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் உள்ளூர் சமூகங்களும் ஈடுபட வேண்டுமென கூறினர். டாக்டர் நேர்ஸி-பிரேய், “எதிர்காலத்தையும், ஓர் உலகளாவிய தீர்வை நோக்கி நகர்வதில், உள்ளூர் இட அடிப்படை பிரதிசெயல்களையும் நாம் உண்மையில் கருத்தில் கொள்வது அவசியம்,” என்றார்.

“ஒரு பொதுப் பிரச்சினையை எதிர்கொள்ள தனிநபர்கள், சமூகங்கள், ஸ்தபானங்கள், மற்றும் அரசாங்கங்கள் ஒன்றுதிரள வேண்டும் என்பதை தற்போதைய உலகளாவிய சுகாதார நெருக்கடி… எடுத்துக் காண்கின்றது. சமீபமாக நடந்தேறிய ஓர் இணையதள மாநாட்டில், உலக அமைதிக்கான பஹாய் இருக்கையின் பொறுப்பாளரான ஹோடா மஹமூடி, “பருவநிலை மாற்றத்திற்கும் இது பொருந்தும்,” எனக் கூறினார்.

மாநாட்டைப் பற்றி பிரதிபலித்த டாக்டல் மாஹ்மூடி, அனைத்தும் சமுதாய மற்றும் சூற்றுச்சூழலுக்கு மகத்தான தாத்பர்யங்கள் கொண்டுள்ள பொருளாதாரம், நுகர்வியம், சுகாதாரம், நல்வாழ்வு ஆகியவை குறித்த அனுமானங்கள் தற்போது எவ்வாறு சவாலுக்கு உட்படுத்தப்படுகின்றன என்பதை வர்ணித்தார்.

இன்று மக்கள் எதிர்நோக்கும் சுற்றுச்சூழல், பொருளாதார, சமுதாய நெருக்கடிகள் அனைத்தின் அடித்தலமும் ஓர் ஆன்மீக நெருக்கடியே.  மனிதர்கள் எனும் முறையில் நாம் யார் என்பது குறித்து உலக மக்களிடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டாலின்றி இந்த முக்கியமான பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியாது. ஒருவர் மற்றவர் மீது கொண்டிருக்க வேண்டிய மற்றும், கிரகத்தின் அறங்காவலர்கள் எனும் முறையில் நமது தார்மீக பொறுப்பு என்ன? எந்தக் கொள்கைகளைச் சுற்றி நாம் ஒற்றுமையடைய இயலும்?  மனிதகுல ஒருமை பற்றி நாம் பேசும்போது, அது தோழமை மற்றும் நேசம் குறித்தது மட்டுமல்ல, ஆனால் இந்த வைரஸ் சுட்டிக் காட்டியுள்ளபடி, நுணுக்கமாக ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முற்றிலும் புதிய அணுகுமுறையுடன்  ஒரு வேறுபட்ட உலகத்தை உருவாக்குவதற்கான அழைப்பும் ஆகும். இந்த நெருக்கடிக்குப் பிறகு, இந்தத் திசையில் நடவடிக்கைகள் எடுப்பதற்கு நமக்கு வாய்ப்பு ஏற்படலாம்.

மாநாட்டின் வழங்கல்கள் அனைத்தையும் நீங்கள் இணையதளத்தில் காணலாம்

மூலாதாரம்: https://news.bahai.org/story/1430/

தொற்றுநோயைத் தொடர்ந்து அத்தியாவசியக் கொள்கைகளை கெனேடிய போட்காஸ்ட் தொடர் ஆராய்கிறது


தொற்றுநோயைத் தொடர்ந்து அத்தியாவசியக் கொள்கைகளை கெனேடிய போட்காஸ்ட் தொடர்ஆராய்கிறது


8 அக்டோபர் 2021


டொரொன்டோ, கெனடா — கெனேடிய பஹாய் சமூகம், “இன்னல்களுக்கு எதிரில் மீளுந்திறன்” என தலைப்பிடப்பட்ட ஒரு ஒரு புதிய பொட்காஸ்ட் குறுந்தொடர் ஒலிபரப்பை ஆரம்பித்துள்ளது. இத்தொடரின் அத்தியாயங்கள் தற்போதைய பொது சுகாதார நெருக்கடிக்கிடையில் நிலவும் தற்போதைய சவால்கள் மீது சமய அகப்பார்வைகள் எவ்வாறு ஒளிபாய்ச்சக்கூடும் என்பதை ஆராய்கின்றன.

“நமது இணைச்சார்புமை, ஒருமைப்பாட்டிற்கான அவசியம், நம் சமூகங்களில் பிரதிபலிக்க வேண்டுமென நாம் விரும்பும் விழுமியங்கள் குறித்து, மேன்மேலும் அதிக மக்கள் சிந்தித்து வருகையில், இந்த நெருக்கடி சமுதாயத்தில் ஒரு புதிய விழிப்புணர்வை எழுப்பி வருகின்றது,” என்கிறார் அந்நாட்டின் பொது விவகாரங்களுக்கான பஹாய் அலுவலகத்தின் ஜெஃப்ரி கேமரன்.

சமூக நிர்மாணிப்பு முயற்சிகளில் பஹாய் சமூகத்தின் அனுபவம் இக்கருப்பொருள்கள் குறித்து சில அகப்பார்வைகளை வழங்குகின்றன. இந்த பொட்காஸ்ட் நிநிகழ்ச்சியில் நாங்கள் ஊக்குவிக்க முயலும் உரையாடல்களில் மேலும் அதிக மக்கள் இணைந்துகொள்வார்கள் என்பது எங்களின் எதிர்ப்பார்ப்பு

இத்தொடர்கள், கெனேடியர்கள் தொடர்புடைய ஆக்ககரமான சிந்தனை மற்றும் செயலைத் தூண்டுவதில் சமயத்தின் சக்தி மற்றும் சமுதாயத்திற்கான ஒருவர் சேவையின் முக்கியத்துவம் போன்றகேள்விகளை பரிசீலிப்பதற்கு கல்வியலாளர்களையும் சமுதாய நடவடிக்கையாளர்களையும் ஒன்றுதிரட்டுகின்றது.

முதலாவது அத்தியாயத்தில் பொது நெறிகளின் பேராசிரியர் ஒருவரும் முன்னணியில் பணிபுரியும் ஒரு மருத்துவரும் இந்த நெருக்கடிக்கும் அப்பால் பிறருக்கான சேவை எவ்வாறு பொது வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சமமாக இருக்கக்கூடும் என்பதை ஆராய்கின்றனர்.

“மனித இடைத்தொடர்புமையும் ஒருவர் மீது மற்றவர் கொள்ளும் பொறுப்புணர்வும் சமயங்களின் அல்லது பெரும்பாலான சமயங்களின் அடிப்படை கோட்பாடாக இருக்கின்றது,” “பொருளாதார ரீதியில், பூகோள ரீதியில், அரசியல் ரீதியில் பிளவுபட்டுக் கிடக்கும் ஓர் உலகில் நாம் வாழ்கின்றோம்–ஆனால் நாம் அனைவரும் உண்மையிலேயே ஒன்றாக ஈடுபட்டிருக்கும் ஒரு நெருக்கடி இன்று. ஒரு பகிர்ந்துகொள்ளப்பட்ட மானிட உணர்வு இதற்குப் பின்னும் நீடித்து, நம் உலகை வலுப்படுத்திடுமாக.

புதிய முறைகளில் சிந்திப்பதற்கான சமயத்தின் சக்தி பற்றி சென்ற புதன்கிழமை வெளியிடப்பட்ட இரண்டாவது அத்தியாயத்தில், எவ்வாறு தற்போதைய சூழ்நிலைகளில் மானிடத்தின் அடிப்படை ஒருமையை அதிக தெளிவுடனும் திடநம்பிக்கையுடனும் மக்கள் காண ஆரம்பித்துள்ளனர் என்பதை கெனடா பஹாய் சமூகத்தின் எரிக் ஃபார் வர்ணிக்கின்றார். பிற பங்கேற்பாளர்களின் உணர்வுகளை எதிரொலித்த அவர், பொது விழிப்புணர்வில் இந்தக் கோட்பாடு உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டும், சமுதாயத்தின் கட்டமைப்புகளுக்கு அதன் தாத்பர்யங்கள் மீது ஆழ்ந்த பிரதிபலிப்பைத் தூண்டுவதும் குறித்த தமது ஆர்வநம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

கார்டஸ்’சிலிருந்து வரும் சமயம் சார்ந்த சிந்தனையாளர் குழுமம் ஒன்றின் ஹன்னா மராட்ஸி  பின்வருமாறு கூறுகின்றார்: “என்னைச் சுற்றியுள்ள மக்கள் மனிதம் என்றால் என்னவென்பதை மறுபரிசீலனை செய்வதை நான் கண்ணுறுகின்றேன். என்னைச் சுற்றி பார்க்கையில், நான் தொலைபேசியில் தொடர்பு கொள்வோரை செவிமடுக்கும் போது, நான் எதில் என் ஆர்வநம்பிக்கையை வைப்பது, என் அண்டையர் மீதான என் கடமை என்ன? ஆழ்ந்த முக்கியத்துவமுடைய விஷயங்களின்பால் என் வாழ்க்கையை நான் எவ்வாறு திசை திருப்புவது என்பன போன்ற மிக முக்கியமான கேள்விகளுக்கு மீண்டும் திரும்புவதைக் காண்கின்றேன்.”  

இந்த உரையாடல்களின் மீது பிரதிபலித்த டாக். கேமரன் பின்வருமாறு கூறுகின்றார்: “நாம் பகிர்ந்துகொள்ளும் விழுமியங்கள், சமுதாயத்தில் சமயம் மற்றும் ஆன்மீகத்தின் பங்கு குறித்த பரிணமித்து வரும் உரையாடல்கள் மீது இந்த பொட்காஸ்ட் ஒளிபாய்ச்சிடக் கூடும் என நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம். நாங்கள் முன்னோக்கிப் பார்த்து, வருங்காலத்திற்கான எங்களின் இலட்சியங்களைப் பற்றி பேசி வருகின்றோம்.

“பொது சொல்லாடல்” எனத் தலைப்பிடப்பட்ட புதிய பொட்காஸ்ட்’டின் அத்தியாயங்கள் அடுத்த மாதத்திற்கு பொது விவகார அலுவலகத்தின் இணையதளத்தில் வாரந்தோறும் வெளியிடப்படும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1429/

இந்திய கிராமத்தில் எடுக்கப்படும் முயற்சிகள், பங்கேற்பை ஈர்க்கின்றன



20 மே 2020


புக்கனாக்கெரே, இந்தியா — கொரோனா நச்சுயிரியின் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இன்னமும் அமுலில் இருக்கும் வேளை, தங்களின் சக குடிமக்களை ஆதரிக்கவும் மேம்படுத்தவுமான முயற்சிகளை இந்திய பஹாய்கள் தொடர்ந்து மேற்கொள்கின்றனர். நாடு முழுவதும் நடப்பிலிருக்கும் இது போன்ற பிற எண்ணிலடங்கா முயற்சிகளுள் புக்கனாக்கரே கிராமத்தில் மேற்கொள்ளப்படும் முன்முயற்சி ஓர் உதாரணமாகும். அனைவரின் நன்மைக்காகவும் தங்களின் அடக்கமான பொருள்வளங்களை மக்கள் ஒன்றுகுவிக்கும் போது என்ன சாதிக்கப்பட முடியும் என்பதை இது வெளிப்படுத்துகின்றது.

தினசரி ஊதியத்திற்கு வேலை செய்வோர் மற்றும் அவர்தம் குடும்ப நலன் மீது கொண்ட அக்கறையினால், இந்தியாவின் புக்கனாக்கெரே கிராம பஹாய்கள், அங்கு வசிக்கும் சுமார் 100 குடும்பங்களுக்கு உணவும் பிற தேவைகளையும் வழங்கிட உள்ளூர் செயலாண்மையர்களுடனும் பிற உள்ளூர்வாசிகளுடனும் உடனுழைத்தனர்.

“ஒற்றுமையைப் பேணுதல் எங்கள் சமூகத்தில் எப்போதுமே ஒரு வழிகாட்டும் கோட்பாடாக இருந்துவந்துள்ளது; அது எங்கள் உள்ளத்தின் மையத்தில் குடிகொண்டுள்ளது,” என்கிறார் புக்கனாக்கெரே உள்ளூர் ஆன்மீக சபையின் திரு குமார் நாயக். “சிரமமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு ஒற்றுமையுடன் பணிபுரிவதன் மதிப்பை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

நடமாட்ட கட்டுப்பாட்டினால் தினசரி ஊதியம் பெறுபவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பல பகுதிகளில் புக்கனாக்கெரே ஒன்றாகும். அவர்களின் நல்வாழ்வைப் பற்றிய அக்கறையின் காரணமாக, இந்த கிராமத்தின் பஹாய்கள் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பிற குடியிருப்பாளர்களுடன் ஒத்துழைத்து இப்பகுதியில் சுமார் 100 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

இப்பகுதியில் உள்ள சுமார் 100 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்கும் இந்தியாவின் புக்கனாக்கெரே பஹாய்களின் முயற்சியை கர்நாடகாவில் உள்ள ஒரு மாநிலம் தழுவிய செய்தி சேனல், ஒளிபரப்பியது, இந்த முயற்சிக்கு குடும்ப விஜயங்களில் அவர்களும் பங்கேற்ற கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களான உள்ளூர் நிர்வாக அதிகாரிகளும் ஆதரவு நல்கினர்.

இந்த முயற்சிக்கு, தாங்களும் குடும்ப விஜயங்களில் பங்கேற்ற உள்ளூர் நிர்வாக அதிகாரமான கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆதரவு நல்கினர். ஆரவாரமின்றி மேற்கொள்ளப்பட்டாலும், இந்த முயற்சிகள் கர்நாடகாவில் உள்ள ஒரு மாநிலம் தழுவிய தொலைக்காட்சி செய்தி சேனலால் அண்மையில் ஒளிபரப்பப்பட்டது: “இந்த நேரத்தில், பொருள்வளமுடைய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கடைகளில் இருந்து தேவையான பொருட்களை வாங்குகிறார்கள், ஆனால் அன்றாட ஊதியத்தை நம்பியுள்ள பல குடும்பங்கள் கடுமையான கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.

“இந்த சூழ்நிலையில், பஹாய் உள்ளூர் ஆன்மீக சபையின் உறுப்பினர்களும் புக்கனாக்கெரே’யின் பிற குடியிருப்பாளர்களும், உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு உணவு பொட்டலங்களை விநியோகிப்பதன் மூலம் உதவிட முன்வந்துள்ளனர்”

இந்த முயற்சி குறித்து பிரதிபலித்த உள்ளூர் ஆன்மீக சபையின் மற்றொரு உறுப்பினர் சந்தோஷ்குமார் கூறுகிறார்: “அனைவரின் நல்வாழ்வுக்கும் பங்களிக்க நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது. ஒருவருக்கொருவர் உதவ நாம் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, அது கூட்டு நடவடிக்கைக்கு ஊக்கமளிக்கிறது; எல்லோரும் பங்களிக்க தூண்டப்படும் சூழலை உருவாக்குகிறது. கிராமத்தில் இன்னும் பல மக்கள் குழுக்கள் தங்கள் சொந்த வழியில் நெருக்கடியை எதிர்கொள்ள முன்வருவதை இப்போது நாங்கள் காண்கிறோம்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1428/

பிரார்த்தனை ஒருமைப்பாட்டு உணர்வைத் தூண்டுகிறது கூட்டு வாழ்க்கையை வளப்படுத்துகிறது


பிரார்த்தனை ஒருமைப்பாட்டு உணர்வைத் தூண்டுகிறது கூட்டு வாழ்க்கையை வளப்படுத்துகிறது


15 மே 2020


புக்காரெஸ்ட், ருமேனியா – சில மாத காலத்திற்குள், கொரோனா தொற்று தொடர்ந்து சமுதாயங்களைச் சீர்குலைத்து பெரும் துன்பத்தை ஏற்படுத்தும் அதே வேளை, மானிடத்தின் கூட்டு வாழ்க்கையில் வழிபாடும் பரோபகாரமும் அதிக கவனத்திற்குள்ளாகியுள்ளன.

கூட்டு வழிபாட்டை மையமாகக் கொண்ட சமூக வாழ்க்கையில் புதிய முறைகள் எங்கும் வெளிப்பட்டு, தங்களின் சக குடிமக்களின் தேவைகளின்பால் மக்களின் கவனத்தைத் திருப்புகின்றன.

“மகிழ்ச்சி அல்லது சிரமம் மிக்க காலங்களில் தனது சிருஷ்டிகர்த்தாவின்பால் திரும்புவதே ஆன்மாவுக்கு இயல்பான உந்துதலாக இருக்கும். ஆனால் தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளில் அது அடிக்கடி அமைதியாக்கப்பட்டு மறக்கப்படுகின்றது,” என்கிறார் ருமேனிய பஹாய்களின் தேசிய ஆன்மீக சபை உறுப்பினரான இவோன் மார்லன் ஸ்கார்லட்டெஸ்கு. “ஆனால், இந்த நெருக்கடியினால், மக்கள் நம்மை ஒற்றுமைப்படுத்தும் தங்கள் ஆன்மீக இயற்கையின்பால் திசைதிருப்பப்பட்டு பிரார்த்தனையின் முக்கியத்துவத்தை உணர்கின்றனர்.

ருமேனிய பஹாய்கள், தங்கள் நாட்டில் பிரார்த்தனையின்பால் ஆர்வம் அதிகரித்து வருவதற்கு மறுமொழியாக, பிரார்த்தனை கூட்டங்களில் சேர விரும்பும் அனைவருக்கும் இணையத்தள வழிபாட்டுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். “மக்கள் தினமும் ஒன்றாக பிரார்த்திக்க வருவதால் அதிக உரையாடலுக்கான தொர்புகள் ஏற்படுகின்றன” என்று திருமதி ஸ்கார்லெடெஸ்கு கூறுகிறார். “மக்களின் இதயங்கள் ஒன்றாகத் துடிக்கத் தொடங்குகின்றன. பிரார்த்தனை, ஒற்றுமை மற்றும் ஒருவர் மற்றவரை கவனித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய நட்புறவை நாங்கள் காண்கிறோம். “

இந்தோனேசியாவில் ஒரு குடும்பம் ஒன்றாக பிரார்த்திக்கிறது. “ஒரு சிலர் பிரார்த்தனை செய்ய ஒன்றுகூடி, அவர்கள் சொல்லும் புனித வார்த்தைகளின் அர்த்தத்தைப் பற்றி ஆழமாக சிந்திக்கும்போது, அவர்கள் முக்கியத்துவங்களைப் பற்றிய தெளிவான பார்வையைப் பெறுகிறார்கள், மேலும் ஒற்றுமை உணர்வைப் பெறுகிறார்கள். இந்தோனேசியாவின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் ரீனா ட்ஜுவா லீனா கூறுகையில், “அவர்கள் முடிவுகள் எடுக்க முடிகின்றது, அவர்களைச் சுற்றிலும் காணப்படும் தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க முடிகிறது.

இந்த கருத்துக்கள் உலகம் முழுவதும் பலர் வெளிப்படுத்திய உணர்வுகளை எதிரொலிக்கின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு போர்னியோவில், நண்பர்கள் குழுமம் ஒன்று தங்கள் நாட்டின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்ய இணையத்தளத்தில் ஒன்றுகூடத் தொடங்கியபோது, அவர்கள் உடனடி சுற்றுப்புறங்களில் மற்றவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதைப் பற்றி சிந்திப்பது இயல்பான ஒன்றாக இருந்தது. அவர்களின் உரையாடல்கள் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு முகமூடிகளை உருவாக்கி விநியோகிப்பதற்கான ஒரு முன்முயற்சிக்கு வழிவகுத்தன.

இந்தோனேசியாவில் ஒரு குடும்பம் ஒன்றாக பிரார்த்திக்கிறது. “ஒரு சிலர் பிரார்த்தனை செய்ய ஒன்றுகூடி, அவர்கள் சொல்லும் புனித வார்த்தைகளின் அர்த்தத்தைப் பற்றி ஆழமாக சிந்திக்கும்போது, அவர்கள் முக்கியத்துவங்களைப் பற்றிய தெளிவான பார்வையைப் பெறுகிறார்கள், மேலும் ஒற்றுமை உணர்வைப் பெறுகிறார்கள். இந்தோனேசியாவின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் ரீனா ட்ஜுவா லீனா கூறுகையில், “அவர்கள் முடிவுகள் எடுக்க முடிகின்றது, அவர்களைச் சுற்றிலும் காணப்படும் தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க முடிகிறது.

ஆஸ்திரேலிய பஹாய் வழிபாட்டு இல்லத்திலிருந்து ஒரு நேரடி வழிபாட்டு நிகழ்ச்சியின் ஒலிபரப்புவழிபாட்டு நிகழ்ச்சி

ஒருமுறை கண்ணுக்குத் தெரியாமல் அல்லது கவனிக்கப்படாமல் இருப்பதாக உணர்ந்த மக்கள்-தங்களின் அண்டையர்களுக்குக் கூட—கூட கூட்டுப் பிரார்த்தனையானது அந்நியர்களை நண்பர்களாக்கிடும் சக்தி இருப்பதை உணர்கிறார்கள். பஹாய் வழிபாட்டு இல்லங்கள் இருக்கும் இடங்களில், வழிபாட்டு நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்புகள் மற்றும் கூட்டு பிரார்த்தனைக்கான இணையதள கூட்டங்கள் பலரை ஒன்றிணைத்து, கவலைகளைக் கலைந்து, ஆர்வநம்பிக்கையைத் தூண்டுகின்றன.

சில்லி நாட்டின் சாந்தியாகோவில், இத்தகைய வழிபாட்டுக் கூட்டங்களின் பங்கேற்பாளர் ஒருவர் பிரார்த்திப்பதற்காக ஒன்றுகூடுவது அதற்கு முன்பு அறிமுகமற்ற மக்களிடையே நட்பின் பந்தங்களை உருவாக்கியுள்ளது.

“அண்டையர்கள் தங்களால் முடிந்த போதெல்லாம் தொடர்ந்து ஆதரவை வழங்குகிறார்கள். யாராவது பல்பொருள் அங்காடி அல்லது மருந்தகத்திற்குச் செல்லும் போது, சுற்றிலுமுள்ள மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களுக்கும் ஏதாவது தேவையா என கேட்பார்கள்.”

ஆனால் ஒருவருடன் ஒருவருடனான இடைத்தொடர்பு உணர்வு இணைய அணுகலைப் பொறுத்தது அல்ல. உலகின் பல பகுதிகளிலும், மக்கள் ஒருவருக்கொருவர் பிரார்த்தனையில் சேர்ந்துகொள்ள தொலைபேசி அழைப்புகளின் வலையமைப்புகளை நிறுவியுள்ளனர் அல்லது தங்கள் வட்டாரங்களுக்கான வழிபாட்டு நிகழ்ச்சிகளின் வானொலி ஒளிபரப்புகளைத் தயாரித்துள்ளனர்.

உகான்டாவின் காமுலியில் உள்ள பஹாய்கள், ஒரு பக்திசார்ந்த வாழ்க்கையின் முக்கியத்துவத்தைப் பற்றி அனுதினமும் வானொலி ஒலிபரப்புகள் செய்துவருகின்றனர்

உகாண்டாவின் கமுலியில், பக்தி சார்ந்த வாழ்க்கையின் முக்கியத்துவம் குறித்து பஹாய்கள் தினசரி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகின்றனர், அப்பகுதியில் வசிக்கும் டேவிட் வைஸ்வா கூறுகிறார்: “இந்த தினசரி பிரார்த்தனை நேரம் ஒரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஆழ்ந்த கேள்விகளைப்பற்றி ஒன்றாக சிந்திக்கக்கூடிய நேரமாவதோடு, குடும்ப விஷயங்களைப் பற்றி கலந்தாலோசிக்கவும் முடிகிறது.

“பிரார்த்தனை மூலம் உருவாக்கப்பட்ட அன்பு, ஒற்றுமை மற்றும் புரிதல் ஆகியவற்றின் சூழலில், குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் அதிக சிந்தனையுடன் இருப்பதோடு மட்டுமின்றி, அவர்களைச் சுற்றியுள்ள சமூகத்தின் தேவைகளைப் பற்றியும் அதிக விழிப்புடன் இருக்கிறார்கள்.”

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பஹாய்கள் பிரார்த்தனை மற்றும் சமூக சேவையின் முக்கியத்துவம் குறித்து ஒரு குறும்படத்தை உருவாக்குகிறார்கள்.

ஜோர்டானைச் சேர்ந்த ஹனன் இஹ்சன் என்ற இளைஞர் தமது சகாக்களுடன் பக்தி தருணங்களைப் பற்றி பிரதிபலிக்கின்றார்: “கடவுளை நோக்கி திரும்பி பிரார்த்தனை செய்வதே இந்த கடினமான காலத்தைக் கடந்திட எங்களுக்கு உதவி வருகிறது. இந்த தொற்றுநோய் நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது, இந்த கடினமான நேரத்தை கடந்து செல்ல ஒருவருக்கொருவர் எவ்வாறு உதவலாம், இந்த நெருக்கடிக்கு அப்பால் நமது சமூகம் எவ்வாறு முன்னேற முடியும் என்பதைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு. ”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1427/

கலைகள் உலகில் அழகை வெளிப்படுத்துகின்றன, தற்போதைய சூழ்நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன


டார் எஸ் சலாம், தான்ஸானியாவில் உள்ள ஓர் இளைஞர், சமூக தனிமைப் படுத்தல் போன்ற சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குக் கீழ்ப்படிதலை ஊக்குவிப்பதற்கு இலக்க கலைப்படைப்புகளைப் பயன்படுத்துகிறார். சமூகத்தின் யதார்த்த நிலைகளைப் பற்றி விளக்கமளிக்கவும் சில சுகாதார குறிப்புகளை பகிர்ந்துகொள்ளவும் நான் ஊக்குவிக்கப்பட்டேன்,” என அந்த கலைஞர் கூறுகிறார். “மக்கள் இந்த தொற்றுநோயை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டுகள் மூலம் காண்பிக்க விரும்பினேன்.”

கலைகள் உலகில் அழகை வெளிப்படுத்துகின்றன, தற்போதைய சூழ்நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன


11 மே 2020


பஹாய் உலக மையம் – இத்தனித்தன்மைமிக்க நேரங்களில், மனிதவாழ்வின் ஆன்மீக பரிமாணங்களின் மீது பிரதிபலிப்பைத் தூண்டுவதிலும், நம்பிக்கை ஊட்டுவதிலும் கலைகள் குறிப்பான முக்கியத்துவம் வகிக்கின்றன. பஹாய்களும் உலகம் முழுவதுமுள்ள அவர்களின் சக குடிமக்களும், மானிடத்தின் இடைத்தொடர்புடமை போன்ற, பொது விழிப்புணர்வைக் கவ்வும் கருப்பொருள்களை மக்களிடையே வெளிச்சத்திற்குக் கொண்டுவர கலைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

“மக்கள் தங்களின் நண்பர்களைச் சென்றடையவும், அவர்களின் சஞ்சலங்களைப் போக்கிக் கொள்ளவும் ஆக்ககரமான முன்முனைவுகள் வழிகளை வழங்குகின்றன. கலைத்துவ வேலைப்பாடுகள் ஆர்வநம்பிக்கை, அகப்பிணைவு, மற்றும் சமுதாயத்தில் ஒற்றுமை குறித்த உணர்வுகளை அதிகரித்திட முடியும்,” என ருமேனியா நாட்டின் ஸ்கெட்ச் கலைஞரான சிமினா கூறுகிறார்.

எல்லா வயதினரும், குறிப்பாக இளைஞர்கள், இசை, பொட்காஸ்ட்கள், ஓவியங்கள் மற்றும் வரைபடங்கள், தியேட்டர், கைப்பாவை நிகழ்ச்சிகள், கவிதை மற்றும் டிஜிட்டல் வடிவமைப்புகள் மூலம் சக குடிமக்களின் ஆவிகளை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிந்துள்ளனர்.  இத்தகைய படைப்புகள் உலகில் இருக்கும் அழகை வெளிப்படுத்துவதிலும், தற்போதைய சூழ்நிலைகளில் புதிய கண்ணோட்டங்களை வெளிப்படுத்துவதிலும் கவனம் செலுத்தியுள்ளன.

ஆக்ககரமான யோசனைகளை வெளிப்படுத்துவதற்கு கலைகளின் பயன்பாடு குறித்து பிரதிபலிக்கின்ற ஓர் இளம் இசை கலைஞரான நாடிவ் கூறுவது: “இந்த தொற்றுநோயின் போது இசையின் மூலம், பொதுநலம் குறித்த பிரச்சினைகளைப் பற்றி கவனம் செலுத்துவதற்கும் ஒருமைப்பாடு குறித்த கூட்டு வெளிப்பாடுகளில் பங்கேற்க மக்களைத் திரட்டவும் எங்களால் முடிந்துள்ளது. உண்மையில் கலைகள் குரலற்றோரின் குரலாக இருந்துள்ளன. ஒரு விஷயத்தை நேரடியாகக் கூறமுடியாவிட்டால், அதை படைப்புத்திற வழிகளின் மூலம் வெளிப்படுத்தலாம்.”  

அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிபவர்களுக்கு பாராட்டுக்களைக் காண்பிப்பதற்கும், சுகாதார நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சமூகங்களுக்கு வழங்குவதற்கும் கலைகள் பலரால் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் ஓவியரான மெடோவ் கூறுகிறார்: “எங்கள் கைகளையும் கரங்களையும் பயன்படுத்தி மற்றவர்கள் மனமகிழ்ச்சியடைய அழகானதும் உத்வேகமூட்டக் கூடியதுமான ஏதாவது ஒன்றை எவ்வாறு எல்லாருமே உருவாக்கலாம் என்பதை நாம் பார்த்திருக்கின்றோம். படைப்பாற்றலானது, நமது உணர்வாற்றலை அதிகரித்தும் நம்மைச் சுற்றியுள்ளோருக்கு உதவி உத்வேகம் வழிந்தோடுவதற்கு வகை செய்கின்றது.

பஹாய் போதனைகளால் தூண்டப்பட்டு, இக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட பல கலைத்துவ படைப்புகளின் ஒரு சிறு தொப்பு இங்கு வழங்கப்படுகின்றது.

லத்தீன் அமெரிக்காவிலும் ஸ்பெயினிலும் உள்ள பஹாய்கள் இளைஞர்களுக்கான உற்சாகமளிக்கும் இசை வீடியோக்களைத் தயாரித்து வருகின்றனர். அன்பின் வலிமையைக் குறிக்கும் “லா ஃபுர்ஸா டெல் அமோர்” என்ற இந்த பாடல், இளைஞர்களை நேர்மறையான எண்ணங்களை செயல்வடிவில் வெளிப்படுத்த ஊக்குவிக்கிறது. (பாடல் இங்கே)
இத்தாலியில் சிறுவர்களின் தார்மீக கல்விக்கான வகுப்புகளின் ஆசிரியர்கள், நீதி பற்றிய கருப்பொருளில் ஒரு கைப்பொம்மை நாடகத்தை ஒளிப்பதிவு செய்து அதை “Stelle Splendenti” (Brilliant Stars) எனும் அவர்களின் இணையத்தளத்தில் பகிர்ந்துகொண்டனர். நாட்டின் பஹாய் சமூகத்தின் முன்முனைவுகளுள் பலவற்றுள் ஒன்றான, கொரோனா தொற்றுநோயின் விளைவாக உருவாக்கப்பட்ட இந்த இணையத்தளம், இந்த நேரத்தில் அதிகமாக தேவைப்படும் ஆன்மீகப் பண்புகளை குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆராய்வதற்கு உதவும் பல்லூடக வள ஆதாரங்களை வழங்குகிறது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மூன்று சகோதரிகள், பஹாய் சமயத்தின் வரலாற்றிலிருந்து கதைகளைக் கூறும் பொட்காஸ்ட்’களை உருவாக்கியுள்ளனர்; இக்கதைகள் சவால்களுக்கு எதிரே விடாமுயற்சியுடன் இருப்பதை வெளிப்படுத்துகின்றன.
கெனடா, நானாயிமோ’விலுள்ள பஹாய் சமூகத்தின் கல்வியல் திட்டங்களில் பங்குபெற்ற வரும் இளைஞர்கள், ஓர் இணைய இளைஞர் முகாமை ஏற்பாடுசெய்து இந்த நெருக்கடி மிக்க நேரத்தில் அவர்கள் மற்றவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்பது பற்றி பிரதிபலித்தனர். பணிவு குறித்த கருப்பொருளை ஆராய்வதற்கு இந்தக் காணொளி தயாரிக்கப்பட்டது.
பெலாரஸில் உள்ள மின்ஸ்க் நகரைச் சேர்ந்த இளைஞர்கள் ஒரு காணொளியை உருவாக்கியுள்ளனர்; அதில் மனிதகுலத்தின் அழகையும் நல்ல செயல்களையும் பற்றி அவர்கள் எழுதிய கவிதைகளை வாசித்துக் காட்டுகிறார்கள்.
ஐக்கிய அமெரிக்க ஒவியர் ஒருவர் தமது காரியங்களுக்கு உத்வேகமளித்த ஒவியத்திறனையும் ஆன்மீக கருத்தாக்கங்களையும் பகிர்ந்துகொள்ளும் காணொளியைhttps://news.bahai.org/story/1426/slideshow/6/ தயாரித்துள்ளார்.
“சுவர்க்கத்திற்கு நாடுகடத்தல்” என தலைப்பிடப்பட்ட ஓர் ஓரங்க நாடகம் பஹாய் சமயத்தின் முக்கிய நிகழ்வுகளை ஆராய்கின்றது. வெவ்வேறு பாகங்களில் நடிக்கும் அந்த நடிகரின் பல பதிவுகள் ஒன்றாக ஒரே கதையாக தொகுக்கப்பட்டன.
மானிடத்தின் சாராம்ச ஒருமை குறித்த ஒரு கருப்பொருள்மீதான நேரடி இசைத் தொகுப்பு ஒன்றை ஐக்கிய அரசின் குடும்பம் ஒன்று வழங்கியது. ஆழ்ந்த ஆன்மீக கோட்பாடுகள் மீது பிரதிபலிப்புகளைத் தூண்டுவதற்கு வசிப்பறைகளிலிருந்து உலகம் முழுவதும் இத்தகைய ஒலிபரப்புகள் செய்யப்பட்டுள்ளன.
நியூ சீலாந்து, ஆக்லாந்து நகரின் இசைக் கலைஞர்கள் பலரின் முன்முயற்சியான “உலகை ஒளிரச் செய்தல்” என தலைப்பிடப்பட்ட படைப்பு ஒன்று தங்களின் சமுதாயம் எதிர்நோக்கும் சவால்கள் மீது வெளிச்சம் போட்டுக் காட்டும் இசைப் படைப்புகளை உருவாக்க மக்களை ஒன்றுதிரட்டி வருகின்றது.
பஹாய் கல்வி வகுப்புகளில் பங்கேற்கும் ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகர் சிறுவர்கள், முதியோர் இல்லம் ஒன்றில் உள்ளோருக்கு ஆர்வநம்பிக்கை எனும் கருப்பொருள் மீதான சித்திரங்களை வரைந்துள்ளனர்.
சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றிய ஒரு செய்தி அடங்கிய ஒரு கலகலப்பான பாடலை கொலம்பியா நாட்டின் நோர்ட்டே டெல் கௌக்காவிலுள்ள இசைக்கலைஞர்கள் குழு ஒன்று இயற்றியுள்ளது.
“ஒற்றுமையின் இதயத்தில்” என்று அழைக்கப்படும் இந்த சித்திரம், நம்பிக்கை என்பது ஓர் இதயத்திலிருந்து மற்றோர் இதயத்திற்கு எவ்வாறு பரவுகிறது என்பது பற்றியதாகும். தற்போதைய சூழ்நிலைகளில் தங்கள் சமூகங்களுக்கு எவ்வாறு தொடர்ந்து சேவை செய்ய முடியும் என்பது குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்காக வாரந்தோறும் இணையத்தில் ஒன்றுகூடும் இளைஞர்கள் குழுவின் உரையாடல்களால் இது தூண்டப்பட்டது.

மூலாதாரம்:https://news.bahai.org/story/1426/

சமூக நிர்மாணிப்பில் பஹாய் கவனம்


சமுதாய தன்மைமாற்றம் குறித்த பஹாய் அணுகுமுறை, தற்போது நிலவும் பெரும்பாலான அணுகுமுறைகளிலிருந்து வேறுபடுகின்றது; அது லௌகீக வளங்களில் அதிக கவனம் செலுத்தாமல் சமுதாய மாற்றத்தின் மையத்திலுள்ள—மக்களில், அதிக கவனம் செலுத்துகின்றது.

இது, ஓர் அடித்தட்டு அணுகுமுறையின் மூலம் சமூகத்தின் ஆன்மீக மற்றும் லௌகீக இயல்பை வலுப்படுத்துதல் எனும் அர்த்தங்கொண்ட சமூக நிர்மாணிப்பு செயல்முறையாக நிலைமாறுகின்றது.

இதன் அர்த்தம், பலக்கியத்தின் அதிகரிக்கும் அளவுடன் அண்டையிலுள்ள சமூகங்களுக்கு பரவிச் சென்று செல்வாக்கு செலுத்தும் வரை சமூகத்தின் திறனாற்றல் படிப்படியாக உருவாக்கப்படுகிறது என்பதாகும்.

சமுதாயத்தின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்புகள் சிதைந்து, வெறுப்பையும் விரக்தியையும் அதன் விளைவாக விட்டுச்செல்லும் ஒரு காலகட்டத்தில், சமூகத்தின் ஒவ்வோர் அம்சத்திலும் ஊடுருவக்கூடிய ஆன்மீக விழுமியங்களின் உலகளாவிய அடித்தளத்தை கவனமாக நிர்மாணிப்பது உலகெங்கிலும் உள்ள சமூகங்களுக்கு–நொறுங்கிப்போன சமூகத்தின் எதிர்மறையான விளைவுகளைத் தாங்கக்கூடிய மற்றும் இறுதியில் அவற்றைக் கடந்துசெல்லும் சமூகங்களுக்கு– நம்பிக்கையான எதிர்காலத்தை உறுதி செய்கிறது:

சிறு அளவான உங்கள் எண்ணிக்கையைப் பற்றி அக்கறைப்படாதீர்கள் அல்லது நம்பிக்கையற்ற ஓர் உலகின் ஜனத்திரள்களால் ஒடுக்கப்படாதீர்கள். ஐந்தே கோதுமை மணிகளுக்கு தெய்வீக ஆசிகள் வழங்கப்படும், அதே வேளை ஓராயிரம் டன் களைகள் எவ்வித பயனையோ விளைவுகளையோ ஏற்படுத்தாது. ஒரு கனிகொடுக்கும் மரம் சமுதாயத்தின் வாழ்வுக்கு ஏதுவானதாக இருக்கும். -அப்துல்-பஹா, தெய்வீக திட்டத்தின் நிருபங்கள், பக். 95

பஹாய் போதனைகளில் ஊண்றப்பட்ட, இந்த அடித்தலம், லௌகீக மற்றும் ஆன்மீக ரீதியில் ஒரு சமுதாயத்தை பயனளிப்பதாக்குவது எது என்பதைக் கண்டறியும் உலகின் ஒவ்வொரு பாகத்திலுமுள்ள மக்கள் குழுமங்களின் நீண்டகால ஈடுபாட்டின் மூலம் உருவாக்கப்படுகின்றது.

சில சமயங்களில் “மைய நடவடிக்கைகள்” என அழைக்கப்படும், ஒற்றுமை மற்றும் சமுதாய தன்மைமாற்றத்தை மேம்படுத்துவதற்கு உலகம் முழுவதும் பஹாய் சமூகங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பின்வருமாறு:

படிப்பு வட்டங்கள்

ஒருவரின் சமுதாய அந்தஸ்து, கல்வியின் அளவு, குடும்பப் பின்னணி, அல்லது இனம் எதுவாக இருப்பினும், அவர சமுதாயத்திற்குப் பங்களிப்பதற்கான திறனை கொண்டிக்கவே செய்கிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, மக்கள் ஒன்றுகூடி ஆன்மீக விஷயங்களைப் பற்றி பேசுவதற்கும், சமூக நிர்மாணிப்பு யுக்திகளைப் பற்றி கற்றுக்கொள்வதற்கும், ஒரு பகிர்ந்துகொண்ட நோக்கத்துடன் நண்பர்களாவதற்கும் எல்லா பின்னணிகளையும் சார்ந்த மக்களுக்கு வெகு சில தளங்களே உள்ளன. இந்த அவசர தேவையை நிறைவு செய்வதற்கு ஒரு பஹாய் உத்வேக அமைப்பான ரூஹி பயிற்சிக்கழகம், ஒரு பயிற்சி வரிசையை உருவாக்கியுள்ளது.

ஒரு படிப்பு வட்டம்

ரூஹி பயிற்சிக்கழகத்தினால் தயாரிக்கப்பட்ட நூல்களின் வழி, எங்குமுள்ள நண்பர்கள், ஒரு வகுப்பறை இயக்காற்றலுக்கு எதிர்மறையாக இருக்கும் சமத்துவவாத இயல்பைப் பிரதிபலிக்கும் ஒரு பெயரான, பயிலப்படும் நூலில் ஏற்கனவே பயிற்சி பெற்ற ஒரு நண்பரினால் வழிகாட்டப்பட்ட, “படிப்பு வட்டங்களில்” ஒன்றுகூடக்கூடும். இந்த நூல்கள், ஆழமான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் கேள்விகளைக் கேட்க வைக்கும், பஹாய் திருவாக்குகளின் படிப்பாய்வை மக்கள் மேற்கொள்ள செய்திட தூண்டி, அவர்கள் பஹாய் போதனைகளை தங்கள் வாழ்க்கைகளிலும் சமூகத்தின் வாழ்க்கைகளிலும் எவ்வாறு பயன்படுத்தப்படக் கூடும் என்பதை பங்கேற்பாளர்கள் கண்டறிய அனுமதிக்கின்றது.

படிப்பு வட்டம்

இந்த படிப்பு வட்டங்களுக்கு முன்நிபந்தனைகள் எதுவும் கிடையாது. பொருண்மையில், மொழியும் கல்வியின் அளவும் தடைகளாக இருக்கும் சில இடங்களில், ஒலிநூல்கள், அகரவரிசை பயிற்சிகள் ஆகியவற்றின் கலவையை நண்பர்கள் பயன்படுத்தி, எல்லாரும் சமநிலையில் இருப்பதை உறுதி செய்கிறார்கள். இந்த படிப்பு வட்டங்கள் எங்கும் நடைபெறலாம்; கல்லாரிகளில், இல்லங்களில், அண்டைப்புறங்களில் மற்றும் வணிக சூழல்களில்.

கோட்பாடு மற்றும் நடைமுறைக் கூறுகளின் மூலம், ஒரு படிப்பு வட்டத்தின் உறுப்பினர்கள் பகிரப்பட்ட தொலைநோக்கை வளர்த்து, அவர்களைச் சுற்றியுள்ள ஆன்மீக மற்றும் லௌகீக நிலைமைகளை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட யுத்திகளைக் கற்றுக்கொள்கிறார்கள்.

சிறுவர் வகுப்புகள்

நமது குழந்தைச் செல்வங்களே உலகின் வருங்காலம் என அடிக்கடி சொல்லிக்கொள்கின்றோம்.  சிறுவர் கல்விக்கான இயக்கங்கள் எங்கெங்கும் வலுப்படுத்தப்பட்டு வரும்போது, அவர்களின ஆன்மீகக் கல்விக்கு குறைந்த கவனமே செலுத்தப்படுகின்றது.  முதியோரைப் போன்று சிறுவர்களுக்கும் ஆன்மீக போதனைகளைப் புரிந்துகொள்ளும் திறனாற்றல் உள்ளது, மற்றும் சிறுவயதிலேயே அந்த போதனைகளை மிகுந்த விளைவுத்திறத்துடன் பயன்திட அவர்களால் முடியும்.   சிறுவர்கள் பள்ளிகளில் பெறும் லௌகீக கல்வி போன்று சமமான முக்கியத்துவம் உடைய, ஆன்மீக கல்வி பெறுவதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதற்கு சமூகத்தின் பங்கிற்கு ஒரு கடப்பாடு தேவைப்படுகின்றது.

சிறுவர் வகுப்பு

அண்டைப்புறங்களிலுள்ள பஹாய் சிறுவர் வகுப்புகளில் கலை, பாடல்கள், கதைகள், பிரார்த்தனை மற்றும் மனனம் மூலம் உலகெங்கிலும் உள்ள சிறுவர்கள் வாய்மை, தயவு, மன்னிப்பு மற்றும் ஒற்றுமை போன்ற ஆன்மீக நற்பண்புகளை அடையாளம் காண கற்றுக்கொள்கிறார்கள். இந்த நற்பண்புகள், ஒவ்வொரு மதத்திற்கும் தார்மீக போதனைகளுக்கும் பொதுவான, இந்த நற்பண்புகள், சிறுவர்கள் உலகில் வாழவும், அவர்களின் முதிய வாழ்க்கையை உருவாக்கவும் உதவுகின்றன. இந்த கருத்தாக்கங்கள் சிறுவர்களில் ஏற்படுத்தும் ஆழமான விளைவு தெளிவாக இருக்கின்றது: அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான அவர்களின் திறன் மேம்படுத்தப்படுகின்றது, அவர்கள் தங்களின் சொந்த திறனைப் பற்றிய அவர்களின் நம்பிக்கை உயர்த்தப்படுகிறது, மேலும் நல்லது மற்றும் கெட்டதை வேறுபடுத்துவதற்கான அவர்களின் திறன் பலப்படுத்தப்படுகிறது.

நாம் அனைவருமே விலைமதிப்பற்ற வைரங்கள் நிறைந்து ஒரு சுரங்கம் போன்றவர்கள் எனவும், கல்வி ஒன்று மட்டுமே அதை வெளிப்படுத்த முடியும் என பஹாய்கள் நம்புகின்றனர்.

மனிதன், விலைமதிக்க முடியாத மதிப்பினைக் கொண்ட இரத்தினங்களின் செழுமை நிறைந்த ஓர் சுரங்கம் எனக் கருதுங்கள். கல்வி மட்டுமே, அதன் பொக்கிஷங்களை வெளிப்படுத்தச் செய்து அதனால் மனிதகுலம் பயன்பெறச் செய்ய முடியும். – பஹாவுல்லா, பஹாவுல்லாவின் திருவாக்குகளிலிருந்து பொறுக்குமணிகள், பக. 259

ஆன்மீக ரீதியில் தங்களை பலப்படுத்திக்கொள்வதற்கு சிறுவர்களுக்கு ஒரு வாய்ப்பளிப்பது, சமுதாயத்தின் வருங்கால உறுப்பினர்கள் எனும் முறையில் சவால் நிறைந்த, அதில் அவர்களுக்கு ஒரு முக்கிய பங்கிருக்கும் ஓர் உலகிற்கு அவர்களை ஆயத்தமாக்குகின்றது.

இளைய இளைஞர் குழுக்கள்

எந்த ஒரு சமூகத்தின் மிகவும் முக்கியமான இறுதியிலக்காக இருப்பது, குறிப்பாக 12 முதல் 15 வயதுடைய அதன் இளைஞர்களே. அவர்கள் எங்கிருந்து வந்தாலும், அல்லது அவர்களின் வாழ்க்கைச் சூழல் எதுவாக இருப்பினும், வளர்ச்சியுறும் அந்த வளரிளம் பருவத்தினர் குழந்தைப் பருவத்திலிருந்து முதிர்ச்சியை நோக்கிய ஒரு முக்கிய நிலைமாற்றத்தில் இருக்கின்றனர். இந்த நிலைமாற்றம் சாத்தியக்கூறுகள் நிறைந்ததாக இருப்பதோடு, குறிப்பாக லௌகீகவாதம், பயம் மற்றும் தப்பெண்ணங்களின் எதிர்மறை தாக்கங்களின் பாதிப்புக்கு அவர்கள் ஆளாகும் நிலையிலும் அப்பவருவத்தினர் உள்ளனர்.

ஓர் இளைய இளைஞர் குழு

இதற்கு மறுமொழியாக, இளைய இளைஞர் ஆன்மீக சக்தியளிப்பு திட்டத்தை பஹாய் சமூகம் உருவாக்கியுள்ளது. இந்த திட்டம் இளைய இளைஞர்கள் தங்களின் ஆற்றல்களைத் திரட்டி, அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தின் நன்மைக்காக அவர்களின் சக்திகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஓர் இளை இளைஞர் குழு

இளைய இளைஞர் குழுமத்தினரைவிட சில வருடங்கள் மூத்திருக்கும் ஓர் இளைஞர், அக்குழுமத்தின் எனிமேட்டராக செயல்பட்டு, அந்த இளைய இளைஞர்கள் ஆய்வுத்திறத்துடன் சிந்திக்கவும் அவர்களின் சமூகத்தில் மாற்றத்திற்கான முகவர்களா தங்களைக் காணவும் அவர்களுக்கு வழிகாட்டுகின்றார். படிப்பாய்வின் மூலம், தங்களைச் சூழ்ந்துள்ள தாக்கங்களை அடையாளங்காண கற்றும் அதே வேளை தங்களின் ஆன்மீக வலிமைகளையும் மேம்படுத்திக் கொள்கின்றனர். அருகிலுள்ள வீதியை சுத்தம் செய்வதிலிருந்து சிறுவர்களுக்கு முறைமையான வகுப்புகளை ஏற்பாடு செய்வது வரையிலான சேவைச் செயல்கள் மூலம், லௌகீக ரீதியில் மட்டுமின்றி ஆன்மீக ரீதியிலும் தங்களுக்கும் தங்களின் சமூகத்திற்கும் பயனளிக்கும் முடிவுகள் செய்வதற்கு இந்த இளைய இளைஞர்கள் சக்தி பெறுகின்றனர்.

இன்று உலகம் முழுவதும் சுமார் 1,50,000 இளைய இளைஞர்கள் சுமார் 17,000 குழுமங்களில் ஈடுபட்டும், திட்டத்தின் தன்மைமாற்ற சக்தியையும் அது தங்களின் சமூகங்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை மேன்மேலும் அதிக மக்கள் காணும்போது  இந்த எண்ணிக்கை மேலும் சீராக உயர்ந்து வருகின்றது.

வழிபாட்டுக் கூட்டங்கள்

ஆன்மீகத்தைப் பற்றிய உரையாடல்கள் வாடிக்கையாக நடக்கும் ஒரு சமூகத்தில், வழிபாட்டுக்கான ஒன்றுகூடல்கள் ஒரு சமூக நடவடிக்கையாக வெளிப்பட்டு, நண்பர்களும் அண்டையர்களும் பிரார்த்தனைக்காக ஒன்றுகூடக்கூடிய ஒரு மையமாகிடும்.

தனிப்பட்ட பிரார்த்தனை ஒரு தனிநபரை அவரின் சிருஷ்டிகர்த்தாவுடன் இணைத்திடும் அதே வேளை, ஒரு குழும சூழலில் பிரார்த்தனைகளைப் பகிர்ந்துகொள்வது ஒற்றுமையைப் பலப்படுத்தி, மேலும் ஆழமான உரையாடல்களை ஊக்குவித்து, முதியோர், இளைஞர், குழந்தைளுக்கும் கூட, ஆன்மீகமும் ஆன்மாவும் முன்முக்கியத்துவம் பெரும் ஒரு தளத்தை எல்லாருக்கும் ஸ்தாபிக்கின்றது.

வழிபாட்டுக் கூட்டம்

இந்த பொதுவான வழிபாடுகள் வெவ்வேறு வடிவத்தில் இருக்கும். சில கிராமப்புறங்களில், அண்டையர்கள் அதிகாலையில் வயல்வெளிகளுக்குச் செல்லும் முன் ஒன்றாகப் பிரார்த்திப்பதற்கு ஒன்றுகூடுகின்றனர். பெரிய நகரங்களில், ஒரு கட்டிடத்தில் வாழும் குடும்பங்கள், மாலை வேளையில் பணிகளுக்குப் பின் இல்லந்திரும்பி பிரார்த்தனைக்காக ஒன்றுகூடுகின்றனர். சில நேரங்களில் கதைகள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன, வேறு நேரங்களில் அவ்வொன்றுகூடலின் ஆன்மீக இயல்பை மேம்படுத்துவதற்கு இசை ஒரு முக்கிய பங்காற்றுகின்றது. ஒவ்வொரு சமூகத்தின் வழக்கங்கள் மற்றும் நலன்களுக்கு ஏற்ப, வழிபாடுகள் மாறலாம், ஆனால் அதன் நோக்கம் மாறுவதில்லை: பிரார்த்தனையின் சக்தியின் மூலமாக அங்கு கூடியிருக்கும் அனவரின் ஆன்மாக்களை ஒற்றுமைப்படுத்துதல்.

இதுவன்றோ சமயத்தின் நோக்கம்?

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் கொண்டுள்ள இருவித தார்மீக நோக்கத்தைப் பற்றி பஹாய் திருவாக்குகள் குறிப்பிடுகின்றன: தங்களையும் தங்களைச் சுற்றியுள்ள சமுதாயத்தையும் சீர்படுத்துவது. உலகின் எதிர்மறை ஆற்றல்கள் நம்மைச் சுற்றிலும் சூறையாடி வருவதை அனுமதித்துவிட்டு நாம் மட்டும் ஒரு நல்ல மனிதராக இருப்பது போதுமானதல்ல. நமது சொந்த வாழ்க்கையில் தீங்கு விளைவிக்கும் நடத்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் போது சமுதாயத்தை சீர்படுத்துவதற்கு ஆக்ககரமாக செயல்படுவதில் அர்த்தமே இல்லை. ஓர் உண்மையான ஆன்மீக வாழ்க்கை இரண்டையும் இணைவாக செய்கின்றது, ஓர் அம்சம் மற்றதன் அடித்தலத்தில் நிர்மாணிப்பது.   

உலகில் நமது பங்கு குறித்த புதிய புரிதல் பரிணமித்து, பின்வரும் வழிகளில் அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் போது, பஹாய் சமயத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்ந்தாற் போன்று வளர்ச்சியுறுகின்றன என உலக நீதிமன்றம் கூறுகின்றது.

சமயத்தினுள் உள்ளியல்பாக வீற்றிருக்கும் சமுதாய கட்டுமான சக்தியை, அதன் எல்லா முயற்சிகளிலும் வெளிப்படுத்துவதன் மூலம், தெய்வீக நாகரிகத்தின் வருகையை விரைவுபடுத்தி வரும் ஓர் உலகளாவிய சமூகத்தின் விழிப்புணர்வில்; மெய்யாகவே, உள்ளார்ந்த தன்மைமாற்றத்தைப் பேணுவதற்கும், ஒற்றுமை வட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், சேவைக் களத்தில் பிறரோடு உடனுழைப்பதற்கும் மற்றும், ஜனத்திரள்கள் தங்களின் சொந்த ஆன்மீக, சமுதாய, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு உதவுவதுமான, அவர்களின் முயற்சிகள் குறித்த நண்பர்களின் அதிகரித்திடும் விழிப்புணர்விலும் — மற்றும்,  இம்முயற்சிகள் யாவற்றின் வழியாக உலகின் சீர்திருத்தத்தைக் கொண்டுவருதல் ஆகியவையே உண்மையில் சமயத்தின் நோக்கத்தையே வெளிப்படுத்துகின்றன. – உலக நீதிமன்றம் ரித்வான் 2016

உலகளாவிய பஹாய் சமூகம் இந்த நடவடிக்கைகளில் பங்கேற் விரும்பும் எவருக்கும் அந்த நடவடிக்கைகளை திறந்துவிடுகின்றது. இந்த நாகரீக நிர்மாண இயக்கத்தில், எதிர்கால தாத்பர்யங்களின் ஒரு நுண்காட்சியை மட்டுமே நாம் காணமுடியும், ஆனால் நாம் நினைபதற்கும் மாறாக ஓர் ஒற்றுமைப்படுத்தப்பட்ட உலகு வெகு அருகிலேயே உள்ளது என்பதை இந்த ஆன்மீக திட்டங்களின் கனிகள் நிரூபித்து வருகின்றன.   

மூலாதாரம்: https://bahaiteachings.org/bahai-focus-building-community/

உலகளாவிய சுகாதார நெருக்கடி தொடர்பான கருப்பொருள்களில் “பஹாய் உலகம்” பற்றிய தொடர்வரிசை கவனம் செலுத்திடும்


உலகளாவிய சுகாதார நெருக்கடி தொடர்பான கருப்பொருள்களில் “பஹாய் உலகம்” பற்றிய தொடர்வரிசை கவனம் செலுத்திடும்


8 மே 2020


பஹாய் உலக நிலையம் – கொரோனா தொற்றோடு உலகம் மல்லாடி வருகையில் மானிடத்தின் வருங்காலம் குறித்த கேள்விகள் எழுகின்றன. இதன் சூழலில், இணைய பிரசுரமான ‘பஹாய் உலகம்’ சமுதாயங்கள் முன்னோக்கிப் பார்க்கும் போது அவை  எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் கட்டுரைத் தொடர்களை அது ஆரம்பிக்கவிருக்கின்றது.

இணைய பிரசுரமான ‘பஹாய் உலகம்’ சமுதாயங்கள் முன்னோக்கிப் பார்க்கும் போது அவை  எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் கட்டுரைத் தொடர்களை அது ஆரம்பிக்கவிருக்கின்றது.

“தற்போதைய உலகளாவிய தொற்றுநோய் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை அவசியமாக்கியுள்ளது,” என அதன் ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.  “இந்த நெருக்கடியிலிருந்து மானிடம் எவ்வாறு வெளிப்படப் போகின்றது என்பது குறித்த ஆழ்ந்த பிரதிபலிப்புக்கான அவசியத்தையும் இது தெளிவாக்கியுள்ளது. நாம் ஒரு நீதிநிறைந்த மற்றும் அமைதியான உலகை நோக்கி நகரவிருக்கின்றோமா?”

இன்று இந்த வரிசையில் பிரசுரிக்கப்பட்ட முதல் கட்டுரை, சமுதாய பொதுநலன் குறித்த அரசாங்கத்தின் பங்கைப் பற்றிய கேள்விகளைப் பரிசீலிக்கின்றது. இனிவரும் கட்டுரைகள், பொருளாதாரம், குடிபெயர்வு, விவசாயம், உணவுப் பாதுகாப்பு போன்ற தலைப்புகளின் ஒரு நெடுக்கத்தை ஆராயவிருக்கின்றன. இப்புதிய தொடர்வரிசை ஏற்கனவே உள்ள அமைதி, தொழில்நுட்பம், கிராமப்புற அபிவிருத்தி, மற்றும் மனிதாபிமான நிவாரணம் போன்ற கட்டுரைகளுடன் சேர்த்துக்கொள்ளப்படும்.

‘பஹாய் உலகம்’ இணையதளத்தில் “சமுதாய நல்வாழ்வை உறுதிப்படுத்துவதில் பொது ஸ்தாபனங்களின் பங்கு” என தலைப்பிடப்பட்ட ஒரு புதிய கட்டுரை சமுதாய பொதுநலனில் அரசாங்கத்தின் பங்கு குறித்த கேள்விகளைப் பரிசீலிக்கின்றது.

இந்த இணையத்தளம், பாப் பெருமானார் மற்றும் அவரது சமயத்துடன் அணுக்கமாகத் தொடர்புகொண்ட சூழல்களை விளக்கிடும் புதிய சித்திரக் கட்டுரைகள் அதில் இடம்பெறும்.

‘பஹாய் உலகம்’ ஷோகி எஃபென்டியின் வழிகாட்டலின் கீழ் 1926’ஆம் ஆண்டு அச்சுவடிவத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதத்தில், சமகால கருப்பொருள்கள் பற்றிய பஹாய் முன்னோக்குகளைக் கையாளும் புதிய கட்டுரைகளை வெளியிடுவதற்காக வலைத்தளம் தொடங்கப்பட்டது. ஒரு மின்னஞ்சல் சந்தா சேவை நடப்பில் உள்ளது, அது புதிய கட்டுரைகள் பிரசுரிக்கப்படும் போது சந்தாதாரர்களுக்கு அறிவிக்கப்படுவதற்கு அது வகை செய்கிறது.   

மூலாதாரம்: https://news.bahai.org/story/1425/

பஹாய் அனைைத்துலக சமூகம், பிரஸ்ஸல்ஸ்: தொடர்பில் இருக்க வழிவகைகளைக் கண்டறிதல்


bns-head

பஹாய் அனைைத்துலக சமூகம், பிரஸ்ஸல்ஸ்: தொடர்பில் இருக்க வழிகளைக் கண்டறிதல்


6 மே 2020


பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம் – யோசனைகள் பரிமாற்றத்திற்கு என்றுமில்லாத வகையில் அதிகமாக இணையத் தொடர்புகள் பயன்படுத்தப்படும் இந்த அசாதாரன காலத்தில், பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரஸ்ஸல்ஸ் அலுவலகம் ஐரோப்பாவில் நிகழ்கால சொல்லாடல்களுக்குப் பங்களிப்பதற்கான அதன் முயற்சிகளிலிருந்து வெளிப்படும் நுண்ணறிவுகளை விரிவாகப் பகிர்ந்துகொள்வதற்கு பஹாய் அனைத்துலக சமூகம் ஒரு செய்தி மடலை ஆரம்பித்துள்ளது.

ஐரோப்பாவில் நிகழ்கால சொல்லாடல்களுக்குப் பங்களிப்பதற்கான அதன் முயற்சிகளிலிருந்து வெளிப்படும் நுண்ணறிவுகளை விரிவாகப் பகிர்ந்துகொள்வதற்கு பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரஸ்ஸல்ஸ் அலுவலகம் ஒரு செய்தி மடலை ஆரம்பித்துள்ளது.

“பிரஸ்ஸல்ஸ் அலுவலகத்தின் ரேச்சல் பயானி, “வரம்புக்குட்பட்ட சமுதாய தொடர்புகளின் சூழலில் ஒரு செய்திக் கடிதத்தை நிறுவுவது பொருத்தமானதாக இருக்கும்,” என்கிறார். “பரவலாக சொல்லாடல்களில் வெளிப்பட்டு வரும் முக்கிய நுண்ணறிவுகள் மற்றும் கேள்விகளைத் இணைப்படுத்துவதற்கு உதவி, எங்களின் உடனுழைப்பாளர்களுடன் கவனம் செலுத்தப்படும் தலைப்புகளின் பரப்பை தொடர்புப்படுத்துவதற்கு அது நோக்கங் கொண்டுள்ளது. மேலும் அதிக மக்களை உரையாடல்களில் சேர்ந்துக்கொள்வதற்கும் அவர்களுடன் கூட்டுப் புரிதலை உருவாக்கிக் கொள்வதற்கும் இந்த செய்திமடல் ஒரு வழியாகும்.

கடந்த பத்தாண்டு காலமாக, இந்த பிரஸ்ஸல்ஸ் அலுவலகம் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய பேரவை, மற்றும் ஐரோப்பிய அமைப்புகளுடன் செயல்படுவதற்கான பஹாய்களின் முயற்சிகளை ஒருங்கிணைத்து வந்துள்ளது.

கடந்த பத்தாண்டு காலமாக, இந்த பிரஸ்ஸல்ஸ் அலுவலகம் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய பேரவை, மற்றும் ஐரோப்பிய அமைப்புகளுடன் செயல்படுவதற்கான பஹாய்களின் முயற்சிகளை ஒருங்கிணைத்து வந்துள்ளது.

அலுவலகத்தின் அணுகுமுறைகளும் பங்களிப்புகளும் பஹாய் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை என திருமதி பயானி விளக்குகின்றார். “எங்கள் அலுவலகம் விவாதங்களுக்குப் பங்களிக்கும் யோசனைகளை தெரிவிப்பது மட்டுமின்றி, முக்கிய கேள்விகள் பற்றிய ஆலோசனைகளில் எங்கள் நிலைப்பாட்டையும் தெரிவிக்கின்றது. உலகளாவிய செழுமை, நீதி, மற்றும் நமது பரஸ்பர சார்புமை குறித்த கருத்தாக்கங்கள் ஐரோப்பிய சூழலில் எவ்வாறு சமுதாய பிரச்சினைகளுக்குப் பயன்படுத்தப்படக் கூடும். என்பதைப் பிறருடன் கூட்டாக ஆராய்கின்றோம்.”  

BIC’யின் பிரஸ்ஸல்ஸ் அலுவலகம், வன்முறை சச்சரவுகளில் ஈடுபட்டிருக்கும் சமுதாயங்களில் குடிபெயர்வு, சமுதாய அகப்பிணைவும் பல்வகைத்தன்மையும், மற்றும் அமைதியை-நிர்மாணித்தல் உட்பட பல சொல்லாடல்களில் பங்கேற்று வருகின்றது.

ஐரோப்பிய சமுதாயத்தில் மதத்தின் பங்கு மற்றும் ஐரோப்பாவில் அக்கறை செலுத்தப்படும் பிற பிரச்சினைகள், உள்ளடக்கும் மொழியின் பயன்பாடு மற்றும் செயற்கை நுண்மதியின் அபிவிருத்தி போன்ற பரந்த கருப்பொருள்களிலும் இது தனது சொந்த ஒன்றுகூடல்களை நடத்துகிறது. இந்த சந்திப்புகள், புதிய அணுகுமுறைகள் மற்றும் புதிய சிந்தனைகள் வெளிப்படும் கருத்தரங்குகளாக அதிகரித்த அளவில் குறிப்பிடப்படுகின்றன.   

ஐரோப்பிய சமுதாயத்தில் மதத்தின் பங்கு மற்றும் ஐரோப்பாவில் அக்கறை செலுத்தப்படும் பிற பிரச்சினைகள், உள்ளடக்கும் மொழியின் பயன்பாடு மற்றும் செயற்கை நுண்மதியின் அபிவிருத்தி போன்ற பரந்த கருப்பொருள்களிலும் இது தனது சொந்த ஒன்றுகூடல்களை நடத்துகிறது.

செய்திமடலின் முதல் இதழில், பிரஸ்ஸல்ஸ் அலுவலகம் உலக சுகாதார நெருக்கடி குறித்த ஆரம்ப பிரதிபலிப்புகளை வழங்குகிறது. “சில மாத காலத்திற்குள், எங்கள் உலகளாவிய சமூகமும் அமைப்புமுறைகளும் புதிய மற்றும் ஆழமான வழிகளில் சோதிக்கப்பட்டுள்ளன. நமது கூட்டு வாழ்க்கையின் அடுத்த கட்டம் குறித்து ஒரு பரந்த சொல்லாடல் உருவாகி வருகிறது. … நமது தற்போதைய உலகளாவிய நிர்வாக முறைக்கு வழிகாட்டும் அடிப்படைக் கோட்பாடுகளை மறுபரிசீலனை செய்து மதிப்பீடு செய்வது அவசியம். இதற்கு, தற்போது அதற்கு அடித்தலமாக இருக்கும் மனப்பான்மைகள் மற்றும் அனுமானங்கள் ஓர் ஆழ்ந்த மறு ஆய்வு செய்வது அவசியமாகும்.”

https://news.bahai.org/story/1424/