இரான் நாட்டு சிறை தண்டனை – ஒரு சகோதரரின் துயரம்


இரான் நாட்டவரான பெஹ்ரூஸ் தவாக்கோலி இரு பிள்ளைகளுக்கு தந்தை, மனோதத்துவ நிபுனர், தச்சர், மற்றும் சமூக சேவையாளர்.

அவர் அங்கவீனர்கள் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பனித்தவர் — “ஒரு தேவதைக்குச் சமமானவர்”, என அவருடைய சகோதரரான அமீன் கூறுகிறார்.

அவர் பஹாய் சமயத்தின் விசுவாசியும் ஆவார். இரான் நாட்டை ஆளும் சமயசர்வாதிகாரத்தில் இது முற்றாக குற்றமாகும்.

“சமய புனிதத்தன்மையை அவமதித்தது”, ஆட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தது மற்றும் இஸ்ரேல் நாட்டிற்கு வேவு பார்த்தது எனும் குற்றச்சாட்டுகளின் பேரில் முடிவடைந்த விசாரனைகளின் விளைவாக சென்ற வாரம், திரு தவாக்கோலிக்கும் ஆறு பஹாய்களுக்கும் தலா 20 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. “”

இரான் நாட்டைவிட்டு வெளியேறியதிலிருந்து 1984 முதல் தாம் குடியிருந்து வந்த அடிலேய்ட் நகரின் புறநகர்ப்பகுதியில் உள்ள தமது இல்லத்தில் திரு தவாக்கோலி இருந்தபோதுதான் அவர் தமது சகோதரருக்கு விதிக்கப்ப்டட தண்டனை குறித்து கேள்விப்பட்டார்.

“இச்செய்தியினால் நாங்கள் பெரிதும் திடுக்கிட்டுப்போனோம். அவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். இரான் நாட்டு சர்வாதிகார ஆட்சிக்கும் அது தெரியும். அவர்களை கைது செய்தது நியாயமல்ல, அவர்களை தடுத்து வைத்தது நியாயமல்ல, மற்றும் அவ்வாறு செய்தது இரான் நாட்டின் சட்டத்திற்கு புறம்பானதும் ஆகும்,” என அவர் மேலும் கூறினார்.

பெஹ்ரூஸ் தவாக்கோலி மற்றும் இரண்டு பெண்கள் உட்பட இரான் நாட்டு பஹாய் சமூகத்தைச் சார்ந்த அவருடை சகாக்கள் 300,000 பேர்கள் கொண்ட இரான் நாட்டு பஹாய்களின் தலைமைத்துவம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பயனாக ஜூன் 2008ல் கைது செய்யப்பட்டனர்.

இரான் நாட்டு பஹாய் சமூகம் பல்லாண்டு காலமாக திட்டமிடப்பட்ட கொடுமை, தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் மற்றும் சித்திரவதையை அனுபவித்து வந்துள்ளது. இரண்டு ஆண்டுகள் காவலில் வைக்கப்பட்ட பின்பு அவர்கள் மீது தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதை அனைத்துலக மனித உரிமை குழுக்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்கள் வண்மையாக கண்டித்துள்ளன:

அறி்க்கை ஒன்றில் ‘எம்னஸ்டி இன்டர்நேஷனல்’ பின்வருமாறு கூறியுள்ளது: “இரான் நாட்டின் அதிகாரிகள் பஹாய்கள்பால் தாங்கள் கொண்டுள்ள ஆழ்ந்த துவேஷத்தின் வெளிப்பாடே இவ் வருந்தத்தக்க பழிச்செயல். முதுமையடைந்த சிலரை உள்ளடக்கிய இ்ந்த ஏழு பஹாய் முக்கியஸ்தர்களும் நம்பிக்கைக்கு உட்பட்ட கைதிகளாவர் மற்றும் அவர்கள் தங்கள் நம்பிக்கைகள் மற்றும் அமைதியான நடவடிக்கைகளுக்காக சிறைவைக்கப்பட்டுள்ளனர்.”

கைதிகளை பிரதிநிதித்த மனித உரிமைகள் காப்பாளர்கள் எனும் மையத்தின் நோபல் பரிசாளரான ஷிரின் எபாடி, குற்றங்கள் குறித்து கேள்விப்பட்டு ‘பெரிதும் திடுக்கிட்டு’ போனதாக கூறினார். ஏனெனில், அரசாங்க வழக்கறிஞர் அவர்களின் குற்றங்கள் குறித்து ஓர் ஆதாரம் கூட வழங்கவில்லை என்றார். எம்னெஸ்டி இன்டர்நேஷனல் இவ்வழக்கு குறித்து அதை ஒரு ‘கேலிக்கூத்து’ என வருணித்து அந்த எழுவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என கூறியது.

அதிபர் மஹமூத் அஹமதிநெஜாட் பதவிக்கு வந்த சென்ற வருடம் ஜூன் மாதத்தில் நடந்த கள்ளத்தனமான தெர்தலின் பின்னனியில் நடந்த அரசியல் கொந்தளிப்பு மற்றும் பரவலான எதிர்ப்புகளை திட்டமிட்டது குறிப்பிட்ட குழுவினரும் பஹாய்களுமே என இரான் அரசாங்கம் குற்றஞ்சாட்டியது. ஆனால், பஹாய்கள் அவற்றுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்துள்ளனர்.

அடிலேட்டில் உள்ள தமது இல்லத்தில் இருந்து, ‘ஆஸ்த்திரேலிய வீக் என்ட்’ பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தமது அண்ணனின் ஒரே நடவடிக்கை இரான் நாட்டில் உள்ள பஹாய்களுக்கு சமூக, சட்ட மற்றும் சமய சேவைகள் வழங்குவதே என அமீன் தவாக்கோலி தெரிவித்தார். “எவ்வித அரசியல் நடவடிக்கையும் அறவே கிடையாது. அது பஹாய் சமயத்தில் அதன் விசுவாசிகள் எவ்விதமான அரசியல் நடவடிக்கைகளிலும் பங்கெடுக்கக்கூடாது மற்றும் அவர்களுக்கு வசிக்கும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவேண்டும். இரான் பஹாய்கள் அதை நன்றாகவே கடைபிடித்தனர்.”

“சிறைபட்டிருக்கும் தலைமைத்துவ பஹாய்களுக்காக ஆஸ்த்திரேலியவின் பஹாய் சமூகம் பிரார்த்தனை கூட்டங்களை நடத்துகின்றது. அவர்களின் ஒரே குற்றம் பஹாய் சமயத்தில் மிக முக்கியமானதாக விளங்கும் மனுக்குலத்தின் ஒறுமைத்தன்மையில் அவர்கள் நம்பிக்கை வைத்ததாகும், மற்றும் அதுவே அவர்கள் செய்த ஒரே குற்றம்,” என திரு அமீன் தெரிவித்தார்.