உலக பாரம்பரிய தலம் ஒன்றான புதிதாக மறுபுதுப்பிப்பு கண்ட தங்களின் புனித திருவிடத்தை மீண்டும் பொதுமக்களின் பார்வைக்கு பஹாய்கள் திறந்துவிடுகின்றனர்


Washington Post- 12 ஏப்ரல் 2011

ஹைஃபா, இஸ்ரேல் — பஹாவுல்லாவின் விசுவாசிகள் கடந்த செவ்வாய் அன்று இஸ்ரேல் நாட்டின் கடலோரப்பகுதியில் உள்ள புதிதாக மறுபுதுப்பிப்பு கண்ட தங்களின் புனித திருவிடம் ஒன்றை பொதுப்பார்வைக்கு திறந்துவிட்டதன் வாயிலாக, புனித நிலத்தில் உள்ள அவ்வளவாக அறிந்திரப்படாத சமயங்களுள் ஒன்றின்பால் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

புதுப்பிக்கப்பட்ட புனிதகல்லறையின் நிழற்படங்களை இங்கு காணலாம்

ஐ.நாவினால் உலக பாரம்பரிய தலங்களுள் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ள, பாப் அவர்களின் நல்லடக்கத் திருவிடத்தின் மறுபுதுப்பிப்பு சுமார் இரண்டரை ஆண்டு காலமும் 60 இலட்சம் டாலர்களும் பிடித்தது என பஹாய் தலைமைத்துவம் கூறியது.

நிலநடுக்கத்தை தாங்கிட அக்கட்டிடம் நிலைதிருத்தம் செய்யப்பட்டும் வலுப்படுத்தப்பட்டும் உள்ளது. ஹைஃபா துறைமுகப் பட்டினத்தின் நிலப்பகுதியிலேயே அதிசிறப்புடன் காட்சியளிக்கும் ஓர் அம்சமான அக்கட்டிடத்தின் கோபுரம் 11,790 புதிய பொன் முலாமிடப்பட்ட தகடுகளால் வேயப்பட்டுள்ளது.

பஹாய் சமயம் 19ம் நூற்றாண்டு இரான் நாட்டில் அதன் மூலாதாரத்தைக் கொண்டுள்ளது. பொதுவாக பாப் அல்லது வாசல் எனும் நாமத்தைக் கொண்டும் ஓர் அவதாரம் என போற்றப்பட்டவருமான மனிதர் 1850ல் சமயத்திற்கு புறம்பாக செயல்பட்டார் என மரண தண்டனை வழங்கப்பட்டு, பிறகு சுமார் 60 ஆண்டுகளுக்குப்பிறகு ஹைஃபா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டார். இன்று உலகம் முலுவதும் பஹாய் சமயம் சுமார் 50லிருந்து 60 இலட்சம் விசுவாசிகளைக் கொண்டுள்ளது.

ஹாஃபா நகரில், மலைச்சரிவில் மேலிருந்து கீழ் வரை பெரும் மெருகுடன் நிர்மானிக்கப்பட்டுள்ள பளிச்சிடும் பசுமை நிற பூந்தோட்டங்களின் நடுமத்தியில் கோபுரத்துடன் கூடிய இப் பஹாய் திருவிடம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கலிபோஃர்னியா நகரைச் சார்ந்த சையெட் சமதி எனும் பஹாய் பொறியாளர் இம் மறுசீரமைப்பு காரியங்களை மேற்பார்வை செய்தார். திரு சமதி பல்லாண்டு காலமாக துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வந்துள்ள பஹாய்களைக் கொண்ட இரான் நாட்டைச் சார்ந்தவர் ஆவார் மற்றும் 1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு இரான் நாட்டில் பஹாய் சமயம் சட்டத்திற்கு புறம்பான ஒன்றென பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சீரமைப்பு குறித்த பெரும்பாலன காரியங்கள் பஹாய் தொண்டர்களால் எவ்வித ஊதியமும் வேண்டாமல் செயல்படுத்தப்பட்டதாக திரு சமதி கூறினார். “நடைபெற்ற வேலைகளைவிட நிலவிய ஊக்கவுணர்வே முக்கியமானது,” என அவர் மேலும் கூறினார்.

வரலாற்றுகாலம் முழுவதும் புனித நிலத்தை தங்கள் ஆதிக்கத்திற்கு உட்படுத்திட முயன்ற இஸ்லாம், கிருஸ்துவம் மற்றும் யூத மதங்கள் — ஜெருசல நகரத்தை பயபக்தியுடன் அனுகும் அதே வேளை சமய உணர்வால் இல்லாமல் தனது தொழிற்சாலைகள் மற்றும் சுறுசுறுப்பான ஒரு துறைமுகத்தின் வாயிலாக மட்டுமே பிரபலமான ஹைஃபா நகரிலேயே தங்கள் சமயத்தை பஹாய்கள் மையப்படுத்தியுள்ளனர். அங்குள்ள தங்கள் புனித திருவிடத்திற்கு சென்ற வருடம் சுமார் 7,50,000 மக்கள் வருகை தந்ததாக பஹாய்கள் அறிவிக்கின்றனர்.

இஸ்ரேல் நாட்டின் வடக்கே சிறிது தூரத்தில் கடற்கரை நகரான ஆக்கோவில் அதி புனிதமிக்க திருத்தலம் ஒன்றை பஹாய்கள் கொண்டுள்ளனர். அங்கு 1892ல் ஒட்டமான துருக்கியர்களால் சிறைவக்கப்பட்டும் பிறகு அங்கேயே விண்ணேற்றம் அடைந்த பஹாவுல்லாவின் புனித நல்லடக்க திருவிடத்தை ஆக்கோ பகுதி குறிக்கின்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: