பஹாய்: முடிவான உலகளாவிய சமயம்?


Huffington Post

http://www.huffingtonpost.com/perry-yeatman/bahai-the-ultimate-global_b_116892.html

ஆக்கம்: Perry Yeatman

பல காலமாக சமயம் பற்றிய விஷயத்தில் ஆழ்ந்து வந்துள்ளேன். என் தகப்பனார் குடும்பத்தினர் பழைய பென்சில்வேனியா குவேக்கர்கள் (Quakers). என் தாயாரோ எப்பிஸ்கோபேலியன் (Episcopalian). என் பங்கிற்கு நான் எப்பிஸ்கோப்பல் உறைபள்ளிக்கும் எப்பிஸ்கோப்பல் சர்ச்சிற்கும் சென்றேன். ஆனால், காலேஜிலோ கத்தோலிக்க மதத்தினர்களை டேட்டிங் செய்தேன். முப்பது வயதுகளில், நாஸ்த்திக மற்றும் யூத பெண்கள் தொடர்பு. திருமணம் செய்து கொண்டதோ, சமயங்களைப் பற்றிய எண்ணம் சிறிதுமில்லாத ஒருவரை.

ஆனால், இவ்விஷயத்தில் 15 வருடங்களுக்கும் முன் இருந்தது போன்று என் ஆர்வம் இன்றும் குன்றவில்லை. நேற்று, நான் என் நண்பர் ஒருவரின் இல்லத்திற்கு இரவு உணவுக்கு சென்றிருந்தேன். அவர் பெயருக்கு கிருஸ்தவரான ஒருவரை திருமணம் செய்திருந்த ஒரு ஆச்சாரமான யூத பெண்மனி. நாங்கள் ஆன்மீகம் மற்றும் சமய ஆச்சாரம் இரண்டும் குறித்து உரையாடினோம். சமயங்களுக்கிடையே உள்ள வேறுபடுகள் குறித்து சம்பாஷித்தோம் – கத்தோலிக்கர் மற்றும் எப்பிஸ்கோப்பிலர், ஆச்சார மற்றும் சீர்திருத்த யூத வகுப்பினர் போன்றவை. அது மிகவும் ஆர்வமான ஓர் உரையாடல். அவர் தமது சமய நம்பிக்கையில் நிலையாகவும் தெளிவாகவும் இருப்பவர். நானோ முரண்பாடான மனோநிலையில் இருப்பவன். என் கண்ணோட்டமும் நெறிமுறைகளும் தெளிவாக உள்ளன. ஆனால், எச்சமயமாயினும் சரி, இன்று உள்ள முறைப்படுத்தப்பட்ட சமயங்களின் நடவடிக்கைகள் மிகவும் குழப்பமூட்டுவதாக இருக்கக் காண்கின்றேன். உலக சமயங்கள் ஒவ்வொன்றிலும் நான் மதிக்கும் மரியாதை செலுத்தும் விஷயங்கள் உள்ளன மற்றும் அவற்றால் நான் மனம் நெகிழவும் செய்கின்றேன். அதே வேளை நான் யார் என் நிலை என்ன என்பது குறித்து அச்சமயங்களில் உள்ள விஷயங்கள் மனதை உலுக்குவதும் குழப்பமூட்டுவதுமாக இருக்கின்றது. ஒரு வேளை இதனால்தோனோ என்னவோ சமீக காலமாக நான் குவேக்கர் சமயத்தால் அதிகம் கவரப்பட்டுள்ளேன். ஏனெனில், அது ஓர் அடிப்படையானதும் அஸ்திவாரமானதுமான ஆன்மீக உணர்வை உள்ளடக்கியும், அதில் குறைந்த அளவு சடங்குகளும் சம்பிரதாயங்களும் மற்றும் அதிக ஆழமும் உள்ளது.

ஆனால், இவை யாவும் ஒரு வாரம் முன்னர் வரைதான். அப்போதுதான் அது வரை கேள்விப்பட்டிராத ஒரு புதிய சமயத்தைப் பற்றி கேள்விப்பட்டேன்.

ஏறத்தாழ உலகம் முழுவதும் பிரயாணம் செய்துள்ள நான், முடிவான உலகளாவிய சமயம் என நான் கருதும் ஒன்றை இங்கு, வில்மட் இல்லிநோயில் இதோ இதே சாலையில் சிறிது தூரத்தில் கண்டது எனக்கு பெரும் ஆச்சரியத்தை விளைவித்தது. நான் இத்தகைய விஷயங்களில் வல்லுனன் அல்ல ஆனாலும் இங்குள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தில் முடிவான உலக சமயம் என நான் நினைக்கும் அச்சமயத்தைப் பற்றி சில மணி நேரங்களே படித்தேன். அது ஓர் உலகளாவிய சமயம் என்பதற்கு அதன் மைய கோட்பாடுகளே ஆதாரம். அந்த வழிபாட்டு இல்லத்தில் நான் படித்த கையேட்டின்படி, பஹாய் சமயத்தின் மைய கோட்பாடுகள் பின்வருமாறு:

  • எல்லா வித முற்சாய்வுகளையும் (தப்பெண்ணங்கள்) களைதல்
  • ஆண்களுக்கு பெண்களுக்கும் இடையே சமத்துவம்
  • அறிவியல் மற்றும் சமயத்திற்கிடையே இணக்கம்
  • உலக அரசாங்கம் ஒன்றால் ஆதரிக்கப்படும் உலக அமைதி
  • பொருளாதார பிரச்சினைகளுக்கு ஆன்மீக ரீதியிலான தீர்வுகள்
  • அனைத்துலக கல்வி

இத்தகைய கோட்பாடுகளுடன் இணக்கப்படாதோர் பலர் உலகில் இருக்கின்றனர் என்பது எனக்கு தெரியும், ஆனால், என் மனதிலோ, ஆகா! குறைந்த பட்சம் மேலோட்டமாக – நான் மறுப்பதற்கு எதுவுமில்லாத – ஒரு குழுவினரோடு நான் நெருக்கமுற்றது முதல் முறையாக இப்போதுதான். “பொருளாதார பிரச்சினைகளுக்கு ஆன்மீக தீர்வுகள்”, என்றால் என்ன என்பது எனக்கு பெரும்பாலும் புரியவில்லை. ஆனால், வறியோருக்கும் செல்வந்தருக்கும் இடையே பொருளாதார ஏற்றதாழ்வுகளை களைந்திட ஒரு கால்கியூலேட்டரர் மட்டும் போதாது என்பது இதன் அர்த்தம் என்றால் எனக்கு அது மிகவும் பிடித்தமானதாகும். என்னை பொருத்தமட்டில் இந்த சமயம் மனதில் ஆவலை கிளரும் ஒரு சமயமாக நான் காண்கிறேன். ( இந்த சமயத்தை நெடுங்காலமாக அறிந்து வந்துள்ளோர் என் அறியாமையை மன்னிக்கவும். நான் என்றுமே ஒரு சமய அறிஞனாக அல்லது அவ்விஷயம் குறித்த பண்டிதனாக இருந்ததில்லை. ஆகவே, என்னுடைய சமயக்கல்வி பூரணமானதல்ல என்பதில் ஆச்சரியம் இல்லை.)

இருந்தபோதும், இங்கு யாரையும் மதம் மாற்ற நான் முயலவில்லை. ஏன், இந்த அறிவின் பயனாக நானே குறிப்பாக என்ன செய்யப்போகிறேன் என்பது குறித்தும் உறுதியாக எதையும் கூற முடியாது. ஆனாலும், பல உலக பிரச்சினைகளுக்கு சமயமே மூலகாரணமாக இருக்கும் இ்க்காலத்தில், நாம் அனைவரும் ஒன்றாக, வெறும் சமயக்கொள்கையை மட்டும் சார்ந்திராது நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்தின் அடிப்படையில் ஓர் உலகளாவிய அனுகுமுறையை எப்படி நாடுவது மற்றும் அது சாத்தியப்படுமா என்பது குறித்து ஆழச்சிந்திப்பது பயனளிப்பதாக இருக்கும் என்பது என் எண்ணம். மற்றும், நமது தனிநபர் தனித்தன்மையை இழக்காமல், நீண்டகால சச்சரவுகளுக்கு நிரந்தரமான தீர்வுகளை காண உலகப்பிரஜைகள் எனும் முறையில் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரிவான, அதிக உள்ளடங்கலான அனுகுமுறையை தேர்வு செய்வது முடியுமா என்பதையும் சிந்திக்கவேண்டும். இது சற்று கரவின்மையாக இருந்தபோதும் இதுவே நமக்கு இன்றியமையாததாக இருக்கக்கூடும். வல்லுனர்கள் மற்றும் அதையே தொழிலாகக்கொண்டவர்களை விடுத்து ஒரு மெய் நடைமுறையான மற்றும் ஒன்றுசேர்க்கும் தீர்வை நாம் காணவேண்டும். இத்தகைய கேள்விகளுக்கான உலகளாவிய அனுகுமுறைக்கு ஒரு வேளை ‘குறைவே’ அதிகமாகும் மற்றும் ஒரு வேளை இது குறித்து நமக்கெல்லாம் போதிக்கக்கூடி விஷயம் ஏதையாவது பஹாய் சமயம் உள்ளடக்கியிருக்கலாம்… இது தனது சொந்த பதிலுக்கான தேடலில் ஆழ்ந்துள்ள ஒருத்தியின் சொந்த கருத்தே.

(பெர்ரி யீட்மன் கிராஃப்ட் சீஸ் நிறுவனத்தில் பணிபுரிகின்றார் மற்றும் “Get Ahead by Going Abroad” எனும் பரிசு பெற்ற நூலின் துணை எழுத்தாளருமாவார்.)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: