பள்ளி ஆசிரியை ஒருவர், தமது சிறு வயது மாணவர்களுக்கு கடவுள் என ஒருவர் இல்லை என்பதை விளக்கிட முயன்றார். ஒரு சிறுவனை அழைத்து வெளியே இருந்த மரத்தைக் காண்பித்து, “அம்மரம் தெரிகிறதா?” எனக் கேட்டார்.
பையன் “ஆமாம் தெரிகிறது” என்றான். பிறகு வெளியே சென்று புல்லைப் பார்க்குமாறு கூறினார். சிறுவனும் வெளியே சென்று புல்லைப் பார்த்து வந்தான். ஆசிரியை “புல் தெரிந்ததா” எனக் கேட்டார். சிறுவனும், “ஆமாம் தெரிந்தது” என்றான். பிறுகு ஆசிரியதை அதே மாணவனிடம் வெளியே சென்று ஆகாயத்தை பார்த்து வரச் சொன்னார். சிறுவனும் வெளியே சென்று ஆகாயத்தைப் பார்த்து வந்தான்.
ஆசிரியை மாணவனைப் பார்த்து “மேலே ஆகாயம் தெரிந்ததா?” என்று கேட்டார். மாணவனும் “ஆமாம் தெரிந்தது” என்றான். “மேலே கடவுள் தெரிந்தாரா?” என ஆசிரியை மற்றொரு கேள்வியைக் கேட்டார். மாணவன் சற்று யோசித்துவிட்டு, “இல்லை” என்றான்.
உடனே ஆசிரியை “மரம் தெரிகிறது, புல் தெரிகிறது, ஆகாயம் தெரிகிறது ஆனால் கடவுள் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆகவே, கண்ணுக்குத் தெரியாததால் கடவுள் என ஒன்றில்லை” என தமது மாணவர்களுக்குப் போதித்தார். அப்பொழுது வகுப்பிலிருந்த ஒரு சிறுமி எழுந்து, ஆசிரியரைப் பார்த்து, அந்த மாணவனைத் தானும் சில கேள்விகள் கேட்க அனுமதி வேண்டினாள். ஆசிரியை அதற்கு அனுமதியளித்தார். மாணவி அந்த மாணவனைப் பார்த்து, “வெளியே மரம் தெரிந்ததா?” எனக் கேட்டாள். அதற்கு மாணவன் “ஆமாம்” என்றான்.
பிறகு, “வெளியே புல் தெரிந்ததா?” எனக் கேட்டாள். மாணவனும் அதற்கு “ஆமாம்” என பதிலளித்தான். மாணவி மேலும் விடாமல், “மேலே ஆகாயம் தெரிந்ததா?” என கேட்டாள். மாணவன் மீண்டும் மீண்டும் அதே கேள்விகளினால் சற்று எரிச்சலுற்றவனாக, “ஆமாம்”. என்றான். பிறகு, “கடவுள் தெரிந்தாரா” எனும் கேள்வியை மாணவி கேட்டாள்.
மாணவன் “இல்லை, தெரியவில்லை” என்றான். மாணவி இப்பொழுது மாணவனைப் பார்த்து “நமது ஆசிரியை தெரிகிறாரா?” என்றாள். அதற்கு மாணவன் “தெரிகிறார்” என்றான். மாணவி இப்பொழுது மாணவைப் பார்த்து “நமது ஆசிரியரின் மூளை தெரிகிறதா?” என்றாள். மாணவன் சற்று விழித்துவிட்டு, “இல்லை, தெரியவில்லை” என்றான்.
உடனே மாணவி, “நமது ஆசிரியரின் கூற்றுப்படி கண்ணுக்குத் தெரியாத ஒன்று இல்லாத ஒன்று, ஆதாலால் ஆசிரியரின் மூளை கண்ணுக்குத் தெரியவில்லை என்பதால் அவருக்கு மூளை இல்லை” எனக் கூறி அமர்ந்தாள்.