11 மார்ச் 2019
BIC நியூ யார்க் — பால்மை சமத்துவம் குறித்த ஐ.நா’வின் பிரசித்தி பெற்ற, சுமார் 9000 பேருக்கு மேல் கலந்துகொள்வர் என எதிர்ப்பார்க்கப்படும், பெண்கள் ஸ்தானம் குறித்த ஐ.நாடுகள் ஆணையம் இன்று ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இவ்வருட ஆணையத்திற்கான அதன் அறிக்கையில், நிர்வாகம், கல்வி, பொருளாதாரம் ஆகியவை குறித்த விளைவுத்திறம் மிக்க உருவப்படிவங்களின் தேவையை பஹாய் அனைத்துலக சமூகம் வலியுறுத்தியது.

“அனைவருக்கும், குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடியோருக்கு–பெரும்பான்மையாக பெண்களும், சிறார்களும்–சமுதாய பாதுகாப்பை வழங்குவது எனும் ஒரு முக்கியமான கருப்பொருள் ஒரு பேருண்மையின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட வேண்டும்: மனிதகுலம் ஒன்றே, மற்றும் பகிர்ந்துகொள்ளப்பட்ட இந்த நமது தாய்நிலத்தின் அபரிமிதமான வளங்களினால் மனிதகுலம் முழுவதுமே பயன்பெற வேண்டும்,” என ப.அ.ச. அறிக்கை குறிப்பிடுகின்றது.
ஐ.நா’வின் நியூ யார்க் தலைமையகத்தில் 22 மார்ச்’சினூடே நடைபெறும் அந்த ஆணையத்தின் 63’வது அமர்வு, சமுதாய பாதுகாப்பு முறைமைகள்,, பொதுச் சேவை வசதிகள், பால்மை சமத்துவம், மாதர்கள் மற்றும் பெண்களுக்கான சக்தியளிப்பு ஆகிவற்றிற்கான பராமரிக்கப்படக்கூடிய உள்கட்டமைப்பு, ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியது.
கல்வித் துறையில் பஹாய் சமூக அனுபவத்தின் பயனை ஓரளவிற்கு பெற்ற, உலகைப் புதிதாக உருவாக்குதல்: எவரையும் பின்தங்க விடாத
ிருத்தல் எனும் ப.அ.ச. அறிக்கை, அதே கல்வித்துறையை சமுதாயத்தின் எல்லா துறைகளிலும் பெண்களின் ஸ்தானம் மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதுடன் தொடர்புபடுத்துகின்றது.
“தரமான கல்வி ஒரளவுக்கு பொருள்வளத்தைச் சார்ந்திருப்பினும், காலப்போக்கிலும், கவனம் செலுத்துவதன் மூலமும், பொருள் வளத்தை விவேகத்துடன் பயன்படுத்துவதன் மூலமும், உலகின் மிகவும் தூரமான மற்றும் ஏழ்மையான பகுதிகளில் கூட மனிதவளம் தழைத்தோங்கக்கூடும் என பல பஹாய் சமூகங்களின் அடித்தட்டு அனுபவம் எடுத்துக்காட்டியுள்ளது,” என அந்த அறிக்கை விளக்குகின்றது.

பஹாய் அனைத்துலக சமூகம், பெண்கள் ஸ்தானம் குறித்த ஆணையத்தின் 63’வது அமர்வுக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் அச்சிடப்படக்கூடிய பிரதி ஒன்று இங்கு கிடைக்கும்.
அறிவாற்றல் மற்றும் தார்மீக செயல்திறன்களை அபிவிருத்தி செய்யும் ஒரு கல்வியல் செயல்முறையின் ஆரம்பம், பௌதீக உள்கட்டமைப்பு வசதிகள் அமையும் வரை காத்திருக்க வேண்டியதில்லை, என அந்த அறிக்கை தொடர்ந்து கூறுகின்றது. “ஒரு தரமான கல்வி கல்வியல் செயல்முறையின் முழு கவனத்தையும் வேண்டுகின்றது—ஆசிரியர் பயிற்சி, பொருத்தமான கல்வித் திட்டத்தைத் தேர்ந்தெடுத்தல் அல்லது உருவாக்குதல், கற்றலுக்கு ஏதுவான ஒரு சூழ்நிலையை உருவாக்குதல், மற்றும் அந்த கற்றல் செயல்முறை மடிப்பவிழவிருக்கும் சமூகத்தின் ஈடுபாடு. இந்த வெவ்வேறு பரிமாணங்கள், ஒரளவிற்கு பொருளாதார வளங்களின் மூலமாக ஆதரிக்கப்படவும் வலுப்படுத்தப்படவும் கூடும். இருப்பினும் அனைத்திலும் முக்கியமாக, மனித ஆன்மாவின் சக்திகளை விடுவிக்கும் செயல்திற உருவாக்க செயல்முறை ஒன்றில் ஆசிரியர்களும் மாணவர்களும் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்திட வேண்டும்.”
மேலும், பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கும் அது உட்குறிக்கும் சமுதாயத்தின் மேம்பாடு அனைத்தையும் கொண்டுவருவதற்கு தற்போதைய சமுதாய கட்டமைப்பின் குறைபாடுகளை அந்த அறிக்கை சோதிக்கின்றது:சமுதாயத்தின் பல முறைமைகளும் கட்டமைப்புகளும் ஆதிக்கம் சமத்துவமின்மை ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கே வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதைக் கருத்தில் கொண்டு, ஒரு முற்றிலும் புதிய கோட்பாடுகள் தொகுப்பின் அடிப்படையில் நிர்வாகம், கல்வி, பொருளாதாரம் ஆகியவை குறித்த விளைவுத்திறம் மிக்க உருப்படிவங்கள் குறித்த கற்றலை நோக்கி குறிப்பிடத்தக்க வளங்கள் வாய்காலிடப்பட வேண்டும். மனிதகுலம் ஒன்றே, பெண்களும் ஆண்களும் சமமானவர்கள், கூட்டுக்குழுவின் அவசர சக்திகள் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர செயல்பாட்டின் மூலம் விடுவிக்கப்படக்கூடும், மற்றும் மானிடத்தின் அபிவிருத்தி ஒரு புதிய உலகை நிர்மாணிப்பதில் எல்லா மக்களின் முழு பங்கேற்பின் மூலம் தாங்கப்படக்கூடும்.

வியாழனன்று ப.அ.ச. பால்மை சமத்துவத்தை மேம்படுத்துவதில் கல்வியின் பங்கு குறித்த ஒரு குழும விவாதத்தை நடத்தவிருக்கின்றது. மாதர்கள் மற்றும் சிறுமியரை பின்தங்கச் செய்யும் சமத்துவமின்மையை வலியுறுத்தும் சமுதாய சக்திகள், சமத்துவத்தை ஊக்குவிக்கும் பொருளாதார ஏற்பாடுகள், மற்றும் சிறுமியர் மற்றும் சிறுவர்களுக்கான முழுமைமிகு தரமான கல்வி ஆகியவை குறித்த சில கண்ணோட்டங்களை அக்கலந்துரையாடல் முன்வைக்கும். குழுமத்தின் கருத்தாக்கக் குறிப்பை இங்கு படிக்கவும். நிகழ்ச்சி ப.அ.சமூகத்தின் முகநூல், இன்ஸ்டகிராம், மற்றும் டுவிட்டர் பக்கங்களில் ஒளிபரப்பப்படும்.
[மூலாதாரம்: https://news.bahai.org/story/1314/]