26 அக்டோபர் 2016

இச்சித்திரத்தின் சில பகுதிகளை, நாட்டிலுள்ள ஸோராஸ்த்திரிய, யூத, கிருஸ்த்துவ, மன்டேய, யார்ஸானிய, பஹாய், சுன்ன, மற்றும் ஷீயா சமயத்தினர்களுக்கு அர்ப்பணித்துள்ளார், மற்றும் இச்சமய நம்பிக்கைகள் அனைத்தையும் இரான் நாட்டின் தேசிய கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களாகவும், அம்மண்டலம் முழுமையின் ஆன்மீக மற்றும் சமயங்களின் தேக்கமாகவும் அவர் கருதுகின்றார்.ஓவியத்தை முழுமையாகக் காண்பதற்கு
சமீபமான வருடங்களில், இரான் நாட்டிற்கு உள்ளும், வெளியிலும் உள்ள தனிநபர்களும், குழுக்களும் நாட்டில் நீதி, மனித உரிமை, மற்றும் உள்ளிணைக்கும் ஒரு கலாச்சாரத்திற்கான கோரிக்கையை எழுப்பியுள்ளனர். இக்கோசத்துடன் மேலும் பல குரல்கள் சேர்ந்துகொண்டுள்ள போதிலும், ஆதரவுக் குரலொலிகளுள் இரான் நாட்டின் மதகுரு வர்க்கத்தினரிடையே ஒரு குரலைச் செவிமடுப்பது மிகவும் அபூர்வமான ஒன்றாகும். அவ்வப்போது பிரஜைகள் மற்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக யாராவது மதகுரு ஒருவர் பரிந்து பேசும்போது அது எண்ணிலடங்கா உள்ளங்களில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.
இத்தகைய பின்னணியில், ஓர் கையெழுத்துக்கலைஞரும், ஒவியரும், இரான் நாட்டின் உயர்நிலை சமயகுருவுமான, ஆயத்துல்லா அப்டொல்-ஹமீது மாஸுமி-தெஹ்ரானி ஒற்றுமை குறித்த தமது பொது அர்ப்பணத்திற்காக தனித்து நிற்கின்றார். இரான் நாட்டில் சமுதாய நல்லிணக்கத்திற்கான அவரது பங்களிப்புகள் உலகின் பல பாகங்களில் கவனத்தை ஈர்த்தும், பாராட்டைப் பெற்றுமுள்ளன.
சமீபத்தில், நாட்டிலுள்ள எட்டு சமய வகுப்பினருடன் தொடர்புடைய, எட்டுப் பகுதிகளாக வகுத்துள்ள ஒரு புதிய படைப்பை ஆயத்துல்லா தெஹ்ரானி வரைந்துள்ளார். இந்த ஓவியத்தின் சில பகுதிகளை நாட்டிலுள்ள ஸோராஸ்த்திரிய, யூத, கிருஸ்த்துவ, மன்டேய, யார்ஸானிய, பஹாய், சுன்ன, மற்றும் ஷீயா சமயத்தினர்களுக்கு அர்ப்பணித்துள்ளார். இவர்கள் அனைவரையும் “இச்சமய நம்பிக்கைகள் அனைத்தையும் இரான் நாட்டின் தேசிய கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களாகவும், அம்மண்டலம் முழுமையின் ஆன்மீக மற்றும் சமயங்களின் தேக்கமாகவும் அவர் கருதுகின்றார்.”
“இவை ஒவ்வொன்றுமின்றி நமது தேசிய அடையாளமானது நிறைவடையாது,” என தமது இணையத்தலத்தில் எழுதியுள்ளார்.
அச்சித்திரம் பல பிரிவுகளாக்கப்பட்டுள்ளதானது, இரான் நாட்டின் குடிகள் அடங்கிய பல்வேறு மக்கள்திரள் பல துண்டுகளாக்கப்பட்டுள்ளதை குறிக்கின்றது. சமயவெறித்தன்மை, உண்மையை சிலர் மட்டுமே அறிந்துகொள்ள முடியும் ஆகியவற்றை இத்துண்டாடலுக்கான காரணங்களாக அவர் குறிப்பிடுகின்றார்.

ஒரு பஹாய் குழுவினர் அச்சித்திரத்தின் ஒரு பகுதியை இரான் நாட்டு பஹாய்களின் சார்பாகப் பெறுகின்றனர்
தமது ஓவியத்தை பல பிரிவுகளாக்கியுள்ளதன் குறியீட்டியலை விளக்கும் போது, ” கருத்துவேற்றுமை மற்றும் பிரிவினைகளின் காரணமாக மானிட சமுதாய அமைப்பானது அவதிக்குள்ளாக்கப்படுவது போன்றே, இச்சித்திரத்தின் ஒவ்வொரு பகுதியும், மற்ற பகுதிகளின் துணையின்றி பூர்த்தியடைய மாட்டா. எல்லா பாகங்களும் ஒன்றிணைக்கப்படும் போது மட்டுமே இச்சித்திரம் பூர்த்தியாகும்.”
கடந்தகாலங்களில், சமய சிறுபான்மையினரின்பால் நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கான கரத்தை ஆயத்துல்லா தெஹ்ரானி நீட்டியுள்ளார். உதாரணத்திற்கு ஏப்ரல் 2014-இல், பஹாய் எழுத்தோவியங்களிலிருந்து ஒரு புனித வரியை எழுத்தோவியக்கலைப் படைப்பாக உலக பஹாய்களுக்கு ஓர் அன்பளிப்பாக வழங்கினார். இரான் நாட்டின் சமயச் சிறுபான்மையினரில் பெரும்பான்மையினராக விளங்கும் பஹாய்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை அவர் அச்செய்கையின் மூலம் ஒப்புக்கொண்டதாகியது, மற்றும் அவர்களும், தங்களின் நாட்டின் செழுமை மற்றும் மகிழ்ச்சிக்காக உழைப்பதில் தங்களின சக குடியினரிடையே தங்களுக்கு உரிய நிலையை பெறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனும் ஒரு விருப்பத்தையும் வெளிப்படுத்தியது.
-
ஆயத்துல்லா தெஹ்ரானி இரான் நாட்டின் பஹாய் சமூகத்திற்காக அர்ப்பணித்துள்ள கலைப்படைப்பின் ஒரு பகுதி
இரான் நாட்டின் சமயகுருமார்களுள ஒருவரெனும் முறையில் அவரது இத்துணிகர செயல்கள் அந்த நாட்டிற்கு உள்ளும் வெளியிலும் உள்ள பலரின் ஒப்புதலைப் பெற்றுள்ளதோடு, அமைதியாக சமயரீதியில் ஒன்றிணைந்த வாழ்விற்கான தங்களின் ஆதரவுக் குரல எழுப்பிட பிற இஸ்லாமிய பிரிவினரையும், உலகம் முழுவதுமுள்ள மற்ற சமயத்தினரையும் ஊக்குவித்துள்ளது. [இது குறித்த மேற்கொண்டு செய்திகளுக்கு (ஆங்கிலத்தில்): www.news.bahai.org செல்லவும்]
தமது சக குடியினர் பலரின் ஆவலான, “இந்த நாடு ஒரு குறிப்பிட்ட சமயம், வகுப்பு, இனம், அல்லது சித்தாந்தத்திற்கு மட்டும் சொந்தமல்ல, மாறாக அது எவ்வித பாகுபாடுமின்றி, இரானியர்கள் அனைவருக்கும், சமயம், மனப்பான்மை அல்லது பால்மை வேறுபாடின்றி சொந்தமாக இருக்கவேண்டுமெனும்” ஆவலை ஆயத்துல்லா தெஹ்ரானி தமது இச்சமீபத்திய செயலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.