முதலாம் உலகப் போருக்கு ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு, ஒற்றுமைக்கான அப்துல் பஹாவின் அழைப்பை நினைவுகூர்வது


பஹாய் உலக செய்தி சேவை26 நவம்பர் 2018

பஹாய் உலக நிலையம் — இன்று, பஹாய் வரலாற்றில் அப்துல்-பஹாவின் தனித்தன்மைமிகு ஸ்தானத்தை நினைவுகூர்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட, ஒப்பந்த தினத்தை பஹாய்கள் கொண்டாடுகின்றனர். அதுவரை அறிந்திராத இரத்தக்களரி மிக்க ஒரு சன்டையான, முதலாம் உலக யுத்தத்திற்கு ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு, போருக்கு முந்திய வருடங்களில் அமைதியை ஊக்குவிப்பதற்கான அப்துல்-பஹாவின் அவசர முயற்சிகள், அந்த நெருக்கடியின் போது ஏற்பட்ட துன்பங்களுக்கு நிவாரணமளிப்பதற்கான அவரது உடனடி நடவடிக்கைகள், இன்று அமைதிக்கான அவரது குரலின் பொருத்தம், ஆகியவற்றிற்கு இன்றைய நினைவாஞ்சலி திரும்பிச் செல்கின்றது.

This 1920 photo shows ‘Abdu’l-Baha walking from His house on Haparsim Street in Haifa. He worked tirelessly to promote peace and to tend to the safety and well-being of the people of Akka and Haifa.
1920’இல் எடுக்கப்பட்ட இந்தப் படம், அப்துல்-பஹா ஹைஃபா, ஹப்பார்ஸிம் வீதியில் உள்ள தமது இல்லத்திலிருந்து நடந்து செல்வதைக் காண்பிக்கின்றது. அமைதிக்காகவும்; அக்காநகர் மற்றும் ஹைஃபா மக்களின் பாதுகாப்பு மற்றும் பொதுநலனைப் பேணுவதற்காகவும் அவர் அயராது பாடுபட்டார்.
(Slideshow – 12 படங்கள்)

1911 முதல் 1913 வரையிலான ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுக்கான அவரது பயணத்தின்போது, ஐரோப்பா போரின் விளிம்பில் இருக்கின்றது என அப்துல்-பஹா அடிக்கடி வர்ணித்தார். “தமது அக்டோபர் 1912 சொற்பொழிவின் போது, “இன்னமும் இரண்டே வருடங்களுக்குப் பிறகு, ஒரு சிறு தீப்பொறிகூட ஐரோப்பா முழுவதையும் தீப்பற்றிட செய்யும். 1917’க்குள், இராஜ்யங்கள் கவிழும், பேரிடர்கள் உலகை உலுக்கிடும்,” என்றார்.


ஜூலை 1914’இல் ஆஸ்த்திரியா-ஹங்கேரி செர்பியா மீது போர் பிரகடனம் செய்தது, அந்த பெரும் போரும் ஆரம்பித்தது.

அவரது உரைகள் குறித்த நாளிதழ்கள் செய்திகளில்,  வரப்போகும் போர் மற்றும் ஒற்றுமைப்பட வேண்டிய அவசரம் பற்றி அவரது எச்சரிக்கைகளை வலியுறுத்தின:

“மானிடம் மனிதகுல ஒருமையின் விருதுக்கொடியை உயர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது, எனக் கூறுகின்றார்…” -நியூ யார்க் டைம்ஸ், 21 ஏப்ரல் 1912

“அமைதியின் அபோஸ்தலர், பழைய உலகில் ஏற்படப் போகும் பயங்கர போரை இங்கு முன்னறிவிக்கின்றார்” –மொன்ட்டிரியல் டேய்லி ஸ்டார், 31 ஆகஸ்ட் 1912

“பாரசீக அமைதி அபோஸ்தலர் ஐரோப்பாவில் ஏற்படப்போகும் போரை முன்னறிவிக்கின்றார்” -பஃப்பலோ கூரியர், 11 செப்டம்பர் 1912

“அப்துல்-பஹா உலக அமைதியை வலியுறுத்துகின்றார்” -ஸான் ஃபிரான்சிஸ்கோ எக்ஸாமினர், 25 செப்டம்பர் 1912

அமைதி எனும் விஷயத்திற்கு அப்துல்-பஹா வழங்கிய முக்கியத்துவம் குறித்து, 2001’இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பிரசுரமான ‘ஒளிமிகு நூற்றாண்டு’ எனும் நூலில் உலக நீதிமன்றம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது: “ஆரம்பத்திலிருந்தே ஒரு புதிய அனைத்துலக ஒழுங்குமுறையை உருவாக்கும் முயற்சிகளில் அப்துல்-பஹா மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார். உதாரணத்திற்கு, வட அமெரிக்காவுக்கான தமது விஜயத்தின் நோக்கம் குறித்த அவரது ஆரம்ப பொது கூற்றுகளில், லேக் மோஹொங்க் அமைதி மாநாட்டின் செயற்குழு, அந்த அனைத்துலக ஒன்றுகூடலில் அவர் உரையாற்ற வேண்டும் எனும் அழைப்பிற்கு அவர் குறிப்பான வலியுறுத்தலை வழங்கினார், என்பது குறிப்பிடத்தக்கதாகும்… அதற்கும் அப்பாற்பட்டு, வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், மாஸ்டர் பொறுமையாக நேரம் செலவளித்த செல்வாக்கு மிக்க நபர்களின்—குறிப்பாக, உலக அமைதி மற்றும் மனிதாபிமானத்துவத்தை ஊக்குவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தனிநபர்களின்—பட்டியல் பரந்த மானிடத்தின்பாலான சமயத்தின் கடமை குறித்த அவரது விழிப்புணர்வை பிரதிபலிக்கின்றது.”

An article in The New York Times on 21 April 1912 describes the talks ‘Abdu’l-Baha gave while visiting the city.
நியூ யார்க் டைம்ஸ்’இல் வெளிவந்த ஒரு கட்டுரை, அந்த நநகருக்கு அப்துல்-பஹா விஜயம் செய்தபோது வழங்கிய உரைகளை வர்ணிக்கின்றது.
(Slideshow – 12 படங்கள்)

ஒரு வருடத்திற்குள், ஐரோப்பாவில் போர் வெடித்தது. மத்திய சக்திகளான ஜெர்மனி மற்றும் ஆஸ்த்திரியா-ஹங்கேரியுடன் ஒட்டமான் சாம்ராஜ்யம் சேர்ந்துகொண்ட போது—பிரான்ஸ், பிரிட்டன், இறுதியில் பிறகு ஐக்கிய அமெரிக்கா உட்பட—கூட்டனி சக்திகள் ஹைஃபாவைச் சுற்றி ஒரு வலிமையான முற்றுகையிட்டன. அந்த இடத்திற்கு உள்புற அல்லது வெளிப்புற தொடர்பும் பிரயாணமும் ஏறத்தாழ இயலாமலேயே போயின. ஹைஃபாவும் அக்காநகரும் போர் வெறிக்குள் அடித்துச் செல்லப்பட்டன.

ஹைஃபா மற்றும் அக்காநகர்வாழ் பஹாய்களை அபாயத்திலிருந்து பாதுகாப்பதற்காக, அவர்களை அருகிலிருந்து டிருஸ் கிராமமான அபு-சினா’னுக்கு அனுப்பிட அப்துல்-பஹா முடிவெடுத்தார், அதே வேளை அவர் ஒரு பஹாயுடன் அக்காநகரிலேயே தங்கிவிட்டார். இருப்பினும், கூட்டனி சக்திகளின் குண்டுவீச்சு, இறுதியில் அவரும் அந்த கிராமத்திலுள்ள மற்ற பஹாய்களுடன் சேர்ந்துகொள்வதை தேவையாக்கியது; ஒரு நேரம், அக்கா நகரின் அருகிலிருந்த ரித்வான் பூங்காவில் ஒரு வெடிகுண்டு விழுந்தது ஆனால் அது வெடிக்கவில்லை. அபு-சினான்’இல் இருந்த பஹாய்களைக் கொண்டு ஒரு மருந்தகத்தையும், அப்பகுதிவாழ் பிள்ளைகளுக்கென ஒரு சிறிய பள்ளியையும் அப்துல்-பஹா நிருவினார்.


அவர் விடுத்த அழைப்பாணைகளுக்கான மறுமொழியில், அல்லது அவர் விடுத்த எச்சரிக்கைகளை செவிமடுப்பதில் மானிடத்தின் இயலாமையின் மூலம் விளைந்த மனிதப் படுகொலையினால் அவரது ஆன்மாவை கடும் வேதனை பற்றிக்கொண்டது


சுற்றிலும் இருந்த மக்களை (உணவுப் பற்றாக்குறையிலிருந்து) பாதுகாப்பதற்காக, அப்துல்-பஹா தமது முயற்சிகளைத் தீவிரப்படுத்தினார். ஜோர்டான் ஆற்று பள்ளத்தாக்கில் இருந்த பஹாய் விவசாயிகள் தங்களின் அறுவடை மகசூலை அதிகரிக்குமாறும், எதிர்ப்பார்க்கப்படும் பற்றாக்குறை குறித்து அதிகபட்சமான தானியத்தை சேமத்தில் வைக்குமாறும் கட்டளையிட்டார். போர் மூண்டும், உணவு பற்றாக்குறை ஏற்பட்ட போது, அந்த மண்டலம் முழுவதும் கோதுமை விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்தார். உதாரணத்திற்கு, ஜூலை 1917’இல், இன்றைய ஜோர்டானின் அடாஸ்சிய்யா’விலிருந்த ஒரு பண்ணைக்கு, பார்லி மற்றும் கோதுமை அறுவரை காலத்தில் 15 நாள்கள் விஜயம் செய்தார். அதிலிருந்து கிடைத்து அதிகபட்ச தானியங்களை ஒட்டகங்களின் மூலம் அக்கா-ஹைஃபா பிராந்தியங்களுக்கு கொண்டு சென்றார்.

An article in The New York Times on 21 April 1912 describes the talks ‘Abdu’l-Baha gave while visiting the city.
நியூ யார்க் டைம்ஸ்’இல் வெளிவந்த ஒரு கட்டுரை, அந்த நநகருக்கு அப்துல்-பஹா விஜயம் செய்தபோது வழங்கிய உரைகளை வர்ணிக்கின்றது.
(Slideshow – 12 படங்கள்)

தமது பணிக்காலம் முழுவதும், பஹாய் சமயத்தின் தலைமையாளர் எனும் முறையில், 1892’இல் பஹாவுல்லாவின் விண்ணேற்றம் முதல், 1921’இல் தமது மறைவு வரை, உலகம் முழுவதிலுமிருந்த பஹாய்களுடன் தொடர்ச்சியாக தகவல் தொடர்பு கொண்டிருந்தார்.

இருந்தும், இந்த நேரத்தில் தான் அப்துல் பஹா அவரின் புகழ்பெற்ற நிருபங்களை வெளிப்படுத்தினார்: விசுவாசிகளுக்கான நினைவாஞ்சலிகள் மற்றும் தெய்வீகத் திட்டத்திற்கான நிருபம். முதாலாவது, போரின் போது தொடர் வரிசையாக 79 பஹாய் வீரர்ளைப் பாராட்டி அவர் ஆற்றிய உரை குறித்த வெளியீடாகும். அடுத்தது, 1916 மற்றும் 1917-ஆம் ஆண்டுகளில் உலகளாவிய நிலைக்கு பஹாய் சமயம் பரப்பபட்டதற்கு அடித்தளமாக அமைந்த, தொடர்வரிசையாக அவர் எழுதிய கடிதங்களின் வெளியீடாகும்.

இறுதியில், இந்தப் போரின் போது, சமுதாயத்தின் பலதரப்பட்ட மக்களையும், ஒட்டோமான், பிரிட்டிஷ், ஜெர்மன், மற்றும் மற்ற படைத்துறை, அரசாங்க அங்கத்தினர்கள் ஆகியோரையும் அன்புடன் வரவேற்று, உபசரிக்கும் வாராந்திர கூட்டத்தை அப்துல் பஹா அவரது வீட்டில் மீண்டும் தொடர்ந்து நடத்தி வந்தார்.

அவர் விடுத்த அழைப்பாணைகளுக்கான மறுமொழியில், அல்லது அவர் விடுத்த எச்சரிக்கைகளை செவிமடுப்பதில் மானிடத்தின் இயலாமையின் மூலம் விளைந்த மனிதப் படுகொலையினால் அவரது ஆன்மாவை கடும் வேதனை பற்றிக்கொண்டது,” என அந்த நேரத்தில், தமது கடவுள் கடந்து செல்கின்றார் எனும் நூலில் ஷோகி எஃபெண்டி எழுதினார்.


“இன்றைய காலகட்டத்தில் அனைத்துலக ஒற்றுமை அதி முக்கியமாகும்; ஆனால், சிந்தனையில் ஒற்றுமை அதனிலும் அத்தியாவசியமாகும். இதன் வழி, அனைத்துலக ஒற்றுமைக்கான அடித்தளம் பாதுகாக்கப்படவும், அதன் அமைப்பு உறுதியடையவும், அதன் கட்டிடம் வலுவாக ஸ்தாபிக்கப்படவும் கூடும்,” என அப்துல் பஹா அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். “யாவற்றின் மெய்நிலைகளை அரவணைத்திடும் கடவுள் திருவாக்கின் சக்தி ஒன்றே, சிந்தனைகளை, மனங்களை, உள்ளங்களை, மற்றும் ஆவிகளை ஒரு விருட்சத்தின் நிழலுக்குள் கொண்டுவரக்கூடும்.”

பஹாவுல்லா தமது உயிலில், தாம் வெளிப்படுத்திய போதனைகளுக்கு, அதிகாரப்பூர்வமான மொழிபெயர்ப்பாளராகவும், பஹாய் சமயத்தின் தலைமைதத்துவமாகவும், தமது மூத்த மகனான அப்துல் பஹாவை, நியமித்திருந்தார். பஹாவுல்லா, ஒற்றுமையை நிலைநிறுத்தி அதன் அடிப்படையில் தமது போதனைகளை வெளிப்படுத்தினார்; தமது மறைவுக்குப் பிறகு, தமது சமயம் பிளவுக்குட்படாதவாறு, அவர் ஓர் ஒப்பந்தத்தை ஸ்தாபித்துள்ளார். இதன் காரணத்தினால், பஹாவுல்லா தம்மைப் பின்பற்றுவோரைப்
பஹாய் எழுத்துக்களின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளர் எனும் முறையில் மட்டுமல்லாமால் சமயத்தின் ஆற்றலுக்கும், போதனைகளுக்கும் உதாரணபுருஷரானா அப்துல் பஹாவின்பால் திரும்பிடுமாறு உத்தரவளித்துள்ளார்.

[மூலாதாரம்:https://news.bahai.org/story/1297/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: