ஹூத்தி அதிகாரிகள் ஏமன் நாட்டின் எல்லா பஹாய் கைதிகளையும் விடுவிக்க ஆனையிட்டுள்ளனர்.
நியூ யார்க்—25 மார்ச் 2020—
ஏமன் நாட்டில் இன்று ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி உரையில், சனா’ஆ அரசியல் உயர் பேரவையின் அதிபரான திரு மஹ்டி அல்-மஷாட், எல்லா பஹாய் கைதிகளையும் விடுவிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இது, மூன்று நாள்களுக்கு முன் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் அவரின் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட திரு ஹமேட் பின் ஹைதரா’வுக்கான மன்னிப்பையும் உள்ளடக்கும்.
பஹாய் அனைத்துலக சமூகம் இந்த அறிவிப்பை வரவேற்பதோடு, அதனை உடனடியாக அமுல்படுத்தும்படியும் கோரியுள்ளது. தங்களின் சமய நம்பிக்கைக்காக பல வருடகாலமாக தப்பான மற்றும் அடிப்படையாற்ற காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்ட அந்த அறுவரின் பெயர்கள் பின்வருமாறு: திரு ஹமேட் பின் ஹைதரா, திரு வலீட் அய்யாஷ், திரு அக்ரம் அய்யாஷ், திரு காய்வான் காதெரி, திரு படியுல்லா சனாய், மற்றும் திரு வயெல் அல்-அரீகீய்
இன்றைய ஆணை, கடந்த 2018’இல் சுமார் 20’க்கும் அதிகமான பஹாய்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்குவது, எல்லா பஹாய் சொத்துகளையும் திருப்பிக் கொடுப்பது, மற்றும் பஹாய் ஸ்பானங்கள் இயங்குவதற்கும் வழிவகுக்க வேண்டும். எல்லா எமன் நாட்டு குடிகள் போன்று பஹாய்களும், சர்வலோக சமய மற்றும் நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகளுக்கு இணங்க தங்கள் சமயத்தை சுதந்திரமாக பின்பற்றுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். ஏமன் நாட்டு பஹாய்கள் தங்களின் நாட்டுக்காகவும் சக பிரஜைகளுக்காகவும் தொடர்ந்து பங்காற்றி வந்துள்ளனர், இனியும் அவ்வாறே பங்காற்றி வருவர்.
William kumar Bahai.
William.bahai123@gmail.com