

புதிய தகவல்கள் இருநூற்றாண்டு வலைதளத்தை முழுமைப்படுத்துகிறது: வேற்றுமையில் ஒற்றுமையின் தனித்துவமான பார்வை
20 ஏப்ரல் 2020
பஹாய் உலக நிலையம் — பாப் அவர்களுடைய பிறப்பின் 200’ஆம் ஆண்டு நினைவுநாள் கொண்டாட்டம் சம்பந்தப்பட்ட படங்கள், காணொளிகள் மற்றும் இசைத்தட்டுகள் இப்பொழுது அந்த இரு நூற்றாண்டு வலைதளங்களை முழுமைப்படுத்துகிறது.
பஹாய்களும் அவர்களின் சகநாட்டவர்களும் — பிரதான நகர்ப்புறநிலையங்களிலிருந்து தொலைக்கோடியிலுள்ள கிராமப்புற உள்ளூர்கள் முதல் — பஹாவுல்லா, பாப் பெருமானாரின்2017 மற்றும் 2019ல் முறையே எவ்வாறு இருநூற்றாம் ஆண்டு விழாக்களைக் கொண்டாடினர் என்பதற்கு இந்த வலைதளங்கள் ஒரு நிரந்தர சாசனமாகத் திகழும்.

மனுக்குலத்தின் அனைத்து நிலைகளிலும் தனித்துவமான அன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாட்டை, 72-மணி நேரத்திற்கும் கூடுதலாக இந்த இரட்டை ஒளிப் பிழம்புகளின் பிறப்பின் உலகளாவிய கொண்டாட்டங்களை விரித்துரைக்கின்றன.
அந்தக் காலகட்டம் முழுவதிலும் இணையதளங்களில் உடனுக்குடனான நேரடி தகவல்கள் பகிரப்பட்டதோடு ஒன்பது மொழிகளில் மனிதகுலத்தின் ஓர் அரிய அகல்பரப்பு காட்சியும் (panorama) வழங்கப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பதிவேற்றங்கள், பல்வேறு இடங்களில் நடந்தேறிய எண்ணற்ற கலையாற்றல்மிகு திறன்களையும் சேவை நடவடிக்கைகளையும் வழிபாட்டு நிகழ்ச்சிகளின் காட்சிகளையும் பகிர்ந்தன. அந்த வலைதளங்கள், ஒவ்வொரு கண்டத்திலுமுள்ள பஹாய் வழிபாட்டு இல்லங்களில் நிகழ்ந்த வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் நேரடியாக ஒளிபரப்பின.

இருநூற்றாண்டு வலைதளங்களில் சேர்க்கப்பட்டுள்ள ஆகக் கடைசியான இணைப்புகள், 150க்கும் கூடுதலான நாடுகளிலும் பிரதேசங்களிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவங்கள் அளித்த உந்துதலால் அனுசரிக்கப்பட்ட பல்வேறு கொண்டாட்டங்களை விவரிக்கும் பக்கங்களை உள்ளடக்கியிருக்கிறது.