
கொங்கோ நாட்டின் வலைப்பின்னல்கள் ஆயிரக்கணக்கானோருக்கு தகவலும் உத்வேகமும் ஊட்டுகின்றன
18 ஏப்ரல் 2020
கின்ஷாஷா, கொங்கோ ஜனநாயக குடியரசு – கொங்கோ ஜனநாயக குடியரசின் பஹாய்கள் தடுத்தல் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் நம்பிக்கையூட்டும் செய்திகளில் பத்தாயிரக்கணக்கான மக்களை இற்றைப்படுத்துவதற்கு சமூக உறவுகளைப் பயன்படுத்துகின்றனர்.

“காங்கோ பஹாய்கள் பல ஆண்டுகளாக ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் சார்ந்திருப்பதற்கான ஆன்மீகக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட சமூகங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளனர்,” என்கிறார் பஹாய் சமூகத்தின் வெளிவிவகார அலுவலகத்தின் ரேச்சல் கக்குட்ஜி. இந்த புதிய சூழ்நிலையில், சிறிய அண்டைப்புறங்களிலும் கிராமங்களிலும் உருவாக்கப்பட்ட நம்பிக்கை, நட்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் மேலும் அதிக இன்றியமையாதவை ஆகின்றன.
விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் அதன் சமுதாய பொருளாதார அபிவிருத்தி முயற்சிகள் சார்ந்த அனுபவத்தின் அடிப்படையில், நாட்டின் பஹாய் சமூகம், உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு என்ன பயிர்களை பயிரிடுவது போன்றவற்றிற்கான ஆலோசனைகளை வழங்கிட அதன் இணையதளத்தில் புதிய கட்டுரைகள் வரிசையை பிரசுரித்து வருகின்றது.
பஹாய் சமூக-நிர்மாணிப்பு முயற்சிகளில் பங்கேற்று வரும் ஆயிரக்கணக்கான கொங்கோலியர்களுடைய வலைப்பின்னல்களின் மூலம், நகரங்களுக்கும் அதே போன்று கிராமப்புறங்களுக்கும் இந்தத் தகவல் விரைவாக பரப்பப்பட்டு வருகின்றது.

சேவைக்கான திறனாற்றலை உருவாக்கும் கல்வியல் திட்டங்களில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், தங்களின் சககுடிமக்களிடையே அதிக அளவிலான ஒற்றுமையை ஊக்குவிக்கவும் நோய்த்தாக்கம் குறித்த தப்பான அபிப்ராயங்களைக் களைவதற்கும் ஆக்கரமான வழிகளைக் காண்கின்றனர். உதாரணத்திற்கு, கிழக்கு கசாய் மாகாணத்தின் ம்பூஜி-மயி’யில் உள்ள இளைஞர்கள், நோயைப் பற்றிய இளைய இளைஞர்களின் கேள்விகளுக்கு ட்ஷிலுபா மொழியில் இயற்றப்பட்ட ஒரு பாடல் மூலம் பதிலளித்துள்ளனர்.
பாடல் இயற்றியோருள் ஒருவரான சின்கிலேர் ம்பியா, “உயிர்களைப் பாதுகாப்பதற்காக நமது வாழ்க்கை முறைகளை நாம் மாற்றிவரும் போது சமூகம் முழுமைக்கும் நெருக்கடி குறித்து போதிக்கவும் ஒருமைப்பாடு குறித்து உத்வேகமூட்டவும் பாடல் வரிகள் நோக்கங்கொண்டுள்ளன,” என்றார். “கோவிட்-19’ஐ எதிர்கொள்வது எனும் அர்த்தங்கொண்ட ‘துட்ஷிமுனா கோவிட்-19’ எனும் அவர்களின் பாடலைப் பாடுவதற்கு ஆர்வத்துடன் இருந்தனர். ஒரு முக்கிய ஒலிபரப்பு நிலையம் அப்பாடலை அந்த மண்டலம் முழுவதும் வானோலி மூலம் ஒலிபரப்பி வருகின்றது.
ஆரம்பத்திலேயே நடவடிகைகளை மேற்கொள்ளவும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து உத்வேகம் பெறவும் சமூகங்களுக்கு உதவுவதில் காலத்துடனான தகவலம் இன்றியமையாததாக இருக்கின்றது. தென் கிவு மாகாணத்தில், கஞ்சாவு கிராமத்தின் பஹாய்கள் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கும் அதே வேளை மக்கள் தொகை முழுவதையும் செயல்பட ஊக்குவித்து வருகின்றனர்.
பொருளாதார மட்டத்தில், சமுதாய சேவைக்கும் பொருளாதார நடவடிக்கைக்குமான எங்களின் திறனாற்றலை அதிகரித்திடும் கல்வியில் சில காலமாக நாங்கள் முதலீடு செய்து வந்துள்ளதால் இந்த சுகாதார நெருக்கடி எங்களை அச்சுறுத்தவில்லை. இருப்பினும், எங்கள் சமூகத்திற்கு நேர்மையான ஆதரவு வழங்கப்பட்ட போதிலும், தங்களின் குடும்ப தேவைகளை ஈடு செய்திட மக்கள் பலர் சுரங்கங்களுக்கு செல்ல வேண்டியே இருந்தது.
இன்று எங்கள் கிராமத்தில் உள்ள 3,920 பேர்களில் ஏறத்தாழ 3,700 பேர் ஒரு தொடர்ந்து ஆதரிக்கப்படக்கூடிய வகையில் சமூக-நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எங்கள் கிராமத்தில், பஹாய்கள், கத்தோலிக்கர்கள், மற்றும் புரோட்டெஸ்டன்கள் எவ்வித தப்பெண்ணமோ தங்களுக்கிடையில் வேறு தடைகள் ஏதுமின்றி ஒருவருக்கு ஒருவர் ஆதரவு நல்கி வருகின்றனர்: நாங்கள் ஒன்றாகப் பணிபுரிகின்றோம், ஒன்றாகக் கற்கின்றோம், ஒன்றாகப் பிரார்த்தனை செய்கின்றோம்..”
கஞ்சாவு’வில் ஒரு வியாபாரத்தை மேற்கொண்டு வரும் மற்றொருவர், சமூகத்தில் உள்ள குடும்பங்களுக்கு தொற்றுநீக்கிகளை தமது கிடங்கிலிருந்து விநியோகம் செய்த்துடன் அவர்கள் தங்களின் வீட்டின் மேல்பரப்புகளை எவ்வாறு சுத்திகரிப்பு செய்வது என்பதாற்கான வழிகாட்டிளையும் வழங்கினார்.
“மக்கள்தொகையில் பெரும்பகுதி தகவல்கள் பெறமுடியும், ஆனால் இது உள்வாங்குவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் சமமானதல்ல” என்று திருமதி ககுட்ஜி கூறுகிறார். “நம்பகமான குரலாக, மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதற்கு, மக்கள் நம்பிக்கையோடு இருந்து, ஒருவருக்கொருவர் இந்த சவாலை எதிர்கொள்ள உதவக்கூடிய செய்திகளை பஹாய் சமூகம் அன்புடனும் ஒத்துழைப்புடனும் வலுப்படுத்துகிறது.”
மூலாதாரம்: https://news.bahai.org/story/1416/